பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 28, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 28-01-2011

அன்புள்ள முனி,

இளைஞன் படத்தை பார்த்துவிட்டு சுரேஷ்கிருஷ்ணாவிடன் "தமிழ்ப் படம் எடுப்பேன்னு பார்த்தா ஹாலிவுட் படம் எடுத்திருக்க..!" என்று செல்லமாகக் கடிந்துகொண்டாராம் அந்தப் படத்தின் வசனகர்த்தா கலைஞர். இவ்வளவு ஜாலியாகப் பேசும் அவருக்கு விஜயகாந்த் எதாவது சொன்னால் மட்டும் உடனே சுர் என்று கோபம் வந்துவிடுகிறது. அதுவும் தேர்தல் நெருங்க நெருங்க சுர் கூடுகிறது.


விஜயகாந்த் தீவிரவாதிகளிடம் உதார் உடுவது போல "கருணாநிதியை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிடுவேன்" என்று சொல்ல உடனே விழுப்புரத்தில் பொங்கல் விழா பொதுக்கூட்டத்தில் கலைஞர் விஜயகாந்துக்குப் பொங்கல் வைத்துள்ளார். கலைஞர் பழுத்த அரசியல் தலைவர் என்று இதுநாள் வரை நான் நம்பிக்கொண்டு இருந்தேன். ஆனால் அவரே விஜயகாந்த் ஜெயலலிதா கூட்டணி பற்றி வாய் ஓயாமல் பேச ஆரம்பித்துவிட்டார். ஜெயலலிதா, விஜயகாந்துக்கே அந்த எண்ணம் இல்லை என்றாலும், கலைஞரே சொல்லிவிட்டார் அப்ப நாம கண்டிப்பாக் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் போல என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது. விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டார் என்று எனக்கு தெரிகிறது ஆனால் கலைஞருக்கு தெரியவில்லையே ஏன் ?

முரசொலி கட்டுரையில் விஜயகாந்தைக் கூவம் கொசு என்று போட்டுத் தாக்கியுள்ளார். "தேவைப்பட்டால் இந்த யானையை எதிர்ப்பேன்! என்று கொக்கரிக்கிறது இந்தக் கூவம் நதிக்கரையோரத்து கொசு"...கலைஞரின் சூத்திர ஆட்சியை அகற்றுவது, பார்ப்பனத்தி ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவது என்பதுதான்.எல்லோருக்கும் தெரியும்..." என்று போகிறது முரசொலி அகராதிக் கட்டுரை. கூவம் கொசு கடித்து டெங்கு, சிக்கன்குனியா என்று வந்தால் பெரிய யானை கூட மூட்டு வலியால் முடங்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இவர் இப்படி என்றால் விஜய்காந்த் பற்றி ஏதாவது கேள்வி கேட்டால் "நோ கமெண்ட்ஸ்" என்று பதில் கூறிக்கொண்டு இருந்த டாக்டர் ஐயா இப்போது விஜயகாந்த் பற்றி நேராகப் பேச ஆரம்பித்துள்ளார். அவர் இப்போது புதிதாக சொல்லும் காரணம் திரைத் துறையினர் ஆட்சிக்கு வர வாய்ப்பளிக்க கூடாது என்பது தான். 1967 வரை காங்கிரஸ் ஆட்சி செய்தது பிறகு அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர். இப்போது விஜய்காந்த் வந்துள்ளார். அவரை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார். பாவம் விருதாச்சலம் பித்தம் இன்னும் தெளியவில்லை போல. ஜி.கே.மணி ஒரு விழாவில் ஸ்நேகாவுடன் கலந்துக்கொண்டு அவரின் அழகைப் பாராட்டிப் பேசினார் என்பது ராமதாஸுக்குத் தெரியாது போல. சினிமாக்காரர்களுடன் கூட்டணி கிடையாது என்று சொல்ல தைரியம் இருக்கா இந்த மருத்துவத் தமிழ்க் குடிதாங்கிக்கு?

இட்லிவடை கொ.ப.செ ப்ரியா எழுதிய ரெண்டா...யிரம் நாலா...யிரம் ஆறா...யிரம் பதிவை பலர் படித்திருப்பீர்கள். அதை கொஞ்சம் பத்திரிக்கைக்கு ஏற்றார் போல செய்து தினத்தந்தியில் போன ஞாயிற்றுக்கிழமை ஒரு பக்(கா) கட்டுரையாக வெளியிட்டுள்ளார்கள். http://www.dailythanthi.com/thanthiepaper/2312011/febgl2301p10ph1.jpg மருந்துக்கு கூட ப்ரியா என்ற பெயர் அதில் வரவில்லை. பெண்கள் சமையல் குறிப்பு எழுதினால் தான் பேருடன் போடுவார்களோ என்னவோ. இத்தனைக்கும் இவர் ரைட்டர் முகில் போல வெளிநாட்டுல் கூட இல்லை.

