இன்றைய ஜாமின் செய்திகள்:
* கனிமொழி எம்.பி.க்கு ஜாமீன் கிடைத்தது - தினத்தந்தி ( அட இங்க எம்.பியா ? மறந்தே போச்சு )
கிடைத்தது கனிமொழிக்கு ஜாமீன் - தினமலர் ( கண்டேன் சீதையை போல )
கனிமொழி, 4 பேருக்கு ஜாமீன் - தினமணி ( அப்படியா ? )
Kanimozhi to walk free today, will father Karunanidhi reward her 'sacrifice'? - Times of India ( Sacrifice for whom ? )
Karunanidhi elated over Kanimozhi getting bail - The Hindu( ஓ! )
SC effect: Bail for Kanimozhi, 4 others ( அட அப்ப்டியா ? )
2G case: Kanimozhi, 4 others to walk out of Tihar today - Hindustan Times. ( பார்லிமெண்ட் மாதிரி இந்த நியூஸும் ஆகிவிட்டது )
Lawmaker Kanimozhi Gets Bail in Telecom Case - Wall Street Journal ( Lawmaker என்றால் என்ன சார் ? )
Smiles and hugs as Kanimozhi, four others get bail - India Today ( இருக்காதா பின்ன)
கனிமொழி ‘வாங்கிய’ ஜாமீன் - தமிழ் பேப்பர் மாயவரத்தான் ( சும்மா ஒரு விளம்பரத்துக்கு )
192 நாட்களுக்கு மேல் இருக்கும் ராசாவின் தியாகத்துக்கு எப்போது ஜாமீன் , அவருக்கு என்ன பதவி கிடைக்கும் ?
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Tuesday, November 29, 2011
கனிமொழி ஜாமீன் செய்திகள்
Posted by IdlyVadai at 11/29/2011 10:43:00 AM 14 comments
Labels: செய்திகள்
Sunday, November 27, 2011
படமும் செய்தியும்
- நன்றி விகடன்
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருந்து வருகிற 30-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாட்டிற்கு புறப்பட்டு செல்கிறார். சில வார காலம் அங்கிருந்தபடியே அரசு பணிகளை மேற்கொள்வார் - தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு
படத்துக்கும் செய்திக்கும் தொடர்பு இல்லை!
Posted by IdlyVadai at 11/27/2011 08:06:00 AM 18 comments
Friday, November 25, 2011
அன்னாவும் "THE"முகவும்
ஊழலை முற்றாக ஒழித்துக் கட்டுகிறேன் பேர்வழி என்று அன்னா ஹஸாரே என்ற காந்தியவாதி ஒருவர் கிளம்பினார். மீடியாக்கள் எல்லாமாகச் சேர்ந்து கொண்டு செய்த களேபரத்தால், எங்கு பார்த்தாலும் அன்னா அன்னா என்று ஸ்மரணையே இல்லாமல் ஜெபித்துக் கொண்டும், ஊழல் சாம்ராஜ்யம் வீழ்ந்து விட்டது போலவும் கற்பனை செய்து கொண்டு, சினிமா ஷூட்டிங் பார்க்கக் கிளம்பிய பட்டிக்காட்டு ஜனம் போல மக்கள் கூட்டம் திரண்டது.
விட்டால் ஊழலை ஒழித்தே விடுவார் போலிருக்கிறதே என்று காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகளே மிரளும் வண்ணம் அத்தகைய கூட்டத்தைக் கூட்டினார். ஜன் லோக்பால் என்ற சட்ட வடிவை முன்னிறுத்தி, இதில் ஒரு எழுத்து குறைந்தாலும் ஏற்க மாட்டோம் என்று நிபந்தனை விதித்தார். சாகும் வரையிலான 15 நாள் உண்ணாவிரதம் இருந்தார். பிறகு அரசு பணிவது போல் பணிந்து, அன்னா சொல்வதை உணர்வுப் பூர்வமாக ஏற்கிறோம் என்று அரசுக்கும் புரியாமல், அன்னாவுக்கும் புரிந்து விடாமல், காங்கிரஸின் ட்ரபிள் ஷூட்டர் எனப்படும் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் எதையோ பேசப் போக, மீடியாவின் துணையுடன் அனைவரும் ஜெய ஜெய என ஜெய கோஷமெழுப்பி ஊழலை ஒழித்துக் கட்டினர். இதெல்லாம் கொஞ்சம் பழைய கதை.
“இந்தியாவிலேயே ஊழலற்ற மாநிலம் குஜராத்தான். நரேந்திர மோதி அப்பழுக்கற்றவர், மிகச் சிறந்த நிர்வாகி”, என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார். மோதியும், இப்படியெல்லாம் என்னைப் புகழ்ந்தால் உங்களைச் சிலர் களங்கப் படுத்த முயல்வர் என்று கடிதம் எழுதினார் ஹஸாரேவுக்கு. அதற்கெல்லாம் சளைத்தவன் நானல்ல என்று மார் தட்டினார் அன்னா. கடைசியில் என்னவாயிற்று? அன்னா ஹஸாரேயின் மதச்சார்பின்மை கேள்விக்குரியதாகிறது, அவர் பாஜக அனுதாபி, ஆர் எஸ் எஸ் ஸ்வயம்சேவக் போல் பேசுகிறார் என்று மதச்சார்பற்ற மாந்தர்கள் குரலெழுப்பவும், எதற்கு வம்பு என்று, “குஜராத்தைப் போல் ஊழல் மலிந்த மாநிலம் உலகிலேயே இல்லை” என்று ஒரே போடாகப் போட்டார். முன்பு அப்படிச் சொன்னீர்களே, பிறகு ஏன் இப்படி என்று மீடியாக்கள் இவரைக் கேட்கவில்லை, அதுவும் மதச்சார்பின்மைக்கு எதிராக முடியுமென்பதால்.
இவ்வாறாக காந்தியவாதி, சமூக சேவகர் என்ற பட்டங்களுடன் மீடியாக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வலம் வந்த அன்னா தற்போது முக போல் முன்னுக்குப் பின் முரணாக தினமும் எதையாவது ஒன்றைப் பேசி வருகிறார். கூட்டம் கூட்டிக் காண்பித்தாயிற்று, மீடியாக்கள் மூலம் மக்கள் ஆதரவு இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியாயிற்று, இனி எது சொன்னாலும் எடுபடும் என்ற அளவில் அன்னாவின் பேச்சுக்கள் இருக்கின்றன.
மௌன விரதம் இருக்கிறேன் என்றால் உடனே ஒரு பேப்பர் பேனாவை கொடுத்து மீடியா பேட்டி எடுக்கும் நிலைக்கு வந்த பின்னர் என்ன செய்வது என்று அவருக்கும், மீடியாவிற்கு தெரியவில்லை.
காங்கிரஸை ஊழல் மலிந்த கட்சி என்றார். ஹிமாச்சலில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார். ஏற்கனவே பாஜக கூட்டணி வசமிருந்த தொகுதியாதலால், பாஜக கூட்டணி எளிதாக வெற்றி பெற்றது. அன்னா ஹஸாரேவால் காங்கிரஸ் தோல்வி என மதச்சார்பற்ற மீடியாக்கள் வரிந்து தள்ளின. சற்று நேரத்திற்கெல்லாம், ஜன் லோக்பாலை அரசு நிறைவேற்றினால் காங்கிரஸுக்காகப் பணியாற்றுவேன் என்று அந்தர் பல்டியடித்தார்.
இவ்வாறாக அடித்த பல்டிகளில் லேட்டஸ்ட் பல்டி, நேற்றைய பல்டிதான். இந்த பல்டியில்தான் சற்றே சறுக்கி விட்டார். மீடியாக்கள் கூட கேள்வி கேட்க ஆரம்பித்த்தால், அன்னாவே நிலை தடுமாறித்தான் விட்டார். நேற்றைய தினம், மத்திய அமைச்சர் ஷரத் பவாரை ஹர்விந்தர் சிங் என்பவர் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டார். ஒட்டுமொத்த இந்தியர்களின் பிரதிபலிப்பு என்று எல்லோரும் நினைக்க அன்னாவும் அதையே நினைத்துவிட்டார்.
நேற்றைய தினம் மராட்டிய மாநிலம் புனேவில் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்ட அன்னாவிடம் இது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அன்னா சற்றே நக்கலான தொனியில், ஒரே ஒரு அறைதானா? என்று கேட்டார். பின்பு இது பற்றி மீடியாக்கள் பெரிது படுத்தவும், காந்தியவாதி என்ற பட்டத்திற்கு பங்கம் வந்துவிடும் என்பதால் உடனேயே வன்மையாக்க் கண்டிக்கத்தக்கது என்ற ரீதியில் ஒரு அறிக்கை வெளியிட்டார். முன்பு பேசியது எங்கு தவறாக எடுத்துக் கொள்ளப்படுமோ என்ற பதட்டத்தில், ஒரே அறைதானா அல்லது கடுமையாகத் தாக்கப்பட்டாரா என்ற ரீதியில்தான் அவ்வாறு கேட்டேன் என்றார், பிறகு மன்னிப்பு வேண்டுமானாலும் கோருகிறேன் என்றிருக்கிறார் சமீபமாக. முக கூட மஞ்சள் துண்டிற்கு இவ்வளவு விளக்கங்கள் கொடுத்திருக்க மாட்டார்.
இன்னமும் இவர் ஊழலை ஒழித்து, காங்கிரஸிடமிருந்து மக்களையும், இந்தியாவையும் காப்பாற்றி விடுவார் என விடாமல் பகல் கனவு காண்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாவை காந்தியவாதி என்கிறார்கள். அது ஏனென்று புரிபடவே இல்லை. ஷரத் பவாரை ஒரே ஒரு அறைதான் அறைந்தார்களா என்று ஆவலுடன் கேட்கிறார்; எங்கள் ஊரில் குடிப்பவர்களை எல்லாம் மரத்தில் கட்டி வைத்து அடிப்போம் என்கிறார். இதெல்லாம் காந்தியவாதி செய்யும் செயல்களாகத் தெரியவில்லை. அமைப்பிற்கு நன்கொடை என்ற பெயரில் வந்த பணத்தில் பேர்பாதி கணக்கில் வராத பணமாம், அதையும் திருப்பிக் கொடுக்கிறார்களாம். வாங்கும்போது அது தெரியவில்லையா? அல்லது பேசியதை மாற்றி மாற்றி பிறழ்ந்து பேசுபவர்களெல்லாம் காந்தியவாதிகளா?
இது தெரியாது மீடியா ஒருவரை கொஞ்சம் நேரம் காண்பித்தால் தமிழ் இலக்கிய உலகம் உடனே இன்ஸ்டண்ட் தொடர், கேள்வி பதில், அதை தொடர்ந்து புத்தகம் என்று நல்ல காமெடி!
Posted by IdlyVadai at 11/25/2011 09:07:00 PM 13 comments
Labels: செய்திவிமர்சனம்
இன்று கிடைக்குமா ?
Posted by IdlyVadai at 11/25/2011 09:09:00 AM 17 comments
Labels: செய்தி
Thursday, November 24, 2011
ஒன்லி ஒன்ஸ் !!
இன்று சரத் பவாரை இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததை பல முறை எல்லா டிவிக்களும் போட்டு அவர் பல முறை அடி வாங்க வைத்துவிட்டார்கள். எல்லோருக்கும் உள்ளூர சந்தோஷமாக இருந்தாலும், அவர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
மீடியா சும்மா இல்லாமல், அன்னாவிடம் கருத்து கேட்க அவரும் நம்மளை போல சந்தோஷத்தில் "பவாருக்கு ஒரே ஒரு அடிதான் கிடைத்ததா?" என்று மஞ்சள் கமெண்ட் அடிக்க. காந்தியின் மறு உருவம், அகிம்சையைத்தான் பின்பற்றும் அன்னா எப்படி இப்படி பேசலாம் என்று மீடியா பிடித்துக்கொண்டது.
இந்த தாக்குதலுக்கு இதற்கு முக்கிய காரணம் நேற்று அந்த சீக்கிய இளைஞர் தனுஷ் பாடிய கொலைவெறி பாடலை கேட்டது தான் என்று பரவலாக நம்பப்படுகிறது
அன்னாவை பின்பற்றுகிறவர்களுக்கு இது பெரிய அறை என்பது வேறு விஷயம் !
Posted by IdlyVadai at 11/24/2011 10:20:00 PM 8 comments
Labels: செய்தி
Wednesday, November 23, 2011
குட்டை பாவாடையும் கோவணமும்
நடிகைகள் சினிமா விழாக்களில் குட்டை பாவாடை அணிந்து பங்கேற்பது மரபு. இதனால் பிரிண்ட் மீடியாக்களும், வலைப்பதிவுகளும் காலத்தை ஓட்டுகிறது. ஸ்ரேயா சிவாஜி விழாவிற்கு வந்து சென்ற பிறகு மன்னிப்பு கேட்டார். நமிதா கையோடு ஒரு துண்டு எடுத்து வருகிறார். ஆனால் இந்து மக்கள் கட்சி போன்றவை கடுமையாக எதிர்க்கிறார்கள்.
இந்த மாதிரி தமிழ்நாட்டின் முக்கியமாக பிரச்சனைகளுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பும், குஷ்பு கருத்தும் நமக்கு பழக்கப்பட்டது தான்...
குஷ்பு கருத்து:
நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச்செல்வார். ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன.
இந்து மக்கள் கட்சி கருத்து:
தமிழக கலாசாரம் பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலம், அதனால் தான் கற்புக் கரசியான கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல் இரண்டு நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் அதுபோல் அணியலாம். பொதுவிழாக்களுக்கு அதுபோல் வரக்கூடாது என்கிறோம்.
கிராமத்தில் விவசாய வலி தொழிலாளர்கள் பலர் கோவணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர். அதுபோல் கோவணம் அணிந்து கொண்டு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் அவர்களை குஷ்பு சந்திப்பாரா? அல்லது பேசத்தான் செய்வாரா? அதுபோலத்தான் நடிகைகள் கவர்ச்சி ஆடையில் பொது விழாக்களில் பங்கேற்பதை நாங்கள் பார்க்கிறோம். அதை எதிர்க்கிறோம். அதற்கு நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கி எங்களை எதிர்ப்பதை குஷ்பு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆக மொத்தம் இவர்களை போட்டு எனக்கு நான்கு நிமிட புகழ் வந்துவிட்டது
நல்ல படங்கள் கிடைக்கவில்லை, மன்னிக்கவும் :-)
Posted by IdlyVadai at 11/23/2011 04:25:00 PM 13 comments
Tuesday, November 22, 2011
யார் அன்னா ?
லோனாவாலா அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் அன்னா ஹசாரேயின் மெழுகு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இதில் யார் உண்மையான அன்னா என்று சொல்லுங்கள் பார்க்கலாம் ?
மெழுகு உருவில் இருக்கும் அன்னா, வாழ்நாள் முழுவதும் ஊழலுக்காக உண்ணாவிரதம் இருப்பார் என்பது கூடுதல் சிறப்பு !
Posted by IdlyVadai at 11/22/2011 09:20:00 AM 20 comments
Labels: செய்தி
Saturday, November 19, 2011
ஊர் சுற்றிப் புராணம்! - ஞாநி
இந்த வார கல்கியில் ஞாநி எழுதிய இந்த கட்டுரை, நிச்சயம் எல்லோரும் படிக்க வேண்டிய கட்டுரை....
சென்ற வருடம் அமெரிக்காவுக்குச் சென்றபோது ஒவ்வொரு விமான நிலையத்திலும் என் பாஸ்போர்ட் பெயரில் இருக்கும் பூர்விக ஊர் பெயரை அதிகாரிகள் கஷ்டப்பட்டுப் படிக்கும்போதெல்லாம், அந்த ஊரை இதுவரை நான் பார்த்ததே இல்லையே என்ற வருத்தம் மேலெழுந்துகொண்டே இருந்தது. எங்கள் குடும்பத்தில் என் அப்பாவைத் தவிர வேறு யாரும் அந்த ஊரைப் பார்த்ததில்லை.
