பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 14, 2012

துக்ளக் 42 - LIVE

துக்ளக் 42-ஆம் ஆண்டு நிறைவு விழா. நேரடியாகக் கவர் செய்வதில் இட்லிவடைக்கு மகிழ்ச்சி.


மாலை ஆறரை மணிக்குக் கூட்டம் ஆரம்பம். இப்போதே
களை கட்டத் தொடங்கி இருக்கிறது. அரங்கில் அல்ரெடி பாதிக்கு மேல் மக்கள். தண்ணீர் பாட்டில், செய்தித் தாள்கள் அனுமதி இல்லை. Even கீதை போன்ற புஸ்தகங்கள் கூட உள்ளே அனுமதிக்கப் படவில்லை.

மேடையில் நான்கு சேர்கள். அத்வானி, மோதி, சோ மற்றும் மற்றொருவர். நான்காமவர் யார் என்ற டிபேட் ஓடுகிறது. ரஜினியோ என்று நிறையப் பேச்சு அடிபடுகிறது.


நிறைய போலிஸ். கடுமையான பாதுகாப்
பு சோதனை, அத்வானி வருவதால். நிறையப் பெண்கள் கூட்டம். ஒரு குழந்தை லாலிபாப் சாப்டுகிறது, போலிஸ் அனுமதியுடன். போலிசார் காமெராவில் படம் பிடிக்கிறார்கள். இங்கே போடப்படும் படங்கள் அவர்கள் எடுத்தது அல்ல.

சிலர் தூங்கி வழிகிறார்கள். எப்போ வ
ந்து சீட் பிடித்தார்களோ பாவம். மைக் டெஸ்டிங் செய்து அவர்களை டிஸ்டர்ப் செய்கிறார்கள். சரி. நானும் ஒரு குட்டித் தூக்கம் போட்டு வந்து தொடர்கிறேன். :-)

இரண்டே முக்கால் மணி நிலவரப் படங்கள் இரண்டு, அரங்கின் வாயிலில் மற்றும் உள்ளே இருந்து.

நாலு மணி நிலவரம்:

கிட்டத்தட்ட அரங்கம் நிரம்பி விட்டது என்றே சொல்லணும். இப்போது அரங்கின் இரு புறமும் குடி தண்ணீர் வசதிசெய்து விட்டார்கள். உள்ளே விற்கப்படும் அலையன்ஸ் புஸ்தகங்கள் மட்டும் போலிசால் அனுமதிக்கப் படுகிறது. போலீசிடம் கேட்டால், இந்தப் புஸ்தகங்களை யாரும் தூக்கி எறிய மாட்டார்கள் என்று சொல்கின்றனர். அலயன்சை தூக்கி எறியலாம், புஸ்தகங்களை எறிய மாட்டார்களோ என்னவோ!ஒரு காராச்சேவு மற்றும் மிச்சர் சாப்
டும் மக்களாக இருக்கிறார்கள். ஒருவேளை ஐயங்கார் மற்றும் ஐயரா இருப்பார்கள் என்று நினைக்கிறேன். உள்ளே ஒரு புறா பறக்கிறது. இது பிஜேபி-அதிமுக சமாதானப் புறாவாக இருக்குமோ?

யாரோ ஒருவர் வாசகர் கேள்விகளை கேட்டு எழுதிக் கொண்டு இருக்கிறார். நானும் ஒன்று கேட்டேன். செலெக்ட் ஆகுமா ஆகாதா என்று தெரியாது.

கேள்வி : போன ஆட்சியில் ஒரே பாராட்டு விழா, இந்த ஆட்சியில் ஒரே பதவி ஏற்பு விழா, சோவின் கருத்து என்ன? :-)


அரங்கம் நிரம்பி விட்டது. இரு புறமும் எல்சிடி ஸ்க்ரீன்கள். நல்ல அரேஞ்ச்மென்ட். அரங்க
ம் நிரம்பி இருந்தாலும் போன முறைகளைப் போல முண்டி அடிக்கும் கூட்டம் இல்லை. மூன்று காரணங்கள் இருக்கலாம் : 1) வந்தாலும் இடம் கிடைக்காதோ என்று (2) வள்ளுவர் கோட்டம் என்பதால் வேண்டாம் என்று (3) எப்படி இருந்தாலும் இட்லிவடையில் லைவ் பார்த்துக் கொள்ளலாம் என்று!


