நேற்று கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு காளகஸ்தி கோவிலில் ராகு-கேது தோஷ சர்ப்ப நிவாரண பூஜை நடத்த கருணாநிதி மகள் செல்வி முடிவு செய்தார். இதன்படி அவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார்.
முதலில் கருணாநிதி குடும்பத்தினர் திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அங்கு வி.ஐ.பி. வரிசையில் சென்று ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காளகஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அங்கு சென்றதும் செல்வி உள்ளிட்ட அனைவரும் மிருத்யுஞ்ஜெயலிங்கம் முன்பு அமர்ந்தனர்.
கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பெயர்களில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்தினர். இந்த தோஷ நிவாரண பூஜை முடிந்ததும் அவர்கள் கோவிலுக்குள் சென்று கருவறையில் உள்ள வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசுனாம்பிகா தாயாருக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி பெயர்களில் சிறப்பு பூஜை, அர்ச்சனை செய்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். அதன்பிறகு அவர்கள் மிருத்யுஞ்ஜெயலியங்கம் அருகே சென்று வேத பண்டிதர்களிடம் சிறப்பு ஆசி பெற்றனர்.
காளகஸ்தி கோவிலில் கருணாநிதி குடும்பத்தினர் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்துவதை அறிந்ததும் பத்திரிகை புகைப்பட நிபுணர்கள் மற்றும் தனியார் டி.வி. வீடியோகிராபர்கள் அங்கு மின்னல் வேகத்தில் வந்தனர். தோஷ நிவாரண பூஜை நடத்திய செல்வி மற்றும் உறவினர்களை பத்திரிகை புகைப்பட நிபுணர்கள் படம் பிடித்தனர்.
அப்போது செல்வி புடவையால் முகத்தை மூடிக் கொண்டார். அவருடன் வந்தவர்கள் புகைப்பட நிபுணர்கள் போட்டோ- வீடியோ எடுக்ககூடாது என்று எச்சரித்தனர். ஆனால் அதையும் மீறி போட்டோ எடுத்தனர். இதனால் புகைப்பட நிபுணர்களுக்கும் கருணாநிதி குடும்பத்தினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதையறிந்ததும் வேத பண்டிதர்கள் அங்கு ஓடிச் சென்று இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழி பெயர்களில் அவர்களது குடும்பத்தினர் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூன்று டவுட் :
1. தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டதா ?
2. அ.ராசாவுக்கும், தயாநிதி மாறனுக்கு ஏன் அர்ச்சனை செய்யவில்லை ?
3. பெரியார் என்ன தேடுகிறார் ?
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Thursday, June 30, 2011
காளகஸ்திக்கு போன குடும்பம்
Posted by IdlyVadai at 6/30/2011 09:51:00 PM 53 comments
Labels: செய்தி விமர்சனம்
Tuesday, June 21, 2011
பெண்களே உஷார் !!!
நீங்கள் பெண்ணாக இருந்தால் நிச்சயம் சாட் செய்வது கட்டாய பொழுதுப்போக்காக இருக்கலாம். ஆனால் நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது என்று எச்சரிக்கவே இந்த பதிவு. இது முழுக்க முழுக்க கற்பனை கிடையாது. அதனால் தைரியமாக படிக்க வேண்டும். பெண்கள் இரண்டு முறை படித்து கீழே இருக்கும் இருப்பது நல்லது. யார் என்று கண்டுபிடித்தால் உங்களுக்கு நல்லது. ஒருவரை போல இன்னொருவர் இருக்க வாய்ப்புக்கள் இருக்கிறது ஜாக்கிரதை.
நாங்களும் கொஞ்ச நாளா பிசியாகி கடைய சரிவரக் கவனிக்க முடியாத நிலையில் ரொம்பநாளா பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று ஒரு டவுட். யாரை கேட்டாலும் மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு 10 புத்தகம் ரிலீஸ் செய்துவிடுவார்கள், நான் என்ன அவ்வளவு பெரிய ஆள் இல்லையே. அதனால் எனக்கு தெரிந்த பத்து பேரை ரிலீஸ் செய்கிறேன், அட திஹார் சிறையிலிருந்து இல்லை சும்மா.... ...... .
1. ’இவரிடம்’ நீங்கள் சாட் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி. உங்களை ‘ப்ளாஷுடன்’ கூடிய ஃபோட்டோ எடுத்து பல கேள்விகளை சேர்த்து கோர்த்து அதுக்கு ஆப்ஷன் இதுக்கு ஆப்ஷன் படம் அனிமேஷன் என்று எல்லா மாயாஜாலத்தையும் வெச்சு கலங்கடிச்சிடுவார். கவித்துவமான கவிதையை உரைநடைப்படுத்துகிறேன் என்று படுத்தி எடுத்துவிடுவார். சங்க இலக்கியத்தை தமிழ்ப் படுத்திவிட்டார் என்றால் இவர் திறமை பற்றி பற்றி கேட்கவா வேண்டும்? போதாக்குறைக்கு ‘அவள் விகடன்’ல் எழுதும் பெண்கள் போலவே எழுதி உங்களை மயக்கிவிடுவார். இவரிடம் முதலில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆண்கள். பிறகு பெண்கள்.
2. என்னை இந்தப் பெண் புத்தகக் கண்காட்சியில் சந்தித்தார், பின்னூட்டமே எழுதாத இந்த வாசகி என் தீவிர(வாதி) வாசகி என்று எழுத ஆரம்பிப்பார். இந்த மாதிரி பெண்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. நீங்கள் பெண் மனித வெடிகுண்டு என்றால் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களை பற்றி உங்களுக்கே தெரியாத விஷயங்கள் எல்லாம் போட்டு புத்தகம் எழுதிவிடுவார். பின்லேடனே தன் கடைசி காலத்தில் இவர் புத்தகத்தை படித்துமுடிக்கும் முன் போட்டு தள்ளிட்டாங்க என்றால் பார்த்துக்கோங்களேன். நான் அப்பாவி பெண் எனக்கு புடவை கூட கட்ட தெரியாது என்று ஆரம்பித்தால் போச்சு உடனே 'சில சொகுசு ஏற்பாடுகள்' என்று புடவையே கட்டிவிடுவார் பதிவே போட்டுவிடுவார்.
3. சரக்கு அடித்துவிட்டு எழுதும் எழுதாளர்களிடம் கவிதை பற்றி ஒபினியன் கேட்கும் பெண்கள் ஏன் சரக்கு அடிக்காமல் கவிதை எழுதும் ஒரு சரக்கு மாஸ்டரிடம் சமையல் குறிப்பு கூட கேட்பதில்லை என்பது புரியாத புதிர்!. இவரா அவரு, அவரா இவரு என்பது அவருக்கே புரியாத புதிர் என்பதால் நீங்கள் சாட் செய்து விடியோவில் வரும் போது அவராகவும் இருக்கலாம், இவராகவும் இருக்கலாம். சரக்கு அடித்த எஃபெக்ட் வந்திருக்கணுமே? எனவே சரக்கு மாஸ்டரிடம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது!
4. கலைஞர் ’இலவச’ வீடு கட்டும் திட்டத்தின் மேஸ்திரியே தான் தான் என்கிற ரீதியில் கப்ஸா விடும் மன்னரான இவரிடமும் நீங்கள் பெண்களாக இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் சாட் செய்யும் போது ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு எழுத்துக்கும் ஆயிரத்தெட்டு நொட்டை நொள்ளை சொல்வார். தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டுவிட்டு வந்து பாம் போடுவதாக பீதியைக் கிளப்புவார். இவருடன் ஒத்துப் போகிறவர் ஒருவர் மானஸ்தன். சும்மா பேர் தாங்க. நீங்கள் மானஸ்தி என்றால் கொஞ்சம் அல்ல, ரொம்பவே தள்ளி இருங்க!
5. ஆனால் மேற்படி 4-வது நபரே பார்த்து பயப்படும் ஒரே நபர் என்றென்றும் வம்புடன் எழுதும் ஒரு ஆண். எனவே என்றென்றும் எச்சரிக்கையாக அந்த வம்பு நபரிடம் இருங்க பெண்களே! மைக் டெஸ்டிங் என்று பின்னூட்டத்தை ஆரம்பிப்பார் ஜாக்கிரதை. அவ்வளவு தான்.
6. தொடர்ந்து ஒரு வாரப்பதிரிக்கையில் அல்லது நியூஸில் ஒருவர் ஃபோட்டோ வந்தால் உடனே அவரை பற்றி கிடைக்கும் தகவல் கொண்டு சின்னதோ பெரிசோ புத்தகம் எழுதிவிடுவார். எதை பார்த்தாலும் tinypicல் போட்டோ எடுத்து டிவிட் செய்து பரப்புபவர் இவர். அதனால் உங்கள் படம், மற்றும் புகைப்படங்கள் ஜாக்கிரதை. வெளியே வந்தால் உங்களை பற்றியும் புத்தகம் வர வாய்ப்பு இருக்கிறது. #bf பார்பவர்களை நம்பலாம் ஆனால் #fb என்று டிவிட் செய்பவர்களை நம்ப கூடாது. பெண்களே ஜாக்கிரதை!
7. வெகு சமீபத்தில் 1902-ம் ஆண்டிலிருந்து காந்தி சாப்பிட்ட கடலை உருண்டை முதல் ஓபாமா சாப்பிட்ட தேங்காய் பர்பி. சோ சின்ன வயசில் எழுதிய அ,ஆ,இ,ஈ முதல் தற்போது எழுதும் பாரதம் வரை ஆண்களிடமே கடலை போட்டு வறுத்து எடுத்துவிடுவார். இவரிடம் பேச ஆரம்பித்தால் உங்களை பற்றி உங்களிடமே கேட்டு தெரிந்துக்கொண்டு பதிவு எழுதிவிடுவார். உங்களைப் பற்றி பல இடங்களில் (ஹைப்பர்) லிங்க் கொடுத்து படுத்திவிடுவார். .. உஷாரம்மா உஷாரு!
8. இவரிடம் பேச ஆரம்பித்தால் இந்திய பொருளாதாரம், பன்றி குட்டி, இலவச கல்வி, இந்திய ராணுவம் [புத்தக விளம்பரம்] அணுமின் நிலையம், தான் எடுத்த ஆடியோ, வீடியோ என்று நமக்கு [புத்தக விளம்பரம்] புரியாத எல்லாவற்றியும் பேசிவிட்டு கடைசியாக "வரியா மொட்டை மாடி போகலாம்" என்பார். வேற என்ன, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
9. பெண்களுக்கு இன்னொரு செல்லப் புனைப்பெயர் 'பட்சி' ஆனால் அந்த பெயர் வைத்தே #பட்சி என்று எல்லா குப்பையும் எழுதும் நபர் எப்படிப்பட்டவராக இருப்பார் ? டிவிட்டரில் ஸ்பேம் என்ற 'மாயை' கொண்டு வந்த இந்த பிரபலமிடம் கொஞ்சம் ஜாக்கிரதியாக இருக்கவேண்டும். இல்லை "வறுத்து எடுத்துவிடுவார்" யாரும் படிக்காத பேப்பரில் அம்மா பற்றி எழுதிவிட்டு எல்லோரும் படிக்கும் டிவிட்டில் அப்பா பற்றி நக்கல் கமெண்ட் அடித்து தன் ஆண் ஆதிக்க புத்தியை காண்பித்துக்கொண்டு இருப்பவர். ஜாக்கிரதை.
