பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 31, 2011

கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

ஜனவரி 2008 சட்டமன்ற கூட்டத்தொடரில் நடந்த விவாதம்...


பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன்: தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மொழி, பண்பாடு, கலாசாரம், உறவு முறை ஆகிய அனைத்திலும் கலாசார சீரழிவை நோக்கி இட்டுச் செல்கிறது. தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை முறையை கொண்டுவர முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சன் டி.வி., ஜெயா டி.வி., ராஜ் டி.வி., விஜய் டி.வி., முதல்-அமைச்சர் பெயரை தாங்கி வரும் கலைஞர் டி.வி. போன்ற தொலைக்காட்சிகளில் வரும் ஜோடி நம்பர் ஒன், ஜில்லுன்னு ஒரு காதல், மானாட மயிலாட போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தொடர்களிலும் ஆபாசங்களும், வன்முறைகளும் நிறைந்துள்ளன.

துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி:
- இதையெல்லாம் நீங்கள் காட்சிக்கு காட்சி ரசித்து பார்த்திருக்கிறீர்கள்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- உறுப்பினர் வேல்முருகனும் படத்தில் நடித்திருக்கிறார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனம், நாட்டியம் தான் ஆடுகிறார்கள். அதில் ஆபாசம் இல்லை. அதில் எந்த அணி வெற்றி பெறுகிறது என்பதை பொதுமக்கள் தான் பார்த்து முடிவு செய்கிறார்கள்.

வேல்முருகன்:- அந்த நிகழ்ச்சியில் நடுவராக வரும் நடிகை நமீதா அரைகுறை உடையில் தான் வருகிறார். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட ஒரு விழாவில் நடிகை சுரேயா (ஸ்ரேயா என்பதை அவர் அப்படித்தான் உச்சரித்தார். அதனை கேட்டு அனைவரும் சிரித்தனர்.) மிகவும் ஆபாசமாக உடை அணிந்து வந்துள்ளார்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- நடிகை ஸ்ரேயா விழாவில் வந்த விதம் குறித்து குறிப்பிட்டார். நடிகைகள் எல்லாம் இப்படித்தான் டிரஸ் போட வேண்டும் என்று சட்டம் கொண்டுவர முடியாது. அறிவுரை வேண்டுமானால் அவர்களுக்கு கூறலாம். எந்த உடை போட வேண்டும் என்று நடிகைகள் தான் முடிவு செய்கிறார்கள். அதை அரசு முடிவு செய்வதில்லை.

வேல்முருகன்:- இந்த ஆபாசங்களை எல்லாம் ஏன் தணிக்கைத்துறை கண்டிப்பதில்லை.


அமைச்சர் துரைமுருகன்:- ஆபாசத்திற்கு எந்தவித அளவுகோலும் கிடையாது. இத்தனை `இஞ்ச்' தான் இடுப்பு தெரிய வேண்டும். இத்தனை இஞ்சுக்கு பிரா போடலாம், இத்தனை இஞ்சுக்கு பாவாடை போடலாம் என்றெல்லாம் அளவு எதுவும் இல்லை. ஆபாசம் என்பது அவரவர் மனதை பொறுத்தது தான். வேல்முருகன் நடித்த படத்தையும் பார்த்தோம். அதிலும் தான் ஜிங்கு ஜிங்குன்னு ஆடும் நடனம் வருகிறது.(இதனை இடுப்பை ஆட்டிக் காட்டியபடி கூறினார். இதனை பார்த்த அனைவரும் சிரித்தனர்.)

ஜி.கே.மணி:- ஆபாசம் அவரவர் மனதில் தான் இருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதற்காக அரைகுறை ஆடை உடுத்தி ரோட்டில் போக முடியுமா? இதில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். திரைப்படங்கள், பொது இடங்களில் இதுபோல் ஆபாசமாக உடை உடுத்தி வருவது கலாசார சீரழிவை ஏற்படுத்தும். எவ்வளவு கற்பழிப்புகள் நடக்கிறது என்ற புள்ளிவிவரங்கள் எல்லாம் வருகிறது. இதுபோன்ற செயல்களுக்கெல்லாம் காரணம் என்ன? சமுதாயத்தை நல்வழிப்படுத்தத்தான் இந்த கருத்தை தெரிவிக்கிறோம்.

வேல்முருகன்:- ஆங்கில கலப்பில்லாமல் ஒரு படம் வருகிறது என்பதால் தான் அதில் நான் நடித்தேன். ஆபாசத்தை விதைப்பதற்கு அல்ல. ``கட்டிப்புடி, கட்டிப்புடிடா'', ``எப்படி, எப்படி, சமைஞ்சது எப்படி'' என்ற பாடல்களெல்லாம் எப்படி அனுமதிக்கப்பட்டது? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை முறை வேண்டும். இவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பண்பாடு, கலாசாரம் எல்லாம் மறைந்து போய்விடுமோ என்று தான் கூறுகிறோம்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி:- நாகரிகத்தை காப்பாற்ற நாளை முதல் வேல்முருகன் வேட்டி-சட்டை அணிந்து வந்தால் நல்லது.

வேல்முருகன்:- இதனை நான் விளையாட்டுக்காகவோ, சிரிப்புக்காகவோ சொல்லவில்லை.

அமைச்சர் பொன்முடி:- ஆடை அணிவது நாகரிகத்தின் வெளிப்படுதல் தான். முன்பு பெண்கள் புடவை அணிந்து வந்தனர். இப்போது சைக்கிள், இருசக்கர வாகனங்களில் செல்கிறார்கள். அதற்கு வசதியான உடைகளை அணிந்து வருகிறார்கள். அதற்காக கலாசாரம் அழிந்துவிட்டது என்று கூற முடியுமா? கலாசாரத்தை காக்கத்தான் சமத்துவ பொங்கல் என்று கலாசார திருவிழாவை நடத்தும்படி முதல்-அமைச்சர் கூறியிருக்கிறார்.

ஏர் உழுபவன் கோவணம் கட்டிக்கொண்டு தான் உழுகிறான், அதற்காக அதை ஆபாசம் என்று கூறமுடியுமா? காலத்திற்கேற்ப மாறுவது இயற்கை. வேல்முருகன் கூறுவதை நான் முழுமையாக மறுக்கவில்லை. இதனால் கலாசாரம் சீரழிகிறது என்று மிகைப்படுத்தி கூறுவதை ஏற்க முடியாது.

வேல்முருகன்:- நான் ஒட்டுமொத்த திரைப்படங்களையும் குறை கூறவில்லை. 90 சதவீதம் இப்படித்தான் இருக்கிறது என்று தான் கூறுகிறேன். அதேபோல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டி.ஆர்.பி.ரேட் (மக்கள் பார்க்கும் விகிதம்) அதிகமாக வேண்டும் என்பதற்காகவும், தனிப்பட்ட வருமானம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் இப்படிப்பட்ட ஆபாச காட்சிகளை திணிக்கிறார்கள். நம்மை கேட்க யாருக்கும் நாதியில்லை என்று சென்று கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் சுட்டிக் காட்டுகிறேன். தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சரிடம் கூறினால் இதற்கும் நியாயம் கிடைக்கும், வழி பிறக்கும் என்று தான் கூறுகிறேன். இளைஞர்கள் தடம் மாறிச் செல்வதை தடுக்க வேண்டும். ஒரு மாணவன் படம் பார்த்துவிட்டு கொலை செய்தேன் என்கிறான். எனவே இதுபோன்ற ஆபாசம், வன்முறை ஆகியவற்றை தடுத்து நிறுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம் வரி பணத்தில் நடை பெற்ற விவாதம்...
( http://idlyvadai.blogspot.com/2008/01/blog-post_2784.html )

இன்றைய செய்தி : இப்பேர்பட்ட வேல்முருகனை பாமகவில் இருந்து இன்று நீக்கிவிட்டார்கள் !.


பொதுவாக சூரனை தான் முருகன் சூரசம்ஹாரம் செய்வார் ஆனால் இன்று வேல்முருகனை ... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!. ராமதாஸுக்கு கோவிந்தா கோவிந்தா

Read More...

கலைஞரின் இன்டைரக்ட் ஸ்பீச்

சில வாரங்களுக்கு முன் திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து 'உட்கட்சி ஜனநாயகம் இல்லை' என்று நேரடியாக குற்றம் சாட்டி பதவியிலிருந்து விலகினார் பரிதி இளம்பழுதி. மீடியாவில் கொஞ்சம் பாப்புலர் ஆன இவர் ராஜினாமா பற்றி ஜூவி, துக்ளக் போன்ற பத்திரிக்கைகள் கலைஞர் டெல்லி சென்றார் போன செய்தளுடன் இதையும் ஒரு பக்கம் கட்டுரையாக போட்டு குடும்ப டென்ஷனை அள்ளிக்கொண்டது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் பரிதி மிகச் சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவ, அப்பகுதி தி.மு.க. நிர்வாகிகள் சிலர்தான் காரணம் என்று அவர் புகார் கூறினார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்களுக்கு ஸ்டாலினின் ஆதரவு இருந்தது. தற்போது உள்ளாட்சித் தேர்தலில் சீட் பெற்ற பரிதி ஆதரவாளர்கள் சிலருக்கு எதிராக, அதே நபர்கள் ஐயம்பேட்டை வேலை செய்ததால், தலைவரிடம் நேரடியாகப் பரிதி புகார் செய்தார். கட்சி வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்பட்ட அந்த சிலர் உடனடியாக நீக்கப்பட்டனர். ஆனால், இரண்டே நாட்களில் ஸ்டாலின் தலையிட்டு, அவர்களை திரும்பவும் கட்சியில் சேர்க்க வைத்தார் என்று சொல்லப்படுகிறது. பரிதியிடம் ஒரு வார்த்தை மரியாதைக்கு கூட கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் "உட்கட்சி ஜனநாயகம் வாழ்க" என்று ராஜினாமா கடிதம் கொடுத்தோடு இல்லாமல், சில நாட்களுக்க்கு முன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பேட்டியும் கொடுத்தார். அதில் "...... திமுக பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து கூறலாம் என்று 4 முறை முயற்சித்தேன். ஆனால் அவர் என்னை சந்திப்பதை வேண்டுமென்றே தவிர்த்து விட்டார்.... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, என் பிரச்சனை உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அதிருப்தியாளர்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அதை செய்வேன். இதுபோன்ற மனக்குமுறலோடு இருப்பவர்களுக்கு நிச்சயமாக தலைமை ஏற்பேன்...." என்று பத்திரிக்கையாளர்கள் முன் போட்டு உடைக்க கலைஞர் இன்று பொங்கி எழுந்துவிட்டார்.

