பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 23, 2011

சன்டேனா இரண்டு (23-01-11) செய்திவிமர்சனம்

இந்த வார செய்திகள்....இரண்டு "சட்ட மன்ற கூட்டத்தொடர்" செய்திகள்..
செய்திகளுக்கு முன்னால், சபரிமலை விபத்து: இந்த வருட மகர ஜோதி 104 பக்தர்களின் வாழ்வை இருட்டாக்கி இருக்கிறது. இந்த விபத்துக்கு காரணம் பாதுகாப்பு குறைபாடுகளே தெரியவந்து இருக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக தேவை என்றும், பெரிய அளவில் விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்றும் சில வாரங்களுக்கு முன்னாலே கேரளா உளவுத்துறை, கேரளா காவல்துறையை எச்சரித்து இருப்பதும், அதை கேரளா காவல்துறை கண்டுகொள்ளததும் இப்போது வெளிவந்துஇருக்கிறது.

"டாய்லெட், குடிநீர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் அங்கு படு மோசம் " என்று அங்கு சென்று வருபவர்கள் கூறுகிறார்கள்.


பெரிய அளவில் கோவிலுக்கு வருமானம் வந்தும், நிர்வாக மற்றும் பாதுகாப்பு சீர்கேடுகளுக்கு காரணம் சபரிமலை தேவஸ்தானதிர்க்குள் இருக்கும் ஊழலும், முறைகேடுகளுமே.

கட்டமைப்பு செய்கிறோம் என்று அங்கு உள்ள வனப்பகுதிகளை அழிக்க கூடாது என்று ஒரு சாரர் தடுத்துவிட்டதாகவும், ஊழல் வெளிச்சத்தில் சிக்கிகொள்ளகூடாது என்று பயந்து அதிகாரிகள் யாரும் மேம்பாட்டு பணிகளுக்கு பொறுப்பேற்கவரவில்லை என்றும் கூறினார் பத்தன்திட்டாவில் வசிக்கும் என் நண்பர்.
.

செய்தி # 1
நான் பார்த்த இரண்டு வெவ்வேறு விதமான சம்பவங்களை எழுதுகிறேன்.

இடம்: சென்னை சாந்தோம்.ஒரு பஸ் ஸ்டாப். காலை நேரம்.

நிறைய பள்ளிக்குழந்தைகள் நேரமாகிவிட்டதே என்று பதற்றத்தோடு காத்துகொண்டு இருக்க, அந்த வழியாக நான் சென்ற நகர பேருந்து அங்கு நிற்காமல் மிக வேகமாக சென்றுவிட்டது.

இடம் : சென்னை பேசன் பாலத்திற்கு முன்னால் ஒரு பேருந்து நிறுத்தம்.

ஆறாவதோ இல்லை ஏழாவதோ படிக்க கூடிய ஒரு சிறுமி. தலைதெறிக்க ஓடிவந்து பஸ்ஸில் ஏறினார். முச்சிரைக்க கையில் இருந்த பஸ் பாசை கண்டக்டரிடம் நீட்டியபோது, "இது எக்ஸ்பிரஸ் பஸ். பாஸ் எல்லாம் இங்கே செல்லாது" என்று அந்த சிறுமியிடம் எரிந்துவிழுந்த கண்டக்டர், அந்த சிறுமியை பஸ்ஸை விட்டு இறங்க சொன்ன இடம்... பேசன் பாலத்திற்கு நடுஇடம். அவரின் இந்த செயலை நான் உட்பட பேருந்தில் இருந்தவர்கள் கண்டித்து, பின் அந்த பள்ளி சிறுமியை தொடர்ந்து பயணிக்க செய்தோம்.


நடத்துனர் மற்றும் ஓட்டுனரை மனிதாபிமானம் அற்றவர்களாக பள்ளிக்குழந்தைகள், மாணவர்களிடம் நடந்து கொள்ள வைப்பது...வேறு என்ன? காசுதான். இவர்கள் பஸ்ஸில் ஏறினால் கூட்டம் ஆகி, பயணிகள் வாராமல் 'கலெக்சன்' போய்விடுமே என்ற பயமே அவர்களை ஆட்டிவைக்கிறது.


