பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 21, 2011

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 21-01-2011

அன்புள்ள முனி,

நலமா கேப்டன் மாநாடுக்கு போயிருந்தியா ? நல்ல தண்ணி என்று கேள்விப்பட்டேன்!
கேப்டன் மாநாடு பற்றி ஏன் இட்லிவடையில் வரவில்லை என்று பலர் கேட்டார்கள். இட்லிவடை என்ன தினத்தந்தியிலேயே கேப்டன் பற்றி ஒரு வரி போடவில்லை. நாளை அவர்கள் வரலாற்றுச் சுவடுகள் புத்தகம் இரண்டாம் பகுதி கொண்டு வந்தால் பாவம், கேப்டன் அதில் இருக்க மாட்டார். ஏன் என்று பலருக்குத் தெரியாது. அவர் தீவரவாதிகளிடம் கேள்வி கேட்பது போல தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனுக்கும் கேள்விக்கணை விடுத்தார் கேப்டன் பற்றி சுவடே இல்லாமல் பண்ணிவிட்டார்கள். “காசு கொடுத்தா எதை வேண்டுமானாலும் போடுவீங்களா? கருணாநிதி ஒழிகன்னு போடுங்க... நான் காசு கொடுக்கிறேன்” என்று விஜயகாந்த் பேசிய அந்த பேச்சு தான் அவர்களை டென்ஷன் ஆக்கிவிட்டது. ஒரு பத்திரிக்கை அதுவும் தினத்தந்தி, முரசொலி ரேஞ்சுக்கு போனது கொஞ்சம் வருத்தப்பட வேண்டிய விஷயம்.

இனி வரும் மாதங்களில் வழக்கம் போல தேர்தல் 2011 என்ற தலைப்பில் முக்கிய நிகழ்வுகள் பற்றிப் போடலாம் என்று இருக்கேன். இப்பவே பலர் ரெடியாகிவிட்டார்கள். (இல்லை என்றாலும் அப்படி தான் சொல்லணும்). ஜெயலலிதா முதல்வர் ஆகவேண்டும் என்று பலர் கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதாவிற்கு 100 சீட் வரும் என்று நேற்று வரை நினைத்துக்கொண்டு இருந்தேன் ஆனால் இன்று அவருக்கு 234 சீட்டும் அவருக்கு என்று முடிவு கட்டிவிட்டேன். நேற்று ஜெயலலிதாவும், கார்த்திக்கும் நேருக்கு நேர் சந்தித்து கூட்டணி பற்றி பேசி கூட்டணியை உறுதி செய்தனர் என்ற செய்தி வந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் கார்த்திக் 10 தொகுதிகள் கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு 2 தொகுதிகளை அ.தி.மு.க. ஒதுக்கும் என தெரிகிறது. ஒரு சீட் கொடுத்தாலே ஆச்சரியப்படுவேன்.

நிச்சயமாக 234 தொகுதியும் வெற்றி பெற வேண்டும் என்றால் ஜெயலலிதாவின் அடுத்த இலக்கு ல.தி.மு.க.வாக இருக்க வேண்டும். லதிமுக - அட நம்ம டி.ஆர் கட்சி மதுரையில் அவர் நீங்க யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு "இந்த தேர்தலுக்கு யார் என்னை அழைத்து, உரிய சீட் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைத்து தேர்தல் பிரசாரம் செய்வேன்." என்கிறார். ஜெயலலிதா காலம் தாழ்த்தாமல் உடனே டி.ராஜேந்தர் வீடு தேடிப் போய் அவர் கட்ச்சிக்கும் நாலஞ்சு சீட் கொடுக்க முன்வர வேண்டும்.

