பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 10, 2011

பெங்களூர் சமஸ்க்ருத புத்தகக் கண்காட்சி - ஸ்ரீகாந்த்

சன்டிவியில் ஞாயிற்றுக் கிழமை உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக என்று ஒரு படம் போடுகிறார்கள் என்றால் அதற்கு முதல் வாரம் திங்கள் கிழமையிலிருந்தே அந்த படத்தின் பாடல்கள், காமடி, அதிரடிக் காட்சிகள் சன் குழுமத்தின் அனைத்து சானல்களிலும் காண்பிக்கப் பட்டு விடும். இது ஞாயிற்றுக் கிழமை படத்தின் பார்வையாளர் எண்ணிக்கையை பெருக்கவா அல்லது தற்செயலா என்று தெரியாது. அது போல்தான். தமிழ் இணைய உலகில் ஜனவரி மாதம் வந்தால் போதும் - அநேகமாக எல்லா வலைத்தளங்கள், பதிவுகள், டிவிட்டர்கள், பேஸ்புக்குகள் என்று அடைத்துக் கொண்டு புத்தகக் கண்காட்சி பற்றிய செய்திகள் தான். ஸ்பெக்ட்ரம் சைசுக்கு ஊழல் பற்றி நியூஸ் வந்தாலும் இந்த சமயத்தில் பின்னுக்குத் தள்ளப் படும்.

இந்த புத்தகக் கண்காட்சி சென்னையில் மையம் கொண்டு வாசகர்களை, பதிப்பாளர்களை, வலைப் பதிவர்களை எல்லாம் ஆக்கிரமித்திருக்கும் போது, பெங்களூரிலும் இதே போல ஒரு புத்தகக் கண்காட்சி நடந்தது. இது சமஸ்க்ருத புத்தகக் கண்காட்சி! ஆ.. வடமொழியா அது செத்த மொழியாயிற்றே... எவன் வருவான் புத்தகம் வாங்க என்று நீங்கள் நினைத்தால் நான் பொய் சொல்லவில்லை - புகைப் படங்களைப் பார்த்துக் கொள்ளவும். சென்னையைப் போல் இரண்டு வாரங்கள் அல்ல - இது வெறும் மூன்று நாட்கள் ஜனவரி 7- 9 வரை நடந்த புத்தகக் கண்காட்சி. அதற்கு மேல் கூட்டம் வரும் என்று நடத்தியவர்களுக்கே நம்பிக்கை இருக்க வில்லை போல. ஆனால் நிச்சயம் அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வாசகர் கூட்டம் கூடியது.

இந்த புத்தகக் கண்காட்சி சமஸ்க்ருதபாரதி அமைப்பால் சுமார் ஒருவருடம் முன்பே திட்டமிடப்பட்டு இப்போது நடந்து முடிந்துள்ளது. வெறும் புத்தகக் கண்காட்சி என்பதோடு மட்டும் அல்லாமல் சமஸ்க்ருத அறிஞர்களுக்கான மாநாடுகள், எடியூரப்பாவிலிருந்து, குமாரசாமி வரை அரசியல் புள்ளிகள் கலந்து கொண்ட விழாக்கள், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கச்சேரி என்று கோலாகலமாக மூன்று நாட்களும் அமளி துமளி ஆனது. இந்த மாநாடுகளுக்கு கலந்து கொள்ள சுமார் பத்தாயிரம் சமஸ்க்ருத அறிஞர்கள் இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து அழைக்கப் பட்டார்கள். இந்த மாநாடு கம் கண்காட்சியின் மொத்த செலவு சுமார் மூன்று கோடி என்று கணக்கிடப் படுகிறது. சமஸ்க்ருத பாரதி உறுப்பினர்கள், சம்ஸ்க்ருத அபிமானிகளிடம் நன்கொடை மூலமாகவும், கர்நாடக அரசு, மத்திய அரசு மற்றும் ராஷ்ட்ரிய சம்ஸ்க்ருத சம்ஸ்தான் அமைப்பு ஆகியவற்றின் மூலமாகவும் நிதி திரட்டப் பட்டு சமஸ்க்ருத பாரதி இந்த நிகழ்வை விமரிசையாக நடத்தியுள்ளது.

