பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 25, 2011

பாசக்கிளிகள்

தினமும் கோபாலபுரத்திலிரிந்து சில கிளிகள் கனிமொழியை பார்க்க டெல்லி செல்லுகிறது. இன்று ஸ்டாலினும் அவர் குடும்பமும். நாளை யார் என்று தெரியாது.

வழக்கமாக டெல்லிக்கு கடிதம் எழுதும் கலைஞர் இந்த முறை சிறையில் இருக்கும் தன் மகள் கனிமொழியை சந்திப்பதற்காக வந்தார். தேர்தல் காலத்தில் இவருக்கு சான்றிதழ் கொடுத்த சிதம்பரம் இவரை சந்தித்துள்ளார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசியுள்ளார். இது பெரிய விஷயம் இல்லை ஆனால் கலைஞரை சந்தித்துவிட்டு வந்த குலாம் என்ன சொல்லியிருக்கிறார் என்பது தான் வேடிக்கை

"....ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்பது சுப்ரீம் கோர்ட்டால் கண்காணிக்கப்படுகிறது. மத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது. எங்கள் கட்சியைச் சேர்ந்த கல்மாடியே கூட தற்போது சிறையில் தான் உள்ளார். அவரையும் கூட எங்களால் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. கனிமொழி கைது சம்பவத்தில், கருணாநிதியை போலவே காங்கிரசும், அதன் தலைமையும் வருத்தத்தில் உள்ளது.தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரே ஒருமுறை தொலைபேசி மூலம் கருணாநிதியுடன் பேசினேன். அதன் பிறகு தொடர்பு கொள்ள இயலவில்லை. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை. கனிமொழி சிறையில் இருப்பதில், தலைவர் சோனியாவும் கவலைப்பட்டார். தன் வருத்தத்தை தெரிவித்தார். சட்டரீதியான விஷயத்தில் அரசு தலையிடாது என்பதை தெரிவித்தேன்"


இவர்களை நாம் தலைவர்கள் என்று சொல்லுகிறோம். அதாவது சுப்ரீம் கோர்ட் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பதனால்தான் தங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை இல்லை என்றால் நாங்கள் 'வேண்டியதை' செய்திருப்போம் என்று மீடியாவிற்கு குலாம் நபி ஆசாத் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். பேசாம தமிழ்நாட்டில் யாருக்காவது பிரச்சனை என்றால் தமிழ் கவிதை எழுத ஆரம்பிக்கலாம் ஜெயிலில் இருப்பவரும் கவிஞர், அவரை போய் பார்த்தவரும் கவிஞர். ஆக கவிஞராக இருந்தால் பிரச்சனை வராது போல.

துண்டை காணோம் துணிய காணோம் என்போம் இப்போது மஞ்சள் துண்டை காணோம்.

33 Comments:

Unknown said...

தினசரி சந்திப்பு திஹாரில் சாத்தியமில்லை
திஹாரில் பார்வையாளர் சந்திப்பிற்கான நடைமுறைகளை எனது வலையில் சொல்லியிருக்கிறேன்

http://mowlee.blogspot.com/2011/05/blog-post_25.html

Madhavan Srinivasagopalan said...

நீங்க இன்னுமா மஞ்சள் பேக்-ரவுண்டுல கமெண்டு அடிக்கறீங்க..
வெள்ளைக்கு மாறலியா ?

SUBBU said...

solrathukku onnumilla.

Kayal said...

போட்ட சாயம் வெளுத்து போச்சு போல.....மஞ்சள் இப்போ வெள்ளை ஆகிருக்கு...இன்னும் கொஞ்ச நாளில் அது என்ன கலரா மாறுமோ....பார்போம்

சத்தியமூர்த்தி said...

இவரை ஆண்டி(யுடன்) கரப்ஷன் விதிகளில் உள்ளே தள்ள முடியுமா?

அட ஆமாம், இப்பொழுதுதான் பார்த்தேன். ஒருவேளை குரு பெயர்ச்சி ஆகியதாலா?

Anonymous said...

Atleast now after the arrest Aravindan's name is coming out as Kanimozhi's husband. He is being shown in the TV also. The bail application of Kanimozhi pleads that since her husband is employed in a foreign country she has to take care of her young son. If that be so how she was attending all Parliament Sessions held at Delhi. How she was carrying out propaganda for DMK throughout Tamil Nadu that too during exam time. If she has to be shown mercy for being a lady did her father show mercy to Jayalalitha at any point of time. He was thoroughly indecent in his remarks. The way Jayalalitha was treated in the Tamil Nadu Assembly is history. People realise only when it affects them. Thanakku Vandhal Than Theriyum Thalai Valium, Kaichalum. Where are our friends from PMK and VC. Why they are keeping a studied silence over the arrest?

Atleast now Kanimozhi should change her name back to Kanimozhi Aravindan and not Kanimozhi Karunanidhi as given in her Election Records. Enough fooling has been done already. Her father is an alleged worshiper of Tamil culture. In Tamil culture after marriage no woman carries her father's name. Let not Kanimozhi set a bad example for political advantage.