யார் என்று நேரடியாக சொல்லாமல், ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டுவிட்டார் கலைஞர். இலக்கியம், நகைச்சுவை என்று பலர் பிரிவுகளில் இருக்கும் இந்த அறிக்கையை இட்லிவடை வாசர்களுக்கு கொடுப்பதில் மகிழ்ச்சியடைக்கிறேன்.

நமது கழகத்திற்கு தற்போது 62 வயதாகிறது. நமது கழகத்திற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்படவுள்ளது. அதற்கு முன்பு புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல் மற்றும் நீக்கல் ஆகிய பணிகளில் விரைந்து ஈடுபடுமாறு நமது பொதுச் செயலாளர் பேராசிரியர் அறிக்கை விடுத்துள்ளார். அந்தப் பணிகளை நீங்கள் விரைவில் மேற்கொள்ளவிருக்கிறீர்கள்.

என்னென்ன விமர்சனங்கள்? எப்படியெல்லாம் எழுதுகிறார்கள்? பேசுகிறார்கள்? அப்பப்பா? "குலைந்தது கட்சி! தொலைந்தது இனிமேல்! சீந்துவார் யாருமில்லை! சீராட்டும் பாராட்டும் பெறாமல் "சீ'' என்றிகழப்பட்டு, தெருப்புழுதியிலே சேர்க்கப்பட்டுவிடும்.

[ 'சீ' என்று அழைக்க காரணம் 'C' urrency தான். வேறு ஒன்றும் இல்லை

சட்டப்பேரவை தேர்தலில் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியவில்லை. அதையொட்டி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலே ஒரு மாநகராட்சியைக் கூடப் பிடிக்க முடியவில்லை. இடைத்தேர்தலிலோ வித்தியாசம் இரு மடங்காகி விட்டது. என்றெல்லாம் கூறி மாடகூடங்களில் இருந்து மமதையை மலையென மனத்தில் வளர்த்துக்கொண்டு, "வீழ்ந்தது கழகம், இனி எழவே முடியாது'' என்றெல்லாம் எக்காளமிடுகின்றனர்.

கழகம் பிறந்த காலந்தொட்டு இதனை அழிப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

யார் என்று தெளிவாக கூறவும். மாறன் பிரதர்ஸ், ராஜா, கனிமொழி, அழகிரி என்று யாரை கூறிகிறார் ?

துரோகச் சிந்தையினர் தம் சுக வாழ்வு ஒன்றை மட்டுமே மனதிலே கொண்டு, பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்திக் கிழிப்பதைப் போல செயலாற்ற முனைகின்றனர். கையிலே காசில்லா போது, கழகத்திற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள், கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக கழகத்தையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர்.

ஆக கழகத்தில் சேர்ந்த பிறகு காசு பார்த்துவிட்டார்கள் என்ற உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார். துணை பொதுச்செயலாளரே இவ்வளவு காசு பார்த்துவிட்டால், கழக தலைவர், பொதுச்செயளாலர் எவ்வளவு சுருட்டியிருப்பார்கள் ?

துரோகத்தைத் தூள் செய்து பகையைப் புறங்கண்டு நீ தூக்கி உயர்த்தியிருக்கிற இரு வண்ணக் கொடியை காணும்பொழுதும், அந்தக் கொடியின் பட்டொளியில் 62 ஆண்டு கால இயக்கச் சரித்திரத்தைப் படிக்கும் பொழுதும், ஓரம்போகியார் எனும் ஒரு பெரும் கவிஞர் எழுதிய புறப்பாடல் ஒன்றை நான் உனக்கு நினைவுபடுத்திட விரும்புகிறேன். அந்தக் கவிஞர் எழுதிய பாடலில் இரண்டு நாட்டு மன்னர்கள் போரிடுகிறார்கள்.

போர் மூண்டுவிட்ட சமயத்தில் மன்னன் ஒருவன் உடனே களம்புகுமாறு வீரர்களுக்கெல்லாம் செய்தி அனுப்புகிறான். பகை சாய்க்கும் குறியுடன் பல பகுதிகளிலிருந்தும் வீரர்கள் வந்து கூடுகின்றனர். போர் தொடங்கி விடுகிறது. அந்தப் போரில் கலந்து கொள்ள ஓடோடி வரும் ஒரு வீரனை மட்டும் புலவர் ஓரம் போகியாரின் விழிகள் வட்டமிடுகின்றன. அவன் தேர்ப்படையிலோ, யானைப் படையிலோ, புரவிப்படையிலோ இடம்பெற்று அந்தக் களத்திற்கு வரவில்லை. தன்னந்தனியனாக, நூலரி மாலையை அணிந்து கொண்டு, கையில் ஓர் வாளுடன் காலாட் படை வீரனாக களத்திலே நுழைகிறான். கடும் போரிடுகிறான்.


அந்த வீரன்; காலாட்படை வீரன்; எதிரிப் படை வீரனை நோக்கிப் பாய்கிறான். பகைவனோ யானை மீது இருந்து போரிடுபவன். இவனோ பூமியின் தோளைத்தான் குதிரையின் முதுகெனக் கருதிக் கொண்டு வாள் சுழற்றுகிறான். அந்த வாள் வீச்சு, மாரிக்கால மின் வெட்டின் வீச்சு. யானை வீழ்கிறது. யானையை வீழ்த்திய அவன் வாளும் வளைந்து விடுகிறது. யானையின் மீதிருந்து விழுந்த வீரன், எழுந்து வந்து அவனைத் தாக்கி அழிப்பதற்குள் வாளை நிமிர்த்தியாக வேண்டும். என்ன செய்தான் தெரியுமா?

அவன் வாளை நிமிர்த்திக் கொள்ள உடனடியாக எந்த வசதியும் கிட்டவில்லை. எதிரியோ எழுந்து விட்டான். விரைவில் நெருங்கி விடுவான். பளிச்செனத் தோன்றியது ஒரு அரிய யோசனை அந்த மாவீரனுக்கு. கோணிய வாளை எடுத்தான் - அங்கே தன்னால் வீழ்த்தப்பட்டுக் கிடந்த யானையின் மத்தகத்திலே அந்த வாளை அழுத்தி நிமிர்த்துக் கொள்கிறானாம். அவனது வளைந்து போன வாளை நிமிர்த்திக் கொண்டான் என்பதைக் கண்டதும் எதிரிப்படையின் வீரன் எடுக்கிறான் ஓட்டம் - புறங்காட்டி ஓடுகின்ற அவனைப் பார்த்து அந்த வீரன் நகைக்கத் தொடங்கினான்.

ஓரம்போகியார் சித்தரிக்கும் அந்தத் திறன் மிகு தீரனாகத்தான் உன்னை - நமது கழகத்தை - நான் கருதுகிறேன். நான் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல நமது விரோதிகள் ரதங்கள் ஏறி வந்து நம்மைத் தாக்க முயலலாம். நமக்கெதிரான விமர்சனங்கள் யானைகள் மீது ஏறி வந்து நம்மை எதிர்க்கலாம். துரோகிகளோ குதிரைப்படை கொண்டு வந்து நம்மை நிலைகுலையச் செய்ய யத்தனிக்கலாம். நமது புறநானூற்றுப் புலவர் வியந்து பாராட்டிய வீரன் எதிரிப்படையை விரட்டியது போல, கொல்ல வரும் பகையை - தொல்லை தரும் துரோகத்தை நமது கழகம் வெற்றி கண்டாக வேண்டும்.

உட்கட்சி குழாயடி சண்டைக்கு எதற்கு புறநானூறு கவிதை ? அதுவும் யானை குதிரை எல்லாம் வருகிறது அவ்வளவு பெரிய சண்டையா இது ? . ஸ்சப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே

நாம் வெற்றியினைப் பெற்றிட உழைப்போம் - ஒற்றுமையோடு உழைப்போம் - ஓய்வில்லாமல் உழைப்போம் - உறுதியோடு உழைப்போம். கண்மணியாம் நமது கழகத்தை வளர்ப்போம். உறுப்பினர்களை அணி அணியாகச் சேர்ப்போம். புதிய வாக்காளர்களை பட்டியலில் இணைப்போம்.

தமிழக சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., மிகப்பெரிய தோல்வி அடைந்ததற்கு, தன் கட்சித் தொண்டர்களே காரணம் என்று கலைஞர் சில மாதங்கள் முன் சொல்லியிருந்தார். ஆக இன்னும் நிறைய தொண்டர்களை சேர்த்து மேலும் தோல்வி அடைய அவர் எடுத்திருக்கும் முயற்சிக்கு யார் பொறுப்பு ? பொதுவாக இது போல ஒரு அறிக்கைக்கு பிறகு யாராவது நீக்கப்படுவார்கள். இன்னும் சில நாட்களில் பரிதி திமுகாவிலிருந்து நீக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது.

Read More...

Thursday, October 27, 2011

ஏழரை முடிந்து எட்டும் முடிந்தது! - சுபத்ரா

அக்டோபர் 27, 2011 தேதியோட இட்லிவடை கடை ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன! எனக்கு வலையுலகின் அறிமுகம் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான். இட்லிவடையின் கொ.ப.செ. அர்ஜூன் அம்மா அவர்கள் இவரைத் திட்டுவது போல் திட்டி இவரது பிரதாபங்களை எல்லாம் உலகிற்கு எடுத்து இயம்பியது மட்டுமல்லாமல் இவருக்கு “உலகப்பதிவர்” என்ற பட்டத்தையும் வழங்கிய அந்தப் பதிவிலிருந்தும் வேறு பல பழைய பதிவுகளிலிருந்தும் இட்லிவடையின் ‘புகழை’ அறிய நேர்ந்தேன்.



