பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 06, 2011

ஜி.என்.பி

டிவியில் வரும் மார்கழி மஹா உற்சவம் போன்ற நிகழ்ச்சிகளில் சிலர் பாடுவதும், அவர்கள் சொல்லும் பதிலையும் கேட்டால் எரிச்சல் தான் வருகிறது. காரணம் சுமாராகப் பாடிவிட்டு மேதாவித்தனமாக பதில் சொல்லுவதால். சிலர் கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு பாடுவார்கள். ஆனால் அதற்கு தகுந்த அவுட்புட் இருக்காது. கடைசியாக பஜன் பாடுகிறேன் பேர்வழி என்று கையை பெரிசாக உசத்தி மீரா பஜன் பாடும்போது, பாவம் தெரியாது புடவை தலப்பு தான் தெரியும். சென்னையிலும் இந்த டிசம்பர் சீசன் முழுவதும் இப்படித்தான். சிலர் ரசிக்கும்படி பாடுகிறார்கள், ஆனால் அவர்களில் யாரும் இன்னும் பிரபலமாக வரவில்லை.

நான் பிறப்பதற்கு முன்பு பிளாக் & வைட்ட காலத்தில் நிறைய பேர் நன்றாகப் பாடியிருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் ஜி.என்.பி என்ற ஜி. என். பாலசுப்பிரமணியம். இன்றும் 'ஜி.என்.பி பாணி' என்று சொல்லுவார்கள். இவரை பற்றி யாராவது தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் பல இடங்களில் அலைய வேண்டும். தன்னுடைய கடும் உழைப்பு, ஜி.என்.பி மீது இருக்கும் விஸ்வாசம் காரணமாக லலிதா ராம் (முன்பு செஸ் பற்றி இட்லிவடையில் எழுதியவர்) ஜி.என்.பி பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை திரைக்கதையாக்கி, ஆவணப் படமாக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.பி.காந்தன் (இவர் பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் மகனும், நடிகர்/இயக்குனர் மௌலியின் தம்பியும் ஆவார்)


ஒரு வருடத்துக்கு முன்பு எனக்கு இந்த ஆவணப்படத்தை தபாலில் அனுப்பினார். (உடனே உங்க அட்ரஸ் அவருக்கு எப்படி கிடைத்தது என்று எல்லாம் கேட்காதீர்கள்). நானும் இட்லிவடையில் அதை பற்றி எழுத வேண்டும் என்று பல முறை நினைத்தேன். ஆனால் முடியல. :-) இந்தப் புது வருடத்தில் அதை இன்னும் ஆறப் போடாமல் முடிக்க வேண்டும் என்று எண்ணத்தில், புத்தகக் கண்காட்சி ஆரம்பம் என்பதால் கொஞ்சம் ஃப்ரீ டயம் எடுத்துக்கொண்டு நேற்று அந்த இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஓடும் ஆவணப்படத்தைப் பார்த்து முடித்தேன்.

சும்மா தானும் இசையை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று எழுதாமல் ஜி.என்.பி கச்சேரிகளை வைத்திருப்பவர்களிடம் பிச்சையெடுத்து பல பாடல்களை கேட்டு இசையின் பல்வேறு பரிமாணங்களை அறிந்து புத்தகம் எழுதியுள்ளார் லலிதா ராம். ஜி.என்.பி பற்றி பல அறிய தகவல்களை கதை போல ஜனரஞ்சகமாக அந்த புத்தகத்தில் சொல்லியுள்ளார். கர்நாடக இசை பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் எதுவும் இல்லை, ஆனால் படித்தால் நிச்சயம் கர்நாடக இசையை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளவும், கேட்கவும் ஆர்வம் வரும்.