10. ஒரு பெண்ணின் கஷடம் இன்னொரு பெண்ணுக்கு தான் தெரியும் என்று சொல்லுவார்கள். அதனால் இவரி(ளி)டம் தாரளமாகப் பேசலாம். என்ன ஒன்று பேச்சு வாக்கில் உங்களிடமே ஒரு பதிவு எழுதி தன் கடையை நடத்திவிடுவார். இவரி(ளி)டம் முடிந்த மட்டும் ஜாக்கிரதையாக இருக்கத் தேவை இல்லை. உலகத்தில் எல்லோருமே கெட்டவர்கள் இல்லை. இல்லையா? :-)
இந்தப் பதிவு காமெடி பதிவு. உங்களை பற்றிய பதிவு மாதிரி இருந்தால் தாரளமாக ராம்ஜெத்மலானியை கொண்டு கேஸ் போடலாம். இப்ப அவர் ஃபிரியாக தான் இருக்கிறார்.
இந்த பதிவு போட உதவியாக இருந்த மூவருக்கு 'நன்றி' என்று ஒரு வார்த்தையில் சொன்னால் நன்றாக இருக்காது அதனால் அவர்களை பற்றியும் இந்த பதிவில் எழுதியிருக்கேன். முடிந்தால் விடியோ ரிலீஸ் செய்கிறேன்.
Posted by IdlyVadai at 6/21/2011 12:18:00 AM 43 comments
Labels: நகைச்சுவை
Saturday, June 18, 2011
உண்மை
Doc 3
யாராக இருந்தாலும் எதுவும் எடுத்துக்கொண்டு போக முடியாது என்ற பெரிய உண்மையை புரிய வைத்த ஸ்ரீ சத்ய சாய் பாபாவிற்கு நன்றி.
Posted by IdlyVadai at 6/18/2011 02:56:00 AM 20 comments
Labels: செய்தி
Thursday, June 16, 2011
அந்த ...
சிங்கப்பூர் மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன நடிகர் ரஜினிகாந்த்,நேற்று முதல்வர் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார். தற்போதுதான், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து, தன் இருப்பிடத்திற்கு திரும்பியுள்ளதாகவும், உடன் உங்களிடம் தான் முதலில் பேச வேண்டும் என, முடிவு செய்து, தொடர்பு கொண்டதாகவும் ஜெயலலிதாவிடம் தெரிவித்தார். அதைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, "உங்களின் குரலை தொலைபேசியில் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்' என்றார். அத்துடன் ரஜினி குணமடைந்து, விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் தெரிவித்தார். அதற்குப் பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த், "நீங்கள் மகத்தான வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, ஜெயலலிதாவிடம் கூறினார். வெற்றி பெற்றதற்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, இன்னும் ஒன்றரை மாதங்களில் நாடு திரும்ப இருப்பதாகவும் கூறினார். ஏற்கனவே சென்னையில், ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற போது, முதல்வர் ஜெயலலிதா நலம் விசாரித்ததை நினைவு கூர்ந்து, லதா ரஜினிகாந்த்தும் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பழைய பஞ்ச டையலாக் - தமிழ் நாட்ட அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது - ரஜினி
Posted by IdlyVadai at 6/16/2011 02:37:00 AM 36 comments
Labels: செய்தி
Wednesday, June 15, 2011
இலங்கையின் கொலைக்களங்கள்
இலங்கையின் போர்க்குற்றம் குறித்த விடியோ காட்சிகளின் முழு தொகுப்பை "இலங்கையின் கொலைக்களங்கள்" என்ற பெயரில் "சேனல் 4" ஒளிபரப்பியது. இதில், பெண்களின் கைகளை கட்டி அவர்களது தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, முன்னாள் புலி ஒருவரை கத்தியை வைத்து மிரட்டுவது, பாலியல் துன்புறுத்தலுக்குப் பின்னர் பெண் புலிகள் கொல்லப்பட்டு கிடப்பது உட்பட பல கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்.
இப்படி எல்லாம் கூட மனிதர்கள் இருக்கிறார்கள் என்ன செய்ய
Posted by IdlyVadai at 6/15/2011 09:10:00 PM 18 comments
Labels: வீடியோ
மூச்சு விட்ட திமுக
நேற்று ஜெயலலிதாவின் டெல்லி பயணம் அரசியலில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்பட வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று பலர் நினைத்தார்கள். ஆனால் கலைஞர் போல எதிர் கேள்வி, வழ வழ கொழ கொழ என்று இல்லாமல், யாரும் எதிர்பார்பார்க்காத ப.சிதம்பரம் பற்றிய கருத்து எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்.
தேர்தல் வெற்றி பெற்றவுடன் கூட்டணி பற்றிய கேள்விக்கு கனிவாக பேசிய ஜெயலலிதாவின் போக்கில் சட்டென்று ஒரு மாற்றம் தெரிகிறது.
"தற்போது தி.மு.க.வும், காங்கிரசும் ஒரு அணியில் உள்ளன. இருகட்சிகளுமே கூட்டணி தொடருவதாக கூறுகின்றனர். தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும் என்று காங்கிரசும் அறிவித்துள்ளது. தி.மு.க.வுடனான காங்கிரஸ் உறவு இப்போதும் தொடருகிறது. மத்தியில் ஆளும் கூட்டணி அரசிலும் தி.மு.க இடம்பெற்றுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் சோனியாகாந்தியை சந்தித்து பேசுவது உகந்ததாக இருக்காது" என்று ஒரு கேள்விக்கு பதில் அளித்து, காங்கிரஸ் திமுகவை கழட்டிவிட்டால் தான் அடுத்த பேச்சே என்று முடிவாக சொல்லிவிட்டார்.
ஆக டெல்லிக்கு சென்றால் சோனியாவை சந்திக்காமல் வருவது தற்போது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு பழக்கமாகிவிட்டது.
காங்கிரஸ் இன்னும் திமுகவை கழட்டிவிடாத ஒரே காரணம் தான் இப்படி பேசியதற்கு காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணம் கூட்டணி தொடர்ந்து கொண்டிருப்பதற்கு ப.சிதம்பரம் தான் முக்கியக் காரணம் என்றும் சொல்லுகிறார்கள்.
ஜெயலலிதாவின் பேச்சு யாருக்கு சந்தோஷமாக இருக்குமோ தெரியாது, ஆனால் திமுக கொஞ்சம் மூச்சு விட ஆர்ம்பித்திருக்கிறது என்பது தான் நிஜம்.
Posted by IdlyVadai at 6/15/2011 06:39:00 AM 17 comments
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Monday, June 13, 2011
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 13-6-2011
அன்புள்ள இட்லிவடை,எனக்கு எப்போதும் ராமர் இருக்காரா இல்லையா என்று பெரிய சந்தேகம் இருக்கிறது. முன்பு மு.க ராமர் இல்லவே இல்லை என்று ராமாயணத்தை எல்லாம் மேற்கோள் காட்டி சொன்ன போது, ராமர் இல்லை என்று நம்பினேன். ஆனால் இப்ப அதே மு.க ஒரு திருமண விழாவில் நாம் ஆட்சியில் இல்லை என்றால் என்ன "...புராணத்தில், ராமாயணத்தில் கூட 14 ஆண்டு காலம் ராமன் ஆட்சியிலோ இல்லை, அவன் ஆட்சியிலே இல்லாத காலத்தில் தான் அவன் தாடகைக்கு புத்தி கற்பித்தான் என்று எழுதி வைத்திருக்கிறார்கள. ஆகவே ஆட்சியிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும் தவறுகளைச் சுட்டிக் காட்டவும், நாட்டுக்கு வருகின்ற கேடுபாடுகளைக்களையவும், தடுத்து நிறுத்தவும் நாம் முயல வேண்டும் நம்மால் முடியும்"..
என்று பேசியுள்ளார். ஆக இப்ப ராமர் இருக்கிறார். அடுத்த கலைஞர் டிவி விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி அன்று லியோனி பட்டிமன்றத்தில் விவாதிக்கலாம். எது எப்படியோ கலைஞர் தசரதர் மாதிரி இல்லை என்றால் கனிமொழி ராமர் மாதிரி அப்பா சொன்னதை கேட்டிருப்பாரா ?அதே திருமண விழாவில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியுள்ளார் " ‘’ஒரு குழுவில் நண்பர்கள் மத்தியில் ஜோக்கர்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் சில ஜோக்கர்கள் அரசியலிலும், கலைத்துறையிலும் இருப்பதை நாம் பார்க்கின்றோம்" என்கிறார். அரசியல், சினிமா இரண்டிலும் இருப்பவர்களுக்கு தான் தமிழ் நாட்டு முதல்வர் பதவி என்று எழுதி வைத்திருக்கிறது. ஆக யார் ஜோக்கர் என்று நீயே முடிவு செய்.
இந்த ஜோக் எல்லாம் பேசாமல் கேப்டன் தன் கட்சி எம்.எல்.ஏ 29 பேருக்கும் மின்அஞ்சல், வலைத்தளம் இவைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காகவும், தொகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு குறைகளை அவ்வப்போது தெரிவிக்கும் வகையில் மின்னஞ்சல் உடனுக்குடன் பார்த்துக் கொள்வதற்கு வசதியாக பிளாக்பெர்ரி செல்போன் வழங்கிவிட்டார். சரி மக்கள் தங்கள் குறைகளை உடனுக்கு உடன் இவர்களுக்கு சொல்ல தன் தொகுதி மக்கள் எல்லோருக்கும் பிளாக்பெரி வழங்கினால் நல்லா இருக்கும். செய்வார ?
இந்த எதிர்கட்சி தலைவர் இப்படி என்றால் கர்நாடகாவில் எடியூரப்பா கொஞ்சம் மூச்சு விடலாம் இப்ப குமாரசாமி, குட்டி ராதிக்காவுடன் உள்ள தொடர்பு பற்றி படம் போட்டு பத்திரிக்கைகள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இதை பற்றி குமாரசாமியிடம் கேட்ட போது "இது எனது தனிப் பட்ட விஷயம் இது பற்றி யாரும் கேட்க வேண்டாம்" என்று சொல்லிவிட்டார். அவர் சொல்லுவது சரி தானே ? பல்லு இருகிறவன் பட்டாணி சாப்பிடுகிறான்!. மனசாட்சியை தொட்டு சொல்லுங்க ? இந்த மாதிரி தைரியமாக சொல்ல எந்த தமிழ்நாட்டு அரசியலவாதிக்கு தைரியம் இருக்கா ?
முன்னாடி கலைஞர் மனசாட்சியாக மாறன் இருந்தார். இப்போது திருமாவளவன் போல இருக்கு. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தோல்விக்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் கட்சியுடன் கசப்பான உணர்வு கொண்ட எங்கள் தோழர்கள் தேர்தலில் செயல்பட முடியவில்லை. திமுக அரசு மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததுதான் தமிழின உணர்வாளர்களுக்கு ஆதங்கம். ஆக பார்ப்பனர்கள் காரணம் இல்லை காங்கிரஸ் தான் காரணம். பலே!
அடுத்த ஒரு பலே நியூஸ். பொது நல வழக்கு, மற்றும் தகவல் அறியும் சட்டத்தின்(RTI) மூலம் மாயாவதியின் ஊழல்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. முதல்ல இவர்கள் நாத்தம் வெளியில் வருவதை நிறுத்தட்டும். தண்ணிக்குள்ள ---- விட்டா தெரியாமல் போய்விடுமா என்ன ? இனிமே ஊழல் பற்றி பேச அரசியல்வாதிகளுக்கும், சாமியார்களுக்கும் தடைவிதிக்க வேண்டும். இப்ப ஊழல் பற்றி பேசுவதே ஃபேஷனாகிவிட்டது. முதல்ல இதுக்கு தடைவிதிக்க வேண்டும்.
