பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 09, 2011

சன்டேனா இரண்டு (9-1-11) செய்திவிமர்சனம்

இந்த வார செய்திகள்..."ஒரு குட்டு, ஒரு ஷொட்டு".

செய்தி # 1

நான் குட்டு வைக்கபோவது எனக்கு,உங்களுக்கு, நம் எல்லாருக்கும் இருக்கும் நமது பாரத நாட்டின் தேசிய குணத்திற்கு.

அந்த குணம்.., எவ்வளவு பெரிய issue ஆக இருந்தாலும், கொஞ்ச நாட்கள் மட்டும் அதைப்பற்றி பேசிவிட்டு, பின்னர் அதை பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து, வேறு விஷயத்துக்கு தாவுவது. இதற்க்கு,சமிபத்திய உதாரணம் ஸ்பெக்ட்ரம் விவகாரம்.

"ஸ்பெக்ட்ரம் எல்லாம் ஓல்ட் டாபிக். அதை பற்றி அதான் ஏற்கனவே பேசியாச்சே" என்கிற அளவுக்கு காணாமல் போய்கொண்டு இருக்கிறது இந்த முறைகேடு.
ஸ்பெக்ட்ரம் என்றதும் எல்லாரும் ராசாவை பற்றியே பேசுகிறோம். ஆனால், இத்தனை கோடிகள் சம்பந்தபட்ட விவகாரத்தில், கருணாநிதியின் அனுமதி இன்றி,அவரது ஆலோசனை இன்றி ராசா சின்னதாக ஒரு கையெழுத்து கூட போட்டுஇருக்க வாய்ப்பே இல்லை.

ஸ்பெக்ட்ரத்தை பொறுத்தவரை, ராசா வெறும் அம்பு. அதை எய்தவர் கருணாநிதி அவர்களாக மட்டுமே இருக்க முடியும். இது ஒரு முறைகேடு என்றால், முதன்மை குற்றவாளி திமுக தலைவர்தானே.

ஆனால், என்ன மாயமோ தெரியல, என்ன மந்திரமோ தெயயல அவரது பெயர் வெளிவரவில்லை.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் கிடைத்த கால்குலட்டர் திரைக்குள்ளே வாராத ஒரு பெரும் தொகை குறித்து லீக்கான இரண்டு செய்திகள் நம்மை அதிர வைக்கின்றன.

ஒரு பெரும் பங்கு கலைஞர் குடும்பத்திற்கு சென்று இருக்கிறது. அந்த தொகை சென்னையில் உள்ள சில ஆடிட்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, முதலீடுகள் அல்லது தொழில் நிறுவனங்களுக்கு கடன் தரவும் உத்தரவு தரப்பட்டு உள்ளது. இதனால், சில ஆடிட்டர்களின் கையிருப்பு மிக சமீபமாக கன்னாபின்னா என்று எகிறி இருக்கிறது என்று ஒரு செய்தி.

மற்றொன்று, ஒரு பெரும் தொகை, இத்தாலியில் இருக்கும் சோனியாவின் சகோதரிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுஇருப்பதாகவும் சொல்கிறது.

"ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளோடு சுமுக உடன்பாடு விரைவில் ஏற்படும்" என்று அறிவித்துஇருக்கிறார்கள் காங்கிரஸ் சார்பாக.அவர்களுக்கும் "டீல்" முடிவாகிவிட்டதோ என்னமோ? பாரத மாதாவுக்கே வெளிச்சம்.

"ஸ்பெக்ட்ரம் என்பது ஒரு ஊழல் என்பது ஒரு தவறான விஷமத்தனமான பிரச்சாரம். அதனால், அரசுக்கு நஷ்டம் ஏற்ப்பட்டு இருப்பது உண்மை. ஆனால்,அந்த பணம் எங்கேயும் போய்விடவில்லை. நமது கிராமப்புற மற்றும் ஏழைமக்களுக்கு அதனால் பெரும் பயன் கிடைத்து உள்ளது. செல்போன்கள் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் அவர்களால் பேசமுடியும்" என்று கூறி இருக்கிறார் ஒரு காங்கிரஸ் தலைவர்.

உங்களுக்கு ஏதாவது புரிந்தால், எனக்கு சொல்லுங்கள்.

