இன்று புத்தகக் கண்காட்சியில் நேற்றைவிடக் கொஞ்சமே கொஞ்சம் அதிகமாக மக்கள் கூட்டம் எட்டிப் பார்த்தது. பொதுவாக செவ்வாய்க் கிழமை விற்பனை நன்றாக இருக்காது என்பது எங்கள் அனுபவம். செவ்வாய்க் கிழமைகளில் புதுப்புடைவையையோ நகையையோ வாங்க மக்கள் வருவதில்லை. இதனால் தனியாகப் புத்தகம் வாங்குவதற்கென்று வருவது ஒரு அலைச்சல் என்கிற எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது அவர்களுக்கு. எனவே செவ்வாய்க் கிழமைகளில் புத்தகம் விற்காது என்பதுதான் எங்கள் கடந்தகால அனுபவம். ஆனால் இன்று திங்கள் கிழமையைவிட கூட்டமும் விற்பனையும் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது.
நான் இன்றும் இரண்டு வரிசைகளைச் சுற்றிப் பார்த்தேன்.
இன்று நான் இரண்டு புத்தகங்களை வாங்கினேன். வானதி பதிப்பகத்தில் ‘மர்ம மாளிகையில் பலே பாலு’ என்னும் காமிக்ஸ் புத்தகத்தை வாங்கினேன். பாதி ஓகே, இரண்டாம் பாதி படக்கதையாக இல்லாமல், படமும் கதையுமாக இருந்தது. என் பையனுக்குப் படிக்க இருக்கட்டும் என்று வாங்கினேன். அல்லயன்ஸ் பதிப்பகத்தில் கண்ணில்பட்ட ‘ஆனந்த மடம்’ என்னும் புத்தகத்தை வாங்கினேன். இது சுருக்கப்பட்ட பதிப்போ என்ற ஐயம் இப்போது வருகிறது. மூல நூலின் முழு மொழிபெயர்ப்பே இவ்வளவுதானா எனத் தெரியவில்லை. வானதி பதிப்பகத்தில் நான் வாங்க விரும்பிய இன்னொரு நூல் ‘ராஜாஜி வரலாறு.’ பட்ஜெட் இடம் கொடுக்காததால் வாங்கவில்லை.
மணல்வீடு ஹரிகிருஷ்ணன் வந்திருந்தார். அருங்கூத்து என்ற ஒரு புத்தகத்தை தந்தார். கூத்துக் கலைஞர்களின் பேட்டியும், கூத்துக் கலைஞர்களைப் பற்றிய பதிவுமாக உள்ள புத்தகம் என நினைக்கிறேன். இனிமேல்தான் படிக்கவேண்டும்.
ஓர் அரங்கில் திருக்குறளின் டிஜிடல் வடிவம் என்று என்னவோ பேனர் வைத்திருந்தார்கள். திருக்குறள் சிலை ஒன்றிலிருந்து திருக்குறள் வரிசையாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தேவையான அதிகாரத்தையும் குறளையும் தேர்வு செய்துகொள்ளலாம். 1700 ரூபாய் விலை என நினைக்கிறேன். இதற்கு ஒரு மாதம் குட்டிக்கரணம் அடித்து நமக்குத் தேவையான குறள்களை மனப்பாடம் செய்துவிடலாம்.
ரமணர் அரங்குக்குச் சென்றேன். இப்போதெல்லாம் ரமணரைப் பார்த்தாலே தோழர் மருதன் நினைவுதான் வருகிறது. யாருக்கு கெட்டகாலமோ தெரியவில்லை.வழக்கம்போல் ராம்கி வந்திருந்தார். முதலில் உடுமலை அரங்குக்குச் சென்று சுகாவின் ‘தாயார் சன்னதி’ புத்தகம் வாங்கினார். அப்படியே நடந்து வரும்போது கண்ணில்பட்ட, ரஜினி பற்றிய புத்தகத்தை ஆசையுடன் எடுத்தார். அதிர்ச்சியுடன் கீழே வைத்துவிட்டார். அப்படியே உயிர்மை அரங்குக்குப் போனோம். சாருவும் எஸ்ராவும் அங்கே இருந்தார்கள். சில வாசகர்கள் அவர்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். ஷாஜி அப்போது அங்கே வந்தார். அவருக்கு ஒரு ஹை சொல்லிவிட்டு பரிசல் அரங்குக்குச் சென்றோம்.