இப்ப தமிழ்நாட்டில் அம்மா கொண்டு வந்த இலங்கை தீர்மானத்துக்கு பாராட்டு தெரிவிப்பது ஃபேஷனாகிவிட்டது. எல்லோரும் அம்மாவை பாராட்டுகிறார்கள். அந்த லிஸ்டில் விஜய் சேர்ந்துவிட்டார். இலங்கை அரசுக்கு எதிராக மத்திய அரசு ஏதாவது செய்தால் தான் உண்டு தமிழ் நாட்டு தீர்மானம் எல்லாம் மன்மோகன் சிங்குக்கு எழுதும் கடிதம் போல தான். எழுதும் நாள் நியூஸ், அடுத்த நாள் கடலை கட்ட தான் உதவும். 100 முறை கடிதம் எழுதினால், நிருபாமா ராவ் ஒரு முறை இலங்கைக்கு சென்று வருவார். அவ்வளவு தான்.
இங்கே இருக்கும் பெங்களூருக்கு போக முடிவவில்லை, ஆனால் இன்று ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி செல்கிறார். சோனியா காந்தியுடண் டி பார்ட்டி உண்டா? என்று பார்க்க வேண்டும்.
சோனியா காந்தி போன வெள்ளிக்கிழமை அன்று தயாநிதி மாறன் சந்தித்துப் பேசியதும், அதன் தொடர்ச்சியாக சென்னை வந்த அவர், சனிக்கிழமை அன்று கருணாநிதியைச் சந்தித்ததும், பலருக்கு தெரியவே இல்லை :-)கலர் கலாராக டிரஸ் போட்டுக்கொண்டு கிரிக்கெட் கூத்து விளையாட இப்ப சினிமாகாரர்களும் தயாராகிவிட்டார்கள். நம் நாட்டில் சினிமா, அதைவிட்டால் கிரிக்கேட் இவை இரண்டும் சேர்ந்தால் நாடு விளங்கிவிடும். Celebrity Cricket League(CCL). முதல் முறையாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலக நட்சத்திரங்கள் இணைந்து ' டுவென்டி டுவென்டி' முறையில் CCL மேட்ச்களில் விளையாடி ரசிகர்களை பரவசப்படுத்த இருக்கிறார்கள். யார் சியர் லீடர்ஸ் என்று தெரியலை, அதை பொறுத்து தான் என் சப்போர்ட்.
கலைஞர் இடத்தை வைகோ சீக்கிரம் பிடித்துவிடுவார் போல வீரத்தாய் வேலு நாச்சியார் வரலாற்று நடன நாடகம் தயாரித்து, ஊக்கமும் அளித்துள்ளார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. வாழ்த்துகள்.
குழந்தைகளுக்கு ஒரு நல்ல படம் வர போகிறது பெயர் "“கிரீன் லேண்டர்ன்" உலகில் பேரழிவை நிகழ்த்த தீயசக்திகள் முயல்கிறது. ஓர் அறிய சக்தி உலகை காப்பாற்ற கதாநாயகனை தேர்வு செய்து அவனிடம் சக்தி வாய்ந்த பச்சை விளக்கு, பச்சை நிற மோதிரம் போன்றவற்றை கொடுத்து அனுப்புகிறது. இந்த படம் ஏற்கனவே மே 13 அன்று தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போகிறது என்று நினைக்க வேண்டாம் இனிமே தான் இது வர போகிறது ! தீய சக்தியை அழிக்க பச்சையாக ஏதாவது வந்தால் தான் முடியும் போல.தீய சக்தியை அழிக்க புதுவை முதல்வர் ரங்க சாமி அடிக்கடி கோவில்களுக்கு படையெடுக்கிறார். அப்படி அவர் போகும் கோயில் சேலம் அப்பாபைத்தியம் சாமி கோவிலில் ஒரு மாதத்தில் 6 முறை சென்று உள்ளார், கூடவே ஆனை மலையில் உள்ள அழுக்குச்சாமி கோவிலுக்கும் சென்று ரங்கசாமி சாமி கோயிலுக்கும் போகிறார்.
ரங்கசாமி வழிபடும் அப்பா பைத்தியம் சாமியின் குருவே அழுக்குச்சாமி. அம்மாவிடம் சமரசம் செய்துக்கொண்டு பேசாம புதுவை சட்டமன்றத்தை சேலம் அப்பாபைத்தியம் சாமி கோயிலுக்கு பக்கம் கொண்டு வந்துவிடுங்கள்டில்லியில் உள்ள திகார் சிறையில் தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை சேர்க்கப்பட்டுள்ளது. இதனை தயாரிக்க சமைப்பவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தென்னிந்திய கைதிகள் மட்டுமில்லாது வடஇந்திய கைதிகளும் இட்லி மற்றும் தோசைகளை விரும்பி சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா தரவேண்டும் என்று அவர் ரசிகர்கள் கோரினார்கள். அவரோ வெளிநாட்டில் தான் சம்பாதித்த விளம்பர வருமானத்துக்கு வரிவிலக்கு பெறுவதற்காக தன்னைத் தொழில் முறை நடிகர் என்று அறிவித்திருக்கிறார். எனவே அவருக்கு நடிப்பிற்கான தாதா சாகிப் பால்கே அல்லது பாரத் விருது தரவேண்டும் என்று இனி கேட்பார்களா? என்று ஞாநி போன வார கல்கியில் கேட்டிருக்கிறார். சச்சின் ரசிகர்கள் எல்லாம் இதை பற்றி பேசாமல் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள் என்ன செய்ய
டெல்லியில் பிஜேபி புள்ளிகளும் ஜெயலலிதாவை சந்திக்கிறார்கள் :-)
இப்படிக்கு,
அன்புடன்
முனி
Posted by IdlyVadai at 6/13/2011 07:12:00 PM 15 comments
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Sunday, June 12, 2011
தமிழ் நாடு பார்ப்பனர்களுக்கு கடமைப் பட்டிருக்கிறது !
அவசரக்கூட்டம் முடித்த கையோடு கலைஞர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்...
திமுக தோல்விக்கு முக்கியமான காரணம் ஒரு சில "பார்ப்பனர்களின்'' முயற்சிதான் என்கிறார். முழு பேட்டியையும் சிரிக்காமல் படித்தால் எனக்கு சொல்லி அனுப்புங்கள், பரிசு தருகிறேன். ராணா படத்தில் வடிவேலுக்கு பதில் கலைஞரை கே.எஸ்.ரவிகுமார் அணுகலாம்.
கேள்வி: மத்திய அரசு, சிபிஐ அமைப்பை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: ஆயுதமாக இருக்கலாம், அரசியல் ஆயுதமாக இருக்க முடியாது.
கேள்வி: திருவாரூரில் நீங்கள் பேசும்போது கனிமொழி மீது போடப்பட்டுள்ள வழக்கு மத்திய அரசால் போடப்பட்ட வழக்கு என்பதைப் போல குறிப்பிட்டீர்கள். ஆனால், இன்றைய உங்கள் தீர்மானத்தில் அது குறித்து ஏதும் குறிப்பிடவில்லையே?.
பதில்: திருவாரூரில் நான் என்ன பேசினேன் என்பதை திரித்துச் சொல்லாமல், முறையாக, ஒழுங்காக, உண்மையாக, சத்தியமாகக் கேளுங்கள்.
கேள்வி: 'கூடா நட்பு'' என்று சொன்னீர்களே, அது யாரைக் குறிக்கிறது?.
பதில்: உங்களில் ஒருசிலரோடு இருக்கின்ற நட்பாகக் கூட இருக்கலாம் அல்லவா?
கேள்வி: காங்கிரஸ் கட்சி, திமுகவை என்றைக்கும் மதித்ததில்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கூறினீர்கள். இப்போது கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னீர்கள். அதனால் மீண்டும் இப்போது காங்கிரஸ் கட்சி, திமுகவை என்றைக்கும் மதித்ததில்லை என்று கூறுவீர்களா?.
பதில்: ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றி- அப்போதுள்ள நிலையைப் பொறுத்து கூற வேண்டிய சூழ்நிலையில் நான் அப்படி கூறியிருப்பேன். அதையே இப்போதும் நீங்கள் கூறுவீர்களா என்று கேட்க முடியாது.
கேள்வி: எக்காரணம் கொண்டும் காங்கிரசுடன் பிரச்சனை இல்லை என்று கூறுவீர்களா?
பதில்: நிச்சயமாகச் சொல்வேன். காங்கிரஸ் கட்சியுடன் எப்படியாவது விரோதத்தை உண்டாக்க வேண்டும், பிரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு திட்டமிட்டு ஒரு சிலர் முடிவு செய்து அதை இங்கே வந்து கேள்வியாகக் கேட்கிறீர்கள். அப்படித் தானே?
கேள்வி: டெல்லியில் குலாம் நபி ஆசாத் உங்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறும்போது, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் 2ஜி வழக்கு நடப்பதால் தான் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: நீதிமன்ற விவகாரங்களில் அரசு தலையிட வேண்டுமென்று நாங்கள் என்றைக்கும் நினைப்பவர்களும் அல்ல, செயல்படுகிறவர்களும் அல்ல.
கேள்வி: ஜுலை மாதத்தில் நீங்கள் கூட்டும் பொதுக்குழுவில் திமுக, காங்கிரஸ் கட்சியோடு கொண்டுள்ள உறவு தொடருமா? தொடராதா? என்ற முடிவினை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?
பதில்: நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள் என்பது உங்கள் கேள்வியிலேயே தெரிகிறது.
கேள்வி: காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான பத்திரிகை ஒன்றில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தான் தேர்தல் தோல்விக்குக் காரணம் என்று எழுதியிருக்கிறார்களே?
பதில்: ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை பூதாகரமாக சில சுயநலவாதிகள், சில பொறாமைக்காரர்கள் ஊதிவிட்ட காரணத்தால், அதை எடுத்து வைத்துக் கொண்டு அந்தப் பத்திரிகையிலே எழுதியிருப்பார்கள்.
கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனை தேர்தல் தோல்விக்குக் காரணமா, இல்லையா?
பதில்: இல்லை. ஒரு சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்.
கேள்வி: பாஜகவுடன் நீங்கள் கூட்டணி அமைக்கப் போவதாக டெல்லியில் சொல்கிறார்களே, அதற்கு ஒரு முயற்சி நடைபெறுவதாகவும் கூறுகிறார்களே?
பதில்: அதைப் பற்றித்தான் உண்ணாவிரதம் இருக்கின்ற ராம்தேவ் சாமியாரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று கூடச் சொல்வீர்கள்.
கேள்வி: அடுத்து சிபிஐ தாக்கல் செய்ய உள்ள 3வது குற்றப் பத்திரிகையிலே தயாநிதி மாறனின் பெயர் இடம் பெறப்போவதாகச் செய்தி வந்திருக்கிறதே?
பதில்: நீங்கள் முயற்சி செய்தால் அது நடக்கலாம். ஆனால் உண்மையா அல்லவா என்பதை சிபிஐ தான் சொல்ல வேண்டும். சிபிஐ இதை 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம் என்று சொல்லியிருக்கிறது.
கேள்வி: எதிர்க்கட்சிகள் தயாநிதி மாறன் பதவி விலக வேண்டுமென்று சொல்கிறார்களே, ஒரு கட்சித் தலைவராக நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பதில்: ராஜினாமா செய்ய வேண்டாமென்று எதிர்க்கட்சிகள் எப்போதாவது சொல்வார்களா?.
கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனையிலே நீங்கள் ராசாவை ஆதரித்த அளவிற்கு தயாநிதி மாறனை ஆதரித்து கருத்துக் கூறவில்லையே, அவரே பதில் சொல்வார் என்று சொல்லியிருக்கிறீர்களே?.
பதில்: நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை, தயாநிதி மாறனே சொல்வார் என்ற அந்த எண்ணத்தோடு நான் பதில் சொன்னேனே தவிர, நீங்கள் கலகமூட்டுவதைப் போல தயாநிதி மாறனை நான் ஆதரிக்காமல் இல்லை.
