பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 12, 2011

பழைய வரலாறு

வரலாறு என்றாலே அது பழசு தான். இருந்தாலும் இட்லிவடை படிக்கும் வாசகர்கள் பழைய உண்மைகளை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு கட்டுரைகள்.

ஒன்று ஞாநி போன வாரம் கல்கியில் எழுதிய கட்டுரை இன்னொன்று இட்லிவடை வாசகர் ராம்ஜி அவர்கள் 1969 ஆம் ஆண்டு கண்ணதாசன் எழுதிய காட்டுரையை தட்டச்சு செய்து அனுப்பியுள்ளார். இருவருக்கும் நன்றி.

ஏன் தொடங்கினார் எம்.ஜி.ஆர்!
அ.தி.மு.க. பிரமுகர் சேகர்பாபு தி.மு.கவில் தம் ஆதரவாளர்களுடன் இணைந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது, கலைஞர் கருணாநிதி, “எம்.ஜி.ஆர் என்ன நோக்கத்துக்காக அ.தி.மு.க.வைத் தொடங்கினாரோ அதிலிருந்து அது விலகிப் போய்விட்டது. இதைத் தாமதமாக உணர்ந்தாலும், உறுதியான முடிவு எடுத்து இப்போது சேகர்பாபு அதிலிருந்து விலகி நம்மிடம் வந்திருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.

இப்படி விசித்திரமான கருத்துகளை, வரலாறு தெரியாத ஒரு தலைமுறையைக் குழப்பும் விதத்தில் விதைப்பது கருணாநிதி தொடர்ந்து பின்பற்றி வரும் சாமர்த்தியமான உத்தி.

என்ன நோக்கத்துக்காக எம்.ஜி.ஆர்., அ.தி. மு.க.வைத் தொடங்கினார்; அதிலிருந்து எப்படி அ.தி.மு.க. விலகிவிட்டது என்பதை மட்டும் கருணாநிதி எச்சரிக்கையாகச் சொல்லாமல் விட்டு விட்டார். அது என்ன என்று தெரியாதவர்கள், எம்.ஜி.ஆர். ஏதோ உன்னதமான சமூகக் கொள்கைகளைத் தூக்கிப் பிடிக்க கட்சி தொடங்கியதாகவும், அதிலிருந்து அந்தக் கட்சி விலகிவிட்ட தாகவும் அந்த மேன்மை யான கொள்கைகளை எல் லாம் தொடர்ந்து நிறை வேற்றுவது, தி.மு.க.தான் என்றும் மயக்கம் கொள்ள வைப்பதே கருணாநிதியின் நோக்கம்.

உண்மையில் ஏன் எம்.ஜி.ஆர் முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன்னால் அ.தி.மு.க.வைத் தொடங்கி னார் என்ற காரணங்கள் இப்போது ஐம்பத்தைந்து வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே நினைவில் இருக் கும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளைக் குழப்புவதற்காகவே கருணாநிதி இப்படிப் பேசியிருக்கிறார் என்பதில் சந்தேக மில்லை.

கருணாநிதி என்ற தீய சக்தியை அரசியலிலிருந்து அகற்றவும், அண்ணா உருவாக்கிய தி.மு.க.வின் அசல் நோக்கங்களைக் காப்பாற்றவும்தான், அ.தி.மு.க.வைத் தாம் தொடங்கியதாக 1972லிருந்து 1987ல் அவர் இறக்கும்வரை, எம்.ஜி.ஆர் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லி வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர். இறக்கும் வரையில் கருணாநிதியால் ஒரு தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை என்பதும் இன்னொரு முக்கிய வரலாற்றுச் செய்தி.

1972ல் எம்.ஜி.ஆர் கம்யூனிஸ்ட் கட்சியினரின் உதவியுடன் கருணாநிதிக்கும் அவரது ஆட்சிக்கும் எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் அளித்தார். அவற்றுக்கெல்லாம் சட்டமன்றத் தில் கருணாநிதி அளித்த மழுப்பலான பதில்களை அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு ஏற்கவில்லை. பிரதமர் இந்திரா காந்தி நீதிபதி சர்க்காரியா கமிஷனை நியமித்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கச் செய் தார். சர்க்காரியா கமிஷன், கருணாநிதி அரசு ஊழல்களைச் செய்திருப்பதாகத் தெளிவாக அறிவித்தது. அதன் அடிப்படையில் கருணாநிதி மீதும் அவரது சகாக்கள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த வழக்குகளைத் திரும்பப் பெறச் செய்ய, கருணாநிதி படாத பாடுபட்டார். அப்போது அவரது கூட்டாளியாக இருந்த ஜனதா கட்சி ஆட்சியின் பிரதமர் மொரார்ஜி தேசாய் வழக்குகளைத் திரும்பப் பெற மறுத்துவிட்டார். வழக்குப் போட்ட இந்திரா காந்தி காலிலேயே மறுபடியும் விழுந்துதான் கருணாநிதி அந்த வழக்குகளைத் தொடர விடாமல் தப்பிக்க முடிந்தது. இந்தச் சரித்திரமெல்லாம் நன்றாகத் தெரிந்த காங்கிரஸ்காரர்கள்தான் ப.சிதம்பரமும், தங்கபாலுவும்.

1980ல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உருவாக்கப்பட்டு எம்.பி.தேர்தலில் ஜெயித்த பின்னர், எம்.ஜி.ஆர். அரசைக் கலைக்கும்படி இந்திராவை கருணாநிதி தான் வற்புறுத்தினார். 356ஆம் பிரிவின் கீழ் மாநில அரசைக் கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கக்கூடாது என்று தி.மு.க அரசு கலைக்கப்படும்போதெல் லாம் சத்தம் போடும் கருணாநிதி, அதே 356ஐ எம்.ஜி.ஆருக்கு எதிராகப் பயன்படுத் தத் தயங்கவே இல்லை.

ஆனால், எம்.ஜி.ஆர். ஆட்சிக் கலைப்புக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் அணி படு தோல்வி அடைந்தது. அதன் பின்னர் காங்கிரஸ் அ.தி.மு.க. பக்கம் போய்விட்டது. அடுத்த 13 வருடங்கள் அ.தி.மு.க.வுடன்தான் இருந்தது.

அப்போது சர்க்காரியா கமிஷன் தொடர்பான ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க காங்கிரஸிடம் சரணாகதி அடைந்த கருணாநிதி, இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தம் குடும்பத்தினரும் மாட்டி விடாமல் தடுப்பதற்கு காங்கிரஸிடம் சரணாகதி அடையும் நிலையில் இருக்கிறார்.

அதிக இடங்கள் தேவை, ஜெயித்தால் கூட்டணி ஆட்சி; ஆட்சியில் காங்கிரஸுக்கும் பங்கு;

துணை முதல்வர் பதவி உண்டு என்ற கோரிக்கைகளை இப்போது காங்கிரஸ் வலியுறுத்தி, பேரம் பேசிக் கொண்டிருக்கிறதல்லவா? இதே பேரத்தை 1980லும் பேசியது. அப்போது அத்தனை கோரிக்கைகளையும் ஒப்புக்கொண்டு, காங்கிரசுடன் சேர்ந்து குறைந்தபட்ச பொதுத் திட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டுத் தேர்தல் அறிக்கையையும் கருணாநிதி வெளியிட்டார். கூட்டணி ஜெயித்தால் முதல்வர் பதவியும் தி.மு.க.வுக்கு இல்லாமற் போய்விடுமோ என்ற அளவுக்கு தி.மு.க.வினருக்கு அப்போது பயம் இருந்தது.

இந்திராவே பகிரங்கமாக, நாங்கள் ஜெயித்தால் கருணாநிதிதான் முதல்வர் என்று அறிவித்தார். ஆனாலும் ஜெயிக்கவில்லை; காரணம் எமெர்ஜென்ஸி ஒடுக்குமுறைகளில் அல்லற்பட்டிருந்த தி.மு.க. தொண்டர்கள் காங்கிரஸ் உறவை விரும்பவில்லை. எம்.ஜி.ஆரை வைத்து தி.மு.க.வை உடைத்த நாம், ஏன் திரும்ப தி.மு.க.வுக்கு உயிர் தரவேண்டும் என்ற அதிருப்தி காங்கிரஸாருக்கு இருந்தது. ஒரே அணியில் இருந்துகொண்டு விரோத மனநிலையில் வேலை செய்தார்கள். எம்.ஜி.ஆர். அரசை டிஸ்மிஸ் செய்தது அவருக்குப் பெரும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்தது.

இப்போதும் அதே போன்ற சூழ்நிலைகள் நிலவுகின்றன. கூட்டணி என்றும் பாராமல் ராசாவைக் கைது செய்து காங்கிரஸ் ஆட்சி சிறையில் அடைத்திருப்பது தி.மு.க.வினர் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒழுக்க சீலர் என்ற பிம்பத்துடன் வலம்வந்த மன்மோகன் ஆட்சிக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னின்று நடத்தியிருக்கும் தி.மு.க.வை நாம் ஏன் தாங்கிப்பிடிக்க வேண்டும் என்ற எரிச்சல் காங்கிரஸாரிடம் இருக்கிறது.

வீரமணி, விடுக்கும் வீராப்பான அறிக்கையின் அடிப்படையில் காங்கிரஸை உதறிவிட்டு வரும் நிலையில் நிச்சயம் தி.மு.க. இல்லை. காங்கிரஸைப் பொறுத்தமட்டில் கூடுதலாக பத்து சீட் கொடுக்க தி.மு.க. முன்வந்தாலும்கூட லாபம்தான். தேர்தலுக்குப் பின் இழுபறி நிலை ஏற்பட்டால், அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேரவும் காங்கிரஸ் தயங்கப் போவதில்லை. தி.மு.க. இப்போது குடும் பச் சண்டையாலும் ஸ்பெக்ட்ரம் நெருப் பாலும் எரிகிற வீடு. அதில் பிடுங்கினவரை லாபம் என்பதே காங்கிரஸின் அணுகுமுறை.

தி.மு.க.வுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ‘தருமம் தலைகாக்கும்’ என்பதுதான். அரசு கஜானாவிலிருந்து அள்ளி அள்ளி வீசி இலவசம் என்ற பெயரில் செய்திருக்கும் ‘தானதர்மங்கள்’, இனி தேர்தல் நேரத்தில் செய்யப்போகும் ‘தர்மங்கள்’ எல்லாம்தான் தங்களைக் கரையேற்றும் என்று அது நம்பிக் கொண்டிருக்கிறது.

எப்படிப் பார்த்தாலும், எந்த நோக்கத்துக்காக எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவைத் தொடங்கினாரோ அந்த நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. இந்தத் தேர்தல்தான் அதை இறுதியாகத் தீர்மானிக்கப் போகிறது. எம்.ஜி.ஆரின் கனவை ஜெயலலிதா சாதிப்பாரா, அல்லது எம்.ஜி.ஆரின் கனவு கனவாகவே போய்விடுமா என்பது தீர்மானிக்கப்படும்.

