பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 28, 2011

இந்தியா vs இங்கிலாந்து -காகிதப்புலியை கலங்கடித்த முரட்டுக்காளை -எ.அ.பாலா

மு.கு: இந்த ஆட்டத்தை கொட்ட கொட்ட பார்த்து ஏற்பட்ட டென்ஷன் மற்றும் கை நடுக்கத்தால், உடனடியாக ரெவ்யூ எழுத முடியவில்லை. இன்று மதியம் தான் நடுக்கம் குறைந்து எழுத முடிந்தது :-)

டாஸில் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆடுகளம் batting paradise என்பதால், இந்தியா 300ஐத் தொடும் என்பதில் சந்தேகமில்லை, 300க்கு மேல் எத்தனை ரன்கள் எடுக்கும் என்பது தான் முக்கியமாகப் பட்டது! ஆண்டர்சன்னின் முதல் ஓவரில் தடுமாறிய சேவாக், பின் தன் இயல்பான ஆட்டத்தைத் தொடர்ந்து, 35 ரன்கள் எடுத்து விக்கெட்டிழந்தார்! சச்சின் நிதானமாக கவனமாக கம்பீருடன் ஜோடி சேர்ந்து ஆடியதில், ரன்கள் குவிந்து ஸ்கோர் 30 ஓவர்களில் (கம்பீர் விக்கெட் இழந்தபோது) 181-2. முதல் 15 ஓவர்களுக்குள் பந்து வீச வந்த ஸ்வானின் வீச்சை, கம்பீர் திறமையாக கையாண்டது குறிப்பிடத்தக்கது.

சச்சினின் ஆட்டம் (88 off 91 balls, 4 சிக்ஸர்கள்) குறித்து என்ன சொல்ல! Just Magnificient, Thats all !!! இத்தகைய அடித்தளம் அமைக்கப்பட்ட சூழலில், வரவிருக்கும் யுவராஜ், தோனி, கோலி, பதானை கணக்கில் கொண்டால், இந்தியா 360 ரன்களை தொட வேண்டும் என்று டோ ண்டு கூட எளிதாக சொல்லி விடுவார் :) 35வது ஓவரில் இந்தியாவே எதிர்பார்த்தது நிகழ்ந்தது, சச்சினின் மற்றுமொரு சதம் (102 off 103 balls). இதை ஒரு வார்த்தையில் விவரித்தால், "அற்புதம்"...

37வது ஓவரில் பேட்டிங் பவர் பிளே தொடங்கியது. சச்சின் (120 off 115 balls) 39வது ஓவரில் விக்கெட் இழந்ததால், P3 ஓவர்கள் அவ்வளவு சோபிக்கவில்லை. (இந்த 5 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே!) யுவராஜ் அரைச்சதமடித்து ஃபார்முக்கு வந்தது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்! நல்ல பந்து வீச்சாளரான ஆண்டர்சன் (9.5-0-91-1) இன்று மோசமாக பந்து வீசியதில் அடித்து துவைக்கப்பட்டதை பார்க்க பாவமாக இருந்தது! இறுதி 5 ஓவர்களில் கொத்தாக விக்கெட்டுகளை இழந்ததில் (பிரஸ்னன் 49வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், 10-1-48-5) இந்தியா 49.5 ஓவர்களில் 338 ரன்களில் ஆல் அவுட்.

மேலே குறிப்பிட்டபடி, இது மிக நிச்சயமாக எதிர்பார்த்ததை விட 20 ரன்கள் குறைவு! ஆனால், யுவராஜ் 338 ரன்களே இந்திய பந்து வீச்சுக்கு போதுமானது என்று டிவி பேட்டியில் திமிராக உளறியதைப் பார்க்க கடுப்பாக இருந்தது.

தன்னம்பிக்கையோடு களமிறங்கிய இங்கிலாந்து, தொடக்கத்திலேயே பீட்டர்சனை இழந்தும், 10 ஓவர்களில் 77/1. கேப்டன் ஸ்ட்ராஸ் அருமையாக ஆடிக்கொண்டிருந்தார். ஜோனாதன் ட்ராட் விக்கெட்டை சாவ்லா வீழ்த்தியபோது, ஸ்கோர் 111-2 (16.4 ஓவர்கள்). அதன் பின், ஸ்ட்ராசும், பெல்லும், இந்தியாவின் மிக மிகச் சாதாரணமான பந்து வீச்சை சுலபமாக எதிர்கொண்டு, ரன்களை குவித்து, தேவையான ரன்ரேட் 7.3 என்பதை தாண்டாத வண்ணம் பார்த்துக் கொண்டனர். அதே நேரம், 2வது இன்னிங்க்ஸில் ஆடுகளம் பேட்டிங்குக்கு இன்னும் சாதகமாக மாறியது இந்தியாவுக்கு பாதமாக அமைந்தது!

Dhoni's captaincy too was pretty ordinary! பந்து வீச்சு திட்டத்துக்கு ஏற்றவாறு பந்து காப்பாளர்களை நிறுத்துவதை விடுத்து, பேட்ஸ்மன் கடைசியாக எங்கு பந்தை அடித்தாரோ, அதற்கேற்றவாறு ஃபீல்டிங்கை மாற்றியவண்ணம் இருந்தார். இப்படி தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது அபத்தமில்லையா? இதனால், பந்து வீச்சாளர்களின் line & length இன்னும் மோசமானது தான் மிச்சம்! அது போல தனது முதல் ஸ்பெல்லில் நன்றாக பந்து வீசிய சாவ்லாவை, 2வது ஸ்பெல்லில் ஒரு ஓவருடன் (34வது) நிறுத்தி, மீண்டும் தாமதமாக 40வது ஓவரில் பந்து வீச அழைத்ததிலிருந்து Captain Cool குழப்பத்தில் இருப்பது புரிந்தது! இதை "Dhoni's bad day at office" என்று ஒதுக்கிவிட முடியாது.

இங்கிலாந்து, ரிஸ்க் எதுவும் எடுக்காமல், பிரதி ஓவருக்கு 6-7 ரன்கள் எடுத்ததில், 40 ஓவர்களின் முடிவில், ஸ்கோர் 272/2, RRR 6.7 மட்டுமே! 43வது ஓவரில் பேட்டிங் பவர் பிளே தொடங்கியது, தோனியின் அதிர்ஷ்டம் என்று கூறுவேன். இதனால், தோனி விரும்பாவிட்டாலும், 3 ஆட்டக்காரர்களே உள்வட்டத்துக்கு வெளியே ஃபீல்டிங் செய்ய முடியும் என்பது தோனிக்கு சாதகமாக "தானாக" அமைந்த ஒன்று :) பேட்டிங் பவர் பிளே எடுக்கப்படாமல் இருந்திருந்தால், தோனியின் சொதப்பலான ஃபீல்டிங் அமைப்பு தொடர்ந்திருக்கும் என்று நான் உறுதியாக நம்பினேன், நம்புகிறேன்.

இப்போது இங்கிலாந்து செய்ததை Harakiri என்று கூறலாம். சாகீரின் வீசிய 43வது ஓவரில் பெல், ஸ்ட்ராஸ் இருவரும் விக்கெட் இழந்ததில், இங்கிலாந்துக்கு அனாவசிய அழுத்தம் ஏற்பட்டது. இந்த 3 ஓவர்களில் (43-45) இங்கிலாந்து தோற்க பெருமுயற்சி எடுத்தது :-) 3 விக்கெட்டுகள் இழப்பு, எடுத்தது 7 ரன்கள் மட்டுமே. தேவையான ரன்ரேட் (5 ஓவர்கள், 52 ரன்கள்) 10.4க்கு உயர்ந்தது!

ஆனால், இங்கிலாந்தின் "வால் பையன்கள்" நம்பிக்கை இழக்காமல் போராடியதில், அடுத்த 3 ஓவர்களில் (ப்ரியார், யார்டி விக்கெட்டுகளை இழந்தும்) 23 ரன்கள் எடுத்தனர். ஸ்கோர் 310/7. Tension in the Chinnaswamy stadium was palpable. 2 ஓவர்களில் 29 ரன்கள் தேவை. சாவ்லா ஓவரில், ஸ்வான், பிரஸ்னன் ஆளுக்கு ஒரு சிக்ஸர் சாத்தியதில், 15 ரன்கள் குவிந்தன. இந்த ஓவரின் பிரஸ்னன் Clean Bowled. வர்ணனை என்ற பெயரில் ரவி சாஸ்திரி கதறிக் கொண்டிருந்த காமடியை ரென்ஷன் காரணமாக ரசிக்க முடியவில்லை ;-)

49வது ஓவரை வீச சாவ்லாவை அழைப்பதற்கு முன் தோனி, மூத்த ஆட்டக்காரர்களான சச்சின், சேவாகுடன் கலந்து ஆலோசித்தாரா என்று தெரியவில்லை. 2 ஓவர்களில் 29 ரன்கள் தேவை என்பதோடு, 'வால் பையன்கள்' ஆடிக் கொண்டிருந்த நிலையில் பதான் அல்லது யுவராஜ் தான் சரியான தேர்வாக இருந்திருக்கும்! இதை retrospective ஆகச் சொல்வதாக எண்ண வேண்டாம்.இந்த ஓவரில் எடுத்த 15 ரன்கள் தான் இங்கிலாந்துக்கு "We could win" என்ற ஊக்கத்தை கொடுத்தது. If using Chawla was a gamble, it was a very bad one!

கடைசி ஓவரை வீசுபவர் முனாஃப் படேல் என்பதால், 14 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்தியா தான் வெற்றி பெறும் என்று எல்லாரையும் போல நானும் நினைத்தேன். 3வது பந்தை அத்தனை அருமையாக ஷெசாத் சிக்ஸர் அடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை! இது தான் ஒரு நாள் ஆட்டத்தின் சிறப்பு. 3 பந்துகள், 5 ரன்கள்..... 2 பந்துகள் 4 ரன்கள்..... கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி.... ஒரு ரன் மட்டுமே எடுத்ததில் TIE... மயிரிழையில் இந்தியா தப்பித்தது!

சுலபமாக வென்றிருக்கு வேண்டிய ஆட்டத்தை TIE ஆக்கிய பெருமை இங்கிலாந்தைச் சாரும். ஆனால், அவ்வணியின் 'வால் பையன்கள்' மிக்க பாராட்டுக்குரியவர்கள். In the end, England gave the match in a platter to India but as gentle hosts India magnanimously refused to accept it :-) பலரும் சொல்வது போல,Tie தான் இந்த ஆட்டத்துக்கு சரியான முடிவு என்பது என்னளவில் ஏற்றுக் கொள்ள முடியாதது!

சில எண்ணங்கள்:
338 ரன்கள் எடுத்தும், சரியாக திட்டமிட்டு அதை defend பண்ண துப்பில்லாத இந்திய அணியை Favourites என்று பலரும் கூறுவது டூ மச்! பங்களாதேஷையே 280+ ரன்கள் அடிக்க விட்ட மகானுபாவர்கள் தானே நாம்! பேட்டிங்கை நம்பித் தான் நம் வெற்றி இருக்கிறது என்பது தெளிவாகவே இருந்தாலும், இத்தகைய பந்து வீச்சுக்கும், ஃபீல்டிங்குக்கும், எவ்வளவு ரன்கள் எடுத்தால் "போதும்" என்று சுத்தமாக புரியவில்லை. அது போல, இங்கிலாந்து 338-ஐ துரத்தி, ஆட்டம் "டை" ஆனதை விட, 43வது ஓவர் வரை அதை எத்தனை சுலபமாக கையாண்டது என்ற சங்கதி தான் அதிர்ச்சியாக/அயற்சியாக இருக்கிறது. தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை எதிர்கொள்ள நேரும்போது, இத்தகைய பந்து வீச்சும், ஃபீல்டிங்கும் தொடர்ந்தால், இந்தியாவின் உலகக்கோப்பை கனவு துர்சொப்பனமாக மாறி விடும் அபாயமிருக்கிறது!

அன்புடன்
பாலா

பி.கு: திருவண்ணாமலை கிளி ஜோசியர் சிவா என்பவரிடம் இருக்கும் மணி என்ற கிளியிடம் இந்தியா-இங்கிலாந்து ஆட்டத்துக்கு சீட்டு எடுத்து பார்த்தபோது, "நல்ல பாம்பு" வரைந்த சீட்டை மணி எடுத்ததில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் ஒருவரே டென்ஷன் ஆயிட்டாராம். இந்தியா வெற்றி பெற தடைகள் இருப்பதையும், வெற்றி பெறுவது கடினம் என்பதையும், "நல்ல பாம்பு" உணர்த்துவதாக கிளி ஜோசியர் சிவா நிருபரிடம் கூறினாராம் :-)

மேட்சுக்கு வந்த தீபிகா படுகோனை பார்த்தோமா போனோமா என்று இல்லாமல் இந்திய கிரிக்கெட் டீம் ஆடுவதை இவ்வளவு சீரியஸாக பார்க்க கூடாது !

Read More...

புரியலை !

காஞ்சிபுரத்தில் ப.சிதம்பரம் இவ்வாறு பேசினார்

ஒரு இலை உதிர்ந்தால் இரு இலை துளிர்க்கும்: பட்டமரம்தான் அப்படியே இருக்கும். பச்சை மரத்தில் ஒரு இலை உதிர்ந்தால் இரு இலை துளிர்க்கும். காங்கிரஸ் பட்டமரம் கிடையாது, பச்சைமரம். அதனால் இதில் உதிரும் இலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். ஒரு இலை உதிர்ந்தால்தான் இரு இலை துளிர்க்கும். எனவே காங்கிரஸ் கட்சிக்கான அடுத்த தலைமுறையை அடையாளம் காட்டத்தான் நாங்கள் இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரûஸ உருவாக்கி வைத்துள்ளோம்



என்ன சொல்ல வருகிறார் என்று சுத்தமாக புரியலை. திமுக தலைமைக்கு புரியும் என்று நம்புகிறேன் :-)

Read More...

ஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨கக , ஸௌராஷ்டிரா மொழி பட்டறை - 2011




http://markandaysureshkumar.blogspot.com/2011/02/2011_25.html

Read More...

Sunday, February 27, 2011

இரண்டு பேட்டிகள்

திருமாவளவன் ஜூவிக்கும் , கலைஞர் குமுதத்துக்கும் சமீபத்தில் கொடுத்த பேட்டி


குமுதம் வார இதழுக்கு (2.3.2011) கலைஞர் அளித்த பேட்டி

குமுதம்: வரப்போகும் தேர்தலில் தி.மு.க.வின் வியூகம் எப்படி இருக்கப் போகிறது?

கலைஞர்: வியூகம் எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே சொல்வது வியூக மாக இருக்காதே!

குமுதம்: அய்ந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஒரு ரூபாய் அரிசி, வீடு வழங்கும் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற பல மக்கள்நலத் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டன. இந்த நலத் திட்டங்களில் தாங்கள் மிகப் பெரிய சாதனையாகக் கருதுவது எது?

கலைஞர்: உணவு, உடை, உறையுள் என்ற மூன்று வாழ்வாதாரங்களும் மக்களுக்கு நிறைவு செய்யப்படுவதையே பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.

குமுதம்: தாங்கள் பல பொதுத் தேர்தல்களைச் சந்தித்தவர். அப்போதைய தேர்தல்களுக்கும், இப்போதைய தேர்தல் களுக்கும் என்ன வித்தியாசத்தைக் காண்கிறீர்கள்?

கலைஞர்: அப்போதெல்லாம் ஒரு கட்சி மெல்ல மெல்ல வளர்ந்து ஆட்சிக்கு வரவேண்டுமென்ற விருப்பத்துடன் தேர்தல்களைச் சந்திக்கும். ஆனால், இப்போது எடுத்த எடுப்பில் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற தணியாத தாகத்துடன் தேர்தல்களைச் சந்திப் பதைக் காண முடிகிறது.

குமுதம்: எத்தனை எதிர்ப்புகள், சிக்கல்கள் இருந்தாலும் தேர்தல்களை உற்சாகமாகவே சந்திக்கிறீர்கள். அதற் கான பலம் எங்கிருந்து கிடைக்கிறது?

