பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 18, 2011

சௌமித்ரா சென் பதவிநீக்கம் - பத்ரி சேஷாத்ரி

இந்தியாவில் உயர்/உச்ச நீதிமன்றங்களின் நீதிபதிகளைப் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றால் அதற்கு இம்பீச்மெண்ட் என்ற ஒரேயொரு வழிமுறைதான் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் தனித்தனியாக ஒன்றுகூடி வாக்கெடுப்பு நடத்தி அதில் மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக வாக்குகள் விழுந்திருக்கவேண்டும்.

நீதிபதி சௌமித்ரா சென் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி. இவர் நீதிபதியாவதற்குமுன் வழக்கறிஞராக இருந்தார். அப்போது ஒரு வழக்கில் லிக்விடேஷன் என்று சொல்லப்படும் முறையைச் செயல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சம்பந்தபட்ட திவாலான கம்பெனியின் மிச்சமீதி சொத்துக்களை விற்று அந்தப் பணத்தை ரிசீவர் என்ற ஒருவர் பெற்றுக்கொள்ளவேண்டும்.
பின்னர் யார் யாருக்கெல்லாம் பண பாக்கி உள்ளதோ அவர்களுக்கு இந்தப் பணத்திலிருந்து கொடுக்கவேண்டும். சம்பந்தப்பட்ட வழக்கில் தொழிலாளிகள் தரப்பில் ஆஜரான சௌமித்ரா சென்னையே கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரிசீவராக நியமித்திருந்தது. இது நடந்தது 1980-களில்.

இந்தியாவில்தான் வழக்குகள் இருபது, முப்பது ஆண்டுகள் நடப்பது வாடிக்கையாயிற்றே. இதற்குள் சௌமித்ரா சென் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். தான் ஒரு வழக்கில் ரிசீவராக இருப்பதையும் அது தொடர்பாக பல லட்சம் பணம் தன் கையில் இருப்பதையும் சௌமித்ரா சென் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் தெரிவிக்கவில்லை போலும்.

உச்ச நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதியாக இருந்தபோது, ஒவ்வோர் உயர்நீதிமன்றமும் ஒரு குழு ஒன்றை அமைத்து, தங்களைத் தாங்களே கண்காணித்துக்கொள்ளவேண்டும் என்பதாக முடிவு செய்துள்ளார்போல் இருக்கிறது. அப்படி அமைக்கப்பட்ட கொல்கத்தா உயர்நீதிமன்றக் குழு, சௌமித்ரா சென் சில குழப்படிகளைச் செய்துள்ளார் என்ற முடிவுக்கு வந்துள்ளது.

திவால் கம்பெனியின் சொத்துகளை விற்றுப் பெற்ற பணத்தை சௌமித்ரா சென் தன் பெயரிலான ஓர் அக்கவுண்டில் வைத்திருந்தார் என்றும் அதிலிருந்த பணத்தை நீதிமன்ற அனுமதியின்றித் தன் சொந்தக் கணக்குக்கு மாற்றி, அதிலிருந்து லாபம் பெற்றார் என்றும் உயர்நீதிமன்றக் குழு அவர்மீது குற்றம் சாட்டியது. அதையடுத்து சௌமித்ரா சென்மீது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, சௌமித்ரா சென் குற்றம் இழைத்துள்ளார் என்று தீர்ப்பானது. ஆனால் அதனை எதிர்த்து சௌமித்ரா சென், இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்சிடம் மேல்முறையீடு செய்தார். அவர்கள் சௌமித்ரா சென்மீது எந்தக் குற்றமும் இல்லை என்று முடிவு செய்ததுடன் அவரைப் பணத்தைத் திருப்பித்தரச் சொல்லியுள்ளனர். அவரும் வட்டியுடன் பணத்தைத் திருப்பித் தந்துவிட்டார் என்று தெரிகிறது.

