பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 30, 2011

புத்தக விற்பனை குறித்த சர்வே விளம்பரம்

இன்று ஒரு அன்பர் சாட்டில் வந்து இட்லிவடையில் ஒரு சர்வே போட முடியுமா என்று கேட்டார் ? தேர்தல் பற்றிய சர்வே போடுவதற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்திருக்கு என்று சொன்னேன். "சே சே இது புத்தமம் பற்றிய சர்வே என்றார்" பேஷா போடலாம் என்றேன். இதோ இந்த லிங் என்று ஒன்றை கொடுத்தார். அதில் புத்தக விற்பனை குறித்த சர்வே என்று கீழ்கண்டவாறு எழுதியிருந்தது..

ஜெயமோகன் புத்தகங்கள் விற்பனை தொடர்பாகவும் , பொதுவான வாசிப்பு தொடர்பாகவும் தகவல்களை திரட்ட நியூ ஹாரிசன் மீடியா (கிழக்கு பதிப்பகம் ) விரும்புகிறது , இந்த சர்வே ஜெயமோகன் புத்தகங்களை இன்னும் நிறைய வாசகர்களுக்கு கொண்டுசேர்க்க உதவியாக இருக்கும் .
எனவே வாசகர்கள் இந்த கணக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டுகிறோம் ,
முடிவில் உங்கள் முழுமுகவரியை தாருங்கள் , “ஜெயமோகன் எழுதிய வாழ்விலே ஒருமுறை” புத்தகத்தை இலவசமாக அனுப்பி வைக்கிறோம் .
அன்புடன் ,
நியூ ஹாரிசன் மீடியா "


ஒரு எழுத்தாளர் தான் எழுதிய புத்தகங்களில் உங்களுக்கு பிடித்தது எது சொல்லுங்க, அதை கூடுதலாக சில காப்பி போடுகிறோம் என்று சொல்லுவது தமிழ் கூறும் நல்லுலகில் முதல் முறை. சபாஷ்!.

பாலகுமாரன் பிடித்தாவர்களுக்கு ராஜேஷ்குமார் பிடிக்காமல் இருக்கலாம், இட்லிவடை பிடித்தவர்களுக்கு தேசை பிடிக்கமால் இருக்கலாம் இப்படி இருக்கும் இணைய வாசகர்களை இலக்கிய அந்தஸ்தில் வைத்து இது போல சர்வே நடத்தினால் என்ன நடக்கும்? ஜெயமோகன் போல பெரிய எழுத்தாளர்களுக்கே இந்த நிலமை என்றால் மற்ற எழுத்தாளர்களை பற்றி கேட்கவே வேண்டாம்!.

கிழக்கு பதிப்பக மார்கெட்டிங்க்கு இது வசதியான விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை, இந்த சர்வே அவர்கள் பக்கத்தில் வர வேண்டும், ஒரு எழுத்தாளர் நடத்தும் சொந்த பக்கத்தில் வந்தால் நன்றாகவா இருக்கிறது? இதென்னமோ குசேலனில் வடிவேலு வலுக்கட்டாயமாக ஆள் பிடிப்பது போல இருக்கு.

பதிப்பகத்துக்கு சில ஆலோசனைகள்:
இந்த வருடம் கச்சா முச்சா என்று புத்தகம் போடாமல், உங்கள் லிஸ்டில் இருக்கும் எல்லாம் புத்தகங்களும் ஒரு முறை பாருங்கள். பல புத்தகங்கள் எண்ணிக்கைக்கு உதவும் ஆனால் எவ்வளவு புத்தகங்களை மக்கள் அட்டைக்கு பிறகு திருப்பி பார்த்திருப்பார்கள் என்று யோசித்து பாருங்கள். மக்கள் புத்திசாலிகள் அவர்களுக்கு ரூ 50/= க்கு ஏதாவது நாவல் கொடுத்தால் சரி எப்பவாவது படித்து பார்க்கலாம் என்று வாங்கி வைத்துக்கொள்ளுவார்கள். அவ்வளவு தான்.நிறைய புத்தகங்கள் போட்டால், மக்கள் குப்பைகளை கிளறி வாங்கிக்கொள்ளுவார்கள்.

எழுத்தாளர்களுக்கு ஒரு ஆலோசனை:
கட்டு கட்டாக 10 புத்தகம், 15 புத்தகம் என்று ரிலீஸ் செய்யாதீர்கள். உங்கள் கற்பனை ஓட்டத்துக்கு ஏற்றவாறு எழுதுங்கள். ரிலீஸுக்காக எழுதாதீர்கள். வாசகர்கள் புத்திசாலிகள், அவர்கள் எதை படிக்க வேண்டும் எதை நிராகரிக்க வேண்டும் என்று தெரியும். ஆனானப்பட்ட ரஜினியே பாபா படம் எடுத்து ஓடவில்லை. பயப்படாதீர்கள், தைரியமாக எழுதுங்கள்.

ஓட்டு போட்டா டிவி, மிஷ்ஸி, கிரைண்டர், ஃபேன் கிடைக்கும், சர்வேயில் பங்கு கொண்டால் புத்தகம் இலவசம் கிடைக்கும்.முந்தினா உண்டு. இல்லேன்னா துண்டு.


பிகு: இந்த பதிவு யாரையும் தாக்கும் பதிவு கிடையாது.

Read More...

கலைஞரின் சினிமா அறிக்கை

( நேற்று ரஜினி டிஸ்சார்ஜ் ஆகும் முன் பார்த்துவிட்டு வந்த பின் கலைஞர் சினிமா பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிலிருந்து சில பகுதிகள் மட்டும்.)

படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு, அந்த இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம். தற்போது படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று அலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

நான் எழுதி வெளி வந்துள்ள "பொன்னர்-சங்கர்'' திரைப்படத்துக்கும் எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை அலையாய் அலைந்துதான் தியேட்டர்களை பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர் விட்ட நிகழ்ச்சி எல்லாம் எனக்குத் தெரியும். கடலூரில் ஒரு தியேட்டரில் "பொன்னர் சங்கர்'' திரைப்படம் திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக் கொண்டிருந்த போதே 2-ம் நாளே அந்த படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்ட செய்திகள் எல்லாம் சோலைக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் ஒரு மூதாட்டி "கருணாநிதியின் பேரன் பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி'' என்று கேட்டதாக சோலை எழுதி இருக்கிறார். பாவம்; அந்தப் பாட்டிக்கு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம்.முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், ஏ.வி.எம். சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும், சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, அவருடைய மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும்,

ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும் கமல், அவரது சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, மற்றும் சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் எல்லாம் இந்தத் துறையிலே ஈடுபட்டிருப்பதும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் அவரது பிள்ளைகள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவகுமார், அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருப்பதும் ரெட்டியார் சத்திரம் மூதாட்டிக்குத் தெரியாமல் போனதுதான் வேடிக்கை.

அது மாத்திரம் அல்ல, கடந்த காலத்தில் எத்தனை படத்தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதை முடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள், எத்தனை பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாக ஆகி தெருவிலே நின்றார்கள் என்பதை எல்லாம் என் நண்பர் கவிஞர் கண்ணதாசன் எழுதி புத்தகமாக வெளியிட்டார்.

தொடர்புடைய சில சுட்டிகள்
சுட்டி 1
சுட்டி 2
தலைமுறை தலைமுறையாய் நம் சமூகத்தில் இருக்கும் ஒரு பழக்கம் - சனி நீராடு!.

Read More...

Friday, April 29, 2011

மத்திய பட்ஜெட் - 1 - எஸ். குருமூர்த்தி

அநியாயமான ரூ.1 லட்சம் கோடி வரி விலக்கு! – எஸ். குருமூர்த்தி

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தன்னுடைய பட்ஜெட் உரையில், தான் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்த முயற்சி செய்யவில்லை – அதாவது வரி உயர்வும், வரி குறைப்பும் சமமாகி விட்டது – என்பதை குறிப்பாகச் சொல்லியிருக்கிறார். இந்த பட்ஜெட்டை படிப்பவர்கள், நிதியமைச்சர் எந்தவிதமான புது வரியையும் விதிக்கவில்லை என்று நினைப்பார்கள் என்பதைத்தான் அப்படி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அவர் அப்படி கூறியது பெரிய பெரிய கம்பெனிகளை நடத்துபவர்கள், பெரிய வியாபாரம் செய்பவர்களுக்குத்தான். அவர்களுக்கு ஒரு பெரிய விருந்து வைத்தது போல் ஆகும். அது என்ன விருந்து?

2008-ல் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில், அவசர அவசரமாக அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், பெரிய அளவில் பெரிய கம்பெனிகளுக்கும் வியாபாரிகளுக்கும், வரிவிலக்கு அறிவித்தார். அது அன்றைய தேவை.

அதன் காரணமாக, 2007-08-ல் ரூ.1.24 லட்சம் கோடியாக இருந்த எக்சைஸ் வருமானம், ஆண்டுக்காண்டு சாதாரணமாக உயருவதற்கு மாறாக, 2008-09-ல் ரூ.1.08 லட்சம் கோடியாகக் குறைந்தது. அதுபோலவே, சுங்க வரி 2007-08-ல் ரூ.1.04 லட்சம் கோடியாக இருந்தது. அதுவும் ஆண்டுக்காண்டு உயருவது போல் உயராமல், 2008-09-ல் ரூ.1.00 லட்சம் கோடியாகக் குறைந்தது. வரி வருமானம் என்பது, வரிகளை உயர்த்தாமலேயே, பொது உற்பத்தி (ஜி.டி.பி.) உயர்வதன் காரணமாகவும், விலைவாசி உயர்வதன் காரணமாகவும், தானே அதிகமாகும்.

உதாரணமாக, சென்ற ஆண்டு சோப் விலை ரூ.10 என்று வைத்துக் கொள்வோம். இந்த ஆண்டு அதன் விலை ரூ.12 என்று உயர்ந்தால், சோப்பின் மேல் 10 சதவிகிதம் வரி என்கிற அடிப்படையில், சென்ற ஆண்டு வரி ரூ.1, என்பது இந்த ஆண்டு, ரூ.1.20 என்று தானாகவே உயரும். அதுபோல சோப்பு உற்பத்தி 10 சதவிகிதம் உயர்ந்தால், வரி அதன் அடிப்படையில் மேலும் 10 சதவிகிதம் உயரும். ஆகவே, சோப்பின் மீது வரியை உயர்த்தாமலேயே, சோப்பின் மூலமாகக் கிடைக்கும் வரி 20 சதவிகிதம் உயரும். அப்படி எல்லா பொருள்களின் மூலம் கிடைக்கும் வரிகளும் உற்பத்தி உயர்வதன் மூல மாகவும், விலைவாசி உயர்வதன் காரணமாகவும், வரிகளை உயர்த்தாமலேயே உயரும். இந்த விதி, மறைமுக வரிகளான எக்சைஸ், மற்றும் சுங்க வரிகளுக்கு நிச்சயம் பொருந்தும். இந்த அடிப்படையில் 2008-09-ல் உயர வேண்டிய வரி வருமானம், மாறாகக் குறைந்தது. காரணம், வரிகளைக் குறைத்ததுதான்.

இப்படி 2008-09-ல் வரிகளைக் குறைத்ததால், 2008-09-ல் எக்சைஸ், சுங்க வரி வருமானம், மேலே கூறியபடி குறைந்தது. அடுத்த 2009-10-ஆம் ஆண்டிலும் எக்சைஸ் வருமானம் ரூ.1.04 லட்சம் கோடி என்றும்; சுங்க வரி ரூ.0.83 லட்சம் கோடி என்றும் குறைந்தே இருந்தன. அதாவது 2007-08-லிருந்து, 2009-10 வரை, எக்சைஸ் மற்றும் சுங்க வரி வருமானம் உயரவில்லை. மாறாக குறைந்தன. 2007-08-ல் இரண்டும் சேர்ந்து ரூ.2.28 லட்சம் கோடியாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2009-10-ல் அது ரூ.1.87 லட்சம் கோடி என்று குறைந்தே இருந்தது.

இந்த இரண்டு ஆண்டுகளில் நடப்பு விலைவாசியின் அடிப்படையில் 2007-08-ல் ரூ.48.86 லட்சம் கோடி என்றிருந்த நாட்டின் உற்பத்தி (ஜி.டி.பி.), 2009-10-ல் ரூ.65.50 லட்சம் கோடி என்று 34 சதவிகிதம் உயர்ந்தது. அப்படி விலைவாசியும், உற்பத்தியும் சேர்ந்து 34 சதவிகிதம் உயர்ந்தாலும், மறைமுக வரிகள், உயருவதற்கு மாறாக, 18 சதவிகிதம் குறைந்தது. நியாயமாகப் பார்த்தால், விலைவாசி உற்பத்தியின் அடிப்படையில் எக்சைஸ், சுங்க வரிகள் 2009-10-ல் ரூ.3.05 லட்சம் கோடியாக உயர்ந்திருக்க வேண்டும்.


இந்தக் கணக்குப்படி, வரி விலக்கின் மூலமாக பெரிய பெரிய கம்பெனிகளுக்கும், பெரிய வியாபாரிகளுக்கும் 2009-10-ல் ரூ.1.28 லட்சம் கோடி (ரூ.3.05 லட்சம் கோடி – ரூ.1.87 லட்சம் கோடி) வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரி விலக்குத் தொகை, அந்தப் பெரிய கம்பெனிகள் லாபம் பெறுவதற்காக கொடுக்கப்பட்டது அல்ல. இந்த வரி விலக்கு, அந்தக் கம்பெனிகளுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட நஷ்டஈடு. அப்படி ஏற்படும் நஷ்டத்தால் அவர்களின் வியாபாரம் குறையக் கூடாது. அதன் காரணமாக நாட்டின் உற்பத்திக் குறையக் கூடாது என்பதற்காகக் கொடுக்கப்பட்ட தொகை. ஆனால், நடந்தது என்ன? பெரிய பெரிய கம்பெனிகள் இந்தத் தொகையைக் கபளீகரம் செய்து பெரும் லாபம் ஈட்டின.

பட்ஜெட் ஆவணங்களில் கொடுக்கப்படாத நிதி விவரங்களே கிடையாது என்று பலமுறை துக்ளக்கில் எழுதியிருக்கிறேன். பட்ஜெட் ஆவணங்கள் மிகவும் நாணயமாகத் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், பட்ஜெட் உரை உண்மைகளை மறைத்து பொய்களைக் கலந்து தயாரிக்கப்படுகின்றது என்றும், இந்த பகுதியில் படித்திருப்போம். அப்படி விவரமாக இருக்கும் பட்ஜெட் ஆவணங்களில், கணக்கெடுக்கப்பட்ட கம்பெனிகள், எப்படி ஆண்டுக்காண்டு லாபம் சம்பாதிக்கின்றன, எவ்வளவு வருமான வரி கட்டுகின்றன என்பது பற்றிய விவரங்களை நாணயமான முறையில் சேகரித்து 2007-08-ஆம் ஆண்டு தவிர, மற்ற எல்லா ஆண்டுகளிலும் பட்ஜெட் ஆவணங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

அதன்படி கம்பெனிகளின் லாபம் 2008-09-ல் குறைந்தது உண்மை. ஆனால், 2009-10-ல் கம்பெனிகளின் லாபம் அதிரடியாக உயர்ந்தது. 2006-07-ல் கணக்கெடுக்கப்பட்ட கம்பெனிகளின் லாபம் ரூ.7.12 லட்சம் கோடியாக இருந்தது. 2008-09-ல் இது ரூ.6.68 லட்சம் கோடியாகக் குறைந்தது. ஆனால் 2009-10-ல் ரூ.8.24 லட்சம் கோடியாக உயர்ந்தது. இது பொருளாதார நெருக்கடிக்கும் முன்னால், கம்பெனிகள் ஈட்டிய லாபத்தை விட 16 சதவிகிதம் அதிகம். ஆகவே, கம்பெனிகள் நஷ்டப்படக் கூடாது என்பதற்காக கொடுக்கப்பட்ட வரிவிலக்கு 2009-10-ல் தொடர எந்த விதமான நியாயமும் இல்லை. அது 2009-10-ல் மட்டுமல்லாமல், நடப்பு ஆண்டிலும் (2010-11) – அதாவது தற்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் பட்ஜெட்டிலும், இந்த வரி விலக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டிருப்பதில் நியாயமே இல்லை. இந்த வரிவிலக்கை நடப்பு (2010-11) ஆண்டிலேயே விலக்கி இருக்க வேண்டும். கம்பெனிகளின் லாபம் 2007-08 - ஐ விட, 2009-10-ல் உயர்ந்திருக்கிறது என்று இப்போது தெரிந்தும் கூட, 2008-09-ல் அளிக்கப்பட்ட வரி விலக்கை, இந்த பட்ஜெட்டில் வாபஸ் பெறாதது அநியாயம் என்று கூடச் சொல்லலாம்.

அப்படி 2008-09-ல் கம்பெனிகள் உற்பத்தியைக் குறைக்கக் கூடாது, நஷ்டம் அடையக் கூடாது, அதனால் நாட்டின் உற்பத்தி குறையக் கூடாது என்பதற்காக அளிக்கப்பட்ட வரி விலக்கை, இந்த ஆண்டு பட்ஜெட்டில் நியாயமாக விலக்கி இருந்தால், எவ்வளவு வரி வருமானம் அடுத்த ஆண்டு கூடும் வாய்ப்பு இருக்கிறது தெரியுமா? ரூ.1 லட்சம் கோடி. இப்படி ரூ.1 லட்சம் கோடி வரியை அநியாயமாக தத்தம் செய்ய முடிவு செய்ததைத்தான் நிதியமைச்சர் நாசூக்காக, “நான் வரி வருமானத்தை அதிகரிக்க எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை” என்று கூறினார்.

அதன் அர்த்தத்தை பத்திரிகைகளும், டி.வி. சேனல்களும் புரிந்து கொள்ளவில்லை. பட்ஜெட்டை விமர்சனம் செய்த அறிவுஜீவிகளும் புரிந்து கொள்ளவில்லை. இதைப் புரிந்து கொண்டு தீபாவளி கொண்டாடியவர்கள் பெரிய பெரிய கம்பெனிகளும், அதை நடத்துபவர்களும்தான். அதனால்தான் பட்ஜெட் சமர்ப்பிக்கப் பட்டதிலிருந்து, பங்கு மார்க்கெட் ஆகாயத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும், அழகாக ஜோடிக்கப்பட்ட பட்ஜெட் உரையில், ‘ஆம் ஆத்மி’க்கு வழக்கம் போல நிதியமைச்சர் ‘சாக்லெட்’ கொடுத்திருப்பதால், பட்ஜெட் ஆவணங்களையே படிக்காமல், பட்ஜெட் உரையின் அடிப்படையில் மட்டுமே கருத்து தெரிவிக்கும் பத்திரிகைகளும், இந்த பட்ஜெட்டை ‘ஆம் ஆத்மி பட்ஜெட்’ என்று கொண்டாடின.

இந்த வரி விலக்கு தொடரும் என்று கம்பெனி வட்டாரங்களில் கூட சிலர் நினைக்கவில்லை. ஆனாலும், அது தொடர்ந்திருக்கிறது. இப்படி அநியாயமான வரி விலக்கு தொடர்ந்து வருவதால், நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஏற்பட்டிருக்கும், ஏற்படவிருக்கும் விளைவுகளைப் பற்றி விவரமாக மேலும் பார்க்கலாம்.