சரி. போய் சமோசாவும் பிஸ்கட்டும் சாப்டுட்டு வரேன். நாலு மணிக்கு அரங்கத்தில் போட்டோ.ஐந்து மணி நிலவரம்:
கரண்ட் போய் விட்டது. ஆனால்
ஸ்பீக்கர்கள் மட்டும் வேலை செய்கின்றன. சோவின் பக்தி மார்க்கம் ஓடுகிறது. கிட்டத்தட்ட எல்லாரும் இப்போ ஸ்நாக்ஸ் சாப்டும் மூடில் இருக்கிறார்கள்.


வழக்கமான பேக் டிராப் பேனர் இந்த முறை மிஸ்ஸிங். பக்கத்தில் ஒருவர் "சோ சார் கனிமொழி பற்றிப் பேசுவாரா என்று அக்கறையாக் கேக்கறார்". பாவம், அவர் கவலை அவருக்கு. ஒரு வேளை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பிரதமர் மோதியா அல்லது அத்வானியா என்ற கேள்விக்கும் சோ பதில் சொல்வாரா என்ற டிஸ்கஷனும் நடக்கிறது. அரங்கில் யாரும் சோவின் கீதா கேட்பதாக இல்லை. எல்லாரும் ஸ்நாக்ஸ் சாப்டுவதிலும் பக்கத்தில் அரட்டை அடிப்பதிலும் பிஸி.


சஃபாரி போட்ட மக்கள் சிலர் திரும்பவும் மேடையை செக் செய்கின்றனர். அலையன்சில் ஒரு புக்கு: சர்வம் காமெடி மயம். நிறையப் பேர் அதை வாங்குகின்றனர், சல்லிசு விலையில் இருப்பதால்.

போன கரண்டு வந்து விட்டது. சிலர் போலீசுடன் வாக்குவாதம் செய்கின்றனர், எப்படி துண்டு/கர்சீப் போட்டு இடம் பிடிக்கலாம் என்று. ஐயா ஆட்சியில் நில அபகரிப்பு. அம்மா ஆட்சியில் சீட்டு அபகரிப்பு.


எங்கே பார்த்தாலும் ஒரே பச்சை பேட்ச். எல்லாம் துக்ளக் எம்ப்ளாயிகள் போல இருக்கார்கள். அரங்கின் உள்ளே சூரியன் நேர் வழியில் வர முடியல. சைடு வழியா வரப் பாக்கறார். என்னதான் நடக்குது என்று பார்க்க. சொல்ல மறந்து விட்டேன். ஹிந்து முன்னணி ராம கோபாலன் ஆஜர். இல. கணேசனும் கூட.

கூட்டத்தில் புஸ்தகம் புரட்டும் ஒருவர்.கருப்பு சட்டை போட்டவர்களுக்கு அனுமதி இல்லை. நல்லவேளை நான் மஞ்சளில் இருக்கேன்.

கூட்டம் ஆரம்பம் ஆனதும் பரீக்வென்ட்டாக அப்டேட் வரும். :-)

மணி ஆறாகப் போகிறது. மூச்சாப் போக எழுந்தாலும் உடனே பத்து பேர் எழுகிறார்கள், யாரோ வந்திருக்கிறார் என்று பார்க்க. மேடையில் இப்போ ரெண்டு ஏர் கூலர்கள். குருமூர்த்தி மற்றும் சிலர் கண்ணில் படுகின்றனர். கூட்டம் பரபரப்பாகிறது.

மக்கள் ரஜினியை எதிர்பார்க்கின்றனர். மணி சரியாக ஆறு. துக்ளக் ஆட்கள் மேடையில் அங்குமிங்கும் செல்கின்றனர்.

