இன்று அதிகாலையில் தோழர் அழைத்தார். ‘செல்ஃப் இம்ப்ரூவ்மெண்ட் கார்னர்’ல நீங்க எழுதியிருந்த உங்க கற்பனை ரொம்ப அழகு என்றார். தோழர்கள் எப்போதுமே இப்படித்தான், நடந்ததை கற்பனை என்பார்கள். கற்பனையையோ நடக்கும் என்பார்கள். அந்த டிராகனால்கூட இவர்களைத் திருத்தமுடியாது.
இன்றைய புத்தகக் கண்காட்சி ஆமை வேகத்தில் தொடங்கியது. மான் போல துள்ளிக் குதித்து ஓடும் என நினைத்தால், ஆமைபோலவே நடந்து, ஆமை போலவே அடங்கிப் போனது. எல்லா வரிசைகளிலும் குழந்தைகள் பலூனையும் பந்தையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். தாய்மார்கள் அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்படி என்றால், அந்த வரிசையில் என்ன கூட்டம் இருந்திருக்கும் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
புத்தகக் கண்காட்சியின் 10 வரிசைகளில் 10 இடங்களில் எல் சி டி மானிட்டர் வைத்து, விளம்பரம் ஒளிபரப்புகிறார்கள். இலவசமல்ல, கட்டணச் சேவை. நிமிடத்துக்கு ஒருதடவை ஆனந்தவிகடன் விளம்பரம் வந்தது. இடையிடையே குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் வாசித்த வீடியோவைக் காண்பித்தார்கள். குன்னக்குடி வயலினின் டொண்ட டொய்ங் டொண்ட டொய்ங்க்கு ஏற்ற மாதிரி, அதைப் படம்பிடித்தவர் கேமரா முன்னும் பின்னுக்கும் நகர்ந்ததைப் பார்க்க காமெடியாக இருந்தது. கிழக்கு பதிப்பகத்தின் விளம்பரம் வந்தது. ஸ்டில் விளம்பரம்தான். விளம்பரத்துக்குப் பின்னணி குரல் கொடுத்தவர் அதி உற்சாகமாக அ’றி’ய புத்தகங்கள் பல உள்ள பதிப்பகம் என்று, லேகியம் விற்பவர் போன்ற குரலில் கத்திக்கொண்டிருந்தார்!கொஞ்ச நேரம் எல்லா ஸ்டால்களையும் சுற்றிப் பார்க்க நேரம் கிடைத்தது. ராஜேஷ் எழுதிய ‘உலகத் திரைப்படங்கள்’ புத்தகம் என்.சி.பி.எச். ஸ்டாலில் கண்ணில்பட்டது. அதே ஸ்டாலில் அறந்தை மணியனின் தமிழ்த் திரைப்பட வரலாறு பற்றிய ஒரு பெரிய புத்தகமும் கண்ணில்பட்டது. காலச்சுவடு ஸ்டாலில் ‘ஒரு சூத்திரனின் கதை’ புத்தகத்தைப் பார்த்தேன். சிக்ஸ்த் சென்ஸ் ஸ்டாலில் பல புத்தகங்களை கண்ணைக் கவரும் வகையில் கொண்டு வந்திருக்கிறார்கள். சீனி காரச்சேவு போல சுருள் சுருளாக அடுக்கி வைத்திருந்தார்கள். கிழக்கு ஸ்டாலுக்கு அருகிலேயே சாகித்ய அகாடமி ஸ்டால் உள்ளது. அங்கே என்ன என்ன புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் என்று இன்னும் பார்க்கவில்லை.
அரவிந்தன் நீலகண்டன் அவரது தந்தையுடன் வந்திருந்தார். வேறெப்படி, காவி நிற டீ ஷர்ட்டில்தான். பெரிய பெரிய புத்தகங்களை எல்லாம் தோழரும் அரவிந்தனும் சென்று வாங்கினார்கள். என்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள். மந்தையிலிருந்து பிரிந்த ஆடுகள் பேசிக்கொள்ள விஷயங்களா இல்லை என நினைத்துக்கொண்டேன். அரவிந்தன் வழக்கம்போல, இஸ்லாமிய ஸ்டால்கள் அதிகம் உள்ளன என்றார். இந்திய உணர்வுக்கு எதிரான புத்தகங்கள்தான் அதிகம் காணப்படுகின்றன என்றார். இதற்கு ’நம்பக்கூடாத கடவுள்’ புத்தகத்தையே படித்துத் தொலைக்கலாம் என நினைத்துக்கொண்டேன். வெளியில் சொன்னால், ‘இங்க பாத்துக்கிடுங்க’ என்று ஆரம்பித்து மேலும் கிடுகிடுங்க வைப்பார் என்பதால் சொல்லவில்லை.ஜெயமோகன் மணிரத்னத்துடன் வந்திருந்தார். மணிரத்னத்தைப் பார்த்த பல இளைஞர்கள் உற்சாகமாகி போட்டோ எடுத்துக்கொண்டே இருந்தார்கள். எனது 17 வயதில் பாம்பே படம் பார்க்கப் போனபோது, என் நண்பர்கள் கூட்டம் காட்டிய அதே உற்சாகம். இத்தனை வருடங்கள் கழித்து இன்னொரு தலைமுறை அதே ஆர்வத்தைக் காட்டுகிறது. ஓர் இயக்குனருக்கு ‘இருப்பு’ என்ற அளவில், இது ஒரு பெரிய வெற்றிதான்.
