பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 30, 2011

மேற்கு மாம்பலத்தில் தியாகராஜ ஆராதனை - ரோமிங் ராமன்

தியாகராஜர் மேல் கொண்ட அதீத பக்தியினால் 58 ஆண்டுகளுக்கு முன், திருவையாறு செல்ல ஆசைப்பட்டு அப்பாவிடம் அனுமதியும் கொஞ்சம் நிதியும் கேட்டு மறுக்கப்பட்டு வீட்டிலேயே ஆராதிக்க தன கையால் தியாகராஜ சுவாமி படம் வரைந்து கொடுக்க , தன் நண்பர் வீணை சிவா மற்றும் பிவி ராமன் பிவி லக்ஷ்மணன் இவர்களோடு இணைந்து ஸ்ரீ சத்குரு கான நிலையம் என்று தொடங்கி இன்றுவரை ஆண்டு தவறாமல் தியாகராஜ ஆராதனை உற்சவம் நடத்தி வருகிறார் மிருதங்க வித்வான் நாகை. சௌந்தர்ராஜன்(77).

58 ஆண்டுகளாக பிரதி ஜனவரி தடையில்லாமல் நடத்துவது அந்த தியாகராஜனின் கருணை என்கிறார். இவரது உற்சவத்தில் பிரதான ஆராதனை இவர் தந்தை வரைந்து கொடுத்த தியாகராஜர் படத்துக்குத்தான்.

இவரிடம் கற்றுக்கொண்டு அரங்கேறியவர் பட்டியல் பெரிது. உடல் தளர்ந்துவிட்ட இந்த 77 வயதிலும் இவருக்கு ஜனவரி வந்துவிட்டால் அளவில்லாத உற்சாகம் வந்து விடுகிறது.கூடவே இருக்கிறார்கள் திருவிடைமருதூர் ராதாகிருஷ்ணனும்,கணபதிராமனும்.

இந்த ஆண்டு ஜனவரி 28 முதல் மூன்று நாள் உற்சவமாக மேற்கு மாம்பலம் எஸ்.எம் ஆர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடக்கிறது. இந்தப்பள்ளி நிர்வாகமும் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக இடமும் மின்சாரமும் சந்தோஷமாக(இலவசமாகவே) வழங்குகிறது. நாகை சௌந்தர்ராஜன் இசைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு மிகவும் எளிய வாழ்க்கை நடத்திகொண்டிருப்பவர். இவரது நிஜமான பக்தியினால்தான் களக்காடு ராமநாராயணன், எம் எல் வி, மாம்பலம் சகோதரிகள், எம் சந்திரசேகரன்,பாம்பே சிஸ்டர்ஸ், Flute ரமணி, கே வி ராமானுஜம்(இந்த ஆண்டின் கலைமாமணி), திருவிடை மருதூர் ராதாகிருஷ்ணன் என்று பெரிய லிஸ்ட்டில் ஜாம்பவான்கள் இங்கு வந்து சந்தோஷமாக தியாகரஜரை ஆராதித்து விட்டுப் போகிறார்கள்.


துளியும் விளம்பரம் விரும்பாத இவருக்கு பாரத் கலாசார்,ம்யூசிக் அகாடெமி,கிருஷ்ண கான சபா, சதாசிவ பிரம்மேந்திர சபா, காஞ்சி காம கோடி பீடம் என்று பலரும் விருதுகள் வழங்கி கௌரவித்திருக்கிரார்கள்.

முதல் நாள் நிகழ்ச்சியில்(வெள்ளிக் கிழமை) பி எஸ் நாராயணசுவாமி,. ஓ எஸ் தியாகராஜன், சீர்காழி ஜெயராமன்,கே ஆர் சாரநாதன்,எம்பார் கஸ்தூரி,சிறுகுடி சிஸ்டர்ஸ் இன்னும் இன்னும் வந்து பஞ்சரத்ன கீர்த்தனைகளால் கான மழை பொழிந்தனர்.
கூடவே தன் பேரனும் , பூங்குளம் ஸ்ரீ எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் சிஷ்யனும் ஆன விஷால் பிரபாகரனின் மிருதங்க அரங்கேற்றமும் நடந்தது.

இரண்டாம் நாள் காலை 6.30 கே ஆராதனை தொடங்கி பல ஜாம்பவான்களின் இசை மழை. அவர்கள் இன்விடேஷனில் ஒரு நாற்பதுபேர் பெயர்கள் இருந்தால் ஒரு நூறு பேர் வந்து பாடி விட்டுப்போவதில் இருந்தே நாகை சௌந்தரராஜன் மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பு/ மரியாதையும் சங்கீதத்தின் மேல் இருக்கும் பக்தியும் தெரிகிறது.
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி காலை ஏழு மணிக்குத்தொடங்கி இரவு எட்டு மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

-ரோமிங் ராமன்.

