இந்த முறை சரக்குமாஸ்டர் உடனே அனுப்பிவிட்டார் நான் தான் கொஞ்சம் லேட்( எனக்கு நானே மன்னிப்பு கேட்டுக்கொண்டு இந்த பதிவு.... )
இன்று புத்தகக் கண்காட்சி தொடங்கியது. கருணாநிதி வந்து தொடங்கி வைக்காததால், எவ்விதப் பரபரப்பும், உடன்பிறப்புக் கூட்டமும் இன்றி, புத்தக ஆர்வலர்கள் பெரும்பான்மையாகச் சூழ, இப்புத்தகக் கண்காட்சி தொடங்கியது போன்ற உணர்வு எனக்கு. அரங்குக்கு வெளியே நடந்த தொடக்கவிழாவில் என்ன என்ன பேசினார்கள், என்ன நடந்தது என்பதெல்லாம் தெரியவில்லை. நான் கிழக்கு ஸ்டாலில் பிஸியாக இருந்தேன்.
எல்லா பதிப்பாளர்களும் நாளைதான் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது என்பது போன்ற ஒரு பிரமையில்தான் வேலை பார்த்துக்கொன்டிருந்தார்கள். பாதி கடைகளில் புத்தகங்கள் அடுக்கும் வேலைகூட நாளைதான் முடிவடையும் என நினைக்கிறேன். சிறிய வயதில் நண்பர்களோடு விளையாடும்போது, முதல் வெற்றியை சாமிக்கு என்று சொல்லிவிடுவோம். அதேபோல் இன்றைய முதல் தேதியை சாமிக்கு விட்டுவிட்டார்கள் பல பதிப்பாளர்கள். பபாஸியும்கூட முதல்நாளை சாமிக்கே விட்டுவிட்டது. இன்னும் பல இடங்களில் மேட் போடவில்லை, சில இடங்களில் மேலே உள்ள துணி பிய்த்துக்கொண்டு தொங்குகிறது, வெளியில் சில இடங்களில் முகப்பு வளைவு சீரமைக்கப்படவில்லை, பதிப்பகங்களின் விளம்பரமான தட்டிகள் வைக்கப்படவில்லை. இன்னும் இரண்டு நாள்களில் எல்லாம் சரியாகலாம்.ஞாநி 2 நிமிடங்கள் கிழக்கு அரங்குக்கு வந்திருந்தார். ‘என்ன சார், ஓ பக்கங்கள் எழுதி இப்படி எல்லா பத்திரிகைகளையும் விரட்றீங்களே’ என்றேன். ‘என்னல்ல விரட்றாங்க’ என்றார். ‘விரட்டினாலும் அவங்களுக்கு லாபம்தான சார்’ என்றேன். ‘அது வேற லாபம்’ என்றார். இதை ஏன் இங்கே எழுதுகிறேன் என்று நினைக்கலாம். கடுமையான எதிர்-ஹிந்துத்துவவாதி என்றாலும் எனக்கு ஞாநியைப் பிடிக்கும். பிடித்தவர்களைப் பற்றி எழுதாமல் என்ன தினசரி அப்டேட் வேண்டியிருக்கிறது? எனவே இதுபோல் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தினமும் எழுதுவேன். என்னைத் தடுக்காதீங்க ப்ளீஸ்.
ஜெயமோகன் வந்திருந்தார். ஏசு வந்திருந்தார் என்பதுபோல எனக்கே ஒலிக்கிறது! ஜீஸஸ்! கிட்டத்தட்ட 3 அல்லது 4 வருடங்கள் கழித்து ஜெயமோகன் வரும் புத்தகக் கண்காட்சி. நல்லவேளை, அவரது உலோகம் நாவல் தயாராகி விற்பனைக்கு வந்துவிட்டது. கெட்டவேளை, விசும்பு இன்னும் வரவில்லை. அச்சில் விசும்பிக்கொண்டிருக்கும் அறிவியல் சிறுகதைத் தொகுப்பு சீக்கிரம் களம் காணும்.
இன்றுதான் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது என்பதால், என்னால் வேறு எந்த அரங்கையும் பார்க்க இயலவில்லை. இனிதான் அந்த வேலையைச் செய்யத் தொடங்கவேண்டும். நாளையாவது சுற்றிப் பார்க்க இயலுமா எனத் தெரியவில்லை. இரண்டு, மூன்று நாள்கள் சென்றுதான் ஒவ்வொரு ஸ்டாலாகப் பார்க்கமுடியும் என நினைக்கிறேன். பார்க்க பார்க்க இங்கே அப்டேட் செய்கிறேன்.
இன்று கிழக்கு ஸ்டாலுக்கு வந்த பலர் நாஞ்சில்நாடன் நூல்களைக் கேட்டார்கள். முக்கியமாக ’சூடிய பூ சூடியற்க.’ எல்லாரையும் தமிழினிக்கு அனுப்பி வைத்தோம். முதலில் எந்த எந்த ஸ்டால் எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொண்டால்தான், எல்லாருக்கும் சரியான பதிலைச் சொல்லமுடியும். அதற்காகவாவது ஒரு ரவுண்ட் அடிக்கவேண்டும். தினமும் 4 முறை ரவுண்ட் அடித்தால், நிச்சயம் 10 கிலோ உடல் எடையைக் குறைத்துவிடலாம். அரங்கம் அத்தனை பெரிது!