ஞாநி கிழக்கு ஸ்டாலுக்கு வந்து ‘ஸ்பெக்ட்ரம் சர்ச்சை’ வாங்கிக்கொண்டு போனார். பத்ரி எழுதியதற்கு எதிரான ஒரு புத்தகம் வந்தால் சந்தோஷம்தான். அந்த ஆண்டவன் அருளட்டும். கூல்.
காமெடி கார்னர்:
கிழக்கு பதிப்பகத்தின் அரங்கத்தை நிர்வகிக்கும் உதவிக்காக ப்ரமோட்டர்கள் எடுப்பது வழக்கம். அப்படி வந்த இரண்டு ப்ரமோட்டர்கள் பாத்ரூம் போகவேண்டும் என்றார்கள். சீக்கிரம் அஞ்சு நிமிஷத்துல வாங்கப்பா என்றேன். அஞ்சு நிமிஷத்துக்குள்ள அதுவே வராதே சார் என்று சொல்லிவிட்டுப் போனார்கள்!
ஜெனரல் நாலெட்ஜ் கார்னர்:ஏன் தமிழில் எழுதாமல் கார்னர் என்று எழுதுகிறேன் என்று ஒரு தமிழ் ஆர்வலர் கேட்டார். நல்ல கேள்விதான். கிழக்கு முக்கு என்றுதான் எழுத நினைத்தேன். ஹனுமன் ஜெயந்தியும் அதுவுமாக, அதுவும் புத்தகக் கண்காட்சியின் முதல்நாளிலேயே ஏன் கிழக்கு முக்கவேண்டும் என்று தோன்றிவிட்டது. சரி, கிழக்கு சந்தி என்று வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் என் துரதிர்ஷ்டம், சந்தி என்பதுமே எனக்கு நினைவுக்கு வருவது சந்தி சிரிப்பது என்பதுதான். சரி அதுவும் வேண்டாம், சந்திப்பு என்று வைக்கலாம் என்றால் ஏதோ சிவாஜியின் ஸ்ரீதேவியும் ஆடும் டான்ஸ் வந்து கலவரப்படுத்திவிட்டது. சரி, நமக்கு எதார்த்தத் தமிழ்தான் லாயக்கு என்று கார்னர் என்றே வைத்துவிட்டேன்.
கிழக்கு கார்னர்:
இன்று இன்னும் சில புதிய நூல்கள் வந்தன. ராஜ ராஜ சோழன், தமிழக சுற்றுலா வழிகாட்டி, திராவிட இயக்க வரலாறு பாகம் 1, முதல் உலகப்போர் போன்ற புத்தகங்கள். இன்றே வந்து இன்றே டாப் டென்னில் முதல் இடம் பிடித்துவிட்டது ராஜ ராஜ சோழன். அடுத்தது ஸ்பெக்ட்ரம். தொடர்ந்து முதல் உலகப் போர், காஷ்மிர். அடுத்தது, அதேதான், உலோகம்!
ஊருடன் ஒத்து வாழ் என்பதற்கு இணங்க, புத்தகக் கண்காட்சியைப் போலவே, கிழக்கு ஸ்டாலிலும் கூட்டம் குறைவுதான். நாளை கொஞ்சம் கூட்டம் வரும். சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும்தான் திருவிழா. அதற்கு இப்போதே தயாராகிக் கொள்ளவேண்டும்.
இன்று பல புத்தகங்கள் வாங்கிய ஒருவரிடம் ‘ஸ்பெக்டரம் சர்ச்சை’ புத்தகம் வாங்கவில்லையா என்று கேட்டேன். புத்தகத்தைப் பார்த்துவிட்டு சிரிப்புடன் அதுக்குள்ள புத்தகமா என்றார். ‘நிறைய பேர் ஊழல் நடக்கும்போதே எழுத ஆரம்பிச்சிட்டீங்களான்னு கேக்குறாங்க’ என்று சொன்னேன். முதலில் சிரித்தவர், கொஞ்சம் சீரியஸாகி, ஊழல் வெளிய வந்தபின்னாடிதான எழுதினீங்க, இல்லை ஊழலுக்கு முன்னாடியே எழுத ஆரம்பிச்சதுதானா இது என்று கேட்டார்.எப்படி இப்படியெல்லாம்...!
காண்டீன் கார்னர்:
இன்றும் அந்தப் பக்கம் போகவே இல்லை!