இந்த புத்தகக் கண்காட்சி நடந்த முறை பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். சுமார் இருநூறு ஸ்டால்கள் அமைக்கப் பட்டு சௌகாம்பா பப்ளிஷர், மோதிலால் பனாரசி தாஸ் போன்ற பல்வேறு பிரபல பதிப்பாளர்கள் கடை விரித்திருந்தார்கள். சமஸ்க்ருத பாரதியும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒன்றாக பல ஸ்டால்கள் போட்டிருந்தார்கள். பெரும்பாலும் சமஸ்க்ருதத்தில் பேசியே புத்தகம் விற்றார்கள். இதில் இன்னொரு ஆச்சரியம் வாங்க வந்தவர்களும் விளையாட்டுக்காகவாவது கொஞ்சம் கொஞ்சம் சமஸ்க்ருதம் பேசினார்கள். புத்தகக் கண்காட்சிக்கு வெளியே சமஸ்க்ருத கிராமம் என்று கடைகள், வீடுகள், பள்ளிக் கூடம் ஒரு சிறு மாதிரி கிராமம் அமைத்து வைத்திருந்தார்கள். இது தவிர ஞானகங்கா என்று ஒரு சம்ஸ்க்ருத மொழி குறித்தும் நமது கலாசாரம் குறித்தும் ஒரு கண்காட்சியும் வைத்திருந்தனர்.

இந்த கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிடும் புத்தகங்கள் போலவே, சமஸ்கிருத பாரதியும் பளபளப்பாக சிறிய இருபது இருபத்தி ஐந்து ரூபாய் மதிப்பிலான சமஸ்க்ருத புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். இவை பெரும்பாலும் சமஸ்க்ருதம் கற்க உதவும் எளிய புத்தகங்கள். இது தவிர சமஸ்க்ருதம் தெரிந்தவர்களுக்காகவும் புத்தகங்கள் இருந்தன. நிறய பேர்கள் சமஸ்க்ருத தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆங்கிலம் ஆகிய பல மொழிகளில் பொருள் தரும் சமஸ்க்ருத அகராதிகள் வாங்கினர். அங்கங்கே "வாசஸ்பதீயம்" இருக்கிறதா.. "அமரகோசம்" இருக்கிறதா என்ற கேள்விகள் காதில் விழுந்தது. சமஸ்க்ருத பாரதி விற்ற புத்தகங்களில் என்னைக் கவர்ந்தது கல்கி அவர்களில் கதைத் தொகுப்பு ஒன்று சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப் பட்டிருந்தது. இன்னொன்று புகழ் பெற்ற சுகபோதானந்தா அவர்களில் "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" புத்தகம் "ஹே மன: சமாஸ்வசிது" என்று சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப் பட்ட புத்தகம்.

சில கடைகளில் பதிப்பாளர்களுக்கு என்ன விற்பது என்று தெரியவில்லை போல. கடை வாசலில் பிரம்ம சூத்திர பாஷ்யம், பதஞ்சலி பாஷ்யம் என்று வைத்திருந்தார்கள். விலை எல்லாம் இரண்டாயிரம், நான்காயிரம் என்று மிரட்டியது. ராமகிருஷ்ணா மிஷன், தஞ்சை சரஸ்வதி மகால், சிருங்கேரி மடம் போன்ற அமைப்புகளும் ஸ்டால்கள் போட்டிருந்தார்கள். தஞ்சை சரஸ்வதி மகால் ஸ்டாலில் எளிய தமிழில் அமரகோசம், தஞ்சபுரி மாகாத்மியம், தஞ்சை மன்னர்கள் எழுதிய சம்ஸ்க்ருத நூல்கள் ஆகியவை விற்பனைக்கு கிடைத்தன. இது தவிர வேறு சில ஸ்டால்களில் விவேகானந்தர், ராமகிருஷ்ணர் போன்றோரின் வாழ்க்கை வரலாறு சமஸ்க்ருதத்தில் இருந்தது. சில கன்னட தெலுங்கு நாவல்களும் சமஸ்க்ருதத்தில் இருந்தது. இது தவிர சுதர்மா, ரசனா, சந்தமாமா போன்ற சம்ஸ்க்ருத தினசரி, மாதாந்திர பத்திரிகைகள் ஸ்டால்கள் போட்டிருந்தனர்.

