பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 14, 2011

துக்ளக் 41 ஆம் ஆண்டு விழா - ஸ்பெஷல் கவரேஜ்

[1]
வழக்கம் போல இந்த வருடம் காமராஜர் அரங்கம் சோவிற்கு கிடைக்கவில்லை. "எலக்ஷன் வருது, இவர் 2G, சோனியா பற்றி பேசுவார் அப்பறம் எப்படி சார் தருவாங்க ?" என்று பேசிக்கொண்டார்கள்.சரியாக 1 மணிக்கு சென்னை மியூசிக் அகடமிக்கு சென்ற போது இரண்டு மெயின் கேட்டிலும் 50 + 50 பேர் நின்று கொண்டு இருந்தார்கள். அவர்களிடம் பேச்சு கொடுத்த போது "சார் நாங்க 11 மணிக்கே வந்துட்டோம்" என்று மீதம் உள்ள சாம்பார் சாதத்தை சாப்பிட்டு முடித்தார். விட்டு போன முருங்கைக் காயை கடித்து துப்பிவிட்டு. பையிலிருந்து தினத் தந்தி வரலாற்று சுவடுகள் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார். இந்த புத்தகத்தை படித்து முடித்த பின் தான் கதவை திறப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.மணி 1:30 இன்னும் 5 மணி நேரம் என்ன செய்வது என்று யோசிக்கும் போது பக்கத்து க்யூ காரர் தின மலர் பேப்பர் தந்தார். அதை படித்துக்கொண்டு இருந்தேன். கூட்டம் 200 ஆகியது. பிறகு மூன்று மணிக்கு கூட்டம் நிறைய அதை ஜெயா டிவி காரர் படம் பிடித்துக்கொண்டு இருந்தார்.

சுமார் 3:30 மணிக்கு கதவை திறக்கும் போது ஒரு குண்டு ஐயர் மாமா க்யூவை மீற கூட்டம் அடிதடி ஆகியது. கோபாலபுரம் பக்கம் கூட்டம் நடப்பதால் இருக்குமோ என்று நினைத்துக்கொண்டேன்.


இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். முதலில் வந்த அந்த 200 பேரில் கிட்டத்தட்ட 100 பேர் 70 வயதை தாண்டி இருப்பார்கள். ஒருவர் போலியோவால் பாதிக்கபட்டவர் அவரை ஒருவர் சின்ன குழந்தை மாதிரி தூக்கிக்கொண்டு வந்தார். சிலர் வாக்கிங் ஸ்டிக், நிச்சயம் 33% மேல் பெண்கள் வந்திருந்தார்கள். அதில் 12 வயது பெண் குழந்தையும் அடக்கம். இளைஞர்கள் அரசியலுக்கு வர ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.


[2] 3:30 மணிக்கு மேல் எல்லோரும் கையில் துக்ளக் வைத்துக்கொண்டு இருந்தார்கள். சிலர் தினமணி, தினமலர். நான் மட்டும் குமுதத்தில் நித்தியாவுடன் இருந்த நடிகை பேட்டியை படித்துக்கொண்டு இருந்தேன். பக்கத்தில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். மூடி வைத்துவிட்டேன்.தலைக்கு மேலே போஸ் ஸ்பீக்கர்ஸ் இருந்தது. அட நல்ல ஆடியோ வரும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் பக்கத்தில் இருந்தவர் நான் மேலே பார்ப்பத்தை பார்த்து சார் வெளியாட்களுக்கு இந்த ஸ்பீக்கர் கிடையாது ஒன்லி ஃபார் கச்சேரி என்றார்.சின்னதாக ஒரு தூக்கம் போட்டு எழுந்த பின் மணி 4:45. அரங்கில் லேசாக

கைத்தட்டல்(3/10) ( அடைப்பு குறியில் இருப்பது கைத்தட்டல் அளவு ) கே.பாலச்சந்தர் வந்தார். பிறகு டிவி வரதராஜன்(0/10) இல.கணேசன் ( 5/10), குருமூர்த்தி ( 8/10) சரியாக 6மணிக்கு 10/10 வந்தார் ( சோ ). பிறகு பத்து நிமிஷம் கழித்து எஸ்.வி.சேகர் வந்தார் ( 2/10). பின் பக்கத்திலிரிந்து "யோவ் போய்யா !, இவர் எதற்கு வந்தார் போன்ற கமெண்ட் வந்துக்கொண்டே இருந்தது. பிறகு சினிமா நடிகர் சிவகுமார்(6/10). ஹி.முன்னனி ராமகோபாலன்(8/10).

