பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 02, 2011

சன்டேனா இரண்டு (2-1-11) செய்திவிமர்சனம்

வணக்கம் அன்பு நண்பர்களே. இட்லிவடையில் தொடர்ந்து 50 வாரங்கள் வெற்றிகரமாக ஓடிய "சன்டேனா இரண்டு" தொடரில்,மீண்டும் ஒரு இடைவேளைக்கு பின்னர் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,
இன்பா.செய்தி # 1

எனது நண்பர் முருகனை பற்றி முதல் செய்தியாக எழுதப்போகிறேன். 'முருகன்'தான் 'இட்லிவடை' என்கிற ஆசாமியின் நிஜப்பெயர் என்று யாரோ ஒரு மானஸ்தன் சொன்னதாக காற்றுவாக்கில் கேள்விபட்டேன். ஆனால், இந்த முருகன் வேறு.

முருகன் - பெங்களூரில் உள்ள சத்யம் நிறுவன கிளை ஒன்றில் ப்ரோஜக்ட் மேனேஜராக இருப்பவர். எதேச்சையாக எனக்கு அறிமுகம் ஆகி, பின்னர் இட்லிவடை மற்றும் கடைத்தெரு தளங்களில் நான் எழுதும் அல்லது கிறுக்கும் வலைப்பதிவுகளை படித்து, நெருக்கமானவர்.

அப்போது நான் பெங்களூரில் இருந்ததால்,ஒரு நாள் ஞாயிறுக்கிழமையில் எனக்கு போன் செய்தார்." இன்பா, இன்னைக்கு எனக்கு ரொம்பவும் வேண்டிய ஒருத்தங்களோட பரதநாட்டிய அரங்கேற்றம் இருக்கு.நீங்க கண்டிப்பா வரீங்க" என்றார்.

பொதுவாக பரதநாட்டியம்,கர்நாடிக் மியூசிக் என்றாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. காரணம்...அதைப்பற்றி எனக்கு ஏதும் தெரியாது அல்லது புரியாது.சரி..முருகனுக்காக போவது என்று முடிவு செய்து கிளம்பினேன். ஒரு சிறிய அரங்கு அது. சுமார் 150 பேர் இருந்தார்கள்.அனைவரும் முருகனின் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள்,அவரது உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள். .நிறையபேர் தங்கள் மனைவி,குழந்தைகளோடு வந்து இருந்தார்கள்.

நான் போனதும் முருகன் என்னைவந்து வரவேற்று, முன்வரிசைக்கு அழைத்து சென்றார். கையில் இருக்கும் அவரது இரண்டு வயது குழந்தையிடம்.."ஹரி....இன்பா அங்கிளுக்கு ஒரு ஹாய் சொல்லு" என்றார்.

"யாருக்கு சார் அரங்கேற்றம். உங்க சிஸ்டர்ருக்கா? " என்றேன் அவரிடம்.

"இல்லை இன்பா. என் மனைவிக்கு" என்றார் முருகன் சிரித்தபடி.

இந்த ஆச்சரியம் ஒய்வதற்குமுன், நாட்டிய நிகழ்ச்சி தொடங்கியது.

நாட்டியம் தெரியாத என்னாலும் ரசிக்கும் படி இருந்தது. அவரது அரங்கேற்றம். "ஆசைமுகம் மறந்து போச்சே" என்ற பாரதியின் பாடல் உட்பட சில பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.நிகழ்ச்சி முடிந்ததும், மனைவியிடம் என்னை அறிமுகபடுத்தினார் முருகன்.

"இவர்தான் நான் சொல்வேன் இல்ல...இன்பா. கதை,கட்டுரை,கவிதை..எல்லாம் ஒரு கை பார்ப்பாரு" என்று ஓவராக எக்ஸ்போஸ் செய்தார்.

கொஞ்சம் சம்பிரதாய உரையாடல்களுக்கு பின் அவர் என்னிடம் கேட்டார். " கவிதையில உங்களுக்கு யாரை பிடிக்கும். சல்மா,மாலதி மைத்ரேயி,மனுஷ்யபுத்திரன்.." என்று அடுக்கிக்கொண்டே போனார்.

"ஐயோ..எனக்கு அதெல்லாம் தெரியாது.நான் ஒரு டுபாக்கூர் ப்ளாக் ரைட்டர்" என்றேன் நான் அவரிடம்.