நான் மூன்று நாட்களுமே கண்காட்சிக்கு போயிருந்தேன். சனிக்கிழமை மாலை கூட்டம் மிக அதிகம். கண்காட்சிக்கு உள்ளே நுழையவே நீண்ட க்யூ நின்றது. சென்னைப் புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்களுக்கு (அல்லது பெங்களூர் புத்தகக் கண்காட்சியையும் சொல்லலாம்), இருக்கும் அனுபவம் இந்த சம்ஸ்க்ருத புத்தகக் கண்காட்சி அமைப்பினருக்கு போதவில்லை என்று கூறவேண்டும். புத்தகக் கண்காட்சியில் கடைகள் இரு பக்கத்திலும் கொஞ்சம் நெருக்கமாக இருந்ததாகப் பட்டது. அதனால் மக்கள் கடை வாயிலில் நின்று பார்க்கவும், நடுவில் நடந்து செல்லவும் இடம் போதவில்லை. கடைகளில் புத்தகங்கள் விலை குறைவாக இருந்தாலும் எங்கும் சில்லறை தட்டுப் பாடு இருந்தது. சென்னை புத்தகக் கண்காட்சியில் குறுக்கே நடந்து போக இடம் விட்டிருப்பார்கள். அவசரமாக வெளியேற வசதியாக இருக்கும். அங்கங்கே குடிதண்ணீர் இருக்கும். அதெல்லாம் இந்த கண்காட்சியில் இல்லாததால் கொஞ்சம் பிரச்னை இருந்தது.

மற்றபடி சமஸ்க்ருத புத்தகக் கண்காட்சி என்பது ஒரு புதிய, கொஞ்சம் துணிவான, முயற்சி என்று சொல்லலாம். நான் பார்த்தவரை ஓரளவு நன்றாகவே நடந்தது. அமைப்பாளர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் பெரிய லாபம் இருக்கிறதோ இல்லையோ நஷ்டம் ஆக வாய்ப்பு மிகக் குறைவே. துணிந்து முயற்சி எடுத்த சமஸ்க்ருத பாரதி அமைப்பைத் தாராளமாகப் பாராட்டலாம்.

- ஸ்ரீகாந்த்

[பெங்களூரில் கணிப்பொறி துறையில் வேலைபார்க்கும் ஸ்ரீகாந்த், சமஸ்க்ருத ஆர்வலர். இணையத்தில் அவ்வப்போது சமஸ்க்ருதம் குறித்து எழுதி வருகிறார். தமிழில் சமஸ்க்ருத மொழி குறித்து சங்கதம் என்கிற வலைத்தளம் (http://www.sangatham.com) ஒன்றும் நடத்தி வருகிறார். இட்லிவடை வாசகர்கள் சமஸ்க்ருதம் கற்றுக்கொள்ள ஆர்வம் என்றால் தனியாக கிளாஸ் நடத்த இவரிடம் கேட்கலாம். உங்க கருத்தை சைடுல் இருக்கும் ஓட்டு பெட்டியில் போடவும் ]

இதை சென்னையில் நடத்தினால் 'ஈ' ஓட்டுவார்கள், நடத்துபவர்களை திராவிட கட்சிகாரர்கள் ஓட்டிவிடுவார்கள்.


படங்கள்9 Comments:

R. Jagannathan said...

அந்த கடைசி கும்பல் படங்களெல்லாம் SPB கச்சேரிக்குத் தானே? ! - ஜெ.

Madhavan Srinivasagopalan said...

// ஞாயிற்றுக் கிழமை உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக என்று ஒரு படம் போடுகிறார்கள் என்றால் அதற்கு முதல் வாரம் திங்கள் கிழமையிலிருந்தே அந்த படத்தின் பாடல்கள், காமடி, அதிரடிக் காட்சிகள் குழுமத்தின் அனைத்து சானல்களிலும் காண்பிக்கப் பட்டு விடும். இது ஞாயிற்றுக் கிழமை படத்தின் பார்வையாளர் எண்ணிக்கையை பெருக்கவா அல்லது தற்செயலா என்று தெரியாது.//

என்னாத்துக்கு இப்படிலாம் எழுதி.. அந்த சானலுக்கு விளம்பரம் பண்ணுறீங்களோ தெரியலை..

