பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 30, 2011

சன்டேனா இரண்டு (30-01-11) செய்திவிமர்சனம்

இந்த வார செய்திகள்....""குடி, கொடி""

செய்தி # 1

முன்பெல்லாம் அந்த அந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் போது மட்டும் விலைவாசி உயரும். அதற்க்கு முன்பே அதை குறித்து அறிவிப்பார்கள்.அனைத்துக்கட்சி கூட்டங்கள் நடக்கும்.அரசியல்வாதிகள் கொஞ்சமாவது மக்களுக்கு பயந்தார்கள்.

ஆனால், இப்போதெல்லாம் ஏன்டா சுதந்திரம் இரவில் கிடைத்தது என்று வேதனைபடும் அளவுக்கு, ராவோடு ராவாக விலைவாசி உயர்ந்துவிடுகிறது. அதுவும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை. இனி எதிர்காலத்தில் நடுத்தர, மற்றும் கீழ் நடுத்தர குடும்பங்கள் எப்படி காலம் தள்ளபோகிறதோ என்று பதற்றமாக இருக்கிறது.

"காசு கொடுத்தால் ஓட்டு போடுவாங்க" என்ற விஷ செடியை, ஏற்க்கனெவே சுயநலத்திலும், ஊழலிலும் ஊறிய நம் அரசியல்வாதிகள் மனதில் நாம் விதைத்துவிட்டதுதான் இதற்க்கெல்லாம் காரணம்.

அத்தியாவசிய பொருட்கள் எவ்வளவுதான், எத்தனைமுறைகள் விலை உயர்ந்தாலும், மிக குறைந்த விலையில் சாதாரணமாக கிடைப்பது அல்லது தொடர்ந்து கிடைக்கபோவது....டாஸ்மாக் சரக்குகள்தான்.

சமிபத்தில் பத்தாம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் பீர் அடித்து பார்ட்டி கொண்டாடியதாக ஒரு செய்தி படித்தேன். மழை வெள்ளத்தை மிஞ்சும் அளவுக்கு சாராயம் நம் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளின் தயவால். இதன் தொடர்ச்சியாக ரவுடியிசமும்,சாலை விபத்துக்களும் கணிசமாக அதிகரித்து இருக்கின்றன.

இதே தமிழக அரசு..விவசாயிகள் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்குவதையும், அதை விற்பனை செய்வதையும் தடை செய்து இருக்கிறது. அதற்க்கு அரசு கூறும் காரணம்....மது விற்பனையை தடுக்கிறார்களாம். 'கள்' விற்பனை சட்ட விரோதம் என்கிறது அரசு.

அப்படி பார்த்தால், தெருவுக்கு தெரு மதுபான கடைகளை திறந்து இருக்கும் இந்த அரசையே சட்டவிரோத அரசாக அறிவிக்கவேண்டும்.

தடையை மீறி கள் இருக்குமதி செய்ய, திரு. நல்லுசாமி என்பவர் தலைமையில் சேலம் அருகே அரச்சலூரில் விவசாயிகள் 'தமிழ்நாடு கள் இறக்குமதியாளர்கள் சங்கம்' என்ற அமைப்பின் கீழ் போராட்டத்தில் இறங்க முடிவு செய்தார்கள். ஏதோ ஒரு பெரும் தீவிரவாத அமைப்பை கைது செய்வதை போல, ஏராளமான போலீசாரை குவித்து, அவர்கள் அனைவரையும் கைது செய்துவிட்டது தமிழக அரசு.

" கோல் கொண்டு முக்காலோடு நடந்து வந்த கிழம் கூட, வேட்கொண்டு களம் நோக்கி விரைந்து செல்வாரே, கள்ளுணர்ந்து குடித்தோரே'' என்று ஒரு பழைய பாடல் இருக்கிறது.

நமது கிராமப்புறங்களில் தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்குவது பண்டைய காலம் தொட்டு இருந்து வரும் பழக்கம்.இதன் மூலம் கள்ளச்சாராயம் பெருகுவது கட்டுபடுத்தபடுவதுடன், தென்னங்கள் உடல் நலத்திற்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்க கூடியதும் அல்ல.

