பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 11, 2011

முழுமையான அரைகுறை

தமிழக மீனவர்களை படுகொலை செய்யும் இலங்கை கடற்படையை கண்டித்து நாகையில் விஜய் வேலாயுதம் பட பிடிப்பை பற்றி பேசியது நல்ல காமெடி( பார்க்க அரைகுறை பதிவு). நடு நடுவே மானே தேனே என்பது மாதிரி எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் பெயர்கள். இலங்கை அரசு செய்வது அராஜகம், ஏதோ 50-100 மீட்டர் கடல் எல்லையை தாண்டினால் என்ன தப்பு என்பது மாதிரி பேசுவது காமடியின் உச்சம். இவர் வீட்டு காம்பவுண்டுக்குள் ஒரு அடி எடுத்து வைத்தால் இவர் சும்மா இருப்பாரா ? சரி இலங்கை அரசை எப்படி தான் முரட்டுகிறார் என்று பார்த்தால் ""நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட" இதற்கு ஒரு நாடகத்தில் எஸ்.வி.சேகர் எல்.கே.ஜிக்கு லீவு விட்டுவிடலாம் என்று சொல்லுவதை விட காமெடி. உலக வரைபடத்திலிருந்து இலங்கையை தூக்கி விட போகிறாராம். எனக்கு என்னவோ இவர் தீவிரவாதிகளை அடிப்பதில் விஜயகாந்துக்கு போட்டியாக வந்துவிடுவார் என்று நினைக்கிறேன்.

அவர் சிறு வயதில் மீனவ நண்பன் படம் பார்த்ததிலிருந்து மீனவர்கள் மேல் பாசமாம், சொல்கிறார். இந்த உச்சக்கட்ட காமெடியில் எனக்கு உச்சாவே வந்துவிட்டது. கடைசியாக வேலாயுதம் படப்பிடிப்பு முடித்துவிட்டு(அதாவது அவர் வேலை, ஏதோ பொது சேவை மாதிரி பேசுகிறார்) வந்தேன் என்றார் பெருமையாக. கூட்டத்தில் வந்தவர்கள் எல்லாம் வேலை இல்லாமல் இவர் மட்டும் தான்... கடைசியாக ஒரு மகிழ்ச்சி செய்தியையும் சொன்னார், அடுத்த படத்தில் இரண்டு குத்து பாட்டு உண்டாம் ... இவ்வளவு வேதனையிலும், கல்லா மீது ஒரு கண் வைத்திருப்பதில், கலைஞரையும் மிஞ்சியவராகிறார்.
விஜய்யின் தந்தை சந்திரசேகர், ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில், "மரியாதை நிமித்தமாக" இருமுறை சந்தித்ததை நினைத்தால், இவருடைய மீனவ பாசம் புரியும். விஜய் கட்சிக்கு மன்னிக்கவும் மக்கள் இயக்கத்துக்கு மூன்று சீட், விஜயகாந்த், ஜெ, விஜய் எல்லோரும் ஒரே மேடை என்று செய்திகள்... இந்த தேர்தலை காமெடியாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்து இன்னொரு நியூஸ் இருக்கு, அதுவும் விஜய் பற்றியது தான். விஜய் இப்பொழுது கல்கியின் பொன்னியின் செல்வனை விழுந்து விழுந்து படித்து நெட்டுருப் பண்ணிக் கொண்டிருக்கிறாராம். காரணம், பொன்னியின் செல்வன் என்ற சரித்திரப் படத்தில் விஜய் ஒரு முக்கிய வேஷமேற்கவிருப்பதுதான். இன்னும் ஜெயமோகன் வசனமே எழுத ஆரம்பித்திருக்க மாட்டார். ஆனால் இவர் எதை நெட்ருப் பண்ணிக்கொண்டு இருக்கிறார் என்று தெரியலை. சரித்திரப் படத்தில் விஜய் என்பதே 23 ஆம் புலிகேசி வடிவேலு ரேஞ்சிற்குத்தான் இருக்கும். அதிலும், பொன்னியின் செல்வனில் விஜய் என்றால், முதுகுத் தண்டில் பனிக் கட்டி வழுக்கிச் செல்வது போல் திகிலாக இருக்கிறது. என்ன கேரக்டரோ தெரியவில்லை, பா.ரா தேடிக்கொண்டிருந்த வந்தியத்தேவன் இவர் தானோ ?
"இந்தக் கதையை மணி ரத்னம் இப்போது சினிமாவாக எடுக்கப்போகிறார் என்றும் ஜெயமோகன் அதற்கு எழுதிக்கொண்டிருக்கிறார் என்றும் கேள்விப்பட்டேன். அவர்கள் என்னை மன்னிக்கத்தான் வேண்டும். விஷயம் தெரிந்ததும் முதலில் சிரித்துவிட்டேன்." என்று எழுதியிருக்கார், ராமாயணத்தையே சுருக்கி ராவணன் என்று எடுக்க தெரிந்த மணி சாருக்கு இதை செய்வது என்ன பிரமாதம்? எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் மணி சார் பா.ரா நீங்க கொஞ்சம் வசனம் எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டால் உங்க பதில் என்னவாக இருக்கும் ?

