அன்புள்ள முனிக்கு,
ரொம்ப நாள் பிரிந்து இருந்த நாம் இனி ஒன்றாக இருக்கலாம் என்று முடிவு செய்ததின் விளைவாக இந்த கடிதம். எப்படியோ ஏப்ரல்-1 தமிழர்களுக்கு நல்ல நாளாக இருந்தால் நல்லது. அப்பறம் நாம் ஒன்று சேந்த இந்தக் கடிதத்தை ரகசியமாக வைத்துக்கொள்ளவும். இது ராணுவ ரகசியம் போல பொதுவில் வரக் கூடாது. நாம் இரண்டு பேருக்கும் மட்டுமே இந்த உடன்பாடு.இரண்டு முறை பிறந்த தேதிக்கு உச்ச நீதிமன்றம் உங்க கேஸ் நிலைக்காது, விலகிக்கொள்ளவும் என்று சொன்னவுடன் இது தான் என் பிறந்த தேதி, நான் ரிடையர் ஆகிவிடுகிறேன் என்று ராணுவ தளபதி மரியாதையாக வெளியே போய் இருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு நம் நாட்டில் இருக்கும் துப்பாக்கி எல்லாம் தீபாவளி துப்பாக்கி என்ற அவரின் கடிதத்தை லீக் செய்துவிட்டு பரபரப்பாக்கிவிட்டார்கள் மீடியா.மீடியாவிற்கும் பொறுப்பு இல்லை, இந்த மாதிரி மிக முக்கியமாக ரகசிய கடிதத்தை எல்லாம் வெளியிடலாமா? இட்லிவடை யார் என்று நாளைக்கே சரக்கு மாஸ்டர் லீக் செய்தால் உடனே வெளியிட்டுவிடுவார்கள் போல... எதற்கும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இல்லை என்றால் பாம்பு வாலைப் பிடிக்க குரங்கான கதையாகிவிடும்.
பாம்பைக் கட்டிக்கொண்டு குரங்காட்டம் குத்தாட்டம் ஆடும் மல்லிக்காவிற்கு என்ன குறைச்சல்? பாவம் அம்மையார் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க ஆசைப்பட்டு அவமானப்பட்டுவிட்டார். புக் செய்த கடைக்கு போனால், "எங்கள் காரை உங்களுக்கு விற்க முடியாது" என்று சொல்லிவிட்டார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களின் பின்னணி மற்றும் இமேஜ் ஆகியவற்றைப் பார்த்து தான் விற்பார்களாம். அது அவர்கள் கொள்கை. வரவேற்க வேண்டிய விஷயம்.
வரவேற்கவேண்டிய இன்னொரு விஷயம் குமுதத்தில் கொஞ்ச நாளாக சிறுகதைகள் பிரசுரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இலக்கிய மாற்றத்தைத் தொடர்ந்து திமுகவிற்கு ஜால்ரா அடிப்பதை விட்டுவிட்டு அதிமுகவிற்கு ஜால்ரா அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சங்கரன் கோவிலில் கம்பீர வெற்றி, வெற்றி செல்வி என்று பக்கம் பக்கமாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள். குமுதமே கடைசியில் ஒரு அதிர்ச்சி தரும் சிறுகதையாகவே மாறிவிட்டது.
தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் ஒரு குழுமம் ஆரம்பித்து அம்பது பேர் வால் பிடிக்க ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தலை கால் புரிவதில்லை. மேதாவி மாதிரி எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொண்டு சகட்டு மேனிக்கு எல்லோரையும் விமர்சனம் செய்யப் புறப்பட்டுவிட்டார்கள். சமீபத்தில் காந்தி, சங்கராசாரியார், பெரியார் என்று செயமோகன் ரொட்டேஷன் போட்டு விமர்சித்து வருகிறார். இவர்கள் யாரும் இதற்கு மறுப்பு தெவிக்க முடியாது, கேள்வி கேட்க முடியாது. ஏன் என்றால் இவர்கள் இறந்துவிட்டார்கள். கடைசி வரவு கூடங்குளம். அதுவும் கிட்டத்தட்ட செத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மாமல்லன் போன்றவர்கள் இணையத்தில் இல்லை என்றால் இந்த மாதிரி தமிழ் எழுத்தாளர்கள் எல்லோருக்கும் திருநீறு பூசிவிடுவார்கள்.
திருநீறு கூட வரவாயில்லை, ஆனால் ராமநவமி வரும் சமயம் விஜயகாந்த் நீர்மோரில் மேலும் நீர் என்று தண்ணி பற்றி பேசியதைப் பலரும் கண்டுகொள்ளவில்லை. காரணம் சங்கரன்கோயில் தோல்வியாகக் கூட இருக்கலாம். சங்கரன்கோயில் முடிவை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்லிவிட்டார். சங்கரன் கோயிலில் போட்டியிட்டவர்களில் ஒரு கட்சிக்கு கூட டெபாசிட் கிடைக்கவில்லை என்பது தமிழ்நாட்டுத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாம். இதற்கிடையே ஜெயலலிதா சேது சமுத்திரத்தில் உள்ள ராமர் பாலத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று சொல்ல, உடனே டி.ஆர்.பாலு உட்பட திமுக எம்.பிக்கள் பிரதமரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள். இலங்கை தமிழர் பிரச்சனைக்கே மனு கொடுத்தவர்கள் இவர்கள். ஆஹா!
ஆஹா என்று சொல்லுபவர்கள் 91.9 ஆஹா ஃஎப் எம் கேட்கவும். 'சோவின்' முகபது பின் துக்ளக் 1-4-2012 முதல் கேட்கலாம். ஆஹா குமுதம் குழுமத்தின் ரேடியோ என்று நான் சொல்லத் தேவை இல்லை. அப்டியே நான் சொல்லி அறிந்து இருந்தாலும் ஆஹா என்று இட்லி வடையை பாராட்டத் தேவையில்லை. சோவிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் - ஜெயலலிதா சசி ஒன்று சேர்ந்ததற்கு துக்ளக் முதல் பக்கத்தில் காட்டூன் உண்டா ? கடந்த ஒரு வருடமாக ஒரு கார்ட்டூன் கூட ஜெயலலிதாவை பற்றியது இல்லை என்பதை யாராவது கவனித்தார்களா ? புது பொலிவுடன் துக்ளக் வருமா ?கர்ணன் புது பொலிவுடன் வந்திருக்கிறது. அதே போல திரும்ப அக்கா தங்கை படம் ஒன்று புது பொலிவுடன் வந்துவிட்டது. . நாடகப்பிரியா நடிகர் தான் என்ன செய்வது என்றறியாமல் என்று குழம்பி இருக்கிறார். பேசாம இரண்டு மாதம் அதிமுகவில் சேர்ந்திருக்கலாம். நாடகப்பிரியா நண்பரை காட்டிலும் வெட்டி பேச்சு பேசும் காடுவெட்டியின் கடைசி ஸ்டேட்மெண்ட் இது "அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே நின்று தேர்தலை சந்தித்தால் தமிழ்நாட்டில் பா.ம.கா தான் ஆட்சியை பிடிக்கும்" எனக்கு தெரிந்து பஸ்ஸில் சீட் பிடிக்க கூட இவர்கள் லாயக்கு இல்லை.
ஸ்டார்ட் மியூசிக் "வாரயோ தோழி வாரயோ...."
இந்த உருக்கமான கடித்ததை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்
இப்படிக்கு பாசமுள்ள,
இட்லிவடை
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Saturday, March 31, 2012
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 1-4-2012
Posted by IdlyVadai at 3/31/2012 12:29:00 PM 20 comments
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Monday, March 26, 2012
சோ பேட்டி - குமுதம் ரிப்போட்டர்
இந்த வார குமுதம் ரிப்போட்டரில் வந்த சோ பேட்டி - இலங்கை - சங்கரன் கோயில் - மின்சாரம் என்று எல்லாம் இருக்கிறது..
நன்றி: குமுதம் ரிப்போட்டர்
Posted by IdlyVadai at 3/26/2012 01:12:00 PM 21 comments
Thursday, March 22, 2012
கோயிலில் அடித்த மணி
பிஜேபி ரொம்ப கட்டுக்கோப்பான கட்சி, அதனுடைய வேர் ஆர்.எஸ்.எஸ் என்று சொல்லி அடித்த ஜல்லி எல்லாம் பழைய கதை ஆகிவிட்டது. தற்போது மோடியை அதிலிரிந்து நீக்கிவிட்டால் இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆர்.எஸ்.எஸ் தொண்டன் என்று தன்னை சொல்லிக்கொண்டு எடியூரப்பா மீண்டும் கர்நாடக முதல்வர் பதவிக்கு அடித்த லூட்டியை பார்த்து அத்வானியால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. இவர் மன்மோகன் சிங்கை டம்மி என்று எப்படி கேலி செய்யலாம் ? எடியூரப்பா என்ற விஷ செடியை முன்பே கிள்ளி எறிந்திருக்க வேண்டும். செய்யாமல் விட்டுவிட்டார்கள். சதானந்தா கௌடா ஒரு முறை முதலவர் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டு எழுந்துக்கொள்ள மறுக்கிறார். இந்நிலையில், உடுப்பி எம்.பி. தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ. வேட்பாளர் 46 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றதில் எனக்கு மகிழ்ச்சியே. இந்த தோல்வி எடியூரப்பாவிற்கு ஒரு விதத்தில் நல்லதாக போய்விட்டது. கர்நாடகா மாநிலத்தை கவனிப்பதை தவிர்த்து இப்போது மொத்த பிஜேபியினரும் ஒன்று ஊருக்கு வெளியே ஏதாவது ஹோட்டலில் இருக்கிறார்கள், அல்லது டெல்லியில் இருக்கிறார்கள். பிஜேபில் இருக்கும் தலைவர்கள் கொஞ்சமாவது உப்பு போட்டு சாப்பிடுபவர்களாக இருந்தால் எடியூரப்பாவை தூக்கிவிட்டு ஒரு நல்ல தலைவரை அங்கே போட வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சுரங்க ஊழல் ரெட்டி சகோதரர்களிடம் நிறைய பணம் வேற நன்கொடையாக வாங்கியுள்ளார்கள். ஹிந்து கடவுள்களை கேலி செய்தால் போராட்டம் நடத்தும் இவர்கள், முதலில் தங்கள் முதுகில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்துவிட்டு கோயில் மணி அடிக்க போகலாம்.
சங்கரன் கோவில் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த மாதிரியே அமைந்திருப்பதால் ஆச்சர்ப்படுவதற்கொன்றுமில்லை. இடைத்தேர்தல் அறிவித்த தினம் துவங்கியே போட்டி இரண்டாமிடத்திற்குத்தான் என்றாலும், கிடைத்த தோல்வியை ஒப்புக் கொள்ளும் பக்குவம் யாரிடமுமே இல்லை. ஆளாளுக்கு ஒரு சால்ஜாப்பு சொல்லி வருகின்றனர். தவிர, விழியைப் புரட்டி, பல்லைத் துறுத்தி, நாக்கை மடித்து, கையை நீட்டி சினிமா பாணி சவால் விட்ட விஜயகாந்த் அன்று சட்டசபையிலேயே தேர்தலில் தனது கட்சியின் கதியை நிர்ணயித்துக் கொண்டுவிட்டாலும், டெபாஸிட்டும் இழந்து, நாலாவது இடத்திற்கும் தள்ளப்பட்டு விடுவோமென்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். இரண்டாமிடத்தில் எதிர்பார்க்கப்பட்ட மதிமுக மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டாலும், அவர்களது தோல்வி மற்றைய இருவர்களதை விட கெளரவமானதாகவே நோக்கப்படுகிறது.
அழகிரி வழக்கம்போல் அள்ளி வீசிய ஓட்டு வித்யாசக் கணக்கு இம்முறையும் பலிதமாகவில்லையாதலால், கருணாநிதி, சென்றமுறை அதிமுக பெண்ணாகரத்தில் டெபாசிட் இழந்ததை நினைவு கூர்ந்து தம்மைத் தாமே ஆறுதல் படுத்திக் கொண்டுள்ளார். பிரசாரம் ஓய்ந்த மறுதினம் ஆளுங்கட்சி சார்பிலும், திமுக சார்பிலும் பண விநியோகம் தாராளமாக நடைபெற்றதாக வைகோ கூறியுள்ளார். மற்றபடி இந்தத் தேர்தல் பற்றியோ, இத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி பற்றியோ ப்ரஸ்தாபிக்க பெரிதாக எதுவும் விஷயம் இல்லை. ஆனால் கருணாநிதி அவர்கள் தமது பிரசாரத்தின்போது வீராவேசமாக பேசிய பராசக்தி பாணி வசனம் ஒன்று இங்கு விஷயமாகிறது. ஜெயலலிதா, அண்ணா நூலகத்தை மருத்துவமனையாக மாற்றும் நாள்தான் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும் என்று வீரம் பேசியுள்ளார். அரசியல் சட்டத்தை அவமதிக்கவில்லை, வெறும் பேப்பரைத்தானே கிழித்தோம் என்றவர்கள், தீ இல்லை டீ என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்.
காங்கிரஸ் வழக்கம் போல கூட்டணி தொடரும் என்கிறார்கள். ஓரின சேர்க்கை குற்றமாகாது என்று அரசு தரப்பு சொல்லிவிட்டதே!
Posted by IdlyVadai at 3/22/2012 09:33:00 PM 16 comments
Labels: அரசியல், செய்தி விமர்சனம்
Tuesday, March 20, 2012
ஏ... குருவி... சிட்டுக்குருவி
சிறகு அடித்து பறக்கும் இந்த சிட்டுக் குருவியை பாருங்கள்! - மகளுக்கு திருமணம்; குழந்தைகளின் கல்வி இது போல எந்த தொந்தரவும் இல்லாத இந்த சிட்டு குருவியே சிறுக சிறுக சேமிக்கும் போது...
