பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 06, 2011

யுத்தம் செய் - விமர்சனம்

மழை. ஆட்டோ. பின்னாடி திறந்து ரிப்பேர் செய்யும். டிரைவர். அந்த ஆட்டோவை கடந்து செல்லும் ஹீல்ஸ் போட்ட பெண். கொஞ்சம் தூரம் சென்ற பிறகு திரும்ப வந்து பார்ப்பதும் யார் அந்த பெண் என்று கேட்பதும். .. அப்பவே ஆரம்பிக்கிறது சஸ்பென்ஸ். படம் எட்டு ரீல் என்று பார்த்த போது 'அட' என்று போட வைத்து... படம் முழுவதும் 'அட..அட' என்று போட வைக்கிறார் மிஷ்கின்.

தமிழில் த்ரில்லர் படம் எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்வார்கள். ஹீரோ ஓட, கூடவே கேமராவும் ஓடும், பட பட என்று சத்தம் வரும். யாராவது அலறுவார்கள். நிழல் தெரியும்.. இப்படி எல்லாம் இல்லாமல். எல்லோரும் புழங்கும் இடமான பார்க், சப்வே, கடற்கரையில் அட்டை பெட்டியில் துண்டித்த கைகள் கிடைக்கிறது. இதை கண்டுபிடிக்க சேரன் நியமிக்கப்படுகிறார். "எஸ் சார்.. ஓகே சார்" என்று தமிழ் சினிமா போலீஸ் மாதிரி இல்லாமல் சாதாரண சிபிசிஐடி போலிஸாக வந்து விசாரிக்க ஆரம்பிக்கிறார். பல இடங்களில் அவர் சேரனாகவே நமக்கு தெரியாமல் கண்டுபிடிக்கும் சிபிசிஐடியாக நமக்கு தெரிவது இயக்குனர் மிஷ்கின், சேரனின் நடிப்புக்கு கிடைத்த வெற்றி. இப்படி படத்தில் நடிக்கும் எல்லோருமே அந்த கதாபாத்திரங்களாகவே தெரிவது தமிழ் சினிமாவுக்கு ஆச்சரியம்.

இசை 'கே' என்று போடுகிறார்கள் பல இடங்களில் ஆங்கில இசை கேட்டாலும் அருமையாக இசை அமைத்திருக்கிறார். இடைவேளை வரை அட தமிழ் படத்தில் ஒரு பாடல் காட்சி கூட இன்னும் வரவில்லையே என்று நினைக்கும் சமயம், இடைவேளைக்கு பிறகு வந்துவிடுகிறது. படத்தில் இந்த குத்துப்பாட்டு இல்லை என்றால் படம் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும். ஆர்மோனிய பெட்டியுடன் ஒருவர் வருகிறார். நான் என் கூட சென்ற நண்பரிடம் இவர் தான் 'சாரு' என்றேன் அவர் 'யாரு' என்றார்.

சேரன் திருவல்லிக்கேணியில் ஓடும் காட்சி, போலீஸ் தர்ப்பூசணி பழத்தை லவுட்டும் காட்சி அதை பைக் ஹாண்டில் பாரில் சரியாக வைக்க முற்படுவது என்று பல காட்சிகள் தமிழ் படமா இது என்று நினைக்க வைக்கிறது. ஜெயப்பிரகாஷ் மார்சுவரியில் வேலை செய்யும் டாக்டராக நடித்திருக்கிறார். இவர் எப்படி Natural'லாக இருக்கிறார் என்று நாம் எண்ணும் போது கடைசியில் கிளோசப்பில் நம்மை பார்த்து சிவாஜி மாதிரி வசனம் பேசும் போது எடிட்டர் தூங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். ஜெய்ப்பிரகாஷ் மாதிரி மார்சுவரியும் ஒழுங்காக நடித்திருக்கிறது. தமிழ் படத்தில் வருவது மாதிரி 60 வாட் பல்பும், புகையும் காண்பிக்காமல் நிஜ மார்சுவரிக்கு சென்று வந்த ஃபீலிங் கையில் கர்சிப் வைத்து நாமே மூடிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.