ஆசிரியர் குறிப்பு: தினமும் ஒரு நூறு கிமீ பைக்கில் சுற்றுவதால் இவர் பெயர் ரோமிங் ராமன்.சென்னை வாசி. தமிழ் மீது அளவு கடந்த ஆசை - குறிப்பாக பக்தி இலக்கியங்கள். அதிலும் திருப்பாவை இவருக்கு கல்கண்டு. ஒரு வேர்க்கடலைப் பொட்டலக் காகிதம் என்றாலும் தமிழாக இருந்தால் படித்து விட்டு தான் கீழே போடுவார். கம்ப்யூட்டர் டெக்னிஷியன். மற்றும் ஒரு சிறிய மார்க்கெட்டிங் கம்பெனியின் நிர்வாகி. இட்லிவடையில் அடிக்கடி கமெண்ட் போடுவார் மற்றபடி நல்லவர் :-)14 Comments:

(-!-) said...

நல்ல போஸ்டு நன்றி ரோரா. :>

Anonymous said...

/*
இட்லிவடையில் அடிக்கடி கமெண்ட் போடுவார் மற்றபடி நல்லவர் :-)
*/

இட்லிவடை பஞ்ச்....

ரோமிங்ராமன் எமது இனிய நண்பர் என்ற முறையில் அவரது பதிவு இட்லிவடையில் வந்ததற்கு மிகவும் சந்தோஷம்.....

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

கௌதமன் said...

// இட்லிவடையில் அடிக்கடி கமெண்ட் போடுவார் மற்றபடி நல்லவர் :-)//

நான் கூட அப்பிடித்தானுங்கோ.

Madhavan Srinivasagopalan said...

// இட்லிவடையில் அடிக்கடி கமெண்ட் போடுவார் மற்றபடி நல்லவர் :-) //

அந்த கேட்ட பழக்கம் எனக்கும் இருக்கு...
மத்தபடி நானும் நல்லவந்தான்.........

Anonymous said...

இது மாதிரிக் கட்டுரைகள்தான் இட்லி வடைக்கு ஒரு பத்து பைசா அளவு கௌரவத்தைத் தருகின்றன..
.
இரணடு நாள் முன்னாதாகப் போட்டிருந்தால் சென்னையில் உள்ளவர்கள் போயிருப்பார்கள். அடுத்த வருஷம் கட்டாயம் போகக் குறித்துக் கொண்டுள்ளேன்.ரோமிங் ராமன் அவர்களுக்குப் பாராட்டுகள் -- ஆர்

ராஜசுப்ரமணியன் said...

உணர்ச்சிகரமான ஒரு நல்ல பதிவு. நன்றிகள்.

சுபத்ரா said...

மனதைத் தொட்ட பதிவு மற்றும் தகவல். நன்றி ரோமிங் ராமன்.

Anonymous said...

/படித்து விட்டு தான் கீழே போடுவார்./

இனிமேலாவது கீழ போடாம குப்பைத் தொட்டியில் போடச் சொல்லுங்க!

Rathnavel Natarajan said...

Good Blog Mr Roaming Raman.

Erode Nagaraj... said...

நல்ல பதிவு. நன்றி.

பெருங்குளம் இராமகிருஷ்ணன் அண்ணா, எப்படி இருக்கிறீர்கள்?

நீண்ட நாட்களுக்கு முன்பு உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்!

Unknown said...

Very good message. Good things are happening then and there.But someone has to tell us about the good things. Thanks for Roaming Raman.Keep it up.


-V.RAJA

Unknown said...

ராமன் அவர்களை பற்றி தாங்கள் தெரிவித்த கருதுக்கு நன்றி பார்த்திபன்

Unknown said...

sir kalakuringa Raman sir.. ur sizyapulla...

சந்தியா ராமலிங்கம் said...

அரசியல் கலக்காத நல்ல விஷயங்களைக் கூட இட்லியில் ருசிக்கலாம் என்பதற்கு ஒரு உதாரணம்!!ஆனால், நீங்கள் குறிப்பிட்டுள்ள நாகையின் நண்பர் பெயர் வீணை சிவா அல்ல!! அவர் பெயர் வீணை வாசு என்று வேறிடத்தில் படித்ததாக ஞாபகம்!!