பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 16, 2011

மம - விஸ்வாமித்ரா


மம = ன்மோகன் சிங்கின் ழுப்பல்கள் - விஸ்வாமித்ரா

மன்மோகன் சிங் டி வி யில் டி வியின் ஆசிரியர்களுக்கு பேட்டி தரப் போகிறாராம். அதை உலக அதிசயம் போல மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி மாள்கிறார்கள். ஒரு நாட்டின் பிரதமர் தன் மக்களுடன் தொலைக்காட்சி, பத்திரிகை வாயிலாக தொடர்பு கொள்வது ஒரு வித அடிப்படை எதிர்பார்ப்பு, கடமை. அது கூட இந்தப் பாரதத் திருநாட்டில் ஒரு அதிசய நிகழ்ச்சியாக மாறி விட்டது. தன் ஆட்சியின் தன் கொள்கைகளை தன் செயல் பாட்டை அடிக்கடி மக்களுடன் ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்வதும் டவுண் ஹால் மீட்டிங்குகள் மூலமாக தன் நிலைகளை விவரிப்பதுமே ஒரு ஜனநாயக நாட்டின் தலைவருக்கு அழகு, நேர்மை. தன்னிடம் மறைப்பதற்கு ஏதுமில்லாத எந்தவொரு அரசியல்வாதியும் உலகத் தலைவரும் இந்தியப் பிரதமரைப் போல பத்திரிகையாளர்களையும் மக்களைச் சந்திப்பதையும் தவிர்ப்பது கிடையாது. வாரம் ஒரு முறை அமெரிக்க அதிபரை ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவர்களுடன் உரையாடுவதையோ, ஏதாவது ஒரு சானலில் பேட்டி அளிப்பதையோ பத்திரிகை டி வி நிருபர்களுடன் உரையாடுவதையோ தொடர்ந்து காணலாம். அப்படி ஊடகங்களையும் மக்கள் சந்திப்பையும் புறக்கணிக்கும் எவரும் அடிப்படையாக அந்தப் பதவியின் ஆரம்ப நிலைக்குக் கூட போட்டியிட அருகதையில்லாதவர்களாக ஆகி விடுவார்கள்.

மக்கள் தொடர்பு என்பது ஒரு அரசியல்வாதிக்கு முக்கியமானது. மக்களை நேரடியாகச் சென்று சந்திக்க முடியாவிட்டாலும் கூட பத்திரிகைகள், தொலைக் காட்சிகள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில் சந்திப்பது பொதுவாழ்வில் இருக்கும் அதிலும் முதல்வர், பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்களின் அடிப்படைத் தகுதியும் கடமையாகும். அதைச் செய்யத் தவறினால் அவர்களிடம் கள்ளம் கபடம் சூது உள்ளது என்றே அர்த்தம் ஆகும். மன்மோகன் என்றுமே நிருபர்களிடம் பேசுவது கிடையாது. மறைப்பதற்கு ஊழல் இருப்பவர் எப்படி நேர் கொண்ட பார்வையுடனும் நிமிர்ந்த நன்னடையுடனும் மக்களை எதிர் கொள்ள முடியும்?

மன்மோகன் சிங் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் கிடையாது. டெல்லி தொகுதியில் நின்று தோற்றுப் போனவர். தனியாக நின்றால் ஒரு கார்ப்பரேஷன் வார்டு கவுன்சிலர் பதவிக்காக போட்டியிடக் கூட அருகதையற்றவர். அதற்கான ஆட்சித் திறமையோ, பேச்சுத் திறனோ, நேர்மையோ அவருக்கு என்றுமே இருந்ததில்லை. அவருக்கு மக்கள் தொடர்பே கிடையாது. கொல்லைப் புறம் வழியாக அதிலும் அவருக்குச் சம்பந்தமேயில்லாத அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பின்புறம் வழியாக பிரதமர் பதவியில் அமர்த்தப் பட்டவர். இவர் ஒரு அமர்த்தப் பட்ட பொம்மைப் பிரதமர் என்பதை அவரது பேச்சுக்களும் நடவடிக்கைகளும் மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றன.
இவர் மக்களை என்றுமே நேர்மையாகவும் துணிவுடனும் அணுகியதே கிடையாது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தகுதியான பேச்சு வன்மை இவருக்குக் கிடையாது. மியாவ் மியாவ் என்று பூனை கத்துவது போல இவர் பேசும் எதுவும் என்றைக்குமே எவரையுமே கவர்ந்ததும் கிடையாது. இவருக்கு முன்னால் இருந்த பல பிரதமர்கள் அபாரமான பேச்சு வன்மை உடையவர்கள். அவர்களில் பலரும் என்றுமே பத்திரிகையாளர்களையோ, பொது மக்களையோ ஊடகங்களையோ தவிர்த்தவர்கள் கிடையாது. அவர்கள் பத்திரிகையாளர்களுடன் மனம் விட்டு வெளிப்படையாகப் பேசுபவர்கள் இருந்தார்கள். நரசிம்மராவும், வாய்பாயியும் அற்புதமான பேச்சாளர்கள், உரையாடல்களில் ஆர்வம் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு ஓடி ஒளிந்தது கிடையாது.
ஆனால் மன்மோகன் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது ஒரு அபூர்வமான தருணமாகக் கருதப் பட்டு இன்று உலக அதிசயங்களில் ஒன்றாகி விட்டது. மன்மோகன் மட்டும் அல்ல அவரது தலைவியான சோனியாவும் கூட என்றுமே வெளிப்படையாக தனது முகத்தைக் காட்டியது கிடையாது தனது எண்ணங்களை ஒளிவு மறைவின்றி சொன்னது கிடையாது. அதற்குக் காரணமாக அவர் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர் அவர் ஒரு அரசியல்வாதி கிடையாது என்றெல்லாம் சொல்லப் படுகிறது. உண்மையான காரணம் மனதிலும் செயலிலும் உள்ள கயமை மட்டுமே. அந்தக் கள்ளத்தனமும் கபடமுமே வெளிப்படையாகக் கண்களைப் பார்த்து பேச அச்சம் ஊட்டுகிறது. அதன் காரணமாகவே சோனியாவும் மன்மோகனும் உலகத்தை எதிர் கொள்ள பயப்படுகிறார்கள் அறிக்கைகள் மூலமாக மட்டுமே எதிர் கொள்கிறார்கள். மேலும் இருவருக்கும் சேர்ந்தாற் போல நாலு வார்த்தைகளைத் திக்காமல் திணறாமல் பேசத் தெரியாது. அது ஒரு பெரிய குறை கிடையாது என்றாலும் தங்களது பலவீனத்தை மறைக்க முயல்கிறார்கள். இப்பொழுது மன்மோகனின் தொலைக்காட்சி பேட்டிக்குப் போகலாம்