இன்று நம் தமிழக முஸ்லிம்களிடையே செல்வாக்கு பெற்று இருக்கும் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் திரு.ஜைனுல் ஆபிதீன் ஒரு படி மேலே சென்று,"ஸ்பெக்ட்ரம் போன்று எதனை கோடி யார் ஊழல் செய்தாலும், அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. முஸ்லிம்களுக்கு யார் ஆறு சதவித இட ஒதுக்கீடு தருவார்களோ அவர்களுக்கு நாங்கள் ஓட்டு போடுவோம்" என்று அறிவித்து இருக்கிறார்.

அவரை போலவே, நாமும் நமக்கு என்ன லாபம் என்று பார்ப்பதுதான் சரி என்று தோன்றுகிறது.

ஒரு மணிநேரத்திற்கு 22 லட்ச ருபாய்.

எதற்கு தெரியுமா? நமது லோக்சபா மற்றும் ராஜிய சபா இரண்டும் நடத்துவதற்காக ஆகும் செலவு இது.

இந்த வருடத்தில், 385 கோடி ருபாய் பார்லிமென்ட் நடைபெறவும், ராஜிய சபா நடைபெற ருபாய் 300 கோடியும் செலவுகளாக அறிவிக்கபட்டு இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ரகளைகள் காரணமாக, திட்டமிட்டதில் லோக் சபா வெறும் 9 சதவிதமும், ராஜ்ய சபா வெறும் 2 சதவிதமும் மட்டுமே நடைபெற்று இருக்கிறது.

பாராளுமன்றம் முடங்கியதால் ஏற்ப்பட்ட இழப்புகள்,அதனால் செயலிழந்து போன செயல்திட்டங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டால் அரசுக்கு ஏற்ப்பட்ட நஷ்டம், இந்த இரண்டுக்கும் ஒரு "Balance Sheet" ஒரு போட்டு பார்த்தேன்.

அடடே... TALLY ஆகிவிட்டதே.


செய்தி # 2

நான் "ஷொட்டு" வைக்க போகும் நபர்..சீனு ராமசாமி.

அவரை பற்றி பார்க்கும்முன், பெரிதும் பில்ட் அப் செய்யப்பட்டு, படுதோல்வி அடைந்த மூன்று படங்களை பற்றி எழுதுகிறேன்.

1 . ராவணன் : ஒரு இதிகாச கதையை உருவி, அதை வைத்து தமிழிலும்,இந்தியிலும் ஒரே நேரத்தில் பிசினஸ் செய்ய அல்லது இந்திய ரசிகர்களை ஏமாற்ற முயற்சி செய்து, தானே ஏமாந்து போனார் மணிரத்தினம்.

2 .நந்தலாலா : "இலக்கியம், சர்வேதேச சினிமா எதுவும் தெரியமால் கிராமத்தில் இருந்து ஒரு பொட்டிய தூக்கிக்கொண்டு அசிஸ்டன்ட் டைரக்டர் ஆகணும்ன்னு வந்துவிட்றாங்க" என்று அறிவுஜீவி கணக்காய் பேசிய இயக்குனர் மிஸ்கின்,ஒரு ஜப்பானிய படத்தை அப்படியே "நந்தலாலா" என்று ஈயடிச்சான் காபி அடித்தார். இப்படி "சுடுவதற்கு" தான் உதவி இயக்குனர்களுக்கு சர்வதேச படங்கள் பற்றி தெரியவேண்டும் என்று சொன்னார் என்பது விளங்கிவிட்டது.வந்த வேகத்தில், காணாமல் போனது நந்தலாலா.

3 . மன்மதன் அம்பு : "இன்று தமிழகத்தில் எழுத தெரிஞ்சவங்க ரொம்ப கம்மி" என்று விளக்கம் சொன்ன கமல், தானே ஸ்கிரிப்ட்,பாடல்கள் எல்லாம் எழுதி, கையை சுட்டுகொண்டார்.

இவர்களுக்கு, மத்தியில், எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு அழகான யதார்த்த கதை சொல்லி ஜெயித்து இருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.

சமிபத்தில் வெளிவந்து பாராட்டுக்களை குவித்து கொண்டு இருக்கும் "தென் மேற்கு பருவகாற்று " படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி.

தென் மேற்கு பருவகாற்று - தேனி மாவட்டத்தின் மண்வாசனையோடு, தாய் பாசத்திற்கும், காதலுக்கும் இடையே சிக்கித்தவிக்கும் ஒரு கிராமத்து இளைஞனின் கதையை உயிரோட்டமாக சொல்கிறது. நான் விமர்சனம் எழுதுவதை விட, நீங்கள் பாத்துவிட்டு சொல்வதான் சரி.