கருணாநிதி பற்றி அண்ணா

" நாங்கள் திராவிடர் கழகத்தில் இருந்தபோது திருவாரூருக்கு ஒரு கூட்டத்துக்கு போயிருந்தேன். அப்போது ஒரு மாணவனாக இருந்த கருணாநிதியை அங்கே சந்தித்தேன். அந்தப்பருவத்திலேயே அவனுடைய குறும்புத்தனமான பேச்சு எனக்கு கோபத்தை உண்டாக்கியது. அதே நேரத்தில் வியப்பாகவும் இருந்தது. அப்போது என்னருகிலேயே தம்பி சம்பத்தும் இருந்தான். திரும்பிசெல்லும்போதும் கூட கருணாநிதி பற்றி சம்பத்திடம் பேசிக்கொண்டே போனேன்.

அதன் பிறகு ஒரு சிறிய பத்திரிக்கையின் மூலம் அவன் திராவிடக் கழக தோழர்களுக்கு அறிமுகமானான். அந்தப் பத்திரிக்கையின் பெயரும் 'முரசொலி' தான். சிறு வயதிலேயே அவனிடம் எழுத்துக் கவர்ச்சி இருந்தது. அதே நேரத்தில் கவர்ச்சிகரமாகவும் உருக்கமாகவும் பேசப் பழகி வைத்திருந்தான். கலைத்துறையில் ஈடுபாடிருந்ததால் ஜனங்களுக்கு அறிமுகமானான்.

1949 -ல் திராவிடர் கழகத்தை விட்டு நாங்கள் பிரிந்து தி மு க ஆரம்பித்தபோது முன்னணியிலிருந்த முக்கியஸ்தர்களில் ஒருவனாக அவன் விளங்கினான். என்னைப் பற்றி பேசிப்பேசியே அவன் தன்னை வளர்த்துக்கொண்டது ஒரு வகையான திறமையும் சாமர்த்தியமும் ஆகும். கலைத்துறை ஈடுபாடு அவனை வெகுவிரைவில் தமிழ் மக்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்திவிட்டது.

கடுமையாக உழைப்பான். எதிலும் தானே முன்னணியில் நிற்க வேண்டுமென்று ஆசைப்படுவான்.

இந்த நேரத்தில் இங்கிலாந்து அரசியல் பிரமுகர் ஒருவரைப் பற்றி அவர் மகன் சொன்ன கருத்து என் நினைவுக்கு வருகிறது,

" பாருங்கள்! என் தந்தை பிரசவித்த வீட்டுக்குப் போனால் தானே குழந்தையாக இருக்க ஆசைப் படுகிறார். பொதுச் சபைகளுக்குப் போனால் தானே தலைவனாக இருக்க ஆசைப் படுகிறார். கல்யாண வீட்டுக்குப்போனால் தானே மாப்பிள்ளையாக இருக்க விரும்புகிறார். கருமாதி வீட்டுக்குப் போனாலும் தானே பிணமாக இருக்க ஆசைப் படுகிறார்" என்றாராமவர்!

கருணாநிதியின் சுபாவம் அப்படிப்பட்டது. அவனது உழைப்பை ஆசை முந்திக்கொண்டு போகிறது.

தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள எந்த வழியையும் கடைப்பிடிப்பது அவனுடைய சுபாவம், .அதிலே தோல்வியுற்று அவமானப்பட நேர்ந்தால் அதையும் ஜீரணிப்பது அவன் பழக்கம்.

தனக்கு விளக்கு தூக்குகிறவர்கள் மட்டுமே நண்பர்களாக இருக்க முடியுமென்பது அவன் சித்தாந்தம்.

பிறரை தூண்டிக் காரியம் செய்வான். கலகம் செய்வான். தான்தான் காரணம் என்பதைக் காட்டிக் கொள்ள மாட்டான், கட்சியிலிருந்து சிலர் வெளியேறுவதற்கு அவன் உண்டாக்கிய கலகமே காரணம். அவர்களெல்லாம் என்னை விசுவாசித்தவர்கள். அவர்களெல்லாம் போன பிற்பாடு என்னையே அவன் ஆட்டிப்படைக்கத் தொடங்கினான். கட்சிக் கட்டுப்பாடுக்காக அதை வெளியே சொல்ல நான் தயங்கினேன்.

கட்சி எப்படிப்போனாலும் பதவிக்கு வந்தாக வேண்டுமென்று கூட்டணி சேர்ப்பதில் அவன்தான் முன்னணியில் இருந்தான்.

பதவிக்கு வந்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலாகா பிரித்துக் கொடுத்தேன். இந்த இருபத்திமூன்று மாதங்களில் மற்ற மந்திரிகளுக்கும் சில இலாக்காக்கள் இருப்பதாகவே அவனுக்கு நினைவில்லை.

எல்லாவற்றிலும் புகுந்து விளையாடினான்.

போலீஸ் மந்திரி நான். உத்திரவிடுவது அவன்.

சகிக்கும்மட்டும் சகித்துப் பார்த்தேன். இனி சகிக்க முடியாது என்ற நிலை வந்தபோது - இறைவா, நீ வாழ்க - நீ என்னை அழைத்துக்கொண்டு விட்டாய்.

அனுசரித்த சம்பிரதாயங்களின் படி முதலமைச்சராக வேண்டிய நெடுஞ்செழியனை இப்போது அவன் ஒதுக்கித் தள்ளி விட்டான்.

நானிருக்கும் காலத்தில் தன் குடும்பக் கவலைகளைக் கூட நெடுஞ்செழியன் என்னுடன் தான் பகிர்ந்து கொள்வான். இப்போது யார் இருக்கிறார்கள்? யாரிடம் போய் அவன் சொல்ல முடியம். அவனைப்போல என் கட்சியில் என்னை நேசித்தவர்கள் எல்லாம் இனி உள்ளுக்குளேயே புழுங்கிச் சாவதைத் தவிர வேறு வழி என்ன?

கருணாநிதியின் கையில் ஆட்சி வந்து விட்டது. நான் இல்லை என்ற நினைப்பிலாவது அவனுக்கு பொறுப்புணர்ச்சி வரவேண்டும். சேறு மிதிப்பது போல ஆட்சியை நடத்தக் கூடாது. அவன் என்ன செய்யப் போகிறானோ?

போதாக் குறைக்கு ஆதித்தன் வேறு பங்காளியாகி இருக்கிறான். நான் இருக்கும்போது ஆதித்தனை ஒதுக்கியே வந்தேன். இனி எவனும் ஆட்டம் போடுவான்.

இனி ஜனங்களிடமிருந்தும் கிஞ்சித்தும் அனுதாபத்தை அவர்கள் பெறமுடியாது.

-- மனிதன் பேசி முடித்தான்; தேவன் விடைப் பெற்றுக்கொண்டான்.

பிகு: கண்ணதாசன் அவர்கள் சி. என். அண்ணாதுரை அவர்கள் மறைந்த பின் தன் பத்திரிக்கையில் சில கடிதங்கள் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு 'சொர்க்கத்தில் அண்ணா' என்று பெப்ரவரி 28 - 1969 அன்று ஒரு சிறு புத்தகமாக கண்ணதாசனுடைய தம்பி இராம முத்தையா அவர்களால் வெளியிடப்பட்டது. அப்புத்தகத்தில் 'கருணாநிதி பற்றி அண்ணா' என்று 37-40 பக்கங்களில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையே இது.

உங்களால் முடிந்த உதவி ஏப்ரல் 13ஆம் தேதி ஓட்டு போட வேண்டும். யாருக்கு என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்!

49 Comments:

mak said...

neither dmk or admk, then who else?
"Anonymous Tamilan"

Anonymous said...

How many times will you people be killing Karunanidhi ?

These comments (on Karunanidhi) are not from Annadurai. These are all the perceptions by Kannadasan. Kannadasan is a great Poet, lyric writer, Hindu Philosopher but not a good politician. Even EVK Sambath too.

If you read, Kannadhasan's "Arangamum Anthararangamum " story, you will be able to know the real picture of MGR. He damaged MGR ( with the character name Chandrasuryan) and even Jayalalitha too. Will you publish that too?

Remember, the great saints like Maha periyavar tried to compare himself with Seshadri Swamigal. ( he asked himself that "Am I replicate Seshadri Swamigal ? ). I am not trying to compare Maha periyava with Karunanidhi, but the people who sacrifices themselves for the society ( without any attachment) wanted to be number-1 in their field by comparing themselves with their contemporary saints.

Media is a powerful resource. please do not use it for your perceptions and favoritisms. If you still want to do that way, I am not seeing any difference between the dirty Politicians and Idly Vadai.

Please go by the Dharma way.

Be like Sahadevan in Mahabharatha. Even his rival Dhuriyodhana asked for best date to start the war, the great Sahadevan provided a auspicious date to Dhuriyodhana, by adhering the astrological Dharma. Be like him.


Ramakrishnan (Ramki)
Paramakkudi

Anonymous said...

According to Parappangadi Unnikrishna Panicker (Jayalalithaa's astrologer) "The planets are not in favour of J. Jayalalitha. She has to put in a lot of effort to come back to power. It is the time of seven-and-half Saturn for her. As per her horoscope, Jupiter is in eighth house, which again will not bring good fortunes. It is the end of raaghu dasa for her (the influence of one's karma on astrology). She can manage to win in urban but not in rural areas. But it is good time for Karunanidhi. There are every chances of him coming back to power." He adds, that "Tamil Nadu will have a coalition government. There are more possibilities for DMK to come back to power."

Ref:India Today.

http://indiatoday.intoday.in/site/Story/131511/top-stories/assembly-elections-astrologers-predict-victory-for-mamata-banerjee-and-karunanidhi.html

rghavan66 said...

1949 -ல் திராவிடர் கழகத்தை விட்டு நாங்கள் பிரிந்து தி மு க ஆரம்பித்தபோது முன்னணியிலிருந்த முக்கியஸ்தர்களில் ஒருவனாக அவன் விளங்கினான். என்னைப் பற்றி பேசிப்பேசியே அவன் தன்னை வளர்த்துக்கொண்டது ஒரு வகையான திறமையும் சாமர்த்தியமும் ஆகும்.

Anonymous said...

In a state where movie stars are worshipped as gods, the AIADMK chief has a constellation of actors in her alliance against the ruling DMK. It will translate into a star-studded campaign by the Jayalalithaa camp with tinsel town heroes descending on the streets for votes.

Jayalalithaa, a screen goddess of yesteryears, entered politics with her mentor and co- star the legendary M. G. Ramachandran.

She still retains her charisma and appeal among the masses. However, it was her choice of alliance partners that has spurred her chances to return to power in the state.

Movie star Vijayakant's DMDK, touted as the game changer this poll season, is one of the biggest catches of Amma. Vijaykant's outfit cornered 11 per cent of the vote share in the last assembly elections and after ploughing a lonely furrow, the DMDK has emerged as a force to reckon with. Vijaykant, nicknamed ' Captain' by admirers, has shelved his dream of becoming the chief minister and teamed up with Amma after waiting in vain to forge a third front with the Congress.