பெரிய தொழில்களுக்கும், கம்பெனிகளுக்கும் 2008-09-லிருந்து ஆண்டுக்காண்டு, பொருளாதார நெருக்கடியை காரணமாக வைத்து வரி விலக்கு அளித்ததால், இந்த பட்ஜெட்டில் அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரி வருமானம் எப்படி குறைந்திருக்கிறது என்று பார்த்தோம். அப்படி வரி விலக்கு என்கிற நன்கொடையைப் பெற்ற கம்பெனிகளின் லாபம் எப்படி ஆண்டுக்காண்டு உயர்ந்து வருகிறது என்றும் பார்த்தோம்.

2008-09-ல் ரூ.6.68 லட்சம் கோடி லாபம் சம்பாதித்த கம்பெனிகள், 2009-10-ல் ரூ.8.24 லட்சம் கோடி லாபம் சம்பாதித்தன என்பதையும் பார்த்தோம். இதன் அர்த்தம் என்ன? எவ்வளவு வரி விலக்கு அளிக்கப்பட்டதோ, அந்த அளவுக்கும் மேல் லாபத்தை அந்த கம்பெனிகள் சம்பாதித்திருக்கின்றன. அரசு அளித்த வரி விலக்கு, அந்தக் கம்பெனிகள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அந்தக் கம்பெனிகள் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வியாபாரம் குறைந்து, நஷ்டம் அடையக் கூடாது என்பதற்காக.

எந்த அளவுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு பொருள்களின் விலையைக் கம்பெனிகள் குறைக்க வேண்டும். அப்படி விலையைக் குறைத்து, வியாபாரத்தை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், நடந்ததோ விபரீதம். வரி விலக்கு காரணமாக பொருள்களின் விலை குறையாமல் (அதாவது பொருள்களின் விலையைக் குறைக்காததால்) கம்பெனிகளின் லாபம் பெருகியது.

இப்படி நடந்தது ஏதோ அரசாங்கத்துக்குத் தெரியாமல் நடந்த விஷயம் அல்ல. 2008-09-ல் வரி விலக்கு அளித்ததன் காரணமாக, 2009-10-ல் கம்பெனிகளுக்கு பெரும் லாபம் கிடைத்தது என்பது அரசாங்கத்துக்குத் தெரியாத விஷயம் அல்ல. தனக்கு இது தெரியும் என்று அரசாங்கமே பறை சாற்றியது போல, 2011-12-ல் பட்ஜெட் ஆவணங்களிலேயே கம்பெனிகள் பெற்ற லாப கணக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுக்காண்டு பட்ஜெட் ஆவணங்களில் இந்தக் கணக்கு கொடுக்கப்படுகிறது. ஆக, அரசு இதை வேண்டுமென்றேதான் செய்திருக்கிறது. பெரிய தொழிலதிபர்களையும், பெரும் வியாபாரிகளையும் திருப்திப்படுத்தவேதான், அரசு இப்படி செய்திருக்கிறது என்பதில் சந்தேகமே வேண்டியதில்லை.

பட்ஜெட் ஆவணங்களை அலசினால், 2008-09-ல் பொருளாதார நெருக்கடியின் காரணமாக வரி விலக்கு அளிப்பதற்கு முன்னாலேயே, அரசாங்கம் பெரிய தொழில்களுக்கு வரி குறைப்புச் செய்ய ஆரம்பித்திருக்கிறது என்பது விளங்கும். அதாவது, 2008-09-ல் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வரி விலக்கு அளிக்கப்பட்டதற்கு முன்னமேயே, பெரிய தொழில்களுக்கு ஆதாயம் காட்ட வரிக் குறைப்பு துவங்கி விட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவிக்கு வந்தவுடனேயே, மிகப் பெரிய பலனைப் பெற்றது ஆம் ஆத்மி அல்ல. பெரிய தொழில்களும், கம்பெனிகளும்தான் அப்படி லாபம் பெற்றன. அப்படி 2005-06-ல் துவங்கிய வரிக் குறைப்பு பற்றிய ஒரு சிறிய விளக்கத்தை இங்கு பார்க்கலாம்.

2005-06-ஆம் ஆண்டு கணக்குப்படி, நாட்டின் மொத்த உற்பத்தியில் எக்சைஸ் வருமானம் 3 சதவிகிதம்; சுங்கவரி 1.8 சதவிகிதம் என்றிருந்தது. அப்போது இருந்த எக்சைஸ் மற்றும் சுங்க வரி விகிதம் குறைவு என்று சிலர் சொன்னாலும், அதிகம் என்று பெரிய பெரிய கம்பெனிகள் உள்பட யாரும் சொல்லவில்லை. ஆகவே, அப்போது அமலில் இருந்த வரி விகிதம் மேலும் குறைக்கப்பட வேண்டும் என்று யாரும் வாதிடவில்லை. அதனால் எந்த அளவுக்கு 2005-06-ல் வரி விதிக்கப்பட்டதோ, அந்த வரியைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அடுத்த ஆண்டே, அதாவது 2006-07-ல் எக்சைஸ் வரி குறைய ஆரம்பித்தது. இதற்கு என்ன அர்த்தம்? எக்சைஸ் வரியை எந்தவிதக் காரணமும் இல்லாமல், எந்தக் காரணமும் கூறாமல், வெளிப்படையாக யாருக்கும் தெரியாமல், அரசாங்கம் ஏன் குறைக்க ஆரம்பித்தது என்பதுதான்.

2005-06-ன் வரி விகிதப்படி, 2006-07-ல் எக்சைஸ் வரி விதிக்கப்பட்டிருந்தால், எக்சைஸ் வருமானம் ரூ.15,000 கோடி அதிகரித்திருக்கும். அதாவது, 2005-06-ஆம் ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால், 2007-08-ல் ரூ.32,000 கோடி குறைந்தது. ஆகவே பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, 2008-09-ல் வரி விலக்கு அளிப்பதற்கு முன்னாலேயே வரி குறைப்பு துவங்கி விட்டது. இரண்டே ஆண்டுகளில் பெரிய தொழில்களுக்கு ரூ.47,000 கோடி தானமாக வழங்கப்பட்டது.

ஆனால், பட்ஜெட் ஆவணங்களில் இதுபற்றி அரசு மூச்சே விடவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் மொத்த உற்பத்தி பற்றிய புள்ளி விவரங்கள் வெளிவந்த பிறகு, அவற்றை அலசிப் பார்த்த போதுதான், இப்படி அரசு வரிக் குறைப்பு செய்தது புரிய ஆரம்பித்தது. இதற்கு மேல் 2008-09-ல் பொருளாதார நெருக்கடி காரணமாக, வரி விலக்கு என்கிற பெயரில் வரிக் குறைப்பு வேறு நடந்தது.

பொருளாதார நெருக்கடியின் காரணமாக அளித்த வரி விலக்கு தவிர, அதற்கு முன்னாலேயே வரிக் குறைப்புச் செய்ததன் விளைவாக, 2008-09-ல் வரி வருமானம் ரூ.25,000 கோடி குறைந்தது. 2009-10-ல் வரி வருமானம் மறுபடியும் ரூ.25,000 கோடி குறைந்தது. 2010-11-ல் ரூ.37,000 கோடி குறைந்தது. இப்படி வரிக் குறைப்பின் காரணமாக 2005-06-லிருந்து 2010-11 வரை, ரூ.1,34,000 கோடி பெரிய தொழிலதிபர்களுக்குத் தானம் செய்யப்பட்டிருக்கிறது. இது தவிர, 2008-09-லிருந்து 2010-11 வரை பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, பெரிய தொழிலதிபர்களுக்கு ரூ.3,36,000 கோடி வரி விலக்கு தானம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு தொகைகளையும் சேர்த்துப் பார்த்தால், 2005-06-லிருந்து 2010-11 வரை, வரிக் குறைப்பின் மூலமாகவும், வரி விலக்கின் மூலமாகவும், பெரிய தொழில்களுக்கு 4,70,000 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்படாமல் தானமாக வழங்கப்பட்டிருக்கிறது.

வரி தானம் இத்தோடு நிற்கவில்லை. பட்ஜெட் ஆவணங்களில் மேலும் இன்னும் இரண்டு விவரங்கள் இருக்கின்றன. ஒன்று – போட்ட வரியை, வரி விலக்கின் மூலமாக இழந்தது. இதில், மேலே கூறிய பொருளாதார வீழ்ச்சியின்போது அளிக்கப்பட்ட தொகைகள் அடங்காது. அது தவிர, ஆண்டுக்காண்டு விதித்த வரியைக் குறைக்க சட்டத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் வரி விலக்குகள். இவற்றால், எவ்வளவு வருவாய் நஷ்டம் என்பதையும் விளக்குகிறது பட்ஜெட் ஆவணங்களில் ஒன்று.

இதை ‘கைவிடப்பட்ட வரிப் பட்டியல்’ (Statement of revenue foregone) என்று குறிப்பிடுகிறது பட்ஜெட் ஆவணங்கள். இதன்படி, பல வகையான வரி விலக்குகளின் காரணமாக, விதிக்கப்பட்ட எக்சைஸ், சுங்க, வருமான வரி வசூல்கள் குறைந்திருக்கின்றன. ஆண்டுக்காண்டு குறைந்தும் வருகின்றன. இந்தப் போக்கு ‘ஆம் ஆத்மி’யை ஜெபம் செய்யும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவிக்கு வந்த பிறகு குறையவில்லை. ஆச்சரியப்படாதீர்கள். அதிகமாகி இருக்கிறது. விவரங்கள் இதோ:

இப்படி வரி விலக்கால் 2005-06-ஆம் ஆண்டு குறைந்த ஒட்டு மொத்த வரி வருமானத் தொகை ரூ.2.43 லட்சம் கோடி; 2006-07-ஆம் ஆண்டு ரூ.2.89 லட்சம் கோடி; 2007-08-ஆம் ஆண்டு ரூ.3.06 லட்சம் கோடி; 2008-09-ஆம் ஆண்டு ரூ.4.61 லட்சம் கோடி; 2009-10 -ஆம் ஆண்டு ரூ.4.82 லட்சம் கோடி; 2010-11-ஆம் ஆண்டு ரூ.5.12 லட்சம் கோடி. 2005-06-ஆம் ஆண்டு கைவிடப்பட்ட வரித் தொகை, வசூலிக்கப்பட்ட வரித் தொகையில் 50 சதவிகிதமாக இருந்தது. 2010-11-ஆம் ஆண்டு கைவிடப்பட்ட வரித் தொகை, வசூலிக்கப்பட்ட வரித் தொகையில் 72 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அதாவது கைவிடப்பட்ட வரித் தொகை, வசூலிக்கப்பட்ட வரித் தொகையில், கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு.

2005-06-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், 2010-11-ஆம் ஆண்டு கைவிடப்பட்ட வரித் தொகை கிட்டத்தட்ட 44 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இப்படி வரி விலக்கல் தொகைகள் ஆண்டுக்காண்டு விஷம் ஏறுவது போல் ஏறி வருகின்றன. இதைப் பற்றி கவலை தெரிவிக்கிறது, பட்ஜெட் ஆவணங்களில் இணைக்கப்பட்டுள்ள ‘கைவிடப்பட்ட வரிப் பட்டியல்’.

ஆனால், இதைப் பற்றி நிதி அமைச்சரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ, பத்திரிகைகளோ கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இப்படி கைவிடப்பட்ட வரிகளில் மிகவும் அதிகமானவை எக்சைஸ் மற்றும் சுங்க வரிகள். கைவிடப்பட்ட சுங்க, எக்சைஸ் வரிகள், மொத்த கைவிடப்பட்ட வரித் தொகையில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு.

இப்படி கைவிடப்பட்ட வரித் தொகையில், 2008-09-ஆம் ஆண்டு தவிர, மற்ற ஆண்டுகளில் மேலே கூறிய வரி விலக்கல்கள் அடங்காது. அவை தனி. இந்த கணக்குப்படி 2010-11-ஆம் ஆண்டில் மட்டும் வரி விலக்கு, வரிக் குறைப்பு ஆகிய தொகைகளைக் கூட்டினால், மொத்தம் ரூ.6.60 லட்சம் கோடி வரி வருமானம் கைவிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொகையில் பாதியை வசூல் செய்தால்கூட, அரசின் இன்றைய ஆண்டு துண்டுத் தொகையில் 90 சதவிகிதம் சரியாகி விடும். மேலும் அரசாங்கம் இந்த ஆண்டு துண்டை ஈடு கட்ட, வாங்க வேண்டிய கடன் தொகையை முழுவதுமாகத் தவிர்த்திருக்கலாம்.

இப்படி கணக்கு எடுத்துப் பார்த்தால், முதலாளிகளுக்காக வரிகள் எப்படி திரைக்குப் பின்னால் குறைக்கப்பட்டு வருகின்றன என்பது விளங்கும். நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையில் இவை எல்லாம் வெளிவருமா? எப்படி வரும். அதுதான் ‘ஆம் ஆத்மி’யை அர்ச்சனை செய்து பூஜிக்க தயாரிக்கப்பட்ட சஹஸ்ர நாமம் அல்லவா? நிதி அமைச்சர் அப்படிச் செய்வதில் அர்த்தம் இருக்கிறது.

அவருக்கும் அவருடைய கட்சிக்கும் ஓட்டுக்கள் தேவை என்பதும், ‘ஆம் ஆத்மி’க்கள் கையில் இருக்கும் ஓட்டுக்களை எப்படியாவது பறித்து விட வேண்டும் என்கிற ஆதங்கம் ஆளும் கட்சிக்கு இருக்கும் என்பதும் சரி. ஆனால் பத்திரிகைகளும், ஊடகமும் பட்ஜெட் பற்றி நிதி அமைச்சர் கூறுவதையே, ஏன் கிளிப் பிள்ளை போல எதிரொலிக்கின்றன?

காரணங்கள் மூன்று :

ஒன்று – மற்றவர்களுக்கு முன்னால் பட்ஜெட் பற்றி நம்முடைய கருத்தைக் கூறிவிட வேண்டும் என்கிற அவசரம். அதனால், பட்ஜெட் ஆவணங்களைப் படிக்காமலேயே நுனிப் புல்லை மேய்ந்து, தங்கள் கருத்தை வெளியிடுவது வழக்கமாகி விட்டிருக்கிறது. இது டி.வி. சேனல்கள் வந்த பிறகு அதிகமாகி விட்ட வக்கிரம். அது போல், பத்திரிகைகளும், பட்ஜெட் பற்றி முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் எழுதுவது பொதுவாக அரசாங்கத்தின் கருத்துக்களே. அப்படி மாற்றி எழுதினாலும், அதுவும் அரசாங்கத்துக்கு எதிராக ஏதாவது சொல்ல வேண்டும் என்கிற எண்ணத்தினால் மட்டுமே.

இரண்டாவது – பட்ஜெட் ஆவணங்களைப் படிக்க 24 மணிநேரமாவது தேவை. அப்படியென்றால், 28 பிப்ரவரி காலை சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் பற்றி, மார்ச் 1-ஆம் தேதி பிற்பகல்தான் கருத்து சொல்ல முடியும். அதற்குள் கருத்து கூறுபவர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் தலை வெடித்து விடுமே. அதனால்தான் ‘சுடச்சுட’ அரைகுறை கருத்துக்கள் வெளிவந்து, பட்ஜெட்டிலிருந்து வாசகர்களுக்குள்ள சுவாரஸ்யம் குறைந்து போன பின்புதான் உண்மை வெளிவருகிறது.

மூன்றாவது – இப்போது இந்தப் பகுதியில் நாம் பார்ப்பது போல, பெரிய பெரிய பத்திரிகைகள், ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களை – லஞ்சம் உட்பட – பல வகையிலும் ஊக்குவித்து, தங்களுக்கு எப்படி பட்ஜெட் பற்றிய விமர்சனம் வர வேண்டுமோ, அப்படிப்பட்ட விமர்சனம் மட்டுமே வரும்படி செய்வது. இதனால் பட்ஜெட் பற்றிய உண்மை விவரம் முதலில் மட்டுமல்ல, எப்போதுமே கூட வெளிவராத ஒரு நிலை உருவாகி வருகிறது.

இங்கே கூறப்பட்டுள்ள விவரங்கள் பற்றி, அரசாங்கத்தின் பட்ஜெட் விளக்கத்திலோ அல்லது பத்திரிகைகளின் ‘ஆழ்ந்த’ அலசலிலோ ஒரு வார்த்தைக் கேட்டிருப்போமா? உண்மை நிலை இப்படியிருக்க, இந்த பட்ஜெட்களுக்கு ‘ஆம் ஆத்மி’ பட்ஜெட்கள் என்ற மவுசு வேறு. அப்படி அதற்கு மவுசு சேர்க்க, ‘ஆமாம் சாமி’ போடும் பத்திரிகைகள் வேறு.

இப்படி ஒருபுறம், பெரிய தொழில்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் தானம்; இன்னொரு புறம், யாருமே கண்டுகொள்ளாத கிராமத்தில் வாழும் பெரும்பான்மை மக்கள். அவர்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள். அவர்கள் நம் நாட்டின் ஜனத்தொகையில் 58 சதவிகிதம். அவர்களுக்கு பத்திரிகைகள், ஊடகங்களின் ஆதரவு இல்லை. காரணம், அவர்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வகையில்லை. பத்திரிகையாளர்களுக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்தளிக்க அவர்களிடம் பணம் கிடையாது. பத்திரிகைகளும், ஊடகமும் அவர்களை ஏன் கண்டுகொள்ளப் போகிறார்கள்? அவர்களுடைய நிலை, அவர்களுக்கு! 1991-92-லிருந்து பல அரசாங்கங்களும், பட்ஜெட்களும் என்ன செய்திருக்கின்றன ? ( தொடர்ச்சி அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை போடுகிறேன் )

( நன்றி: துக்ளக், மார்ச் மாத இதழ் )


கேள்வி: விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ராணா படத்தில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?

வடிவேலு பதில்: ராணா படம், கானா படம் எதில் இருந்து நீக்கினாலும் நான் கவலைப்படவில்லை. மே 13 ந் தேதி மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியும். அதன் பிறகு எல்லாம் மாறும்.

இந்த மாதிரி செய்திகளுக்கு இடையில் குருமூர்த்தி எழுதும் சீரியஸ் கட்டுரைகளையும் படிக்க வேண்டும்.


Read More...

திமுக வெற்றி அறிக்கை..
சரி இது போல நடந்தால்.. அறிக்கைகள்... எந்த மாதிரி இருக்கும் ( கற்பனை - கோதண்டபாணி + இட்லிவடை )


கருணாநிதி: ஆரிய ஊடகங்களுக்கும் பதிரிகைகளிக்கும் தமிழக மக்கள் கொடுத்த மரண அடி இது. திமுகவின் இலாவச சாதனைகளுக்கு தமிழக மக்கள் கொடுத்த இலவச பரிசு இந்த வெற்றி. உடன்பிறப்புகளே (சோனியா & கோ) காலம் 'கனி'ந்து உள்ளது. தமிழ் 'மொழி'க்காக திமுக எதையும் இழக்க தயார்.