சரியாக 6:30 மணிக்கு சோ மேடைக்கு வந்தார். பொங்கல் வாழ்த்துகள். மக்கள் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூச்சல் போட. உடனே மூன்று மாதத்துக்கு முன்பாகவே தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்று அதிரடியை தொடங்கினார்.

[ 3 ] ஆடியோ முதல் பகுதிபகுதி - 2


பகுதி-3

பகுதி - 4


பகுதி - 5


படங்கள் சில


எல்லோருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள் !

29 Comments:

Harish said...

மீட்ட்ங் முடிந்து 2 மணி நேரமாகிவிடது. ஒரு update உம் இல்லையே...சீக்கிரம் இட்லிவடை..வடைக்கு இன்னும் எண்ணைய் அடுப்பில் காயவில்லையா!!!

ரிஷபன்Meena said...

இவ்வளவு நேரம் காத்துகிடக்கும் வாசகர்கள் வேறு எந்தப் பத்திரிக்கைக்கு இருப்பார்கள்.

துக்ளக் பத்திரிக்கையும் மற்ற கமர்சியல் பத்திரிக்கைகள் போல கூத்தடிக்காமல் இருப்பதே இத்தனை மரியாதைக்கு
காரணம்.

பொங்கல் வாழ்த்துக்கள்!!

Anonymous said...

CHO is perhaps the last known true Journalist. Very much worried on Thuglak's succession.

பத்மநாபன் said...

சென்னையில் இருந்தால்கூட இப்படி துக்ளக் ஆண்டு விழாவுக்கு சென்று இப்படி ரசித்திருக்க முடியுமா தெரியவில்லை.. பதிவு செய்து விரைவில் வெளியிட்டு ஓமனில் ஒரு மூலை பாலைவனத்தில் இருந்து சிரிக்கவும் / சிந்திக்கவும் வைத்ததற்கு மிக்க நன்றி....

நகைச்சுவைக்கு கிடைத்த வாய்ப்பு ஒன்றை கூட தவற விடாமல் சிக்ஸர் அடித்து கொண்டிருந்தார் சோ...

ஆவலோடு அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்......

பத்மநாபன் said...

அடுத்த பகுதியிலும் சோ வின் ஆட்டம் தொடர்கிறது...தலித் பற்றி கோவில் சொத்து பற்றி ..கூட்டணி...ஆணித்தரமான பதில்கள்

ஆவலுடன் மூன்றாம் பகுதிக்கு

Unknown said...

1 and 3 part are same. Please check.

srinet76 said...

1 and 3rd part are same. Please check

IdlyVadai said...

//First and 3 part are same. please check//

இன்னும் 10 நிமிஷத்தில் சரி செய்துவிடுகிறேன். நன்றி

srinet76 said...

Excellent. Thanks for the upload

Anonymous said...

//கதவை திறக்கும் போது ஒரு குண்டு ஐயர் மாமா க்யூவை மீற கூட்டம் அடிதடி ஆகியது. கோபாலபுரம் பக்கம் கூட்டம் நடப்பதால் இருக்குமோ என்று நினைத்துக்கொண்டேன்.//

ஐயர் மாமா தப்பு செஞ்சா கூட அதுக்கு காரணம் கோபாலபுரம் தான். ஜெயலலிதாவே தப்பு செஞ்சாகூட அதுக்கு காரணம் கோபாலபுரம் தான். இவங்க மேல எந்த தப்பும் கிடையாது. ஏன்னா, இவங்களைத் தப்பு செய்ய வைப்பதே கருணாநிதி தான்.

