பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 21, 2011

பெண்களே உஷார் !!!

நீங்கள் பெண்ணாக இருந்தால் நிச்சயம் சாட் செய்வது கட்டாய பொழுதுப்போக்காக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது என்று எச்சரிக்கவே இந்த பதிவு. இது முழுக்க முழுக்க கற்பனை கிடையாது. அதனால் தைரியமாக படிக்க வேண்டும். பெண்கள் இரண்டு முறை படித்து கீழே இருக்கும் இருப்பது நல்லது. யார் என்று கண்டுபிடித்தால் உங்களுக்கு நல்லது. ஒருவரை போல இன்னொருவர் இருக்க வாய்ப்புக்கள் இருக்கிறது ஜாக்கிரதை.

நாங்களும் கொஞ்ச நாளா பிசியாகி கடைய சரிவரக் கவனிக்க முடியாத நிலையில் ரொம்பநாளா பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று ஒரு டவுட். யாரை கேட்டாலும் மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு 10 புத்தகம் ரிலீஸ் செய்துவிடுவார்கள், நான் என்ன அவ்வளவு பெரிய ஆள் இல்லையே. அதனால் எனக்கு தெரிந்த பத்து பேரை ரிலீஸ் செய்கிறேன், அட திஹார் சிறையிலிருந்து இல்லை சும்மா.... ...... .


1. ’இவரிடம்’ நீங்கள் சாட் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி. உங்களை ‘ப்ளாஷுடன்’ கூடிய ஃபோட்டோ எடுத்து பல கேள்விகளை சேர்த்து கோர்த்து அதுக்கு ஆப்ஷன் இதுக்கு ஆப்ஷன் படம் அனிமேஷன் என்று எல்லா மாயாஜாலத்தையும் வெச்சு கலங்கடிச்சிடுவார். கவித்துவமான கவிதையை உரைநடைப்படுத்துகிறேன் என்று படுத்தி எடுத்துவிடுவார். சங்க இலக்கியத்தை தமிழ்ப் படுத்திவிட்டார் என்றால் இவர் திறமை பற்றி பற்றி கேட்கவா வேண்டும்? போதாக்குறைக்கு ‘அவள் விகடன்’ல் எழுதும் பெண்கள் போலவே எழுதி உங்களை மயக்கிவிடுவார். இவரிடம் முதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆண்கள். பிறகு பெண்கள்.

2. என்னை இந்தப் பெண் புத்தகக் கண்காட்சியில் சந்தித்தார், பின்னூட்டமே எழுதாத இந்த வாசகி என் தீவிர(வாதி) வாசகி என்று எழுத ஆரம்பிப்பார். இந்த மாதிரி பெண்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. நீங்கள் பெண் மனித வெடிகுண்டு என்றால் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களை பற்றி உங்களுக்கே தெரியாத விஷயங்கள் எல்லாம் போட்டு புத்தகம் எழுதிவிடுவார். பின்லேடனே தன் கடைசி காலத்தில் இவர் புத்தகத்தை படித்துமுடிக்கும் முன் போட்டு தள்ளிட்டாங்க என்றால் பார்த்துக்கோங்களேன். நான் அப்பாவி பெண் எனக்கு புடவை கூட கட்ட தெரியாது என்று ஆரம்பித்தால் போச்சு உடனே 'சில சொகுசு ஏற்பாடுகள்' என்று புடவையே கட்டிவிடுவார் பதிவே போட்டுவிடுவார்.

3. சரக்கு அடித்துவிட்டு எழுதும் எழுதாளர்களிடம் கவிதை பற்றி ஒபினியன் கேட்கும் பெண்கள் ஏன் சரக்கு அடிக்காமல் கவிதை எழுதும் ஒரு சரக்கு மாஸ்டரிடம் சமையல் குறிப்பு கூட கேட்பதில்லை என்பது புரியாத புதிர்!. இவரா அவரு, அவரா இவரு என்பது அவருக்கே புரியாத புதிர் என்பதால் நீங்கள் சாட் செய்து விடியோவில் வரும் போது அவராகவும் இருக்கலாம், இவராகவும் இருக்கலாம். சரக்கு அடித்த எஃபெக்ட் வந்திருக்கணுமே? எனவே சரக்கு மாஸ்டரிடம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது!