முதலில் மன்மோகனது மதிப்பு தினம் தினம் அதல பாதாளத்துக்குப் போகிறது என்பதினால் அவரது மதிப்பைத் தூக்கி நிறுத்த அவரது பி ஆர் ஆட்கள் செய்த ஒரு ஸ்டண்ட் மட்டுமே இந்த டி வி தமாஷா. ஆம் இது ஒரு காமெடி மட்டுமே. இருபது டி வி ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்து ஆளுக்கு ரெண்டு கேள்வி கேட்க வைத்து பிரச்சினையைத் திருப்ப விட்டு மழுப்பி விட்டால் அது மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை என்ற குறையும் போக்கும் அவரது இமேஜையும் கூட்டும் என்று நினைத்திருக்கிறார்கள் ஆனால் அந்தோ பரிதாபமாக அவரது மதிப்பு இன்னும் கீழே போய் விட்டதுதான் இதில் நடந்த ஒரே நன்மை. இதில் கலந்து கொண்ட பெரும்பான்மையான டி வி நிருபர்கள் அல்லது அனைவருமே காங்கிரசின் கைக்கூலிகள். காங்கிரசின் ஊழலில் கலந்து கொண்ட ராஜ்தீப் சர்தேசாய் போன்ற புரோக்கர்கள் என்ன விதமான கேள்விகளை உருப்படியாகக் கேட்டு விட முடியும். ஆகவே இது ஒரு திட்டமிடப் பட்ட நாடகத்தின் ஒரு பகுதியே. சோனியாவின் கதையமைப்பில் நடத்தப் பட்ட மற்றொரு காட்சி. இதில் கலந்து கொண்ட டி வி எடிட்டர்கள் மன்மோகனிடம் நாங்களும் ஒரு கேள்வி கேட்டோம் என்று ஜம்பம் அடித்துக் கொள்வதைத் தவிர இந்த வட்ட மேஜை பேட்டியினால் ஒரு புண்ணாக்கு பயனும் ஏற்படவில்லை. மாறாக மக்களிடம் இவர் மீது அவநம்பிக்கையும், இவரது திறமையின்மையின் மீது, ஊழலின் மீது, தகுதியின்மை மீதான வெறுப்பையுமே இந்த டி வி பேட்டி சாதித்துள்ளது.

பேட்டியைப் கண்டதில் உருப்படியாக எந்தக் கேள்வியும் கேட்க்கப் படவில்லை. ஒரு நிஜமான பேட்டியாக இருந்திருந்தால் கீழ்க்கண்ட பேட்டிகள் கேட்க்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? ஒரு ஊழல் பற்றி கூட ஆழமாக ஒரு கேள்வி கூடக் கேட்க்கப் படவில்லை. கேட்க்க முயன்ற கோஸ்வாமியை கூட பாதியில் கட் செய்து விட்டார்கள். அடிமைகள் கூடி நடத்திய ஒரு கேளிக்கை மட்டுமே.

முதலில் மன்மோகனின் பதில்களில் நேர்மை இல்லை. தன்னம்பிக்கை இல்லை. ஒளிவு மறைவு இருந்தது. கம்பீரம் இல்லை. ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒரு மொழி ஆளுமை இல்லை. சின்னப் பையன்கள் தட்டுத் தடுமாறி மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல நடுக்கங்களுடனும் மழுப்பல்களுடனும் திணறல்களுடனும் இருந்தது. ஒரு நாட்டின் தலைவரிடம் காணப் படக் கூடாத மிகக் கேவலமான ஆளுமை வெளிப்பாடாக அமைந்து இருந்தது. மனதில் உண்மையும், சத்தியமும் இருந்தால் அது வார்த்தையில் வரும். மனதில் கள்ளமும் கபடமும் பொய்யும் மோசடி எண்ணங்களும் நிறைந்திருந்ததினால் அவரால் தன்னம்பிக்கையுடன் இந்த கேள்விகளையும் அதன் மூலம் மக்களையும் எதிர் கொள்ள முடியவில்லை. கண்களைப் பார்த்து பேசாதவன் மனதில் கபடம்தான் இருக்கும். இன்று வெளிப்பட்டது ஒரு ஊழல் பிரதமரின், ஒரு கொள்ளைக் கும்பலின் தலைவியின் அடிமையின், ஒரு பலவீனமான திறமையற்ற கேவலமான மனிதரின் மனசாட்சியில்லாத, சத்தியம் இல்லாத மோசடியான மழுப்பல்கள் மட்டுமே.

பிரதமரிடம் என்ன கேள்விகள் கேட்க்கப் பட்டிருக்க வேண்டும்? நேர்மையான பத்திரிகையாளர்களாக இருந்திருந்தால் ஒரு அருண் ஷோரியாக, ஒரு சோவாக, ஒரு குருமூர்த்தியாக இருந்திருந்தால் என்ன கேள்விகள் கேட்டிருப்பார்கள்?

1. சுவாமி புகார் செய்த பின்னாலும், சி வி சி எச்சரித்த பின்னும், பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதிய பின்னும் கடும் மொளனம் காத்தது ஏன் மிஸ்டர் மன்மோகன் சிங் என்று எவருமே கேட்க்கவில்லை. இந்தக் கேள்வி இல்லாமல் இப்படி ஒரு கேலிக் கூத்து நடந்து என்ன நடக்காமல் போனால்தான் என்ன?


