பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 10, 2011

Netherlands vs India -எலியைத் துரத்தி முச்சிரைத்த சிறுத்தை -எ.அ.பாலா

இந்திய அணியில் முனாஃபுக்கு பதிலாக நெஹ்ரா. வேறு மாற்றமில்லை. நவ்ஜோத் சித்து இந்த அணித்தேர்வை (அஷ்வின் சேர்க்கப்படாததை முன்னிட்டு) Lousy Selection என்றது குறிப்பிடத்தக்கது! டாஸில் வென்ற நெதர்லாந்து, பேட்டிங் செய்ய முடிவெடுத்ததில் ஆச்சரியமில்லை. இங்கிலாந்துடன் முதலில் பேட்டிங் செய்து 292 எடுத்தவர்கள் ஆயிற்றே, ஆட்டம் பார்க்க ஆர்வமாக இருக்கும் என்று நினைத்தேன். நெதர்லாந்து துவக்க ஆட்டக்காரர்களும் தொடக்கத்திலேயே விக்கெட் இழக்கக் கூடாது என்ற முடிவோடு கவனமாக நிதானமாக ஆடினர். ஸ்கோர் 57/1 (16 ஓவர்கள்) என்றிருந்தபோது, அலுவலகத்திலிருந்து புறப்பட்டேன்.

வீட்டுக்கு வந்து டிவியை ஆன் செய்தால், ஸ்கோர் 38 ஓவர்களில் 127/6. 13 ரன்களில் (from 100/2 to 113/6) 4 முக்கிய விக்கெட்டுகளை நெதர்லாந்து இழந்திருந்தது! இந்த ஆட்டத்தைப் பார்க்க இருக்கிற வேலையை விட்டு வீட்டுக்கு வந்தோமே என்று சம்ம கடுப்பு :-)


சாவ்லா 39 ஓவரை வீச, ஒரு மகா மோசமான பந்துக்கு (rank short ball) விக்கெட்! ஒரு கிளப் பந்து வீச்சாளருக்கு நிகராக பந்து வீசும் சாவ்லாவை வைத்துக் கொண்டு தோனி மாரடிப்பது ஏன் என்று சுத்தமாகப் புரியவில்லை. அஷ்வின் நிச்சயம் அணியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ரெய்னாவுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். Indian team is not Dhoni's personal property that he can select players as per his whims and fancies!


சரி, 150 கூடத் தேறாது என்று தோன்றியது! 127-7 என்றவுடன் இந்திய அணி வீரர்கள் மிகவும் Relaxed ஆக இருந்ததைப் பார்க்க எரிச்சலாக இருந்தது! The problem with us is either we are too tense when the going gets tough or too relaxed when things are going our way! பவர் பிளே தொடக்கத்தில், அதாவது 42 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 147/7 (RR: 3.50). சாவ்லா வீசிய 43வது ஓவரில், 17 ரன்கள் (2X6, 1X4). பவர் பிளேயின் இறுதி ஓவரில் (47வது) நெதர்லாந்து 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


இன்னும் ஒரு 40 ரன்கள் எடுத்திருந்தால், இந்தியாவுக்கு நிச்சயம் ஆட்டம் காட்டியிருக்கலாம். இந்தியத் தரப்பில் சகீர் கானும், பதானும் சிறப்பாக பந்து வீசினர். Our 4th bowler (Chawla) as expected is the weakest link in the bowling attack. பதானும், யுவராஜும் 5வது பந்து வீச்சாளர் இடத்தை பொறுப்பாக ஏற்றுக் கொண்டுள்ளதை மறுக்க முடியாது. தோனி சூழலுக்கு ஏற்ப, சேவாகையும், சச்சினையும் கூட பந்து வீச்சுக்கு பயன்படுத்துவதை strategy-இல் வைத்துக் கொள்வது நல்லது.


