பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 11, 2011

பதிவிறக்க எழுத்தாளர்களின் பொற்காலம்!

பதிவிறக்க எழுத்தாளர்களின் பொற்காலம்! - தினமணி கட்டுரை .. எழுதியவர் பெயர் சமஸ். யார் என்று எனக்கு தெரியாது.

இந்த 34-வது சென்னைப் புத்தகக் காட்சியின் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்கள் யார்? யாருடைய புத்தகங்கள் விற்பனையில் அதிகமாக இருக்கின்றன?

அருந்ததி ராய், அமிதவ் கோஷ், ராமச்சந்திர குஹா, விக்ரம் சேத்?

கிடையாது.

ஜெயமோகன், இமையம், பெருமாள்முருகன்?

கிடையாது.

அட, வைரமுத்து, ரமணி சந்திரன்?

ம்.. ஹூம்.
இப்போதெல்லாம் புத்தகக் காட்சிகளில் ஒரு புதிய படை எழுத்தாளர்கள்தான் கலக்குகிறார்கள். சென்னைப் புத்தகக் காட்சியையும் அவர்களே ஆக்கிரமித்திருக்கிறார்கள். இந்தப் புதிய படை எழுத்தாளர்களைப் பதிவிறக்க எழுத்தாளர்கள் என்று நாம் அழைக்கலாம்.

ஆமாம், அதென்ன பதிவிறக்க எழுத்தாளர்கள்?

இவர்கள் இந்தத் துரித உலகத்துக்கேற்ற துரித சிந்தனையாளர்கள் - துரித எழுத்தாளர்கள் - இணையத்தின் கைப்பிள்ளைகள். இட்லி, வடையில் தொடங்கி லத்தீன் அமெரிக்க இலக்கியம் வரை சகலத்தையும் இவர்கள் எழுதுவார்கள். அம்பானி, பிரபாகரன், டெண்டுல்கர், வீரப்பன்... யாரைப் பற்றியும் இவர்களால் எழுத முடியும். உலக சினிமாக்களை உள்ளூர் சினிமாக்களுடன் ஒப்பிடுவார்கள், போர்ஹேவினுடைய எழுத்துகளில் உள்ள கூறுகளை மணிரத்னம் படத்தில் வரும் தமாசில் கண்டுபிடிப்பார்கள், புவிவெப்பமாதல் பிரச்னையில் ஒபாமாவுக்கு யோசனை சொல்வார்கள், நோபல் பரிசு பெற தங்கள் நண்பர்களைப் பரிந்துரைப்பார்கள், தமிழ்ப் பத்திரிகைகளை ஒரு பிடி பிடிப்பார்கள்... கூர்ந்து கவனித்தால் ஏதாவது ஒரு பதிப்பகத்தில் இருப்பார்கள்.

இவர்களுடைய முதல் கடவுள் இணையம். உப கடவுள் விக்கிபீடியா. கொடுமை என்னவென்றால், இவர்கள்தான் இந்தக் காலத்தை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். வரலாற்றை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் புதிய வரலாற்றில் இவர்கள் ஹிட்லரைப் பற்றி புத்தகம் எழுதினால் ஹிட்லர் அதில் கதாநாயகனாக இருக்கிறார்; மறுவாரம் கோட்சேவைப் பற்றி புத்தகம் எழுதினால் காந்தி அதில் வில்லனாகிப் போகிறார்.

இந்த இடத்தில் வாசகரை நாம் குறைகூற முடியாது. ஏனென்றால், புத்தகங்களைப் பிரசுரிக்கும் பதிப்பகங்களின் கைத்திறமை அப்படி.

புத்தகத்தை கண்ணுக்கு இதமாகத் தயாரிக்கும் இவர்கள், ஒருபுறம் பத்து தரமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பிரசுரித்துக்கொண்டே மறுபுறம் நூறு பதிவிறக்க எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பிரசுரிக்கிறார்கள். இந்த நூற்றுப்பத்து புத்தகங்களும் அடுத்தடுத்த அலமாரிகளில் ஒன்றறக் கலந்திருக்கின்றன. வாசகர் என்ன செய்வார்?