ஒரே ஒரு சண்டைக்காட்சி வருகிறது கொஞ்சம் செயற்கைத்தனமாக இருந்தாலும், ரசிக்க முடிகிறது. ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மனைவி லட்சுமி ராமகிருஷ்ணன் என்று பலர் ஒழுங்காக தங்கள் வேலையை செய்துள்ளார்கள். படத்துக்கு பெரிய பலம் தினமும் நாம் பார்க்கும் மனிதர்களை போட்டிருப்பது, திருவல்லிக்கேணி மேன்ஷனில் இருக்கும் அந்த பையன், குண்டு தாய் என்று பலரை பார்க்க முடிகிறது. இந்த படம் தமிழகத்தில் இருக்கும் ஹீரோக்களிடம் சிக்காமல் நமக்கு தந்த மிஷ்கினுக்கு பாராட்டுக்கள்.

வசனம் பல இடத்தில் எதார்த்தமாக இருக்கிறது. போலீஸ் ஸ்டேஷனில் "சார் நான் சாப்ட்வேர் என்ஜினியர்.." என்று சொல்லும் போது "கம் டூ த பாயிண்ட்" என்பது ஒரு எடுத்துக்காட்டு. ஒய்.ஜி.மகேந்திரன் போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுக்க வரும் போது தற்போதைய காட்சியிலிருந்து அப்படியே ஃபிளாஷ்பேக்கு போவது எல்லாம் தமிழ் ரசிகர்களுக்கு பழக்கமில்லாதது.

இடைவேளையில் தியேட்டரில் டாய்லெட்டில் இரண்டு பேர் "அப்ப அங்கே வருவது யாரு.. புருஷோத்தமன் யாரு..." என்று டவுட் கேட்டுக்கொண்டு இருந்தார். ரஜினி, அஜித், விஜய் படங்களை பார்த்து பார்த்து பழகிப்போன நம் ரசிகர்களுக்கு இந்த மாதிரி படம் புரிந்துக்கொள்ளுவதற்கு ரொம்ப கஷ்டம் தான்.


கதையை பற்றி சொல்லுவது இந்த படத்துக்கு செய்யும் துரோகம். படத்தில் திரைக்கதை அருமையாக செய்துள்ளார்கள். கடைசி வரை நாம் பார்த்த காட்சிகளை வைத்தே முடிச்சுகளை அவிழ்ப்பது - சூப்பர்ப். அதை நீங்களே தியேட்டரில் பாருங்கள்

இட்லிவடை மார்க் 8.51

யுத்தம் செய் - பெண்ணை பெத்தவனுக்கு பித்தம் செய்யும்!

24 Comments:

Arun said...

Good Review and this made me to watch this movie... Thanks, IdliVadai

King Viswa said...

விமர்சனம் எல்லாம் சரி, அது என்ன 8.51 என்று ஒரு ரேட்டிங்? இருந்தாலும்கூட இது வரை வந்த இட்லிவடை ரேட்டிங்கில் இது தான் அதிகம் என்று நினைக்கிறேன் (அந்த இரண்டாவது தசம புள்ளியால்).

அந்த ஓவர் பிரிட்ஜ் சண்டை பற்றி சொல்லவே இல்லையே? ரெகுலராக டிஷ்யூம், டிஷ்யூம், டேய்ய்ய்ய்ய்ய்ய், டமால்,டுமீல் என்ற சண்டை காட்சிகளை பார்த்தவர்கள், தியேட்டரில் பலரும் இப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து ஏமாந்து போய் இருப்பார்கள்.


கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - சமீபத்திய வார இதழ்களில் வந்த காமிக்ஸ் பற்றிய நிகழ்வுகள்

IdlyVadai said...

//விமர்சனம் எல்லாம் சரி, அது என்ன 8.51 என்று ஒரு ரேட்டிங்? இருந்தாலும்கூட இது வரை வந்த இட்லிவடை ரேட்டிங்கில் இது தான் அதிகம் என்று நினைக்கிறேன் (அந்த இரண்டாவது தசம புள்ளியால்). //

சைடு பாரில் உள்ள பயாஸ்கோப் பலராமனை கேளுங்க ஏன் 8.51 என்று பதில் சொல்லுவார்.

IdlyVadai said...