"இவங்களுக்கு நாட்டியம் மட்டும் இல்ல. கவிதை,இலக்கியம் ஏன் கொஞ்சம் கர்நாடிக் மியூசிக் கூட படிச்சு இருக்காங்க" என்றார் முருகன். பின்னர் அவரது மனைவி குழந்தையுடன் என்னிடம் விடைபெற்று சென்றுவிட்டார்.

"நீங்க ரொம்ப கிரேட் மிஸ்டர் முருகன். இப்படி ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு ஏற்ப்பாடு பண்ணி இருக்கீங்களே" என்றேன்.

"கல்யாணத்துக்கு முன்னாடி ஏழு வருஷம் கத்துகிட்டு இருக்காங்க. ஆனா, அரங்கேற்றம் பண்ண முடியலையேன்னு வருத்தம் அவங்களுக்கு உள்ளே இருந்தது.இப்போதான் அதுக்கு சூழ்நிலை சரியாய் அமைஞ்சிருக்கு.இதை அரங்கேற்றம்ன்னு எல்லாம் சொல்ல முடியாது. ஒரு டான்ஸ் ப்ரோக்ராம்.அவ்வளவுதான் " என்ற முருகன் தொடர்ந்து,"நீங்க பெருமையா சொல்ற அளவுக்கு நான் ஒண்ணும் பண்ணல. கல்யாணம் ஆனதுலேர்ந்து எனக்குள்ள உறுத்திக்கிட்டு இருந்த ஒரு குற்ற உணர்ச்சி...அதுக்காகதான் இதை செய்தேன்" என்றார்.

"குற்ற உணர்ச்சியா..புரியலையே".

"இவ்வளவு திறமைகள் இருக்குற ஒரு பெண்ணை 'தாலி'ங்கற கயித்த கட்டி, வீட்டுக்குளேயே கட்டிபோட்டுட்டேன் என்கிற குற்ற உணர்ச்சியால் தான் இப்படி ஒரு ப்ரோக்ராமுக்கு ஏற்ப்பாடு செஞ்சேன். பாவம் அவங்க..பத்மா சுப்பிரமணியம் போல இல்லைனாலும் நல்லா வந்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்று வருத்ததோடு சொன்னார் முருகன்.

சாப்ட்வேர் உட்பட பெரிய நிறுவனங்களில், எதாவது கெட் டு கெதர் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்போது, தங்கள் மனைவியின் ஆடல்,பாடல் போன்ற கலை திறமைகளை வெளிபடுத்தசொல்லி, கணவர்களே உற்சாகம் தருவது வழக்கமான ஒன்று என்றார் முருகன்.

அவரது வருத்தம் நியாயம் அல்லவா? பள்ளியில் நன்கு படிக்கும் பெண்கள் ஏழ்மை காரணமாக விரைவாக திருமண பந்தத்தில் திணிக்கபடுவது நடக்கும் ஒன்றுதானே? எனக்கு தெரிந்த ஒரு உறவினர் பெண் மிகவும் கடினமான இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட படிப்பில் நன்கு தேர்ச்சி பெற்றுவிட்டு 'ஹவுஸ் ஒய்ப்' என்று இருக்கிறார்.

திறமைகள் இருந்தும் வெளிச்சதிற்கு வராமல், வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்கள்தான் எத்தனையோ?

அதே சமயம், திறமைகளும், வாய்ப்புகளும் இருந்துமே,சமுக கடமை காரணமாக கண்ணதாசன் எழுதியது போல, 'குடும்பக்கலை போதுமென்றே கூறடா கண்ணா' என்று குடும்ப வாழ்க்கையில் தங்களை விரும்பியே தொலைக்கும் பெண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

எங்கோ படித்த ஒரு கவிதை ஒன்று என் நினைவுக்கு வந்தது.

"மனைவி
கட்டில் அறைக்கும்
சமையல் அறைக்கும்
ரன்கள் எடுத்தே
ரணமாய் போனவள்".

நமது வீட்டு பெண்களிடம் நாம் கேட்கவேண்டும்.

"குடும்பம் என்பது பெண்களை, அவரது திறமைகளை முடக்கும் சிறையா?"

