பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 12, 2011

சுரேஷ் கண்ணன் கடிதம்


அன்பான இட்லிவடைக்கு :-)

பிரசன்னா இன்று எழுதிய புத்தகக் கண்காட்சி பற்றிய குறிப்புகளில் உப்புக்காத்து ஆவணப்படம் பற்றிய புகைப்படத்தை இட்டதற்கு நன்றி. (ஆனால் படம் தலைகீழாக இடப்பட்டுள்ளதில் எவ்வித நுண்ணரசியலும் இருக்காது என நம்புகிறேன்). :-))

உங்களின் வசதிக்காக சம்பந்தப்பட்ட dvd கவரின் high res படத்தை அனுப்புகிறேன். இயன்றால் அதை (நேராக) போடவும். சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தின் இயக்குநரே என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு இந்த ஆவணப்படத்தை பற்றி எழுதக் கேட்டுக் கொண்டார். பொதுச்சேவையின் ஒரு பங்காக அதை ஏற்றுக் கொண்டேன்.

இட்லிவடை கார்னர்: உப்புக்காத்து என்ன உப்புகருவாடு கூட இட்லிவடையில் வரும். நீங்க கவலைப்படாதீங்க சுரேஷ் கண்ணன்


நன்றி. :-))

--
சுரேஷ் கண்ணன்
http://pitchaipathiram.blogspot.com

என் பதில் கீழே...

அன்புள்ள சுரேஷ் கண்ணன்,

பொதுவாக நான் முனிக்கு தான் கடிதம் எழுதுவேன். இன்று உங்களுக்கு. உங்கள் கடிதத்தை இட்லிவடையில் பிரசுரிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

உங்களுக்கே தெரியும் எனக்கும் அரசியலுக்கும் ரொம்ப தூரம் என்று. அப்படி இருக்க நுண்ணரசியல் எல்லாம் டூமச். மூன்றாம் நாள் பதிவில் பிரசன்னா எழுதியதில் ஒரு பிழை என்று நினைத்து ஒரு இரண்டு எழுத்தை மாற்றினேன். உடனே சாட்டில் வந்து அது எப்படி நான் எழுதியதை மாற்றலாம் என்று இலக்கியவதிக்கே உரித்தான கோபத்துடன் கண்டபடி என்னை திட்டிவிட்டார். நிற்க

நேற்று அவர் வழக்கம் போல மெயிலில் கட்டுரையும் படங்களையும் அனுப்பியிருந்தார். எல்லா படங்களும் நேராக இருக்க 'உப்புக்காத்து' படம் மட்டும் தலைகீழாக. காத்து பலமாக வீசியிருக்கும் அதனால் படம் தலைகீழாக இருக்கு என்று நினைத்துக்கொண்டேன். இரண்டு எழுத்து மாற்றியதற்கே கவிஞரிடம் திட்டு வாங்கிய பெருமை எனக்கு இருப்பதால் ( உப்பு போட்டு சோறு தின்பதால் கூட இருக்கலாம் ) நான் படத்தை நேர் செய்யவில்லை.

அடுத்த முறை ஹரன்பிரசன்னாவை புத்தகக் கண்காட்சியில் இருக்கும் கேண்டீனில் சந்தித்தால் அவர் அனுப்பியதில் ஏதேனும் நுண்ணரசியல் இருக்கா என்று நீங்கள் கேட்கலாம். மற்றபடி நீங்கள் அனுப்பிய படத்தை போட்டிருக்கிறேன். சரக்கு மாஸ்டர் இந்த படம் பற்றி எழுதினால் உடனே போட நான் ரெடி. அநேகமாக 'மர்ம மாளிகையில் பலே பாலு’ என்ற காமிக் புத்தகத்தை படித்த பின் எழுதுவார் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு,
இட்லிவடை

மஞ்சள் கமெண்ட் தேவையில்லை


6 Comments:

ரிஷபன்Meena said...

கடிதமா எழுதாமல் இட்லியை புத்தக கண்காட்சியில் சந்தித்து சொல்லியிருக்கலாம்.

ஷாருக்கான் -இன்கம்டாக்ஸ் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.

பிச்சைப்பாத்திரம் said...

இட்லி வடையின் சரித்திர பக்கங்களில் என் பெயரையும பதிவு செய்ததற்கு மகிழ்சசி. புகைப்படத்தை காற்றில் சாயாமல் நேராமல் நிறுத்தி இட்டதற்கு நன்றியும்.

குணா கமல் 'பாட்டாவே படிச்சிட்டீங்களா?' என்று கேட்பது மாதிரி தனிமடலை அப்படியே போட்டு விடுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் அடிஷனல் பேப்பர் வாங்கி இட்லி வடையை நாலு திட்டு திட்டி இரண்டு பக்கங்களுக்கு எழுதியிருப்பேன். அப்படியிருந்தால்தான் அதன் வாசகர்களுக்கு பிடிக்கிறதாமே? :-))

நன்றி.

R.Gopi said...

இதுக்கே சுரேஷ் கண்ணன் இப்படி கோபப்படறாரே....

”தல” ஆட்சியில ஒரு அமைச்சர் சொன்னது கேட்டா என்ன பண்ணுவீங்களோ!!

இந்த உலகத்துக்கு எத்தனை சூரியன்யானு யாரும் கேட்டா ஒரே ஒரு சூரியன்னு தப்பா விடை சொல்லிடாதீங்க... இதை ஏன் சொல்றேன்னா, இங்க பாருங்க...

//தமிழக அரசு இலவசமாக அளிக்கும் பொங்கல் பைகளில் இடம் பெற்றிருப்பது திமுகவின் சின்னமான உதயசூரியன் அல்ல, அது வேறு சூரியன் என்று கூறியுள்ளார் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு.

பொங்கல் நாளான்று சூரியனை வழிபடுவதற்காக தமிழர்கள் பொங்கல் வைக்கிறார்கள்.​ அதனை நினைவுபடுத்தும் வகையில் குடும்பத்தோடு சூரியனை வழிபடும் காட்சிதான் இலவச பொங்கல் பொருள்கள் பையில் அச்சிடப்பட்டுள்ளது.​ அதில் இருக்கும் சூரியன் வேறு.​ திமுகவின் சின்னமான உதயசூரியன் வேறு என்றார்.//

சந்திரபிம்பன் said...

//சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தின் இயக்குநரே என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு இந்த ஆவணப்படத்தை பற்றி எழுதக் கேட்டுக் கொண்டார்.//

இதுதான் சுரேஷ் கண்ணன். மகிழ்ச்சி.

Anonymous said...

சந்திரபிம்பன் . . . :-)))))

(-!-) said...

//மூன்றாம் நாள் பதிவில் பிரசன்னா எழுதியதில் ஒரு பிழை என்று நினைத்து ஒரு இரண்டு எழுத்தை மாற்றினேன். உடனே சாட்டில் வந்து அது எப்படி நான் எழுதியதை மாற்றலாம் என்று இலக்கியவதிக்கே உரித்தான கோபத்துடன் கண்டபடி என்னை திட்டிவிட்டார்.//


நான்காம் நாள் போஸ்ட்டை சரக்கு மாஸ்டர் மூன்றாம் நாளே அனுப்பி விட்டாரோ? கணக்கு ஒதைக்குதே! :>