பத்மநாபன் said...

குரு மூர்த்தி பேச்சு,சோ வின் பேச்சு

அவர்களது பேச்சும் சரி...ஆடியோவும்

சரி... மிக அருமை

இந்த முறை நிறைய மிமிக்ரி பண்ணியிருக்கார் சோ...

( விடியோ ரிலீஸ் உண்டா )

ரோமிங் said...

ஒரு 2.30க்கு போனேன்,நிறைய வால்ண்டியர்கள்(வாசகர்கள் )வரிசையை ஒழுங்கு பண்ணிக் கொண்டிருந்தார்கள்!இடம் கிடைத்து உள்ளே அமர்ந்தபோது நான் நண்பரிடம் சொன்னேன்: நானெல்லாம் சினிமாவுக்குக் கூட அரை மணி முன்னாள் போகமாட்டேன்., ரொம்ப கூட்டமான ஹோட்டலுக்குப் போய் காத்திருந்து சாப்பிட மாட்டேன்.. இதுக்கு மட்டும் தான் இப்படி ஓடி வருவேன் - என்னவென்று தெரியவில்லை...
முன் சீட் நபர் : சார் இங்க வந்த எல்லாரும் அப்படிதான்... அது சோ வின் நேர்மைக்கு கிடைக்கற மரியாதை சார்!! என்றார்.
இல்லையென்றால்,படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் உட்கார்ந்திருப்பவர்கள் தயவு செய்து வெளியில் சென்று ஸ்க்ரீனில் பார்க்கவும் என்று மைக்கில் கேட்டுக் கொண்ட ஐந்து நிமிடத்தல் அங்கே செல்வார்களா என்ன?

(பொங்கல் அன்றேனும் இட்லிக்கு பதில் மேல லோகோ வில் ஒரு பொங்கல் வைங்கப்பா!!)

Harish said...

எண்ணெய் காயவில்லையா என்று எகத்தாளம் பண்ணியதற்கு, வடையோடு இந்தா விருந்து என்று அமர்களம் பண்ணிவிட்டீர். நன்றி பல பல...இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

இலவசக்கொத்தனார் said...

எத்தனை செல்பேசி அழைப்புகள்.நம் மக்களுக்கு இன்னமும் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற இங்கிதமே இல்லை!!! :(((

சுபத்ரா said...

அருமை.. :)))

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

Anonymous said...

ஐயர் மாமா தப்பு செஞ்சா கூட அதுக்கு காரணம் கோபாலபுரம் தான். ஜெயலலிதாவே தப்பு செஞ்சாகூட அதுக்கு காரணம் கோபாலபுரம் தான். இவங்க மேல எந்த தப்பும் கிடையாது. ஏன்னா, இவங்களைத் தப்பு செய்ய வைப்பதே கருணாநிதி தான்

---------
In India creating a precedence is very important for anything and everything. Unfortunately all those that are in a position to create a precedence are Bad people.

Examples are ,
1. If a party tells people not to accept money/freebies from DMK, they won't get a single vote.

2. Even if the next Govt tries to close TASMAC it's almost impossible.

People follow the king and so will be the last availabe set of Righteous people.

Unknown said...

Thank you very much for this post.
Nothing could make 'pongal' better than listening to cho.

lalithakrishnan

eramurukan said...

வண்ணநிலவனை 'துர்வாசர்' என்று மட்டும் சோ அறிமுகம் செய்கிறார்.தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய மூத்த இலக்கியப் படைப்பாளி என்பதைச் சொல்லியிருக்கலாம்

Anonymous said...