Posted by IdlyVadai at 3/20/2012 10:10:00 AM 12 comments
Monday, March 19, 2012
Modi Means Business !
டைம் இதழின் ஆசிய பதிப்பின் அட்டையில் நரேந்திர மோடி படம் வெளியிடப்பட்டுள்ளது.
ஒரே கமெண்ட் : இவர் வந்தால்... இந்தியாவின் பொற்காலமாக அது இருக்கும்.
Posted by IdlyVadai at 3/19/2012 10:30:00 PM 23 comments
Labels: அரசியல்
மூன்று செய்திகள்
1. ஒரு வாரத்துக்கு முன்பு ஞாநி ஓ-பக்கங்களில்
"இன்னும் பத்து நாட்களுக்குள் ஜெயலலிதா யார் பக்கம் என்பது பகிரங்கமாகிவிடும். சங்கரன்கோவில் தேர்தல் வாக்குப்பதிவு மார்ச் 18 அன்று முடிந்ததும், கூடங்குளம் அணு உலை பிரச்னையில் தில்லிக்கு ஆதரவா, தமிழக மக்களுக்கு ஆதரவா என்பதை ஜெயலலிதா சொல்லியே தீர வேண்டியிருக்கும்" என்று எழுதினார். அதே போல ஜெயலலிதா U Turn அடித்து கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க உடனடி நடவடிக்கை என்று ஜெயலலிதா இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேர்தல் சமயம் என்பதால் இந்த அறிவிப்பை கொஞ்சம் காலம் தாழ்த்தினார். இந்த முடிவுக்கு சிலருடைய எதிர்ப்பு இருந்தாலும், தமிழ் நாட்டில் பலர் இதை வரவேற்கவே செய்வார்கள். மின்சாரம் என்பது தற்போது எல்லோருக்கும் இன்றியமையாத தேவையாக ஆகிவிட்டது. Carry Bag உபயோகப்படுத்த கூடாது என்று சொன்னாலும் நமது சவுகரியத்துக்கு படித்தவர்களே உபயோகப்படுத்துகிறோம் அது போல தான் இதுவும்.
2. சேனல்-4 ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களங்கள் என்ற இரண்டாம் பகுதி படத்துக்கு தமிழ் நாட்டில் எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். விடுதலைப் புலிகள், இலங்கை அரசுக்கும் நடந்த யுத்ததில் பாதிக்கப்பட்டது அப்பாவி தமிழர்கள் தான். இவர்கள் இருவரும் தமிழர்களுக்கு சத்ரு தான். டிவிட்டர், ஃபேஸ் புக், வலைப்பதிவு போன்றவற்றில் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டார்கள். மனித உரிமை அது இது என்று பேசினார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மனித உரிமை எப்படி இருக்கிறது பாருங்கள். தமிழ் நாட்டில் மக்களுக்கு சாலையில் கக்கூஸ் கூட இல்லாத போது இவர்கள் எங்கே மனித உரிமை பற்றி சிந்திப்பது ? ஐ.நா தீர்மானதுக்கு எதிராக ஓட்டு போட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் வலைப்பதிவில் பெட்டிஷன் போடுகிறேன் பேர்வழி என்று செய்வது எல்லாம் சுத்த காமெடி. படம் பாருக்கும் போது ஒன்று விளங்கியது - மனிதனிடம் இன்னும் மிருக குணம் மிச்சம் இருக்கிறது.
3. எடியூரப்பா பிஜேபிக்கு Pain in the ... என்பார்களே அதே தான். தன்னை மீண்டும் முதல்வராக்க எடியூரப்பா 48 மணி நேரம் கெடுவிதித்துள்ள நிலையில் ஐம்பது எம்.எல்.ஏக்களை கிட்டத்தட்ட கடத்திக்கொண்டு எங்கோ தங்க வைத்துள்ளார். இதில் சிலர் அமைச்சர்கள். அங்கே இவர்கள் கூத்தடித்தால் மக்கள் பணிகளை யார் கவனிப்பார்கள் ? எதில் என்ன வேடிக்கை என்றால் சதானந்தகவுடா தற்போது முதல்வர் பதவியிலிருந்து கீழே இறங்க மறுக்கிறார். இவர் எடியூரப்பாவின் ஆள் ! பதவி படுத்தும் பாடு. பிஜேபிக்கு உண்மையிலேயே கொஞ்சமாவது ... இருந்தால் எடியூரப்பாவை பிஜேபியை விட்டு வெளியே அனுப்பிவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். ஜெயலலிதாவிற்கு ஓ.பன்னீர்செல்வம் மாதிரி எல்லோருக்கும் அமைவது கஷ்டம்.
குட்டி செய்திகள்:
சச்சின் 100 அடித்துவிட்டார், இனிமேல் திரும்பவும் பாரத ரத்னா கொடுக்க வேண்டும் ஆரம்பித்துவிடுவார்கள். வயதானவர்களுக்கு தான் கொடுப்பார்கள், சச்சினுக்கு கொடுக்கலாம்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று காலை ஒரு நாள் உண்ணாவிரதம் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். பிறகு மன்மோகன் சிங் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா அரசு ஆதரிக்கும் என்று சொன்னவுடன் உண்ணாவிரதம் தொடரும் என்றார் பிறகு என்ன நினைத்தாரோ .. உண்ணாவிரதம் ரத்து என்று அறிவித்துவிட்டார். ஐந்து நாள் டெஸ்ட் போட்டியை விட ஒரு நாள் போட்டிக்கு தான் இப்போது மவுஸ் :-)
மின்பற்றாக்குறை அடுத்த ஆண்டு இருக்காது - நத்தம் விஸ்வநாதன்
மின்பற்றாக்குறையா அல்லது மின்சாரமா ?
Posted by IdlyVadai at 3/19/2012 09:18:00 PM 9 comments
Labels: செய்திவிமர்சனம்
Saturday, March 17, 2012
Friday, March 16, 2012
தீக்குளிக்கவும் தயங்க போவதில்லை - கலைஞர்
செய்தி1: "இன்றைக்கு சொல்லி வைக்கிறேன். தியாகிகளுக்கு, போராட்டக்காரர்களுக்கு, புகழ் சேர்த்துக் கொடுத்த நெல்லைச் சீமையில் இருந்து சொல்லிக் கொள்கிறேன், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட அதை(அண்ணா பெயரால் நாங்கள் அமைத்த நூலகத்தை) அகற்றியே தீருவோம் என்று ஜெயலலிதா அடம்பிடிப்பாரேயானால், அந்த நாள் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும் - கலைஞர்
செய்தி2:
கேள்வி:-(இலங்கை பிரச்சினையில்) இந்திய அரசு அப்படி முடிவெடுத்தால், மத்திய அரசுக்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவீர்களா?
கலைஞர் பதில்:-அது நான் ஒருவன் மாத்திரம் தீர்மானிக்கக் கூடியதல்ல. அதைப் பற்றி நாங்கள் எங்கள் செயற்குழுவில் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்.
படம்: டெல்லியில் குளிர் காலத்தில் மக்கள் தீ குளிக்கும் காட்சி :-)
Posted by IdlyVadai at 3/16/2012 11:16:00 AM 16 comments
Labels: அரசியல்
Thursday, March 15, 2012
கொலைக்களம் - பத்ரி சேஷாத்ரி
இங்கிலாந்தின் ‘சானல் 4’ சில மாதங்களுக்கு முன்னர் Killing Fileds என்ற ஆவணப் படத்தை வெளியிட்டது. அதில் இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள் தொடர்பான பல சான்றுகள் இருந்தன. அதைத் தொடர்ந்து நேற்று Killing Fileds 2 என்ற இரண்டாவது ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளது. இதில் மேலும் பல சான்றுகளும், முக்கியமாக பிரபாகரனின் 12 வயதாகும் இளைய மகன் பாலச்சந்திரனைச் சுட்டுக் கொல்லப்பட்டதும், உள்ளன.
இந்த ஆவணப்படங்களில் காட்டப்பட்ட விஷயங்கள் முற்றிலும் புதுமையானவை அல்ல. போர் இப்படித்தான் நடந்திருக்கும் என்று தமிழக மக்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும். இந்திய ஆட்சியாளர்களுக்கும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கூடத்தான். இந்திய அரசின் முழுமையான ஆதரவுடன்தான் இந்தப் போரே நடைபெற்றது. இந்தியா, இலங்கை ராணுவத்துக்குப் படை உதவி, தகவல் உதவி, லாஜிஸ்டிக்ஸ் உதவி, பயிற்சி ஆகியவற்றை அளித்தது.
இப்போது ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் இலங்கை தன் போர்க்குற்றங்கள்மீது விசாரணை நடத்தவேண்டும் என்று அமெரிக்கா தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. அதற்கு இந்த இரு ஆவணப்படங்களும் மனித உரிமை அமைப்புகள் உருவாக்கியுள்ள ஆவணங்களும் ஐ.நாவின் சொந்த அறிக்கையும் வலு சேர்க்கின்றன.
இங்கு பிரச்னை இருவேறு தளங்களில் உள்ளது. ஒன்று அரசுகள், கட்சிகள் சம்பந்தப்பட்டது. இரண்டாவது பொதுமக்கள் சம்பந்தப்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவும் இலங்கையும் ஒரே தரப்பில் இருந்தன. அதனால், இப்போது இந்தியாவால் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க முடியாது. அதற்கு இந்தியா ஏதேதோ சாக்கு சொல்கிறது. இந்தியாமீது காஷ்மீர் அல்லது வடகிழக்கு தொடர்பாகப் பிற நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தால் என்ன செய்வது என்கிறது இந்தியா. கொண்டுவந்தால் என்ன பிரச்னை? இந்தியா மனித உரிமைகளை மீறியிருந்தால் பிற நாடுகள் இந்தியாவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவருவது சரிதானே? எல்லாவற்றையுமே ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்னை என்று சொல்வது இன்றைய உலகில் சாத்தியமே இல்லை. இதைப் புரிந்துகொள்ளாத இந்தியா தன் தலையை மணலுக்குள் இறுகப் புதைத்திருக்கிறது.
தமிழகக் கட்சிகளுக்கு இதெல்லாம் புரியாமல் இல்லை. திமுகவின் கலைஞர் கருணாநிதிக்கு போரின்போது என்ன நடந்தது என்று தெரியவே தெரியாதா? அவருடைய மனம் திடீரென இளகி, கசிந்து உருகுகிறது. கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் கொந்தளிக்கிறார்கள். அஇஅதிமுகவின் ஜெயலலிதா ஏற்கெனவே ஈழத்தமிழர்களைக் காக்க வந்த தாயாக அவதாரம் செய்துவிட்டார். ஆனால் இவர்களுடைய கூக்குரலுக்கு இந்திய வெளியுறவுத்துறை செவி சாய்க்காது.
அமெரிக்கா இதில் என்ன ஆதாயத்தை எதிர்பார்க்கிறது என்று புரியவில்லை. அவர்களுக்கும் போரின்போது என்ன நடந்தது என்பது நன்கு தெரிந்ததுதான். ஈராக் முதல் ஆஃப்கனிஸ்தான் வரை இதுபோன்ற பலவற்றை அவர்களே நேரிடையாகவே செய்திருக்கிறார்கள்.
***
இந்த இரண்டாம் ஆவணப்படத்தில் ஓரிடத்தில் (இந்தியா, இலங்கை அல்லாத நாட்டின்) ஒரு பெண்மணி முதல் ஆவணப்படத்தைப் பார்ப்பதுபோன்ற காட்சி வரும். அதைப் பார்க்கும் அவருடைய முகத்தில் ஒரு கலக்கம். கண்களில் கண்ணீர். அதிர்ச்சி. முதல் ஆவணப்படம் காட்டப்பட்டபோது பிரிட்டன், ஆஸ்திரேலியா முதற்கொண்டு உலகின் பல நாடுகளில் மக்களிடையே பெரும் தாக்கம் இருந்தது. என் கணிப்பில் இந்தியாவில், தமிழகம் தவிர, அந்த அளவுக்குத் தாக்கம் இல்லை. தமிழகத்திலும்கூட, இந்தப் பிரச்னை தமிழ் பேசும் மக்கள் சார்ந்தது என்பதால்தான்.
இதற்கு என்ன காரணம்? மனித உரிமை பற்றியும் மனித சுதந்தரம் பற்றியும் இந்தியர்களுக்கு இன்னமும் சரியான உணர்வும் அறிவும் இல்லை. மேலை நாடுகளின் மனித உரிமை என்ற கொள்கை பொதுமக்களிடம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. ஆனால் இந்தியாவிலோ, எண்ணற்ற மக்கள் ஏதோ ஒருவிதத்தில் ஆதிக்கக் கும்பல்களாலும் அரசாலும் தொடர்ந்து வதைபட்டுக்கொண்டேதான் இருக்கின்றனர். இதனை எதிர்த்துப் போராடி நிர்வாகத்திலும் சட்டம் ஒழுங்கிலும் மாற்றம் கொண்டுவருவது எப்படி என்று இந்தியர்களுக்குத் தெரியவில்லை. கூடவே பெரும்பாலான பலர், பல்வேறு விதமான அடக்குமுறைகளை ஆதரிக்கவே செய்கின்றனர்.
உதாரணமாக, என்கவுண்டர் என்பதை இந்தியப் பொதுமக்கள் பெருமளவு ஆதரிக்கின்றனர். சிறு குழந்தைகளை வன்கலவி செய்து கொன்றவன், கடத்திச் சென்று கொலை செய்தவன் என்று ஆரம்பித்து வங்கிக் கொள்ளையர்கள் வரை, ‘போட்டுத் தள்ளு!’ என்று சொல்ல மக்கள் அஞ்சுவதில்லை. போஸ்டர் அடித்துக் கொண்டாடுகிறார்கள். தமக்கு வேண்டியபடி சட்டத்தை வளைத்துக்கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்பது இந்திய வாதம். இந்த மனோபாவம் பல மேலை நாடுகளில் இருப்பதில்லை. அப்படிப்பட்ட நாட்டின் மக்கள்தான் மனித உரிமைகளை முன்னெடுக்கிறார்கள். அவர்களிடம் பொதுவாக சந்தர்ப்பவாதம் இருப்பதில்லை. அதுபோன்ற பண்பட்ட ஒரு சமூகமாக இந்தியச் சமூகம் மாறவேண்டும்.