Another actor who will be seen campaigning for the AIADMK alliance is Sarath Kumar. He had deserted the DMK after deciding not to play second fiddle to the Marans.

After a brief stint in the AIADMK, he launched the AISMK to represent the mercantile Nadar community, concentrated in south Tamil Nadu.

Karthik of AINMK, a popular actor, is perceived as a community icon and his party polled a respectable vote share in the last assembly elections across the southern districts. Hailing from the dominant OBC Thevar community, Karthik proved to be a natural ally of the AIADMK. Young heartthrob Vijay had toyed with the idea of joining the Congress but gave up the plans under pressure from the DMK. Vijay had met Congress general secretary Rahul Gandhi. Butwhen the release of his recent movie was met with hurdles, he chose to throw his lot with the AIADMK czarina.

He put up a show of strength in Nagapattinam in February where he staged a massive demonstration protesting Lankan highhandedness against Tamil fishermen.

Party insiders pointed out that the star power of alliance partners was only secondary to their political prowess while being considered by Jayalalithaa.

They said the movie stars- turned- politicians will bring votes to the alliance.

While the fiery MDMK leader Vaiko and the eloquent D. Pandian of the CPI will shoulder the alliance's high decibel campaign, the movie stars will add spice and variety to canvassing.

Anonymous said...

ACTORS IN AMMA'S KITTY


VIJAYKANT
The DMDK founder is touted as a major player in the formation of the next government in the state.

His party had an impressive vote share of 11 per cent in the last assembly polls

KARTHIK
He is considered an icon by the OBC Thevar community, to which he belongs. He had floated AINMK, which polled a respectable vote share in southern districts during the last assembly polls

SARATH KUMAR
He deserted DMK after refusing to play second fiddle to the Marans. He floated the AISMK and has a considerable sway over the mercantile Nadar community in south Tamil Nadu

VIJAY
A heartthrob of the youth, he wanted to join the Congress but did not do so under pressure allegedly from the DMK. He joined the AIADMK after the release of his recent movie faced problems

R.Gopi said...

"Thala" the TERROR SUPREMO....

Anonymous said...

Super !!!!!!!!!!!!!!!!!!!!!!

Unknown said...

தெரியாத வரலாற்றினை தெரிய வைத்து தெளிய வைத்தும் இருக்கிறீர்கள், நன்றி

Anonymous said...

கண்ணதாசன், கருணாநிதியின் மீதிருந்த தன் கருத்துக்களை அண்ணாவின் கருத்துக்கள் என்பதாக எழுதியிருப்பது தவறான ஒன்றாகும்.மேலும் அண்ணா ஒன்றும் கடவுளும் இல்லை,அவர் சொன்னதெல்லாம் வேதவாக்கும் இல்லை.

இதே போல,

ஏன் இதைவிட நன்றாக,

MGR பற்றி அண்ணா சொன்னது என்ன,

ஜெயா பற்றி MGR சொன்னது என்ன,

என்றெல்லாம் கருணாநிதியும் கடிதம் எழுதுவார்.

இது ஜனநாயக நாடு.
தனக்கென்று ஒரு வழிமுறையை வைத்துக்கொண்டு மேலே வந்தவர் மு.க.அதாவது அவர் ஒரு Brilliant Strategist.அருமையாக திட்டமிட்டு வளர்ந்தவர்.அதிர்ஷ்டமும்,சந்தர்ப்பங்களும் அவருக்கு ஒத்துழைத்தன.
அவை அவருக்கு எதிராக சென்றபோது பொறுமை காத்தார்.

அண்ணா,காமராஜ்,MGR,அவர்களை இவ்வுலகிலிருந்து எடுத்துக்கொண்டு மு.க விற்கு ராஜபாட்டை அமைத்து கொடுத்தவர் யார்?

தனக்கு கிடைத்த இரண்டு அயனான வாய்ப்புக்களை தன் ஆணவ
குணத்தால் நழுவவிட்டு மு.க விற்கு ராஜபாட்டை அமைத்து கொடுத்தவர் யார்?

தனி வாழ்வு,பொது வாழ்வு இரண்டிலும் நேர்மையற்றவர் ,கபடம் சூது நிறைந்தவர் என்பது அகில உலகிற்கும் தெரிந்த ரகசியம்.அப்படி பட்ட ஒருவருக்கு தொடர்ந்து ஓட்டளித்து ராஜபாட்டை அமைத்து கொடுப்பவர்கள் யார்?

மு.க believes in

In democracy,if you can fool some people for all the time and all people for some time, IT IS ENOUGH

and we have to believe in

In democracy we get only what we deserve !

சும்மா அம்பை நோகாதீங்க
எய்தவனைப்பற்றியும் யோசியுங்க

Anonymous said...

கவிஞர் கண்ணதாசன் பூவுலக வாழ்வை நீத்தபோது அவரின் நண்பர் கலைஞர் கருணாநிதி வடித்த இரங்கல் கவிதை...!

என் இனிய நண்பா
இளவேனிற் கவிதைகளால்
இதயசுகம் தந்தவனே! உன்
இதயத்துடிப்பை ஏன் நிறுத்திக் கொண்டாய்!

தென்றலாக வீசியவன் நீ - என்நெஞ்சில்
தீயாகச் சுட்டவனும் நீ! அப்போதும்
அன்றிலாக நம் நட்பு நிகழ்ந்ததேயன்றி
அணைந்த தீபமாக ஆனதே இல்லை; நண்பா!

கண்ணதாசா! என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா!
கவிதை மலர்த் தோட்டம் நீ - உன்னைக்
காலமெனும் பூகம்பம் தகர்த்துத்
தரைமட்டம் ஆக்கிவிட்டதே!

கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ!
கல்லறைப் பெண்ணின் மடியிலும்
அப்படித்தான் தாவி விட்டாயோ
அமைதிப்பால் அருந்தித் தூங்கி விட!

இயக்க இசைபாடிக்களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் முன்னை
தாக்குதல் கணை எத்தனைதான் நீ
தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என்நெஞ்சே உன் அன்னை!
திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால் - சுவைப்பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை;

தித்திக்கும் கவித்தமிழா! பிரிவின்
மத்தியிலே ஏன் விட்டுச் சென்றாய் ?
அடடா! இந்த இளமைக் கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்!

ஆயிரங்காலத்துப் பயிர் நம் தோழமையென ஆயிரங்கோடி கனவு கண்டோம்!
அறுவடைக்கு யாரோ வந்தார்!
உன்னை மட்டும் அறுத்துச் சென்றார்

நிலையில்லா மனம் உனக்கு! ஆனால்
நிலைபெற்ற புகழ் உனக்கு!

இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால்
இனியதமிழ் அன்னை துணை நின்றாள்!

என் நண்பா!

இனிய தோழா!

எத்தனையோ தாலாட்டுப்பாடிய உன்னை
இயற்கைத் தாய் தாலாட்டித் தூங்க வைத்தாள்!
எத்தனையோ பாராட்டுப் பெற்ற உனக்கு
இயற்கைத்தாயின் சீராட்டுத்தான் இனிக்கிறதா?

எனை மறந்தாய்! எமை மறந்தாய்! உனை
மறக்க முடியாமல் உள்ளமெல்லாம் நிறைந்தாய்!

Anonymous said...

சுய விமர்சனம்

நான் யார் யாருக்கு உதவி செய்தேனோ அவர்களை மறந்து விட்டேன். யார் யார் என் வாழ்வைச் சீரழித்தார்களோ அவர்களே என் நினைவில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓய்வாக உட்காரும் போதெல்லாம் அவர்களே என் நினைவிற்கு வருகிறார்கள். என்னைப் பிறரும் கெடுத்து, நானும் கெடுத்துக் கொண்ட பின்பு, மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள்.”

- கண்ணதாசன்

Anonymous said...

கலைஞரைப் பற்றி கவிஞர்’

நிதான புத்தி நேரிய பார்வை
நின்று கண்டறிந்து நெடுவழி செல்லல்

சதாவ தானத் தனிப்பெருந் திறமை தன்னை யறிந்து பிறர்உளம் நோக்கல்

நதியென ஓடி நாளெலாம் உழைத்தல் நாடும் மக்களும் நலம்பெற நினைத்தல்

அதிசயச் சொற்றிறன் ஆய்வுறு கூர்மதி அன்பர் நலத்திலும் அக்கறை செலுத்துதல்

மதியுறு மாண்தகை மந்திரிக் கிவையே இலக்கண மென்றால் இலக்கியம் அவரே!

கருணா நிதியின் தனித்தமிழ் அரசு பலநாள் நிலைக்கப் பக்குவம் பெற்றது

வாழிய நண்பர்! வாழிய அமைச்சர்! வாழிய கலைஞர்! வாழிய

Anonymous said...

எம்.ஜி.ஆரிடமிருந்து வேறுபட்டு, அரசியல் மேடைகளில் அவரை விளாச ஆரம்பித்தார் கண்ணதாசன்.

“பணத்தோட்டம்” படத்தில் ‘ஜவ்வாது மேடையிட்டு“ப் பாடலை கண்ணதாசன் எழுதியிருந்த நேரம்.

“செம்மாதுளை பிளந்து தா தா தா” என்பது சரணத்தின் கடைசி வரி. “இப்போதுதான் எம்.ஜி.ஆருக்கு ‘தாத்தா பாடல்’ எழுதிவிட்டு வருகிறேன்” என்றாராம் கண்ணதாசன்.

தன்னுடைய கடைசி படம்வரை இளம் கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடித்த எம்.ஜி.ஆருக்கு வயதாகி விட்டது என்று 1962-63-ல் கிண்டலடித்தார் கண்ணதாசன்

Anonymous said...

எம்.ஜி.ஆரின் அன்பு கடாட்சத்திற்குத் தன்னைப் பாத்திரமாக்கிக் கொண்ட கவிஞர் வாலி, செப்டம்பர் 1963-ல் வந்த பேசும் படம் இதழில் “கவிதையில் ஒரு கலைஞர்” என்ற கவிதையை வடித்தார் வாலி.

“மின்னல் வேகத்தில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் இளங்கவிஞர் வாலி மக்கள் திலகத்தைப் பற்றி எழுதிய கவிதை” என்ற அறிவிப்புடன் வந்தது அது.

வங்கக் கடல் கடைந்த செங்கதிர் வண்ணம் போல்
சிங்கத் திருமுகம் செவ்விதழில் புன்சிரிப்பு!
வெள்ளம்போல் கருணை, வள்ளல் போல் வடிவம்

என்று எழுதுவதற்கு முன் ..

