இந்த வார கல்கியில் ஆர்.வெங்கடேஷ் அவர்கள் 'அனானிகளின் சொர்க்கம்!' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் எங்களுடைய பேட்டி வந்திருக்கிறது. நீங்களே படித்துப் பாருங்கள்.
நன்றி
இட்லிவடை
அனானிகளின் சொர்க்கம்! - ஆர்.வெங்கடேஷ்
கமலின் ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் பார்த்திருப்பீர்கள். கமல் அப்படத்தில் ஓர் அனானிமஸ். பெயர் இல்லாதவர். கடைசியாகப் பெயர் சொல்லும்போது, குரல் கேட்காது. அவர் அனைவரின் குரலையும் பிரதிபலிப்பவர் என்ற எண்ணத்தைச் சொல்ல இந்த முறையைக் கையாண்டு இருப்பார்கள்.
பெயர் சொல்லவில்லை என்றால் என்ன? அவருடைய உணர்வுகள் முக்கியமில்லையா? வலி முக்கியமில்லையா? எடுத்துச் சொல்லும் மறுப்புகள் முக்கியமில்லையா என்பதுதான் அனானிமஸ்களின் கோணம்.
முகத்தைக் காட்ட தைரியமில்லாதவன் என்று வேண்டுமானால் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால், முகத்தைக் காட்ட முடியாத சமூகச் சூழல் இங்கே நிலவும்போது, சொல்ல வேண்டிய உண்மைகளை வேறு எப்படியாவது தெரிவித்தே ஆகவேண்டும் என்ற அவா உந்தித்தள்ளுகிறது. விளைவு, அனானிமஸ்.
பத்திரிகைத் துறையிலோ, ஊடகத் துறையிலோ, முகமற்றவரை யாரும் நம்ப மாட்டார்கள். தனிநபர்கள் மேலும், நிறுவனங்கள் மேலும் வெறுப்பை உமிழவும் கோபத்தை வெளிப்படுத்தவும் அவதூறு களைப் பரப்பவும், முகமூடி பயன்படு வதைப் பார்த்திருக்கிறோம். இணையத்தி லும் அவதூறுகள் உண்டு என்றாலும் முழு மையாக அது விலக்கப்படுவதில்லை. முக மற்றவராக இருப்பதே இங்கே ஒரு ஃபே ஷன். பொருட்படுத்தத்தக்க கருத்துகளைச் சோல்பவராக முகமூடிகள் மாறிவிட்டார்கள்.
பிப்ரவரி 25ஆம் தேதி ஒரு முக்கியமான நாவல் வெளிவருகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கதை என்று சொல்லப்படும் ‘ஓ - எ பிரசிடெண்ஷியல் நாவல்’ அன்று வெளிவருகிறது. இதன் சிறப்பு? இதை யார் எழுதினார் என்று தெரியாது. பெயர் இல்லாதவர் எழுதி இருக்கிறார். அனானிமஸ். ஆனால், இந்த அனானிமஸ், அதிபரின் அறையிலேயே பக்கத்தில் இருப்பவர் என்று ஒரு கூடுதல் க்ளூ கொடுத்து, டெம்ப்ரேச்சரை எகிற வைக்கிறார்கள்.
யார் எழுதி இருப்பார்? என்ன சொல்லி இருப்பார்? அனானிமஸுக்கு என்னவெல்லாம் தெரிந்து இருக்கக்கூடும்? ஏற்கெனவே, பில் கிளிண்டன், ஹிலாரி கிளிண்டனை வைத்து, ‘பிரைமரி கலர்ஸ்’ என்ற நாவலை எழுதிய அனானிமஸ்தான் இதையும் எழுதினாரா? பிற்காலத்தில், அந்த அனானிமஸ், நியூயார்க் டைம்ஸ் நிருபர், ஜோ க்ளென் என்று தெரிய வந்தது. ஆனால், தான் இந்த ‘ஓ’ நாவலை எழுதவில்லை என்று இப்போது க்ளென் சொல்லிவிட்டார்.
யார் எழுதியவர் என்று பெயர் வெளியிடாமல் எழுதப்படும் தகவல்களை, மொட்டை கடுதாசி, அனாமதேயம் என்றெல்லாம் சொல்வது வழக்கம். ஏன் பெயர் போட்டுக்கொள்ளத் தயங்க வேண்டும்? அல்லது வேறு புனை பெயரில் ஒளிந்துகொள்ள வேண்டும்? பயமே காரணம். கருத்து, கருத்தாக எடுத்துக்கொள்ளப்படாமல், தனிப்பட்ட பகையாக மாறி, இழப்புகள் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் அடிப்படை.
