பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 15, 2011

சென்னை புத்தகக் கண்காட்சி - குறிப்புகள் பதினொன்று

* இன்று விடுமுறை நாள் இல்லையாம். ஆனால் காலையிலேயே புத்தகக் கண்காட்சி தொடங்கிவிட்டது. கூட்டம் சுத்தமாக இல்லை. அதுவும் மாலை 4 மணி வரை எல்லா பதிப்பாளர்களும் ஸ்டாலை விட்டு கேண்டீனுக்குப் படையெடுத்த்தவண்ணம் இருந்தார்கள்.

* மாலை 4 மணிக்குப் பிறகு ஓரளவுக்குக் கூட்டம் வந்தது. அதுவும் இல்லை என்றால், இன்றும் வேலை நாள் போல, விற்பனை படு மந்தமாக இருந்திருக்கும்.

* இன்று நான் பார்த்தவர்கள் - ஞாநி, ரோசா வசந்த், விமலாதித்த மாமல்லன், ஜ்யோவ்ராம், சுரேஷ்கண்ணன், பைத்தியக்காரன் @ சிவராமன், எழுத்தாளர் ராமதுரை, விருபா. அனைவரிடமும் சில நிமிடங்கள் பேசினேன். (யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்.)


* நான் நேற்றும் இன்றும் வாங்கிய புத்தகங்கள்: யுவான் சுவாங் 1, 2; தினத்தந்தி காலச்சுவடுகள், பாகிஸ்தான் சிறுகதைகள், நல்ல தமிழில் எழுதவேண்டுமா, மீன்குகை வாசிகள், கன்சாகிப். வாங்கவேண்டியவை: விமலாதித்த மாமல்லன் சிறுகதைகள், மனங்கொத்திப் பறவை, ஒரு சூத்திரனின் கதை, பர்ஸா, ஓ பக்கங்கள் 2009-10.

* சோம வள்ளியப்பனின் நாவல் ஒன்றை நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நாவலின் பெயர் வண்ணத்துப் பூச்சிகளின் கனாக்காலம் என நினைக்கிறேன்.

* எழுத்தாளர் பாலகுமாரன் வந்திருந்தார். பா.ராகவனின் புத்தகங்கள் சிலவற்றை வாங்கினார். ராகவனை வெகுவாகப் பாராட்டிப் பேசியதாக அங்கிருந்த நண்பர்கள் சொன்னார்கள். அவரது ‘இரும்பு குதிரைகள்’ ஆங்கில மொழிபெயர்ப்பை இண்டியன் ரைட்டிங் வெளியிடவிருக்கிறது. எங்கள் கடையிலிருந்த பையன் அவரிடம் ஏதோ கேட்க, அவர் வெகு சீரியஸாக பதில் சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பாலகுமாரன் பதினைந்து ஆண்டுகளாக மாறவே இல்லை.

* சுகி சிவம் நடுவராகப் பங்கு வகிக்க, ஜவஹர் பழனியப்பன் தலைமையில் இன்று பட்டிமன்றம். 8 மணிக்குப் பட்டிமன்றத்தை முடித்து, கூட்டத்தைக் கடைக்குள் அனுப்புவார் என்று பார்த்தால், புத்தகக் கண்காட்சி முடிந்து, மக்கள் எல்லாம் வெளியில் வந்து வீட்டுக்குப் போனதற்குப் பின்பும், 9.30 வரை பேசிக்கொண்டிருந்தார். புத்தகக் கண்காட்சி வெளங்கினா மாதிரிதான் என நினைத்துக்கொண்டேன்.

* உடுமலை ஸ்டாலில் தாயார் சன்னதி புத்தகம் விற்றுத் தீர்ந்துவிட்டது. நாளை வந்தால்தான் உண்டு. உடுமலை கலக்குகிறது.

* தமிழினி அரங்கில் விருபாவைப் பார்த்தேன். எவ்வித ஒளிவுமறைவுமின்றி, ‘சம்ஸ் நல்லா எழுதுறாருல்ல’ என்று கேட்டார் அவர். சபை நாகரிகம் தெரிந்தவர் என்பதால் நண்பர்கள் முன்னிலையில் கேட்டார் என நினைக்கிறேன். நான் ‘பேசுவோம்’ என்றேன். ’இன்னும் என் கமெண்ட் அப்ரூவ் பண்ணலையே’ என்றார். எனக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. பின்புதான் தெரிந்தது அவர் இட்லிவடையில் கமெண்ட் போட்டுவிட்டுக் காத்திருக்கிறார் என. நான்தான் இட்லிவடை என்பதில் அவருக்கு மாற்றுக் கருத்தே இல்லை என்பது அவரது முகபாவத்தில் தெரிந்தது. இப்போது அப்ரூவ் செய்துவிட்டேன் என நினைக்கிறேன். நடக்கப்போவதை நினைத்துவிடுவோம் என்பதுதான் எடுபடும் போல.

* நாளை நிஜமாகவே விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும் என நினைக்கிறேன், பார்க்கலாம்.

* யாரையும் கார்னர் செய்யாமல் குறிப்புகள் பதினொன்று நிறைவுபெறுகிறது.

கூட்டம் கம்மியாக இருக்கும் போது கமெண்ட் அப்ரூவ் செய்யலாம் இல்லையா ? அதை முதல்ல செய்யுங்க !

4 Comments:

ரோமிங் ராமன் said...

இட்லிவடை/ஹரன் பிரசன்னா (/ க்கு உள் அர்த்தம எதுவும் இல்லை): ஒரு ரிக்வெஸ்ட். இன்று அவர் வந்திருந்தார், இவர் வந்திருந்தார் என்று எழுதும் போதே, அவர்களின் வலைப்பூ அல்லது இணையதள முகவரி என்னவென்று (தெரியாவிட்டால்
அவர்களையே கேட்டு) எழுதினால்,
அவர்களுக்கும் எங்களுக்கும் பயன் உள்ளதாகுமே!! சாத்தியமா??

SAN said...

IV,
Had been to Book fair today.
I could find Pa. ra,"Spectrum Raja's prachara beerangi,Kizakku Patdhipagathin thoon annan Spectrum Badri" and "Hardy" Annan Haran Prasanna in animated discussion.

My humble suggestion,Let Idly vadai sponsor Wii,Sony PS 3 Move or X Box 360 Kinect to HP so that the next time we meet in BooK Fair i want to see a 'Laurel" haran P.

nellai அண்ணாச்சி said...

மைக் இல்லாம பேச வச்சிருக்கணும்

nellai அண்ணாச்சி said...

புத்தகக் கண்காட்சி வெளங்கினா மாதிரிதான் என நினைத்துக்கொண்டேன்.