அண்மையில் புரிசை கிராமத்தில் நடந்த புரிசை கண்ணப்ப தம்பிரானின் நூற்றாண்டுக் கலைவிழாவில் எங்கள் பரீக்ஷா குழுவின் நாடகம் நடத்த அங்கே செல்லவேண்டியிருந்தபோது, பயண வசதிகளை முடிவு செய்வதற்காக கூகுள் மேப்களை அலசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் புரிசையிலிருந்து சுமார் ஒரு மணி நேரத் தொலைவில் என் பூர்விக ஊர் நல்லூர் இருப்பதைக் கவனித்தேன். இரவு நாடகத்தை முடித்துவிட்டு, அதிகாலையில் நல்லூர் போகலாம் என்று முடிவு செய்தேன். எங்கள் நாடகம் முடியும்போது நள்ளிரவு ஒரு மணி. அந்த நேரத்திலும் சுமார் 100 பேர் நாடகம் பார்த்தார்கள். நாங்கள் சுமார் இரண்டு மணிக்கு புரிசை கிராமத்திலேயே ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்துத் தூங்கப் போனோம்.
நல்லூர் ஆற்காடு அருகே இருக்கும் கலவை என்ற சிறு நகரை ஒட்டிய கிராமம். நல்லூரை அடைந்ததும் எங்கே யாரிடம் என்ன சொல்லி எதை விசாரிப்பது என்று எதுவும் என்னிடம் இல்லை. ஏனென்றால் அந்த ஊரில் எங்கள் குடும்பத்துக்கு நிலம், வீடு எதுவும் இல்லை. உறவினர்கள் யாரும் இல்லை. என்னிடம் இருந்த இரண்டு தகவல்களில் ஒன்றால் எந்தப் பயனும் இல்லை.
என் தாத்தா முனுசாமி அந்த ஊரின் முன்சீப்பாக இருந்தவர். அடுத்து என் அப்பாவும் அந்தப் பரம்பரை முன்சீப் வேலையை ஓரிரு வருடம் பார்த்துவிட்டு ஊரை விட்டு வந்துவிட்டார். அப்பா ஊரை விட்டு வந்த வருடம் 1927! இன்னொரு தகவல் அப்பாவின் பங்காளி சகோதர உறவினரான நல்லூர் சோமசுந்தரம் என்பவர், விடுதலைப் போராட்ட வீரர் என்பதாகும்.
முதலில் ஒரு வீட்டு வாசலில் கண்ணில் பட்டவரிடம் கேட்டேன். அவர் எல்லாத் தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருந்தார். அவர் பெயர் முனுசாமி! பஞ்சாயத்து அலுவலக ஊழியர். சோமசுந்தரத்தின் வீடு இன்னும் இருப்பதாகவும் அவரது குடும்ப வாரிசுகள், உறவினர்கள் பலர் ஊருடன் தொடர்பில் இருப்பதாகவும் சொன்னார். ஊரில் இருக்கும் பழைய சிவன் கோயிலை அவர்கள் புதுப்பித்துக் கட்டியிருப்பதாகவும் சொல்லி என்னை அந்த சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்று காட்டினார். சோமசுந்தரத்தின் வீட்டையும் சுற்றிக் காட்டினார்.
கோயிலும் வீடும் என் ஆர்வத்துக்குரியன அல்ல. அந்த அக்ரஹாரத் தெருவின் முடிவில் மிகப் பெரிய மரம் ஒன்று. அதன் வயது சுமார் 200 வருடங்கள் என்றார்கள். அதுதான் சுவாரஸ்யமான கற்பனைகளைத் தூண்டியது. இருபது வயது வரை இங்கே இருந்த என் அப்பா, அந்த மரத்தின் கீழ் விளையாடியிருப்பாரா, நண்பர்களுடன் அரட்டை அடித்திருப்பாரா என்றெல்லாம் யோசித்தேன்.
இப்போது ஊரின் மக்கள்தொகை சுமார் இரண்டாயிரம். சரிபாதி காலனியில் தனியே வசிக்கும் தலித்துகள். அப்பா காலத்தில் இதில் சரிபாதிதான் மொத்த மக்கள்தொகையாக இருந்திருக்கலாம்.
ஊருக்குள் நுழைந்து பஞ்சாயத்து ஊழியரைச் சந்தித்தது முதல், ஊரை விட்டுத் திரும்பி கலவை, ஆற்காடு வழியே சென்னை வந்தபின்னரும் கூட, எனக்கு நிறைய செல்பேசி அழைப்புகள் வந்தபடி இருந்தன. எல்லாரும் நல்லூரிலிருந்து தொலைதூர மாநிலங்கள், வெளியூர்கள் சென்று குடியேறியவர்கள். பெரும்பாலோர் சிவன் கோயிலைப் பற்றியே என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பல நூறு வருடங்கள் முந்தைய பழைய கோயிலைப் புதுப்பித்துக் கட்டிய பெருமையும் மகிழ்ச்சியும் அவர்களுக்கு இருந்தது.
எனக்கு ஆர்வமில்லாத விஷயம் அது. என்னை இன்னமும் உறுத்தும் கேள்வி ஏன், தங்கள் சொந்த ஊரை விட்டு, தொழில் நிமித்தம் வெளியூர் சென்று வாழ்வோர் பலரும் (எல்லோரும் அல்ல), ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும்போது, முதலில் கோயில் புனருத்தாரணத்தையே எண்ணுகிறார்கள் என்பதுதான். படிப்பு தான் அவர்களை உலகம் சுற்ற வைத்தது. அந்தப் படிப்புக்காக அடுத்த தலைமுறைக்கு ஏன் எதுவும் செய்யத் தோன்றுவதில்லை?
கலவை பகுதியில் ஆண்களை விடப் பெண்களே மக்கள் தொகையில் அதிகம். ஆனால் பெண்களின் எழுத்தறிவு 59 சதவிகிதம்தான். நல்லூர் கிராமத்தில் ஒரு நூலகத்தைப் பார்த்திருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஒவ்வொரு வேளையும் ஒரு உறவினர் வீட்டில் போய் சாப்பிட்டுப் படிக்க வேண்டிய வறுமையில் இருந்த என் அப்பாவையும் அடுத்து எங்களையும் வறுமையிலிருந்து விடுவித்தது படிப்புதான்.
சொந்த ஊர் என்பது சிலருக்கு நெகிழ்வான உணர்வுகளை எழுப்புகிறது. எனக்கும் செங்கற்பட்டு அப்படிப்பட்ட நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். எனக்கு அதுதான் சொந்த ஊர். ஆனால் ஒவ்வொரு முறை செங்கற்பட்டுக்குப் போகும்போதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவது பழைய நினைவுகள்தான். இப்போதைய ஊரைப் பார்க்கும்போது அதிர்ச்சியும் கோபமும் வருத்தமும்தான் வருகின்றன. ஊரே கடை வீதியாக மாறிவிட்டது. சாலைகள் எல்லாம் யுத்தம் நடந்த பூமி போல இருக்கின்றன.
நண்பர்களோடு மகிழ்ச்சியாகச் சென்று உலாவிய ரேடியோ மலை மர்ம தேசமாகி விட்டது. வேறு எந்த ஊரிலும் எனக்குத் தெரிந்து ஊருக்கு நடுவே சிறு குன்று கிடையாது. அதன் மீது ஒரு பூங்கா, நகராட்சியின் வானொலி எல்லாம் ஒரு காலத்தில் இருந்தன. அதனால்தான் ரேடியோ மலை என்று பெயர். அண்மை யில் சென்றபோது குன்றேறிப் பார்த்தேன். அங்கே இருந்த அச்சுறுத்தும் தோற்றத்தில் சிலர் முறைத்த முறைப்பில் திரும்பிவிட வேண்டியதாயிற்று.
நான் தவறாமல் மாலை நேரங்களில் நண்பர்களுடன் சடுகுடு விளையாடிய வேதாசலம் நகர் அழகேசனார் தெரு பூங்காவும் விளையாட்டுத் திடலும் சிதிலமடைந்து கிடந்தன. அதை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டியிருந்தார்கள். வருடம் முழுவதும் விதவிதமான விளையாட்டு வீரர்களுடன் உயிர்த்துடிப்போடு காணப்பட்ட சீர்திருத்தப்பள்ளி விளையாட்டுத் திடல் பாழடைந்து ரயில்வேயின் கோடவுனாகக் கிடக்கிறது. குளவாய் ஏரியைத் தூர்த்து ப்ளாட் போடவேண்டியது மட்டும்தான் பாக்கி. அதன் ஆயக்கட்டு வயல்கள் எல்லாம் பைபாஸ் சாலையினால் ஏற்கெனவே ப்ளாட்டுகளாகிவிட்டன.
ஒரு காலத்தில் நமக்குப் பெருமகிழ்ச்சி தந்த பல விஷயங்கள் கால ஓட்டத்தில் அர்த்தமற்றவை ஆகிவிடுகின்றன. இளம் வயதில் தினசரி மணிக்கணக்கில் அரட்டை அடித்த நண்பனை முப்பது வருடம் கழித்து சந்திக்கும்போது, பழைய சந்தோஷங்களின் தொடர்ச்சியாக இப்போதும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால், சில நிமிடங்களுக்குப் பின் இருவருக்கும் பேச எதுவுமில்லை. பகிர எதுவுமில்லை. கால ஓட்டத்தில் இருவரின் மதிப்பீடுகளும் வெவ்வேறு திசைகளில் போய்விட்டதே காரணம். மாறாக ஒரு வாரம் முன்பு அறிமுகமான ஒருவருடன் மணிக்கணக்கில் பேசுகிறோம். இருவருக்கும் இடையில் பொது அக்கறைக்குரியவை நிறையவே இருப்பதே காரணம்.
உறவுகளைச் சடங்குகளாகவோ, அல்லது வெறும் பழக்கத்தினாலோ அல்லது வேறு வழியில்லாமலோ தொடரும் போது அவை சுமையாக மாறுவதுதான் நிகழும்.
உறவாடக் கற்றுக்கொள்வோம் என்பதுதான் நான் அண்மையில் குடந்தையில் நடத்திய ஒரு பயிலரங்கத்தின் செய்தி. லயன்ஸ் க்ளப் இதை ஏற்பாடு செய்திருந்தது. லயன்ஸ் மாவட்டம் 324ஏவின் இப்போதைய ஆளுநர் ராமராஜன் இந்த வருடம் வித்தியாசமான சில பயிலரங்குகளை நான் நடத்தித் தரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். நானும் என் தோழி பத்மாவும் அவற்றைச் செய்து தரப் பொறுப்பேற்றுக் கொண்டோம்.
லயன்ஸ் உறுப்பினர்கள் தம்பதிகளாக வந்து பங்கேற்கும் பயிலரங்கம் இது. அரசியல், கல்வி, மீடியா, வணிகம் எல்லாமே கடும் சிக்கல்களுடன் இருக்கும் சூழலில், தனி வாழ்க்கையில் உறவுகளும் எவ்வளவு சிக்கலாக இருக்கின்றன என்பதை எல்லோரும் உணர்ந்து என்ன செய்யலாம் என்ற கவலையிலும் ஏக்கத்திலும் இருக்கிறார்கள். போலி கௌரவமும் அதிகாரப் பார்வையும்தான் பல உறவுகளை நாசப்படுத்துகின்றன. அன்பும் பரஸ்பர மதிப்பும் மட்டுமே நம்மை மீட்கும்.
இன்னொரு பயிலரங்கம் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பயிலும் ப்ளஸ் ஒன் மாணவர்களுக்கு, பத்து வாழ்க்கைத் திறன்களை அறிமுகப்படுத்துவதற்கானது. மாணவர்கள் துடிப்பாக இருக்கிறார்கள். ஆர்வத்தோடு இருக்கிறார்கள். வசதிகளும் வாய்ப்புகளும் மட்டும் தான் குறைவாக இருக்கின்றன. இப்படிப்பட்ட பயிலரங்கங்கள் அவர்களுக்கு நீந்திக் கரையேறக் கிடைக்கும் இன்னொரு துரும்பு.
மயிலாடுதுறையில், நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. நூறாண்டுகளுக்கு மேலாக நடக்கும் அந்தப் பள்ளியின் வரலாறு பிரமிப்பானது. எழுத்தாளர்கள் கல்கி, துமிலன், சா.கந்தசாமி, தி.மு.க. தலைவர் பேராசிரியர் அன்பழகன், இன்னும் ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகள் பலர் படித்த பள்ளி இது என்று அறிந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.
அப்படிப்பட்ட பள்ளியில் ஒரு நூலகம் இல்லையென்று தெரிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இருநூறு கோடி ரூபாயில் ஒரு கனவு நூலகத்தை, சென்னையில் அமைக்கிறோம். இருநூறு ஊர்களில், இரண்டாயிரம் பள்ளிகளில் நூலகங்கள் இல்லை. அல்லது இருந்தும் இல்லாத நிலை. மயிலாடுதுறை பள்ளியில் ஆயிரக் கணக்கில் நூல்கள் உள்ளன. ஆனால் நூலகர் பதவிக்கு ஆள் நியமிக்கப்படவில்லை. பள்ளிகளில் காவலர் (வாட்ச்மேன்), துப்புரவுப் பணியாளர் பதவிகளெல்லாம் கூட அரசால் நியமிக்கப்படாத நிலைதான் பல பள்ளிகளில் இருக்கின்றன. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் தொகுப்பு ஊதியத்தில் சிலரை ஒரு சில ஊர்களில் நியமிக்கிறார்கள்.
ஒவ்வொரு பயணமும் நம் சூழல் எவ்வளவு சிக்கல் நிரம்பியதாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. கூடவே அதையெல்லாம் தாண்டி எழுந்து வருவதற்கான துடிப்போடும் ஆர்வத்தோடும் தேடலோடும் இன்னொரு தலைமுறை உருவாகிக் கொண்டே இருக்கிறது என்பதைப் பார்க்கும் வாய்ப்பையும் இந்தப் பயணங்கள் எனக்குத் தருகின்றன.
முசிறியில் மாணவர் பயிலரங்கம் முடிவில் அன்றைய அனுபவத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டதும் அலை அலையாக எழுந்து வந்து முதல் முறை மைக் முன்னால் பேசிய அத்தனை முகங்களும் குரல்களும் மறக்க முடியாதவை.
நன்றி: கல்கி, ஓ-பக்கங்கள்
Posted by IdlyVadai at 11/19/2011 02:30:00 PM 18 comments
சென்னை புத்தககாட்சி - ஜனவரி 5-17 வரை !
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம் இன்று(18.11.11) நடைபெற்றது. ஜனவரி 5 முதல் 17வரை 35 வது சென்னை புத்தககாட்சியை அமைந்தகரை, செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இது குறித்த விண்ணப்படிவம் நவம்பர் 28 முதல் பாபாசி அலுவலகத்தில் கிடைக்கும். - ஞாநி
தகவலுக்கு நன்றி ஞாநி சார் !
Posted by IdlyVadai at 11/19/2011 08:11:00 AM 7 comments
Labels: அறிவிப்பு
Friday, November 18, 2011
Why this கொலைவெறி ...
செய்தி: பஸ், பால் விலை உயர்வு, மக்கள் அதிர்ச்சி, எதிர்கட்சிகள் எச்சரிக்கை!
மக்களும், எதிர்கட்சிகளும் இந்த வீடியோவை பார்க்க சிபாரிசு செய்கிறேன்...
Posted by IdlyVadai at 11/18/2011 02:30:00 PM 6 comments
துபாயில் பிளைட்டை விட்ட சீமாச்சு
அன்புள்ள இட்லிவடைக்கு,
I missed my flight (this is not a spam mail.. read ahead) in Dubai and staying in Copthorne Hotel Room #3003 (only for Nov 18th). I am safe here and no problems. Have absolutely nothing to do for next 16 hours. Flight is at 2 AM. Any bloggers in Dubai, please get in touch with me.. We can talk about taking Tamil Blogging to adutha kattam, ilakkiya sinthanaigal and everything we blog about :)
A sight seeing trip around Dubai will be preferred option!!
--
Please feel free to call me if you need any information.
Thanks
Vassan Subramanian
Sr. Datawarehouse, BI Architect
781-696 5814(M)
732-729 0705 (H)
dwarchitect@gmail.com
இங்கே நல்ல மழை, பஸ், பால் கட்டணம் வேற ஏறிவிட்டது...பிளைட்டை விட்டது நல்லது தான்.