It is sad that she is paying for all the misdeeds of her father.

Anonymous said...

ukkandhu yosippengaloo? :D:D:D

ramachandranusha(உஷா) said...

அடபாவிகளா :-) மஞ்ச கமெண்டு போடவே கம்பேனில ஆளுங்க அபாயிண்ட் பண்ணியிருக்கீங்களா ;-))

middleclassmadhavi said...

லக்கி நம்பர் மாறும்போது லக்கி கலர் மாறக் கூடாதா? என்ன, பகுத்தறிவுப் பாசறையில் ஒத்துக்க மாட்டாங்க, வெயிலுக்கு வெள்ளை ஏற்றதுன்னு சொன்னாப் போச்சு!

Anonymous said...

கலைஞரின் வெள்ளை துண்டு ரகசியம் http://www.astrosuper.com/2011/05/blog-post_24.html

Jayadev Das said...

சட்டம் தன் கடமையைச் செய்கிறது. ஒரு அக்கியூசுடுவை சட்டப் படி விசாரிப்பது நீதித் துறையின் கடமை, குற்றம் செய்தவர் தக்க தண்டனை பெற வேண்டும். இங்கு கனிமொழி இன்னும் விசாரணைக் கைதியாகத்தான் இருக்கிறாரே ஒழிய தண்டனை எதுவும் பெறவில்லை. அதற்குள்ளாகவே இவர்கள் எதற்கு வருந்துகிறார்கள் என்று புரியவில்லை. அப்படியே தண்டனை பெற்றாலும் கூட, செய்த தவறுக்காகத்தானே தண்டனை தருவார்கள்? அதற்க்கு ஏன் ஒருத்தர் வருத்தப் பட வேண்டும்? குற்றம் புரிந்து விட்டாரே, ஒழுங்காக இருந்திருக்கலாமே என்று வருத்தப் பட்டால் அது நியாயம். தப்பு செய்தும், அதை மறைத்து குறுக்கு வழியில் வெளிக் கொண்டு வர முடியவில்லையே என்று வருந்துவது, ஸ்பெக்ட்ரம் ஊழலைப் போலவே இன்னொரு அயோக்கியத் தனம்.

vijai said...

Why dont u write about changing of assembly and stay on equalized education

Kannan said...

//லக்கி நம்பர் மாறும்போது லக்கி கலர் மாறக் கூடாதா? //

நீங்கள் ஏதோ லக்கிலுக் யுவகிருஷ்ணாவை விமர்சிப்பது போல் இருக்கிறது. அவர் இன்னும் அதே பெயரில், அடக்கமாக, தேர்தல் முடிவு பற்றி எந்த முடிவுக்கும் வராமல் இருக்கிறார் என்பதை இங்கே தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

Guru Prasath said...

It symbolizes they are (almost) whitewashed in the election. :)

Anonymous said...

அந்த பழைய மஞ்சள் துண்டை எல்லாம் ஏழை மக்களுக்கு இலவசமா குடுத்துட்டு, அதை பத்தி முரசொலியில் ஒரு தலையங்கம் எழுதலாமே...

natarajan said...

karunaanithiya kaali pandrathey tamilanukku velaya pochi
vaithee.co.cc

Anonymous said...

ஒரு விஷயம், கலைஞர் டி வி க்குக் கடன் கொடுத்தாங்க. போகட்டும்,இந்த டூப்பை ஏத்துக்கிறேன்... நாலு டெலிகாம் கம்பெனி 50,25,50,25 லட்சம் ‘நன்கொடை’யை லைசென்ஸ் கிடைச்ச சில நாட்களில் தமிழ் மைய்யத்திற்குக் கொடுத்ததாங்களே,அது அவங்களே தமிழ்க் கலைகள் வளர்வதற்கு கொடுத்தாங்களா?..-கபாலி

ConverZ stupidity said...

//லக்கி நம்பர் மாறும்போது லக்கி கலர் மாறக் கூடாதா?//

ஆத்திரபடமாட்டேன்னு சொல்றவர என் வம்பு இழுக்குறீங்க ;) அவர் எதோ தேர்தல் முடிவுகள பார்த்துட்டு திம்மி,மம்மி, ஸ்ரீ ராமருக்கே ஜெயம்னு எழுதிக்கிட்டுருகாரு

photo said...

In Tamil culture after marriage no woman carries her father's name.

பைத்தியக்காரதனம். தமிழ் கலாச்சாரத்தில் எந்த பெண் கணவனின் பெயரை பின்புறம் ஒட்டிக்கொண்டிருக்கி

றாள்.கண்ணகி,ஔவையார்,..... அது முழுக்க வெள்ளைக்காரனின் பழக்கம்!

Roaming Raman said...