இணையத்தில் பெயர் அற்றவர்கள் ஏராளம். அனானிமஸ்களின் சொர்க்கம் இணையம். தம் முகத்தை மறைத்துக் கொண்டு இவர்கள் பல நல்லதையும் செய்கிறார்கள், அல்லதையும் செய்கிறார்கள்.
இட்லிவடை (http://idlyvadai.blogspot.com) என்ற வலைப்பதிவு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. இன்றுவரை, இட்லி வடை யார் என்று தெரியாது. நண்பர்கள் சந்திப்பில் எல்லாம் இவர்தான் இட்லி வடை, அவர்தான் இட்லிவடை என்று ஊகங்களாகப் பேசப்படும். ஆனால், இட்லி வடை, ஆணோ பெண்ணோ, ஒருவரோ பலரோ, தம் முகத்தைக் காட்டிக் கொண்டதே இல்லை. ஆனால், அவர் கட்டுரைகள் அதிகம் வாசிக்கப்படுகின்றன.
சமீபத்தில் இணையத்தில் கவனம் பெற்றிருக்கும் இன்னொரு கேரக்டர், எழுத்தாளர் பேயோன். நல்ல நகைச்சுவையுடனும் கிண்டலுடனும் எழுதும் இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது. அவர் இணையத்தில் எழுதியவற்றைத் தொகுத்து, ‘பேயோன் 1000’, ‘திசைகாட்டிப் பறவை’ என்று இரண்டு நூல்கள் வெளிவந்துவிட்டன.
அனானிமஸ்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள, இட்லிவடை என்ற முகமற்ற வலைப்பதிவரையே கேட்போமே என்று அவருடன் கூகுள் சாட்டில் ஒரு பேட்டி எடுத்தேன். அதன் தொகுப்பு இது:
Venkatesh: இப்படி முகமற்றவராக இருப்பதில் என்ன சௌகரியம்?
idlyvadai2007: இட்லிவடை என்று பேர் வைத்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசையா? என் சோந்த பெயரில்தான் எழுத வேண்டும் என்று ஆசை. கூகுளில் என் பெயரில் ஐ.டி. கிடைக்கவில்லை. கோபத்தில் இட்லிவடை என்று கேட்டேன். கொடுத்துவிட்டார்கள். பேரின் ராசி என்று நினைக்கிறேன், நிறைய கூட்டம் வர ஆரம்பித்தது. நீங்கள் யார் என்று எனக்கு ரொம்ப தெரிந்தவர்கள் கேட்க, அட இந்த ‘அனானிமஸ்’ வேஷம் நல்லா இருக்கே என்று அப்படியே வைத்துக்கொண்டேன். நண்பர்களை நல்லா திட்ட முடிகிறது என்பதுதான் இதில் உள்ள பெரிய சௌகரியம்.
Venkatesh: பெயர் போட்டுக்கொள்ளா திருப்பதால், என்ன புதிய விஷயங்களை உங்களால் எழுத முடிந்தது?
idlyvadai2007: அனானிமஸ் என்பதில் ஒரு சின்ன திரில் இருக்குகிறது. நான்தான் என்று பெயர் சொல்லி எழுதும்போது, ஒருவித பயாஸ்நெஸ் வந்துவிடுகிறது. ‘நீங்க இப்படி எழுதுவீங்க என்று நான் நினைக்கவில்லை’ போன்ற பாராட்டும் கிடைக்கலாம். குமுதம் எஸ்.ஏ.பி. எலக்ட் ரிக் டிரெயினில் சாதாரண பிரஜையாகப் போய் பல விஷயங்கள் எழுத முடிந்தது. அரசு பதில்கள் உட்பட. அரசியல், நாட்டு நடப்பு என்று எழுதும்போது மக்களுக்கு ‘இதேதான் என் கருத்து’ என்றும் ‘வாடா வெளியே கவனித்துக்கொள்கிறேன்’ என்று கமெண்ட் வருவதும் இந்த அனானிமஸ்னால்தான். அனானிமஸாக இல்லை என்றால் ‘நல்லா எழுதறீங்க, தொடர்ந்து எழுதுங்க’ என்ற கருத்துதான் வரும்.