பாமலைப் பாடியிவன் பெருமைகளைப் பேசுகையில்
காமலைக் கண்கள் என்னை காக்காய் எனத் தூற்றும்!
நாய்க் குரைத்தால் நாய்க்குத்தான் வாய் வலிக்கும் தெரியாதா?
நேற்றுவரை போற்றுவதும், போற்றிப் பின் தூற்றுவதும்
காற்றடிக்கும் திசை மாறும் காற்றாடி குணம் கொண்டு
நாவிதன் கத்தியென நாவைப் புரட்டுவோர்
காவியக் கவிஞரென கொலுவிருக்கக் கண்டதுண்டு!
அதுபோல வரவில்லை, அவதூறும் பெறவில்லை! ..

எம்.ஜி.ஆருக்கு புகழ் மாலை மட்டுமல்ல, கண்ணதாசனுக்கு சாட்டையடி போல் ஒலிக்கும் வரிகள்.

(வாமனன் எழுதிய “டி.எம்.எஸ். – ஒரு பண்பாட்டு சரித்திரம்” என்ற நூலிலிருந்து)

Anonymous said...

படிக்காத மேதை காமராஜர்

சொத்து சுகம் நாடார் ,

சொந்தந்தனை நாடார்

பொன்னென்றும் நாடார் ,

பொருள் நாடார், தான்பிறந்த அன்னையையும் நாடார் ,

ஆசைதனை நாடார் ,

நாடொன்றே நாடித் – தன் நலமொன்றும் நாடாத நாடாரை நாடென்றார்.

– கண்ணதாசன்

Anonymous said...

"பழைய வரலாறு"

கருணாநிதி தலைவ!
…..கவிதை வணக்கமிது!

மலையளவு நெஞ்சுறுதி
…..வானளவு சொற்பெருக்கு
கடலளவு கற்பனைகள்
…..கனிந்துருகும் கவிக்கனிகள்
இவைதலையாய் ஏற்றமுற்று
…..இளந்தலைகள் வாழ்த்தொலிக்க
அவைத்தலைமை ஏற்றிருக்கும்
…..அன்புமிகும் என்தோழ!

கூட்டத்தைக் கூட்டுவதில்
…..கூட்டியதோர் கூட்டத்தில்
நாட்டத்தை நாட்டுவதில்
…..நற்கலைஞன் நீயிலையோ!

அந்தச் சிரிப்பலவோ
…..ஆளையெலாம் கூட்டிவரும்

அந்தச் சிறுமீசை
…..அப்படியே சிறைப்படுத்தும்

சந்திரனைப் போலத்
…..தகதகவென்றே ஒளிரும்

அந்த வழுக்கையில்தான்
…..அரசியலே உருவாகும்!

எந்தத் துயரினிலும்
…..இதயம் கலங்காதோய்!

முந்துதமிழ் தோழ!
…..முனைமழுங்கா எழுத்தாள!

திருவாரூர்த் தேரினையே
…..சீராக்கி ஓடவிட்டுப்

பல்கும் மழைத்துளியைப்
…..பரிசாகப் பெற்றவனே!
கருணாநிதி தலைவ!
…..கவிதை வணக்கமிது!

(இது கலைஞர் கருணாநிதி தலைமையில் சேலத்தில் நடைபெற்ற கவியரங்கில் கவியரசு கண்ணதாசன் பாடிய கவிதை வரிகள்)

Anonymous said...

இது கலைஞர் கருணாநிதி தலைமையில் சேலத்தில் நடைபெற்ற கவியரங்கில் கவியரசு கண்ணதாசன் பாடிய கவிதை வரிகள்)

போட்ட கணக்கிலொரு
…..புள்ளி தவறாமல்
கூட்டிக் கழித்துக்
…..குறையாப் பொருள்வளர்க்கும்
நாட்டுக்கோட்டை மரபில்
…..நானும் பிறந்தவன்தான்
ஆனாலும் என்கணக்கோ
…..அத்தனையும் தவறாகும்!
கூட்டுகின்ற நேரத்தில்
…..கழிப்பேன்: குறையென்று
கழிக்கின்ற நண்பர்களைக்
…..கூட்டுவேன்; கற்பனை
பெருக்குவேன்; அத்தனையும்
…..பிழையென்று துடைப்பத்தால்
பெருக்குவேன்; ஏதேதோ
…..பெரும்பெரிய திட்டங்கள்
வகுப்பேன்; வகுத்ததெலாம்
…..வடிகட்டிப் பார்த்தபின்பு
சிரிப்பேன்! அடடா! நான்
…..தெய்வத்தின் கைப்பொம்மை!

Anonymous said...

…..என்னால் பிறர்படைத்த
துன்பங்க ளில்லை!
…..சுகமாய் அவர்கண்ட
கூட்டலினால் என்னைஇங்கே
…..கூட்டிவந்து விட்டுவிட்டார்
கூட்டிவந்து விட்ட
…..குறைமதியை என்தோழர்
மேடையிலே கூட்டி
…..விளையாட விட்டுவிட்டார்
எத்தனையும் கூட்டி
…..ஐந்தொகை போட்டுப்பார்த்தால்
இத்தனைநாள் வாழ்வில்
…..எதுமிச்சம்? என்அன்னை
தந்த தமிழன்றிச்
…..சாரம் எதுவுமில்லை
‘போனால் போகட்டும்
…..போடா! இறந்துவிட்டால்
நானாரோ நீயாரோ!’
…..நல்ல பொழுதையெலாம்
அழுதே கழிக்காமல்
…..ஆடித்தான் பார்க்கின்றேன்!
கொத்தும் இதழழகும்
…..கொஞ்சும் இடையழகும்
சேலம் விழியழகும்
…..சேர்த்துப் பிறந்திருக்கும்
கோலக் கிளிமொழிகள்
…..கூட்டத்தைக் கூட்டுகின்றேன்!
கையில் மதுக்கிண்ணம்
…..கன்னி இளங்கன்னம்
காதலுக்கே தோன்றினான்
…..கவிஞன்எனும் வண்ணம்

Anonymous said...

"பழைய வரலாறு"

புகழாரம்

” கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு

பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு.

ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது “

– கலைஞர் மு.கருணாநிதி

Anonymous said...

கண்ணதாசன் காப்பியடித்தானா?

குலமகள் ராதை என்ற படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடலிது:

“இரவுக்கு ஆயிரம் கண்கள்,
பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள்,
உறவுக்கு ஒன்றே ஒன்று”

பிரான்ஸிஸ் வில்லியம் போர்டிலோன் (Francis William Bourdillon) என்ற ஆங்கிலக் கவிஞனின் கவிதையிலிருந்து முதல் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் இரண்டாம் பத்தியிலிருந்து இரண்டு வரிகளையும் எடுத்து (இளந்தலைமுறையினருக்கு புரியும்படி சொல்லவேண்டுமெனில் ‘சுட்டு’) அழகுற தன் பாடலில் கோர்வையாக கையாண்டிருப்பான். அந்த ஆங்கிலக் கவிதை இதுதான் :

The night has a thousand eyes,

And the day but one;

Yet the light of the bright world dies

With the dying sun.

The mind has a thousand eyes,

And the heart but one:

Yet the light of a whole life dies

When love is done.

காப்பியடிப்பது எல்லாராலும் சாத்தியப்படும். சிந்தனையை கிரகித்துக் கொண்டு சாராம்சத்தை பிழிந்துக் கொடுக்க அறிவு ஜீவிகாளால் மட்டுமே முடியும்

Anonymous said...

"பழைய வரலாறு"

கண்ணதாசன் காப்பியடித்தானா?

காப்பியடிப்பது எல்லாராலும் சாத்தியப்படும். சிந்தனையை கிரகித்துக் கொண்டு சாராம்சத்தை பிழிந்துக் கொடுக்க அறிவு ஜீவிகாளால் மட்டுமே முடியும்,

“உள்ளம் என்பது ஆமை” என்ற பாடல் கண்ணதாசனின் தத்துவார்த்த சிந்தனைக்கு ஓர் உரைகல்.

“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது சிலையென்றால் வெறும் சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு –
இல்லை என்றால் அது இல்லை”

என்ற வரிகளில் மிகப்பெரிய சூட்சமத்தை எளிமையான வார்த்தைகளில் உணர்த்தியிருப்பான் கண்ணதாசன்.

“உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்கு

உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை

உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்கு

உள்ளத்தும் இல்லை புறத்தில்லைதானே?”

திருமூலரின் திருமந்திரத்தில் காணப்படும் இந்த வாழ்க்கை சித்தாந்தத்தை பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதற்கு கண்ணதாசனால் மட்டுமே முடிந்தது.

“அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே” என்று பட்டினத்தார் பாடியதை இரண்டிரண்டு வார்த்தைகளாய் மாலையாய் தொடுத்திருப்பான் கவிஞன்.

வீடுவரை உறவு/ வீதிவரை மனைவி/ காடுவரை பிள்ளை/ கடைசிவரை யாரோ?

Anonymous said...

"பழைய வரலாறு"

திமுக வெறுத்து போக, கட்சியிலிருந்து விலகி சம்பத் தொடங்கிய த.தே.க. கட்சியில் சேர்ந்தார். பின்னால், அது காங்கிரஸில் ஐக்கியமாக, காமராஜருடன் நெருங்கினார். இன்னொரு பக்கம், சினிமாவிலும் வேகமெடுத்தார்.

கருணாநிதியோ, தமிழக அரசியலில் டாப் கியரில் சென்று கொண்டிருந்தார்.

கருணாநிதியை வெறுத்து கோபப்பட்டு தாக்கினார் கண்ணதாசன். கருணாநிதி, அதையெல்லாம் அப்போது அவருக்கு இருந்த மற்ற
பிரச்சினையினால் கண்டுகொண்டிருக்கமாட்டார்.

ஒரு கட்டத்தில் காமராஜரிடமும் முட்டினார் கண்ணதாசன். திமுக பகுத்தறிவு என்ற பேரில் ராமன், கிருஷ்ணன் என்று கடவுள்களை செருப்பால் அடித்து கடவுள் நம்பிக்கையை கேவலப்படுத்தியபோது, அவருக்கு வந்த ஆத்திரத்தில் இந்து ஆதரவு கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். முதல் போணி, துக்ளக்கில் “நான் ஒரு இந்து”.


அவருடைய கெட்ட நேரம், பிறகு கருணாநிதி இந்திராவுடன் கூட்டணி வைத்தார். “கருணாநிதிக்கு மேல் ஆளே இல்லை” என்று சொல்லும் அளவுக்கு கண்ணதாசன் நிலை ஆனது. அவரும் முடிவில் கருணாநிதி ஜோதியில் கலந்தார்.


வனவாசம், மனவாசம் புத்தகங்களை படித்தபிறகு தான் அவர் அரசியலில் எவ்வளவு ஈடுபட்டு இருக்கிறார் என்றும், அதில் எவ்வளவு அடி வாங்கி இருக்கிறார் என்றும் தெரிந்தது.

Anonymous said...

