பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 31, 2012

தி.மு.க.4 பெட்டிக் கடைகளாக...

தி.மு.க.4 பெட்டிக் கடைகளாக...சிதறுண்டு போகும் - குமுறுகிறார் பெரம்பூர் கந்தன் (தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்)

தி.மு.க.வின் கொள்கைகளையும் லட்சியங்களையும் ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு ‘தம் குடும்பம் மட்டுமே கழகக் குடும்பம்’ என்று கலைஞர் செயல்படுவதால் எதிர்காலத்தில் கட்சி நான்கு பெட்டிக் கடைகளாகச் சிதறுண்டு போகும்," என்று எச்சரிக்கிறார் பெரம்பூர் கந்தன். இவர் கலைஞர் பாசறையின் அமைப்பாளர். தவிர, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர். தி.மு.க. பொதுக்குழு கூடும் சமயம் கந்தன் வீசுவது சாதாரண குண்டல்ல; கந்தக குண்டு...

அண்ணா கழகக் குடும்பத்தை எப்படிப் பார்த்தார் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். 1962 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 50 இடங்களில் கழகம் வென்றது. அதே சமயம் தில்லியில் மக்களவைக்கு எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தமிழகத்தில் சட்டமன்றக் கட்சிக்கு நெடுஞ்செழியனும், பாராளுமன்ற கட்சிக்கு இரா.செழியனும் தலைவர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற பேச்சு இருந்தது. அண்ணா, நெடுஞ்செழியன் மற்றும் செழியனைக் கூப்பிட்டார். ‘சகோதரர்களான நீங்கள் இருவரும் இந்த இரு அமைப்புகளிலும் தலைவர்களாக இருப்பது என்பது, கழகம் ஒரே குடும்பத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவது போலத் தோற்றம் கொடுக்கும். எனவே உங்களில் ஒருவருக்குத்தான் வாய்ப்புக் கொடுக்க முடியும். அது யார் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்,’ என்று சொல்லிவிட்டார். கடைசியில் செழியன் பாராளுமன்றக் கட்சித் தலைவராகப் போடப்படாமல் நாஞ்சில் மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதான் அண்ணா கழகக் குடும்பத்தை நடத்திய முறை.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது? மகன் துணை முதல்வர். அவரைவிடத் தகுதியானவர்கள் கழகக் குடும்பத்தில் இல்லையா? மற்றொரு மகன் மத்திய அமைச்சர். மகள் தில்லி மேலவை உறுப்பினர். பேரன் மத்திய அமைச்சராக இருந்தவர். இப்போது கலைஞரின் சிந்தனைகள் கழகத்தின் எதிர்காலம் குறித்து இல்லை. எந்தெந்தப் பதவிகளை யார், யாருக்குப் பங்கு போட்டுக் கொடுத்தால் குடும்பத்தில் பிரச்னை வராது என்பதே அவரது 24 மணி நேர யோசனையாக இருக்கிறது. எந்த வகையில் கழகச் சட்ட திட்டங்களைத் திருத்தினால், வாரிசுகளின் வாரிசுகளுக்குப் பதவிகள் கிடைக்கும் என்று ஆராய்கிறார்கள். இந்த நிலை உருவாவதற்கு, பேராசிரியர் அன்பழகனும் ஒரு காரணமாகிப் போனார். மூத்த தலைவர் என்ற முறையில் நடக்கின்ற தவறுகளைச் சுட்டிக் காட்டாமல், தமக்கு இரண்டாவது இடம் சாஸ்வதமாக இருந்தால் சரி என்று சுயநலத்துடன் செயல்பட்ட பேராசிரியர், இந்த இயக்கம் இப்படித் தறிகெட்டுப் போவதற்குக் காரணமாக அமைந்தவர்களில் ஒருவராகி விட்டார். இந்த வகையில் வரலாறு அவரது நிலைப்பாட்டை விமர்சனப் பார்வையோடு தான் அணுகும்.

மொழி, இனம், பொருளாதாரம், சாதி பேதமற்ற சமதர்ம சமுதாயம் ஆகியவை குறித்து மிகத் தெளிவாகச் சொல்லப்பட்ட கொள்கைகள் கலைஞர் காலத்தில் நீர்த்துப் போய்விட்டன. உயர்மட்டத்திலேயே சுய நலம் குடிகொண்டதால், கட்சியிலிருக்கும் இளைய தலைமுறையும், பதவி, பணம் என்று அலைபாய்கிறது. யாருக்கும் கொள்கைத் தெளிவு இல்லை. ஒரு உதாரணம். ஜனவரி 25ம் தேதி என்பது தமிழுக்காக உயிர்விட்ட தியாகிகளின் நினைவைப் போற்றுகின்ற தினம். ஆனால் இதையே ஒரு கொண்டாட்டமாக சித்திரிக்கிறார்கள். பேச வரும் தலைவருக்கு எப்படி வரவேற்பு கொடுப்பது என்று கூட்டம் போட்டு யோசிக்கிறார்கள். இதன் மூலம் சிலரது பிழைப்பு ஓடுகிறது. இன்று இயக்கத்தில் வியாபாரிகள் அதிகமாகி விட்டார்கள். பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல் ஆகிவிட்டது கட்சி.

கழகத்துக்கு உண்மையாகப் பாடுபட்டவர்களுக்கு மதிப்பில்லை. 1991 - 96ல் சட்டமன்றத்தில் ஒற்றை உறுப்பினராக இருந்து கட்சியின் கௌரவத்தைக் காப்பாற்றி, ஜனநாயகத்துக்குப் போராடிய பரிதி இளம்வழுதி, சிலரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப, கருவேப்பிலையாக ஓரம் கட்டப்படுகிறார். ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ என்ற கோஷத்தை வெற்று கோஷமாக்கிவிட்டு, அயராது உழைத்த கலைஞரின் குடும்பம் இன்று இந்தியாவின் முன்னணி செல்வந்தர்களில் ஒன்றாகிவிட்டது. கட்சிப் பத்திரிகையான முரசொலி, தொண்டர்கள் உழைத்துக் கொடுத்த பணத்தில் வளர்ந்தது. ஆனால் அதன் நிர்வாகம் கலைஞர் குடும்பத்தின் கையில். அண்ணா அவர்கள் கழக ஏடான ‘நம் நாடு’ பத்திரிகையை, கழக நிர்வாகிகளிடம் அல்லவா ஒப்படைத்திருந்தார்?

இப்போது சொன்னவற்றைவிட மிகப் பெரிய கொடுமை 2009ல் முள்ளிவாய்க்காலில், கொத்துக் கொத்தாக ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது மத்திய அரசில் பதவிதான் முக்கியம் என்று நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தமிழினத்துக்கே துரோகம் செய்தாரே... இதை மன்னிக்கவே முடியாது. ‘இன துரோகி’ பட்டத்துக்குப் பொருத்தமானவர் கலைஞரே. இந்த உச்சபட்ச துரோகம்தான் எனக்குத் தீராத மனக்கொதிப்பை ஏற்படுத்திவிட்டது.

இனியும் என்னால் கழகத்தில் நீடிக்க முடியாது. எனவே நான் என்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வின் ‘கொள்கை’ ஊழல் புகாரில் மாட்டிக் கொண்டு ஒரு வருடமாக திகாரில் இருக்கிறது. எனவே வெட்கப்பட்டு வேதனைப்பட்டு என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஊழல் புகாரில் ஜெயிலில் இருந்தவருக்கு, பட்டுக் கம்பள வரவேற்பு! ஊழலுக்குத் தாலாட்டுப் பாடும் கட்சியில் எப்படி இருக்க முடியும்?" என்றுகேட்கிறார் கந்தன். இவர் வீசும் ஏவுகணைகளால் பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்படும்" என்கிறார்கள் சில மூத்த பிரமுகர்கள். பொதுக்குழுவில் இதைவிட இன்னும் பூதாகரமான வெடிகள் வெடித்தாலும் ஆச்சரியமில்லை.

நன்றி - கல்கி
படம் நன்றி - Times of India.


நோ கமெண்ட்ஸ்!

Read More...

Monday, January 30, 2012

கேக் வெட்டிய அழகிரி


இன்று ஆங்கில தேதிப்படி தன் பிறந்த நாளை கேக் வேட்டி சிம்பிளாக அழகிரி கொண்டாடினார் என்ற செய்தியுடன் அவர் அளித்த பேட்டிக்கு பல சாயம் பூச ஆரம்பித்துவிட்டது மீடியா. திமுக பொதுக்குழு கூடுவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கின்ற நிலையில், மீடியாக்கள் என்ன எதிர்பார்த்தனவோ அது நடந்துவிட்டது. அழகிரியிடம் என்ன கேள்வி கேட்டால், அதற்கு எவ்வாறு பதில் கிடைக்கும் என்பது மீடியாவிற்கு அத்துப்படி. அதன்படி, தங்கள் பிறந்தநாளன்று, ஸ்டாலினுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, அவருக்கென்று தனிப்பட்ட முறையில் ஏதும் கூற விரும்பவில்லை, அவரும் மற்றவர்கள் போல ஒரு திமுக தொண்டர்தான் என்ற ரீதியில் அழகிரி பதிலளித்துள்ளார்.

ஏற்கனவே கழகத்தில் புகைந்துக்கொண்டு இருக்கும் வாரிசுப் புகைச்சலில், இம்மாதிரியான பதில் குடும்பத்திலும், கட்சி மட்டத்திலும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது அழகிரிக்குத் தெரியாத்தல்ல. ஆயினும் மீடியாவிற்கு தீனி போடும் வகையில் எதற்காக இப்படி ஒரு பூடகமான பதில்?