மழுப்பலாக “ஸ்பெட்க்டரம் விஷயத்தில் ராஜா சரியான திசையில் செல்கிறார் என்று சொன்னது ஏன்? ” என்று கேள்வியே அவருக்கு வசதியாகக் கேட்க்கப் பட்டது

இந்தக் கேள்விக்கு எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்று மழுப்புகிறார். அது தெரியவில்லை என்றால் இவருக்கு இந்தப் பதவியில் தொடர என்ன அருகதையிருக்கிறது? இந்தப் பதிலைச் சொல்ல இவருக்குக் கேவலமாக இல்லை? ராஜா மீது புகார்கள் வந்ததாம் இருந்தாலும் கூட்டணி தர்மத்தின் படி அவர் செய்வதை இவர் ஏதும் கேள்வி கேட்க்கவில்லையாம். இதையும் வெட்க்கமின்றி சொல்லுகிறார் இந்த உத்தம புத்திரன். இவர் ராஜாவுக்கு கடிதம் எழுதினாராம். பதிலுக்கு உடனே அவரும் எல்லாம் சரியாக நடக்கிறது என்றாராம் இவர் நம்பினாராம். எல்லாமே சரியாகவே நடந்ததாம். டிராய் சொன்ன படித்தான் நடந்ததாம். அப்புறம் ஏன் ராஜாவை கைது செய்தீர்கள்? ஏன் கோர்ட்டில் கேஸ் நடக்கிறது? கபில் சிபலை விட மிகக் கேவலமாக ராஜா செய்ததை சரியென்று சொல்லி ஊழலில் தனக்கும் பங்கு உள்ளது என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார் இந்த ஊழல் பிரதமர். சின்ன உறுத்தல் கூட இவரிடம் காணப் படவில்லை என்பதுதான் வேதனையானது.

2. ஐ எஸ் ஆர் ஓ ஊழல் பற்றிய கேள்வி கேட்க்கப் பட்ட விதமே தவறு. முதலில் இவ்வளவு பெரிய வருமானம் வரக் கூடிய ஒரு விஷயத்தை ஏன் ஏலமின்றி ஒரு நிறுவனத்திற்கு மட்டும் வழங்கப் பட்டது? அதற்குப் பொறுப்பான மந்திரி நீங்கள் அல்லவா? இது எந்த விதத்தில் சரி? இது ஊழலுக்கு வழிவகுக்காதா? அந்த முடிவுக்குப் பொறுப்பான உங்களுக்கு எந்தவித பங்கும் கிடையாதா? இப்படி ஒரு மோசடி நடந்ததற்காக நீங்கள் ஏன் பதவி விலகவில்லை என்று கேட்டிருக்க வேண்டும். மாறாக விளக்கெண்ணெயில் பொறித்த வெண்டைக்காயாக ஒரு கேள்வியும் அதற்கு எழுதி வைக்கப் பட்ட மழுப்பலான ஒரு பதிலும் அளிக்கப் பட்டது. பேட்டியின் பொழுது எழுதி வைத்துப் படிக்கக் கூடாது என்று ஒரு முறை ஜெயலலிதாவுடன் ஆக்ரோஷமான சண்டைக்குப் போன கரண் தப்பார் போன்றவர்கள் மன்மோகன் எழுதி வைத்துப் படித்த பொழுது சர்வத்தையும் பொத்திக் கொண்டு ஆமோதித்தார்கள்.

3. ஜே பி சி குறித்து கேட்க்கப் பட்ட கேள்வியே தவறு. ஜே பி சி குறித்து தனக்கு பயமில்லை அதில் ஆஜர் ஆவேன் என்கிறார் இந்தச் சூரப் புலி. அப்படியானால் ஏனப்பா நீயும் உன் கட்சியும் அதை பிடிவாதமாக அமைக்க மறுத்து வருகிறீர்கள் என்று எந்த டி வி சூரர்களும் கேள்வி கேட்க்கவேயில்லை வசதியாக மறந்து போனார்கள். உனக்கு பயமில்லை என்றால் ஏன் ஜே பி சி ஐ அமைக்க மாட்டோம் என்று மொத்த குளிர்காலத் தொடரையும் வீணடித்தீர்கள் என்று எவருமே கேள்வி கேட்க்கவில்லை. ஆனால் கேட்டுக் கொண்டிருப்பவன் எல்லாம் கேனையன் என்ற நினைப்பில் பாராளுமன்றம் நடக்காததற்கு பி ஜே பி தான் காரணம் என்று கொஞ்சம் கூட வெட்க்கம் இல்லாமல் மனசாட்சி இல்லாமல் உண்மையை மறுத்துப் பொய் சொன்னார் மன்மோகன் சிங். நீ சொல்வது பச்சைப் பொய், மோசடி, ஏமாற்று வேலை, அயோக்யத்தனம் என்று எதிர் கேள்வி கேட்க்க அங்கு ஒரு மானஸ்தன் கூட இல்லாமல் போனது பரிதாபம். குஜராத் மந்திரி மீது போட்டிருக்கும் வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதினால்தான் பாராளுமன்றத்தை பி ஜே பி நடத்த விடாமல் செய்கிறது என்று உண்மையை சிறிதும் மனசாட்சி இல்லாமல் மறைத்துப் புளுகினார். இவரும் இவர் கட்சியும் ஜே பி சி அமைக்க ஒத்துக் கொண்டிருந்தால் பி ஜே பி ஏன் தடுக்கிறார்கள்? சரி பி ஜே பி மிரட்டினார்கள் கம்னியுஸ்டுகளும், அ தி மு க வினரும் எதற்காக பாராளுமன்றத்தை நடக்க விடாமல் தடுத்தார்கள்? ஒருவராவது இந்த ஏமாற்று பிரதமரிடம் கேட்டிருக்க வேண்டும் அல்லவா? ஏன் கேட்க்கவில்லை? யாருக்காக நடத்தப் பட்டது இந்த நாடகம்?