ஆனால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் விடவில்லை. சௌமித்ரா சென்னைத் தன் விட்டுக்கு அழைத்துள்ளார். அங்கே வேறு இரு உச்சநீதிமன்ற நீதிபதிகளும் இருந்துள்ளனர்.
சௌமித்ரா சென் பதவியிலிருந்து விலகச் சம்மதித்தால் அவருக்கு வி.ஆர்.எஸ் தருவதாகச் சொல்லியுள்ளார். சௌமித்ரா சென் மறுத்துள்ளார். பிறகும் அவர்கள் சென்னை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள். சென் ஏற்றுக்கொள்ள மறுக்கவே, பாலகிருஷ்ணன் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதி சௌமித்ரா சென்னை இம்பீச் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு மாநிலங்கள் அவைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநிலங்கள் அவையில் 50 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, சென்னை இம்பீச் செய்வது என்று முடிவெடுத்துள்ளனர். எனவே மாநிலங்கள் அவைத் தலைவர் (குடியரசுத் துணைத் தலைவர் அன்சாரி), மூவர் குழு ஒன்றை நியமித்து, இம்பீச்மெண்ட் செய்ய முகாந்திரம் உள்ளதா என்று கண்டறியச் சொல்லியுள்ளார். அந்த மூவர் குழுவில் இருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி, பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முகுல் முத்கல், வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் ஆகியோர் சௌமித்ரா சென்னை நீக்கலாம் என்று அறிக்கை அளித்தனர்.

அதனால் நேற்று மாநிலங்கள் அவை கூடி, வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. மாநிலங்களை அவையில் உறுப்பினர்களாக இல்லாத அமைச்சர்களும் கலந்துகொண்டனர். ஆனால் அவர்கள் விவாதத்தில் பேசமுடியாது. சீதாராம் யெச்சுரி, அருண் ஜெயிட்லி ஆகியோர் சௌமித்ரா சென்னை ஏன் நீக்கவேண்டும் என்று பேசினர். ஆனால் சௌமித்ரா சென் மிகத் திறமையாக வாதாடினார். தன்மீது எந்தத் தவறுமே இல்லை என்றார். நிறைய டெக்னிக்கலான விஷயங்களைப் பேசினார் என்பதால் நான் அதற்குள் இங்கு செல்லப்போவதில்லை.

ஆனால் மிக முக்கியமான விஷயம் அவர் வெளிப்படையாகவே பாலகிருஷ்ணன்மீது வைத்த குற்றச்சாட்டுகள். அத்துடன் ஏன் தன்னை மட்டும் தனியாகக் கட்டம் கட்டி இப்படி இம்பீச் செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்ற பெஞ்ச் ஒன்றே அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் செய்த அட்டூழியங்களை திறந்த நீதிமன்றத்திலேயே கடுமையாகச் சாடியது (சொந்தக்காரர்களுக்கு இஷ்டத்துக்கு வேலை போட்டுக் கொடுத்தது தொடர்பாக). சௌமித்ரா சென் இதனைச் சுட்டிக்காட்டியதுடன் ஒரு நீதிபதியின் சாம்பரில் சூட்கேஸில் பல லட்சங்கள் இருந்தது மற்றும் நீதிபதிகள்மீதான வேறு சில குற்றச்சாட்டுகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டினார். தான் ரிசீவராக இருந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள எந்த நபரும் தன்மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் சாட்டவில்லை என்ற சென், இதுவரை தன் நீதிமன்ற வாழ்க்கையில் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டையாவது காண்பிக்க முடியுமா, ஏதேனும் ஒரு வழக்கில் தான் பக்கச்சார்பாகா நடந்துகொண்டதை நிரூபிக்க முடியுமா என்றார். இப்போது அவர்மீது இருக்கும் குற்றச்சாட்டுகூட அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்குமுன்பானது என்றும், அதிலும்கூட கொல்கத்தா நீதிமன்ற பெஞ்ச் அவர்மீது குற்றம் ஏதுமில்லை என்று தீர்ப்பு சொல்லியுள்ளது என்பதையும் எடுத்துவைத்தார்.
அப்படியும், அதையும்மீறி பாலகிருஷ்ணன் தன்னைப் பதவியிலிருந்து ஒழிக்க இதனைச் செய்துள்ளார் என்றார்.