கேள்வி: சட்டமன்றத்தில் தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்கள் மன்றத்திலே உங்கள் கட்சிதான் எதிர்க்கட்சி...
பதில்: உண்மையைச் சொன்னதற்கு நன்றி.
கேள்வி: ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் கடந்த காலத்தில் நீங்கள் சரியாகச் செயல்படவில்லை என்று விஜயகாந்த் சொல்லியிருக்கிறாரே?
பதில்: நான் அவருக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்.
கேள்வி: இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலே உங்கள் சுய மரியாதை காப்பாற்றப்படுகிறது என்று நினைக்கிறீர்களா?
பதில்: எங்கள் சுயமரியாதையைப் பற்றி தெருவிலே போகிறவர்கள் எல்லாம் சொல்ல முடியாது. சுயமரியாதையைப் பற்றி எனக்குத் தெரியும்.
கேள்வி: 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எந்த விதத்திலும் உங்களுக்கு உதவி செய்யவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?
பதில்: அப்படிப்பட்ட வருத்தம் எனக்குக் கிடையாது. எனக்கு வருத்தம் வரவேண்டுமென்று நீங்கள் தான் படாதபாடுபடுகிறீர்கள்.
கேள்வி: ராசாவும், கனிமொழியும் சிறையிலே இருக்கக் காரணம் காங்கிரஸ் கட்சி தான். அவர்கள் தான் இந்த விஷயத்தை வெளியிலே கொண்டு வந்திருக்கிறார்கள் என்று உங்கள் கட்சித் தொண்டர்களே வெளியே பேசுகிறார்களே?
பதில்: எந்தத் தொண்டர் அவ்வாறு பேசினார்?.
கேள்வி: டெல்லிக்கு எப்போது போகிறீர்கள்?
பதில்: போகும்போது சொல்லிக் கொண்டு போகிறேன்.
கேள்வி: போபர்ஸ் வழக்கிலே சிபிஐயின் செயல்பாடும், இப்போது 2ஜி வழக்கிலே சிபிஐயின் செயல்பாடும் எப்படி இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இரண்டிற்கும் என்ன வேறுபாடு?
பதில்: ஒவ்வொரு பிரச்சனையையும் எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது புதிதல்ல.
கேள்வி: உயர்நீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் மறுத்து விட்டார்களே?
பதில்: உயர் நீதிமன்றத்தில் இதைப்பற்றி கேட்கிறீர்களே, இன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலே சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக ஜெயலலிதா அரசிற்கு எதிராகத் தீர்ப்பு கூறியிருக்கிறார்களே அதைப்பற்றி கேள்வி கேட்க வேண்டும் என்று யாராவது நினைத்தீர்களா?. அந்தத் தமிழ் ரத்தம் யாருக்காவது ஓடுகிறதா?.
கேள்வி: உங்கள் தீர்மானத்தில் சிபிஐயை கண்டித்திருக்கிறீர்கள். சிபிஐ பிரதமரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதனால் பிரதமரையே தாங்கள் கண்டித்ததாக எடுத்துக் கொள்ளலாமா?.
பதில்: நீங்கள் அப்படித் தான் எழுதுவீர்கள். உங்கள் சுதந்திரம் அது.
கேள்வி: திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நல் வாழ்வுத் திட்டங்களையெல்லாம் இந்த ஆட்சியினர் நிறுத்தியிருக்கிறார்கள். அதனால் மக்களுக்குப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதே?
பதில்: மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. யார் சொன்னார்கள் மக்களுக்குப் பாதிப்பு என்று? பாதிப்பு வருமென்று தெரிந்திருந்தால் மக்கள் அவர்களை தேர்தலில் ஆதரித்திருப்பார்களா?.
கேள்வி: நீங்கள் நிறைவேற்றிய திட்டங்களையெல்லாம் அதிமுக அரசு நிறுத்தி வைத்ததைக் கண்டித்து நீங்கள் ஏதாவது போராட்டம் நடத்துவதாக இருக்கிறீர்களா?
பதில்: நாங்கள் தற்போது கூட்டங்கள் நடத்துவதாக அறிவித்திருக்கிறோம். இந்தக் கூட்டங்கள் முடிந்த பிறகு பொதுக் குழுவைக் கூட்டுவோம். அந்தப் பொதுக்குழுவில் போராட்டம் பற்றி தீர்மானிப்போம்.
கேள்வி: நிருபமா ராவ், சிவசங்கர் மேனன் ஆகியோர் இலங்கை சென்றிருக்கிறார்கள். பல முறை அங்கே போய் விட்டு வந்து விட்டார்கள். எதுவும் நடக்கவில்லையே?
பதில்: இது செய்தி
கேள்வி: உங்கள் கட்சி எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் எப்படி செயல்படப் போகிறார்கள்?
பதில்: பொறுத்திருந்து பாருங்கள்.
கலைஞர் கூறுவது உண்மை என்றால், தமிழ்நாடு ஏன் இந்தியாவே பார்ப்பனர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது!
பிகு:
முன்னதாக சிபிஐயை கண்டித்து திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குநர் சரத்குமார் ஆகியோரை சிபிஐ குற்றவாளிகளாகச் சேர்த்திருப்பது முற்றிலும் தவறானது என்றும் அதைக் கண்டிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதில் முன்னாள் அமைச்சர் ராசாவின் பெயர் இடம் பெறவில்லை. தலித் என்பது கூட காரணமாக இருக்கலாம் !
Posted by IdlyVadai at 6/12/2011 12:28:00 PM 30 comments
Friday, June 10, 2011
ஷோலே
படம் அனுப்பிய அன்பருக்கு நன்றி
Posted by IdlyVadai at 6/10/2011 11:44:00 PM 11 comments
Labels: நகைச்சுவை
கல்கி, துக்ளக், தினமணி - மாறன்
கல்கி, துக்ளக், தினமணியில் வந்த கட்டுரைகள் மிக முக்கியமானவை. திமுகவினர் அனைவரும் டெல்லியில் ஒரே இடத்தில் இருப்பது போல இந்த மூன்று கட்டுரைகளும் ஒரே இடத்தில் இருந்தால் நல்லது என்று இங்கே...
குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி..? மாறன் கூற்றைப் பொய்யாக்கும் பிஎஸ்என்எல் கடிதம்! - எஸ். குருமூர்த்தி
""என்னுடைய பெயரிலோ அல்லது 3/1 போட் கிளப் அவின்யு வீட்டிலோ 24371500 என்ற எண்ணுள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி மட்டுமே உள்ளது. 323 இணைப்புகள் உள்ளன என்று "தினமணி' நாளிதழில் வந்த செய்தி தவறானது. உண்மையை ஏன் அவர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடமிருந்து கேட்டு பெற்றிருக்கக் கூடாது ?'' என்று ஜூன் மாதம் 2ம் தேதி தயாநிதி மாறன் ஏதோ தான் தவறே செய்யாதது போலவும் தம்மீது வேண்டுமென்றே வீண் பழி சுமத்துவதாகவும் அறிக்கை வெளியிட்டார்.
பி.எஸ்.என்.எல். இணைய தளத்திலேயே தயாநிதி மாறன் வீட்டில், 24371500 என்ற இணைப்பு தலைமைப் பொது மேலாளர் பெயரிலும், 24371515 என்ற இணைப்பு தயாநிதி மாறன் பெயரிலும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்.லின் 2009ம் ஆண்டு, ஜூன் 6ம் தேதியிட்ட கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அளிக்கப்பட்ட 24371500 என்ற தொலைபேசி இணைப்புதான் தயாநிதி மாறன் வீட்டில் உள்ளது என்பது பொய் என்பதை சுட்டிக் காட்டுகிறது.
பி.எஸ்.என்.எல்.லிடமிருந்து பெறப்பட்ட மேலும் சில புதிய தகவல்கள் தயாநிதி மாறனுக்கு எதிராக அமைந்துள்ளன. அரசு கணக்கில், 323 இணைப்புகளுடன் ரகசிய தொலைபேசி இணைப்பகம் அவரது வீட்டில் இயங்கியதற்கான மறுக்கமுடியாத பல புதிய ஆதாரங்கள் பி.எஸ்.என்.எல்.லிடமிருந்து கிடைத்துள்ளன. தயாநிதி மாறன் கூறுவது அனைத்தும் பொய் என்பதை பி.எஸ்.என்.எல் சென்னை சர்க்கிளின் 21-6-2007 தேதியிட்ட அலுவலக கடிதம் உறுதிப்படுத்துகிறது.
2007ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்தார். இரு வாரங்களுக்கு பிறகு, பி.எஸ்.என்.எல் லுக்கு மாறன் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில், அமைச்சர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட 24371515 மற்றும் 24371616 இணைப்புகளை நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாவிற்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதான், பி.எஸ்.என்.எல். உண்மையை வெளிப்படுத்த உதவியது. 323 இணைப்புகள் உள்ளது என்பதுடன், ரகசிய இணைப்பகம் செயல்பட்டதையும் அது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.
முதலாவதாக: 24371515, 24371616 ஆகிய எண்கள் குறித்த தகவல்கள், பொது குறைதீர்ப்புப் பிரிவு அல்லது கணினி பிரிவிடம் இல்லை. இந்த எண்கள் குறித்த தகவல்களை மாம்பலம் இணைப்பகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளவும் '' என பி.எஸ்.என்.எல். அளித்த முதல் கடிதம் தெரிவித்தது.
ஏன் இந்த இரண்டு இணைப்புகளும் மாம்பலம் இணைப்பகத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன என்கிற கேள்வி எழுகிறது. இதற்குப் பதில் கிடையாது. பொது குறைதீர்ப்புப் பிரிவு அல்லது கணினி பிரிவிடம் இந்த எண்கள் குறித்த தகவல்கள் இல்லை என்பதே மோசடி என்பதை உணர்த்துகிறது. இணைப்பக முறையில் இருந்து அவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்பது பொருளாகிறது. 2437 என்ற பொதுவான இணைப்பக கோடு கொண்ட அவை ரகசிய இணைப்பகத்தில் இடம் பெற்றன.
இதே போல, தொலைபேசி வாடிக்கையாளருக்குஏதாவது தகவல் தேவைப்பட்டால், அவர், ""1191'' என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்வார். ஆனால், தயாநிதி மாறனின் இணைப்பகத்தில், 234711911க்கு வரும் அனைத்து அழைப்புகளும் 24311191 க்கு தானாகவே மாற்றப்பட்டு விடும். இது 2437 என்ற ரகசிய இணைப்பகம் செயல்படுவதை பாதுகாக்க செய்யப்பட்ட ஏற்பாடுதான்.
இரண்டாவதாக : பி.எஸ்.என்.எல்லின் அந்தக் கடிதம், 300 இணைப்புகள் கொண்ட இணைப்பகம் உள்ளதை ஒத்துகொண்டு,மாறனின் பொய்யை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 24371515 மற்றும் 24371616 (அமைச்சர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட அவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாவிற்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டவை) ஆகிய இரண்டும், 300 எக்ஸ்டென்ஷன்கள் உள்ள 24371500 என்ற முக்கிய எண்ணின் துணை எண்கள் ஆகும் என்பது தெரிய வருவதாக அக்கடிதம் கூறுகிறது. அந்த முக்கிய எண் 24371500 இணைப்பு, 3/1 போட் கிளப் சாலையில், தலைமைப் பொது மேலாளர் என்ற பெயரில் உள்ளதாகவும் அது மேலும் தெரிவிக்கிறது. தயாநிதி மாறன், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி 5 வாரங்களுக்கு மேல் இந்த மோசடி தொடர்ந்துள்ளது என்றும் அக்கடிதம் உணர்த்துகிறது. இக்கடிதம் நான்கு முக்கிய உண்மைகளை உறுதிப்படுத்துகிறது.