2008-ல் ஒரு நாள் சிவனேயென்று புத்தகம் ஒன்றை நான் படித்துக் கொண்டிருந்த வேளையில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. கால் செய்தவர் நான் மிகவும் வியக்கும் மற்றும் மதிக்கும் நபர். திடீரென ஒரு விஜய் படத்தின் விமர்சனத்தை எனக்குப் படித்துக் காட்டினார். மிகவும் ரசிக்கும்படியாக இருந்த அந்த விமர்சனம் நம்ம இட்லிவடையோடது தான். ஆனந்தவிகடனின் அறிமுகத்தால் அவர் இ.வ.வைப் படிக்க நேர்ந்ததாம். அவர் அறிமுகப்படுத்தியதிலிருந்து நானும் இட்லிவடையின் ரசிகையாகி விட்டேன்! In fact, நான் ப்ளாகர் அக்கவுண்ட் உருவாக்கியதே இட்லிவடையில் பின்னூட்டமிடுவதற்காகத் தான் :-)

2003-லிருந்து இயங்கி வரும் இட்லிவடையைப் பற்றி ஒரு கத்துக்குட்டி / “L” போர்டு(நான் தான்) பேசுவதென்பது மிகைதான். இட்லிவடை யார்? யார்? என்று பரபரப்பாகப் பேசப்பட்டபோதும் வலையுலகப் பிரபலங்கள் பலர் ‘இவர் அவரா அவர் இவரா?’ எனச் சந்தேகிக்கப்பட்ட போதும் இட்லிவடை என்பது ஒருவரா இல்லை ஒரு க்ரூப்பா என மண்டை குழம்பிப் போனபோதும் எதற்கும் அசைந்து கொடுக்காமல் இன்றுவரை முகமூடியுடனே இருக்கிறார். இவருக்கு ஜி-டாக்கில் சாட் ரிக்வெஸ்ட் கொடுத்துப் பேச ஆரம்பித்த நேரங்கள் சுவாரசியமானவை. “நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க? என்ன படிச்சிருக்கீங்க? Puzzles-லலாம் ஆர்வம் இருக்கே, நீங்களும் என்னை மாதிரி மேத்ஸ் ஸ்டூடன்டா? உங்க வெப்சைட் டிசைனிங்/அப்டேட்ஸ் எல்லாம் பார்த்தா நீங்க ஒரு சாஃப்ட்வேர் ப்ரொஃபெஷனல் மாதிரி இருக்கே, அது உண்மையா? நீங்க அனானிமஸா எழுதிட்டு இருக்கீங்க, உங்ககிட்ட இந்தக் கேள்விகள் எல்லாம் கேட்கக் கூடாதா?” ன்னு பல கேள்விகளைக் கேட்டுப் பார்த்தாலும் “பொண்ண கைய புடிச்சி இழுத்தியா? என்ன கைய புடிச்சு இழுத்தியா?” ங்கிற மாதிரி “நீங்க என்ன வேணா கேட்கலாம், நான் சொல்றத தான் சொல்லுவேன். நான் அவனாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்” ன்னு அதே டயலாக்ஸ் தான்...

இந்த வருடம் மார்ச் மாதம் முக்கிய அறிவிப்பு – இட்லிவடை கைமாறப் போகிறது என்று ஒரு பதிவைப் போட்டு இவரது ரசிகர்களின் மொத்த கவனத்தையும் ஈர்த்தார். சீக்கிரமே அந்தப் பதிவு ஒரு உல்லுலாயீ...April Fool பதிவுனு சொல்லி இன்னொரு பதிவு போட்டுப் பலரையும் ஏமாற்றியும் விட்டார். இருந்தாலும் அந்தப் பதிவுகளுக்கு வந்த கருத்துகளைப் பார்த்துகூட வலையுலக மக்களுக்கு இட்லிவடையின் மேல் இருக்கும் அபிமானத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

இப்படியாகப்பட்ட இட்லிவடையில் சென்ற வருடம் தீபாவளி சமயத்தின்போது “இரண்டு கவிதைகள்” என்று பெயரிட்டு அதனை இ.வ.யில் பதிவிடுமாறு ஒரு ஆர்டிகிளை இவருக்கு மின்னஞ்சல் செய்து வைத்தேன். இரண்டே நாட்களில் அதனை வெளியிட்டுவிட்டார். ஆனால் மஞ்சள் கமெண்ட் தான் என்னை அழ வைத்தது :-) பின் ஒரு நாள் குஜராத்தைப் பற்றி ஒரு கட்டுரை எழுதலாமே என்று கேட்டு என்னை அழகான ஒரு கட்டுரையை எழுதவைத்தார். அதற்குப்பின் எனது ஆகாசவாணி அனுபவம் பற்றி நான் எழுதி அனுப்பிய கட்டுரையை ‘சுபத்ரா பேசுறேன்’ என்ற தலைப்புடனே வெளியிட்டு எனது ப்ளாகிற்கும் கன்னா பின்னாவென்று ஹிட்ஸ் எகிறவைத்தார். அப்புறம் நாஞ்சில் நாடனின் புத்தகம் பற்றிய ஒரு கட்டுரை..

இன்னொரு விஷயம் - இட்லிவடையில் ‘பானிபூரி சாப்பிடப் பிடிக்கும்’னு எழுதின ராசி. அதுல இருந்து பெப்டிக் அல்சர் வந்து அப்புறம் ‘பானிபூரி கடை பக்கம் தலைவச்சு கூட படுக்கக் கூடாது’னு டாக்டர் சொல்லிட்டார். (வடை போச்சே!) அதே மாதிரி ஐ.ஏ.எஸ்.க்குப் படிக்கிறேன்னு பயோடேட்டா போட்டதிலிருந்து அந்தப் படிப்பு எல்லாம் அப்படியே கிடப்பில் கிடக்குது. இந்த மாதிரி பின்விளைவுகள் பக்கவிளைவுகள் எல்லாம் ‘லைட்’ட்டாக இருந்த போதிலும் இட்லிவடையில் நான்குப் பதிவுகளே வெளிவந்த போதிலும் அதைப் படித்துவிட்டு எனக்கு வந்த வாசகர் கருத்துகளும் மின்னஞ்சல்களும் ஜி-டாக் அழைப்புகளும் இட்லிவடையின் அறிமுகத்தால் நான் ஏற்படுத்திக் கொண்ட நட்புகளும் மிகப்பல என்ற போதிலும் இந்தச் சம்பவம் என்னை மிகவும் ஆச்சர்யமூட்டியது!!


அகமதாபாத்தில் நான் பணிபுரியும் எனது வங்கியின் மண்டல அலுவலகக் கிளைக்கு தினமும் எண்ணிலடங்காத வாடிக்கையாளர்கள் வருகை புரிவர். எப்பொழுதாவது தமிழர்கள் வரும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி ஒரு நாள் தனது லோன் அக்கவுண்டைக் க்ளோஸ் செய்ய வேண்டி வந்திருந்து ஒரு அரைமணி நேரமாக என் முன் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது கோப்புகளைப் பார்த்து அவர் தமிழரா என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறு “உங்க பேர் சுபத்ராவா?” எனக்கேட்டார். நான் ஆச்சர்யப்பட்டவாரே “ஆமாம்” என்று பதிலளித்தேன். ஒருவேளை என் பெயரை ரெஃபரென்ஸ் கொடுத்து யாராவது இவரை என்னிடம் வரச் சொல்லியிருக்கக் கூடும் என்ற நினைப்புதான் எனக்கு மின்னல்வெட்டியது. ஆனால் எதிர்பாராத விதமாக அவர் “நீங்க தான் இட்லிவடையில் குஜராத்தைப் பற்றி எழுதியதா?” என அவர் கேட்டதும் அப்படியே.....ஷாக்காயிட்டேன் :-) அவர் இட்லிவடையைத் தொடர்ந்து படிப்பவர் எனவும் எனது அந்தக் கட்டுரையில் என்னைப் பற்றிய விவரங்கள் சில கொடுக்கப்பட்டிருந்த காரணத்தாலும் அலுவலகத்தில் அப்போது ஹிந்தியில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்த காரணத்தாலும் எனது முக அழகை(!) வைத்தும் ஒரு யூகம் செய்ததாக அவர் கூறினார். தனது மனைவியுடனும் குழந்தைகளுடனும் அறிமுகம் செய்து வைப்பதாகவும் தனது இல்லத்திற்கு வருமாறும் விசிட்டிங் கார்டைக் கொடுத்துச் சென்றார்.

இந்த விசித்திரமான சம்பவத்தை உடனே வந்து இவரிடம் பகிர்ந்து கொண்டால் ஒரு “:-)” அனுப்பினார். என்னவென்று கேட்டால், “இல்ல.. உண்மை வெளிவரும் போது இட்லிவடையோட சேர்ந்து சட்னி ஆகுறதுக்கு இன்னொரு ஆள் கிடைச்சிருச்சு”ன்னு சொன்னாரே பார்க்கலாம். அதிலிருந்து “இ.வ.வில் நீங்க எழுதுறீங்களே, அந்த ப்ளாக்ஸ்பாட் எழுதுறவர் யார்னு உங்களுக்குத் தெரியுமா?”ன்னு யாராவது என்னிடம் கேட்டால் “இட்லிவடையா, அது ஈரோடு பக்கம் சேலம் பக்கம் தூத்துக்குடி பக்கம் எங்கேயாவது இருக்கும். எனக்கு அந்த ஊரே தெரியாது”ன்னு எதையாவது உளறிவைத்துவிட்டு ‘எஸ்’ தான்!

இட்லிவடையைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. தமிழகம் மற்றும் இந்தியாவின் தற்போதைய அரசியல் நிலவரங்களை இவரது பதிவுகள் ஒவ்வொன்றாக நூல்பிடித்து நூல்பிடித்துப் படித்தே கற்றுக் கொண்டேன். குஜராத்தில் இருந்து கொண்டு தமிழ்நாட்டைப் பற்றிய சகலவிதமான அப்டேட்ஸையும் அங்கு இருப்பவர்களைவிட அதிகமாகத் தெரி்ந்துகொள்ள முடிகிறதென்றால் அதற்கு இ.வ. ஒரு முக்கியக் காரணம். குறிப்பாக, 2G, அன்னா ஹசாரே போன்ற பல.. சினிமா, அரசியல், புத்தகங்கள், நகைச்சுவை, செய்திகள், உதவி, பல வி.ஐ.பி.களின் அறிமுகங்கள், அவர்களின்/அவர்களைப் பற்றிய கட்டுரைகள், கார்ட்டூன்கள், புதிர்கள் என வெரைட்டியாக விருந்தளிப்பது இட்லிவடை. அதற்கு ஆதாரமாக இந்தத் தளத்தின் 22-லட்சத்தைத் தாண்டிய ஹிட்ஸையும் 2000-ஐ நெருங்கிக்கொண்டிருக்கும் ஃபாலோயர்களையும் ஒவ்வொரு பதிவிற்கும் வரும் கருத்துகளையும் சொல்லலாம்.

