பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 13, 2011

ரெண்டா...யிரம் நாலா...யிரம் ஆறா...யிரம் - ப்ரியா கதிரவன்

பாண்டியராஜன் பட பழைய ஏல ஜோக்.நினைவிருக்கலாம்.
போன வார இறுதியில் ரெண்டு முழு நாட்களுக்கு நிறைய பேரை டிவி முன்னால் கட்டிபோட்டது ஒரு ஏலம். 'மில்லியன் டாலர் கேள்வி' என்ற terminologyக்கு மாத்திரமே அந்த பதத்தை உபயோகிக்கும் திருவாளர் பொதுஜனமாகிய எனக்கு அங்கே நடந்த மில்லியன் டாலர் விற்பனை பிரம்மாண்டமாய் இருந்தது.இந்த ஏலத்தை பற்றிய சில விஷயங்களை என் கணவர் என்னுடன் பகிர்ந்து கொண்டதை கொஞ்சம் சொந்த சரக்கு சேர்த்து இங்கே.

மொத்தம் 10 அணிகள்.Kochin Rendezvous, Sahara Pune Warriors என இரண்டு புதிய அணிகள்.ஒரு அணியின் ஏல மதிப்பு ஒன்பது மில்லியனை தாண்ட கூடாது. ஒவ்வொரு பிரான்ச்சைஸ்சும் தனது முந்தைய அணியில் இருந்து அதிக பட்சம் நான்கு வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம். தக்க வைத்து கொள்ளும் முதல் வீரருக்கு $1.8Million, இரண்டாம, மூன்றாம், நான்காம் வீரர்களுக்கு முறையே $1.3 Million,$900000,$500000 அந்த ஒன்பது மில்லியனில் இருந்து குறைக்கப்படும். மீதி உள்ள தொகைக்கு(available purse) தான் அந்த அணி ஏலம் கேட்க முடியும்.ஒவ்வொரு வீரரை வாங்க வாங்க, purse குறைந்து கொண்டே வரும்.தக்க வைக்க பட்டவர்களுக்கு ஒன்பது மில்லியனில் இருந்து குறைக்க பட்ட அந்த தொகைகள் தான் சம்பளமாக கொடுக்க படும் என்பதில்லை. அது அந்த பிரான்ச்சைஸ்க்கும் வீரர்களுக்கும் உள்ள ஒப்பந்தத்தை பொருத்தது. ஒருவேளை அதிக பட்ச ஏலத்தொகையை பொறுத்து இவர்களின் சம்பளம் நிர்ணயிக்க படுமாக இருக்கலாம்.

முதலில் ஏலம் விடப்பட்டவர் (உண்மையில் இந்த வரியை எழுதுவதற்கே முரணாக தோன்றுகிறது. மனிதர்களை ஏலம் விடும் அளவுக்கு கலிகாலம்) கௌதம் கம்பீர். இவர் இந்திய அணியின் தற்போதைய போஸ்டர் பாய். சேவாகை save பண்ணிய Delhi Dare Devils இவரையும் இரண்டாவது வீரராக தக்க வைத்து கொண்டிருந்தால், அவர்களுடைய பர்சில் $1.3 Million தான் காலி ஆகி இருக்கும்.இவரை பொதுவில் கொண்டு வந்து, விலை 2.4 மில்லியன் என்று எகிறியதில் KKR இடம் கோட்டை விட்டார்கள்.Dinesh Karthik, De Villeers ஐ கூட இவர்கள் தக்க வைத்து கொண்டு இருக்க வேண்டும். இவர்கள் யாரையும் ஏலத்தில் எடுக்க முடியாமல், இவர்களுக்கு சமமான players ம் ஏலத்தில் எடுக்க முடியாமல், தற்போதைய டெல்லி அணி என்னவோ முந்திய அணியை விட வலு குறைந்ததாகவே தோன்றுகிறது.