சென்னை புத்தகக் கண்காட்சியின் ப்ளஸ் பாயிண்ட்டாக எப்போதும் அமைவது - ஒவ்வொரு வரிசையிலும் மக்கள் நடக்க போதுமான இடைவெளியுடன் இரண்டு பக்கங்களிலும் அரங்கங்கள் அமைப்பது. இந்த முறையும் அது சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் மைனஸ் பாயிண்ட்டாக அமைவது - கழிப்பறைகள். இந்த முறையும் அப்படியே.கருணாநிதி வந்து திறந்து வைத்திருந்தால் கிடைத்திருக்கவேண்டிய மிகப்பெரிய கவரேஜ் நாளை கிடைக்காது. கருணாநிதி வந்திருந்தால் எல்லாப் பத்திரிகைகளும் சலாம் போட்டு கவர் செய்திருக்கும். இப்போது அப்படி இல்லை. இதனால் ஒட்டுமொத்தக் கூட்டம் நிச்சயம் குறையும். ஆனால், வரும் கூட்டத்தில் புத்தக வாசகர்களின் சதவீதம் அதிகமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். சென்றமுறை கருணாநிதி வந்து ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ புத்தகத்தைத் திட்டினார். நல்ல விற்பனை நடந்தது. இந்தமுறை ஏமாற்றிவிட்டார்.
ஹனுமன் ஜெயந்தி அன்று இப்படியாகத் தொடங்கிய புத்தகக் கண்காட்சியைப் பற்றி தினமும் இப்படி எதாவது எழுதப் பார்க்கிறேன். இன்று புகைப்படங்கள் எடுத்துச் சேர்க்க நேரமில்லை. நாளை முதல் அந்த சித்திரவதையும் தொடரும்.
கிழக்கு கார்னர்: (இதை போல்ட் செய்ய சொல்லி மிகவும் வற்புறுத்தினார் பிரசன்னா)
’இது வேற தனியாவா’ என்று நினைக்காதீர்கள். மேலே கிழக்கு பற்றிச் சொன்னது, பொதுவான கோட்டாவில் ஒரு பதிப்பகமாக. இப்போது இடஒதுக்கீடு கோட்டா.
சுஜாதாவின் புத்தகங்கள் பலவற்றுடன் கிழக்கு புத்தகக் கண்காட்சியைச் சந்திக்கிறது. இன்று சுஜாதாவின் புத்தகங்கள் ஓரளவு நன்றாக விற்பனை ஆனது போலத்தான் தோன்றியது. சரியான புள்ளிவிவரம் இல்லை என்பதால் எந்த எந்தப் புத்தகங்கள் நிறைய விற்றன எனச் சொல்லமுடியவில்லை. நாளை முதல், குத்துமதிப்பாகவாவது அதைச் சொல்ல இயலுமா எனப் பார்க்கிறேன்.
கிழக்கு அரங்கில் இன்னும் புத்தகங்கள் சரியாக அடுக்கி முடிக்கப்படவில்லை. நாளைதான் இந்த நிலைமை ஓரளவு சீராகும் என நினைக்கிறேன்.
இன்னும் பல புதிய புத்தகங்கள் நாளை மறுநாள்தான் கிழக்கு அரங்கில் விற்பனைக்குக் கிடைக்கும். எனவே வரும் சனிக்கிழமை முதல்தான் கிழக்கு அரங்கு முழுமை பெறும் எனத் தோன்றுகிறது. கிழக்கின் ரெகுலர் வாசகர்களுக்குத்தான் இந்தப் புதுப் புத்தகங்கள் பற்றிய விசாரிப்பெல்லாம். மற்றபடி பொது வாசகர்களுக்கு கிழக்கு அரங்கு இப்போதே ஒரு மிகப்பெரிய புத்தகக்கடை போலத்தான் இருக்கும். இன்றே இதனைப் பலர் குறிப்பிட்டுச் சொல்லிச் சென்றார்கள். இனி வரும் நாள்களில் யார் யார் என்ன என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம்.
சாப்பாடு கார்னர்:
ஒரு மண்ணும் தயாராகலை இன்னைக்கு. நாளைக்காவது எதாவது தேறுதான்னு பாப்போம்!
- ஹரன்பிரசன்னா
இட்லிவடை கார்னர்: புத்தகக் கண்காட்சி பதிவில் புத்தகம் பற்றி எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. டெல்லி அப்பளம் விற்கிறார்கள் என்று குறைப்பட்டுக்கொண்டு அதை முதல் நாளே தேடிக்கொண்டு போவது தான் தமிழ் மாபு. கருணாநிதி வரவில்லை அதனால் புத்தக விற்பனை கம்மி என்று சொல்லுவது, திமுக தொண்டர்களை நம்பி தான் புத்தக விற்பனை என்பது போல இருக்கிறது.