இட்லிவடை,
வலையுலகில் நீங்கள் யாரென்று அறிய இவ்வளவு க்யூரியாசிட்டியை ஏற்படுத்திய பின்னும் இன்னும் ‘தலைமறைவாகவே’ இருக்கும் உங்களது மன உறுதிக்கும், தொடர்ந்து இந்தத் தளத்தை சூப்பராக நடத்திவரும் உங்களது முயற்சிகளுக்கும், இதற்கு வரும் ஆட்சென்ஸ் வருமானங்களைத் தேவைப்படுவோருக்கு உதவிசெய்வதற்காகப் http://www.blogger.com/img/blank.gifபயன்படுத்திவரும் தங்களது நல்ல உள்ளத்திற்கும் உங்கள் வாசகர்கள் சார்பாக ஹேட்ஸ் ஆஃப்!

ஒன்பதாவது ஆண்டுக்குள் அடியெடுத்துவைக்கும் உங்களை வாழ்த்த வயதில்லை...வணங்குகிறேன் (என்ன ஒரு 59 வயசிருக்குமா?) :-)

V wish U, iVadai keep rocking..

சுபத்ரா
http://subadhraspeaks.blogspot.com/

ஒர் உண்மையை சொல்ல விரும்புகிறேன், உங்களை அலுவலகத்தில் சந்தித்தது நான் தான் !

Read More...

7 ஆம் அறிவு - FIR


படம் பல்லவ இளவரசராக வாழ்ந்த போதிதர்மன் பற்றிய நியூஸ் ரீலுடன் ஆரம்பிக்கிறது. இசை கூட அப்படியே!. சினிமாவில் ஸ்கிரீன் பிளே என்பது எவ்வளவு முக்கியம் என்று முருகதாசுக்கு தெரியாமல் இருக்காது இருந்தாலும், இந்த போதிதர்மன் டாக்குமண்டரியை பின் பகுதியில் ஸ்ருதி ஹாசன் போதிதர்மன் பற்றி சூரியாவிடன் சொல்லும் காட்சியில் காண்பித்திருக்கலாம். முருகதாஸுக்கு என்ன பயமோ அதை முதலில் காண்பித்துவிட்டார் அதனால் படத்தில் கொஞ்சம் கூட சஸ்பென்ஸே இல்லாமல், எப்பப்பா வில்லனை சூர்யா அடித்து "சுபம்" போடுவார்கள் என்று ஏங்க வைக்கிறது திரைக்கதை.


பல்லவ தேசம் போன்ற செட்களை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள். போதிதர்மனாக வரும் சூர்யா சீனாவில் போடும் சண்டை படத்துக்கு பிளஸ். சரியான கலர் டோனுடன் எடுக்கப்பட்ட காட்சிகள். சூர்யாவின் நடிப்பு சபாஷ் போட வைக்கிறது.

டி.என்.ஏ பற்றி ஆராய்ச்சி செய்யும் ஸ்டூடண்டாக வரும் ஸ்ருதி ஹாசன் நடிப்பதில் பெரிய ஆச்சரியம் இல்லை. எல்லாம் அவர் டி.என்.ஏவிலேயே இருக்கிறது.

வெள்ளை கோட் போட்டுக்கொண்டு வருபவர் தான் சினிமா டாக்டர் என்பதை போல, ஆராய்ச்சி செய்பவர்கள் எல்லாம் ரங்கராஜன், சுபா ஸ்ரீநிவாசன் என்று இருக்க வேண்டும் அப்போது தான் நமக்கு நம்பிக்கை வரும். ஐயங்கார், ஐயர் டி.என்.ஏவை ஆராய்ச்சி செய்தால் மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ளாம்.

சீனாவிலிருந்து வரும் வில்லன் - டோங்லி. "ஏங்க, பேர் சூப்பரா இருக்கு நம்ப வீட்டு நாய்க்கு இந்த பேரையே வைக்கலாம்" என்று பக்கத்தில் இருக்கும் தம்பதிகள் பேசிக்கொண்டாகள். 'பையோ வார்' என்பது தமிழ் மக்களூக்கு புதுசு இல்லை, இருந்தாலும் இந்த படத்தில் வைரஸ் பரவுவது எப்படி என்று காட்டும் காட்சிகள் 'அட' போட வைக்கிறது.

டி.என்.ஏ ஆராய்ச்சி மூலம் சூர்யாவை தண்ணீர் பெட்டிக்குள் நீல நிற லைட் அடித்து கொஞ்சம் வெறுப்பேற்றுகிறார்கள்.


சூர்யா ஸ்ருதிஹாசன் காதல் காட்சிகள் பரவாயில்லை ரகம். அந்த யானை காட்சி மட்டும் நன்றாக இருக்கிறது யானை மேலே ஏறி உட்காரும் ஸ்ருதிஹாசன் "குத்துது" என்று சொல்ல "அதுக்குனு யானை மேலே Tilesஆ போட முடியும்?" என்று கேட்கும் இடம் சிரிக்க வைக்கிறது.

"வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு... ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம்!"

"இனி தமிழனை இருட்டில கூட யாரும் அடிக்கக் கூடாது"

ஒரே தமிழர் நெடி, இந்த படத்துக்கு தேவையில்லாத, ஏன் சூர்யாவிற்கு தேவையில்லாத விஷயங்கள்.

"தமிழ் மொழி குரங்கு போன்றது" என்று சொல்லுவதற்கு ஸ்ருதிஹாசன் அவரை விளாசும் போது கைதட்டல்.
ஆனால் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பேசிய பெரியாரை இப்படி விளாசினால் கையால் தட்டு விழும்.

"வெள்ளைக்காரன் இங்க வந்து நம்மை அடிமைப்படுத்தினான், இப்போ நாம அங்க போய் அடிமையாய் இருக்கிறோம்" என்று அவர் பேசும் போது, இவர் கூட வெளிநாடுக்கு போய் தான் ஏதோ படித்துவிட்டு வந்தார் என்று நினைக்கத் தோன்றுகிறது.

தமிழனை தூண்டிவிட்டால் ஜெயிக்கலாம் என்று சொல்லும் வசனங்களுக்கு கைத்தட்டல் விழுகிறது. ஆனால் சூர்யா சர்க்கஸ் காட்சியில் தொப்பியை மேலே போட்டு பிடுக்கும் போதும் அதே தமிழன் தூண்டப்பட்டு கைத்தட்டுகிறான்.

இரண்டாம் பாதியில் லாரி, பைக், கார், ஆட்டோ என்று ஹிப்னாடிஸம் மூலம் அதிரடியை காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். அதில் வரும் கிராபிக்ஸ் சுமார் ரகம்.

கடைசியில் சூர்யா நம்மை பார்த்து பிரச்சாரம் செய்யும் காட்சிக்கு கைத்தட்டல் கிடைத்தாலும் தற்காப்பு கலைகொண்டு சூர்யா எதிர்க்கொண்டாலும் விஜய் வேலாயுத்ததை கொண்டு வீழ்த்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

நடிப்பு, இசை, கேமரா என்று எல்லாம் நன்றாக இருந்தும் திரைக்கதையில் பெரிய ஓட்டை இருப்பதால் படம் சுமார் என்று சொல்ல வைக்கிறது.


படத்தில் "மஞ்சளே விவசாயம் செய்யாதவன் அதற்கு பேட்டண்ட் வாங்கிவிட்டான்" என்று சூர்யா சொல்லுகிறார். மஞ்சளின் பெருமை தெரிந்ததால் இந்த கமெண்ட்!


இட்லிவடை மார்க் 5.75/10

பிகு: இட்லிவடை நடத்தும் நான் கூட ரத்த பரிசோதனை செய்து என் டி.என்.ஏ வை பரிசோதிக்க வேண்டும். என் கொள்ளு தாத்தா இட்லிவடை கடை வைத்து நடத்தியிப்பார் என்று நினைக்கிறேன்.




Read More...

Wednesday, October 26, 2011

வேலாயுதம் - FIR

விஜய் பற்றி எவ்வளவு நக்கல் ஜோக்ஸ் வந்தாலும் மக்களுக்கு அவர் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. கில்லி மாதிரி இன்னொரு படம் வராதா என்று மக்கள் ஜாலியாக ஒரு படம் பார்க்க இன்றும் ஏங்குகிறார்கள். அந்த நம்பிக்கையை விஜய் 75% பூர்த்தி செய்திருக்கிறார்.

தங்கை செண்டிமெண்டுடன் கந்தசாமி, அந்நியன் இரண்டையும் கலந்துக்கட்டி அடித்திருக்கிறார்கள். முதல் காட்சி "பாக்கிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில்.." என்று போடும் போது பக்கத்தில் இருப்பவரிடம் "சார் இது வேலாயுதமா ? இல்லை ஏதாவது விஜயகாந்த் படமா ?" என்று கேட்க அவரும் "எனக்கும் சந்தேகமா தான் சார் இருக்கு" என்றார்.



தீவிரவாதிகளுக்கு இந்திய அரசியல்வாதியுடன் (ஹோம் மினிஸ்டர்) தொடர்பு என்ற அதே ஃபார்முலா!. விஜய் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு சென்று சண்டை போட்டால் கூட இருக்கும் கிராமத்து மக்கள், சந்தானம், தங்கை, இரண்டு ஹீரோயின், போலீஸ் என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு போக முடியுமா ? செலவு என்ன ஆவது அதனால் தீவிரவாதிகள் சொந்த செலவில் (இவரை தேடி சென்னை வந்து) சூனியம் வைத்துக்கொள்கிறார்கள்.

விஜய் ஓபனிங் சீன் அருவாளுடன் வந்து ரயில் சீட் போடும் அந்த காமெடி - சூப்பர், அண்ணன் தங்கை பாசத்தை காண்பிக்க அவர் கோழி பிடிக்கும் காமெடி, பிறகு சீட்டு கம்பெனியில் போட்ட பணத்தை எடுக்க சென்னை வருவது, அவர் பணத்தை லவுட்ட சந்தானம் போடும் பிளான் என்று படம் முழு மூச்சு காமெடியாக மாறுகிறது. சும்மா சொல்லக்கூடாது ஜாலியாக போகிறபோக்கில் சந்தானம் பேசும் வசனங்கள் படத்துக்கு பலம். கடைசியில் அவர் "ஏம்பா இதை மூன்றாவது சீனிலேயே சொல்லியிருக்க கூடாதா ?" என்று அவர் விஜயிடம் கேட்பது அக்மார்க் சந்த(தா)னம் காமெடி.