ராஜஸ்தான் ராயல்ஸ் கேஸ் எல்லாம் முடிந்து, ஆனால் அந்த களைப்பு எல்லாம் தெரியாமல் பளிச் என்று வந்து இருந்ததோடு ரொம்ப உற்சாகமாக இருந்தார்கள். ஷில்பா ஷெட்டி ஏலத்தில் சிரித்து கொண்டே இருந்தது பத்தாதென்று கெளரவ் கபூர் வேறு டீ ப்ரேக்கில் அவரை சிரிக்க சொல்லி கொண்டு இருந்தார். இவர்கள் ஷேன் வாட்சனை தக்க வைத்து கொண்டதை பாராட்டலாம். ஆனால் வார்னேயின் retention எந்த அளவுக்கு சரியான முடிவென்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். கேஸில் நிறைய காசு செலவழிச்சுடாங்களோ என்னவோ, ஏலத்தில் சற்று அடக்கி வாசித்தார்கள். எட்டு ப்ளேயர்களோடு திருப்தியடைந்து விட்டு டிவி பேட்டி கொடுப்பதில் பிசி ஆகி விட்டார் ஷில்பா. விஜய மல்லையா வேணாம்னுட்ட திராவிடை கார்டன் சிட்டியில் இருந்து பிங்க் சிட்டிக்கு கூட்டி போய் இருக்கிறார்கள். Will the IPL-1 history repeat with the Wall and Warne? We shall see.

கடந்த மூன்று IPL களிலும் knock-out qualified.போன வருட IPL-3,சாம்பியன்ஸ் லீக் இரண்டிலும் ஜெயித்து எல்லாரையும் விசில் போட வைத்தவர்கள். இப்படி பார்த்து பார்த்து வளர்த்த அணியை தக்க வைத்து கொள்வதில் CSK Franchise காட்டிய தீவிரம் அசாத்தியம். Dhoni, Raina,Murali Vijay,Morkel இவர்களை தக்க வைத்து கொண்டவர்கள், Hussey, badrinath, ashwin, bollinger, johindar Sharma, Sudip Tyagi இவர்களை எல்லாம் ஏலத்தில் எடுத்து விட்டார்கள்.முரளிக்கும் பாலாஜிக்கும் நிறைய முயன்று பார்த்து, போட்டி போட முடியாமல் Kochin,KKRக்கு விட்டு கொடுத்து விட வேண்டியதாகி போனது. முரளிதரனை இழந்தது இவர்களுக்கு பெரிய பலவீனமாக இருக்கலாம். ஸ்ரீலங்காவில் இருந்தே Suraj Randeev வை சேர்த்து இருக்கும் இவர்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யவேண்டும். பார்க்கலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ். சின்னசுவாமி ஸ்டேடியத்தில் RCB மேட்ச் பார்த்தவர்களுக்கு தெரியும். ஜம்போ ஜம்போ என்று ஆர்ப்பரிப்பார்கள் மக்கள். அனில் கும்ப்ளே தான் ஜம்போ. விஜய்மல்லையா இவரை தக்க வைத்து கொள்ள வில்லை. "உன்னை எப்படியும் ஏலத்தில் எடுக்கிறேன்" என்றும் வாக்கு கொடுக்க வில்லை போலும். பெங்களூர் தவிர வேறு எந்த டீமுக்கும் விளையாட இவருக்கு மனமில்லை. IPL ஏலத்தில் பங்கெடுக்க வில்லை என்று அறிவித்து விட்டு, RCBக்கு Auctionனில் Chief Mentor ஆக அமர்ந்து இருந்தார். விஜய் மல்லையா கிங் பிஷர் கேலண்டரிலேயே வருடா வருடம் புது புதுமுகமாக போடுவார். அதே வழியில் RCBயில் விராட்கொலியை தவிர எல்லாரும் புது முகம்.De Villeers, zahir khan, dilshan RCB யின் best picks என்று சொல்லலாம். ராபின் ஊத்தப்பா, கும்ப்ளே, வினய்குமார், திராவிட் என்று ஒரு பெங்களூர் பையன் கூட டீமில் இல்லை.கடந்த IPL களில் கோப்பை வெல்ல வில்லையே ஒழிய, IPL 2 finalist, IPL 3 semifinalist என்று RCB ஒரு நல்ல டீம் என்று தான் சொல்ல வேண்டும். இருந்தும் கூட மொத்த டீமையும் overhaul பண்ணி இருக்கும் இவர்களுக்கு crowd reaction எப்படி இருக்கும் தெரியவில்லை.