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் அடைந்த அவமானகரமான படுதோல்வி, அலைக்கற்றை வழக்கில் தொடர்ச்சியாக கழகத்தின் சுயமரியாதையை (??!!) கேள்விக்குரியதாக அடிக்கும் காங்கிரஸ் (சிபிஐ) யின் தொடர் நடவடிக்கைகள் மற்றும் காங்கிரஸின் உதாசீனமான போக்கு போன்றவற்றால் கழகம் நொந்து போயிருக்கும் நிலையில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் வேறு கழகத்தில் கிலியைக் கிளப்பியுள்ளது. இன்றைய நிலை தொடர்ந்தால், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமு கழகத்திற்கு என்ன நேரும் என்பதை குடும்பம், மற்றும் கட்சியில் உள்ள சகலரும் அறிவர். எனவே கட்சியை மறுசீரமைக்கும் விதமாக ஸ்டாலின் மாவட்டங்கள்தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். இது தொடர்பாக மீடியாக்களில் பல ஹேஷ்யங்கள் நிலவுகின்றன.

இந்த மறுசீரமைப்பில் ஸ்டாலின் தனது ஆதரவாளர்களாகப் பார்த்து நியமித்து வருவதாக மீடியாக்களில் தகவல்கள் வந்தவண்ணமிருப்பதால், அழகிரி தரப்பு சற்றே சுணக்கத்தில் இருப்பதாகத் தெரிகிறது. தவிர, வருகின்ற பிஃப்ரவரி மூன்றாம் தேதி நடைபெறவிருக்கின்ற திமுக பொதுக்குழு கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த்தாகக் கருதப்படுகிறது. கட்சியின் இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்து ஸ்டாலின் விலகி, அப்பொறுப்பிற்கு அவரது மகன் உதயநிதி வருவாரா? கனிமொழியின் தியாகத்தை மெச்சி, தகுந்த கட்சிப் பதவி கிடைக்குமா? இதையெல்லாம் விட முக்கியமாக கட்சியின் “ப்ரெஸிடெண்ட் ஃபார் லைஃப்” கருணாநிதி விலகி, அப்பொறுப்பிற்கு ஸ்டாலின் வருவாரா? இப்படியெல்லாம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அழகிரியின் இந்த தடாலடியான பதில், ஸ்டாலினை மட்டுமல்லாது, கருணாநிதியையும் கலகலக்கச் செய்திருக்கும். இனிவரும் நிகழ்வுகள் பலநாட்கள் பட்டினி கிடந்தவனுக்கு, கல்யாண போஜனம் கிடைத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கப் போகின்றன.

டவுட்1: இன்று அழகிரி அளித்த பேட்டியில் கலைஞர் வழியில் தான் நடக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கட்சி பதவி வேண்டாம் என்று சொல்லுகிறார்.
டவுட் 2: தமிழ் வருடம் அது இது என்று பேசி, ஏன் ஆங்கில தேதிப்படி கொண்டாடுகிறார்கள் ?
டவுட் 3: ஸ்டாலினுக்கே கட்சியில் இந்த சாதாரண நிலை என்றால் பேராசிரியர் அன்பழகன் என்ன நினைப்பார் ?
டவுட் 4: படத்தில் அண்ணன் கேக் வெட்ட தயாராக இருக்கிறாரா இல்லை .....?

அண்ணனுக்கு சூடா ஒரு கப் ஹார்லிக்ஸ் !

Read More...

The Hindu Vs TOI







எந்த பத்திரிகை நக்கீரன் வெளியிட்ட 'மாமி' செய்தியை ஆங்கிலத்தில் வெளியிட்டது ? ஹி<பிப்><பிப்><பிப்>:)

Read More...

Thursday, January 26, 2012

குடியரசு தின நல்வாழ்த்துகள்

Read More...

Monday, January 23, 2012

BarbarVsBarkha

கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டரில் #Barkhabarks, #BarkhaDutt என்ற Tagல் ஒரு பெரிய யுத்தமே நடந்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் இதை பற்றி எந்த நியூஸ் பேப்பர் டிவியிலும் வரவில்லை. சரி எதிராஜ் தான் சரியான ஆள் அவரிடம் கேட்கலாம் என்று அவரிடம் சாட்டில் பேசினேன். பேசிய பிறகு பார்த்தால் இதுவே மினி கட்டுரையாக எழுதலாம் போல இருக்கு அனுப்புங்க என்றேன். அது கீழே...


இரண்டு நாட்களாக ட்விட்டரில் நடந்து வரும் ஒரு பஞ்சாயத்து பற்றியது இவ்விஷயம். #Barkhabarks, #Barkha Dutt இவ்விரண்டு ஹேஷ் டேக்’களும் இரண்டு நாட்களாக போட்டி போட்டுக் கொண்டு முதலிரண்டு இடங்களில் ட்ரெண்டிக் கொண்டிருக்கின்றன. @Primary_red என்பவர் தனது வலைப்பக்கத்தில், கார்கில் யுத்தக்கள நிலவர செய்தியாக்கத்தில், செய்தியாளர் பர்கா தத், இந்திய வீரர்களின் யுத்த நிலைகளையும், போர்த் தந்திரங்களையும் அவ்வப்போது நேரடி ஒளிபரப்பில் தெரிவித்த்தால்தான் பெருமளவில் இந்திய வீரர்கள், பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் என்று எழுதியிருந்தார். இதனை பிரபல ட்விட்டர் @barbarindian என்பவர் ஆமோதித்து, அதற்கு காரணம் பர்கா என்றும், அதனை ஒரு Manslaughter என்றும் வர்ணித்திருந்தார். இது போன்று ட்விட்டியதற்காக @barbarindian மீது வழக்கு தொடுப்பேன் என்று பர்க்கா ட்வீட்டியிருந்தார்.



இதற்கு பதிலடியாக ட்விட்டரில் @barbarindian னின் ஆதரவாளர்கள் மேற்கூறிய இரண்டு # Tags மூலமாக போர் தொடுத்து, இரண்டு நாட்களாக இவ்விரண்டும் முன்னணியில் இருக்கின்றன. இதுதான் விஷயம். எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என ஸர்வ சுதந்திரங்களுக்கும் உரிமை கொண்டாடும் மீடியாக்கள், தங்களை யாரேனும் விமர்சனம் செய்தால் பொசுக்கென்று கோர்டுக்கு இழுக்கின்றனர். இதே பர்கா தத் ஏற்கனவே ஒருமுறை ஒரு வலைப்பதிவாளரை நீதிமன்றத்திற்கு இழுத்திருக்கிறார். காரணம் இதேதான், மும்பை மற்றும் கார்கில் தாக்குதலின் போது நேரடி கவரேஜ் கொடுத்த்தை விமர்சித்ததற்காக.

2008 மும்பை தாக்குதலின்போது, தாஜ் ஹோட்டல் கடுமையாக தாக்குதலுக்காட்பட்டிருந்த சமயம், தொலைக்காட்சி செய்தியாளர்கள், இந்திய பாதுகாப்புப்படையின் ஒவ்வொரு அசைவையும் நேரடி ஒளிபரப்பில் காண்பித்துக் கொண்டிருந்தனர். ஹோட்டலினுள்ளிருந்த தீவிரவாதிகள் இதனைத் தொலைக்காட்சி மூலம் கண்டு, அதற்கேற்ப வியூகங்களை வகுத்ததால், இந்த தாக்குதல் சுமார் 36 மணிநேரம் வரை நீடித்தது. இம்மாதிரியாக மீடியாக்கள் அடித்த கூத்திற்கு அப்போதே பலத்த கண்டனக்குரல்கள் எழுந்தன. இத்தாக்குதலில் யூதர்கள் சிலர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்த்தோடு மட்டுமல்லாமல், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத், இந்தியா நடத்திய ஆபரேஷனின்போது, அங்கு மீடியாக்களை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமத்தித்திருந்ததற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் நடக்கும் இவ்விஷயம் அவ்வளவாக ஒன்றும் பெரிதில்லை என்ற போதிலும், மீடியாக்கள் தங்கள் பொறுப்புணர்ந்து எதை எப்போது எப்படி கையாள வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். கார்கில் யுத்தமாகட்டும், அல்லது மும்பை தாக்குதலாகட்டும், மீடியாக்கள் செய்தது அட்டூழியம், நிச்சயம் அங்கு நடந்த கொலைகளில் தீவிரவாதிகளுக்கு இணையாக அவர்களுக்கும் பங்குண்டு என்பதை யாராலும் மறுக்க இயலாது. பரபரப்பாக செய்தி தருகிறேன் பேர்வழி என்று இவர்கள் அடித்த கூத்தினால் பல குடும்பங்கள் இன்று தெருவில் நிற்கின்றன. இதை யாரேனும் விமர்சனம் செய்யும்போது, அவர்களை அடக்குவதற்காக சட்டரீதியான நடவடிக்கை என்ற பெயரில் மிரட்டுகிறார்கள்.

பாகிஸ்தானிலுள்ள ஒஸாமாவைத் தீர்த்துக்கட்ட சிஐஏ, பாகிஸ்தானுக்கே தெரியாமல், கச்சிதமாக ஆபரேஷனை நிகழ்த்தி வெற்றி கண்டது. ஆனால் நம்மூரிலோ, கட்டெறும்பை நசுக்கினால் கூட மீடியாவிற்கு எப்படியோ தெரிந்து வந்து விடுகிறார்கள்.