பத்திரிகையாளரான ஜெனிலியா வேலாயும் கதாபாத்திரத்தை கொண்டு வர காமெடியுடன் அதிரடி சரவெடியாக மாறுகிறது படம். ஹன்சிகா முறை பெண்ணாக டினோபால் போட்ட உடம்பை அடிக்கடி காண்பிக்கிறார். இவர் கிராமத்து பெண்ணாம் :-)

சினிமா வில்லன் என்றால் என்ன செய்வார் ? பாம் வைப்பார், கள்ள நோட்டு அடிப்பார், பெண்கள் வியாபாரம் செய்வார், சீட்டு கம்பெனி நடத்தி மக்களின் பணத்தை ஏமாற்றுவார் இல்லை ரயிலை கவுப்பார். இந்த பட வில்லன் பயங்கிரம் இவை எல்லாவற்றையும் செய்கிறார்!. பாம் வைக்கும் வெளிநாட்டு தீவிரவாதி யாராக இருந்தாலும் அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற நியதிப்படி இந்த படத்திலும் அவர்களேதீவிரவாதிகளாக வருகிறார்கள். அவரை சப்போர்ட் செய்ய குங்கும போட்டு இட்டுக்கொண்டு ஒரு மந்திரி வந்தால் சமய உணர்வு பாதிக்கப்படாது என்ற ஃபார்முலாவை தவறாமல் இயக்குனர் பயன்படுத்தியிருக்கிறார்.

விளையாட்டு போட்டிக்கள் நடக்கிறதோ இல்லையோ, மக்களை கூட்டி சினிமா டான்ஸ் ஆட மற்றும் படத்தில் சினிமா ஹீரோ மக்களை கூட்டி பிரசங்கம் செய்ய நேரு விளையாட்டு அரங்கம் என்று ஃபார்முலாபடி இந்த படத்திலும் கடைசியில் வருகிறது. ஏனோ முகமூடி போட்டுக்கொண்டு வரும் போது அந்நியன் ஞாபகம் வருகிறது.

சந்தானத்தின் 'குசு' வசனத்துக்கு பிறகு "உங்களால் ஓசாமா பின்லேடனை கூட காப்பாத்த முடியலை, ஆனால் கசாப்பை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்" என்று போலீஸ் பேசும் வசனம்.

மசாலா படத்துக்கு உண்டான கேமரா, இசை என்று படம் சரியான எண்டர்டெயினர். தியேட்டர் காரர்கள் நினைத்தால் இன்னும் கொஞ்சம் சரியாக படத்தை எடிட் செய்யலாம்.
கொடுத்த காசுக்கு ஏமாற்றவில்லை. குடும்பத்துடன் ஜாலியாக பார்க்கலாம், விஜய்யை கிண்டல் பண்ணலாம்.


சிக்ஸ் பேக் ஃபீவர் விஜயையும் தொற்றுக்கொண்டு விட்டது. கடைசியில் உடம்பை முறுக்கேற்றி சண்டை போடுகிறார். எதற்கு இதெல்லாம் மிஸ்டர் விஜய் ? ஆறாம் அறிவை ஆப் செய்துவிட்டு பார்க்கும் எங்களுக்கு நீங்கள் கெமிக்கல் ஃபேக்டரியை நோக்கி ஓடும் ரயிலை சடன் பிரேக் போட்டு நிறுத்தும் காட்சி ...உங்களுக்கும் ஒரு பிரேக் தான்.


இட்லிவடை மார்க் - 6/10

முதலில் "Thanks Jaya TV" என்று வருகிறது :-)

நாளை ஏழாம் அறிவு விமர்சனம்

Read More...

தீபாவளி வாழ்த்துகள்

சிதம்பரம், பிரணாப் போல டபுள் ஷாட் வெடித்து, மாயாவதி போல யானை வெடி வெடித்து, ராமதாஸ் போல ஊசி வெடி வெடித்து, பிஜிலியான பிஜேபியை வெடித்து, அதிமுக சரவெடி கூட்டணியை வெடித்து, திமுக போல புஸ்வானம் வெடித்து, ராஜா, கனிமொழி போல 'கம்பி' மத்தாப்பு வெடித்து, 'கேப்'(டன்) வெடித்து தீவிரவாதிகளை ஒழித்து, அன்னா ஹசாரே போல ஆட்டம் பாம் வெடித்து ராக்கெட் போல உங்களின் கஷ்டங்கள் பறக்க, மழையில் மன்மோகன் சிங் வெடி போல நமுத்து போகாமல் எல்லா வெடிகளும் நன்றாக வெடிக்க தரை சக்கரம் போல இருக்கும் இட்லிவடையின் வாழ்த்துகள்.

Read More...

Tuesday, October 25, 2011

R.K.Laxman - 90 !


வாழ்த்துகள் !

Read More...

Monday, October 24, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 24-10-2011

அன்புள்ள முனி,

நீண்ட நாட்களுக்கு பிறகு கடிதம் எழுதுகிறேன் என்று கோபப்பட வேண்டாம். "பிரதமருக்குக் கடிதம் எழுதினால் மட்டும் மீனவர் பிரச்சினை தீர்ந்து விடாது" என்று ஜெயலலிதாவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார் கலைஞர். மகள் டெல்லியில் இருக்கிறார் என்றால் மாசா மாசம் டெல்லி ஓடும் கலைஞர் தமிழர்களுக்குப் பிரச்சனை என்றால் பிரதமருக்குத் தந்திதான் அனுப்பினார் என்பது அவருக்கும் மறந்து விட்டது போல, சிதம்பரத்தின் கஜினி வியாதி மாதிரி.

அடுத்த கடிதம் ஞாநி கலாமுக்கு எழுதியது.

அப்துல் கலாமுக்கு

வணக்கம்.

கூடங்குளம் அணு உலை தொடர்பாக மக்களின் அச்சத்தைப் போக்க உங்களை அங்கே மத்திய அரசு அனுப்பப்போவதாக செய்திகள் வந்திருக்கின்றன.

தயவுசெய்து நீங்கள் போகவேண்டாம். உங்கள் மனசாட்சிக்குத் தெரியும் - அணு உலைத் தொழில்நுட்பம் என்பது பாதுகாப்பானது அல்ல என்பது. உங்களுக்கு நேரடியாகவே தெரியும் கல்பாக்கத்திலும் இதர உலைகளிலும் என்னென்ன விபத்துகள் நடந்தன, அவை எப்படி மூடி மறைத்து மழுப்பப்பட்டன என்பதை விஞ்ஞான ஆலோசகராக நீங்கள் அறிவீர்கள்.

குடியரசுத்தலைவர் பதவியில் இருந்தபோதும் இப்போதும் குழந்தைகளைச் சந்திக்கிறீர்கள். உற்சாகப்படுத்துகிறீர்கள். கனவு காணச் சொல்கிறீர்கள். அது போதும். அத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். கூடங்குளம் மக்களுக்கு ஒரு கனவு இருக்கிறது. அமைதியான அணு ஆபத்து இல்லாத வாழ்க்கைக் கனவு அது. அதைக் குலைத்துவிடாதீர்கள்.

நீங்கள் இலக்கிய ரசிகர். “நல்லது செய்தலாற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்” என்கிறது இலக்கியம். நீங்கள் இதுவரை என்ன நல்லது செய்தீர்களோ தெரியவில்லை. தயவுசெய்து கெட்டதைச் செய்துவிடாதீர்கள்" என்கிறார்.

ஞாநியின் கருத்து சரியா தவறா என்று யாராவது படித்தவர்கள் விளக்குவார்கள். ஆனால் ஞாநியுன் கடித Tone நன்றாக இல்லை. ஞாநியுடம் கொஞ்சம் Maturity எதிர்பாக்கிறேன்.

அணு உலையினால் பாதிப்பு வரும் என்று ஞானி போன்றவர்கள் கூவுவதை விட அதிக பாதிப்பு முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் எடியூரப்பாவுக்கு. லோக் ஆயுக்தா போலீசார் நில அபகரிப்பு வழக்கில் அவரைக் கைது செய்ய, உடனே அரசியல்வாதிகளுக்கு உடனே வரும் நெஞ்சு மற்றும் குஞ்சு வலி எல்லாம் எடியூரப்பாவைத் தாக்கி ஐசியூவில் ஏசியில் சொகுசாக இருக்கிறார். முதலமைச்சர், போலீஸ் கமிஷனர் எல்லாம் வந்து பார்த்து குசலம் விசாரித்திருக்கிறார்கள். ஜாமீன் கிடைக்கும்வரை இனி கர்நாடகாவில் பல நாடகங்கள் அரங்கேறும்.

அத்வானி ரத யாத்திரையை கர்நாடக பக்கம் திருப்புவாரா என்று பல யூகங்கள் வந்துக்கொண்டு இருக்கிறது. ரதம் பெங்களூரில் ஓடும் என்று இன்று சொல்லிட்டாறு அத்வானி. மெட்ரோவே ஓடுகிறது, ரதம் ஓடாமலா ? முன்பே எடியூரப்பாவை பிஜேபியை விட்டு அடித்து துரத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாவம் அத்வானிக்கு வயசாகிவிட்டது, எடியூரப்பாவையே ஒன்று செய்ய முடியாதவர் எப்படி பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்குவார். எது எப்படியோ அத்வானியின் ரதத்தைப் பஞ்சர் ஆகிவிட்டார் எடியூரப்பா.

நோயைத் தீர்க்கும் டாக்டர்கள் முதலில் தாங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். அதே போல ஊழலை ஒழிக்கப் போவதாகக் குரல் குடுப்பவர்கள் முதலில் தங்கள் நேர்மையைச் சோதித்துக்கொள்ளவேண்டும். அன்னாவின் ஊழல் ஒழிப்பு உண்ணாவிரதத்தில் ஆட்டம் போட்ட கிரண்பேடி இப்போது விமானத்தில் கட்டணம் குறைந்த வகுப்பில் பயணம் செய்துவிட்டு, உயர் வகுப்புக் கட்டணத்தை வசூலித்து விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அப்படி வசூலித்த பணம் ஏழைகளுக்கு என்று சொன்னாலும், நேர்மை இல்லாமல் சம்பாதித்த பணம் என்ற வகையில் அது ஊழல் ஆகாதா? அருமை அன்னாவும் அவரோட தம்பிகளும் என்ன சொல்லப் போறாங்க?