KXIP. இவர்களுக்கு என்ன வேண்டும் என்பது இவர்களுக்கே தெளிவாக தெரிந்ததா என்று தெரிய வில்லை. நல்லா செவ செவன்னு டீம் யூனிபார்மில் வந்து இருந்தார்கள். யுவராஜுக்கும் ப்ரீத்திக்கும் எதாவது பிரச்சனையா என்றும் புரியவில்லை. சற்று சுணக்கமாக இருந்த இவர்கள், இந்திய பேட்ச்மேன்கள் தேவை என்பதை உணர்ந்தது சற்று தாமதமாக. Saurabh Tiwariயை RCB க்கு sold என்று auctioneer சொன்ன அதே நேரத்தில் ப்ரீத்தி ஏலம் கேட்டு கையை உயர்த்தினார். பிறகு சித்தார்த் வந்து ஏதோ சண்டையோ சமாதானமோ பேசி திவாரியை வாங்கிகொண்டு போனார். இந்த சண்டையில் உண்மையில் ஜெயித்ததென்னவோ திவாரி தான். $100000 அதிகம் கிடைத்தது அவருக்கு.

KKR. 'Save the tigers' என்று டிவிக்கு டிவி விளம்பரம் வருகிறது. இவர்கள் என்னவோ 'புலியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்' என்று மூன்று வருடமாக போட்டு கொண்ட சூட்டில் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். ரூம் போட்டு யோசித்து gautam gambir, yusuf patan இவர்களை எல்லாம் மாங்கு மாங்கு என்று வாங்கியதில் பர்ஸ் சுத்தமாக காலி. kaalis, brett lee, morgan இவர்களெல்லாம் பாயும் புலியாக இருப்பார்களே ஆனால் KKR உடைய IPL-4 ride த்ரில்லிங் ஆக அமையலாம்.

DC.யாரையும் தக்க வைத்து கொள்ள வில்லை. டாப் இந்திய ப்ளேயர்ஸ் வாங்குவதில் ஒன்றும் சோபிக்காமல் sangarkara, stain, peterson, white என்று வெளிநாட்டவர்களாக பார்த்து பிடித்து இருக்கிறார்கள்.

MI: நல்ல retention பிளானிங். ஜாகிர் கானை தக்க வைத்து கொண்டு மலிங்காவை பொதுவில் நிறுத்தி இவர்களே ஏலம் எடுத்து இருந்தால் இன்னும் பெட்டராக இருந்து இருக்கலாம். ஒரு டாப் இந்திய batsman தேவையாக இருக்கவே, போராடி ரோஹித் ஷர்மாவை அக்கட பூமியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். பவுலிங்கில் பலவீனம் இருந்த மாதிரி தோன்றிய நேரத்தில், முனாப் படேலை கொள்ளை காசுக்கு கூட்டி வந்து விட்டார்கள். சச்சினுக்கென்ன? ஜெயிச்சாலும் தோத்தாலும் அவர் தான் கிங். IPL - 3 slip between the cup and the lip ஆனது.IPL-4 இல் MI க்கு கோப்பை கிடைக்குமா என்ற சஸ்பென்சை விட Symonds க்கு கன்னத்துல அறை கிடைக்குமா என்பது பெரிய சஸ்பென்சாக இருக்கிறது.

கொச்சின் மொத்த ஒன்பது மில்லியன் டாலரையும் வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று திணறிக்கொண்டு இருந்தார்கள் ஆரம்பத்தில். போக போக, போறவன் வர்றவன் என்று எல்லாரையும் ஏலம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். வெறும் பவுலர்களை வைத்தே கம்பெனி நடத்தும் திட்டம் போலும். ஏகப்பட்ட காசுக்கு ஸ்ரீசாந்த்தை வாங்கி இருக்கிறார்கள். அவர் வாங்கின காசுக்கு சேர்த்து வெச்சு பேச போறார். இவருக்கு கேப்டன் ஆகும் அதிர்ஷ்டம் அமையலாம். அல்லது ஜெயவர்தனே அதை தட்டி போகலாம்.

pune warriors.
கொல்கத்தாவை பார்த்து சுறுசுறுவென்று கற்றுகொண்டார்கள்.அடித்து பிடித்து யுவராஜையும் உத்தப்பாவையும் வாங்கி போட்டார்கள்.G Smith, Mathews, Ferguson என்று அடுக்கி கொண்டே போனார்கள். If you give a monster a piece of cake, he will ask for a glass of milk என்று ஒரு டயலாக் "Air Force One" படத்தில் வரும். அதை ஞாபக படுத்தற மாதிரி ஒரு நிகழ்வு நடந்தது இந்த டீமில்.இந்த டீமுக்கு கோச்சாக இருக்கற ஆஸ்த்ரேலியா காரர், தன்னோட மகன் Michell Marshசை ஏக விலைக்கு இதே டீமை வாங்க வெச்சது ரொம்ப ஓவர். அந்த பையனுக்கு பத்தொம்பதே வயசு. அவ்வளோ ரெகார்டும் இருக்கற மாதிரி தெரியலை.

