பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 16, 2011

சென்னை புத்தகக் கண்காட்சி - பன்னிரண்டாம் படி சரணம் பொன்னையப்பா

இன்றாவது கூட்டம் வரும் என்று ஏமாந்ததுதான் மிச்சம். வீட்டில் பொங்கல் வைத்த வாசகர்கள், எங்கள் விற்பனையிலும் பொங்கல் வைத்துவிட்டார்கள். பொங்கலோ பொங்கல். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

நாளை ஒருநாளாவது கூட்டம் வரவேண்டும். இப்படி எதிர்பார்த்து காத்திருந்து காத்திருந்து காலங்கள் போய்விட்டது.

காலையில் வெறிச்சென்று இருந்தாலும், மதியம் வாக்கில் கொஞ்சம் சூடு பிடித்தது விற்பனை. இன்னும் சூடு பிடிக்கும் என நினைத்த நேரத்தில் அடி பிடித்துவிட்டது. ஏற்கெனவே மக்கள் வராத நேரத்தில், வெளியில் இசைமன்றம் வேறு. அங்கே ஓர் ஆயிரம் பேர் ஒட்டிக்கொண்டுவிட்டார்கள். விற்பனையில் இசை விழுந்தது.

புத்தகக் கண்காட்சி முடிந்து வெளியே வரும் வரையில் இசைமன்ற - பெரும்பட்டம் பெற்ற அவர் பெயர் மறந்துவிட்டது - நடுவர், பட்டுக்கோட்டையா கண்ணதாசனா என்று பெரிய போரே நடந்துகொண்டிருந்தார். என்னவோ முடிவும் சொன்னார். அவர் முடிவு சொன்னதும் அனைத்து மக்களும் கலைந்து வீட்டுக்குப் போய்விட்டார்கள். இதனாலெல்லாம் விற்பனை குறையாது என்று சிலர் சொல்கிறார்கள். நான் இதை ஒப்புக்கொள்ளவே மாட்டேன். இந்த ஆயிரம் வாசகர்களில் 500 பேர் புத்தகக் கண்காட்சிக்குள் இருந்தால், கண்ணில் பட்ட புத்தகங்களில் சுவாரஸ்யமானவற்றை வாங்கினாலும் வாங்கியிருப்பார்கள். புத்தகம் கண்ணில் பட்டால்தான் வாங்குவார்கள் என்பதுதான் எங்களது அனுபவமும் கூட. இதனைக் கருத்தில் கொண்டு பபாஸி செயல்படவேண்டும். இனிமேல் 5 மணிக்கெல்லாம் விழாவைத் தொடங்கி 7 மணிக்கு முடித்துவிடவேண்டும். விழாவை மட்டும் பார்க்க வருபவர்கள் சீக்கிரமே பாதுகாப்பாக வீடு போய்ச் சேரட்டும். மீதியுள்ள புத்தக ஆர்வலர்கள் ஒரு மணி நேரமாவது அரங்கைச் சுற்றட்டும்.

இன்று மனிதர்களுக்குப் பொங்கல் என்பதால் வீடு தங்கிக் கொண்டாடிய பெருமக்கள், நாளை மாட்டுக்குத்தான் பொங்கல் என்பதால் புத்தகக் கண்காட்சியைத் தேடி வருவார்கள் என நம்புவோம். [இல்லை என்றால், நாளை நானும் சாரு எஃபெக்டில் ‘புத்தகம் வாங்காத இந்த நாடு உருப்படுமா’ என்றுதான் எழுதவேண்டியிருக்கும். :-)]

சபரிமலையில் ஒவ்வொரு படி ஏறும்போதும் ஐயப்பா என்று சொன்னால் மனதில் தைரியமும் நம்பிக்கையும் பிறக்கும் என்பார் என் தாத்தா. 16 முறை சபரிமலை சென்றவர். நானும் சொல்கிறேன். பன்னிரண்டாம்படி சரணம் பொன்னையப்பா.

கிழக்கு கார்னர்:

இன்றைய டாப் 3: ஸ்பெக்ட்ரம் சர்ச்சை, ராஜ ராஜ சோழன், உலோகம்.

- ஹரன்பிர்சன்னா

பேசாம எந்திரன் உருவான கதை என்று புத்தகம் போட்டு, சன் டிவியில் விளம்பரம் கொடுங்க அப்ப தான் கூட்டம் வரும்

9 Comments:

Anonymous said...