அன்புள்ள முருகன்

நானும் இந்த மறதியைக் கவனித்தேன். வழக்கமாக சோ, ராமச்சந்திரன் அவர்களை அறிமுகப் படுத்தும் பொழுது இவர் தமிழின் முக்கியமான ஒரு இலக்கியவாதி படைப்பாளி என்று சொல்லியே, மிகச் சிறப்பான இலக்கியவாதி என்று அங்கீகாரம் கொடுத்து அவரை மரியாதையுடனும் உரிய கவுரவுத்துடனுமே அறிமுகப் படுத்துவார். இந்த முறை ஏனோ அதை அவர் அவசரத்தில் செய்யவில்லை அல்லது செய்ய மறந்து விட்டார் என்றே தோன்றுகிறது. சோ வுக்கு பின்னால் இருந்து யாராவது அவர் மறந்ததை நினைவு படுத்த வேண்டியிருப்பதை கவனித்திருப்பீர்கள். இது ஒரு கவன/மறதிப் பிழை மட்டுமே என்றே அதை நான் கருதுகிறேன். நீங்கள் பழைய துக்ளக் நிகழ்ச்சிகளை யூட்யூபில் பார்த்தால் சோ வண்ணநிலவன்/துர்வாசர்/ராமச்சந்திரன் அவர்களுக்கு எவ்வளவு தனித்துவமான மரியாதை அளித்திருக்கிறார் என்பது தெரியும். மற்றபடி சோ வண்ணநிலவன் போன்றவர்களின் படைப்புக்களைப் படிப்பாரா என்பது தெரியவில்லை ஆனால் அவர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் அவரிடம் உண்டு என்பதே அவரது பழைய ஆண்டு விழா நிகழ்ச்சிகளைக் கண்ட பொழுது புரிந்து கொண்டேன். இருவரிடமும் நல்ல புரிதலும் சோவுக்கு வண்ண நிலவன் அவர்களிடம் மரியாதையும் அன்பும் இருப்பதினால்தான் வண்ணநிலவன் இன்றும் துக்ளக்கில் தொடர்கிறார் என்று எண்ணுகிறேன். நாம் படைப்புகளின் மூலமாக அறிந்திருக்கும் வண்ணநிலவனுக்கும் துக்ளக் துர்வாசருக்கும் தான் எவ்வளவு வித்தியாசங்கள்.

அன்புடன்
ச.திருமலை

Subramanian said...

Dear IV,

Thanks for the upload.Really enjoyed it.Cant thank you enough for posting it so quickly.You took the right decision to go in only for the audio upload as video really does not matter.You really made this pongal special for people like me who are away from the family.

ConverZ stupidity said...

part 2 audio seems to be incomplete due to technical glitch. IV plz look into it.

Unknown said...

"முன் சீட் நபர் : சார் இங்க வந்த எல்லாரும் அப்படிதான்... அது சோ வின் நேர்மைக்கு கிடைக்கற மரியாதை சார்!! என்றார்."

ஜோக்கடிக்காதிங்க சார், அப்படின்னா ரஜினி ரொம்ம்ம்ம்ம்ப நேர்மையானவரோ ? முதல் நாள்ளருந்தே காத்திருக்காங்க ரசிகர்கள்.

sathish (bengaluru) said...

"துக்ளக் 41 ஆம் ஆண்டு விழா - ஸ்பெஷல் கவரேஜ்"

Jaya TV Telecast 17th january 2011 @ 8pm

saketh said...

Audio and Video here in internet
http://www.thiraimovie.com/video/thuklak-41-annual-function-pongal-special-2011/

Anonymous said...

@இலவசக்கொத்தனார் said...
எத்தனை செல்பேசி அழைப்புகள்.நம் மக்களுக்கு இன்னமும் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற இங்கிதமே இல்லை!!! :(((.
unnakku aappu irruku en kaiyaala. sottai.. panni...

பொடிப்பையன் said...

பதிவிற்கு நன்றிகள்.
சும்மா வாங்கி போட்டு குத்திருக்காரு 'சோ'. இவர் கேட்ட கேள்விக்கு, சொத்துல உப்பு போட்டு திங்குறவன் தூக்கு மாட்டி செத்துருவான்.
மானகெட்ட மன்மோகன், எல்லாம் உதுத்த கருணாநிதி, இவங்கெல ஒட்டு கேட்டு வரும்போது செருப்பால அடிக்கணும்.