இந்த முறை எட்டு அணிகள் பத்தானதில் என்ன விளைவுகள்?மேட்ச்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஒவ்வொரு மேட்சிலும் விளையாட போகிற பதினொரு ப்ளேயர்சில் (playing eleven )நான்கு வெளிநாட்டவர் தான் இருக்க வேண்டும். மீதி ஏழு இடங்கள் இந்தியர்களுக்கு தான். இதனால் ஒவ்வொரு பிரான்சைசுமே நிறைய இந்திய ப்ளேயர்ஸை ஏலம் எடுக்க வேண்டிய நிர்பந்தம். இதனால் நிறைய இந்திய வீரர்களுக்கு வாய்ப்பும் காசும் கிடைக்க போவதென்னவோ உண்மை தான். ஆனால் பத்து பிரான்சைஸ் இருப்பதால் வீக்லின்க்ஸ்(weak links) வந்து விட வாய்ப்பு அதிகம். அதென்ன வீக் லிங்க்ஸ்?

இப்போ நம்ம இட்லிவடையவே எடுத்துப்போம். கிரிக்கட்ல புதுமுகம் Unadkat மாதிரி இங்க சுபத்ரா.Veterans ன்னு பார்த்தோம்னா, ஹரன்ப்ரசன்னா எழுதறார், அதும் தெனக்கும் தெனக்கும். அரவிந்தன் நீலகண்டன் எழுதறார். ஸ்ரீகாந்த் எழுதறார். இவ்வளவு என்? இத்து போன கடைன்னு சொன்ன யுவக்ருஷ்ணாவே சமீபத்தில் எழுதினார். ஆனா நான் ஒரு பேர் சொல்லி இருக்கேன். "முடிஞ்சா அவங்களை இட்லிவடையில் எழுத வெய்யுங்க, அப்போ ஒத்துக்கறேன், நீங்க பெரிய ஆள்" ன்னு.அது ஒரு வீக் லிங்க்.

நான் சொன்ன வீக் லிங்க் வேற. Qualifies Indian Players என்பது வெங்காயம் மாதிரி ஒரு பற்றாக்குறை விஷயம். இவர்கள் எட்டில் இருந்து பத்து அணியில் spread ஆகி விடுவதால், 7 indian players in playing eleven என்ற நிலைமையை சமாளிக்க சில சமயங்களில் untested players சை வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும்.அப்போது டாப்/மிடில் ஆர்டர்/ டெயில் என்டர் என்று எதாவது ஒரு க்ரூப்பில் தொடர்ச்சி மிஸ் ஆகி சொதப்பி விட வாய்ப்புகள் அதிகம்.(தோனியை டெயில் என்டர் என்று சொல்லும் சில ட்விட்டர்களுக்கு இந்த நேரத்தில் எனது கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறேன்)

BCCI Uncapped players என்று ஒரு க்ரூப்பிற்கு ஏலத்தில் வராமல் தானே ஒரு விலை நிர்ணயம் செய்து இருப்பதில் ஒரு லாஜிக் இருப்பது போல தோன்றலாம். Who are Uncapped Players?ஏதாவது ஒரு இன்டெர் நேசனல் மேட்சிலாவது இந்திய அணிக்காக விளையாடி இந்திய அணியின் தொப்பியை அணிந்தவர்கள் Capped. மற்றவர்கள் Uncapped. இவர்களும் ஏலத்தில் விடப்பட்டு நிறைய சம்பாதிக்கும் பட்சத்தில் இவர்களுக்கு Capped ஆக வேண்டும் என்ற motivation இல்லாமல் போய்விடும் என்று BCCI நினைப்பதேன்னவோ நல்ல நோக்கம் தான்.
ஆனால் ஏதோ ஒரு ஜிம்பாப்வே மேட்சில் விளையாடி விட்டதாலேயே capped ஆகி விட்டதால் சில ப்ளேயர்கள் கோடிக்கணக்கில் ஏலம் கேட்கப்படுவதும், மனிஷ் பாண்டே முதலானவர்கள் சென்ற IPL இல் எல்லாம் நன்றாக சோபித்தும் கூட, cap இல்லை என்ற ஒரே காரணத்துக்காக இருபது லட்சத்துக்கு செட்டில் செய்யபடுவதும் highly illogical.