கமலின் ஆலோசனைப்படி படத்திற்கான குதிரைகளை பிரான்ஸிலிருந்து தருவிக்கிறாராம் மணிரத்னம். குதிரைத் தேர்விலேயே இவ்வளவு கவனம் காட்டும் மணிரத்னம், நடிகர் தேர்விலும் அதைக் காட்டினால் நன்று. இல்லாவிடில் ஆஞ்நேயராக நடிகர் கார்த்திக்கை தேர்வு செய்த மாதிரி ஆகிவிடும். ஆனால் அவர் அனுமாராக நடித்த ராசி தேர்தல் சீட் கிடைத்துவிட்டது :-)


[ எடியூரப்பா திரும்பவும் மேலிடத் தலைவர்களை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். எடியூரப்பா ரூ.27 கோடி பெற்றதாக இந்த முறை குற்றச்சாட்டு. ஆ.எஸ்.எஸ் தொண்டரான எடியூரப்பாவிற்கு நிச்சயம் விஜய் பெட்டர் ! ]

எது எப்படியோ, இந்த விஜய் வீடியோவால் தாய்மார்களுக்கு மகிழ்ச்சி, குழந்தையை சாப்பிட வைக்க இந்த வீடியோ பயன்படுகிறதாம். பர்மா பஜாரில் டோரா, டாம் & ஜெரி காம்பினேஷனில் இது கிடைக்கிறது.

23 Comments:

(-!-) said...

:>

கானகம் said...

எல்லாம் விதி சார்..விதி..

கேனத்தனமா பேசுனா உள்ள போடுறதுக்கு ஏதாச்சும் சட்டம் இருக்கா?

இவனுக்கு இன்னும் ரசிகர்கள் கூட்டம் இருக்குங்கிறத நினைக்கவே திகிலா இருக்கு.. எவ்வளவு பொறுமைசாலிகள்னு நினைச்சு

Anonymous said...

// எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் மணி சார் பா.ரா நீங்க கொஞ்சம் வசனம் எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டால் உங்க பதில் என்னவாக இருக்கும் ? //

படத்தின் தலைப்பை ‘காவேரி காத்தவராயன்’ என்று மாத்தி கரணை ஹீரோவாக போடச் சொல்லியிருப்பாரோ? :))

பொன் மாலை பொழுது said...

இவனுக்காக நீங்க ஒரு பதிவே போட்டது மகா கொடுமை தலைவா. இவனை எல்லாம் எந்த விததில் நீங்கள் Consider பண்ணுகிறீர்கள் என்று புரியவில்லை. இது போன்றவர்களை காணாமல் விட்டுவிடுவதே நாம் இந்த சமூகத்திற்கு செய்யும் மிகப்பெரிய நன்மை.

