பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 27, 2011

தினந்தோறும் வாங்குவேன் இதயம்...- ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

[ ராஜ்தீப் சர்தேசாய்யுடன் டிவிட்டரில் தமிழில் பேசும் தாளிக்கும் மாமி, புது கம்ப்யூட்டர் புது பிரிண்டர் வாங்கியிருப்பதாக டிவிட்டரில் படித்துவிட்டு அவசரமாகத் தொடர்புகொண்டோம். அங்கவை சங்கவையோடு பழகிப்பார்க்கவேண்டியிருப்பதால் தன் வலைப்பதிவில் எதுவும் புதிதாகப் பதியமுடியாத நெருக்கடியில் இருந்தவரிடம் இட்லிவடையில் போடலாம் என்று சொல்லி வாங்கிப் போட்டிருக்கிறோம். இது அவர் இட்லிவடையில் எழுதும் முதல் பதிவு என்பதால் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன் :-) ]

தினந்தோறும் வாங்குவேன் இதயம்...- ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்

டாக்டர்: ”உங்க சாப்பாடு ரொட்டீன் எப்படி?”

”சராசரி வெஜிடேரியன் மிடில் க்ளாஸ் ஹைவுஸ்ஃவைப் சாப்பிடற அதே சாப்பாடு.. அளவு.”

”அது சரியில்லை. நீங்க டயடீஷியனைப் பார்த்து அவங்க சொல்றதை ஸ்டிரிக்டா ஃபாலோ பண்ணுங்க. 3 மாசம் பார்க்கலாம்...”

டயட்டீஷியன்: உங்க சாப்பாடு, எக்ஸர்ஸைஸ் பத்தி சொல்லுங்க.

“சராசரி வெஜிடேரியன் மிடில் க்ளாஸ் ஹைவுஸ்ஃவைப் சாப்பிடற அதே சாப்பாடு... அளவு. தினம் காலைல ஒன்றரை மணி நேரம் ப்ரிஸ்க் வாக்; ஈவினிங் அரை மணிநேரம் சைக்ளிங். வழமையான வீட்டுவேலைகள்..”

"ஓகே.. உங்களுக்கான பிரத்யேக சார்ட் இது. இனிமே ஃபாலோ பண்ணுங்க. பெரிய பிரச்சினை எதுவும் இல்லை," என்று சொல்லி தானும் ஒருமுறை சந்தேக நிவர்த்திக்காகப் படித்துக் காண்பித்தார். அடைப்புக்குறிக்குள் தமிழில் இருப்பவை அப்போது நான் ஹிந்தியில் சொன்னவை. “ஓ, அதனாலதான் வெயிட் போடாம இருக்கீங்க” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்துவிட்டு, ஆனால் இன்னும் மேம்பட்ட வாழ்க்கைநெறிக்கு தன் அறிவுரைப்படியே சாப்பிடவேண்டும் என்று எச்சரித்தார்.Energy: 1775 kcal Protein: 50 gm
Morning:
1/4 tsp Fenugreek seeds (soaked overnight) [ஏற்கனவே இதைச் செய்துவருகிறேன்.]

7:oo am
1 Cup Tea/coffee (1/2 tsp sugar) + Milk (75 ml) [ஒரே தடவை என்பது கொஞ்சம் கடினம். இரண்டு தடவையாக அளவைக் குறைத்து சாப்பிடலாம். இனிப்புச் சுவை பிடிக்காததால் எப்பொழுதுமே சர்க்கரை அறவே போட்டுக்கொள்வதில்லை.]
Breakfast:
8:30 am:
1 chapattis [No oil/ghee/butter] with vegetable / 1 vati Poha/ upma/ Daliya (with vegetables) / 2 idli with Sambhar/ 1 1/2 dosa with Sambhar/ 1 katori oatsmeal/ 1 katori wheat flakes/ 1 katori muesli with one cup milk/ 2 pcs vegetable sandwich with whole wheat bread