சென்னையில் மட்டும் அல்ல...தமிழகத்தின் எல்லா பெரிய அல்லது சிறிய நகரங்களில் நன்கு கவனித்து பாருங்கள். முதுகில் புத்தக மூட்டைகளை சுமந்துகொண்டு முதல்வகுப்பு முதல் பள்ளி இறுதியாண்டு வரை படிக்கும் பள்ளிக்குழந்தைகள்...பஸ்சுக்கு ஓடுவதையும், பேருந்து கூட்டத்தில் சிக்கிக்கொண்டு தவிப்பதையும்.
பள்ளி மாணவர்களின் இந்த போராட்டங்கள்...தமிழக அரசின் கதவுகளை தட்டி இருப்பதை ஒரு அரசியல் அதிசயம் என்றே சொல்வேன்.

"பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு என்று சிறப்பு பேருந்துகள் இயக்கபடும்" என்று அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தார்.

முதல்கட்டமாக இதற்காக, சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிகம் உள்ள இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு,50 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், பின்னர் இந்த முயற்சிக்கு கிடைக்கும் ஆதரவை பொருத்து மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கபடும் என்றும் தெரிவித்தார் அவர்.

அலுவலகம் மற்றும் பிற பணிகளுக்கு செல்லும் பயணிகள் பாதிக்காதவண்ணம் இந்த திட்டம் நிறைவேற்ற படவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

வசதி படைத்த மாணவர்கள் ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தலாம். ஆனால், நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, நகர பேருந்துகளை தவிர பள்ளி செல்ல வேறு வாகனங்கள் இல்லை.

பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கும் இந்த திட்டத்தை நாம் முழு மனதோடு, பாராட்டி வரவேற்போம். போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கு நன்றிகள்.

இதை போல, தமிழக அரசை பாராட்ட வேண்டிய விஷயங்கள்..

1 . தமிழகத்தில் உள்ள 105 அணைகளை புதுபிக்கும் திட்டம்.
2 ரேஷன் கடைகள் மூலம் நியாயமான விலையில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கிடைக்க செய்தமை.
3 புதிதாக 25 உழவர் சந்தைகளை திறக்க முடிவுசெய்தது. .


ஆளும் கட்சியை எந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்கிறோமோ அந்த அளவுக்கு அவர்கள் செய்யும் நல்ல காரியங்களை பாராட்டுவதும் முக்கியம்தானே?


செய்தி # 2

ஆளும் கட்சியை இது கடுமையாக விமர்சிக்கபோகின்ற செய்தி.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட...முதன்மையானதும், முதலில் நிறைவேற்ற வேண்டியதுமான "தென்னக நதிகள் இணைப்பு திட்டம்" கிடப்பில் போடப்பட்டது குறித்து சட்டசபையில் யாரும் கேள்வி கேட்கவும் இல்லை...விளக்கம் சொல்லவும் இல்லை.


ஆளும் கட்சி ஆதரவு சானல்களை தவிர்த்து பாருங்கள். ஒவ்வொரு வாரமும் தவறாமல் நம் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டே இருப்பது உங்களுக்கு தெரியவரும். எதோ ஒரு அன்றாட நிகழ்வு போல ஆகிவிட்டது...நமது மீனவர்களின் படகுகளை உடைப்பதும், வலைகளை அறுப்பதும், அப்பாவி மீனவர்களை தாக்குவதும்...இலங்கை கடற்படையினருக்கு.

இதன் உச்ச கட்டமாக அவ்வபோது மீனவர்களை அவர்கள் சுட்டுக்கொல்வதும் உண்டு. சென்ற வாரம் புதுக்கோட்டை மீனவர் பாண்டியன் என்பவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுகொல்லபட்டது உங்களுக்கு தெரியும்.
இதை இலங்கை கடற்படை செய்யவில்லை என்று மறுத்து இருக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. பின்னர் வேறு யார் இதை செய்து இருப்பார்கள்..இலங்கையின் அதிரடிப்படையா?

மீனவர் பாண்டியன் கொல்லப்பட்டதும், ஒட்டுமொத்த மீனவ சமுதாயமும் வெடித்து கிளம்பி இருக்கவேண்டுமே....அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் ஒரு பெரும் போராட்டத்தை அவர்கள் நடத்தி இருக்கவேண்டுமே.