மு.க.ஸ்டாலின் : கலைஞர் தலைமையில் எங்களது செயல்பாட்டிற்கு கிடைத்ததுதான் இந்த வெற்றி. தென் தமிழகத்தைவிட வட தமிழகத்தில் அதிக அளவு வெற்றியை ஈட்டு தந்த கழக கண்மணிகளுக்கு நன்றி.

மு. க. அழகிரி : இந்ததேர்தலே திமுகவிற்கும் தேர்தல் கமிஷன் இடையே தான். மக்கள் தேர்தல் கமிஷனுக்கு மரண அடி கொடுத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் கமிஷன் இல்லாமலே தேர்தல் நடத்த டெல்லி சென்றவுடன் மீரகுமாரியை சந்தித்து மனு அளிப்பேன்.

தங்கபாலு : அன்னை சோனியா அறிவுரைப்படி இந்த வெற்றியை கலைஞரின் பொற்பாதங்களில் சமர்பிக்கின்றேன் .காங்கிரச்சை வீழ்த்த நினைத்த சீமான்களுக்கும் (vasan&co) கோமான்களுக்கும் (chidambaram&co) நான், அன்னையின் அறியுரைபடியும் ராகுல் காந்தி அனுமதியோடும் சொல்லிகொள்வது 'என் சுண்டு விரல் அல்ல எந்த விரல் அசைத்தாலும் தமிழகமே பற்றி எரியும் '

ராமதாஸ் : வன்னியர்களின் அணுகு முறைக்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. வன்னியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இனி தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சிக்கு வராது. வன்னியர்கள் நமக்கு மட்டும் வோட்டு போட்டாலே அடுத்த தேர்தலில் 117 இடங்களை கைப்பற்றி வன்னியர் ஆட்சி அமைக்கலாம் .(வன்னியர் = அன்புமணி)

வீரமணி: தமிழ் இன உணர்வுக்கு கிடைத்த வெற்றி இது. ராஜபக்சேக்கு எதிர்த்து கிடைத்த இந்த வெற்றியை U.N. உற்று நோக்க வேண்டும்.

ஜெயலலிதா: (கொடநாட்டிலிருந்து அறிக்கை) தேர்தலில் தில்லுமுல்லு நடந்துள்ளது. கொட்டாம்பட்டி வோட்டு எண்ணும்
மையத்தில் இரண்டு காலி த கரபெட்டிகள் கழக கண்மணிகள் கண்டு பிடத்ததே இதற்க்கு சாட்சி. தேர்தல் கமிஷன் ஐ எதிர்த்தும் குப்பைகளை வாரத திமுமைனோரிட்டிக அரசை எதிர்த்தும்,இன்று காலை 11 மணிக்கு வேட்பாளர்கள் அந்தந்த தொகுதயில் மாபெரும் போராட்டம் ADMK சார்பில் நடுத்துவார்கள்.

விஜயகாந்த்: மக்களே , கண்ட தண்ணியை குடித்து தொண்டை கெட்டுவிட்டதால் கடைசி இரண்டு நாட்கள் பிரச்சாரம் பண்ணாததால் நமக்கு தோல்வி. நான் எப்பொழுதும் உங்களோடுதான் கூட்டணி. 2016 ல் மட்டும் கட்சிகளோடு கூட்டணி. எனது அடுத்த படம் விருத்தகிரி - பாகம் 2.

வைகோ : ஆணவம் அழிந்தது. அகங்காரம் மறைந்தது. இனி திமுக அறிவிக்கும் எல்லா போராட்டங்களிலும் மதிமுக அழைப்பு இல்லாமேலே பங்காற்றி அறிய சேவை செய்யும் . 2016 ல் அதிமுகவுடன் கூட்டணி அமைப்போம்.

சீமான் : ஈழ தமிழர்களின் குரல்வளையை பிடித்த தேர்தல் கமிஷன் யை எதிர்த்து வீதி தோறும் எங்கள் முழக்கம் தொடரும். தேர்தல் கமிஷன் ஒழியும் வரை எங்கள் போராட்டம் தொடரும் .U.N. க்கு பல்லாயிர கணக்கான தந்திகள் பறக்கட்டும். (இந்த பேச்சிற்காக அவர் கைது செய்பட்டு சிறையில் அடைக்கபடுவர் என்பது தெளிவே) சோ. இலவசங்கள் கூட ஜெயவிடமிருந்து பெறமாட்டோம் என்ற தமிழக மக்களின் போக்கு ஒரு சாபக்கேடே. தமிழக மக்களுக்கு திமுக ஆட்சியுடன் 2G scam இலவசம்.

பெப்சி : 50 மாதங்கள் கலைக்கு அறிய சேவை செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளிவிழா பிரமாண்டமாக நடத்தப்படும் . ரஜினி கமல் விஜய் அஜித் அனைவரும் கண்டிப்பாக கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்து ஆசி பெறுவார்கள். சன் டிவி சார்பில் கலாநிதி மாறனுக்கு சிங்கப்பூரில் ரஜினி தலைமையில் பிரமாண்ட பாராட்டு தனியே நடைபெறும். விஜய்க்கு அழைப்பு அனுப்பியுள்ளோம் அவர் கலந்துக்கொள்வாரா என்று தெரியாது. அஜித் இந்த விழாவில் ஒன்று பேசாமல் இருப்பார்.

சந்திரசேகரன்: தேர்தல் எனக்கு தெரியும் ஆனால் தேர்தல் முடிவு தெரியாது. கோபாலபுரம் எனக்கு தெரியும் ஆனால் போஎஸ் கார்டன் எனக்கு தெரியாது. விஜய் ஷூடிங்க்லே (யே) இருப்பதால் அவரின் அனுமதியோடு இதை நான் அறிவிக்கின்றேன்

பத்திரிக்கைகள்:
விடகன்:
அடுத்த வார விகடனில் கூடுதல் பக்கம் - கலைஞர் தொடர் ஆரம்பம் ஆகிறது. பரிசு தொகை 1,00,000/= வாங்க தவராதீர்கள்.

கல்கி: ஓ-பக்கங்களில் ஞாநி 49-ஓ பற்றி விழிப்புணர்வு தேவை என்ற கட்டுரை. இந்த வார குட்டு - திமுகவை ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்திய தமிழக மக்கள்.

குமுதம்: அழகிரி பேட்டி - அடுத்த வாரம் தொடரும்...

துக்ளக்: தேர்தல் முடிவு - என் பார்வை - சோ தலையங்கம்...

கனிமொழி மந்தரிசபை பற்றி நீரா ராடியா உடன் தொடர்ச்சியாக பேசிக்கொண்டு இருப்பதால் அறிக்கை பெற முடியவில்லை .

Read More...

Thursday, April 28, 2011

சம்மர் ஸ்பெஷல் டாப் 10+1

நீண்ட நாட்களுக்கு பிறகு இட்லிவடையில் டாப் 10 மூவிஸ்..
(1)

மற்ற படங்கள் கீழே...


(2)


(3)


(4)


(5)


(6)


(7)


(8)


(9)

(10)

(11)பிகு: 'வ' - வேற என்ன வாக்காளர்கள் தான் :-)

Read More...

Tuesday, April 26, 2011

கனிமொழி பேட்டி

Read More...

Monday, April 25, 2011

ஒரே ஆப்ஷன் சும்மா இருப்பது !

கல்மாடி, கனிமொழி என்று வந்த இரண்டு செய்தியிலும் இரண்டு ஒற்றுமை - சிபிஐ, ஊழல். வேறு ஒரு ஒற்றுமையும் இருக்கிறது அது கால தாமதம். மீடியா தொடர்ந்து கொடுத்த பிரஷரில், உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் ஏதோ செய்கிறார்கள். இரண்டு நாட்களாக தயாளு அம்மாள், கனிமொழி பெயர்கள் வரும் என்று லீக் செய்தார்கள், நேற்று தயாளு அம்மாள் பெயர் வராது என்றார்கள். இன்று அதே போல நடந்துவிட்டது.

கலைஞ‌ர் டி.வி.யில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், கனிமொழிக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளது ஆனால் தயாளு அம்மாளுக்கு தமிழ் தவிர மற்ற மொழிகள் தெரியாது. அதனால் அவர் பெயர் இடம்பெறவில்லை என்று சிபிஐ விளக்கம் சொல்லியுள்ளது. செம்மொழிக்கு கலைஞர் செய்த தொண்டு அவர் மனைவியைக் காப்பாற்றி இருக்கு.

கலைஞர் இன்று அளித்த பேட்டியிலிருந்து ஒரு கேள்வி:

கேள்வி: குற்றப்பத்திரிக்கையில் உங்கள் குடும்பத்தினரின் பெயர்கள் இடம்பெற்றால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறுமா?

முதல்வர்: பெண்ணாக இருந்துகொண்டு இதுமாதிரிப் பேசக்கூடாது. பெண் நிருபர் இப்படி இதயத்தை தூக்கி எறிந்துவிட்டுப் பேசக்கூடாது.பெண்ணாக இருந்துக்கொண்டு, ராஜாவுக்கு பதவி வேண்டும் என்று ஒரு பெண் நீரா ராடியாவுடன் பேசலாம். ஆனால் இது போல கேள்வி கேட்க கூடாது. எது எப்படியோ கலைஞருக்கு நிறைய ஆப்ஷன் எதுவும் இல்லை. அவருக்கு ஒருக்கும் ஒரே ஆப்ஷன் - சும்மா இருப்பது. இன்றும் நாளையும் அஷ்டமி நவமி. அதனால் பகுத்தறிவைப் பயன்படுத்தி புதன் கிழமை அன்று மீட்டிங் வைத்துவிட்டு சும்மா இருக்கார்.

Read More...

சிபிஐக்கு தங்க பதக்கம்
முகத்தை மறைத்துக்கொண்டு இருப்பவர் சுரேஷ் கல்மாடி என்று கண்டுபிடித்து கைது செய்த சிபிஐக்கு தங்க பதக்கம் கொடுக்க வேண்டும்.

Read More...

ஏன் இந்த மின்வெட்டு ? யார் இதற்குப் பொறுப்பு ? – சோ


20_11_2008 துக்ளக் இதழில் இருந்து மின்வெட்டு பற்றிய சோ கட்டுரை.. ( அனுப்பி வைத்த கணேஷுக்கு நன்றி )

"ஜெயலலிதா ஒன்றும் தெரியாதது போல், ஊருக்கு ஊர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். அவரது ஆட்சியில் ஒழுங்காக மின் உற்பத்தித் திட்டங்களைப் போட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது' என்பது, இன்றைய மின்வெட்டு பற்றி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அளித்திருக்கிற தீர்ப்பு.

அதாவது, இன்றைய மின்வெட்டுக்குக் காரணம் தி.மு.க. அல்ல; ஜெயலலிதாதான் என்பது அவருடைய கண்டுபிடிப்பு. இதை இன்னமும் தெளிவாகவே கூறியிருக்கிறார், விஜயகாந்த் கட்சியில் மூத்த தலைவராக விளங்குகிற முன்னாள் மின் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

"மின்வெட்டு காரணமாகப் பலர் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம், இந்த ஆட்சிக்கு முன்பு முதல்வராக இருந்த


ஜெயலலிதாதான். அவர் திட்டம் போட்டு மின் திட்டங்களை உருவாக்கியிருந்தால், இந்த மின்வெட்டு இருந்திருக்காது' என்று அவர் கூறியிருக்கிறார்.

அதாவது, தி.மு.க.விற்கு இதில் பொறுப்பே இல்லை என்று, ஒரு சர்ட்டிஃபிகேட் வழங்குகிற அளவிற்குச் சென்றுள்ளது விஜயகாந்த் கட்சி.

தி.மு.க.விற்காக இப்படி உழைக்க விஜயகாந்த் கட்சி முனைந்திருப்பதில் நமக்கு வியப்பில்லா விட்டாலும், பலருக்கு இது ஏன் என்று புரியாமலிருக்கலாம்.

அதைப் பார்ப்பதற்கு முன்பாக, தமிழகத்தில் மின் உற்பத்தி, தேவை, பற்றாக்குறை, போன்றவற்றைப் பற்றிய சில விவரங்களைப் பார்ப்போம்.

இங்கே தரப்பட்டுள்ளவை, விவரமறிந்த பலரிடம் பேசி, ஆதாரபூர்வமாகத் திரட்டிய தகவல்கள். அதைக் கேள்வி – பதில் வடிவத்தில் தந்தால், தெளிவு

இருக்கும் என்பதால், கேள்வி – பதிலாகவே எழுதுகிறேன் :

கேள்வி : முந்தைய ஜெயலலிதா ஆட்சியில், மின் உற்பத்தித் திறன் எந்த அளவில் இருந்தது?

பதில் : அனல், புனல், எரிவாயு – மின் உற்பத்தி; தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படுகிற மின் உற்பத்தி; மத்திய தொகுப்பிலிருந்து பெறப்படுவது

– எல்லாமாகச் சேர்ந்து 10,011 மெகா வாட்கள் என்ற அளவில், ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின்போது மின் உற்பத்தித் திறன் இருந்தது. இது, தி.மு.க.வின் இன்றைய ஆட்சி சமர்ப்பித்த பட்ஜெட்டிலேயே கூடக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

(பருவகாலத்தைப் பொறுத்ததாகவும், நிச்சயமற்ற தன்மை உடையதாகவும் இருப்பதால், காற்றாலை மின் உற்பத்தி இதில் சேர்க்கப்படவில்லை.)


கேள்வி : உற்பத்தித் திறன் 10,011 மெகா வாட்கள் என்ற நிலையில், நடைமுறையில் உற்பத்தி எந்த அளவில் இருந்தது?

பதில் : ஜெயலலிதா ஆட்சியின்போது, 8,775 மெகா வாட் உச்ச நிலை உற்பத்தி இருந்தது; அதற்கு மேல் அப்போது தேவைப்படவில்லை; தேவை ஏற்பட்டால், மேலும், குறைந்தபட்சம், 1000 மெகா வாட்கள் உற்பத்தி செய்யக்கூடிய

நிலையில், உற்பத்தித் திறன் இருந்தது. காற்றாலை, பயோமாஸ் மூலமான உற்பத்தி போன்ற உற்பத்தித் திறன் கணக்கில் சேர்க்கப்படாத இனங்கள்

மூலம் இது எளிதில் பெறப்பட்டிருக்கும்.

கேள்வி : கூடுதல் மின் உற்பத்திக்காக, ஏதாவது திட்டங்கள் முந்தைய ஆட்சியில் போடப்பட்டனவா? திட்டங்கள் வகுக்கப்பட்டன என்றால், அவற்றின் நடைமுறை முன்னேற்றம் எந்த அளவில் இருந்தது?


பதில் : தேசிய அனல் மின் உற்பத்திக் கழகம் (நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் – என்.டி.பி.ஸி.) மற்றும் தமிழ்நாடு மின்வாரியம் (டி.என்.ஈ.பி.)

கூட்டு முயற்சியால், எண்ணூரில் தலா 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட, இரண்டு அனல் மின் உற்பத்தி நிலையங்கள் ஏற்படுத்த, திட்டம்

வகுக்கப்பட்டது. அதாவது, கூடுதலாக 1000 மெகா வாட் உற்பத்திக்கான திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் 2003ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டது.

இதற்காக உப்புத் துறையிடமிருந்து, 1100 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. சுற்றுப்புறச் சூழல் ஒப்புதல் பெறப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் பூமியின் தரம்,

திட்டத்திற்கு ஏற்றதுதானா என்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதற்கான அனுமதியும் பெறப்பட்டது. இவைதான் காலம் நீட்டிக்கொண்டே போகக்

காரணமாக அமைகிற அம்சங்கள். அவை முடிக்கப்பட்டுவிட்டன.

கட்டிடங்கள் எழுப்புவதற்கும், இயந்திரங்களை நிர்மாணிப்பதற்குமான பணிகள் தொடங்க இருந்த நேரத்தில் ஆட்சி மாறியது.

முறையான பணிகள் தொடரப்பட்டிருந்தால், இத்திட்டத்தின் மூலம் 1000 மெகா வாட்கள் கூடுதல் உற்பத்தி, மார்ச் 2009லிருந்து கிடைத்திருக்கும். ஆனால்,

ஜெயலலிதாவின் ஆட்சிக்குப் பின் பதவியேற்ற தி.மு.க. அரசு, இந்த திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றி, அதிக மின் உற்பத்தி பெறுவதில் ஆர்வம்

காட்டாமல், மெத்தனமாக நடந்துகொண்டு, இன்று வரை, இதைப் பயனற்றதாக்கிக்கொண்டிருக்கிறது.


கட்டுமானப் பணிகள், இயந்திரங்கள் நிறுவுதல் ஆகியவை தொடங்கப்பட வேண்டிய கட்டத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2009 செப்டம்பர் மாதம் முதல்

கிட்டியிருக்க வேண்டிய கூடுதல் மின் உற்பத்திக்கான பணிகளில் தி.மு.க. ஆட்சியில் ஆர்வம் காட்டப்படாததால், இந்தத் திட்டத்திற்காக ஜெயலலிதா

ஆட்சியில் தொடங்கப்பட்டு, முடிக்கப்பட்ட பணிகள், மீண்டும் பதவி ஏற்ற தி.மு.க. ஆட்சியினால் வீணடிக்கப்பட்டன.

இந்த தூத்துக்குடி மற்றும் எண்ணூர் திட்டங்கள் போக, பைகாராவில் (கூடுதலாக) 150 மெகா வாட்கள் உற்பத்திக்காகக் கொண்டுவரப்பட்ட தமிழக அரசின்

திட்டம், மத்திய அரசினால் (அதாவது தி.மு.க.வினால்) சுற்றுப்புறச் சூழல் காரணம் காட்டி தடுக்கப்பட்டது. அதன் பிறகு, ஜெயலலிதா அரசு,

நீதிமன்றத்தில் மனுச் செய்து, அனுமதி பெற வேண்டியதாயிற்று. ஹைகோர்ட்டில் ஜெயலலிதா அரசு இவ்வாறு அனுமதி பெற்ற பிறகும், மத்திய அரசு

விடவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து திட்டத்தைத் தடுக்கவே முனைந்தது. அங்கும் ஜெயலலிதா அரசு வென்ற பிறகே, இத்திட்டத்தைத்

தடுத்துவிட தி.மு.க. – மத்திய அரசு செய்த முயற்சிகள் நின்றன.

இந்தக் காலதாமதத்தையும் மீறி, இந்தத் திட்டம் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றி வைக்கப்பட்டது.

இதன் மூலமாகவும், வேறு சில சிறிய மின் உற்பத்தித் திட்டங்களை நிறைவேற்றியதன் மூலமாகவும், ஜெயலலிதா ஆட்சியில் (20012006) 2047 மெகாவாட்

மின் உற்பத்தி, கூடுதலாகப் பெறப்பட்டது. இதுபோலவே, 199196ல் அ.தி.மு.க. ஆட்சியின்போது, 1300 மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாகக் கிடைக்க, திட்டங்கள் வகுக்கப்பட்டு நிறைவேற்றிவைக்கப்பட்டன.


ஆகையால், ஜெயலலிதா ஆட்சியில் புதிய திட்டத்துக்காக எதுவுமே செய்யப்படவில்லை என்பது, உண்மை நிலைக்கு முற்றிலும் விரோதமானது; பொய்ப்

பிரச்சாரம்.

கேள்வி : இப்போதைய, மின் உற்பத்தி எந்த அளவில் இருக்கிறது?