விஷயம் ரொம்ப சிம்பிள், மீடியாக்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்; சரியோ, தவறோ அடுத்தவர்களை விமர்சனம் செய்ய நாம் தயங்காத போது, நம்மீதான விமர்சனங்களையும் அதே போலவே எதிர்கொள்ள வேண்டும்.

மீடியாவிற்கு பரபரப்பு வேண்டும் என்றால் இருக்கவே இருக்கு யானை சிலைகளும் அதற்கு போடும் முக்காடுகளும்.

Read More...

Sunday, January 22, 2012

Angry Salman Rushdie




( படம் உதவி : http://www.techno18.com/2011/05/how-to-play-angry-birds-online-for-free/
)

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே, தன்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் போலீஸார் பொய் சொல்லியுள்ளனர் என்ற குற்றச்சாட்டு பொய்யாக இருந்தால் ராஜஸ்தான் போலீஸார் அவர் மீது வழக்கு தொடர வேண்டும். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள்.

Read More...

Thursday, January 19, 2012

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 19-1-2012

ஹாய் முனி!

பொங்கல் நல்லாக் கொண்டாடினாயா? புத்தகக் கண்காட்சியில் சரக்கு நிறையக் கிடைச்சதா? என்ன புஸ்தகம் படிச்ச இந்த நாலு நாள் லீவுல?

புத்தகக் கண்காட்சியில் மலையாள மனோரமா கடை சம்பந்தமாக பத்ரி பதிவு எழுத, அங்கே ஒரே ரகளை. சாரி ஆர்ப்பாட்டம். அங்கேயும் பின்னூட்டதிலும் ஆர்ப்பாட்டம் செய்த 'தமிழர்கள்' எல்லாம் டேம் 999 என்ற படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்க இறைவனைப் ப்ராத்திக்கிறேன் என்று சொன்ன ஏ.ஆர்.ரஹமான் பற்றி ஒன்றும் பேசவே இல்லை. இதில் என்ன வேடிக்கை என்றால் அவர் பதிவில் பின்னூட்டதிலும் ஃபேஸ் புக்கில் திட்டிய தமிழர்களும் இப்ப தமிழ்நாட்டில் இல்லை, வெளிநாட்டில் இருக்கிறார்கள். அது சரி ரஹ்மான் இந்த படத்தை பற்றி புகழ்ந்து பேச என்ன நிர்ப்பந்தம்? யாருக்காவது தெரியுமா? இல்லை மக்களின் கவனத்தை ஈர்க்க பரபரப்புக்குப் பேசினாரா?

தில்லி பத்திரிகை விழா ஒன்றில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ‘வாசகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பத்திரிகைகள் பரபரப்புக்கு முக்கியத்துவம் தருவதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்,’ என்று அக்கறையுடன் அளித்திருக்கும் ஆலோசனை வரவேற்கத்தக்கது. இந்த ஆலோசனையை முதலில் திக் விஜய் சிங் பேசும் அபத்தங்களிலிர்ந்து ஆரம்பிக்கலாம். ஆனால் அன்னாவைப் பின்னாலிருந்து இயக்குவது ஆர்.எஸ்.எஸ். என்று சொன்ன கருத்து மட்டும் உண்மை என்று நம்பத்தோன்றுகிறது. இல்லை என்றால் ஏன் அவருக்கு காங்கிரஸ் மீது இந்த கொலைவெறி?

ஒய்திஸ் கொலை வெறிடி’ இந்த அளவுக்கு தனக்குப் பேர் சேர்க்கும் என்று தனுஷே நினைத்திருக்கமாட்டார். இப்போது இப்பாடலைக் கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான் தமது ‘வந்தே மாதரம்’ இசை ஆல்பத்துக்காக, தனுஷை பாட வைக்க இருக்கிறார். தனுஷுக்கு முன்பு பாட இருந்தவர் கமல்.

கமல் பற்றி ஒன்று சொன்னால் ரஜினி பற்றி ஒன்று சொல்லியே ஆக வேண்டும் என்ற மரபின் படி ரஜினியின் பஞ்ச்தந்திரம் என்ற காமெடி நிகழ்ச்சியை ராஜ் டிவியில் பார்க்க நேர்ந்தேன். ரஜினியின் எல்லா பஞ்ச் வசனத்துக்கும் தொழிலுக்கும் எப்படி பொருத்திக் கொள்ளலாம் என்று பிதற்றும் நிகழ்ச்சி. கல்லூரி மாணவர்களை வைத்துக்கொண்டு. சோ எழுதிய சாதல் இல்லையேல் காதல் என்ற நாடகத்தில் சண்டே மண்டே கவிதைக்கு விளக்கம் சொல்லுவது போல இருந்த நிகழ்ச்சியில் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் விளக்கம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். மாணவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது +2விற்கு பிறகு என்ன செய்யலாம் என்ற புத்தகத்தில் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என்று இலவச இணைப்பு கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

லேட்டஸ்ட் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு ஆண் என் மனைவிக்கு நல்லா சமைக்க தெரியணும், வீட்டு வேலை செய்யத் தெரியணும் என்று அடுக்கிகொண்டே போனார். சில வாரங்களுக்கு முன் துள்ளுவதோ இளமை படத்தின் நாயகி ஷெரீன் தன் பேட்டியில் என் நாயை நன்றாக கவனித்துக்கொள்பவர்தான் எனக்குக் கணவராக வர முடியும் நான் அவரிடம் வேற எதுவும் எதிர்பார்க்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டுள்ளார். ஆக பெண்கள் வேலைக்காரியாகவும், ஆண்கள் Veterinary டாக்டராகவும் மாறினால் நாட்டில் பல பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன். இவை எல்லாம் உண்மையே என்றாலும் மைக் முன்னாடி சொல்லலாமா ?

துக்ளக் ஆண்டுவிழாவில் சோ கூட தான் பேசினார் ஆனால் மைக் முன்னாடி சில விஷயங்களை அவர் பேசவே இல்லையே! விழாவில் ஹிந்து பத்திரிகையைப் போட்டு சாத்தினார் சோ. சில நாட்களுக்கு முன் தினத்தந்தியில் வந்த தலையங்கத்தை பலர் பார்த்திருக்க மாட்டீர்கள். அது கீழே......

இது நல்ல மாற்றம். ஆனால் பிஜேபியின் மாற்றம் கேவலமானது. பாபுசிங் குஷ்வாஹா என்ற ஊழல் அரசியல்வதியை தங்களுடன் சேர்த்துக்கொண்டு வெட்கம் இல்லாமல் பேட்டிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். லோக்பால் மசோதா பற்றி வாய் கிழியப் பேசுகிறவர்கள், அத்வானி ரத டூர் எல்லாம் டுபாக்கூர் ஆகும் வகையில் இதைச் செய்துள்ளார்கள். ஊழல் புகாரில் சிக்கியவரை ஏன் சேர்த்தார்கள்? இதை பற்றி சோ ஏன் துக்ளக் நிகழ்ச்சியில் வாயே திறக்கவில்லை? எடியூரப்பா கூடத் தப்பித்தார். பாஜக இந்த மாதிரி 'கேடி'களை அழைத்தால் 'மோடி'வித்தைகள் பலிக்காது என்று யாராவது அவர்களுக்குப் புரியவைத்தால் நல்லது. சோ இவர்களை பற்றி பேசாதது மறதி என்று நினைக்கிறேன்.

மறதியினால் ஏற்படும் விபத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் இந்த நியூஸ் கொஞ்சம் வித்தியாசம். திருவனந்தபுரத்தில் இருந்து கோழிக்கூட்டுக்கு செல்ல வேண்டிய விமானத்தைத் தவறுதலாக கொச்சியில் இறக்கிவிட்டுள்ளார் ஒரு பைலட். இந்திய கிரிக்கெட் அணியை ஜிம்பாப்வேவிற்கு பதிலாக ஆஸ்திரேலியாவில் இறக்கிவிட்ட மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

ஆஸ்திரேலியாவுக்கு நல்ல காலம் ஆரம்பம் ஆகி விட்டது போல, சனி பெயர்ந்தவுடன். இந்தியக் கிரிக்கெட் அணியை நிமிர விடாமல் போட்டுக் கும்முகிறார்கள். சச்சினோ, முன்னொரு காலத்தில் கபில்தேவ் அந்த 434-க்கு நாக்குத் தள்ளியதைப் போல, நூறாவது நூறுக்கு முக்குகிறார். முரளிதரன் மாதிரி அடுத்த மேட்ச்தான் கடைசி என்று தைரியமாச் சொல்லி, முரளி 800 விக்கெட்டுகள் எடுத்ததைப் போல, நூறடிச்சுச் சாதனை செய்தால்தான் இது வரை செய்ததெல்லாம் சாதனை என்று சச்சின் ரசிகர்களே குமுறுவதைக் கேட்க முடிகிறது. இது இப்டி இருக்க, இன்று சீனு மாமாவோ கொஞ்சம் லக் இருந்தா இன்றைய இந்திய அணி உலகின் எந்த அணியையும் தோற்கடிக்கும் என்று காமெடியாப் பேசி இருக்காரு. ஒருவேளை பதினெட்டு டிகிரி மெட்ராஸ் குளிரில் உளரறாரோ என்னவோ.