Here people are paid for using their brain, not just for having one சொன்னவர் நவஜோத் சிங் சித்து. வாஸ்தவம். கங்குலி, லாரா, ஜெயசூர்யா எல்லாம் ஏலம் எடுக்கப்பட வில்லை. நியூஸ் சேனல்கள் எல்லாம் அதிர்ச்சி வெளிகாட்டி கொண்டு இருந்தன. இந்த ஏலம் என்பது இன்னும் மூன்று வருடங்களுக்கான டீமை நிர்ணயம் பண்ண போகிறது. இப்போவே கங்குலி, லாரா, ஜெயசூர்யாவுக்கெல்லாம், நிறைய வயசு. இன்னும் மூன்று வருடங்களுக்கு T20 அதிரடி ஆட்டம் ஆடுவார்களா என்ற கேள்வி Owner களுக்கு இருந்து இருக்கலாம். இதில் அதிர்ச்சி என்ன? All is fair in love,war and IPL. அதிலும் கங்குலியின் ஏலம் அறிவிக்கப்பட்டதும் விஜய்மல்லையா முகத்தில் நமுட்டு சிரிப்பு.இதை பார்த்த கொல்கத்தாகாரர்கள் அட்லீஸ்ட் சில நாட்களுக்கு கிங் பிஷரை புறக்கணிக்கலாம்.


கட்டுரையின் முதல் வரியில் சொன்ன ஜோக்கில் ஏலம் போடுபவரை சில பைத்தியங்களை ஏலம் கேட்க வைத்து ஏமாற்றி இருப்பார் பாண்டியராஜன்.இந்த ஏலத்தை பொறுத்த வரை ஏலம் போடுபவர், கேட்பவர், ஏலம் போடப்பட்டவர்கள், அதை ஒளிபரப்கபிய டிவி சானல், விளம்பரதாரர் என எல்லாருமே கத்தையாக லாபம் பார்ப்பார்கள். Set max subscription,மேட்ச் பார்க்க போனால் டிக்கட்,தினம் மூணு மணி நேரம் டிவி முன்னால்,இந்த மாதிரி ஓசி பதிவு, ட்வீட்டு, 'எப்போ பாத்தாலும் கிரிக்கட்டையே கட்டிக்கிட்டு அழுங்க' ன்னு சண்டை இப்படி செலவும் செய்து பைத்தியம் ஆக போவதென்னவோ நாம தான்.

- ப்ரியா கதிரவன்
http://priyakathiravan.blogspot.com/

இங்கே ஒன்று எழுத கூடாது என்று கண்டிஷன் அதனால்.. :-)


13 Comments:

Anonymous said...

இந்த பொளப்புக்கு, நாண்டுகிட்டு சாகலாம்..

கிரிக்கேட் விளையாடுறவங்க..
அணியின் உரிமையாளர்கள்..
இன்னும் கோடி கோடியா சொத்து சேக்குற நாதாரிங்களைத் தான் அப்படி சொன்னேன்

ஆர்வா said...

அப்போ பிம்பிளிக்கி பிளாப்பி நமக்குத்தானா??


முதல் கமெண்ட் கொடுத்த நண்பருக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். அவர்கள் எல்லாரும் புத்திசாலிகள்தான். ஆனால் சாப்பிடக்கூட தோன்றாமல் அந்தக்கிரிக்கெட்டை பார்த்துக்கொண்டிருக்கும் மக்களை என்ன சொல்வது?

Anonymous said...

// கவிதை காதலன் said... "அப்போ பிம்பிளிக்கி பிளாப்பி நமக்குத்தானா??
முதல் கமெண்ட் கொடுத்த நண்பருக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். அவர்கள் எல்லாரும் புத்திசாலிகள்தான். ஆனால் சாப்பிடக்கூட தோன்றாமல் அந்தக்கிரிக்கெட்டை பார்த்துக்கொண்டிருக்கும் மக்களை என்ன சொல்வது? "//

அமாம், நண்பரே.. மிகச் சரியாகச் சொன்னீர்கள்..
அந்த(ஐ.பி.எல்) விளையாட்டுக்களை பார்க்காத, பார்க்க விருப்பமில்லாத பலரில் / சிலரில் நானும் ஒருவன்.