தென்னை மரத்து கள்ளை நமது அரசு வரிந்துகட்டி கொண்டு தடுக்கும் காரணம்.... டாஸ்மாக் மூலம் கிடைக்கும் பல கோடி ரூபாய்கள் வருமானம் இதனால் அடிவாங்கிவிடும் என்ற சுயலாபமும், சுயநலமும்தான்.

கொஞ்சம் வசதி படைத்தவர்கள் ஒயின் ஷாப்புக்கு சென்றுவிட, டாஸ்மாக் கடைகளுக்கு பெருமளவில் வாடிக்கையாளர்களாக இருப்பது....கூலி தொழிலாளர்கள், அன்றாட சம்பளக்காரர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள். இவர்கள் தென்னை மரத்தில் இருந்து வரும், விலை குறைந்த கள்ளை குடித்துவிட்டால், அரசு மதுபான கடைகளுக்கு யார் வருவார்கள்??

"நாங்க வாங்கி வைக்கிற இங்கிலிஷ்க்காரன் சரக்கை மட்டுமே அடிக்கணும்" என்பதுதான் அரசின் லட்சியம்.

டாஸ்மாக் சரக்குகள் விவகாரத்தில், சசிகலா மற்றும் ஸ்டாலின் இருவருமே கட்சி வேறுபாடு இன்றி 'முதல்' போட்டு, கொள்ளை லாபம் பார்த்து வருகிறார்கள்.

இந்த இருவரும் பங்குதாரர்கள் என்பதால், ஜெயா அவர்கள் மற்றும் கருணாநிதி இருவருமே தென்னை மரத்தில் இருந்து கள் இறக்குவதை தடை செய்வதில் உறுதியாக, முதல் முறையாக ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

"தென்னை மர கள்ளை மது என்று கூறி தடை செய்யும் அரசு, மதுபான கடைகளையும் தடை செய்யவேண்டும்" என்று கொஞ்சம் உருப்படியாக பேசி இருப்பவர் சீமான் மட்டுமே. சரத்குமாரும் கைதுசெய்யப்பட்ட திரு.நல்லுசாமியை சந்தித்து பேசி இருக்கிறார்.

இப்படி எழுதியதால், இன்பா ஒரு சீமான் ஆதரவாளர் என்றும், சரத்குமார் ரசிகர்(!?) என்றும் எழுதிவிடாமல், நான் சொல்லும் நியாயத்தை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

தென்னை மரத்தில் இருந்து கள் இறுக்குவதும், அதை விற்பனை செய்வதும் நமது விவசாயிகளின் தனிப்பட்ட உரிமை. மதுபான கடைகளை நடத்தும் அரசு, தென்னங்கள்ளை 'மது' என்று கூறி தடை செய்வது அரசு இயந்திரத்தின் வரம்பு மீறலை காட்டுகிறது. கூடவே, அதன் அடக்குமுறையையும்.

செய்தி # 2

"பஞ்சாப் மாநிலத்தில் எழுந்த காலிஸ்தான் தீவிரவாத குழுக்களை அடக்கிவிட்டீர்கள். ஆனால், அரை நூற்றாண்டாக இருந்து வரும் காஷ்மீர் தீவிரவாதத்தை ஏன் உங்களால் அடக்கமுடியவில்லை? அதற்க்கு காரணம், பஞ்சாபில் மக்கள் ஆதரவு இல்லை. ஆனால், எங்கள் காஷ்மீரில், தீவிரவாதிகளுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது"

-இப்படி சொன்னவர் காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவை சேர்ந்த, ஒரு வளைகுடா நாட்டில் என்னுடன் பணிபுரிந்த ஒரு நண்பர்.

காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் மீது வெறுப்பும், அங்கு குவிக்க பட்டுஇருக்கும் இராணுவத்தின் மீது அதிருப்தி மற்றும் அச்சமும் நிலவுவதாக அவர் கூறினார்.

இந்தியா, பாகிஸ்தான், தனிநாடு என்று அங்கு ஒரு நேர்மையான வாக்கெடுப்பு நடத்தினால், காஷ்மீர் மக்களில் பெரும்பான்மையோர் தனி நாடு அல்லது பாகிஸ்தானுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றார் அவர்.