11:00 am
1 fruit (100gm) [Pineapple, apple, orange, papaya, melons]

LUNCH 1:30 pm
2 Chapatti [no oil/ ghee]
1/2 Katori Rice
1 Katori Dal
1 Katori Veg. [preferably greens or gourd vegs]
1 Katori salad [1/2 beetroot + cucumber + tomato]

SNACKS 4:30 pm
1 Cup Tea/coffee (1/2 tsp sugar) + Milk (75 ml) [சர்க்கரை தேவையே இல்லை]
1 Fruit/ 1 katori sprouts/1 katori kurmura/ 1 handful roasted chana/ 1 katori dry bhel/ 1 vegetable sandwich

DINNER 9:00 pm

[மிகத் தாமதம். எவ்வளவு நேரம் வேண்டுமானால் இரவில் விழித்திருக்கலாம். ஆனால் சமையலறை வேலை 8 மணிக்குள் முடிந்துவிட வேண்டும்.]
2 Chapatti [no oil/ ghee]/ 1 jowar bhakari/ 1 nachani bhakari
1 Katori Dal
1 Katori Veg.
1 Katori salad

BED TIME: 1 cup milk [150 ml]

Notes:
• Avoid the use of fried food, sweets, sugar, honey, jaggery, groundnut, coconut (wet/dry), white bread, biscuit, bakery products, cakes and deserts, maida products, fruit juices, egg yolk. [இதில் பல பொருள்கள் இனிப்புச் சுவை என்பதால் என் சாப்பாட்டிலேயே இல்லை.]
• Incorporate lemon juice, mint, corriander, chillies and masalas to taste.
• Drink 12-14 glasses of water per day. [இது எனக்கு ஏற்கனவே சர்வசகஜமான விஷயம்தான்.]
• Incorporate more green leafy veg, salads and sprouts in your meal.
• Have 1-2 fruits per day.
• No fasting and feasting. Avoid eating outside. [முதல் பகுதி ஓக்கே. இரண்டாம் பகுதி கொஞ்சம் கடினம்.]
• Avoid chips, wafers, farsen or soda containg food items. [பிரச்சினையே இல்லை.]
• Salted cheese, butter and nuts should be avoided [பாதாம் தவிர எதுவும் சாப்பிடுவதில்லை.]
• Maintain meal timings
• Exercise Regularly. 1 hr brisk walking compulsory. [காலையில் ஒன்றரையிலிருந்து இரண்டு மணிநேரம் நடையும் அரை மணி நேரம் வீட்டினுள் சைக்கிளிங்கும் ஏற்கனவே செய்துவருகிறேன்.]

Oil: 3 tsp/day [ம்…]

(signature)
DIETICIANதானும் ஒருமுறை டயட் சார்ட்டை வாங்கிப் பார்த்து, விவரமாக எல்லாவற்றையும் சொன்ன டாக்டர், தன் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துப் போட்டுக்கொள்ளும்போது, தமிழ் சினிமாக்களில் எல்லாம் வருவது மாதிரி, “அதிர்ச்சி தர எதுவும் அவங்ககிட்ட சொல்லாதீங்க!” என்று குடும்பத்தினரிடம் எச்சரிக்காமல் விட்டுவிட்டார்.

”உடப்பைப் பார்த்துக்கன்னா கேக்கறியா? கண்ட நேரத்துல சாப்பிடறது. கம்ப்யூட்டர் பார்க்கும்(?)போதெல்லாம் சாப்பிடறது.. இனிமே நான் செக் வெக்கறேன். வெரைட்டியா பழங்கள் வாங்கிப்போடறதோட சரியா சாப்பிடறாயான்னு வேற நான் பார்க்கணும். எனக்குக் காத்திருக்காம நேரத்துக்கு சரியா சாப்பிடு.... மாசத்துக்கு 1 லிட்டருக்கு மேல எண்ணெய் வாங்கப்போறதில்லை... ” உள்ளே நுழைந்ததுமே, டயட் சார்ட்டை கண்படும் இடத்தில் மாட்டி... ஊரார் கண்படுவதுபோல் கவனித்துக்கொண்டு... ஒவ்வொரு வேளைக்கும் அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி, பொய் சொல்லுகிறேனோ என்று பெண்ணிடம் குறுக்குவிசாரணை செய்து...