களமிறங்கிய சச்சினும் சேவாகும் அதிரடியாக ரன்களை குவித்ததில் ஸ்கோர் 59/0, ஏழே ஓவர்களில் (4வது ஓவரில் சச்சின் 3 பவுண்டரிகள், அடுத்த ஓவரில், சின்னவர் 3 பவுண்டரிகள்!) சிறிய எண்ணிக்கையிலான டோ ட்டலை துரத்தும்போது, இது போன்ற தொடக்கம் மிக அவசியம். அடுத்தடுத்து இருவரும் விக்கெட் இழந்தனர். ஒன் டவுன் இறங்கிய பதானின் பருப்பு இம்முறை வேகவில்லை, ஸ்கோர் 82/3 (RR: 8.20, RRR: 2.70). இதன் பிறகு நெதர்லாந்தின் பந்து வீச்சில் வீரியம் வந்தது. அடுத்த 5 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே, கோலி காலி :) ஸ்கோர் 99/4.


கம்பீரும் யுவராஜும் சிறப்பாக ஆடினர். 8 ஓவர்களில் 40 ரன்கள் குவித்தனர். 139/4. கம்பீர் அவுட்டான பிறகு, தோனியின் கேவலமான ஆட்டத்தைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. மிக மிக நிதானமாக தோனி ஆடியது எரிச்சலாக இருந்தது. Ultimately, India won the match in 36.3 Overs. தோனி 19 (40balls). யுவராஜ் மற்றுமொரு அரைச்சதம். அவர் பொறுப்பாக ஆடிஃபார்முக்கு வருவது அடுத்து வரும் ஆட்டங்களில் நன்மை பயக்கும் என்று நம்புகிறேன். Post match பேட்டியில், தோனி Quite a few objectives were achieved என்றார். என்ன எழவு objectivesஓ? சாவ்லாவுக்கு ஆதரவாகவும் ஏதோ உளறினார்!


உலகக்கோப்பையில் பங்கு பெற்றுள்ள டாப் 8 அணிகளில், நமது பந்து வீச்சு தான் weakest என்றால் அது மிகையில்லை. அதனால், இனி வரும் ஆட்டங்களில், பேட்டிங்கை மற்றும் நல்ல ஃபீல்டிங்கை வைத்துத் தான் அக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்! செய்வோம் என்று நம்புவோம்!


என்றென்றும் அன்புடன்
பாலா
எனக்கு ஒரு சந்தேகம் - பாலா Zooவில் வேலை செய்கிறாரா ? டைட்டில் எல்லாம் சிங்கம், சிறுத்தை..

13 Comments:

Roaming Raman said...

//எனக்கு ஒரு சந்தேகம் - பாலா Zooவில் வேலை செய்கிறாரா ? டைட்டில் எல்லாம் சிங்கம், சிறுத்தை.. //
இதெல்லாம் ரொம்ப ஓவர்... எந்த Zooவில் எலி இருக்கு?? நீங்க வண்டலூர் வந்தால் தெரிஞ்சுக்கலாம்!!
(உடனே ரோமிங் ராமன் பெருங்களத்தூர் ல இருக்கார்னு கற்பனையெல்லாம் ஓடுமே!!)

Suresh said...

Dear Idly Vadai.. endha officele vela pakuringa? Match pakradukum, blog eluduradukum time iruku.!
W(Old)orld cup jayichirivomnu maaru thatura nama india, muki muki bangladesh ireland apuram dutch kita jeyikuranga. South africa and australia kita epdi muka porangunu teriala.

Suresh said...

Dear Idly Vadai.. endha officele vela pakuringa? Match pakradukum, blog eluduradukum time iruku.!
W(Old)orld cup jayichirivomnu maaru thatura nama india, muki muki bangladesh ireland apuram dutch kita jeyikuranga. South africa and australia kita epdi muka porangunu teriala.

cho visiri said...

//8 ஓவர்களில் 40 ரன்கள் குவித்தனர்//

Yuvraj and Gambir combination -
(i) Match against Minnows -
(ii) Oneday match
(iii)World cup match.

They have scored 40 runs off 8 overs(!?).This kind of scoring at the rate of 5 runs an over is described by the author as "amassing ". Compare this with Newzeland's 100 runs in 29 balls.
(Or have I missed the satire by the respected author - if it was a satire, then well said)

Anonymous said...