இந்த புத்தகத்தின் தகவல்களை அழகான ஆவணப்படமாக வந்துள்ளது. லலிதா ராமுக்கு வாழ்த்துகள் ( வாழ்த்து லேட் தான் ஆனால் சொல்லலாம்). இதற்கு முன் எம்.எஸ். பற்றிய ஆவணப்படம் ஒன்று NDTVல் பார்த்தேன், மிக அற்புதமாக எடுக்கபப்ட்ட படம் அது. அதற்கு பிறகு லலிதா ராமின் இந்த ஆவணப்படத்தைச் சொல்லலாம். ஆவணப்படம் எடுக்க கூட ஒழுங்கான திரைக்கதை வேண்டும். இல்லை என்றால் அப்பறம் பார்க்கலாம் என்று மனோபாவம் வந்து திரும்ப பார்க்கவே மாட்டோம். போர் அடிக்கும் இடங்களில் பாட்டு ஃபைட், கிராபிக்ஸ் என்று எதையும் செய்யமுடியாது. இருக்கும் தகவல்களை கோர்வையாகக் கதை போலச் சொல்ல ஒரு திறமை வேண்டும்.

முதலில் ஜி.என்.பி ராஜாவின் அரண்மனையில் திரைக்குப் பின் பாட, ராஜா திரையை திறந்து யார் என்று பார்ப்பதிலிருந்து ஆரம்பித்து நிதானமாக ஜி.என்.பியைப் பற்றி சுவாரஸியமான தகவல்கள், அவரது உத்தி என்று பல பரிமாணங்களில் பயனிக்கிறது. பலர் வந்து தாங்கள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளோம் என்று வழக்கமாக சொல்லுகிறார்கள். பெரியவர்கள் ஆத்மார்தமாகச் சொல்லுகிறார்கள், சின்னவர்கள் கையை ஆட்டிக்கொண்டு சொல்லுகிறார்கள். நடுநடுவில் அவருடைய காம்போஜி, ஹிந்தோளம், என்று அவர் பாடிய சில பாடல்களைக் கேட்க பிரமாதமாக இருக்கிறது. பாடல்களின் போது பின்னாடி இயற்கைக் காட்சிகளைக் காண்பிக்கிறார்கள். சில இடங்களில் ஜி.என்.பியின் கமக்கம் மாதிரி அதையும் வேகமாக காண்பிப்பது கொஞ்சம் உறுத்தலாகவும் இருக்கிறது.

ஆனால் இவை எல்லாவற்றையும் ஜி.என்.பி.யின் ஸ்வரா ஞானம் பற்றியும் அவர் பேச்சுக்கு ஸ்வரம் சொல்லும் ஆற்றல், சின்ன வயசில் 6.5 கட்டையில் பாடினார் போன்ற தகவல்களும், மயிலை கபாலி கோவிலில் முதல் கச்சேரி, எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து சகுந்தலை என்ற படத்தில் நடித்தது போன்ற தகவல்களை போகிற போக்கில் சொல்லிக்கொண்டு போவது இந்த ஆவணப்படத்தின் வெற்றி.

சங்கீத மக்களுக்காக ஸ்ருதிபேதம், கிருஹபேதம், ராகத்தின் ஷட்ஜமம் என்று பல டெக்னிகல் விஷயங்களை அவர் புத்தகத்தில் இருந்தாலும், நம்மளை போல ஆட்களுக்கும் பல விஷயங்கள் இருக்கிறது. ஜி.என்.பி உபயோகிக்கும் செண்ட், கார், கைகடிகாரம், சாப்பிடும் சாப்பாடு, அவருக்காக நின்ற ரயில் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சங்கீதத்தில் எல்லோருக்கும் முத்திரை இருப்பது போல லலிதா ராம் எழுத்திலும் இருப்பது ஆங்காங்கே இருக்கும் ஆங்கில வார்த்தைகள். அவர் எழுதிய புத்தகத்தில் ஒரு பக்கத்துக்கு ஒரு ஆங்கில வார்த்தை இருக்கிறது! .

பல விஷயங்கள் சரியாக ஆவணப்படுத்தாமல் இருப்பதால் நமக்கு கிடைப்பதில்லை. ஜி.என்.பி எழுதிய சில கிருதிகள் தொலைந்து போனது போல அவரை பற்றிய குறிப்புக்கள் தொலைந்து போகாமல் ஆவணப்படுத்தியுள்ளார் லலிதா ராம். அந்த விஷயத்தில் இந்த புத்தகமும், ஆவணப்படமும் மிக முக்கியமாக நான் கருதுகிறேன்.