கலைஞர்: மகாபாரத அர்ச்சுனனின் பலம் வில் பவரில் இருந்ததாகச் சொல் லப்படுகிறது! இந்த மகா சாதாரணமான வனின் பலமும் வில் பவரில் தான் இருக்கிறது.

குமுதம்: தி.மு.க. தொண்டர்களை எப்படி எப்போதும் உற்சாகமாய் வைத் திருக்கிறீர்கள்? அவர்களை நினைக்கும் போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள் என்ன?

கலைஞர்: என்னைப் போல் ஒருவர் தான் தி.மு. கழகத் தொண்டர் ஆவார். நான் உற்சாகமாக இருக்கும்போது அவரும், அவர் உற்சாகமாக இருக்கும் போது நானும் மாறி மாறி உற்சாகம் பெறுவோம்.

குமுதம்: இப்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா?

கலைஞர்: பரபரப்பாக பேசப்பட்டு - இப்போது அந்தப் பிரச்சினை பம்பரம் சுற்றி அடங்குவதைப் போல் ஆகி விட்டது!

குமுதம்: மத்தியில் ஆள்வது காங் கிரஸ் - தி.மு.க. கூட்டணி என்றாலும், மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இந்தப் பிரச்சினை தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனால் கூட்டணிக்குள் பிரச்சினை ஏற்பட்டதா? கைது செய்யப்படுவதற்கு முன் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்தார்கள் என்றும் செய்திகள் உலவுகின்றன. அவை உண்மையா?

கலைஞர்: இந்தப் பிரச்சினையில் தொடக்கம் முதல் ஆளும் காங்கிரசும் - அதனுடன் தோழமை கொண்ட தி.மு. கழகமும் நீதி வெல்லும் - நிச்சயம் வென்றிட வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டு வருவதால் - இடையிடையே உலவுகின்ற செய்திகளைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

குமுதம்: வரப்போகும் தேர்தலில் எந்தப் பிரச்சினை மய்யமாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்? உங்கள் பிரச்சாரம் எதை முன்னிறுத்தி இருக்கும்?

கலைஞர்: எங்கள் ஆட்சிக் காலத்தில் தொடங்கியுள்ள திட்டங்கள் - தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட பணிகள் இவற்றை முன்னிறுத்தி ஏழையெளியோர் வாழ்வில் என்றென்றும் ஒளிவீசிடும் உதயக் கதிராக இருப்போம் என்பதுதான் எமது உறுதி மிக்க பிரச்சாரமாக இருக்கும்.

குமுதம்: உங்கள் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் இறங்கியிருப் பதையும் எதிர்க்கட்சிகள் ஒரு குற்றச் சாற்றாகக் கருதுகின்றனவே?

கலைஞர்: கூண்டோடு குடும்பம் குடும்பமாக திரைப் படத்துறையில் கணவன் - மனைவி, அப்பா - பிள்ளை, மாமன் - மச்சான் என்று எத்தனை பேர் இப்போது ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும் - விவேகமும் பிறக்கும்.

குமுதம்: இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் உங்களுக்கு எதிரான கருத்துகளை சில தமிழர் அமைப்புகள் சொல்லி வருகின்றன. அவற்றுக்கு உங்கள் பதில் என்ன?

கலைஞர்: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஈழத் தந்தை செல்வா அவர் களின் காலத்திலிருந்து என் உணர்வு என்ன என்பதையும் - அதற்காக நான் ஆட்சியை இழந்த நிகழ்வையும் வரலாறு சொல்லும்.

குமுதம்: துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பயணித்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறார். அவருடைய அயராத உழைப்பு தமிழக மக்களால் வரவேற்கப்பட் டிருக்கிறது. அந்த உழைப்புக்குத் தேர்தலில் நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

கலைஞர்: உங்கள் கேள்வியிலேயே விளக்கமான பதிலும் அடங்கியிருக் கிறது. விதைத்தவன் - வியர்வையை நீராகப் பாய்ச்சியவன் - அறுவடையின் போது அமோகமான பலனைக் காண் பான் என்பது உழைப்புக்கு இந்த உலகு தரும் உற்சாகப் பரிசுதானே!

குமுதம்: தென்மாவட்டங்களில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கட்சிப் பணி தி.மு.க.வுக்கு நல்ல பலத்தைத் தந்திருப்பதாகப் பொது மக்களே கூறுகிறார்கள். அவருக்குத் தி.மு.க.வில் மேலும் முக்கிய பொறுப்புகள் தரப்படுமா?

கலைஞர்: தென் மாவட்டங்களில் கழகத்தின் வைரத்தூணாக இருந்து என் இனிய உடன்பிறப்பு தென்னரசு ஆற்றிய பணிகளைத் தான் தம்பி அழகிரிக்கு இப்போது கழகம் தந்துள்ளது. மேலும், முக்கியப் பொறுப்புகளுக்கு அவர் முன்னேறுவார் என்பது என் கணிப்பு.

குமுதம்: உங்கள் புதல்வர்கள் மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் உங் களைப் போலவே சளைக்காத உழைப் பாளிகளாய் இருக்கிறார்கள். அவர்களுக் குத் தாங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?

கலைஞர்: ராமன் - லெட்சுமண னைப் போல் இருங்கள் என்று சொல்ல மாட்டேன்; ராவணன் - கும்பகர்ணனைப் போல வாழுங்கள் என்று சொல்வதுதான் என் அறிவுரையாகும்.

குமுதம்: கனிமொழியும் இப்போது அரசியலில் இருக்கிறார். உங்களுக்கு அவரது அரசியல் பணி பிடித்திருக்கிறதா - கவிதைப் பணி பிடித்திருக்கிறதா?

கலைஞர்: இரண்டு பணிகளின் துணையோடு அவர் ஆற்றும் சமூக நலப் பணி மிகவும் பிடித்திருக்கிறது.

குமுதம்: ஆட்சிப் பணி, கட்சிப் பணி, எழுத்துப் பணி என ஓய்வில்லா வாழ்க் கையை வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். மனதையும் உடலையும் சோர்வடையாமல் வைத்துக் கொள்ள தாங்கள் கடைப் பிடிக்கும் பழக்கங்கள் என்ன?

கலைஞர்: அதிகாலையில் அய்ந்து மணிக்கெல்லாம் உறக்கம் கலைந்து உதயசூரியனைக் காணுகிறேன் - என் சோர்வு போக்க அது ஒன்று போதாதா?

குமுதம்: எழுபத்தைந்துக்கு மேற் பட்ட திரைப் படங்களில் பணியாற்றியிருக் கிறீர்கள். அப்போதைக்கும் இப்போதைக் கும் திரைப்படத் துறையில் நீங்கள் காணும் வித்தியாசங்கள் என்ன?

கலைஞர்: பொன்னர்-சங்கர் என்ற கொங்குச் சீமை வீரர்களின் கதை விரைவில் திரைப்படமாக வருகிறது; அதைக் காணுங்கள் - வித்தியாசம் புரியும்.

குமுதம்: ஆறாவது முறையாக முதல் வரானால் தமிழக மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று சிறப்புத் திட்டங்கள் ஏதேனும் சிந்தித்து வைத்திருக் கிறீர்களா?

கலைஞர்: எந்தத் திட்டமானாலும் அது ஏழையெளியோர் வாழ்வதற்கும் வளம் பெறுவதற்கும் பயன்படும் திட்ட மாகவே இருக்கும்.

குமுதம்: இந்த ஆட்சியில் செய்ய நினைத்து - செய்ய இயலாமல் போன காரியங்கள் உண்டா?

கலைஞர்: மத்தியில் தமிழும் ஆட்சி மொழி - சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழும் பயன்பாட்டு மொழி - மாநில சுயாட்சி - இவை தான் இன்னும் முழுமையாக முடியாமல் இருக்கின்ற காரியங்கள்.

குமுதம்: கலைஞர் - சிறுகுறிப்பு வரைக என்று உங்களிடமே கேட்டால், நீங்கள் என்ன எழுதுவீர்கள்?

கலைஞர்: மானமிகு சுயமரியாதைக்காரன் என்று ஏற்கெனவே பதில் அளித்திருக்கிறேனே!

குமுதம்: உங்கள் மேல் சோவுக்கு என்ன கோபம்? கடுமையான தாக்கு தல்களைத் தொடுக்கிறாரே? அ.தி.மு.க., - விஜயகாந்த் கூட்டணி வேண்டும் என்று குரல் கொடுக்கிறாரே?

கலைஞர்: சோ மட்டுமல்ல - யார் என்மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தாலும் - அவர்கள் ஏற்கெனவே என்னைப் பற்றி புகழ்ந்து எழுதியவை களையும், கூறியவைகளையும் நினைத்துக் கொண்டு புதிய தாக்குதல்களைப் புறந்தள்ளிவிடுகிறேன்.

குமுதம்: பழைய தலைமைச் செய லகத்துக்கும், புதிய தலைமைச் செயல கத்துக்கும் என்ன வேறுபாடு காண் கிறீர்கள்?

கலைஞர்: இதுவரையில் பழைய தலைமைச் செயலகத்தில் அமர்ந்து 5 முறை முதலமைச்சர் பணியாற்றியிருக் கிறேன். என் வாழ்க்கைச் சரித்திரத்தில் பழைய தலைமைச் செயலகம் 50 ஆண்டுகளை ஆக்கிரமித்துக் கொண்ட செயலகமாகும். புதிய தலைமைச் செயலகம் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை போல அல்லாமல் நாமே அடித்தளம் வைத்து, நாமே கட்டி முடித்து பூரிப்போடு அமர்ந்திருப்பதை எண்ணும்போது பெருமிதமாக இருக்கிறது.

குமுதம்: இந்த கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்?

கலைஞர்: இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது.

குமுதம்: பா.ம.க.வைத் தொடர்ந்து வேறு கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறதா?

கலைஞர்: வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

குமுதம்: வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிடுவீர்கள்?

கலைஞர்: 234 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் (முகத்தில் புன்னகை).

குமுதம்: தேர்தலில் வெற்றி வாய்ப்பு உங்கள் கூட்டணிக்கு எப்படி இருக் கிறது?

கலைஞர்: வெற்றி வாய்ப்பு அமோக மாக இருக்கிறது! (சொல்லும்போதே, கலைஞரின் முகத்தில் அபரிமிதமான மகிழ்ச்சி).

நன்றி: குமுதம் 2-3-2011



விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஜூவி பேட்டி

'இந்திய நாட்டின் எம்.பி-யைத் துரத்தி அடிக்கிற அளவுக்கு இலங்கை அரசுக்குத் தைரியம் வந்தது எப்படி?''

''இந்திய அரசைப் பார்த்து அவர்கள் எவ்விதப் பயமும்கொள்ளவில்லை. இந்திய அரசின் 'அடா​வடி செல்லப்பிள்ளை’யாகத்தான் இலங்கை அரசு செயல்படுகிறது. அந்த தைரியத்தில்தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்... யாரை வேண்டுமானாலும் தாக்க​லாம் என அட்டூழிய ஆட்டம் போடுகிறது இலங்கை. இந்திய அரசின் எம்.பி-யான என்னையே விரட்டி அடிக்கிறார்கள் என்றால், யார் கொடுக்கும் துணிச்சல் என்பது அப்பட்டமான ஒன்றுதானே!''

''ஈழ விவகாரத்தின் அத்தனை விதமான கோரங்களுக்கும் காங்கிரஸ் அரசின் உதவி இருப்பதாகச் சொல்லும் நீங்கள், எப்படி இன்னமும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கிறீர்கள்?''

''தமிழக அரசியல் நிலையை அறிந்தவர்களுக்குத்​தான் என் நிலை தெரியும். 18 மாதங்கள் வைகோவை பொடா வழக்கில் உள்ளே தள்ளியவர் ஜெயலலிதா. இன்றைக்கு அம்மையாரின் அணியில்தான் வைகோ இருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸோடு முறித்துக்கொண்டு போன பா.ம.க. இப்போது மீண்டும் அதே கூட்டணியில்! அப்படி இருக்க, எங்களுடைய நிலைப்பாட்டை மட்டுமே கேள்விக்குறியாக்குவது எந்த விதத்தில் நியாயம்? அவர்களின் கூட்டணியில் இருக்கிறேன் என்பதற்காக, என் தொண்டையை அறுத்தா எறிந்துவிட முடியும்?''

''நீங்கள் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்துக்கு உரிய பதிலைக்கூட காங்கிரஸ் அரசு சொல்லவில்லையே?''

''பதில் இருந்தால்தானே சொல்வதற்கு? இலங்கைக்கு எல்லா விதங்களிலும் துணையாக இருக்கிறவர்கள் எனக்கு எப்படி விளக்கம் சொல்​வார்கள்? நாங்கள் அங்கம் வகிக்கும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸும் அங்கம் வகிக்கிறது. அதற்காக முகத்தை முறுக்கிக்கொண்டு என்னை வெளியேறச் சொல்கிறீர்களா? என்னை அரசியல் அரங்கில் இருந்தே ஒழித்துக்கட்ட நினைத்த ஜெயலலிதாவோடு நான் சேர முடியுமா? நான் ஒரு பத்திரிகையாளரோடு பழகுகிறேன். அந்தப் பத்திரிகையாளர் ஒரு ரவுடியோடு நட்பு வைத்திருக்கிறார் என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? தமிழக அரசியலின் கட்டமைப்புப் புரியாமல் எங்கள் மீது பழி போடுவது கொஞ்சமும் நியாயமற்றது!''

''உங்களுடைய ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தரப்பும் ஆதரவு தெரிவிக்கவில்லையே?''

''யாருடைய ஆதரவும் எங்களுடைய போராட்​டங்களுக்குத் தேவை இல்லை. கொள்கை ரீதியான முன்னெடுப்புகளுக்கு யாருடைய உதவியையோ, ஆதரவையோ நாங்கள் எதிர்​பார்க்கவில்லை. நாங்கள் தி.மு.க-வுடன் பூண்டி​ருப்பது தேர்தல் உறவுதான். எங்களுடைய உணர்வு ரீதியான போராட்டங்களுக்கு தி.மு.க. தரப்பு ஒருபோதும் தடையாக இருந்தது இல்லை. எங்களுக்கு அதுவே போதும். முதற்​கட்டப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வந்த நான், துணை முதல்வர் ஸ்டாலினிடம், 'பார்வதி அம்மா​ளுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை போகிறேன்’ எனச் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அதற்கு அவர் எவ்வித மறுப்பும் சொல்லவில்லை. தமிழ்த் தேசியம் பேசுபவர்​களே எங்களை விமர்சிக்கும்போது, பிறருடைய ஆதரவை நாங்கள் எப்படி எதிர்பார்க்க முடியும்?''

''தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. கெடுபிடி காட்டுவதன் பின்னணியில் காங்கிரஸின் கைங்கரியம் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?''

''இப்போது நடப்பது காங்கிரஸ் அரசுதானே... அப்படி என்றால் அரங்கேற்றப்படும் நிகழ்வுகளுக்கு வேறு யார் காரணமாக இருக்க முடியும்?''

''அ.தி.மு.க. தரப்பில் இருந்து உங்களுக்குத் தொடர்ந்து அழைப்பு வருவது உண்மைதானே?''

''எங்களிடம் பேசியவர்களிடம், 'எங்களின் நிர்வாகக் குழுவிலேயே தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதாக முடிவு எடுத்து​விட்டோம். எந்த ஊசலாட்டமும் இல்லாத நிலையில் அணி மாறும் எண்ணமே இல்லை. நாங்கள் தேவையா இல்லையா என்பதை தி.மு.க-தான் தீர்மா​னிக்க வேண்டும். அப்படி ஒரு சூழல் அமைந்தால் பேசலாம்!’ எனத் தெளிவாகச் சொல்லி​விட்டோம்!''

''ஆரம்பம் தொட்டே தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் உங்களை விட்டுவிட்டு, முதல் ஆளாக பா.ம.க-வைக் கூட்டணிக்கு இழுத்து ஸீட் ஒதுக்கீடு செய்தது, உங்களைக் கோபப்​படுத்தவில்லையா?''