- ஹரன்பிரசன்னா
இட்லிவடை கார்னர்:
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, January 07, 2011
சென்னை புத்தகக் கண்காட்சி - மூன்றாம் பிறை
Posted by IdlyVadai at 1/07/2011 03:19:00 AM
Labels: கட்டுரை, புத்தககண்காட்சி-2011, ஹரன்பிரசன்னா
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
"அஞ்சு நிமிஷத்துக்குள்ள அதுவே வராதே சார் என்று சொல்லிவிட்டுப் போனார்கள்!" என்று கட்டுரை ஆசிரியர் எழுதியிருக்கிறார். அதற்கு தான் அந்த 'இரண்டு' ப்ரமோட்டர்களும் பாத்ரூ'முக்கு' சென்றார்கள். நல்ல வேளை நீங்க கிழக்கு 'முக்கு' என்று எழுதலை, எழுதியிருந்தால் கதை அங்கேயே முடிந்திருக்கும். நாளைக்கு காண்டீன் போங்க எல்லாம் சரியா'ஆயி'டும்.//
///ராஜ ராஜ சோழன், தமிழக சுற்றுலா வழிகாட்டி, திராவிட இயக்க வரலாறு பாகம் 1, முதல் உலகப்போர், முதல் உலகப் போர், காஷ்மிர்///I want to ask my friend to purchase. Please tell the prices.
//நல்ல வேளை நீங்க கிழக்கு 'முக்கு' என்று எழுதலை, எழுதியிருந்தால் கதை அங்கேயே முடிந்திருக்கும். நாளைக்கு காண்டீன் போங்க எல்லாம் சரியா'ஆயி'டும்.//
என்ன 'விவேக்' காமெடி போல் ஒரே நாத்தம்மா இருக்கு?
கடேசியா கீழே(கிழக்கு அல்ல)- மஞ்ச பட்டி பக்கத்தில் போட்டிருக்கே? அந்த படம் என்ன? அதான் நல்ல விற்பனை ஆகிறது என்று சொல்லும் உலோகமா என்ன??
//சந்திப்பு என்று வைக்கலாம் என்றால் ஏதோ சிவாஜியின் ஸ்ரீதேவியும் ஆடும் டான்ஸ் வந்து கலவரப்படுத்திவிட்டது.//
:) :))
ஐயா........ இட்லி வடை.......... கடைசியா உள்ள புகைப்படம் ஏதோ எந்திரன் ரோபாட் மாதிரி இருக்கு......! என்ன அது ?
// சரி, நமக்கு எதார்த்தத் தமிழ்தான் லாயக்கு என்று கார்னர் என்றே வைத்துவிட்டேன்.//
கிழக்கு மூலை என்று குறிப்பிட்டு இருக்கலாமே?
புத்தகங்கள் பெயர் மட்டும் குறிப்பிடுகிறீர்கள். எழுதியவர் பெயர் முக்கியமாக விலையையும் சேர்த்துச் சொன்னால் பட்ஜெட்டுக்குள் வருமா என்று பார்க்கலாமே...
மஞ்சள் கமெண்ட் தவிர்த்திருக்கலாம்.
கிழக்கு மூலை கிழக்கு கார்நரைவிட கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.
ஐயா........ இட்லி வடை.......... கடைசியா உள்ள புகைப்படம் ஏதோ எந்திரன் ரோபாட் மாதிரி இருக்கு......! என்ன அது ?//
கேள்வி கேட்டு ரொம்ப நேரம் ஆச்சு........... ஆக இட்லி வடைக்கும் என்ன போட்டோனு தெரியாது. அப்படிதான................?
ஐயா........ இட்லி வடை.......... கடைசியா உள்ள புகைப்படம் ஏதோ எந்திரன் ரோபாட் மாதிரி இருக்கு......! என்ன அது ?
adhu endhiran robo maadhiri illa..
endhiran robo padam maadhirinnu sollunga..
dabba..tagara dabba..
பத்ரியை தி மு க வின் தொழில்நுட்பக் கொள்கைப் பரப்புச் செயலாளராக தாத்தா அப்பாய்ண்ட்மெண்ட் செய்திருக்கிறாரேமே பத்ரி ஊர் ஊராப் போய் ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடக்கவில்லை கனி வாயில் விரலைக் கொடுத்த கடிக்கும் பாப்பா, மகாத்மா காந்திக்குப் பிறகு நாட்டில் இருக்கும் ஒரே உத்தமர் ராஜாதான்னு மீட்டிங்கில பேச ஒத்துகிட்டதாகவும் கழுகு சொல்கிறதே. எப்படியோ கிழக்கு வாழ்ந்தால் சரி. தி மு க வுக்காக ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடக்கவில்லை என்று விளக்கவுரை அச்சடித்து விற்கும் ஒரே பதிப்பகம் கிழக்காக மட்டுமே இருக்கும். இதுக்கு காஸ்பர் எவ்வளவோ தேவல
இட்லிவடையின் மஞ்சள் கமெண்ட் அருவருக்கத்தக்கதாக இருக்கிறது என்று பலர் என்னிடம் சொன்னார்கள். நானும் அப்படித்தான் உணர்ந்தேன்.
Post a Comment