ஒன்று, 24371500 என்ற எண்ணுக்குள் 300 இணைப்புகள் கொண்ட சட்ட விரோத இணைப்பகம் மறைக்கப்பட்டிருந்ததையும், அதில் 24371515, 24371616 எண்கள் சேர்ந்திருந்ததையும் அது உறுதிப்படுத்துகிறது. இரண்டாவது, அந்த மோசடி இணைப்பகம், தலைமைப் பொது மேலாளர் பெயரில் செயல்பட்டது. அது மாறனின் பெயரில் இல்லை. மூன்றாவது, அந்த மோசடி இணைப்பகம், 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி வரை செயல்பட்டுள்ளது. நான்காவது, இந்த இணைப்பகத்திற்கான செலவுகளை அரசே ஏற்றுள்ளது - அதாவது ""டிடிஐஎஸ்டி (துறை) பிரிவில் '' என்ற கடிதத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் உண்மையை ஒப்புக் கொள்கின்றன.
323 இணைப்புகள் கொண்ட இணைப்பகம் திருட்டுத்தனமாக மாறன் வீட்டில் இருந்தன என்ற உண்மையை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
அந்த இரு எண்களையும், கேட்டு கொண்டபடி, இலவச இணைப்புகளிலிருந்து, கட்டண முறையிலான நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டுக்கு மாற்ற, "" 24371500 '' என்ற முக்கிய எண் மறைக்கப்பட்டு, 24341515, 24371616 சாதாரண இணைப்புகளாக, எஸ்டிடி வசதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டில் அளிக்கப்படும் என்று அக்கடிதம் தெரிவிக்கிறது. ஏன் 24371500 ஐ மறைக்க வேண்டும் ?
இது கூடவா தெரியவில்லை? 24371500 முதல் 24371799 வரை உள்ள 300 துணை இணைப்புகளைக் கொண்ட 24371500 முக்கிய எண் தெரியக்கூடாது என்பதற்காகத்தான்.
இரண்டாவதாக அக்கடிதம் மாறனின் வீட்டில் மேலும் 23 இணைப்புகள் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. மற்ற இணைப்புகள், தொழில்நுட்ப வார்த்தையில் கூறினால், "பிரா' இணைப்புகள் ஆகும். ""7 "பிரா' இணைப்புகளும், போட் கிளப்பில், சென்னை டெலிபோன்ஸ் தலைமை பொது மேலாளர் பெயரில் 2 சாதாரண இணைப்புகளும் இருந்ததை அந்தக் கடிதம் கூறுகிறது''.
ஒவ்வொரு "பிரா' லைனும் ஒரே சமயத்தில், குரல், ஆவணங்கள்,விடியோவை அனுப்பும் திறன் கொண்டவை. எனவே, 7 "பிரா' இணைப்புகள் என்பது, 21 இணைப்புகள் ஆகும். 21 இணைப்புகளுடன், 2 சாதாரண இணைப்புகள், 24371500 எண்ணில் உள்ள 300 இணைப்புகள் ஆக மொத்தம் 323 இணைப்புகள் (ஐஎஸ்டிஎன்) திருட்டுத்தனமாக மாறனின் வீட்டில் செயல்பட்டுள்ளன. இதைதான், சிபிஐ தனது அறிக்கையில் வெளிக்கொணர்ந்துள்ளது. 323 இணைப்புகள் கொண்ட இணைப்பகத்தையே மாறன் மறைத்து விட்டார் என்பதை "தினமணி' நாளிதழ் அம்பலப்படுத்தியது. அவ்வளவே!
பி.எஸ்.என்.எல்.லின் கடிதத்தின் மூலம்,மாறன் தவறு செய்துள்ளார் என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெளிவாகி விட்டதே, இனிமேலாவது தயாநிதி மாறன், தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு தலைகுனிவை ஏற்றுக் கொள்வாரா? இல்லை, வலுக்கட்டாயமாகப் பதவி பறிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவமானங்களுக்குப் பிறகுதான் ஏற்றுக் கொள்வாரா?
உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீர வேண்டும். அவரவர் பாவம் அவரவருக்குத்தான் என்றெல்லாம் தமிழில் பல பழமொழிகள் உண்டு. தயாநிதி மாறன் என்பதால் இவையெல்லாம் மாறிவிடுமா என்ன?
அடுத்தது தயாநிதி? - ஞாநி
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு முன்பு டெலிகாம் அமைச்சராக இருந்த தயாநிதிக்கும் தொடர்பும் பங்கும் இருக்கிறதா என்பது தான் இனி அடுத்த கட்ட விசாரணை. எந்த அடிப்படையில் ராசாவும் கனிமொழியும் சரத் ரெட்டியும் பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்களோ, அதே அடிப்படையில் தயாநிதி மாறனும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்கிறது தெஹல்கா இதழ்.
தெஹல்காவின் பல முக்கியமான புலனாய்வுக் கட்டுரைகளை எழுதியவரான அஷிஷ் கேத்தனும் ராமன் கிர்பாலும் இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதி மாறன் தொடர்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தெஹல்கா சொல்வது என்ன என்று பார்ப்போம்.
தயாநிதி மாறன் மே 2004 முதல் மே 2007 வரை டெலிகாம் அமைச்சராக இருந்தார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரன் நடத்தும் ஏர்செல் கம்பெனி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த தொடர்பு சேவை லைசன்சுகளுக்கு விண்ணப்பித்தது. ஆனால் ஒவ்வொரு விண்ணப்பத்தின் மீதும் தயாநிதியின் அமைச்சகம் கேள்விகளை எழுப்பியது. ஏர்செல் பதில் தந்து கொண்டே இருந்தது. ஆனால் லைசன்ஸ் வழங்கப்படவே இல்லை.
இரண்டாண்டுகள் இப்படியே நீடித்த நிலைமை திடீரென மாறியது. சிவசங்கரன் தன் கம்பெனியில் 74 சதவிகிதப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு, சுமார் 7800 கோடி ரூபாய்களுக்கு விற்றார். மேக்சிஸ் கம்பெனியின் அதிபர் இலங்கைத் தமிழரான ஆனந்தகிருஷ்ணன். இன்னொரு 26 சதவிகிதப் பங்குகளை மாறன் குடும்பத்துக்கு நெருக்கமான சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர் பிரதாப் ரெட்டியின் குடும்பத்தினர் வெறும் 34 கோடிக்கு வாங்கினர்.
அக்டோபர் 2005ல் ஏர்செல்லை வாங்க விரும்புவதாக ஆனந்தகிருஷ்ணன், சிவசங்கரனிடம் தெரிவித்தார். அடுத்த இரண்டே மாதங்களில் டிசம்பர் 14 அன்று தயாநிதியின் அமைச்சகம் லைசன்சுகளுக்கான புதிய விதி முறைகளை அறிவித்தது. டிசம்பர் 30ந் தேதி ஏர்செல்லை மேக்சிஸுக்கு விற்க ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அடுத்த மூன்றே நாட்களில் தயாநிதி மாறனின் அமைச்சகம் புதிய விதிமுறைகளின் கீழ் தகவல்களை அனுப்பும்படி ஏர்செல்லைக் கேட்டுக் கொண்டது. அடுத்த பதினேழே நாட்களில் ஏர்செல் தகவல்களைக் கொடுத்தது. ஜனவரி 12 அன்று மேலும் புது வட்டாரங்களுக்கு லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்தது.
பிப்ரவரி மாதத்திலிருந்து ஏர்செல்லுக்கு தயாநிதியின் அமைச்சகம் லைசன்சுகளை வழங்கத் தொடங்கியது. நவம்பர் மாதத்தில் மொத்தமாக ஏர்செல்லுக்கு 14 வட்டாரங்களுக்கான லைசன்சுகள் கிடைத்துவிட்டன. மொத்தமாக லைசன்ஸ் கட்டணமாக ஏர்செல் செலுத்திய தொகை 1399 கோடி 47 லட்சம் ரூபாய்கள். ஆனால் தணிக்கைக் கணக்கீடுப்படி இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 22 ஆயிரம் கோடி ரூபாய்கள்.
ஆனந்தகிருஷ்ணன் கைக்கு ஏர்செல் மாறி லைசன்சுகள் கிடைத்த நான்காவது மாதத்தில், அவரது மேக்சிஸ் குழுமம், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமத்தைச் சேர்ந்த சன் டைரக்ட் டி.வி. கம்பெனியில் 20 சதவிகிதப் பங்குகளுக்காக 150 மில்லியன் டாலர்கள் ( சுமார் 600 கோடி ரூபாய்கள்) கொடுத்தது. அடுத்தபடியாக 2008-2009ல் மேக்சிஸ் குழுமம் சன் குழுமத்தின் எஃப்.எம். வானொலி கம்பெனியில் சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்தது.
தெஹல்கா மேலும் சொல்லும் மூன்று தகவல்களும் முக்கியமானவை. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விலை நிர்ணயிப்பது பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அமைச்சரவையின் குழுவிடம் இருந்ததை தயாநிதி மாறன் மாற்றி முழு அதிகாரமும் தமது அமைச்சகத்திடமே வைத்துக் கொண்டார். இதை நிதி அமைச்சகம் கடுமையாக ஆட்சேபித்தது. ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் ஒப்புதல் அளித்தார். (இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அடுத்து வந்த ராசாவும் முடிவுகள் எடுக்க முடிந்தது.)
சிவசங்கரன் ஏர்செல்லை நடத்தி வந்தபோது டாடா குழுமத்துடன் தொழில் ரீதியான கூட்டு வைத்திருந்தார். டாடாக்களுக்கும் தயாநிதி மாறனுக்கும் இடையே நல்லுறவு இருக்கவில்லை. அதற்குக் காரணம் டிஷ் டி.வி. தொழிலில் டாடாவுக்கும் சன் குழுமத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு நீதிமன்ற வழக்கு வரை சென்றதுதான். எனவே சிவசங்கரனிடம் ஏர்செல் இருந்தவரை தயாநிதி மாறனின் அமைச்சகம் லைசன்சுகளைத் தரவில்லை. தமக்கு எதிராக அமைச்சகத்தில் யாரோ தொடர்ந்து வேலை செய்வதாக சிவசங்கரன் 2005ல் புகார் கடிதமே எழுதியிருக்கிறார்.
மூன்றாவது தகவல்தான் அரசியல்ரீதியாக முக்கியமானது. உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ராசா அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டி வந்ததும், புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில் சிபல், 1998 முதல் 2009 வரை ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் வழங்குவதில் பின்பற்றிய அனைத்து நடை முறைகள் , நடவடிக்கைகள் பற்றியும் விசாரித்து அறிக்கை தரும்படி நீதிபதி சிவராஜ் பாட்டில் கமிஷனை நியமித்தார்.