"பழைய வரலாறு"

நான் இங்கு குறிப்பிட போகும் பாடல் பற்றி யாருக்கும் தெரியாது . ஏனென்றால் இந்த பாடல் பற்றி யாருமே குறிப்பிட்டதில்லை .
"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்" பாட்டின் சரண வரிகள் .
அப்போதெல்லாம் தி.மு.க வுக்கு அடுத்த இடத்தில் ஸ்தாபன காங்கிரஸ் இருந்தது . கண்ணதாசன் இந்திரா காங்கிரஸ் . என்றாலும் கண்ணதாசனின் இயல்பான மீறல் காமராஜரை தன் தலைவராக வரித்து இரண்டு காங்கிரஸ் இயக்கமும் இணைந்து அரசியல் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் உறுதி கொண்டிருந்தார் . காமராஜர் மேல் அளவு கடந்த பற்று . திமுக உக்கு எதிர்க்கட்சி ஸ்தாபன காங்கிரஸ் . திமுக இறங்கினால் ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சி கட்டில் ஏறும் என்ற நிலை .( தீப்பொறி ஆறுமுகம் அப்போது ஸ்தாபன காங்கிரஸ் பேச்சாளர் !)
திடீரென்று எம்ஜியார் திமுகவிலிருந்து விலகி அண்ணா திமுக ஆரம்பித்தவுடன் மக்கள் செல்வாக்கு அவருக்கு வந்து விட்டது . நாஞ்சில் மனோகரன் தான் கண்ணதாசனின் அரசியல் எதிரி என்று கவிஞர் அறிவித்திருந்தார் . திண்டுக்கல் பாராளுமன்ற இடைதேர்தலில் நாஞ்சில் மனோகரன் எம்ஜியாரால் வேட்பாளர் ஆக்கப்பட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என கண்ணதாசன் பகிரங்கமாக அறிவித்தார் .
திராவிட தலைவர்களில் நாஞ்சில் மனோகரனையும் மாதவனையும் கண்ணதாசனுக்கு பிடிக்காது . மந்திரகோல் மைனர் சுகவாசியாய் எந்த தியாகமும் செய்யாதவர் என்று கண்ணதாசனுக்கு கோபம் . மாதவன் திமுக வேட்பாளராய் கண்ணதாசன் நின்று தோற்ற தொகுதியை அடுத்த பொது தேர்தலில் திமுக வேட்பாளராய் கைப்பற்றியவர் . அதற்கடுத்த தேர்தலில் மீண்டும் வென்று அண்ணா மந்திரி சபையில் மந்திரியானவர் . மாதவனை பாராட்டி திமுக தொண்டர்கள் வீரவாள் கொடுத்தார்கள் . உடனே கண்ணதாசன் தன் " கடிதம் " பத்திரிகையில் ' தம்பிகள் கத்தி கொடுத்தார்கள் . பாவம் கிண்ணத்தை கொடுக்க மறந்து விட்டார்கள் ' என்று கிண்டல் செய்து எழுதினார் .

Anonymous said...

"பழைய வரலாறு"

எம்ஜியாரை கடுமையாக எதிர்த்தவர் கண்ணதாசன் . எம்ஜியாரும் அவர் கட்சியும் தமிழகத்தை ஆக்கிரமித்ததை அவலமாக நினைத்து தான்
" அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன் .
அநியாயம் செய்பவர்க்கும் மரியாதை கண்டேன் .
சதிகார கும்பல் ஒன்று சபையேற கண்டேன் "
தன் பதற்றத்தை கண்ணதாசன் ' என் மகன் ' படப்பாடலில் வெளிப்படுத்தினார் .
தொடர்ந்து எம்ஜியாரை கடுமையாக சாடினார் . எம்ஜியார் முதல் முறை ஆட்சியமைத்தபோது மதுவிலக்கை கடுமையாக அமல் படுத்தினார் .
கண்ணதாசன் பத்திரிகையில் ஒரு கேள்வி
ஒன்றிற்கு மேற்பட்ட மது பெர்மிட் வைத்திருப்பவர்கள் சரண்டர் செய்யவேண்டும் என்று எம்ஜியார் ஆணையிட்டிருக்கிராரே ?
கண்ணதாசன் பதில்
'ஆண்டவனே வந்து கேட்டாலும் நான் சரண்டர் செய்யமாட்டேன் . உங்கள் எம்ஜியாரிடம் இன்னொரு சட்டம் போட சொல்லுங்கள் ; 'ஒரு காதலிக்கு மேல் வைத்திருப்பவர்களை சரண்டர் செய்ய சொல்லுங்கள் '
கடைசியில் எம்ஜியார் கண்ணதாசனை தமிழக அரசின் ஆஸ்தான கவியாக நியமித்தார் . உடனே கண்ணதாசன் சொன்னார் !
" எம்ஜியாருடன் நான் வாழ்நாள் முழுவதும் நடத்திய யுத்தத்தில் கடைசியாக தோற்று விட்டேன் "
கண்ணதாசனின் பாடல்களை காட்டிலும் அவரது அரசியல் வாழ்க்கை தான் ரொம்ப விஷேசமானது .

Anonymous said...

"பழைய வரலாறு"

ஒரு முறை குமுதம் கேள்வி பதிலில்

கேள்வி :
எம்ஜியாரின் 'நான் ஏன் பிறந்தேன் ', கருணாநிதி யின்' நெஞ்சுக்கு நீதி' , கண்ணதாசனின் 'வனவாசம்' ஆகிய சுயசரிதை நூல்களில் எந்த நூல் சிறந்தது ?

அரசு பதில் :

'வன வாசம்' தான் . ஏனென்றால் அதில் "உண்மை " இருக்கிறது .

Anonymous said...

"பழைய வரலாறு"

1972, ஆகஸ்ட் 15!

கண்ணதாசனிடமிருந்து ஒரு கால்!

“வாலி! கவிதா ஹோட்டலுக்கு நைட் எட்டு மணிக்கு வாங்க: சுதந்திரத்தின் வெள்ளிவிழாவை – நள்ளிரவில் ஜெய்ஹிந்த் சொல்லிக் கொண்டாடுறோம்”

கண்ணதாசனும் நம் அண்ணன் வாலியும் மதுவின் போதையில் தள்ளாடியவாறே இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி சில பாடல்களை பாடி சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றினார்களாம்.


பிறகு நிறைபோதையில் இருந்த அண்ணன் வாலி மிகுந்த தேசபக்தியுடன் ஒரு பாலியல் தொழிலாளியான பெண்ணுடன் அங்கிருந்த அறை ஒன்றுக்குள் ஐக்கியமானாராம்.


அப்போது ஓட்டலின் பணியாளர் ஒருவர் கண்ணதாசனிடம், “வாலியை கேவலப்படுத்த இது சரியான சந்தர்ப்பம்: காவல்துறைக்கு தகவல் சொல்லலாமா?” என்று கேட்டாராம். ஆனால் கண்ணதாசன் அவ்வாறு சொன்ன ஓட்டல் பணியாளரின் கன்னத்தில் அறைந்துவிட்டு, “நான் கூப்பிட்டு வந்த வாலியை போலிசுல பிடிச்சுக் கொடுக்க சொல்றியா? அந்த ஆளு (வாலி) ரூமை விட்டு வெளியே வந்தவுடனே ஒழுங்கா கார்ல ஏத்தி அனுப்பு!” என்று சொல்லிவிட்டு தள்ளாடியவாறே வீட்டுக்குப் போனாராம்.

ஆயிரம்தான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கண்ணதாசனின் பெருந்தன்மை போற்றத்தக்கதாம்.

நம்ம வாலி அண்ணன் சொல்றாரு

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் இதுதான்: சுதந்திர தினம் என்றால் தண்ணியடித்துவிட்டு கேடுகெட்டவர்களுடன் சுற்றித்திரிய வேண்டும். போதையில் வாயில் வந்ததையெல்லாம் உளற வேண்டும். பிறகு பாலியல் தொழிலாளர்களுடன் பொழுதை உல்லாசமாக கழிக்க வேண்டும்.


நல்லது வாலி! உங்கள் தேசபக்தியை புரிந்து கொண்டோம்!

Anonymous said...

ஜெயலலிதா கூட்டணி கட்சிகளை நடத்தும் விதம் தெரிந்தது தானே என நினைக்கக்கூடும. கலைஞரும், ஜெயலலிதாவும் கூட்டணி கட்சிகளை நடத்தும் விதம் பற்றி ஒரே வரியில் இப்படி சொல்லலாம். கலைஞர், "கட்சிகள்- தம் கூட்டணியை விட்டு போனாலும் அசிங்கப்படுத்த மாட்டார். ஜெயலலிதாவோ தம் கூட்டணியில் இருந்தாலும் அசிங்கப்படுத்துவார்."

அடிக்கடி கூட்டணி மாறி அனுபவப்பட்ட ராமதாஸ் அழகாக சொன்னார் இப்படி, "தி.மு.க தலைமை நல்ல தலைமை. தொண்டர்கள் தான் சரியில்லை. அ.தி.மு.க தொண்டர்கள் நல்லவர்கள். தலைமை தான் சரியில்லை" என்று. கூட்டணி கட்சிகளை மதிக்கின்ற விஷயத்தில் - இன்னும் ஜெயலலிதா தன்னை திருத்திக் கொள்ளாதவராக தான் இருக்கிறார். இன்னும் நிறைய கற்று கொள்ள வேண்டும்.

எந்த தேர்தல் காலத்திலும் இல்லாத விதமாக, இந்த தேர்தலுக்கு தான் ஜெயலலிதா சுறுசுறுப்பாக கூட்டணி கட்சியினருடன் இடப்பங்கீடு பேச துவங்கினார். புதிய தமிழகம், த.மு.மு.க, பார்வர்ட் பிளாக், சேதுராமன் கட்சி என்று அனைவருக்கும் இடங்களை ஒதுக்கி- தே.மு.தி.கவுடன் நிற்கிறார். ஆனால் பிரதான கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசாமல் அலைக்கழிக்கிறார்.

இம்முறை, கலைஞர் தாமதமாக தான் அறிவித்தார் - தொகுதி பங்கீட்டை. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும் இடப் பங்கீட்டை சுமூகமாக முடித்து விட்டதாக சொல்கிறார். தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறினாலும் ராமதாஸையும் திருப்தி படுத்தி விட்டார். ஜெயலலிதா இன்னும் பேசி கொண்டே இருக்கிறார். கூட்டணிக்கு வருவாரா, வர மாட்டாரா என்கிற சந்தேகத்தில் இருந்த தே.மு.தி.கவுடன் கூட தொகுதி பங்கீடு முடிந்து விட்டது.

ம.தி.மு.கவும், இரண்டு கம்யூனிஸ்ட்களும் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை. ம.தி.மு.காவுக்கு பத்து தொகுதிகளே தர இயலும் என்கிற நிலையில் அ.தி.மு.க தலைமை இருப்பதாக பத்திரிகை செய்தி கூறுகிறது. முந்தைய தேர்தலில் வை.கோவே தோற்று போனது ம.தி.மு.க வுக்கு பின்னடைவே.

ஆனால் கூட்டம் சேர்க்கும் வல்லமையையும், இன்னும் அரசியலில் நல்ல மனிதர் என்கிற பெயரை பெற்று இருப்பதும் தான் அவரது சொத்து. அது தான் அவருக்கு வாக்குகளை பெற்று தரும்.