இந்தியன் படத்தில் இங்கே சந்துரு சந்துரு என்ற மானஸ்தன் இருந்தாரு அவரைக் காணோம். என்ற வசனம் வரும். சீமான் பேச்சு அப்படி தான் இருக்கிறது. நான் ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லை, ஆனால் அதிமுகவிற்கு ஓட்டு போடுங்க என்கிறார். நான் கடவுளை நம்பவில்லை ஆனால் கடவுளுக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று முன்பு ஒரு வசனகர்த்தா பேசினார் அதே போல தான் இது.

திமுக ஏன் ஒரு மந்திரி கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டது என்பது புரியாத புதிர். அட்லீஸ்ட் பாலுவிற்கு ஏதாவது ஒரு மந்திரி கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் எனக்கு என்னவோ அவர்களே எங்களுக்கு மந்திரி பதவி எதுவும் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. சட்டமன்ற தேர்தல் வரும் நேரம் இவர்கள் ஏதாவது மந்திரி பதவி வேண்டும் என்று கேட்க காங்கிரஸ் எங்களுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்டால்? தற்போது உள்ள நிலை காங்கிரஸ்-திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் வராது. இன்று ஜெயலலிதா நான் எப்போது காங்கிரஸுடன் கூட்டணி என்று சென்னேன் என்று சொல்லுவதிலிருந்து தெரிகிறது. தேமுதிக - அதிமுக கூட்டணி வரும் என்று நம்புகிறேன். தேமுதிக மாநாட்டில் உங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் கையை தூக்குங்கள் என்று விஜயகாந்த் சொல்ல கூட்டத்தில் பலர் கையை தூக்கினார்களாம். சேலம் தங்கபாலுவின் ஊரு என்பதால் ஒருவேளை வந்தவர்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்காரர்களாக கூட இருக்கலாம்.

இந்த தேர்தலில் ஒரே வருத்தம் என்ன தெரியுமா? சினேகா அரசியலுக்ககு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார். "எனக்கு அரசியல் பற்றி தெரியாது. எனவே அரசியலுக்கு வரமாட்டேன். தேர்தலில் ஏதேனும் கட்சி பிரசாரத்துக்கு அழைத்தாலும் போகமாட்டேன்" திமுக பக்கம் இனி நடிகைகள் போக பயப்படுகிறார்களாம். பின்ன பா.விஜய்க்கு அம்மாவா நடிக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டால். முன்பு ஜாக்பாட் நிகழ்ச்சியில் ஜாக்கெட் போட்டு அசத்தியவர் இன்று பா.விஜய்க்கு அம்மாவாக நடிக்கிறார். திமுக கட்சியில் சேர்ந்ததால் வந்த பரிசு. சினேகா புத்திசாலி.

தற்போது ஹாட் டாபிக் பா.விஜய் வீடடில் கொள்ளை முயற்சி! அவர் இளைஞன் படத்தின் மூலம் நம்ம நெஞ்சை கொள்ளை அடிக்க முயற்சி செய்தார். பதிலுக்கு திருடர்கள் அவர் வீட்டை கொள்ளை அடிக்க முயற்சி செய்தார்கள். தானிக்குத் தீனி சரியாப் போச்சு.

எந்திரன் படம் பெரிய வெற்றி என்று சொல்லுகிறார்கள். ஆனால் போன மாதம் சன் பிக்சர்ஸ் ஊழியருடன் பேசிய போது அவர் எங்களுக்கு லாபம். ஆனால் வாங்கியவர்களுக்கு லாபம் இல்லை என்றார். தமிழை தவிர மற்ற மொழிகளில் டிஸ்டியூபூட்டர்களுக்கு நல்ல லாபமாம். இது ரஜினிக்குதெரியுமா? இல்லை அவர் ரசிகர்களுக்குத்தான் தெரியுமா?