பதில் : இப்போதைய மின் உற்பத்தி, 7500 மெகா வாட்கள் என்ற அளவில் இருப்பதாக, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சட்டசபையில் 14.11.08

அன்று கூறியிருக்கிறார். ஆனால், இன்றைய தேவை 9200 மெகா வாட்கள் என்றும் அமைச்சர் கூறியிருக்கிறார். அதாவது, தேவையை விட, 1700

மெகாவாட் குறைவாக உற்பத்தி உள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் சில இருக்கின்றன. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த உற்பத்தித் திறன், 10,011 மெகா வாட்கள். அது குறைந்திருக்க

நியாயமில்லை. (மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்கிற மின்சார அளவு குறைந்தால் தவிர.)

ஜெயலலிதா ஆட்சியின் போது – ஆட்சி மாற்றத்தின் போது கூட – 8775 மெகாவாட் மின் உற்பத்தி இருந்தது. இது இப்போது குறைவானேன்?

ஒன்று – மத்திய தொகுப்பிலிருந்து வருகிற மின்சாரம் குறைந்திருக்கிறது. இரண்டு – நிலக்கரி வாங்குவதிலும், அதன் தரத்திலும், அதை ஸ்டாக் செய்து வைப்பதிலும் நுழைந்துள்ள குறைபாடுகள். அனல், புனல் மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகளில் அக்கறையின்மை. எரிவாயு பெறுவதில் முனைப்பின்மை – போன்ற காரணங்கள், மின் உற்பத்திக் குறைவில் முடிந்திருக்கின்றன.

ஜெயலலிதா ஆட்சியின்போது கூட, மத்திய தொகுப்பிலிருந்து தரப்படுகிற மின்சாரத்தைக் குறைக்க, மத்திய அரசு முனைந்தது. ஆனால், ஜெயலலிதா

நேரிடையாகத் தலையிட்டு, மத்திய அரசுடன் வாதாடி, அந்தக் குறை ஏற்படாமல் பார்த்துக்கொண்டார். இத்தனைக்கும், அப்போதைய மத்திய அரசோ,

தி.மு.க. பங்கேற்ற அரசு; (ஒன்று வாஜ்பாய் அரசு, மற்றொன்று மன்மோகன் அரசு). ஜெயலலிதாவின் அ.தி.மு.க.விற்கு விசேஷமாக உதவக்கூடிய அரசுகள்

அல்ல அவை. ஆனால், ஜெயலலிதாவின் உறுதியான அணுகுமுறை காரணமாக, அவர்கள் செய்ய முனைந்த குறைப்பைச் செய்யாமல் விட நேர்ந்தது.

இப்போதோ, மத்திய அரசு, தி.மு.க. பங்கேற்கிற அரசு மட்டுமல்ல; தி.மு.க. கேட்கிற இலாகாவை, தி.மு.க. சொல்கிறவருக்குக் கொடுத்து மகிழ்கிற அரசு.

"டெல்லி இப்போது கோபாலபுரத்தில் இருக்கிறது' என்று தமிழக மூத்த அமைச்சர் ஒருவர் வர்ணிக்கிற அளவில் உள்ள அரசு.


ஆனால், இந்த அரசிடம் கூறி, இந்தத் தி.மு.க.வினால், இந்த மின் குறைப்பைத் தடுக்க முடியவில்லை என்றால் – இந்த லட்சணத்தை என்ன என்று

வர்ணிப்பது? கையாலாகாத்தனம் என்பதா? அக்கறையின்மை என்று கூறுவதா? நிர்வாகத் திறமையின்மை என்று சொல்வதா?

கேள்வி : மின்சாரத்தை வினியோகிக்க, போதுமான கட்டுமானப் பணிகளை சென்ற அ.தி.மு.க. ஆட்சி விஸ்தரிக்கவே இல்லை – என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

பதில் : இதுவும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானதே. 1996 – 2001ல் தி.மு.க. ஆட்சியில் இருந்ததை விட, 20012006 ஜெயலலிதா ஆட்சியில் கட்டமைப்பு

பெரும் முன்னேற்றத்தைக் கண்டது. உயர் அழுத்த மின்பாதை (ஏ.கூ. ஃடிணஞுண்) 11,268 கிலோ மீட்டரிலிருந்து 14,079 கிலோ மீட்டராகவும்; தாழ்வழுத்த மின்பாதை
(ஃ.கூ. ஃடிணஞுண்) 34,194 கிலோ மீட்டரிலிருந்து 51,904 கிலோ மீட்டராகவும் உயர்த்தப்பட்டன. 4,923 என்ற அளவில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர்களின் எண்ணிக்கை 25,393 ஆக உயர்த்தப்பட்டது.

கேள்வி : இப்போது தொழிற்சாலைகள் பெருகிவிட்டதால், மின்தேவை மிகவும் கூடிவிட்டது – என்று கூறப்படுகிறதே?


பதில் : வருடா வருடம் மின்சாரத் தேவை கூடிக்கொண்டேதான் வந்திருக்கிறது. ஆண்டொன்றிற்கு சுமார் 7 சதவிகிதம் மின்சாரத் தேவை அதிகரித்து

வருகிறது என்பது அனுபவம் காட்டுகிற உண்மை. இந்தக் கணக்குப்படி பார்த்தால், ஜெயலலிதா ஆட்சியின் இறுதிக் கட்டத்தில், 8,775 மெகாவாட் போதுமானதாக இருந்தது எனும்போது, அதில் ஏழு சதவிகிதத்தைக் கூட்டினால் – தி.மு.க. ஆட்சியின்

முதல் வருட முடிவில், தேவை 8,775 + 614 = 9,389 மெகாவாட். இரண்டாவது ஆண்டு முடிவில், அதாவது இப்போது, 9,389 உடன் 7 சதவிகிதம் கூடுதல் தேவை. அதாவது 9,389 + 657 = 10,046 மெகா வாட்கள்.

ஆனால், அமைச்சரோ "இப்போதைய தேவை 9,200 மெகாவாட்' என்று சொல்லியிருக்கிறார். அதாவது, வழக்கமாக ஏற்படுகிற வருடாந்திர கூடுதல் தேவையை விட, கடந்த இரண்டாண்டு தேவை, குறைவுதானே தவிர, அதிகம் அல்ல. ஆகையால், "தொழிற்சாலைகள் எக்கச்சக்கமாகப் பெருகிவிட்டதால், மின்தேவை மிக அதிகமாகிவிட்டது' என்கிற வாதம் எடுபடாது. அது வாதம் அல்ல; சால்ஜாப்பு.

கேள்வி : அப்படியானால், இன்றைய மின்வெட்டுக்கு என்னதான் காரணம்?

பதில் : விஜயகாந்த் கூறுகிற மாதிரி, ஜெயலலிதா ஆட்சி அல்ல காரணம். மின்வெட்டிற்குக் காரணம், முழுக்க முழுக்க இன்றைய தி.மு.க. ஆட்சிதான்.

ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இருந்த பல திட்டங்கள், தி.மு.க. ஆட்சியின் ஆர்வமின்மையினால் தேக்க நிலையை அடைந்துவிட்டன. மத்திய தொகுப்பிலிருந்து வருகிற மின்சாரக் குறைப்பு பற்றி இப்போதுதான் – மிகத் தாமதமாகத்தான் – விழிப்பு வந்திருக்கிறது.

நிலக்கரியை வாங்குவதிலும், தரம் பார்ப்பதிலும், சேகரித்து வைப்பதிலும், பராமரிப்புப் பணிகளிலும், முனைப்பில்லாமல் போயிற்று. இவ்வாறாக, தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையும், அக்கறையின்மையும்தான் இன்றைய மின்வெட்டிற்குக் காரணங்கள். உண்மை இவ்வாறிருக்க, விஜயகாந்த் "இன்றைய மின்வெட்டிற்கு,
முந்தைய ஜெயலலிதா ஆட்சிதான் காரணம்' என்று அடித்துச் சொல்வது, விசித்திரம்தான்.

விஜயகாந்த் மட்டும் சொன்னாலாவது, "சரி, விவரம் தெரியவில்லை. ஏதோ பேசியிருக்கிறார்' என்று நினைக்கலாம். ஆனால், அவருடைய கட்சியில் மூத்த தலைவராக விளங்குபவரும், முன்னாள் மின்துறை அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனும் விஜயகாந்தைப் போலவே, "ஜெயலலிதா ஆட்சிதான் காரணம்' என்று கூறுகிறபோது, "இது விவரமறியாத பேச்சு அல்ல; வேண்டுமென்றே செய்யப்படுகிற பிரச்சாரம்' என்பது தெளிவாகிறது.

மற்ற கட்சியினர் யாரும், இப்படிக் கூறவில்லை. சொல்லப்போனால், மின்சார அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூட, சில சமயங்களில், முந்தைய

ஆட்சியின் மீது பழிபோட முயன்றாலும், "காற்று வீசவில்லை' என்பதிலிருந்து, "தொழில் பெருகிவிட்டது' என்பது வரை ஏதேதோ காரணங்களைக் கூடவே

சொல்லி வருகிறார்.

உண்மைக்கு முற்றிலும் நேர் விரோதமாக "ஜெயலலிதா ஆட்சிதான் காரணம்' என்று சொல்வது விஜயகாந்தும், அவருடைய கட்சியினர் மட்டுமே. ஏன்?

இன்று மக்களை மிகவும் கோபமடையச் செய்திருக்கிற மின்வெட்டுப் பிரச்சனைக்கான பொறுப்பு தி.மு.க. அரசு மீது விழுவது அவர்களுக்குப்

பொறுக்கவில்லை. அவர்கள் நோக்கம், தி.மு.க.விற்கு எதிரான வாக்குகளைப் பிளந்து, ஒரு பகுதியைத் தாங்கள் பெற்று, அ.தி.மு.க.வின் வாய்ப்புகளைத்

தங்களால் இயன்றவரை கெடுக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால், இப்போது இந்த மின்வெட்டினால் பாதிக்கப்பட்ட சகல தரப்பினரும் "ஜெயலலிதாவின் ஆட்சியில் இப்படி நடக்கவில்லை. அந்த ஆட்சி

எவ்வளவோ மேல்' என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இது தங்களுக்கு ஆபத்து; தி.மு.க. வென்றால் பரவாயில்லை; அது வருகிற வருடங்களில்

பலவீனமடையப் போகிற கட்சி; ஆனால் அ.தி.மு.க. வென்றால், அது மேலும் வலுவடையும்; அதன் பிறகு அதை எதிர்கொள்வது நமக்கு இன்னமும் கடினமாகிவிடும்; ஆகையால், இப்போதே அதன் வாய்ப்புகளைக் கெடுத்து, தி.மு.க.விற்கு உதவுவதுதான் நமக்கு நல்லது' என்று விஜயகாந்த் கட்சித் தலைமை நினைக்கிறது.


அதுதான் இந்த மின்வெட்டுப் பிரச்சனையில் அவர்கள் செய்கிற முற்றிலும் உண்மைக்கு புறம்பான பிரச்சாரத்திற்குக் காரணம்.

தி.மு.க.வை எதிர்ப்பது போலப் பேசிக்கொண்டே, தேர்தலில் அக்கட்சிக்கு மறைமுகமாக உதவும் நோக்கத்துடன் செயல்படுவது என்கிற அரசியல் முடிவை

விஜயகாந்த் கட்சி எடுத்திருப்பது புரிகிறது. அப்படிப்பட்ட ஒரு முடிவை எடுப்பது, அவர்களுடைய உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் ஒரு விஷயம்.
இந்த மின்சார விஷயத்தில், அவர் முந்தைய ஆட்சியைச் சம்பந்தப்படுத்துகிறார். அப்போது மின்சாரம் இருந்தது. அதனால் இதைத் தொட்டால் "ஷாக்' அடிக்கும்.

ஆகையால், தி.மு.க.விற்கு உதவி செய்ய, விஜயகாந்த், வேறு ஏதாவது ஒரு விஷயத்தைத் தேடுவது அவருக்கு நல்லது.

Read More...

டமிலன் டச்


டமிலன் அனுப்பிய கார்ட்டூன்....டமிலன் கார்ட்டூன் இட்லிவடையில் தொடரும்...:-)

Read More...

Sunday, April 24, 2011

உதவுவோம் வாருங்கள்

அந்த முற்பகல் வேளையில் போரடித்தது. ஹிந்து பஜில்ஸ், சுடோகு, ஒரு தின இதழின் குறுக்கெழுத்துப் போட்டி என்று எல்லாவற்றையும் நிரப்பித் தள்ளியும் நேரம் மீதம் இருந்தது. தொலைக்காட்சியில் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் வசை பாடிக் கொண்டிருப்பதை பார்க்க, கேட்கச் சகிக்காமல் வாசலில் ஈஸிசேரைப் போட்டு அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அவர் வந்து சேர்ந்தார். எழுத்தாளர், கவிஞர், நடிகர் இன்னபிற என்று பலதரப்பட்ட தகுதிகளை தன்னுள் வைத்திருப்பவர் அவர். மகா சாது. மகா புத்திசாலி.

“வாங்க, வாங்க பார்த்து ரொம்ப நாளாச்சே, வாட் ய சர்ப்ரைஸ் விசிட்” என்றேன்.

”ஒரு இடத்துக்குப் போலாம் வர்றீங்களா?” என்றார் வாயில் எதையோ போட்டுக் குதப்பிக் கொண்டிருந்தபடி.

“ஓ, எஸ், வரேனே” என்று சொல்லிவிட்டு, சட்டை, பேண்ட் மாற்றிக் கொண்டு உடன் புறப்பட்டேன்.

அவர் ஸ்கூட்டரை ஓட்ட, நான் பின்னால் அமர்ந்து கொண்டு சென்றேன். வழியில் தென்படுபவர்கள் எல்லோரும் என்னையே உற்றுப் உற்றுப் பார்ப்பது மாதிரி இருந்தது. பின்னே, பிள்ளையார் வண்டி ஓட்ட, மூஞ்சூறு பின்னால் உட்கார்ந்து சென்றால் எல்லோருக்கும் அதிசயமாகத் தானே இருக்கும்!.


கோடம்பாக்கம் ஸ்டேஷனில் வண்டியைப் போட்டு விட்டு நண்பர் டிக்கெட் வாங்கினார்.

”நாம எங்க போறோம்?” என்று இழுத்தேன் நான்.

“பொழுங்க. சொல்ழேன்” என்றார்.

வண்டி வந்தது. ஏறிக் கொண்டோம். நண்பர் எங்கு போகிறோம் என்பதைச் சொல்லவே இல்லை. தலையை இலேசாக ஆட்டியபடி தனக்குள் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்த மாதிரி இருந்தது. அவர் எப்போதுமே அப்படித்தான். அதிகம் பேச மாட்டார். அதற்கு பதில் எழுத்தில் எல்லாவற்றையும் கொட்டி விடுவார். ஒருவேளை என்றைக்காவது தப்பித் தவறி பேச ஆரம்பித்தால் அவ்வளவுதான் விடமாட்டார்.

பரங்கி மலை ஸ்டேஷன் வந்தது.

“இறங்கலாம்” என்றார்.

இறங்கினோம். நான் இந்தப் பக்கம் வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. முன்பு தூரத்து உறவினர் ஒருவரைப் பார்க்க மடிப்பாக்கம் செல்வதற்கு இங்கு வந்துதான் பஸ் அல்லது குதிரை வண்டி ஏற வேண்டும். அது அந்தக் காலம். இப்போது அகலமான பெரிய மாடிப்படி எல்லாம் கட்டி ஸ்டேஷன் கொஞ்சம் பெரிதாக மாறி இருந்தது.

படி இறங்கி, ஆட்டோக்களைப் புறக்கணித்து வெளியே வரும்போது எதிரே ஒரு சிறிய கோயில் தென்பட்டது. இதை முன்பு பார்த்திருக்கிறேனா என்பது நினைவிலில்லை ”ஆவுடை நாயகி உடனுறை நந்தீஸ்வரர் ஆலயம்” என்றது அறிவிப்புப் பலகை. கூடவே “பிருங்கி மா முனிவருக்கு இறைவன் நந்தி ரூபத்தில் காட்சி அருளிய தலம்” என்றது ஒரு உதிர்ந்த நீலக் கலர் போர்டு. ”ஓ, அதனால்தான் இந்த ஊருக்கு பரங்கி மலைனு பேரா? அப்போ பிருங்கி மலைங்குறதுதான் பரங்கி மலைன்னு பின்னாடி மாறிருச்சு இல்லையா?” என்றேன், நண்பரிடம்.

“அதெல்லாம் எனக்குத் தெழியாது. இந்த கோயில், சாமி விஷயங்கள்னா நமக்கு அலழ்ஜி” என்று சொல்லி விட்டு, வாயில் குதப்பியதைத் துப்பி விட்டு வந்தார்.

பேச்சை வளர்ப்பானேன் என்று பேசாமல் நான் அவர் கூடவே சென்றேன். மடிப்பாக்கம்-மேடவாக்கம் சாலையிலேயே கொஞ்ச தூரம் சென்றவர் வலது புறம் திரும்பினார். கொஞ்ச தூரம் போய் இடது புறம் திரும்பினார். தூரத்தே ஏதோ ஒரு போர்டு தெரிந்தது. “இது ஒரு சிறுவர் ஆதரவு இல்லம். கவனிச்சு ஆதரிப்பார் இல்லாத சின்னச் சின்னக் குழந்தைங்க எல்லாம் இங்க தங்கியிருக்காங்க. உண்மையான உதவும் இல்லம்” என்றார் நண்பர்.

“ஓ” என்றேன் சற்று அலட்சியமாக.

உள்ளே படி ஏறிச் சென்றார். நானும் தொடர்ந்தேன்.

அவரைப் பார்த்ததும் ரிஷப்ஷனில் இருந்தவர் எழுந்து கொண்டார். கை குலுக்கினார். ”சார் சௌக்யமா? பொண்ணு நல்லா இருக்குதா?” என்றார். “ம். நல்லா இருக்கா...” என்றவர் பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாய்த் தாள்களை எடுத்துக் கொடுத்தார். ”அதே டேட் தான் உங்களுக்குத் தெரியுமே!....” என்று இழுத்தார். ”ஆமாம். தெரியும். லெட்ஜரில் எண்ட்ரி இருக்குதே. இருங்க பார்த்து, ரிசிப்ட் போடச் சொல்றேன்” என்றார்.


”இவர் என் நெருங்கின நண்பர். பொது நல சேவைல ஆர்வம் உள்ளவர். இவ்ளோ நாள் வெளி மாநிலத்துல இருந்தார். இப்போ ரிடயர் ஆகி இங்கே வந்திருக்கார். உங்க இல்லத்தைப் பத்தி நீங்களே இவர் கிட்ட விலாவாரியாச் சொல்லுங்களேன்” என்றார் நண்பர்.

அவர் சொல்லச் சொல்ல நான் ஆர்வமானேன். முழுமையாகக் கேட்டு முடித்ததும், ரிடயர் ஆகிப் பொழுது போகாமல் வேஸ்டாக வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும் என் மீதே எனக்கு வெறுப்பு வந்தது.