4. கருப்புப் பண விஷயத்தில் ஏன் பிடிவாதமாக நடவடிக்கை எடுக்க மழுப்புகிறீர்கள்? குதிரை வியாபாரி அலி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? சோனியாவுக்குக் கே ஜி பியால் கொடுக்கப் பட்ட பத்து மில்லியன் டாலர்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று எவருமே இந்த திருவாளர் தூய்மையிடம் கேள்வி கேட்க்க வசதியாக மறந்து போனார்கள். ஜெர்மன் அரசாங்கம் ஸ்விஸ் வங்கியில் கள்ளப் பணம் வைத்திருபவர்களின் பெயர்களைத் தரத் தயாராக இருந்த போதும் ஏன் அதைக் கேட்டு வாங்க முதலில் மறுத்தீர்கள்? அதைப் பெற்ற பின்னும் வெளியிட மறுப்பதேன் யாரைப் பாதுகாக்கிறீர்கள்? 800 பில்லியன் டாலர் கள்ளப் பணம் வைத்திருப்பவனை ஒரு சின்ன விசாரணை கூட இது வரை ஏன் செய்யவில்லை? இந்தக் கேள்விகள் எதையுமே கேட்க்கவில்லை டி வி கனவான்கள். அப்புறம் என்ன இந்த பேட்டி என்னும் நாடகம்? யாரை ஏமாற்ற?

5. ஊழல் குற்றசாட்டு சாட்டப் பட்ட பி ஜே தாமசை எப்படி எந்த யோக்யதையில் ஊழல் தடுப்பு ஆணையராக நியமித்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்ட்க அனைவருமே திட்டம் போட்டு மறந்து போனார்கள். அனைவருக்கும் ஒரே நேரத்தில் அம்னீஷீயா வந்து விட்டது.

6. குவட்ரோச்சியை நாம் மிகவும் கஷ்டப் படுத்தி விட்டோம் என்று எந்த அடிப்படையில் சொன்னீர்கள் என்று எவருக்குமே கேட்க்கத் தோன்றவில்லை. ட்ரிப்யூனல் கமிஷன் வழங்கப் பட்டிருக்கிறது என்று தீர்ப்பு வழங்கிய பிறகும் கூட சி பி ஐ ஐ விட்டு உனது அரசாங்கம் ஏன் குவட்ரோச்சியின் மீதான வழக்கை வாபஸ் செய்ய உத்தரவிட்டது என்று கேள்வி கேட்க்க ஒருவருக்காவது துணிவில்லை. எந்த அடிப்படையில் குவட்ரோச்சியின் கணக்கை விடுதலை செய்தீர்கள் என்றும் யாரும் கேட்க்க மறந்து போனார்கள்

8. சோனியா மீதும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப் படுகிறதே அது குறித்து என்ன சொல்லுகிறீர்கள் என்று எவரும் கேட்க்கவில்லை

9. காமன் வெல்த் விளையாட்டில் மொத்த பணத்தையும் விநியோகித்தது நீங்கள்தானே ஊழலுக்கும் திருட்டுக்கும் நீங்களும்தானே பொறுப்பு என்று யாருக்கும் கேள்வி கேட்க்க மனதில்லை

10. ஆஸ்திரேலியாவில் ஒருவர் கைதான பொழுது எனக்குத் தூக்கம் போயிற்று என்று துக்கம் அனுஷ்டித்த மன்மோகன் அவர்களே அனு தினமும் குண்டு வெடிப்பிலும், நக்சல் தாக்குதலிலும் கொல்லப் படும் இந்துக்களின் சாவுக்காக என்றாவது நீங்கள் தூக்கத்தை இழந்ததுண்டா என்று எவரும் கேட்க்க கனவிலும் நினைக்கவில்லை

11. 2ஜி, ஆதர்ஷ், காமன் வெல்த் கேம்ஸ், ஐ எஸ் ஆர் ஓ ஆகிய அனைத்திலும் ஊழல் செய்திருப்பவர்கள் தண்டனை அடைவார்கள் என்று சொல்லும் மன்மோகன் சிங் அவர்களை அதற்கெல்லாம் பொறுப்பாக தலைமை ஏற்ற மந்திரி சபையின் தலைவரான உங்களுக்குக் கீழே இவ்வளவு ஊழல்கள் நடந்திருக்கும் பொழுது அவற்றைத் தடுக்காத உங்களுக்கு யார் தண்டனை தருவது? என்ன தண்டனை கொடுப்பது? என்று ஒரு சின்னக் கேள்வியை யாராவது ஒருவராவது கேட்டிருந்தாலாவது இந்த பேட்டிக்கு ஒரு சின்ன் அர்த்தமாவது இருந்திருக்கும். தவறு நடந்திருக்கிறதாம், தண்டிக்கப் படுவார்களாம் ஆனால் அதில் இவருக்கு சின்ன பொறுப்புக் கூடக் கிடையாதாம். இதையும் ஒரு பிரதமர் வெட்க்கமில்லாமல் மனசாட்சியில்லாமல் சொல்லுகிறார் அதையும் ஒரு தேசம் வெட்க்கமில்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறது

12. ராஜாவை ஏன் மீண்டும் மந்திரி சபையில் சேர்த்தீர்கள் என்ற கேள்விக்கு எனக்கு யாரைச் சேர்க்க வேண்டும் சேர்க்கக் கூடாது என்ற அனுமதி கிடையாது என் மந்திரி சபையில் யார் யார் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை என்னிடம் கிடையாது அதற்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது எனக்குத் தெரியாது என்று கொஞ்சம் கூட கூச்சமில்லாமல், வெட்க்கம் இல்லாமல், மானம் இல்லாமல், மனசாட்சி இல்லாமல், பொறுப்பு இல்லாமல் ஒரு பிரதம மந்திரி பதில் சொல்லுகிறார். அப்படியானால் இந்தப் பதவியில் இருக்க ஒரு நிமிடம் கூட உங்களுக்கு அருகதை கிடையாது, ராஜாவின் உடம்பில் ஆடைகள் இல்லை என்ற உண்மையைச் சொல்லும் துணிவு அங்கு ஒரு ஜீவனுக்குக் கூட இல்லாமல் போனது மன்மோகனின் நிலையை விடக் கேவலமாக இருந்தது. இவர்கள்தான் இந்தியாவின் நான்காவது தூணாகிய பத்திரிகை/டிவி தூணை தாங்கிப் பிடிப்பவர்கள். வெட்க்கக் கேடு

13. நீரா ராடியா போன்ற ஒரு புரோக்கர் எப்படி உங்கள் உரிமையில் தலையிடலாம் என்ற கேள்விக்கே இடமில்லாமல மன்மோகன் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை நான் அவனில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.