செய்தி # 2

இது கொஞ்சம் ஜாலி பதிவு. புத்தாண்டு ஸ்பெஷலாக .

சமிபத்தில் தஞ்சாவூர்பக்கம் பஸ்ஸில் சென்றுகொண்டு இருந்தபோது, இரண்டு கிராமவாசிகள் இப்படி பேசிக்கொண்டு வந்தார்கள்."என்னலே...இரண்டு ஜி ஏலத்துல ஆயிரங்கோடி ருபாய் அடிச்சிருகாங்கன்னு சொல்றாங்க" (நன்றி : கலைஞர் தந்த கலர் டிவிக்கு).

அதைவிடுங்கள். "லஞ்சம் தருவது குற்றம் என்பது மறைந்து, இப்போது அரசே லஞ்சம் கொடுத்து மக்களை ஓட்டு போட சொல்கிறதே" என்று ஒரு கட்டுரையில் புலம்பி இருக்கிறார் முன்னால் லஞ்ச கண்காணிப்புதுறை ஆணையர் திரு.ஆர்.விட்டல்.

ஒரு ஓட்டுக்கு ஆயிரமோ, ஐநூறோ தருவது வெறும் 'டிப்ஸ்'. கலர் டிவி போன்று 'பெருசாக' எதாவது ஒரு ஓட்டுக்கு இலவசமாக தரவேண்டிய "ஜனநாயக கடமை" நமது அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.

குறிப்பாக, முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இந்த கடமை உணர்ச்சி அதிகமாகவே இருக்கிறது.

கலர் டிவி,காஸ் இணைப்பு, அரிசி எல்லாம் கொடுத்தாகிவிட்டது இனி, வரும் சட்டமன்ற தேர்தலில், வாக்காளர்களுக்கு எதை இலவசமாக தரலாம் என்று அவர் மண்டை காய்ந்து கொண்டிருக்கும் வேளையில், புத்தாண்டு பரிசாக, அவருக்கு(கே!) சில 'இலவச' ஆலோசனைகள்...

1.இலவச வீட்டுமனை : விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்களாக மாறிவருகின்றன.இந்த லட்சணத்தில், காவேரி,முல்லை பெரியாறு, பாலாறு என்று 'அணை' கட்டிநிற்கும் பிரச்சனைகளால், விவசாயமே ஊத்திக்கொண்டு வருகிறது. இதில், மழைவெள்ளம் வேறு.

பேசாமால், விவசாய நிலங்களை எல்லாம் விலைக்கு வாங்கி, அதை 'பிளாட்' போட்டு, 'திமுகவுக்கு ஓட்டு போடும் குடும்பத்துக்கு ஒரு வீட்டுமனை இலவசம்' என்று அறிவித்தால், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

2. டாட்டா நானோ கார் : 'எங்களுக்கு ஓட்டு போட்டால் குடும்பத்துக்கு ஒரு நானோ கார் இலவசம்' என்று அறிவிக்கலாம். அக்ரிமென்ட்(?) போடுவதருக்குதான் அண்ணன் ராசா இருக்கிறாரே.உலக அரசியலில் முதல் முறையாக என்று புரட்சி செய்யலாம்.

3.குளிர் சாதனபெட்டி என்னும் ப்ரிட்ஜ் : இப்போதெல்லாம் சினிமா தியேட்டர்களைவிட 'டாஸ்மாக்' கடைகளில்தான் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, தீபாவளி,புத்தாண்டு போன்று நாட்களில் சரக்கு வாங்க சான்சே இல்லை.

வரும் தேர்தலில், கலர் டிவி போல 'ஒரு ப்ரிட்ஜ் இலவசம்' என்று அறிவித்தால், பண்டிகை நாட்களுக்கு முன்னதாகவே 'சரக்குகள்' வாங்கி அடுக்கி வைத்துகொள்ள உதவியாக இருக்கும். தமிழகத்தில் இன்றைக்கு பெரும்பான்மை இனமாக இருக்கும் என்னை போன்ற(!) குடிமகன்கள் ஓட்டுக்களை அப்படியே அள்ளிவிடலாம்.