குளிர் காலம் வந்தவுடன், டெல்லியில் அதிக குளிரால் பலர் இறந்து போனார்கள் என்று நியூஸ் போடுவது போல, ஜல்லிக்கட்டுப் போட்டி வேண்டுமா வேண்டாமா என்ற வழக்கு டிசம்பர்-ஜனவரியில் கோர்ட்டுக்கு வந்து ஜல்லிக்கட்டு முடிந்த பின் கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் அடுத்த ஆண்டு கோர்ட்டுக்கு வருவது ஒரு சடங்காகிவிட்டது. இந்த வருஷம் போட்டி ஒருவழியா நடத்தினாங்க, அதை தமிழ்க் குடிதாங்கி டிவில ரொம்ப சந்தோஷமாக் காமிச்சாங்க. ஆங்கில சேனல் ஒன்றில் குஷ்பு, ஹேமாமாலனி இதை பற்றி விவாதித்தார்கள். பகுத்தறிவுப் பாசறையிலிருந்து வரும் குஷ்பு கலைஞரிடம் நல்ல டியூஷன் எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒரே வழ வழ கொழ கொழ.. பாவம் ஒரே கேஸுக்கு பல கோர்ட்டுக்கு அலைந்து நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார்.
( வீடியோ பார்க்க இங்கே செல்லவும் )

அடுத்த நூடுல்ஸ் செய்தி சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவதை ராஜஸ்தான் மாநில மக்கள் விரும்பவில்லை. அவர் வருவாரா என்பது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை' என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கொடுத்த பேட்டி தான். இதே மாதிரி எந்த காங்கிரஸ் முதலமைச்சரும் எம்.எஃப்.ஹூசேனுக்கு பேட்டி கொடுத்ததாக ஞாபகம் இல்லை. சல்மான் ருஷ்டியின் மீது ஷூ வீசினால் அவருக்கு பரிசு வழங்கப்படும் என ஒரு அமைப்பு அறிவித்துள்ளது. இலக்கிய விழா என்றால் இது கூட இல்லாமல் எப்படி ?



வடக்கிலிருந்து தமிழ் இலக்கியத்துக்கு வரலாம் சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருது பற்றி உயிர்மையில் வந்த தலையங்கம். இரண்டு விதமான வயிற்றெரிச்சல் நம் தமிழ் இலக்கியவட்டதில் இருக்கிறது என்று தெரிகிறது. ஒன்று இள‌ம் வயதில் சாகித்ய அகாதமி விருதை எப்படி ஒருவருக்கு கொடுக்கலாம். இரண்டாவது ஒரே நாவல் எழுதிய படைப்பாளிக்கு எப்படி விருது கொடுக்கலாம் என்கிற கேள்வி. இப்ப சிவாஜிக்கு தேசிய விருது கிடைக்கவில்லை, ஆனால் தனுஷுக்கு கிடைக்கிறது உடனே சிவாஜிக்குக் கோபம் வரலாமா? ஆனால் இலக்கிய வட்டத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிக்கு போன்ற ஓவர் ஆக்டிங் நடிகர்களுக்குக் கோபம் வருகிறது. இலக்கிய பஜனோஸ்தவம் நடத்தும் ஒரு பழம் பெரும் தமிழ் இலக்கிய நடிகர் இந்த புத்தகம் ஆயிரம் பக்க அபத்தம் என்று விமர்சனம் எழுதியது நினைவிருக்கும். விளாசுவதற்காகவே முழு விஜய் படத்தையும் இட்லிவடை முதல் நாள் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவதை போல எழுதியுள்ளார். முருகனிடம் சொல்லி இவருக்கு அரை டஜன் டைஜின் கொடுக்க சொல்லணும். அவரிடம்தான் நிறைய ஸ்டாக் இருக்கும். கஷ்ட காலம்!

கஷ்ட காலத்தில் எல்லாம் அவரோடு குடும்பம் நடத்திவிட்டு, 'எனக்கு எல்லாமே என் உடன்பிறவா தோழிதான்’ என்று கூறிவிட்டு வாழ்வு வந்ததும் விரட்டியடிக்கும் சுயநலமி, நான் அல்ல என்று கலைஞர் ஜெ-சசிகலா பற்றி கூறியிருக்கார். அவருக்கு இந்த வயசிலும் `லொள்ளு ஜாஸ்தி.

நடிகர் மன்சூர் அலிகான், `லொள்ளு தாதா பராக் பராக்' என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். சும்மா இல்லாமல் மன்சூர் அலிகான், எருமை மாடு மீது ஊர்வலமாக வருவதுபோல் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர்களின் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. கூட்டத்தைப் பார்த்து எருமை மாடு மிரண்டு ஓடியதால், கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்டார். லொள்ளு பேசி பின்பு தன் கையையும் மற்றவர்கள் 'கை'யும் உடைத்துக்கொள்வது இவர்களுக்கு வாடிக்கை தானே!


வாடிக்கையாக போகும் புத்தகக் கண்காட்சியில் ஒருவர் "சார் நல்ல தமிழ் புத்தகத்துக்கும் டைனோசருக்கும் என்ன ஒற்றுமை?" என்று கேள்வி கேட்டார். நான் தெரியாது என்று முழித்தேன். அதற்கு அவர் சொன்ன பதில் "ரெண்டுமே இப்போ இல்லை, பல வருஷத்துக்கு முன்னாடியே அழிஞ்சாச்சு" என்றார் வாஸ்துவம் தானே !


இப்படிக்கு,
இட்லிவடை

கடைசியாக ஒரு கேள்வி: இளையராஜா நிகழ்ச்சியில் மனோ ஏன் பாடவில்லை ?

Read More...

சிக்கலில் சிதம்பரம்


ரீஸண்டாக நடந்த சனி பெயர்ச்சியில், சனி பகவானின் உக்கிரப் பார்வை அதிகமாகத் தாக்கியிருப்பது மத்திய உள்துறையமைச்சர் ப.சிதம்பரத்தைத்தான் போலும். ஏற்கனவே அலைக்கற்றை வழக்கில் சுப்ரமணிய ஸ்வாமி ரூபத்தில் சனி பகவான் சிதம்பரத்தை சின்னா பின்னப்படுத்திக் கொண்டிருக்கிறார். எந்த நேரத்திலும் தலைக்கு மேல் தொங்கு கத்தி அறுந்து விழலாம் என்ற நிலை. இப்பொழுது இது போறாதென்று இன்னொரு பக்கமிருந்தும் புதிதாக சிக்கல் ஒன்று திக்விஜய் சிங் ரூபத்தில் கிளம்பியிருக்கிறது.

உத்திரப் பிரதேத்தில் எதிர்வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக உத்திரப் பிரதேச மாநிலம் ஆஸம்கார்க் பகுதியில் ராகுல் காந்தியும், திக்விஜய் சிங்கும் தீவிரமான பிரசாரத்தில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். இந்த ஆஸம்கார்க் பகுதி உத்திரப் பிரதேசத்திலேயே சற்று உக்கிரமான பிரதேசம். இது பற்றி ஏற்கனவே இட்லிவடையில் பார்த்துள்ளோம், தெரியாதவர்கள் இங்கு http://idlyvadai.blogspot.com/2010/03/blog-post_29.html தெரிந்து கொள்ளலாம். இங்கு நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய திக்விஜய் சிங், 2008, செப்டம்பர் 19 ஆம் தேதி தில்லி பாட்லா ஹவுசில் நடைபெற்ற என்கவுண்டர் போலியானது என்றும், இது பற்றி மறுவிசாரணை செய்ய வேண்டுமென்று நான் பிரதமரிடமும், உள்துறையமைச்சர் சிதம்பரத்திடமும் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை என்றும் பேசினார்.



முன்னதாக, 2008 செப்டம்பர் 13 ஆம் தேதி தில்லியில் ஐந்து தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் சுமார் 35 பேர் கொல்லப்பட்டனர். இது இந்தியன் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பினுடைய சதி என்று தெரியவந்தது. இந்த அமைப்பின் தீவிரவாதிகளில் பெரும்பாலானோர் ஆஸம்கார்க்கைச் சார்ந்தவர்கள்; தவிர இந்த தீவிரவாத சம்பவத்தின் மூளையாக தெரிவு செய்யப்பட்ட அட்டிஃப் அமீன் என்பவரும் ஆஸம்கார்கைச் சேர்ந்தவர், பல தீவிரவாத சம்பவங்களின் பின்னணியில் இருந்து செயல்பட்டவர் என்று போலீஸாரால் தேடப்படுபவர். அவரும், மேற்கூறிய சம்பவத்தில் தொடர்புடைய இன்னும் நால்வரும் தில்லியின் ஜாமியா நகர் பகுதியிலுள்ள “பாட்லா ஹவுஸ்” எனும் அடுக்குமாடிக் குடியிருப்பில் பதுங்கியிருப்பதாக தில்லி போலீஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, மோகன் ஷர்மா என்ற தில்லி போலீஸின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தலைமையிலான குழு ஒன்று அந்த இடத்தை முற்றுகையிட்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அட்டிஃப் அமீன் உட்பட இருவர் கொல்லப்பட்டனர், வேறு இருவர் கைது செய்யப்பட, ஒருவர் தப்பியோடிவிட்டார். இந்த என்கவுண்டரில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் மோகன் ஷர்மா தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டார்.



இச்சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜும் பாராளுமன்றத்தில் நீதி விசாரணை கோரின. பிறகு ஒரு NGO, தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்ய, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை ஆய்வு செய்த மனித உரிமை ஆணையமும், இந்த என்கவுண்டர் போலியானதல்ல என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, NGO வின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, பைசல் செய்யப்பட்டது.