14. மற்றொரு காங்கிரஸ் ப்ரோக்கரும் வோர்ல்ட் விஷன் என்ற மதமாற்ற கிறிஸ்துவ அமைப்பின் நிர்வாகியுமான காங்கிரஸ் எடுபிடி ராஜ்தீப் சர்தேசாய் மன்மோகனுக்கு ஒரு தியாகி பிம்பத்தை அளிக்கும் விதத்தில் தந்திரமாக ஒரு கேள்வி கேட்டார். உங்களைச் சுற்றி திருடர்கள் இருந்த படியால் நீங்கள் பதவி விலக நினைத்தீர்களா என்று. அதற்கு மன்மோகன் அப்படியெல்லாம் நினைக்கவில்லை என்று அப்பாவியாகப் பதில் சொன்னதுடன் இன்னும் பல வேலைகள் முடிக்கப் படாமல் இருப்பதாகவும் அது வரை தான் பதவியில் தொடருவேன் என்று சொன்னார். அதாவது இன்னும் கோடி கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்க வேண்டியது பாக்கி இருக்கிறது அது வரை அலிபாபா மட்டும் அல்ல நாற்பது திருடர்களும் கூட கூட்டுக் கொள்ளை அடிப்போம் என்கிறார்.


15. அப்சல் குருவை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை? இப்படி ஒரு பயங்கரவாதியைப் பாதுகாத்தாவது இஸ்லாமிய ஓட்டைப் பொறுக்க வேண்டுமா? ஏன் இந்த தேசத் துரோகம் என்று ஒரு டி வி ஆசிரியரும் கேட்க்க நினைக்கவில்லை. அப்சல் குருவை தூக்கில் போட்டால் இவர்கள் அல்லவா முதலில் எதிர்ப்பார்கள்.

16. குற்றவாளிகள் தண்டிக்கப் படுவார்கள் என்று வெட்டி வீறாப்பு பேசும் பிரதமர் அவர்களே உங்களுக்கு உண்மையிலேயே ஊழல் ஒழிப்பில் அக்கறையிருந்திருந்தால் ஏன் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை ஆரம்பத்தில் இருந்தே நேர்மையுடன் விசாரிக்க ஆரம்பித்த சி பி ஐ அதிகாரியை நீங்களே உத்தரவிட்டு மஹராஷ்டிரத்துக்கு இடமாற்றம் செய்தீர்கள்? இது என்ன விதமான ஊழல் ஒழிப்பு என்று நாங்கள் அறிந்து கொள்ளலாமா என்று ஒருவராவது கேட்ப்பார் என்று நானும் கடைசி வரை காத்திருந்ததுதான் மிச்சம்.

மொத்தத்தில் ஒரு ஊழல் அரசிற்கு தலமை ஏற்று அனைத்து ஊழல்களையும் கண்டு கொள்ளாமல் இருந்தும் அதில் பங்கேற்றும் கொண்டு அராஜகம் நடத்தி வரும் ஒரு அயோக்கியனிடம் கேட்டிருக்க வேண்டிய கேள்விகள் எவையுமே கேட்க்கப் படாதது இந்த டி வி தோற்றமும் மழுப்பல்களும் திட்டமிடப் பட்ட ஒரு நாடகம் என்பதையே உறுதி செய்கிறது. இது பெரும்பாலான டி வி எடிட்டர்கள் சேர்ந்து நடத்திய ஒரு மாய்மால நாடகமாகவே தெரிகிறது. அர்நாப் கோஸ்வாமியின் ஒரு கேள்வியைத் தவிர பிற கேள்விகள் அனைத்துமே மொன்னையான, விளக்கெண்ணய் கேள்விகள், அவைகள் மன்மோகனின் இமேஜை உயர்த்து வண்ணம் கேட்க்கப் பட்ட செட்டப் கேள்விகளாகவே தோன்றுகின்றன. முக்கியமாகக் கேட்டிருக்கப் பட வேண்டிய எந்தக் கேள்விகளும் கேட்க்கப் படவேயில்லை. இதைப் போன்ற ஒரு மோசடியான ஒரு டி வி வட்ட மேஜையை சர்வாதிகாரிகள் ஆளும் நாட்டில் கூடக் காண முடியாது. எந்த ஊழல்களுக்கும் இவர் சின்னப் பொறுப்பைக் கூட ஏற்க மறுத்து விட்டார். எல்லாவற்றிற்குமே தட்டுத் தடுமாறி திக்கித் திணறி பொய்களையே பதிலாகச் சொன்னார். நிமிர்ந்த நன்னெஞ்சும் இருந்திருந்தால் பதிலும் நேர்மையாகவும் துணிவாகவும் வந்து விழுந்திருக்கும்.

பிற நாடுகளில் இப்படி ஒரு பேட்டி நடந்திருக்குமானால் உடனடியாக அனைத்து டி விக்களிலும் ஒரு உடனடி ஓட்டெடுப்பு நடத்தி பிரதமரின் பதில்கள் உண்மையானவையாக இருந்தனவா இல்லையா கேட்டு உடனடியாக பல லட்சம் பார்வையாளர்கள் பதில் சொல்லியிருப்பார்கள். ஆனால் காங்கிரசின் எடுபிடி சேனல்கள் அப்படி எதையும் செய்து மன்மோகனின் யோக்யதையை வெளியிட விரும்பாதபடியால் அமைதி காத்திருக்கிறார்கள். மன்மோகனும் சோனியாவும் பொது மக்களுடன் உரையாடுவதே கிடையாது. அப்படியே இருந்திருக்கலாம். ஆளுமையில்லாத நேர்மையில்லாத இந்த வட்ட மேஜை மன்மோகனின் அருகதை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.எல்லோரும் கூலாக ஒரு டையட் கோக் குடிங்கப்பா

34 Comments:

Rathnavel Natarajan said...

நல்ல தைரியமான பதிவு.
மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
நன்றி.

Rathnavel Natarajan said...

நல்ல தைரியமான பதிவு.
மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
நன்றி.

King Viswa said...