ராகுல் காந்தியை சந்தித்த பிறகு விஜய்க்கு பிடித்தது சனி. சூரிய குடும்பம் காவலன் படத்துக்கு எவ்வளவு இடைஞ்சல் தர முடியுமோ அவ்வளவு தந்தார்கள். கடைசியாக விஜய் அப்பா ஜெயலலிதாவை போய் பார்த்து தன் பிரச்சனையை சொல்லியுள்ளார். நேற்று விஜய் நிருபர்களை சந்தித்து ஜெயலலிதாவிற்கு பிரச்சாரம் செய்வீர்களா என்று கேட்டதற்கு இன்னும் முடிவு செய்யவில்லை என்று பதில் சொல்லியுள்ளார். 3 இடியட்ஸ் படத்திலேயும் நடிக்காததற்கு அரசியல் தான் காரணம், விஜய் இல்லை என்றாலும் நமக்கு உண்மை தெரியும்.

இப்ப இன்னொரு முக்கியமான நியூஸ் நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் ம.தி.மு.க.வில் இருந்து திடீர் என்று ராஜினாமா செய்துள்ளார். இவர் இவ்வளவு காலம் மதிமுகவில் இருந்தார் என்பதே இவர் ராஜினாமா செய்த பின் தான் நமக்கு தெரிய வந்தது. இவருடைய ராஜினாமா கடிதத்தில் " என்னோட முதல் தலைவனா உங்களை எடுத்துக்கிட்டு கன்னிப்பெண்ணா வந்தவன் நான். இத்தனை காலமும் வலிகளையும், வேதனைகளையும் தாங்கி, தாங்கி தழும்பேறி.. இப்போது வெளியேறுகிறேன்" என்று புலம்பியுள்ளார். இன்னொரு விஷயமும் நமக்கு தெரிகிறது அது - முன்பு இவர் கன்னிப்பெண் இப்போது கன்னிப்போன பெண். இதனால் கூட 2011 தேர்தலில் பெரிய மாற்றம் வரலாம். யார் கண்டது

இது போல வரும் நாட்களில் இன்னும் பல அரசியல்
கடிதங்களை எழுதப்போகும்
இட்லிவடை

தேர்தல் 2011 ஆரம்பம் :-)

15 Comments:

சீனு said...

//இந்தியன் படத்தில் இங்கே சந்துரு சந்துரு என்ற மானஸ்தன் இருந்தாரு அவரைக் காணோம். என்ற வசனம் வரும். சீமான் பேச்சு அப்படி தான் இருக்கிறது. நான் ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லை, ஆனால் அதிமுகவிற்கு ஓட்டு போடுங்க என்கிறார். நான் கடவுளை நம்பவில்லை ஆனால் கடவுளுக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று முன்பு ஒரு வசனகர்த்தா பேசினார் அதே போல தான் இது.//

நச்.


// சேலம் தங்கபாலுவின் ஊரு என்பதால் ஒருவேளை வந்தவர்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்காரர்களாக கூட இருக்கலாம்.//

Lol...

சீனு said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல கடிதம். Back 2 form?

Madhavan Srinivasagopalan said...

//இவர் இவ்வளவு காலம் மதிமுகவில் இருந்தார் என்பதே இவர் ராஜினாமா செய்த பின் தான் நமக்கு தெரிய வந்தது.//

அதக்கூட நீங்க, இட்லி வடையில் போட்டதுக்கு அப்புறம்தான் எனக்குத் தெரிந்தது..

Essex Siva said...

ஹலோ இட்லி வடை (அல்லது ப்ரசன்னா?),
கொஞ்ச நாட்களாகத்தான் உங்கள் வலைத்தளத்தை படித்து(மேய்ந்து?!) வருகிறேன்...
செமை நக்கல்..ம்ம்ம்...எப்படி கவனிக்கவில்லை இவ்வளவு நாளாய்?
உங்கள் குசும்பை எந்த ஊர் குசும்பு என்று வகைப்படுத்துவது?
கொங்கு/தஞ்சை/மதுரை/நெல்லை/நாஞ்சில்?

Right....இனிமேல் தினமும் இட்லி வடை தான்!

Keep going!

Essex சிவா

Speed Master said...