எவனுமே பாக்கலேன்னா அதாவது ஸ்பெஷலா அந்தந்த சானல்களை அந்த சமயத்தில Subscribe பண்ணலேன்ன... அந்த விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு ரேட்டிங் ரொம்ப கொஞ்சமா இருந்தா.. விளம்பரதார்கள் அதுல பணத்து போடுவாங்களா ?.. -- மக்களே சிந்திப்பீர்..

Speed Master said...

பிம்பிளிக்கி பிளாப்பி

ரிஷபன்Meena said...

கிரிகெட்- விளையாடுறவங்க, உரிமையாளர் புக்கிஸ் டி.வி.காரங்களுக்கு லாபம் தருது அதனால பார்க்கக்கூடாது.

சினிமாவும் இதுமாதிரி ஆட்கள் லாபம் பார்க்கிற தொழில் தான்.

மக்கள் வேற என்ன தான் செய்யனும்.
பொழுதுபோக்கே கூடாதுன்னு சும்மா சிவனே-ன்னு இருக்க வேண்டியது தானா ?

Vikram said...

\\.... ஒன்றும் சோபிக்காமல் sangarkara, stain, peterson, white என்று வெளிநாட்டவர்களாக பார்த்து பிடித்து இருக்கிறார்க\\

adhu "stain" illa - (dale) "steyn"...
(stain) karai (crickettukku) nalladhu (illa) :)

vikram..

ரோமிங் ராமன் said...

ஹலோ ஹலோ... இந்த விஷயமெல்லாம் நமக்குத் தெரியாது.. தேவையும் இல்ல.. தூங்காம மேட்ச் பார்ப்போம்.. சீரியல் பார்க்கின்ற பெண்மணிகளிடமிருந்து ரிமோட் பிடுங்குவோம் ... அசறாது advt (கூடவே கிரிக்கெட்டும்தான் ) பார்த்து உலக ஞானம் வளர்ப்போம் ... அவ்வளவுதான் (அதுலதானே புது ப்ராடக்ட், டெக்னாலஜி எல்லாம் காட்டறான்) !!!

துளசி கோபால் said...

கேங்கூலியை யாரும் ஏலத்துலே வாங்கலைன்னு..... வீட்டுக்குப்போனா மொத்து கிடைச்சுருக்குமோ?

அடிமைகள் வியாபாரம் நல்லா நடக்கட்டும்:(

Anonymous said...

இந்த லிங்கப் பாருங்க சார் / மேடம்

Siraj/Kuwait said...

Even though, the writer's thought is so realistic, one should not be forgotten. Even the education now is one of the top money making businesses around the world. so it's quite obvious that the people wants to make money when they shine. let's be practical and watch the fun and forget.

Anonymous said...

IPL-4 இல் MI க்கு கோப்பை கிடைக்குமா என்ற சஸ்பென்சை விட Symonds க்கு கன்னத்துல அறை கிடைக்குமா என்பது பெரிய சஸ்பென்சாக இருக்கிறது.

Hilarious!

Karthik

Indian said...

//விஜய்மல்லையா இவரை தக்க வைத்து கொள்ள வில்லை. "உன்னை எப்படியும் ஏலத்தில் எடுக்கிறேன்" என்றும் வாக்கு கொடுக்க வில்லை போலும். பெங்களூர் தவிர வேறு எந்த டீமுக்கும் விளையாட இவருக்கு மனமில்லை. IPL ஏலத்தில் பங்கெடுக்க வில்லை என்று அறிவித்து விட்டு, RCBக்கு Auctionனில் Chief Mentor ஆக அமர்ந்து இருந்தார்.//

Kumble has been elected as the president of Karnataka State Cricket association. Citing conflict of interest, he has retired from IPL. Hence he is made as RCB official. Mr.Mallya would be more than happy to have Kumble in KSCA than his nemesis Mr. Srikanth Wodeyar.

Anonymous said...

இப்படியே நல்லா கிரிக்கெட் விளையாடுங்க பாஸ், அரிசி அமெரிக்கால இருந்து வரும்!!!!!!!!!!!!!!!!!!!