இதைவிட ஒரு ஹார்ட் ஹிட்டிங் கட்டுரையை (பிரதமரை பற்றி) யாராலும் எதுத முடியாது.

குறிப்பாக //மன்மோகன் சிங் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் கிடையாது. டெல்லி தொகுதியில் நின்று தோற்றுப் போனவர். தனியாக நின்றால் ஒரு கார்ப்பரேஷன் வார்டு கவுன்சிலர் பதவிக்காக போட்டியிடக் கூட அருகதையற்றவர். அதற்கான ஆட்சித் திறமையோ, பேச்சுத் திறனோ, நேர்மையோ அவருக்கு என்றுமே இருந்ததில்லை. அவருக்கு மக்கள் தொடர்பே கிடையாது. கொல்லைப் புறம் வழியாக அதிலும் அவருக்குச் சம்பந்தமேயில்லாத அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு பின்புறம் வழியாக பிரதமர் பதவியில் அமர்த்தப் பட்டவர். இவர் ஒரு அமர்த்தப் பட்ட பொம்மைப் பிரதமர் என்பதை அவரது பேச்சுக்களும் நடவடிக்கைகளும் மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றன.
இவர் மக்களை என்றுமே நேர்மையாகவும் துணிவுடனும் அணுகியதே கிடையாது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தகுதியான பேச்சு வன்மை இவருக்குக் கிடையாது. மியாவ் மியாவ் என்று பூனை கத்துவது போல இவர் பேசும் எதுவும் என்றைக்குமே எவரையுமே கவர்ந்ததும் கிடையாது. இவருக்கு முன்னால் இருந்த பல பிரதமர்கள் அபாரமான பேச்சு வன்மை உடையவர்கள். அவர்களில் பலரும் என்றுமே பத்திரிகையாளர்களையோ, பொது மக்களையோ ஊடகங்களையோ தவிர்த்தவர்கள் கிடையாது. அவர்கள் பத்திரிகையாளர்களுடன் மனம் விட்டு வெளிப்படையாகப் பேசுபவர்கள் இருந்தார்கள். நரசிம்மராவும், வாய்பாயியும் அற்புதமான பேச்சாளர்கள், உரையாடல்களில் ஆர்வம் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு ஓடி ஒளிந்தது கிடையாது.//

சரியான தாக்குதல்.


கிங் விஸ்வா
இன்று ரிலீஸ் ஆன இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

Narayanan said...

நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் தன்னம்பிக்கை, துணிவுடன் பேட்டி கொடுப்பதால் மட்டுமே ஒருவர் தூய்மையானவர் ஆகிவிட முடியாது.தமிழ்நாட்டில் நிறைய சனியன்கள் தைரியமாக பொய் சொல்கின்றன. அதுவும் மிகவும் தன்னம்பிக்கையுடனும், துணிவுடனும்.தான் சொன்னதையே சொல்லவே இல்லை என்று அடித்து சொல்லும் இதுகளுக்கு உங்கள் கருத்து செல்லாது.

Jeyakumar, Qatar said...

Manmohan is the topmost corrupted politician of this decade. He is a traitor to the people whom voted him to power.

Hope mother India will come out of this crucial situation.

Long Live India.

Ramjothidar said...

இப்படி பக்கம் பக்கமா எழுதினாலும் கேட்கறதுக்கு யாருக்கு தைரியம் இருக்கு? எல்லா தொலைக்காட்சிகளுமே “நாங்கதான் மொத்ல்ல சொன்னோம்”, ”நாங்கதான் நம்பர் 01”, “நாங்கதான் பாம்ப அடிச்சோம்”, “நாங்கதான் பல்லிய பிடிச்சோம்”, “நாங்கதான் எலிக்கு ஆப்ரேஷன் பண்ணினோம்” மேலும் பல சொல்லிக் கொண்டே போகலாம். இப்போதெல்லாம் தனிமனித விஷயங்கள், நிகழ்ச்சிகள்தான் அலசப்படுகிறதே தவிர ஏதேனும் கருத்துக்கள், விமர்சனங்கள், கான்ஸெப்ட்டுகள் அலசப்படுகின்றனவா என்பது சந்தேகம்தான். நான்காவது தூணை ஒரே நேர்கோட்டில் நிறுத்த வேண்டும்..

சரி அதெல்லாம் இருக்கட்டும். இந்த விஸ்வாமித்திரரின் எழுத்துக்கள் ஒவ்வொரு வியாழன்றும் படிக்கும் ’தலை’யங்கம் மாதிரி இருக்கிறதே..

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

vijayaragavan said...

@naarayanan : Very correct.
Shall we tweet to vote in the forthcoming TN election?

Parthasarathy said...

ரொம்ப தைரியமா உரக்க சொல்லி இருக்கீங்க. இந்த ஒரு line ah தவிர மத்த எல்லாம் "நெத்தியடி".
"வாரம் ஒரு முறை அமெரிக்க அதிபரை ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவர்களுடன் உரையாடுவதையோ, ஏதாவது ஒரு சானலில் பேட்டி அளிப்பதையோ பத்திரிகை டி வி நிருபர்களுடன் உரையாடுவதையோ தொடர்ந்து காணலாம்." ஆனா ஊனா அமெரிக்காவோட comparison. அது என்ன template நாடா? பொதுவா மற்ற நாடுகள்னு சொன்னா போதாதா?

Nithya S said...

Anna, idha vida kodumai vere onnum irukka mudiyaadhu namma naatula thalai ezhuthu :( veli uravu thurai amaichar senjadhu adha vida kodumai... oruthar ku suyamaa mudivugal edukka mudiyala..innorutharukku enna padikaromnu kooda theriala... enna koduma saravanaa idhu :(

Anonymous said...

let us do something in the coming TN elections... i am ready...
_Kannan

mak said...

"10. ஆஸ்திரேலியாவில் ஒருவர் கைதான பொழுது எனக்குத் தூக்கம் போயிற்று.."
1)did Vajpayee do anything against Indian muslim killed by his bjp party and chief minister modi(merchant of death) in gujarat? Every one know Vajpayee stunt? That time is he toy? who controlled him?

2)Vajpayee want to take action against Jaylaitha? Who controlled him not to take action?