//இவர் இவ்வளவு காலம் மதிமுகவில் இருந்தார் என்பதே இவர் ராஜினாமா செய்த பின் தான் நமக்கு தெரிய வந்தது.

Same Doubt

VSK said...

IV begins to rock again

ஈஸ்வரன் said...

//இவர் இவ்வளவு காலம் மதிமுகவில் இருந்தார் என்பதே இவர் ராஜினாமா செய்த பின் தான் நமக்கு தெரிய வந்தது.//
இவரை பல படங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் பேர் தெரியாது. இவர் பெயர் சுந்தர்ராஜன் என்பதே நீங்கள் சொல்லித்தான் தெரியும்.

V.P.Jaiganesh said...

சீமான் மீது ஏன் இத்தனை இளக்காரம்?
சீமான் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்
சொன்னார் . யார் ஜெயித்தாலும் கவலை இல்லை
தோற்கவேண்டியது ஆளும் கூட்டணி என்று.
உங்களுக்கு அவர் புலி ஆதரவு உறுத்திற்று என்றால்
சிங்களர்கள் சிலர் வலைப்பதிவில் கோழைத்தனமாக
கிண்டல் அடிப்பது போல் செய்ய வேண்டாம் .

Anonymous said...

IDO NOT KNOW HOW RELAVANT IS MY COMMNT TO THIS ISSUE. BUT IN SOMEWAY IT HAS TO BE TOLD.
IT IS THE DUTY OF EVERY TAMILIAN TO VOTE AND DEFEAT THIS GOVERNMENT. LOT OF CORRUPT MEN HAVE BEEN THERE.BUT THESE PEOPLE HAVE POLLUTED POISNED AND CORRUPTED EVERY INSITUTION.FROM FAMILY VALUES TO RESPECT FOR INSTITUTIONS LIKE JUDICIARY ETC.THERE IS ONE CHIEF MINISTER WHO THINKS HE CAN GETAWAY WITH ANYTHING.IF THIS FAMILY COMES TO POWER AGAIN OTHERS CANT OPEN EVEN PAWN AND TEA SHOPS.MEDIA IS SCARED OF THEM.BIHAR AMD UP ARE THOUSAND TIMES BETTER. PEOPLE WHO SINCERELY CRTICISE ARE EVEN AFRAID OF PHYSICAL VIOLENCE.THAT IS WHY MANY OF US ARE ANONYMOUS.
THE PEOPLE DOWN BELOW ARE NOT FULLY AWARE OF THE DEGRATION IN ALL AREAS.
IT IS THE DUTY OF IDLYVADAI AND ITS READERS TO EDUCATE AS MANY AS POSSIBLE TO THROW OUT THIS FAMILY AND GOVERNMENT. IT TS OUR LAST CHANCE. IT IS A CASE OF THROWOUT OR PRRISH.
HERE IS A MAN WHO THINKS HE CAN REGAIN POWER USING CASTE AND TAMIL.
IT IS THE DUTY OF IDLY VADAI TO EXPOSE AND SHOW THE FAMILY IN REAL COLURS.
IT IS A SACRED MISSION. LET US NOT DIVIDE OURSELVES. WHOEVER COMES FORWAD IS WELCME.
MAY GOD BLESS AND SAVE ALL OF US.

nirmal said...

//இந்தியன் படத்தில் இங்கே சந்துரு சந்துரு என்ற மானஸ்தன் இருந்தாரு அவரைக் காணோம். என்ற வசனம் வரும். சீமான் பேச்சு அப்படி தான் இருக்கிறது. நான் ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லை, ஆனால் அதிமுகவிற்கு ஓட்டு போடுங்க என்கிறார். நான் கடவுளை நம்பவில்லை ஆனால் கடவுளுக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று முன்பு ஒரு வசனகர்த்தா பேசினார் அதே போல தான் இது.//

சீமான் இன்று இருக்கும் தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில் வேறு என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்களேன்? தமிழர்களுக்காகத் 'தெருவிறங்கிப்' போராட இன்று இருக்கும் ஒன்றிரண்டு பேரையும் இப்படி காமெடி செய்கிறேன் பேர்வழி என்று இழிவுபடுத்த வேண்டாம். இன்றைய இணைய வலைதள உலகம் எல்லாரையும், எல்லா சார்பு/கொள்கைகளையும் சந்தேகிக்கும், எந்த உருப்படியான செயல்பாடுகளும் இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் மேலிடுகிறது.