4. கலைஞர் ’இலவச’ வீடு கட்டும் திட்டத்தின் மேஸ்திரியே தான் தான் என்கிற ரீதியில் கப்ஸா விடும் மன்னரான இவரிடமும் நீங்கள் பெண்களாக இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் சாட் செய்யும் போது ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு எழுத்துக்கும் ஆயிரத்தெட்டு நொட்டை நொள்ளை சொல்வார். தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டுவிட்டு வந்து பாம் போடுவதாக பீதியைக் கிளப்புவார். இவருடன் ஒத்துப் போகிறவர் ஒருவர் மானஸ்தன். சும்மா பேர் தாங்க. நீங்கள் மானஸ்தி என்றால் கொஞ்சம் அல்ல, ரொம்பவே தள்ளி இருங்க!

5. ஆனால் மேற்படி 4-வது நபரே பார்த்து பயப்படும் ஒரே நபர் என்றென்றும் வம்புடன் எழுதும் ஒரு ஆண். எனவே என்றென்றும் எச்சரிக்கையாக அந்த வம்பு நபரிடம் இருங்க பெண்களே! மைக் டெஸ்டிங் என்று பின்னூட்டத்தை ஆரம்பிப்பார் ஜாக்கிரதை. அவ்வளவு தான்.

6. தொடர்ந்து ஒரு வாரப்பதிரிக்கையில் அல்லது நியூஸில் ஒருவர் ஃபோட்டோ வந்தால் உடனே அவரை பற்றி கிடைக்கும் தகவல் கொண்டு சின்னதோ பெரிசோ புத்தகம் எழுதிவிடுவார். எதை பார்த்தாலும் tinypicல் போட்டோ எடுத்து டிவிட் செய்து பரப்புபவர் இவர். அதனால் உங்கள் படம், மற்றும் புகைப்படங்கள் ஜாக்கிரதை. வெளியே வந்தால் உங்களை பற்றியும் புத்தகம் வர வாய்ப்பு இருக்கிறது. #bf பார்பவர்களை நம்பலாம் ஆனால் #fb என்று டிவிட் செய்பவர்களை நம்ப கூடாது. பெண்களே ஜாக்கிரதை!

7. வெகு சமீபத்தில் 1902-ம் ஆண்டிலிருந்து காந்தி சாப்பிட்ட கடலை உருண்டை முதல் ஓபாமா சாப்பிட்ட தேங்காய் பர்பி. சோ சின்ன வயசில் எழுதிய அ,ஆ,இ,ஈ முதல் தற்போது எழுதும் பாரதம் வரை ஆண்களிடமே கடலை போட்டு வறுத்து எடுத்துவிடுவார். இவரிடம் பேச ஆரம்பித்தால் உங்களை பற்றி உங்களிடமே கேட்டு தெரிந்துக்கொண்டு பதிவு எழுதிவிடுவார். உங்களைப் பற்றி பல இடங்களில் (ஹைப்பர்) லிங்க் கொடுத்து படுத்திவிடுவார். .. உஷாரம்மா உஷாரு!

8. இவரிடம் பேச ஆரம்பித்தால் இந்திய பொருளாதாரம், பன்றி குட்டி, இலவச கல்வி, இந்திய ராணுவம் [புத்தக விளம்பரம்] அணுமின் நிலையம், தான் எடுத்த ஆடியோ, வீடியோ என்று நமக்கு [புத்தக விளம்பரம்] புரியாத எல்லாவற்றியும் பேசிவிட்டு கடைசியாக "வரியா மொட்டை மாடி போகலாம்" என்பார். வேற என்ன, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

9. பெண்களுக்கு இன்னொரு செல்லப் புனைப்பெயர் 'பட்சி' ஆனால் அந்த பெயர் வைத்தே #பட்சி என்று எல்லா குப்பையும் எழுதும் நபர் எப்படிப்பட்டவராக இருப்பார் ? டிவிட்டரில் ஸ்பேம் என்ற 'மாயை' கொண்டு வந்த இந்த பிரபலமிடம் கொஞ்சம் ஜாக்கிரதியாக இருக்கவேண்டும். இல்லை "வறுத்து எடுத்துவிடுவார்" யாரும் படிக்காத பேப்பரில் அம்மா பற்றி எழுதிவிட்டு எல்லோரும் படிக்கும் டிவிட்டில் அப்பா பற்றி நக்கல் கமெண்ட் அடித்து தன் ஆண் ஆதிக்க புத்தியை காண்பித்துக்கொண்டு இருப்பவர். ஜாக்கிரதை.