Venkatesh: உங்கள் கருத்துகளுக்கு உரிய கவனம் கிடைக்கிறதா?
idlyvadai2007: பதிவு ஆரம்பித்து ஒரு நாள், என் தம்பி அமெரிக்காவிலிருந்து என்னைக் கூப்பிட்டு இட்லிவடை படி நல்லா இருக்கு என்றான். பல முக்கியமானவர்கள் இட்லிவடையைப் படிக்கிறார்கள் என்று அவர்களும், அவர்களின் நண்பர்களும் என்னிடம் சொல்லியுள்ளார்கள். பிரபல எழுத்தாளர்களும் இதில் அடக்கம். ஒரு சினிமா விமர்சனத்துக்கு அந்த நடிகரே ரொம்ப வருத்தப்பட்டார் என்று கேள்விப்பட்டேன். ஒருமுறை ஒரு வார பத்திரிகையை ஏதோ சொல்லி யிருந்தேன். உடனே அந்த எடிட்டர் அப்படி இல்லை, தலைப்பை மாற்ற சொல்லுங்க என்று சொன்னார். மாற்றிவிட்டேன். இட்லிவடையில் ஏதாவது வந்தால் அது உண்மையாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். அதனால் சில செய்திகள் போடும்போது பலமுறை அது சரியா என்று கேட்டுவிட்டுதான் போட வேண்டியிருக்கிறது. ஒரே சந்தோஷம், பல உதவிகள் செய்ய முடிகிறது.
Venkatesh: உங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் யாரேனும் இறங்கியிருக்கிறார்களா?
idlyvadai2007: தினமும் யாராவது இந்த முயற்சியில் இறங்குவார்கள். முன்பு ரொம்ப அதிகம், தற்போது குறைவு. முக்கியமாக பெண்கள் விட மாட்டார்கள், உங்கள் வீட்டுப் படிக்கட்டு வரை வந்து விடுவார்கள். ஒருமுறை நான் என் சொந்தப் பெயரில் எழுதிவிட்டேன். மறதி. உடனே படித்தவர் என் நம்பரைக் கண்டுபிடித்து எனக்கு ஃபோன் செய்து ‘என்ன சார் உங்க பேரில் எழுதியிருக்கீங்க. உடனே மாற்றுங்கள்’ என்றார். உடனே மாற்றி விட்டேன். ‘ரொம்ப நன்றி’, என்று அவருக்கு ஃபோன் செய்து சொன்னேன். ‘அதை நான் சொல்லவில்லை, நீங்களும் கேட்கவில்லை’ என்று சொல்லிவிட்டார்.
Venkatesh: பெயர் இல்லாமல் அலைவது இம்சையாக இல்லையா?
idlyvadai2007: இருக்கு, என்ன செய்ய. கழற்றி வைக்க ஆசைதான். ஆனால் முடியவில்லை. ஒருமுறை நான் யார் என்று சொல்லப் போகிறேன் என்று அறிவிப்பு செய்தேன். உடனே நிறைய பேர் தயவு செய்து வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். என்னால் எதற்கு மற்றவர்கள் தீக்குளிக்க வேண்டும்(!) என்று விட்டுவிட்டேன். ஆனால் என்னிடம் சகவாசம் வைத்து சாட் செய்தவர்களின் பட்டியலை விட்டால் நீராராடியா டேப் எல்லாம் ஜுஜூபி.
Venkatesh: என்றைக்காவது இந்த முக மூடியைக் கழற்றுவீர்களா?
idlyvadai2007: கொஞ்சம் கொஞ்சமாகக் கழற்றிக்கொண்டு இருக்கேன். மக்களும் நான் அனானியாகவே இருப்பதையே விரும்புகிறார்கள். இப்படி இருப்பதால் எலக்ஷன் நியூஸ் எழுத முடியும். ஆனால் எலக்ஷனில் நிற்க முடியாது என்ற ஒரே வருத்தம்தான்!
( நன்றி: கல்கி - http://kalkionline.com/kalki/2011/feb/06022011/kalki0403.php
)
மஞ்சள் கமெண்ட் நீங்க பின்னூட்டத்தில் போடலாம் :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, January 31, 2011
இட்லிவடை பேட்டி - கல்கி
Posted by IdlyVadai at 1/31/2011 12:01:00 AM
Labels: இட்லிவடை ஸ்பெஷல், கட்டுரை, பத்திரிகை, பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
26 Comments:
Congrats
//மக்களும் நான் அனானியாகவே இருப்பதையே விரும்புகிறார்கள். //
சபாஷ்... இப்படி எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டால், நீங்கள் தேர்தலில் நிற்க தயார் என்று அர்த்தம். டெபாஸிட் கிடைக்க வாழ்த்துக்கள்.
நீங்கள் பயந்த எலியாக இருப்பதால் உங்கள் பெயரை அனானி ‘மௌஸ்’ என்று வைத்துகக் கொள்ளலாம்!