பத்தாண்டுகளுக்கு முன்னால் ”உதவும் உள்ளங்கள்” என்ற இந்த இல்லத்தை ஆரம்பித்தவர்கள் பெரிய பணக்காரர்களோ, வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறும் சேவைக்காரர்களோ அல்ல. என்னைப் போல சாதாரணமாக ரிடயர்டு ஆன பென்ஷன் வாங்கும் ஆசாமிகள்தான். அவர்களுக்கு இந்தச் சமூகத்துக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்று ஆர்வம். பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் அது இன்னமும் தீவிரமானது. தங்களுக்கு வந்த பணத்தைக் கொண்டும், சேமிப்பில் இருந்த தொகையைக் கொண்டும் 2000-த்தில் ஒரு சிறுவர் ஆதரவு இல்லத்தை ஆரம்பித்தனர். அதுதான் இன்று உதவும் உள்ளங்களாய் மலர்ந்திருக்கிறது

ஆரம்பத்தில் வெறும் நான்கே குழந்தைகளைக் கொண்டு ஆரம்பித்திருக்கின்றனர். இன்று கிட்டத்தட்ட இங்கே 100 குழந்தைகளுக்கு மேல் இருக்கிறார்கள். காப்டன் ராஜூ சின்ஹா என்பவர் ஆதம்பாக்கத்தில் இருந்த தனக்குச் சொந்தமான ஒரு இடத்தை குழந்தைகளுக்காக வழங்க, அதில் கட்டம் எழுப்பப்பட்டு அங்குதான் இந்த இல்லம் தற்போது செயல்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல் உறவுகளால் புறக்கணிக்கப்பட்ட முதியோருக்காகவும் ஒரு இல்லத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். அது 2005 முதல் மறைமலை நகரில் செயல்பட்டு வருகிறது. அங்கு முதியவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் இருக்கிறதாம்.

ஆதம்பாக்கத்தில் இருக்கும் சிறுவர்கள் அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதி, கல்வி வசதி என அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. அனைத்தும் கருணை உள்ளம் கொண்டவர்களின் நிதிக் கொடையால்தான் சாத்தியமாகியிருக்கிறதாம். முன்பு ஆதம்பாக்கம் இல்லத்தில் இடப் பற்றாக்குறை காரணமாக கட்டிடம் கட்ட ஆரம்பித்து பாதியிலே அப்படியே நின்று விட்டதாம். பின்னர் அகட விகடம், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் மூலமாக நிதி திரட்டி தற்போது முழுமை செய்துள்ளனர்.

கோவா படக் குழுவினரான வெங்கட் பிரபு மற்றும் நண்பர்கள், பாப் ஷாலினி, கிரேசி மோகன், நடிகை ராதிகா என பலர் இந்த இல்லத்து வருகை புரிந்து உதவியிருக்கின்றன. பல கல்லூரி மாணவ, மாணவிகள், எமென்சிக்களில் பணியாற்றும் இளைஞர்கள் என பலர் இந்த இல்லத்திற்கு உதவி வருகின்றனராம். பிறந்த நாள், திருமணநாள், நினைவு நாள் என பலரும் இங்கு வந்து உதவுகின்றனர். ஒரு நாள் அல்லது ஒரு வேளை உணவிற்கோ, அல்லது வருடம் முழுவதுக்குமான ஒருவேளை உணவிற்கோ நிதி உதவி செய்கின்றனர். நிதி உதவிகளுக்கு வருமான வரி உண்டு. வெளிநாட்டில் வசிப்பவர்களும் நிதி உதவி செலுத்தலாமாம். அதற்கும் FCRA எனப்படும் சிறப்பு அனுமதி பெற்றுள்ளனராம்.

மேற்கொண்டு விவரங்களுக்கு www.helpingheartshome.org

இல்ல முகவரி :

Udhavum Ullangal Illam
No.9, West Karikalan II Street
Adambakkam, Chennai - 600 088
(Near St.Thomas Mount Rly.Stn)
Ph. 9144 2232 1236, 9144 2234 8338

அனுமதி பெற்று மேலே குழந்தைகள் தங்கியிருக்குமிடத்தைப் போய்ப் பார்த்தேன். ஆண், பெண் என தனித்தனியாக அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் முகத்தையும், அதில் இருந்த ஆர்வத்தையும், சொல்ல முடியாத ஏதோ ஒரு ஏக்கத்தையும் பார்க்கப் பார்க்க என் கண்கள் கலங்கியது. என் பால்ய கால ஞாபகம் வந்து, மனதை என்னவோ செய்தது. யாரிடமும் எதுவும் பேச முடியாமல் வெளியே வந்து விட்டேன்.

வரும் வழியில் நண்பர் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தார். என்னால்தான் எதுவுமே பேசவே முடியவில்லை.

வரும் ”கர” வருடத் தமிழ்ப் புத்தாண்டில் இந்தக் குழந்தைகளுக்கு ”உதவிக் கரம்” கொடுத்துக் கொண்டாடுபவர்கள் பாக்கியவான்கள்.

ஜெய் ஸ்ரீராம்!

- அநங்கன்

என்ன என்னவோ செலவு செய்கிறோம், ஊர் சுற்றுகிறோம், சினிமா, ஹோட்டல் என்று போய் விரயமாக்குகிறோம். ஒரு நாள், குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது ஒருவேளை உணவு கொடுக்க நம்மால் முடியாதா என்ன?


Read More...

சன்டேனா (24-04-11) இரண்டு செய்திவிமர்சனம்

செய்தி # 1
பாலுக்கு காவல் பூனை என்பதற்கு சரியான உதாரணங்களாய் இரண்டு சம்பவங்கள் நடந்து இருக்கின்றன.

முதலில், பி.ஜெ. தாமஸ் என்பவர் மத்திய லஞ்ச கண்காணிப்பு ஆணையராக நியமிக்க பட்டார். இவரை பிரதமர் மன்மோகன் சிங்கே நேரடியாக நியமித்தார். ஆனால், பிறகுதான் தெரிந்தது...இந்த தாமஸ் மீதே ஊழல் வழக்கு இருப்பது.

எதிர்கட்சிகளின் போராட்டங்களுக்கு பிறகு, தாமஸ் மீது ஒரு ஏற்றுமதி விவகாரம் தொடர்பாக லஞ்சம் வாங்கிய வழக்கு இருப்பதே தனக்கு தெரியாது என்று சொன்னார் பிரதமர். இதை தொடர்ந்து தாமஸ் நியமனம் செல்லாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

லஞ்ச ஒழிப்பு துறைக்கு தன்னால் நேரடியாக தேர்ந்தெடுக்கபட்டவர் பற்றி பிரதமர் பொறுப்பில் இருப்பவருக்கு எப்படி தெரியாமல் போகும்??
தாமஸ் தேர்ந்தேடுக்கப்பட்டதின் பின்னால் வழக்கம் போல சோனியா தலையீடு இருப்பது நமக்கு புரியாமல் இல்லை.

இதை போன்று இன்னொரு சம்பவம் நடைபெற்று இருக்கிறது. ஆனால், இது அதை விட பெரிய அதிர்ச்சி தரும் விவகாரமாய் இருக்கிறது.

ஊழலுக்கு நிரந்திர தீர்வு என்று கூறி ஜன்லோக் பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டுமாய் ஒரு போராட்டத்தில் திரு.அன்னா ஹசாரே இறங்க, அவருக்கு பின்னால் இந்தியாவே திரண்டது. பின்னர் மத்திய அரசு வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இம்மசோதாவை நிறைவேற்றுவதாக வாக்களித்ததாக கூறி, தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்தார் ஹசாரே.

இம்மசோதாவின் படி, ஹாசாரே அவர்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் கொண்ட ஒரு வரைவு குழு அமைக்கப்பட்டது.

இந்த ஒரு அம்சத்தை சுட்டிக்காட்டி, இந்த மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்ககூடாது என்று நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த வரைவு திட்டத்தில் ஹசாரேவுக்கு அடுத்தபடியாக முக்கிய பொறுப்பில் இருக்கும் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் மற்றும் இதே குழுவில் இடம் பெற்று இருக்கும் அவரது வாரிசு(??) பிரசாந்த் பூஷன் ஆகியோர் சம்பந்தப்பட்ட சிடி ஒன்று கடந்த வாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

"எனது மகன் பிரசாந்த் பூஷண் நினைத்தால் ரூ.4 கோடி வரை கொடுத்து நீதிபதிகளை விலைக்கு வாங்கிவிடுவார் " என்று சாந்தி பூஷன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அவர்களுடன் உரையாடி இருப்பது தெரியவந்து இருக்கிறது.

இந்த சிடியை ஆராய்ந்த சில தடயவியல் நிபுணர்கள், இது உண்மையான சிடி தான் என்று கூறியுள்ளனர்.

நீதித்துறையிலும் லஞ்சமும்,ஊழலும் புகுந்து விளையாடுவது என்பது நம்மால் ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது. அதுவும் நீதிபதிகளையே இந்த நாட்டில் விலைக்கு வாங்கி விட முடியும் என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், தற்போது ஜன்லோக்பால் மசோதா வரைவு குழுவிலும் ஒருவரே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக வாக்குமூலம் கொடுத்து இருப்பதுதான் அதிர்ச்சியின் உச்சகட்டமாக இருக்கிறது.

ஹாசாரேவால் தேர்ந்து எடுக்கப்பட்ட சாந்தி பூஷணும், அவர் மகனும் நீதிபதிகளையே வாங்கும் உலக மகா ஊழல் ஆசாமிகள் என்பது....எங்கையோ "லாஜிக்" இடிக்கிறேதே.

"நொய்டாவில் முதல்வர் மாயாவதியின் சிலைகள் கொண்ட பூங்கா அமைக்கப்படுவது தொடர்பான வழக்கில் அவருக்கு எதிராக சாந்தி பூஷண் ஆஜராகி வந்தார். இந்நிலையில், அவருக்கும் அவரது மகனுக்கும் நொய்டாவில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள பண்ணை வீட்டுக்கான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது லஞ்சம் இல்லாமல் வேறு என்ன? இதுகுறித்து சாந்தி பூஷண் விளக்கமளிக்க வேண்டும்." என்று மேலும் ஒரு புதிய புகாரை தெரிவித்து இருக்கிறது.
சாந்தி பூஷண் மீது குற்றச்சாட்டுக்கள் புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளன.

இது பற்றி கருத்து தெரிவித்து இருக்கும் அன்னா ஹசாரே "சாந்தி பூஷனின் நம்பகத்தன்மைக்கு நான் உத்தரவாதம் அளிக்க முடியாது. என் மீதான நம்பகத் தன்மைக்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்க முடியும்" என்கிறார்.

வரைவு குழுவில் இருக்கும் சாந்தி பூஷன் மற்றும் வழக்கறிஞ்சரான அவரது மகனே இப்படி என்றால், அரசியல்வாதிகளோடு வரைவு குழு உறுப்பினர்களும் "பொட்டி" வாங்கிகொண்டு, ரகசியமாக கை குலுக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்??

லோக்பால் வரைவு மசோதா கமிட்டிக்கு சாந்திபூஷனை பொறுப்பில் அமர்த்த வேண்டும் என அன்னா ஹசாரே அவர்களால் முன்மொழியப்பட்ட சாந்திபூஷனுக்கே, ஹசாரேவால் உத்திரவாதம் தரமுடியாத போது, அந்த வரைவு கமிட்டியில் உள்ள மற்றவர்களுக்கும், ஊழல் ஒழிப்பிற்கும் அவரால் எப்படி உத்திரவாதம் தர முடியும்??

"என்னை பொறுத்தவரை, பார்லிமென்ட் தான், மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பு. லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் புறக்கணித்து விட்டால், பார்லிமென்டின் அந்த முடிவை ஏற்றுக் கொள்வேன்" என்று வேறு அறிவித்து இருக்கிறார் ஹசாரே.

எல்லா அரசியவாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது ஹசாரேவுக்கு தெரியாதா? ஊழல் செய்யாத அரசியவாதிகள் யாரும் இல்லை என்பது அவருக்கு புரியாதா? இதற்குத்தானே அவர் போராட தொடங்கி, மக்களை திரட்டினார்??
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா போன்று வெறும் வாய் வார்த்தையில் மட்டுமே வேலைக்காகும் ஜன்லோக் பால் மசோதா.இது,வெறும் கண்துடைப்பு அல்லது நாடகம் என்ற உணர்வையே தருகிறது.

"ஜனநாயகத்தில், அனைவருக்குமே, தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு உரிமை உள்ளது.லோக்பால் விவகாரத்தில் நீங்கள் கூறும் கருத்துக்கள் மட்டுமே சரி என்றும், மற்றவர்கள் பதில் அளிக்கக் கூடாது என்றும் நீங்கள் கருதினால், அது எப்படி ஜனநாயக நடவடிக்கையாக இருக்கும். எவ்விதமான நடைமுறையை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என, தெரியவில்லை". என்று காங்கிரஸ் கட்சியினர் இந்த மசோதாவிற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள் என்ற ஹாசாரேவின் குற்ற சாட்டுக்கு பதில் அளித்து இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்.

ஹாசாரேவின் நடைமுறைகள் நிஜமாகவே குழப்பமாகவே இருக்கின்றன. குறிப்பாக, பார்லிமென்ட் இந்த மாசோதாவை புறக்கணித்தாலும் ஏற்றுகொள்வேன் என்று அவர் கூறியிருப்பது.

அன்னா ஹசாரே - நீங்கள் நல்லவரா? கெட்டவரா?

செய்தி # 2

"இனியும் நமது தமிழ் இனத்தை இலங்கை ராணுவம் அழிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழக மீனவர்களை கொன்று குவிப்பதை நாம் பார்த்துகொண்டிருக்க முடியாது. உடனே மத்திய அரசு இந்த கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். இதுவரை பொறுத்தது போதும் ."
இப்படியெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை தமிழ் இனம், தமிழ் மொழி என்றெல்லாம் படு உணர்ச்சிகரமாக பேசியதோடு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தொடர் தாக்குதலை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தையும் முற்றுகை இட சென்று, காவல்துறையால் கைது செய்யப்பட்டார் "அவர்".

அவர்....சீமானோ, திருமாவளவனோ,வைகோ, பழ.நெடுமாறன் வகையாறாக்களோ இல்லை. அவர்...காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர்..திரு.கே.வி.தங்கபாலு.

தங்கபாலுவுக்கு காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்துவருவதால், அதை திசை திருப்பவே இப்படி ஒரு நாடகத்தை செய்து இருக்கிறார்" என்று குற்றம் சாட்டுகிறார்கள் அவரால் நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் போன்றோர்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அனைவருடனும் யாரும் எந்த வித தொடர்பும் வைத்துகொள்ளகூடாது என்றும்,அப்படி மீறி வைத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்றார். ஆனால், ப.சிதம்பரம்,ஜி.கே.வாசன் என இவரை தவிர மற்ற அனைத்து காங்கிரஸ் தலைவர்களும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்து பேசி இருக்கிறார்கள். மேலும், அவர்களுக்கு ஆதரவாக சோனியாவிடம் தங்கபாலுவுக்கு எதிராக புகாரையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

அதிமுகவை பொறுத்தவரை சசி சொல்படி ஜெயா முடிவெடுப்பார். திமுகவை பொறுத்தவரை "செயற்குழு முடிவு செய்யும்" என்று கருணாநிதி அறிவித்தால், அது ஸ்டாலின் மற்றும் அழகிரியோடு பேசி முடிவெடுப்பது என்று அர்த்தம்.

ஆனால், தொண்டர்களை விட கோஷ்டி தலைவர்கள் அதிகமுள்ள காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, கூட்டணியில் இருந்து கொண்டே கூட்டணி கட்சி தலைவரை விமர்சிப்பது, கட்சிக்குள்ளேயே கட்சி தலைவர்களின் கொடும்பாவியை சத்திய மூர்த்தி பவனில் எறிப்பது, சொந்த கட்சி தலைமையை கண்டித்து உண்ணாவிரதம் இருப்பது என்று சம்பவங்கள் தொடர்கின்றன.

உணமையிலேயே, "உட்கட்சி ஜனநாயகம்" என்பது மற்ற எந்த கட்சிகளையும் விட காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கிறது.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரின் மனைவி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார். ஆனால்,அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு, மாற்று வேட்பாளாராக அவரது கணவர் அறிவிக்கபடுகிறார்.

வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு காரணம்...அந்த மனுவில் "கையெழுத்து" போடவில்லையாம். மைலாப்பூரில் தங்கபாலு மற்றும் அவரது மனைவி ஜெயந்தி தங்கபாலு அரங்கேற்றிய கூத்துதான் இது.

கூட்டணி ஆட்சி வந்தால், எப்படியும் மாநில அமைச்சர் பதவி வாங்கி விடலாம் என்று கணக்கு போட்டு, மயிலாப்பூரில் போட்டியிட்டு இருக்கிறார் தங்கபாலு. தேர்தலில் தோற்றால் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கபடுவார். திமுக கூட்டணி வென்றால், இன்னும் கட்சிக்குள் வலுவாக இருப்பார் என்று தெரிகிறது.

போர்ஜரி செய்வதில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இரண்டும் கலந்து செய்த கலவையாய் இருக்கிறார் கே.வி.தங்கபாலு.

இதன் உச்ச கட்டமாக, கே.வி.தங்கபாலு சம்பத்தில் தனக்கு எதிராக கட்சிக்குள் நடைபெறும் எதிர்ப்புகள் குறித்து ஒரு பதில் அளித்து இருக்கிறார்.

" 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும், சோனியா குடும்பத்திற்கு விசுவாசமாக உள்ளேன். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் என் நண்பர்களாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன்.எல்லா மாவட்டத்திலும், வட்டார அளவிலும் எனக்கு ஆதரவாளர்கள் உள்ளனர்.

எனக்கும் தொண்டர்கள் பலம், ஆள்பலம் உண்டு. ஆனால், நான் அமைதியாகவும், அடக்கமாகவும் உள்ளேன். தமிழகம் முழுவதும் எனது ஆதரவாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். அவர்களை நான் அடக்கி வைத்துள்ளேன். நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் தமிழகமே பற்றி எரியும். ஆனால், எனக்கு கட்சிதான் முக்கியம். தொண்டர்களை தவறாக பயன்படுத்த மாட்டேன்"
என்று ஒரு பேட்டி அளித்து இருக்கிறார் தங்கபாலு-- (தங்க)பாலு தாக்கரே???

(தங்கபாலு 'தமிழ்நாடே பற்றி எரியும்' என்று சொன்னதின் அர்த்தம் , வாசன்,ப.சிதம்பரம் ஆகியோரின் கொடும்பாவிகளை அவரது ஆதரவாளர்கள் ஊருக்கு ஊர் எரிப்பார்கள் என்பதைத்தான்!)

(நன்றி..இனி,அடுத்த வாரம்)

-இன்பா

Read More...

சாய்பாபா1926 - 2011

Read More...