That's so funny blaming current PM by VM(Vellanga Mannan->Visva Mithari) and compare Vajpayee is best PM.

Better you can write next article PM run by RSS is best one?

"15.அப்சல் குருவை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை?"
Incident was happened time of BJP government. Why didn't take any action against him?

"11. 2ஜி, ஆதர்ஷ், காமன் வெல்த் கேம்ஸ், ஐ எஸ் ஆர் ஓ... "
Can BJP take action against Karanataka BJP government chief minister? Just their CM, BJP can't control it? how come if BJP come to power can control whole India against scam? Can bjb karnataka government take against bjb karnataka cm?

"1. சுவாமி புகார் செய்த பின்னாலும், சி வி சி எச்சரித்த பின்னும், "
Scam already started by previous bjp government, they also followed same rules to assign 2G? Why did swamai not mentioned any where previous bjp government and telecome minister also one of the culprit?

Because of brahim do wrong/scam no body ask any questions?

Please read your article once again and think about it what was done by bjp government previously. Is it true/reliable for indians and indian government?

கால்கரி சிவா said...

எப்படி சார் கேட்பாங்க? பேட்டி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பத்திரிக்கை எச்சகலை பேய்களுக்கு பொட்டி போயிருக்கும்? குஜராத்திலே ராவுல் வின்சி (ராகுல் காந்தி) கேள்வி மேல் கேள்வி கேட்ட பத்தாங்கிளாஸ் படிக்கிற பெண் குழந்தைக்கு இருக்கிற தைரியம் இல்லாத இந்த பத்திரிகை பேடிகள் மோடி பேசும் போது மட்டும் ஊளையிடும்

Unknown said...

very good post

SAN said...

A Bold Article.
Nethi adi Vishwamithra.

Anonymous said...

good article

Anonymous said...

எப்படி சார் கேட்பாங்க? பேட்டி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பத்திரிக்கை எச்சகலை பேய்களுக்கு பொட்டி போயிருக்கும்? குஜராத்திலே ராவுல் வின்சி (ராகுல் காந்தி) கேள்வி மேல் கேள்வி கேட்ட பத்தாங்கிளாஸ் படிக்கிற பெண் குழந்தைக்கு இருக்கிற தைரியம் இல்லாத இந்த பத்திரிகை பேடிகள் மோடி பேசும் போது

very true

காவேரிகணேஷ் said...

இட்லி வடையில் வந்த பதிவுகளில் நட்சத்திர பதிவு இது தான்.

HariV is not a aruvujeevi said...

"I think"இந்த வார்த்தையை பிரதமர் எத்தனை முறை உபயோக படுத்தினர் என்று ஒரு போட்டி வைத்து பரிசு கொடுக்கலாம்.

Dr Rama Krishnan said...

Hats off to you, Viswamithra. Fantastic article. Please, please, please, have it translated into English.We want to send this article to as many people as possible
THANKS Once again
Rama

Roaming Raman said...

//Ramjothidar said...ஒவ்வொரு வியாழன்றும் படிக்கும் ’தலை’யங்கம் மாதிரி இருக்கிறதே../
ஒஹ்!! நீர் லேட்டு ... நாங்க புதன் நைட்டே முடிச்சிடுவோம்!!! இது தலையங்கம் மாதிரி இல்ல... இன்னொரு மக ரிஷி எழுதற ஸ்டைல் மாதிரி வண்ணமா இருக்கு!! ..
இவ வில் விஸ்வாமித்ரா கட்டுரை ஒன்று விரைவில் பின்னூட்டங்களில் செஞ்சுரி அடிப்பது உறுதி!!
-ரோமிங் ராமன்

snkm said...

நல்ல விளக்கம், பிரதமரின் பொய் முகத்தை எல்லாரும் சேர்ந்து மறைக்கப் பார்க்கும் வேளையில் அருமை! நன்றி!

R. Jagannathan said...

இது இயற்கையான எதிரொலி! மன்மோஹனின் பேட்டியைப் பார்த்த மெஜாரிடி பேர் இப்படித்தான் உணர்ந்திருப்பார்கள். 20 மீடியா ஜாம்பவான்கள் நாட்டின் முக்கிய விஷயங்களைப் பற்றி சரியான கேள்விகள் கேட்காதது நம் துரதிர்ஷ்டம். முடிந்தால் கட்டுரையாளரோ, இட்லிவடையோ இந்த கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை பி எம் ஓ-வுக்கும், எல்லா ஆங்கில / ஹிந்தி மீடியாக்களின் தலைவர்களுக்கும் அனுப்பவும். மன்மோஹன் நம் எல்லோரையும் வெட்கி தலை குனிய வைத்துவிட்டார். - ஜெ.

Gopi said...

I fully agree with You. Sibal is now called zero sibal. Now MMsingh is going to be called Empty Singh. He is a great empty in ALL respects. His head carries a turban outwardly.But there is nothing inside his head. Turban is considered as noble headgear of Sikhs . But he also wears it insulting his brethern. Just because he is doing Sonia's bidding he continues to be PM of this United Plundering Agency (UPA)govt.All right thinking people are ashamed of such a person heading the greatest democracy of the world.
WHAT A SHAME EMPTY SINGH!

virutcham said...

பேட்டி முடிந்த பின் காங்கிரஸ் சார்பில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டது என்னவென்றால், அனைத்துக் கேள்விகளுக்கும் பிரதமர் பதில் சொல்லிட்டார். இது அவர் எவ்வளவு நல்லவர் வல்லவர் நாலும் தெரிஞ்சவர்னு என்பதற்கு எடுத்துக்காட்டு.

நான் கூட பள்ளி நாட்களில் இருந்து அனைத்து தேர்வுகளிலும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லித்தான் பார்க்கிறேன். பதில் சொல்லிட்டேன் என்பதற்காக எனக்கு யாரும் நூற்றுக்கு நூறு தருவதேயில்லை. இப்போ காங்கிரஸ் சொல்வதை பார்த்தா நான் அனைத்து தேர்வுகளிலும் 100 % அல்லவா வாங்கி இருந்திருக்க வேண்டும். ச்சே, இது தெரியாம எவ்வளவு தோல்விகளை ஒப்புக் கொண்டு விட்டேன். இந்த தேர்வு நிரவாகிகளை இந்த பிரதமர் காங்கிரஸ் உதாரணம் காட்டி சட்டரீதியாக அணுக முடியுமா?