அப்படி மாறாதவரை, Killing Fileds (1|2) போன்ற ஆவணப் படங்களால் இந்தியாவில் பெரும் மாறுதலை ஏற்படுத்திவிட முடியாது. ட்விட்டரில் மூத்த இந்திய பத்திரிகையாளர்கள்கூட விடுதலைப் புலிகள் இப்படிப்பட்டவர்கள், அப்படிப்பட்டவர்கள் என்கிறார்கள். விடுதலைப் புலிகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், ஒரு போரில் அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருக்க ஒரு ராணுவம் எவ்வளவோ செய்திருக்கலாம். சிறு குழந்தைகளைக் கொல்வது, செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து பெற்ற தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தி குண்டுபோட்டு அப்பாவிகளைக் குறிவைத்துக் கொல்வது, வெள்ளைக்கொடி ஏந்திச் சரணடைய வந்தவர்களைக் கொல்வது, பெண் போராளிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்வது போன்ற போர்க்குற்றங்களை எதைக் கொண்டும் நியாயப்படுத்திவிட முடியாது. அப்படித் தொடர்ந்து நியாயப்படுத்துபவர்களுக்கு மனித உரிமை என்ற வார்த்தையே கெட்ட வார்த்தையாக உள்ளது.
சுற்றியுள்ள நண்பர்களிடம் பேசும்போது, இந்தப் பிரச்னையின் தீவிரம் இன்னும் அதிகமாகவே புரிகிறது. இந்தியாவில் மாற்றத்தைச் சட்டென உருவாக்கிவிட முடியாது. இரண்டு மூன்று தலைமுறைக்குள்ளாவது இந்த மாற்றத்தை ஏற்படுத்திவிட நாம் முயற்சி செய்யவேண்டும்.
- பத்ரி சேஷாத்ரி
( http://www.badriseshadri.in/ )
Posted by IdlyVadai at 3/15/2012 05:40:00 PM 24 comments
இலங்கையின் கொலைக் களங்கள் - 2
Posted by IdlyVadai at 3/15/2012 07:56:00 AM 7 comments
Labels: வீடியோ
நச் பூமராங்
கிராமத்துக்குள் பஸ் வந்ததால் பஸ் முன்பு ஆடு பலியிட்டு விருந்து படைத்த பொதுமக்கள் - செய்தி
கரண்ட் வந்தா என்ன செய்வாங்களோ ?
இளைஞர்களுக்கு வழிவிடவேண்டி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன்: ராகுல் டிராவிட்
இனி எல்லா டெஸ்ட் போட்டிகளும் ஒண்டே போட்டிக்களாக அறிவிக்கப்படும்.
அமெரிக்க விழாவுக்கு செல்ல 25 லட்சம் கேட்ட வடிவேலு : தமிழ் சங்கத்தினர் அதிர்ச்சி - செய்தி
ஓசியில போக இது என்ன திமுக பிரச்சார கூட்டமா ?
கொசுக்களை ஒழிப்பதற்கு நவீன வாகனங்கள் பயன்படுத்தப்படும்
புதிய திட்டம் அறிமுகம் - செய்தி
எதற்கு செலவு ? அடுத்த படம் வரும் வரை சிட்டி freeயா தான் இருக்கிறார், அவரை கூப்பிடலாமே !
விஜயகாந்தின் ஒரிஜனல் பெயர் விஜயராஜ். ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பெயரில் இருந்த 'காந்த்' என்ற சொல்லை எடுத்து விஜயகாந்த்' என்று பெயரை மாற்றிக் கொண்டவர், அவர். விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் முதல் அமைச்சர் ஜெயலலிதாதான்.
நல்ல வேளை அதற்கு காரணம் அந்த 'காந்த்' இல்லை.
ஜனாதிபதி உரையில் இலங்கையை எச்சரிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது - கனிமொழி
ஜனாதிபதி உரையில் ஸ்பெக்ட்ரம் பத்தி இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்கிறார்கள் மக்கள்.
பின்னூட்டதில் நீங்களும் தொடரலாம்...நன்றாக இருந்தால் பரிசு....உண்டு :-)
Posted by IdlyVadai at 3/15/2012 06:09:00 AM 17 comments
Labels: நச் பூமராங்
Wednesday, March 14, 2012
பூச்சாண்டி அரசியல் - ரயில்வே பட்ஜட்
பாராளுமன்றத்தில் இன்று ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமாக தங்கள் சொந்த மாநில ஓட்டுக்காக அவர்கள் மாநிலத்துக்கு புதிய ரயில்கள் என்று அறிவிப்பார்கள் மத்திய அமைச்சர்கள். ஆனால் இந்த முறை பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலையும் ரூ. 5-ஆக உயர்த்தப்பட்டுள்ளது, 1Km 5 பைசா உயர்ந்தது என்ற செய்தி தான் ஹாட். இதை குறித்து பிரதமரிடம் கேட்டதற்கு "தொலைநோக்கு பார்வைக் கொண்ட ரெயில்வே பட்ஜெட்" இது என்கிறார். இதே தொலைநோக்கு தொலைப்பேசித் துறையில் இல்லாது போனது வேடிக்கை.
இதைவிட வேடிக்கை தினேஷ் திரிவேதிக்கு அவர் கட்சியே கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தி தான். இதை கேள்விப்பட்ட உடனே தினேஷ் திரிவேதி எல்லா மீடியாவிற்கும் "கட்சியை விட நாடு முக்கியம்" என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்துவிட்டார். உங்க பதவி போகாதா என்று கேட்டதற்கு பகத் சிங் விடுதலைக்கு உயிரையே விட்டார் என்று ஒரு போடு போட்டார்!
புகைச்சல் 1:
உடனே அவருக்கு நாட்டுப்பற்று என்று தப்பு கணக்கு போட வேண்டாம். சில வாரம் முன்பு இவர் ராகுல் காந்தியை Closed Doorsல் சந்தித்தார். சந்தித்த உடன் மம்தா இவரை கொல்கத்தாவிற்கு அழைத்து விளக்கம் கேட்டார் என்று பலருக்கு தெரிந்திருக்காது. இவர் ராஜினாமா செய்தால் இவருடைய எதிர்காலத்தை காங்கிரஸ் பார்த்துக்கொள்ளும். மம்தா கட்சியை உடைத்தால் அவர்களுக்கு லாபம் தானே !
புகைச்சல் 2:
கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அளித்த விருந்துக்கு தனது கட்சி சார்பில் ஜூனியர் எம்.பி.யை மம்தா பானர்ஜி அனுப்பி இருந்தார். இது காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் செயல் என்று பரவலாக பேசப்பட்டது. திமுகவில் டி.ஆர்.பாலு என்ற Experienced விருந்தினர் மாதிரி மம்தா இன்னும் ஒருவரை உருவாக்கவில்லை என்பது அவருக்கு பெரிய தலைகுணிவு.
மம்தா காங்கிரஸுக்கு செக் வைக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார் அதற்கு இது ஒரு சாக்கு. தற்போது மம்தா பிரதமருக்கு எழுதிய கடித்ததில் தினேஷ் திரிவேதியை பதவியிலிரிந்து தூக்கிவிட்டு திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகுல் ராயை ரயில்வே மந்திரியாக உடனே நியமிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். வழக்கம் போல காங்கிரஸ் தலைவர்கள் பிரதமர் வீட்டில் மிட் நைட் மசாலா பாக்க ஒன்று கூடியுள்ளார்கள்.
காங்கிரஸ் உடல் நலம் இல்லாமல் ஐ.சி.யூவிற்கு போவதும் தலைவர்கள் ஒன்று கூடி ஆக்ஸிஜன் கொடுத்து திரும்ப உயிர் வருவதும் நமக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். இன்னும் கொஞ்ச நாளில் காங்கிரஸ் கோமா நிலைக்கு போனால் நல்லது.
இனி பிரதமர் என்ன செய்வார் ? மம்தா நிர்பந்ததுக்கு அடிபணிவாரா ? அல்லது நாட்டின் நலனே முக்கியம் என்று இருப்பாரா ? இருக்கவே இருக்கா பிரணாப் முக்கர்ஜி இனி அவர் தான் பேசுவார். பார்க்கலாம்.
சிபு சோரன், அ.ராசா போன்றவர்களை கூட்டணி தர்மத்துக்காக சேர்ந்த்துக்கொண்ட பிரதமர் மீது அவருக்கே நம்பிக்கை இருக்காது. நமக்கு எப்படி இருக்கும் ?
எல்லாவற்றைவிட காமெடி இலங்கைக்கு எதிரான ஐ.நா கூத்தில் திமுக காங்கிரஸை பூச்சாண்டி காமிக்க ஆரம்பித்திருக்கிறது.
Posted by IdlyVadai at 3/14/2012 11:10:00 PM 2 comments
Labels: செய்திவிமர்சனம்
Tuesday, March 13, 2012
ராசிபலன் மார்ச் 15-31 வரை - பெருங்குளம் ராமகிருஷ்ணன்
மேஷம் : அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம். உண்மையால் உயரும் மேஷ ராசி வாசகர்களே ராசியில் சுக்கிரன், குரு, இரண்டில் கேது, ஐந்தில் செவ்வாய், ஏழில் சனி, எட்டில் ராகு, பதினொன்றில் புதன், பன்னிரெண்டில் சூரியன் என கிரகங்கள் வலம் வருகிறார்கள். மார்ச் 14ம் தியதி 6ம் இடத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி தனஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.
ராசிநாதன் செவ்வாய் ஐந்தில் இருக்க பாக்கியஸ்தானாதிபதி குரு ராசியில் இருக்கிறார்கள். துணிவும் உற்சாகமும் நிறைந்திருக்கும் காலமிது. தாங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது. தங்களது இளைய சகோதரத்தால் நிறைந்த லாபம் கிடைக்கும். வருமானம் பெருக வாய்ப்பிருக்கிறது. ராசியில் குரு சஞ்சரிப்பதாலும் ராசிநாதன் ஐந்தில் சஞ்சரிப்பதாலும் தெய்வ திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். ராசிநாதனின் ஐந்தாம் வீட்டு சஞ்சாரத்தால் விளையாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கு சாதனைகள் படைக்க வாய்ப்புண்டு. புத்திரர்கள், வாழ்க்கைத்துணை மற்றும் பெற்றோர்கள் வழிகளில் நல்ல ஆதாயம் பெற வாய்ப்புண்டு. இரண்டு, ஏழுக்குரிய சுக்கிரன் ராசியில் குருவுடன் இருக்க திருமணத் தடைகள் யாவும் நீங்கி மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்புண்டு. இசைத் துறையில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் லாபம் கிடைக்கும். மின்சாரம், இரசாயணம் தொழில் சார்ந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தொழில் காரணமாக வாங்கிய கடனை திரும்ப செலுத்துவீர்கள். கலைத் துறையினர் பெரும் புகழ் அடைய முடியும். அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவியினால் நெருக்கடி உண்டாகும். மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பில் வெற்றியடைவர்.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 14, 15, 16
பரிகாரம்: சிவ வழிபாடு வெற்றியை தரும். அடிக்கடி சிவன் ஆலயங்களுக்கு சென்று வருவது நன்மையை தரும்.
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதம் தனது கவர்ச்சியான பேச்சால் கவர்ந்து இழுக்கும் ரிஷப ராசி வாசகர்களே ராசியில் கேது, நான்கில் செவ்வாய், ஆறில் சனி, ஏழில் ராகு, பத்தாமிடத்தில் புதன், பதினொன்றில் சூரியன், பன்னிரெண்டில் வியாழன், ராசிநாதன் சுக்கிரனுமாக நவநாயகர்கள் அமர்ந்து இருக்கிறார்கள். மார்ச் 14ம் தியதி 5ம் இடத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசிக்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.
சுகஸ்தானம் வலிமை பெற்றிருப்பதால் உடல்நலம் சிறக்கும். செவ்வாய் நான்கில் இருப்பதால் தாய், தாய் வழி உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் நேரிடலாம். பொருளாதார வளர்ச்சி ஏற்ற இறக்கமாகவே இருக்கும். சனி வக்ரகதி பெறுவதால் இளைய சகோதரத்துக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு கட்டும் பணியோ அல்லது நிலம் வாங்கும் பணியோ மேற்கொள்வீர்கள். எட்டுக்குடையவர் பன்னிரெண்டில் இருந்து ஆறு, எட்டு ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் மிக நல்ல பலன்களை தடையின்றி அனுபவிப்பீர்கள். திட்டமிட்ட சில காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். வீண்பழி சுமத்தி உங்களை விட்டு பிரிந்து சென்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீண்டும் உங்களிடம் வந்து சேர்வர். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். வேலையாட்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.
கலைத்துறையினர் வெளிநாடு பயணம் செல்வார்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பதவி மூலம் லாபம் கிடைக்கும். மாணவர்கள் தொழிற்கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 15, 16
பரிகாரம்: லக்ஷ்மி நரசிம்மரை ஆராதனை செய்யுங்கள். பேசும் வார்த்தையில் நிதானமும் இனிமையும் தேவை.
மிதுனம்: (மிருகசீரிஷம் 3, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2 ,3ம் பாதம்) - நடத்தையில் சிரத்தையை கடைபிடிக்கும் மிதுன ராசி வாசகர்களே மூன்றில் செவ்வாய், ஐந்தாமிடத்தில் சனி, ஆறாம் இடத்தில் ராகு, ஒன்பதாமிடத்தில் ராசிநாதன் புதன், பத்தாமிடத்தில் சூரியன், பதினொன்றில் சுக்கிரன், வியாழன், பன்னிரெண்டில் கேதுவுமாக கிரக நாயகர்கள் அருளாசி வழங்குகின்றனர். மார்ச் 14ம் தியதி 4ம் இடத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி விரையஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.
