பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 21, 2012

ஜெயலலிதா சொன்ன இட்லி கதை

சென்னையில் 64 ஜோடி திருமண விழாவில் முதல்மைச்சர் ஜெயலலிதா சொன்ன இட்லி கதை !

’’புரிதல் என்கிற ஒரு வார்த்தையில்தான் மண வாழ்க்கையின் வெற்றி என்பது உறுதியாகிறது. அந்தப் புரிதலைத் தருவது அன்பு. உண்மையான அக்கறையில் எழுகின்ற அன்பு. இதற்கு ஒரு சிறு கதையை இங்கே நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

வேலைக்கு சென்ற கணவனை எதிர்பார்த்து மனைவி வீட்டில் காத்திருக்கிறாள். இருக்கின்ற இருவருக்குமாக தயார் செய்திருந்த மாவை வைத்து கணவனுக்காக இட்லி ஊற்றுகிறாள். மொத்தமாக 12 இட்லிகள்தான் அந்த மாவில் இருந்து அவளால் தயாரிக்க முடிந்தது.சரி, கணவன் சாப்பிட்டது போக மீதம் இருப்பதை நாமும் சாப்பிட்டு இன்றைய பொழுதை கழித்துவிடலாம் என்று எண்ணியவாறே அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், கணவன் தனது பால்ய சிநேகிதன் ஒருவனை கூடவே அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறான்.

அப்படி அழைத்துக் கொண்டு வந்தவன் 'எனக்கும் என் நண்பனுக்கும் உணவு எடுத்து வா' என்று கூறினான். பின்னர் இருவரும் சாப்பிட அமர்கிறார்கள்.

அடுப்பறையில் இருப்பது 12 இட்லிகள்தான் என்பதை எப்படி கணவனுக்கு தெரிவிப்பது என்று குழம்பிய நிலையிலேயே இரண்டு தட்டுகளை எடுத்து வந்து கண வனுக்கும், அவனுடைய நண்பனுக்கும் வைத்து அதில் ஆளுக்கு நாலு இட்லியை வைத்தாள்.


மீதம் இருப்பது நாலு மட்டுமே என மனதுக்குள் படபடப்போடு கணக்கு வேறு போட்டுக்கொள்கிறாள். வைத்த வேகத்தில் நான்கு இட்லிகளையும் கணவன் வேகவேகமாக சாப்பிட்டுவிட பதற்றம் கொண்டவளாய் இரண்டு இட்லியை எடுத்து கணவனுக்கு வைப்பதற்காக குனியும் வேளையில், கணவன் சொன்னான் 'எனக்குப்போதும்.

நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது...?' என்று சொல்ல; அருகில் ரசித்து, ருசித்து இன்னும் சில இட்லிகள் சாப்பிடலாம் என எதிர்பார்த்திருந்த விருந்தாளி நண்பனுக்கோ வெடுக்கென்று ஆனது! அந்த நேரத்தில் இவளோ 'அண்ணா உங்களுக்கு...' என கணவனின் நண்பரை நோக்கிக்கேட்க, 'போதும்... போதும்... நான் எப்போதுமே மூன்று இட்லிதான் சாப்பிடுவேன். இன்று உன் கைப்பக்குவம் நான்கு இட்லிகளை சாப்பிட்டு விட்டேனம்மா...' என்று கூறி எழுந்தான் அந்த விருந்தாளி நண்பன்.


கை கழுவச் செல்லுகையில் மனைவியை கடக்கின்றபோது 'மீதமுள்ள நான்கை நீ சாப்பிட்டுவிடு' என்று கணவன் சொல்ல, தன் இதயத்தில் மட்டுமல்ல தான் சமைத்த பாத்திரத்தில் கூட எத்தனை இட்லிகள் இருக்கின்றன என்பதை பார்க்காமலே, தன் பார்வையைக் கொண்டே கணக்கிட்டுக் கொண்டதோடு; அந்த இக்கட்டில் இருந்தும் அழகாக தன்னை காத்திட்ட தன் கணவனை நினைத்து ஆச்சரியப்பட்டு மகிழ்ந்தாள் அந்தப் பெண்!

ஜெயலலிதா சொன்ன தோப்பு கதை
அதே விழாவில் அவர் சொன்ன இன்னொரு கதை..