" இங்கே குளிரா விசுர தென் மேற்கு பருவ காற்று அஞ்சு மைலுக்கு அந்த பக்கம் அனலா வீசுது.இயற்கை செஞ்ச தப்பு என்று சொன்னாலும், மனுஷங்க அதற்க்கு எதாவது செய்யனும் இல்ல " என்று இடையே அழுத்தமான முத்திரைகளை பதித்து இருக்கிறார் சீனு ராமசாமி.அம்மா வேடத்தில் சரண்யாவின் நடிப்பை பார்த்தபோது, இன்றைக்கு அவரை போன்ற சிறந்த ஒரு குணசித்திர நடிகை வேறு யாரும் தமிழில் இல்லை என்று தோன்றுகிறது.

மற்ற எந்த மொழியைவிடவும் நம் தமிழகத்தில் தான் சிறந்த படங்களும், மிக திறமையான இளம் இயக்குனர்களும் வந்துகொண்டே இருக்கிறார்கள் என்று நான் அடித்து சொல்வேன்.

வாழ்த்துக்கள் சீனு ராமசாமி. அதே சமயம், நீங்களும், சசிகுமார் போல "ஈசன்" என்று ஆக்க்ஷன் மசாலாவுக்கு தாவாமல், தொடர்ந்து நல்ல படங்கள் தரவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

நம் தமிழ்ரசிகர்களின் ரசனை ஒரு நல்ல, சீரிய, ஆரோகியமான பாதையில் செல்கிறது என்பது தொடர்ந்து நிரூபணம் ஆகி வருகிறது. கமல்,மணி ரத்தினம் போன்ற ஜாம்பவான்களும், மற்ற இயக்குனர்களும் இந்த உண்மையை உணரவேண்டும்.

பருத்திவீரன்,சுப்ரமணியபுரம்,வெண்ணிலா கபடி குழு, ரேணிகுண்டா, நாடோடிகள்,களவானி, தா என்று வந்து கொண்டு இருக்கும் 'தரவரிசை' பட்டியலில் புதிதாய் சேர்ந்து இருக்கிறது தென்மேற்கு பருவகாற்று.

(நன்றி... இனி, அடுத்தவாரம்)

-இன்பா

11 Comments:

புரட்சித்தலைவன் said...

வாழ்த்துக்கள் சீனு ராமசாமி. அதே சமயம், நீங்களும், சசிகுமார் போல "ஈசன்" என்று ஆக்க்ஷன் மசாலாவுக்கு தாவாமல், தொடர்ந்து நல்ல படங்கள் தரவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.//
சார், சரக்கு தீர்ந்து விட்டால் என்ன பண்றது சார் . வெளிநாட்டு படத்த பார்த்து காப்பி அடிச்சாலும் கண்டு புடிச்சுடுறீங்க.

Unknown said...

//ஒரு இதிகாச கதையை உருவி, அதை வைத்து தமிழிலும்,இந்தியிலும் ஒரே நேரத்தில் பிசினஸ் செய்ய அல்லது இந்திய ரசிகர்களை ஏமாற்ற முயற்சி செய்து, தானே ஏமாந்து போனார் மணிரத்தினம்.//
சரியான காமடி

SRN said...

Dear Inba

What you and me can do for this spectrum issue. Todays scenario we can speak only about this issue. What else we can do .

Hopeless about future politics

ராமுடு said...

Dear Sir,

I felt bad to post both culprits along with a perfect Gentleman Mr.Rangarajan.

ரோமிங் ராமன் said...

""எவ்வளவு பெரிய issue ஆக இருந்தாலும், கொஞ்ச நாட்கள் மட்டும் அதைப்பற்றி பேசிவிட்டு, பின்னர் அதை பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து, வேறு விஷயத்துக்கு தாவுவது" -- சரிதான், நாம மட்டும் அல்ல தமிழ்நாடு அரசும் தான்... நீதிமன்றத்தை எவ்வளவு மதிக்கிறது தெரியுமா? இன்று காலை சென்னை சங்கமம் தட்டிகள் வைத்தாயிற்று- முதல் வரி
"தமிழ் மையம்"

ConverZ stupidity said...

@ ராமுடு said...
//Dear Sir,

I felt bad to post both culprits along with a perfect Gentleman Mr.Rangarajan.//

not both culprits; instead three culprits

ConverZ stupidity said...

ராமுடு said...
//Dear Sir,

I felt bad to post both culprits along with a perfect Gentleman Mr.Rangarajan.//

not both culprits; three culprits why you left TR.Balu

Unknown said...