ைட்டர்களின் ரசிகர்கள் அமோக விற்பனை புதிய நூல்கள் முதல் பதிப்பு தீர்ந்து அடுத்ததும் இரண்டு நாட்களில் தீரும் என்கிறார்கள். இவரோ கூட்டம் இல்லை விற்பனை இல்லை என்று அழுகிறார். இல்லை பத்ரியும் பாராவும் ஹரனும் பில்டப் கொடுத்தும் விற்பனை மந்தமா.எதுதான் உண்மை

Ramakrishna said...

இப்போழுதவுது ரஜினி எனும் மந்திரத்தின் சக்தி-ஐ ஹரன் பிரச்சன போன்றவர்கள் உணர்ந்தால் சரி.
சற்று rewind செய்து பார்த்தல் தெரியும் இந்த பொல்லாத எழுத்தாளர்கள் வைதெரிச்சலை கொட்டினாலும் அன்பினாலும் - சத்தியத்தின் பின் சேர்ந்த கூட்டம் என்ன என்பது. இந்த முறை புத்தக கண்காட்சிகு -கூட்டம் இல்லாது இருந்ததற்கு காரணம் ஒரு சில அதிகப்ரசங்கி எழுத்தாளர்களை பார்க்க கூடாது என்பதும் கூட. நல்லவர்களை கூட வைத்துகொண்டு செய்யும் செயல்கள் தான் sustainable. Everything elses will crumble into pieces. Do not run publishing industry for only profits - if that becomes objective the loss of quality in the books is inevitable and so is the sales.On the contrary publish the quality books ...profits will follow.

இந்த கடந்த 15 ஆண்டுகளில் தமிழில் வெளிவந்த நல்ல புத்தகங்களை நீங்கள் பட்டியல் இட்டு பார்த்தால் எந்த சார்பு இல்லாமலும் , வாசகனுக்கு தெளிவான message or entertainment or positive thinking or awareness கொடுக்க கூடிய புத்தகங்கள் மிக மிக குறைவு. இது கிழக்குக்கு மட்டும் என்று இல்லை எல்லா புத்தகங்களுக்கும் பொருந்தும். நுனி புல் மேய்ந்து அதை புத்தகம் என்று பதிப்பித்து வாசகனை ஒரு முறை வேண்டுமானால் ஏமாற்றலாம் எப்பொழுதும் இல்லை. இன்று வரும் 95% தமிழ் புத்தகங்கள் இணையத்தில் தேடப்பட்டு கிடைக்கும் செய்திகளை integrate செய்து தருகின்றன. Then a reader can get the info from internet itself directly ..why do i need a book.The authors should really work hard and do sufficient reasearch before getting it something on print.

If People like Haran Prassanna think, it's because of some entertainment in the exhibition he was not able to sell books ...he is mistaken. That is the depth of thinking unfortunately today's so called tamil writers posses. C'mon wake up, Today, the internet world and google answers most of the basic requirements. I used to buy books for Rs 10,000 per year in early this decade however my spend has come down to around 2000 to 3000 per year(Including English), You can visit Landmark,Odyssys or Higgin Bothams of the world, there is good quality of english books though expensive(even if they are available as duplicates on the road side) sell in good volumes. I recently read the sequel of Stay Hungry ..Stay Foolish.. Connecting the Dots by Rashmi Bansal. IIM publication or for that reason take Chetan Bhagath - 2 States , is it possible for any tamil writers alive today to gel into a different culture and bring about the entertainment that is example of the quality of work expected out of an author, not skimming thru google and integrating and calling it a book.

தமிழ் புத்தகங்கள் பாமரர்களுக்கும் ,சாதாரண தமிழ் மக்களுக்கும் தான் எழுதிகிறோம் இணையம் இல்லாதவர்கள் படித்தால் போதும் என்றல் நீங்கள் புத்தக கண்காட்சி வைக்க வேண்டிய இடம் சென்னை- அல்ல ...உங்கள் புத்தகங்களும் சரியான விலையும் அல்ல.
நல்ல புத்தகங்களை பதிபித்தால் தமிழர்கள் ஆதரவு அளிப்பார்கள் அதை விடுத்து ஆட தெரியாதவள் கூடம் பத்தாது என்பது போல உள்ளது Prassanna சொல்லுவது.

ரோமிங் ராமன் said...

என்ன பிரசன்னப்பா!

12ம்"படி சரணம் பொன்னையப்பா"


பொன்னப்பா என்று சொல்லக் கேட்டதுண்டு>> அதென்ன பொன்னையப்பா?? கிழக்குக்கு புது எழுத்தாளர் யாராவதா என்ன?

அமர் said...