இப்போது இந்த விவகாரத்தைத்தான் திக்விஜய சிங் கையிலெடுத்துள்ளார். உள்துறையமைச்சர் சிதம்பரத்தையும் சந்திக்கிழுக்கிறார். திக்விஜய் சிங்கிற்கும், சிதம்பரத்திற்குமுண்டான புகைச்சல்கள் ஏற்கனவே காங்கிரஸில் பிரசித்தம். சிதம்பரம் ஒரு “இண்டெலெக்சுவல் அரோகண்ட்” என்று சில வருடங்களுக்கு முன்னர் ஒரு டெலிவிஷன் பேட்டியில் திக்விஜய் சிங் குறிப்பிடப் போக அது சர்ச்சைக்குள்ளானது. பிறகு மேலிடத் தலையீட்டின் பேரில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டது. இப்பொழுது திக்விஜய் சிங்கின் பேச்சைக் கையிலெடுத்துக் கொண்டு பாஜகவும், இந்த என்கவுண்டர் வழக்கில் மறு விசாரணை வேண்டுமென்று கோருகிறது.



நேற்று பேட்டியளித்த உள்துறையமைச்சர் சிதம்பரம் இதனை முற்றாக மறுத்துள்ளார். தாம் ஏற்கனவே இச்சம்பவம் குறித்து ஆய்வு செய்து விட்டதாகவும், இது போலியல்ல எனவும், இதில் மறுவிசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.



இப்பொழுது கேள்வி என்னவெனில், ராகுல்காந்தி இருந்த மேடையில், திக்விஜய சிங், பகிரங்கமாக ப.சிதம்பரத்தை வம்பிற்கிழுக்க வேண்டிய அவசியம் என்ன? ஆஸம்கார்க் தீவிரவாதிகளின் நதிமூலம்; திக்விஜய் சிங் அவர்களுக்கெல்லாம் ஆதரவாளர்; சிறுபான்மையினர் வீட்டில் எலி செத்தால் கூட ஆர்.எஸ்.எஸ்தான் காரணம் என்று கூறும் திக்விஜய் சிங், இச்சம்பவத்தில் குறிப்பாக சிதம்பரத்தை வம்பிழுக்கும் நோக்கம்? காரணங்கள் இரண்டு இருக்கலாம் என்பது யூகம். ஒன்று, உத்திரப் பிரதேசத்தை ஐந்தாண்டுகள் எங்கள் கையில் கொடுங்கள், ஊழலை ஒழித்துக் கட்டுகிறோம் என்று ராகுல் காந்தி கங்கணம் கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்கிறார். உங்கள் கட்சியிலேயே ஊழல்கார்ர்கள் இருக்கிறார்களே என்பது பாஜக, பகுஜன் சமாஜ் உட்பட அனைத்து கட்சிகளின் பதிலடி. இப்பொழுது பிரதானமாக ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள காங்கிரஸ் பிரபலம் ப.சிதம்பரம். அலைக்கற்றை வழக்கில் சிக்கிக் கொண்டு காங்கிரஸுக்கு தர்ம சங்கடத்தை விளைவித்து வருகிறார். தவிர சிவகங்கை தேர்தல் வெற்றி குறித்த வழக்கும் இவர்மேல் இருக்கிறது. ஆகவே சிதம்பரத்தை ஓரங்கட்டுவதன் மூலம் தாங்கள் ஊழலுக்கெதிரானவர்கள் என பெயர் பெறலாம் என்பது ஒரு நோக்கமாக இருக்கலாம். இரண்டாவது, அடுத்த பிரதமர் யார் என்பது என்ற போட்டியில் பதவிக்கான குடும்பத்தின் சட்டபூர்வ வாரிசு ராகுல் நீங்கலாக, மூத்தவர் பிரணாப் மற்றும் சிதம்பரம் ஆகிய இருவரும் உள்ளனர். இதில் இப்போது அதிக சங்கடம் தோற்றுவிப்பவர் சிதம்பரம்தான், எனவே அவரை முதலில் ஏறக்கட்டுவது என திக்விஜய் சிங் மூலம் காங்கிரஸ் காய் நகர்த்துகிறது என்று எண்ணமிட வழியிருக்கிறது.



இவ்விரண்டு நாட்களாக நடைபெற்று வருகிற இந்த சர்ச்சைகள் தொடர்பாக ராகுல், சோனியா ஆகிய இருவரும் இதுவரை மூச்சு விடவில்லை என்பதுவும், திக்விஜய் சிங் பேச்சிற்கு மேலிட ஆதரவு இருக்குமோ என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கிறது. திக்விஜய் சிங் பேசி முடித்தவுடன் பேசிய ராகுல் காந்தியும் இது குறித்து எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி காங்கிரஸ் மேலிடம் ஏன் இன்னும் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை என பாஜகவும் கேள்வியெழுப்பியுள்ளது. இதிலும் காங்கிரஸுக்கு தர்மசங்கடம்தான். மேலிடம் திக்விஜய் சிங்கிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால், சிதம்பரத்தின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்; திக்விஜய் சிங்கைக் கண்டித்தால் மைனாரிட்டி ஓட்டுகள் பறிபோகும் வாய்ப்பும் இருக்கிறது. இதுமாதிரியான ஒரு சந்தர்ப்பத்தைத்தான் பகுஜன் சமாஜும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. எனவே, மெளனம் சர்வார்த்த சாதகம் என்பதுதான் இவ்விஷயத்தில் காங்கிரஸின் நிலைபாடு.



இதில் மற்றொரு அபாயகரமான அம்சம் என்னவெனில், ஆட்சியைப் பிடிப்பதற்காக, காங்கிரஸ் எவ்வளவு கீழ்த்தரமான வேலையையும் முனைந்து செய்யும் என்பதற்கு இந்த பேச்சு மற்றுமொரு உதாரணம். தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று ஒருபுறம் பிரசாரம் செய்து கொண்டே, இன்னொருபுறம் தீவிரவாதிகளின் பிறப்பிடத்திற்குச் சென்று அவர்களுக்கு ஆதரவாக, ஏற்கனவே ஊத்தி மூடப்பட்ட ஒரு வழக்கில், தீவிரவாதிகளுக்கு ஆதரவான வகையில் மறுவிசாரணை கோருவது பச்சை தேசத் துரோகம். இதே துரோகத்திற்கு பாஜகவும் துணை போவது பச்சை சந்தர்ப்பவாத அரசியல்.



தீவிரவாதமும், அதனை ஊக்குவிக்கும் தீவிரவாதிகளையும் என்ன விலை கொடுத்தேனும் ஒழித்துக் கட்ட வேண்டும். அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள், அவர்கள் எவ்வகையில் கொல்லப்பட்டாலும் அது நியாயமே! ஓட்டிற்காக இதுபோன்று தீவிரவாதத்திற்கு ஆதரவாகப் பேசுவது தேசத்திற்கு நல்லதல்ல. இத்தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்படுவதே தேசத்திற்கு நன்மை பயக்கும்.

- எதிராஜ்

Read More...

Wednesday, January 18, 2012

துக்ளக் 42 ஆம் ஆண்டு விழா விடியோ

ஜெயா டிவியில் ஒளிபரப்பியது. TechSatish வழியாக இங்கே...






Read More...

மா(டு)யா(னை)வதி போட்டி முடிவுகள்



மேலே உள்ள படத்துக்கு நல்ல கமெண்டுக்கு பரிசு என்ற பதிவை போன வாரம் போட்டிருந்தேன்.

ஒருவருக்கு தான் பரிசு என்றாலும், பலர் நல்ல கமெண்ட் கொடுத்திருந்தார்கள். பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கமெண்ட் கீழே

1. மாட்டுக்கு யானை வேஷம் போட்டாலும், அது 'மா... மா...' னுதான் கத்தும்.. ஏன்னா.. எல்லாமே 'மாயா'தான, இந்த பாடா'வதி' உலகத்துல. - Madhavan Srinivasagopalan

2. இது யானைதானுங்க. மன்மோகன் சிங் ஆட்சியில எருமையா இளைச்சுப் போச்சுங்க. - kg gouthaman


2. தப்பி தவறி மாயாவதி கண்ணுல பட்டுட போகுது, பாவம் மாடுங்க.
அப்புறம் எல்லா மாட்டுக்கும் இந்த மாதிரி பண்ண சொல்லி சட்டம் போட்டுடுவாங்க கோடி கணக்குல செலவாகும் - Prabu

இவர்கள் மூவருக்கும் புத்தகம் பரிசாக அனுப்பிவைக்கப்படும்.
( மாதவன், கௌத்தமன், பிரபு எனக்கு உங்கள் முகவரியை idlyvadai2007@gmail.com என்ற முவரிக்கு அனுப்புங்கள். நன்றி )

கலந்துக்கொண்ட் அனைவருக்கும் வாழ்த்துகள் !

அடுத்த போட்டி விரைவில்...

Read More...