ஒரு வாசகன் said...

//படத்தின் தலைப்பை ‘காவேரி காத்தவராயன்’ என்று மாத்தி கரணை ஹீரோவாக போடச் சொல்லியிருப்பாரோ? :))//
அது மட்டுமா..... படத்தின் பெருமைகள் பற்றி தனது பிளாக்கில் அடிக்கடி எழுதிக்கொண்டிருப்பார்

Anonymous said...

Nice

குரோம்பேட்டைக் குறும்பன் said...

இருங்க இருங்க இளைய தளபதி நாளை மீன் வளத்துறை அமைச்சர் ஆனவுடனே இருக்கு உங்களுக்கு வேட்டு!

Shri Hari said...

எதுக்கு எடுத்தாலும் RSS இழுக்கா விட்டால் இவர்களுக்கு தூக்கம் வராதா என்ன? இவர் ஒன்னும் RSS இல் இப்போது இல்லை. 27 கோடி ஊழல் பற்றி தமிழ் நாட்ல இருந்து பேசுறது கொஞ்சம் ஓவரா இல்ல? மன்மோகன் சிங்க் கூட தான் 200000 கோடி spectrum ஊழலில் சிக்கி உள்ளார். அதற்காக சீக்கிய மன்மோகன் சிங்க் என்றும், கத்தோலிக்க சோனியா என்றோ நீங்கள் கூறுவிர்களா? விஜய் பல கோடி மதிப்புள்ள நில விவாகரத்தில் சிக்கி உள்ளார். இதை பற்றி உங்களுக்கு எதாவது தெர்யுமா? அது சரி RSS கண்ட உங்களுக்கு எல்லாம் என்ன காண்டு? இன துரோகிகளான நம்மை பார்க்கும் பொழுது இவர் எவளவோ தேவல?

Unmai said...

இவனுக்காக நீங்க ஒரு பதிவே போட்டது மகா கொடுமை தலைவா. இவனை எல்லாம் எந்த விததில் நீங்கள் Consider பண்ணுகிறீர்கள் என்று புரியவில்லை. இது போன்றவர்களை காணாமல் விட்டுவிடுவதே நாம் இந்த சமூகத்திற்கு செய்யும் மிகப்பெரிய நன்மை.


repeat!!!

Anonymous said...

Athenna IV, 23rd Pulikesi range ku nu soli pulikesiya kevala paduthuringa...Vadivela did a good job in that movie..vadivelu alavukku intha alukku thamizh pesa varathu...

Ethukku ethukko telegram adikiraanga...Namma ellarum.. Vijaya ah Ponniyin Selvan film la cast panna vendamnu solli Mani Ratnam ku telegram adikalam... Oru nalla kathaiya kaapathina punniya mavathu namakku kidaikattum...

Anonymous said...

இந்தக் கொசுத் தொல்லைத் தாங்க முடியலடா.... கம்பு எடுத்தவன் எல்லாம் சண்டியர் ஆகிட்டா உலகம் அழிஞ்சிடும். இவருக்கு டாக்டரு பட்டம் கொடுத்தவன் என் கையில கிடைச்சான் .. மவனே !!!!

Roaming Raman said...

தமிழ்நாடு தலைமை பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு:

சினிமா1 அண்ணாதுரை
சினிமா2 கருணாநிதி
சினிமா3 எம் ஜி ஆர்
சினிமா4 ஜெயலலிதா
சினிமா5 விஜயகாந்த்
சினிமா6 விஜய்
(ரஜினி வந்து வந்து போவதால் சீரியல் நம்பர் தெரியவில்லை!)
7.8.9. வரிசைப் படுத்திப் பாட வாருங்கள் நண்பர்களே!!
நல்ல தமிழ்நாடு!!!!
நல்ல மக்கள்!!