லாப ஸ்தானத்தில் குரு, ராசிநாதன் புதன் பாக்கியஸ்தானத்தில் எனும் அமைப்பு உங்களது பொருளாதார நிலைமையை உயர்த்துவதாகும். வசதி வய்ப்புகள் அதிகரிக்கும். ராசி மற்றும் நான்காம் ஸ்தானத்திற்குரிய அதிபதி புதன் பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பது குழப்பங்கள் அகன்று குதூகலத்தை தரக்கூடிய அமைப்பாகும். நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். தாய் வழியில் இருந்த பிரச்சனைகள் அகன்று சந்தோஷம் பிறக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பர். குழந்தைகளின் கல்யாண தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பேரக்குழந்தைகளை பெறும் பாக்கியமும் சிலருக்கு கிட்டும். பன்னிரெண்டுக்குரிய சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருப்பதும், அவருடன் குரு இருப்பதும் நல்லது. பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். ஒன்பதுக்குரியவர் வக்ரகதியில் நான்காம் ஸ்தானத்திற்கு வருவதால் நிலம், மனை சம்பந்தமான தொந்தரவுகள் நீங்கும். தந்தையின் செல்வம் பெருகும். மேலும் யோகம் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு விருதுகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். மாணவர்களுக்கு தேர்வில் நல்ல தேர்ச்சி கிடைக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 17, 18, 19
பரிகாரம்: ஸ்ரீ கணபதியை பூஜித்து வர நன்மையுண்டு. கோவில் திருப்பணிகளில் பங்கு பெறுங்கள். நன்மைகள் பயக்கும்.
கடகம்: புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் - அனைவரையும் சமமாக நடத்தும் கடக ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் செவ்வாய், நான்காமிடத்தில் சனி, ஐந்தில் ராகு, எட்டாமிடத்தில் புதன், ஒன்பதாமிடத்தில் சூரியன், பத்தாமிடத்தில் வியாழன், சுக்கிரன், பதினொன்றாமிடத்தில் கேது என கோள்கள் ஆதிக்கம் இருக்கிறது. மார்ச் 14ம் தியதி தைர்யவீர்ய ஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி லாபஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.
குடும்பத்தை சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டு பின் மறையும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். ஐந்திற்குரியவர் இரண்டில் அமர்ந்துள்ளதால் குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும். நான்குக்குடையவர் நான்காம் ஸ்தானத்தைப் பார்ப்பதால் அழகிய வீடு மற்றும் வாகன வசதிகள் பெருகும். நண்பர்களிடம் கருத்து மோதல்களை தவிர்ப்பது அவசியம். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை பிரச்ச்னையின்றி வந்து சேரும். விரையாதிபதி ஆயுள்ஸ்தானத்தில் பயணிப்பதால் வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு பொருள்வரவும், தனவரவும் அதிகரிக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அதிகாரமிக்க பதவிகள் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 19, 20, 21
பரிகாரம்: வேல்முருகனை வழிபட குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வேல்மாறல் வகுப்பு பாராயணம் செய்யலாம்.
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1 ) அடுத்தவரின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் சிம்ம ராசி வாசகர்களே ராசியில் செவ்வாய், மூன்றில் சனி, நான்கில் ராகு, ஏழில் புதன், எட்டாமிடத்தில் ராசிநாதன் சூரியன், ஒன்பாதமிடத்தில் குரு, சுக்கிரன், பத்தாமிடத்தில் கேது என கிரக நாயகர்கள் பவனி வருகின்றனர். மார்ச் 14ம் தியதி தனஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் தொழில் ஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார பிரச்சனைகள் உண்டாகாது. எனினும் ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போகலாம். குடும்பத்தில் பிள்ளைகளை முன்னிட்டு விவாதங்கள் ஏற்படலாம். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள். தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் திடீரென வசூலாகும். மூன்றாம் ஸ்தானத்திற்குடையவர் அவ்வீட்டிற்கு ஏழாம் ஸ்தானத்திலும் அந்த ஸ்தானத்தை வியாழன் பார்ப்பதாலும் இளை சகோதரத்தின் திருமண ஏற்பாடுகள் தங்கு தடையின்றி நடைபெறும். விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு மக்களின் நன்மதிப்பும் நற்சான்றிதழும் கிடைக்கும். நான்காம் ஸ்தானத்திற்குரிய மங்கள்காரகன் செவ்வாய் ராசியில் அமர்ந்துள்ளதால் நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. குழந்தைகள் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்புகளில் நாட்டம் செலுத்துவர். அந்நிய நாட்டு பயணங்கள் நீங்கள் எதிர்பார்த்திருந்த படியே கைகூடி வருகிறது. நண்பர்கள் உதவியால் மிகுந்த சிரமமான காரியம் ஒன்றை செய்து முடிப்பர். பணியில் உள்ளவர்களுக்கு இடமாறுதல்கள் வரலாம்.
கலைத்துறையினருக்கு பரிசுகளும், பாராட்டுகளும் குவியும். அரசியலில் உள்ளவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு வரும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவர்.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 21, 22, 23
பரிகாரம்: ஆதித்யஹ்ருதயம் சொல்வது மனநிம்மதியை தரும். ஸ்ரீ ராமபிரானை வழிபட செல்வங்கள் சேரும்.
கன்னி: (உத்திரம் 2, 3 ,4, ஹஸ்தம், சித்திரை 1, 2) சுயகாலில் முன்னேறும் கன்னி ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் சனி, மூன்றாமிடத்தில் ராகு, ஆறாமிடத்தில் ராசிநாதன் புதன், ஏழில் சூரியன், எட்டாமிடத்தில் குரு, சுக்கிரன், ஒன்பதாமிடத்தில் கேது, பன்னிரெண்டாமிடத்தில் செவ்வாய் என கிரக ஆதிக்கம்உள்ளது. மார்ச் 14ம் தியதி ஸ்வய ராசிக்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் பாக்கியஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.
குடும்ப தன ஸ்தானத்தை குருவும், விரையஸ்தானத்தை குரு, ராசிநாதன் புதன் பார்ப்பதும், களத்திர ஸ்தானத்தில் விரையாதிபதி இருப்பதும், மங்களகாரகன் செவ்வாய் ராசிநாதன் புதனைப் பார்ப்பதும் இவ்வளவு நாட்களாக இருந்த திருமண தடைகள் நீங்கும். கல்யாண ஏற்பாடுகள் கூடி வரும். உங்கள் கவலைகள் யாவும் நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வருங்கால முன்னேற்றத்தைக் கருதி சில முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகள் யாவும் வெற்றிகளைத் தரும். பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும். சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். மூன்றாம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் தைரியம் பளிச்சிடும். புதிய வழக்குகளை சந்திக்க நேரிடலாம். நான்காம் ஸ்தானாதிபதி தனது ஸ்தானத்தைப் பார்ப்பதால் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை நீங்கும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சனியே ஆறாம் அதிபதியாகி அவர் குடும்ப ஸ்தானத்தில் இருந்தாலும் அந்த ஸ்தானத்தை குரு பார்ப்பதாலும் குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் வந்து வந்து போகும். சிறைத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பயணம் தொடர்பான தொழில்களில் லாபம் கிடைக்கும். எனினும் எட்டுக்குடையவர் பன்னிரெண்டில் உலவுவதால் பணியாளர்களால் பிரச்ச்னைகள் வரலாம்.
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்வாய்ப்புகள் காத்திருக்கிறது. அரசியலில் உள்ளவர்கள் சில தியாகங்கள் செய்ய வேண்டி வரலாம். மாணவர்களுக்கு கல்வியில் கவனக்குறைவு வரலாம். ஈடுபாடு அவசியம்.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 24, 25, 26
பரிகாரம்: ஸ்ரீ லக்ஷ்மி நாராயணரை வழிபடுங்கள். பசுவுக்கு ஆகாரம் கொடுப்பது நல்லது.
துலாம்: (சித்திரை 3, 4, ஸ்வாதி, விசாகம் 1, 2, 3) அனைவரையும் வாழ வைக்கும் துலாம் ராசி வாசகர்களே, ராசியில் சனி, இரண்டாமிடத்தில் ராகு, ஐந்தாமிடத்தில் புதன், ஆறாமிடத்தில் சூரியன், ஏழாமிடத்தில் குரு, ராசியாதிபதி சுக்கிரன், எட்டாமிடத்தில் கேது, லாபஸ்தானமான பதினொன்றில் செவ்வாய் என கோள்கள் நிலை உள்ளது. மார்ச் 14ம் தியதி விரையஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் அஷ்டமஸ்தானத்திற்கு ராசியாதிபதி சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.
இரண்டில் ராகு இருந்தாலும், ராசிநாதன் ஏழில் சஞ்சரிக்க அவருடன் குரு இருப்பதும் நல்லது. பொருளாதார பற்றாக்குறை ஏற்படாது. இரண்டாம் அதிபதியும் லாபஸ்தானத்தில் உலவுவதால் வங்கி இருப்பு உயரும். சுயமரியாதை மற்றும் மேன்மைக்கு சற்று பங்கம் வரலாம். கவனம் தேவை. மூன்றுக்குடையவர் ராசியைப் பார்ப்பதால் சகோதரத்திடம் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் மறைந்து நன்மைகள் ஏற்படும். விலையுயர்ந்த ஆடைகள் ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை அதிகரித்து சந்தோஷ தருணங்கள் ஏற்படும். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு கட்டுவதற்குண்டான கடன் வாங்குவதற்கான வேலைகள் தடையின்றி நடைபெறும். அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளில் தொய்வுகள் ஏற்படலாம். மிக முக்கிய பிரமுகர்கள் மூலம் அதை சரி செய்து கொள்வீர்கள். நேர்மையும் அறிவாற்றலும் மிக்கவர் என பாராட்டுதல்கள் பெறுவீர்கள். வாகனப்பழுதுகள் ஏற்பட்டு செலவுகள் செய்ய நேரிடலாம். ஏழுக்குடையவர் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத்துணை மூலமாக லாபங்கள் ஏற்படும். திருமணமாகாதவர்கள் செல்வாக்கும் செல்வமும் உடைய வாழ்க்கைத்துணை அமையும். நிறைய நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். மூத்த சகோதரத்தால் மிகுந்த ஆதாயம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.
கலைத்துறையினருக்கு அரசாங்க விருதும் பாராட்டும் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 27, 28, 29
பரிகாரம்: ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வணங்குவதும், மஹலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்வதும் நன்மையை தரும்.
விருச்சிகம்: ( விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிலும் நேர்படப் பேசும் விருச்சிக ராசி வாசகர்களே ராசியில் ராகு, நான்காமிடத்தில் புதன் ஐந்தாமிடத்தில் சூரியன், ஆறாமிடத்தில் குரு, சுக்கிரன், ஏழாமிடத்தில் கேது, பத்தாமிடத்தில் செவ்வாய், பன்னிரெண்டாமிடத்தில் சனி என கிரகங்கள் வீற்றிருக்கிறார்கள். மார்ச் 14ம் தியதி லாபஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் களத்திரஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.
ராசிநாயகன் பத்திலும், தனஸ்தானாதிபதி தனவாக்குகுடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதாலும் குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நிலம் வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். செல்வாக்கு உயரும். சொன்ன சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். அனுகூலமான செய்திகள் தேடி வரும். நீண்ட தூர பிரயாணங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பெண்களால் பெருமை சேரும். உங்கள் விடாமுயற்சிக்கு வெற்றிகளை குவிப்பீர்கள். அலுவலகத்தில் கௌரவமும் செல்வாக்கும் அதிகரிக்கும். உங்கள் அந்தஸ்தும் சமுதாயத்தில் உயரும். வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும். வியாபாரம் அபிவிருத்தி அடையும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாறும். மாணவர்கள் படிப்பினில் சாதனைகள் புரிவர்.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 29, 30, 31
பரிகாரம்: கணவன் மனைவி உறவில் உள்ள சிக்கல்கள் தீர ஸ்ரீ கணபதி மற்றும் துர்க்கையை வழிபடுங்கள். மது மாமிசத்தை அறவே தவிர்க்க வேண்டும்.
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) விழ விழ மீண்டும் முளைக்கும் தன்னம்பிக்கையை உடைய தனுசு ராசி வாசகர்களே மூன்றாமிடத்தில் புதன், நான்காமிடத்தில் சூரியன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசிநாதன் குரு, சுக்கிரன், ஆறாமிடத்தில் கேது, ஒன்பதாமிடத்தில் செவ்வாய், பதினொன்றில் சனி, பன்னிரெண்டாமிடத்தில் ராகு என கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மார்ச் 14ம் தியதி தொழிற்ஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் 6ம் இடத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.