பின்னர் பேசிய ஜெயிட்லி, வழக்கறிஞருக்கு உரிய வாதத்திறமையுடன் சென் குற்றம் இழைத்தவரே என்று சொல்ல, நேற்றைய செஷன் முடிந்தது. இன்று வழக்கு தொடரும். பிறகு வாக்கெடுப்புக்குச் செல்லும். அதன்பின் மக்களவையிலும் வாக்கெடுப்பு நடக்கும் (என்று நினைக்கிறேன்).
வாக்கெடுப்பில் சௌமித்ரா சென் இம்பீச் செய்யப்பட்டார் என்றால் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதப்படும். அவர் சென்னை நீக்குமாறு ஆணை இடுவார்.

இதற்குமுன் தமிழகத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற நீதிபதியின்மீது இம்பீச்மெண்ட் நடைமுறைக்கு வந்தது. ஆனால் கடைசியில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து மக்களவையில் வாக்கெடுப்புக்குச் செல்லாமல் அந்த இம்பீச்மெண்டைத் தோற்கடித்தனர்.

இம்முறை அண்ணா ஹஸாரேயின் திகார் ஜெயில் தமாஷா நடந்துகொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை உயர்ந்தவர்களாகக் காண்பிக்க, சௌமித்ரா சென்னுக்கு ஆப்படிப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் நேற்று சென் பேசியதைப் பார்த்தபோது அவரைப் பதவிநீக்கம் செய்வது நியாயமா என்று ஒரு கணம் தோன்றியது. பாலகிருஷ்ணன்மீதே எக்கச்சக்க குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

அன்னா ஹசாரேயை யாரென்று எனக்குத் தெரியாது என்று ராமதாஸ் கூறுகிறார். இவரை அரசியலை விட்டு இம்பீச்மெண்ட் செய்ய முடியாதா ?

15 Comments:

ConverZ stupidity said...

How Sonia Gandhi's SonInLaw Robert Vadra become Fastest Billionaire?

http://t.co/6DnUUud

Ramachandranwrites said...

அது எல்லாம் இருக்கட்டும், இட்லி வடை, கிழக்கு பலகாரக் கடையின் படைப்பா ? அத முதல்ல சொல்லுங்க

Anonymous said...

அதிருக்கட்டும..கடைசியில் ஏதோ ராமதாஸ் என்று போட்டிருக்கிறீர்களே, யார் அவர்? - குணா

சீனு said...

நல்ல வேளை...இவரு தலித் இல்லை...

Nilavan said...

//அதிருக்கட்டும..கடைசியில் ஏதோ ராமதாஸ் என்று போட்டிருக்கிறீர்களே, யார் அவர்? - குணா//

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் இந்த அன்னா ஹஸாரே யார்? இத்தனை நாட்களாக எங்கிருந்தார்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் இந்த அன்னா ஹஸாரே யார்? அவர் இத்தனை நாட்களாக எங்கு இருந்தார்? ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை. லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் சேர்ப்பது பற்றி நாடாளுமன்றத்தில் தான் சட்டம் கொண்டு வர வேண்டும்.

அன்னா ஹஸாரே ஊழலை எதிர்த்து இவ்வளவு தீவிரமாகப் போராட்டம் நடத்துவதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது என்றார்.- Thatstamil

vsankar said...

kundu chattiyil kudhirai ottum Dr.Ramadoss,Annavai patri pesa enna arugathai ullathu?Ivarudaiya puthalvar AIMS il purindha thiruvilayadalgalai nade ariyum.

Anonymous said...

தேர்தலில் நிக்காமலே மந்திரியா இருந்த அம்புமணியை யாவது தெரியுமா ?


எஸ்.வி.சேகரை இப்ப பேட்டி கண்டு போடுங்களேன் சார்... நல்லா தமாசா இருக்கும்.

MSK said...

//தேர்தலில் நிக்காமலே மந்திரியா இருந்த அம்புமணியை யாவது தெரியுமா ?//
ஏன் அவர் ராஜ்யசபா தேர்தலில் நின்று சட்டப்படி ஜெயித்து தானே மத்திய அமைச்சரானார். மக்கள் நேரடியாக வாக்களிக்கும் தேர்தல் மட்டும் தான் தேர்தலா ?? அப்படியானால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தான் குறை கூற வேண்டுமே தவிர அன்பு மணியை அல்ல !!! இப்படி சொல்வதனால் நான் வன்னியரும் அல்ல !!!