படை துருப்புகளை படிப்படியாக குறைப்போம் என்று மத்திய அரசு அறிவிக்க, ஆனால், துருப்புகளை குறைப்பதற்கு ஏற்றார்போல் அங்கு இன்னும் நிலைமை சீரடையவில்லை என்றும், எங்களோடு ஆலோசிக்காமல் ராணுவத்தை குறைப்பதுபற்றி முடிவெடுக்ககூடாது என்றும் ராணுவ தலைமை அறிவித்திருக்கிறது. சரி. இன்னும் எத்தனை ஆண்டுகளில் அங்கு நிலைமை சீராகும் என்று யாராவது கூறமுடியுமா?

முன்பு அங்கு வசித்த பண்டிட்கள் என்னும் இந்துக்கள், தீவிரவாத அச்சுறுத்தலுக்கு பயந்து டெல்லி, இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு குடி பெயர்ந்துவிட்டனர். தற்போது, நம் இந்தியாவில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரே மாநிலமாக இருக்கிறது...காஷ்மீர்.

சுதந்திரம் வாங்கிய காலம்தொட்டே அங்கு நமது அரசு செய்த குளறுபடிகள், யார் குற்றவாளி யார் நிரபராதி என்று தெரியாத நமது இராணுவத்தின் அத்துமீறல்கள், மத உணர்வு, இதுவரை பதவி ஏற்ற எந்த மத்திய அரசும் அங்கு நேர்மையான தேர்தலை நடத்தாது என்று பல காரணங்களால் இந்தியாவிடம் இருந்து அன்னியப்பட்டு போயிருக்கிறது காஷ்மீர் மாநிலம்.

போதாகுறைக்கு, அங்கு மற்ற மாநிலத்தவர் வீடு,நிலம் வாங்க தடை உட்பட பல அந்தஸ்துகளை கொடுத்து மேலும் ஒதுக்கிவிட்டது இந்திய அரசாங்கம். நமது இந்த எல்லா பலவீனங்களையும் அங்கு தனது பலமாக்கி கொண்டிருக்கிறது பாகிஸ்தான்.

இந்தியாவின் எந்த பகுதியில் யார்வேண்டுமானாலும் குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றி, ஜெய்ஹிந்த் என்று முழங்கலாம். ஆனால், காஷ்மீர் மாநிலத்தில் தேசிய கொடி ஏற்ற சென்ற பாஜக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாஜக தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி மற்றும் அனந்தகுமார் ஆகியோர் விமான நிலையத்திற்கு உள்ளேயே கைது செய்யப்பட்டதோடு, காஷ்மீரில் நிலவிய பெரும் பதட்டம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் இருப்பதாக நாம் கூறிகொள்ளும் ஒரு மாநிலத்தில், குடியரசு தினம் கொண்டாட முடியாத அளவுக்கு தடைகள், கெடுபிடிகள், பாதுகாப்பு.

பாஜக தலைவர்கள் அங்கு சென்றது தேசபக்தியை பறைசாற்றுவதற்கு அல்ல. காஷ்மீர் மக்களின் நிலையை நன்கு புரிந்த அவர்கள் அங்கு சென்றது வேண்டுமென்றே பிரச்சினை செய்து, காங்கிரசின் பெயரை கெடுப்பதற்கு, உள்நோக்கத்தோடுதான் அவர்கள் சென்றார்கள் என்பதே உண்மை.

ஆனால், அதே சமயம், அவர்கள் அங்கு பாஜகவின் தாமரை கொடியை ஏற்றவோ இல்லை கரசேவகர்களின் காவி கொடியை ஏற்றவோ முயலவில்லை. "நமஸ்தே ஸ்ததா வத்சலே மாத்ரு பூமே" என்று கோஷம் முழங்க "ஷாகா" வகுபெடுக்க செல்லவில்லை.(அய்யா, நான் ஆர்.எஸ்.எஸ். இல்லை!).

அதெல்லாம் பின்னாடி பார்த்துக்கொள்ளலாம் என்று நமது நாட்டின் தேசிய கொடி ஏற்றவே அங்கு சென்றார்கள் என்பதும் உண்மை.இதைபோல, நம் தமிழகத்திற்கு குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்ற அவர்கள் வந்திருந்தால், எங்காவது ஒரு மூலையில் ராஜ் டிவி செய்திகளில்(!) மட்டும் சொல்லிஇருப்பார்கள்.