Friday, April 22, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 22-4-2011

டேய் இட்லி!
நல்லா இருக்கியா?
ஒரு வாரமா கடையத் தொறக்காம மூடி வெச்சுட்ட. டாஸ்மாக் இல்லாத தமிழ் நாடு மாதிரி இருந்தது. அதனால் ஒழுங்காப் போஸ்ட் போடு கடைல கல்லாக் கட்டு என்று ப்ரைவேட்டாக ஒரு வரி வார்னிங் லெட்டர் வந்தது. அதனால் உனக்கு பப்ளிக்காக இந்தக் கடிதம். தேர்தல் பணி அதனால் கொஞ்ச நாளா கடிதமோ போஸ்டோ எழுத முடியவில்லை. இப்போ தேர்தல் செய்தியோடவே லெட்டரை ஆரம்பிக்கறேன். இந்த முறை தமிழ்நாட்டில் 78% ஓட்டு பதிவாகியிருக்கிறது அதனால் பலருக்கு வயிற்ற கலங்கியிருக்கிறது. ஒரு வேளை எல்லா தொகுதியிலும் இடைத்தேர்தல் என்று மக்கள் நினைத்துவிட்டார்களோ என்னவோ. காலை 8 மணிக்கே கூட்டம்

அலைமோதியது என்றால் பார்த்துக்கொள். மக்கள் எல்லோரும் திமுக அரசின் மீது இருக்கும் கடும் வெறுப்பில் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. கமல் போன்ற உண்மையான சிடிசன்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தது கூடக் காரணமாக இருக்கலாம். தேர்தல் நாள் அன்று ஓட்டு போட்டுவிட்டு வந்த வாக்காளர்களிடம் பேச்சு கொடுத்த போது கிடைத்த தகவல் - நிறைய பேர் அதிமுகவிற்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். அவர்கள் சொன்ன காரணம் திமுக வர கூடாது. சிலர் பி.ஜே.பிக்கு கூட வாக்கு போட்டிருக்கிறார்கள் - அவர்கள் சொன்ன காரணம் போன தடவை தேமுதிகவிற்கு போட்டேன் இந்த முறை அவர்கள் அதிமுகவில் சேர்ந்துவிட்டார்கள் அதனால் இவர்கள். சரி, எது எப்படியோ, என்னுடைய கணிப்பு இங்கே


அதிமுக கூட்டணிக்கு கிடைக்க கூடிய தொகுதிகள் : 186
திமுக கூட்டணிக்கு கிடைக்க கூப்ச்டிய தொகுதிகள்: 48


தமிழர்கள் மடையன்கள் என்று திட்டு வாங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!.

டமிலன் என்ற இட்லிவடை வாசகர் எனக்கு சில கார்ட்டூன் அனுப்பியுள்ளார் அதை இங்கே போடுகிறேன் நல்லா இருக்கு. இதே போல 2G குறித்து ஒரு கார்ட்டூன் அனுப்பியுள்ளார், ஆனால் அது கொஞ்சம் ஓலடாக இருக்கு. ஆமாம் இப்ப கனிமொழி, தயாளு என்று நிறைய சேர்க்க வேண்டியுள்ளது அதை சில நாட்களில் போடுகிறேன். இவர் தொடர்ந்து இட்லிவடைக்கு எழுதுவார் என்று நம்புகிறேன்.
கலைஞர் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் தேர்தல் காலத்தில் ஒரு ஒற்றுமை அது - ஞாபகம் வருதே பாடல், சும்மா சொல்லக்கூடாது இந்த பாடலுக்கு இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் எப்படி புகழ்ந்துக்கொள்கிறார்கள்!

சரி சினிமா பக்கம் வரலாம், நடிகை சுஜாதா காலமான செய்தியை ஏன் இட்லிவடையில் போடவில்லை என்று ஒருவர் கேட்டிருந்தார். சரி சுஜாதாவிற்கு ஒரு அஞ்சலி குறிப்பு எழுத சொல்லி ஒரு எழுத்தாளரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் "நான் என்ன அவ்வளவு வயசானவனா? வேற ஆளைப்பாரு" என்று. சுஜாதா பற்றி எந்த ஒரு பத்திரிக்கையும் பெரிதாக ஒரு செய்தியும் போடவில்லை. ஒரு பத்திரிக்கையில் சிவகுமார் இரண்டு பக்கம் எழுதியிருந்தார், விகடனில் பொக்கிஷம் பகுதியில் அவருடைய பழைய பேட்டி ஒன்று போட்டிருந்தார்கள். இத்தனைக்கும் இவர் சிவாஜி, ரஜினி, கமல் எல்லா முன்னனி நடிகர்களுடன் நடித்துவிட்டார். சிவாஜி அழும் படங்களில் அவருடன் சேர்ந்து ஈக்வலாக அழுதிருக்கிறார். சிவாஜியின் ஓவர் ஆக்டிங்கைப் பார்த்துப் பூரித்த தமிழ்மக்கள் இவரைக் கண்டுகொள்ளாதது கொஞ்சம் வருத்தம் தான்.

வேகமாகப் பந்து எறியும் இலங்கை வீரர் மலிங்கா தனக்கு ஃபிட்நெஸ் இல்லை என்று சொல்லி இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று ஒதுங்கி இங்கே ஐபிஎல்லில் இன்னும் வேகமாக எறிகிறார். ரெண்டு நாள் முன்னாடி இலங்கை ஸ்ரீலங்கா கிரிக்கெட் போர்டு ஐபில் ஆடும் இலங்கை வீர்கள் உடனடியாக திரும்ப உத்தரவிட்டது. பிசிசிஐ பதில் மிரட்டல் விட்டதில் பணிந்த இலங்கை வாரியம் தானொரு எடுப்பார் கைப்பிள்ளை என்று நிரூபித்தது. எல்லாவற்றிலும் காமெடியாக இன்று மலிங்கா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு என்று அறிவித்து இலங்கை வாரியத்துக்கு அல்வாக் குடுத்து இருக்காரு.

அல்வா விக்கற கடைக்கே அல்வா குடுத்து இருக்காங்க திருநெல்வேலில. ராத்திரி ஆறு மணி முதல் பத்து மணி வரை நடத்தப் படும் பிரபலமான இருட்டு கடை அல்வா என்ற பேருல போலி அல்வா விக்கறதை எதிர்த்து இருட்டுக் கடைக் காரங்க கோர்ட்டுக்குப் போக, அந்தப் பேருக்கு கிட்டத்தட்ட காப்புரிமை குடுத்திருக்கு கோர்ட்டு. எனக்கு ஒரு சந்தேகம். இப்போதான் கரண்டு நாள் பூரா இருக்கறது இல்லையே. அப்போ கரண்டு இல்லாத கடையில் பகலிலும் இருட்டுல அல்வா பண்ணி இருட்டுக் கடை அல்வா என்று வித்தாத் தப்பா என்ன? வேணும் என்றால் வித்தா அதை பகலிருட்டுக் கடை அல்வா என்று போட்டுக்க இட்லிவடை சிபாரிசு செய்கிறது.

ஓட்டை இல்லாத ஜட்டி இல்லை என்ற பழமொழிக்கு ஏற்றவாறு, ஊழல் இல்லாத அமைப்பு இல்லை என்ற நிலமை உருவாகியிருக்கு. தினமும் பூஷன் பூஷன் என்று ஓயாமல் மீடியா பேசி பேசி நமது சாந்தியைக் கெடுக்கிறார்கள். அமர்சிங்கை சந்தித்துப் பேசியதே கிடையாது என்கிறார்கள், ஆனால் அமர் சிங் ஒரு வழக்கில் ஆஜராக பூஷனை தனி விமானத்தில் லக்னோவுக்கு அழைத்து வந்ததாகவும் அவருக்கு வக்கீல் ஃபீஸாக 50 லட்சம் கொடுத்ததாகவும் அமர்சிங் அடித்து சொல்கிறார். யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று கண்டுபிடிப்பது பெரிய சவாலாகிவிடும் போல இருக்கு. இதற்கு இடையில் அன்னா அசாரே, சோனியாவிற்கு கடிதம் எழுதி, அவர் பதில் போட்டவுடன் திருப்தி என்று சொல்லுகிறார், அவர் கடிதத்தில் குவாத்ரோச்சி பற்றி ஒரு வரி எழுதியிருக்கலாம். எழுதினாரா என்று தெரியல.
தங்கபாலுவுக்கு எதிரா தமிழக காங்கிரஸ் கோஷ்டிகள் வரிஞ்சு கட்டி கிளம்பி இருக்கின்றன. பாவம், ரிசல்டுக்கு அப்புறம் தங்க பாலுக்கு அப்பு உறுதி ஆகிவிட்டதாம். அதற்க்கு அச்சாரமா இன்று மன்னார்குடியில் காந்தி சிலையிடம் மனு குடுத்து மொட்டை போட்டாங்களாம் காங்கிரசார். நல்ல கூத்து.

திமுக தோல்விக்கு பிறகு கலைஞர் செய்ய வேண்டிய முதல் வேலை - ஸ்டாலின் தான் வாரிசு என்று அறிவிக்க வேண்டும். இந்த தேர்தலுக்கே அவர் அதை செய்திருக்க வேண்டும், பாவம் அவருக்கும் வயசு ஆகிறது எவ்வளவு காலம் தான் அவர் சும்மா துணையாகவே இருப்பார், அவருக்கும் பேர பிள்ளைகள் எல்லாம் வந்துவிட்டது. கலைஞர் இந்த தேர்தலில் செய்த மிக பெரிய தவறு இது என்று நினைக்கிறேன். அடுத்த முதலவராக யார் வர வேண்டும் என்பது அரசியலில் மட்டும் இல்லை கார்பரேடிலும் இந்த போட்டி இருக்கிறது. இன்போசிஸ் நிறுவன இயக்குநர்கள் குழுவிலிருந்து மோகன்தாஸ் பாய் விலகியுள்ளார். நாராயண மூர்த்தி, மோகன்தாஸ் இருவரும் கடந்த ஒருவாரமாக கொடுத்த பேட்டிகளை பார்த்தாலே உள்ளே ஏதோ லடாய் என்பது விளங்கும்.

தமிழ்நாட்டில் இப்ப மூன்று மணி நேர 'பவர் கட்', ‘தமிழகத்தை ஆள்வது நானா? தேர்தல் கமிஷனா’ என்று கலைஞர் எரிச்சலை பார்த்தால் பவர் கட் ஏற்கனவே வந்துவிட்டது போல தோன்றுகிறது. துக்ளக் கேள்வி பதிலில் - கே : தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளைப் பொதுமக்கள் பாராட்டும்போது, கருணாநிதி மட்டும், ‘எமர்ஜென்ஸி’, ‘எதிர்க்கட்சி’, ‘தேர்தல் முடிந்ததும் பேசிக் கொள்கிறேன்’ என்றெல்லாம் சீறுவது ஏன்?
ப : ‘தேர்தல் கமிஷன்’ என்ற பெயர் இருப்பதால், ‘கமிஷன்’ வாங்கிக் கொண்டு எதையும் செய்து விடுவார்கள் – என்று நம்பி, அந்த நம்பிக்கை பொய்த்துப் போனதில் அவருக்குக் கோபம் இருக்கலாம். நாம் என்ன கண்டோம்!

இந்த கடிதத்தையும் ( முகவின் ஆட்சியும் )
இத்துடன் முடித்துக்கொள்கிறேன்,
இப்படிக்கு முனி,

திமுக ஆட்சிக்கு வரவில்லை என்றால், தங்கபாலு துணை முதல்வராக வர முடியாது என்ற ஒரே வருத்தம் தான்!


Read More...

Thursday, April 14, 2011

எஸ்.வி.சேகர் கோஷ்டி காங்கிரஸிலிரிந்து நீக்கம்

நேற்று என்.டி.டிவி ஹிந்துவில் ...

"இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு எவ்வளவு சீட்டு கிடைக்கும் ?" என்ற கேள்விக்கு
"63 கிடைக்க வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் 10-15 கிடைத்தால் பெரிசு" என்றார்.

இன்று

காங்கிரஸ் கட்சியிலிருந்து எஸ்.வி.சேகர் ( மற்றும் பலர், லிஸ்ட் ரொம்ப பெரிசு அதனால் முழுவதும் போடவில்லை)தங்கபாலு நீக்கியுள்ளார்.

Read More...

Wednesday, April 13, 2011

ரஜினி கருத்து
ரஜினி என்ன சொல்லுகிறார் ? இவர் அரசியலுக்கு வர கூடாது என்பதற்கு இந்த வீடியோவே போறும்.

Read More...

Tuesday, April 12, 2011

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் (பாகம் -2)- விஸ்வாமித்ரா

ஜன்லோக்பால் - அண்ணாவை வைத்து செய்யப் படும் ஒரு சதி விளையாட்டா? - விஸ்வாமித்ரா

அந்நியன் சினிமாவில் ஒரு அப்பா அமெரிக்காவில் இருக்கும் தன் மகனிடம் நாடே அமைதியாகி விட்டது என்றும் லஞ்ச ஊழல் இல்லாமல் அலம்பி விட்ட மாதிரி இருப்பதாகவும் சொல்லுவார். அண்ணா தன் உண்ணாவிரதத்தை முடித்தவுடன் பல மெழுவர்த்திவாலாக்களும் ஏன் அண்ணாவும் கூட அப்படியே நினைத்து விட்டார் போலிருக்கிறது எல்லாம் நல்லபடியாக முடிந்தது இனி ஒரு பய ஐந்து பைசா வாங்கமாட்டான் என்று அனைவரும் முடிவுக்கு வந்து விட்டாற் போலத் தெரிகிறது. இதில் உச்சக் கட்ட காமெடி என்னவென்றால் இது ஊழல் எதிர்ப்பிற்கும் நம் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என்று மன்மோகனும் காங்கிரஸ்காரர்களும் வெற்றி விழா கொண்டாடியதுதான். ஆக இது யாரை எதிர்த்து நடந்த போராட்டம்? மன்மோகனும் ஊழலை எதிர்க்கிறார் என்றால் ஊழலைச் செய்வதுதான் யார்? கடாஃபியா? முஷாரஃபா? யாரை எதிர்த்து மெழுகு வர்த்திகள் ஏற்றப் பட்டன? யாரை எதிர்த்து ஊர்வலங்கள் போனார்கள்? முதலில் ஆங்கோர் காட்டினின் பொந்தினில் வைக்கப் பட்டது நிஜமாகவே அக்கினிக் குஞ்சுதானா?ஜன்லோக்பால் அமைப்பு வேண்டும் என்றும் அது எப்படி இருக்க வேண்டும்? எப்படி இயங்க வேண்டும்? அதில் யார் யார் உறுப்பினராக இருக்க வேண்டும்? அதன் எல்லைகள் என்ன? அவர்கள் யார் யாரை விசாரிக்கலாம்? எப்படி விசாரிக்கலாம்? யார் யாருக்குத் தண்டனை கொடுக்கலாம்? அதன் வரம்புக்குள் எந்த அரசியல்வாதிகள் எந்தெந்த அதிகாரிகள் வருவார்கள்? இவை அனைத்தையும் விவரிக்கும் ஒரு வரைவுத் திட்டம் ஒன்றை இந்த ஜன்லோக்பால் இயக்கத்தினர் ஏற்கனவே திட்டமிட்டு தயாரித்திருக்கிறார்கள். அது நல்ல விஷயம் தான். ஒரு போராட்டத்தை நடத்தும் முன்னால் அதைப் பற்றிய தெளிவு இருக்க வேண்டும். அரசாங்கம் செய்யத் தவறியதை இந்தத் தனியார்கள் செய்ய முயலும் பொழுது அரசாங்கம் எதைச் செய்ய வேண்டும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இவர்கள் சொல்லத் தயாராக இருக்க வேண்டும். அதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் அதை உருப்படியாகச் செய்யவில்லை என்ற குற்றசாட்டு அடுத்து எழுகிறது.

இது நாள் வரை ஒரு லோக்பால் சட்டத்தை நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் கொண்டுவரத் தயாராக இல்லாத காரணத்தினால் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் விதத்தில் இந்தப் போராட்டத்தை அண்ணா ஹசரே முன்னெடுத்து நடத்துகிறார். அதுவும் சரியானதே. இப்பொழுது ஆளும் கட்சி மூன்று உறுப்பினர்களையும் போராட்டக் குழுவில் இருந்து சில உறுப்பினர்களையும் சேர்த்து ஒரு பத்து பேர் கொண்ட குழுவை உருவாக்கியுள்ளது. இந்தக் குழு போராட்ட இயக்கத்தினர் சமர்ப்பித்த திட்ட வரைவைப் படித்து ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்து இறுதி வரைவு ஒன்றை உருவாக்கில் பாராளுமன்றத்தின் விவாதத்திற்கு வைப்பார்கள். அதன் பின் பாராளுமன்றம் ஓட்டெடுப்பு நடத்தி இதை சட்டமாக்கலாமா வேண்டாமா அல்லது மறுபரீசீலனை செய்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பார்கள். இதை விட அரசியல்வாதிகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மகளிருக்கான 33% இட ஒதுக்கீடே இன்று வரை சட்டமாகவில்லை என்பது நினைவில் கொள்ள வேண்டும். இத்தனைக்கும் அதற்கு ஆளும் கட்சியும் பிரதான எதிர் கட்சியான பி ஜே பி யும் ஆதரவு தெரிவித்துள்ள ஒரு மசோதா. அப்படி அதற்கே ஒரு முடிவு ஏற்படாத நிலை இருக்கும் பொழுது, ஹி ஹி அரசியல்வாதிகள் ஊழல் செய்தால் உள்ளே வைப்போம் என்று சொல்லும் இந்த ஜனலோக்பாலை நினைத்தாலே பரிதாபமாக இருக்கிறது. ஆகவே அதற்குள் வெற்றி விழா கொண்டாடி விட வேண்டாம் கொஞ்சம் பொறுங்கள் மெழுவர்த்திவாலாக்களே. ஜன் லோக்பால் வேண்டும் என்று கேட்டிருக்கிறார், கேட்டிருக்கிறார், கேட்டிருக்கிறார் அண்ணா. தருகிறோம் என்று யாருமே இது வரைச் சொல்லவேயில்லை.

இந்த ஜன்லோக்பாலின் ஆரம்ப திட்ட வரைவை சிவில் சொசைட்டியினர் (மற்றவர் எல்லாம் என்ன அன்சிவில் சொசைட்டியா என்ன?) என்று சொல்லப் படும் சிலர் தயார் செய்துள்ளார்கள். ஆரம்பத்திலேயே இன்னும் அது விவாதத்திற்கு வரும் முன்னரே அதன் மீது பல குற்றசாட்டுக்கள் கண்டனங்கள் எழுகின்றன. அரசியல்வாதிகள் தவிர்க்க விரும்பும் ஒரு சட்ட வரைவை உருவாக்கும் பொழுதே கூடிய மட்டும் இவை போன்ற பிரச்சினைகள் இல்லாத தெளிவான வரைவாக உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இந்த வரைவின் மீது சொல்லப் படும் பிரதான குற்றச்சாட்டுக்கள் சில:

1. லோக்பால் அமைப்பில் யார் யார் இருக்க வேண்டும் என்ற விதிகளிலேயே குழப்பம் உள்ளது. அதன்படி உறுப்பினர்களில் மகசேசே விருது பெற்றவர்களும், நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவழியினரும், பாரத ரத்னா பெற்றவர்களும் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. நோபல் பரிசு பெற்றவர்களுக்கும் லோக்பால் அமைப்புக்கும் என்ன சம்பந்தம்? நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் தனக்கு தேவையில்லாமல் இமெயில் அனுப்பும் ஆட்கள் மீதே எரிந்து விழுகிறார். அவர் தன் ஆராய்ச்சியைச் செய்வாரா அல்லது ஊழல் செய்யும் கழிசடைகள் எங்கெங்கு எத்தனை லட்சம் கோடி கொள்ளையடிக்கிறார்கள் என்பதைத் துப்பறிவாரா? அவருக்கு வேற வேலை இல்லை? சந்திரசேகருக்கும், வெங்கட்ராமனுக்கும், குரானாவுக்கும் இதுதான் வேலையா என்ன? ஒரு வேளை நோபல் பரிசு வாங்கிக் கொண்டு வேலை வெட்டியில்லாமல் உட்கார்ந்திருக்கும் காங்கிரஸ் ஜால்ராவும் இடது சாரியுமான அமர்த்யா சென்னை இந்திய அரசியல்வாதிகளைக் கண்காணிக்கும் ஒரு முக்கியமான இடத்தில் கொண்டு வர இந்த வெளிநாட்டுத் தொடர்புள்ள இந்த சிவில் சொசைட்டியினர் என்பவர்கள் அண்ணாவை ஏமாற்றிச் செய்த சதியோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. ஒரு முக்கியமான மசோதாவின் வரைவே இந்த லட்சணத்தில் இருந்தால் இவர்கள் மீது என்ன நம்பிக்கை வரும்? இவர்களின் அறிவு முதிர்ச்சி பற்றிய கேள்வியை இது போன்ற கேனத்தனமான ஆனால் உள்நோக்கம் கொண்ட சிபாரிசுகள் ஏற்படுத்துகின்றன. யார் இந்த சிவில் சொசைட்டியினர்? இவர்கள் பின்ணணி என்ன? இவர்கள் அமைப்பின் சொத்து விபரம் என்ன? இவர்கள் எந்த வெளிநாட்டு அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள்? இவர்களுக்கு எந்த நாடுகள் பணம் அனுப்புகின்றன என்பது போன்ற விபரங்களை முதலில் முழுக்க அறிந்த பின்னாலேயே அண்ணா இவர்களை ஆட்டைக்குள் சேர்த்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் நாளைக்கு அவர் பெயர்தான் கெடும். அண்ணா தன்னுடன் மேடையில் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருந்தல் லோக்பால் அமைப்பதை விட முக்கியம், அவசியம்.