“இனிமே நான் படுத்தாம, டென்ஷன் தராம இருக்கேன்மா. ஆர்கனைஸ்டா இருக்கேன்மா. நீ சொன்னதெல்லாம் கேக்கறேம்மா...” ஸ்கூல்விட்டு வந்து ஷூவைக் கழட்டி அதன் அலமாரியின் வைத்து, சாக்ஸைத் தோய்க்கப்போட்டு, யூனிஃபார்ம் மாற்றி, எனக்குச் சமைத்ததையே சமர்த்தாய் தானும் சாப்பிட்டு, சொல்லவேண்டிய அவசியமில்லாமல் சுயமாய் வீணை வகுப்புக்குக் கிளம்பி...

அதிர்ச்சியில் பேச்சுமூச்சில்லாமல் போனேன். அதீத அக்கறை காட்டும் கணவனும், அடங்கிப் போகிற பெண்ணும் சகிக்கமுடியாத கொடுமை என்பது இரண்டே நாளில் தெரிந்தது. நல்லவேளையாக “எல்லாம் ஒரு மாசத்துல ‘நார்மல்’ ஆயிடும், கவலைப்படாதே” என்று அப்பாதான் உலக யதார்த்தத்தைச் சரியான நேரத்தில் சொல்லி என்னை ஆறுதல்படுத்தினார். அப்படியே ஆனது.

சாப்பாட்டுக்கு முக்கால் அல்லது ஒரு மணிநேரம் முன்னால் ஃப்ரிட்ஜைத் திறந்து, ஒரே ஒருநிமிடத்தில் என்ன சமையல் என்று முடிவுசெய்து, அடுத்த முக்கால் மணிநேரத்தில் முழுச் சமையலும் முடித்துவிட்டு சமையலறையைவிட்டு வெளியே வருவது-- என்ற என் இத்தனைவருட வாழ்க்கை வெறும் வரலாறாகிப் போனது. நினைத்தபோது நினைத்ததை அல்லது கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டிருந்த எனக்கு, இப்போது அடுத்தவேளைக்கு என்ன உணவு என்றுபார்த்து தயார்செய்துகொண்டு, விரதம் இருந்த குரங்கு மாதிரி நொடிக்கொருதரம் மணியைப் பார்த்து அடுத்தடுத்து சாப்பிடுவதும், சாப்பிட்ட கையோடு அடுத்தவேளைக்கு என்ன உணவு என்று குறித்துக்கொண்டு ஆவனசெய்வதுமே அன்றாட வேலையாகிப் போனது. ”எனக்கென்னவோ ஓவரா சாப்பிடறேனோன்னு தோணுது” என்ற என் பயத்தைக் காதுகொடுத்துக் கேட்க நாதியில்லை வீட்டில். ”எனக்கு அனுப்பு, நான் பார்க்கறேன்!” என்று சொல்லிவிட்டு, "/ போட்டா அதுல ஏதாவது ஒரு ஐட்டம் சாப்பிட்டா போதும்(OR)னு அர்த்தம். நீ AND-னு நினைச்சு எல்லாத்துலயும் வகைக்கு ஒன்னா வெட்றியா?” என்று தம்பி மட்டும் எரிச்சலில் எண்ணெய் வார்த்தான்.