ஆனால், அவர்கள் காஷ்மீருக்கு சென்றது தலைப்பு செய்திகளில் இருப்பதற்கு என்ன காரணம்? என்ன நடக்கிறது காஷ்மீரில்? அங்கு நடுக்கும் நிலவரங்களை, மக்களின் மனோநிலையை அறிய நமது மீடியாக்களுக்கு முழு சுதந்திரம் ஏன் தரப்படவில்லை? எப்போது அங்கு மற்ற மாநிலங்களை போல நிலைமை சீரடையும்?

இந்த கேள்விகளுக்கு விடைகளை நன்கு யோசித்து பார்க்குபோது, என் காஷ்மீர் நண்பரின் கருத்துக்கள் உண்மையாக இருக்குமோ என்ற அச்சமே எனக்கு மிஞ்சுகிறது.

நான் நக்சலைட்டுகளை ஆதரிப்பவன் என்று சொன்னார் ஒரு நண்பர். பீகார், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களுக்கு சென்று பாருங்கள். அங்கு பல மாவட்டங்களில் நக்சலைட்டுகளின் ஆட்சிதான் இன்னமும் நடக்கிறது. போலீஸ், அரசாங்கம் எல்லாம் அவர்களை நெருங்க முடியாது. அவர்கள் வைப்பதே சட்டம்.

காரணம், அச்சத்தையும் மீறி நிற்கும் மக்கள் ஆதரவு. இதனால், நக்சலைட்டுகளால் மறுமலர்ச்சி தரமுடியும் என்பதில்லை.
புறக்கணிக்கபட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடே தீவிரவாதம்.

அந்த மாநிலங்களில் இன்னமும் மின்சார வசதி மற்றும் ஒரு ஆரம்ப பள்ளிக்கூடம் கூட இல்லாத கிராமங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? மத்திய/ மாநில அரசுகளின் புறக்கணிப்பும், அரசியல்வாதிகளின் சுயநலமுமே தீவிரவாதம் உருவாக அடிப்படை காரணம் என்பதே என் வாதம்.

காஷ்மீர் தீவிரவாதிகளையும் சரி. நக்சலைட்டுகளையும் சரி. இவற்றை முற்றிலும் ஒழிக்கவேண்டுமானால், நமது அரசு செய்யவேண்டியது, அங்கு பாரபட்சமற்ற கல்வி, மின்சாரம்,சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை அங்குள்ள மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். வேலைவாய்ப்புகளை அதிகபடுத்தும் வளர்ச்சி திட்டங்களை உடனே செயபடுத்தவேண்டும். இவற்றோடு, தேர்தலை நேர்மையாக நடத்தவேண்டும்.

அதை விட்டு, "தீவிரவாதத்தை இரும்புகரம் கொண்டு அடக்குவோம்" என்று கிளம்பினால், இரண்டு தரப்பாலும் மேலும் கடுமையாக பாதிக்கபடபோவது அப்பாவி மக்கள்தான். இது, தீவிரவாதம் மேலும் வளரேவே உதவும்.

தீவிரவாதம் எந்த மாநிலத்தில் நிலவுகிறதோ வளர்ச்சி திட்டங்கள் மூலம் அந்த மாநில மக்களின் அன்பை பெறுவதே, தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கும் வழிமுறை.

சுயநலபோக்கும், ஊழலும் நிறைந்த நமது அரசுகள் திருந்தபோவதும் இல்லை. தீவிரவாதங்கள் ஒருபோதும் ஓயப்போவதும் இல்லை.

"Kashmir is an Integral Part of India "என்று நமது பாடபுத்தகங்களிலும், அரசியல் தலைவர்கள் மேடைக்கு மேடை முழங்குவதும் வெறும் பம்மாத்துதானா? அதை அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீர் மக்கள் அல்லவா சொல்லவேண்டும்??


(நன்றி...இனி அடுத்தவாரம்)

-இன்பா


18 Comments:

R.Gopi said...

இன்பா...

வழக்கம் போல் பதிவு களைகட்டியது..

//இன்பா - நீங்கள் ஒரு சீமான் ஆதரவாளர் மற்றும் சரத்குமார் ரசிகர்(!?//

நீண்ட நாட்களாக தெரியாமல் இருந்த இந்த ஒரு கேள்விக்கு உங்கள் பதிவிலேயே விடை கிடைத்தது, நன்றி....