கே. பாலச்சந்தர் வந்துள்ளார். மணி ஆறேகால். போன முறைகள் போன்று இன்றும் டான் என்று ஆறரை மணிக்கு ஆட்டத்தை ஆரம்பிப்பாரா சோ?

குருமூர்த்திக்கு ஸ்டான்டிங் ஓவேஷன்.

நரேந்த்ர மோதி அத்வானியுடன் உள்ளே வருகிறார். சோ வந்ததும் ஒரே ஆரவாரம். வந்தவுடன் கரண்டு இருக்கா? ஏன் ஆடியோ கம்மியாக இருக்கு என்று கேக்கறார் சோ. சத்தம் கம்மியா இருந்தாலும் தனக்குப் பிரச்சினை இல்லை என்று வழக்கம் போல நக்கலாச் சொல்றார். இப்போது துக்ளக் மக்கள் அறிமுகம் நடக்கிறது.குருமூர்த்திக்கு மீண்டும் ஒருமுறை பெரிய கரகோஷம்.

முதல் செட் கேள்விகள், கல்பனாவிடம் இருந்து. பெண்ணுரிமை. :-)

இலவசம் எப்போது தமிழ் நாட்டை விட்டுப் போகும்? நீங்க உங்க நண்பர் ஜெவிடம் சொல்வீர்களா? மோதி பிரதமர் ஆவாரா?

சோவின் பதில் : இதுக்குதான் பெண்களை அனுமதிக்கக் கூடாது.

ரஜினி வந்தாச்சு!

இலவசம் குடுத்து இருக்காவிட்டால் திமுக ஜெயிச்சு இருக்கும். அதனால் ஜெ செய்தது சரிதான் என்கிறார் சோ. சொன்னதை ஜெ செய்து விட்டார் என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கறார்.

தனக்கும் இந்திய மக்களுக்கும் மோதி பிரதமராவதில் ஆசை என்று ரெண்டாம் கேள்விக்குப் பதில்.

அடுத்த கேள்வி: சசிகலா வெளியேறியதைப் பற்றி உங்க பங்கு/கருத்து என்ன?

இப்டிக் கேள்வி கேட்டு ஆடியன்சை அவமதித்து விட்டார் என்று சோ பதில். :-)

ஹிந்து - நக்கீரன் பற்றியது

அடுத்த கேள்வி.

பதில் : இந்த மாதிரி ஆர்டிகிள் நக்கீரன் போடுவது ஆச்சர்யம் இல்லை. நக்கீரன் சரக்கை ஆங்கிலத்தில் போடும் அளவுக்கு ஹிந்து தரம் தாழ்ந்து விட்டது என்று பதில்.

அடுத்த கேள்வி: சீனாவுடன் போட்டி போட மோதி பிரதமாராக வேண்டும். உங்க கருத்து என்ன?

பதில் :குஜராத் மாதிரி ஆட்சி இந்தியாவில் வரணும். அப்போதான் இது சாத்யம்.

அடுத்த கேள்வி விலைவாசி பற்றி.

பதில்: விலைவாசி ஏற்றம் தவிர்க்க முடியாதது. என்னோட ட்ராமாவுலையே சொல்லி இருக்கேன்.

சோ பேசுகிறார். கொஞ்சம் கேட்கணும். அதனால குட்டி பிரேக்.

விரைவில் ஆடியோ அப்லோட் செய்கிறேன். :-)

மன்மோகன் சிங்கைப் போட்டுத் தாக்குகிறார், சோ. நல்ல விளாசல் நன்றி சோ.

பிரதமர் பதவிக்கு நிதிஷ்குமாரை விட நரேந்த்ர மோதி கண்டிப்பா பெட்டெர் எனகிறார்.

அடுத்த பதில் : விநாயகா பீடிக்கும் விநாயகருக்கும் என்ன சம்பந்தமோ, அதே சம்பந்தம்தான் அன்னாவுக்கும் காந்தியிசத்துக்கும்.