Anonymous said...

In case of enthiran,no one can be blamed except the distributors themselves. Because of the their greed only, they are not able to earn profit. who asked them to buy the movie at himalayan rates? almost everyone in TN would have seen the movie that too with a ticket rate of 2 times more than the actual rate.Even then losses means,it is purely because of their inability in planning and controlling their business...

குரோம்பேட்டைக் குறும்பன் said...

ஓ! அவர் டெல்லி சுந்தரராஜனா? நான் மேஜர் சுந்தரராஜன் என்று நினைத்தேன்.
ஓ! ம தி மு க வா - நான் த மு மு க என்று நினைத்தேன்!

அரசியல்ன்னதும் அரிசின்னு தப்பா நினைச்சவன் said...

பட்டைய கிளப்புற பதிவு.

பிரமாதம். அப்ப அரசியல்ங்கிறது நம்ம... காமெடிக்குத்தானா!!! ஆட்சி செய்யப்போற அரசன்ங்கிற மரியாதையே இல்லாம போச்சே...

/// குரோம்பேட்டைக் குறும்பன் said...ஓ! அவர் டெல்லி சுந்தரராஜனா? நான் மேஜர் சுந்தரராஜன் என்று நினைத்தேன்.
ஓ! ம தி மு க வா - நான் த மு மு க என்று நினைத்தேன்!////

எடக்கு மடக்காக குரோம்பேட்டை குரல் ஒலிக்கிறதே.... என் குரலும் சேரட்டும்.

கோவை ஆர். சுந்தர் ராஜன ப்ளீஸ் போயிடுங்க என வைகோ வே சொல்லியிருக்கிறாராமே... அது என்ன
என இட்லிவடை விளக்கலாமே....

/// இத்தனை காலமும் வலிகளையும், வேதனைகளையும் தாங்கி, தாங்கி தழும்பேறி போன நான் வெளியே போறது தான் நல்லதுன்னு நீங்க நெனைக்கிறீங்க. உங்களுக்கு நல்லதே பண்ண வேண்டும் என்று நினைக்கிற நான், உங்க நினைப்புப்படியே இப்ப கட்சியோட அரசியல் ஆய்வு மையக்குழுவில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.////

Unknown said...

"V.P.Jaiganesh said...

சீமான் மீது ஏன் இத்தனை இளக்காரம்?
சீமான் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்
சொன்னார் . யார் ஜெயித்தாலும் கவலை இல்லை
தோற்கவேண்டியது ஆளும் கூட்டணி என்று.
உங்களுக்கு அவர் புலி ஆதரவு உறுத்திற்று என்றால்
சிங்களர்கள் சிலர் வலைப்பதிவில் கோழைத்தனமாக
கிண்டல் அடிப்பது போல் செய்ய வேண்டாம் ."

" nirmal said...

சீமான் இன்று இருக்கும் தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலையில் வேறு என்ன செய்யலாம்? நீங்களே சொல்லுங்களேன்? தமிழர்களுக்காகத் 'தெருவிறங்கிப்' போராட இன்று இருக்கும் ஒன்றிரண்டு பேரையும் இப்படி காமெடி செய்கிறேன் பேர்வழி என்று இழிவுபடுத்த வேண்டாம். இன்றைய இணைய வலைதள உலகம் எல்லாரையும், எல்லா சார்பு/கொள்கைகளையும் சந்தேகிக்கும், எந்த உருப்படியான செயல்பாடுகளும் இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்கி விடுமோ என்ற அச்சம் மேலிடுகிறது."