அது போல மகசேசே விருது பெற்றவர்கள் இருக்க வேண்டுமாம்? ஏன்? மகசேசே பிலிப்பைன்ஸ்காரர் ஆனால் அந்த விருதை யார் கொடுக்கிறார்கள்? அமெரிக்காவின் பெரும் பணக்கார அமைப்பான ராக்கஃபெல்லர் பவுண்டேஷன். அமெரிக்க விருது பெறும் ஆட்களுக்கும் இந்தியாவில் திருடும் அரசியல்வாதிகளைப் பிடித்து தண்டனை வழங்கப் போகிறவர்களுக்கும் என்ன சம்பந்தம்? மீண்டும் இந்த சிவில் சொசைட்டிக்காரர்கள் உள்ளே வருகிறார்கள். இந்த சிவில் சொசைட்டி அமைப்பின் சில முக்கியமானவர்கள் இந்த ராக்கஃபெல்லர் அமைப்பின் மகசேசே விருது வழங்கப் பட்டிருக்கிறது. கிரண் பேடி என்ற சர்ச்சைக்குரிய போலீஸ்காரரும், சந்தீப் பாண்டே என்ற பயங்கரவாதிகள் மற்றும் நக்சல் ஆதரவாளர்களும் அந்த விருது பெற்ற இரு சிவில் சொசைட்டியினர். நக்சல் இயக்கத்தின் ஆதாரவாளர் இந்திய அரசியல்வாதிகளைத் தண்டிக்கும் இடத்திற்கு வந்தால் நாளைக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மேலும் இவர் பாராளுமன்றத் தாக்குதலை நடத்திய அப்சல் குரு, ஜீலானி ஆகியோரின் விடுதலைக்குப் போராடியவர். ஆக இவரைப் போன்றவர்களை உள்ளே நுழைக்கத்தான் இந்த மகசேசே சிபாரிசே இடம் பெற்றுள்ளது என்பது இந்த ஜன்லோக்பால் அமைப்பினர் மீதான பிராதனக் குற்றச் சாட்டு. இதெல்லாம் அண்ணாவுக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. மேலும் இந்த சிவில் சொசைட்டியில் முக்கியமான நபர் சுவாமி அக்னிவேஷ் என்பவர். இவர் துறவியின் வேடத்தில் இருந்தாலும் கூட வல்சன் தம்பு மற்றும் ஹிந்து பத்திரிகையுடன் சேர்ந்து கொண்டு இவர் செய்வதெல்லாம் இந்து மத நலன்களுக்கு எதிரானதே. இப்படி ஒரு கும்பலைத் தன் மேடையில் வைத்துக் கொண்டிருக்கும் அண்ணா போராட்டத்திற்கு ஆதரவு தர வந்த உமா பாரதி போன்றோரை அவமானப் படுத்தித் திருப்பி அனுப்பினார். தேசத் துரோகிகளைத் தன் துணையாக மேடையில் வைத்துக் கொண்டு தேச நலனில் அக்கறைக் கொண்டோர்களை அவமதித்திருக்கிறார்கள்.

இந்தியாவின் அரசியல்வாதிகளை விசாரிக்க அமைக்கப் படும் ஒரு சக்திவாய்ந்த அமைப்பின் உறுப்பினர்கள் இந்திய நலனில் அக்கறை கொண்டோராக இருப்பதே முக்கியமே அன்றி வெளிநாட்டு அமைப்புக்களால் விருது கொடுக்கப் பட்டோரும் தேசத் துரோகிகளும் அல்லர். இதை இந்த அமைப்பினர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

முதலில் இந்த லோக்பால் அமைப்பில் யார் யார் உறுப்பினராக இருக்கலாம். அவர்கள் எந்த முறையில் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் அவர்களின் தகுதிகள், அவர்களை யார் பதவி விலக்க முடியும், அவர்கள் அப்பழுக்கற்றவர்கள் என்று அடையாளம் காணுவது எப்படி என்பது போன்ற முக்கியமான விஷயங்களை அண்ணா சிவில் சொசைட்டி என்னும் அல்லக்கைகளின் உள்கை இல்லாமல் முடிவு செய்து கொள்வது மிக மிக முக்கியமாகும். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் கே ஜி பாலகிருஷ்ணன்களும், பி ஜே தாமஸ்களும், தினகரன்களும், நவீன் சாவ்லாக்களும் இந்த அமைப்பிலும் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்து விடுவார்கள். முக்கியமாக அரசியல் பழிவாங்கலுக்கு இந்த அமைப்பைப் பயன் படுத்திக் கொள்ளும் அபாயம் உள்ளது. இதில் யார் யார் உறுப்பினர்கள் என்பதில் எதிர்க்கட்சியான பி ஜே பி யின் முடிவையும் கேட்க்க வேண்டியது மிக மிக அவசியம். இன்று சோனியாவின் நிழல் அமைப்பாக உருவாக்கப் படுகிறதோ என்ற சந்தேகத்துக்குள்ளாகும் அமைப்பு பின்னாளில் எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கும் அமைப்பாக மாறி விடக் கூடாது. அண்ணா இந்த விஷயத்தில் உள்நோக்கத்துடன் மகசேசே மற்றும் நோபல்களை சிபாரிசு செய்பவர்களை ஒதுக்கி வைப்பது அவருக்கும் நாட்டுக்கும் நல்லது. மேலும் இந்த வரைவுக் குழுவில் எதிர்கட்சியினர் இடம் பெறாமல் தனது சிவில் சொசைட்டி ஆட்களும் ஊழல் சோனியா காங்கிரஸின் ஊழல் மந்திரிகளும் மட்டும் உறுப்பினர்களாக இருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. அது பின்னாளில் இந்த வரைவு சட்டமாக்க்க ஓட்டெடுப்புக்குப் போகும் பொழுதும் விவாதத்தின் பொழுதும் கடும் சிக்கலை சந்திக்க நேரிடும். ஆகவே இப்பொழுதே அண்ணா பிரதான எதிர்க்கட்சியினரையும் இந்தக் குழுவில் சேர்க்க வேண்டும். அப்படி அவர்களை விலக்கி வைத்து விட்டு வெறும் சிவில் சொசைட்டியினரும் ஊழல் சோனியாவின் அல்லக்கைகளும் மட்டுமே சேர்ந்து ஒரு குழு அமைப்பது இவர்களின் நோக்கங்களை சந்தேகத்துக்குள்ளாக்குகிறது.

2. இவர்கள் மீது வைக்கப் பட்டுள்ள அடுத்த குற்றசாட்டு இவர்கள் இந்தியாவின் சட்டப் படி தேர்ந்தெடுக்கப் பட்ட அரசியல் அமைப்பின் உரிமையில் குறுக்கிடுகிறார்கள் என்பதாகும். அது செல்லாத ஒன்று. இது நாள் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பாராளுமன்றம் யாருக்கும் கட்டுப்படாமல் எந்த வித ஊழல்களையும் எவரது கண்காணிப்பும் இன்றி செயல் பட்டு பல லட்சம் கோடி ரூபாய்களைக் கொள்ளயடித்ததினாலும், அவர்களை ஒரு சட்டத்திற்குள் அடைத்துக் கொள்ள மறுப்பதினாலுமே இது போன்ற போராட்டங்கள் எழுகின்றன. அவர்கள் செய்யா விட்டால் அவர்களை மக்கள் செய்ய வைக்க வேண்டும், ஆகவே இந்தப் போராட்டக் குழுவினர் சட்டம் உருவாக்குவதைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டதற்கு அவர்களைக் குறை சொல்ல முடியாது. அரசியல்வாதிகளும் ஆளும் கட்சியுமே பொறுப்பு.

அண்ணா ஹசரேயின் குழுவினர் லோக்பால் அமைப்பிறு விசாரணை செய்யும் தண்டனை அளிக்கும் போலீஸ் அதிகாரம் கேட்ப்பதும் நியாயமான ஒன்றே. அப்படியாகப் பட்ட அதிகாரம் இந்த அமைப்புக்குக் கிடைக்கா விட்டால் இந்த அமைப்பு உருவாவதில் எந்தவித அர்த்தமும் இல்லாமல் போய் விடும். சி பி ஐ யின் ஊழல் விசாரிப்புப் பிரிவும் தேவைப்பட்டால் சிறப்புக் குழுவும் இதன் கீழ் வர வேண்டும். மேலும் இந்த அமைப்பு குற்றம் சாட்டும் அரசியல்வாதிகளை விசாரிக்க ஒரு சிறப்பு விரைவு நீதி மன்றமும் இந்த அமைப்பின் கீழ் வர வேண்டும். பிரதமரும், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியும் கூட இந்த அமைப்பின் எல்லைக்குள் வர வேண்டும். அப்படிப் பட்ட சர்வ வல்லமையுள்ள ஒரு அமைப்பாக இது உருவாகும் பொழுது இந்த அமைப்பினர் தவறு செய்தால் இவர்களை யார் விசாரிப்பது தட்டிக் கேட்ப்பது இதில் உள்ள செக் அண்ட் பாலன்ஸ் என்ன என்பது பற்றியும் மிகத் தெளிவான வழிமுறைகள் வகுக்கப் பட வேண்டும். கே ஜி பாலகிருஷ்ணன், ராமசாமி, தினகரன் போன்ற ஊழல் கறை படிந்த நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளாக ஊடுருவ முடிவதால் கருணாநிதி போன்றவர்கள் நியமிக்கும் பொறுக்கிகளும் ரவுடிகளும் அடியாட்களும் கூட அடியாட்கள் சுப்ரீம் கோர்ட் வரை நீதிபதியாக வந்து விட முடிவதால் நீதிபதிகளை விசாரிக்கும் முழு உரிமை இந்த ஜன் லோக்பால் அமைப்பிற்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதை அமைப்பதில் பயனேதும் இல்லை.

அண்ணாவின் போராட்டம் நோய் முற்றிய நிலையில் செய்ய வேண்டிய அறுவைச் சிகிச்சையினை நடத்தச் சொல்லி நடத்தப் படும் போராட்டமாகும். ஆனால் இந்தியாவின் தேவை இன்னும் பல ஆயிரம் அண்ணா ஹசரேக்கள். ஊழலின் ஊற்றுக் கண்களை அடைக்க அவர்கள் போராட வேண்டும். தேர்தல் சீர்திருத்தம் கொணரப் போராட வேண்டும். அரசாங்கத்தின் எந்த பிரிவிலும் எந்தவொரு லஞ்சத்திற்கும் சாத்தியமேயில்லாத சீர்திருத்தங்களைக் கொணரப் போராட வேண்டும் அதற்கு இன்னும் ஆயிரம் தலைமைகளும் அவர்களுக்கு நமது ஆதரவும் வேண்டும். ஆனால் அத்தகையப் போராட்டங்களில் சுயநலமிகளும் தேசத் துரோகிகளும் புகுந்து விடாமல் தடுக்க வேண்டிய கடமைகள் அண்ணா போன்றவர்களிடம் உண்டு. குறைகளை நீக்க வேண்டும்,. சந்தேகத்திற்கிடமானவர்களைத் தவிர்க்க வேண்டும். இரண்டும் அண்ணா உடனடியாகச் செய்ய வேண்டியவை.


இனி அண்ணாவின் போராட்டம் குறித்து ஏற்பட்டுள்ள முக்கியமான சில சந்தேகங்கள்:

1. இந்தப் போராட்டத்தை சோனியாவின் ஆதரவாளர்களும், சில என் ஜி ஓ அமைப்புகளும் திட்டமிட்டே தங்களுக்கு ஆதரவான ஒரு லோக்பால் அமைப்பை உருவாக்கிக் கொண்டு வேண்டாத அரசியல்வாதிகளை ஒழிக்கப் போடும் சதி என்றும் அதில் அண்ணாவைத் தந்திரமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்கள் என்பதுமாகும். சரத் பவாரை ஊழல்வாதி என்றும் அவர் விலக வேண்டும் என்று குற்றம் சாட்டிய அதே அண்ணா ஹசாரே சோனியாவை தலமை ஏற்றுக் கொள்ள அழைத்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். சரத்பவாரை விட பல்லாயிரம் மடங்கு மோசமான கொள்ளைக்காரியான சோனியாவை அண்ணா அங்கீகரிப்பதும் குழுவுக்குத் தலமையேற்கச் சொன்னதும் அவர் மீதும் இந்தப் போராட்டத்தின் மீதும் கடும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. சோனியா ஏற்கனவே நேஷனல் அட்வைசரி கவுன்சில் என்றொரு அமைப்பை ஏற்படுத்தி மன்மோகன் சிங்கின் அரசுக்குப் போட்டியாக ஒரு பாரலெல் அரசாங்கத்தை நடத்தி வருகிறார். அந்த அமைப்புக்கு இன்னும் அதிகாரம் வேண்டும் என்றும் சோனியாவின் அந்த அமைப்பு இந்த லோக்பால் சட்டத்தில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அண்ணா கோருவது இது சோனியாவிற்கு ஆதரவான ஒரு சூழலை அமைப்பைத் தோற்றுவிக்கும் சதித்திட்டமோ என்ற சந்தேகத்தை கடுமையாக ஏற்படுத்துகிறது. இதை விலக்க வேண்டியது அண்ணாவின் உடனடியான கடமையாகும்.

2. இது சோனியாவுக்கும் ஏற்கனவே நடக்கும் சோனியா காங்கிரஸின் மெகா ஊழல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தி சோனியாவுக்கு புனித அந்தஸ்தை உருவாக்கும் ஒரு சதியாகவும் சிலரால் சந்தேகிக்கப் படுகிறது. சரத் பவார் ஊழல்வாதி என்று சந்தேகத்துக்கிடமில்லாமல் சொல்லும் அதே அண்ணா சோனியா என்று வரும் பொழுது தன் கண்களை மூடிக் கொள்வது முரணாக உள்ளது. சோனியா ஏற்கனவே தன் நண்பர் குவட்ரோச்சியை போஃபோர்ஸ் வழக்கில் இருந்து தன் செல்வாக்கைப் பயன் படுத்தி சி பி ஐ யின் கைகளை முறுக்கி தலையிட்டு விடுதலை செய்ய்ய வைத்துள்ளது மாபெரும் குற்றமாகும். ஹசன் அலி என்னும் குதிரை வியாபாரியிடம் எப்படி 8 பில்லியன் டாலர்கள் வந்தது அது யார் பணம் என்பதை விசாரிக்க சோனியா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். ஹசன் அலியை சோனியாவின் உதவியாளர்கள் அடிக்கடி சந்தித்தும் வருகிறார்கள். சுப்ரீம் கோர்ட் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த பிறகும் கூட சோனியா ஹசன் அலியை விசாரிக்க விடாமல் தடுத்து வருகிறார். ஸ்விஸ் வங்கியில் சோனியா மற்றும் ராகுலின் கணக்குகளை வெளியிட சோனியாவின் அடியாள் பிரணாப் பிடிவாதமாக மறுத்து வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியாவின் சகோதரிகளுக்கும் மருமகனான ராபர்ன் வடோராவுக்கும் தொடர்பு இருப்பதாக மன்மோகனிடம் குற்றசாட்டு வைக்கப் பட்ட பின்பும் அதை சி பி ஐ விசாரிக்க மறுத்து வருகிறது. இப்படி இன்னும் பல்லாயிரம் குற்றசாட்டுக்களும் பல கோடி கோடி ரூபாய்கள் கொள்ளையடித்த ஒரு சோனியாவை அண்ணாவும் சிவில் சொசைட்டியும் அங்கீகரிப்பது ஏன் என்ற சந்தேகமும் இந்தப் போராட்ட அமைப்பின் மீது எழுப்பப் படுகிறது? இதற்கும் தெளிவான பதிலை அண்ணா பொதுமக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அண்ணா மட்டும் துயவராக இருந்து பயனில்லை. அவர் யாருடன் சேர்ந்து இந்தப் போராட்டத்தை நடத்துகிறாரோ அவர்களது பின்ணணிகளும் சொத்து விபரமும் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் அது சிவில் சொசைட்டியா அன்சிவில் சொசைட்டியா என்பது தெரியாமல் போய் விடும்.

3. இதே போல ஊழலை எதிர்த்து இந்தியா முழுவதும் இயக்கம் நடத்திய சுவாமி பாபா ராம்தேவ் அவர்களின் போராட்டத்தை இருட்டடிப்பு செய்த நம் ஆங்கில மீடியாக்கள் அண்ணா ஹசராவின் போராட்டத்திற்கு மட்டும் ஒளி வட்டம் பாய்ச்சி விளம்பரம் அளித்து அதை நாடு தழுவிய ஒரு போராட்டமாக மாற்றியதும் கடும் சந்தேகத்திற்கு உள்ளாகிறது.