Posted by IdlyVadai at 11/18/2011 12:30:00 PM 2 comments
Labels: அறிவிப்பு
Thursday, November 17, 2011
இலவச கட்டண உயர்வு
Posted by IdlyVadai at 11/17/2011 08:24:00 PM 12 comments
Friday, November 11, 2011
11.11.11
Posted by IdlyVadai at 11/11/2011 11:11:00 AM 6 comments
Labels: மொக்கை
Thursday, November 10, 2011
சென்னை புத்தகக்கண்காட்சி இல்லையா ? - எக்ஸ்க்ளூசிவ்
நேற்று சவேரா ஹோட்டலுக்கு போனேன். உள்ளே 'சூடா பஜ்ஜி' என்ற போர்டுக்கு பக்கம் ப்ராடிஜி டி ஷர்ட் போட்ட ஒருத்தரை பார்க்க முடிந்தது.
எதாவது காது குத்துவிழாவாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்
மெதுவாக அவரிடம் பேச்சு கொடுத்தேன்
"எங்கே பத்ரி"
"சரக்கு மாஸ்டர் வரலையா ? "
"அவருக்கு ஆபீஸில் ஏகப்பட்ட வேலை எப்போதும் ஜி.டாக்கில் இருப்பார்" என்றார்
"பத்ரி வரலை,சரக்கு வரலை நீங்க எதற்கு வந்தீங்க" என்ற கேள்வியை கேட்கலாமா என்று நினைக்க
"இன்னும் கொஞ்ச நேரத்துல பபாஸி எலக்ஷன் நடக்க போவுது இங்கே" என்றார் ப்ராடிஜி டி.ஷர்ட்.
சரி பாராளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சி தேர்தல் என்று பல தேர்தலை பார்த்துவிட்ட நமக்கு இந்த தேர்தலையும் ஒரு முறை பார்த்துவிடலாமே என்று உள்ளே பேசாமல் போய் கடைசி சீட்டில் உட்கார்ந்தேன். பக்கத்துல இருந்தவரிடம் பேச்சு கொடுத்தேன். பபாஸி தேர்தல் என்று ஒரு அறிவுப்பு கூட இல்லையே ஏன் ? காதும் காதும் வைத்த மாதிரி நடத்துறாங்க ?
மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு "நீங்க எந்த பதிப்பகம்?" என்றார். நைசாக அந்த கேள்வியை சாய்ஸுக்கு விட்டுவிட்டு தேர்தல் நடத்த அய்யர் மாதிரி யாராவது வருவாங்களா ? என்று பதில் கேள்வி கேட்டேன்.
"அட நீங்க வேற இந்த வருஷம் புக் ஃபேர் நடக்காதுன்றாங்க" என்றார்.
"என்ன நீங்க சொல்லுவது நிஜமா ?" என்று கேட்டு முடிப்பதற்குள் அவர் தடையில்லாமல் பேச ஆரம்பித்தார் ....
"வழக்கமா புக் ஃபேர் நடத்துற இடத்தை வாடகைக்கு தரமாட்டேன்னு சொல்றாங்களாம். அதனால சிலர் இந்த வருஷம் புத்தகக் கண்காட்சி நடக்காதுன்னுதான் சொல்றாங்க வேற இடம் பார்த்தாலும் அது சரியா வராதுன்னு ஃபீல் பண்றாங்க இனிமே இடம் பார்த்து அரங்குகள் பிரிச்சு வாட்கை கொடுத்து வாங்கி
பந்தல் போட்டு, டாய்லட வசதி(?) செய்துகொடுத்து... வாய்ப்பே இல்லைன்றாங்க"
"அம்மாவோட எஃபெக்ட் ஏதாவது... ?
"அவங்களோட பங்களிப்பு இதுல இருக்கலாம் என்று சிலருக்கு சந்தேகம் இருக்கு ஆனால் அம்மா இதுல எல்லாம் இண்ட்ரஸ்டா இருக்க வாய்ப்பே இல்லைன்னும் சொல்றாங்க"
"ஏங்க புத்தகக் கண்காட்சி நடக்கலைன்னா அப்ப எதுக்கு இந்த தேர்தல் ?"
"ஆமாங்க அது தான் இப்ப ஹாட் டாப்பிக். பபாசின்னு ஒண்ணு எதுக்கு இருக்கணும்னு பதிப்பாளர்களுக்குள்ள பேச்சு. இவங்க நடத்துற மதுரை புக் ஃபேர் கொஞ்சம் சுமார் திருச்சில நடத்துறதே இல்லை கோவைலயும் நடத்துறது இல்லை ஈரோடு மட்டும் ஓகே, அதுவும் தனிப்பட்ட ஒருத்தர் முயற்சியால"
"பபாசி புக் ஃபேர் நடத்தமுடியலைன்றது தன்மான தமிழனுக்கு எவ்வளவு கேவலம்!"
"ஏங்க நீங்க எந்த பதிப்பகம் ?"
"அதைவிடுங்க நீங்க கண்டினுயூ பண்ணுங்க"
"இப்ப பாருங்க இந்த வருடம் எலெக்ஷன் போன முறை (ரெண்டு வருடத்துக்கு ஒரு தடவை நடக்கும்) கனஜோரா நடந்தது ஒரே நோட்டிஸ் மயம் அது இதுன்னு ஆடம்பரமா ஆனா இந்த தடவை ரொம்ப கமுக்கமா ரகசியமா நடக்குது. அதுவும் ஒரே டீம் ஆளுங்க ஜெயிச்சு வந்துட்டாங்க போன டீம்தான் இந்த தடவையும் தலைவர் நிக்க விரும்பாததால வேற ஒருத்தர் தலைவர் ஆனா இத்தனை நடந்தும் என்ன புண்னியம்! சென்னை புக் ஃபேர் நடக்கலைன்னா இவங்க எல்லாருமே வேஸ்ட்னு அர்த்தம்"
"கலைஞர் ஆட்சியாக இருந்தால் இது நடந்திருக்காது இல்லையா ?"
"கருணாநிதி ஆட்சில இருந்தப்ப அவருக்கு ரொம்ப ஜால்ரா போட்டுட்டாங்க கிட்டத்தட்ட அவங்க எம் எல் ஏ மாதிரி கை கட்டி வாய் பொத்திதான் நின்னாங்க அவர்கிட்ட இப்ப இந்த அம்மா ஜெயிச்சதும் இந்த பபாஸிக்கு என்ன பண்றதுன்னே தெரியலை அவரை எதாவது செண்டிமெண்ட்டா பேசி ஏமாத்திடலாம் இந்த அம்மாகிட்ட அதுவும் நடக்காதுன்னு கலங்கி போய் இருக்காங்க.
"ஆமாம் அண்ணா நூலகத்தையே மாத்திட்டாங்க"
"பொதுவா கலைஞர் ஆட்சில நூலக ஆர்டர் வரும், இந்த அம்மா ஆட்சில வராதது தான் வரலாறு ஆனா என்னமோ தெரியலை, கருணாநிதி ஆட்சியிலயும் இந்த தட்வை கடந்த 2 வருஷமா ஆர்டரே வல்லை இனிமே இந்தம்மா வந்தா தரப்போகுது, அதுலயும் இந்த பபாஸி கருணாநிதிக்கு அந்த ஜால்ரா அடிச்சப்புறம் இந்தம்மா எப்படி ஆர்டர் தரும்னு ஒரே கவலை எல்லாத்துக்கும். அதுலயும் சிலருக்கு சந்தோஷம். ஏன்னா கருணாநிந்தியோட ஆசியோட பலர் பலவிதமா அநியாயமா ஆர்டர் வாங்கினாங்க. இப்ப அவங்களுக்கும் கிடைக்காதுன்னு பலர் சந்தோஷபப்டறாங்க.
"சரி நீங்க எந்த பதிப்பகம் ? "
"நீங்க எந்த பதிப்பகம் என்று சொல்லுங்க" என்று நான் எதிர் கேள்வி கேட்க அவர் உடனே ஓடிவிட்டார்.
"எங்கே இவ்வளவு அவசரமா ஓடறீங்க ..."
"விஷயமே தெரியாதா வெட்டோத்தி சுந்தரம் படத்துக்கு அட்வான்ஸ் புக்கிங் பண்ண..." என்று ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்.
அவருக்கும், புத்தகக்கண்காட்சி நடக்க வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்.
Posted by IdlyVadai at 11/10/2011 04:28:00 PM 14 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Wednesday, November 09, 2011
அப்படியா செய்திகள் ....
நேற்று வந்த சில அப்படியா செய்திகள்....
1. ஜாமினில் வெளியே வரும் எடியூரப்பாவை மீண்டும் முதல்வர் ஆக்க பாஜக மேலிட தலைவர்கள் சிலர் ஓசையின்றி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ரதயாத்திரை தான் முடிந்துவிட்டதே!
2. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கலாநிதி மாறன் குடும்பத்துடன் தனி விமானத்தில் ஃபின்லாந்து சென்றுள்ளார். இந்த விஷம் சிபிஐக்கு கூட தெரியாதாம். ஆங்கில பத்திரிக்கைகள் இந்த செய்தியை கண்டுக்கொள்ளவில்லை.என்ன குளிர் இருந்து என்ன? அவருக்குதான் சிபிஐ குடுக்கும் சப்போர்டில் குளிர் விட்டுப் போயிருக்குமே!
3. “சார்க்” மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் இன்று மாலத்தீவு பயணம்.
துக்ளக் கேள்வி பதில் ஒன்று...
கே : ‘தான் விரைவில் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதால், அச்சமயம் மத்திய அரசின் பணிகளை ஒருங்கிணைக்கவும், அவசரமான முடிவுகளை எடுப்பதற்கும், அரசியல் விவகாரங்களுக்கான மந்திரிசபைக் குழுவைக் கூட்டவும் பிரணாப் முகர்ஜி அல்லது ப.சிதம்பரம் பொறுப்பேற்க வேண்டும்’ – என்று பிரதமர் உத்திரவு பிறப்பித்துள்ளது பற்றி?
ப : ‘பிரணாப் முகர்ஜி அல்லது ப.சிதம்பரம்’ என்று பிரதமர் கூறினாரா? இல்லாவிட்டால் ‘ப.சிதம்பரம் அல்லது பிரணாப் முகர்ஜி’ என்று கூறினாரா? இந்த விவரம் சரியாகத் தெரியவில்லை. இதில் யார் பெயரை பிரதமர் முதலில் குறிப்பிட்டுள்ளாரோ அவர் பக்கம்தான் அவர் நிற்கிறார் – என்று மற்றவர் சந்தேகப்பட வாய்ப்பிருக்கிறதே? இதை எப்படி பிரதமர் தீர்க்கப் போகிறார்? ‘பிபரசிணாதப்ம்முபகரர்ம்ஜி கவனித்துக் கொள்வார்கள்’ என்று வேண்டுமானால் சொல்லிப் பார்க்கலாம். அது ஓரளவு சமாதானமாக இருக்கும்.
4. சொத்துக்குவிப்பு வழக்கு - பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகவில்லை. மீண்டும் பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா 22-ந்தேதி ஆஜராக உத்தரவு. அதுவரை நாம் எல்லோரும் "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! " என்ற பாட்டை கேட்டுக்கொண்டு இருக்கலாம்.5. தவறு செய்தவர்களைப் பிடிக்க போலிஸ் இருக்கு. அந்தப் போலிசுக்கு ஒரு அமைச்சர் இருப்பார். சமயத்துல முதலமைச்சரே இதை கவனிப்பார். ஆனால் போலிஸ் பிடிச்ச ஆட்களை போலி-ஸ்டேஷனுக்கு ஒரு குண்டர் படையோடப் போயி விடுவிச்சது இந்த உலகத்துல முதல் முறையா மேற்கு வங்காளத்தில் நடந்து இருக்கு. நல்ல பிரசிடென்ஸ் நன்றி மம்தா
Posted by IdlyVadai at 11/09/2011 06:12:00 AM 8 comments
Labels: செய்தி
Tuesday, November 08, 2011
குப்பையில் கிடைத்தது ...
7 ஆம் அறிவு படத்தில் சூர்யா சொல்லும் வசனம் "ஒருத்தவங்களப் பத்தி கெட்ட விஷயங்களை தெரிஞ்சுக்க குப்பைக் கூடை யைத் தோண்டு" என்பார். ஆனால் திரு.நாகராஜன் தன்னுடைய 80 வயதில் "திருநெல்வேலி"யின்"குப்பை" என்ற பிளாக் ஆரம்பித்து சில நல்ல விஷயங்களை பகிர்ந்துக்கொள்கிறார். அவர் பதிவில் படித்த தானம் என்ற பதிவை இங்கே மீண்டும் பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
தானம்
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் தானம் என்றால் (பிறருக்கு நன்மை செய்யும் நோக்கத்தில்) தன்னிடம் இருப்பதை அல்லது தன்னால் முடிந்ததை எந்த விதப் பயனையும்
எதிர்பார்க்காமல் பிறருக்கு வழங்குதல் என்று கூறுகிறது. தமிழ் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் முதல் செய்யுள் –
ஒளவையாரின் ‘ஆத்திசூடி’. சுலபமானது. எளிதில் மனப்பாடம் செய்யக் கூடியது.
அருமையான நீதி போதனைகள் அடங்கியது.அறம் செய விரும்பு. (அறம் எனப்படும் நல்ல
உதவிகளைச் செய்ய விரும்பு) இயல்வது கரவேல் (உன்னால் கொடுக்க
இயன்றதை மற்றவர்களுக்குக் கொடுக்கக் கற்றுக்கொள்). ஈவது விலக்கேல் (தானம் செய்வதை நிறுத்தாதே). ஐயம் இட்டு உண். (ஏழை எளியவர்களுக்கு
தானம் செய்து உண் (சாப்பிடு). தானமது விரும்பு (தன்னார்வமாக நன்கொடை கொடுப்பதை விரும்பு)
ஆக, குழந்தைகளுக்குச் சொல்லும் முதல் நீதிப் பாடமே தானத்தைப் பற்றித்தான்.
அப்படியிருந்தும் குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது ஏன் இதை மறந்துவிடுகிறார்கள்!
சிந்தியுங்கள். விடை கிடைத்தால் சொல்லுங்கள்.
தானத்தைப் பற்றியும் தானத்தினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் பேசாத, எழுதாத, மதங்களோ மதகுருமார்களோ இல்லை. எத்தனையோ கருத்துக்கள், கதைகள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன.
தைத்ரேய உபநிஷத் சொல்கிறது:
“நம்பிக்கையோடு கொடு;
நம்பிக்கையில்லாமல் கொடுக்காதே;
நிறையக் கொடு; அடக்கத்தோடும், கருணையோடும்,
உணர்ச்சியோடும் கொடு.”
வள்ளுவர் கூற்று:
வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து. (23:1)
ஏழை எளியவர்களுக்குக் கொடுப்பதுதான்
உண்மையான தானம். மற்றவை எல்லாம்
செய்த வேலைக்கு நன்றிக் கடனாகக் கொடுப்பது.
கீதையில் 20க்கும் மேலான இடங்களில்
தானத்தின் சிறப்பைக் காண முடிகிறது.
‘ஆறில் ஒரு பங்கு’ என்ற சொற்றொடர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருவனுடைய வருமானத்தில் ஆறில் ஒரு பங்கைத்தான் தனக்கென்று வைத்துக்கொள்ள வேண்டும். மீதியில் ஒரு பங்கு பெற்றோர்களுக்கு,
இரண்டாவது பங்கு பித்ருக்களுக்கு (இறந்து போனவர்கள் நினைவாக),
மூன்றாவது பங்கு சமூகத்திற்கு (community), நான்காவது பங்கு அரசருக்கு அதாவது அரசாங்கத்திற்கு வரியாக (16% வரி எவ்வளவு நியாயமானது. கறுப்புப் பணத்திற்கு அவசியம் இருந்திருக்காதே). கடைசிப் பங்கு தான தர்மங்களுக்கு என்று பழைய நூல்கள் சொல்கின்றன. தானம் என்னென்ன? எது உயர்ந்த தானம்?
யாருக்குக் கொடுக்க வேண்டும்? எப்படிக் கொடுக்க வேண்டும்? தானத்தில் எத்தனையோ வகை உண்டு.
பொருள் தானம், வஸ்த்ர தானம் (உடை)
அன்ன தானம் (சாப்பாடு), பூதானம் (நிலம்),
கன்னிகா தானம் (கல்யாணம்), வித்யா தானம் (படிப்பு),
கோ தானம் (பசு). இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இதில் எது உயர்ந்தது?
எல்லா தானங்களிலும் மிகச் சிறந்த தானம் அன்ன தானம்தான். ஏன்?