''கலைஞரின் சாதுரியம் எத்தகைய சாதிப்புகளை நிகழ்த்தும் என்பதற்கு பா.ம.க-வுக்கு 31 ஸீட்டுகள் ஒதுக்கிய நிகழ்வு ஓர் உதாரணம். அதன் மூலமாக தமிழக அரசியல் அரங்கில் பலருடைய திட்டங்களையும் கலைஞர் தவிடு​பொடியாக்கி இருக்கிறார். விஜயகாந்த் அதிக ஸீட்கள் கேட்டு டிமாண்டைக் கூட்டவும், காங்கிரஸ் அதிக ஸீட்கள் கேட்க முடியாத அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளானதும் கலைஞரின் சாதுரியத்தால்தான். அத​னால் பா.ம.க-வை முதலில் அழைத்ததில் எங்களுக்கு எவ்வித வருத்தமும் இல்லை. அதே நேரம் எங்களுக்கான ஸீட் ஒதுக்கீட்டை தி.மு.க. நிச்சயம் நிறைவாகச் செய்யும் என்று முழுமையாக நம்புகிறோம்!''

''சில மாதங்களுக்கு முன்பு உங்களுடைய கட்-அவுட்டுகளை பா.ம.க-வினர் உடைத்த சம்பவங்கள் நடந்தன. இத்தகைய கசப்புகளை எல்லாம் கடந்து எப்படி கூட்டணியில் நீடிக்கப்​போகிறீர்கள்?''

''சமீபத்தில்கூட கடலூர் மாவட்டம் கம்பளிமேடு என்கிற கிராமத்தில் எங்கள் மக்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டு இருக்கிறார். கொலைத் தாக்குதல் நடத்தியவர்களில் பா.ம.க-வினர் மட்டுமல்லாது, இன்ன பிற கட்சியினரும் இருந்திருக்கிறார்கள். எங்களைத் தற்காத்துக்​கொள்ளும் போராட்டத்தையும், எங்களை வலிமைப்படுத்திக்கொள்ளும் உறவையும் சம காலத்தில் பேணவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால், இதை எல்லாம் மனதில்வைத்து நான் கூட்டணியைத் துறக்க முடியுமா?''

''உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்... கூட்டணிக்காக எதையும் சகித்துக்கொள்ளும் நிலையில்தானே நீங்கள் இருக்கிறீர்​கள்?''

''நெருக்கடிகளைச் சமாளித்தபடியே பயணத்தைத் தொடர வேண்டிய நிலையில், எதையும் சகித்துத்தானே ஆகவேண்டும்! சுயத்தை இழக்க வேண்டிய மோசமான களத்தில் நான் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். 'சுயத்தை இழக்கக் கூடாது’ என நினைத்தால் அரசியலே வேண்டாம் என நினைத்து துறவறம் போகத்தான் முடியும். இல்லையேல், பொது நீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு இருக்கும் எங்கள் சமூகத்துக்காக எதிர் நீச்சல் போட வேண்டும். எல்லோரும் கூட்டணிக்காகவும் ஸீட் பேரத்துக்காகவும் ஓடிக்கொண்டு இருக்கையில், ஈழத் தாய்க்கு அஞ்சலி செலுத்த ஓடியவன் நான். என் சுயம் இன்னமும் மிச்சம் இருப்பதன் சாட்சிதான் அந்தக் காட்சி!''

(நன்றி: ஜூவி)

தேர்தல் கூட்டணி என்பது எங்கள் வாக்குகள் உங்களுக்கு; உங்கள் வாக்குகள் எங்களுக்கு என்பதாகும். எங்கள் கொள்கைகள் உங்களுக்கு, உங்கள் கொள்கைகள் எங்களுக்கு என்பதல்ல. - தொல்.திருமாவளவன்

Read More...

பாகிஸ்தான் vs ஸ்ரீலங்கா - The day of the "Under Dogs"

பாகிஸ்தான் vs ஸ்ரீலங்கா - The day of the "Under Dogs" - எ.அ.பாலா
பாகிஸ்தானை, அடைப்புக்குறிக்குள் தான் Under Dogs என்று குறிப்பிட்டு இருக்கிறேன் என்பதை கவனத்தில் கொள்ளவும் :) பிரேமதாசா மைதானத்தில் புதிதாக இடப்பட்டுள்ள ஆடுகளத்தில் நடந்த முதல் உலகக்கோப்பை ஆட்டம் இது. புதியதோ, பழையதோ, நமது துணைக்கண்டத்தில் பெரும்பாலான ஆடுகளங்கள் பொறி பறக்கும் வேகப்பந்து வீச்சுக்கு ஒரு போது 'துணை' போகாது என்பது உலகறிந்த உண்மை! டாஸில் வென்ற பாக் பாதுகாப்பான முடிவான பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஷெசாத் 6வது ஓவரில் விக்கெட் இழக்க, ஹ·பீஸ்-கம்ரன் அக்மல் ஜோடி கவனமாக ஆடியும், சுறுசுறுப்பாக ஓடியும், ஸ்கோர் 15 ஓவர்களில் 79/1. From what I saw, Hafeez seemed to have a lot of time to play the ball & has a simple and uncomplicated approach to batting. இத்தருணத்தில் ஹ·பீஸ் முட்டாள்தனமாக ரன் அவுட் ஆனார்.

சங்ககாரா பந்து வீச்சு மாற்றங்களை சிறப்பாக கையாண்டார். குலசேகராவின் பந்து வீச்சு மோசமாக இருந்தாலும், மற்ற பந்து வீச்சாளர்கள் ஒழுங்காகவே பந்து வீசினர். 21வது ஓவரில் (105/3) கம்ரன் விக்கெட்டுக்குப் பின், அனுபவமிக்க யூனுஸ் கானும், மிஸ்பாவும் ஸ்ரீலங்காவின் பந்து வீச்சை நன்றாக பால் கறந்தனர் :) 41வது ஓவரில் யூனுஸ் ஆட்டமிழந்தார் (ஸ்கோர் 213/4). உமர் அக்மல் களமிறங்கினார்! ஆனால் 44வது ஓவரில் தான் பேட்டிங் பவர் பிளே தொடங்கியது! இது மகா அபத்தம் என்று நினைக்கிறேன். 45 ஓவர்களுக்குள் பவர் பிளே முடிவடைந்து விடுவது நல்லது. எப்படியும், ஒரு நாள் ஆட்டத்தில் கடைசி 5 ஓவர்கள் slog ஓவர்களாக தான் அமைகின்றன!

இந்த பவர் பிளேயில், அடிதடி மன்னன் அ·ப்ரிதி இருந்தும், 5 ஓவர்களில் பாக் 36 ரன்களே எடுத்ததற்கு முரளியின் கருமித்தனம் தான் காரணம் :-) (2 ஓவர்கள், 5 ரன்கள், உமர் அக்மலின் விக்கெட்) முரளி தனது 10 ஓவர்களில் 35 ரன்களே கொடுத்தது ஸ்ரீலங்கா பந்து வீச்சின் ஹைலைட்! பாக் இன்னிங்க்ஸின் முடிவில் மொத்த ஸ்கோரான 277/7 (மிஸ்பா விக்கெட் இழக்காமல் 91 பந்துகளில் 83 ரன்கள்) ஒரு 15-20 ரன்கள் குறைவு போலத் தோன்றினாலும், 2வது இன்னிங்க்ஸில் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இன்னும் சற்று அதிகமாகவே உதவும் என்பது தெளிவாகவே புலப்பட்டது!

278-ஐ வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஸ்ரீலங்கா, நிதானமாக ஆடி, முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழக்காமல், 42 ரன்களை எடுத்தது. அக்தர் சிறப்பாக பந்து வீசினார் (5-0-18-0). 17 ஓவர்களில் 86/1. 18வது ஓவரில், ஸ்ரீலங்காவின் வீழ்ச்சிக்கு பூம்பூம் அ·ப்ரிடி பிள்ளையார் சுழி போட்டார்! நன்றாக ஆடிக்கொண்டிருந்த தில்ஷன் clean bowled! ஜெயவர்த்தனே வந்தார், அ·ப்ரிடி மீண்டும் அக்தரை பந்து வீச அழைத்தார். 21வது ஓவரில், அக்தர், சற்று தாமதாக உள்வந்த ஒரு பந்தின் வாயிலாக ஜெயவர்த்தனேயின் நடு ஸ்டம்ப்பை பெயர்த்தெடுத்தார். அடுத்த ஓவரில் அ·ப்ரிடி சமரவீராவை வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்ததில், 22வது ஓவரின் முடிவில் ஸ்ரீலங்கா ஸ்கோர் 98/4. அக்தர் 7-0-21-1

அ·ப்ரிடியும் மிக மிக திறமையாக வேகத்தை கூட்டி குறைத்து பந்து வீசினார் (3-0-7-2). Controlled leg spin bowling at its best! இந்த சரிவுக்குப் பின், சுழற்பந்து வீச்சாளர் ரஹ்மான், AR ரஹ்மான் இசையில் காணப்படும் ரிதத்தை தனது பந்து வீச்சில் காட்டினார்! இதில் ஒரு மெய்டன் ஓவரும் அடக்கம் (4-1-14-0). அவரது 5வது ஓவரில், கம்ரன் (சங்ககாரா) ஸ்டம்பிங்கை கோட்டை விட்டது ஒரு கரும்புள்ளி. சங்ககாராவும், சமரசில்வாவும் தடவித் தடவி ஆடி, 13 ஓவர்களில் (20 to 33) எடுத்தது 39 ரன்கள் மட்டுமே! பிரதி ஓவர் 8.5 ரன்கள் தேவை என்று நிலைமை.

பாக் கொடுத்த குடைசலைத் தாங்க முடியாமல், சங்ககாரா பேட்டிங் பவர் பிளேயை தேர்ந்தெடுத்தார் :) அதுவும் சோபிக்கவில்லை! 38வது ஓவரில், ஸ்கோர் 169-4. மீண்டும் அ·ப்ரிடிக்கு விக்கெட், (அவரது 300வது), சங்ககாரா வீழ்ந்தார். கடைசி 7 ஓவர்களில், ஸ்ரீலங்கா வெற்றிக்கு 75 ரன்கள் (RR 10.7) தேவை என்ற நிலையில், தனது 10வது ஓவரை வீசிய அ·ப்ரிடி, முக்கியமான மேத்யூஸின் விக்கெட்டை வீழ்த்தினார். அபாரமான பந்து வீச்சு (10-0-34-4). அதே நேரம், இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் ·பீல்டிங்கில் ஓட்டைகள் அதிகம்.

இறுதி 6 ஓவர்களில் 67 ரன்கள் (RR 11.2) தேவை, 4 விக்கெட்டுகளே மிச்சம் என்றிருந்தபோதும், அரங்கிலிருந்த இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கை இழக்காமல், தங்கள் அணியை உற்சாகப்படுத்திய வண்ணமிருந்தனர்! இது போன்ற நிலையில், நம்மூரில் (சென்னை தவிர்த்து) தண்ணீர் பாட்டில்களை மைதானத்தில் வீசி கலாட்டா செய்வது வழக்கம்! சமரவீராவும், குலசேகராவும், சாகிற சமயத்தில் "சங்கரா சங்கரா" என்று, மன்னிக்கவும், "ராஜபக்ஷே ராஜபக்ஷே" என்று மட்டையை சுழற்றி ரன்கள் சற்று குவிந்தபோதும், தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் ஸ்ரீலங்காவை "உன்னால் முடியும் தம்பி" என்று ஏத்தி விட்டபோதும், பாகிஸ்தான் தான் வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்பியதை போல அவ்வணி வென்றது! பாகிஸ்தான் வென்றதை விட ஸ்ரீலங்கா மண்ணைக் கவ்வியதில் மிக்க மகிழ்ச்சியும் கூட!

அன்புடன்
பாலா
http://balaji_ammu.blogspot.com/

பாகிஸ்தான் வென்றதை விட ஸ்ரீலங்கா மண்ணைக் கவ்வியதில் மிக்க மகிழ்ச்சியும் கூட! - உங்களுக்கு ஏன் இந்த இனகொலைவெறி ?


Read More...

இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி - ஜோதிட ரீதியாக ஒரு ஆய்வு.

இந்திய இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி - ஜோதிட ரீதியாக ஒரு ஆய்வு வழக்கம் போல

இதற்குண்டான Parameters:
இந்திய அணியின் தலைவர் - திரு.தோணியின் ஜாதகம்
இங்கிலாந்து அணியின் தலைவர் - திரு.ஆண்ட்ரூ ஸ்டாராஸ் ஜாதகம்
போட்டி நடைபெறும் நாளன்றைய டாஸ் போடும் நேர ஜாதகம்

(எதற்காக அணித்தலைவர் ஜாதகத்தை எடுத்திருக்கிறேன் என்றால் முற்காலத்திலிருந்தே போரின் போது அந்த படையின் தளபதியின் ஜாதகத்தை வைத்துதான் ஆராய்ச்சி செய்வர். ஆதாரம்: மஹாபாரதம்)

நமது தோணிக்கு ராகு திசையில் புதன் புக்தி. திரு.ஆண்ட்ரூவுக்கு கேது திசையில் சுக்ர புக்தி. போட்டி ஆரம்பிக்கும் நேரத்திற்குரிய லக்னம் மிதுனம்.

தோணியின் லக்னாதிபதி புதன். ஆண்ட்ரூவின் லக்னாதிபதி செவ்வாய். இன்றைய போட்டி ஆரம்பிக்கும் நேர ஜாதகத்தில் இருவருடைய லக்னாதிபதிகளுமே லக்னத்திற்கு 9ம் இடத்தில் உள்ளனர்(பாவக சக்கரத்திலும்). இருவருடைய ஜாதகத்திலுமே இருவரின் பாதகஸ்தானாதிபதிகள் கெட்ட இடத்தினில் அமர்ந்திருக்கின்றனர். போட்டி நடைபெறும் ஜாதகத்திலும் பாதகஸ்தானாதிபதி 4ம் இடத்தில் இருக்கிறார். நல்லது. அடுத்ததாக திசை தோணியின் திசை அவருக்கு செல்வாக்கை கூட்டக் கூடிய திசையாக இருக்கிறது. அதே வேளையில் ஆண்ட்ரூவுக்கு ஞானத்தை கொடுக்க கூடிய திசையாக இருக்கின்றது.
போட்டி ஆரம்பிக்கும் ஜாதகத்திலும் இந்த் போட்டியானது ஞானத்தை இருவருக்குமே கொடுக்கும் போட்டியாக படிப்பினையை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இருவரின் ஜாதகத்திலும் நமக்கு வெற்றியை கணிக்க உதவுவது இருவரின் லக்னாதிபதிகள்தான். தோணியின் ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் ஆட்சி. ஆண்ட்ரூவின் ஜாதகத்தில் லக்னாதிபதி நீசம். இதேபோல் ஆராய்ச்சிகள் செய்து போட்டியின் முடிவு.

இந்தியாவா? இங்கிலாந்தா?. இங்கிலாந்தை விட இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம். வாய்ப்பு அதிகம் என்றாலும் போட்டி மிகக் கடுமையாக இருக்கும்.



- பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
இணையம்: http://kuppuastro.in/
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/


போட்டி முடிந்த பின் யார் ஜெயித்தார்கள் என்று எ.அ.பாலா கணிப்பார் பொறுத்திருங்கள்.

Read More...

Friday, February 25, 2011

எஸ்.வி.சேகர் அவர்களின் பேட்டி

இட்லிவடையில் திரு.எஸ்.வி.சேகர் பேட்டி என்று அறிவித்த உடன் 10 நிமிஷத்துக்கு ஒரு கேள்வி என்று வந்துக்கொண்டு இருந்தது. 1.5 நாளில் கடைசி தேதி முடிவடைந்துவிட்டது என்று அறிவித்தாலும் இன்றும் கேள்விகள் வந்த வண்ணம் உள்ளது.