உடல்நலம் சீராக இருக்கும். அதிர்ஷ்ட வீட்டில் இருக்கும் குரு ராசியைப் பார்ப்பதும் அவருடன் களத்திரகாரகன் சுக்கிரன் இருப்பது நன்மையான காலகட்டம் என்பதை உணருங்கள். தனஸ்தானாதிபதி சனி ராசியை பார்ப்பதால் பொருளாதார பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக நீங்கும். காரியங்கள் யாவும் துரிதமாக தங்குதடையின்றி இனிதே நடைபெறும். புகழ்மிக்கவர்கள் உங்கள் பின்னால் இருந்து பொருளாதாரம் பெருக வழிவகைகள் செய்வார்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த தடைபட்ட சுணக்க நிலை மாறும். பொன் பொருள் சேர்க்கையால் சந்தோஷம் அதிர்ஷ்டம் ஏற்படும். பொதுமக்களால் போற்றப்படுவீர்கள். தர்மகாரியங்களிலும் ஆலயத் திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள். மூன்றுக்குடையவர் லாபத்தில் சஞ்சரிப்பதால் தனங்களில் தன்னிறைவு அடைவீர்கள். உடன்பிறப்புகள் தங்கள் தொழிலில் மிகுந்த மேன்மை அடைவார்கள். வீடு வாகனம் நல்ல நண்பர்களைப் பெறுவீர்கள். தங்களது வெளிநாட்டுப் பயணத்தால் நன்மைகளை அடைவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புனித செயல்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உள்ளன. நிலம் மனை போன்றவற்றில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு அந்திய தேச பயணம் ஏற்படவும், அதனால் லாபம் அடையவும் வாய்ப்புகள் உண்டு. அரசியலில் உள்ளவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். மாணவர்கள் நன்கு தேர்ச்சி அடைவார்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: மார்ச் 31, ஏப்ரல் 1, 2
பரிகாரம்: ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தியையும், முருகனை வழிபடுங்கள். நன்மைகள் அடையலாம்.
மகரம்: (உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2) எடுத்த வேலைகளை திறம்பட செய்து முடிக்கும் மகர ராசி வாசகர்களே இரண்டாமிடத்தில் புதன், மூன்றில் சூரியன், நான்காமிடத்தில் குரு, சுக்கிரன், ஐந்தாமிடத்தில் கேது, எட்டாமிடத்தில் செவ்வாய், பத்தாமிடத்தில் ராசிநாதன் சனி, லாபஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் பவனி வருகிறார்கள். மார்ச் 14ம் தியதி பாக்கியஸ்தானத்திற்கு வக்ரகதியில் ராசியாதிபதி சனியும், 29ம் தியதி ராசியின் பூர்வபுண்ணிய பஞ்சமஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.
குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்க வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும். ராசிநாயகன் ஒன்பதிலும் சுகஸ்தானத்தில் சுக்கிரனும் இருப்பதால் உலக வாழ்க்கை யோக வாழ்க்கை இரண்டிலும் சரி சமமான எண்ணங்கள் உண்டாகும். அருளாளர்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகரிக்கும். பாகப்பிரிவினை பிரச்சனைகளின்றி சுமூகமாக நடைபெறும். இளைய சகோதரம் குடும்ப பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டு லாபங்களை சேர்ப்பார். தந்தையின் செல்வாக்கால் வழக்கு வியாஜ்ஜியங்களிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகள் வழியில் கவனம் தேவை. வெளிநாட்டில் வசிப்பவர்கள் நாடு திரும்பி இங்கே தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகளின் தொந்தரவுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறையும். சிலருக்கு பொருள்வரவும், தனவரவும் உண்டாகும். எதிர்பார்த்த உத்தியோக உயர்வு, இடமாறுதல் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பிரச்சனைகள் ஏற்படலாம். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள்.
கலைத்துறையினருக்கு வீண் வதந்திகள் ஏற்பட்டு மறையும். அரசியலில் உள்ளவர்களுக்கு மேலிடத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
சந்திராஷ்டம நாட்கள்: இல்லை
பரிகாரம்: ஸ்ரீ சாஸ்தாவை வழிபடுங்கள். ஏகாதசி விரதம் கடைபிடியுங்கள்.
கும்பம்: (அவிட்டம் 3, 4, ஸதயம், பூரட்டாதி 1, 2, 3) சுகங்களை முழுமையாக அனுபவிக்கும் கும்ப ராசி வாசகர்களே ராசியில் புதன், இரண்டாமிடத்தில் சூரியன், மூன்றாமிடத்தில் குரு, சுக்கிரன், நான்காமிடத்தில் கேது, ஏழாமிடத்தில் செவ்வாய், ஒன்பாதமிடத்தில் சனி, பத்தாமிடத்தில் ராகு என கிரக நிலவரம் காணப்படுகிறது. மார்ச் 14ம் தியதி அஷ்டமஸ்தானத்திற்கு வக்ரகதியில் ராசியாதிபதி சனியும், 29ம் தியதி ராசியின் சுகஸ்தானத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.
களத்திர, பாக்கிய, லாப ஸ்தானங்கள் குருவினால் பார்க்கப்பட்டு புனிதமடைகின்றன. உபரி வருமானங்களால் மிகுந்த தன சேர்க்கை ஏற்பட்டு வீண் செல்வுகளை சமாளிப்பீர்கள். இளைய உடன்பிறப்புகளால் பொருள்வரவு அதிகரிக்கும். இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவீர்கள். அண்டை அசலாருடன் இருந்து வந்து பிணக்கு நிலை மாறும். தாயாரின் உடல் நலம் சீரடையும். மகிழ்ச்சியான செய்திகள் உங்களை வந்தடையும். வீடுகட்டும் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். ஏழில் செவ்வாய் வயிறு சம்பந்தமான உபாதைகள் வரலாம். எனவே விருந்து விழாக்களில் கலந்து கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆகார நியமங்களை அனுசரித்து செல்வதும் நல்லது. சொந்தமாக வீடு கட்டி குடியேறும் யோகம் உண்டு. குழந்தைகளிடம் சற்று கண்டிப்புடன் இருக்க வேண்டிய நேரமிது. கடன் சுமைகள் பூரணமாக குறையும்.
திருமணம் கூடி வருகிறது. வாழ்க்கைத்துணைவரால் தனவரவு அதிகரிக்கும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் குடும்பத்துடன் வந்து இணையும் பொன்னான காலமிது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பெரிதும் பாராட்டுகள் கிடைக்கும். அரசியலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
சந்திராஷ்டம நாட்கள்: இல்லை
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது நன்மையை தரும். ராம நாம ஜெபம் செய்வதும் நல்லது.
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) அடுத்தவரின் நிலையை எளிதில் புரியும் மீன ராசி வாசகர்களே ராசியில் சூரியன், இரண்டாமிடத்தில் ராசிநாதன் குரு, சுக்கிரன், மூன்றாமிடத்தில் கேது, ஆறாமிடத்தில் செவ்வாய், எட்டாமிடத்தில் சனி, ஒன்பதாமிடத்தில் ராகு, பன்னிரெண்டாமிடத்தில் சூரியன் என கிரக அமைப்பு உள்ளது. மார்ச் 14ம் தியதி களத்திர ஸப்தம ஸ்தானத்திற்கு வக்ரகதியில் சனியும், 29ம் தியதி ராசியின் 3ம் இடத்திற்கு சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார்கள்.
தன வாக்கு குடும்ப ஸ்தானம் வலுப்பெற்றிருந்தாலும் தனஸ்தானாதிபதி செவ்வாய் ஆறாமிடத்தில் உலவுவது சிறப்பில்லை. எனவே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொள்ளவும். எனினும் அவர் யோககாரகர் என்பதனால் காரிய வெற்றி மற்றும் பெரும் பொருள் குவியும். எடுத்த செயல்கள், முயற்சிகள் யாவும் இன்னலின்றி முடியும். உடன் இருப்பவர்களால் எற்பட்ட தொல்லைகள் மறையும். சுப காரியங்களில் இதுவரை இருந்த சுணக்க நிலை மாறும்.தனஸ்தானாதிபதி விரையஸ்தானத்தை பார்ப்பதால் சில விரையங்களை கொடுக்கத்தான் செய்யும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். வீடு கட்டுவதற்கு இருந்த தடைகள் மாறும். தந்தையின் வியாபாரத்தில் சிறிது கவனம் தேவை. மிகுந்த நன்மை உண்டாகும். வேலை செய்யுமிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிட்டும். தொழிலில் எதிர்பாராத வகையில் பெரும் லாபம் கிடைக்கும்.
கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கைவரப் பெறும். அரசியலில் உள்ளவர்களுக்கு மனதிலுள்ள எண்ணங்கள் ஈடேறும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.
சந்திராஷ்டம நாட்கள்: இல்லை
பரிகாரம்: கந்த ஷஷ்டி கவசம் பாராயணம் செய்வது மிகுந்த நன்மையை தரும்.
---
ஜோதிடம் எமது தொழிலல்ல...எமது உயிர்.
அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில்
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/
தொடரும்... :-)
Posted by IdlyVadai at 3/13/2012 09:21:00 AM 4 comments
Labels: ராசிபலன்
Monday, March 12, 2012
தில்லியின் குளிர்காலம் - பாரதி மணி
முந்தாநேற்று தில்லி வந்துசேர்ந்தேன். பலவருடங்களுக்குப்பிறகு எனக்குப்பிடித்த தில்லிக்குளிரை அனுபவித்து, ரசித்துவிட்டுத்திரும்பலாமே என்று ஓர் ஆசை. வந்த அன்று மனுஷ்ய புத்திரனிடமிருந்து ஒரு போன் கால்: ’சார்! மார்ச் இதழுக்கு உங்களிடமிருந்து ஒரு கட்டுரை எதிர்பார்க்கிறேன். 20-ம் தேதிக்குள்ளே அனுப்பிடுங்க!’ என்றார். ‘என்னையும் ஒரு எழுத்தாளனாக நினைத்து, உயிர்மை ஆசிரியர் என்னிடம் கட்டுரை கேட்பது மனசுக்கு சந்தோஷமாகத் தானிருக்கிறது. ஆனா எதைப்பற்றியும் எழுத உந்துதல் இல்லை’…...யென்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, ‘நீங்க எழுதி ரொம்ப நாளாச்சு. நான் எதிர்பார்க்கிறேன்……. அனுப்பிருங்க’ என்று சொல்லி போனை வைத்துவிட்டு சிங்கப்பூர் கிளம்பிவிட்டார்!. சரி! ஆசிரியர் பெருமான் சொன்னால் தட்டமுடியாது……எதைப்பற்றி எழுதலாமென்று யோசித்தபோது, வருஷக்கணக்கில் ரசித்து, அனுபவித்த தில்லிக்குளிரைப்பற்றி அதிகம் சொல்லவில்லையே….அதைக்குறித்து எழுதலாமென்று தோன்றியது.
நான் படித்துக்கொண்டிருக்கும் Lonely Planet publications வெளியிட்டிருக்கும் Delhi என்ற புத்தகத்தில் தில்லியின் பருவநிலையைப்பற்றி வெள்ளைக்காரன் இப்படி எழுதியிருக்கிறான்: One of Delhi’s drawbacks is that more than half the year, the climate is lousy! April is the build-up to the furnace heat of summer, with temperatures around 38 Degrees. May and June are intolerable, with daily temperatures well in excess of 45 degrees – roads start to melt, birds drop out of the sky and quite a few people also fail to last the distance! இந்தியாவுக்கு குளிர்மாதங்கள் நவம்பரிலிருந்து மார்ச் வரை மட்டுமே வாருங்கள் என வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை பயமுறுத்துகிறான்! தில்லிக்குளிரை ஒரு தடவையாவது அனுபவித்திராத தமிழக மக்களுக்கு அதை விளக்கிச்சொல்வது கடினம். தமிழர்களுக்கு தில்லி குளிர் பாட்டன் என்றால், ஐரோப்பியக்குளிர் கொள்ளுப்பாட்டன் தான்! ‘என்ன பெரிய குளிர்? நான் பாக்காத குளிரா?’ என்று ஒரு ஸ்வெட்டர் கூட கையில் இல்லாமல் தில்லி வந்திறங்கும் தமிழ் எழுத்தாளர்களையும், சங்கீத வித்வான்களையும் நிறைய பார்த்திருக்கிறேன். ஒரு சங்கீத வித்வான் வெறும் வேட்டி சட்டையோடு தில்லி வந்துவிட்டு, ‘அம்மாடியோவ்! என்ன குளிர்யா இது? ஒவ்வொரு தடவையும் ஒண்ணுக்கு போறதுக்கு, ‘அதை’ தேடவேண்டியிருக்கு!’ என்று அலுத்துக்கொண்டிருக்கிறார். இவர்களுக்கென்றே ஐ.என்.ஏ. மார்க்கெட்டில் சீப்பாக பத்து ஸ்வெட்டர் வாங்கி வைத்துவிடுவேன். சமீபத்தில் சந்தித்த ஓர் எழுத்தாளர், ‘மணி சார்! தில்லி வந்தப்பொ நீங்க வாங்கிக்கொடுத்த ஸ்வெட்டரை இன்னும் வச்சிருக்கேன்’ என்று சொன்னபோது சந்தோஷமாகத்தான் இருந்தது.
எல்லா வருடங்களும் நான் தில்லியில் கேட்கும் வார்த்தைகள்: இந்த வருஷம் தில்லிக்குளிர் ரொம்பக்கொடுமை…..வாட்டியெடுத்திருச்சி!’. எத்தனை வருடங்கள் கேட்டும் சலிக்காத வார்த்தைகள்!
1955-ல் நான் தில்லியில் முதல் குளிரை அனுபவித்தேன். பார்வதிபுரம் கிராமத்திலிருந்து தில்லி போனவனுக்கு குளிரில் தேங்காயெண்ணெய் உறைந்துபோய் கத்தியால் வெட்டியெடுப்பது முதல் அனுபவமாக இருந்தது. அக்டோபரில் மாலைவேளைகளில் ‘ராத் கீ ராணி’யின் வாசனையுடன் குளிர் காற்று இதமாக வீசத்தொடங்கும். வழக்கமாக நவராத்திரி கொலுவை பெரிய அளவில் வைக்கும் அக்கா வீட்டில் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் ரஜாய்/ஸ்வெட்டர் இருக்கும் பெட்டிகள் எல்லாம் பத்துநாட்கள் கொலுப்படிகளாக உருவெடுத்துவிடும். குளிர் தான் வரவில்லையே…ஸ்வெட்டர் தேவைப்படாது என்று வைத்துவிடுவோம். நவராத்திரி நடுவில் நாலாம் ஐந்தாம் நாள் சின்ன மழை பெய்து குளிரைக்கிளப்பிவிடும். ஆபத்துக்கு பாவமில்லையென்று பொம்மைகள் வைத்திருக்கும் படிப்பலகைகளை உயர்த்தி, ஒருவிதமாக ஆளுக்கொரு ஸ்வெட்டரை பெட்டிகளிலிருந்து உருவிக்கொண்டதும் உண்டு! .முதல் குளிருக்கு ஸ்வெட்டர், கோட்டு, சூட்டு எதுவும் வாங்கவில்லை. என் அத்தானின் பழைய ஸ்வெட்டர்களையும், ஒரு பழைய Suit-ஐயும் வைத்து குளிரை தள்ளிவிட்டேன். அத்தான் தந்த Double-breast Suit அரதப்பழசு. உள்ளேயிருக்கும் lingings இற்றுப்போனது. கையை உள்ளே நுழைத்தால், லைனிங்ஸ் இடையே கை சிக்கிகொண்டு வெளியே வராது. இடதுகை ஒழுங்காக வந்துவிட்டால், வலதுகை உள்ளே மாட்டிக்கொள்ளும் அபாயம் உண்டு! அதற்கு தனியாக பிரார்த்தனை செய்யவேண்டும். .