//அந்த ஓவர் பிரிட்ஜ் சண்டை பற்றி சொல்லவே இல்லையே? ரெகுலராக டிஷ்யூம், டிஷ்யூம், டேய்ய்ய்ய்ய்ய்ய், டமால்,டுமீல் என்ற சண்டை காட்சிகளை பார்த்தவர்கள், தியேட்டரில் பலரும் இப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து ஏமாந்து போய் இருப்பார்கள்.//

"ஒரே ஒரு சண்டைக்காட்சி வருகிறது கொஞ்சம் செயற்கைத்தனமாக இருந்தாலும், ரசிக்க முடிகிறது" என்று நானும் NailCutter மாதிரி சின்னதாக எழுதியிருக்கிறேன்.

King Viswa said...

//"ஒரே ஒரு சண்டைக்காட்சி வருகிறது கொஞ்சம் செயற்கைத்தனமாக இருந்தாலும், ரசிக்க முடிகிறது" என்று நானும் NailCutter மாதிரி சின்னதாக எழுதியிருக்கிறேன்.//

ரைட்டு. நான் அதை கிளைமேக்ஸ் காட்சியோ என்று நினைத்துவிட்டேன்.

//சைடு பாரில் உள்ள பயாஸ்கோப் பலராமனை கேளுங்க ஏன் 8.51 என்று பதில் சொல்லுவார்//

அப்போ இது இட்லிவடை விமர்சனம் இல்லையா? பதிவில் இட்லிவடை ரேட்டிங் என்று இருந்ததால் அப்படி கேட்டேன்? ஆனால் இப்போதுதான் சைட் பாரில் இந்த மேட்டரை பார்த்தேன் //அடுத்து வருவது இட்லிவடை விமர்சனம் - இன்று இரவு பார்க்க போகிறேன்// OK.


கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - சமீபத்திய வார இதழ்களில் வந்த காமிக்ஸ் பற்றிய நிகழ்வுகள்

R.Gopi said...

யுத்தம் செய் - விமர்சனம் சூப்பர்...

//ஆர்மோனிய பெட்டியுடன் ஒருவர் வருகிறார். நான் என் கூட சென்ற நண்பரிடம் இவர் தான் 'சாரு' என்றேன் அவர் 'யாரு' என்றார்.//

ஹா...ஹா...ஹா... பதிவில் நான் மிகவும் ரசித்த வரிகள் இவை. அடுத்த பதிவுல “தல” மாதிரி உங்கள செல்லமா திட்டி லெட்டர் எழுதிட போறாரு...

R.Gopi said...

//ரஜினி, அஜித், விஜய் படங்களை பார்த்து பார்த்து பழகிப்போன நம் ரசிகர்களுக்கு இந்த மாதிரி படம் புரிந்துக்கொள்ளுவதற்கு ரொம்ப கஷ்டம் தான்//

ஏன் 3 பேரோட நிறுத்திட்டீங்க... சமீபத்துல ஒலக நாயகனோட படம் யாருக்காவது புரிஞ்சு இருந்தா நல்லா ஓடி இருக்குமே!!! ஸோ, லிஸ்ட்ல அவரையும் சேருங்க....

Giri Ramasubramanian said...

// ரஜினி, அஜித், விஜய் படங்களை பார்த்து பார்த்து பழகிப்போன நம் ரசிகர்களுக்கு இந்த மாதிரி படம் புரிந்துக்கொள்ளுவதற்கு ரொம்ப கஷ்டம் தான்.//

நல்ல படம் எடுக்கணும் குடுக்கணும்கற தைரியம் இன்னமும் சிலரிடமாவது மிச்சமிருப்பது நிறைவைத் தருகிறது. உங்க விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது. நன்றி!

IdlyVadai said...

//ஏன் 3 பேரோட நிறுத்திட்டீங்க... சமீபத்துல ஒலக நாயகனோட படம் யாருக்காவது புரிஞ்சு இருந்தா நல்லா ஓடி இருக்குமே!!! ஸோ, லிஸ்ட்ல அவரையும் சேருங்க....//

விஜய், அஜித், ரஜினி என்று குறிப்பிட்டது மசாலா படங்களை. நான் டிராமாக்களை பற்றி பேசுவதில்லை

R.Gopi said...

// IdlyVadai said...
விஜய், அஜித், ரஜினி என்று குறிப்பிட்டது மசாலா படங்களை. நான் டிராமாக்களை பற்றி பேசுவதில்லை//

********

அருமையான விளக்கம் கண்டேன்... தெளிந்தேன்...

நன்றி இட்லிவடை...