10. ஒரு பெண்ணின் கஷடம் இன்னொரு பெண்ணுக்கு தான் தெரியும் என்று சொல்லுவார்கள். அதனால் இவரி(ளி)டம் தாரளமாகப் பேசலாம். என்ன ஒன்று பேச்சு வாக்கில் உங்களிடமே ஒரு பதிவு எழுதி தன் கடையை நடத்திவிடுவார். இவரி(ளி)டம் முடிந்த மட்டும் ஜாக்கிரதையாக இருக்கத் தேவை இல்லை. உலகத்தில் எல்லோருமே கெட்டவர்கள் இல்லை. இல்லையா? :-)

இந்தப் பதிவு காமெடி பதிவு. உங்களை பற்றிய பதிவு மாதிரி இருந்தால் தாரளமாக ராம்ஜெத்மலானியை கொண்டு கேஸ் போடலாம். இப்ப அவர் ஃபிரியாக தான் இருக்கிறார்.

இந்த பதிவு போட உதவியாக இருந்த மூவருக்கு 'நன்றி' என்று ஒரு வார்த்தையில் சொன்னால் நன்றாக இருக்காது அதனால் அவர்களை பற்றியும் இந்த பதிவில் எழுதியிருக்கேன். முடிந்தால் விடியோ ரிலீஸ் செய்கிறேன்.

43 Comments:

Anonymous said...

நெட்டே பத்தி எரியுது.
http://tamizachi.com/index.php/sa/pe/121-2011-06-20-08-54-07.html

King Viswa said...

இட்லி வடை பேக் டு பார்ம்.

கிங் விஸ்வா
பேஜா ப்ரை 2: திரைவிமர்சனம்!

Anonymous said...

i don't understand any part of this. I would be good if you try to give some clue about what is this all about??

Anonymous said...

//7. வெகு சமீபத்தில் 1902-ம் ஆண்டிலிருந்து காந்தி சாப்பிட்ட கடலை உருண்டை முதல் ஓபாமா சாப்பிட்ட தேங்காய் பர்பி. சோ சின்ன வயசில் எழுதிய அ,ஆ,இ,ஈ முதல் தற்போது எழுதும் பாரதம் வரை ஆண்களிடமே கடலை போட்டு வறுத்து எடுத்துவிடுவார். இவரிடம் பேச ஆரம்பித்தால் உங்களை பற்றி உங்களிடமே கேட்டு தெரிந்துக்கொண்டு பதிவு எழுதிவிடுவார். உங்களைப் பற்றி பல இடங்களில் (ஹைப்பர்) லிங்க் கொடுத்து படுத்திவிடுவார். .. உஷாரம்மா உஷாரு// -

காண்டு கஜேந்திரன் தானே?

Anonymous said...

சரோஜாதேவி டைப் கதைகள் பல எழுதி அதை புத்தகமாக வெளியிட்டு வாங்கலீயோ வாங்கலீயோ என்று கூவம் ஒரு மலேசிய பதிவாளரை லிஸ்டுல விட்டியேபா

Anonymous said...

ஏனோ எழாம் நம்பர் ஆளுக்கு அந்த மகரநெடுங்குழைகாதன் தான் நல்ல புத்தி குடுக்கணும்.. ஹ்ம்ம்

ப.கந்தசாமி said...

ரொம்ப ரொம்ப தேங்க்ஸுங்க.

Anonymous said...

குடும்பச் சண்டையா?

முழுக்க முழுக்க இட்லி வடைக்களா இருக்குது?

போஸ்டரை மாற்றவும். Beware of Gents என்று இருக்க வேண்டும்.

Anonymous said...

பெண்கள் ஜாக்கிரதைக்கு இந்த பி.எச்.டி. டொக்ட்டரு எதுக்கு நன்றி சொல்றாரு?

seetha said...

penaths ..could recognise him

Unknown said...

Number 8 Marudhan Gangatharan ah?

Unknown said...

Number 8 Marudhan ah?

Unknown said...

Number 8 Marudhan ah?

kothandapani said...

சென்னையில் வெய்யில் அதிகமோ

Rajan said...

நான் எங்க இருக்கேன் :-\

Rajan said...

நான் எங்க இருக்கேன் :-\

Anonymous said...

7. DONDU

Katz said...

oru mannaangattiyum puriyala. konjam vilakkamaa sollunga.

Anonymous said...

Charu...

Anonymous said...

Mokka Post. If you dont have any news to post in ur blog pls dont waste our time. What CRAP is this? Does anybody understands this?? Need to look for any good Blogs..its really waste of time.

- victim of idlyvadai :(

Anonymous said...

9.Mayavaram

Anonymous said...