4.வாஷிங் மெஷின் : எல்லா அரசியல் கட்சிகளும் இலவச வேட்டி,சேலை தருகிறார்கள். ஓட்டு போட்டால் ஒரு வாஷிங் மெஷின் இலவசம் என்று அறிவித்தால், துணிகள் துவைக்கும் இல்லதரிசிகள் ஆதரவு டாக்டர் கலைஞர்க்கே.

5.ரைஸ் குக்கர் : ஒரு ரூபாயில் புழுத்த ச்சே பழுத்த அரிசி தந்தால் போதுமா. அதை வேகவைக்க ஒரு ரைஸ் குக்கர் இலவசமாக வழங்கினால் கிராமபுற பெண்மணிகளின் ஓட்டுக்களை அள்ளலாம்.

6.ஸ்பெஷல் போனஸ் திட்டம் : லஞ்ச பணத்தை நேரடியாக வழங்கினால்தான் தேர்தல் கமிஷன் கவனிக்கிறது.கலைஞர் அவர்கள், ஆலமரம் போல தழைத்து இருக்கும் தனது வீட்டு விசேஷங்களின்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு ஸ்பெஷல் போனஸ் வழங்கலாம். அழகிரி மகன் திருமண நாளில் மதுரையில் அரசு விடுமுறை தந்தது போல. அவர்களும், வழக்கம்போலவே திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதை கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.

7.பொது தேர்வுகள் ரத்து : தமிழ் இனமே ஓசி டிவி, ஓசி சோறு, டாஸ்மாக் சரக்கு என்று நிம்மதியாக வாழவேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம். நம்ம பசங்க எல்லாம் படிச்சி என்னத்தையா கிழிக்க போறாங்க?

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பத்தாம்வகுப்பு மற்றும் பிளஸ்டூ பொது தேர்வுகளை ரத்து செய்வோம்" என்று அறிவித்தாலே போதும்.ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமே கள்ள ஓட்டு போட்டாவது உங்களை ஜெயிக்க வைப்பார்கள் என்பது உறுதி.

நீங்களும் உங்க பங்குக்கு எதையெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் இலவசமாக தரலாம் என்று டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பின்னூட்டத்தில் ஆலோசனை சொல்லுங்க.சிறப்பான ஆலோசனைகளுக்கு, இட்லிவடை எதையாவது 'இலவசமாக' தரேன்னு சொல்லிஇருக்கார்.


வாசக நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

(நன்றி..இனி அடுத்தவாரம்).

-இன்பா

25 Comments:

Katz said...

;-) superuuu

Madhavan Srinivasagopalan said...

அட இப்படிலாம் கூட எழுதலாமா..?
இது தெரியாம, நா என்னோட பிலாகுல ஒரு வாரமா எதுவுமே எழுதலியே.

(-!-) said...

:>
வருக வருக. இட்லிக்குக் கொண்டாட்டம்தான் புது வருஷத்தில். ஓசியில் கடைய ஓட்ட மீண்டும் ஆள் கிடைத்து விட்டதால். :>

Unknown said...

//வாசக நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
//

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

உங்களுக்கு விளையாட்டாக இருக்கு. #ஒன்று தவிர எல்லாமே நடந்தாலும் நடக்கும். #ஒன்று ஏன் நடக்காது என்றால், நிலமெல்லாம் அவர்கள் கையில் இருக்கும்.

lollu said...

10 சட்ட மன்ற தொகுதியை வெற்றி பெற செய்யும் உடன் பிறப்புக்கு கலைஞர் குடும்பத்தில் அங்கம் வகிப்பார்கள்.

சுபத்ரா said...

Welcome Back :-)

2 செய்திகளும் அருமை.

////மனைவி
கட்டில் அறைக்கும்
சமையல் அறைக்கும்
ரன்கள் எடுத்தே
ரணமாய் போனவள்//

வைரமுத்து??

7th ஆலோசனை டாப் :-)

pachhamilaka said...

அதிக வோட்டு உள்ள குடும்பத்திற்கு ஆட்சி இல் பங்கு அல்லது ஸ்பெக்ட்ரம் பணத்தில் பங்கு தரலாம்

Anonymous said...

Few more Tips for Freebies as election promises ( DMK shall pay a royalty ):
1.Mobile phone Free for every house wife. ( the mobile service providers will pay donation to DMK and our taxes will be spent on procuring mobile sets. DMK will get votes )
2.Free air tickets for Tamil house wives to meet husbands in Middle East ( airline companies will pay donation to DMK. Our tax will help in procuring air tickets. DMK will get votes , especially muslim votes)

Anonymous said...