R.Gopi said...

இன்பா...

காஷ்மீர் பற்றிய செய்தி அருமை...

தீவிரவாதம் ஒழிந்து, அங்கு அமைதி நிலவ வேண்டும் என்பதே நம் அனைவரின் அவா...

Mukkodan said...

பாஜக தலைவர்கள் அங்கு சென்றது தேசபக்தியை பறைசாற்றுவதற்கு அல்ல. காஷ்மீர் மக்களின் நிலையை நன்கு புரிந்த அவர்கள் அங்கு சென்றது வேண்டுமென்றே பிரச்சினை செய்து, காங்கிரசின் பெயரை கெடுப்பதற்கு, உள்நோக்கத்தோடுதான் அவர்கள் சென்றார்கள் என்பதே உண்மை.


----------

FACT 1 : Till 2009 CRPF was hoisting our flag in Lal Chowk and suddenly stopped in 2010 because of Cong appeasement to Seperatists(Pakis)

FACT 2 : It was a National integration Yatra from Kolkata to JK to commemorate SP mukherjee who was killed by Nehru for demanding 370 removal.

FACT 3 : Pakistanis raised Pak flag last year with no FIR or effort to stop it from Govt.

பா. ரெங்கதுரை said...

காஷ்மீர் விஷயத்திலோ, ராம ஜன்ம பூமி விஷயத்திலோ பா.ஜ.க.வையோ, சங்க பரிவாரங்களையோ நம்புபவன் முட்டாள் ஹிந்துவாகத்தான் இருக்க முடியும்.

சுமார் 7 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்தபோது ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாமல், ஃபரூக் அப்துல்லாவோடு குலவிவிட்டு, இப்போது கொடியேற்றப் போகிறேன் என்றால், ஹிந்துக்களை மடையர்கள் என்று நம்புவதில் கருணாநிதியையே விஞ்சிவிடுகிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள்.

சீன அரசு சின்சியாங் மாநிலத்தில் இஸ்லாமியப் பிரிவினை வாதிகளைக் கையாண்டது போலச் செயல்பட்டுக் காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தும் மனவலிமை இந்தியாவில் எந்தக் கட்சிக்கும் இல்லை.

வருடா வருடம் பல ஆயிரம் கோடி ரூபாய்களைக் கொட்டிக் கொடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றால் காஷ்மீரை விட்டுவிடுவதுதான் நல்லது.

ரிஷபன்Meena said...

//காஷ்மீர் தீவிரவாதிகளையும் சரி. நக்சலைட்டுகளையும் சரி. இவற்றை முற்றிலும் ஒழிக்கவேண்டுமானால், நமது அரசு செய்யவேண்டியது, அங்கு பாரபட்சமற்ற கல்வி, மின்சாரம்,சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை அங்குள்ள மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும். வேலைவாய்ப்புகளை அதிகபடுத்தும் வளர்ச்சி திட்டங்களை உடனே செயபடுத்தவேண்டும். இவற்றோடு, தேர்தலை நேர்மையாக நடத்தவேண்டும்.
சத்தியாகிரகள் வேலை.//

இந்த தீவிரவாதிகளின் அட்டுழியங்களைக் கூட சில சமயம் சகிச்சுக்லாம் போலிருக்கு. இந்த மாதிரி அறிவுரைகள் சகிக்கலை.

பாரபட்ச மற்ற கல்வி:இதுக்கு அர்த்தம் விளங்கவே இல்லை.

மின்சாரம்,சாலை, குடிநீர்: இந்தியாவில் பெரும்பாலும் எல்லாருக்கும் இருக்கும் தேசியப் பிரச்சனை இது, அப்ப எல்லா இடத்திலும் தீவிரவாதமா இருக்கு?

காஷ்மீர் தீவிரவாதத்திற்கு வளர்ச்சி திட்டம் இல்லாதது தான் காரணமாம்.

மக்கள் ஆதரவுக்கு பயம் தான் காரணம் என்பது பலமுறை நிருபனம் ஆகி இருக்கு

Mukkodan said...