ஜடாயு said...

நல்ல பதிவு ஸ்ரீகாந்த்.

நானும் நேற்று போயிருந்தேன். நல்ல கூட்டம். சம்ஸ்கிருத்த்தின் பெயரால் தேசமெங்கும் உள்ள மக்கள் திரளை ஒரு பண்பாட்டு இழையில் இணைக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய சம்ஸ்கிருத பாரதி அமைப்பினருக்கு வாழ்த்துக்கள்!

பாரதத்தின் கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் அந்த மைதானத்தில் ஒட்டி உறவாடியது ஒரு மினி பாரத தரிசனமாக சிலிர்ப்பூட்டியது.

மாநாட்டு அரங்கு அபாரமாக இருந்தது. ராம்கோ குரூப் தலைவர் ராமசுப்பிரமணிய ராஜா நேற்று மாலை சம்ஸ்கிருதக் கல்வியின் அவசியம் பற்றும் பயன்பாடுகள் குறித்து அருமையாகப் பேசினார். அவர்களது குடும்பத்தில் எல்லாருக்கும் சம்ஸ்கிருதம் தெரியுமாம். அவர்களது சொந்த ஊர் ராஜபாளையத்திலும் சம்ஸ்கிருத பாரதியின் சேவையால் பலர் சம்ஸ்கிருதம் கற்றூக் கொண்டு விட்டார்கள் என்றும் சொன்னார். தமிழக சம்ஸ்க்ரித பாரதி கிளைத் தலைவர் பெயர் டாக்டர் அலெக்ஸ் !!! ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரி. மலையாள உச்சரிப்பில் ஆங்கிலம் பேசினார்.

கண்காட்சி ஓரளவு நன்றாக இருந்தது. இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். குறிப்பாக பண்டைய சம்ஸ்க்ருத நூல்களில் அறிவியல் பற்றி பல அரங்குகளில் தட்டிகள் வைத்திருந்தார்கள், இதில் 60% தட்டிகள் சரியானவை, ஆதாரபூர்வமானவை. மீதி அதி-ஊகங்களின் அடிப்படையில் “எல்லாமே பழைய நூல்களில் இருக்கு” என்று முன்முடிவுடன் உருவாக்கப் பட்டவை, இவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

Vasu said...

Srikanth,

Thanks for a nice write-up on the World Samskrita book-fair! Felt like I was there.

Please write more on the book-fair, especially any books that you or your friends bought.

Some books in the value of Rs 2000 - 4000/- looks obviously expensive, but still on the global scale, books are cheap in India. Sometimes we do undervalue our books as much as our knowledge.

ConverZ stupidity said...

//இதை சென்னையில் நடத்தினால் 'ஈ' ஓட்டுவார்கள், நடத்துபவர்களை திராவிட கட்சிகாரர்கள் ஓட்டிவிடுவார்கள்.
//

நச் கமெண்டு. அரசே ஒரு மொழியை/அறிவை பொதுமக்கள் கற்றுக் கொள்ள முடியாமல் தடுப்பது சரியான நடவடிக்கை அல்ல. ஆனால் துரதிருஷ்ட வசமாக சம்ஸ்க்ருதம், ஹிந்தி என்று மற்ற மொழிகளை தமிழர் தெரிந்து கொள்ளாமல் தடுப்பதே தமிழக அரசியலாக இருந்து வருகிறது.

எனக்கு சமஸ்க்ருதம் பயில ஆவல். ஸ்ரீகாந்த் ஆன்லைன்ல சொல்லி தருவாரா. ஸ்நேகமுள்ள
இட்லிவடை இந்த விஷயத்துல கொஞ்சம் ஸ்ரீகாந்த் சார்- ஐ கேட்டு சொல்ல முடியுமா

ரோமிங் ராமன் said...