இதுவரை விளையாடிய நான்கு சப்பை டீம்களிடமே சொதப்பிய இந்திய அணி , இனிவரும் அனைத்து மாட்சிலும் தோற்பது உறுதி.
குவாட்டர் பைனலில் தோற்று காலேரியில் அமர்வது உறுதி.

CS. Mohan Kumar said...

சேவாக் கை காயம் காரணமாக உலக கோப்பை முழுதும் பந்து வீச மாட்டார் என்று முன்பே கூறி விட்டார்கள். சச்சின் தற்போது அநேகமாக பந்து வீசுவதில்லை. வீசினாலும் ஓவருக்கு ஒரு சில புல் டாஸ், மோசமான ஷார்ட் பிச் பால் போட்டு ரன்னை வாரி வழங்குகிறார்.

சாவ்லா பற்றி நீங்கள் சொல்வது சரியே.

//இனி வரும் ஆட்டங்களில், பேட்டிங்கை மற்றும் நல்ல ஃபீல்டிங்கை வைத்துத் தான் அக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்! //

"ஃபீல்டிங்கை வைத்துத் தான் அக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்" எப்படிங்க இப்படி ஜோக் அடிக்கிறீங்க !!

Speed Master said...

//சாவ்லாவுக்கு ஆதரவாகவும் ஏதோ உளறினார்!


கபில்தேவும் சாவ்லாவை விட அஸ்வின் அல்லது ரெய்னா பரவாயில்லை என கூறியுள்ளார்

Vikram said...

this is what dhoni had to say on chawla's selection (ahead of ashwin)after the toss - "Compared to Ashwin, Chawla needs more practice so we decided to play him today. Ashwin is mentally stronger, and it doesn't matter against whom he comes in, he will do well."
what is chawla practicing for - 2015 WC?!

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர். said...

/*
(உடனே ரோமிங் ராமன் பெருங்களத்தூர் ல இருக்கார்னு கற்பனையெல்லாம் ஓடுமே!!)
*/

ம்ம். அடடா அப்படியே நீங்க எந்த முகவரில இல்லைன்னு சொல்லிட்டீங்கன்னா இட்லிவடைய நாங்க ஈஸியா கண்டுபிடிச்சுடுவோம். ஆமா இட்லிவடை அப்ப பெருங்களத்தூர்லதான் இருக்காரா?

/*Dear Idly Vadai.. endha officele vela pakuringa? */

ஆமா உடனே சொல்லிட்டுதான் மறுவேலை பார்ப்பார். நாங்களும் 2004லேர்ந்து கேட்டுகிட்டே இருக்கோம். சொல்ல மாட்டேங்குறாரு.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

ஒரு வாசகன் said...

முதல் மாட்சில் பங்களாதேஷ் 289 அடிக்கும் போதே அது ஒரு A rude awakening for Indian bowlers.
அனால் அவர்கள் அதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை

Vikram said...

"முதல் மாட்சில் பங்களாதேஷ் 289 அடிக்கும் போதே அது ஒரு A rude awakening for Indian bowlers."

thoongaravangala ellupallam;thoongara madhiri nadikaravangala enna panna mudiyum :(

Rajasekaran Thiyagarajan said...

matchfixing Dhoni
சுனாமி இந்தியாவை தாக்கி இந்திய கிரிககெட அணியை இழுத்து செல்ல vendum. appothuthaan நமக்கு unmaiyileye ந‌ல்ல team^ கிடைக்கும். சாவ்லா, ஹர்பஜந், நெஹ்ரா, தோனி ஒழிந்து புதிய ஆட்டக்காரர்கள் கிடைப்பார்கள்.

Rajasekaran Thiyagarajan said...

matchfixing Dhoni
சுனாமி இந்தியாவை தாக்கி இந்திய கிரிககெட அணியை இழுத்து செல்ல vendum. appothuthaan நமக்கு unmaiyileye ந‌ல்ல team^ கிடைக்கும். சாவ்லா, ஹர்பஜந், நெஹ்ரா, தோனி ஒழிந்து புதிய ஆட்டக்காரர்கள் கிடைப்பார்கள்.