அந்த மாநிலங்களில் இன்னமும் மின்சார வசதி மற்றும் ஒரு ஆரம்ப பள்ளிக்கூடம் கூட இல்லாத கிராமங்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? மத்திய/ மாநில அரசுகளின் புறக்கணிப்பும், அரசியல்வாதிகளின் சுயநலமுமே தீவிரவாதம் உருவாக அடிப்படை காரணம் என்பதே என் வாதம்.

---------

Have you ever read news about Naxals blowing up new Schools, Electric supplies and other new Govt schemes. Some People are with Naxals, not for the so-called Cause, but with fear of persecution.

ரோமிங் ராமன் said...

"..மது விற்பனையை தடுக்கிறார்களாம். 'கள்' விற்பனை சட்ட விரோதம் என்கிறது அரசு"
நல்ல நியாயம் பாருங்கள்!! ஏறக்குறைய அன்றாடங்காய்ச்சிகளான, பெட்டிக கடைகளில் இங்கு புகை பிடிப்பது குற்றம் என்று பலகை வைக்கச்சொல்லி உத்தரவு, அருகில் யாரேனும் பிடித்தால் கடைக்காரனுக்கு அபராதம்.ஆனால், குடலை எரிக்கும் சாராய விற்பனையை தெருவுக்குத் தெரு பத்துக் (சில இடங்களில் இன்னும் அதிகம்) கடைகள் திறந்து அமோகமாக அரசு நடத்தும். இது சட்டத்துக்குட்பட்டது..

""ஊழலும் நிறைந்த நமது அரசுகள் திருந்தபோவதும் இல்லை. தீவிரவாதங்கள் ஒருபோதும் ஓயப்போவதும் இல்லை""

புதிய காமெடி பாருங்கள்: ஊழல் புரிவோரை ஆறு மாதத்தில் தண்டிக்கும் நடவடிக்கை வருகிறது என்று ராகுல் சொல்லியதாக ஒரு இன்று செய்தி!! அந்த அம்பது லட்சம் கோடியில் எத்தன்(எத்தனைஅல்ல) இவர் குடும்பப் பங்கு என்ன என்று குருமூர்த்தி யைத்தான் கேட்க வேண்டும்!!
திருப்தி தரும் ஒரே விஷயம்: ஓரளவு மக்கள் உண்மைகளை உணர ஆரம்பித்துள்ளனர்.

KrishnaDeverayar said...

Reason for Kashmir Terrorist is because India has the most coward leaders in the world....

virutcham said...

//சமிபத்தில் பத்தாம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் பீர் அடித்து பார்ட்டி கொண்டாடியதாக ஒரு செய்தி படித்தேன//

பள்ளி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் பல பொருட்கள் சர்வ சாதாரணமாக மலிவாக (இதற்கு எல்லாம் விலை ஏற்றம் வருவதில்லையோ )
பொட்டிக் கடைகளில் கூட கிடைக்கிறது.

http://www.virutcham.com/2011/01/பள்ளி-பள்ளி-மாணவர்களை-போ/

hayyram said...

//, நமது அரசு செய்யவேண்டியது, அங்கு பாரபட்சமற்ற கல்வி, மின்சாரம்,சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை அங்குள்ள மக்களுக்கு ஏற்படுத்தவேண்டும்// அப்படியே இப்போது அரசு செய்யத் தயாரானாலும் விடும் நிலைமையில் நக்சலைட்டுகள் இல்லை. அவர்கள் பனத்தை என்னிடம் கொடு. நானே செய்து கொள்கிறேன் என்பார்கள். கிடைத்து விட்ட அதிகாரத்தை அவர்களால் விட்டுக்கொடுக்க இனி முடியாது எனும் போது ஒரு அரசால் நக்சல் கட்டுப்பாட்டுப் பகுதியில் எந்த சீர்திருத்தமும் செய்ய முடியாது. இது வேலைக்காகாது. எந்த நிலையில் தோன்றினாலும் தீவிரவாதம் தீவிரவாதம் தான்.

virutcham said...