Murugan (About Seithi 1#):

My sincere kudos to my native language Tamil, first time writing on a Tamil blog, in fact in any blog, do not have Tamil font, excuse me for that

My heartfelt thanks to my dear friend Inba for posting some titbits from my life, of course with some extrapolation of the happenings...:-) as a seasoned writer.

You won't believe after all these happenings, some of my good minded colleagues had started calling me as "Joru Ka Gulam" (literal meaning "Slave of Wife")...

Our right to the life itself was given by the most respectable woman (mother), then where is the question of giving equal rights to women, that too quantifying it to 33% (still the bill is in dust!)

Like a swan(filtering milk out from water)...Why can't we take some good things from the west like gender eqaulity, a corner barber shop becoming beauty salons, a cramped tailor shop becoming fashion design houses!!

Remembering a Thirukkural :
Vella thaniya malar neettam manthar tham ullathaniyathu uyarvu!

Let us think good (Ulluvathellam Uyar Vullal)...

With all due respects to men!!

My concsience told me to ignore those cowardly comments and move on, I thought of parting my life equally and to live unitedly.

Let us welcome more Indra Nooyi's, Kiran Mazumdar's,Indu Jain's, Chanda Kochars...and M.S.Subhalakshmi's...what do you say?

Rathnavel Natarajan said...

Sir,
Your advices are well.
But please be careful.

R.Gopi said...

இன்பா...

நீண்ட நாட்களுக்கு பின் எண்ட்ரி அட்டகாசம்...

முதல் செய்தி நெகிழ்வாக இருந்தது..

இரண்டாம் செய்தியில் “தல”க்கே அறிவுரை /அட்வைஸ் சொல்ற அளவுக்கு பெரிய ஆளாயிட்டீங்கன்னு நெனச்சா, கொஞ்சம் “பயமா” இருக்கு!

ரிஷபன்Meena said...

////மனைவி
கட்டில் அறைக்கும்
சமையல் அறைக்கும்
ரன்கள் எடுத்தே
ரணமாய் போனவள்//

இந்த மாதிரி கவிதைகள் படிப்பதற்கு நன்றாக இருக்கும்.

//"குடும்பம் என்பது பெண்களை, அவரது திறமைகளை முடக்கும் சிறையா?"//

இது என்ன பேச்சு ? கிரன்பேடி, பி.டி. உஷா இவர்கள் எல்லாம் குடும்பப் பெண்கள் இல்லையா ?

குடும்ப அமைப்பு தான் இந்தியாவின் பலம். விதிவிலக்கா சில குடும்பங்கள் இருக்கலாம் ஆனால் அதற்காக குடும்ப அமைப்பைக் குறை கூறுவது முற்போக்குவாதி, பெண்ணுரிமை தாதா என்ற “லேபில்” பெற்றுக் கொடுக்க உதவும்.

குறையொன்றுமில்லை. said...

ஓ,ஓ, ப்ளாக்ல இப்படில்லாம்கூட எழுதி பேர்வாங்கலாமா? தெரியாமபோச்சே.:)

Unknown said...

உழைப்பின் வர உறுதிகள் உளவோ!!!...

அறிஞர் அண்ணா வழி வந்த என் இனிய தமிழ் மக்களே ... இலவசத்தின் விலை பலர் வசமா? ... உலக நியதி "Energy can neither be created nor destroyed, but it can only be transformed from one form to another", இந்த குறிக்கோளை நமது "இலவசம்" என்ற விவாதத்துக்கு எடுத்துகொள்வோம் என்றால் ஒருவருக்கு த்ரபடுகின்ற இலவசம் பலரின் உழைப்பின், பணத்தின் விலை!, அந்த "இலவசம்" ஒரு ஆக்கபூர்வமான "கல்வியோ" அல்லது நல்ல வேலையோவாக இருந்தால் நன்று ஆனால் "கலர் டிவி" அல்ல!
இளழ்ந்யர்களே சிந்தியுங்கள்

"உழைப்பின் வர உறுதிகள் உளவோ!"

அருமையான செய்தியை ("with very good humorous satire") சொல்லி, அனைவரையும் சிந்திக்க வாய்த்த அன்பு நண்பன் இன்பவிற்கு உளன் கலந்த நன்றி!