கருணாநிதி ஜனவரி 30 டெல்லி செல்லப் போகிறார். ஏற்கனவே காங்கிரஸுக்கு சீட் ஒதுக்கியுள்ளார். அதை கேள்விப்பட்ட சோனியா காந்தி முகம் சுளிக்க, கலைஞரின் டெல்லி பயணம் முக்கியமாகிறது. வேறு முக்கியமான காரணம் எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். கலைஞர் டெல்லி சென்றால் நிச்சயம் அது தேர்தல் பேரம் அல்லது மந்திரி பதவி இது இரண்டுக்கு மட்டும்தான். முதலமைச்சர் மாநாடு என்றால் ஸ்டாலின் என்ற பிரோடோகால் இருக்கு. வேற ஏதாவது நாட்டு மக்களின் முக்கியப் பிரச்சனை என்றால் இருக்கவே இருக்கு லாபத்தில் ஓடும் TNPL-ன் காகிதக் கப்பல்கள்.

டெல்லியிலிருந்து திரும்பும் போது சோனியாவிடம் "பை" என்று சொல்லிவிட்டு மீடியாவை பார்த்து மீனவர்கள் பற்றி சொல்லுவார் என்று நம்பலாம். ஸ்பெக்டரமில் ஊழல் நடக்கவில்லை என்று பத்ரி கிளீன் சர்டிபிகேட் கொடுத்த மாதிரி மீனவர்கள் பற்றி பேசத்தான் கலைஞர் டெல்லி போனார் என்று பாக்கெட் சைஸ் புத்தகம் போட இல்லாமலா போய்விடும்?

இரண்டு நாட்கள் முன் கலைஞர் திருமண நிகழ்ச்சியில் பேசிய போது இந்து அறநிலையத்துறை அமைச்சரை பெரியகருப்பனை எப்படி தேர்வு செய்தார் என்ற ரகசியத்தை கூறினார் - "ஒரு கோயில் விழாவில் மற்றவர்களை விட குங்குமத்தை அதிகமாக நெற்றியிலே பூசிக் கொண்டு அவர் நின்ற காட்சியைப் பார்த்து - "இவர்தான் சரியான ஆள் - அறநிலையத் துறை அமைச்சராக இருப்பதற்கு'' என்று நான் அப்பொழுதே முடிவு செய்தேன்" என்று கலைஞர் கூறியிருக்கிறார். பெரிய நாமம் போட்டுக்கொண்டு நின்றால் அடுத்த டெலிகாம் மினிஸ்டர் ஆவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.

அதே திருமண விழாவில் மக்கள் எப்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றும் சொல்லியுள்ளார். தமிழக மக்கள் இவரை "முதலமைச்சர்'' என்று சொல்லுவதை விட "திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்'' என்று சொல்லும் போது தான் ஆர்வமாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்களாம். இதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீங்க.

போன வாரம் 23 ஆம் தேதி ராயப்பேட்டா அ.தி.மு.க. கட்சித் அலுவலகத்தில் 72 கல்லூரிகளில் இருந்து 5000 மாணவ மாணவிகள் கட்சியில் இணைந்துள்ளார்கள். ஒரே விசில், கைத்தட்டல் என்று அமர்களப்படுத்திவிட்டார்கள். அப்போது ஒரு தம்பதி தங்கள் குழந்தையைக் காட்டி, 'அம்மா நீங்கதான் பேர் வைக்கணும்’ என்று ஆசைக் குரல் கொடுக்க... அந்தக் குழந்தையை வாங்கிய ஜெ., 'ஜெயஸ்ரீ’ என பெயர் சூட்டியதோடு உச்சி முகர்ந்து முத்தமிட்டார். கூடிய சீக்கிரம் இந்த குழந்தையும் இட்லிவடையில் டயட் பற்றி வேண்டாம் டயப்பர் பற்றியாவது எழுதும் என்று நம்பலாம்.

கர்நாடகா கவர்னர் பேசாம பிரதமர் ஆகிவிடலாம். பெட்டிஷன் போட்ட உடனே எடியூரப்பா மீது நடவடிக்கை எடித்துவிட்டார். இவர் பிரதமராக இருந்தால் சாமி கொடுத்த புகார் பேரில் ராசா மீது உடனே நடவடிக்கை எடுத்திருப்பார்.