ரோமிங் ராமன்

Anonymous said...

enna kodumai saravanan

சட்னி சாம்பார் said...

திமுக என்ற தீய சக்தி அழிய யார் என்ன செய்தாலும் அதை நான் வரவேற்கிறேன். மத்தபடி விஜயகாந்த் விஜய் எல்லாம் அவ்ளோ ஈசியா எதுவும் சாதிச்சிர முடியாது. இவிங்கள பாத்து கவலைப்படும் ஆட்கள் வேறு நல்ல ஆட்களுக்கு ஓட்டுப்போட தயாரா?!? முதலில் அதை செய்யுங்கள். வீண் புலம்பல் வேண்டாம்!

இட்லிவடை அவர்களே, விஜய் படம் எவ்ளோ கொடுமையா இருக்கும்னு உங்களுக்குத் தெரியும்தானே, அப்புரம் வேற எதை எதிர்ப்பார்த்தீங்க அந்த வீடியோல?!? இவன் என்ன காமராஜர் பையனா என்ன?!? எஸ்.ஏ.சி பையன் தானே, இப்படித்தான் அப்பனைவிட அதிக லூஸா இருப்பான்!

Sasi said...

இந்தியாவை போல், தமிழ்நாட்டை போல், உலகில் வேறு எங்கும் சினிமாவையும், சினிமா நடிகர்களையும், மக்கள் காதலித்ததில்லை. வெளி உலக சினிமா நடிகர்கள் எவர்க்கும், இங்கே எம். ஜி. ஆர்-க்கு இருப்பதை போல், ரஜினி-க்கு இருப்பதை போல், வேறு சில நடிகர்களுக்கு இருப்பதை போல், "வெறி"த்தனமான ரசிகர்கள் இல்லை, குப்பையான குப்பையாக படத்தை எடுத்தாலும் - அதை "தலைவன் படம்" டா என்று சொல்லி நம்மை போல், வேறு எங்கும் உலக மக்கள் ஆதரவு தெரிவிப்பதில்லை. நம் அளவிற்கு சினிமா நடிகர்களை "வாழ வைக்கும் தெய்வங்கள்" உலகில் நிச்சயமாக இல்லை.

அப்படி இருக்கையில், நாம் வாழ வைப்பவர்கள், நம்மால் உயர்ந்தவர்கள், நாம் காதலிப்பவர்கள், ஆட்சி-க்கு வந்தால், நாம் அவர்களை உயர்த்தியது போல், " நம்மையும் அவர்கள் உயர்த்துவார்கள் " என்ற ஒரு நியாமான நப்பாசை தமிழனுக்கு .... இதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை.

R.Gopi said...

ஹலோ...

எல்லாரும் வெந்த புண்ல வேலை பாய்ச்சினால், நீங்க “வேலாயுதம்" பாய்ச்சறீங்க....

ஏற்கனவே திகிலடிச்சு போயிருக்கோம்!! இதுல வெங்காயம், வேலாயுதம்னு...

Anonymous said...

நான் கடவுள் படத்தில் காவல் நிலையத்தில் வரும் வசனம்

“தலைவா நேத்து ஒரு நடிகர் நடிச்ச படத்த பாத்தேன்...அவன் மட்டும் என் கையில கிடச்சா அவன பொச்சுல அடிச்சே கொன்றுவேன்.”

பொன்னியின் செல்வனில் விஜய்-யா?.... அப்படி மட்டும் எதாச்சும் நடந்துச்சுன்னா பொச்சுல அடிச்சுகிட்டு நாமலே சாக வேண்டியதுதான்.

ttpian said...