ஸ்டீவ் ஜாப்ஸ் பாராட்டுக்குரியவர்தான், ஆனால் அவர் மறைந்த சில நாட்களிலேயே புற்று நோயில் இறந்த டென்னிஸ் ரிச்சிக்கு மீடியாவின் கவனம் கிட்டவில்லை. ஏனோ சின்ன வயதில் இந்தியா வந்தார் என்ற ஒரு காரணத்துக்காக "இந்தியாவிலி​ருந்து வந்த ஆப்பிள்" என்று தேடி கண்டுபிடித்து எழுதுகிறார்கள்.

லிபிய அதிபராக இருந்து மக்களாலும், புரட்சிப் படையினராலும் தேடி கண்டுபிடித்து, விரட்டப்பட்டு வீழ்த்தப்பட்ட மும்மர் கடாபியின் மரணக் காட்சிகள் மனிதர்கள் ஆப்பிள் யுகத்திலும் காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. எல்லோரிடமும் துப்பாக்கியும், அவர்களை வழி நடத்த சரியான தலைவரும் இல்லாமல், நாடு கடாபி போல வீழ்ந்துவிடும் என்று நினைக்கிறேன்.

முன்பு விகடனில் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்து வெளியிட்ட ஜோக்குக்கு ஆசிரியரை ஜெயிலில் அடைத்தார்கள். ஆனால் இன்று புதுவை அமைச்சர் கல்யாணசுந்தரம் திண்டிவனத்தில் 10-ஆம் வகுப்புத் தனித்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளார். இத்தனைக்கும் இவர் கல்வி அமைச்சர்!. கடந்த 2 வாரத்துக்கு மேலாக சட்டசபை அலுவலகத்துக்கு வரவில்லை. பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக எல்லோரும் நம்பினார்கள். ஆனால் நேற்று காலை அவர் சட்டசபை அலுவலகத்துக்கு வந்தார். வழக்கம்போல அலுவல்களை கவனித்தார். பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அவரை சந்தித்து விட்டு சென்றனர். M .A எக்ஸாம் எழுத போனவரைப் போய் காணம்னு போலீஸ் தேடியிருக்கிறது. எப்படி இருந்தாலும் கல்வி அமைச்சர் நினைத்திருந்தால் டாக்டர் பட்டமே வாங்கியிருக்கலாம். போயும் போய் SSLC பரீட்சைக்கு இப்படி செய்துள்ளார் என்று நினைக்கும் போது அவர் அமைச்சராக ஏன் ஒரு எம்.எல்.ஏவாக இருப்பதற்கே கூட தகுதி இல்லை.

கனிமொழிக்கு விரைவில் ஜாமின் கிடைத்துவிடும் என்று தெரிகிறது. ஆனாலும் இந்த வருடம் விடுமுறை தினம் ஜெயிலில்தான் என்று கோர்ட்டு முகவின் நேற்றைய எல்லா சந்திப்புகளையும் சிபிஐயின் கரிசனத்தையும் மீறி ஆப்பு அடித்து உள்ளது. கலைஞர் டிவிக்கு தான் தீபாவளி போன்ற நல்ல நாட்கள் கிடையாதே!. அவர்களுக்குப் பல வழிகளிலும் கோடிக்கணக்கில் திருட்டுப் பணம் வரும் நாட்கள் எல்லாம் தீபாவளிதான்!.


3 நிமிடத்தில் படித்து முடிக்க வேண்டிய பதவி பிரமாணத்தை கவர்னர் சொல்லி முடிப்பதற்குள் கடகடவென்று 1.5 நிமிடத்தில் வாசித்து அரங்கத்தையே கலகலப்பாக்கினார் அமைச்சர் கருப்பசாமி. பதவி ஏற்பு முடிந்தவுடன் குடுகுடுவென்று இளைஞன் போல் துள்ளி குதித்து ஓடியதை பார்த்த எல்லோரும் சிரித்தனர். அவர் சில நாட்களுக்கு முன் மரணம் அடைந்தது பலரை வருத்தப்பட செய்திருக்கிறது.

எல்லோருக்கும் ஒரு நல்ல செய்தி. தீபாவளி அன்று வேலாயுதம் விமர்சனமும், அதற்கு அடுத்த நாள் 7ஆம் அறிவு விமர்சனமும் இட்லிவடையில் வரும். எல்லாம் டிக்கெட் கையில் இருக்கும் தைரியம்!

தீவாவளி மலர் விமர்சனம்: விகடன் - மூன்று மாத ஆனந்த விகடனை "ஒன்றாக" சேர்த்து பைண்ட் செய்திருக்கிறார்கள்.

கல்கி - மங்கையர் மலர், கல்கி, கோகுலம் பத்திரிக்கையை "ஒன்றாக" சேர்த்து பைண்ட் செய்திருக்கிறார்கள்.

சங்கராமன் கொலை குற்றத்துக்கு பிறகு பொதுவில் காஞ்சி மடாதிபதிகளின் மூன்று பேரின் படங்களை யாரும் போட முன்வருவதில்லை, அதுவும் "ஒன்றாகிவிட்டது"


கடைசி கோட் : "ஒரே ஒரு ஆணோட விமர்சனங்களுக்காக மத்த ஆண்களோட பாராட்டுக்களைத் தியாகம் பண்ணத் துணியறவங்களுக்கு கல்யாணம் என்ற முடிவு சரி. இப்போதைக்கு ஐ'ம் நாட் ரெடி - மல்லிகா ஷெராவத்.


பெங்களூரு கோர்ட்டில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெறவும், உலக அமைதிக்காகவும் ஸ்ரீரங்கத்தில் ராஷ்ட்ரப்ருத் ஹோமம் நடந்துள்ளது. அடிக்கடி முனி கடிதம் எழுத இதே போல் யாராவது ஹோமம் செய்வார்களா?

Read More...

Friday, October 21, 2011

சோனியாவை சந்திக்கிறார் கலைஞர்

கருணாநிதி நாளை காலை திகார் ஜெயிலில் கனிமொழியை சந்திக்கிறார். நாளை மதியம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
"கனிமொழிக்கு ஜாமின் கொடுப்பதை சி.பி.ஐ., எதிர்க்காது" - செய்தி

Read More...

Wednesday, October 19, 2011

இது அழகல்ல

சொத்துக் குவிப்பு வழக்கு தொட்ர்பாக ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவது உறுதியாகிவிட்டது. நேற்று கடைசி முறையாக பாதுகாப்பு குறித்து மனு ஒன்றை சமர்பித்தார் ஆனால் அதை கோர்ட் நிராகரித்துவிட்டது. அதுவும் வந்திருக்க மாட்டார் ஆனால் உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்திரவால் நேரில் வர சம்மதித்தார்.

பொதுவாழ்வுக்கு வந்த பின் உயிரைப்பற்றி கவலைப்படுபவர்கள் பொதுவாழ்வுக்கே தகுதி அற்றவர்கள். ஜெயலலிதா செய்வது சட்டப்படிதான் என்றாலும், மனசாட்சி படி இது தப்பு. ஒரு முதலமைச்சருக்கு இது அழகல்ல.

திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்ட தமிழக மக்கள் இனி 'கோவணத்துண்டு' என்ற சின்னதுக்கு ஓட்டு போடலாம்.
எதற்கும் ஓ.பன்னீர்செல்வம் ரெடியாக இருப்பது நல்லது !

Read More...

Sunday, October 16, 2011

சி.பி.ஐயின் கடமை உணர்ச்சி !

சி.பி.ஐ 2009ல் விசாரித்து வெளியிட்ட விவரங்களை ஜெயலலிதா மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் குருமூர்த்தி எழுதினார். இதை கண்டு தயாநிதி மாறன் அவதூறு வழக்கு கூட போட்டர். எங்கே தங்கள் மீது அவதூறு வழக்கு போடுவார்களோ என்று பயந்து நீண்ட தயக்கத்திற்குப் பிறகு தயாநிதி மாறன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதியின் பெயர் வெளியாகி சுமார் நான்கு வருடங்களுக்குப் பிறகு சிபிஐ இந்த சோதனை நடத்தியிருப்பதிலிருந்தே, விசாரணை எந்த லட்சணத்தில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை சொல்லும். சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் விசாரணை என்ற ஒரே காரணத்திற்காகவே சிபிஐ இச்சோதனையை நிகழ்த்தியிருக்கக் கூடும். தவிர, மாறன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் கூறிய பிறகே சிபிஐ இச்சோதனையை நிகழ்த்தியிருப்பதால், மாறன் வீட்டில் எதுவும் கிடைத்திருக்காது. நவராத்திரி சமயம் என்பதால் போகும் போது வெற்றிலை பாக்கு, சுண்டல் கொடுத்திருப்பார்கள்.

இச்சோதனைகளைப் பற்றி இன்னொரு தகவலும் (வதந்தியும்) உலவுகிறது. அதாவது, சோதனைகள் தயாநிதியை குறிவைத்து நடத்தப்படுவதாக நம்பப்பட்டாலும், உண்மையில் இது சன் டிவி தொடர்பான பணப் பறிமாற்றங்கள் மற்றும் கலாநிதியைச் சிக்க வைக்கப்படுவதற்கான சோதனைகளே என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் சோதனையின் போது சிபிஐ அதிகாரிகளுடன் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பொறியாளர்களும் உடன் இருந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. தயாநிதியின் போட் கிளப் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு தொலைபேசி இணைப்பு கொடுத்தது தொடர்பான சோதனைகளாக இருக்கலாமெனவும் தெரிகிறது. இதற்கேற்றாற்போல், சென்ற வாரம் சிபிஐ, சென்னை டெலிகாமிடமிருந்து, அக்குறிப்பிட்ட தொலைபேசி இணைப்பு தொடர்பான விவரங்களைக் கோரியிருந்தது குறிப்பிடத் தக்கது.

இம்மாதம் பதினெட்டாம் தேதி கனிமொழியின் ஜாமீன் மீதான விசாரணை நடைபெறவிருக்கிறது. இச்சமயம் சிபிஐ கனிமொழியின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்காது எனத் தெரிகிறது. அதாவது அவர் ஒரு பெண்ணென்ற அடிப்படையிலும், மனிதாபிமான அடிப்படையிலும் ஜாமீன் வழங்கலாம் சிபிஐ நினைக்கிறதாம். 2G ஸ்பெக்ட்ரத்திற்கு சமாதி கட்டும் பணிகள் கனிமொழியின் ஜாமீனிலிருந்து துவங்கலாம்.