பதிவிறக்க எழுத்தாளர்கள் பிரித்து மேய்கிறார்கள்.

இப்படிப்பட்ட புத்தகங்களைப் பிரசுரிப்பதில் மிகப் பிரபலமாகத் திகழும் பதிப்பகம் ஒன்றில் பணியாற்றும் பதிவிறக்க எழுத்தாள நண்பருடன் நேற்று உரையாட நேர்ந்தது. பேசிக்கொண்டிருக்கையில் நண்பர் பெருமிதத்தோடு சொன்னார்: ""எங்கள் வேகத்துக்கு இன்றைக்கு யாராலும் புத்தகம் போட முடியாது. பத்து நாட்களுக்குள் ஒரு புத்தகத்தை எங்களால் முடிக்க முடியும்.''

ஆக, கூடியவிரைவில் இப்படியொரு புத்தகம் வரலாம்: பத்து நாட்களுக்குள் புத்தகம் போடுவது எப்படி?

தமிழ் வாசகர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது!

( நன்றி: தினமணி )
நல்ல கட்டுரை, நன்றி தினமணி

22 Comments:

துளசி கோபால் said...

சமஸ்? இவர் தினமணி உதவி ஆசிரியர்களில் ஒருவராம். இவர் எழுதிய சாப்பாட்டு புராணம் என்ற புத்தகத்தைப் போனவார சென்னை விஸிட்டில் வாங்கிவந்தேன். அதில் உள்ள முன்னுரையில்தான் மேற்படி விவரம் இருக்கு.

பதிவு எழுத்தாளர்கள்ன்னு இருக்கலாமே? எதுக்கு இறக்கிட்டார்?

ப்ரியா கதிரவன் said...

இதுக்கு பேரு தொட்டிலை ஆட்டி விட்டுட்டு அப்றோம் புள்ளைய கிள்ளி விடறதா?

Anonymous said...

"புத்தகத்தை கண்ணுக்கு இதமாகத் தயாரிக்கும் இவர்கள், ஒருபுறம் பத்து தரமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பிரசுரித்துக்கொண்டே மறுபுறம் நூறு பதிவிறக்க எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பிரசுரிக்கிறார்கள்."
Cute way of saying bloggers dont have " tharam".
We are in the midst of a revolution-yeah whichever way ,those who have stuff whether the are"real " writers or bloggers will stay on.
Anony

IdlyVadai said...

இன்னொரு பெண் பதிவர் கமெண்ட் அடித்தால் ஹாட்ரிக் முடியுமா ?

guna said...

true true 100% true

ப்ரியா கதிரவன் said...

சுபத்ரா,

உங்களை தான் கூப்பிடறார். வாங்க.

guna said...

I AM NOT FEMALE

Anonymous said...

idlivadai
Please install transliteration tool.
Want to comment in Tamil.
Anony

ரிஷபன்Meena said...

//பத்து நாட்களுக்குள் ஒரு புத்தகத்தை எங்களால் முடிக்க முடியும்.''//

இப்படி பத்து நாளுக்கு ஒரு புத்தகத்தை அடிச்சு வச்சுக்கிட்டு தமிழன் புத்தகம் வாங்கறதே இல்லை படிக்கிறதே இல்லைன்னு அவனைத் திட்ட வேண்டியது.

Anonymous said...

சமஸ் எழுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் சாப்பாட்டுப் புராணம் சூப்பர் புத்தகம். ஒவ்வொரு ஊரின் ஸ்பெஷாலிட்டி உணவு ஐட்டங்களைப் பற்றிய சுவையான சின்னப் புத்தகம்.

Unknown said...