பெயரில்லாமல் இருப்பது ஒரு ஆரோக்கியமான/பாதுகாபான் விஷயம்தான். காரணம் ந்ம ஊரில் -முக்கியமாக அரசியல் வாதிகள் கருத்துக்குப் பதில் க்ருத்து கூறமாட்டார்கள். ஆனால் எழுதியவனைப் பற்றி எழுதுவார்கள். உனக்கு ஒண்ணரைக் கண்ணு, ‘தலை வழுக்கை’ என்பார்கள்.
ஏன், பத்திரிகை நிருபர்கள் கேள்விகள் கேட்கும்போது - அதாவது அனானியாக இல்லாமல் கேட்கும்போது - என்ன பதில் சொல்கிறர்கள்?” இரண்டு பெண்கள் பேசுகிறார்கள். அதில் உனக்கு என்ன அக்கறை?” இந்த ரிதியில் தான் பதிலகள் இருக்கும். அத்துடன் அந்த நிருபர் பெய்ர் ‘ஹிட் லிஸ்ட்’டில சேர்க்கப்பட்டு விடும்!
இதில் ஒரு அவலம் என்னவென்றால். ”சபாஷ்.. தலைவர் எப்படி மூக்கு உடையற மாதிரி பதில் சொன்னார் பாரு” என்று அடி மட்ட(மான) தொண்டர்கள் ‘ஓ’ போடுவார்கள்.
இட்லி-வடையே. நீ சட்னி ஆகாமல் இருக்க இப்ப்டியே பெயரிலியாக இரு..
- இப்படிக்கு ஸ்ரீல ஸ்ரீல அனானியார்
நாம் ஒவ்வொரு செயலைப்பற்றி எண்ணும்பொழுதெல்லாம்,
அதைப்பற்றி பேச நினைக்கும்பொழுதெல்லாம், அவ்வெண்ணங்களை
நிறைவேற்ற முதலடி எடுத்துவைக்க முயற்சிக்கும்பொழுதெல்லாம்,
ஏதோ ஒன்று , நீ அப்படி செய்யாதே ! நீ அப்படி செய்யாதே !! இது நல்ல தல்ல,
இது அத்தனை நன்மை தராது.. என்றெல்லாம் சொல்கிறதே ! அதை
மனச்சாட்சி என்று நீங்களும் நானும் பெயர் கொடுத்திருந்தாலும்,
அதுவும் ஒருவகையில் அனானி தானே !!
சுப்பு தாத்தா.
//முகத்தைக் காட்ட முடியாத சமூகச் சூழல் இங்கே நிலவும்போது, சொல்ல வேண்டிய உண்மைகளை வேறு எப்படியாவது தெரிவித்தே ஆகவேண்டும்//
ஆனால் அதிலும் ஆபத்து இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ராசா பற்றி குறிப்பிடும் போது சொல்லப்படும் சக்தி வாய்ந்த ஒருவர் இணையத்தில் தன்னைப் பற்றி தவறாக(சரியாக?) எழுதுபவர்களை எல்லாம் தேடி தேடிக் கண்டு பிடித்து பழி வாங்கினார் என்று படித்தேன்... கிடைத்தால் அந்த லிங்க் அனுப்புகிறேன்..ஆனால் னால் இட்லிவடை இட்லிவடையாக இருந்தால்தான் சுவாரஸ்யம்.கத்ரி என்றோ பிரானோ என்றோ இஸ்மாயில் என்றோ ஒரு நாளும் சொல்லி விடாதீர்கள்!!
//மக்களும் நான் அனானியாகவே இருப்பதையே விரும்புகிறார்கள். //
/*
எங்களுடைய பேட்டி வந்திருக்கிறது.
*/
அப்படியென்றால் இட்லிவடை ஒருவரல்ல என்று எடுத்துக் கொள்ளலாமா?
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.
Super publicity for Idlyvadai...
So from now on any anti DMK comments will be watched by the public and even DMK people...So careful Idlyvadai...You might be tracked down one day by the evil forces...
P.S.
A movie could be made on this theme.
Fresh story...
Idlyvadai rocks..
கலக்குங்க :-) வாழ்த்துகள்!
//பதிவு ஆரம்பித்து ஒரு நாள், என் தம்பி அமெரிக்காவிலிருந்து என்னைக் கூப்பிட்டு இட்லிவடை படி நல்லா இருக்கு என்றான்.//
அமெரிக்காவில் இருந்து இல்லை அண்ணே, அரபு நாட்டில் இருந்தல்லவா கூப்பிட்டதாக ஞாபகம்.