வந்திருந்த கேள்விகளில் டுப்ளிகேட் கேள்விகள், பர்சனல் கேள்விகளை தவிர்த்து பேட்டிக்கு எஸ்.வி.சேகரை தொடர்பு கொண்ட் போது அவர் எழுதி அனுப்புவது கஷ்டம் ஆடியோ நேர்காணல் என்றால் வசதி என்றார்.

நேற்று முன் தினம் சுமார் 1.5 மணி நேரம் ஒருவர் பேசி ரிகார்ட் செய்தார். ஆனால் பேசி முடித்த பின் சுமார் ஐந்து நிமிடம் தான் ரிகார்ட் ஆகியிருந்தது. தயங்கி தயங்கி எஸ்.வி.சேகரிடம் சொன்ன போது அதற்கு என்ன திரும்பவும் கொடுக்கிறேன் என்றார். ( இத்தனைக்கு அவருக்கு தொண்டை வலி வேற )

அடுத்ததாக யார் பேட்டி எடுப்பது என்று குழம்பிக்கொண்டு இருந்த வேளையில் ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டேன் ஆனால் அவர் முடியாது என்று சொல்லிவிட்டார். நேற்று பத்ரியிடம் சாட்டில் முடியுமா என்று கேட்டேன். அதற்கு என்ன வீடீயோ இண்டர்வியூவே செய்கிறேன் என்றார். அவருக்கு என் நன்றிகள். கேமரா யார் என்று தெரியவில்லை அவருக்கும் என் ஸ்பெஷல் நன்றி.

இன்று காலை எஸ்.வி.சேகரை தொடர்புகொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. பின் அவரே பத்ரியை அழைத்து, அவர் இருக்கும் பகுதியில் 9 முதல் 5 மணி வரை பவர் கட் என்றும் அதனால் வேறு எங்கு சந்தித்து உரையாடலாம் என்றார். பின்னர் கிழக்கு பதிப்பகம் அலுவலகம் எங்கு உள்ளது என்று கேட்டு அங்கேயே தான் வந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். சில நிமிடங்களுக்குப் பிறகு சுதந்தரப் போராட்டத் தியாகிகள் உண்ணாவிரதம் இருப்பதாகவும் அங்கு அவரைக் கூப்பிடுவதாகவும் அதற்குப் போய்விட்டு வந்து இண்டெர்வியூ தருவதாகவும் அப்டேட் செய்து, இறுதியாக 12.30 மணிக்கு கிழக்கு அலுவலகம் வந்து சேர்ந்து, ஒரு காபியும் இடையில் கொஞ்சமாகத் தண்ணீரும் மட்டும் குடித்துவிட்டு, சுமார் 1.30 மணிநேரம் வரை மொபைல் போனை தூக்கி ஓரத்தில் வைத்துவிட்டு பேசினார். எந்தக் கேள்வியாக இருந்தாலும் பரவாயில்லை; எவ்வளவு ஹார்ஷாக இருந்தாலும் பரவாயில்லை; பதில் சொல்கிறேன் என்றார். கேள்விகளை தான் ஒருமுறை பார்க்கவேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை; பேசுவதை அப்படியே வீடியோவாகப் போடலாம் என்று சொல்லிவிட்டார். தன் கருத்துகளைப் பயமின்றித் தெரிவிப்பதாகவும் இதில் பலவற்றை அவர் சட்டமன்றம், பொதுக்கூட்டங்கள் ஆகிய இடங்களிலும் பேசியிருப்பதாகவும் சொன்னார். எந்தக் கட்டத்திலும் தயங்கவில்லை, யோசிக்கவில்லை, பளிச் என்று பேசினார். பாராட்டவும் தயங்கவில்லை, திட்டவும் தயங்கவில்லை. சுமார் 2.10-க்கு இண்டெர்வியூ முடிந்ததும்தான் தன் போனை எடுத்துப் பார்த்தார். மனைவி சாப்பாட்டுக்காக அழைத்திருந்தார். போகும் வழியில் மயிலை மசாலாவில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குச் சொல்வதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

அவரது தொண்டை புண்ணாகியிருக்காது என்று நம்புவோம்!

இனி பேட்டி ....




தொண்டை வலி பாராமல் பேட்டி கொடுத்த எஸ்.வி.சேகர், இட்லிவடைக்கு வீடியோ பேட்டி எடுத்த பத்ரி, இதற்கு முன்பு ஆடியோ பேட்டி எடுத்த அன்பர் அனைவருக்கும் நன்றி.








Read More...

அமர் சித்ர கதா - ஆனந்த் பாய் - அஞ்சலி



அமர் சித்ர கதா - ஆனந்த் பாய்


குழந்தை பருவத்தில் மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி தந்ததற்கு நன்றி


அவரை பற்றிய தொகுப்பு இங்கே

Read More...

தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் -The Day of the Chokers


இதற்கு முன் நடந்த சில "யானை vs பூனை" உலகக்கோப்பை ஆட்டங்களில் கென்யாவும், கனடாவும், ஜிம்பாப்வேயும் (எதிர்பார்த்தது போல) யானைகளால் மிதித்து நசுக்கப்பட்டன. ஹாலந்து மட்டுமே "ஹாஹா"லந்து என்று சொல்லும்படியாக, (புதிதாக கிட்டிய நம்பிக்கையுடன் காணப்படும்) இங்கிலாந்துக்கு எதிராக 292 ரன்கள் எடுத்து போராடி 'தோற்றாலும் மேன்மக்கள் மேன்மக்களே' என்பதை நிலைநாட்டியது!

சரி, இந்த ஆட்டத்துக்கு வருவோம். டாஸில் வென்ற தெ.ஆ வெ.இ யை பேட்டிங் செய்ய அழைத்ததற்கு 2 காரணங்கள்: ஸ்மித்துக்கு தன் பந்து வீச்சாளர்கள் மேல் இருந்த நம்பிக்கையும், பகலிரவு ஆட்டம் என்பதால் 2வதாக பந்து வீசும் அணிக்கு பனி காரணமாக பந்தை grip செய்வதில் பிரச்சினை ஏற்படலாம் என்ற சந்தேகமும்! தில்லியின் கோட்லா மைதானம், ஆடுகளம் தவிர்த்து, பச்சை பசேலென்று கண்ணுக்கு அத்தனை குளிர்ச்சி :-)



துவக்க ஆட்டக்காரர்கள் (டேரன் பிரேவோ, கெய்ல்) இருவரும் இடதுகை ஆட்டக்காரர்கள் என்பதால், க்ரீம் ஸ்மித் சுழற்பந்து வீச்சாளர் போத்தாவை முதல் ஓவர் பந்து வீச அழைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. (எதிர்பார்த்தது நம்பர் 1). இந்த உலகக்கோப்பையில் சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் 10 ஓவர்களில் அதிகம் பயன்படுத்துவதை காண முடியும். போத்தாவின் 3வது பந்தில் கெய்ல் "முதல் நழுவலுக்கு" கேட்ச் பயிற்சி அளிக்க முற்பட்டு விக்கெட் இழந்தார். (எதிர்பார்த்தது நம்பர் 2)

இருந்தும், பிரேவோவும், தேவன் ஸ்மித்தும் கூட்டு சேர்ந்து நம்பிக்கையோடு நன்றாக விளையாடினர். ஸ்கோர் 23 ஓவர்களில் 113-ஐ எட்டியபோது, டென்ஷன் ஏதுமின்றி ஒரு அனுபவமிக்க ஆட்டக்காரர் போல பரிமளித்த டேரன் பிரேவோ போத்தா பந்தில் அனாவசிய LBW. பிரேவோ எடுத்தது 73 ரன்கள். இது வரை போத்தாவின் பந்து வீச்சு நல்ல "கோடும், நீளமும்" உடையதாக இருந்தது குறிப்பிடவேண்டியது :-) ரொம்பவும் அலட்டாமல் பந்து வீசும் இவரை efficient பந்து வீச்சாளர் என்று கூறுவேன்.

வெ.இ 113-1 என்ற நிலையிலிருந்து 120-4 என்று நழுவினர் (எபா நம்பர் 3). மீண்டும் ஒரு ரிப்பேர்! டிவெயின் பிரேவோவும் சந்திரபாலும் கவனமாக ஆடினர். நடுநடுவே "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்பதை நிரூபிக்கும் வகையில் பிரேவோ 3 சிக்ஸர்கள் அடித்ததில், ஸ்கோர் 42 ஓவர்களில் 205-4. கிங்கரன் போலார்ட் இன்னும் ஆட வராததால், மொத்த ஸ்கோர் 270-ஐ எட்டும் என்று எதிர்பார்ப்பது சகஜம் தான். ஆனால், சந்திரபாலுக்கு கிறுக்கு பிடித்ததில், பிரேவோ(40 ரன்கள், 37 பந்துகளில்) அபத்தமாக ரன்அவுட் ஆக்கப்பட்டார்.

முட்டிக்கு மேல் பந்து எழும்பாத ஆடுகளத்திலும் டேல் ஸ்டெயினின் வேகமான, நேரான பந்துவீச்சுக்கு 'தலை'யே ஆட்டம் காணும்! "வால்" பையன்கள் என்ன செய்வார்கள்! (குதி ஆடுகளத்தில் ஸ்டெயினால் ஏற்படும் பிரச்சினைகள் வேறு வகை!) 205-4 என்பதிலிருந்து ஸ்கோர் 213-9 என்ற சரிவில் (எபா நம்பர் 4) விழுந்த 5 விக்கெட்டுகளில் 3 ஸ்டெயினுக்கு. 42வது ஓவரில் தொடங்கி 46வதில் முடிந்த இவ்வீழ்ச்சி தந்த "மன அழுத்தத்தில்" வெ.இ கேப்டன் பேட்டிங் பவர் பிளே என்ற ஒரு சங்கதியையே மறந்து விட்டாரோ என்று தோன்றியது! ஸ்டெயினின் சாமியாட்டத்தில் டேரன் சாமிக்கு ஜுரம் வந்து விட்டது போலும் :) நடுவரே 46வது ஓவரிலிருந்து (கட்டாய) பேட்டிங் பவர் பிளே தொடங்கியதை சைகையில் தெரிவித்தார்! வெ.இ 48வது ஓவரில் 222 ரன்களுக்கு (டேவில் ஷெப்பர்ட் நடுவராக இருந்திருந்தால், இன்னிங்க்ஸ் பிரேக்கான 45 நிமிடங்களிலும் கால் மாறி குதித்துக் கொண்டே இருந்திருப்பாரோ என்று ஓர் எண்ணம் எழுந்தது!) சுருண்டது.

223-இ இலக்காக கொண்டு களமிறங்கிய தெ.ஆ முதல் 5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை (20/2) இழந்தபோது ஒரு சுவாரசியம் ஏற்பட்டாலும், இந்த வெ.இ அணி ஒன்றும் ராபர்ட்ஸ், கார்னர், மார்ஷல் என்று ஒரு வேகப்படையை வைத்துக் கொண்டு எதிரணியை கலகலக்க வைக்கும் ரகமில்லை என்று வருத்தமே மிஞ்சியது. இந்த வெ.இ அணியில் நிஜமான வேகப்பந்து வீச்சாளர் ரோச் மட்டுமே. என்ன ஒரு வீழ்ச்சி பாருங்கள்!

தென்னாபிரிக்கா (43வது ஓவரிலேயே) வெற்றி பெற்றது (எபா நம்பர் 5). டிவிலியர்ஸ் டெவில் போல ஆடி சதமடித்தார். அப்படி இப்படி என்று இருந்த அவர், சரியான சமயத்தில் ·பார்முக்கு வந்திருக்கிறார். இந்த இன்னிங்க்ஸ் வாயிலாக Form is temporary class is permanent என்பதையும் நிரூபித்தார். தெ,ஆ ஒரு balanced side ஆக விளங்குகிறது. If South Africans play to their strength with confidence (lack of that crucial factor has been their bane!) கோப்பையை வெல்ல அந்த அணிக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.

அன்புடன்
பாலா
http://balaji_ammu.blogspot.com/

GLOSSARY:

புதிதாக கிட்டிய நம்பிக்கை - Newfound Confidence
கோடும், நீளமும் - Line & Length
முதல் நழுவல் - First Slip
தலை - Top order batsmen
வால் பையன்கள் - Tailenders
குதி - Bouncy

Balaji - பாலா

Read More...

Thursday, February 24, 2011

கடவுளுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த்



தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் - பண்ருட்டி ராமச்சந்திரன். தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டணிக்கு பத்திரிக்கையாளர் சோ தான் எல்லா வேலைகளும் செய்தார் என்று சொல்லுகிறார்கள்.

பிகு: படத்தில் அடிவாங்குபவர் சித்தரிக்கப்பட்டவர். உண்மையான படம் மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் :-)

இந்த செய்தி சன் டிவி, கேப்டன் டிவி இரண்டிலும் வந்தது. கலைஞர் டிவி, ஜெயா டிவியில் வரவில்லை.

Read More...

Wednesday, February 23, 2011

கள்ளப் பணமும் கடித அரசியல்களும் - விஸ்வாமித்ரா


There is no country for old men - கள்ளப் பணமும் கடித அரசியல்களும்


கடந்த பல நாள்களாக 1, ஜன்பத்தையும், பாராளுமன்றத்தையும் நோக்கி வீசிக் கொண்டிருந்த ஸ்பெக்ட்ரம் மற்றும் கருப்புப் பண ஊழல் புயல் நேற்று திடீரென்று திசை மாறி அசோகா ரோடு பக்கம் மையம் கொண்டுள்ளது. சென்ற பாராளுமன்றத் தேர்தலின் பொழுது ஸ்விஸ் வங்கியிலும் உலகின் பிற கள்ளப் பண சேமிப்பு சொர்க்கங்களிலும் சேமிக்கப்பட்டுள்ள பல நூறு பில்லியன் டாலர்கள் குறித்து, அந்தத் தேர்தலில் பிரதம மந்திரிக்குப் போட்டியிட்ட பி.ஜே.பி கட்சியின் தலைவர் எல்.கே.அத்வானி அவர்கள், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் கள்ளத்தனமாகச் சேமித்து வைக்கப் பட்டுள்ள பல லட்சம் கோடி ரூபாய்களை மீட்டு வருவோம்” என்பதைத் தேர்தல் வாக்குறுதியாகவே அளித்தார். இருந்தாலும் நாட்டு மக்கள் மீண்டும் ஊழல்களின் பிறப்பிடமான, இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஓட்டுக்காக ஆதரித்து வந்த காங்கிரஸ் கட்சிக்கே ஓட்டுப் போட்டு பதவியில் அமர்த்தினார்கள். பலனை இன்று வரை அனுபவிக்கின்றார்கள் இன்றும் படிப்பினை பெற்றதாகத் தெரியவில்லை. எதிர்க் கட்சிகளின் தொடர்ந்த குற்றச்சாட்டுக்களின் விளைவாக மன்மோகனும் கருப்புப் பணத்தைத் திருப்பிக் கொண்டு வர ஆவன செய்வோம் என்று சும்மானாச்சுக்கும் ஒரு அறிக்கையை மட்டும் அவ்வப் பொழுது விட்டுக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கள்ளப் பணத்தை இந்தியாவில் இருந்து கடத்தி வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதே காங்கிரஸ் கட்சியின் தலைமையும் அதன் பிற தலைவர்களும்தான் என்பதை உணர்ந்த எதிர்க் கட்சியான பிஜேபி, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக வெறுமே குற்றச்சாட்டுக்களை மட்டுமே வைத்துக் கொண்டிராமல் கருப்புப் பணம் பற்றிய முழு உண்மையையும் தேடிக் கண்டுபிடிக்கும் பொருட்டும் அதை மீட்க அரசாங்கத்துக்கு ஒரு தெளிவான வழிமுறை அளிப்பது குறித்தும் அதன் மூலமாக ஆளுங்கட்சிக்கு கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர நெருக்கடி கொடுக்கும் விதத்திலும் ஒரு தன்னிச்சையான நிபுணர் குழுவை நியமித்து அவர்களை விட்டு கறுப்புப் பண விஷயத்தை ஆராய்ந்து ஒரு அறிக்கை தருமாறு கேட்டுக் கொண்டது. வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தை அளவிடவும், அதை எப்படி மீட்பது என்பது குறித்தான தெளிவான வரையறைகளை வகுக்கவும் பிரபலமான ஆடிட்டரும் கட்டுரையாளரும் சிந்தனையாளருமான திரு.குருமூர்த்தி, பிரபல வக்கீல் மகேஷ் ஜேத்மலானி, பொருளாதார நிபுணரும் பெங்களூர் ஐஐஎம்-மில் பேராசிரியருமான பேராசிரியர் வைத்தியநாதன் மற்றும் முன்னாள் உளவுத் துறை தலைவர் டோயல் ஆகியோர் தலைமையில் டாஸ்க் ஃபோர்ஸ் ஒன்றை அமைத்தது. அவர்களும் கருப்புப் பண விவகாரத்தின் பல்வேறு அம்சங்களையும் ஆராய்ந்தும் இது வரையில் ஸ்விஸ் வங்கிகளில் கள்ளப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியல் குறித்தும் தங்களது முதல் அறிக்கையையும் பின்னர் இரண்டாவது அறிக்கையையும் அளித்தார்கள். அந்த அறிக்கைகள் எந்த சமரசமும் செய்யப் படாத முழுமையான தன்னலமற்ற தூய்மையான நிபுணர்களின் தொழில் முறையான அறிக்கைகளாக அமைந்திருப்பதாகத் தெரிகிறது.