Anonymous said...

Old History (Pazhaya vaRalaRu) Section is simply superb. Collection of very good information about Kannadasan and Karunanidhi.

I got to know many unknown facts today (through many Anonymous comments)

Good Keep it up.

John Sundar
Thingal Santhai

Anonymous said...

// “செம்மாதுளை பிளந்து தா தா தா” என்பது சரணத்தின் கடைசி வரி. “இப்போதுதான் எம்.ஜி.ஆருக்கு ‘தாத்தா பாடல்’ எழுதிவிட்டு வருகிறேன்” என்றாராம் கண்ணதாசன்.

தன்னுடைய கடைசி படம்வரை இளம் கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடித்த எம்.ஜி.ஆருக்கு வயதாகி விட்டது என்று 1962-63-ல் கிண்டலடித்தார் கண்ணதாசன்//

Very good comedy.
Old is Gold.

Kavignar on MGR.
Unbelievable.
but Good one.

Anonymous said...

// கைநீட்டிக் கொஞ்சுவோர் பக்கமெல்லாம் கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ! //

Kannadhasan altered his views more often and switch-over to parties often.

// நிலையில்லா மனம் உனக்கு! ஆனால் நிலைபெற்ற புகழ் உனக்கு! //


100% correct

தெரியாத வரலாற்றினை தெரிய வைத்து தெளிய வைத்தும் இருக்கிறீர்கள், நன்றி

Saravanan
Ch-22

Anonymous said...

// ” கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு

பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு.

ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது “

– கலைஞர் மு.கருணாநிதி //


True words.

We are able to see the Contradictory words of Kannadhasan's through various comments provided here.

Hope Cho Ramaswamy and Kannadhasan are friends.

Mani Bharathi

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனானிமஸ்-ஆக வந்தாலும் அவர் தந்த
பின்னூட்டச் செய்திகள் அனைத்தும்
சுவை............................!

Anonymous said...

Paramakudi ramki, the same bhavatgita taught us to win adharma you may do adharma because it is kaliyugam, Do u thing abt none of us known abt mgr, but kalaignar is really worst than mgr, he is like thiruthirashtran in bharatham always thing about his own family, so don't dilute the war in-between dharma and adharma, may be u like them then it is your option we can't criticize but pl don't dilute the real thing with image of Hinduism and like neutral , if you talk about Hinduism then kalaighzar is our first & always enemy like sakuni

Anonymous said...

You can change your blog name as "Iratti Elai" or "Jayvin kooja" which will be more appropriate. You will never criticize Jaya nor support Karuna's good things.

arasu said...

"How many times will you people be killing Karunanidhi ?

These comments (on Karunanidhi) are not from Annadurai. These are all the perceptions by Kannadasan. Kannadasan is a great Poet, lyric writer, Hindu Philosopher but not a good politician. Even EVK Sambath too.

If you read, Kannadhasan's "Arangamum Anthararangamum " story, you will be able to know the real picture of MGR. He damaged MGR ( with the character name Chandrasuryan) and even Jayalalitha too. Will you publish that too?"
மிகச் சரி பரமக்குடி ராம்கி.

Anonymous said...

கலைஞரை ஏன் பத்திரிக்கைகள் தாக்கி எழுதுகின்றன ?

நாம் ஜெயலலிதா ஆட்சியையும் பார்த்திருக்கிறோம் அவரது ஆட்சியில் நடந்த செயல்களையும் பணிகளையும் பார்த்திருப்பதோடு அனுபவித்துமிருக்கிறோம் அதே மாதிரி கலைஞர் ஆட்சியையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அவரின் சாதனைகளையும் பார்க்கிறோம் அவரது ஆட்சியால் மக்களுக்கு கிடைக்க்கூடிய பலன்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்

இந்த இருவரில் தமிழ் நாட்டை யார் சிறப்பாக ஆழ்கிறார்கள் என்பதும் நமக்கு தெரிகிறது யாரால் பொது மக்கள் நன்மை அடைகிறார்களோ அவர்களுக்கு தான் மக்கள் ஆதரவளிப்பார்கள் இதில் எந்த விதமான மாற்றுக் கருத்துக்கும் வேலை இல்லை

அப்படியிருக்கையில் ஜெயலலிதா பொதுக்கூட்டங்களிலும் அல்லது அவரால் வெளியிடப்படும் அறிக்கைகளிலும் தற்போது நடைபெற்றுவரும் கலைஞர் ஆட்சியில் குறை இருப்பதாக கூறுகிறார் ஆனால் குறை கூறுவதற்கு முன்பு அவரது ஆட்சியில் அவரால் செய்யப்பட்ட சாதனைகளை கூறினால் வசதியாக இருக்கும் மக்களுக்கும் அது பயன்படும் அதை விட்டுவிட்டு கலைஞர் எவ்வளவு அரிய செயல்களை செய்தாலும் அதை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று குறை விட்டால் அவர் ஒன்றும் செய்யவில்லை இந்த புண்ணியவதி ஜெயல்லிதாதான் நமக்கு வாரி வழங்கினார் என்று ஏமாந்து ஓட்டு போட்டு விடுவார்கள் என்றும்

எப்படியாவது மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என நினக்கும் ஜெயல்லிதாவுக்கு திணமலர்,திணமனி பத்திரிக்கைகள் தீவிரமாக ஆதரவு கொடுப்பதை பார்த்தால் தமிழர்களாகிய நாம் ஏன் கலைஞரையும் அவரால் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஏன் கண்ணை மூடிகொண்டு ஆதரிக்க கூடாது என்று தொன்றுகிறது ஒவ்வொறு விசயத்திலும் ஜெயலலிதா பொய்யை தான் சொல்லுகிறார் கச்ச தீவு பிரச்சினையில் கலைஞருக்கு தெரியாமல் அன்றைய பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் போட்டபோது வெளிநடப்பு செய்தவர் ஜெயலலிதாவின் குரு எம்ஜியார் இது வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும் ஆனால் ஜெயலலிதா கூறுகிறார் கலைஞர் கச்ச தீவை தாரை வார்த்து விட்டதாக இது எதை காட்டுகிறது ஜெயலலிதா ஒரு கபடமான நேர்மையில்லாதவர் என்பது தெரியவருகிறது ஒவ்வொறு நடவடிக்கையிலும் ஜெயலலிதாவின் திருட்டுத்தனம் அவரை அரியாமலேயே வெளிப்படும் இதற்கு அடுக்கு அடுக்கான உதாரனங்களை கூறலாம்....

இலவசங்களை அதிகமாக அனுபவிப்பவர்கள் யார் யார் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் அரசு மருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரிகள்,அரசு மணியம் பெறும் அனைத்து கல்லூரிகளில் படிக்கும் மேட்டுக்குடி மக்கள் தான அதிகமாக இலவசங்களை அனுபவித்து வருகிறார்கள் இப்படியிருக்கையில் சில சமூக விரோதிகள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இலவசமக கலைஞர் அள்ளி கொடுக்கிறாரே என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்கிறார்கள் இவர்களெல்லாம் உயர்ந்த ஜாதிகாரர்ர்களென்று நினைத்துவிடாதீர்கள் மற்றவர்கள் வாழ பொருக்காத கேவலமான ஜென்மங்கள் ஆண்டாண்டு காலங்களாக நாம் மட்டுமே வாழவெண்டுமென நினத்து வாழ்பவர்கள் இவர்களுக்கு நேர்மையாக வாழதெரியாது அடுத்தவர்களை ஏமாற்றி,அடுத்தவர்களை காலை வாரி விட்டுதான் இவர்களால் வாழ்க்கை நடத்த முடியும் இது போன்ற சமூக விரோதிகள் தான் ஜெயல்லிதாவை ஆதரிப்பவர்கள் இவர்கள் உழைத்து வாழ மாட்டார்கள் அடுத்தவன் உழைப்பை சுரண்டி வாழ்பவர்கள் இதே கருத்தை உடையவர் தான் ஜெயல்லிதா

Anonymous said...

கலைஞரை ஏன் பத்திரிக்கைகள் தாக்கி எழுதுகின்றன ?

நாம் ஜெயலலிதா ஆட்சியையும் பார்த்திருக்கிறோம் அவரது ஆட்சியில் நடந்த செயல்களையும் பணிகளையும் பார்த்திருப்பதோடு அனுபவித்துமிருக்கிறோம் அதே மாதிரி கலைஞர் ஆட்சியையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அவரின் சாதனைகளையும் பார்க்கிறோம் அவரது ஆட்சியால் மக்களுக்கு கிடைக்க்கூடிய பலன்களையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்

இந்த இருவரில் தமிழ் நாட்டை யார் சிறப்பாக ஆழ்கிறார்கள் என்பதும் நமக்கு தெரிகிறது யாரால் பொது மக்கள் நன்மை அடைகிறார்களோ அவர்களுக்கு தான் மக்கள் ஆதரவளிப்பார்கள் இதில் எந்த விதமான மாற்றுக் கருத்துக்கும் வேலை இல்லை

அப்படியிருக்கையில் ஜெயலலிதா பொதுக்கூட்டங்களிலும் அல்லது அவரால் வெளியிடப்படும் அறிக்கைகளிலும் தற்போது நடைபெற்றுவரும் கலைஞர் ஆட்சியில் குறை இருப்பதாக கூறுகிறார் ஆனால் குறை கூறுவதற்கு முன்பு அவரது ஆட்சியில் அவரால் செய்யப்பட்ட சாதனைகளை கூறினால் வசதியாக இருக்கும் மக்களுக்கும் அது பயன்படும் அதை விட்டுவிட்டு கலைஞர் எவ்வளவு அரிய செயல்களை செய்தாலும் அதை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று குறை விட்டால் அவர் ஒன்றும் செய்யவில்லை இந்த புண்ணியவதி ஜெயல்லிதாதான் நமக்கு வாரி வழங்கினார் என்று ஏமாந்து ஓட்டு போட்டு விடுவார்கள் என்றும்

எப்படியாவது மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என நினக்கும் ஜெயல்லிதாவுக்கு திணமலர்,திணமனி பத்திரிக்கைகள் தீவிரமாக ஆதரவு கொடுப்பதை பார்த்தால் தமிழர்களாகிய நாம் ஏன் கலைஞரையும் அவரால் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஏன் கண்ணை மூடிகொண்டு ஆதரிக்க கூடாது என்று தொன்றுகிறது ஒவ்வொறு விசயத்திலும் ஜெயலலிதா பொய்யை தான் சொல்லுகிறார் கச்ச தீவு பிரச்சினையில் கலைஞருக்கு தெரியாமல் அன்றைய பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் போட்டபோது வெளிநடப்பு செய்தவர் ஜெயலலிதாவின் குரு எம்ஜியார் இது வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும் ஆனால் ஜெயலலிதா கூறுகிறார் கலைஞர் கச்ச தீவை தாரை வார்த்து விட்டதாக இது எதை காட்டுகிறது ஜெயலலிதா ஒரு கபடமான நேர்மையில்லாதவர் என்பது தெரியவருகிறது ஒவ்வொறு நடவடிக்கையிலும் ஜெயலலிதாவின் திருட்டுத்தனம் அவரை அரியாமலேயே வெளிப்படும் இதற்கு அடுக்கு அடுக்கான உதாரனங்களை கூறலாம்....