//முக்கியமாக பெண்கள் விட மாட்டார்கள், உங்கள் வீட்டுப் படிக்கட்டு வரை வந்து விடுவார்கள். //
அதையும் தாண்டி வந்துவிட்டதாக ஒரு அம்மணி சொன்னார். நீங்கள் பாவம் என்பதால் நான் இருவரையுமே சொல்லாமல் விட்டு விடுகிறேன்.
// இட்லிவடை (http://idlyvadai.blogspot.com) என்ற வலைப்பதிவு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது. //
இத்தனை வருடமாகப் படித்து வருபவர்கள் என்னதான் மாற்றி மாற்றி பலர் எழுதினாலும் ‘சூத்ரதாரி’ யார் என்பதை ‘சத்யமாய்’ தெரிந்து கொள்ளாமல் இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
//ஒருமுறை நான் யார் என்று சொல்லப் போகிறேன் என்று அறிவிப்பு செய்தேன். உடனே நிறைய பேர் தயவு செய்து வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். //
அட ராகவா.. இது வேறயா.. முன்பே ’பிரசன்ன’மானது கூடவா மறந்து விட்டது? ’பிரகாச’மாகட்டும், ’ஜெய’மாக இன்பம் பொங்கட்டும். ‘நிழல்கள்’ கலைந்து நிஜமுகம் விரைவில் தெரியட்டும்.
அன்புடன்
புதிய அனானி
அனானிகுடிதாங்கி இட்லிவடை வாழ்க
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்
hmmmmmmmm
http://hari11888.blogspot.com
இட்லிவடை...
இந்த பேட்டி கொடுத்தது நீங்களே நீங்களா?
What will it take our people to take it to the streets and protest against the ruling parties? Spectrum? CWG? Adarsh? Every PWD contract?
When Egypt with so less opposition party can do it? Why cant we? where are the communists? BJP? ADMK?
Or everyone is so selfish, not even going to vote?
IV is so silent on what is going on in Arab World?
//அட ராகவா.. இது வேறயா.. முன்பே ’பிரசன்ன’மானது கூடவா மறந்து விட்டது? ’பிரகாச’மாகட்டும், ’ஜெய’மாக இன்பம் பொங்கட்டும். ‘நிழல்கள்’ கலைந்து நிஜமுகம் விரைவில் தெரியட்டும்//
இப்படி குழப்புனதுக்கு பேசாம யாருன்னு சொல்லியிருக்கலாம்.. ('புனை பெயரி'ல் எழுதும் என்னையும் அனானி லிஸ்டில் சேத்துக்குவீகளா?)
//எலக்ஷனில் நிற்க முடியாது என்ற ஒரே வருத்தம்தான்!//
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி இட்லி வடை வாழ்க !
After so many years we know it is a group related to or working in kizhakku pathippagam. otherwise there will not be so many ads for kizhakku related content.Maybe it is para, haran prasanna etc.
ஓ? அது நீங்கதானா! நன்றி. இ வ!
நீங்க யாருன்னு நான் சொல்ல மாட்டேன். நீங்களும் சொல்லிறாதீக, அடிச்சுக் கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிறாதீக!!
i don't see any article like this as you mentioned in the latest issue of kalki
//மக்களும் நான் அனானியாகவே இருப்பதையே விரும்புகிறார்கள். //
I am not one among them.
:)
ரோமிங் ராமன் said...
//ஆனால் இட்லிவடை இட்லிவடையாக இருந்தால்தான் சுவாரஸ்யம்//
இட்லிவடையாவே இருந்தா ஊசிப் போயிடாதா?
(ஏதாவது கேட்க வேண்டும் என்று கேள்வி கேட்போர் சங்கம்)
//மஞ்சள் கமெண்ட் நீங்க பின்னூட்டத்தில் போடலாம் :-) //
ஈரோட்டிலேயே மஞ்சள் விலை ஏறி விட்டதாமே, என்ன செய்ய?
(மஞ்சள் கமெண்டுன்ன, மஞ்சள் பற்றிய கமென்ட் என்று திரித்து எழுதுவோர் சங்கம்)
// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//மக்களும் நான் அனானியாகவே இருப்பதையே விரும்புகிறார்கள். //
I am not one among them.//
பாருய்யா - இவருக்கு பெயர் சொல்ல 'விருப்பமில்லை'யாம், ஆனா - இ வ பெயர் தெரிஞ்சிக்கணுமாம்!
i love you idly vadai(since 2007)
Prasanna -Press enna -I know you are the culprit. :) Arasiyalla idhallam sagajam boss....velluthu kattunga..Varutha padatha Anoonymous blogger sangam supports prasanna alias Idly Vadai.
இட்லிவடை யார் என்பது முக்கியம் இல்லை. அவர் என்ன நிறம் எனபது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
Post a Comment