அடுத்தவருடம் புதிதாக ஒரு சூட் தைத்துக்கொள்வது என்று தீர்மானித்து, என்னுடன் பாரத் எலக்ட்ரானிக்ஸ் தில்லி ஆபீசில் வேலை பார்த்துவந்த சர்தார்ஜி அம்ரீக் சிங்கிடம் சொன்னேன். கரோல்பாகில் தனக்குப்பரிசயமான Karolbagh Tailors-க்கு அழைத்துச்சென்றார். Raymond Suit length துணியோடு தையற்கூலி உட்பட ரூ. 250/- மட்டுமே. அதை ரூ.50 வட்டியில்லாத்தவணைகளாக ஐந்து மாதங்கள் பத்தாம் தேதிக்குள் கொடுக்கவேண்டும். அம்ரீக் சிங் எனக்கு காரண்டி அல்லது காரன்ட்டர்! (ஆமாம்…இப்போது ஒரு ஸூட் தைக்க எத்தனை ரூபாய் ஆகிறது?) அதன் பிறகு லண்டனிலும், சிங்கப்பூரிலும் காலையில் அளவு கொடுத்து, மாலை டெலிவரியான பல சூட்கள் வந்தாலும், என்முதல் சூட் பத்திரமாக என் அலமாரியில் இருந்தது……அதை என் பிர்லா ஆபீஸ் பியூன் ராதே ஷ்யாமுக்கு தானம் கொடுக்கும் வரை!
தில்லியில் முதல் வின்ட்டருக்கு வெந்நீரில் தான் குளித்தேன். நேதாஜி நகரில் எங்கள் வீட்டுக்கு எதிர்த்த ப்ளாக்கில் அத்தானின் நண்பர் வெங்கடாசலம் குடியிருந்தார். காலைவேளைகளில் அவர் வீட்டிலிருந்து ஊ…வ்வ்…ஆ,…வ்…..ஸ்….ஸ்…..ஸோஒ….ஓஒ…சூஊஊ என்றெல்லாம் சப்தம் வரும். கொலை ஏதாவது நடக்கிறதோவென்ற சந்தேகமும் சிலருக்கு வரலாம். சப்தம் அடங்கிய பிறகு, ஓர் கரிய உருவம் இடுப்பில் துண்டோடு பாத்ரூமிலிருந்து ஓடுவதைப்பார்த்திருக்கிறேன். பிறகு தான் தெரிந்தது ஐயர்வாள் தினமும் பச்சைத்தண்ணீரில் குளிக்கிறார் என்பது. அவர் நாற்பதுகளில் தில்லி வந்ததிலிருந்து குளிரோ சம்மரோ, பச்சைத்தண்ணி குளியல் தானாம். எனக்கும் ஒருநாள் ஞானோதயம் வந்தது: ‘நாற்பது வயது சம்சாரி பச்சைத்தண்ணீரில் குளிக்கமுடியுமென்றால், பத்தொன்பது வயது பாலகன் ஏன் முயற்சிக்கக்கூடாது?’ என்று. அடுத்தநாளிலிருந்து நானும் பச்சைத்தண்ணீர் குளியல் தான்….ஆனால் அவரது ஊ…வ்வ்…ஆ,…வ்….. ஸ்….ஸ்…..ஸோஒ….ஓஒ…சூஊஊ ரீரிக்கார்டிங் சவுண்டு இல்லாமல் என்னால் மெளனமாக குளிக்கமுடிந்தது. தில்லியில் இருந்ததுவரை எல்லா தீபாவளி விடியற்காலைகளில் மட்டும் தான் வெந்நீர். வெந்நீர் அடுப்பு மாறி பாத்ரூமில் கீஸர் வசதி வந்தபிறகும் கூட எனக்கு பச்சைத்தண்ணீர் தான். ஒரு வைத்ய சிரோமணி என்னைப்பார்த்து, ‘இந்த எழுபத்தைந்தாண்டுகளில் நீங்கள் ஆரோக்யமான உடலும் மனமும் கொண்டு வாழ முக்கிய காரணம் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பச்சைத்தண்ணீரில் குளித்ததால் தான்!’ என்று சொன்னபோது, நான் மெளனமாக தலையாட்டினேன். அந்த சுகம் குளித்துப்பார்த்தால் தான் தெரியும்!
குளிர் வரப்போவதற்கு முன்னாலேயே ராஜஸ்தானி ரஜாய் தைப்பவர்கள் கையில் வில்லுடன், டொய்ங்..டொய்ங் என்று மீட்டிக்கொண்டு போவார்கள். இப்போதைய தில்லி வாசிகளுக்கு ‘வாளி அடுப்பு’ என்றால் தெரியுமா? நிச்சயமாகத்தெரியாது. காஸ் சிலிண்டர், நூதன் ஸ்டவ் போன்றவை வருமுன் தில்லியில் சமையல்/வெந்நீர் போட நிலக்கரியில் எரியும் வாளி அடுப்பு தான். எல்லோர் வீட்டிலும் சிறிய பெரிய சைஸ்களில் ஓரிரண்டு அடுப்புகள் இருக்கும். தகர வாளியில் ஒருபக்கம் காற்று போக அரைவட்டத்தில் ஒரு துவாரம் இருக்கும். மேற்பகுதியில் மூன்று குமிழ்வைத்து களிமண்ணால் பூசிவிடுவார்கள். நடுவில் நிலக்கரி தங்கவும், சாம்பல் கீழேபோகவும் ஒரு பில்டர் இருக்கும். ஒரு அடுப்பு ரூ. பத்துக்கு வாங்கக்கிடைக்கும். நிலக்கரி லேசில் எரியாது. ஆரம்பத்தில் மரக்கரியில் (Charcoal) பற்றவைத்து பிறகு நிலக்கரி போடவேண்டும். வீடெல்லாம் ஒரே புகையாக இருக்கும். அதனால் வாளியை வீட்டுக்கு வெளியில் நன்றாக எரியும் வரை வைத்திருப்பார்கள். பற்றிக்கொண்டால், பகபகவென்று எரியும். வெந்நீருக்கு பெரிய வாளி அடுப்பு. தில்லியில் பிறந்து வளர்ந்த என் மகளே வாளி அடுப்பைப்பார்த்ததில்லை!
இப்போது தில்லி இல்லத்தரசிகள் சுத்தமாக மறந்துவிட்ட இன்னொரு கலை ‘ஸ்வெட்டர் பின்னுதல்’ என் அக்கா கீழ்வீட்டு தனேஜா ஆன்ட்டியிடம் கற்றுக்கொண்டு, சரோஜினி மார்க்கெட் போய் Oswal, Raymond என்று விதவிதமான கலர்களில் லுதியானாவில் தயாராகிவரும் கம்பளி நூல்கண்டுகள் வாங்கி வந்து ஒரு சுபதினத்தில் ஆரம்பிப்பார். ‘மேலே வர வர, ரெண்டு ரெண்டு கண்ணியா குறைக்கணும்….கழுத்துக்கு 2,4,6,8 என்று மாத்தி மாத்திப்போடணும்’ இப்படியெல்லாம் பேச்சு காதில் விழும். தனேஜா ஆன்ட்டி கைகளால் 5 நாளில் உருவாகும் ஸ்வெட்டர் அக்கா கைகளில் 20 நாட்களில் உருவாகும். தினமும் நான் ஆபீசிலிருந்து வந்ததும், அன்றுவரை போட்டதை என் மேல் வைத்துப்பார்ப்பார். நேற்றிருந்ததை விட ஒரு இஞ்ச் கூடியிருக்கும். ஸ்வெட்டர் தயாராகி, ‘இத போட்டுப்பாருடா’ எனும்போது, அக்கா முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். இன்னும் என்னிடம் அக்கா எனக்காக பின்னிய பழைய ஸ்வெட்டர்கள் உண்டு…அன்புக்கும் பாசத்துக்கும் சாட்சியாக! பஸ்ஸில், அலுவலகத்தில்…இப்படி எங்கேயும் தில்லி பெண்கள் நூலும் ஊசியுமாகவே இருப்பார்கள். இப்போது அதற்கெல்லாம் அவர்களிடம் நேரம் இல்லை. ‘காசை விட்டெறிந்தா…கடையிலே விதவிதமா இருக்கு. இதுக்கெல்லாம் யாரு டைம் வேஸ்ட் பண்ணுவது?’இம்மாதங்களில், தில்லி அரசு காரியாலயங்களில் வருடத்தின் எல்லா மாதங்களையும் போலவே வேலை மந்தமாக இருக்கும். அரைமணி நேரம் லேட்டாக, இரு கைகளையும் அழுந்த தேய்த்து, சிகரெட் இல்லாமலே புகைவரும் வாயால் ஊதிக்கொண்டு ஆபீசுக்குள் நுழையும் அலுவலர், ஆஜ் பஹுத் டண்ட் ஹை. ட்ராபிக் ஜாம் மே ஃபஸ் கயா’ என்று சொல்லிக்கொண்டே ரிஜிஸ்தரில் கையெழுத்துப்போடுவார். ஏக் சாய் ஹோ ஜாயே என்று இருப்பவர்களையும் டீ சாப்பிட இழுத்துச்செல்வார். ஆபீஸ் கான்ட்டீனில் இன்று பனீர் பக்கோடா ஸ்பெஷல். குளிர் காலங்களில் இருக்கையில் ஆள் இல்லாவிட்டால், ‘சாய் பீனே கயா’ என்று பக்கத்து சீட்டு பதில் அதிகாரபூர்வமாக கருதப்படும். இந்தக்குளிருக்கு பத்துத்தடவை சுடச்சுட சாய் சாப்பிடவில்லையானால், உடம்பு என்னாகிறது? மதிய உணவுக்குப்பிறகு, அருகிலிருக்கும் புல்வெளியிலோ, பட்டேல் செளக்கிலோ, Poor Man’s Dryfruit என்று அறியப்படும் வேர்க்கடலையை தோ ஸெள கிராம் வாங்கி, மத்தியான இளம் வெயிலில், நிதானமாக உடைத்து, தோல் நீக்கி சாப்பிட்டபின்னர் தான் ஆபீஸ் பிரவேசம். பெண் அலுவலர் கையில் கம்பளி நூல்கண்டும், இரு ஸ்வெட்டர் ஊசிகளும் இருந்தாகவேண்டும்.
தில்லி தன் குளிர்காலத்தை கொண்டாடத்தவறியதே இல்லை. தில்லியின் கலாச்சார மாதங்கள்….அக்டோபரில் தசரா, ராம்லீலா, விஜயதசமியில் தொடங்கி, தீபாவளி, நவம்பரில் ப்ரகதி மைதானில் நடைபெறும் Indian Trade Fair, Christmas, New Year Day, மெஹ்ரோலியில் நடக்கும் Phulwalon Ki Sair, சாகித்ய அகாதெமி நடத்தும் விருதுவிழா, சங்கீத நாடக அகாதெமி நடத்தும் இசை, நாட்டிய நாடகவிழா, தேசிய நாடகப்பள்ளி நடத்தும் நாடகவிழா,, ஸ்ரீ சங்கர் லால் இசைவிழா, Delhi Book Fair, ITC Sangeet Sammelan, Film Awards Function, நமது பொங்கலுக்கிணையான பஞ்சாபிகளின் Baisakhi-யும், அதையொட்டிய Bangra Festival-ம், ’பத்ம’ விருதளிக்கும் விழா, குடியரசுதின விழா, பீட்டிங் ரெட்ரீட், சூரஜ்குண்ட் மேளா, வஸந்த் பஞ்சமியன்று திறக்கப்படும், ராஷ்டிரபதி பவன் மொகல் கார்டன்ஸ், இப்படியாக ஹோலியும் கொண்டாடி, குளிரை சிவ,சிவ என்று வழியனுப்புவார்கள். போதும் போதாததற்கு தில்லிவாழ் தமிழர்கள், பெங்காளிகள், மராத்தியர் போன்றவர்கள் நடத்தும் இசை, நாடக விழாக்கள், எங்கள் D.B.N.S. உயிர்ப்போடு இருந்த அறுபது, எழுபதுகளில் நாங்கள் நடத்தும் 5 நாள் நாடகவிழா என்று ஒரே கோலாகலம் தான்!