கிரண் பேடி நல்ல சியர் லீடராம்! :-)

யாரோ ஒருவர் கலைஞர் பற்றிப் பேசுமாறு சோவிடம் சிட்டு அனுப்பி இருக்காரு. செமக் காமெடி. :-)

கேள்வி பதில்கள் முடிந்தது என்று நினைக்கிறேன். சிட்டுக் குடுத்த புண்யவான் தயவில் கருணார்ச்சனை ஓகோவென்று நடக்கிறது. சோ மட்டும் மேடையில். மேடை ஏறப் போடும் அந்த நான்காவது நபர் யார் என்று அறிய ஆவலாக இருக்கு.

தமிழ் நாட்டை குஜராத் போல மாற்ற ஜெ முயற்சிக்கறார் என்று சோ சொல்கிறார். Nation will become electrified if Modi becomes PM என்கிறார். கூடங்குளம் போராட்டம் ஸ்பான்சர் செய்யப் பட்டது என்கிறார்.

சோவின் கேள்வி பதில் பேச்சு முடிந்தது. மணி ஏழு முப்பத்தி ஐந்து.

அத்வானி பேசப் போகிறார்.

மேடையில் இப்போது.
இத்தோடு லைவ் அப்டேட் முடிந்தது. விழா முடிந்ததும் ஆடியோ வரும். :-)

வழக்கம் போல தேசிய கீதத்துடன் விழா முடிந்தது. இன்னும் சில மணி நேரத்தில் ஆடியோ அப்லோட் செய்கிறேன், எடிட்டிங் மற்றும் ஈட்டிங் முடிந்தவுடன். :-)

என்ஜாய் செய்தது திரும்பும் திருவிழாக் கூட்டம்.
முத்தான வரிகள்


மோதி பிரதமர் வேட்பாளர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் - அத்வானி.

டைனாஸ்டி அரசியலைத் தூக்கி எறியவேண்டும் - மோதி.

தை பிறந்தால் வழி பிறக்கும் - தமிழ் வருஷப் பொறப்பு அல்ல - சோ.

முல்லைப் பெரியாறு - ஜெ போராடுகிறார். முக லெட்டர் மட்டுமே எழுதினார். இனியும் எழுதுவார் - சோ.

34 Comments:

ஜெகன்னாதன் said...

என்ன! வாட்டர் பாட்டில் கூட கிடையாதா! அம்மா சோவுக்கு Z+ செக்யூரிடி கொடுத்துவிட்டர்களா?

4-ஆவது சேர் ரஜினியாயிருக்காது. குருமூர்த்தி வருவார் என்று நினைக்கிறேன். இன்னொரு கெஸ் .......”அம்மா....”!

-ஜெ.

ஜெகன்னாதன் said...

என்ன! வாட்டர் பாட்டில் கூட கிடையாதா! அம்மா சோவுக்கு Z+ செக்யூரிடி கொடுத்துவிட்டர்களா?

4-ஆவது சேர் ரஜினியாயிருக்காது. குருமூர்த்தி வருவார் என்று நினைக்கிறேன். இன்னொரு கெஸ் .......”அம்மா....”!

-ஜெ.

Anonymous said...

Thanks Idly Vadai for the live coverage !! Pinni pedal edunga !!

கௌதமன் said...

நல்ல முயற்சி. வாழ்த்துகள். இ வ.

கௌதமன் said...

வள்ளுவர் கோட்டம் என்றால் - நிச்சயம் அங்கு அம்மா வரமாட்டார்கள்.

Ganpat said...

நன்றிகள் கோடி.
30 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது update செய்ய முடியுமா?
(இதன் பெயர்தான்,"தானம் பெற்ற மாட்டை பல்லை பிடித்து பார்ப்பது" என்பது!)

Ganpat said...

நன்றிகள் கோடி.
30 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது update செய்ய முடியுமா?
(இதன் பெயர்தான்,"தானம் பெற்ற மாட்டை பல்லை பிடித்து பார்ப்பது" என்பது!)

கௌதமன் said...

very good. Go ahead. Reading once in every 30 min.

கௌதமன் said...

//சோ பேசுகிறார். கொஞ்சம் கேட்கணும். அதனால குட்டி பிரேக்.//

கொஞ்சம் என்ன? முழுவதுமே கேளுங்க. ஆடியோ ரெக்கார்ட் செஞ்சு போடுங்க.