ஒருவழியாய் 3 மாதம் கழிந்து டாக்டர் அறைக்குள் நுழைந்த நொடி, டாக்டர் பதற்றமா கோபமா என்று இனம்பிரிக்கமுடியாத வேகத்தில் அந்தக் கேள்வியைத் தூக்கிப் போட்டார்- “Why you have put this much weight?"

போங்கடா நீங்களும் உங்க டயட் கண்ட்ரோலும்...

- ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்நமக்கெதற்கு இந்த வீர விபரீத விளையாட்டு? மூன்றே மாதத்தில் ’தாளிக்கும்’ வாழ்க்கையும் நார்மலுக்குத் திரும்பியிருக்கும் என்று நம்புவோம்! இன்னொரு விஷயம் இட்லிவடையில் எழுதுவது டயட்டில் சேர்த்தி கிடையாது, தொடர்ந்து எழுதினால் கொழுப்பு குறையும். ஓ.கே யாரு நெக்ஸ்ட் ?

பிகு படம்: An apple and a visit to idlyvadai.blogspot.com a day, keeps the doctor away!


13 Comments:

(-!-) said...

:>

Unknown said...

சரி, முக்கியமா கேள்வி:

1. அப்போ, இட்லிவடையும், ஜெயஸ்ரீயும் வேற வேற நபர்களா? (ஹிஹி).
2. அஸ் யூஷுவல், டாக்டரின் ப்ரிஸ்கிருப்ஷன் தப்பு என்கிறாரா? இல்லை, வெயிட் போட்டதுக்கு டாக்டரின் மேல பழியா?

இனிப்புப் பிடிக்காதுன்னு (தீசலா) சொன்னா அப்படித்தான் ஆகும்:-P

ரோமிங் ராமன் said...

காலம் ரொம்ப மாறிப் போச்சுங்க!! நம்ப தாத்தா பாட்டில்லாம் இந்த டயட்டீஷியன், பியூட்டியீஷியன் கிட்ட ஈஷிக்கல.. ஆனாலும் அவர்கள் ஹெல்த் அழகு எல்லாம் நன்றாகவே இருக்கலியா என்ன? யாரும் சொல்லித்தராத டயட்டும், உடற்பயிற்சிகளும் தானாக நடந்து கொண்டிருந்த காலம் அது! இப்போ சாதாரணமான நடக்கின்ற(walking) பழக்கம் ஒரு எக்ஸ்சர்சைஸ் என்று ஆகி விட்டது!! விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு படித்த பெண் கூறுகிறார்: "நானும் என் கணவரும் அப்பப்போ நக்ஷத்திர ஹோட்டல்களின் பப்களில் வித விதமான காக்டெயில் அருந்துவோம்., அதனை எங்கள் வீட்டில் தயாரிக்க முயற்சி செய்வோம்" - இது இந்தக்காலம்..

பொன் மாலை பொழுது said...

/// "/ போட்டா அதுல ஏதாவது ஒரு ஐட்டம் சாப்பிட்டா போதும்(OR)னு அர்த்தம். நீ AND-னு நினைச்சு எல்லாத்துலயும் வகைக்கு ஒன்னா வெட்றியா?” என்று தம்பி மட்டும் எரிச்சலில் எண்ணெய் வார்த்தான்.///

நல்ல கூத்துதான்.

/// போங்கடா நீங்களும் உங்க டயட் கண்ட்ரோலும்...///

தாங்கல தாயே!!:))))))))

R. Jagannathan said...

//போங்கடா நீங்களும் உங்க டயட் கண்ட்ரோலும்...// படிக்க ஆரம்பித்த கொஞ்ஜ நேரத்தில் நான் எழுதவிருந்த கம்மென்ட் - ஜெயஸ்ரீ அவர்களே எழுதிவிட்டார்!
// "/ போட்டா அதுல ஏதாவது ஒரு ஐட்டம் சாப்பிட்டா போதும்(OR)னு அர்த்தம். நீ AND-னு நினைச்சு எல்லாத்துலயும் வகைக்கு ஒன்னா வெட்றியா?”// படிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதையா! - ஜெ.