குளிரைப்பற்றி சொல்லிவிட்டு, முட்டாள்களின் பண்டிகையான ஹோலியைப்பற்றியும் சொல்லியாகவேண்டும். தில்லியில் ஹோலியை ஒட்டி ’முட்டாள்களின் சம்மேளனம்’ நடக்கும். அதில் ஹாஸ்ய கவிகள் கவிதைகள் படிப்பார்கள். சிறந்தவர்களுக்கு மஹா மூர்க் (மகா முட்டாள்) விருதும் வழங்கப்படும். ‘ஹோலியன்று ’மயங்காதவன்’ மனிதனே அல்ல!’ Bhang கலந்த பானகமும், இனிப்புகளும் வழங்கப்படும். ஒவ்வொரு காலனியிலும் மதிய உணவுக்கு Community Kitchen ஏற்பாடு செய்துவிடுவார்கள். அன்று வரை நம்மிடம் பேசாத நம் அயல்வீட்டினர் அன்று நம் வீட்டுக்கு வந்து 2 பெக் அடித்துவிட்டுப்போவார்கள். இப்படி மண்டகப்படியாக ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று 2 பெக் போடவேண்டும். ஒருவனது ‘குடிக்கும் திறன்’ என்ன என்பதை ஹோலி தீர்மானித்துவிடும். ஆளே அடையாளம் தெரியாமல் முகத்தில் வர்ணக்கலவைகள்! சந்தோஷமான நாட்கள்!
இத்தனை கோலாகலத்துக்கிடையே, தில்லி குளிருக்கு ஒரு சோகமான முகமும் உண்டு. தில்லி நடைபாதையில் குடியிருப்பவர்கள், ரிக்ஷாக்காரர்கள் இரவெல்லாம் நடைபாதையில் ஒரு போர்வை கூட இல்லாமல், நடுக்கும் குளிரில் வருடாவருடம் நூறுக்கும் குறையாமல் பலியாகிறார்கள். இவர்களுக்கு கிடைக்காத ஸ்வெட்டரும், கம்பளி உறைகளும் மாட்டிக்கொண்டு, அதிகாலை வாக் போகும் நாய்களைக்கண்டால் மனதை என்னவோ செய்கிறது. ராதா ரமண் காலத்திலிருந்து இப்போதைய ஷீலா தீக்ஷித் வரை எத்தனையோ முதலமைச்சர்களாலும் இதற்கு ஒரு வழி பிறக்கவில்லை! அரசு ஏற்பாடு செய்திருக்கும் Night Shelters காலியாக இருக்கிறது. அவர்கள் சொல்லும் காரணம்: ‘எங்களிடம் இருக்கும் ஒரே சொத்தான போர்வையையும், ரேஷன் கார்டையும் இரவில் திருடிக்கொண்டு போய்விடுகிறார்கள்’. இந்த ஏழைகளிடம் திருடும் நல்லவர்களை நாம் என்ன செய்யலாம்?
குளிர்காலத்தில் மட்டுமே கிடைக்கும் Gaajar Ka Halwa-வுக்காக கரோல்பாக் வரை நடந்தே போகலாம். இரவு வேளைகளில் அடுப்பில் குறுகிக்குறுகி காய்ந்துகொண்டிருக்கும் சந்தனக்கலரில் பால். 400 மி.லி பிடிக்கும் லோட்டாவில் ஓர் இஞ்ச் கனமுள்ள மலாய் மிதக்கும் பால்….. அமிர்தம் என்று வேறில்லை! பஞ்சாபிகளின் தாரக மந்திரம் ‘Khao….Piyo….Aash Karo! On drop of a hat, காரணமே இல்லாமல் வீட்டில் (தண்ணி) பார்ட்டி வாரம் ஏழு நாளும் கொண்டாடத்தயாராக இருப்பார்கள். மாடிவீட்டில் குடியிருந்த சுஷ்மா டம்டா மலைப்பிரதேசமான Almora-வைச்சேர்ந்தவர். குளிர் மாதங்களில் நாலு தூறல் போட்டாலே, குளிருக்கு இதமாக, சுடச்சுட Cheese, Cauliflower, உருளை, வாழைக்காய், மிளகாய், பாவக்காய் எல்லாவற்றிலும் ஒரு வண்டி பஜ்ஜி – இங்கே அதற்குப்பெயர் பக்கோடா தான் – செய்து தட்டு நிறைய என் வீட்டுக்கு அனுப்புவார். என் மகள் அனுஷா மதிய வேளைகளில், ’அப்பா! இன்னிக்கு நல்ல மழை பேஞ்சு குளிரா இருக்கே…….சுஷ்மா ஆன்ட்டி இன்னும் கூப்பிடலியே?’ எனும்போதே சொல்லிவைத்தாற்போல் மாடியிலிருந்து, ‘அனுஷா பேட்டீ…….ஏக் மினிட் ஊபர் ஆவோ….’என்ற குரல் கேட்கும்! எங்கே போனார்கள் இந்த நல்லவர்களெல்லாம்?இந்த வருடமும் தில்லியில் குளிர் வாட்டி எடுத்துவிட்டது. மினிமம் ஐந்து டிகிரியைத்தொட்டது. பிப்ரவரி மாதமும் குளிர் குறைந்தபாடில்லை. இந்தவருடம் பச்சைத்தண்ணீரில் குளிக்க என் மகள் அனுமதி தர மறுத்துவிட்டாள். எனக்கு எழுபத்தைந்து வயதாகிறதாம். உண்மை தானே! வெந்நீர்க்குளியலும் சுகமாகத்தானிருக்கிறது!
சென்னை திரும்ப தமிழ்நாடு எக்ஸ்பிரசில் ஏறி உட்கார்ந்தபோது, எதிர் சீட் பயணி லக்கேஜை சீட்டுக்கடியில் வைத்தவாறே, ‘இந்த வருஷம் தில்லிக்குளிர் ரொம்பக்கொடுமை…..வாட்டியெடுத்திருச்சி!’ என்று பேச்சை ஆரம்பித்தார். எத்தனை வருடங்கள் கேட்டும் சலிக்காத வார்த்தைகள்!
- பாரதி மணி
Bharatimani90@gmail.com
உங்க பெயரில் உள்ள ஒரு இயக்குனர் படத்தில் நடிப்பதாக தகவல் அப்படியா ?
Posted by IdlyVadai at 3/12/2012 11:18:00 AM 22 comments
Friday, March 09, 2012
டெல்லி வக்கீல்
தன்னை சட்டசபையிலிருந்து 10 நாள் சஸ்பெண்ட் செய்து விட்டதால் தொகுதிப் பணிகளைக் கவனிக்க முடியவில்லை. எனவே இந்த தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது பழைய செய்தி. ( அவர் வழக்கு தொடர்ந்து 10 நாட்கள் ஆகிவிட்டது என்பது வேறு விஷயம் ).
கோர்ட் கேஸ் என்று போய்க்கொண்டு இருக்கிறது... இன்னும் கொஞ்ச நாளைக்கு இது போகும்... கடைசி தகவல் என்னவென்றால் - அந்த வழக்கில் வாதாடுவதற்காக விஜய்காந்துக்கு டெல்லியில் இருந்து வக்கீல் வருகிறார்கள்.
அட்லீஸ்ட் எம்.பி என்றால் டெல்லியிலிருந்து வக்கீல் வரலாம், எம்.எல்.ஏ பதவிக்கு தமிழ் நாட்டில் ஒரு நல்ல வக்கீல் இவருக்கு கிடைக்கவில்லையா ? அட பாவமே!
வழக்கமாக இவர் சினிமாவில் இவர் டெல்லியில் இருப்பார், ஸ்பெஷல் ஆபிஸராக இவரை தமிழ்நாட்டுக்கு வரவைப்பார்கள்.. அது மாதிரி தான் இதுவும் :-)
Posted by IdlyVadai at 3/09/2012 11:06:00 AM 5 comments
Labels: அரசியல், விஜயகாந்த்
Thursday, March 08, 2012
திராவிடம் - 100
கேள்வி : ‘கல்யாணத்தை திருமணம் என்றும், ஆசீர்வாதத்தை வாழ்த்துரை என்றும் மாற்றியது திராவிட இயக்கம்தான்’ – என்று பெருமிதம் கொள்கிறாரே கருணாநிதி?
பதில் : ஏனோ தெரியவில்லை. பெருமிதப் பட்டியலை கலைஞர் சுருக்கமாக முடித்துக் கொண்டு விட்டார். அவர்கள் செய்த மாற்றம் இன்னும் எவ்வளவோ இருக்கிறதே? நேர்மையை – மடத்தனம் என்றும், ஊழலை – சம்பாத்தியம் என்றும், உண்ணாவிரதத்தை – தமாஷ் என்றும், போலீஸ்காரர்களை – கழகக்காரர்கள் என்றும், அமைச்சர்களை – கொள்ளைக்காரர்கள் என்றும், தமிழை – வியாபாரம் என்றும் மாற்றி, இன்னும் பல மாற்றங்களையும் செய்து, கடைசியாக கழகத்தை – குடும்பம் என்றும் மாற்றியவர்களாயிற்றே அவர்கள்!
( படம், கேள்வி பதில் : நன்றி துக்ளக் )
( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )
டிராவிட் மாதிரி, திராவிடமும் ஓய்வு பெறும்...
Posted by IdlyVadai at 3/08/2012 02:41:00 PM 12 comments
மகளிர் தின அரசியல் பதிவு
மகளிர் தின வாழ்த்துகள் என்று சொல்லி இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். ஆனால் இந்த கட்டுரைக்கும் மகளிருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் அவர்கள் இதைப் படித்துவிட்டு சோப், கிரீம் போன்ற வஸ்துக்களை வாங்கப் போகலாம்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டது. என்னைப் போலவே மற்றவர்களும் அதிகம் கவனித்த இடம் உத்திரப்பிரதேசம். முலாயம்சிங் கட்சி ஜெயித்தபின் உத்தரபிரதேச கவர்னர் ஜோஷியை முலாயம்சிங் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். முதல்-மந்திரி பதவி ஏற்கப்போவது முலாயம்சிங்கா, அவரது மகன் அகிலேஷ் யாதவா என்ற கேள்வி இன்னும் தொடர்கிறது.
முலாயம் சிங் புத்திசாலியாக இருந்தால் தன் மகனை முதல் மந்திரி பதவியில் உட்கார வைத்துவிடுவார். இது தான் சரியான சமயம். இல்லையென்றா>ல் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட அதே நிலமை தான் அகிலேஷுக்கும் ஏற்படும். இன்னும் கொஞ்ச காலம் கழித்து முலாயம் தம்பி மற்றும் சிலர் வந்து அகிலேஷுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் முலாயம் சிங் நல்ல உடல் நலத்துடன் இருக்கும் போதே அவர் மகனை முதல்வர் பதவியில் உட்கார வைக்க வேண்டும். அகிலேஷ் என் தந்தை தான் முதல்வர் என்று சொல்லியுள்ளார், ஆனால் தமிழ் நாட்டில் பிளைட்டிலிரிருந்து இறங்கிய பின் பதவி கொடுத்தால் நான் ரெடி என்று சொல்லுகிறார்கள். ஏன் என்று யோசித்தால் அண்ணன், தம்பிகள் பேரன் பேத்தி எடுத்துத் தாத்தாவாகவே ஆகிவிட்டார்கள்!
மாயாவதி தன்னுடைய தோல்விக்குத் தன்னை தவிர எல்லோரும் காரணம் என்று சொல்லிவிட்டார். ஜெயலலிதா இவரை இப்போதே பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை இன்னும் ஐந்து வருடம் கழித்து இப்படித்தான் புலம்ப வேண்டியிருக்கும். கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தால் எல்லோரும் டெண்டுல்கரைக் குற்றம் சாட்டுவது போல காங்கிரஸ் தோல்விக்கு எல்லோரும் ராகுல் காந்தியைக் குற்றம் சாட்டுகிறார்கள். காங்கிரஸ் தோல்விக்கு நாடு தழுவிய ஊழலும், அன்னாவும் தான் காரணம் என்று தோன்றுகிறது. ராகுல் காந்தி ஏழைகளின் வீட்டில் டீ குடித்து அவர்களை மேலும் ஏழையாக்கிவிட்டார். மைனாரிட்டி சமுகத்துக்கு கோட்டா சிஸ்டம் என்று பிதற்றினார்கள், ஆனால் இவர்களே இப்போது மைனாரிட்டி ஆகி பார்லிமெண்டில் நுழையக் கோட்டா கேட்டாலும் கேட்பார்கள்.
ஹோலி பண்டிகையின் போது பலரின் உண்மையான வண்ணங்கள் தெரிய வந்திருக்கிறது.
மகளிர் தின சிறப்பு செய்தி:
Ananda Marchildon என்ற ஹாலாண்ட் நாட்டு மாடல் அழகி தன்னுடைய இடுப்பு அளவு 2cm அதிகம் என்று நிராகரித்த கம்பெனி மீது கேஸ் போட்டு வென்றுவிட்டார். மகளிர் தினத்துக்கு ஏற்ற நியூஸ் இது என்பதால் இங்கே. (படத்தில் இருப்பது அவர் தான், இந்த மாதிரி நியூஸ் போடவில்லை என்றால் இட்லிவடையை 'ஹிந்து' பத்திரிக்கை என்று நினைக்க வாய்ப்பு இருப்பதால் இந்த நியூஸ் )
Posted by IdlyVadai at 3/08/2012 10:12:00 AM 6 comments
Labels: அரசியல், செய்தி விமர்சனம்
Tuesday, March 06, 2012
வாழ்த்துகள் !
Posted by IdlyVadai at 3/06/2012 07:07:00 AM 9 comments
Labels: அரசியல், தேர்தல் 2012
Monday, March 05, 2012
நான் மீண்டும் அதிமுகவில் சேருகிறேன் - எஸ்.வி.சேகர்
"’தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுகிறது. நான் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர விருப்பம் தெரிவித்து கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயல லிதாவுக்கு கடிதம் கொடுத்துள்ளேன். எனவே அவரது நல்லாசியுடன் நான் விரைவில் அ.தி.மு.க.வில் சேர உள்ளேன். அரசியல் வாழ்க்கையே அ.தி.மு.க.வில் சேர்ந்த பின் எனக்கு முதலமைச்சரால்தான் கிடைத்தது. பின்னர் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை சிலரால் ஏற்பட்டது" - எஸ்.வி.சேகர்
100 நிமிடங்கள், 200+1 சிரிப்புக்கள் :-)
Posted by IdlyVadai at 3/05/2012 01:48:00 PM 17 comments
Friday, March 02, 2012
அரவான் FIR
அரவான் படம் பார்க்க தூண்டியது இரண்டு - ஒன்று அதன் டிரைலர் மற்றொன்று எஸ்.ரா 'அபத்தம்' என்று எழுதிய அவருடைய விமர்சனம்.