2008ம் வருடம் நவம்பர் 26ம் தேதியை நாம் மறந்திருக்க முடியாது. இந்தியா மீது ஒரு அறிவிக்கப் படாத யுத்தத்தை பாக்கிஸ்தான் தனது பயங்கரவாதிகள் மூலமாக நிகழ்த்திய பயங்கரமான நாள். அன்று நாடு முழுவதும் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலவீனமான மக்களைப் பாதுகாக்க முடியாத கையாலாகத மன்மோகன் அரசு மீதும் அப்பொழுது இருந்த உள்துறை மந்திரி மீதும் இந்திய மக்களிடம் கடுமையான ஒரு ஆத்திரமும், கோபமும், விரக்தியும் எழும்பியது. பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் இஸ்லாமிய ஓட்டு வங்கியை இழந்து விடுவோம் என்ற ஓட்டுக் கணக்கின் காரணமாக ஆளும் சோனியா காங்கிரசும் மனசாட்சியும் முதுகெலும்பும் இல்லாத மன்மோகன் சிங்கும் பொட்டா சட்டத்தை விலக்கினார்கள், அப்சல் குரு போன்ற பயங்கரவாதிகளைத் தூக்கில் போடாமல் காலம் தாழ்த்தினார்கள். ஆஸ்த்ரேலியாவில் கைது செய்யப் பட்ட பொழுது தன் தூக்கத்தை இழந்ததாக ஒப்பாரி வைத்தார் மன்மோகன். பயங்கரவாதிகளை காங்கிரஸ் மந்திரிகள் பாதுகாத்தார்கள் அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்தார்கள் விளைவு மும்பாய் தாக்குதல். உடனே மக்களின் எதிர்ப்புணர்வும் கோபமும் ஆளும் கட்சியின் மீது திரும்பி விடக் கூடாது என்பதற்காக மிகத் தந்திரமாகத் திட்டமிட்டு ஆளும் சோனியா காங்கிரஸானது தனது மீடியா பலத்தினால் பிரச்சாரத்தை டி விக்களில் முடுக்கி விட்டது. அரசியல்வாதிகள் பொத்தாம் பொதுவாகத் திட்டப் பட்டார்கள். மக்களின் கோபம் அனைத்தும் பி ஜே பி மீது திருப்பி விடும் பிரச்சாரம் மீண்டும் மீண்டும் இந்த மோசடிக்காரர்களினால் திட்டமிட்டு நடத்தப் பட்டது. மூளைச் சலவை செய்யப் பட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் மெழுகு வர்த்தி ஏந்திக் கொண்டு பிரார்த்தனைச் செய்தார்கள். தாக்குதலுக்கு எந்த விதத்திலும் ஆளும் காங்கிரஸ் காரணமல்ல என்றும் எதிர்க் கட்சியான பி ஜே பியின் மதவாதப் போக்கு மட்டுமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று மீண்டும் மீண்டும் போதனை செய்யப் பட்டு மக்கள் மூளைச் சலவை செய்யப் பட்டார்கள். எந்த சோனியா காங்கிரஸ் அந்தத் தாக்குதல்களுக்கு காரணமாக இருந்ததோ எந்த மன்மோகன் அரசு மக்களைக் காப்பாற்ற வக்கில்லாமல் இருந்ததோ அதே சோனியா காங்கிரசுக்கு அதே மும்பையின் மூளை கெட்ட மக்கள் மீண்டும் ஓட்டுப் போட்டார்கள். ஆயிரம் மெழுகு வர்த்திகள் ஏற்றி ஊர்வலம் போய் என்ன பயன்? மீண்டும் அதே பாதகர்களுக்கு ஓட்டுப் போட்ட பாவத்தைச் செய்தனர் மெழுகுவர்த்தி வாலாக்கள். இப்பொழுது அதே மூளைகெட்ட ஜனங்கள் அதே மீடியாவினாலும் அதே சர்தேசாய் கும்பலினாலும் மீண்டும் ஒரு முறை தூண்டப் பட்டு மெழுகு வர்த்தி ஏற்றிக் கொண்டு ஊர்வலம் கிளம்பி விட்டார்கள் அடுத்த முறை ஊழல் சோனியாவின் அரசைத் தொடர வைக்க.


அண்ணாவின் போராட்டமும் கூட மூளை மழுங்கடிக்கப் பட்ட மூளைச் சலவை செய்யப் பட்ட மக்களை உருவாக்குவதை நோக்கியே நகர்த்தப் படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அது தெரியாமல் சதிகாரர்களின் கைப்பாவையாக தன்னையறியாமலேயே அண்ணா மாறிக் கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது. அதிர்ச்சி அடையாதீர்கள் உண்மை கற்பனையை விட வினோதமானதுதான். ஊழல் சோனியா அரசை எதிர்த்தப் போராட்டம் எப்படி அவர்களுக்கே ஆதரவாகத் திரும்பும் என்கிறீர்களா? எப்படி பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பொறுப்பான அரசின் மீது வெளிபப்ட்டிருக்க வேண்டிய கோபம் அவர்களுக்கு ஆதரவாகத் திருப்பப் பட்டதோ அதே போலவே இன்று ஆளும் காங்கிரஸின் ஊழல்களுக்கு எதிரான போராட்டம் அவர்களுக்கு ஆதரவாக மக்களைத் திசை திருப்பும் ஒரு சதித் திட்டமாக மாறி வருகிறதோ என்ற ஒரு அச்சம் ஒரு பெரும் சந்தேகம் அண்ணாவின் போராட்டம் மீது உருவாகின்றன. காரணம்?


இதைப் போலவே அறிவிக்கப் பட்ட ஊழலுக்கு எதிரான பாபா ராம்தேவ் அவர்களின் போராட்டத்திற்கு அளிக்காத ஆதரவை காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் அளித்து வருவதும், இந்த போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கும் சுவாமி அக்னிவேஷ் போன்றவர்களும் இந்தப் போராட்டம் ஒரு வேளை காங்கிரஸின் மீதான மக்களின் கோபத்தைத் திசை திருப்ப ஒரு சதி நடக்கிறதோ என்ற ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது. மீண்டும் மீண்டும் ஊடகங்களும் மக்களும் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள் என்று சொல்லவும் நம்பவும் வைக்கப் படுகிறார்களே அன்றி யார் அந்த அரசியல்வாதிகள் என்பதை அண்ணாவும் சரி, ராஜ்தீப், பர்க்காதத் போன்ற சோனியாவின் எடுபிடிகளும் சொல்லுவதேயில்லை. இங்கு ஊழல் அரசியல்வாதிகள் என்பது தெள்ளத் தெளிவாக சோனியாவின் காங்கிரசையும், மன்மோகனின் அரசையும் மட்டுமே வெளிப்படையாகக் குறிப்பிட்டிருக்கப் பட வேண்டும்.


எகிப்து, டுனிஷியா, லிபியா, ஏமன், பஹ்ரைன் பாணியில் இந்தியாவிலும் ஒரு உள்நாட்டுக் கிளர்ச்சியைத் துவக்குவது சாத்தியமா? அப்படித் துவக்கினால் சோனியா காங்கிரசுக்கு ஆதரவாக அதை மாற்ற முடியுமா? மீடியாக்களின் பிரச்சாரத் துணைக் கொண்டு மக்களின் மூளைகளை மழுங்கடித்து ஒரு மாஸ் ஹிஸ்டீரீயாவை உருவாக்கி சோனியாவைப் புனிதப் பிம்பமாக உருவாக்கி இந்தியாவை நிரந்தரமாக அடிமைப்படுத்த முடியுமா என்பதைச் சோதித்த ஒரு முயற்சியாக மீடியாக்களினால் உருவாக்கப் பட்ட ஒரு போராட்டமாக இதைக் காண்பவர்களும் உள்ளார்கள். அந்த ஐயங்களை நாம் உதாசீனப் படுத்தவும் நடை பெறும் சம்பவங்களைப் பார்க்கும் பொழுது முடியவில்லை.அண்ணாவும், ஊடகங்களும் தெளிவாக இது ஆளும் காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் ஊழலின் ஊற்றுக் கண் காங்கிரசே என்பதை உறுதிப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? ஏதோ ஊர் பேர் தெரியாத அரசியல்வாதிகள் மட்டுமே இந்த லோக்பால் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பது மாதிரியான ஒரு பிம்பம் திட்டமிட்டு கட்டமைத்து எழுப்பப் பட்டு வருகிறது. சோனியாவையும், மன்மோகனையும், சிதம்பரத்தையும், பிரணாப்பையும், ராஜாவையும் மறைத்து விட்டு சோளக்காட்டு பொம்மை போல அரசியல்வாதி என்றொரு முகம் தெரியாத எதிரியை திட்டமிட்டு நிறுத்த முயல்கிறார்கள். இதற்கு தன்னையும் அறியாமலேயே இடம் கொடுக்க்கிறார் அண்ணா. மக்களிடம் இது நாள் வரை சோனியாவின் மன்மோகனின் ஊழல் அரசை பொங்கிக் கொண்டிருந்த ஆத்திரமும் கோபமும் திட்டமிட்டு முகம் தெரியாத அரசியல்வாதி என்னும் வில்லனின் மீது திருப்பப் படுகிறது. அதற்கு அண்ணா ஒரு கைப்பாவையாகக் கிட்டுகிறார். ஆம் மும்பைத் தாக்குதலின் பொழுது எப்படி மக்கள் மூளை மழுங்கடிக்கப் பட்டு ஒட்டு மொத்தமாக அரசியல்வாதிகளை எதிர்த்து கேண்டில் லைட் விஜில் நடத்தினார்களோ அதே முட்டாள்த்தனத்தை மீண்டும் ஒரு முறை செய்யத் தூண்டப் பட்டிருக்கிறார்கள். வெளிப்பார்வைக்கு இது ஊழலை எதிர்த்து மக்களிடம் தோன்றிய ஒரு எழுச்சியாகத் தோற்றமளித்தாலும் இறுதியில் ஆளும் காங்கிரஸ் மீதான வெறுப்பை திசை திருப்பும் ஒரு முயற்சியாகவே திட்டமிடப் பட்ட ஒரு சதித்திட்டமாகவே தெரிகிறது.


ஜெயப்பிரகாஷ் நாராயணன் இந்திராவுக்கு எதிராக தன் புரட்சியை ஆரம்பித்த பொழுது அதற்கு ஆதரவு அளித்த அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்தே போராடினார். எந்த எதிர்க்கட்சியையும் தீண்டத் தகாத கட்சியாக கருதி அவர்களை அவமானப் படுத்தி துரத்தி விடவில்லை. மாறாக இன்று பி ஜே பி கருப்புப் பணத்தை மீட்க உறுதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. மன்மோகனின் அரசு போல இல்லாமல் ஜன் லோக்பால் வரவை சட்டமாகக் கொணர முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. மன்மோகனும் காங்கிரஸ் கட்சியும் அதை ஏற்கவே மறுக்கின்றனர். ஆனால் இந்தப் போராட்டத்தில் பி ஜே பிக்கு இடமில்லை என்று சொல்லி அவர்களை அவமானப் படுத்தித் துரத்தி அடிக்கிறார் அண்ணா. ஆனால் இந்த ஊழல்களின் அன்னையான சோனியாவின் அமைப்பை பாராட்டுகிறார். சோனியா ஊழலுக்கு அப்பாற்பட்ட புனிதர் என்பது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார். இறுதியில் ஒரு வித சமரசப் படுத்தப் பட்ட லோக்பால் சட்டம் அமுலாக்கும் பொழுது அனைத்துமே புனித அன்னை சோனியாவின் அருளால் மட்டுமே நிறைவேற்றப் பட்டது ஊழலை ஒழித்த கட்சி காங்கிரஸ் மட்டுமே என்ற பெயர் ஏற்படுத்த நடக்கும் சதித் திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகமும் அண்ணாவின் ஒரு சில நடவடிக்கைகள் ஏற்படுத்துகின்றன.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் தன் போராட்டத்தை அறிவித்த பொழுது அது இந்திராகாந்தியின் அடக்குமுறைக்கு எதிரான ஒரு போராட்டம் என்பதையும் இந்திராகாந்தியும் அவரது காங்கிரஸ் கட்சியுமே எதிரிகள் என்பதைத் தெளிவாக உணர்த்தினார். இந்திராவின் எந்த நடவடிக்கைகளையுமே அவர் ஆதரிக்கவில்லை பாராட்டவில்லை. இருபது அம்சத் திட்டம் போன்ற மோசடிகளை அவர் அங்கீகரிக்கவில்லை. தன் பின்னால் தன் போராட்டத்தினை ஆதரிக்கும் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்தார். மாறாக அண்ணா தனக்குப் பின்னால் சந்தேகமான காங்கிரஸ் ஆதரவு போக்கு கொண்டவர்களைக் கொண்டுள்ளார். சோனியாவின் என் ஏ சி மற்றும் என் ஆர் இ ஜி ஏ போன்ற திட்டங்களை ஆதரிக்கிறார். ஆளும் காங்கிரஸ் கட்சியும் அதன் தலமையும் அதன் பிரதமருமே ஊழலின் ஊற்றுக்கண் இந்த தேசத்தின் எதிரிகள், நாட்டைப் பாழாக்கும் அயோக்கியர்கள் என்பதைத் தெளிவாக வரையறுக்க மறுக்கிறார். பொத்தாம் பொதுவாக அரசியல்வாதிகளைக் குற்றம் சாட்டுகிறார். கண் முன்னால் ஸ்பெக்ட்ரமும், காமென் வெல்த் விளையாட்டு ஊழலும், ஹசன் அலி ஊழல்களும் நிறைந்திருக்க அவர்களையெல்லாம் குற்றம் சாட்டாமல் அரசியல்வாதிகள் என்னும் நிழலை மட்டுமே ஊழல்வாதிகளாகச் சித்தரிக்கிறார். அப்படியானல் நாளைக்கு ஊழலை எதிர்க்கிறேன் என்று கல்மாடியும், ராஜாவும், மன்மோகனும் கூட இவருடன் உண்ணாவிரதம் இருக்கலாம் மெழுகுவர்த்தி ஏற்றலாம்.
எதிர்க்கட்சியினரைத் துரத்திய அதே அண்ணா கூட்டுக் குழுவின் தலைவராக கருப்புப் பண ஊழலை மறைக்கும் பிரணாப் முகர்ஜியையும், ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடக்கவில்லை, ஜீரோ லாஸ் என்று சாதித்த கபில் சிபலையும் ஏற்றுக் கொள்கிறார். மாறாக அந்தக் குழுவில் பா ஜ க முற்றிலும் தவிர்க்கப் படுகிறதுஅண்ணா ஹசாரே அவர்களின் நோக்கமும் போராட்டமும் தூய்மையானவையாகவே உயர்ந்த நோக்கம் கொண்டவையாகவே இருக்கலாம். ஆனால் அவரை இயக்கும் சிவில் சொசைட்டி அமைப்பினர் மீதும் அவருக்கு விளம்பரம் கொடுக்கும் மீடியாக்கள் மீதும் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை போக்க வேண்டிய கடமை நாம் நம்பி ஆதரிக்கும் அண்ணா அவர்களுக்கு இருக்கிறது.

அண்ணா ஹசாரே துவங்கியுள்ள இந்தப் போராட்டம் அவர் வாழ்நாளில் ஏன் நம் அனைவரின் வாழ்நாளுக்குள்ளாகவாவது ஒரு முடிவை அடையுமா என்பதைச் சொல்ல முடியாது. இருந்தாலும் நாட்டைக் கொள்ளையடித்து வரும் அரசியல்வாதிகளை விசாரிக்க ஒரு சக்தி வாய்ந்த, அதிகாரம் உள்ள நேர்மையான அமைப்பு உருவாக வேண்டும் என்ற அண்ணாவின் கோரிக்கையையும் போராட்டத்தையும் நாட்டின் நலம் விரும்பும் ஒவ்வொரு இந்தியனும் ஆதரிக்க வேண்டும். நம் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி நாமும் அரசை இந்த விஷயத்தில் வற்புறுத்த வேண்டியது மிக மிக அவசியம். ஆனால் அதே நேரத்தில் ஒரு காந்தியவாதியின் நேர்மையைப் பயன் படுத்தி அவரைக் கைப்பாவையாக வைத்துக் கொண்டு இந்தியாவின் நலன்களுக்கு எதிரான அமைப்புகள் இந்தப் போராட்டத்தினை தங்கள் சுயநலன்களுக்குப் பயன் படுத்திக் கொள்ளாத வண்ணம் நாம் எச்சரிக்கையாக இருத்தலும் அவசியம். இந்தப் போராட்டம் சோனியாவைப் புனிதப் படுத்துவதற்காகவோ, வெளிநாட்டு அமைப்புகளின் நலன்களுக்காகவோ செயல் படுமானால் அதில் இருந்து அண்ணாவை மீட்க்கவும் நாட்டை மீட்க்கவும் நாம் விழிப்புணர்வுடன் இருத்தலும் அவசியம். அண்ணாவையும் அவரது சிவில் சொசைட்டியினரையும் நாம் தாராளமாக நம்பலாம் ஆனால் அதே சமயத்தில் நாம் அவர்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் பரிசோதிப்பதும் கூட அதை விட அவசியமானதாகும். டிரஸ்ட் பட் வெரிஃபை என்று ரீகன் சொன்னதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்

மீடியாக்களினால் தூண்டப் பட்டு எதைப் பற்றியும் ஆராயாமல் கண்களை மூடிக் கொண்டு நான் ஊழலை எதிர்க்கிறேன் என்று முட்டாள்த்தனமான நம் நவநாகரீக இளைனஞர்களைப் போல மூளையை அடகு வைத்து விட்டுக் கிளம்பாமல் எந்தவொரு போராட்டமாக இருந்தாலும் அதைக் கடவுளே வந்து நடத்தினாலும் கூட அதன் உள்நோக்கங்களை, விளைவுகளைப் புரிந்து கொண்டு ஆதரிப்பதும் அவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்ப்பதும் நமது விழிப்புணர்வுள்ள உரிமையாக இருக்கட்டும். அடுத்த முறை தொலைகாட்சியைப் பார்த்து விட்டு மெழுகுவர்த்திகளைத் தேடி ஓடும் முன்னால் ஒரு நிமிடம் சிந்தித்து விட்டுப் புறப்படுங்கள். ஊழல் அரசியல்வாதிகளைத் தண்டிக்க அமைப்பும் சட்டமும் கோரும் அண்ணாவை ஆதரித்து மெழுகுவர்த்தி ஏற்றக் கிளம்பும் முன்னால் நாம் அனைவரும் அவசியம் செய்ய வேண்டிய மிக மிக அவசியமான மிக மிக முக்கியமான ஒரு கடமை நாளைக்கு நம்மை எதிர் நோக்கியுள்ளது. முதலில் அந்தக் கடமையை நாம் செய்வோமாக. அந்தக் கடமையைச் செய்து முடிப்பது மெழுவர்த்தி ஏற்றுவதை விட மிக முக்கியமானது.

அந்தக் கடமை நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் நமது வாக்குரிமையை அழிவு கொள்ளைத் கொலைத் தீமைக் கழகங்களான தி மு கவின் குடும்ப மாஃபியா மற்றும் சோனியாவின் இண்ட்டர்நேஷனல் மாஃபியாவை எதிர்த்து நமது வாக்குகளைப் பதிவு செய்வோமாக. கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் தேசத் துரோகிகளையும் நாம் இந்தத் தேர்தலில் அழிப்போம். சிறு திருடர்களையும் பிக்பாக்கெட்காரர்களையும் நாம் சமாளித்துக் கொள்ளலாம் ஆனால் இந்தக் கொலைகார நாசகாரக் கும்பலை இந்தத் தேர்தலில் நாம் அப்புறப் படுத்தா விட்டால் நாம் நம் எதிர்காலச் சந்ததியினருக்கும் கடுமையான துரோகத்தைச் செய்தவர்களாவோம். நாசகார சக்திகளை அகற்ற உங்களது ஓட்டுரிமையை நாளைக்குத் தவறாமல் பயன் படுத்துங்கள். மறந்து விடாதீர்கள்.

விஸ்வாமித்ரா

எல்லோரும் உங்கள் மனசாட்சி படி நாளை ஓட்டு போடுங்கள். அது முக்கியம்.Read More...