இது முற்றிலும் உண்மை உண்மை உண்மையைதவிர வேறெதுவும் இல்லை.

Unknown said...

பதிவிறக்க எழுத்தாளர்கள்

Well said.

Some of the books are translation from English ( Verbatim Copy)

Even a famous (!??) writer has recently done translation from English to Tamil but cleverly not mentioned that it was mere a translation.

Thomas Weber has written lot on Gandhi and those books have taken shape in Tamil as a single book by a famous (! ? ) writer

மணிகண்டன் said...

பிரியா, வெறும் மூணே பெண்கள் தான் இட்லிவடை வாசகிகளா ?

Anonymous said...

யார் அந்தப் பதிப்பகம், யார் அந்த பதிவிறக்க எழுத்தாளர்கள் என்பதெல்லாம் நன்கு தெரிகிறது. புரிகிறது. இப்படியே போனால் அப்புறம் ஆழமான எழுத்துக்களே படிக்கக் கிடைக்காமல் எல்லாம் ‘லைட் ரீடிங்’ ஆகி விடும். பொன் குஞ்சைக் காப்பவர் இனிமேலாவது கவனமாக இருக்கட்டும்.

- ஆதிகாலத்து அநாநி

Anonymous said...

ஆயிரம் பாக்கெட் ஈனோ பார்செல்லெய்!

ரோமிங் ராமன் said...

"பிரியா, வெறும் மூணே பெண்கள் தான் இட்லிவடை வாசகிகளா?"
அட இது என்ன துக்ளக்கா? பெண் வாசகிகளைப் பற்றி கவலை கொள்ள(அ)
கணக்கெடுக்க?
இட்லிவடையார் மீண்டும் கோபிக்க வேண்டாம்!
இந்த துக்ளக் ஆண்டு விழா வந்தாலும் வந்தது, துக்ளக் ஞாபகமா ஆகிப்போச்சு!

Anonymous said...

எப்படியோ இனைய தொடர்பு இல்லா கைகளுக்கு அந்த புத்தகங்கள் போகுதே சந்தோசபடுங்க தல....

திருடன்.COM

Anonymous said...

எப்படியோ இனைய தொடர்பு இல்லா கைகளுக்கு அந்த புத்தகங்கள் போகுதே சந்தோசபடுங்க தல....

திருடன்.COM

Unknown said...

உள்ளேன் ஐயா LALITHA KRISHNAN

seetha said...

எனக்கு புத்தக கண்காட்ச்சியில் சிரிப்பை வரவழைத்த அம்சம்..

தினமலருக்கு பக்கத்து ஸ்டால் ...பெரியார் ,வீரமணியின் அமைப்பு தான். ஸ்டால்கள் குலுகல் முறையில் தான் ஒதுக்கப்படும் என்று கேள்விப்படேன்,அதனால் எனக்கு இன்னும் சிரிப்பு. ஒருவேளை கடவுள் இருக்கிறாரோ?

R.Gopi said...

//பத்து நாட்களுக்குள் ஒரு புத்தகத்தை எங்களால் முடிக்க முடியும்//

******

இந்த மேட்டர் மட்டும் “தல”க்கு தெரிஞ்சா, ”செவன் ஹவர்ஸ்ல செந்தமிழ்”னு ஒரு புத்தகம் போட்டு விடுவாரே...

இன்னமும் சீக்கிரமா சொன்னா, பொங்கல் இலவச பொருட்களோட சேர்த்து டெலிவரி ஆக சான்ஸ் இருக்கு....

வல்லிசிம்ஹன் said...

இறக்கிவிட்டாலும் ,விடாவிட்டாலும்

ஒருவர் சொன்னதால் ஒன்றும் கெடவில்லை. எழுதுபவர் எழுத்தாளர். நாங்கள் பதிவு எழுதுபவர்கள்.
கருத்துகள் ,நல்ல கருத்துகள் நிலைபெற்று நிற்கும்.