ஆனால், இத்தனை முறைகள் அவர்கள் தாக்கப்பட்டும் அப்படி ஒரு போராட்டத்தை அவர்கள் செய்யமுடியாத அளவுக்கு, சாதி, மத, இன, அரசியல் ரீதியான பிளவுகள் அவர்களுக்கு உள்ளே இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.

பொதுவான, மாநிலம் தழுவிய ஒரு போராட்டமாக இல்லாமல், ஒரு குறுகிய பகுதி அளவில் மட்டும் இருக்கிறது அவர்கள் போராட்டங்கள்.

மீனவர் படுகொலை சம்பந்தமாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் சட்ட மன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்டது.
அதற்க்கு, பதில் அளித்த கருணாநிதி மீனவர் குடும்பத்திற்கு 5 லட்ச ருபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றார்.
அவ்வளவுதான் அவர் கடமை முடிந்துவிட்டது. மீனவர்களும் இத்துடன் அமைதி அடைந்துவிடுவார்கள்.

உள்துறை அமைச்சர் ஸ்டாலின் " மீனவர்கள் மீது அவ்வபோது நடக்கும் தாக்குதல்கள் எனக்கு வேதனை அளிக்கிறது" என்று சொன்னார்.

அய்யா ஸ்டாலின் அவர்களே, நீங்கள் இப்படி பேசியதுதான் எங்களுக்கு வேதனையை இருக்கிறது. வேதனை படுவதர்க்குதான் நாங்கள் இருக்கிறோம்.இது போன்ற கொடுமைகளை தடுத்து நிறுத்தவேண்டிய இடத்தில், பொறுப்பான பதவியில் நீங்கள் இருக்கிறீர்கள்.

மத்திய அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இது சமபந்தமாக இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தாராம்...அதுவும் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று. நான்றாக இந்த வார்த்தையை கவனியுங்கள்...முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

"ஒரு அப்பாவி இந்தியன் அயல்நாட்டுநாட்டு கடற்படையால் சுட்டுகொல்லபட்டு இருக்கிறான்".

ஏன் உள்துறை அமைச்சகம் உடனே கடுமையான நடவடிக்கையில் இறங்கவில்லை? கருணாநிதி சொல்லித்தான் அவர்கள் கண்டன அறிக்கை வெளியிடவேண்டுமா?

ஏன், தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? நாம் எல்லாம் இந்தியர்கள் இல்லையா?

அமிதாப்பச்சன் வீட்டுக்கு முன்னால் மழைநீர் தேங்கி நிற்பதையும்,தீபிகா படுகோனே, சித்தார்த் மல்லையாவுக்கு 'கிஸ்' கொடுத்ததையும் சொன்ன கேடு கெட்ட வடஇந்திய சானல்கள், ஏன் ஒரு அப்பாவி இந்தியனின் படுகொலை பற்றி ஒரு சிறுசெய்தி கூட வெளியிடவில்லை?

தமிழ் பேசுபவர்கள் எல்லாம் விடுதலைபுலிகளா? வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் எல்லாம் வெறும் கோஷங்களா?

"மத்திய அரசு , டெல்லி போன்ற சில மாநிலங்களை தவிர வேறு மாநிலங்களை திரும்பிகூட பார்ப்பதில்லை" என்று சொன்னார் ஒரு நக்சல்பாரி இயக்க தலைவர். நக்சலைட்டுகள் பக்கம் பெரும் நியாயம் இருப்பதாகவே எனக்கு படுகிறது.

பின்னே, மத்தியில் இத்தனை செல்வாக்கு உள்ள நமக்கே இந்த மெத்தனம் என்றால், வட கிழக்கு மாநிலங்களை நினைத்துபாருங்கள்.

அறிக்கை விடுவது, கண்டனம் தெரிவிப்பது, பேச்சு வார்த்தை நடத்துவது எல்லாம் இருக்கட்டும். இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு முடிவு எப்போது? நிரந்திர தீர்வு எப்போது?

காவேரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு உரிய நியாயம் எப்போது கிடைக்கும்? சொந்த நாடே அதன் மக்களுக்கு இழைத்த அநீதியின் சின்னமாக இருக்கும் கச்சதீவில் நமக்கு உரிய உரிமை எப்போது நிலைநாட்டப்படும்?

இப்படியெல்லாம் துணிச்சலுடன் கேள்விகள் கேட்க ஒரு முதுகெலும்பு உள்ள தலைமை இல்லாமல் நாதியத்து கிடக்கிறோம் நாம்.... இலங்கையில் மட்டும் அல்ல...இந்தியாவிலும்தான்.