Anonymous said...

Murugan (Seithi 2):

வேலையே செய்ய வேண்டாம்!, "மாச வரும்படி இரண்டாயிரம் ரூபாய் இலவசம்", எங்களுக்கே வாக்களியுங்கள்!...
அண்ணே! எல்லா சோம்பேறி வாக்கும் நமக்குதானே!

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ!!!...

அறிஞர் அண்ணா வழி வந்த என் இனிய தமிழ் மக்களே ... இலவசத்தின் விலை பலர் வசமா? ... உலக நியதி "Energy can neither be created nor destroyed, but it can only be transformed from one form to another", இந்த குறிக்கோளை நமது "இலவசம்" என்ற விவாதத்துக்கு எடுத்துகொள்வோம் என்றால் ஒருவருக்கு த்ரபடுகின்ற இலவசம் பலரின் உழைப்பின், பணத்தின் விலை!, அந்த "இலவசம்" ஒரு ஆக்கபூர்வமான "கல்வியோ" அல்லது நல்ல வேலையோவாக இருந்தால் நன்று ஆனால் "கலர் டிவி" அல்ல!
இளழ்ந்யர்களே சிந்தியுங்கள்

"உழைப்பின் வர உறுதிகள் உளவோ!"

அருமையான செய்தியை ("with very good humorous satire") சொல்லி, அனைவரையும் சிந்திக்க வாய்த்த அன்பு நண்பன் இன்பவிற்கு உளன் கலந்த நன்றி!

பெசொவி said...

Welcome Back, Inbaa!

(pathivaip padikkaamal comment poduvor sangam!)

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

hayyram said...

//இவ்வளவு திறமைகள் இருக்குற ஒரு பெண்ணை 'தாலி'ங்கற கயித்த கட்டி, வீட்டுக்குளேயே கட்டிபோட்டுட்டேன்// அதுக்கும் தாலிக்கும் என்ன சம்மந்தம். இந்துக்களே இப்படி சுய சொறிதல் செய்தால் விஜய் டிவி காரன் தாலி பத்தி பேசாம என்ன செய்வான். பத்மா சுப்ரமனியம் கூட குடும்பத்தலைவி தானே. அவங்க சாதிக்கலையா? மனைவியின் திறமையை மதித்து அவருக்கு பக்கபலமாக இல்லாத குற்றத்திற்கு தாலி மீது பழி போடுவானேன்.

Anonymous said...

எங்களை மாதிரி இளைஞர்களை கண்டுக்காம விட்டா எப்படி? எங்க ஒட்டெல்லாம் வேண்டாமா! சினிமா சான்ஸ் இல்லாத நடிகைங்கள்லாம் சும்மாத்தானே இருக்காங்க!

பங்காளி said...

இலவச பொங்கல் பொருட்களில் தி.மு.க., சின்னம் இடம் பெறுவது தவறு,'' இந்த பொங்கல் இனாம் பைகளை திருவோடு வடிவில் அமைத்து இருந்தால் அவர்களது எண்ணத்திற்கு பொருத்தமா இருக்கும். தமிழ் மக்கள் அனைவரும் இனாம் வாங்கி தின்னும் ஆண்டி பண்டாரம் தானே!!!!

tamil web library said...

nice blog

visit my blog

tamil web library

யதிராஜ சம்பத் குமார் said...

இன்பாவின் வரவு நல்வரவாகட்டும். கலைஞருக்கு நல்ல யோசனைகள் :)

Anonymous said...