இன்னிக்கு ஃபுல் ஃபார்ம்ல இருக்கார் போல இருக்கு... எல்லா கமெண்ட்ஸுக்கும் பதில் சொல்றாரே!!

அது சரி... ஆண்டியப்பனுக்கு பெயில் கிடைச்சுடுச்சா!!?

R. Jagannathan said...

உங்கள் நண்பன் யார் என்று சொல்லுங்கள், நீங்கள் யார் என்று சொல்கிறேன்! (” நண்பரிடம் இவர் தான் 'சாரு' என்றேன் அவர் 'யாரு' என்றார்.“ ) - ஜெ.

ரிஷபன்Meena said...

சேரன் வருகிற விளம்பர க்ளிப்பிங்- ஐ பார்த்த போது, படம் ஊத்திக்குமோன்னு நினைச்சேன்.

இவ நல்லாருக்குன்னு சொல்லுதே!! பார்க்கனும்

Unknown said...

கதையை வெளி சொல்லாமல் ஒரு விமர்சனம், கமலின் டிராமா பற்றிய கருத்தும் அருமை. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

சட்னி சாம்பார் said...

நல்லவேளை கமல் ஒரு டிராமா எடுத்தார், ரஜினியின் வசூல் சாதனை தப்பியது! பொழச்சு போகட்டும்!!

சட்னி சாம்பார் said...

ரஜினி ஒருகாலத்தில் இயக்குனரின் நடிகராக இருந்தபோது தில்லுமுல்லு போன்ற ட்ராமாக்களில் நடித்தார். "நாமும் ஒரு சதிலீலாவதி, தெனாலி, அவ்வை சண்முகி, காதலா காதலா, பஞ்சதந்திரம், வசூல்ராஜா போல் வெற்றிகரமான டிராமா ட்ரை பண்ணலாமே " என நினைத்து அவர் நடித்தால், அது ராமராஜன் பட வசூலை கூட தாண்டாது என்பது அவருக்கே தெரியும். எனவே தான் மசாலாவே கதி என்றிருக்கிறார்.

சுபத்ரா said...

//சைடு பாரில் உள்ள பயாஸ்கோப் பலராமனை கேளுங்க ஏன் 8.51 என்று பதில் சொல்லுவார்.//

# யுத்தம் செய் 8.51
# எந்திரன் 8.5

ரைட்டூ :-)

//விஜய், அஜித், ரஜினி என்று குறிப்பிட்டது மசாலா படங்களை. நான் டிராமாக்களை பற்றி பேசுவதில்லை//

நீங்க நல்லவரா, கெட்டவரா?

BTW, Review is so nice. Great that u have not revealed the story of the movie. Thank you..

Anonymous said...

Dear Idly vadai,

Surprising to read review of Yutham Sei in Idlyvadai because I could not find your review of Nandhalala here which is Director Mysskin's masterpiece, leave aside the fact of the story being taken from japanese version.

Your review is interesting and evinces interest to watch the movie.

Regards
Sreedharan from Sharjah

கார்த்தி said...

இனிதான் பாக்கோணும்!

Suresh said...

நான் நேத்தைக்கு இந்த படம் பாத்தேன்...எனக்கு சுத்தமா புடிக்கல...எல்லாமே எனக்கு செயற்க்கைத்தனமா தெரிஞ்சுது...அஞ்சாதே எல்லாம் பல தடவ பாத்து பிரமிச்சு போயிருக்கேன்..இது கொஞ்சம் ஓவரா இருக்குர மாதிரியே இருந்திச்சு...
என்னோட விமர்சனத்தை படிக்க

Anonymous said...

indha padam suddha aruvai.thalaiyai kunichikitte irukkara hero, eppa thaan Mishkin indha stereo type scenegalai viduvaro.Rowdygalidam enna discipline,oruthar orutharaa vandhu udai vangum andha sandai katchi abatham.

divyassundar said...

Your comments made me to watch the movie..still Myskin has to avoid some repeated scenes & re-reording...overthat a fantastic movie

pongalvadai said...

Falls perfectly in line with tamil thriller films.90% of the film is shown in dark light(night)so that you
cant appreciate the movie wholeheartedly.

Baski said...

Excellent movie and excellent review...

You should have given 8.52 for this movie.. :-)

Kumbudren Saami said...

waste
waste of time in idly vadai
waste of time in seeing this movie