(நன்றி...இனி அடுத்த வாரம்)


-இன்பா

16 Comments:

கானகம் said...

சபரிமலையில் உயிரிழந்தோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பாதுகாப்பு குறித்து நமக்கும் பொறுப்பிருக்கிறது.

இரண்டாம் பகுதி சீமான் எழுதிக்கொடுத்து நீங்கள் போட்ட மாதிரி இருக்கிறது. இருப்பினும் கவலைகள் எல்லாம் உண்மையே.

பெசொவி said...

//ஆளும் கட்சியை எந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்கிறோமோ அந்த அளவுக்கு அவர்கள் செய்யும் நல்ல காரியங்களை பாராட்டுவதும் முக்கியம்தானே?
//

repeettu!


//பின்னே, மத்தியில் இத்தனை செல்வாக்கு உள்ள நமக்கே இந்த மெத்தனம் என்றால், வட கிழக்கு மாநிலங்களை நினைத்துபாருங்கள்//

செல்வாக்கா? நமக்கா? எல்லாம் "தல"க்கு மட்டும்தான் செல்வாக்கு, புண்ணாக்கு எல்லாம். அதுவும் தனக்கு வேண்டிய இலாகாக்களை பெற்றுக் கொள்ளவும் மொத்த தமிழகத்தையும் சுருட்டவும்தான் பயன்படும். போங்கப்பா...............புள்ள குட்டிங்களை படிக்க வைங்க! (அவங்களாவது ஒழுங்கா ஓட்டு போட்டு மாற்றம் கொண்டு வரட்டும்)

கௌதமன் said...

முதலில் பூங்கொத்து,
அப்புறம் கும்மாங்குத்து.
பலே, பலே!

வீரராகவன் said...

இதற்கு தீர்வு இரண்டு விசயங்கள் நடக்க வேண்டும்.
ஒன்று இந்தியா- இலங்கை கூட்டு ரோந்து.
இரண்டு கச்சத்தீவு இந்தியா திரும்பப் பெற்று இந்தியப் பகுதி என அறிவிக்கப்பட வேண்டும்.
இரண்டும் இப்போதைக்கு நடக்கப் போவதில்லை. முதல் விசயம் ஏன் நடப்பதற்கு சாத்தியமில்லை எனத் தெரியவில்லை. இரண்டாவது ஏன் கிடைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்பட வில்லை என்பது நமது இ.வாயர்களாக காட்டுகிறது.

evilatheist said...

The English media is literally useless most of its viewers are from south but the contents are related to north.Aditya Sinha was right when he said "Journalists in Delhi should remember India does not end at Gurgaon and come to places like chennai,Bangalore and Hyderabad to get the pulse of the people

Anonymous said...

Note: School buses are @ Chennai only to begin with on a trial basis. Are kids from other towns and cities in TN born illegally?

Just like how "Vada indhiya media" neglects TN news, TN goverment treats rest-of-Chennai as shit

Anonymous said...

இந்த இன்பா ஏற்கனவே நக்சல்பாரி கோஷ்டியான சுகுமாறன், கல்யாணி ஆகியோரின் பள்ளிக்கூடத்திற்கு டொனேஷன் கேட்டு இங்கு முன்பு பதிவு போட்டிருந்த பொழுதே இட்லி வடையை எச்சரித்திருந்திர்ந்தேன் இவர் ஒரு வினவு கும்பல் ஆள் என்று. இப்பொழுது இந்தக் கட்டுரையில் நக்சல்களை ஆதரிக்கும் போக்கு அதையே உறுதிப் படுத்துகிறது. எந்தக் காரணமாக இருந்தாலும் சீனாவின் கைக்கூலிகளாக செயல்படும் இந்தியாவைப் பிளக்க அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் நக்சல்களை ஆதரிக்கவே கூடாது. இட்லி வடையில் இந்த நக்சல் ஆதரவுக் கோஷம் அடிக்கடி கேட்ப்பது இட்லி வடையை நாசக்கார வினவு மாஃபியா வாங்கி விட்டது போல இருக்கிறது

உதிரச்சூடு said...

மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து வசதி உண்மையிலயே வரவேற்க வேண்டிய விஷயம் . ஆனால் பெயரளவில் சில மாவட்ட தலைநகரில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட திட்டம் . இப்போது எப்படியோ ...?

தமிழக மீனவர் மீதான தாக்குதலுக்கு நக்சல் வரை போக வேண்டாம் . ''கடிதம்'' தவிர்த்து ஆண்மையுடன் போராடக்கூடிய ஒரு மாநில அரசும் .சகலரையும் சமமாக என்னும் ஒரு மத்திய அரசும் இதற்க்கு போதுமானது .

ஆதி மனிதன் said...

இன்பா. நீங்கள் எப்போ தி. மு. க. வின் நண்பா ஆனீர்கள்?

நம்ப முடியவில்லை. இருந்தாலும் செய்திகள் அனைத்திலும் நடு நிலைமை.

நீண்ட நாட்களுக்கு பிறகு தி. மு. க. வை பாராட்டி ஒரு செய்தி. என்ன கூட்டணிக்கு ஆரம்பமா? நன்று.

R.Gopi said...

விஜயகாந்த் பாசறையிலிருந்து வந்த இன்பா தி.மு.க.வை ஆதரிப்பது என்ன காலத்தின் கட்டாயமா?

//1 . தமிழகத்தில் உள்ள 105 அணைகளை புதுபிக்கும் திட்டம்.
2 ரேஷன் கடைகள் மூலம் நியாயமான விலையில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கிடைக்க செய்தமை.
3 புதிதாக 25 உழவர் சந்தைகளை திறக்க முடிவுசெய்தது. .//

இதெல்லாம் பேச்சளவில் தானே இருக்கு, செயலளவில் வரட்டும், அப்புறம் பார்த்து பாராட்டுவோம்...

ஏற்கனவே பத்து ஜென்மத்துக்கு தேவையான அளவு பாராட்டியாச்சு.. இன்னும் பாராட்டணும்னா, உலகிலேயே அதிகமா பாராட்டு விழா எடுத்தமைக்காக பாராட்டுன்னு சொல்லி ஒரு பாராட்டு விழா எடுக்கலாம்...

nerkuppai thumbi said...

//ஆளும் கட்சியை எந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்கிறோமோ அந்த அளவுக்கு அவர்கள் செய்யும் நல்ல காரியங்களை பாராட்டுவதும் முக்கியம்தானே?//
உண்மை.
இந்த பதிவையும் பாருங்கள்:

தாய் - சேய் நலம் : தமிழகம் முன்னணியில்
http://makaranthapezhai.blogspot.com/2011/01/blog-post_14.html

அஞ்சா நஞ்சன் said...

உழவர் சந்தை முதன் முதலாக திறக்கப்பட்டபோது அதன் நோக்கம் வேறு. அது இப்போது வெறும் காய்கறி சந்தையாகத்தான் செயல்படுகிறது. உழவர் சந்தையில் விற்பவர்கள் எல்லாம் உழவர்கள் அல்லர். வியாபாரிகள்! விலையும் மார்க்கெட்டில் என்னவோ அதேதான். ஆகவே புதிதாக உழவர் சந்தை திறப்பதையெல்லாம் சாதனையாகக் கருத வேண்டாம்.

மணிகண்டன் said...

Thanks for mentioning deepika & siddarth episode. I searched in google and saw the video. thanks idly vadai. I did not find the right video i think. So, if you have the complete one, kindly publish. Thanks again.

Itsdifferent said...

மத்திய அரசு பாரா முகம் என்றால், நாம் எம் பி க்கள் என்ன கிழிக்கிறார்கள்?

பாரி தாண்டவமூர்த்தி said...

//உள்துறை அமைச்சர் ஸ்டாலின் " மீனவர்கள் மீது அவ்வபோது நடக்கும் தாக்குதல்கள் எனக்கு வேதனை அளிக்கிறது" என்று சொன்னார்.//

இவர அங்க கொண்டுபோய் விடனும். அப்ப தெரியும்.
http://virtualworldofme.blogspot.com/2011/01/blog-post_25.html

சுழியம் said...

சபரிமலை விபத்து: ஏன் நடந்தது, என்ன செய்யலாம் என்று இந்தக் கட்டுரை ஆராய்கிறது: http://www.tamilhindu.com/2011/01/sabarimala-stampede-makara-jyoti-some-thoughts/