பரிசல் அரங்கில் பல புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அதில் சட்டென என் கண்ணைக் கவர்ந்த புத்தகங்கள் - சுவாமி விபுலானந்தர் பேச்சும் எழுத்தும் மற்றும் சென்னை நூலகங்கள். இவை இரண்டுமே பரிசல் வெளியிட்டவை அல்ல என்றே நினைக்கிறேன். அங்கே கண்ணில்பட்ட இன்னொரு புத்தகம் பர்ஸா. கடந்த கோயமுத்தூர் புத்தகக் கண்காட்சியிலேயே இந்தப் புத்தகத்தை வாங்க நினைத்தேன். அப்போது வெளியாகவில்லை. பர்ஸா என்றால் பர்தாவுக்கு எதிர்ப்பதம். காலச்சுவடு வெளியிட்டிருக்கும் மொழிபெயர்ப்பு நூல். இதையும் வாங்கவேண்டும்.அருமையும் பெருமையும் மிக்க ஆருயிர் நண்பர் (போதுமா இது?) சுரேஷ் கண்ணன் வ்ந்திருந்தார். உப்புக்காத்து என்னும் ஒரு சிடியைக் கொடுத்து, இதைப் பார்த்துவிட்டு இட்லிவடையில் எழுதவேண்டும் என்று மிரட்டினார். நான் எழுதுகிறேன், ஆனால் அது இட்லிவடையில் வருமா வராதா எனத் தெரியாது என்றேன்.
நாளை மேலும் மூன்று வரிசைகளைச் சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டுள்ளேன். பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.
கிழக்கு கார்னர்:
எங்கள் பக்கத்து ஸ்டாலில் பொறுப்பில் இருப்பவர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரனாம். இன்றுதான் தெரியவந்தது. நாளை எதாவது சுவாரஸ்யமான கதைகள் சிக்குகிறதா எனப் பார்க்கவேண்டும்.
இன்று வைரமுத்துவின் புத்தகங்கள் கிழக்கு அரங்கில் விற்பனைக்குக் கிடைத்தன. ஆயிரம் பாடல்கள் புத்தகம் நன்றாக விற்பனை ஆனது.
பல்லடம் மாணிக்கம் வந்து பல புத்தகங்களை வாங்கினார். இவரைப் பற்றித் தனியே ஒருமுறை எழுதவேண்டும். தமிழ்காப்பகம் என்ற ஒன்றை நடத்திவருகிறார். ஏற்கெனவே இவரைப் பற்றிய ஒரு கவர்ஸ்டோரி முன்பு ஏதோ ஓர் இதழில் வெளிவந்தது. நேரம் கிடைக்கும்போது இவரைப் பற்றி எழுத நினைத்திருக்கிறேன்.
கேண்டீன் கார்னர்:
காலையில் சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு, மதியம் சாப்பிடாமல் ஸ்டாலுக்கு வந்துவிட்டதால் கடுமையான பசி ஏற்பட்டுவிட்டது. மாலை 5.30 மணி வாக்கில் இரண்டு தோசையும் ஒரு வடையும் சாப்பிட்டேன். சுவை நன்றாகவே இருந்தது.
- ஹரன்பிரசன்னா
இட்லிவடை கார்னர்: உப்புக்காத்து என்ன உப்புகருவாடு கூட இட்லிவடையில் வரும். நீங்க கவலைப்படாதீங்க சுரேஷ் கண்ணன்
படம் கார்னர்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, January 12, 2011
சென்னை புத்தகக் கண்காட்சி - எட்டாம் நாள்
Posted by IdlyVadai at 1/12/2011 04:16:00 AM
Labels: கட்டுரை, புத்தககண்காட்சி-2011, ஹரன்பிரசன்னா
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
//இன்று வைரமுத்துவின் புத்தகங்கள் கிழக்கு அரங்கில் விற்பனைக்குக் கிடைத்தன. ஆயிரம் பாடல்கள் புத்தகம் நன்றாக விற்பனை ஆனது//
எனக்கு ஒரு கேள்வி..வைரமுத்துவின் 1000பாடல்கள் புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன்..
திரைப்படம் : அண்ணாமலை. பாடல்: "கொண்டையில் தாழம்பூ..."
இதே மாதிரி 1000 பக்கங்கள்- 1000பாடல்கள்...
இந்தக் காவியத்தால் யாருக்கு என்ன பயன்?
விலை 600/-...!!!!!!!
புத்தகம் நன்றாக விற்பனை ஆனதா உண்மையிலேயே ?
நான் ஒரு பின்னூட்டத்தில் பத்ரியை விமர்சித்து எழுதியதை வெளியிடாத போதே சந்தேகபட்டேன். கட்டாயம் இட்லிவடை கிழக்கில்தான் விற்கும் என்று.
ஒரு வேளை பக்கத்து ஸ்டால் வி.ரவிச்சந்திரனுடைய நட்பான பேயாலோ ஆவியாலோ தான் படம் தலைகீழாகி இருக்குமோ??
Post a Comment