சேவை!
எல்லா தொகுதிகளிலும் ஜெயித்து முதல் அமைச்சர் ஆனவுடன் செய்த முதல் வேலை தொப்பி தொப்பி ,
ஈரோட்டு ஜோசியர் உட்பட எல்லா பதிவரையும் (பாதுகாப்பு சட்டத்தில்) :உள்ளே தள்ளி,பத்திரமாக ரெண்டு
பூட்டு போட்டு சீல் வைத்த பிறகு ஒருவரும் இல்லாத அறையில் நிருபர் சந்திப்பு!
(கவுண்டர் பெல் மட்டும் எப்படியோ உள்ளே வந்து விட்டார்!
கேள்வி: கல்வி கொள்ளையை எப்படி தடுக்கப்போகிறீர்கள்?
அரசாங்கமே நிறைய கல்லூரிகளை திறந்து டிப்ளமோ இன் நாமம் போடுதல் , டிப்ளமோ ன் திருச்சுர்ணம் ,
சர்டிபிகாடே இன்பாத்தியா ஓதுதல் ,
முதுநிலை அளவில் ஜெபமாலை எல்லாம் கற்றுத்தரும்!

Anonymous said...

பதிவு என்றால் இது தான் பதிவு.நெத்தியடி.

ஜெயலலிதா பற்றி ஒரு விடயத்தை குறிப்பிடுகிறேன்.

நான் இலங்கையில் இருக்கிறேன்.இவர்களின் ஜெயா தொலைக்காட்சி ஒருமுறை பார்த்தேன்.தூசனம் என்றால் அப்படி ஒரு தூசனம்.எமது தமிழ் நாட்டு உறவுகள் ஒரு பழக்க வழக்கம் தெரியாத ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக வைத்திருக்கிறார்கள் எனும் போது அழுகை தான் வந்தது.

இவர்கள் எல்லாம் அம்மா என்று ஒரு கூட்டம் இவரின் காலில் கிடக்கிறது.அம்மா என்றால் என்ன என்று தெரியுமா இவருக்கு.

Anonymous said...

யோவ்,
இப்போ ஆட்சியில இருக்கவன் நல்லா பேசுற நாய் தான்!!!

அந்த நாய் என்ன புடுங்குச்சி தமிழ் நாட்டுக்காக!!

ஒருத்தன் முன்னேறுனா உங்களுக்குலாம் புடிக்காதே!!!

நீங்களா எவனும் அரசியலுக்கு வந்து ஒன்னும் புடுங்க மாட்டீங்க!!

அப்படியே வர்றவனையும் இப்படி கேவலமா பேசிக்கிட்டு பொழுத கழிக்குறதுதான் உங்க வேலை இல்ல!!!

Don said...

Of course, half baked. But remember the line - "Man in the arena"-http://www.fleurdelis.com/themaninthearena.htm . He has got "guts", and that's more than enough. And he'll read a better written script next time. Don't jump to conclusion just listening to a speech. He clearly said, he hasn't come as a politician there, so what's wrong in informing about his movies to people. Vijay's entry to politics is too early than one would have imagined. When people enter politics at their old age when they can't act any more, Vijay's entry now, shows he is motivated. It's really tough to manage two jobs - acting and politics, so there will be definitely hiccups initially and I excuse him for that. As someone said, all he needs is a good PR firm. If he had read a better script, there would have been applause. It's time people should learn to look at the actions than talks. Srilanka is actually threatening India and is trying to become the next Pakistan for India. I don't find Vijay's expressions on that as inappropriate.

Anonymous said...

http://cinema.dinamalar.com/tamil-news/3665/cinema/Kollywood/Vijay%60s-political-update.htm................... aiyoo what is he up to frickle minded....not in a stable mind ...whatever it is those who want to fan him got time to praise him...if anybody just pass negetive remarks they are not willing to accept it ... malar maalai thaan varumnu yeathir paarka mudiyaathu sila samaiyam rotten eggs kuda varum..praise pandravangallukku time irukkum poothu thatti keikaranvangallukkum time irukkum ithu jananaayaka urimai..

Anonymous said...

கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் - விஜய் ஆசை


http://www.youtube.com/watch?v=h8dKhjYn1Fo&feature=related