போன வாரம் ஆழ்வார்பேட் சங்கரா ஹாலில் 30 ரூபாய் டிவிடி குவியல்களுக்கு பக்கத்தில் ஓரமாக இந்த சிடியைப் பார்த்தேன். யாரும் வாங்குவதாக தெரியவில்லை. லலிதாராமின் உழைப்பு, ஜி.என்.பி என்று நாம் பார்க்காத மேதையைப் பற்றிய தகவலுக்காகவே இந்த ஆவணப்படத்தை விலை கொடுத்து வாங்கிட்டு ஆணவமாப் போகலாம்! இன்று நெட்டில் எல்லாவற்றிருக்கும் ஹைப் விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் இந்த மாதிரியான விஷயத்தை கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.

இன்று ஜி.என்.பியின் பிறந்த நாள். இந்தக் கட்டுரையை ஜி.என்.பியின் நூற்றாண்டு விழா முடிவில் இட்லிவடையில் போட முடிந்ததில் சந்தோஷம்.

டிவிடி வாங்க இங்கே போகவும் - http://www.kalakendra.com/shopping/isai-vaseekaran-p-2137.html
(அல்லது ஆழ்வார் பேட்டை சங்கரா ஹால் )

படத்திலிருந்து சில பகுதிகள்சில சுட்டிகள்:
1. இரண்டு சந்தோஷங்கள் - லலிதா ராம் அனுபவம் http://carnaticmusicreview.wordpress.com/2009/12/31/gnb-centenary-2/

2. சகுந்தலை படத்தில் ஜி.என்.பி பட்டு - http://www.youtube.com/watch?v=0pmMW3cWswY

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் என்ற பாம்பே ஜெயஸ்ரீ டி.எம்.கிருஷ்ணா எழுதிய புத்தகத்தை சமீபத்தில் விகடன் பதிப்பகம் வெளியிட்டுயிருக்கிறார்கள். வரலாற்றுச் சுவடுகள்(தினத்தந்தி) புத்தகத்துக்கு பிறகு அருமையான பதிப்பில் வந்த புத்தகம் இது என்று சொல்லலாம். இதே தரத்துடன் லலிதா ராம் எழுதிய புத்தகத்தை போட யாராவது முன்வந்தால் நன்றாக இருக்கும்.

12 Comments:

பொன் மாலை பொழுது said...

கிடைக்க அறிதான செய்திகள்.
ஜி.என்.பி. அவர்கள் இசையமைத்த திரைப்படங்களின் விபரங்களையும் சொல்லுங்களேன்.
தங்கள் பகிர்வுக்கு நன்றி.

Madhavan Srinivasagopalan said...

அவர் பாடிய ஒருசில பாடல்களை கேட்டிருக்கிறேன்...
எனது அண்ணன்கள் ஜி.என்.பி, மதுரை மணி ஆகியோர்களின் பரம ரசிகர்கள்..

குறையொன்றுமில்லை. said...

நானும் ஜி. என், பி அவர்களின் ராதேசமேதா க்ருஷ்ணா, வாசுதேவயனி
போன்ற அற்புதமான பாடல்களைக்கேட்டிருக்கேன்.

சுபத்ரா said...

Great efforts by Smt.Lalitha Ram,Shri.S.B.Kanthan and ofcourse IV in letting us know abt them. Thank You!

பாரதி மணி said...

அருமையான பதிவு. எனக்கு ஜி.என்.பி. புத்தகத்தை லலிதா ராம் என் வீட்டுக்கு வந்து கொடுத்துவிட்டுப்போனார். அதை தலைமாட்டிலேயே வைத்திருந்து லட்டுவை பிட்டு பூந்தி பூந்தியாக சாப்பிடுவதுபோல், அணுஅணுவாக ரசித்துப்படிக்கிறேன். திரும்பத்திரும்ப படிக்கிறேன்.

பாலகனாக அப்பாவுடன் பல தடவை ஜி.என்.பி கச்சேரி கேட்டிருந்தாலும். அவர் அருகிலிருந்து அவர் பேசிக்கேட்டது 1952-ல். நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்தேன். நாகர்கோவிலுக்கு ஒரு கச்சேரிக்காக வந்திருந்தார். செக்கச்செவேலென்ற சரீரம். காதில் ப்ளூ ஜாகர் வைரக்கடுக்கன்கள். அவரைப்பார்ப்பதா, டால் அடிக்கும் அந்த கடுக்கனைப்பார்ப்பதா என்ற திகைப்பு. அவர் இருக்கும் அறையே மணக்கும்!