"சென்னையில் வெய்யில் அதிகமோ"

அமெரிக்காவில் வெயில் எப்படி இருக்கு, திரு கோதண்டபாணி அவர்களே?

Anonymous said...

//நெட்டே பத்தி எரியுது// எனக்கேன்னம்மோ தமிழச்ச்யே அனானியா கமன்ட் போட்ட மாதிரி இருக்கே

Anonymous said...

Charu.......charu. oh my charu.innuma puriyala

ப said...

பெண்களின் சார்பாக மிக்க நன்றி!

ConverZ stupidity said...

ஏம்பா இட்லிவடை Maserati கார் போட்டோ எதுவும் இருக்க உங்கள்கிட்ட. அப்படி இல்லன்ன மெட்ராஸ் DRI ஆபீஸ்-ல ஒன்னு நிக்குது; அத்த படம் புடிச்சு போடா முடியுமா.

Anonymous said...

I don't see anything wrong..atleast Charu is natural....

எங்கள் ப்ளாக் said...

என்னவோ 'சாறு' பிழிஞ்சி கொடுத்திருக்கீங்க எனக்கும் கி ப ஆட்களும், டோண்டுவும், மாயவரத்தானும்தான் நினைவுக்கு வந்தார்கள். நான் யார்?

kalpu said...

no.. this is not real idlyvadai touch. it sounds like sarakku master's style. not idlyvadai's. What happened to you IDLYVADAI.

டாரு வாசகர் சதுரம் சரபோஜி பரம்பரை... said...

இதில் ஏதோ பெரிய பின்புலம் இருக்குது... பின் நவினத்துவமும் இருக்குது....

முதல் சாட்லேயே இந்த ரேஞ்சுக்கு ஆம்பிள பேச மாட்டான்.எங்கியாவது ஆரம்பிச்சு படிப்படியாத்தான் வருவான்....

இது தூபம் போட்டு... தூண்டி விட்டு தூண்டில்ல போட்ட கதை.....

அப்படி யே இருந்தாலும்.... இது தப்புத்தேன்... (அட்வைஸ் அடுத்தவனுக்குத்தான்....) பெண் சபலம் பெரிய டேஞ்சரு....

பொம்பளங்களும் உஷாரு... அதே மாதிரி ஆம்பளங்களும் உஷாரு...

... நம்ம டாரு பாவங்க....

காதர் அலி said...

இவர் லீலைக்கு முடிவே கிடையாதா?

Varun.K said...

paa raa, badri, marudhan,charu, yuva maari irukku kandu pudika mudaila correctaa?>>>

அமுதப்ரியன் said...

இது மொதல்ல இட்லிவடையே இல்லை. அநேகமா இட்லிவடைய யாரோ சாப்பிட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.

வர வர எழுத்தும் சரியில்லை ஒன்னும் சரியில்லை.

அமுதப்ரியன்

Anonymous said...

idlyvadai owner sethupoitaruuuuuuuuuuu . dan dan dan dadankaaaaaaaaaa

Anonymous said...

ஒரு வராம ஊசி போன இட்லி பார்க்க சகிக்கல.. சரக்கு மாஸ்டர் "சரக்கு" அடிச்சிட்டு கவுந்துட்டாரா ?

Anonymous said...

பெண்களும் தெளிந்தாகிவிட்டார்கள்,ஆண்களும் முழித்துக்கொண்டர்கள்,இட்லி வடைதான் இன்னும் 21 ந் தேதிக்குப்பிறகு கேலண்டர் பார்க்கவில்லை.அட அங்கே இங்கே கை மாற்றாய் காபி பேஸ்ட் செய்து ஒப்பேற்ற கூட ரொம்ப சிரம‌மாய் இருக்கிறதா?

Baski said...

no postings after a mokkai padivu... It is not fair ... you disappoint us...

Anonymous said...

You have become like Manmohan singh! seyalpadaadha "idlyvadai" ? why ?

Anonymous said...

8 is Badri...

Regards
Pradeep

Anonymous said...

7 is Dondu.

Regards
Pradeep

ConverZ stupidity said...

விலைவாசி கன்னாபின்னான்னு ஏறினபிறகு இட்லிக்கு மாவு ஆட்டவும் முடியாம, வடை சுடவும் முடியாம கைய பெசஞ்சிட்டு இருந்த எப்படி..? யோவ் பசியோட வந்துட்டு எத்தனை நாளைக்கு தான் வெறும் வயித்தோட போறது ஆங்ங்...???

rajasekhar.p said...

adf

rajasekhar.p said...

so cute !!!!!!!!!!!!!!!