நவம்பர் 19, 1991ஆம் வருடம் சுவிஸர்லாந்தைச் சேர்ந்த ஸ்வீஸர் இல்லஸ்ட்ரியட்டே என்ற பத்திரிகை உலகத் தலைவர்கள் பலரும் தங்கள் கள்ளப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டது அதில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரும் இருந்தது. அப்பொழுது வெளி வந்திருந்த ரஷ்யாவின் கேஜிபி உளவு நிறுவனத்தின் வெளியிடப் பட்ட ஆவணங்களைச் சாட்சியாகக் கொண்டு கொலையுண்ட ராஜீவ் காந்தியின் மனைவியான சோனியா காந்தி தன் மைனர் மகனான ராகுல் காந்தியின் பெயரில் 2.2 பில்லியன் டாலர் கள்ளப் பணத்தை ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாகச் செய்தி வெளியிட்டது. சோனியா மட்டும் இன்றி இன்னும் பல உலகத் தலைவர்களின் பெயரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. குறைந்த பட்ச வட்டியைப் பெற்றிருந்தாலும் கூட அந்தப் பணம் இந்த இருபது ஆண்டுகளில் குறைந்தது இரு மடங்காவது அதிகரித்திருக்க வேண்டும். ஆக கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர்கள் அல்லது 25,000 கோடி ரூபாய்கள் சோனியா மற்றும் ராகுல் கணக்கில் இந்தியாவில் கணக்குக் காட்டப் படாத கருப்புப் பணமாக ஸ்விஸ் வங்கியில் இருப்பதாக அந்தக் குற்றசாட்டின் வாயிலாக அறிய முடிகிறது. அந்தக் குற்றசாட்டு அந்தப் பத்திரிகையில் வந்த நாள் முதல் இன்று வரை சோனியாவோ, ராகுலோ அதற்கு மறுப்புத் தெரிவித்ததேயில்லை. அந்தக் குற்றசாட்டை இந்தியப் பத்திரிகைகளில் பல முறை ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற பொறுப்பான பத்திரிகையாளர்களும், நிதி நிபுணர்களும், சுப்ரமணியன் சுவாமி போன்ற அரசியல்வாதிகளும் மீண்டும் மீண்டும் மீண்டும் எழுப்பிக் கொண்டேயிருந்தார்கள். பிரபலமான வக்கீல் ஜேத்மலானி அவர்களும் இந்தக் கேள்வியை சோனியாவிடம் பல முறை கேட்டுள்ளார். அந்தப் பத்திரிகையின் புலனாய்வுச் செய்திக்கும் சரி, குருமூர்த்தி போன்றோரின் குற்றசாட்டுகளுக்கும் சரி, எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் கேள்விகளுக்கும் சரி இது நாள் வரை சோனியாவோ அவரது மகனோ மறுப்பு தெரிவித்ததோ கண்டனம் தெரிவித்ததோ கிடையாது. இன்று வரை எவர் மீதும் சோனியாவோ அவர் கட்சியோ கேஸ் போட்டதும் கிடையாது.

பிஜேபி-யினால் அமைக்கப் பட்ட டாஸ்க் ஃபோர்சானது தனது முதல் அறிக்கையை அளிக்கும் பொழுது கூட கள்ளப் பணப் பட்டியலில் பெயர் இருப்பதாகச் சொல்லப் படும் சோனியா எந்தவித மறுப்பையும் தெரிவிக்கவில்லை. திடீரென்று பிப்ரவரி 15ஆம் நாள் 2011ஆம் வருடம் நீண்ட தூக்கத்தில் இருந்து முழித்துக் கொண்ட சோனியா பிஜேபி-யின் பெரும் தலைவர் அத்வானி அவர்களுக்குக் கீழ்க்கண்ட கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். அதற்கு உடனடியாக மன்மோகன், சுப்ரமணியன் சுவாமிக்கு பதில் அளிக்க 2 வருடம் எடுத்துக் கொண்டது போலக் காலம் தாழ்த்தாமல் மறுநாளே அத்வானி அவர்கள் பதில் கடிதத்தை அனுப்பி வைக்கின்றார். இந்த இரு கடிதங்களுமே இன்று விவாதமாகி பத்திரிகைகள் மற்றும் காங்கிரஸ் ஆதரவு அடிவருடித் தொலைக்காட்சிகளால் திரித்தும், மழுப்பியும் பெரும் அரசியல் ஆக்கப் பட்டுள்ளன. இரு கடிதங்களின் உண்மையான அர்த்தங்களையும் அதன் பின் உள்ள அரசியலையும் இதன் விளைவுகளையும் அடுத்துக் காணலாம்

சோனியா அத்வானிக்கு எழுதிய கடிதம்


அத்வானி சோனியாவுக்கு எழுதிய பதில் கடிதம்
TEXT OF ADVANI'S LETTER TO SONIA GANDHI

From Our Delhi CORRESPONDENT

NEW DELHI: Even as veteran Lal Krishna Advani's regret letter to Sonia Gandhi created a sort of crisis in the BJP, he got released the letter through the party headquarters to put it in right perspective.

Here is text of the letter dated February 16:

"Dear Smt Sonia ji,

On my return from Kolkata last night, I found your letter dated 15th February awaiting me.

I am happy that you have denied the reports relating to you and your family alluded to in the Task Force's Report on Black Money.

If these had been denied earlier, the Task Force would have taken your denial into account. Even so, I deeply regret the distress caused to you.

With best regards,

Yours sincerely,

L K Advani."


பிப்ரவரி ஒன்றாம் தேதி அத்வானி உள்பட பிரபலமான பிஜேபி தலைவர்களின் முன்னிலையில் நடவடிக்கைக் குழுவின் இரண்டாவது அறிக்கையை டெல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிஜேபி கட்சி அதிகாரபூர்வமாக வெளியிட்டது. அந்த நிகழ்ச்சியை-- அதிலும் அத்வானி முதல் குருமூர்த்தி வரை ஒரே மேடையில் தோன்றி சமர்ப்பித்த நாட்டின் பாதுகாப்பு, நிதி, இறையாண்மை, எதிர்காலம் அனைத்தையுமே பாதிக்கக் கூடிய ஒரு அதி முக்கிய நடவடிக்கை அறிக்கை வெளியீட்டை-- இந்தியாவின் பெரும்பான்மை பத்திரிகைகளும் அனைத்து டிவி சானல்களும் ஒட்டுமொத்தமாக இருட்டடிப்புச் செய்து விட்டன. அப்படி நடந்த ஒரு அதி முக்கிய நிகழ்ச்சி பற்றிய விரிவான விபரத்தையே வெளியிடாமல் நாட்டு மக்களிடம் இருந்து ஊடகங்கள் மறைத்து விட்டன. அந்த அறிக்கையில் மிக முக்கியமாக சோனியாவும் இந்த கருப்புப் பண பட்டியலில் இருக்கிறார் என்றும் அதற்கான ஆணித்தரமான ஆதாரங்களும் அந்த அறிக்கையில் இருந்ததினால் சோனியாவின் எச்சரிக்கையினால் பத்திரிகைகள் பாதுகாப்பாக அந்த நிகழ்ச்சி பற்றியோ அந்த அறிக்கை பற்றியோ செய்தியை வெளியிடாமல் மறைத்து விட்டன.

பத்திரிகா தர்மத்தின்படி இப்படி ஒரு முக்கியமான- அதிலும் 500 பில்லியன் டாலர்கள் வரை பதுக்கி வைக்கப் பட்டுள்ள கள்ளப் பணம் குறித்த அறிக்கையை முழுவதுமாக அலசி ஆராய்ந்திருக்க வேண்டும் அல்லவா? ஐயா அதில் தவறு இருந்தால், குறையிருந்தால், உள்நோக்கம் இருந்தால், அரசியல் இருந்தால் அதையாவது பேசியிருக்க வேண்டுமா இல்லையா? ஏன் இந்த ஒட்டு மொத்த இருட்டடிப்பு? யாரைப் பாதுகாக்க?

தன் பெயர் மீண்டும் மீண்டும் ஸ்விஸ் வங்கியின் கருப்புப் பண விவகாரத்தில் அடிபட்ட பொழுதெல்லாம் அர்த்தமுள்ள அமைதி காத்த சோனியா, கருப்புப் பணம் பற்றிய முக்கியமான பிஜேபி டாஸ்க் ஃபோர்சின் அறிக்கை வெளியிடப் பட்டவுடனேயே துள்ளிக் குதித்து பெப்ரவரி 15ஆம் தேதி அத்வானி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். நன்றாக கவனிக்கவும். கடிதத்தை பிஜேபியின் தலைவர் நித்தின் கட்காரிக்கோ, டாஸ்க் ஃபோர்ஸ் குழுவுக்கோ அனுப்பவில்லை. மேலும் யாருக்கும் எந்த வித வக்கீல் நோட்டீஸோ கூட அனுப்பவில்லை. ஒரு கடிதத்தை அத்வானிக்கு மட்டுமே அனுப்பி வைக்கிறார். அந்தக் கடிதம் இப்பொழுது பொதுவில் படிக்க கிடைக்கிறது. மேலே கொடுக்கப் பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் சோனியா எழுதுகிறார்:


The so called report contains reckless and baseless allegations against me and my family including my late husband and my mother. These lies energetically disseminated from time to time by sections of the media and interested parties have so far been treated by me with the contempt they deserve

ஆனால் இந்தக் கடிதத்தை முழுக்க வெளியிடாமல் நமது சோனியாவை சப்போர்ட் செய்யும் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும், புரோக்கர்கள் பரக்காதத்துகளும், சர்தேசாய்களும் அடித்தொண்டையில் கத்தி சோனியா புனிதத் திருவுருவம், கறைபடியாத கரம், சொக்கத்தங்கம் என்றெல்லாம் சொல்லாமல் சொல்லி சோனியா தனக்கு ஸ்விஸ் வங்கியில் அக்கவுண்ட்டே கிடையாது, தனக்குக் கள்ளப் பணமே கிடையாது என்று சொல்லி விட்டார் என்று சொல்லுகிறார்கள். அப்படி எதையும் சோனியா சொல்லவில்லை என்பது ஆங்கிலம் படிக்கத் தெரிந்த எவருக்கும் மேற்படிக் கடிதத்தைப் படித்தால் புரியும். பொத்தாம் பொதுவாக அறிக்கையில் என்னைப் பற்றி அவதூறுகளும், பொய்யான குற்றச்சாட்டுக்களும் பொறுப்பில்லாமல் அடிப்படையில்லாமல் சொல்லப் பட்டிருக்கின்றன, இதை உங்களைப் போன்ற மூத்த பொறுப்பான தலைவர்கள் அனுமதித்து வருவது எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது என்று மொட்டையாக ஒரு கடிதத்தை அத்வானி அவர்களுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கு மீடியாக்கள் கண் காது மூக்கு எல்லாம் வைத்து தனக்கு கள்ளப் பண அக்கவுண்ட்டே இல்லை என்று சொன்னதாக பொய் சொல்லுகின்றன. உண்மையில் கருப்புப் பணம் குறித்த அறிக்கையில் சோனியா குறித்து பல குற்றசாட்டுக்கள் உள்ளன. அவற்றுள் எவை எவை உண்மையில்லை, எவை எவை பொய், எவை எவை அடிப்படையில்லாவை என்று ஒவ்வொன்றாக சோனியா சொல்லி மறுப்புத் தெரிவித்திருந்தால் அது உண்மையான மறுப்பாக இருந்திருக்கும். அல்லது என் மீது அவதூறு தெரிவித்த டாஸ்க் ஃபோர்ஸின் மீதும் அதை வெளியிட்டக் கட்சியின் மீதும் வழக்குப் போடுவேன் என்று சொல்லிப் போட்டிருந்தால் அது முறையான ஒரு செயல். இப்படி மொட்டையாக ஒரு கடிதத்தை அவர் அனுப்புகிறார் அதில் சொல்லப்பட்டிராதவையெல்லாம் மீடியாக்கள் பட்டியலிட்டு சோனியாவை புனிதர் ஆக்க முயல்கின்றன. சபாபதி என்ற படத்தில் டி ஆர் ராமச்சந்திரனிடம் காளி என் ரத்தினம் ஒரு ஆங்கிலப் பத்திரிகையைக் கொடுத்து தன் ஊரில் மழை உள்ளதா என்று படித்துச் சொல்லச் சொல்வார். ஆங்கிலம் படிக்கத் தெரியாத ராமச்சந்திரன் பெரிதாக நீட்டி முழக்கி பேப்பரில் இல்லாததையெல்லாம் தன் கற்பனையில் படித்துச் சொல்லுவார். பதிலுக்கு காளி என் ரத்தினம், "ஏம்ப்பா பேப்பரில் ஒரு வரிதான் இருக்கு நீ பாட்டுக்கு பெரிய கட்டுரையே படிக்கிறாயே" என்று கிண்டல் அடிப்பார். அது போல சோனியா சொன்ன ஒரு மொக்கை வரிக்கு நமது பத்திரிகைகள் இல்லாத பில்ட் அப் எல்லாம் கொடுத்து ஒரு பெரிய கொள்கை விளக்கமே அளித்து அவரை மனிதப் புனிதராக்க முயல்கின்றன. மாறாக கருப்புப் பணம் போன்ற, ஒரு நாட்டின் அதிமுக்கிய, தலையாயப் பிரச்சினை பற்றிய கூட்டத்தையும் அறிக்கையையும் இருட்டடிப்புச் செய்கின்றன. இதுதான் நமது பத்திரிகைக் கூலிகளின் தர்மம், நேர்மை, யோக்யதாம்சம் எல்லாமே. இந்தப் பிழைப்பு பிழைப்பதற்கு நம் மீடியா புரோக்கர்கள் வேற புரோக்கர் பிழைப்புப் பிழைக்கப் போகலாம். வேறு எந்தக் கேவலமான பிழைப்பும் இதை விடக் கேவலமாக இருக்கவே முடியாது.

அது சரி, ஏன் சுப்ரமணியம் சுவாமி, சோனியா கருப்புப் பணம் பல பில்லியன் டாலர்கள் பதுக்கி வைத்திருக்கிறார் என்று சொன்ன பொழுது சோனியா அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? ரஷ்யாவின் கேஜிபி தாங்கள் சோனியாவுக்கும் ராஜீவுக்கும் பல பில்லியன் டாலர்கள் லஞ்சமாகக் கொடுத்தோம் என்று சொன்ன பொழுது அவர்கள் மீது பாயவில்லை? ஏன் குருமூர்த்தி சொன்ன பொழுதும், நூரனி எழுதிய பொழுதும், ராம் ஜேத்மலானி சொன்ன பொழுதும் இன்னும் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆதாரத்துடன் எழுதிய பொழுதும் மௌன விரதம் அனுஷ்டித்தார்? ஏன் அத்வானியிடம் மட்டுமே தன் கோபத்தைக் காண்பிக்கின்றார். ஒன்று அத்வானியிடம் கடுமை காட்டினால் அவர் உடனடியாகப் பயந்து விடுவார் என்று நினைத்தாரா அல்லது அவர் ஒரு ஜெண்ட்டில்மேன்; நிச்சயம் மரியாதை நிமித்தமாக ஏதேனும் சொல்லுவார் அதை வைத்துக் கொண்டு, அதைத் திரித்து, வார்த்தை விளையாட்டு விளையாடி, அரசியல் ஆதாயம் காணலாம் என்று நினைத்தாரா?