"ஜெயிலில் இருப்பவரும் கவிஞர், அவரை போய் பார்த்தவரும் கவிஞர்"--

அல்ல அல்ல.... சரியாக எழுதுங்கள்..

"கவிஞர் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டப் படுபவர்" என்றிருக்க வேண்டும்!

அல்லது தனக்குத் தானே பறை சாற்றிக்கொள்பவர் என்றாவது இருக்க வேண்டும்...
--ரோமிங் ராமன்

Anonymous said...

ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்...முத்தமிழையும் விற்றவருக்கு இந்த சாதாரண வரிகளின் உள்ளார்ந்த அர்த்தம் புரியாமல் போனது காலத்தின் கட்டாயம். இது தொடக்கமே.

இ வ ரசிகன்

Anonymous said...

ஆமாம், ராடியா அக்கா வந்து பாத்தாங்களா? தயாநிதி? -குணா

Anonymous said...

karnunadhi alleges himself as the protector of tamil and tamil culture and so is her daughter kanimozhi.
But kanimozhi's son name is Aditya, a sanskrit word;

They talk about tamil and tamil culture:

Karunanidhi officialy thrice married. unofficialy god only knows:

kanimozhi also belong to same category;

what happened to tamil saying " ORUVANAKKU ORUTHI"

Moral : preachings are for innocent public and not for his family.

Anonymous said...

கனிமொழியைப் பார்க்க ஜகத் கஸ்பர் ஏன் இன்னும் போவலை?...அது வந்து இன்னும் திகார் சிறையில் ரூம் ரெடியாகலையாம்...-மணா

Anonymous said...

கனி மொழி தன் பையனை பார்த்துக்கொள்ள யாரும் இல்லை என்ற காரணத்தில் ஜாமீன் கிடைத்து வெளியில் வந்து விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் எல்லா உறவுகளும் திகருக்கு படை எடுக்கின்றார்கள்

R.Gopi said...

//Madhavan Srinivasagopalan said...

நீங்க இன்னுமா மஞ்சள் பேக்-ரவுண்டுல கமெண்டு அடிக்கறீங்க..
வெள்ளைக்கு மாறலியா ?//

Instead of White, IV can now change the background colour to GREEN...

Anonymous said...

This statement of Gulam Nabi Azad shows the true color of congress. He means to say that if Union Govt is dealing Kani will be let free and feels sorry that he and his italian boss is unable to save Kalmadi. Congress is equally and (or more) corrupt than DMK.

But, sad thing is nowadays Mr Cho Ramaswamy is trying to bridge alliance between Congress & ADMK. This is stupid. ADMK fought this election mainly against corruption (2G). If they now join hands with Congress, its like fooling people who voted for ADMK. Dont know what happened to Cho.

If suppose Congress allies with ADMK, whom will Cho support. We know that he supports BJP and ADMK. Will Cho again wish Congress to come back to power in 2014? Thuglak has written many misdeeds of congress, Sonia and MMS. Will Cho & Thuglak support Congress in 2014?

Better option would be to have alliance between and ADMK & BJP so that we get good governance at center with BJP forming govt in 2014. Hope Cho will try to help in formation of BJP-ADMK tie up instead of Congress-ADMK

From
Anand (Regular Thuglak vaasagan)

Shankar Easwaran said...

Manadhil parppaneeyathai simmaasanam pottu amara vaithu kondu nadunilayalargal endru vedam podum Cho Ramasamy, Dinamalar, matrum ungalai pondravargalal pathirikai dharmam vetkappadum.

Naan Jayalalitha aadharavalan endru velippadaiyaga arivithu vittu dharalamaga Ezhudhungal....Illaiyel Karunanidhi pondra paarppanaralladhavarukku edhirppalan endru solli vittu ezhudhungal.....Ungal vayitrerichal ungal ezhuthil therigiradhu.....

Karunanidhi uthamar endru naan sollavillai...naan avar aadharavalanum all....thavaru seidhavargal dhandanai anubavithe aagavendum enbadhil naan urudhiyaga irukkiren...aanal ungalai (Cho Ramasamy, Dinamalar, neengal) pondravargalukku Karunanidhiyai pidikkamal ponadharkku kaaranam Oozhal mattum alla...avar paarppanar alla enbadhu dhaan....

Ullondru vaithu puramondru pesum ungalai pondravargal eppodhu thirundhuveergal?

Anonymous said...

idly waste daily paste updates varamatenkuthu . kk rest but ungalalukama

Anonymous said...

i am daily visit 10 times but no updates there,just weekly few only come , saraku kidaikalan engavathu nala post iruntha copy paste vathu pannuga

Unknown said...

@photo
ennadhu avvaiyaarukku kalyanam aagiduchaa?

Kannan.S said...

//துண்டை காணோம் துணிய காணோம் என்போம் இப்போது மஞ்சள் துண்டை காணோம்.//

அப்படியே.. இட்லி வடையவும் காணோம்..

Anonymous said...

no updates waste pls copy paste atleast