கௌதமன் said...

இங்கு பட்டியலிடப்பட்டிருபவைகளில், காலை germinated fenugreek - 1/2 table spoon, அரை மணி நடை மட்டும் செய்கின்றேன். காபி / டீ - கடந்த ஓர் ஆண்டாக நிறுத்திவிட்டேன். (காபி எப்பொழுதாவது நண்பர்களை சந்திக்கும் பொழுது / கல்யாண வீடுகளில் அல்லது கத்ரி கச்சேரியை ஸ்பீக்கர் அருகில் இருந்து கேட்க நேரிட்டால். கிரீன் டீ வாரத்தில் ஒரு நாள் உண்டு.) மற்றபடி காலை டிபன், மதியச் சாப்பாடு, இரவு மோர் சாதம். இவை மட்டுமே! எடை இருபத்தைந்து வருடங்களாக ஐம்பத்தைந்து கிலோதான்!

Anonymous said...

In fact I am taking along with this diet list only one fruit per day; even my weight has not reduced any way; What can I do

(P.S. The one and only fruit is just JACK FRUIT ONLY)

sUPPAMANI
pALGHAT.

வலைஞன் said...

என்ன சொன்னாலும் எழுதுவதில் ஜெயஸ்ரீயை விட்டால் ஆளில்லை.
ஸ்ரீரங்கத்து நடை அருமையாக வந்திருக்கு.தனக்கு என்ன ailment என்று சொல்லாமலேயே,டாக்டர் டயட் கொடுத்ததை என்ன சுவை பட வர்ணிக்கிறார் பாருங்கள்.
சீக்கிரம் குணமாக அந்த "பள்ளி கொண்ட பெருமாள்" அருள் புரிவாராக!

R. Jagannathan said...

/(P.S. The one and only fruit is just JACK FRUIT ONLY)/ குறைஞ்ஜது பழத் தோலையாவது சாப்பிடாமல் இருந்து பாருங்க, கொஞ்ஜம் வெய்ட் குறையலாம்! - ஜெ.

பெசொவி said...

//பிகு படம்//

நீங்க பெரிய ஆளுன்னு பிகு பண்றா மாதிரி இருக்கு!:)

பிரகாஷ் said...

டாக்டர் கொடுத்த பிரத்யேக சார்ட்ல உள்ள ஐட்டங்களை சாப்பிடுறதுக்கு முன்னாடி எடுத்துக்கிட்டீங்களா? இல்ல, சாப்பாட்டுக்கு அப்புறமா எடுத்துக்கிட்டீங்களா?
:)

Unknown said...

தேங்காய் கூடாது என எழுதி கொடுத்த அறிவாளி யார்?

தேங்காய் கூடாது..காப்பி/சப்பாத்தி ஓக்கே..அட்வைஸ் செய்த மகராசனுக்கு கோயில் கட்டி கும்பிடணும்.

இந்த டயட்டை பின்பற்றினால் அப்புறம் உடல் எடை ஏறாம என்ன ஆகும்? கொடுமை. ஆண்டவா இந்த டாக்டருங்க கிட்ட இருந்து இந்த நாட்டை நீதாம்பா காப்பத்தணும் :-(

Unknown said...

தேங்காய் கூடாது என எழுதி கொடுத்த அறிவாளி யார்?

தேங்காய் கூடாது..காப்பி/சப்பாத்தி ஓக்கே..அட்வைஸ் செய்த மகராசனுக்கு கோயில் கட்டி கும்பிடணும்.

இந்த டயட்டை பின்பற்றினால் அப்புறம் உடல் எடை ஏறாம என்ன ஆகும்? கொடுமை. ஆண்டவா இந்த டாக்டருங்க கிட்ட இருந்து இந்த நாட்டை நீதாம்பா காப்பத்தணும் :-(