’’ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே! வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே, என்ற வரிகளை மனதில் வைத்து நீங்கள் ஒற்றுமையுடன் இருந்தால் அது வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மை பயக்கும்.


ஒரு சமயம் சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழில் மிகுந்த ஓர் இடத்தை பார்வையிட்டு சென்று கொண்டிருந்தனர். பயண வழிகாட்டி ஒருவர், ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்களிடம் விரிவாக எடுத்துக் கூறினார்.

அப்போது, மிக உயரமான பெரிய மரங்கள் நெருக்கமாக அடர்த்தியாக வளர்ந்திருப்பதை சுற்றுலாப் பயணிகள் கண்டு வியப்புடன் நின்றார்கள். அது குறித்து வழிகாட்டியிடம் வினவினர்.


அதற்கு அந்த வழிகாட்டி, “வானம் தொடும் வரை வளரும் இம்மரங்கள் பெரு மழை மற்றும் சூறாவளிக் காற்று அடித்தாலும் விழுந்து போகாமல் அப்படியே இருக்கும். இந்த மரங்களின் வேர்கள் பூமியில் ஆழமாகக் கூட செல்வதில்லை; சில அடி தூரம் தான் செல்கின்றன என்று கூறினார்.


அது எப்படி முடியும்? இவ்வளவு பெரிய உயரமான மரத்தை அந்த சிறிய வேர்கள் எப்படி தாங்கிக் கொள்ளும்? சூறாவளிக் காற்று அடித்தால் நிச்சயமாக மரம் வேரோடு சாய்ந்து விடும் என்று ஒரு சுற்றுலாப் பயணி கூறினார். அதற்கு அந்த வழிகாட்டி அந்த மரம் தனித்தனியே வளருவது இல்லை.


அருகருகே வளர்ந்து ஒரு தோப்பை போன்று காட்சி தருகின்றது. ஒவ்வொரு மரமும் பார்ப்பதற்கு தனி மரமாக தெரிந்தாலும் அதன் வேர்கள் ஒன்றுடன் ஒன்று, பின்னிப் பிணைந்து இருக்கின்றன. அதனால் சூறாவளிக் காற்று வீசினாலும் ஒவ்வொரு மரத்தின் வேர்களும் தன் அருகில் இருக்கும் மரங்களின் வேர்களை அணைத்து இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றன என்று கூறினார்.


இந்த இயற்கையின் படைப்பாற்றலை நீங்கள், உங்கள் இல்லங்களில் பின்பற்றினால்; ஒற்றுமையை நிலைநாட்டினால்; அன்புடன் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்; சோதனைகள் சாதனைகளாகும்; தடைக் கற்கள் படிக்கற்களாகும்; உங்களுடைய வாழ்க்கை அமைதியானதாக, மகிழ்ச்சிகரமானதாக அமையும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு;

எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இந்த மாபெரும் பேரியக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் இந்த ஒற்றுமையை, இந்த அன்பினை உங்களுடைய பொது வாழ்க்கையில் அரசியல் வாழ்க்கையில் கடைபிடித்து மக்கள் பணியாற்றினால்;

வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் மக்கள் நமக்கு மகத்தான வெற்றியைத் தருவார்கள் என்பதைத் தெரிவித்து; அதற்கான பணியினை நீங்கள் இப்பொழுதே துவக்க வேண்டும் என்று உங்களை யெல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு; முதியோருக்கு தேவையானவற்றை உங்கள் அன்புச் சகோதரியின் அரசு செய்து கொடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று கூறினார்.

கடைசி செய்தி: விஜயகாந்த், அதிமுக Patch up நடந்துக்கொண்டு இருக்கிறது. நடத்துபவர் சோ !. படத்தில் என்ன சாப்பிடுகிறார்கள் என்று தெரியாது, இட்லியாக கூட இருக்கலாம் :-)

27 Comments:

பெசொவி said...

ஜெயலலிதாவின் மீதான விமரிசனங்கள் எப்படி இருந்தாலும், அவர் சொன்ன இரண்டு கதைகளுமே, (குறிப்பாக இரண்டாவது கதை) கணவன்-மனைவி இருவருக்குமே சரியான போதனை.
நன்றி இ.வ.

Anonymous said...

இதுக்குப் போட்டியாக குஷ்புவும் ஒரு இட்லிக்கதையை சொன்னா நல்லாத்தான் இருக்கும்.ஏற்கனவே ஜனங்க மத்தியில குஷ்பு இட்லி வேற் ஃபேமஸூ!