Monday, January 16, 2012

அல்வா - அருவா - சுபத்ரா(லே)

“நீங்க எந்த ஊரு?” யாரோ.
“திருநெல்வேலி” இது நான்.
“ஓ... தின்னவேலியா? (நக்கலாக) சரி சரி”
“இல்ல, திருநெல்வேலி” எரிச்சலுடன் நான்.
“நானும் அதைத் தான் சொன்னேன்.. தின்னேலினு தானே சொல்வீங்க?” இன்னும் சிரிப்புடன்.
“தின்ன எலியுங் கிடையாது.. திங்காத எலியுங் கிடையாது...எங்க ஊரு பேரு திருநெல்வேலி!” (ஹ்ம்க்கும்)

ஒரு தடவ ரெண்டு தடவயில்ல.. நெறைய தடவ இது நடந்துருக்கு. அது ஏன்னே தெரியல. திருநெல்வேலின்னாவே எல்லாருக்கும் எங்கயிருந்து தான் வருதோ ஒரு நக்கல் தெரியல. ஊருக்குள்ளயே இருந்தவரைக்கும் ஒன்னுமே தெரியாது. டிவியில விவேக்கு பேசுனாலும் வடிவேலு பேசுனாலும் விஜய் பேசுனாலும் விக்ரம் பேசுனாலும் வேற யாரு பேசுனாலும் ஜோக்கோடு ஜோக்கா பார்த்துச் சிரிச்சிக்குவோம். ஆனா பன்னெண்டாப்பு முடிச்சிக் காலேஜில சேரனும்னு வெளியூருக்குப் போவும்போது தான் தெரியும்.. நம்மளும் நம்ம ஊரும் எப்படியெல்லாம் அல்லோல கல்லோலப் படுதோம்னு. ஏன் அப்படிப் பண்ணுதாங்கன்னு நமக்கே வெளங்காது. என்ன பேச்சிப் பேசுனாலும் சிரிப்பு தான். பெறவு வேற வழியில்லாம நாம ‘அல்வா’, ‘அருவா’ன்னு செல்லமாப் பேசுனாத் தான் அமைதியாப் போவாங்க.

சென்னை, கோவை, மதுரைன்னா கூட பரவால்ல அவங்கவங்களுக்குத் தனித்தனியா பாசையிருக்கும். ஆனா இந்தத் திருச்சி, தஞ்சாவூர்க்காரங்க இருக்காங்களே.. அடடடடா.. உலகத்துலயே நாங்க ஒருத்தங்க தான் கலப்படமில்லாத தூயதமிழ் பேசுதோம்னு ஒரே பெரும பீத்திக்குவாங்க. சரி போனாப் போவுதுனு உட்டுக்குடுக்குறதுக்கு நமக்கு மனசு வராது. “என்னயிருந்தாலும் எங்க ஊரு தமிழ்தான் அழகாயிருக்கும் அம்சமாயிருக்கும்”னு என்னத்தையாவது சொல்லிட்டு ஆஸ்டல் ரூமுக்குள்ள போயி அன்னைக்கே ஒரு முடிவு எடுப்போம். இனிமே நாமளும் இவங்க பேசுதத மாரியே பேசனும்னு. அங்கயே முடிஞ்சிபோவுது திருநெல்வேலி பாசையெல்லாம்! பெறவு லீவுக்கு ஊருக்கு வந்தாக் கூட அம்மாவோ ஆச்சியோ எப்பவும் போலப் பேசயில “ஏன் இப்படிப் பேசுதாங்க”னு வித்தியாசமா நெனைக்கும் இந்தக் கூறுகெட்ட மனசு. ஆனா நாலு வார்த்த பேசுறதுக்குள்ள நாமளும் ஒன்னுக்குள்ள ஒன்னா அயிக்கியமாயிருவோங்கது வேற கத.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஃப்ரெண்ட் கூடச் சேர்ந்து ‘ஒஸ்தி’ படத்துக்குப் போனேன். “ஏ... உங்க ஊரு பாஷை தான் டீ”னு அவ சாதாரணமாச் சொன்னாக்கூட நக்கலாத் தான் தெரிஞ்சிச்சி எனக்கு. ஒன்னுஞ் சொல்லாம படத்தப் பார்க்க ஆரம்பிச்சேன். காக்கிச் சட்டயில கதாநாயகன் பேசுதது கூடப் பரவால்ல. ஆனா சீரியஸான காட்சியில வில்லனும் திருநெல்வேலி பாசய பேசுதத மாரி காட்டும் போது தேட்டர் முழுசும் சிரிப்பாச் சிரிச்சிச்சே.. கடவுளே.. அதென்னமோ தெரியல.. டயலாக் ரைட்டருக்குக் கூட திருநெல்வெலின்னவொடனே காமெடி(மாரி) டயலாக் எழுதத்தான் கைவரும் போல. எப்பிடியும் போங்க..

சரி நமக்குத் தான் இந்தக்கதன்னா ஊருக்குள்ளப் போயி பார்ப்போம்னு பார்த்தா, பள்ளிக்கூடத்துல கூட பிள்ளைங்க எல்லாம் திருநெல்வேலி ஸ்லாங்குல பேச மாட்டேங்குதுங்க. “ஏல.. வால.. போல”ன்னு பேசிட்டிருந்தது எல்லாம் “ஏடா.. வாடா.. போடா”ன்னு ஆயிட்டு. “ஏபிள்ள வாபிள்ள”ன்னு பேசுனதுங்க எல்லாம் “ஏடி.. வாடி.. போடி”ன்னு தான் பேசுதாங்க.

பொங்கல் சமயத்துல காய்கறி வாங்கனும்னு வண்டிய உட்டுட்டு மினிபஸ் புடிச்சி மார்க்கெட்டுக்குப் போயி நிக்கும் போது அங்குன கூட்டம் நம்மள நவுலவுடாது. கரும்பு, காய், மஞ்சளுனு மூட்ட மூட்டையாத் தூக்கிட்டுப் போற கிராமத்து ஆளுங்க பேசுவாங்கப் பாருங்க.. “ஏல.. அங்குன சீட்டப் போடு.. இங்குன எடத்தப்புடி.. இத ஒருகையி தூக்கிவுடு.. ஆ.. அம்புட்டுத்தான்” “காருக்கு(பஸ் தான்) ருவா எடுத்துவையி..” “என்னது டிக்கெட்டு ஏழாருவாய்யா? என்னத்த தான் அலுவசமா பஸ்ஸு ஓட்டுதானோ தெரியல.. நாய்வெல பேய்வெல சொல்லுதான்.. காரவுட்டுட்டு நடந்துதான் போவனும்பொலுக்க”னு நம்ம ஊரு மக்கள் பேசுற பேச்ச வீட்டுக்குத் திரும்பிவராம கூட கேட்டுகிட்டேயிருக்கலாம். ஆனா என்ன, வீட்டுக்கு வாறதுக்கு முன்னாடியே யாராது “உங்க மவள மார்க்கெட்டுல பார்த்தேன். அந்தக் கரும்புச்சாறு கடைக்கு முன்னாடி நின்னுகிட்டு போற வாறவகுள எல்லாம் வாய்ப்பார்த்துகிட்டு நின்னா”ன்னு போட்டுக்குடுத்துருப்பாங்க.

வீட்டுக்கு வந்து வலது கால உள்ளயெடுத்து வைக்கதுக்குள்ள “உனக்கெல்லாம் அறிவியே கெடையாது.. ஒரு கூறுவாடு கெடையாது.. எதுத்தவீட்டுப் பிள்ள (போட்டுக்குடுத்தவங்களோட மக) எப்படிக் கட்டும் செட்டுமாயிருக்கு?”ன்னு அம்மா ஏசும்போது நம்மளே கெஸ் பண்ணிகிடவேண்டியது தான். ஒடனே நாமளும் “நான் டென்த்துல டிஸ்ட்ரிக்ட் ஃபோர்த் எடுத்தேன். அவ எடுத்தாளா? நான் காலேஜுல இத்தன கப் வாங்கிருக்கேன். அவ என்னத்த வாங்கிருக்கா?”ன்னு கேப்போம். “ஆமா.. ஒலகத்துல இல்லாத சாதன படச்சிருக்கா.. ஏட்டுச் சொரைக்கா கறிக்கு ஒதவாது.. வாழ்க்கைக்கி எது ஒதவுதுனு பாரு.. அந்தக் கப்பையெல்லாம் தூக்கிக் குப்பையில போடு”னு ஒரு சொலவடையச் சேர்த்துச் சொல்லும்போது “ச்ச்ச..” அப்படின்னு இருக்கும். அதெல்லாம் தனிக்கத...

சமீபத்துலஃபேஸ்புக்குல திருநெல்வேலியோட புராதான போட்டோஸ் நெறைய ஷேர் பண்ணியிருந்தேன். ஒடனே ஒரு பிரபல எழுத்தாளர் வந்து, “திருநெல்வேலிக்கு இலக்கிய உலகத்துல முக்கிய பங்கு இருக்கு.. புபி” அப்படின்னு ஒரு காமெண்ட் போட்டிருந்தார். பெறவு தான் யோசிச்சுப் பார்த்தேன்.. புதுமைப்பித்தன்ல இருந்து சாகித்ய அகாதமி விருது வாங்குன தி.க.சிவசங்கரன், தொ.மு.சி ரகுநாதன், வல்லிக்கண்ணன், ரா.பி. சேதுப்பிள்ளை, வண்ணநிலவன், வண்ணதாசன்னு, சுகா.. எத்தன எழுத்தாளர்கள் பொறந்திருக்காங்க.. சாதனையாளர்கள் வாழ்ந்துருக்காங்க.. நம்ம பாளையங்கோட்டைய ‘ஆக்ஸ்ஃபோர்ட் ஆஃப் சவுத் இண்டியா’னுலாச் சொல்லுதாங்க.. நம்ம பேரும் ஒருகாலத்துல இந்தமாரி லிஸ்ட்டுல எல்லாம் வரனூனு நெனைச்சு மனச ஆறுதல்படுத்திக்கிட வேண்டியதுதான்.