குடி மக்களின் அட்டகாசம் ரொம்ப அதிகமாகி விட்டது. வீட்டுக்கு வெளியே பகலில் கூட வர யோசிக்க வேண்டி இருக்கிறது. மெயின் ரோட்டில் குடிக்க செல்ல அக்கம் பக்கம் தெருக்கள் வாகன நிருத்துமிடங்களாக மாற்றி விட்டு நல்லா போட்டுக் கொண்டு தள்ளாடி வந்து தெருவோரம் EB பொட்டிகளை கழிப்பிடங்களாக மாற்றி விட்டு வாகனங்களிலோ அல்லது corporation போட்டு வைத்து இருக்கும் நடை பாதைகளை ( இதுக்கு தான் பொறுப்பா போட்டாங்களோ) படுக்கைகளாக்கி விட்டு சுகமாக சுகமாக தூங்கும் குடி மக்கள் பல சமயங்களில் பார் உள்ளே குடிப்பது போர் அடிக்குமோ என்னமோ மேற்படி இடங்களிலேயே குடித்து விட்டு கழித்து விட்டு நாட்டு நடப்புகளை விவாதிக்கும் போது விவாதங்களாகிப் போவதில் காதலும் கைகலப்பும் ஞ்ஞ்ங் ஞ்ங்கங் வார்த்தைகளில் கத்திக் கொண்டு ஒரு வழியாக இடத்தை காலி செய்த பின் நம் பொறுப்பான குடும்பத் தலைவிகளுக்கு பாவம் வீட்டு வாசலை அலங்கரிக்கும் பிளாஸ்டிக் கப்புகளையும் பாட்டில்களையும் இதர குப்பைகளையும் சுத்தம் செய்யும் தலை எழுத்து. பின்னே எவன் எவனோ குடித்துப் போட்டுவிட்டுப் போகும் கழிவுகளை எல்லாம் சுத்தப்படுத்த வேண்டி இருக்கே.

virutcham said...

//இந்தியா, பாகிஸ்தான், தனிநாடு என்று அங்கு ஒரு நேர்மையான வாக்கெடுப்பு நடத்தினால், காஷ்மீர் மக்களில் பெரும்பான்மையோர் தனி நாடு அல்லது பாகிஸ்தானுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்றார் அவர்.//

இது மாதிரி செய்திகளை திரும்பத் திரும்ப இப்போ நிறைய பேர் சொல்லத் துவங்கி இருப்பது ( அருந்ததி ராய் மாதிரி ) ஆச்சர்யம் அளிக்கிறது. காஷ்மீர் மக்கள் தனி நாடு கேட்பது அல்ல ஆச்சர்யம். பாகிஸ்தானுடன் இணைய விரும்புவது தான். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் சரி. ஏற்றுக் கொள்ளப் பட வேண்டிய விஷயம். ஆனால் அதை இந்தியாவை விட பாகிஸ்தான் தந்துவிடும் என்ற எண்ணத்தை எப்படி ஜீரணிப்பது. பாகிஸ்தானில் என்ன நடக்குதுன்னு இந்த மக்களுக்கு தெரியுமா தெரியாதா? தனி நாடு கோரிக்கையை ஆதரிக்க மேடை ஏறும் நம் அறிவு ஜீவிகள் கொஞ்சம் பாகிஸ்தானின் உண்மை நிலவரத்தையும் சேர்த்து சொல்லித் தரக் கூடாதோ

Anonymous said...

பா. ரெங்கதுரை

-----
BJP was in a coalition Govt with lots of so-called secular parties. They couldn't have done anything like UCC, 370, Ayodhya even if they wanted to.

Anonymous said...

Every single problem in this nation is because of CONg family rule for 60+ years. Let's try giving BJP 10 years with 2/3rd majority and see how quick all problems get solved and how fast India grows.

Anonymous said...

Rediculas article... I remember the manmohan comments on 2G spectrum raja. inba doesnt have any knowledge on national issue. Doesn't he know the problem of 'katch island' issue in tamilnadu? Kashmir is very important place from defence and international prespective. It looks like sikular media article. If any one comments like this in chinna for tivet, the govt would have thrown them in the sea.... Inda, i request you to find a kashmir pandit..

Anonymous said...