அந்த கமிஷனும் அறிக்கையைத் தந்து விட்டது. அந்த அறிக்கையில், ஏர்செல்லுக்கு லைசன்ஸ் தராமல் விதவிதமான கேள்விகள் கேட்டு வருடக்கணக்காக தயாநிதிமாறனின் அமைச்சகம் இழுத்தடித்தது சரியல்ல என்று கூறப்பட்டிருக்கிறது. அமைச்சகம் ஏர்செல்லிடம் கேட்ட விவரங்கள், தேவையற்றவை, பொருத்தமற்றவை, லைசன்ஸ் விதிமுறைகளுக்குப் புறம்பானவை என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல; பணம் தொடர்பான எந்தக் கொள்கை முடிவானாலும் அதுபற்றி நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த அமைச்சகமும் உத்தரவுகள் போடக் கூடாது என்ற மத்திய அரசின் நடத்தை விதியை தயாநிதி மாறனின் அமைச்சகம் பின்பற்றவே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
ராசா அமைச்சராக இருந்தபோது பால்வாவின் ஸ்வான் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் லைசன்ஸைக் குறைந்த விலைக்குக் கொடுத்தார். லைசன்ஸ் கிடைத்ததும் பால்வா, தன்னுடைய வேறு கம்பெனிகள் மூலம் கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் கடன் கொடுத்தார். அது லஞ்சப் பணம்தான் என்பது சி.பி.ஐ.யின் வாதம். அந்த அடிப்படையில்தான் ராசா, கனிமொழி, சரத் ரெட்டி, பால்வா எல்லாருமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தயாநிதி மாறன் ஆனந்தகிருஷ்ணனின் ஏர்செல்லுக்கு குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் கொடுத்தார். லைசன்ஸ் கிடைத்ததும், ஆனந்தகிருஷ்ணனின் கம்பெனி தயாநிதி மாறனின் சகோதரர் நடத்தும் சன் குழுமத்தில் 700 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. இதுவும் லஞ்சப் பணம்தானே. இது லஞ்சப்பணம் இல்லை, தற்செயலாக நடந்தது என்றால் அதே விதி ராசாவுக்கும் பொருந்தும் அல்லவா? தமக்கு சன் குழுமத்தில் எந்த முதலீடும் இல்லை என்று தயாநிதி மாறன் அறிவித்திருக்கிறார். இதே வாதப்படி ராசாவுக்கும் கலைஞர் டி.வி.யில் எந்த முதலீடும் இல்லை.
தெஹல்கா இந்தச் செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆங்கில டி.வி. சேனல்கள் எல்லாம் தொடர்ந்து இதை எழுப்பி வருகின்றன. பி.ஜே.பியும் இடதுசாரிக் கட்சிகளும் தயாநிதி மாறனும் பிரதமரும் விளக்கம் தரவேண்டுமென்று கோரியுள்ளன. ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரித்துவரும் பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணை வரம்புக்குள் இது வரும்; மேற்கொண்டு கருத்து சொல்ல முடியாது என்று காங்கிரஸ் சொல்லிவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் முன்பு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தொடுத்த பொதுநல வழக்கின் அடிப்படையில்தான் இதுவரை விசாரணை கைதுகள் எல்லாம் நடந்துள்ளன. புதிதாக தெஹல்கா வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையிலும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று பூஷண் இன்னொரு மனு இந்த வாரம் தாக்கல் செய்யவிருக்கிறார். எனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்து தயாநிதி மாறனும் உட்படுவாரா மாட்டாரா என்பது இனி உச்ச நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்துத்தான் இருக்கிறது.
- நன்றி கல்கி, ஓ-பக்கங்கள்
முன்னோடி காட்டிய வழி... துக்ளக் தலையங்கம்
‘தயாநிதி மாறன் டெலிகாம் மந்திரியாக இருந்தபோது, ‘ஏர்செல்’ என்ற நிறுவனத்திற்கு, அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது வேண்டுமென்றே தள்ளிப் போடப்பட்டது (சுமார் இரண்டு வருடங்கள்); அந்த நிறுவனம் கைமாறி, ஒரு மலேசியக் கம்பெனி அதை வாங்கியதும், உடனடியாக (சில மாதங்களில்) அலைக்கற்றைகள் தரப்பட்டன; ஒன்றன்பின் ஒன்றாக பதினான்கு மாநிலங்களில் ஸெல்ஃபோன் பணி செய்ய அந்த நிறுவனம் உரிமம் பெற்றது; அதைத் தொடர்ந்து, அந்த மலேசிய நிறுவனம், சன் டி.வி.யில், பெரும் முதலீடு (பங்குகளைப் பெற்று) செய்தது’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பா.ஜ.க.வும் மற்ற எதிர்க் கட்சிகளும் இந்தக் குற்றச்சாட்டின் மீது விசாரணை கோருகின்றன. அந்த விசாரணை ஒழுங்காக நடப்பதற்காக, தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று, அ.தி.மு.க. உட்பட பல எதிர்க் கட்சிகளும் கோரியுள்ளன.
இந்த விவகாரத்தில், ராசாவின் ஸ்பெக்ட்ரம் சாயல் நன்றாகத் தெரிகிறது. சில நிறுவனங்களுக்கு அலைக்கற்றை; அந்த நிறுவனங்களுக்குப் பெரும் லாபம்; அந்த நிறுவனங்களில் ஒன்று கலைஞர் டி.வி.க்குப் பெரும் பணம் தருகிறது (இது ‘கடன்’ என்று கூறப்படுகிறது) - இது ராசா ஸ்டைல். ஆனால், இதற்கு முன்னோடி தயாநிதி மாறன். ‘முன்னோடிகள் சென்ற வழியில்தான் தானும் சென்றதாக’ ராசா கூறியது, உண்மைதான்! தயாநிதி, சன் டி.வி.க்கு முதலீடு கொண்டு வந்தார்; ராசா கலைஞர் டி.வி.க்கு அதே பணியைச் செய்தார்!
‘ஒன்றின் மீது நடவடிக்கை வந்து விட்டது; அதற்கு முன்னால் நடந்த விவகாரத்தில் நடவடிக்கை ஏன் இல்லை?’ என்ற கேள்வி எழுகிறது. அதை எதிர்க் கட்சிகள் எழுப்பியதை விட, அதிக முனைப்புடன் மத்திய மந்திரிசபையில் இன்னமும் இருக்கிற தி.மு.க.வே எழுப்பும். ராசாவிற்கு எதிராக தயாநிதி மாறன் செய்ததை, தயாநிதி மாறனுக்கு எதிராக ராசா சார்பில், குடும்பத்தினர் செய்வார்கள்.
இது தவிர, பழைய விவகாரம் ஒன்று இப்போது மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. 2009-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதா, தயாநிதி மாறன் மீது ஒரு குற்றச்சாட்டைக் கூறினார்.
தனது வீட்டில் ஒரு டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சையே நிறுவி, வீட்டிலிருந்து சன் டி.வி.க்கு பூமியில் கேபிள்களை பதித்து, தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, சன் டி.வி.க்குப் பேருதவி செய்து; அரசுக்குப் பெரும் நஷ்டத்தை அவர் ஏற்படுத்தினார் – என்பது குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக, ‘ஸி.பி.ஐ. நடத்திய விசாரணை அறிக்கை’ யின் நகலையும் அவர் வெளியிட்டார்.
ஜெயலலிதா கூறியதை, அப்போது பத்திரிகைகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்போது தி.மு.க. அவ்வளவு மகிமையுடன் விளங்கியது! ஆகையால், ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு அப்படியே மறக்கப்பட்டது. இப்போது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் குருமூர்த்தி எழுதியுள்ள ஒரு விவரமான கட்டுரையின் மூலம் அந்தக் குற்றச்சாட்டு, மீண்டும் வந்திருக்கிறது.
ஜெயலலிதா இக்குற்றச்சாட்டுகளைக் கூறியபோது, அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த தயாநிதி மாறன், இப்போது குருமூர்த்தி மற்றும் அவரது கட்டுரையைப் பிரசுரித்த பத்திரிகைகளான இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகியவற்றிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
நோட்டீஸ் அனுப்புவதால், ஒருவர் தன்னுடைய குற்றமற்ற தன்மையை நிரூபித்துவிட முடியாது. தன் தரப்பில், தயாநிதி மாறன் பி.எஸ்.என்.எல்., மேனேஜர் எழுதியுள்ள கடிதத்தை அப்போது வெளியிட்டார். இப்போதும் அதையேதான் அவர் நம்புகிறார். அந்தக் கடிதம் எதையும் நிரூபித்து விடுகிற மாதிரி இல்லை. இன்னும் ஏதாவது, ஏற்கக் கூடிய ஆதாரம் அவரிடமிருந்து வந்தால்தான் உண்டு.
ஆக, மத்திய அரசில் பதவி வகிக்கிற தி.மு.க.வினர் செய்த முறைகேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. திடீர் திருப்பங்கள், சவால்கள், திகில் காட்சிகள், கண்ணீர் நாடகங்கள்... என்று ஒரு பெரிய சீரியலே நடந்து கொண்டிருக்கிறது. சன் டி.வி.யில் வருகிற மெகா சீரியல்கள் தோற்றன!
- நன்றி துக்ளக்
இவர்கள் ஈஸியாக ஊழல் செய்கிறார்கள், நாம் தான் கஷ்டப்பட்டு எழுதி அதை படிக்க வேண்டியிருக்கிறது. ஆண்டவா !
Posted by IdlyVadai at 6/10/2011 12:07:00 AM 21 comments
Thursday, June 09, 2011
அவசரக் கூட்டமும், நிதானமான காங்கிரஸும்
10.06.2011 அன்று மாலை 4.30 மணி அளவில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் அண்ணா அறிவாலயம், முரசொலை மாறன் வளாகத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவின் அவசரக் கூட்டம் நடைபெறும். உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- நன்றி முரசொலி
இது முரசொலியில் வந்த அறிவிப்பு. தொடர்ந்து கனிமொழி ஜாமீன் மனு ஆடி தள்ளுபடி மாதிரி எல்லாம் நீதிமன்றங்களிலும் தள்ளுபடி செய்யப்படுகிறது. அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுக்க போகிறார். நிச்சயம் அதை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்யும் என்று எதிர்ப்பார்கலாம்.
கலைஞர் ஏற்கனவே 'கூடா நட்பு', 'கனிமொழி கைதுக்கு மத்திய அரசு தான் காரணம்' என்று வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார். அ.ராசாவுக்கு தான் மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்றி நீரா ராடியாவிடம் கனிமொழி பேசியதற்கும் மத்திய அரசுக்கு கூட சம்பந்தம் இல்லை என்று கலைஞர் மறந்துவிட்டார்.
கலைஞர் செய்ய கூடியது இது தான் - காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுவது அல்லது மத்திய அமைச்சர்களை வாபஸ் பெற்று வெளியிலிருந்து ஆதரவு தருவது. இதில் எந்த முடிவு என்றாலும் காங்கிரஸுக்கு நல்லது தான். இரண்டுமே என்றால் இன்னும் நல்லது. கொஞ்ச நாளாவது நிம்மதியாக இருக்கலாம். இவர்கள் கூட்டும் கூட்டத்தை காங்கிரஸும் சரி மீடியாவும் சரி அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. தேர்தல் முடிந்து 'சாக்கடையின் துர்நாற்றம் இப்போது வீசுகிறது,அடுத்து சந்தனம் மணக்கும்' என்று கலைஞர் அறிக்கை விட ஆரம்பித்துவிட்டார்.
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவார் என்பது போல லேட்டஸ்டாக சிக்கியுள்ளார் தயாநிதி மாறன். சிவசங்கரன் வாக்குமூலம், தனது வீட்டில் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக தயாநிதி மாறன் பயன்படுத்தினார் என்ற சிபிஐ குற்றச்சாட்டும் அவருக்கு எதிராக அமைந்துள்ளது. கலைஞர் தயாநிதி மாறனுக்கு வந்துள்ள பிரச்சினை அவரே சந்திப்பார் என்று ஜகா வாங்கியுள்ளார். டெல்லியில் திஹார் சென்றால் போய் பார்க்க மாட்டார் என்று நினைக்கிறேன்.