என் வலையில்;
மூணுஷோவும் உன் கற்பனைகள் - சினிமா விமர்சனம்

கௌதமன் said...

எனக்குப் புரிந்துவிட்டது. முதல் கதையில், அம்மா கட்சிக்குக் கூட்டணி கட்சிகள் எப்படி நாடாளுமன்றத் தொகுதிகளை (தான் கொடுக்க நினைக்கின்ற இட்லிகளைக் கூட வேண்டாம் என்று) விட்டுக் கொடுக்கவேண்டும் என்றும், இரண்டாம் கதையில், கட்சிக்குள் உள்கட்சிப் பூசல்கள் கூடாது என்றும், கட்சியில் யாரையும் யாரும் (அவர் தவிர) கால் வாரி விட்டுவிடக் கூடாது என்றும் சொல்லியிருக்கின்றார்.

Anonymous said...

கேப்டன் கிட்டே சொல்லி ஒரு 'பீர்' கதையை ஏதாவது மேடைல பேசச் சொல்லணும். நானும் என் ப்ளாக்ல போட்டுக்கலாம்ல... :))

வெங்கி said...

மின்வெட்டை சரி செய்யாமல்,மக்களை திசை திருப்பும் வகையில் தன்னுடன் இருந்தவர்களையெல்லாம் கைது செய்து கொண்டிருக்கிறார்கள். மின்வெட்டை சரி செய்ய என்னிடம் யோசனைகள் உள்ளன. ஆனால் யாரும் அதை கேட்பதில்லை என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

ConverZ stupidity said...

//படத்தில் என்ன சாப்பிடுகிறார்கள் என்று தெரியாது, இட்லியாக கூட இருக்கலாம் :-)

படமே என்னன்னு தெரியல :)

Anonymous said...

மஞ்சள் கமெண்ட் பெரிசுன்னாலும் ஒ.கே.

இப்படிக்கு
மாதவன்

Anonymous said...

அதே விட்டுக்கொடுத்தல், ஒற்றுமையை ஜெ - சசியும் கடைப்பிடித்திருக்கலாமே?!

சரவணன்

கௌதமன் said...

சொல்ல மறந்துவிட்டேன். படம் தெரியவில்லை. வெறும் சதுரத்துக்குள் ஒரு சிறிய ஐகான் தெரிகிறது.

aotspr said...

இட்லி கதை சூப்பர்...


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இரு கதைகளுமே நல்ல கருத்துக்கள் கொண்டிருந்தன.

Anonymous said...

நம்ம நாட்டிலதான் கதை சொல்லி ஏமாற்றுவது எல்லாம் நடக்கும். கதை சொல்வதால் நல்ல முதலமைச்சர் என்கிற முடிவுக்கு மக்கள் வந்திருப்பதால் நம் வீட்டு பாட்டிகள் இனி தேர்தலில் தாராளமாக போட்டியிட்டு ஜெயிக்கலாம்

இரா. சத்தியமூர்த்தி said...

”ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம், அவன் மக்களுக்கு நல்லது செய்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தானாம்” என்று ஒரு குட்டிக்கதையை முதல்வருக்கு சொல்ல ஆசையாக இருக்கிறது.

ஆனால், ஆசை தோசை இட்லி வடை, என்று என் மனம் சொல்லுகிறது.

ஜெகன்னாதன் said...

கல்யாண வைபவத்தில் பேசும் பேச்சா இது! இதற்குத் தான் அம்மணி கலைஞர் ஐயாவிடம் பாடம் எடுத்துக் கொள்ள வேண்டும். தி மு க ஒழிக, கலைஞர் நாசமாப் போக, எதிர்ப்பவர் எல்லாம் சுடுகாடு போக என்று மங்களகரமாக வாழ்த்த வேண்டாமா! (அப்படியும் kg g அவர்கள் அம்மா பேச்சின் மறைபொருளைக் கண்டுபிடித்து விட்டார்!) - ஜெ.

khaleel said...