யாரு அந்த குட்டி?

கௌதமன் said...

//விரைவில் ஆடியோ அப்லோட் செய்கிறேன். :-)//

Thank you.

Madhavan Srinivasagopalan said...

//எங்கே பார்த்தாலும் ஒரே பச்சை பேட்ச். //
//அரங்கின் உள்ளே சூரியன் நேர் வழியில் வர முடியல. சைடு வழியா வரப் பாக்கறார்.//
// கருப்பு சட்டை போட்டவர்களுக்கு அனுமதி இல்லை.//

HA... HA.. HA...!

Vijay said...

Cho guarantees free entry for this meeting. But Kalakendra is making money out of this. Last year Jaya TV was broadcasting this live. This time, no live TV, no live webcast nothing. Following this function at the mercy of idlyvadai. vaazhga idlyvadai.

Anonymous said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். சென்னையிலேயே 15 வருஷங்கள் இருந்தும் நேரில் பார்க்க முடியாமல் இருந்த குறையை போக்கிவிட்டீர்கள். 1.சசிகலாவுடன் தொடர்பில் இருந்தவர்களை எல்லாம் நீக்குவதாக இருந்தால், முதலில் ஜெயாவைத் "தானே" நீக்கவேண்டும்? 2.இதைத்தான நாங்க முதல்லயே சொன்னோம்.

ConverZ stupidity said...

Kalakkal Idly. nice job. dont forget to upload the audio

Anand said...

Thanks for the Live update. Leaders like Modi are an asset for our country. He is a role model CM for others to emulate. Let us hope Modi takes charge as Union Home Minister in Delhi under Sri Advani's prime-ministership.

After all if PC (who cannot even win from his home constituency) could become union HM, our dear Modi will do a 100 times better job.

ஸ்வீட் காரம் காபி said...

நேரே வரமுடியாத குறையை தீர்த்துக்கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

Anonymous said...

தெண்டம்.(இ வ படித்த) பத்து நிமிடம் வேஸ்ட்.

Anonymous said...

எதோ மக்களை பாதிக்கும்- பொருளாதாரம், நாடு நடப்பு, அந்நிய கடைகள் அனுமதி, ரேஷன் , மின்சாரம், பெட்ரோல் விலை பற்றி அதி மேதாவி சோ பேசுவார் என்று பார்த்தல் அதே ஜே கலைழர் புராணம்.கீறல் விழுந்த கிராம போன் ரெகார்டர் போல. வேஸ்ட். இதை பார்க்க & கேட்க மக்கள். அட கண்ணராவி

சுபத்ரா said...

ஒரே பதிவுல எத்தனை “:-)”

ம்ம்ம் :-)

சுபத்ரா said...

/*கேள்வி: சீனாவுடன் போட்டி போட மோதி பிரதமாராக வேண்டும். உங்க கருத்து என்ன?பதில் :குஜராத் மாதிரி ஆட்சி இந்தியாவில் வரணும். அப்போதான் இது சாத்யம்*/

:)))

Anonymous said...

அம்மா ஆட்சியில்---- தமிழகத்தில் தொடரும் கொலை, கொள்ளை, சாலை விபத்து, மின்வெட்டு, விலைவாசி உயர்வு, தினம் ஒரு நகை கடை அல்லது அடகு கடை கொள்ளை. தினம் ஒரு ஐம்பது பேர் சாலை விபத்தில் சாவு, கல்லூரி மாணவர்கள் அடிதடி, போதை மருந்து, கொலை அம்மா வந்தபின் பல மடங்கு அதிகரிப்பு. பற்றி சோவின் ஒரு புண்ணாக்கையும் காணவில்லை.

Anonymous said...

இட்லி வடையின் இருபது ஜால்றாகளை தவிர பின்னுட்டத்தில் யாரையும் காணவில்லை.

Anonymous said...

பேசாம இட்லிவடைய ஒரு மருத்துவ வலை தளமாக ( அம்மா கலைழர் கட்டிய கட்டடங்களை ஆசுபத்திரி கட்டுவது போல) மாற்றி விடலாம்.