மற்ற எல்லா வித தானங்களிலும் தானம் பெறுபவருக்கு ‘போதும்’ என்ற திருப்தி
ஏற்படுவதில்லை. 10 ரூபாய் கொடுத்தால், 20 ரூபாய் கொடுத்திருக்கக் கூடாதா என்ற நினைப்பு வரும். ஆடைகள் கொடுத்தால், இதைவிட நல்ல ஆடைகள்
தரக் கூடாதா என்று நினைப்பார்கள். இதே மாதிரி மற்ற தானங்களிலும் ஏற்படும்.
ஆனால் ஒருவருக்குச் சாப்பாடு போட்டால், அவர் வயிறு நிறைந்துவிட்ட பிறகு மேலே ஒரு கரண்டி அன்னம் அளித்தாலும் கையை வைத்துத் தடுத்து “போதும், போதும்” என்று கூறுவார்கள். மேலும் வாயார வாழ்த்தவும் செய்வார்கள்.
எது மேலான தானம்?
எதனால் அதிக நன்மை கிடைக்கும்?
தானம் பெறத் தக்கவனை அணுகி தானம் செய்தல் மேலானது. உத்தமம். ஒருவரை அழைத்து தானம்செய்வது மத்திமம். யாசிப்பவனுக்கு தானம்செய்வது, மட்டமானது. சேவைசெய்தவனுக்கு கொடுத்த தானமோ பயனற்றது.
தானம் பெறத் தக்கவரின் இருப்பிடம் சென்று யாதொரு தானம் டுக்கப்படுகிறதோ
அது அளவற்ற பயனைத் தரும்.
மைமோனிடீஸ் (Maimonidies – வைத்தியர், தத்துவ ஞானி (1135 – 1204) யூத மதத்தைச் சேர்ந்தவர்) ஒரு கட்டுரையில் தானத்தின் எட்டு படிகளைப்
பற்றி விளக்குகிறார். தானத்தின் எட்டு படிகள் — கீழேயிருந்து
முதல் படி -மனத்திற்குப் பிடிக்காமலோ, மன வருத்தத்தோடோ கொடுப்பது. ‘
இந்த தானம் கையால் கொடுக்கும் தானம். இருதயத்திலிருந்து வரும் தானம் அல்ல.’
2ஆவது படி -சந்தோஷத்தோடு, ஆனால் கேட்பவர் தேவைக்குக்குறைவாகக்
கொடுக்கும் தானம்.
3ஆவது படி -சந்தோஷமாகவும், தேவையைப் பூர்த்திசெய்யும் வண்ணம ஆனால் கேட்ட பிறகு கொடுக்கும் தானம்.
4ஆவது படி -சந்தோஷமாகவும், கேட்காமலேயே தேவைக்கேற்ற தானத்தை தானம் பெறுபவர் கையில் கொடுத்து அவரை வெட்கப்படும்படி
செய்யும் தானம்.
5ஆவது படி- யாருக்காக தானம் கொடுக்கப்பட்டது என்ற தெரியாமலேயே தானம் செய்வது. முன்னோர்களில் சிலர் தங்கள் வீட்டு முற்றங்களில்
பண மூட்டைகளை தொங்கவிடுவார்களாம். பணம் தேவையுள்ளவர்கள் கொடுத்தவருக்குத் தெரியாமலேயே எடுத்துச் செல்வார்களாம்.
6ஆவது படி -தானம் கொடுத்தவரின் பெயர் விளம்பரப்படுத்தாமலேயே கொடுக்கப்படும் தானம். முந்தைய காலத்தில் சில நல்லவர்கள்
யாருக்கு உதவி தேவையோ அவர்கள் வீட்டுக்கு தானப் பொருள்களை அனுப்புவது உண்டு. யார் அனுப்பினர் என்பது பெறுபவருக்குத் தெரியாது.
7ஆவது படி -கொடுப்பவருக்கும் யாருக்கு கொடுக்கிறோம் என்று தெரியாது. வாங்கியவருக்கும் யாரிடமிருந்து வந்தது என்றுதெரியாது. இந்த தானம் சிறந்தது.
ஒரு பொது இடத்தில் (உதாரணம் கோவிலில் ஒரு அறை)
தானப் பொருள் கொடுக்கப்படும். வேண்டியவர்களுக்குத் தகுதிக்கு ஏற்றபட
விநியோகிக்கப்படும்.
8ஆவது படி -எல்லாவற்றிற்க்கும் மேலான உயர்ந்த தானம், ஏழ்மையை ஒழிக்கும் முயற்சிகள். “Do not give a person a fish a day. But teach him how to fish.”
“ஒரு மனிதனுக்கு தினந்தோறும் ஒரு மீனை தானமாகக் கொடுக்காதே. அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்துச் சொந்தக் காலில் நிற்க வை”
என்ற பழமொழிக்கு ஏற்றவாறு தேவை என்று வருகிறவர்களுக்கு ஒரு தொழிலையோ, வியாபாரத்தையோ கற்றுக்கொள்ள வசதிகள் செய்வது
மிகப் பெரிய தானம். இந்த தானம்தான் அவர்களை மற்றவர்களிடம்
கை ஏந்தி நிற்காத நல்ல தன்மானமுள்ள மனிதர்களாக மாற்றும்.
இப்படி வெவ்வேறு விதமான தானங்கள் செய்து வழிகாட்டிகளாக இருந்த எத்தனையோ மகான்கள், பெரியோர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய கதைகள் அடிக்கடி சொல்லப்படுகின்றன.
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி, நள்ளி, சிபி சக்ரவர்த்தி, திலீபன், கர்ணன்…
இப்படி எத்தனையோ பெரியவர்களின் கதைகள் கேட்டிருப்பீர்கள்.
எனக்குப் பிடித்தக் கதைகள் இரண்டு.
ஒன்று மகாபாரதத்தில் வருகிறது. ‘தரும புத்திரர்களும் அணிலும்’ என்ற கதை.
மகாபாரதத்தில் கடைசிப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது.
எல்லோருக்கும் தெரிந்த கதை. கதையைப் படிக்க விரும்புகிறவர்கள் ராஜாஜி எழுதிய ‘வியாசர் விருந்து” புத்தகத்தையோ அல்லது அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘Mahabharata’ புத்தகத்தையோ (A Pound of Flour) படிக்கவும்
நான் சொல்லப்போகும் கதை அவ்வளவாகப் (popular) பிரபலமாகாத கதை.
ரந்திதேவன் என்ற ஒரு அரசனின் கதை. பாகவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
மகாத்மா காந்திக்கு வழிகாட்டியாக இருந்த ஒரு கதை. ஒரு சமயம் ரந்திதேவனின் நாடு கடும் பஞ்சத்தால் தாக்கப்பட்டது. அரசன் தன்னுடைய சொத்தையெல்லாம் மக்களுடைய பசியையும், கஷ்டங்களையும் தீர்க்கச் செலவிட்டான்.மக்களுடைய கஷ்டங்களை நினைத்து வருந்தி 48 நாள் உண்ணாவிரதம் இருந்தான்.
தண்ணீர்கூடக் குடிக்கவில்லை.
பஞ்சம் தீர்ந்து மக்களுக்கு உணவு கிடைக்கிறது என்ற நிலை ஏற்பட்டவுடன், 49ஆம் நாள் உண்ணாவிரதத்தை முடித்துவிடத் தீர்மானித்தான். ஒரு கவளம் உணவும் ஒரு கோப்பை தண்ணீரும் அவன் முன் வைக்கப்பட்டன. ரந்திதேவன் சாப்பிட ஆரம்பிக்க, அந்த சமயம் ஒரு பிராமணன் வந்து “ஐயா, பசிக்கிறது. ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்றான். அரசனும் ஒரு பகுதி அன்னத்தை அவனுக்குக் கொடுத்தான். மறுபடி சாப்பிட ஆரம்பிக்கும் சமயம், ஒரு ஏழை விவசாயி வந்து “பசி” என்று முறையிட்டான் அவனுக்கும் அரசன் ஒரு பகுதியைக் கொடுத்தான்.
மீதியைச் சாப்பிட முயற்சி செய்தபோது ஒரு தாழ்ந்த குடிமகன் தன்னுடைய நாய்களோடு வந்து “உணவு வேண்டும்” என்று கேட்டான். மீதியுள்ள உணவை அவனுக்கும் அவன் நாய்களுக்கும் கொடுத்துவிட்டுத் தண்ணீரையாவது குடிக்கலாம் என்று நினைத்த போது ஒரு புலையன் “ஐயா, தாகமாக இருக்கிறது.
குடிக்கத் தண்ணீர் தாருங்கள்” என்று கேட்டான். அரசன் தயங்காமல் அந்தத் தண்ணீரை அந்தப் புலையனுக்குக் கொடுத்தான். அப்போது ரந்திதேவன் சொன்ன இரண்டு பாட்டுகள் மிகவும் உயர்ந்த கருத்துகள் கொண்டவை.
முதலாவது நான் கடவுளிடமிருந்து மோட்சத்தயோ அஷ்டமா சித்திகளையோ பெற ஆசைப்படவில்லை. மறுபடி பிறவாத நிலையையும் ஆசைப்படவில்லை.
என்னுடைய ஒரே ஆசை மக்களின் மனத்தில் இடம்பெற்று அவர்கள் சுக துக்கங்களில் பங்குகொண்டு அவர்களுக்குச் சேவை செய்யவே விரும்புகிறேன்.
இரண்டாவது. ‘தாகம்’ என்று கேட்டு வந்தவனுக்குத் தண்ணீர் கொடுத்த மாத்திரத்தில், என்னுடைய பசி, தாகம், களைப்பு, சோர்வு, வருத்தம், ஏமாற்றம்
எல்லாம் நொடிப்பொழுதில் மறைந்துவிட்டன. எப்பேர்ப்பட்ட தியாகம்?
கதை முடிவு —சுபம். மும்மூர்த்திகளும் அவனுக்குக் காட்சி அளித்து அவனை வாழ்த்தினார்கள்.
நிறையவே தானத்தைப் பற்றி எழுதியாயிற்று.
நாம் எல்லோரும் நம்மால் முடிந்த
தானத்தை செய்ய முயற்சிப்போம்.
கடைசியாக, கபீர்தாஸின் ஒரு வாக்கியம்:
நீங்கள் இந்த உலகத்தில் தோன்றும்போதுhttp://www.blogger.com/img/blank.gif
கைகளை இறுக்கி மூடிக்கொண்டு வந்தீர்கள்.
நீங்கள் உலகத்தை விட்டுப் போகும் போது
திறந்த கைகளோடு போகப்போகிறீர்கள்.
நீங்கள் உயிரோடு இருக்கும் போது
கைகளை நன்றாகத் திறந்து
மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுங்கள்.
குப்பையான இட்லிவடையில் ஒரு மாறுதலுக்கு குப்பை பதிவு!. எனக்கும் வயசாகிறது இல்லையா?
மேலும் குப்பையை கிளற... இங்கே செல்லுங்கள் http://tsnagarajan.blogspot.com/
Posted by IdlyVadai at 11/08/2011 12:47:00 PM 8 comments
Labels: சிறந்த கட்டுரை, விருந்தினர்
Monday, November 07, 2011
உடன்பிறப்பு கடிதங்கள்...
நேற்று தினமலர் கலைஞருக்கு ஒரு 8 பக்க கடிதம் பற்றி எழுதியிருந்தது. உடனே இன்று முரசொலியில் அதற்கு கலைஞர் பதில் சொல்லிவிட்டார்.
கடித விவரம் கீழே...
உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களுக்கு,
தாங்கள் உடன்பிறப்பே என்று எங்களை அழைக்கும் பாசச் சொற்களை கேட்டவுடன், எங்கள் உடம்பில் உள்ள மயிர்க் கால்கள் எழுந்து நிற்கும். தங்களின் உடன்பிறப்பு கடிதங்களை பார்த்தாலே எங்களுக்கு உணர்வுபூர்வமாக தெம்பு உண்டாகும். இந்நிலை பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்தது. நாங்களெல்லாம் அவசர நிலை காலத்திலும், எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலும், எங்களின் குடும்ப நன்மை தீமைகளையெல்லாம் கவனிக்காமல் கலைஞர், கழகம் தான் முக்கியம் என்று பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றோம். இன்றைக்கு நாங்கள் தி.மு.க.வில் அன்னியப்பட்டுள்ளோம். எ.வ.வேலு, ஜெகத்ரட்சகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்., சேடப்பட்டி முத்தையா, ஈரோடு முத்துசாமி, கரூர் சின்னசாமி, ரகுபதி, சத்யமூர்த்தி, செல்வகணபதி, கருப்பசாமிபாண்டியன், கம்பம் செல்வேந்திரன், அழகு திருநாவுக்கரசு, தென்னவன், மைதின்கான், இந்திராகுமாரி, கே.பி.ராமலிங்கம், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, டி.கே.எஸ். இளங்கோவன் (இவரின் தந்தை சீனிவாசன் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் பாடநூல் நிறுவனத்தின் தலைவர், எம்.பி.) என அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்களுக்குத்தான் இன்றைக்கு தி.மு.க.வில் முதல் மரியாதை. உங்களின் உடன்பிறப்புகளான எங்களுக்கு கறுப்பு - சிவப்பு கொடி, உதயசூரியன், கலைஞர் இதை தவிர வேறு ஒன்றும் தெரியாது. இதனாலேயே நாங்கள் எல்லாம் அன்னியப்பட்டு வெளியே இருக்கிறோம்.
அ.தி.மு.க.விலிருந்து வந்த பிரமுகர்கள் உங்களோடும், ஸ்டாலினுடனும் வலம் வருவதை பார்த்து வேதனைப்பட்டு வெட்கப்படுகிறோம். நாங்கள் எல்லாம் பெரியாரின் வழிவந்த சுயமரியாதைக்காரர்கள். தனி மனிதர்களின் பலவீனங்களை அறிந்து சேவை செய்யும் பழைய அ.தி.மு.க.காரர்கள் போன்று எங்களால் இருக்க முடியாது. இன்றைக்கு கட்சி பழைய தி.மு.க. இல்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி காலங்களில் சம்பாதித்தவர்கள், பயன் அடைந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு தி.மு.க.வில் உள்ளனர். சுடுகாட்டு ஊழல், பல்பொடி, செருப்பு போன்றவற்றில் ஊழல் செய்தவர்கள் எல்லாம் இன்றைக்கு உதயசூரியனுக்கு வாக்குக் கேட்கின்ற துரதிஷ்டமான நிலை உள்ளது. இதற்கெல்லாம் என்ன காரணம்?
இன்றைக்கு தி.மு.க.வில் அதிகார மையங்கள் பல உள்ளன. ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தமிழரசு, ராசாத்தி அம்மாள்; செல்வி, அவருடைய மருமகன் ஜோதி; இவர்களோடு மட்டுமல்லாமல், உதயநிதி, சபரீஸ், மாறன் சகோதரர்கள், அழகிரியின் பிள்ளைகள் வரை கட்சியில் கோலோச்சுகின்றனர். இந்த அதிகார மையங்கள் எடுப்பதுதான் கட்சியின் முடிவாக உள்ளது. இவர்களின் தயவு இல்லாமல் தி.மு.க.வில் இருக்க முடியாது. இவர்கள் மனது வைத்தால்தான் மந்திரி, எம்.பி. எம்.எல்.ஏ., கட்சி பதவிகள் எல்லாம் கிடைக்கும். இவர்களுக்கு வேண்டிய பணிகளை அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்கள் சமயமறிந்து பூர்த்தி செய்வதால்தான் பழைய அ.தி.மு.க.வினரை உங்கள் குடும்பத்தினருக்கு பிடித்து விட்டது.
எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில், தி.மு.க.வில் ஒன்றுபட்ட சென்னை மாவட்ட செயலாளராக இருந்த டி.ஆர்.பாலு இன்றைக்கு ஒதுக்கப்படுகிறார். கட்சியின் முன்னோடிகளான சா.கணேசன், திருச்சி சிவா, காதர் பாட்சா (எ) வெள்ளைசாமி, ஜி.எம்.ஷா என பலர் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறார். கட்சியில் என்ன நடக்கிறது என்பது பேராசிரியர் அன்பழகனுக்கோ, ஆர்க்காடு வீராசாமிக்கோ தெரிவதில்லை. ஆர்க்காடு வீராசாமியின் வசமிருந்த பொருளாளர் பதவியை பிடுங்கி ஸ்டாலினிடம் கொடுத்து அவரை நிலை நிறுத்தினீர்கள். ஆனால் அவரோ ஊரை சுற்றி வருகிறாரே தவிர, பிரச்சினைகளை தீர்க்க கூடிய சாதூர்யம் அவரிடம் இல்லை. அவரை நம்பியவர்களுக்கு நம்பிக்கை அளிக்காதவராக அவர் இருக்கிறார். மாறாக, அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்களுக்கு நம்பிக்கையானவராக இருக்கிறார். நெருக்கடியான நேரத்தில் ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருந்த பரிதி, வக்கீல் பாபு, அண்ணாநகர் ரமேஷ், நாகை அசோகன், திருச்சி பரணிகுமார் போன்றோர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் போய்விட்டார்கள். ஸ்டாலினின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கும் பொழுது, அவரை நம்பும் கழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகும். ஸ்டாலின் - அழகிரி என்கிற சகோதர யுத்தத்தில் ஸ்டாலினை நம்பியவர்களை காப்பாற்றாத ஸ்டாலின் எப்படி களத்தில் நிற்பார். சொந்த அண்ணனோட மோத திராணியில்லாதவருக்கு அரசியலில் போர்க்குணம் எப்படி இருக்கும். தேவைகள் அறிந்து பூர்த்தி செய்யும் பழைய அ.தி.மு.க.வினர்தான் இவருக்கு சரியாக இருப்பார்கள். எங்களைப் போன்றவர்களை, உண்மையான கழகத் தொண்டர்களை இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் இவர் சட்டமன்றத்தில் சண்டமாருதம் செய்வாரா என்பது சந்தேகமே. தங்களுக்கு வணக்கம் செய்தால் அதை ஏற்றுக் கொண்டு, "என்ன?' என்று நீங்கள் கேட்பீர்கள். ஆனால் ஸ்டாலினுக்கு வணக்கம் செலுத்தினால், தலையை கூட அசைக்காமல் முறைத்துக் கொண்டு செல்வார்.
அழகிரி, திருமங்கலம் தேர்தலுக்குப்பின் தங்களால் பல வாய்ப்புகள் தரப்பட்டன. ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது இவர் செய்த அடாவடித்தனங்களை மதுரையில் உள்ள எங்களை போன்ற கட்சிக்காரர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்களுக்கு மகனாக பிறந்த அழகிரிக்கு உங்களுக்கு இருந்த அரசியல் கண்ணியம், கட்டுப்பாடு எதுவும் இல்லை. வரம்பற்ற முறையில் இவர் மதுரையை வேட்டையாடியதை தங்களால் இப்போது தடுத்து நிறுத்த முடியாததால் - மதுரையில் மதுரை முத்து போன்றவர்கள் வளர்த்த கட்சியை மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்டங்கள் முழுதும், அஞ்சாநெஞ்சன் என்று சொல்லிக் கொண்டு கட்சியின் மரியாதையை ஒழித்துக் கட்டினார் அழகிரி. குறிப்பிட்ட சில ரௌடிகளை தன்னருகில் வைத்துக் கொண்டு இவர் செய்த அடாவடிகள் மக்களை முகம் சுழிக்க வைத்தது. தற்போதைய அ.தி.மு.க. மேயர் ராஜன் செல்லப்பாவுக்கு உதவியாளராக இருந்த - பஜ்ஜி சுட்டு விற்றுக் கொண்டிருந்த - பொட்டு சுரேஷ் சொல்வதுதான் சட்டமாக இபுருந்தது. மத்திய அமைச்சராக இருந்துகொண்டு, டில்லிக்குச் செல்லாமல் பொறுப்புகளை கவனிக்காமலும் இவர் இருந்ததை நீங்கள் மகனென்று பாராமல் தட்டிக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் தட்டிக் கேட்க முடியவில்லை. அதன் பலன்தான் அழகிரி வசிக்கும் இடத்தில் தி.மு.க., உள்ளாட்சி தேர்தலில் 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இன்றைக்கு தூங்காநகரம் அவரது பிடியிலிருந்து மீண்டு நிம்மதியாக இருக்கின்றது.
கனிமொழிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுத்து, 2ஜி ஊழலை தாராளமாக செய்ததுதான் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தோல்விக்கு காரணமாக அமைந்தது. பாசத்தால் மகள் என்று டில்லிக்கு அனுப்பினீர்கள். டில்லி மத்திய அரசு நிர்வாகமே கனிமொழி நடவடிக்கையால், 2ஜி ஊழலால் கேவலப்பட்டது. கனிமொழியும், ராசாவும் சேர்ந்து செய்த நடவடிக்கைகளால் நாடு சிரித்தது. அந்த மகளுக்கு கட்சி பணிகளையும் கவனிக்காமல், அவருக்கு எப்போது ஜாமின் கிடைக்கும் என மௌன முனியாக ஏங்கும் தங்களுக்கு நாங்கள் என்ன சொல்லமுடியம். கனிமொழியின் சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சிக்கு அரசாங்கமே திட்டமிட்டு சட்டத்திற்கு புறம்பாக உதவியது. கனிமொழி ஒரு சிறு குழுவை தன்னுடன் வைத்துக்கொண்டு, அவர்களுக்கு வேண்டிய பதவிகளையும் வாங்கி கொடுத்துள்ளார். போன் ஒட்டு கேட்பில் மந்திரி பதவியை இழந்த பூங்கோதை ஆலடி அருணாவிற்கு உடனே அமைச்சரவையில் இடம் கொடுத்ததற்கு கனிமொழியும், ராசாத்தி அம்மாளின் சிபாரிசும் தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததுதான். அப்படியானால் தி.மு.க. சமதர்ம கொள்கையை காக்கும் என்பதையெல்லாம் விட்டுவிட வேண்டியதுதான்.
தலைவரையும், கழகத்தையும் விமர்சித்து வெளியேறிய ஆலடி அருணா மகள் பூங்கோதைக்கும் தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம்? அவரை தேடி பிடித்து தேர்தலில் போட்டியிட வைத்த, வெற்றபெற செய்து, அமைச்சரவையிலும் பதவி அளித்தீர்கள். கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல என்று சொல்லும் தாங்கள், எந்த தியாகமும் செய்யாத பூங்கோதைக்கு மந்திரி பதவி அளித்தது ஏன்? இந்த அதர்மத்தை எங்கே போய் சொல்ல, நாடாளுமன்றத்திற்கு செல்பவர்கள் வசந்தி ஸ்டான்லி போன்ற தகுதியற்ற நபர்களைத்தான் கட்சி தேர்ந்தெடுக்கிறது. பொருத்தமான பலர் இப்பதவிகளுக்கு இருந்தும் அவர்களை திட்டமிட்டு புறக்கணிக்கிறீர்கள். நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வும் உங்கள் அதிகார மையங்களின் கண்ணசைவில்தான் நடைபெறுகின்றது. செல்வகணபதி அப்படித்தான் பொறுப்பை பெற்றார். இவற்றையெல்லாம் பார்க்கையில் தி.மு.க.வில் கொள்கை பிடிப்பும், தியாகங்களும், போராட்டங்களும் இல்லாமல் உங்கள் சுற்றத்தாருக்கு பிடித்துவிட்டால் பதவியை வாங்கி விடலாம். அதற்காக கனிமொழியின் கடைக்கண் பார்வை கிடைத்துவிட்டால் தங்களின் கனிவான அணுகுமுறை கிடைக்கும்.
ராசாத்தி அம்மாள், பூங்கோதை, கனிமொழி சம்பந்தமான விவகாரங்கள், 2ஜி விஷயத்தில் பேசிய பேச்சுக்கள் யாவும் ஒலிநாடா வடிவில் நிரந்தர ஆவணங்களாக என்றைக்கும் இருக்கும். இவர்கள் வருங்கால சந்ததியினரின் பரிகாசத்திற்கு நிச்சியம் ஆளாவார்கள். முரசொலி மாறனின் மகன்கள் என்பதற்காக மாறன் சகோதரர்களை அரசியலில் உருவாக்கி விட்டீர்கள். அவர்களும் தங்களால் முடிந்த அளவு தி.மு.க. மேய்ச்சல் காட்டில் சுற்றினார்கள்.இவ்வளவு அதிகார மையங்களின் ஆட்டம் ஒரு பக்கம், உங்கள் பேரப் பிள்ளைகள் திரைப்படம் எடுக்கிறேன் என அடித்த லூட்டிகள், அவர்கள் செய்த அராஜகங்களை பத்திரிகைகள் பத்தி பத்தியாக எழுதின. பேரப் பிள்ளைகள் நள்ளிரவில் நட்சத்திர ஓட்டல்களில் ஆடிய ஆட்டங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. உட்லண்ட்ஸ் ஓட்டலில் துப்பாக்கி கொண்ட மிரட்டிய உங்கள் வாரிசுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நெஞ்சுக்கு நீதி எழுதிய தலைவரே, உங்கள் மனசாட்சியை தொட்டுப் பாருங்கள்.
ஸ்டாலின், அழகிரி, கனிமொழி இவர்கள் என்ன தி.மு.க.வை வளர்த்த ஐம்பெரும் தலைவர்களா? ஏன் இவர்களை தட்டிக் கேட்க முடியவில்லை? அல்லது உங்களால் முடியவில்லையா? அத்தகைய இயலாமைக்கு காரணம் என்ன? அவசரநிலைக் காலத்தில் இந்திராவையே சவாலுக்கு அழைத்த நீங்கள், தற்போது உங்கள் குடும்ப உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடியாதா? அல்லது குடும்பத்தார் மீது உள்ள அச்சமா? இதுபோன்ற சந்தேகங்கள் எங்களுக்கு வருகின்றது. கட்சிக்காக உழைத்தத் தொண்டன் என்ற காரணத்திற்காக இவற்றையெல்லாம் கூறுகிறோம். இதனை குற்றச்சாட்டாக கருதாமல், தாங்கள் சுயபரிசோதனை செய்யுங்கள். தவறுகளை களையுங்கள், பிரச்சினைகளுக்கு முடிவு காணுங்கள். அவ்வாறு நடைபெறவில்லையெனில், எதிர்கால வரலாறு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தூற்றும். முகலாய பேரரசில் தந்தைக்கும், பிள்ளைகளுக்கும் நடைபெற்ற சண்டைகளைப் பற்றிய செய்திகள் இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன. அம்மாதிரியான நிலை தி.மு.க.வுக்கு வந்துவிடக் கூடாது என்ற பயத்தில், கழக உறுப்பினர் உரிமை சீட்டு வைத்துள்ள தகுதியால் இதை உங்களிடம் மூடி மறைக்காமல் சொல்கிறோம். அ.தி.மு.க.வில் இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.டி.எஸ்.ஸோடு இருந்த ராஜா சங்கர்தான் தற்போது ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கிறார். அவர் மூலம்தான் எந்த பதவியையும் பெறமுடியும் என்ற சூழல் நிலவுகின்றது. அழகிரியை பொறுத்த வரையில், அவரது மகன், மகள் இவர்கள் மூலம் தான் கட்சியில் பொறுப்புகளை பெற முடியும்.
எங்களைப் போன்றவர்களை நீங்கள் அழைப்பது போராட்டம், ஜெயில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், வாழ்க முழக்கங்கள் செய்வதற்காகத்தான். நீங்கள் கோலோச்சிய கோட்டையில் அமைச்சர்களின் அறையை கூட நாங்கள் எட்டிப் பார்க்க அனுமதி கிடைக்காது. ஆனாலும் உங்கள் மீது விசுவாசமிக்க தொண்டர்களாக நாங்கள் இருக்கிறோம்.மு.க.முத்து என்ற மகனுக்காக எம்.ஜி.ஆரை இழந்தீர்கள். ஸ்டாலினுக்காக வைகோ வெளியேற்றப்பட்டார். அழகிரி என்ற மகனை கட்டுப்படுத்தாததால் பல பிரச்சினைகள், கனிமொழியையும், ராசாவையும் கட்டுப்படுத்த இயலாததால் இந்தியாவே நம்மை பார்த்து சிரிக்கும் அளவிலான 2ஜி ஊழலால் தேர்தலில் தோல்வி. இது எல்லாம் தேவைதான்?
உங்கள் உழைப்புக்கு ஈடு சொல்ல முடியாது. நீங்கள் ஓய்வரியா சூரியன். ஆனால் குடும்ப பாசமும், உங்கள் ரத்த பாசங்களும் செய்கின்ற அத்துமீறங்களால் அறிவாலயம் பாதிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளுக்கு மேல் மாவட்ட செயலாளர்களாக இருப்பவர்கள் குறுநில மன்னர்கள் போல எங்களை மதிப்பதில்லை. நீங்கள் வரும்பொழுது அலங்கார விளக்கு அமைத்து, பணம் கொடுத்து கூட்டம் கூட்டியும் நாடகம் ஆடி வருகிறார்கள். சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா; விழுப்புரத்தில் பொன்முடி, அவரது மகன் கௌதம் சிகாமணி; கோவையில் பொங்கலூர் மற்றும் அவரது மகன் பாரி; ஈரோட்டில் பண்பு தெரியாத எம்.கே.பி.ராஜா; திருச்சியில் நேரு, அவரின் தம்பி ராமஜெயம்; கடலூரில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்; தஞ்சாவூரில் பழனிமாணிக்கம், அவருடைய தம்பி; இராமநாதபுரத்தில் சுப.தங்கவேலன், அவரது மகன் சுப.சம்பத்; மதுரை, தேனி, சிவகங்கையில் அழகிரி, அவரை சார்ந்தவர்களுடைய அட்டகாசம்; தூத்துக்குடியில் பெரியசாமி, அவரது மகள் கீதா ஜீவன்; திருநெல்வேலியில் கருப்பசாமி பாண்டியன், அவரது மகன் சங்கர், ஆவுடையப்பன், அவரது மகன் பிரபாகரன்; கன்னியாகுமரியில் சுரேஷ்ராஜன், அவரது மனைவி பாரதி னெ பரிவாரங்களின் கீழ் எங்களைப் போன்றத் தொண்டர்கள் பணியாற்ற முடியுமா? மிருகத்தனமாக பண்பாடற்று நடந்து கொள்ளும் இந்த மாவட்டச் செயலாளர்களிடையே உள்கட்சி ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியுமா? மாவட்டச் செயலாளர்களை மாற்றப் போகிறீர்கள் என்று முடிவெடுத்து, அந்த முடிவை அமுல்படுத்தாதது எங்களை போன்றவர்களை வருத்தமடைய செய்துள்ளது. அது நடைமுறைக்கு வராததன் காரணம் என்ன?
இவையெல்லாம், ஒரு உறையில் ஒரு வாள்தான் இருக்கும் என்று நீங்கள் சொல்லிய விளக்கத்திற்கு சரியாக பொருந்தவில்லை. ஒரு பக்கம் ஸ்டாலின்; இன்னொரு பக்கம் அழகிரி; மற்றொரு பக்கம் கனிமொழி, ராசாத்தி; இனனொரு பக்கம் மாறன் சகோதரர்கள் என அதிகார மையங்களை வைத்துவிட்டீர்கள். உங்களுக்கு பின் இவர்களில் யார் என்பது தான் கேள்வி. தி.மு.க.வில் பிற்காலத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால், அண்ணா தி.மு.க.வைத் துவக்காமல் பெரியாரின் திராவிடர் கழகத்திலேயே இருந்திருப்பார். எத்தனை பேரின் தியாகங்கள், உழைப்பு, போராட்டங்கள், சிறைச்சாலை என கொண்டு, 1967இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஆலமரமாக வளர்ந்தது. அந்த ஆலமரத்தின் கீழ் இன்றைக்கு உண்மையான கழகத்தினர் இருக்க முடியாமல், உங்கள் குடும்பத்தாரும், எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அவரோடு பதவி பெற்று வாழ்ந்தோரும், ஜெயலலிதாவிடம் வாழ்வு பெற்று ஊழலில் உழன்று, பின் அவரால் தூக்கி போடப்பட்ட கழிசடைகள்தான் தி.மு.க. ஆலமரத்தின் கீழ் வாழ்கின்றனர். எங்களை போன்ற கழக உடன்பிறப்புகள் 60 ஆண்டுகளாக தி.மு.க., உறுப்பினர்களாக இருந்தவர்களின் சொற்களுக்கு தற்போது தி.மு.க.,வில் மதிப்பு இல்லை. தி.மு.க.,விற்கு உழைத்த மதுரை முத்து. அன்பில் தர்மலிங்கம், உடுமலை நாராயணன், தூத்துக்குடி சாமி, ஏ.கோவிந்தசாமி, மதியழகன் போன்றோர்கள் இன்றைக்கு இருந்தால் இந்த நிலையை பார்த்து கண்ணீர் வடிப்பார்கள். தி.மு.க., துவக்கத்தில் குடும்ப பாசத்தோடு இருந்தனர். ஒரு பேச்சாளர் ஏதாவது ஒரு ஊருக்கு சென்று விட்டால் அங்குள்ள கட்சி உறுப்பினர் தங்கள் விருந்தினர் வந்துவிட்டார் என்பதைபோல தனது குடிசை வீட்டில் உபசரிப்பர். ஆனால் இன்றைக்கு உள்ள பேச்சாளர்களுக்கு நட்சத்திர ஓட்டலில் அறை மற்ற வசதிகள் செய்து தரவேண்டும்.