MSK said...

//அன்னா ஹசாரேயை யாரென்று எனக்குத் தெரியாது என்று ராமதாஸ் கூறுகிறார். இவரை அரசியலை விட்டு இம்பீச்மெண்ட் செய்ய முடியாதா ?//

அன்புள்ள இட்லி வடை, நீங்கள் தின மலர் தவிர வேறு எந்த தமிழ் பத்திரிகையும் படிபதில்லையா?? அன்னா ஹசரேக்கு ஆதரவு தருவதாக நினைத்து கொண்டு தேவையில்லாமல் மற்றவர்களின் பேச்சை திரித்து வெளியிடுகிறது தின மலர்.

kothandapani said...

பத்ரி என்ன சொல்ல வருகின்றார். எல்லாரும் ஊழல் செய்யும்போது ஏன் தான் மட்டும் தண்டிக்க படவேண்டும் என்று சென் சொல்லுவதை கனிவோடு
விளக்கி உள்ளார். பாலகிருஷ்ணன் மீதே ஊழல் புகார் இருப்பதால் சென் மீது பரிவு உண்டாக்குவது போல் உள்ளது கட்டுரை. இதையேதான்
2G புகழ் ராஜாவும் சொல்லிக்கொண்டு உள்ளார். அவரை மட்டும் ஏன் மீது மிடீயக்கள் கடித்து குதற வேண்டும். எல்லார் மீதும் நடவடிக்கை எடுத்துவிட்டு அவர் மீது நடவடிக்கை தொடரலேமேவழக்கம் போல ராமதாசை இழுத்து விட்டதால் அனைவரும் சென்னை மறந்து ராமதாச்சையே குதறி உள்ளார்கள். நாம் எப்போதும் ராமதாஸ் , கருணா, ஜெயா, வைகோ ஆகியோரை விட்டு வெளியே வரவே மாட்டோம். அப்புறம் சென்னாவது ஹசாறேவாது .வாழ்க தமிழகம்..

pongalvadai said...

தான் லபக்கிய பணத்தை, விவகராம் ஆனபோது திருப்பி கட்டிவிட்டு உத்தமன் என்று சென் வேஷம் போடுவது தெளிவாக தெரிகிறது. 200 கோடி ஊழல்
பணத்தை மாட்டிகொண்ட பின் கடன் என்று சொன்ன கனிமொழியை தீகாரில் வைத்தது இதே நீதி மன்றங்கள் தானே. நீதி பதிக்கு மட்டும் தனி நீதியா.
இத்தனைக்கும் சென்னை தீகாரில் போடபோவதில்லை. பதிவியை விட்டு விளக்குவதுர்க்குதன் இந்த ப்ரியர்தனம். அதற்கே துள்ளி குதிக்கின்றார் பத்ரி.
வெடககேடு.

Unknown said...

Annaa Hazare yaarnu kettathu oru thappayyaa?

Anonymous said...

படிக்கிறவங்களை ஏன் அய்யா குழப்புறீங்க ?

சென் -ஐ என்று எழுதாமல் ”சென்னை”
என்று எழுதினால் எப்படி ? பதிப்பக அண்ணாத்தயே இப்படி செய்யலாமா ?

//இத்தனைக்கும் சென்னை தீகாரில் போடபோவதில்லை.//

சென்னையிலிருந்து நிறைய பேர் திகார் போறாங்கன்னு சென்னையில் திகார் கிளை தொறந்துட்டாங்களோன்னு நினைச்சேன்

இப்படிக்கு
செம்மொழியான தமிழ்மொழி

NAGARAJAN said...

Justic Ramasamy Episode - Entire Congress MPs in the Lok Sabha boycotted the Voting in 1993. What Badri has mentioned that only TN Congress MPs abstained from voting which is not correct.
Congress Party issued whip to abstain from Voting in this Justice Ramasamy impeachment issue.

aotspr said...

பதிவுக்கு நன்றி.
Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com