இந்தியாவில் எந்தத் திருடன்தான் தான் திருடன் என்பதை ஒத்துக் கொண்டுள்ளான்? ராஜீவ் காந்தி கூடத்தான் போஃபோர்ஸில் கமிஷனே கொடுக்கப் படவில்லை, ஊழலே நடக்கவில்லை என்று சாதித்தார். ஆ.ராஜா கூடத்தான் ஊழல் எதுவும் செய்யவில்லை, நிரபராதி என்கிறார். கருணாநிதி தான் சம்பாதித்த பல பில்லியன் டாலர் சொத்துக்களும் வசனம் எழுதி சம்பாதித்தவை என்கிறார். மன்மோகன் கூட தான் ஒரு மிஸ்டர் க்ளீன் என்று தனக்குத் தானே சர்ட்டிஃபிகேட் வழங்கிக் கொள்கிறார். ஐஎஸ்ஆர்ஓ-காரர்கள் எந்தவித முறை கேடும் நடக்கவில்லை என்கின்றனர். எந்த ஊழலைச் செய்தவர்தான் தான் ஊழல்வாதி, தான் திருடன், தான் ஒரு கொலைகாரன் என்று என்றைக்காவது ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்? எப்படி ராசாவும், கனிமொழியும், கருணாநிதியும், கல்மாடியும், மன்மோகனும் தாங்கள் கறை படியாத யோக்யர்கள் என்று சொல்லுகிறார்களோ அது போலவே சோனியாவும் தன் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றங்கள் அடிப்படையில்லாதவை என்கிறார். நன்றாகக் கவனிக்கவும் தான் குற்றம் எதையும் செய்யவில்லை, தனக்குக் கள்ளக் கணக்கு இருந்ததே இல்லை, தான் எந்த ஊழலிலும் சம்பந்தப் படவேயில்லை என்று சோனியா தன் கடிதத்திலோ வேறு எங்குமோ சொல்லவில்லை. அவர் சொல்லுவது எல்லாம் பொத்தாம் பொதுவாக பிஜேபி அமைத்த டாஸ்க் ஃபோர்சின் அறிக்கையில் காணப் படும் குற்றசாட்டுக்கள் அடிப்படை இல்லாதவை என்று மட்டுமே சொல்லுகிறார்.

ஆனால் பிஜேபி அமைத்த டாஸ்க் ஃபோர்ஸின் நிபுணர்கள் அனைவரும் அப்பழுக்கற்ற வெளிப்படையான பொதுவாழ்க்கையைக் கடைப் பிடிப்பவர்கள். நேர்மையானவர்கள். தேசத்தின் மீது பக்தி கொண்டவர்கள். தங்கள் செய்யும் தொழிலில் அகில இந்திய அளவில் சிறப்பானவர்கள், நிபுணர்கள். அவர்கள் சொல்லுகிறார்கள்-- "நாங்கள் இந்த அறிக்கையில் சொல்லியுள்ள ஒவ்வொரு எழுத்தையும் நாங்கள் உணர்ந்தே, அறிந்தே, பூரணமாக சோதித்த பின்னரே, சொல்லியுள்ளோம்; நாங்கள் சொல்லியுள்ள ஒவ்வொன்றிற்கும் ஆதாரங்கள் உள்ளன. நாங்கள் எழுப்பிய எந்தக் குற்றசாட்டின் பின்னாலும் நாங்கள் உறுதியாக நிற்கின்றோம். யார் எதற்காக வருத்தம் தெரிவித்தாலும் எங்களுக்குக் கவலையில்லை நாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மையைத் தவிர் வேறில்லை" என்கிறார்கள். சோனியா நிஜமாகவே தான் குற்றவாளி இல்லை என்று நம்பினால் உடனடியாக இந்த டாஸ்க் ஃபோர்ஸ் நிபுணர்கள் மீது வழக்குத் தொடரட்டுமே. அரசாங்கம் அவர் கையில்தானே உள்ளது வரிக்கு வரி இல்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டுமே. அதை விட்டு விட்டு ஐயோ அடிக்கிறீர்களே என்ற கருணாநிதி டயலாக்கை அத்வானி அவர்களுக்கு மட்டும் தேர்ந்தெடுத்து எழுத வேண்டிய அவசியம் என்ன?

சரி இப்பொழுது அத்வானி அவர்களின் கடிதத்திற்கு வருவோம். அதை அனைத்து பத்திரிகைகளும் டெலிவிஷன்களும் மீண்டும் மீண்டும் அத்வானி சோனியாவிடம் மன்னிப்புக் கேட்டார் என்றே மீண்டும் மீண்டும் பொய்யை, அபாண்டமான புனைச்சுருட்டை, உரத்த குரலில் சத்தம் போட்டுச் சொல்லி, ஒரு பொய்யை- அத்வானி சொல்லாத ஒன்றை அவர் வாயில் திணித்து, மன்னிப்புக் கேட்டு விட்டதாகப் பச்சைப் பொய்யைப் புளுகி வருகின்றன. உண்மை என்ன? அத்வானி எழுதிய கடிதம் இங்கு உள்ளது. ஆங்கிலம் படிக்கத் தெரிந்த எவரும் படித்து அதன் அர்த்தத்தைச் சொல்லலாம். என்ன சொல்லியிருக்கிறார் அத்வானி? நாம் ஒவ்வொரு வரியையும் அலசலாம்

On my return from Kolkata last night, I found your letter dated 15th February awaiting me.

இதன் அர்த்தம் என்ன? நம் மீடியாக்கள் மட்டும்தான் சோனியா சொன்ன ஒரு வரியை நூறு வரியாகத் திரிப்பார்களா நானும் போடுகிறேன் அத்வானியின் கடிதத்தின் ஒவ்வொரு வரிக்கும் ஒரு கோனார் நோட்ஸ். ஒரு சுப்ரமணியன் சுவாமி எழுதிய கடுமையான புகாருக்கு உனது எடுபிடியும் வேலைக்காரனுமான மன்மோகன் சிங் அக்னாலெட்ஜ்மெண்ட் அனுப்பவே ரெண்டு வருடத்திற்கு மேலாக எடுத்துக் கொண்டார். உன்னிடம் சமர்ப்பிக்கப் படும் எந்தப் புகாருக்கும் பதில் வருவதே கிடையாது. ஆனால் நான் ஜெண்ட்டில்மென். நான் சுறுசுறுப்பானவன், மனிதர்களை மதிப்பவன் ஆணவம் இல்லாதவன் ஆகவே நான் உன் கடிதம் கண்ட மறு நாளே பதில் அளித்திருக்கிறேன். எந்தப் புகாருக்கும் பதில் அளிக்காத எதையுமே மறைத்து ஒளித்து ஆணவத்துடன் பதில் அளிக்காத திமிர் உடைய நீ ஜெண்ட்டில் வுமனா அல்லது நானா என்று கேட்காமல் கேட்டிருக்கிறார். மானம் ரோஷம் நேர்மை இருக்கும் எந்தப் பிறவியும் இப்படி ஒரு கேள்விக்கு நாக்கைப் புடுங்கிக் கொண்டு தொங்கியிருந்திருக்கும்


I am happy that you have denied the reports relating to you and your family alluded to in the Task Force's Report on Black Money.

அடுத்ததாக என்ன சொல்லுகிறார் அத்வானி? இப்பொழுதாவது வாய் திறந்து உன் மீதான ஊழல் குற்றசாட்டுக் குறித்து எனக்காவது ஒரு வரி பதில் சொல்ல வேண்டும் என்று தோன்றியதே. கொஞ்சமாவது சொரணை உள்ளதே. அது குறித்து மகிழ்ச்சியே.

If these had been denied earlier, the Task Force would have taken your denial into account. Even so, I deeply regret the distress caused to you.

இதை முன்பே சொல்லியிருந்தால் எங்கள் டாஸ்க் ஃபோர்ஸ் உன்னுடைய மறுப்பையும் தங்கள் அறிக்கையில் சேர்த்து அந்த மறுப்புக்கு உரிய பதிலையும் ஆதாரத்தையும் இன்னும் பலமாக அளித்திருப்பார்கள். உன் கண்டனமும் அதற்கான அவர்கள் பதிலும் வெளியில் வந்திருக்கும் இப்பொழுது அவர்கள் உன் கண்டனம் இல்லாமலேயே தங்கள் ஆதாரத்தை மட்டுமே வைத்து வெளியிட்டு விட்டார்கள். இருந்தாலும் இதற்கான தக்க பதிலை தக்க ஆதாரத்தை ஒன்றுக்கு மேற்பட்ட ஆணித்தரமான தரவுகளோடு ஆதரத்தோடு அளித்திருக்கிறார்கள். அது பொது மக்களிடம் வரும் பொழுது நீ இப்பொழுது தெரிவிக்கும் நீலிக் கண்ணீர் சந்தி சிரிக்கும். அந்த நிலையில் உன்னை எண்ணிப் பார்க்கவே எனக்குப் பரிதாபமாக உள்ளது என்றிருக்கிறார்.

இருந்தாலும் நான் உன் நிலை குறித்தும் உனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் குறித்தும் வருந்துகிறேன் அதற்காக நான் ஏதும் செய்ய முடியாது. நான் எங்கள் நிபுணர்கள் கொடுத்த அறிக்கையை முழுக்க முழுக்க நம்புகிறேன். என்னிடம் வந்து அழுது பிரயோஜனமில்லை. இந்த மன உளைச்சல் எல்லாம் நீயாகவே உனது கொள்ளைகளால் வருத்திக் கொண்டது. நான் ஏதும் செய்ய முடியாது. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்பேர்ப் பட்ட பாவத்தை நீ செய்ததற்காக நான் வருத்தப் படுகிறேன்.

ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு இண்ட்டர்வியூக்குப் போனால் அவர்கள் நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லையென்றால் ஒரு மரியாதை கருதி நம்மைப் பொருட்படுத்தி நேர்காணலுக்கு வந்தானே என்ற மரியாதையில் ஒரு சம்பிரதாயமான கடிதத்தை அனுப்புவார்கள். அந்தக் கடிதம் பொதுவாக எப்படி இருக்கும்?

"Thanks for your interest shown in our firm and your application for XXXX post. We regret to inform you that your current skill set and experience do not match with the requirements of the position that we are considering........................................"

உடனே அந்த கம்பெனியில் வேலைக்கு மனுப் போட்டவன், நேர்காணலுக்குச் சென்றவன் பார்த்தாயா இன்ஃபோசிஸ் நிறுவனமே, டாட்டா நிறுவனமே, ரிலையன்ஸே என்னைக் கண்டு பயந்து எனக்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார்கள். நான் எப்பேர்ப்பட்ட திறமைசாலி என்று சொல்லுவானா? அப்படி எவனாவது சொல்வானேயாயின் எவனாவது ரிக்ரட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் உளறுவேனாயின் நாம் அவனைப் பற்றி என்ன சொல்லுவோம்? கிறுக்கன்? நிர்மூடன்? ஆங்கிலம் தெரியாதவன்? அற்பன்? போர்ஜரி, 420 கேஸ்? திருட்டுப் பயல்? முட்டாள்? ஏமாற்றுக்காரன்? தற்பெருமைவாதி? அயோக்கியன்? அல்லது இவை அனைத்துமானவன் என்று சொல்வோமா மாட்டோமா? அப்படியானால் தி ஹிந்து முதல் தினகரன் வரை அனைத்துப் பத்திரிகைகளும் அனைத்துத் தொலைக்காட்சிகளும் உச்ச ஸ்தாயியில் “அத்வானி சோனியாவிடம் மன்னிப்புக் கேட்டு விட்டார்” என்று எழுதியதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? இந்தப் பத்திரிகைகளையும் தொலைக்காட்சிகளையும் எப்படி அழைப்பது? ஆங்கிலம் தெரியாத தற்குறிகள் என்றா? நிர்மூடர்கள் என்றா? பொய்யர்கள் என்றா? முட்டாள்கள் என்றா? புரட்டர்கள் என்றா? எத்தர்கள் என்றா? சோனியாவின் எடுபிடிகள் என்றா? அரசியல் தரகர்கள் என்றா? புளுகு மூட்டைகள் என்றா? திரிப்புத் திருடர்கள் என்றா? எப்படி அழைப்பது இந்தக் கேடு கெட்ட பத்திரிகைப் பாதகர்களை? இவர்களுக்கு அடிப்படை தர்மம் நேர்மை அறம் என்றெல்லாம் எதுவும் கிடையாதா? காசு கொடுத்தால் தன் அம்மா, மனைவி, மகள் அனைவரையும் விபச்சாரத்துக்கு விற்று விடுவார்களா? என்னவிதமான ஈனப் பிழைப்பு இது?

தவறு அத்வானி அவர்கள் மீதுதான். இது காந்தியும், பட்டேலும், ராஜாஜியும் வாழ்ந்த அரசியல் காலமல்ல. சோனியாவும், மன்மோகனும், அகமது பட்டேல்களும், கருணாநிதிகளும், துரைமுருகன்களும் வாழும் நாற்றம் பிடித்த அழுகிப் போன அரசியல் கால கட்டம். இங்கு மரியாதை, பண்பாடு, நாகரீகம் எதற்கும் அர்த்தம் இல்லை. மரியாதைக்கு இங்கு மதிப்பில்லை. அவர் ஒரு மரியாதை நிமித்தம் கூட இப்படி ஒரு கடிதத்தை முதலில் அனுப்பியிருக்கவே கூடாது. மாறாக

Dear Smt Sonia ji,

On my return from Kolkata last night, I found your letter dated 15th
February awaiting me.

I am happy that you have denied the reports relating to you and your
family alluded to in the Task Force's Report on Black Money.

I will forward your letter to our task force. The task force members are persons with integrity, honesty and patriotism. They will send you a suitable reply to your allegations. I stand by them and i am sorry to tell you that your silence and abuse of power from Bofors scandal, Q' acquittal to BJ Thomas appointment have brought you into this sordid state. I am really sorry about your pathetic condition. You have to pay a price for all your crimes. The people of India have more powerful stature than mine. Let them decide.

With best regards,

Yours sincerely,

L K Advani."

இப்படி ஒரு பதிலை அத்வானி போட்டிருக்க வேண்டும். அவர் பழங்காலத்து மனிதர் என்பதினால் மென்மையாக நாகரீகமாக கண்ணியமாக ஒரு பதிலை அளித்திருந்தார். ஆனால் அது போன்ற நாணயத்திற்கும் கண்ணியத்திற்கும் மென்மைக்கும் அருகதையில்லாத ஒரு பிறவி என்பதை சோனியா மீண்டும் ஒரு முறை தனது கீழ்த்தரமான இந்த நடவடிக்கைகளினால் நிரூபித்துள்ளார். இத்தாலி மாஃபியாக்களுக்கு எங்கே மாண்பும் பண்பாடும் புரியப் போகின்றன? அதனால்தான் ரிக்ரட் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை மன்னிப்பு என்று மாற்றி கேவலமான அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் சோனியாவும் அவரது அயோக்ய அடிவருடிகளும். தவறு செய்து விட்டீர்கள் அத்வானிஜி மாபெரும் தவறு செய்து விட்டீர்கள். மரியாதை தெரியாவனிடம் மரியாதை அளித்துப் பயனில்லை. நாகரீகம் தெரியாத அயோக்கியர்களிடம் நாகரீகத்தைக் காட்டினால் புரியாது. மனிதாபிமானம் தெரியாதவர்களிடம் மனிதாபிமானம் காட்டினால் உங்கள் மானம் தான் பறி போகும். மானம் கெட்ட இந்த தேசத்தில் அதுதான் நடந்துள்ளது. இங்கு யாருக்கும் வெட்கமில்லை. அடுத்த முறை பதில் ஏதும் எழுதும் முன்னால் ஒரு முறை சமகால அரசியல் தெரிந்தவர்களிடம் ஒரு வார்த்தைக் கேட்டு விட்டு பதில் சொல்லுங்கள். இது சகுனிகளின் அரசியல், இது கூனிகளின் காலம். இங்கு உங்களுக்குச் ஊசி முனை இடம் கூட இல்லை. அதைப் புரிந்து கொண்டு அரசியல் செய்யுங்கள். உங்களைப் போன்றவர்களை தலைவர்களாகப் பெறும் யோக்யதையும், அருகதையும் இந்த தேசத்திற்குக் கிடையாது. தேர் இஸ் நோ கண்ட்ரி ஃபார் ஓல்டு மேன்.