//இதை சென்னையில் நடத்தினால் 'ஈ' ஓட்டுவார்கள், நடத்துபவர்களை திராவிட கட்சிகாரர்கள் ஓட்டிவிடுவார்கள்.
//
இங்கு நடந்து கொண்டிருப்பது ஒரு (சில என்று வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம் ) போலி தமிழ் அறிஞர்கள் கும்பலின் விளையாட்டு !! ஆனால் நன்றாக யோசித்துப்பார்த்தால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட சமஸ்க்ருத அறிஞர்கள் போல் தமிழ் அறிஞர்களைககாண்பது மிக அரிது!! உடனடி உதாரணங்களாக கண்ணுக்குத் தெரிந்த ஆன்மிக சொற்பொழி வாளர்களைப் பாருங்களேன் ...திரு வேளுக்குடி கிருஷ்ணன்,அனந்த பத்மநாபா சாரியார், எம் ஏ வேங்கட கிருஷ்ணன் ... என்று வாழ்கிற காலத்திலேயே பெரிய லிஸ்ட் இருக்கே!! இந்த டிபார்ட்மென்ட் மட்டுமன்றி எவ்வளவு உள? ஸ்ரீகாந்த் ஒரு பதில் எழுதுவாரா??

தோஸ்த் said...

Sanskrita Bharathi conducts some exhibition in chennai every year during independence day time i guess. They also conducts 10 days free camp for learning sanskrit followed by 3 months courses.Chennai sanskrita bharathi No. for those who want to learn: 044 28472632

Suhrut said...

I live in Chennai yet I was in the World Samskritam book fair on all the 4 days. Some facts to be highlighted - (1) Book sales: 1st day Rs. 1.1 Crore, 2nd day 1.3 Crore and 3rd day 1.4 Crore and forth must be much less as most books got sold out and it was Monday. Yet the total is estimated to be around 5 crore rupees. (2) In Food court all our traditional food items like sugarcane juice, gulkand, tender coconut were available at affordable cost and Pepsis, Cocca Colas, Burgers, etc. were consciously absent. (3) I couldn't spot a cigarette smoker (except the policemen who were smoking on the road!) in the vicinity on all 4 days (this single thing itself can be termed as Bharatiya Samskriti). (4) Samskrita Bharati arranged stay and food on all 4 days for just Rs. 200 per person - no one can imagine such subsidised rates that too in Bangalore for over 12,000 people from all around India. (5) Not even in temples you can see so many people with such traditional attire - Dothi /Saree and many with angavastram and Shika (kudumi). (6) Despite any major security arrangements like gun totting Policemen or security guards (security was fully managed by volunteers) all 4 days were very peaceful - well behaved crowd (Samskritam is certainly the vehicle of Samskriti). (7) Witnessing the success of the show in the first day itself Utranjal state has invited to conduct the next fair in their state, similarly Chatisgarg and few others (8) Rashtriya Samskrita Samstanam alone had took over 2,000 book orders as their stocks got sold out on 2nd day itself. (9) Several high level grammer books and Kavyam books on Samskritam went out of stock on first day itself (the 12,000 odd visiters who came to the show as guests themselves bought those books). (10) I personally picked up about 15 books (most are predetermined - Samskrita Bharati relesed over 60 books especially for this book fair yet I could browse anyone of them - such was the crowd) carrying these books around was another challenge due to crowd. (11) Exibition was a grand success as focus was on Science and Maths - children loved the exhibition than the book fair. (12) Brisk sale of Products made of Panchgavyam were (like Gomutra ark, Honey, Panchagavya soap) at the Samskrita Grama on Sunday - by the Shankara Mutt from Gokarna - they also were out of stock by evening 5 itself. (13) The auditoriam were speaches and performances taken place was also occupied with over 1000 people most of time. (14) One estimate says over 5 lakh people visited the fair (15) Last but the least on the last 2 days there were over 60 people standing in queue from 11.30 AM till 4.30 PM not for Water not for food - just to enter the book fair hall. (16) Somebody said the the fair should've been organised in a bigger place I second that. Except the first two days I couldn't enter the book fair hall and all days I couldn't spend time with the book stalls either for clarifying doubts or browsing books - such was the crowd. Yet all these are excused as this being the first show of its kind.
Thanks to Samskrita Bharati and the people of Bangaluru

Suhrut said...

I live in Chennai yet I was in the World Samskritam book fair on all the 4 days. Visit my blog to read about 18 facts about the book fair

http://prakirtidasan.blogspot.com/