அவர் அன்று விஸ்தாரமாக தோடியை ஆலாபனை செய்து, தாமதமேன் ஸ்வாமி, தமியனுக்கருள் செய்ய... கீர்த்தனை பாடியது இன்னும் மறக்கவில்லை. பக்கவாத்யம் 22 வயது குடுமி வைத்த.....ஆம்...குடுமி வைத்த லால்குடி ஜெயராமன். மிருதங்கம் பாலக்காடு மணி ஐயர்.

கச்சேரிக்கு அடுத்தநாள் ஜி.என்.பி.யும் லால்குடியும் கன்யாகுமாரிக்குப்போகவிரும்பினார்கள். கார் கொடுத்து உதவுவதாகச்சொன்னார் உள்ளூர் பிரமுகர் உப்பளம் கிருஷ்ண அய்யர். (இவர் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பய்யர் மாமனார். தினமலர் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதியின் தாத்தா!) கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்த பெரியவர் என்னைக்கூப்பிட்டு, “அம்பீ! இவாளை கன்யாகுமாரிக்கு கூட்டிண்டு போயுட்டு வரியா?” என்றதும் பயத்துடன் தலையை ஆட்டினேன். வந்தது மாரீஸோ, ஆஸ்டினோ அல்ல ... கிருஷ்ணய்யர் உபயோகிக்கும் கறுப்புக்கலர் ப்யூக்-8 கார். முன்னால் ஜி.என்.பி. பின்சீட்டில் லால்குடியும் நானும். அப்போது லால்குடியுடன் ஏற்பட்ட சினேகிதம் இன்னும் தொடர்கிறது!

அதற்கு முன்னும் பின்னும் நான் Buick-8 காரில் ஏறியதில்லை! இன்னும் மறக்காத நினைவு!

பாரதி மணி

பாரதி மணி said...

அருமையான பதிவு. எனக்கு ஜி.என்.பி. புத்தகத்தை லலிதா ராம் என் வீட்டுக்கு வந்து கொடுத்துவிட்டுப்போனார். அதை தலைமாட்டிலேயே வைத்திருந்து லட்டுவை பிட்டு பூந்தி பூந்தியாக சாப்பிடுவதுபோல், அணுஅணுவாக ரசித்துப்படிக்கிறேன். திரும்பத்திரும்ப படிக்கிறேன்.

பாலகனாக அப்பாவுடன் பல தடவை ஜி.என்.பி கச்சேரி கேட்டிருந்தாலும். அவர் அருகிலிருந்து அவர் பேசிக்கேட்டது 1952-ல். நான் பத்தாவது படித்துக்கொண்டிருந்தேன். நாகர்கோவிலுக்கு ஒரு கச்சேரிக்காக வந்திருந்தார். செக்கச்செவேலென்ற சரீரம். காதில் ப்ளூ ஜாகர் வைரக்கடுக்கன்கள். அவரைப்பார்ப்பதா, டால் அடிக்கும் அந்த கடுக்கனைப்பார்ப்பதா என்ற திகைப்பு. அவர் இருக்கும் அறையே மணக்கும்!

அவர் அன்று விஸ்தாரமாக தோடியை ஆலாபனை செய்து, தாமதமேன் ஸ்வாமி, தமியனுக்கருள் செய்ய... கீர்த்தனை பாடியது இன்னும் மறக்கவில்லை. பக்கவாத்யம் 22 வயது குடுமி வைத்த.....ஆம்...குடுமி வைத்த லால்குடி ஜெயராமன். மிருதங்கம் பாலக்காடு மணி ஐயர்.

கச்சேரிக்கு அடுத்தநாள் ஜி.என்.பி.யும் லால்குடியும் கன்யாகுமாரிக்குப்போகவிரும்பினார்கள். கார் கொடுத்து உதவுவதாகச் சொன்னார் உள்ளூர் பிரமுகர் உப்பளம் கிருஷ்ண அய்யர். (இவர் தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பய்யர் மாமனார். தினமலர் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதியின் தாத்தா!) கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்த பெரியவர் என்னைக்கூப்பிட்டு, “அம்பீ! இவாளை கன்யாகுமாரிக்கு கூட்டிண்டு போயுட்டு வரியா?” என்றதும் பயத்துடன் தலையை ஆட்டினேன். வந்தது மாரீஸோ, ஆஸ்டினோ அல்ல ... கிருஷ்ணய்யர் உபயோகிக்கும் கறுப்புக்கலர் ப்யூக்-8 கார். முன்னால் ஜி.என்.பி. பின்சீட்டில் லால்குடியும் நானும். அப்போது லால்குடியுடன் ஏற்பட்ட சினேகிதம் இன்னும் தொடர்கிறது!