30- 40 ஆண்டுகளுக்கு முன்னாள் சேலத்தில் ஈ.ஆர்., கிருஷ்ணன் , வீரபாண்டி ஆறுமுகம், தர்மபுரியில் சின்னச்சாமி, திருச்சியில் அன்பில் தர்மலிங்கம், தஞ்சையில் மண்ணை நாராயணசாமி, கோ.சி.மணி, தென்னாற்காடு மாவட்டத்தில் நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி ராமச்சந்திரன், வண்டிப்பாளையம் சுப்பிரமணியம், விருத்தாச்சலம் செல்வராசு, செங்கல்பட்டில் மதுராந்தகம் ஆறுமுகம், சி.வி.என். அண்ணாமலை, ராஜரத்தினம், மதுரையில் முத்து, பொன்.முத்துராமலிங்கம், ராமநாதபுரத்தில் தா.கிருஷ்ணன், தென்னரசு, பெ.சீனிவாசன், தங்கப்பாண்டியன், திருநெல்வேலியில் ரத்தினவேல் பாண்டியன், வை.கோபால்சாமி, கன்னியாகுமரியில் எம்.சி.பாலன், போன்ற தளபதிகள் கட்சிப்பிடிப்போடு தங்கள் பகுதியில் உள்ள தொண்டர்களை அரவணைத்து வழிநடத்தினர். ஆனால் இன்றைக்கு வழிநடத்தும் பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போன்றவர்களிடம் இந்த பாச உணர்வை எதிர்பார்க்க முடியவில்லையே. பிறகு எப்படி கட்சித் தொண்டன் உரிமையோடு பணி ஆற்றுவான்.
தற்போது நடந்த முப்பெரும் விழாவில் பாரதிதாசன் யார் என்று தெரியாதது மட்டுமல்ல, கட்சிக்கு தியாகம் செய்யாத ஒருவருக்கு பாரதிதாசன் விருது, பாரதிதாசன் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் கண்ணீர் வடித்திருப்பார். கழக ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களும் மாவட் செயலாளர்களும், அ.தி.மு.க.,வினரிடம் சேர்ந்து கொண்டு மணல் கொள்ளை ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு கொள்ளையடிக்கும்போது நாங்கள் எல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டு கண்ணீர் வடித்தோம். 1991 - 96 ஜெயலலிதா ஆட்சி காலம் ஊழலின் உச்சம் என தாங்கள் கூறினீர்கள். அதற்கு மாறாக 2001-06 ஆட்சி கால மெகா ஊழல் ஆட்சியாக அமைந்தது. உங்கள் கவனத்திற்கு வராமலேயே மந்திரிகள் அடித்த கொள்ளைகள் ஏராளம். இந்நிலையில் உங்கள் ஜெயலலிதாவை குறை சொல்ல தமக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.
குடும்ப பாசத்தில் இருந்து மீண்டு வாருங்கள் தலைவரே: தலைவரே, குறிப்பிடப்பட்டுள்ள இந்த விவரங்கள் எல்லாம் உண்மையானவை என்பது உங்களுக்கு நன்கு தெரியும். இந்த பிரச்னைகள போக்கும் வழியும் , ஆற்றலும் உங்களுக்குத்தான் உண்டு. தங்களால் தங்கள் குடும்ப வாரிசுகள் அனைவரும் வசதியாக வாழ்கின்றனர். திருவாரூரில் இருந்து ரயிலில் கள்ளத்தனமாக வந்த தாங்கள் இதைவிட தங்கள் குடும்பத்திற்கு வேறு என்ன செய்ய வேண்டும். உங்கள் குடும்பத்திற்கு இனிமேல் எந்த பிரச்னையும் கவலையும் இல்லை. குடும்ப பாசத்தில் இருந்து மீண்டு வாருங்கள் தலைவரே. கட்சியில் உண்மையானன ஜனநாயகத்தை வழங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சும் சர்வாதிகார குறுநில மன்னர்களான மாவட் டசெயலாளர்களை மாற்றுங்கள். ஜெயலலிதாவால் விரட்ட்பட்டு நம்மிடம் அடைக்ககலம் பெற்ற அ.தி.மு.க.,வினரை சற்று அடக்கி வையுங்கள். இந்த மூன்று நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டால் கழகம் வீறு கொண்டு எழும்.
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் என்னவென்றால்; என் குடும்பத்திற்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டேன். இனி கட்சியும் தமிழக நலனும்தான் எனக்கு முக்கியம் என அறிவித்து விட்டு அறிவாலயத்தில் குடியேறி விடுங்கள். எங்களை போன்ற கட்சித்தொண்டர்கள் உங்களை பாதுகாப்பார்கள். அப்படி இல்லையென்றால் வரலாறு உங்களை பழிக்கும். தமிழன தலைவர் என்ற பட்டத்தை எதிர்கால சமுதாயம் ஏற்காமல் வெறும் குடும்பத்தலைவர் என்ற பட்டத்தைத்தான் வழங்கும். இந்த கடிதம் எழுதும் நாங்கள் அனைவரும் எம்.எல்.ஏ., எம்.பி., ஆகும் கனவில் உள்ளவர்கள் அல்ல. எளிய தொண்டர்கள்தான். கூட்டங்களில் உங்கள் பேச்சை கேட்கும் கூட்டம்தான் நாங்கள். நீங்களும் கழகமும் உயர்வு பெற வேண்டும் என கருதுவோர் எழுதுகின்ற கடிதமாகும்.
இப்படிக்கு
உடன்பிறப்புகள்.
( நன்றி: தினமலர் )
உடன்பிறப்பே,
உலக அளவிலும் சரி, அல்லது இந்திய நாட்டளவிலும் சரி, எந்த இயக்கமும் ஒரு குறிப் பிட்ட குறிக்கோளை வென்றெடுப்பதற்காகவென்றே தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒரே குறிக்கோளை அடைவதற்காக அந்த இயக்கம் எடுக்கின்ற முயற்சிகளில் அல்லது வகுக்கின்ற வழிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு அல்லது பிளவுகள் தோன்றி பல்வேறு கிளைகளாகப்பிரிந்தாலுங்கூட, குறிப்பிட்ட ஒரு மரத்தின் கிளைதான் அது என்ற நிலையில் இயங்குவதும், நம் கண் முன்னாலே காணு கின்ற சரித்திர உண்மை களாகும்.
சுதந்திரம் என்ற ஒரே இலட்சியத்திற்காக காந்தி அடிகளால் வழி நடத்தப்பட்ட காங்கிரஸ் பேரியக்கம் என்னும் விடுதலை இயக்கத்தில் மாவீரர் சுபாஷ் சந்திரபோசும், பட்டாபி சீதா ராமைய்யாவும் பிரிந்து நின்று காங்கிரஸ் தலைமைக்குப்போட்டியிட்டபோது; "பட்டாபி சீதாராமையா தோல்வி தனது தோல்வி" என்கிற அளவிற்கு - வரிந்து கட்டிக்கொண்டு பணியாற்றிய வார்தா முனிவர், உத்தமர் காந்தியடிகள் அந்தப்போட்டியில் தோற்றுத் தான் போனார். இது வரலாற்று உண்மை.
அந்தப் போட்டியில் வென்ற சுபாஷ் சந்திர போஸ் இந்திய விடுதலைக்காக புரட்சி மார்க்கத்தைப்பின்பற்றி தேவர் திருமகனோடு இணைந்து ஐ.என்.ஏ. படையை உருவாக்கி, பிரிட்டிஷ்காரர்களோடு மோதியதும் அனை வரும் அறிந்த ஒன்றாகும்.
"வெள்ளையனே வெளியேறு" என்ற இலட்சியம் நிறைவேற வேண்டுமென்று அதற்காகத் துப்பாக்கி ஏந்தி தூக்குமேடைக்குச்சென்ற பகவத் சிங் ஒருபுறம்! அந்த பகவத் சிங் கொள்கை, கோட்பாடு ஏற்கத்தக்கதல்ல என ஒதுங்கி நின்று அமைதி வழியில் அகிம்சா போராட்டம் நடத்திய அண்ணல் காந்தி அடிகள் மற்றொரு புறம்!
இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்காக ஓரணியில் குரல் கொடுத்த பண்டித நேரு, ஜனாப் ஜின்னா இருவரும் அந்த ஓரணியிலேயே நீடிக்காமல் தனித்தனி அணியாகி, தனித்தனி நாடுகளாக - இந்தியா, பாகிஸ்தான் எனப்பிரிந்ததும் வரலாற்றின் ஒரு பகுதியாகும்.
பரந்த இந்தியாவில் மட்டுமல்ல; அந்த இந்தியாவில் ஒரு பகுதியான தமிழகத்தில் காந்தி அடிகளின் வழிநின்று காங்கிரஸ் இயக்கத்தை வளர்த்தோர் எனச்சொல்லப்படுபவர்களில் ராஜாஜி, காமராஜரிடையே ஏற்பட்ட வேறுபாடு "கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது" என்ற சரித்திரத் தலைப்புகளாக ஆனதையும் யாரும் மறந்துவிட முடியாது.
காங்கிரசிலிருந்து "வைக்கம் வீரர்" பெரியார் பிரிந்ததும் - அவர் தலைமையை ஏற்றிருந்த சாமி சிதம்பரனார், ஜீவானந்தம், அய்யாமுத்து போன்றோர் அவரிடமிருந்து விலக நேர்ந்ததும்; அவ்வளவு ஏன்? அண்ணாவின் சேலம் மாநாட்டுத் தீர்மானத்தையேற்று, அய்யா பெரியார் முழங்கியதும்; அதன்பிறகு சில ஆண்டுகளில் "பெரியார் இன எழுச்சி சமுதாய இயக்கம் நடத்துவார்; நான் அந்த உணர்வுகள் அடங்கிய அரசியல் இயக்கம் நடத்துகிறேன்" என்று திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக்கழகம் கண்டதும்; இந்தியாவிலும், தமிழகத்திலும் எழுதப்பட்ட அரசியல் சரித்திரங்கள்! ஆனால், தனி வழி அமைத்துக் கொண்டு தனித்தனியே இயக்கம் நடத்திய யாரும் - (திருவாசகமணி பாலசுப்பிரமணியம்; ஒருவரைத்தவிர) - தொடக்கத் தில் கொண்ட குறிக்கோளை மாற்றிக் கொள்ளவும் இல்லை; மறந்துவிடவும் இல்லை!
"தினமலர்" பத்திரிகை திராவிட முன்னேற்றக் கழகத்தை இடித்துச் சிதைத்து குறு கலாக்குவதற்காக எடுக்கின்ற முயற்சி களின் தொடர்ச்சியாக, "உடன்பிறப்புகள்" என்ற பெயரால் ஒரு கற்பனைக்கட்டுரையை வெளியிட்டிருக்கின்றது. அந்தக்கட்டுரையின் உள் நோக்கத்தை உண்மையான உடன் பிறப்புகள் அனைவருமே உணர்ந்தே இருப்பார்கள். ஏனென்றால் "தினமலர்" நம்மைக்கொஞ்சி மகிழ்வது; பூதகி; கண்ணனைக்கொஞ்சி மகிழ்வது போல் நடித்து, அவனைக்கொல்லவே துணிந்தாள் என்று பாரதத்தில் ஒரு கிளைக்கதை உண்டே, அந்தக் கிளைக்கதையின் தலையாய கதாபாத்திரமான பூதகியின் பாத்திரத்தைத்தான் "தினமலர்" நாளேடு தாங்கிக் கொண்டு புறப்பட்டிருக்கிற தென்றால் அதில் துளியளவும் தவறில்லை.
அழகிய மங்கை உருவில் வந்து தாய்ப்பாசம் காட்டுவது போல் நடித்து, கண்ணனை பாலருந்தச்சொல்லி, அவனைக்கொன்றுவிட முற்பட்ட பாதகியாம் பூதகிக்கும், இன்று பசப்பு மொழி பேசி நம்மிடையே கசப்புணர்வை வளர்த்து கழகத்தை வீழ்த்திவிட பகற்கனவு காணும் படுபாவிகள் சிலருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அந்தப் படு பாவிகள் பத்திரிகை வடிவத்திலே நம்மிடையே வருவர். அந்த விஷநாகங்களில் ஒன்று பச்சைப் பாம்பு வடிவெடுத்து, பச்சை வண்ண பசுங்கிளையில் தன்னை மறைத்துக் கொண்டு, பாகுமொழி பேசுவதைக்கண்டு - கேட்டு - உடன் பிறப்புகள் யாரும் ஏமாற மாட்டார்கள்! எச்சரிக்கையாகவே இருப்பார்கள்!
அன்புள்ள,
மு.க.
( நன்றி: முரசொலி )
எல்லாம் பச்சை பச்சையாக இருக்கு இதில மஞ்சளா நான் என்ன சொல்ல
ஸ்மைலி கார்னர்: கண்ணன், பூதகி
Posted by IdlyVadai at 11/07/2011 05:40:00 PM 34 comments
Sunday, November 06, 2011
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 06-11-2011
அன்புள்ள முனிக்கு,
இந்த வார துக்ளக் பகுதியில் வந்த பக்தி கட்டுரை முதலில் .....
வர வர, கலைஞரின் பேச்சுக்கள், ரொம்ப சுவாரஸ்யமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. ‘அண்ணாவும் பெரியாரும்தான் எனது ஒரே தெய்வம்; அவர்களைத் தினமும் வணங்குகிறேன்’ – என்று அவர் கூறியிருப்பது, அவருடைய ‘லேட்டஸ்ட்’ பகுத்தறிவுப் பேச்சு.
‘தெய்வமே கிடையாது; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி, கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்’ என்றெல்லாம் பேசுகிற பகுத்தறிவுவாதிகள், அண்ணாவையும் பெரியாரையும் கடவுள் என்று கூறினால் – அவர்கள் இருவரையும் கிண்டல் செய்கிறார்களோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
சரி. அது ஒருபுறம் இருக்கட்டும். அவர்களைத் தினமும் வணங்குவதாகக் கலைஞர் கூறியிருக்கிறார். எப்படி? அவர்களுடைய படத்திற்கு முன்னின்று வணங்குவாரா? அல்லது அவர்களை மனதில் நினைத்துக் கொண்டு வணங்குவாரா? அவர்களுடைய உருவங்களைக் கற்பனையில் கொண்டு வந்து நிறுத்தி வணங்குவாரா? எப்படி வணங்குவார்? கையெடுத்துக் கும்பிடுவாரா? சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வாரா? மனதில் மரியாதை செலுத்துவாரா?
இதில் எதைச் செய்தாலும் – அதை யாருக்குச் செய்கிறார்? செத்தவர்களுக்குத்தானே? பகுத்தறிவு ரீதியாகப் பார்த்தால், இப்படி செத்தவர்களுக்குச் செய்யப்படுகிற மரியாதை அல்லது அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிற வணக்கம் – இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம்? நல்ல பகுத்தறிவு! கொஞ்சம் ஏமாந்தால், ‘பெரியார் பிரசாதம், அண்ணா பிரசாதம்’ கூட கலைஞர் வினியோகிக்கத் தொடங்கி விடுவார் போலிருக்கிறது.