மாறன் சகோதரர்கள் வீடுகளில் சோதனை நடத்தியதன் மூலம் சி.பி.ஐ. தனது கடமையைச் செய்திருக்கிறது - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இது காமெடி அல்ல செய்தி !

Read More...

Saturday, October 15, 2011

ரதயாத்திரை - ஏதோ கொஞ்சம் நல்லது நடக்கிறது


ஜெயிலில் எடியூரப்பா(டா)
தப்பை மறைக்க எவ்வளவு கோவில் குளம் என்று சுற்றினார் !

Read More...

Thursday, October 06, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ் - அஞ்சலி


(February 24, 1955 – October 5, 2011)

Read More...

Wednesday, October 05, 2011

ரஜினி, கமல் புதிர்



இதே மாதிரி கெட்டப்பில் ரஜினி எந்த படத்தில் வருவார் ? கமல் எந்த படத்தில் வருவார் ?

Read More...

சில நேரங்களில் சில மனிதர்கள் - 2

அடுத்த பகுதி ...

ஏழு வருடங்களுக்கு முன்னால், ஜெர்மெனிக்கு ஒரு பயிற்சிக்காக பதினைந்து தினங்கள் சென்றிருந்த வேளையில், ஒரு வார இறுதி விடுமுறையில் பிரான்ஸில் இருக்கும் லூர்தெஸ் என்ற இடத்திற்கு செல்லலாம் என முடிவெடுத்தேன். அப்பிரசித்தி பெற்ற இடத்திற்குச் செல்ல, நான் இருந்த இடத்திலிருந்து இரண்டு விமானப் பயணமும், ஒரு குறுகிய தூர ரயில் பயணமும் மேற்கொண்டாக வேண்டும். செல்லும்போது பயணம் மிகவும் இனிதாக அமைந்தது. லூர்தெஸில் செலவிட்ட தருணங்களும் இதயத்தை விட்டு என்றும் அகலாத, மகிழ்ச்சிகரமான ஒன்றாகும். ஆனால் ஜெர்மெனிக்குத் திரும்பும் பொழுது, லூர்தெஸில் எனது ரயிலைத் தவற விட்டேன்; அடுத்த ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

ஒருவாறு ரயிலைப் பிடித்து, விமான நிலையத்தை அடையும்போது அங்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அன்றைய தினத்தின் கடைசி விமானம், நான் செல்வதாக இருந்த விமானம் கிளம்பி விட்டது. அந்நிய மண்ணில், முற்றிலும் கைவிடப் பட்ட நிலையில், கண்களில் கண்ணீர் ததும்ப செய்வதறியாது நின்றிருந்தேன். அன்றைய இரவை ஒரு ஹோட்டலில் கழிக்கக் கூட கையில் போதுமான பணமில்லாத ஒரு நிலை. அப்போது, அங்கு விமான நிலையத்தின் செக்-இன் கவுண்டரில் இருந்த பிரெஞ்சுப் பெண்மணி, சற்று நேரம் காத்திருங்கள் என்று என்னைப் பணித்தார். எதற்காகக் காத்திருக்கச் சொல்கிறார் என்ற ஆச்சர்யத்துடன், அதே சமயம் வேறு வழியும் தெரியாததால், அவர் தமது வேலையை முடித்து விட்டு வரும்வரை காத்திருந்தேன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் தமது வேலையை முடித்து விட்டு, வாருங்கள் என்னுடன், என் வீட்டிற்கு என்று என்னை அழைத்தார். பொதுவாகவே ஏர்லைன் செக் இன் கவுண்டர்களில் பணி புரிபவர்கள் அதிகம் மற்றவர்களோடு அநாவசியமாகப் பேச்சுக் கொடுப்பதில்லை; பழகுவதுமில்லை; தங்கள் பணியிலேயே மும்முரமாக இருப்பார்கள். இவரின் அழைப்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி பேசவொட்டாமல் அடித்து விட்டது.

அவருக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவருடைய பெயர் ஜேன் மேரி என்று அறிந்து கொண்டேன். அவர் நேராக என்னை தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருடைய இரு குழந்தைகளுடன் இரவு உணவை முடித்துக் கொண்டவுடன், நான் தூங்குவதற்கு ஏற்றவாறு வசதி செய்து தந்து விட்டு அவர் தமது பணிகளைக் கவனிக்கச் சென்று விட்டார். மறுநாள் காலை அவர் என்னை எழுப்பியதுடன், என்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். வழி நெடுகிலும் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், ஊருக்குச் சென்றவுடன் அவருக்குத் தக்க சன்மானமும் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தேன்.

" தயவு செய்து எனக்கு நன்றி எதுவும் தெரிவிக்க வேண்டாம் " என்று கேட்டுக் கொண்ட ஜேன், இதே நிலை நாளை என் குழந்தைகளுக்கும் நேரலாம். இன்று நான் செய்யும் உதவி, நாளை என் குழந்தைகளுக்குத் தேவைப்படும் போது இறைவன் அவர்களுக்கும் அனுப்பி வைப்பார், என்றார்.

அன்றைய தினம் காலை முதல் விமானத்திலேயே என்னை அவர் அனுப்பி வைத்தார். அவருக்கு என்னால் முடிந்ததெல்லாம் அவருக்கான எனது ப்ரார்த்தனைகள்தான்.

(மூலம் : பமீலா பர்போஸா, ஹைதராபாத்)


என்னுடைய சிறு பிராயத்தில் நான் வளர்ந்தது முழுவதும், தமிழகத்தின் ஒரு கிராமப்புறத்திலுள்ள என்னுடைய தாத்தா வீட்டில். பள்ளியில் ஒரு சராசரிக்கும் கீழான மாணவனான நான், அங்கு பெரும்பாலும் என்னுடைய நேரத்தை பறவைகளையும், அணில்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதையும் வேடிக்கை பார்ப்பதிலேயே செலவிடுவேன். 1999 ஆம் வருடம், நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது, எங்கள் பள்ளிக்குப் புதிதாக வந்திருந்த தமிழாசிரியை திலகம் அவர்கள் எனக்கு அறிமுகமானார்கள். இன்னமும் அவர்களை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சற்றே குட்டையாக, குடும்பப் பாங்கான, சிறிய கல் பதித்த மூக்குத்தியுடன், நெற்றித் திலகமிட்ட களையான முகம்.



வகுப்பில் ஒருநாள், அவர் என்னிடம் அன்றைய தினம் போதித்திருந்த பாடத்தின் ஒர்பகுதியை எழுந்து வாசிக்குமாறு கூறினார். என்னுடைய மனோதிடமும், தைரியமும் பஞ்சாகப் பறந்து விட்டன. என்னுடைய கைகள் நடுங்கத் துவங்கி விட்டன; வார்த்தைகள் வெளிவர மறுத்தன; ஒரு பாராவைப் படித்து முடிப்பதற்குள் சொல்லொணாத் தடுமாற்றங்கள்; என்னுடைய வகுப்புத் தோழர்கள் எள்ளி நகையாடியது என்னை மிகுந்த வெட்கத்திற்காட்படுத்தியது.



“தமிழ் உன்னுடைய தாய்மொழிதானே? அதைச் சரளமாகப் படிப்பதில் உனக்கு என்ன பிரச்சனை?” என திலகம் அவர்கள் மிகுந்த வாந்துவத்துடன் என்னை வினவினார்.



நான் தலையைக் குனிந்தவாறே, படிக்கும் பொழுது தவறு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே நான் தடுமாறி விட்டேன் என என்னுடைய தவறை ஒப்புக் கொண்டேன்.



அவர் என்னுடைய தோளில் தட்டிக் கொடுத்தவாறே, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நீ கவலைப்படத் தேவையில்லை. உனக்குப் பிடித்த கதைப் புத்தகங்கள், மற்ற புத்தகங்கள் எதுவாக இருப்பினும் படித்து, படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள். உன்னுடைய படிக்கும் பழக்கம் வளர்வதோடு, தடுமாற்றங்களும் ஏற்படாது என தைரியமூட்டினார்.



சில மாதங்களில் அவருக்கு வேறு ஒரு அரசாங்கப் பணி கிட்டியது. அவர் எங்களுடைய வகுப்பறைக்கு கடைசியாக வந்திருந்து, எங்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்தினார்.



எதிர்வந்த விடுமுறை தினத்தில், எனக்கு பிரபல தமிழ் எழுத்தாளரான சுஜாதாவின் நாவல் ஒன்று கிடைத்த்து. கூடவே திலகம் அவர்களின் அறிவுரையும் நினைவிற்கு வந்தது. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பின்பு அருகிலிருந்த சிறிய நகரத்திலுள்ள நூலகத்தில் என்னை சந்தாதாரராக இணைத்துக் கொண்டு, தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். இப்பழக்கவழக்கம் நாளடைவில் என்னை பள்ளியிலும், அதைத் தொடர்ந்து கல்லூரியிலும் சிறந்த மாணவனாக என்னை உருவாக்கிக் கொள்ள உதவியது. தற்போது, என்னுடைய இந்த 24 வயதில், நானும் ஒரு ஆசிரியராக மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறேன். இப்பொழுது திலகம் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நானிருக்கும் இன்றைய நிலைக்கு, அன்று திலகம் அவர்கள் எனக்கு வழங்கிய ஊக்கமும், அறிவுரைகளும் மட்டுமே காரணம்.

(மூலம் : சதீஷ் குமார், இவர் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஸர்வ சிக்ஷா அப்யான் திட்டத்தின் கீழுள்ள பள்ளியில் சிறப்பு பயிற்றுவிப்பாளராக பணியாற்றுகிறார்.)

[ ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ் சில கட்டுரைகளைப் பிரசுரித்திருந்தது. தலைப்பிற்கு ஏற்றவாறு இருந்ததால், அதிலிருந்து ஒரு பகுதியை இங்கே தருகிறேன். ]

நன்றி - ரீடர்ஸ் டைஜஸ்ட், தமிழில் யதிராஜ்
வாசகர்கள் இது போல அனுபவங்களை எழுதலாம்.

Read More...

Tuesday, October 04, 2011

சில நேரங்களில் சில மனிதர்கள் - 1


நீண்ட நாட்களுக்கு பிறகு ... யதிராஜ்...