விஸ்வாமித்ரா
டைம் இருந்தால் கீழே உள்ள அறிக்கையை படித்துப் பார்க்கலாம் :-)

Executive Summary
Of
Indian Black Money Abroad
In Secret Banks and Tax Havens
Second Report
Of
The Task Force on the steps to be taken by India


Members
Shri Gurumurthy, Chartered Accountant, Chennai
Shri Ajit Doval, former Director Intelligence Bureau, Delhi
Prof R.Vaidyanathan, Professor of Finance Indian Institute of Management, Bangalore
Shri Mahesh Jethmalani, Senior Advocate, Mumbai

Submitted to


BHARATIYA JANATA PARTY

I. Developments since the First Interim Report

The first Interim Report of the Task Force appointed by the Bharatiya Janata Party was released to the public on 17-04-2009. Afterward different world governments, particularly those in the West, have increasingly begun targeting tax havens and intensely began pursuing black money. The US, and France particularly began a huge campaign against the evil of black money. The estimates black money lodged in tax havens by global financial institutions like the International Monetary Fund reached as high as $18 trillion. The instability in the global financial order itself was traced to the evil money. So the issue has now acquired a totally different dimension. [Para I]

II. Now, it is a national commitment by all; and yet…

Thus almost the entire political spectrum without exception – from the ruling UPA to the opposition NDA and all other opposition parties – has committed to the people of India to bring back the black money illegally stashed away abroad by Indians. So it is no more an exclusive issue of one party or another. The media has begun highlighting and pursuing the issue of black money stashed by Indians abroad as never before. With the stench of 2G spectrum scam and Commonwealth Games scam dominating of the national scene, the wealth stashed abroad is being increasingly linked to bribery and kickbacks. Despite what appears to be a national commitment, there is as yet no action on the ground to tackle this evil of black money abroad. [Para II]

III. Recent and ongoing global developments

1. IMF estimates global black money excluding Switzerland, China, Taiwan and Oil Exporting economies at $18 trillion; that still an underestimate, says IMF!

2. The US Government as well its Congress are most concerned about these tax havens due to the severe economic crisis faced by the country and also due to pressure from sections of economists etc to “clean up” the global financial system. There are also concerns regarding the financing of terror groups by some of the tainted money from tax havens. While powerful countries like the USA have used their geo-political power to arm-twist the Swiss banks to part with the information and recover their lost wealth and even coerce them and extract penalties for abetting in the evasion of tax by their citizens, the less powerful ones have sought and aroused empathetic public opinion to force the Swiss banks to part with the information about the wealth illegitimately stashed away by their corrupt rulers and recover the same, as explained now. [Para III]

IV. Chasing black money – the success stories of other countries:

In the last few years many countries in Europe as well as USA have taken several steps that included geo-political coercion, financial penalties and bribes, to secure information and get back their illegal funds from abroad. The USA forced and got names of more than US 4000 clients of UBS bank from Switzerland by sheer geo-political force, after persuasion first, threat next and related legal actions later. Similar is the story of France and Germany. The latter even officially bribed the Lichtenstein Bank officials to get the secret names of Germans and others who had stashed away their black wealth in LGT bank of Lichtenstein. It has also been successfully demonstrated by countries, which are comparatively less powerful and less influential in geo-politics that monies illegally stashed abroad by their corrupt leaders and businessmen could be recovered. They had been able to accomplish it by exposing and prosecuting the corrupt leaders of their countries who had stashed and secreted away their national wealth in Swiss banks and making their judiciary to seek the cooperation of Swiss government and banks. They had also appealed to the conscience of the world generating the empathy of the world. Recently, private, but publicly motivated, citizens of Tunisia were able to freeze the ill-gotten wealth of its rulers and their fellow buccaneers in Swiss banks. [Para IV]

V. The Indian scene – a contrast

In the background of how the world nations are pursuing the black wealth belonging to their nationals stashed away abroad, the Indian scene presents a depressing contrast. The leaders of the Congress which leads the UPA first denied the existence of such huge amount of illicit Indian wealth abroad; then they reluctantly accepted that fact which was becoming undeniable; then they promised that they would take efforts to recover the Indian wealth illegally stashed abroad; the President of India’s address to Parliament which in substance means the commitment of the UPA government to the people, in specific terms mentioned this commitment; but when it came to actually doing something to implement this commitment, there has been no action on the ground. In fact what is seen is an effort to prevaricate, procrastinate, and even bury the issue. The well-known and well-publicized instances of the existence of illegal Indian monies abroad – like the Hasan Ali case, Quattrocchi issue, the Lichtenstein Bank disclosures and the alleged secret Swiss banks accounts in the name of the family of the President of the Congress and the Chairperson of the UPA and National Advisory Council of the UPA government as detailed later in the Report -- have not only not been pursued, the government of the day is keen to bury them and is shamefully burying them to the view of the entire nation. More about these instances latter in this Report. [Para V]

VI. Indian black wealth abroad $500 billions, says Global Financial Integrity

The Global financial Integrity – a Non-profit research organization – working in the area of Tax Havens has estimated for India that the present value of illegal financial flows held abroad is $500 Billions. This means that almost three-quarters of the illicit assets comprising India's underground economy—which has been estimated to account for 50 percent of India's GDP (approximately $640 billion at the end of 2008)—ends up outside of the country. This seems to have settled the issue about the volume of the Indian black wealth abroad. [Para VI]

VII. “Bribes, corruption, kickbacks, criminal activities and tax evasion”

And what is the kind of money, which the GFI says has been hoarded abroad by Indians? This is what the GFI says about the character of the loot. “From 1948 through 2008, India lost a total of US $213 billion in illicit financial flows (or illegal capital flight)” through “tax evasion, corruption, bribery and kickbacks, and criminal activities”. Tax evasion is only one aspect of the illicit monies Indian nationals and corporates have hoarded abroad. There appears to be more intimate link between monies stashed away abroad and bribes, corruption, kickbacks and criminal activities. Still the government of India seems to be keen to treat the issue as a tax evasion issue only. [Para VII]

VIII. Not just tax evasion, but “theft” and “plunder” – says the Supreme Court

But on the 19th of January-2011 [Wednesday] the Supreme Court of India called the shameful phenomenon of Indian funds kept illegally abroad as “theft” and “plunder” and not treat it as merely tax avoidance. It also demanded an “action taken” report on all “faceless” Indians who had moved their ill-gotten money overseas. [Para VIII]

IX. Bribes as important source of Indian black monies stashed abroad

There are various categories of culprits. Some are traditional business leaders who have been accumulating money since the 50s; some are new rich entrepreneurs and politicians and bureaucrats who influence decision making for large global purchases. The third category is the money launderers for nefarious purposes including financing of terrorism. [Para IX]

X. The Indian government suppresses the basic facts about Indian black wealth abroad

First, the Indian government is keen to suppress the information relating to the issue of Illegal Indian monies abroad. The Enforcement Directorate is not inclined to reveal even the “total volume” of illegal Indian monies abroad to an applicant under the Right to Information Act. During the hearing at Chief Information Commissioner, Eneforcement Directorate stated that they could either confirm or deny media reports about the likely volume of black money stashed away in foreign banks illegally by Indian nationals. Regarding questions related to illegal investment by Indians in foreign countries and money stashed away in banks abroad, the RBI surprisingly said it had no information on the issue. [Para X]

XI. Presidential address – commitment to act against illegal monies – seems an empty promise

The commitment of the UPA II government in the address of the President of India to Parliament in June 2009 to vigorously pursue all necessary steps in coordination with the countries concerned has been observed only in breach. [Para XI]

XII. Shockingly India has not ratified the United Nations Convention against Corruption even now.

India and Switzerland are signatories to the United Nations Convention Against Corruption. Yet India has not ratified the UN Convention till today. This would have enabled India to seek the co-operation of world nations including Switzerland to tackle corruption at all levels. According to global anti-graft watchdog Transparency International, India should endorse the United Nations Convention Against Corruption for the recovery of India’s wealth, which has be hoarded in foreign banks.

The UN Convention helps the country, which seeks to recover the assets stashed away. This is the greatest achievement of the Convention. This single act shows that the Government of India is not keen on securing global co-operation to tackle corruption in India, which would mean tracking and bringing back corrupt funds stashed away abroad. [Para XII]

XIII. The Double Taxation Avoidance Treaty with Switzerland – an impotent instrument

The DTA Treaty is not an effective mechanism to tackle the problem of money laundering. The Swiss government for instance cannot ask the Swiss banks to disclose any name under the Swiss law. So the so-called Double Taxation Treaty with Switzerland is no more than a PR exercise. That will yield practically nothing. And India is only thinking of even the watered down treaty to “prospective” transactions, which means that the past frauds, crimes, kickbacks, bribes and corruption are to be glossed over! [XIII]

XIV. Terrorism and secret money

To recall, as early as 2007 the concern expressed by our own National Security Advisor -Mr. M.K Narayanan- regarding possibility of terror funds coming through financial markets [See his speech “Link between world of finance and terrorism”: at Munich Security Conference on 11.02.2007). [XIV]

XV. Why does India not act like other countries?

Why does India then not act like other countries? Why does it not partner the US, Germany, France and other countries, which are chasing their black wealth outside their territories? Why does it not follow the examples of such small countries like Philippines, Peru, Nigeria, and Tunisia, which have chased the corrupt wealth of their rulers? Why does it not use its increasing geo-political power to bring back the black monies stashed abroad by Indian nations? Why does the UPA government show obvious reluctance to handle this matter aggressively, contrary to its own commitment through the Presidential Speech to Parliament in June 2009? The answer is simple. The UPA government does not even pursue known cases of money laundering, like the Lichtenstein Bank case, Hasan Ali affair, Quattrocchi matter and the alleged Swiss bank accounts in the name of a former Prime Minister of India. [XV]

XVI. Lichtenstein Bank Affair

The Ministry of Finance [MoF] says it has names but will not reveal them. The reply affidavit by MoF suggests that the petitioners should seek the RTI route – may be to be rejected under the RTI. The government argues for the RTI route and then gets the application thrown out. These are not domestic tax evaders etc. for showing confidentiality. These are international crooks that have deprived our land of huge financial resources through capital flight. It is an unpatriotic act which can be equated to financial terrorism.

XVII. The $8 billion Hasan Ali Ali hawala – the smocking gun

The facts that have emerged in the Hasan Ali Ali case clearly lead to the disconcerting inferences that ruling party leaders were involved in Havala and stashing away national wealth illegally abroad; that there was undeniable nexus between politicians and criminal world; that the probe was derailed, stymied and rendered meaningless by delay and prevarication thanks to the involvement of the ruling party leaders; that the present government has no interest in recovering back the national wealth stashed abroad; that on the contrary, it is clearly interested in not exposing those who had stashed their wealth abroad.

a) Ali began to be involved in Havala business in billions in 1990s;

b) Ali was involved with Adnan Khassogi, the international arms dealer, who was found in the probe into the assassination of Rajiv Gandhi in 1991 to have supplied to arms to LTTE, in business and finance from 1982;

c) He was involved with politicians, particularly the ruling congress party leaders;

d) He had respectable local associates to front for him;

e) He, who had nothing twenty years back, had billions in his and his associates’ account by end 2006;

f) The probe into him was delayed and rendered directionless and almost purposeless, which indicated that the government was keen, even desperate, to bury the Ali case as detailed herein later;

g) The Solicitor General of India has in an extraordinary step written to the Government of India that the Ali case must be investigated from national security angle also, which he could not have done without some critical material that must have been brought to his attention;

h) Yet, the attitude of the government to Ali probe is a clear testimony to the fact that the government, far from pursuing and bringing out the national wealth stashed away abroad, is aiding and collaborating with the buccaneers who have criminally misappropriated the national wealth.

The shocking details of the Ali probe tumbled into the public domain through the media obviously because as the officials, who were investigating the case found that the political establishment was not keen to pursue the case, began to leak out the details. Whatever information the public has today is not through any detail given out by the government to Parliament or to the public. The media reports, sourced in the details leaked out to the media by the Enforcement Directorate and the Income Tax department are the only information available to the people. Yet the details which have appeared in the last four years, when seen collectively, shows a shocking fraud on the people of India by the ruling establishment which has clearly subverted the Ali money laundering probe involving over $8 billions.

a. Hasan Ali’s bank balances grew from $1.5 million in 1982 to $8 billion in 2006

b. A more disturbing aspect is Ali’s deep involvement with transactions in billions with Adnan Khassogi, the infamous international arms dealer whose name figured in the assassination case of Rajiv Gandhi in 1991 as an arms supplier to the LTTE, which masterminded the killing of Rajiv Gandhi.

c. Ali received $300 millions from Khassogi as “Funds from Weapons Sale”, which was frozen by the Swiss Government, but Ali managed the Swiss government later.

d. Ali associate had confessed to involvement of Congress leaders

e. ED regarded Ali’s illegimate funds as linked to terror, organized crime, gun-running and bribes; why anti-terror law was not invoked?The ED show cause notice has stated: “It is suspected that the accounts with such huge deposits of money originating from various international destinations are proceeds of heinous crimes such as terrorism, arms trade, gun-running, corruption and organized forgery, fraud and others”. These are grounds fit for action under the anti terror law of India in force then, the Unlawful Activities Prevention (Amendment) Act 2004 [which had replaced the Prevention Of Terrorism Act]. Under that law, the Ali funds could have been frozen as “proceeds of terrorism” and confiscated under section 24 of the law and pending the due legal process, by registering an FIR under the law, the Swiss government could have been requested to freeze the Ali accounts.

f. Investigate Ali from National Security angle, tells Additional Solicitor General to Finance Minister;

g. The way Ali case was handled showed that ruling party bigwigs were involved with him;

h. An inevitable question has arisen as to whether Ali fronting for a leading politician? The media has recently reported, “Investigators are also trying to ascertain the real beneficiary behind Hasan Ali's spectacular wealth. Investigators say funds might have been amassed from defence deals and Hasan Ali could be a front for a politician;

i. ED had proposed to arrest Ali in December 2008; no arrest till now

j. The government had made a Collusive request to the Swiss authorities for assistance, which has bounced back

k. The Hasan Ali’s case – the smoking gun

An irrefutable proof of a secret meeting of the Maharashtra Government and the Political Adviser to the President of the Congress Party Smt Sonia Gandhi with Hasan Ali has been revealed by one of the members of the Task Force, Shri Mahesh Jethmalani, on 25 January 2011 in the debate in the Times Now TV Channel moderated by Shri Arnab Goswami on Black Monies stashed overseas. In his sensational revelation Shri Mahesh Jethmalani said that that the Crime Branch of Mumbai Police in Mumbai has a video recording of the secret meeting between Hasan Ali, who was absconding in the Enforcement Case of $8 billion against him, the then Chief Minister of Maharashtra Vilasrao Deshmukh and the Political Advisor to the Congress Party President Shri Ahmed Patel, and Shri Ghafoor Ahmed Khan, who was later appointed as the Police Commissioner of Mumbai at Hotel Centaur [now known as Tulip] in Mumbai on 8.11.2008 Shri Mahesh Jethmalani has made available a copy of the CD of this audio-video with the transcript of the conversation among the four persons [in which the decision to appoint Shri Gaffoor as the Commissioner of Mumbai Police] to the Task Force. The transcript of the answers given by Hasan Ali to the Police, taken from the Video available with Shri Mahesh Jethmalani, one of the members of the Task Force:

In fact, this information and the video recording was first placed in the public domain by Shri Ram Jethmalani, the well-known senior lawyer [who has filed the Writ in the Supreme Court on the issue of black money abroad] on 15.4.2010 at a press conference addressed by him in Mumbai. While Ali tells the Police that he met Shri Ahmed Patel in Centaur Hotel, Shri Patel has however denied having been present at any meeting with Ali or ever met him; Vilasrao Deshmukh ordered an inquiry into the affair, but till now nothing contrary has been found out. The Home Minister Maharashtra has denied the meeting. But the video exists and is in the possession of Shri Mahesh Jethmalani one of the members of the Task Force. [Para XVII]

XVIII. Bofors pay off to Quattrocchi and his links with the family of the President of the Congress Party

Despite all the efforts to bury the Bofors pay off case, it refuses to die. The Income Tax Appellate Tribunal decision on Win Chaddha’s tax issues has brought the issue alive back to the public domain. Shockingly the Tribunal decision came the very day the CBI had moved the CBI court for closing the case against Ottavio Quattrocchi. Some recall of the Quattrocchi part of the Bofors pay off case is necessary to know how its continuation impacts on the attitude of the government of India to the illegal monies of Indians stashed away abroad. [Para XVIII]

XIX. The alleged secret Swiss accounts of the family of a former Prime minister of India

It is a matter of concern that there have been serious and persistent allegations in the media in and outside India about alleged secret Swiss accounts held by the family of a former Prime Minister of, which have not been even formally denied by any one from the family. Because of that, there is an increasing apprehension in the public mind that it is due to the involvement of leaders close to the UPA and its component ruling parties that the UPA government and therefore India remain the only exception to the global pursuit of illegal monies abroad. The apprehension is that the Indian government is not taking the aggressive measures in that direction unlike the other countries as explained here in this report. [Para XIX]

XX. The government suffers from utter lack of credibility

The UPA government suffers from serious loss of credibility because of the Lichtenstein Bank affair, the Hasan Ali and Quattrocchi cases and the serious allegations that billions of dollars are lying in secret Swiss bank accounts in the name of a former Prime Minister of India belonging to the Congress Party. [Para XX]

XXI. How can the UPA government reacquire its lost credibility?

The issue is how the UPA government can reacquire credibility? It is not trust deficit but defunct trust. If the government’s credibility is to be restored within and outside the country, the government must act on the four cases – namely the Lichtenstein Bank names, Quattrocchi pay offs Hasan Ali case and respond to the alleged secret bank accounts of the family of the former Prime Minister of India belonging to the Congress Party – in a credible manner. The government action so far is explicitly to suppress the truth and to bury the cases. Unless these steps are forthwith initiated, not only the UPA government’s credibility will be questioned, it will also lead to the inevitable inference that the UPA government is hand-in-glove with the buccaneers who have stashed away billions of dollars of Indian people’s money abroad. [XXI]

XXII. The need to restore credibility of the political parties and the political system as a condition precedent

The people of India view with suspicion and apprehension the entire political class, which is supposed to act to recover the Indian monies stashed away abroad. In fact the political class is suspect today in the eyes of the people. There has to be a morally and ethically sound response to restore the trust and confidence of the people of India. [XXII]

XXIII. Moral and ethical response needed from the political class

The Task Force therefore suggests that the political class must set an example. Leaders and office bearers of political parties, ministers and Members of Parliament must declare that they or their families have either no wealth abroad, or if they have they must explain how they had acquired it. In addition they must give letters to the government stating that they authorize the government to ask from any government or bank in the world the details of any money held by them or by their sons and daughters. [Para XXIII]

XXIV. Constitutional, legal, geo-political, moral and ethical measures needed to recover the Indian wealth illegally stashed away abroad

1. First, the Government of India can enact a law, recognizing reports of the IMF and GFI etc saying that huge Indian capital has been illegally stashed away from India, declaring that the government of India is the beneficiary of all monies, assets and bank accounts held abroad by or the benefit of Indian nationals without declaring the same to the Indian authorities.

2. Second, on the basis of the said law, the Government of India can ask the world governments and the different banks committed to secrecy like the Swiss Banks, to recognize Indian government as the beneficiary of the undeclared wealth, bank account and other assets of the Indian nationals till the owner of the wealth, bank accounts and other assets is able to prove that he had acquired it by fair means and from legally valid sources

3. Third, the National Investigative Agency [NIA] must register an FIR like the investigative agency did in the case of Punjab terrorism and Nagaland insurgency against unknown accused persons who had stashed away monies abroad under the money laundering and anti-terror laws and proceed to investigate by inquiry, interrogation and even arrest. This omnibus FIR will be facilitate a continuous investigation and continuous progress. This will, as the investigations proceeds, facilitate many, may be hundreds and thousands of specific FIRs and prosecutions, but still continue as the umbrella FIR which will facilitate the continuance of the campaign against black money.

4. India as a major emerging power should play an important role in enunciating New Global financial Architecture altering the architecture evolved in the twentieth century by Anglo-Saxon laws which facilitated development of these secretive jurisdictions. We need to evolve a new architecture suiting Asian value systems for the twenty first century based on transparency and integrity. Since the economic power is shifting to Asia we need new financial architecture for the coming decades. As indicated above we should stress on Geographical disclosure of sources and uses of Funds by Global banks and based on that “automatic information sharing” should be done by the recipient nations. In other words closing down of the secretive tax jurisdictions should be one of the objectives of India for a non-conflicting civilizational future. As a responsible member of G-20 and FATF, UNSC etc we should take the lead for all emerging markets.

The Task Force has suggested in details many other measures to combat the menace of black money abroad. [Para XXIV]

XXV Conclusion

Our Republic is under siege. Our polity is in shambles. We are at cross roads. Wiki leaks mocks at us in terms of revealing the names of our current icons as men who plundered. It is possible that foreign spy agencies know the names. Our leadership may be under blackmail and our policy formulations may have been compromised. We are in an extraordinary time. This ancient nation rebuilt by Mahatma Gandhi; Sardar Patel; Pundit Nehru; Babasaheb Ambedkar; Netaji Bose; Rajaji and many other eminent men who towered over our mother land is in crisis because of these plunderers. As a nation, we owe it to the deprived and ordinary people of India and its future citizens to perform the sacred duty of unearthing these vast national resources hidden abroad which has the potential to transform the country into a developed nation much sooner than we can otherwise do. India is not only a country, but, also a great civilization, which has from time immemorial propagated non conflicting ideas and practiced non-conflicting methods. As a rising nation, we need to set proper standards for ourselves so that we become the alternative model for the world of conflict in search of peace and harmony. Being viewed as a corrupt and dishonest nation, and being seen as a nation of buccaneers who bolt away with hundreds and thousands of billions of Dollars when a vast section of the ordinary people of this country are in penury, will hardly give us the moral and ethical authority to be of example to the world. The time is propitious. The entire world opinion is converging against tax havens, secret banking and evil monies. The issue spills beyond economic stability; it has the potential to dynamite the economic system itself; it has potential to destroy the global security itself as the terrorists are funded by secret and not open financial system. The Task Force is of the view that the information and the ideas contained in this and in its earlier report must be taken to the people of India at various levels. The Task Force hopes that the BJP will dedicate itself to the cause and associate as many critical forces, in and outside politics, in the sacred agenda. [Para XXV]

Dated 31 January 2011

S. Gurumurthy Ajit Doval


R. Vaidyanathan Mahesh Jethmalani




Read More...

Tuesday, February 22, 2011

regret = apology ?

வாஜ்பாயி பிரதமராக வந்தபோது, இந்தப் பதவிக்கு அத்வானி வந்திருக்க வேண்டும் என்று என்னை போல பலரும் நினைத்திருப்பார்கள். அவரது துணிச்சலான பேச்சுகள், அதிரடி நடவடிக்கைகள், கட்சியைக் கட்டுக்கோப்பாக மேலெடுத்துச் சென்றது, நேர்மை என்று பல காரணங்களால் பி.ஜே.பி என்றால் அத்வானி என்ற எண்ணம், அவரைப் பற்றி இந்திய மக்களிடம் இருந்தது. இன்னும் இருக்கிறது.

ஆனால் எல்லா அரசியல் கட்சிகளையும் போலவே அங்கும் கோஷ்டிகள் வர ஆரம்பிக்க, அத்வானி மற்றும் சில நல்ல தலைவர்கள் ஜகா வாங்கினார்கள். ஊழலுக்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்தார்கள். (கொள்ளைக் கூட்டமான ரெட்டி சகோதரர்களுக்கு வக்காலத்து வாங்கிய சுஷ்மா இதற்கு எடுத்துக்காட்டு ). தன் கட்சிக்காரர் தப்பு செய்யும்போது பிஜேபி ஒன்றும் செய்ய முடியாத கோழையாக பரிதாபமாக நின்றது (எடியூரப்பா நிலங்களை வளைத்துப் போட்டபோது (காங்கிரஸின் மெகா ஊழல்களைப் பார்க்கும்போது இது எறும்புக்கடி ஊழல்தான் என்றாலும்) தலைமை ஒன்று செய்ய முடியாதது இதற்கு எடுத்துக்காட்டு). அருண் ஷோரி, "2G ஊழல் சம்பந்தமாக எல்லா ஆதாரங்களும் தனக்குத் தெரியும்; ஆனால் பி.ஜெ.பி சும்மா இருந்துவிட்டது. அதிமுக மட்டும்தான் தொடர்ந்து பாராளுமன்றத்தில் பேசியது" என்று தொலைக்காட்சியில் சொன்னமாதிரி, பிஜேபிக்கு அதில் ஆர்வம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. மீடியா 2G-யைப் பெரிதுப்படுத்திய பின்தான் பிஜேபி JPC வேண்டும் என்று தன் பல்லவியை ஆரம்பித்தது. ஏன் 2009-லிருந்து சும்மா இருந்தது என்பது ஆராய்ச்சி செய்ய வேண்டிய கேள்வி. ஏன் அத்வானி சும்மா இருந்தார்? எது எதற்கோ ரதத்தை இழுக்கும் இவர்கள் ஏன் இதற்கு இழுக்கவில்லை? கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு அதுவே உருகி நெய்யாகியும்கூட ஏன் அதை வழுவ விட்டார்கள்?

அருண் ஷோரி நேர்காணல்

[ Arun Shourie: The BJP knows what I knew.

Karan Thapar: The BJP knows what you knew? Sushma Swaraj and Arun Jaitley know this?

Arun Shourie: I don't want to talk about BJP's internal meeting but it is certainly my assessment that they were not interested in following these things.

Karan Thapar: Even the BJP wasn't interested?

Arun Shourie: No.

Karan Thapar: The BJP had dynamite and they weren't interested in following it up?

Arun Shourie: That's true. That's unfortunately true. It is only the AIADMK MPs who were following this up.
]


இப்போது அத்வானி எழுதிய கடிதத்துக்கு வருவோம்.

எஸ்.குருமூர்த்தி, இந்திய உளவு அமைப்பின் (ஐ.பி.) முன்னாள் தலைவர் அஜீத் தோவல், பெங்களூர் ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன், பிரபல வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் அடங்கிய குழு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் தொடர்பான அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டது. அதில் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இதற்கு ஆதாரமாக சுவிட்சர்லாந்தின் ஸ்வீசர் இல்லஸ்ட்ரேட் இதழ் 1991-ஆம் ஆண்டு வெளியிட்ட செய்தி மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.

சோனியா காந்தியின் கடிதம்

Dear Shri Advaniji,

My attention has been drawn to a publication titled 'Indian Black Money Abroad in Secret Banks and Tax Havens' purporting to be a report submitted by a Task Force appointed by the Bharatiya Janata Party.

This so-called report contains reckless and baseless allegations against me and my family, including my late husband and my mother. These lies, energetically disseminated from time to time by sections of the media and interested parties have so far been treated by me with the contempt they deserve.

But I must let you know that I am surprised and disappointed to find a leader of your stature occupying important positions in the NDA and the BJP endorsing such scurrilous and malicious fabrications through their release at a function presided over by you.

Yours sincerely,

Sd. Sonia Gandhi



அதற்கு அத்வானியின் பதில்

Dear Smt Soniaji,

On my return from Kolkata last night, I found your letter dated 15th February awaiting me.

I am happy that you have denied the reports relating to you and your family alluded to in the Task Force's Report on Black Money.

If these had been denied earlier, the Task Force would have taken your denial into account. Even so, I deeply regret the distress caused to you.

With best regards,

Yours sincerely,

L K Advani


சோனியா காந்தி, "உங்களை போல ஒரு பெரிய தலைவர் இருக்கும் கட்சியிலிருந்து இந்த மாதிரி ஒரு கடிதம் வருகிறதே" என்று ஆச்சரியப்படுகிறார். இதற்கு அத்வானி என்ன சொல்லியிருக்க வேண்டும் ?

"I regret that you and your family members surface in the report..... you should also understand the distress caused to the Indian people because of the money launderers. I have faith in the task force, and they have taken into account sevaral evdiences and have done extensive investigations before making the report. However, I have forwarded your letter to our task force who will respond to you soon" என்று எழுதியிருந்தால் நன்றாக இருக்கும் அதை விட்டுவிட்டு "I deeply regret the distress caused to you." என்று எழுதினால் கருப்பு பணம் பற்றி அந்த அறிக்கையை சமர்பித்த அந்த குழுக்கு என்ன மரியாதை?

அரசியல் நாகரிகம் கருதி பர்சனலாக அத்வானி எழுதினார் என்று வாதிடலாம் ஆனால் இது நாட்டுப் பிரச்சினை. இதில் பர்சனலுக்கு இடமில்லை.

பத்திரிகையில் ஒருவரைப் பற்றி தப்பாக செய்தி வந்தால், அது தவறுதான் என்று பத்திரிகை தரப்பும் நினைத்தாலும்கூட, அதற்கு அடுத்த வாரம் பத்திரிகை, "உங்களைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறோம்" என்றுதான் போடுவார்கள். மன்னித்துவிடுங்கள் என்று நடைமுறையில் சொல்லுவதில்லை. ( இட்லிவடை கூட இப்படி தான் செய்கிறது :-)

இந்த இரண்டு வார்த்தைகளை ஆங்கில அகராதியில் சேர்க்க பரிந்துரைக்கிறேன்
Regret : Official sorry, Usually used by leaders.
Sorry: Unofficial sorry, Usually used by Indian common man.


இந்தக் கடிதப் போக்குவரத்தால் சில கேள்விகள் இல்லாமல் இல்லை..

அறிக்கையில் தன்னை பற்றிய அவதூறுக்கு மறுப்புத் தெரிவிப்பதை விட்டு விட்டு அம்மணி ஏன் அத்வானிக்குக் கடிதம் எழுதினார்? ஏன் பி.ஜே.பி தலைவருக்கோ அல்லது அந்தக் குழுவுக்கோ எழுதவில்லை? ஏன் அத்வானி இவ்வாறு சோனியாவிற்கு பதில் அனுப்பினார்? அவருக்கு அப்படி என்ன நெருக்கடி? இந்த 2G யுகத்தில் ஏன் கடிதப் போக்குவரத்து? பேசாமல் தொலைபேசியில் பேசியிருக்கலாமே?

Regret - apology பற்றி Oxford-Cambridge-லிருந்து வந்தவர்கள் விவாதிக்கலாம். உடனே அகராதி எடுத்து பார்த்த போது - apology - An expression of regret at having caused trouble for someone என்றும் regret - To feel sorry, disappointed, or distressed about என்றும் இருக்கிறது.

அத்வானியின் கடிதத்தை படிக்கும் போது ஏதோ ஒன்று தப்பாக இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. என்ன என்பதை அறிவுஜிவிகளுக்கு விட்டுவிடலாம்.



இதே மாதிரி அத்வானி லெட்டர் எழுதிக்கொண்டு இருந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் silly point இடத்துக்கு இவர் சீக்கிரமே தேர்ந்தெடுக்கப்படுவார்.



Read More...