இட்லி வடையில் சூட்டை காணவில்லை. கலைழரை, கனிமொழியை , சண் டிவியை விமர்சித்ததை போல அம்மாவை, உடன் பிறவா சகோதரி கும்பலை பற்றி ஒன்றும் காணவில்லை.

Madhavan Srinivasagopalan said...

// Anonymous said...

இட்லி வடையின் இருபது ஜால்றாகளை தவிர பின்னுட்டத்தில் யாரையும் காணவில்லை.//

சொரணை கேட்ட அனானியே(1)..
ஒன்னோட நெஞ்சுல மஞ்சா சோறு இருந்தா..
அனானியா வராம.. சொந்தப் பெயருள வந்து கமெண்டு போடு..

-- ஹி.. ஹி.. இப்படி நானே (அனானியே-2) கமெண்டு போட்டாத்தான் அனானியோட வசதி மத்தவங்களுக்கும் புரியும்.

Attention இ.வ. -- நீங்க அனானி ஆஃப்ஷன எடுத்துடுங்க.. அப்பத்தான் இந்த அனானிகளோட கொட்டம் அடங்கும்..

ஜெகன்னாதன் said...

கடைசிவரை மேடையில் 4-ஆவது சீட் காலிதானா? உடனுக்குடன் வர்ணனைப் பதிவு ரொம்ப நன்றாக இருந்தது. பச்சை பேட்ச், சைட் எண்ட்ரி சூரியன் எல்லாம் டாப்.
என் போன்ற ஹியரிங் டெஃபிசியென்சி உள்ளவர்களுக்காக, ஆடியோ லின்கோடு ஒரு பதிவையும் போடுவீர்களா? பேப்பரில் கொஞ்ஜம் தான் வரும். துக்ளக் 2 பாதியாக போடும்போது இண்டெரெஸ்ட் போய்விடும்!
உங்கள் கேள்வியை சாய்ஸில் விட்டுவிட்டாரா இல்லை துக்ளக் கேள்வி-பதில் பகுதியில் வருமா?

-ஜெ.

Raja said...

நேரில் பார்த்தது போல இருந்தது ... மிக்க நன்றி... பொங்கல் நல் வாழ்த்துக்கள்...

IdlyVadai said...

இன்று மத்தியம் ஆடியோ அப்லோட் செய்யப்படும். நன்றி.
இட்லிவடை

koodai said...

//கருப்பு சட்டை போட்டவர்களுக்கு அனுமதி இல்லை//
வர்ணனை பிரமாதம்!
பாவம் சுமார் எழுபது வயதான முதியவர் அரைக்கால் சட்டையில் ரிலாக்சாக வந்தார்.அவரையும் அனுமதிக்கவில்லை.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

R.Gopi said...

Excellent write-up with loads of "punch"es...

Eagerly waiting for the audio...

Thanks IV

SathyaRam said...

they prevented me from getting in wearing a 3/4ths. but there was no announcement earlier. Autocrats....

வழிப்போக்கன் said...

இட்லிவடையார் அரங்கக்த்தின் உள்ளே வசதியாக அமர்ந்துகொண்டு விளாசித்தள்ளி உள்ளார்.
அரங்குக்கு வெளியே கால்கடுக்க நின்று தவம் செய்ய வேண்டியநிலைக்குத் தள்ளப்பட்ட சிறிசு பெரிசுகளுக்கு ஒரு பெரிய குறை - ஆடியோ செய்த சதி. சரியாகக் காதில் விழவே இல்லை. என்ன எழவுடா இது என்று நொந்து திரும்பியவர்கள் பலர்.

Anonymous said...

Thank you so much for the coverage. Please upload the audio without much edits, eagerly waiting.

பால கணேஷ் said...

நிகழ்ச்சிக்கு வராமலேயே லைவ்வாகப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஆடியோவை எதிர்பார்க்கிறேன். நன்றி.

Kamesh said...

IV,

having a problem with Audio (Not yours its mine) where it will be available in TXT format.

Please help.

Kamesh