//”ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம், அவன் மக்களுக்கு நல்லது செய்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தானாம்” என்று ஒரு குட்டிக்கதையை முதல்வருக்கு சொல்ல ஆசையாக இருக்கிறது.//


//எனக்குப் புரிந்துவிட்டது. முதல் கதையில், அம்மா கட்சிக்குக் கூட்டணி கட்சிகள் எப்படி நாடாளுமன்றத் தொகுதிகளை (தான் கொடுக்க நினைக்கின்ற இட்லிகளைக் கூட வேண்டாம் என்று) விட்டுக் கொடுக்கவேண்டும் என்றும், இரண்டாம் கதையில், கட்சிக்குள் உள்கட்சிப் பூசல்கள் கூடாது என்றும், கட்சியில் யாரையும் யாரும் (அவர் தவிர) கால் வாரி விட்டுவிடக் கூடாது என்றும் சொல்லியிருக்கின்றார்//

BOTH THE COMMENTS ARE SUPERRRRRR. THESE COULD HAVE BEEN THE YELLOW COMMENT.

Anonymous said...

வில்லுப்பாட்டு வீரப்பனின் "ஆத்தி மேரா சாத்தி!" - கதைவிடு காண்டம்.

....
....
இப்படியாகத்தானே
பலதேசம் கடந்து
படாத துன்பங்கள் பல அடைந்து,
சுடுநீரில் தப்பியவன்
சுண்ணாம்புக் காளவாயில் விழுந்ததுபோல்,
பட்டி விக்கிரமாதித்தனும்
அல்லி அரசாளும்
அழுக்குதேசம் வந்து சேர்ந்தானே.....
....
....
அகங்காரி உனை
கட்டி அரசாள ஒரு
ஆண்மகன் கிட்டி இருந்தால் - உன்
கொட்டம் அடங்கியிருக்கும்
என்றான் பட்டி விக்கிரமாதித்யன்.

அதுகேட்டுச் சீற்றம் கொண்ட
அல்லி அரசாணியானவள்
சிறுவிரலை மடக்கி
அதனுடன்
மோதிரவிரலும் மடக்கி
சுட்டு விரல் மடக்கிக் கூடவே
கட்டைவிரல் தானும் மடக்கி
நட்டு வைத்த லிங்கம் போல
நடுவிரலை உயர்த்தி
"$#$% YOU!"
என்றனள் பாராளும் அரசி!

அல்லி ராஜ்யத்தில்
ஆண்மகனுக்கென்ன வேலை என்றே
பட்டி விக்கிரமாதித்யனும்
பரிதவித்துப் போனானே....
...
...

(இன்னாய்யா இது? ஒண்ணுமே பிரியலயே என்பவர்கள் தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்ளும்படி கோரப்படுகிறார்கள். எழுதிய வில்லுப்பாட்டனுக்கே புரியவில்லை. இவர்களுக்குப் புரிய வேண்டுமாம். எப்பாடி இருக்கிறது பாருங்கள்?)

சுபத்ரா said...

நல்ல கதைகள் :-)

Anonymous said...

en paattil enna kuttram kandaai idli?

Anonymous said...

en paattil enna kuttram kandaai idli?

Anonymous said...

வில்லுப்பாட்டு வீரப்பனின் "ஆத்தி மேரா சாத்தி!" - கதைவிடு காண்டம்.

....
....
இப்படியாகத்தானே
பலதேசம் கடந்து
படாத துன்பங்கள் பல அடைந்து,
சுடுநீரில் தப்பியவன்
சுண்ணாம்புக் காளவாயில் விழுந்ததுபோல்,
பட்டி விக்கிரமாதித்தனும்
அல்லி அரசாளும்
அழுக்குதேசம் வந்து சேர்ந்தானே.....
....
....
அகங்காரி உனை
கட்டி அரசாள ஒரு
ஆண்மகன் கிட்டி இருந்தால் - உன்
கொட்டம் அடங்கியிருக்கும்
என்றான் பட்டி விக்கிரமாதித்யன்.

அதுகேட்டுச் சீற்றம் கொண்ட
அல்லி அரசாணியானவள்
சிறுவிரலை மடக்கி
அதனுடன்
மோதிரவிரலும் மடக்கி
சுட்டு விரல் மடக்கிக் கூடவே
கட்டைவிரல் தானும் மடக்கி
நட்டு வைத்த லிங்கம் போல
நடுவிரலை உயர்த்தி
"$#$% YOU!"
என்றனள் பாராளும் அரசி!