‘காணி நிலம் வேண்டும் பராசக்தி’னு பாடுன பாரதியார மாரி என்னையப் பாடவுட்டாங்கன்னா, ‘அந்தக் காணிநெலமும் திருநெல்வேலில ஒரு கிராமத்துல வேணும்..’ ‘சீக்கிரமா குஜராத்த உட்டுட்டுத் திருநெல்வேலிக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிகிட்டுப் போவனும்’ ‘எங்க அம்மா அப்பா திருநெல்வேலிலயே எனக்குவொரு 'ஒஸ்தியான' பையனைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிவைக்கனும்’னு வேண்டிக்கிடுவேன் ;-)

படிக்கிறவுக உங்க மனசுக்குள்ள இப்பம் என்ன விசயம் ஓடுதுன்னு எனக்குத் தெரிஞ்சிப் போச்சி.. நான் சொல்லுதேன் கேளுங்க.. இந்த இட்லிவடையைப் பாத்தா திருநெல்வேலிக்காரர் மாரிலாம் தெரியல.. வெறும் எலைய போட்டுப் பேருக்கு ரெண்டுமூனு இட்லியையும் வடையையும் மட்டும்தான் வச்சிருக்காரு.. நாங்க எங்க ஊருல சட்னியும் சாம்பாரும் தொட்டுக்கூடு சேத்துத் தான் சாப்புடுவோம் :-)

பின்குறிப்பு : என்னமோ இவ்வளவு நாளா குஜராத் குஜராத்துனு பேசுன இந்தப்பிள்ள இன்னைக்குத் திருநெல்வேலி திருநெல்வேலினு பேசுதே.. என்னலேன்னு யோசிக்காதீய. திருநெல்வேலி உட்பட இந்தியா ஃபுல்லா குஜராத் மாரியே ஆட்சி வரப்போவுதுலே அதான் ;-)

Read More...

புத்தகக் கண்காட்சி புதிர்

நேற்று புத்தகக் கண்காட்சியில் பிரபல எழுத்தாளர் ஒருவர் 7வது வழி ஸ்டாலில் பேசியது.

"தற்போது புத்தகக் கண்காட்சியில் தங்களை எம்.ஜி.ஆர், சிவாஜி ஜெமினி கணேசன் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் மூன்று எழுத்தாளர்களை பற்றி குறிப்பிட்டார். கூட இருந்தவர்கள் புரிந்துக்கொண்டு சிரித்தார்கள்...

ஒன்றும் தெரியாத அப்பாவியாக "சார் அவர்கள் யார் என்று சொல்லிவிடுங்கள் இல்லை என்றால் என் மண்டை வெடித்துவிடும்" என்றேன்.

அவர் சொன்ன விடை -
எம்.ஜி.ஆர் -
சிவாஜி -
ஜெமினி -
யார் என்று நீங்களே கண்டுபிடித்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.... சரியான பின்னூட்டம் பிரசுரம் ஆகாது :-)


பிகு: போன யானை புதிருக்கு பரிசு இன்னும் சில நாட்களில்...

Read More...

Sunday, January 15, 2012

42 துக்ளக் ஆண்டு விழா ஒலிப்பதிவு

துக்ளக் 42 ஆம் ஆண்டு விழா ஒலிப் பகுதிகளை அப்லோட் செய்துள்ளேன்.

1. வாசகர் கேள்விகள், சோ பதில்


2. சோ உரை


3. அத்வானி உரை


4. நரேந்திர மோடி உரை



5. மீண்டும் சோ உரை


டெய்ல் பீஸ்

அத்வானி, நரேந்திர மோடி வந்ததால் சோவிற்கு அவ்வளவாக பேச அவகாசம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ( கனிமொழி, அழகிரி, விஜயகாந்த், சசிகலா போன்ற பெயர்களை குறிப்பிடவில்லை என்றால் பாத்துக்கொள்ளுங்களேன்!). அடுத்த ஆண்டு யாராவது ஒருவரை கூப்பிட்டால் நல்லது என்று தோன்றுகிறது.

கூட்டம் முடிந்து எல்லோரும் வெளியே வரும் போது சென்னை காவல்துறை வயதானவர்களையும், பெண்களையும் பாதுகாப்பாக கையை பிடித்து படிகளில் ஏற்றிவிட்டார்கள். பெண் காவல்த்துறையினர் பொறுமையாக எல்லோருக்கும் "சார் அங்கே படி இருக்கு பாத்து போங்க" என்று எல்லோருக்கும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

பலர் போலீஸுக்கு "ரொம்ப நன்றி" "வெல் டன், கிரேட் ஜாப்" என்று சொல்லிவிட்டு போவதை பார்க்க முடிந்தது. "போலீஸ் உங்கள் நண்பன்" என்பதை நேற்று நிஜமாகவே நிருபித்தார்கள். ஹாட்ஸ் ஆப்!


ஆடியோ தரம் சுமார் தான், Audacity Software கொண்டு கேட்டால் நன்றாக இருக்கிறது. ஆடியோவை எடிட் செய்யாமல் முழுமையாக கொடுத்திருக்கிறேன், சில இடங்களில் என் பேச்சு கூட கேட்கும், கண்டுக்காதீங்க ;-)


எல்லோருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் !

Read More...

Saturday, January 14, 2012

துக்ளக் 42 - LIVE

துக்ளக் 42-ஆம் ஆண்டு நிறைவு விழா. நேரடியாகக் கவர் செய்வதில் இட்லிவடைக்கு மகிழ்ச்சி.


மாலை ஆறரை மணிக்குக் கூட்டம் ஆரம்பம். இப்போதே
களை கட்டத் தொடங்கி இருக்கிறது. அரங்கில் அல்ரெடி பாதிக்கு மேல் மக்கள். தண்ணீர் பாட்டில், செய்தித் தாள்கள் அனுமதி இல்லை. Even கீதை போன்ற புஸ்தகங்கள் கூட உள்ளே அனுமதிக்கப் படவில்லை.

மேடையில் நான்கு சேர்கள். அத்வானி, மோதி, சோ மற்றும் மற்றொருவர். நான்காமவர் யார் என்ற டிபேட் ஓடுகிறது. ரஜினியோ என்று நிறையப் பேச்சு அடிபடுகிறது.


நிறைய போலிஸ். கடுமையான பாதுகாப்
பு சோதனை, அத்வானி வருவதால். நிறையப் பெண்கள் கூட்டம். ஒரு குழந்தை லாலிபாப் சாப்டுகிறது, போலிஸ் அனுமதியுடன். போலிசார் காமெராவில் படம் பிடிக்கிறார்கள். இங்கே போடப்படும் படங்கள் அவர்கள் எடுத்தது அல்ல.

சிலர் தூங்கி வழிகிறார்கள். எப்போ வ
ந்து சீட் பிடித்தார்களோ பாவம். மைக் டெஸ்டிங் செய்து அவர்களை டிஸ்டர்ப் செய்கிறார்கள். சரி. நானும் ஒரு குட்டித் தூக்கம் போட்டு வந்து தொடர்கிறேன். :-)

இரண்டே முக்கால் மணி நிலவரப் படங்கள் இரண்டு, அரங்கின் வாயிலில் மற்றும் உள்ளே இருந்து.













நாலு மணி நிலவரம்:

கிட்டத்தட்ட அரங்கம் நிரம்பி விட்டது என்றே சொல்லணும். இப்போது அரங்கின் இரு புறமும் குடி தண்ணீர் வசதிசெய்து விட்டார்கள். உள்ளே விற்கப்படும் அலையன்ஸ் புஸ்தகங்கள் மட்டும் போலிசால் அனுமதிக்கப் படுகிறது. போலீசிடம் கேட்டால், இந்தப் புஸ்தகங்களை யாரும் தூக்கி எறிய மாட்டார்கள் என்று சொல்கின்றனர். அலயன்சை தூக்கி எறியலாம், புஸ்தகங்களை எறிய மாட்டார்களோ என்னவோ!



ஒரு காராச்சேவு மற்றும் மிச்சர் சாப்
டும் மக்களாக இருக்கிறார்கள். ஒருவேளை ஐயங்கார் மற்றும் ஐயரா இருப்பார்கள் என்று நினைக்கிறேன். உள்ளே ஒரு புறா பறக்கிறது. இது பிஜேபி-அதிமுக சமாதானப் புறாவாக இருக்குமோ?

யாரோ ஒருவர் வாசகர் கேள்விகளை கேட்டு எழுதிக் கொண்டு இருக்கிறார். நானும் ஒன்று கேட்டேன். செலெக்ட் ஆகுமா ஆகாதா என்று தெரியாது.

கேள்வி : போன ஆட்சியில் ஒரே பாராட்டு விழா, இந்த ஆட்சியில் ஒரே பதவி ஏற்பு விழா, சோவின் கருத்து என்ன? :-)


அரங்கம் நிரம்பி விட்டது. இரு புறமும் எல்சிடி ஸ்க்ரீன்கள். நல்ல அரேஞ்ச்மென்ட். அரங்க
ம் நிரம்பி இருந்தாலும் போன முறைகளைப் போல முண்டி அடிக்கும் கூட்டம் இல்லை. மூன்று காரணங்கள் இருக்கலாம் : 1) வந்தாலும் இடம் கிடைக்காதோ என்று (2) வள்ளுவர் கோட்டம் என்பதால் வேண்டாம் என்று (3) எப்படி இருந்தாலும் இட்லிவடையில் லைவ் பார்த்துக் கொள்ளலாம் என்று!


சரி. போய் சமோசாவும் பிஸ்கட்டும் சாப்டுட்டு வரேன். நாலு மணிக்கு அரங்கத்தில் போட்டோ.