//தமிழ் மக்கள் அனைவரும் இனாம் வாங்கி தின்னும் ஆண்டி பண்டாரம் தானே///
///என்ன கேவலமான வார்த்தை படித்த மேல்தட்டு மக்களிடமிருந்து ////
படித்த அல்லது பணக்கார மேல்தட்டு மக்களின் வக்கிர புத்தி தான் இந்த இலவச ஒழிப்பு கோஷம். தான் தான் எல்லா வசதிகளையும் அனுபவிக்கவேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மின்சார வசதி, மின் விளக்கு , கிரைண்டர், கேஸ் அடுப்பு ,தொலைகாட்சி முதலான அத்தியாவசிய வசதிகளை பெறுவதை கண்டு பொறுக்க முடியாத மேல்தட்டு மக்களின் வக்கிர புத்தி தான் இந்த இலவச ஒழிப்பு கோஷம். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும், மின் வசதி பெற இயலாத , வசதி இல்லாத மக்களுக்கு ஒத்தை மின் விளக்கு திட்டமும், இலவச கேஸ் அடுப்பு திட்டமும், தொலைகாட்சி திட்டமும், விவசாய பம்பு களுக்கு இலவச மின்சாரம் போன்ற நவீன வசதிகள் இந்த திட்டங்கள் இல்லாவிட்டால் இந்த குறுகிய காலத்தில் ஏராளமான மக்களை சென்றடைந்திருக்க முடியாது. லஞ்சம் ஒழிக என்று கோஷம் போடும் படித்த பணக்கார மேல்தட்டு மக்கள் தான் பெரும்பாலும் இலஞ்சம் வாங்கும் அல்லது கொடுக்கும் அதை வளர்க்கும் மக்கள் ஆவர். விவசாயிகளின் உழைப்பின் பலன் வேண்டும் அவர்கள் விளைவிக்கும் அரிசி, தானியங்கள் மற்றும் காய்கறிகள் வேண்டும் ஆனால் அதை விளைவிக்கும் விவசாயி மட்டு வண்டியில் செல்ல வேண்டும் , மண்ணெண்ணெய் அடுப்பில் வேகவேண்டும் ,பொழுது போக்கு தொலைக்காட்சி வேண்டாம் என்ற எண்ணத்துக்கு இப்போது வேட்டு வந்து விட்டது.விவசாயி எப்போதும் சமாளிப்பான். அரிசியும் உளுந்தும், பருப்புகளும் வாழை மற்றும் காய்கறிகளும் ( வெண்டைக்காய்,கொத்தவரங்காய், புடலை, அவரை கீரைகள் ) தன குடும்பத்துக்கு தேவையானவற்றை பயிரிட்டு கொள்ளும் ஆற்றல் உண்டு. பெரிய வெங்காயம் 100 ,ரூபாய் என்று அழ மாட்டான்.இன்னும் சில வருடங்களில் அரிசி மற்றும் காய்கறிகள் கிலோ ௧௦௦ ரூபாயிக்கும் மேலாகவும் மற்றவை பயமுறுத்தும் விலைக்கும் விற்கபோவது உறுதி.

Anonymous said...

எங்களுக்கும் காலம் வரும்: : படித்த அல்லது பணக்கார மேல்தட்டு மக்களுக்கு சோவும் சுப்பிரமணிய சா மியும் தான் அறிவாளிகள் என்ற எண்ணம். அவர்களின் அறிவால் ஏதும் மக்களுக்கு பயன் ஏதும் இல்லை. இடதுசாரிகளுக்கு ஜெயாவின் அடக்குமுறை மறந்த செலக்டிவ் அம்னீஷியா. ஜெயா கும்பலுக்கு கொள்ளை அடிக்க சான்ஸ் கிடைக்க வில்ல என்ற ஆதங்கம். கருணா கும்பலுக்கு கொள்ளை அடிக்க நல்ல சான்ஸ். இந்த அரசியல் வாதிகளில் ஏழை மக்களுக்கு ஏதேனும் வசதி பண்ண வேண்டும் என்ற எண்ணம் ( கொள்ளை அடித்தது போக ) உள்ளது. அடுத்த ஜெயாவின் ஆட்சியின் போது( வெற்றி பெற்றால்) பணக்கார மக்கள் சாப்பிட அரிசியும் காய்கறிகளும் கிடைக்காது , ரேஷன் அரிசியின் பலன் அப்போது தான் தெரியும். காய்கறிகளுக்கு பதில் மாத்திரையும் டானிக்கும் தான் சாப்பிட வேண்டும். ஏழை விவசாயி தனக்கு மட்டும் பயிரிட்டால் போதும் என்று இருந்து விடுவான். வெளி நாட்டிலிருந்து வாங்கும் பழங்களும் ,வெளி நாட்டு காய்கறிகளும் பணக்கார மக்களின் வீட்டில் கொலுவிருக்கும் . அரசு கேசுக்கு தரும் சப்சிடி கண்ணுக்கு தெரியாது.