அல்லி ராஜ்யத்தில்
ஆண்மகனுக்கென்ன வேலை என்றே
பட்டி விக்கிரமாதித்யனும்
பரிதவித்துப் போனானே....
...
...

(இன்னாய்யா இது? ஒண்ணுமே பிரியலயே என்பவர்கள் தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்ளும்படி கோரப்படுகிறார்கள். எழுதிய வில்லுப்பாட்டனுக்கே புரியவில்லை. இவர்களுக்குப் புரிய வேண்டுமாம். எப்பாடி இருக்கிறது பாருங்கள்?)

Anonymous said...

adhu sari. pagirnthu unnum sharing concept samsarathukku mattum thana illa minsarathukkuma?

The reason I asked is chennai continues getting preferential treatment of just an hour powercut whereas other places have to go through between 8 to 12 hours of cut.

idhukkellam samacheer(azhivu) kondu vara mattangalama?

வெங்கி said...

கலைஞர் அவர்களுக்கு ஒரு தமிழன் எழுதிய கவிதை....(உ: தினமலர் வாசகர்)

உன்னால் பிராமணன் வாழவும் இல்லை அழியவும் இல்லை... உன்னால் திராவிடம் காக்கப்படவும் இல்லை, அழிக்கப்படவும் இல்லை....உன்னால் தமிழ் அழியவும் இல்லை வாழவும் இல்லை... உன்னால் நீ வாழ்ந்தாய் ...நாலு பேர வாழ வைத்தாய்... நாலு கோடி உனக்கு ஆப்பு வைத்தனர்... அவ்வளவே....

வெங்கி said...

கலைஞர் அவர்களுக்கு ஒரு தமிழன் எழுதிய கவிதை....(உ: தினமலர் வாசகர்)

உன்னால் பிராமணன் வாழவும் இல்லை அழியவும் இல்லை... உன்னால் திராவிடம் காக்கப்படவும் இல்லை, அழிக்கப்படவும் இல்லை....உன்னால் தமிழ் அழியவும் இல்லை வாழவும் இல்லை... உன்னால் நீ வாழ்ந்தாய் ...நாலு பேர வாழ வைத்தாய்... நாலு கோடி உனக்கு ஆப்பு வைத்தனர்... அவ்வளவே....

சம்பத்குமார் said...

உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன்

பல்சுவை பதிவர்கள்

SELECTED ME said...

அன்புள்ள இட்லிவடைக்கு,
எதைக் கொடுப்பதை இருந்தாலும் அதை இட்லிவடைக்கு முதலில் கொடுப்பதில் பெருமையடைகிறோம்! உங்களுக்கு வெர்சாட்டைல் விருதை வழங்குகிறேன் பெற்று கொள்ளுங்கள்! http://www.nilapennukku.com/2012/02/blog-post_26.html

Anonymous said...

ஏம்பா இட்லி, இன்னா ஆச்சி? கபால்னு கடைய சாத்திக்கினு காணாம போயிட்டியே...பயந்துகினியா இன்னா?

அத்த விடு...நடிகர் Jean Dujardin
இந்த வருஷம் ஆஸ்கர் அவார்டு வாங்கினதபத்தி நீ என்னா நெனக்கிரே? நல்ல காமெடி நடிகர். ஜேம்ஸ் பாண்ட் படங்கள நக்கலடிச்சி அவர் நடிச்ச OSS117-Cairo nest of spies
அதே மாதிரி இன்னொரு படம் - பேரு மறந்து பூடிச்சி - பிரேசில்ல நடக்கிராமாதிரி......டிவிடி கெடச்சா பாரு. செம காமெடி மாமே.

நான் இனிமே கவிதை எழுத வேண்டாமுன்னா சொல்லு. நான் எயுதலை. அத்த வுட்டுட்டு இப்படி கடையவே கபால்னு சாத்தினா என்னா அர்த்தம்?

பி.கு. ஆஸ்கர் அவார்டு ஹால்ல நம்ம இசைப்புயல் ஒரு ஓராமா ஒக்காந்து மூசிக்கு போட்டுக்கினிருந்தாரே...கவனிச்சியா நீ?

பாயும் வேகம் நத்தைதாண்டா
பயந்தாங்குளி இட்லி தாண்டா.

ooops....சோரி...சோரி..கேட்டோ?

கணேஷ் said...

இப்போதான் புரியுது அவங்க சாப்பிடறது அல்வா .