பெயரிலி said...

என்னது சோ நேர்மையாயிட்டாரா? பச்சையா இந்துத்துவா கும்பலையும் பார்ப்பனர்களையும் ஆதரிக்கிறாரு. ஆண்டுவிழாவுக்கு வந்தவங்கள்ல 99.99% பார்ப்பனர்கள்தான் இருப்பாங்க, இதுல நேர்மைன்னா என்னன்னு புரியலியே சார்? எப்போ ஒருத்தன் தன்னைச் சேர்ந்தவர்கள் செய்யற தப்பை சரின்னு சொல்ற அளவுக்கு ஆயிடறானோ அங்கேயே அவன் யாரையும் விமர்சிக்கும் தகுதிய இழந்துடறான். இது எல்லாருக்கும் பொருந்தும்!

Anonymous said...

"அவள்" செய்த திருட்டையும் "இவன்" செய்த கொள்ளையும்
விவரமாக வீட்டுக்குள்ளே விடிய விடிய
பேசுகின்றதெம் கூட்டம்

"சோ" வின் கதைப்புகளில் களித்திடும் எம் கூட்டம்
சமூகப்பொறுப்புகளைத் தவிர்த்திடும் எம் கூட்டம்


பூனைக்கு மணி கட்ட பாரதி போல் ஒரு 'மூடன்'
சேனைத் தலைவனாகி ஞாலத்தைக் காத்திடுவான்
அவதாரமாய் வருவான் அதுவரை பொறுத்திருப்போமென
ஆன்மிகம் பேசும் 'அறிஞர்' கூட்டம் எம் கூட்டம்


பாரதியின் பசிக்கொடுமை பார்த்திருந்ததெம் கூட்டம்
(அவன்) இறந்த அன்றும் அனாதைபோல் விட்டுவிட்டதெம் கூட்டம்
பரங்கியர் போனபின்னே அவன் (பாரதியின்) பாட்டை வைத்துப்(விற்றுப்) பிழைக்கின்ற
பாவி மக்கள் எம் கூட்டம்

உள் நாட்டான் வரிப்பண முதுகிலேறி வெளி நாட்டில் பணியமர்ந்து
தாய் நாட்டைப் பரிகசிக்கும் 'சிந்தனைச் செல்வர்' பல்லோர்
நிறைந்திருப்பதெம் கூட்டம்

namakkuL oruvan said...

"அவள்" செய்த திருட்டையும் "இவன்" செய்த கொள்ளையும்
விவரமாக வீட்டுக்குள்ளே விடிய விடிய
பேசுகின்றதெம் கூட்டம்

"சோ" வின் கதைப்புகளில் களித்திடும் எம் கூட்டம்
சமூகப்பொறுப்புகளைத் தவிர்த்திடும் எம் கூட்டம்


பூனைக்கு மணி கட்ட பாரதி போல் ஒரு 'மூடன்'
சேனைத் தலைவனாகி ஞாலத்தைக் காத்திடுவான்
அவதாரமாய் வருவான் அதுவரை பொறுத்திருப்போமென
ஆன்மிகம் பேசும் 'அறிஞர்' கூட்டம் எம் கூட்டம்


பாரதியின் பசிக்கொடுமை பார்த்திருந்ததெம் கூட்டம்
(அவன்) இறந்த அன்றும் அனாதைபோல் விட்டுவிட்டதெம் கூட்டம்
பரங்கியர் போனபின்னே அவன் (பாரதியின்) பாட்டை வைத்துப்(விற்றுப்) பிழைக்கின்ற
பாவி மக்கள் எம் கூட்டம்

உள் நாட்டான் வரிப்பண முதுகிலேறி வெளி நாட்டில் பணியமர்ந்து
தாய் நாட்டைப் பரிகசிக்கும் 'சிந்தனைச் செல்வர்' பல்லோர்
நிறைந்திருப்பதெம் கூட்டம்