18ஆம் நூற்றாண்டுக் கதை என்று ஆரம்பிக்கும் காட்சியில் பசுபதி வானத்தில் நட்சத்திரத்தை பார்த்து களவு செய்ய முடிவு செய்வதிலிருந்து ஆரம்பிக்கிறது கதை. பிரியட் படம் என்ற எண்ணம் படம் பாக்கும் போது கொஞ்சம் கூட வரவில்லை.
முதலில் களவு செய்வதை காண்பிக்கும் காட்சிகள் அருமை... நாமும் அவர்களுடன் சேர்ந்து களவு செய்வது போன்ற எஃபெக்ட்!
ஆதியின் உடல் கட்டு இந்த படத்துக்கு ஒரு பிளஸ். அவர் வந்து நுழைந்தவுடன் அவரை சுற்றி ஏதோ ஒரு பிளாஷ் பேக் இருக்கு என்று நமக்கு தெரிந்தாலும், திரைக்கதையில் அதை நமக்கு சொல்லும் விதம் பிரமாதம். சில இடங்களில் கொஞ்சம் தோய்வு இருந்தாலும், காட்சி அமைப்பு மற்றும் சில திருப்பங்களினால் அவை மறந்து போகிறது. பரத் மரணமும் அதற்கு பிறகு ஆதி அதை கண்டுபிடிக்க முயல்வதும் 'பலி முடிச்சை' கழட்ட கழட்ட யார் என்ற முடிச்சுக்களும் அவிழ்கிறது
ஒளிப்பதிவு இந்த படத்தின் அடுத்த ஹீரோ. பல இடங்களில் இயற்கையை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்கள். 100 கோட்டை நெல் வரும் காட்சியை சுற்றி ஒரு வரண்ட பூமியை காமிக்கும் இடங்கள் அருமை. விபச்சார விடுதியில் கண்ணன் பாடல் பாடும் அந்த விபச்சாரி வரும் போது படம் 'கொலை வெறி' நூற்றாண்டுக்கு வந்துவிடுகிறது. ஏனோ அது வரை இருந்த கலர் டோன் மறைந்து போய் பளிச்சென்று படம் வருவது நமக்கு ஒரு ஜெர்க்.பாலுமகேந்திரா ஹீயோயின் மாதிரி இருக்கும் தன்ஷிகா இந்த படத்துக்கு அடுத்த பிளஸ். ஜாக்கெட் இல்லாத காஸ்டியூம் நன்றாகவே பொருந்துகிறது இவருக்கு. டப்பிங் குரல் மைனஸ். காதல் காட்சியில் கூச்சமே இல்லாமல் நடித்திருக்கிறார்!. பசுபதி இந்த படத்தில் கிட்டத்தட்ட ஒரு ஹீரோவாக வலம் வருகிறார். நடிப்பை பற்றி சொல்லவே வேண்டாம்.
இசை மட்டும் தனியாக தெரியாதவாறு படத்துடன் சேர்ந்தே செல்கிறது. இந்த மாதிரி இசை அமைப்பது உண்மையிலேயே கஷ்டம் என்று நினைக்கிறேன்.
படத்தில் சில காட்சிகள் இன்னும் அழுத்தமாக வைத்திருக்கலாம் என்பதை தவிர, படம் நிச்சயம் எல்லோரும் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் என்று சிபாரிசு செய்கிறேன். வசந்தபாலன் டீமுக்கு வாழ்த்துக்கள். படம் முடிந்த பின் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே பிரிட்டிஷ் அரசாங்கம் மரண தண்டனையை ரத்து செய்து விட்டது. இன்னும் உலகில் உள்ள 83 நாடுகள் அதை அமலில் வைத்திருக்கிறது. என்ற பிரச்சாரம் இந்த படத்துக்கு தேவை இல்லை. ஊர் மக்கள் பலிக்கும் அரசாங்க மரண தண்டனைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
இட்லிவடை மார்க் - 6.5/10
கூடுதல் கதை: வசந்தபாலன் என்று டைட்டிலில் வருகிறது இது நம்மூர் இலக்கியவாதிகள் கண்களில் படாமல் இருக்க வேண்டும்!
Posted by IdlyVadai at 3/02/2012 03:24:00 PM 14 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல், சினிமா, விமர்சனம்
Thursday, March 01, 2012
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 1-3-2012
இந்த வாரம் கல்கியில் ஞாநி ஜெயலலிதாவிற்கு எழுதிய கடிதத்தை அம்மா பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். உடனே கூடங்குளம் அணு நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் உதயகுமார் தலைமையில் நேற்று சந்தித்துள்ளார். ஞாநி தன் கடிதம் சூடாக இருக்கிறதே என்று படிக்கும் போது உடனே அங்கே காமெடி பீஸ் ஒன்று வந்துவிட்டது.....அந்த பகுதி கீழே...
["இந்தக் கடிதம் என் தனிப்பட்ட கடிதம் அல்ல. அணு உலைகளுக்கு எதிரான எழுத்தாளர்கள், படைப்பாளிகள் இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களான நானும், எழுத்தாளர்கள் அருள் எழிலன், சந்திரா, யுவபாரதி ஆகியோர்களும் அனுப்பியது. உங்களை நேரில் சந்திக்க எங்கள் இயக்கத்தின் சார்பில், சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள்: இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன், பொன்னீலன், நாஞ்சில் நாடன் ஆகியோரும் மற்றும் பா.செயப் பிரகாசம், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், தேவதேவன், ஜெயபாஸ்கரன், பாஸ்கர் சக்தி, அழகிய பெரியவன், சுகிர்தராணி, அஜயன் பாலா, அருள் எழிலன், முத்துகிருஷ்ணன், யாழன் ஆதி, குறும்பனை பெர்லின், சந்திரா, யுவபாரதி, திரைப்பட இயக்குனர்கள் அமீர், ஜனநாதன் எனப் பலரும் விரும்புவதைத் தெரிவித்து நேரம் ஒதுக்கித் தரும்படி வேண்டி தரப்பட்ட கடிதம் அது.
நம் மாநிலத்தையும் மக்களையும் பல தலைமுறைகளுக்குப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய இந்தப் பிரச்னையில் உடனடி கவனம் செலுத்துவது ஒவ்வொரு எழுத்தாளருக்கும் படைப்பாளிக்குமான சமூகக் கடமை என்ற அடிப்படையில் உங்களை நாங்கள் சந்திக்க விரும்பினோம்.]காவிரிப் பிரச்சனை, வீரப்பன் பிரச்சனை எல்லாம் விஸ்பரூபம் எடுத்ததற்கு காரணம், சினிமாக்காரர்களும், எழுத்தாளர்களும் உண்ணாவிரதம் இருக்கிறேன் பேர்வழி என்று மைக் முன்னாடி காமெடி செய்தததால் தான்.
ஜெயலலிதாவிற்கு இருக்கும் சமூகநலம் மற்றும் பொது மக்களின் மீதுள்ள மிகுந்த அக்கறை காரணமாகத்தான் பவர் கட்டே நடந்துக்கொண்டு இருக்கிறது. இல்லை என்றால் இந்த எழுத்தாளர்கள் இன்னும் எழுதித்தள்ளி இருப்பார்கள்!நல்ல வேளை இந்தப் பவர் கட் வெயில் காலத்தில் வந்தது. வெயில் காலத்தில் வந்த பவர் கட் குளிர் காலத்தில் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். பவர் இல்லாத போது தொப்பமாக நனைந்தவர்கள் அப்போது மின் விசறி போட்டால் குளிரில் நடுங்குவார்கள். இதை யோசிச்சுதானோ என்னவோ திமுக அடுத்த தேர்தலில் எல்லா பார்பனக் குடும்பத்துக்கும் ஏசி கொடுக்கப்போகிறார்களாம். அப்போது தான் கருணாநிதி சொன்னது போல பார்ப்பனக்கூட்டம் நடங்கும். இதை பார்த்துக்கொண்டு வாழும் வள்ளுவன் சந்தோஷப்பட்டால் நமக்கு சந்தோஷம்தான். பவர் கட் ஆனால் கரண்டு திரும்ப வரும், ஆனால் ஃப்யூஸையே புடுங்கிவிட்டால்?
தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஃப்யூஸ் போய்விட்டது. ஆனால் பக்கத்து மாநிலத்திலோ லே பேட்டரியில் இருக்கும் எடியூரப்பா தினமும் லோ லோ என்று கத்திக்கொண்டு இருக்கிறார். எப்படியாவது சிஎம் பதவியை பிடிக்க வேண்டும் என்ற அவர் விடா முயற்சியை பாராட்ட வேண்டும். யாகம், சாமியார் சந்திப்பு, பாம்பு பூஜை என்று எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டார். ஊழல் செய்யாமல் இருந்த்திருக்கலாம். தலையெழுத்து !கர்நாடக பா.ஜனதாவில் இருக்கற பிரச்சனை உங்களுக்குத் தலைவலியாக இல்லையா? என்று கட்காரியிடன் கேட்டதற்கு "எனக்கு எப்போதும் தலைவலி வராது. தலைவலி வந்தால் என்ன செய்வது என்று பயந்து அதற்காக நான் மாத்திரைகளை எடுத்துச் செல்வதும் கிடையாது. மேலும் எந்த பிரச்சினையும் என் தூக்கத்தைக் கெடுப்பது இல்லை." என்கிறார். ஆக இவருக்கு தலைவலி வருகிறது கூடவே தூக்கமும் போய்விட்டது. வடிவேலு சொல்லுவதைப்போல ".... எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாங்கடா.. " என்பது பிஜேபிக்கு நன்றாக பொருந்தும்.
அடுத்த எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் அணி இந்திய கிரிக்கெட் அணி. மற்ற அணிகளிடம் வாங்கும் உதை போறாதென்று முகவின் நமக்கு நாமே திட்டம் போல தங்களுக்குள்ளேயே அடித்து விளையாடிக்கொண்டு நமக்கு எண்டர்டெய்ன்மெண்ட் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அங்கே நடப்பது திமுக குடும்ப சண்டைய விட மோசமானதா இருக்கும் போல இருக்கு. இருந்தாலும், ஸ்ரீகாந்த் மாமாவோ அசட்டுச் சிரிப்போட அடி மேல் அடி வாங்கிண்டே இன்று அர்நாபுக்கு ஒரு மழுப்பல் இன்டர்வியூ குடுத்துட்டுப் போறாரு. இப்டி எல்லாம் சீட்டைத் தேய்ப்பதற்கு பதில் பேசாம பொறந்த வீட்டுக்குப் போய் பாத்திரம் கழுவலாம்.
வீடு என்றதும் ஞாபகத்துக்கு வருவது சின்ன வீடு டைரக்டர் பாக்யராஜும், வண்ண வண்ணமாக் கோலம் போட்ட நடிகர் எஸ்.வி.சேகரும் தான். இவர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர போகிறார்கள் என்று செய்தி ஓடுகிறது. பாக்யராஜ் முன்பு சன் டிவியில் சொன்ன குட்டி கதை "அதிமுக என்பது எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிறகு மிகவும் சீரழிந்து விட்டது. அதற்கு முழு பொறுப்பும் இப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான்". சேகரோ சமீபத்தில் ஒரு திமுக தொலைக்காட்சி விழாவில் அம்மாவை அசிங்கப்படுத்தி வசனம் பேசி கைத்தட்டல் வாங்கினார். இதையும் மீறி இவங்களை கட்சியில் சேர்ப்பார்கள். என்ன செய்வது? நம்ம ஊரில் உப்புக்கு கொஞ்சம் பஞ்சம் ஜாஸ்திதான். ரெஸ்ட் எடுக்க வேண்டிய வயதில் எதற்கு அரசியல் ?
தற்போது ஷேவாகுக்கு ஓய்வு என்று கூறினாலும் உண்மையிலேயே அவர் நீக்கப்பட்டார் என்பது தான் உண்மை. டோனியுடன் இணைந்து அறிக்கை கொடுக்க இயலாது என்று சொன்னதால் அவர் நீக்கப்பட்டார் என்று சொல்லுகிறார்கள். சச்சின் 100 அடித்த பின் (அடிப்பாரா?) அவரும் ஓய்வு எடுப்பார் என்று நம்பப்படுகிறது.அவருக்கும் வயசாகிறது இல்லையா?
எவ்வளவு வயதானாலும், பழைய படங்கள் பழைய படங்கள் தான். சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படம் புதுப்பொலிவுடன் வெளிவரவிருக்கிறது. கர்ணன் படத்தின் டிரெய்லர்... இந்த மாதிரி படங்கள் எப்போதும் எவர்கீர்ன் தான்.
சாரு, ஜெயமோகன், எஸ்.ராவிற்கு தன் சொந்த செலவில் ஒரு போர்டல் ஆரம்பித்திருக்கிறார் ஒரு பழைய எழுத்தாளர். அவர் பெயர் விமலாதித்த மாமல்லன். ஓசி விளம்பரம் வேண்டும் என்று விரும்பும் எழுத்தாளர்கள், இவரிடம் விண்ணப்பிக்கலாம். நிச்சயம் எழுதுவார். கடைசியாக ஒரு புதிர்: மாமியார் எப்போது மருமகளை 'மகளே' என்று கூப்பிடுவார்? மருமகள் எப்போது மாமியாரை 'அம்மா' என்று கூப்பிடுவார்.
விடை: கரண்ட் கட் போது புழுக்கத்தில் இருக்கும் மாமியாருக்கு/மருமகளுக்கு விசிறி விடும் போது..
Posted by IdlyVadai at 3/01/2012 10:19:00 PM 9 comments
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்