மண்ணின் மைதர்களை பற்றி பேசும் அறிவுஜீவி என்று சொல்லி கொள்ளும் மனிதர்கள், காஷ்மீர் பண்டிடுகளை பற்றி வாய் திறக்காதது என்னோ? இந்த கட்டுரை எழுதிய இன்பாவுக்கு min சர்வதேச அறிவு மற்றும் நாட்டை பற்றிய அறிவு கிடையாது என்று தெரிகிறது. BJP அங்கு கோடி ஏற்ற சென்றது, சென்ற வருடம் அங்கு பாகிஸ்தான் கொடி ஏற்றியதற்கு கண்டனம் தெரிவிபதற்காக என்று தெரியாத? இல்லை தெரிந்தும் தெரியாமல் போல் நடிக்கும் காங்கிரஸ் கைக்குலி மீடியா காரற? எதற்கு எடுத்தாலும் RSS இழுக்காமல் இவர்களுக்கு தூக்கம் வராது போல் உள்ளது. DMK உழலுகு DK வையா குற்றம் சொல்விர்கள்? BJP ஆட்சி செய்தபோது காஷ்மீர் நிலை இப்படியா இருந்தது. BJP மத்தியில் இருந்த பொழுது, முதன் முதலாக அங்கு ஒரு சிறந்த நியாமான தேர்தல் நடத்து, 70 % ஓட்டு பதிவு நடந்தது இவர்களுக்கு தெரியாதா? என்ன செய்வது, இவர்கள் எல்லாம் சீனாவில் இருந்து கொண்டு திபெத் பற்றி ஏழுதி இருந்தால் தெறித்திருக்கும். BJP ஆட்சியில் இருந்து இருந்தால் இலங்கை தமிழர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா? BJP ஆளும் மாநிலத்தின், அதாவது உங்கள் மொழியில் RSS ஆளும் மாநிலத்தின் வளர்ச்சியை, காங்கிரஸ் ஆளும் மத்திய அரசின் வலை தலத்தில் தெரிந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

Shri Hari said...

Nobody is perfect in this world. It is also applicable for BJP. But, BJP is better than any other political party in the world. After all, BJP had never given anything to the people with the free of cost other than education. BJP tries its best to serve the nation.


Inba, Do you have any idea about the condition of west begnal... ruled by the communist government (father of all naxal and Marxist).

I suggest you to read the history of sudan / korea to know about the international politics.

Let me give you some basic information about kashmir. >

J & K is the combination of three region..

Jammu (majority Hindus)...

Kashmir (Majority muslims - including converted muslim tribal group, shiya and sunni.. in 1990 (even before ayothya incident), more than 4L Hindus were driven out from this vally)

Ladak (majority buddist)

From the area prespective, compare to jammu and ladak, kashmir is very small...Please check the map


Kashmir shares its border with all the countries like chinna, pak, afgan, russia.... If we loose the kashmir, it will be easy for them to attack india. And also, china wants to capture the major part of kashmir. So that it can get a oil resoures of gulf country easily. It is also possible for them to attack the major part of this country thru short range missles. China army can enter into india only thru kashmir vally. It is not possible for them to access thru north east part / pakistan because of mountain series. Please have some sense before writing about the sensitive issue.

Where were these so called separlist during BJP government?

Why they so called sikular people were so silent on srilanka tamil issue?

It is easy to blame someone. Nice to hear that you know 'prarthana song of rasitriya swayam sevak'... By the way... do you know the meaning of this song?

My simple question, when a hindu does some good thing to the socity in the name of religious, he will never be called as RSS person,

when a hindu does something wrong in the name of religious, he will be calles as RSS person. what kind of justise it is?

when a BJP does something good for the country, they call it as a BJP success.

when they same BJP does something wrong, they call it as saffron party / RSS party work.

I just remembered one proverb...

" pudikathe pondati kai patalum kutham kal patalum kutahm"

I hope you get a chance to live in naxal / maoist / anti national element infected area....

For more information, please google the oil resources of india , maoist infected area map.

ரிஷபன்Meena said...

இன்பா, இந்த மாதிரி செய்திகளையும் அப்பப்போ படியுங்க.

//Police nab Hizbul worker who distributed Rs 70K among stone-pelters

Hizbul worker Fayaz Ahmad Wani, a resident of Lolipora Pattan, was arrested by the Baramulla police on Tuesday. Wani would collect money from Hurriyat(G) HQs at Hyderpora in Srinagar, said a police release//

மக்கள் ஆதரவு இப்படியும் வரும்