வழிமொழிகிறேன்

Anonymous said...

மயிலைப்பார்த்து தோகை விரித்த வான் கோழி...!
தலைவராகும் தகுதி விஜய்காந்துக்கு கிடையவே கிடையாது. தனக்கென ஒரு தனி பாணி இல்லாதவன் தலைவனாகியும் பயனில்லை. பண்ணுருட்டியாரின் அரசியல் விருந்திலிருந்து விழும் எச்சில் இலை சிந்தனை தான் விஜய்காந்துக்கு. சுய சிந்தனை கிடையாது. டீக்கடைகளில் பேசப்படும் நடுத்தர வர்க்கத்தினரின் அரசியல் பேச்சே, விஜய்காந்தின் அரசியல் ஞானம். அவர் கருணா வுக்கு எடுத்த பாராட்டு விழாவில், "தமிழ்" என்று உச்சரிக்கத்தெரியாமல் தமில் என்று உச்சரிக்க, கருணா வால் " முதலில் தமிழ் என்று உச்சரிக்கக்கற்று கொள் விஜய் " என்று நகையாடப்பட்டதே விஜய் தி மு க -வில் இணையாததற்கு முதல் காரணம். பல ஆண்டுகளுக்குப்பின், தன் மண்டபம் இடிக்கப்பட்டவுடன் தி மு க எதிர்ப்புக்கொள்கை பலமானது. மக்கள் தொண்டிற்காக அல்ல. எத்தனையோ ஏக்கர் நிலங்களை தன் ஊரில் அரசு பள்ளி அமையத்தியாகம் செய்த புண்ணியவாண்கள் பலர் இன்றும் உண்டு , எங்கள் கிராமங்களில். விஜயகாந்தின் சுய நலம்தான் தே மு தி க. கட்சி பிறக்க காரணம்.மக்கள் தொண்டு என்பது வெறும் வெளி வேஷம் தான். கட்சிப்பெயர் கூட "திராவிட " என்ற சொல் இல்லாமல்,அமைக்க முடியாது.வெங்கடேஷ்வரா போளி ஸ்டால் மாதிரி, பெயர்க்குழப்பம் செய்து குளம்பிய நீரில் மீன் பிடிக்கவே விஜய்காந்துக்கு பிடிக்கும்.

கருப்பு எம் ஜி ஆர் என்பது கேட்கவே சகிக்கவில்லை. மக்கள் திலகத்தின் அரசியல் அறிவு எங்கே..! அரை வேக்காட்டு விஜய்காந்த் எங்கே ?

போதாக்குறைக்கு புரட்சிக்கலைஞர் பட்டம் வேறு.அதிலும் ஒரிஜினாலிடி கிடையாது. எம் ஜி ஆரிடமிருந்து புரட்சி(த்தலைவர்) கருணா விடமிருந்து கலைஞர் .

சமீப காலங்களாக பண்ணுருட்டியார் பாணியில் விஜய்காந்தும் முழுக்கை வெள்ளைச்சட்டை அணிந்து வந்தாலும் அவர் பண்ணுருட்டி ராமச்சந்திரன் ஆக முடியாது.

மனைவி, மச்சான் என குடும்ப அரசியல் செய்யும் விஜய்காந்துக்கு தி மு க வை விமர்சிக்கத்தகுதி இல்லை.ஊழல் பெருச்சாளி ஜெயலலிதாவை விமர்சிக்க தைரியம அற்ற விஜய்காந்த் -ம் ஒரு குட்டையில் ஊறிய மட்டை தான்.

கொள்கைத்தங்கம் என்றால் அது வை கோ தான். வை கோ , தி மு க -வில் இருந்த காலங்களில் நாயுடு சங்க கூட்டத்திற்கு அழைத்தாலும் போக மாட்டார். அவ்வளவு கொள்கைப்பிடிப்பு.பாவம் காலம் வெல்லவில்லை.