ஐந்து மணி நிலவரம்:
கரண்ட் போய் விட்டது. ஆனால்
ஸ்பீக்கர்கள் மட்டும் வேலை செய்கின்றன. சோவின் பக்தி மார்க்கம் ஓடுகிறது. கிட்டத்தட்ட எல்லாரும் இப்போ ஸ்நாக்ஸ் சாப்டும் மூடில் இருக்கிறார்கள்.


வழக்கமான பேக் டிராப் பேனர் இந்த முறை மிஸ்ஸிங். பக்கத்தில் ஒருவர் "சோ சார் கனிமொழி பற்றிப் பேசுவாரா என்று அக்கறையாக் கேக்கறார்". பாவம், அவர் கவலை அவருக்கு. ஒரு வேளை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பிரதமர் மோதியா அல்லது அத்வானியா என்ற கேள்விக்கும் சோ பதில் சொல்வாரா என்ற டிஸ்கஷனும் நடக்கிறது. அரங்கில் யாரும் சோவின் கீதா கேட்பதாக இல்லை. எல்லாரும் ஸ்நாக்ஸ் சாப்டுவதிலும் பக்கத்தில் அரட்டை அடிப்பதிலும் பிஸி.


சஃபாரி போட்ட மக்கள் சிலர் திரும்பவும் மேடையை செக் செய்கின்றனர். அலையன்சில் ஒரு புக்கு: சர்வம் காமெடி மயம். நிறையப் பேர் அதை வாங்குகின்றனர், சல்லிசு விலையில் இருப்பதால்.

போன கரண்டு வந்து விட்டது. சிலர் போலீசுடன் வாக்குவாதம் செய்கின்றனர், எப்படி துண்டு/கர்சீப் போட்டு இடம் பிடிக்கலாம் என்று. ஐயா ஆட்சியில் நில அபகரிப்பு. அம்மா ஆட்சியில் சீட்டு அபகரிப்பு.


எங்கே பார்த்தாலும் ஒரே பச்சை பேட்ச். எல்லாம் துக்ளக் எம்ப்ளாயிகள் போல இருக்கார்கள். அரங்கின் உள்ளே சூரியன் நேர் வழியில் வர முடியல. சைடு வழியா வரப் பாக்கறார். என்னதான் நடக்குது என்று பார்க்க. சொல்ல மறந்து விட்டேன். ஹிந்து முன்னணி ராம கோபாலன் ஆஜர். இல. கணேசனும் கூட.

கூட்டத்தில் புஸ்தகம் புரட்டும் ஒருவர்.











கருப்பு சட்டை போட்டவர்களுக்கு அனுமதி இல்லை. நல்லவேளை நான் மஞ்சளில் இருக்கேன்.

கூட்டம் ஆரம்பம் ஆனதும் பரீக்வென்ட்டாக அப்டேட் வரும். :-)

மணி ஆறாகப் போகிறது. மூச்சாப் போக எழுந்தாலும் உடனே பத்து பேர் எழுகிறார்கள், யாரோ வந்திருக்கிறார் என்று பார்க்க. மேடையில் இப்போ ரெண்டு ஏர் கூலர்கள். குருமூர்த்தி மற்றும் சிலர் கண்ணில் படுகின்றனர். கூட்டம் பரபரப்பாகிறது.

மக்கள் ரஜினியை எதிர்பார்க்கின்றனர். மணி சரியாக ஆறு. துக்ளக் ஆட்கள் மேடையில் அங்குமிங்கும் செல்கின்றனர்.

கே. பாலச்சந்தர் வந்துள்ளார். மணி ஆறேகால். போன முறைகள் போன்று இன்றும் டான் என்று ஆறரை மணிக்கு ஆட்டத்தை ஆரம்பிப்பாரா சோ?

குருமூர்த்திக்கு ஸ்டான்டிங் ஓவேஷன்.

நரேந்த்ர மோதி அத்வானியுடன் உள்ளே வருகிறார். சோ வந்ததும் ஒரே ஆரவாரம். வந்தவுடன் கரண்டு இருக்கா? ஏன் ஆடியோ கம்மியாக இருக்கு என்று கேக்கறார் சோ. சத்தம் கம்மியா இருந்தாலும் தனக்குப் பிரச்சினை இல்லை என்று வழக்கம் போல நக்கலாச் சொல்றார். இப்போது துக்ளக் மக்கள் அறிமுகம் நடக்கிறது.











குருமூர்த்திக்கு மீண்டும் ஒருமுறை பெரிய கரகோஷம்.

முதல் செட் கேள்விகள், கல்பனாவிடம் இருந்து. பெண்ணுரிமை. :-)

இலவசம் எப்போது தமிழ் நாட்டை விட்டுப் போகும்? நீங்க உங்க நண்பர் ஜெவிடம் சொல்வீர்களா? மோதி பிரதமர் ஆவாரா?

சோவின் பதில் : இதுக்குதான் பெண்களை அனுமதிக்கக் கூடாது.

ரஜினி வந்தாச்சு!

இலவசம் குடுத்து இருக்காவிட்டால் திமுக ஜெயிச்சு இருக்கும். அதனால் ஜெ செய்தது சரிதான் என்கிறார் சோ. சொன்னதை ஜெ செய்து விட்டார் என்று பாராட்டுப் பத்திரம் வாசிக்கறார்.

தனக்கும் இந்திய மக்களுக்கும் மோதி பிரதமராவதில் ஆசை என்று ரெண்டாம் கேள்விக்குப் பதில்.

அடுத்த கேள்வி: சசிகலா வெளியேறியதைப் பற்றி உங்க பங்கு/கருத்து என்ன?

இப்டிக் கேள்வி கேட்டு ஆடியன்சை அவமதித்து விட்டார் என்று சோ பதில். :-)

ஹிந்து - நக்கீரன் பற்றியது

அடுத்த கேள்வி.

பதில் : இந்த மாதிரி ஆர்டிகிள் நக்கீரன் போடுவது ஆச்சர்யம் இல்லை. நக்கீரன் சரக்கை ஆங்கிலத்தில் போடும் அளவுக்கு ஹிந்து தரம் தாழ்ந்து விட்டது என்று பதில்.

அடுத்த கேள்வி: சீனாவுடன் போட்டி போட மோதி பிரதமாராக வேண்டும். உங்க கருத்து என்ன?

பதில் :குஜராத் மாதிரி ஆட்சி இந்தியாவில் வரணும். அப்போதான் இது சாத்யம்.

அடுத்த கேள்வி விலைவாசி பற்றி.

பதில்: விலைவாசி ஏற்றம் தவிர்க்க முடியாதது. என்னோட ட்ராமாவுலையே சொல்லி இருக்கேன்.

சோ பேசுகிறார். கொஞ்சம் கேட்கணும். அதனால குட்டி பிரேக்.

விரைவில் ஆடியோ அப்லோட் செய்கிறேன். :-)

மன்மோகன் சிங்கைப் போட்டுத் தாக்குகிறார், சோ. நல்ல விளாசல் நன்றி சோ.

பிரதமர் பதவிக்கு நிதிஷ்குமாரை விட நரேந்த்ர மோதி கண்டிப்பா பெட்டெர் எனகிறார்.

அடுத்த பதில் : விநாயகா பீடிக்கும் விநாயகருக்கும் என்ன சம்பந்தமோ, அதே சம்பந்தம்தான் அன்னாவுக்கும் காந்தியிசத்துக்கும்.

கிரண் பேடி நல்ல சியர் லீடராம்! :-)

யாரோ ஒருவர் கலைஞர் பற்றிப் பேசுமாறு சோவிடம் சிட்டு அனுப்பி இருக்காரு. செமக் காமெடி. :-)

கேள்வி பதில்கள் முடிந்தது என்று நினைக்கிறேன். சிட்டுக் குடுத்த புண்யவான் தயவில் கருணார்ச்சனை ஓகோவென்று நடக்கிறது. சோ மட்டும் மேடையில். மேடை ஏறப் போடும் அந்த நான்காவது நபர் யார் என்று அறிய ஆவலாக இருக்கு.

தமிழ் நாட்டை குஜராத் போல மாற்ற ஜெ முயற்சிக்கறார் என்று சோ சொல்கிறார். Nation will become electrified if Modi becomes PM என்கிறார். கூடங்குளம் போராட்டம் ஸ்பான்சர் செய்யப் பட்டது என்கிறார்.

சோவின் கேள்வி பதில் பேச்சு முடிந்தது. மணி ஏழு முப்பத்தி ஐந்து.

அத்வானி பேசப் போகிறார்.

மேடையில் இப்போது.












இத்தோடு லைவ் அப்டேட் முடிந்தது. விழா முடிந்ததும் ஆடியோ வரும். :-)

வழக்கம் போல தேசிய கீதத்துடன் விழா முடிந்தது. இன்னும் சில மணி நேரத்தில் ஆடியோ அப்லோட் செய்கிறேன், எடிட்டிங் மற்றும் ஈட்டிங் முடிந்தவுடன். :-)

என்ஜாய் செய்தது திரும்பும் திருவிழாக் கூட்டம்.












முத்தான வரிகள்


மோதி பிரதமர் வேட்பாளர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் - அத்வானி.

டைனாஸ்டி அரசியலைத் தூக்கி எறியவேண்டும் - மோதி.

தை பிறந்தால் வழி பிறக்கும் - தமிழ் வருஷப் பொறப்பு அல்ல - சோ.

முல்லைப் பெரியாறு - ஜெ போராடுகிறார். முக லெட்டர் மட்டுமே எழுதினார். இனியும் எழுதுவார் - சோ.

Read More...