பகுத்தறிவு பேசும் கலைஞரே திருந்தாத போது ஜெயலலிதா திருந்த மாட்டார். திருந்தவே மாட்டார். மூளையைக் கழட்டிவைத்துவிட்ட அவர் ஜால்ராக்களும் (அனானியாக எழுதுபவர்கள் உட்பட)அப்படியே தான். இட்லி வடை எப்படி? இவ்வளவு பின்னூட்டங்களுக்குப் பின்னும் முயலுக்கு மூணு கால் தானா? இல்லை புரிந்து கொண்டு திருந்தும் மனசு உண்டா? என்று ஒரு அன்பர் பின்னூட்டத்தில் கேட்டுள்ளார். ஜெ என்று பெயர் வைத்துள்ளதால் அவர் சொல்வதுதான் சரி என்று எண்ணுவது தவறு என்று அந்த அன்பரும் எண்ணிப் பார்த்தால் நல்லது. எது எப்டியோ, கலைஞர், ஜெ, கேப்டன், வைகோ, மமொசி மாறும் அன்னா என்று ஒருவரும் திருந்தாத போது இட்லியும் வடை மட்டும் எதற்குத் திருந்த வேண்டும்?முரசொலியில் வரும் சின்னதம்பி-பெரியதம்பி, ஆண்டியும்-போண்டியும், சிந்துமணி-அந்துமணி போன்ற பகுதிகளை படித்தால் திமுக துருப்பிடித்த கட்சி என்பது வெட்ட வெளிச்சமாக தெரியும். உதாரணத்துக்கு சில பகுதிகள்
சின்னதம்பி:- "அண்ணே; கூடங்குளம் அணுமின் நிலையப்பிரச்சினையில் ஜெய லலிதா கொஞ்சம்கூட அக்கறை இல்லாமல் ஏனோதானோவென இருக்கிறாரே.....!"
பெரியதம்பி:- "தம்பி; மத்திய அரசை பொறுத்தவரை இப்பிரச்சினையை சுமூக மான முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பிரதமரின் ஆணைப்படி 15 நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வுப் பணியில் ஈடுபடவுள் ளனர். ஆனால் ஜெயலலிதா அரசு ஒப்புக் கொண்டபடி நிபுணர் குழு அமைத்திட இதுவரை முன்வரவில்லை. 20 நாட்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் தொடர் உண்ணா விரதம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஜெயலலிதா எந்த பரபரப்பும் காட்டாமல் இருப்பது அங்கே பிணங்கள் விழ வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறாரோ என்னவோ.....!"
போன மாதம் ஞாநி எழுதிய ஓ-பக்கங்களிலிருந்து ஒரு பகுதி இதற்கு பதிலாக...
...1988-89ல் அணு உலைகளின் ஆபத்து பற்றி நானும்(ஞாநி) நண்பர்களும் முரசொலி மாறனுக்கு எடுத்துச் சொன்னோம். அதையடுத்து கூடங்குளம் அணு உலை வேண்டாம் என்று தி.மு.க செயற்குழுவில் தீர்மானம் போட்டது. அடுத்த சில மாதங்களில் ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசின் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்சி, போதிய பாதுகாப்புகளுடன் அணு உலையை ஆரம்பிக்கும்படி மாற்றித் தீர்மானம் போட்டது. அன்று அந்த துரோகம் நடக்காமல் இருந்திருந்தால், கூடங்குளம் உலை கட்டும் வேலையே நடந்திராது. கேரளாவைப் போல நாமும் நம் மாநிலத்தில் அணு உலை வேண்டவே வேண்டாம் என்று சொல்லியிருக்க முடியும்........என்று போகிறது செய்தி.
மேலே சொன்ன முரசொலி செய்தியப் பார்த்தால் பேரன்கள் மேல் உள்ள கோவத்தால் மருமவனை முக மறந்துட்டார் போல.
இன்று தனிப்பட்டமுறையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்த்த அப்துல் கலாம் "மொத்தத்தில் கதிர்வீச்சு வெளிவராமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எந்த ஆபத்தும் இல்லை என எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று சொல்லிவிட்டார். உடனே கூடங்குளம் அனுமின்நிலையம் பாதுகாப்பாக உள்ளது என அப்துல் கலாம் கூறியதை ஏற்ற முடியாது போராட்டக்குழுத் தலைவர் உதயகுமார் கூறிவிட்டார். கூடங்குளம் வந்த அப்துல் கலாம் எங்களை சந்திக்கவில்லை என்றும் சொல்லிவிட்டார்.
நம் நாட்டு தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் மிக அவசியம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாமல் உற்பத்தி தொடங்கப்போகும் நேரத்தில் போராட்டம் நடத்துவது மிகப்பெரிய தவறு. அதுவரை இவர்கள் போராட்டம் நடத்தாமல் ஜபம் செய்துக்கொண்டு இருந்தார்களா?
அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்ற நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திருப்பி அனுப்பப்பட்டார். தமிழ் நாட்டில் செய்ய முடியாத செயலை அமெரிக்கா செய்ததற்கு அவர்களைப் பாராட்ட வேண்டும். உணர்ச்சியைத் தூண்டும்விதத்தில் பேசிவிட்டு, தூண்டப்பட்ட இளைஞர்கள் தீக்குளித்தபின் மலர் வளையமும் வைக்கும் இது போல போல (தறு)தலை-வர்களிடம் தமிழக இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தத் தலைவர்கள் வீட்டுக் குழந்தைகளோ உறவினர்களோ ஒருபோதும் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிப்பதே இல்லை என்பதை, தமிழ் இளைஞர்கள் கவனிக்க வேண்டும் என்று ஒரு முறை ஞாநி எழுதியதை இங்கே சொல்லியே ஆகணும்.சீமான் தன்னை விடுதலைபுலி ரேஞ்சில் பார்த்துத் திருப்பி அனுப்பி விட்டார்கள் என்று மத்திய அரசை நோக்கிக் கூவும் இந்த வேளையில் தென்னிந்தியாவின் பெரிய தனியார் யுனிவர்சிட்டி என்று சொல்லிக் கொள்ளும் SRM இலங்கையில் தனது பல்கலைக்கழகக் கிளையைத் திறந்துள்ளதாம். அடுத்த முறை இலங்கைக்கு எதிராக ஏதானும் போராட்டம் செய்தால் இந்தப் பல்கலைக் கழகத்தில் இருந்து வருவார்கள் என்று சீமான் நம்பலாம்.
இயக்குனர் சசிகுமாரின், உதயநிதி ஸ்டாலின் எல்லோரும் 7 ஆம் அறிவு படத்தில் வரும் 'தமிழர்' வசனம் மாதிரி பேட்டி கொடுத்துள்ளாகள். சில பகுதிகள்...
"தமிழ் உணர்வை எழுப்புற மாதிரி ஒரு வசனம் வந்தால்கூட சம்பந்தப்பட்ட படத்தை இலங்கை அரசாங்கம் தடை பண்ணிடுது. சமீபத்தில்கூட இந்த மாதிரி கெடுபிடிகளை இலங்கை அரசு காட்டி இருக்கு. அவங்க என்ன நம்ம படங்களைத் தடை பண்றது?
கோடம்பாக்கம் மனசு வைத்தால் கொழும்புக்கே வருமானரீதியா செக் வைக்க முடியும்.
"....சினிமாவுக்கு வருமானம் அவசியம்தான் என்றாலும், அதைவிட, தமிழனின் தன்மானம் முக்கியமானது!"
என்னத்த சொல்ல !
அடுத்து ஒரு முரசொலி ஆண்டி போண்டி...
ஆண்டி:- "ஏன்ய்யா; சென்னையில் பெய்து வரும் மழையால் ஆங்காங்கு தண்ணீர் தேங்கி கொசுத்தொல்லை அதிகமாகி டெங்குகாய்ச்சல் பரவுதாமே?"
போண்டி:- "ஆமாய்யா; ஜெயலலிதா அரசுக்கு டெங்கு காய்ச்சலைப் பற்றி என்ன கவலை? மக்கள் மீது அக்கறைக்கொண்ட அரசாக இருந்தா முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து தண்ணீர் தேங்குவதை தடுத்திருப்பாங்க! இவங்களுக்கு மக்களைப்பற்றி கவலைப்படவா நேரமிருக்கு? கலைஞர் அரசின் திட்டங்களை ரத்து செய்யவும்; கலைஞரய்யாவின் பெயரை மறைத்திடவுமே நேரம் பத்தலையே!"
இதில என்ன காமெடி என்றால் இந்த குண்டும் குழியும் இருக்க காரணம் போன ஆட்சி தான் என்பது ஆண்டிக்கும் போண்டிக்கும் தெரிய நியாயம் இல்லை. அப்டியே தெரிஞ்சாலும் சொல்ல முடியாது.அதிர்ச்சி செய்தி:
திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறவர்கள் இனிமேல் சம்பந்தப்பட்ட படத்தின் விஷயங்களையும், அதன் பாடல்களை பற்றியும் தான் பேச வேண்டும். படத்திற்கு சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றி பேசக்கூடாது என்று முடிவு செய்துள்ளார்கள் இயக்குனர் சங்கம். இது பரவாயில்லை கூடவே, நடிகைகள் தொடை தெரியும் அளவிற்கு அணியும் கவர்ச்சி உடைகளுக்கும் தடை விதிக்கப்படும் என்று சொன்னது அண்ணா நூலகத்தை மாற்றுவது என்பதை விட பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.கடைசி செய்தி:
தமிழ் நாட்டில் புதுமைக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. டைட்டில் சாங் ஒன்று போட்டு கவிப்பேரரசின் ரெண்டாவது மைந்தன் கபிலன் எழுதியுள்ள நாவலை கிழக்கு இந்த மாதக் கடைசியில் வெளியுடுவதில் மகிழ்ச்சி.
என்ன, இந்த நாவலின் விற்பனை கிழக்கின் பின்னூட்டப் பொட்டியையே மூட வைத்த எக்சல்(என்ட்) நாவல் ரெக்கார்டைத் தூக்கி சாப்டுமா என்றுதான் தெரியல.
அதிர்ச்சியுடன்,
இட்லிவடை
Posted by IdlyVadai at 11/06/2011 08:39:00 PM 13 comments
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Friday, November 04, 2011
யுரேகா ஓட்டம் 2011
அன்புள்ள இட்லி வடைக்கு,
எனது முந்தைய பதிவுகளை தாங்கள் இட்லி வடையில் வெளியிட்டுள்ளீர்கள்.. அதற்கு முதற்கண் நன்றி. மேலும் நாங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டி நடத்தவிருக்கும் "யுரேகா ஓட்டம் 2011" பற்றிய அறிவிப்பையும் தங்கள் வலைத்தளத்தில் பதிவிட வேண்டுகிறேன்.
இத்துடன் ஓட்டம் பற்றிய விபரங்கள் அடங்கிய போஸ்டரையும் இணைத்துள்ளேன்.
கீழேயுள்ள கட்டுரையை பிரசுரித்தால், பல்லோர் வாசித்து பங்கு பெறுவர்.
நன்றி,
செல்வா
அக்டோபர் 2ஆம் தியதி டில்லியில், டைம்ஸ் ஆப் இந்திய நாளிதளால் இந்நிறுவனத்திற்கு "Social Impact Award" கிடைத்தது குறிப்பிட தக்கது. மேலும் இந்த விருதை தமிழகத்திலுள்ள நெர்குனபட்டு என்ற கிராமத்தை சேர்ந்த அஸ்வினி என்கிற பெண் பெற்றுக்கொண்டார். அஸ்வினி 4ஆம் வகுப்பில் தமிழ் வாசிக்க தெரியாமால் தடுமாறிய ஒரு குழந்தை. இவரது தந்தை வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் மற்றும் தாயார் மன நலம் குன்றியவர். 4ஆம் வகுப்பில் இவரால் வாசிக்க இயலாததைக்கண்டு யுரேகா கல்வி இயக்கத்தினர், பகுதி நேர வகுப்பில் சேர்த்தனர்.. தற்போது 11ஆம் வகுப்பு படிக்கும் அஸ்வினி ஒரு கவிஞர். தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ள ஒரு புதுமை பெண். இதுபோல் ஆயிரமாயில் அஸ்வினிகள் யுரேகா கல்வி இயக்கத்தின் மூலம் பயனுருகின்றனர். இதற்க்கு நீங்களும் உதவி புரியலாம்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 14ஆம் தியதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.. குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு யுரேகா கல்வி இயக்கம் இரண்டாவது ஆண்டாக சென்னை மரினாவில் "யுரேகா ஓட்டம்" நடத்தவுள்ளது .
தமிழ்நாட்டில் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்பதர்க்காகவும், தற்போதய கல்வி நிலையை மக்களுக்கு எடுத்து சொல்வதற்காகவும் இந்த ஓட்டம் நடைபெற உள்ளது. யுரேகா கல்வி இயக்கம் தனது பணியை தற்போது தமிழகத்தில் 1000 கிராமங்களில் செய்து வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மாலை நேர வகுப்புகள் மூலம் குழந்தைகளுக்கு தரமான கல்வியினை அளித்து வருகிறது. உங்களை மற்றும் என்னைப்போல தன்னார்வ தொண்டாளர்களின் உதவியுடன் கல்வி மட்டுமல்லாது ஆரோக்கியம், மற்றும் ஒருமித்த கிராம வளர்ச்சி பணிகளை செய்ய துவங்கி உள்ளது. இன்னும் சில வருடங்களில் 1000 மாதிரி கிராமங்களை உருவாக்குவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
இந்த யுரேகா ஓட்டத்தில் பங்கு கொள்ளுங்கள்... நீங்களும் யுரேகா கல்வி இயக்கத்திற்கு உங்கள் ஆதரவை அளியுங்கள்..
( படத்தை கிளிக் செய்து பார்க்கவும் )
நாள் : நவம்பர் 12, 2011
இடம் : சென்னை மரினா கடற்கரை,
துவக்கம் : காந்தி சிலை அருகில்
நேரம் : காலை மணி 6.30
வலைத்தளத்தில் பதிவிட - http://www.eurekachild.org/run2011/
முகநூலில் உங்கள் வரவை பதிந்திட - https://www.facebook.com/event.php?eid=231319860256166
உங்களால் உங்கள் நண்பர்களிடதோ அல்லது உங்கள் அலுவலகத்திலோ பதிவு சீட்டை விற்க முடிந்தால் பதிவு சீட்டுகளை பெற அணுகவும் - செல்வா - 9790951652 ,volunteer@aidindia.in , aid.selva@gmail.com
Posted by IdlyVadai at 11/04/2011 03:41:00 PM 10 comments
Labels: அறிவிப்பு
நூலகம் இடம் மாற்றம்
ஜெயலலிதா ஆட்சி அமைத்த பின்பு புதிய தலைமைச் செயலகம் உபயோகப்படாமல் போகும் என்று பலர் நினைத்தது போலவே நடந்தது, மருத்துவமனையாக மாற்றப்படும் என்று சொன்னதற்கு எங்கே சினிமா செட் போட்ட கூறை கீழே விழுமோ என்று பலர் கவலைப்பட்டனர்.
( செய்தி: நூலக இடம் மற்றம் விஜய்காந்த் அதிர்ச்சி, படம் நன்றி: விகடன் )
சென்னையில் செம்மொழிப் பூங்காவின் பெயர்ப் பலகையையும் திறப்புவிழாக் கல்வெட்டுகளையும் மறைத்து வைத்திருக்கும் ஜெயலலிதா அரசுக்கு ஞாநியை தவிர மற்ற பத்திரிக்கைகள் யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை.
ஆனால் சில நாட்களுக்கு முன் அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று சொன்னது பலருக்கு அதிர்ச்சியாக உள்ளது.
தினமணி தன்னுடைய தலையங்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது ( சில பகுதிகள் இங்கே )
"கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டுவது என்ற முடிவு உள்நோக்கம் உடையது என்று நம்புவதற்கு இடமுண்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவர் தேர்ந்தெடுத்துப் பூஜை போட்டிருந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டித் தான் கட்டிய தலைமைச் செயலகத்தைச் செயலிழக்க வைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டினார் என்கிறார்கள். இருக்கலாம். அதற்காக? நூலகம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வந்த பிறகு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இன்னொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நூலகத்துக்காகக் கட்டப்பட்ட அமைப்பை மருத்துவமனையாக மாற்றுவது என்பது, நமது இளைஞர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால், "ரொம்ப ஓவர்!'"
அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக்காட்டாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இன்னொரு தலைமைச் செயலகத்தை கட்டிவிடக்கூடாது என்பதற்காக மட்டும் அந்த நூலகம் கட்டப்படவில்லை. தனது குடும்பத்தினரும் அமைச்சர்கள் சிலரும் மக்கள் வரிப்பணத்திலிருந்து பல கோடி ரூபாய்களைச் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்காகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்டது அந்த நூலகம் என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடங்கி ஏறத்தாழ ரூ. 230 கோடி ரூபாயை விழுங்கி இருக்கிறது இந்த நூலகம். சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு இவ்வளவு பணம் செலவாக வேண்டிய அவசியம் என்ன? சதுர அடிக்கு ரூ. 2,000 என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதானே செலவாகி இருக்கும்? இத்தனைக்கும், இடம் இலவசம், கட்டட அனுமதி, குடிநீர் வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு உடனடி அனுமதி, லஞ்சம் கிடையாது எனும்போது இத்தனை கோடி செலவுக்கு என்ன காரணம்?
சுமார் ஆறு லட்சம் புத்தகங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஏறத்தாழ 4 லட்சம் புத்தகங்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்றவை. தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்தப் பதிப்பாளர்களிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்குமேல் தேவையில்லையே... வெளிநாட்டுப் புத்தகங்களை ரூ. 5 கோடிக்குமேல் வாங்கினாலும்கூட ரூ. 10 கோடிதானே செலவாகி இருக்கும்? எல்லா செலவும் சேர்த்து அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லையே, எங்கே போயிற்று மீதம் செலவாகியிருக்கும் ரூ. 130 கோடி?
உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டு, நூலகத்தின் பெயரால் நடந்த மோசடியை வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தால், அரசைப் பாராட்டி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்குகிறோம் என்று கிளம்பினால், மக்களின் அதிருப்தியை வலியப்போய் விலை கொடுத்து வாங்குகிறது அரசு என்றுதானே பொருள்?
நூலகத்துக்காகக் கட்டப்பட்ட இடம் நூலகமாகவே தொடரட்டும். அறிவுசார் பூங்காவில் இன்னொரு நூலகம் அமைவதாக இருந்தால் அமையட்டும், அதில் தவறொன்றுமில்லை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முழுக் கவனமும் செலுத்தப்பட்டு, சர்வதேசத் தரத்தில் செயல்படட்டும். மக்கள் வரிப்பணத்தை நூலகம் என்ற பெயரில் கபளீகரம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதைப் பற்றியும் அரசு யோசிக்கட்டும். அதுதான் ராஜதந்திரமான முடிவாக இருக்கும்!
இட்லிவடையின் கருத்தும் இதுவே.
சென்னை அண்ணா சாலையில் புதிதாக அமைந்த தலைமைச் செயலகத்துக்கு அருகே உள்ள மன்னர் ஏழாம் எட்வர்டு மற்றும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் ஆகிய இருவருடைய சிலைகளும் அப்புறப்படுத்தப்பட்டு அவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அதே போல ராஜாஜி முதல்வராக இருந்தபோது, ஆங்கிலேயர்களின் சிலைகளை அப்புறப்படுத்தி அருங்காட்சியகத்தில் வைத்தது வரலாறு.
தமிழர்களுக்கு நெருக்கடியான காலத்தில் அரை நாள் உண்ணாவிருந்தம் இருந்துவிட்டு, மகள் ஜாமீனுக்கு ஒரு பெரிய படையே டெல்லியில் மௌரியா ஹோட்டலில் முகாமிட்டுள்ளார்கள். நூலக மாற்றத்துக்கு அவர் "இதை தன்மானமுள்ள தமிழர்கள் தமிழறிஞர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்" என்று கூறுவது நல்ல வேடிக்கை.கோயம்பேடு பேருந்து நிலையம் கலைஞரால் கட்டப்பட்டாலும் அவர் அதை திறப்பதற்குள் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து தன பெயரை பெரிதாக போட்டுக்கொண்டார். சென்ற ஜெ ஆட்சியில் அங்கே சட்டசபை வரவிடாமல் தடுத்து ,மிகுந்த பொருட்செலவில் இந்த நூலகத்தை தற் பெருமைக்காக அமைத்தார் கலைஞர்.
இன்று ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் நடக்கும் குழாயடி சண்டையில் நாளை தமிழகத்தை அருங்காட்சியகத்தில் வைத்தாலும் ஆச்சரியப்பட கூடாது. இவர்களுக்கு யாராவது நல்ல புத்தி தரும் புத்தகங்கள் சிலவற்றை பார்செல் செய்தால் நன்றாக இருக்கும்.
இந்த இடம் மாற்றம் நியூஸ் வந்த பிறகு தான் சென்னையில் இருக்கும் பலருக்கு இந்த மாதிரி ஒரு நூலகம் இருக்கிறது என்று தெரியவந்தது.
பீச் பக்கம் இருக்கும் கண்ணகி எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
Posted by IdlyVadai at 11/04/2011 11:47:00 AM 48 comments
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Thursday, November 03, 2011
கனிமொழி ஜாமீன் நிராகரிப்பு
2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழியை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது. கனிமொழி தெரிந்தே இந்த பொருளாதார குற்றத்தைச் செய்துள்ளார். இது மிகவும் கடுமையானது. மேலும் பொது நிதியை தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தியுள்ளார் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
எந்தவித நிர்பந்தத்தின் அடிப்படையிலும் இந்த தீர்ப்பு அளிக்கப்படவில்லை. உண்மை மற்றும் வழக்கின் தன்மை ஆகியவற்றை கருத்தில்கொண்டு மட்டுமே இந்த தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காதது சட்டத்தின் பார்வையில் எந்தவித விளைவையும் ஏற்படுத்தாது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் முக்கியமானவைதான். ஆனால் அதேசமயம் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சிகளும் மதிப்பு குறைந்தவர்கள் அல்ல என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
( நன்றி: தினமணி )
சில கேள்விகள்:
1. ஏன் ராஜா இது வரை ஜாமீம் மனுவை தாக்கல் செய்யவில்லை ?
2. கனிமொழி ஜாமீன் மனுவிற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவிக்காது என்று எப்படி பத்திரிக்கைக்கு முன்பே தெரிந்தது ? ஏன் அது லீக் செய்யப்பட்டது ?
3. கனிமொழிக்க்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்று சில திமுக எம்.பிக்கள் திருப்பதியில் மொட்டை போட்டுக்கொண்டார்கள். இதை பற்றி திமுக தலைவர் என்ன சொல்லுவார் ?
அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் முன் திமுக மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று தெரிகிறது.சில காங்கிரஸ் அமைச்சர்கள் இன்றோ நாளையோ கனிமொழியை ஜெயில் சந்தித்து நலம் விசாரிப்பார்கள் என்றும் தெரிகிறது. தமிழகத்தில் இன்றும் மழை வாய்ப்பு உள்ளது !
Posted by IdlyVadai at 11/03/2011 12:48:00 PM 15 comments
Labels: செய்தி
Wednesday, November 02, 2011
இசை அரசி(யல்)
தமிழக அரசு நடத்தி வரும் இசைப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆலோசகர் பதவிக்கு வேட்டை நடத்தப்பட்டதில், நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, விளையாட்டுத் துறை அமைச்சகத்தில் கபடி ஆலோசகர் பதவிக்கும் காலியிடம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை நியமனம் செய்யலாமா என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கில்லி படத்தில் விஜய் விளையாடிய கபடி விளையாட்டை சில வாரங்களுக்கு முன் ஜெ பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலாயுதம் படத்தில் அரசியல் கட்சி தலைவர் மீது ஓடு விழ "இது எதிர்கட்சி சதி" என்று கூற, அதற்கு விஜய் "நல்ல வேளை, நான் ஆளும் கட்சி" என்பார்.
Posted by IdlyVadai at 11/02/2011 04:30:00 PM 10 comments
யாரும் இல்லாத கடையில் டீ ஆத்தின அத்வானி
தமிழகத்தில் வெடிகுண்டும், கேரளத்தில் வெட்டரிவாளும் தராத அதிர்ச்சியை அத்வானிக்கு கர்நாடகத்தில் எதியூரப்பா ஆதர்வாளர்களின் தந்துவிட்டார்கள். எடியூரப்பாவின் வாலை முன்பே வெட்டியிருந்தால் இந்த நிலமை அவருக்கும் பாஜகவிற்கும் வந்திருக்காது.
2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் காங்கிரஸை வெற்றி பெறச் செய்து, ஆட்சியில் அமரச் செய்வதே எங்கள் லட்சியம் என்ற அளவில் பாஜகவினரின் செயல்பாடுகள் இருக்கின்றன. கடந்த எட்டாண்டு கால காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஊழல்கள் மற்றும் அயல்நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பண விவகாரம் இரண்டையும் மையமாக வைத்து, மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக "ஜன்சேத்னா" யாத்திரையை டிசல் வண்டியை கொண்டு ஓட்டிவருகிறார்.
சொந்தக் கட்சியிலேயே ஊழல் முதல்வர் இருக்கும்போது, அத்வானி எப்படி ஊழலுக்கெதிராக யாத்திரை நடத்தலாம் என ஊழல் வாசனை அறவே அற்ற கட்சிகளும் அதன் அடிப்பொடி மீடியாக்களும் முதலில் கேள்வியெழுப்பின. அத்வானி அன்னா ஹசாரே போல சில நாட்கள் மீடியாவை சந்திக்காமல் இருந்தார். பின்பு அத்வானியின் யாத்திரையில் பெங்களூர் இடம்பெறப் போவதில்லை எனவும் கசிய தொடங்கியது. உடனே அவர் நான் பெங்களூர் போவேன் என்று அழையா விருந்தாளியாக சென்றார். மீடியாவிற்கும், எடியூரப்பாவிற்கும் பதிலடியாக, பெங்களூர் கூட்டத்தில் உரையாற்றிய அத்வானி, கட்சித் தலைவர்களின் மீதான ஊழல் புகார்கள் குறித்தும், கட்டுப்பாடின்மை குறித்தும் வெளிப்படையாகவே விமர்சித்தார். இதை முன்னமே எதிர்பார்த்தது போன்று, எதியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் 12 பேர் இக்கூட்டத்தைப் புறக்கணித்தனர். கூடுதலாக, அன்றிரவு தற்போதைய கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா அத்வானி அவர்களுக்கு அளித்த இரவு விருந்தின் போதும், எதியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் மிஸ்ஸிங். மொத்தமுள்ள 122 எம் எல் ஏக்களில் 20 பேர் மட்டுமே வந்திருந்தனர். யாருமே இல்லாத கடையில டீ ஆத்துன சிங் மாதிரி இவர் நிலமை ஆகிவிட்டது என்பதை நினைக்கும் போது பாவமாக இருக்கிறது. இவர் மன்மோகன் சிங்கை பார்த்து வீக் என்கிறார் அது தான் வேடிக்கை!இவ்வாறு எதியூரப்பா கம்பிகளுக்குப் பின்னாலிருந்து நடத்தும் உள்ளடி வேலைகளால், மத்திய பாஜக மேலிடம் அதிருப்தியும், மாநில பாஜக தலைமை குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளது. தன்னை விட்டால் கர்நாடக பாஜகவில் தனித்துவம் மிக்க தலைவர் எவரும் இல்லை என்பதாக நிரூபிக்க எதியூரப்பா நிகழ்த்தியிருக்கும் முன்னோட்டம்தான் இது என்று பாஜக கருதுகிறது. அத்வானி என்ன பிஜேபி தலைவரா ? அவர் சும்மா நடத்தும் யாத்திரைக்கு எதற்கு நாங்கள் போக வேண்டும் என்று வெளிப்படையாகவே விமர்சிக்க தொடங்கியுள்ளார்கள். அத்வானியின் யாத்திரையில் தலைவர்கள் அனைவரும் பிஸியாக இருப்பதால், யாத்திரை முடிந்த பின்பு அவர்கள் மீதான நடவடிக்கை முடிவு செய்யப்படும் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டாலும், பெருமளவில் லிங்காயத்து சமூகத்தினரின் வாக்கு வங்கியையும், கர்நாடக மடாதிபதிகளின் ஆதரவைத் தன்னகத்தே வைத்திருக்கும் எதியூரப்பாவை பகைத்துக் கொள்ள பாஜக விரும்பாது என்றே தெரிகிறது. அத்வானிக்கு மரியாதை கொடுக்க முடியாத கர்நாடகா பிஜேபி தலைவர்களை அந்த கட்சி தயவு தாட்சண்யமின்றி நீக்க வேண்டும். இதை செய்தாலே ரதயாத்திரை பயணம் வெற்றி பெற்றதாக அறிவித்துவிடலாம்.
யாத்திரையின் மூலம் அணுகுண்டாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு, பாஜகவின் கட்சி நிர்பந்தங்களால் புஸ்வாணமாகும் சூழல்தான் ஏற்பட்டிருக்கிறது. இவர்களுக்கு காங்கிரஸ் கட்சி எவ்வளவோ மேல் என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிடும்.
பலரும் கூறுவதைப் போல, பாஜக ஒரு வித்யாசமான கட்சிதான்.
Posted by IdlyVadai at 11/02/2011 11:58:00 AM 3 comments
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Tuesday, November 01, 2011
வாழ்க நகைச்சுவை !
இந்த வார துக்ளக் ஆசிரியருக்கு ப.சிதம்பரம் எழுதியுள்ள கடிதம்
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
துக்ளக் 19.10.2011 இதழில் வெளியான கேள்வி–பதில் பகுதியைப் படித்தேன். கேள்வி கேட்ட சென்னையைச் சேர்ந்த நண்பர் ஆர்.நாகராஜன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லையே என்று வருத்தம் அடைந்தேன். தங்களுடைய பதிலைப் பார்த்தவுடன் தங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறது என்பது ஆறுதல் அளித்தது. அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 27-ஆம் பக்கத்திலும் மற்றும் 35-ஆம் பக்கத்திலும் வெளியான கேலிச் சித்திரங்களைப் பார்த்த பிறகு, தங்களுடைய ஆசிரியர் குழுவில் பலருக்கு நகைச்சுவை உணர்வு இல்லையோ என்று கேட்கத் தோன்றுகிறது.
‘வாழ்க நகைச்சுவை’ – என்று சொல்லும் காலம் வரும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி!
– ப. சிதம்பரம்,
உள்துறை அமைச்சர், புதுடெல்லி.
அவர் குறிப்பிட்டுள்ள கேள்வி பதில், கார்ட்டூன் கீழே....
கேள்வி-பதில்
ஆர். நாகராஜன், சென்னை-117
கே : ‘எனக்குச் சற்று ஞாபக மறதி உள்ளது’ – என்று உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ப.சிதம்பரம் பகிரங்கமாகக் கூறுகிறாரே?
ப : 2ஜி விவகாரத்தில் ஏல முறையை வற்புறுத்த சிதம்பரம் தவறினார் என்ற குற்றச்சாட்டைக் கூறுகிற நிதியமைச்சகத்தின் குறிப்பு பற்றியும், பின்னர் பிரணாப் முகர்ஜிக்கும் சிதம்பரத்திற்கும் ஏற்பட்ட ‘சமாதானம்’ பற்றியும், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில்தான், சிதம்பரம் ‘தனக்கு ஞாபக மறதி’ என்று கூறினார்.
நிருபர்களின் சில கேள்விகளுக்குப் பதில் அளிக்க விரும்பாதவர்கள், ‘இது பற்றி எதுவும் சொல்வதற்கில்லை’ என்று கூறுவார்கள். அல்லது ‘இப்போது கருத்து தெரிவிக்கவில்லை’ என்று கூறுவார்கள். சிலர் வேறு விதங்களிலும் பதில் சொல்வார்கள். அந்த மாதிரிதான் சிதம்பரமும் ‘தனக்கு ஞாபக மறதி’ என்று கூறியும், ‘தனக்கு கணக்குத் தெரியாது’ என்று சொல்லியும் சில கேள்விகளைத் தவிர்த்தார்.
இதை ஒரு நகைச்சுவையாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, சீரியஸாக எடுத்துக் கொண்டு, ‘சிதம்பரத்திற்கு ஞாபக மறதியா? அவருக்குக் கணக்குத் தெரியாதா?’ என்று கேட்பதில் அர்த்தமில்லை.
கார்டூன்

2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அப்பப்போ குண்டு வெடிக்கும் போது தரும் அறிக்கையைவிடவா இது பெரிய நகைச்சுவை ? வாழ்க நகைச்சுவை! என்று சொல்லும் காலம் நிச்சயம் வரும்!
Posted by IdlyVadai at 11/01/2011 10:07:00 AM 10 comments
Labels: அரசியல், கார்ட்டூன்ஸ், நகைச்சுவை, பத்திரிகை