நேற்று 15.01.2011 மதியம் ஒரு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை கவனித்ததில், கிழக்கு பதிப்பக அரங்குகளில் எப்போதும் கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. பெரும்பாலும், மாமிகள் (35-45) ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள். வாங்கினார்களா என்று தெரியாது. சுமார் 5.30 மணியளவில் அதிக எண்ணிக்கையில் புத்தகம் வாங்கிய குடும்பத்தில், கார்டு தேய்த்த கணவனை விட்டுவிட்டு அவர் மனைவியிடம் நன்றி சொன்னார் நிர்வாகிகளில் ஒருவர். ஏதோ ஒரு கொள்கைக்காக புத்தகம் போட்டு காசை கரியாக்குகிறவர்கள் மத்தியில், RSS கொள்கைகளை (?) பரப்ப இவ்வளவு காசை போட்டு, நுனிப்புல் மேய்கிற புத்தகங்களை வெளியிடும் கிழக்கு மற்றும் புதிய தலைமுறை பதிப்பகங்கள் காட்டில் நல்ல மழை. புதிய தலைமுறை வார இதழ் விற்கிற மாதிரியே தெரியவில்லை. ஆனால் காசு எங்கிருந்துதான் வருகிறதோ? எப்படியோ வலைத்தளங்களையும் வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துவதில் உங்களுக்கு வெற்றி தான்.

Anonymous said...

I dont know why you keep saying that there was no crowd. Yesterday I couldnt get into many shops to see the books as it was over crowded.

I would appreciate if you could put the facts straight. Just because people didnt buy it from your stall doesnt mean that they were not there at all.

sathish (bengaluru) said...

When I came to the book fair there was very good crowd was there in all the stalls, but all the crowd in the book fair dont buy more books

1.This is due to rise in price of books.
2.No of stalls.(People cant visit so many stalls in a day).
3.I feel a proper awareness should be created among the people about the increase in paper price. when kalaignar gives Rs 1. rice,Free tv,gas connection the price of the books are on average of 100+
4.The actual book buyer is worried about the crowd and people go to landmark,Higginbothams.They are not worried about the discount. I purchased only few books in book fair and went to higginbothams/landmark and purchased books which were not here in the book fair.

Observations in book fair.

BAPASI were announcing people to take care of their belongings as there is huge crowd. But the publishers were actually searching for the crowd. They should have announced where the actual crowd is going.
I saw one person asking you about the increase in price and you were telling the rise was due to increase in paper price.
Then the survey conducted in kizhakku pathipagam. They had given more options and asked people to choose and the options were funny. How can people choose what you are offering. they like to read what they want.
There was a book release function at 5pm and there were no crowd. A member of BAPASI was addressing the book release function and he told the chairs are there for people to relax and if they are interested in the function they can sit facting the stage. The people were not worried about this. I was sitting there to listen to speech by DMK MP T.K.S. Elangovan.

Suggestions: Your articles in the IdlyVadai blog can be published as a book in the name of Idlyvadaiyil prasanna - Idlya vadaiya ??

virutcham said...

புத்தகக் கண்காட்சிக்கான timing wrong timing . தமிழ் மக்கள் பொங்கலுக்கு ஊருக்கு போவாங்கன்னு தெரியாதா என்ன? சென்னை வாசிகளை நம்பி மட்டுமே கண்காட்சி நடத்த முடிவு எடுத்தாங்களா? மேலும் பொங்கலுக்கு முந்தின நாள் காணும் பொங்கல் அன்றெல்லாம் பயங்கரமா டிராபிக் ஜாம்மாகும். இது போன்ற நாட்களில் மக்கள் குழந்தைகளுக்கு விருப்பமான இடங்களுக்கே செல்ல விரும்புவார்கள்.
முடிந்தால் கண்காட்சியை இன்னும் ஒரு வாரத்துக்கு நீட்டித்தால் கூட்டம் வரும் வாய்ப்பு இருக்கிறது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால் புத்தகக் கடைகளில் கொடுக்கும் அதே 10 % தான் கண்காட்சியிலும் தரப்படுகிறது. இந்தப் புத்தகம் என்று முடிவு செய்து வாங்க வரும் வாசகர்களுக்கு கூட்ட நெரிசல் இல்லாமல் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம் என்று தான் நினைக்கத் தோன்றும்.

Anonymous said...

போரும்யா புத்தக புழு!

காவலன் படம் ரிலீசாயிருக்கே! பாக்கலயா! பேரம் முடிஞ்சதும் வெளியிடுவீங்களோ!

Griesh Kulangara said...

கவிஞர்களின் பெயர்களில் பாதை அமைத்த அமைப்பாளர்கள் தமிழில் முதல் பதிப்பாளர் என்று அறியப்படும் உ.வே.சா அவர்களது பெயரில் பாதை இல்லை என்று நன்னூல்.காம் அன்பர் குறைப்பட்டுக்கொண்டார். சரிதனோ?