இது எல்லாம் கூட காமெடி இல்லை ஆனால் அன்னா, ராம்தேவ் உண்ணாவிருதம் பற்றி ஒரு அறிக்கை விட்டுள்ளார் கலைஞர் அது தான் டாப் - "லோக்பால், லோக் அயுக்த், ஊழல் எதிர்ப்பு, உண்ணாவிரதம் என்றெல்லாம் பேசுப்படுகின்ற இந்த நேரத்தில் திமுக அரசு 1973-ஆம் ஆண்டே இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என்பதை உலகிற்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்கிறார்
லோக்பால் என்பதை ஆவின் பால் என்று நினைத்து பேசியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
Posted by IdlyVadai at 6/09/2011 07:56:00 PM 13 comments
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Wednesday, June 08, 2011
கைமாறிய இட்லிவடை ?
இட்லிவடை கை மாறிவிட்டது என்று நேற்று ஏதோ ஒரு பட்சி சொன்னதை கேட்டு பலர் சந்தோஷம் அடைந்தார்கள் என்று கேள்விப்பட்டேன். அப்படி சொன்னவர் பேசாமல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளாராக சேர்ந்துவிடலாம். அவர்கள் தான் இப்படி உளறிக்கொட்டுவார்கள்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் எல்லாம் கேமராவை பார்த்தால் ஒன்று முழிப்பார்கள் அப்பது பேத்துவார்கள். கருப்பு பண விவகாரத்தை அடுத்து இப்போது தெலங்கானா பிரச்சனையை குழப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். "தெலங்கானா பிரச்சனை என்பது சுலபமான பிரச்சனை அல்ல, அனைத்து தரப்பினருடனும் பேசி சுமூகத் தீர்வை எட்ட வேண்டும்" என்று சொல்லுகிறார் குலாம் நபி ஆஸாத்.
இந்த ஞானோதயம் காங்கிரஸிற்கு முன்னமேயல்லவா வந்திருக்க வேண்டும்? அதற்குள் எதற்காக தனி தெலங்கானாவை உருவாக்குவோம் என ப.சிதம்பரம் வாக்குறுதியளிக்க வேண்டும்? பிறகு இப்போது எதற்காக தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக, அது சிக்கல், மெதுவாகத்தான் சிடுக்கெடுக்க வேண்டுமென சால்ஜாப்பு? ராம்தேவுக்கு போட்டியாக சந்திரசேகர் ராவை உண்ணா விருதம் இருக்க ஏற்பாடு செய்வாகள் போல யார் கண்டது.
தமிழ்நாட்டில் ஒரே கட்சி அடுத்தடுத்து ஆட்சிக்கு வராது என்று தெரிந்திருந்தும், சந்தர்ப்பவாத கூட்டணியை நாங்கள் விரும்பாததால், அதிமுகவிடமிருந்து வந்த 'சிக்னலை' நிராகரித்தோம். `ஏ' தோற்கப் போகிறது என்பதற்காக, `பி'யுடன் கூட்டணி சேர முடியாது" என்கிறார். பேசாமல் 'C'யுடன் கூட்டணி சேர்ந்திருக்கலாம். நான் சொல்லுவது C-Captain! இது மட்டும் இல்லை "திமுகவுடன் கூட்டணி வலுவாகவே உள்ளதாகவும், ஒரு தந்தையாக அவருடைய மன வேதனையைப் புரிந்து கொள்வதாகவும், தவிர கனிமொழி விவகாரம் சிபிஐ வசம் இருப்பதால் மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது என்றும் தெரிவித்துள்ளார். சிபிஐ வசம் கேஸ் இருந்தபோதுதான் குவாத்ரோக்கி தப்பினார் என பிற்காலத்தில் முக சொல்வார் என எதிர்பார்க்கலாம். கூடா நட்பு அதிகாரத்தை இப்போது தான் ஆரம்பித்திருக்கிறார்.
ஜெயலலிதா தனது வறட்டுப் பிடிவாதத்தை சற்றே தளர்த்தி, புதிய சட்டசபைக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் முழுக்க முடிந்ததும், அங்கிருந்தே அரசை நடத்தலாம். எது எப்படியாகினும் அது மக்களுடைய பணம். தனியே முறைகேடுகள் பற்றிய நியாயமான விசாரணையையும் முடுக்கிவிட்டு தண்டனையும் பெற்றுத் தந்தால், இருபுறமும் லாபம்தான். இதில் என்ன கொடுமை என்றால் முறைகேடுகள் பற்றி அலசப்படும் என்று சொன்ன பர்னாலா பெயர் புதிய சட்டமன்ற கட்டிட வளாகத்தில் திறந்தாவர்கள் பெயர்களில் இடம் பெற்றிருக்கிறது.ஒவ்வொரு கட்சியிலும் ஒரு வெற்றி கொண்டான் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுபோலத்தான் காங்கிரஸிற்கு திக்விஜய சிங். தினமும் மீடியாவில் முகம் வர வேண்டுமென்பதற்காக கண்டமேனிக்கு உளறிக் கொண்டிருக்கிறார். இவரது சமீபத்திய உளறல் சஹிக்க இயலாத ரகம். பாபா ராம்தேவ் விவகாரத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கையைக் கண்டித்து, ராஜ்காட்டில் பாஜக மேற்கொண்ட அடையாள உண்ணாவிரதத்தில், தேசபக்திப் பாடலொன்றுக்கு நடனமாடிய சுஷ்மா ஸ்வராஜை, டான்ஸர் என்றும், பாஜக ஒரு டான்ஸர்களின் கட்சி என்றும் விமர்சித்துள்ளார். சுஷ்மாவிற்கு இதுவாவது தெரிந்திருக்கிறதே என்று பிஜேபி சந்தோஷப்பட வேண்டும். திமுகவுடனான சகவாச தோஷமோ என்னவோ இவர்களை இப்படியெல்லாம் பேசத் தூண்டுகிறது. இனி திக்விஜய சிங் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்க வேண்டும். ஏனெனில் அவருக்கு நிகராக அவருக்கு பதிலளிக்கக் கூடிய உமா பாரதி பாஜகவிற்கு மறு பிரவேசம் செய்துள்ளார். இனி உத்திரப் பிரதேசத்தில் பாஜகவின் வளர்ச்சியில் கவனிக்கப் போகிறாராம் இவர். இவரின் வருகையால் திக்விஜய்க்கு பிரச்சனையோ இல்லையோ, பாஜகவிற்குப் பிரச்சனை நிச்சயம்.
இன்று சட்டசபை கூட்டம் நடந்துக்கொண்டு இருக்கும் போது திடீர் என்று எல்லா திமுக உருப்பினர்களும் வெளிநடப்பு செய்தார்களாம் ஏன் என்று கேட்டால் கனிமொழியின் ஜாமீன் மனுவை இன்று டெல்லி உயர்நீதி மன்றம் நிராகரித்துள்ளதைக் கேள்விப்பட்ட கலைஞருக்கு ஆறுதல் கூற என்று சொல்லுகிறார்கள்.
சிபிஐயிடன் மாட்டிக்கொண்ட பிறகு தாங்கள் லஞ்சமாக வாங்கிய 200 கோடி கடனை உடனே திருப்பி தந்தார்கள் என்பது பழைய நியூஸ் ஆனால் திருப்பி தர உங்களிடம் எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது என்று சிபிஐ நோண்ட ஆரம்பித்துள்ளார்கள் என்று சொல்லுகிறார்கள். அடுத்த குற்றப்பத்திரிக்கையில் திஹார் ஜெயிலில் எவ்வளவு பரப்பளவு அதிகமாக போகிறதோ யார் கண்டது.
கருணாநிதி கொஞ்சம் மூடவுட்டாக இருந்தால் உடனே அழகிரி வடிவேலுவிற்கு போன் போட்டு கலைஞரிடம் பேச சொல்லுகிறாராம். வடிவேலுவிற்கு பட சான்ஸ் கம்மியானாலும், ஏதோ வேலை இருக்கிறது.
கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கையோட எனக்கு நேற்று பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கோடான கோடி நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்.
Posted by IdlyVadai at 6/08/2011 06:40:00 PM 20 comments
Labels: செய்திவிமர்சனம்
Tuesday, June 07, 2011
மன்மோகன் சிங் ஜோக்
டாவடிக்கும் போது பெண்களிடம் கொடுக்கும் வாக்குறிதிகள் போல தான் தேர்தல் வாக்குறுதிகளும். தேர்தல் முடிந்த பிறகு எல்லாம் காற்றில் பறந்துவிடும். UPA2, நாங்கள் வெற்றி பெற்றால், அயலக வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என முதலில் பாஜக (அத்வானி) தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. ஆயினும் காங்கிரஸ் இது பற்றிக் கண்டு கொள்ளாததால், மற்ற கட்சிகளின் விமர்சனத்திற்குள்ளானது. பிறகு வேறு வழியில்லாமல், காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற 100 தினங்களுக்குள் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என சூளுரைத்தது. அவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கணக்கில் வராத பணத்தின் மதிப்பு சுமார் இருபத்தி மூன்று லட்சம் கோடி ரூபாய்கள் என தோராயமாக மதிப்பிடப் படுகிறது.
தேர்தலும் முடிந்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாண்டுகளாகிறது. எவ்வளளவு தான் சண்டை இருந்தாலும், பாலு சோனியா, மன்கோகன் சிங் பக்கத்தில் சிரித்துக்கொண்டு போட்டோவிற்கு போஸ் கூட கொடுத்துவிட்டார், ஆனால் இன்னமும் கறுப்புப் பணத்தை மீட்பதற்குண்டான நடவடிக்கைகளை மன்மோகன் சிங் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. இதனைப் பற்றிய கேள்வியெழும்போதெல்லாம் இது நினைத்தவுடன் சாதிக்கக் கூடிய விஷயமல்ல என அரசு சால்ஜாப்பு சொல்கிறது. தேர்தல் அறிக்கையில் 100 நாட்களுக்குள் என்று குறிப்பிடும்போது இது தெரியவில்லை போலும். முதலில் நினைத்தால்தானே சாதிப்பதற்கு? ஹஸன் அலி விவகாரமே இதற்கு சான்று. பூ்னாவைச் சேர்ந்த குதிரை வியாபாரியான இவர் சுமார் நாற்பதாயிரம் கோடிக்கும் மேலான கறுப்புப் பணத்தை அயல்நாட்டில் பதுக்கி வைத்திருப்பதற்குண்டான ஆதாரம், மூன்றாண்டுகளுக்கு முன்னரே சிபிஐ வசம் கிடைத்த பின்னரும் கூட, மத்திய சர்க்கார் மெளனியாக இருந்ததிலிருந்தே இது வெளிச்சம். கனிமொழி ஜெயிலுக்கு போனதற்கு, ஏன் எங்க ஆள் கல்மாடியும் போயுள்ளார் பாருங்கள் என்று பெருமை வேற இவர்களுக்கு.