இதுவும் கடந்து போகும் - இது தெரியாதவரா களவாணி குடும்ப தலைவர்.

பகிர்வுக்கு நன்றி

Prakash said...

Part 1:
ஏதோ இராசா அதுவரை கடைப்பிடித்து வந்த ஏல முறையைக் கைவிட்டது போன்ற தோற்றத்தை உரு வாக்க முயற்சிக்கிறார்கள். ஏல முறையை கைவிட்டது யார்? ஏன்?

1994 தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை

இக்கொள்கையின் அடிப்படையில் டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பெரு நகரங்களுக்கு, ஒவ்வொரு நகருக்கும் தலா இரண்டு நிறுவனங்களுக்கு ஏலமின்றி மிகக் குறைந்த உரிமக் கட்டணத்தில் (உ.ம் - சென்னை RPG/Skycell: முதலாண்டுக்கு ரூ.1 கோடி, இரண்டாம் ஆண்டுக்கு ரூ.2 கோடி, 3 ஆம் ஆண்டுக்கு ரூ.4 கோடி) உரிமம் வழங்கப் பட்டது. M4.4 MHzஅலைக் கற்றையும் கட்டணமின்றி வழங்கப்பட்டது.

1995 - ஏலமுறை அறிமுகம்

மேலே குறிப்பிட்ட பெருநகரங்கள் தவிர, பிற 18 நகரங்களுக்கு ஏலமுறை அடிப்படையில் இரண்டு இரண்டு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. மிகப் பெரிய வருவாயை எதிர்பார்த்து ஏலத்தில் போட்டி போட்டு பங்கேற்ற நிறுவனங்களால் போதிய வருவாய் இல்லாததால் அரசிற்கு செலுத்த ஒப்புக் கொண்ட உரிமக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தத்தளித்தனர். சேவை விரிவாக்கமும் முடங்கியது. 1994 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையின் நோக்கம் நிறைவேறவில்லை. இந்த தேக்க நிலையை கருத்தில் கொண்ட வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. அரசு இந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சுமார் ரூ.50,000 கோடியை 1999ஆம் ஆண்டில் ரத்து செய்தது. புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை உருவாக்கியது.

1999 - புதிய தொலைத்தொடர்புக் கொள்கை

இந்தக் கொள்கையின்படி 2000-த்தில் BSNL/MTNL மூன்றாவது நிறுவனமாக செயல்பட அனுமதி வழங்கப் பட்டது. 2001 இல் 17 நிறுவனங்கள் ஒரு சேவைப் பகுதியில் 4 ஆவது நிறுவனமாக செயல்பட ஏலமுறை யில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுமதிக்கப் பட்டனர். இந்த ஏலக் கட்டணம் தான் ரூ.1658 கோடியாகும்.

2003- ஒருங்கிணைந்த சேவைக்கான உரிமம்

டிராயின் பரிந்துரையின்படி 2003ல் பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில், ஜஸ்வந்சிங், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கொண்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை முடிவின்படி, அடிப்படைத் தொலைபேசி சேவையில் இருக்கும் நிறுவனங்கள், செல்லுலார் சேவைக்கும், செல்லுலார் சேவையில் இருக்கும் நிறுவனங்கள் அடிப் படைத் தொலைபேசி சேவைக்கும் 2001 இல் நிர்ணயிக் கப்பட்ட உரிமக் கட்டணமான ரூ.1658 கோடியை செலுத்தி, ஏலமின்றி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டு முதலில் வருவோர்க்கு முன்னுரிமை, வருவாயில் பங்கு போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதனடிப்படையில் ஏலமின்றி 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில், 51 நிறுவனங்களுக்கு இராசா பதவி ஏற்கும் வரை உரிமங்கள் வழங்கப்பட்டன. ஏலமுறையை ரத்து செய்தது பி.ஜே.பி. அரசே தவிர இராசா அவர்கள் அல்ல. இந்த செயல்களை மறைத்து விட்டு, மறந்துவிட்டு பி.ஜே.பி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் தற்போது இராசா மீது பழிபோட முயற்சிக்கிறார்கள்.

Anonymous said...

இந்த நாவல் (தென்மேற்கு பருவக்காற்று) எங்கு கிடைக்கும்?

thaiman said...

I hope this guy "prakashjaya74" might be a computer programmer. He is just copy & paste the same content in many blog comments.