( கடைசி படம் உதவி: தினத்தந்தி )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, January 05, 2011
சென்னை புத்தகக் கண்காட்சி - தொடங்கியது தேரோட்டம்
Posted by IdlyVadai at 1/05/2011 07:17:00 AM
Labels: கட்டுரை, புத்தககண்காட்சி-2011, ஹரன்பிரசன்னா
Subscribe to:
Post Comments (Atom)
12 Comments:
மீட் பண்ணுவோம் சார்!
சபாஷ்!! நானும் கூட (என் வியாபாரம் விஷயமாக-அறிவுத்தேடலால் அல்ல) அங்கு தான் இருந்தேன்!மிகப்பெரிய கிழக்கின் அரங்கம் பிரமூட்டியது.நீர் சொல்வது போலவே,சுஜாதா தனி/கூடுதல் கவர்ச்சியுடன் அடுக்கிவைக்கப் பட்டுள்ளார்.கிழக்கின் சுறுசுறுப்பு பாராட்டப் பட வேண்டிய ஒன்று! திறப்பு விழாவிற்கு மைக்கில் அனைவரையும் அழைத்துக் கொண்டிருந்த போது முழுக்க ரெடியான ஸ்டால் அநேகமாக அவர்களதுதான்! தினசரி நிகழ்ச்சி நிரல் இந்த ஆண்டேனும் பெரிதாக டிஸ்ப்ளே செய்தால் நன்றாக இருக்கும்!!
கருணாநிதி தான் வரலை.
நித்தியாணந்தா வந்தாலாவது அதனால் கொஞ்சம் பரபரப்பு வருமே! நிர்வாகிகள் அவரை அழைத்துப் பார்க்கலாம்
பிரசன்னா: சுவாரஸ்யமா இருக்கு, தொடருங்க
கனிமொழியின் வேண்டுகோளுக்கும் லைப்ரரி ஆர்டர்களுக்காகவும் தி மு க வை ஆதரித்து ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடக்கவில்லை, ராஜா உத்தமர் ராணி உத்தமி என்று பத்ரி எழுதிய தி மு க கொள்கைப் பரப்பு கையேடான ஸ்பெக்ட்ரம் எப்படி போகிறது என்று சொல்லவில்லையே. கருணாநிதி வராவிட்டால் என்ன கழகக் கண்கமணிகள் உதய சூரியன் உதிக்கும் கிழக்கின் ஸ்பெக்ட்ரம் என்னும் கட்சியின் கொளை விளக்கக் கையேட்டை லட்சக்கணக்கில் வாங்கி கிழக்குக்கு லட்சக்கணக்கில் லைப்ரரி ஆர்டர்கள் கொடுக்காமலா போய் விடுவார்கள். வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும். ஸ்பெக்ட்ரத்தை வைத்து கிழக்குக்கு ஆதாயம். 1.76லட்சம் கோடியில் ஒரு கோடியாவது கிழக்குக்குப் பாய்ந்தால் சரி. நன்றாக இருங்கள். எப்படியும் பிழைக்கலாம் என்பது ஒரு வழி. ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடகக்வில்லை என்று கையேடு போட்டு பிழைப்பது அதில் ஒரு வழி.
[[[தினமும் 4 முறை ரவுண்ட் அடித்தால், நிச்சயம் 10 கிலோ உடல் எடையைக் குறைத்து விடலாம்.]]]
மொதல்ல இதைச் செய்யுங்க சாமி.. வருஷா வருஷம் உங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கே பிபி ஏறுது..!
கிழக்குப் பதிப்பகத்திற்கு, எங்கள் வாழ்த்துக்கள்.
I want the following books - I am @ Srivilliputtur. Please inform where the book available.
Ratham Orey Niram - by Sujatha (which was published in Kumudam very long back.
rathnavel_n@yahoo.co.in
My sincere opinion is that Sujatha's books are priced very high compared to other authors' creations. This is difficult to digest as I am sure Sujatha sells very well and the publisher can make money by volume sales. Atleast in the book exhibitions, his books should have special discounts.
I am planning a visit to the exhibition in the coming week. I presume, as usual, Kalki's books will be ther in most stalls! What a writer!
- R. J.
I have had a close look at publishing books and the hugh margins available.A publisher is willing to give 20 to 30 % of the cost to a book seller but the book seller is not even willing to give even a 10 % discount to the buyer. I had personal experience of this even at Kizhakku's own show room in eldams road.
I have had a close look at publishing books and the hugh margins available.A publisher is willing to give 20 to 30 % of the cost to a book seller but the book seller is not even willing to give even a 10 % discount to the buyer. I had personal experience of this even at Kizhakku's own show room in eldams road.
Like Rathnavel,i am also searching for sujhathas Sorga Theevu and Ratham Orey Niram,Please tell the shops in chennai,where i can find these books.
Post a Comment