இலவசங்களை அதிகமாக அனுபவிப்பவர்கள் யார் யார் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் அரசு மருத்துவ கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரிகள்,அரசு மணியம் பெறும் அனைத்து கல்லூரிகளில் படிக்கும் மேட்டுக்குடி மக்கள் தான அதிகமாக இலவசங்களை அனுபவித்து வருகிறார்கள் இப்படியிருக்கையில் சில சமூக விரோதிகள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை இலவசமக கலைஞர் அள்ளி கொடுக்கிறாரே என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்கிறார்கள் இவர்களெல்லாம் உயர்ந்த ஜாதிகாரர்ர்களென்று நினைத்துவிடாதீர்கள் மற்றவர்கள் வாழ பொருக்காத கேவலமான ஜென்மங்கள் ஆண்டாண்டு காலங்களாக நாம் மட்டுமே வாழவெண்டுமென நினத்து வாழ்பவர்கள் இவர்களுக்கு நேர்மையாக வாழதெரியாது அடுத்தவர்களை ஏமாற்றி,அடுத்தவர்களை காலை வாரி விட்டுதான் இவர்களால் வாழ்க்கை நடத்த முடியும் இது போன்ற சமூக விரோதிகள் தான் ஜெயல்லிதாவை ஆதரிப்பவர்கள் இவர்கள் உழைத்து வாழ மாட்டார்கள் அடுத்தவன் உழைப்பை சுரண்டி வாழ்பவர்கள் இதே கருத்தை உடையவர் தான் ஜெயல்லிதா

Anonymous said...

ஒவ்வொறு தேர்தல் அறிக்கையிலும் சேது சமுத்திர திட்ட்த்தை நிறைவேற்றுவேன் என்று கூறிய ஜெயல்லிதா இன்று உச்ச நீதிமன்றம் வரை சென்று தடை வாங்குகிறார் இதிலிருந்தே தெரியலையா அவரின் தமிழ் பற்றும் தமிழர்களின் மிதுள்ள பற்றும் ஜெயல்லிதாவால் அப்பாவி தமிழர்களை தான் ஏமாற்ற முடியும் மனசாட்சியை கூடவா ஏமற்ற முடியும்.

வைராக்கியமாக இருப்பதாக காட்டிகொள்ளும் ஜெயல்லிதா எப்படி இரண்டு இலட்சம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் டிஷ்மிஸ் செய்தாரோ பின் அதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று டிஷ்மிஸ் செய்த்து நியாயம் என்று வாதாடினாரோ அப்படி பட்டவர் இன்று கேவலம் பதவிக்காக ஓட்டு கேட்டு வருகிறாரே இப்பொழுது எங்கே சென்றது அவரது கம்பீரம்.

கம்பீரத்துக்கும் ஜெயல்லிதாவுக்கும் என்ன சம்பந்தம் இவரது இளமைகாலபடங்களில்பார்த்தாலே தெரியும்.

Anonymous said...

வாழ்கையில் அரிசி சோறு சாப்பிடுவதே லட்சியம் என்று இருந்த வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 76% மக்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போட்டது கருணா நிதியின் இமாலய சாதனை.

அண்ணாதுரை சொன்னார் ரூபாய்க்கு ஒரு படி போடுவது லட்சியம் என்று. எப்போ 1967 ­இல...அன்று விலை வாசி என்ன? இன்று?

அண்ணாதுரை ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடாத்போது திட்டிய அதே தமிழ் சூத்திரர்கள் கருணா நிதி ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடும் போது திட்டுகிரீர்களே. ஏன்?


ஆட்டையாம்பட்டி அம்பி

Anonymous said...

Let us bring the Dharma Rule of Jayalalitha and remove Karunanidhi's Adarma rule (??)ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம்.......

அம்மையார் ஆட்சி சற்றே கட்டுடைத்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

"சட்டப்பேரவையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது,
தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்" என்ற ஆருடங்களையும்,
கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி ஆரவாரத்துடன் ஆட்சியைப் பிடித்தது அ.தி.மு.க(2001 தேர்தல்).

ஆட்சியை தொடங்கிய உடனே,
உளுத்த அரிசியா, புளுத்த அரிசியா?
என்ற விவாதம் சட்டப்பேரவையையே உலுக்கியது.
தொடர்ந்து,
நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்களும் முந்தைய தி.மு.க ஆட்சியைக் குறை சொல்வது,
தி.மு.க தலைவர் கருணாநிதியை நையாண்டி செய்வது,
அம்மாவை வானளாவப் புகழ்வது,
எதிர்க் கட்சிகளைப் பேசவிடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளின் உச்ச கட்டமாய்,
தி.மு.க தலைவர் கருணாநிதி, நள்ளிரவில் அடித்து உதைத்து இழுத்து வரப்பட்டார்(நன்றி: சன் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகள்).
விவகாரம் அத்தோடு மட்டும் நில்லாமல்,
சாலைப் பணியாளர்கள் வேலை பறிப்பு,
உழவர் சந்தை திட்டம்,
சிற்றுந்து திட்டம்,
அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்,
நமக்கு நாமே திட்டம்,
தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களுக்கு மூடு விழா என இரண்டு வருடம் ஆட்சி நன்றாகவே(?) நடந்தது.

அடுத்த குறி அரசு ஊழியர்கள்.
யாரோ ஒரு புண்ணியவான், "அரசு ஊழியர்கள் எல்லாம், தி.மு.க.விற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்" என்று போட்டுக் கொடுத்ததின் பலனாக, அவர்கள் அனுபவித்து வந்த அத்தனை சலுகைகளும் பறிக்கப்பட்டன. உரிமைகளைக் கேட்டுப் போராடிய அரசு ஊழியர்கள் எல்லாம் வழக்கம் போல் அடித்து உதைத்து இழுத்து வரப் பட்டார்கள்.

பிறகு இதுவும் போரடிக்கவே,
ஆடு கோழி பலியிட தடைச்சட்டம்,
மதமாற்றத் தடைச் சட்டம்,
ராணி மேரிக் கல்லூரியை இடித்து தலைமைச் செயலகம் கட்டுவது,
கண்ணகி சிலையைக் கடத்துவது,
சாரயக் கடைகளை அரசே திறப்பது என்று போனது.

பிறகு வழக்கம் போல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதற்காக சிறையில் அடைக்கப்பட்டு,
வழக்கு விசாரணை என்ற பெயரில் தமிழ் நாடு முழுவதும் அலைக்கழிக்கப்பட்டார்.

அப்போது நெசவாளர்கள் கஞ்சித்தொட்டி வைத்ததும்,
விவசாயிகள் எலிக்கறி தின்றதும் கூட எதிர்க் கட்சிகளின் சதியாக சொல்லப்பட்டது.
இடைஇடையே,
காமெடிக்காக கஞசா வைத்திருந்ததாகச் சொல்லி(!), "முன்னாள் வளர்ப்பு மகன், சிங்கத் தமிழன் சின்ன எம்.ஜி.ஆர். சுதாகரன்", "கஞ்சா அழகி செரினா" ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது "நடராஜ" ரகசியமாகவே இருந்தது.
இங்கே இதெல்லாம் நடந்து கொன்டிருக்க,
மத்தியில், வர்ணாசிரம சக்திகளுக்குப் பயந்து தி.மு.க வை அரசிலிருந்து வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.
சோனியாவிடமிருந்து நல்ல அறிகுறி கிடைக்கவே தி.மு.க வெளியேறியது. "இந்தியா ஒளிர்கிறது" என்று பெரிய காமெடியைச் சொல்லி ஓட்டுக் கேட்டது பி.ஜே.பி. செல்போன் லைசென்சு கட்டண கமிஷென்,
சவப் பெட்டிஊழல் என்று பி.ஜெ.பி ஒளிர்ந்தது வேறு விஷயம்.
எல்லாக் கோவங்களும் சுட்டெரிக்க,
அ.தி.மு.க மண்டையில் பொளேர் என்று போட்டனர் தமிழக மக்கள். 40 இடங்களிலும் அ.தி.மு.க. மண்ணைக் கவ்வியது.

வாரிசு அரசியலே நடக்காத (!) மற்றும், தி.மு.க வை "வாரிசு அரசியல் கட்சி" என்று சொல்லும்,

அ.தி.மு.க. வின் வாரிசான திவாகரன் பெரியகுளத்தில் மண்ணைக் கவ்வினாலும் அவருக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி வழங்கப்பட்டது. (திவாகரன் என்ன தியாகம் செய்து அந்தப் பதவியை அடைந்தார் என்பது "நடராஜ" ரகசியம்).

இப்போது தான் அம்மு யோசிக்க ஆரம்பித்தார்.

Anonymous said...

காமராசரின் இலவச மதிய உணவு திட்டதால் வயிறு நிறைந்தவன் நான்,

ஒரு நல்லவர் இலவசமாக பொறியியல் படிக்கவைத்து முன்னுக்கு வந்தவன் நான். முடியாத மக்கள் இலவசத்தை பயன் படுத்துவது இழிவு அல்ல.

இலவசத்தை சாடும் மக்கள் ஏன் நிலை இருந்து வந்து இருந்தால் அவற்ற்றை சாட மாட்டார்கள். தொலை காட்சி பார்க்க மாடி வீடுகள் வாசலில் தவம் கிடந்த நாட்கள், நாயை போன்ற துரத்தப்பட்ட நாட்கள் இன்று நினைத்தாலும் இதயம் கனக்கிறது. இலவசம் என்பதை அரசியல் கட்சிகள் / மக்கள் தவறாக பயன்படுத்தினால் சாடுங்கள்.

வீடு வேலை செய்து வந்த சொற்ப பணத்தில் எனக்கு வயிறார சோறு போடமுடியாத நிலையில் இலவச மதிய உணவு திட்டத்தை பயன்படுத்தியது இழிவா?

இன்று அந்த நல்லவர் மற்றும் அவரது மகன் தயவில் நான் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறேன் நன்கு படிக்கும் வசதி இல்லாத நான்கு மாணவர்களுக்கு முழு படிப்பு செலவை ஏற்றுகொள்கிறேன்.


எனது தாயாரை நான் ஐந்து நட்சத்திர உணவகத்திற்கு முதன் முதலில் அழைத்து சென்ற பொழுது அவர் முகத்தில் தெரிந்த பரவசம், மகிழ்ச்சி இந்த ஜென்ம பலன் எனக்கு கிடைத்துவிட்டது. இதெல்லாம் எனக்கு நல்லவர் ஒருவர் போட்ட படிப்பு பிச்சையால் சாதியமாயிற்று.