மத்தியஸ்தர் :

இரண்டாண்டுகளுக்கு முன், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரஸ் ரயிலில் மங்களூருக்குப் ப்ரயாணம் செய்து கொண்டிருந்த போது, எனக்கு அருகே இருந்த படுக்கை (Berth) எண் 55 -இல் ஒரு மத்தியதர வயதுடையவர் படுத்திருந்தார். ரயில் பாலக்காடு சந்திப்பை அடைந்த போது மணி இரவு ஒன்பது இருக்கும், பெரும் சந்தடிகளுக்கிடையே ஒரு பெரிய பக்தர்கள் குழாம் ரயிலில் ஏறியது. அவர்களில் ஒருவர், முன்பு குறிப்பிட்ட படுக்கை எண் 55 இல் படுத்திருந்தவரிடம், அது தனக்காக ஒதுக்கப்பட்ட படுக்கை எனவும், அதைத் தனக்கு கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். பிரயாண புக்கிங் ஏஜெண்ட் மூலம் அதற்கான அத்தாட்சியையும் பெற்றிருந்தார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர், இரண்டாமவரிடம் அது அவருக்குண்டான படுக்கை அல்ல, ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தார், ஆனால் அதை அவர் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. இல்லை அது தமதே என்று இருவரும் வாதாடிக் கொண்டிருந்தனர். ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு காவலர் அங்கு வந்து, இரண்டாமவரை அப்புறப் படுத்த முயன்றார். ஆனாலும் பலனில்லை; அவருடன் வந்த மற்ற பிரயாணிகள் அவருக்கு ஆதரவாக வாதாடத் துவங்கவே, ஒரே கூச்சல்; குழப்பம்.

ரயில் பாலக்காட்டைத் தாண்டி, நான்கு ரயில் நிலையங்கள் கடந்த பிறகும் கூட, உச்சஸ்தாயியில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இதற்கிடையே திரூர் ரயில் நிலையத்தைக் கடந்தவுடன் ஒருவர் அபாயச் சங்கிலியயப் பிடித்திழுத்து ரயிலையும் நிறுத்தி விட்டார். இவ்வாறான கடும் வாக்குவாதங்களால் யாராலும் தூங்க இயலவில்லை, நேரமும் நள்ளிரவைக் கடந்து சென்று கொண்டிருந்தது.

நடப்பவைகளை நான் நோட்டமிட்டுக் கொண்டிருந்த வேளையில், திடீரென, டீனேஜ் பருவத்திலிருந்த ஒரு கல்லூரி மாணவரைப் போன்ற தோற்றமுடைய ஒருவர், மாணவராகத்தான் இருக்க வேண்டுமென்பது எனது அனுமானம், தன்னுடைய படுக்கையிலிருந்து இறங்கி, அதை அந்த இரண்டாமவருக்கு விட்டுக் கொடுக்க முன்வந்தார். சிறிது நேரத் தயக்கத்திற்குப் பின்னர், அந்த இரண்டாமவர் அதனை ஏற்றுக் கொண்டார்.

என்னுடைய ஆச்சர்யத்தை அதிகப் படுத்தும் விதமாக, அவ்விளைஞர் சற்றும் யோசியாமல், செய்தித் தாளை தரையில் விரித்து அதில் படுத்ததோடல்லாமல், சிறிது நேரத்தில் அமைதியான, ஆழ்ந்த உறக்கத்திற்குள் தொலைந்தே போய்விட்டார். அதற்குப் பின் இதுவரை எதுவுமே நடவாததுபோல் ஒரு அமைதி நிலவியது. நான் 58 வயதாகும் ஒரு தாவரவியல் ஆசிரியர்; இரண்டு தலைமுறை மாணவார்களைக் கையாண்டிருக்கிறேன். பொதுவான அபிப்ராயங்களுக்கு மாறாக, பல சமயங்களில், பெரியவர்களை விடவும், இளைஞர்களே உயர்வான குணமுடையவர்களாக இருக்கிறார்கள்.

(மூலம் : ஃப்ரான்ஸிஸ் சேவியர், ஏற்காடு)

 

காலத்தினாற் செய்த உதவி :

1962 ஆம் வருடம், அக்டோபர் மாதம், எனது தந்தையார் திடீரென இறந்த வேளை, எனது பத்தாம் வகுப்பு பள்ளிப் படிப்பைத்தான் முடித்திருந்தேன். இனி கல்லூரிப் படிப்பென்பது கேள்விக்கப்பாற்பட்ட விஷயமாக இருந்தது. எனவே அப்போதிருந்த சூழலில், ஒரு குமாஸ்தா உத்யோகத்தைத் தேடிக் கொண்டேன். பத்தாண்டுகள் கடந்த நிலையிலும் அதே குமாஸ்தா உத்யோகம். 1971 ஆம் வருடம், என்னுடைய தனியார் நிறுவனத்தின் நிர்வாகத்தினர், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே அதிகாரிகளாகப் பதவி உயர்வு அளிக்கப்படும் என அறிவித்தனர். அச்சூழலில் எனக்குத் திருமணமாகி இரண்டு குழநநதைகள், மேற்கொண்டு படித்தால் மட்டுமே பதவி உயர்வு என்ற நிலையில், எனது உத்யோகம் எனக்கு ஒரு சூன்யமாகத் தெரிந்தது. பட்டப் படிப்பில் சேர்வதற்கும், நான் முதலில் பள்ளி மேநிலை இறுதியாண்டை முடிக்க வேண்டுமே!

பள்ளி மேநிலை முதலாண்டில் சேர்வதற்காக, அலிபூர் ரோடு, தில்லியில் இருக்கும் சிபிஎஸ்சி வழி தொலைதூரக் கல்வி அலுவலகத்திற்கு எனது வெஸ்பா ஸ்கூட்டரில் விரைந்தேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. தபால் மூலமாகத் தொலைதூரக் கல்வியில் பதிவு செய்து கொள்ள அதுவே இறுதி தினம். அந்த அலுவலகத்திலிருந்த அனைத்து விண்ணப்பப் படிவங்களும் விற்றுத் தீர்ந்திருந்தன.

மிகுந்த ஏமாற்றத்துடன், அடுத்து என்ன செய்யலாம் என்று செய்வதறியாது அங்கு குழம்பி நின்று கொண்டிருநநத சமயத்தில், அங்கு வந்த ஒரு முதியவர், என்ன பிரச்சனை என்று கேட்டார். அவரிடம் நடந்ததைக் கூறி, நான் இக்கல்வியில் சேர, மேலும் ஒரு கல்வியாண்டு காத்திருக்க வேண்டும் என்ற சோகத்தைக் கூறினேன்.

பரவாயில்லை, உனக்கு உண்மையாகவே இவ்வயதில் மேலும் படிக்க ஆர்வமிருப்பின், என்னுடன் எனது வீட்டிற்கு வா! அங்கு ஒரு காலிப் படிவம் வைத்திருக்கிறேன், என்றார் அவர்.

அச்சமயம் நேரம் மதியம் 12.30. நிரப்பப்பட்ட படிவங்கள் பெறுவது பகல் 2 மணியோடு முடிந்ததுவிடும். அவருடைய வீடோ 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அதுவுமில்லாமல் அறிமுகமில்லாத நபரோடு செல்லவும் ஒருவித தயக்கம்.

எனினும் அச்சூழலில் கிட்டிய ஒரு நம்பிக்கையூட்டக் கூடிய வாய்ப்பைக் கைகழுவ மனமின்றி, அவரைப் பில்லியனில் அமர்த்திக் கொண்டு, அந்த நெரிசலான போக்குவரத்தினூடாக மிகவும் துரிதமாகச் சென்று அவர் வீட்டை அடைந்தேன்.

வீட்டை அடைந்ததும், எனக்கு குடிக்க நீர் கொடுத்து என்னை ஆஸ்வாசப் படுத்தினார். பதட்டப் படாமல் இருக்குமாறு கேட்டு கொண்டு, படிவத்தையும், பேனாவையும் கொடுத்து, அங்கேயே நிரப்புமாறும் கேட்டுக் கொண்டார். பிறகு விரைவாகவும், கவனமாகவும் சென்று படிவத்தைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். நான் திரும்பவும் அலுவலகத்தை அடைந்த போது நேரம் சரியாக 1.58. எனக்கு முன்னரே மூவர் வரிசையில் படிவத்தைக் கொடுப்பதற்காகக் காத்திருந்தனர். நல்ல வேளையாக, என் படிவத்திற்குப் பிறகு, எவருடையதும் பெறப்பட மாட்டாது என அங்கிருந்த அதிகாரி அறிவித்தார்.

பிறகு மேநிலைப் படிப்பை வெற்றிகரமாக முடித்து, 1975 ஆம் ஆண்டு தில்லி பல்கலையிடமிருந்து பி ஏ பட்டமும் பெற்றேன். பிறகு நான் ஏங்கிய பதவியுயர்வுகளும் பெற்று, 1997 இல் சீனியர் அசிஸ்டெண்ட் மேனேஜராக ஓய்வு பெற்றேன். இன்றளவும், பெயர் கூடக் கேட்க மறந்த, சரியான சமயத்தில் உதவி செய்த அந்தப் பெரியவருக்கு நான் மிகவு கடமைப்பட்டிருக்கிறேன்.

(மூலம் : கோவிந்த் எஸ்.பட்நாகர், புனே)

நன்றி: ரீடர்ஸ் டைஜிஸ்ட், தமிழில் யதிராஜ்
அடுத்த பாகம் நாளை...

Read More...

ஓமனக்குட்டன்



அஜித் தற்போது நடித்து வரும் பில்லா பாகம் இரண்டில் அவருக்கு நாயகி - பார்வதி ஓமனக்குட்டன் - செய்தி

பழமொழி படம் சொன்னா காண்பித்தால் அனுபவிக்கனும் ஆராயக்கூடாது

Read More...

Monday, October 03, 2011

சு.சாமி மீது டெல்லி போலீஸ் வழக்கு

சில மாதங்களுக்கு முன் சு.சாமி எழுதிய கட்டுரைக்கு இப்போது அவர் மீது வழக்கு போட்டிருக்கிறது டெல்லி போலீஸ்
அந்த கட்டுரை இங்கே http://www.dnaindia.com/analysis/comment_analysis-how-to-wipe-out-islamic-terror_1566203-all

Read More...

Sunday, October 02, 2011

நவராத்ரி வாழ்த்துகள் !




படிப் படியாக முன்னேறுகிறது - இந்தியா.

Read More...

Saturday, October 01, 2011

நீங்க யாரு ?





I have a very short memory and I cannot recollect.Along with short memory, I am also poor in counting. Naturally, I am learning numeracy now.. PC

Read More...