Anand said...

Good and brave article...Please translate to english.

Anonymous said...

Is it Mak or Makku. For people like Mak "Ethana Periyar Vandalum Thirutha Mudiyathu"
1&2 irrelevant to the topic.
15. Yes, incident happened during BJP. Final judgement delivered on Oct. 2004,BJP demitted office in May 2004.
11. You have listed 4. As highlighted Yeddis scams are pocket change when compared to scams of DMK/UPA-2. Unlike Congress/DMK BJP is not denying no scam happened. That itself is a big difference.
1. It is easier to awaken a man rather than one who is pretending to sleep.

Anonymous said...

Mak, The topic is not related to BJP. Why you are pulling BJP here... How does your comment relate to this topic?

It is too much. The BJP government was dissloved by jaya. Dont you know that? Vajpayee didn't agree the demand of jayalalitha. It shows the honesty of vajpayee.

(1) Regarding gujrat government, Vajpayee asked modi to dissolve the gujrat government for the riots. Modi dissolved his first government and went for fresh poll. Please search in google.

\\ Because of brahim do wrong/scam no body ask any questions? \\

you are speaking like a brianless karunan. How does the cast come into the picture?

Yeddi infact denotified the land for his relatives. Every one does it for thier relatives. Do you conisider it as a big scam? So pity...

you deserve... to be ruled by congi people. But, we dont deserve...

Anonymous said...

\\ "1. சுவாமி புகார் செய்த பின்னாலும், சி வி சி எச்சரித்த பின்னும், "
Scam already started by previous bjp government, they also followed same rules to assign 2G? Why did swamai not mentioned any where previous bjp government and telecome minister also one of the culprit? \\

I think you dont have any knowledge about 2G specturm. you think swami is the BJP supporter. Remember... Sawami helped jaya to disslove the BJP government.

geeyar(ஜீயார்) said...

ஏன் விஸ்வா சார், மன்மோகன் சிங்கை விடுங்க. தினமும் கடலில் செத்து மிதக்கும் தமிழக மீனவர்களை பற்றி கேள்வி கேட்டு இருக்கலாம் என ஒரு வார்த்தை உங்களுக்கும் எழுத மனம் இல்லையே. ஏன் நீங்களும் மீன் சாப்பிட மாட்டீங்களா.


//10. ஆஸ்திரேலியாவில் ஒருவர் கைதான பொழுது எனக்குத் தூக்கம் போயிற்று என்று துக்கம் அனுஷ்டித்த மன்மோகன் அவர்களே அனு தினமும் குண்டு வெடிப்பிலும், நக்சல் தாக்குதலிலும் கொல்லப் படும் இந்துக்களின் சாவுக்காக என்றாவது நீங்கள் தூக்கத்தை இழந்ததுண்டா என்று எவரும் கேட்க்க கனவிலும் நினைக்கவில்லை//

இந்த கேள்வியை டைப் செய்யும் பொழுது கூட தமிழக மீனவர்கள் ஞாபகம் உங்களுக்கு வரவே இல்லையா? மீன் சாப்டலைனா இப்டிதான்.

Anonymous said...

After reading your articles, Dondu's and Truetamilans, I will vote only for DMK and Congress!!!

Oozhal BJP/JJ senja thappu illa ;
Aanaaa Cong/KK senja kutthama???

We will vote only for DMK/Cong ; You, Cho and Dondu keep barking.

ராமுடு said...

Excellent post Mr.Idlyvadai.. Till I saw his interview, I thought that he is 50% innocent. But he has many degrees in paper as like a school boy. When he communicate his hands are totally shivering. He doesn't know how to go ahead. All the media people who asked questions are well framed and there is no single intervened question to Mr.PM. He is nothing for good. Another indian slave to Italy.

Anonymous said...

விஸ்வாமித்ரா இதே மாட்டரை இன்னும் ஆணித்தரமாக இன்னும் அழுத்தமாக இன்னும் சில உதாரணங்களுடன் தெளிவாக தமிழ் ஹிந்துவிலும் இன்னுமொரு கட்டுரையும் எழுதியுள்ளார். அவசியம் அதையும் படித்து விடுங்கள். இதன் நீட்சி போல உள்ளது

http://www.tamilhindu.com/2011/02/manmohan-singh-meets-tv-editors-but-vishwamithra-questions/


ஜீயரே: மீனவர்கள் பற்றி சன் டி வி நிருபர் ஒரு கேள்வியை மன்மோகனிடம் செட்டப்பாகக் கேட்டு அவரும் கண்டித்து விட்டார். அதனால் அதில் சொல்ல ஏதும் இல்லை என்று விஸ்வாமித்ரா சொல்லவில்லை. முழுக்க அந்தக் கண்றாவியை டி வி யில் பார்த்திருந்தால் லூசுத்தனமாக இந்த மீன் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டீர்கள். அடுத்த முறை பொது இடத்தில் கிண்டல் அடிக்கும் முன்னால் கொஞ்சம் மீன் சாப்பிட்டு மூளையை வளர்த்துக் கொண்டு கேட்டால் நல்லது

pongalvadai said...

Tamilnadu is getting ready for a changeover in rule.People are eagerly waitng for the election to effect the transfer.This is the impression we get if you read English dailies
And watch news channels. Well there are good things done by the presrnt CM.
The overall industrial growth, no. of bridges, freebies to poor, pay hike
To employees of various sectors are a few to cite the positive side of thois
Govt. On the negative side are the himalyan 2G scam, interference of his parivars in
Film industry, overall law and order situation etc.,
Tamilnadu people are very clever. They do not want only one family to
Loot them for succestive terms. They are determined to replace Gabbarsingh by
Phoolan Devi

Anonymous said...

Fantastic!!.. Even i felt the same way after watching it. He even said his hands were tied coz of coaliation governemnt. It means that if the coaliation govt happens and ppl (so called ministers)are Making huge money out of it we should not expect the PM to take action and should blame ourselves for making the non congress govt in other states.!! What the !@##$ .

Citizen.

Citi