இலவசம் என்பது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளிலும் உள்ளது. அமெரிக்க அரசாங்கம் அங்கு இயலாதவர்களுக்கு FOOD STAMP மற்றும் குளிர் காலங்களில் வீடுகளுக்கு வெப்பம் செய்ய மானியம் கொடுக்கிறது என கேள்விபட்டுள்ளேன்..

-திருநாவுக்கரசு (சென்னை).

Anonymous said...

Jaya on Dharma way ...!

2001 சட்ட சபை தேர்தலில், சென்னை எழும்பூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் ஜெ. நிறுத்தியது யாரை தெரியுமா?

5 கொலை வழக்குகள் உட்பட 45 குற்ற வழக்குகள் இருந்த, சென்னை நகருக்குள்ளே வரக்கூடாது என்ற நீதிமன்ற தடை இருந்த ஜான் பாண்டியன் என்பவரை. நல்ல வேளை அவர் பரிதி இளம் வழுதியிடம் தோற்றார்.

ஜெ. முத்துக்கருப்பனை எப்படி பாராட்ட்னார் தெரியுமா? "எல்லாரிடமும் (லஞ்ச பணத்திற்கு) கை நீட்டுவார்" என்று. ஆனால் தான் ஆட்சிக்கு வந்ததும் அதே முத்துக்கருப்பனை சென்னை நகர காவல் ஆணையராக நியமித்ததும் ஜெ. தான்.

ஜெ. விற்கு ரவுடிகள், ஊழல் பேர்வழிகள், கொலைகாரர்கள் என்றால் எவ்வளவு பிரியம் என்று இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள்.

Anonymous said...

ஏமாற்று வேலையும் கோமாளித்தனமும் எடுபடபோவதில்லை


எம்.ஜியாருக்கும் தனக்கும் எப்படி பட்ட உறவு இருந்தது என்பதையும் அதை வைத்து ஜெயலலிதாவை எம்ஜிஆர் அம்போவென்று விட்டுவிட்டு சென்றுவிட்டதை போல் நாடகமாடி அப்பாவி தமிழர்களை ஏமாற்றி தான் எம்ஜி ஆரின் வாரிசு(எம்ஜியாருக்கு எதிராக ராஜிவ் காந்திக்குகே கடிதம் எழுதியவர்) என்றும் தமிழர்களின் ஓட்டுக்களை பெற்று முதலமைச்சரான ஜெயலலிதா தனது ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கென்றோ தமிழ் நாட்டின் வளர்ச்சிகென்றோ உறுப்புடியான திட்டங்கள் எதுவும் போடவுமில்லை செயல்படுத்தவுமில்லை.

அவரது ஆட்சியினால் பாதிக்கப்படாதவர்களே இல்லை அவரால் பயனடைந்தவர்கள் சசிகலா குடும்பத்தினர மட்டுமே இப்படிபட்டவர் இப்பொழுது நடைபெற்று வரும் கலைஞர் ஆட்சியை குறை கூறுகிறார் கலைஞர் எல்லோரும் பயனடையும் வகையில் திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறார் அதில் குறை கூறும் ஜெயலலிதா தனது ஆட்சியினையும் அதன் அலங்கோலத்தையும் சற்று யோசித்து பார்த்து பேசினால் அவர் மனசாட்சி உள்ளவர் என நம்பலாம்.

மேலும் கலைஞர் ஆட்சியை விரும்பாதவர்கள் யார் என்று பார்த்தால் ஏழை எளிய பாட்டாளி மக்கள் முன்னேறுவதை விரும்பாத ஜாதி வெறியர்களும் சமூக விரோதிகளுமே என்பதை திணமலர் நடத்தும் ஆசிரியரும் அதில் வாசகர்கள் என்ற போர்வையில் கருத்துக்கள் கூறுவது போன்று தங்களது சுய நலத்தையும் சமூக விரோதத்தையும் எழுதும் ஜாதி வெறிபிடித்த மிருகங்கள் தான் தினமலரில் கலைஞரையும் அவரது குடும்பத்தையும் படுகேவலமாக விமர்சித்து எழுதும் அயோக்கியர்கள் என்பதை தமிழர்கள் புரிந்தும் புரியாதது போல் இருக்கிறார்கள் என்பதை தினமலர் ஆசிரியர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார் அதனால் தான் அவர் கலைஞரையும் கலைஞர் குடும்பத்தையும் எவ்வளவு கேவலமாக எழுதினாலும் அப்படியே போடுகிறார்,


கலைஞரையும் அவரது தொண்டினையும் கேவலமாக பேசிவிட்டால் இவரை தூக்கி வைத்து விடுவார்கள் என்று சோ புத்திமதி கூறியிருப்பார் போல் தெரிகிறது எது எப்படியிருந்தாலும் ஜெயலலிதா திருந்தவேமாட்டார் என்பது திண்ணம்.

மன்னன்

Anonymous said...

எம்.ஜி.ஆர் ஏன் ஜெயலலிதாவுக்கு கொ.ப.செ பதவியைக் கொடுத்தார்?

ஜெயலலிதாவை ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர் புறக்கணித்தார் என்பது உண்மையா?

ஜெயலலிதா ஆர்.எம்.வீ மோதலுக்கு என்ன காரணம்?

ஒட்டுமொத்த அதிமுகவும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது எப்படி?


தன்னம்பிக்கை என்பது ஜெயலலிதாவின் பலமா? பலவீனமா?

Anonymous said...

"பழைய வரலாறு"

குலேபகாவலி’யில் நடித்த போது எம்.ஜி.ஆருடன் நண்பரானார் சந்திரபாபு. ஆனால் அது சுலபமாக நடந்துவிடவில்லை. நட்பு எப்படி மலர்ந்து என்பதைச் சந்திரபாபுவே விவரித்திருக்கிறார்.

‘…செட்டில் ரொம்ப வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்போம். எங்கள் குழுவில் இல்லாத ஒரே நபர் மிஸ்டர் எம்.ஜி.ஆர்.தான். தனிமையில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பார். அன்றும் அப்படித்தான் அவர் ஒரு புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். நான், டைரக்டர் ராமண்ணா, நடிகர் தங்கவேலு, மற்றும் பலர் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். ராமண்ணா மிஸ்டர் எம்.ஜி.ஆரை அழைத்து அவர் அருகே அமரச் சொன்னார். உடனே நான் ஒரு ஜோக் அடித்தேன். எல்லோரும் சிரித்தார்கள். ஆனால் மிஸ்டர். எம்.ஜி.ஆர். மட்டும் சிரிக்கவில்லை.


‘என்ன மிஸ்டர் எம்.ஜி.ஆர்! சிரிச்சா முத்தா உதிர்ந்து போகும்? இப்படி உம்முன்னு இருக்கீங்களே’ என்றேன்.

‘உங்க ஜோக்குக்கு சிரிப்பா வரும்? கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்’ என்றார் பட்டென்று.

எல்லோரும் என்னேயே பார்த்தார்கள் எனக்கு அவமானமாகப் போய் விட்டது. பிறகுதான் எனக்கு மிஸ்டர் எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொன்னார்கள். ‘அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்குமிடம் தேடித்தான் போக வேண்டும். உங்க ஜோக்குக்கு அவர் சிரிக்காததற்குக் காரணமே இதுதான். அவர் சிரிச்சுட்டார்னா, அந்தக் கூட்டத்தில நீங்க உயர்ந்திடுவீங்க இல்லையா, அதனாலதான் அப்படிச் சொன்னார் அவர்’ என்றார்கள்.

நான் வியந்தேன்.

ஒரு சாதாரண விஷயத்தில்கூட இந்த மனிதர் இப்படி நடந்து கொள்கிறாரே என்று நினைத்தேன். அன்று ஒரு சிறிய குழுவில் கூட தான் மட்டும்தான் பெரியவன் என்று காட்டிக் கொள்ள ஆசைப்பட்டார். அன்றிலிருந்து அவர் வளர்த்துக் கொண்ட அந்த ‘தான்’ என்ற அகந்தை இன்று அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான் கண்கூடாகக் காணுகிறேன். அந்த ஒரு நிகழ்ச்சியில் இருந்து நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன். ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும்போதும் சிரிப்பார். பதிலுக்கு நானும் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரிப்பேன்.

Anonymous said...

"பழைய வரலாறு"

எம்.ஜி.ஆரும் சந்திரபாபுவும் ‘அடிமைப் பெண்’(1969) படத்தில் நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த இறுதிப் படம் இதுதான்.

சுமார் நாலடி உள்ள ஒரு சுவர் மீது ஏறி, ஓடி சந்திரபாபுவும் ஜெயலலிதாவும் தப்பிப்பது போல் காட்சி. ஷாட்டின் போது, சுவர் மிகவும் சேதப்பட்டிருந்ததால், முன்னால் ஓடிய சந்திரபாபு நிலை தடுமாறி கீழே விழப் போக தாங்கிப் பிடித்தார் ஜெயலலிதா. அதோடு படப்பிடிப்பில் பிரேக் விடப்பட்டது.

உணவு இடைவேளையில் சந்திரபாபு, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மூவரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். எம்.ஜி.ஆர். எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தார்.


அதன்பிறகு எம்.ஜி.ஆர். சாப்பிடவில்லை. பசியில்லை என்று கூறிவிட்டார். முகத்தை ஒரு மாதிரியே வைத்திருந்தார். படப்பிடிப்பும் துவங்கவில்லை.

சந்திரபாபு ஜெயலலிதாவிடம் என்ன விஷயம் என தனியாக விசாரித்தார். அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியானார் சந்திரபாபு.

படப்பிடிப்பில் தடுமாறி விழப் போன சந்திரபாபுவை ஜெயலலிதா தாங்கிப் பிடித்ததை எம்.ஜி.ஆர். விரும்பவில்லையாம். அதுதான் அவர் மூட்-அவுட் ஆகக் காரணமென தெரிந்து கொண்ட சந்திரபாபுவும் சங்கடத்துக்குள்ளானார். காரணம் ஜெயலலிதாவின் தாயாரின் சகோதரியான வித்யாவதி, சந்திரபாபு எல்லோரும் குடும்ப நண்பர்கள். அவர்களின் வீட்டுக்கு சந்திரபாபு செல்லும் போது, ‘அங்கிள்’ என அழைத்தபடி ஓடி வந்து சந்திரபாபுவுடன் பேசுவார், சிறு குழந்தையாக இருந்த ஜெயலலிதா. இதைப் புரிந்து கொள்ளாமல் எம்.ஜி.ஆர். தவறாக நினைத்துக் கொண்டாரே என வருந்தினார் சந்திரபாபு

பெசொவி said...

@ idlyvadai
உங்க பதிவை விடுங்க...................பின்னூட்டங்களைப் படித்தால் பல விதமான நாவல்களைப் படிப்பதுபோல் ஒரு சுவாரசியம்!
அதனை பேருக்கும் நன்றி!

kanavu said...

கருத்துள்ள பதிவு.நன்றி