அதற்கு முன்னும் பின்னும் நான் Buick-8 காரில் ஏறியதில்லை! இன்னும் மறக்காத நினைவு!

பாரதி மணி

cho visiri said...

GNB's calibre and Maedhavilasam and "Brigas" he was known for, would well be understood even by those who have not enjoyed his concerts, by the single fact that his Sishyas list include Dr.M.L.V, Shri Narayanaswami, Shri T.N.Seshagopalan......

The great G.N.B, I understand, sacrificed his carrear as Advocate.
One could understand the specialities of the All Time Greats like the Contemporanians namely, Ariyakudi, GNB, Madurai Mani, Maharapuram Viswanatha Iyer, Mysore Chowdaiya, who all became Sangeetha Kalaa Nithi.

Ram said...

பாரதி மணி ஐயா: நாலு வரியில் நீங்ஃப்கள் அடிஅந்த பரவசத்தை கண் முன் கொண்டு வந்துவிட்டீர்கள்.

சோ விசிறி: உங்கள் லிஸ்டில் எம்.எல்.வி மட்டும்தான் ஜி.என்.பி சிஷ்யை.

கௌதமன் said...

நண்பர் எஸ் பி காந்தன், இந்த டி வி டி / டாக்குமெண்டரி பற்றி முன்பே தெரிவித்திருந்தார். இந்த சீசனில் அதை வாங்கவேண்டும் என்று முடிச்சுப் போட்டுவைத்திருந்தேன். சங்கரா ஹால் மேயும் சமயம், எப்படி இதை மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை. கலாகேந்திராவின் கையேடு தெளிவாக இல்லை. ஒரு மஞ்சள் நிற விளம்பரப் புத்தகத்தில் சற்றும் புரியாத வகையில் பல ஆடியோ / வீடியோ சி டி / டி வி டி விளம்பரங்கள். இசை வசீகரனுக்கு சரியான விளம்பரம் அளிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. இசை வசீகரன் டி வி டி யை உரிய விலை கொடுத்து வாங்க இன்னமும் தயாராக உள்ளேன்.

பாரதி மணி said...

சோ விசிறி:

ஜி.என்.பி. அவர்களின் சிஷ்யர்களில் முக்கியமானவர்கள் எம்.எல்.வி., ராதா ஜெயலக்ஷ்மி, திருச்சூர் வி. ராமச்சந்திரன். If my memory serves me right, கல்யாணராமனும் இவரது சிஷ்யன் என்று நினைக்கிறேன். என்ன ராம்?

chovisiri said...

Bharathimanijee and Shri Ramjee,
//ஜி.என்.பி. அவர்களின் சிஷ்யர்களில் முக்கியமானவர்கள் எம்.எல்.வி., ராதா ஜெயலக்ஷ்மி, திருச்சூர் வி. ராமச்சந்திரன். If my memory serves me right, கல்யாணராமனும் இவரது சிஷ்யன் என்று நினைக்கிறேன். என்ன ராம்?//

Thanks and I am sorry. I stand corrected. Shri TNS is a desciple of Madurai Srirangam Iyengar (Mannargudi) who also incidentally a Sangeethakalaanidhi.
Further as per Vikipedia, TNS' deciple List is given as follows;-
M. L. Vasanthakumari, Radha Jayalakshmi, S. Kalyanaraman, Trichur V. Ramachandran, T. R. Balu, T.S.Balu, Thanjavur Kalyanaraman and Ragini.[1].

S.B.KHANTHAN said...

IT IS TRUE THAT AN EPIC DOCUMENTATION ON THE GREAT GNB HAS NOT GOT THE KIND OF LIMELIGHT IT DESERVES. MANY THANKS FOR SHOWING YOUR KIND LIGHT.