இந்த பகாசுர சர்க்காரின் ஊழல்கள் ஒவ்வொன்றும், ஒன்றையொன்று தூக்கி சாப்பிடும் அளவிற்கு பெரிதாக கிளம்பி வந்து கொண்டே இருக்கும் சூழலில், அன்னா ஹஸாரே என்பவர் ஊழலுக்கெதிரான இயக்கம் ஒன்றைத் துவங்கி, உண்ணா நோன்பிருந்தார். நாடெங்கிலும் இவருக்குக் கிடைத்த ஆதரவு, எதற்கும் அசையாத காங்கிரஸையே அசைத்து விட்டது. ஆனால் இப்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் ஹஸாரேவையே சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறது. தியாகத் திருவிளக்கு, அன்னை, ரே பரேலித் தாய் சோனியாவிடமிருந்து நற்சான்று பெற்ற இவர், குஜராத்தை ஊழல் மலிந்த மாநிலம் என்று வர்ணிக்கிறார். இதற்கு ஒருவாரம் முன்பாக, ஊழலற்ற மிகச் சிறந்த நிர்வாகி என மோதியைப் பாராட்டினார் என்பது இவ்விடம் குறிப்பிடத்தக்கது
இந்த வார துக்ளக் பத்திரிக்கையில் வந்த எச்சரிக்கை பகுதியிலிருந்து கீழே
அனைவரும் – காங்கிரஸ் உட்பட – குஜராத்தில் ஊழல் பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கிறார்கள். நேர்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும் குஜராத்தும், மோடியும் உதாரணமாகத் திகழ்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில், குஜராத்தில் எங்கு பார்த்தாலும், ஊழல் மலிந்திருப்பதாக அன்னா ஹஸாரே கூறியிருக்கிறார். அங்கு சமீபத்தில் தாம் சிலரிடம் பேசியதாகவும், அதிலிருந்து இது புரிந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மதச்சார்பின்மைவாதிகளின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, ஏற்கெனவே இவர் மோடி விஷயத்தில் தடுமாறினார். மோடியைப் பாராட்டி விட்டு, பின்னர் ஒரு பல்டி அடித்து, அந்தப் பாராட்டை வாபஸ் பெற்று, மதச்சார்பின்மைவாதிகளின் ஆதரவைப் பெற முயன்றார். அப்படியும் மதச்சார்பின்மைவாதிகள் திருப்தி அடையவில்லை. ஆகையால், தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துவிட்ட அன்னா ஹஸாரே, குஜராத்தைப் பற்றி உளறியிருக்கிறார்.
இவரைப் பற்றி நாம் ஏற்கெனவே கூறிய கருத்துக்கள் கடுமையானவை என்று சில வாசகர்கள் கூறினார்கள். கடுமை கூடியிருக்க வேண்டும் – என்று நாம் கருதுகிறோம். சோனியா காந்தியிடமிருந்து ஊழல் எதிர்ப்பு சர்ட்டிஃபிகேட் பெற்று மகிழ்ந்த மனிதரிடம் இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. அன்னா ஹஸாரே, கைதட்டலுக்கு ஏங்குகிற மனிதர்.
மரியாதைக்குரியவர் என்று பலராலும் கருதப்படுகிற அன்னா ஹஸாரே, பரிதாபத்திற்குரியவராகவே நமக்குத் தெரிகிறார்.
- துக்ளக்
இந்நிலையில் யோகாசன குரு பாபா ராம்தேவ் என்பவர், கறுப்புப் பண விவாககரத்தைக் கையிலெடுத்து, அரசு அதனை மீட்பதற்குண்டான நடவடிக்கைகளைத் துவங்கும் வரை சத்யாக்ரஹப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். இன்று நேற்றாக அல்லாமல், சுமார் இரண்டு மாதகாலமாக இதனைக் கூறி வந்த இவர் நேற்றைய முன்தினம் முதல் அதனைத் துவக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதற்காக தில்லியின் ராம்லீலா மைதானத்தையும் தேர்வு செய்திருந்தார்.
அன்னா ஹஸாரேவின் உண்ணா நோன்பால் ஆட்டம் கண்டிருந்த காங்கிரஸ், ராம்தேவின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்து, அவரை உண்ணா நோன்பிருப்பதிலிருந்து தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. காங்கிரசின் கபில் "ஜீரோ லாஸ்" சிபல் தலைமையில் ஒரு குழு ராம்தேவுடன் மூன்று கட்டங்களாகப் பேச்சு வார்த்தை நடத்தித் தோல்வி கண்டது. இறுதியில் ராம்தேவ் தாம் முன்னர் அறிவித்தபடி, ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணா நோன்பைத் துவக்கினார்.
அன்றிரவு சுமார் ஐயாயிரம் ஆயுதம் தாங்கிய காவாலர்படை மைதானத்தில் திடீர் ப்ரவேசம் செய்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் பொதுமக்களைக் கலைந்து போகச் செய்தனர். இதில் 76 பேர் படுகாயமடைந்து, இருவர் உயிருக்குப் போராடுகின்றனர். ஆயுதமில்லாத அப்பாவிப் பொதுமக்கள் மீது எதற்காக இவ்வளவு கொடூரமான தாக்குதல் என்பது தெரியவில்லை. காங்கிரசின் அறிவுஜீவிகளில் ஒருவரான மனீஷ் திவாரி குறிப்பிடுகையில், அத்தினத்தில் ராம்லீலா மைதானத்தில், பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று நிலவிய ஒரு சூழல் நிலவியதாக தெரிவித்தார். இன்னமும் வேடிக்கையாக, 1998 இல் பாஜக அரசாங்கம் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லையா என்று கேட்கிறார். இதை விட கேனத்தனமாக ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளர் உளறவே முடியாது.
பாபா ராம்தேவையும் குண்டுக் கட்டாகக் கைது செய்து, ஹரித்வாரில் கொண்டு சேர்த்து விட்டனர். தில்லி காவல்துறையின் இச்செய்கை பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உச்சநீதிமன்றம் தானாகவே இதனை ஒரு வழக்காகப் பதிவு செய்து அரசிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசும் சளைக்காமல் தினம் ஒரு காரணமாகக் கூறிக் கொண்டிருக்கிறது.
முதலில் யோகாசன செய்முறைக்காக அனுமதி வாங்கிவிட்டு, உண்ணா நோன்பு துவங்கியதால் அவ்விடத்தைக் காலி செய்தோம் என்றது அரசு. இவர் ராம்லீலாவில் உண்ணா நோன்பிருக்கப் போவதாக ஒருவாரமாகக் கதறிக் கொண்டிருக்கிறார்; தவிர அரசும் மூன்று கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தியது; அப்பொழுதெல்லாம் இதற்கு அனுமதியளித்த தில்லி காவல்துறைக்கு இது தெரியவில்லையா என்று எழுப்பப்படும் கேள்விக்கு இதுவரை பதிலில்லை. அடுத்ததாக ராம்தேவ் உயிருக்கு அச்சுறுத்தல் என்பதால் அவரை அப்புறப்படுத்தினோம் என்றனர்; ராம்லீலா மைதானத்தின் கொள்ளளவை விட அதிக மக்கள் கூடியதால் அப்புறப்படுத்தினோம் என புதுப் புதுக் காரணங்களாக சொல்கின்றது அரசு. கலைஞர் மஞ்சள் துண்டிற்குக் கூட இவ்வளவு காரணங்கள் சொன்னதில்லை.காங்கிரஸ் ஊழல் ஒழிக்கும் லட்சணத்தின் அடுத்த உதாரணம், தயாநிதி மாறன் விவகாரம். 323 முறைகேடான தொலைபேசி இணைப்புகள் மூலம் சுமார் 440 கோடி ரூபாய் அரசிற்கு இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார். இதுபற்றி நான்காண்டுகளுக்கு முன்னரே சிபிஐ விசாரித்து, விசாரணை அறிக்கையை தலையணைக்கடியில் போட்டு குறட்டை விட்டிருக்கிறது. காரணம் கூட்டணி தர்மம். இப்போது சட்டசபைத் தேர்தலில் திமுகவின் படுதோல்வியால் ஏற்பட்ட கசப்பில் இப்போது இதெல்லாம் ஒவ்வொன்றாக வெளி வருகிறது. இன்னும் என்னென்ன கிளம்புமோ?
தயாநிதி மாறனுக்கு எதிராக சிவசங்கரன் அளித்துள்ள வாக்குமூலம் முக்கிய சாட்சியமாக மாறுகிறது. இதை வைத்து ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தரப்பட்ட விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய சிபிஐ தயாராகி விட்டது. பிரதமரின் அனுமதிக்காக தற்போது சிபிஐ காத்துள்ளதாக தெரிகிறது. திஹார் ஜெயிலை Extend பண்ணலாமா என்று மத்திய அரசு யோசித்துக்கொண்டு இருக்கிறது.
இம்மாதிரியான அரசாங்கமும், அதனைச் சேர்ந்தவர்களும்தான் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டிருக்கிறார்களாம். சோட்டா ஷகீலும், சோட்டா ராஜனும் சேர்ந்து பம்பாயில் தாதாயிஸத்தை ஒழிப்போம் என கூட்டுப் பிரகடனம் செய்தால் எப்படியிருக்குமோ அதை விட வேடிக்கையாய் இருக்கிறது காங்கிரஸின் ஊழல் ஒழிப்புப் பிரகடனம். இவர்கள் ஊழலை ஒழிக்கப்போவதில்லை, ஊழலை ஒழிக்க வேண்டுமென்பவர்களை ஒழிப்பதில் முனைந்திருக்கிறார்கள்.
பிரதமர் இவ்விவகாரம் குறித்து தெரிவிக்கையில், துரதிருஷ்டவசமானது, அதே சமயம் போலீசாருக்கும் வேறு வழியில்லை என்று அசடு வழிந்திருக்கிறார். இதற்கு வழக்கம்போல், எனக்கு எதுவும் தெரியாது என்றேனும் சொல்லியிருக்கலாம். பிரதமர் மன்மோகன் சிங்கை பார்த்தால் பாவமாக இருக்கிறது.
காமெடி பீஸ்:
மத்திய அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகளை வெளியிட்டார் பிரதமர் மன்மோகன் சிங். மத்திய அமைச்சர்கள் தங்கள் சொத்துக்கணக்குகள் மற்றும் குடும்ப வருவாய் விவரங்களை வெளியிட வேண்டும். அரசு சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனத்துடன் தொடர்பை கைவிடவும் அறியுருத்தபட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் வர்த்தக தொடர்புகள் பற்றிய விவரங்களை வெளியிடவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்
மன்மோகன் சிங் என்றாலே ஜோக் என்று ஆகிவிட்டது.
Posted by IdlyVadai at 6/07/2011 07:15:00 PM 15 comments
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Monday, June 06, 2011
நண்பர்களுக்கு வணக்கம்!
நண்பர்களுக்கு வணக்கம்,
சில வாரங்களாக இட்லிவடை சரியாக இயங்கவில்லை என்று பலர் பின்னூட்டங்களிலும், மெயிலிலும், தொலைப்பேசியிலும் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மற்றவர்களை போல எனக்கு கொஞ்சம் வேலை அதிகமாகிவிட்டது அடிக்கடி டெல்லி போக வேண்டிய வேலை, மற்றும் ஆபீஸில் பிளாகரை நிறுத்திவிட்டார்கள்.
பதிவு போட வேற என்ன வழி என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். பத்து நிமிஷத்துக்கு ஒரு பதிவு பார்த்த வாசகர்கள் தினம் தினம் வந்து பதிவு கிடைக்காமல் திகார் சிறையில் வைத்த மலர் போல வாடியுள்ளதை நினத்து நானும் வாடியுள்ளேன். ஆனால் எதையும் சந்திக்கும் சக்தி இட்லிவடைக்கு உண்டு என்று உங்களுக்கு ஆறுதல் கூறூம் நிலையில் நான் உள்ளேன். இன்னும் இரண்டு நாள் பாருங்கள் பதிவு வரவில்லை என்றால் இல்லை என்றால் பேசாமல் நீங்களும் உண்ணா விரதம் இருக்கலாம்.
உங்களுக்கு எல்லாம் இந்த நாளில் நான் விடுக்கும் செய்தி "கூடாநட்பு கேடு தரும்" என்பது தான். இதே பஞ்ச டையலாக்கை இளங்கோவன் "சகவாச தோஷம்" முன்பே சொல்லிவிட்டாராம். இவர்களுக்கு எல்லாம் முன்பே தலைவர் ஜக்குபாயில்
"ஆண்டவா நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார் என்பது எவ்வளவு பேருக்கு நினைவு இருக்கும் ?
இப்படிக்கு,
சும்மா பதிவு போடும்,
இட்லிவடை
Posted by IdlyVadai at 6/06/2011 06:11:00 PM 28 comments
Labels: அறிவிப்பு