பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 20, 2011

இன்று முதல் MNP

இன்று முதல் MNP ( Mobile Number Portability ) அமலுக்கு வருகிறது. ஏர்டெல், BSNL போன்ற நிறுவனங்கள் இந்த சேவையை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. நிச்சயம் அவர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் வேறு சேவைக்கு சென்றுவிடுவார்கள் என்ற பயமாக கூட இருக்கலாம்.

இது என்ன என்று கேட்பவர்களுக்கு சின்ன விளக்கம் - உங்களிடம் இருக்கும் செல்போன் எண் உங்களுக்கே. நீங்கள் எந்த செல்போன் நிறுவத்துக்கு மாறினாலும் செல்போன் எண் மாறாது. இது பல நாடுகளில் இருந்தாலும் நம் நாட்டுக்கு இன்று தான் வருகிறது.

இந்த புதிய மாற்றம் காரணமாக, செல்போன் நிறுவனங்களுக்குள் தரமான சேவையை அளிப்பது குறித்த போட்டியும் மேம்பாடும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய முறையை தொடர்ந்து பிரிபெய்டு வாடிக்கையாளர்களில் 17 சதவீதம் பேரும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களில் 19 சதவீதம் பேரும் தங்களுடைய செல்போன் சேவை நிறுவனங்களை மாற்றிக் கொள்வார்கள் என தொலைத்தொடர்பு வல்லுனர்கள் கருதுகின்றனர்.

ஏற்கனவே ஐடியா, ஹட்ச் போன்ற நிறுவனங்கள் இதை பெரிதாக விளம்பரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என்று போக போக தெரியும்.

இந்த சேவையினால் யாருக்கு அதிக நஷ்டம் இருக்கும் ? ஓட்டு பெட்டி தயாராக இருக்கிறது


தன் எம்.எல்.ஏ பதவியை இழக்காமல் அதிமுக கட்சியிலிருந்து திமுகவிற்கு சென்றார். அது MLA portability. கிட்டதட்ட அது போல தான் இதுவும். இக்கரைக்கு அக்கரைப் மஞ்சள் :-)


14 Comments:

ரோமிங் ராமன் said...

எம் என் பி ஓகே ... அமெரிக்கா போன்ற நாடுகளில் தங்களின் வண்டி என்னைக் கூட மாற்றாமல் வண்டியை மட்டும்தான் மாற்றுகிறார்கள் என்று சிலர் சொல்லுகிறார்களே., அது பற்றி யாரவது கொஞ்சம் எழுதுங்களேன்!

சுபத்ரா said...

//அக்கரைப் மஞ்சள் :-)//

என்ன Grammar இது?

சுபத்ரா said...

Related Procedures:

http://2.bp.blogspot.com/_TWmjEu4Rs8E/TTZ_wlwEMxI/AAAAAAAABNw/zfR3Y2kKKeM/s1600/Mobile+number1.jpg

அஞ்சா நஞ்சன் said...

//ஏர்டெல், BSNL போன்ற நிறுவனங்கள் இந்த சேவையை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.//

BSNL இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

Unknown said...

bsnl இந்த MNP சேவைக்கு கட்டணம் வசூலிக்க மாட்டர்களாம். அட போங்கப்பா இந்த ஆப்பே உங்களுக்கு தானப்பா.

hayyram said...

//இக்கரைக்கு அக்கரைப் மஞ்சள் :-)// nice.

க்ருஷ்ண பாகவதர் said...

யோவ்!

எங்கள் மயிலை தொகுதி அல்ப சேகரைப் பத்தி கமெண்ட் அடிக்கலேன்னா உமக்கு தூக்கமே வராதா!எதாவது லம்ப்பா கெடைக்கும்னு அந்த பக்கம் போனார். ஆனா அங்க சாப்பிட்ட எலையக்கூட நக்கிட்டுல்ல போடறாங்க.

எங்க MLA நொந்து போயிருக்கார். வந்து கவனிப்பார் உன்னை!

தமிழ்வாசி said...

எல்லா சிம்களுக்கும் இந்த முறை பொருந்தாது. புதிதாக சிம் வாங்கி 90 நாட்களுக்குள் மட்டுமே இந்த வசதி

Prabu said...

23ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாழ்.
உங்களாள் முடிந்தளவிற்க்கு மற்றவர்களுக்கு தெரிவியுங்கள்!

தயவு செய்து இதை ப்ளாகுங்கள்!

Prabu said...

23ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாழ்.
உங்களாள் முடிந்தளவிற்க்கு மற்றவர்களுக்கு தெரிவியுங்கள்!

தயவு செய்து இதை ப்ளாகுங்கள்!

கால்கரி சிவா said...

அமெரிக்கா மற்றும் கனடாவில் வண்டி நம்பர் ப்ளேட்டை நாமே செலக்ட் செய்யலாம். அவர்களாக தரும் நம்பர் ப்ளேட் தோராயமாக $40 நமக்கு வேண்டிய ஸ்பெஷல் $200. ஸ்பெஷலுக்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும் அவ்வளவுதான். நம்பர் ப்ளேட்டை நீங்கள் வேண்டியவரை வைத்துக் கொள்ளலாம் காரை மாத்தினால் கூட. ஆனால் ஒரு ஸ்டேட்டிலிருந்து அடுத்த ஸ்டேட்டுக்கு குடிபெயர்ந்தால் நம்பர் ப்ளேட்டை மாற்றவேண்டும் ஆனால் நம்பரை மாத்த் தேவையில்லை :)

Anonymous said...

படித்தது , வெளியிடுவீர்களா?

Blogger adyar said...

டோண்டு அவர்களே, உங்கள் கேள்வி பதில் பகுதியில் 'படித்தவர்களுக்காக மட்டுமே படமெடுப்பவர் என மனைவி சுகாசினியால் பாராட்டப்பட்ட மணிரத்னம், " இந்த கேள்வியை படிதேன், இது சம்பந்தமாக :

Thatstamil.com என்றொறு பத்திரிக்கை நீங்கள் வசித்திருக்கலாம், அவர்களின் பிராமண அவதூறுப்போக்கு தெரிந்ததே, அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை :) அதுதான் இணையம் பூராவும் கொட்டிக்கிடக்கிறதே, நாம் பார்த்து கால்வைத்து நடந்து போய் கொள்ளலாம்

ஆனால் சம்பந்தமே இல்லாத ஒரு செய்தியை எடுத்து அதில் பிராமணர்களை இழுப்பது எப்படி என்று காண்பித்தால் மற்றவர்களாவது கொஞ்சம் சார்புகளை புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்


இது அவர் பேசிய சுட்டி,
http://www.youtube.com/watch?v=zkeRUMEMoDA

இது அவாளின் சுட்டி
http://thatstamil.oneindia.in/movies/news/2011/01/5-suhasini-mani-rathnam-veppam-audio-launch.html

ஒப்பிட்டு இன்பம் அடையவும்.
பின் குறிப்பு ; நான் அவர்களுக்கு இந்த லின்க்கை அனுப்பினேன், அவர்கள் வெளியிடவில்லை. :)))))

Thanks
oruwhitecross :)

Anonymous said...

The State-owned Bharat Sanchar Nigam Ltd was first off the blocks to announce that it will not charge any fee for MNP although TRAI has allowed operators to take a fee of Rs 19. Besides this, the SIM card for 2G/3G would be provided free of cost along with additional talk value of Rs 100 for pre-paid customers.

நொந்த நோக்கியா said...

ப்ரி-பெயிட் அக்கவுண்டுகளில் நிறைய கொள்ளையடிப்பவர்கள் ஏர் டெல் தான். Thank you for subscribing to ..... என்றோ, அல்லது, Thank you for downloading ...... என்றோ மெசேஜ் அனுப்பி விட்டு, நம் அக்கவுண்டில் இருந்து பத்து, ஐம்பது நூறு என்று திருடிவிடுவார்கள். ஏதேனும் ஒரு விஷயத்திலிருந்து Unsubscribe செய்ய, Unsubsc ......என்று சேவையைக் குறிப்பிட்டு, குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ் எம் எஸ் செய்யச் சொல்லுவார்கள். அதற்கும், மூன்று ரூபாய் கபளீகரம் செய்வார்கள்.
இந்தக் கொள்ளைகள் அவ்வளவாக இல்லாதது பி எஸ் என் எல் சேவைகளில்தான்.