குடியரசு தினத்தன்று ஸ்ரீநகர் லால்சவுக்கில் தேசிய கொடி ஏற்ற பாஜக முயற்சி செய்து மீடியாவின் கவனத்தை பெற்றது. அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், அனந்த்குமார் என்று ஒரு பெரிய படையே போனது. ஆனால் இதே சுஷ்மா கர்நாடகாவில் ரெட்டி கொள்ளை கும்பலுக்கு முன்பு பரிந்து பேசியது. அத்வானி போல ஒரு தலைவரை பார்க்க முடியாது என்று சோ சொன்னாலும், அத்வானியால் எடியூரப்பாவை ஒன்றும் செய்ய முடியவில்லை. இவரை ஒன்று செய்ய முடியாத இவர் எப்படி காஷ்மீர் தீவரவாதிகளை ஒடுக்குவார்? பேசாம இவரும் கேப்டன் போல தீவிரவாதிகளை சினிமாவில் ஒடுக்கலாம். பிகு: எடியூரப்பா ஆர்.எஸ்.எஸ் காரர். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நல்லவர்கள் அடிக்கடி கோயிலுக்கு போவார்கள், சாமியார்களை கும்பிடுவார்கள், நேர்த்திக் கடன் செய்வார்கள், யாகம் வளர்பார்கள், கூடவே ஊழல் செய்வார்கள் போல. யாருக்கு தெரியும்?

இந்த இரண்டு படங்களுக்கும் என்ன ஒற்றுமை ?


இரண்டு பேரும் கழுத்தில் கலை அம்சத்துடன் மணி போட்டிருக்கிறார்கள். அதனால் இவர்களுக்கு கலைமாமணி விருது கொடுத்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.


மஞ்சள் கமெண்ட் படங்கள்மீண்டும் சந்திக்கும் வரை...
இட்லிவடை

11 Comments:

பொன் மாலை பொழுது said...

ஐயோ ......மூச்சு முட்டுது முனி! இப்டி ஒரே டோஸ்ல எல்லாத்தையும் சொன்னா.............

தோழி said...

இரண்டாவது படத்துக்கு “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” ன்னு கேப்ஷன் போட்ருக்கலாம். பொருத்தமா இருக்கும் :)

பூ said...

இட்லி வடை,

நீங்க யாரு?

ரோமிங் ராமன் said...

"பூ said... இட்லி வடை,
நீங்க யாரு?"
இது கூடத் தெரியாதா? கொஞ்சம் ஆர்கைவ்ஸ்(archives) படிங்க தெரியும்!(தெரியலாம்!)

"பெரிய நாமம் போட்டுக்கொண்டு நின்றால் அடுத்த டெலிகாம் மினிஸ்டர்.."

இதான் இதான் வேணும்! வாங்க வாங்க முனி... ஒரு மூணு மாசம் பாடிகார்ட் போஸ்ட் விட்டு நாடுகார்ட் போஸ்ட் எடுத்து கொஞ்சம் பொறுப்பா இருப்பா!!

"கருணாநிதி ஜனவரி 30 டெல்லி.." தேர்தல் கூட்டணி குறித்து இருக்கலாம்தான்.. அந்த ஐம்பது லட்சம் கோடி கறுப்புப் பணமும் அதில் தன்(தன் என்றாலே தன் குடும்ப என்றுதான் அர்த்தம்)பங்கு குறித்த விஷயமும் தான் பிரதானமாக இருக்ககூடாதா என்ன?
கேப்டன் இந்த முறை கூடுதல் கவனம் பெற்றிருப்பது அவரது சகிப்புத் தன்மைக்கு பரிசு- நிச்சயம் கூட வோட்டுக்கள் கிடைப்பதும் உறுதி..சோ சொல்வது போல அதை சரியாக பயன்படுத்திககொள்ள,ஜெ வுடன் கூட்டணி அமைப்பதுதான் சரியாக இருக்கும்.
ஆனால் கருணாநிதி அவருக்கும் பூணூல் அணிவித்துவிடுவார்...

வலைஞன் said...

தோழி யின் comment super!
உடனே caption ஐ மாற்றவும்!

Ramjothidar said...

/*
Anonymous பூ said...

இட்லி வடை,

நீங்க யாரு?
*/

இதத்தானய்யா நாங்க 6 வருஷமா கேட்டுகிட்டு இருக்கோம்....

முடியலையா முடியலை....

ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

Unknown said...

super sir

ADMIN said...

உஷ்ஷோ அப்பா.. இப்பவே கண்ணக்கட்டுதே..!

ADMIN said...

என்னதான் சொல்ல வர்றீங்கன்னு புரியுது... ஆனால்.. புரியல.. (சின்னபையன்தானே நான்.)

சுபத்ரா said...

கலக்கல் கடிதம் :-)

http://www.dailythanthi.com/thanthiepaper/2312011/febgl2301p10ph1.jpg

இதுக்குப் பேர் தான் நோகாம ... :-)

kothandapani said...

BJP has succeeded in attracting the attention of all people by staging yatra to hoist the flag at LalChowk.
Any Indian has a right to hoist the national flag at any place in India.We should appreciate the patriotic flavour of BJP.
But then no one should question why didnt BJP try to hoist the flag when they were in power.A party in power has many more important things to carry out like 2G, 3G,4G., common'wealth'games, adarsh socity scam etc.,