பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, January 16, 2011

சன்டேனா இரண்டு (16-01-11) செய்திவிமர்சனம்


இந்த வார செய்திகள்...."தேடல்கள்".

செய்தி # 1

அன்பே வா - எம்.ஜி.ஆர். , சரோஜாதேவி நடித்த இந்த படத்தை நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஒரு தொலைக்காட்சியில் சமிபத்தில் மீண்டும் பார்த்தேன். படத்தில், பங்களாவின் உரிமையாளரே எம்.ஜி.ஆர்தான் என்று அங்கு வேலை செய்யும் மனோரமாவிற்கு தெரியும். ஆனால், இந்த உண்மை தெரியாமல் அவரிடமே வாடகை வசூலிப்பார் நாகேஷ். நாகேஷிடம் உண்மையை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் மனோரமா படும் அவஸ்தைகள் படத்தின் ஹைலைட்.


அன்பே வா - மனோரமா அவர்களை பற்றிய பல நினைவுகளை எனக்கு கிளறிவிட்டது.

நடிகர் திலகம் சிவாஜியுடன் மனோரமா என்று பார்த்தால், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் "ஜில் ஜில் ரமாமணி" என்ற நாடகநடிகையாக வந்து குரலில் காட்டும் குழைவும், நடிப்பில் அவர் காட்டும் நளினமும் மறக்கமுடியுமா?

ரஜினி அவர்களுடன் "மன்னன்" மற்றும் "எஜமான்" உட்பட பல படங்களில் மனோரமாவின் பங்களிப்பை பற்றி குறிப்பிட்டு சொல்லமுடியும்.

கொஞ்ச காலம் முன்புவரை மனோரமா அவர்கள் இல்லாத கமல்ஹாசன் படங்களே இல்லை என்று கூறலாம். "ஐயோ அய்யய்யோ" என்று 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஜனகராஜ் கோஷ்டியை அதகளம் பண்ணும் காட்சி ஒன்றே போதும். மனோரமா அவர்களின் நடிப்பு திறமைக்கு.

அவர் செய்த வேடங்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தது....வயதான பாட்டுவாத்தியார் கெட் அப்பில் வரும் சத்யராஜை ஜொள்ளுவிடும் 'முதிர்கன்னியாக' அவர் அசத்தி இருந்த "நடிகன்" தான்.

பாசமிக்க பணக்கார பாட்டியாக 'பாட்டி சொல்லை தட்டாதே, தெற்றுபல் கிழவியாக ''சின்ன கவுண்டர்' இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்தானே.

உலக சினிமாவில் சுமார் 1000 படங்களுக்கும்மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்த மனோரமா அவர்கள் இப்போது என்ன செய்கிறார்?

சில மாதங்களுக்கு முன்னால் 'குமுதம்' பத்திரிக்கையில் அவரை பற்றிய ஒரு வேதனையான செய்தியை பார்த்தேன்.

அதில், மனோரமா அவர்கள் இரண்டு கால்களும் முடங்கி, ஆறு மாதத்திற்கும் மேலாக படுத்தபடுக்கையாய் இருப்பதாக தெரிந்தது.

மருத்துவமனையில் தான் சேர்ந்தபோது கமல் போன்ற ஒரு சிலரே வந்து பார்த்ததாகவும், பின்னர் யாரும்வந்து நலம்கூட விசாரிக்கவில்லை என்றும் கண்ணிருடன் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார் மனோரமா.

உள்ளதை சொல்கிறேன். இவரை போன்ற ஒரு நடிகை கேரளாவில் இருந்து இருந்தால், கலைபொக்கிஷமாக மதித்து கொண்டாடிஇருப்பார்கள்.

தமிழ் திரையுலகின் நன்றிகெட்டத்தனங்களுக்கு கணக்கில் அடங்கா உதாரணங்கள் இருக்கின்றன. " அடிப்படையான நாகரிக இயல்புகள் கூட திரையுலகில் இருப்பதாக தெரியவில்லை" என்று 'ஒ' பக்கங்களில் திரு.ஞானி அவர்கள் ஒரு முறை எழுதியது என் நினைவுக்கு வந்தது.

மனோரமா இப்போது பூரணநலம் அடைந்துவிட்டாரா என்று தெரியவில்லை.

ஆனால், இனி வரும் திரைப்படங்களில், அவரது கனிவான குரலை கேட்கவே முடியாதா? பண்பட்ட அவரது நடிப்பை இனி நம்மால் காணவே முடியாதா? போன்ற கேள்விகள் என் மனதை கனக்க செய்தன.

தான் பங்கேற்ற கதாபாத்திரங்கள் மூலம், நம் தமிழ் குடும்பங்களில் ஒரு உறவாகவே ஆனவர் நடிகை மனோரமா அவர்கள்.

ஆச்சி மனோரமா, எங்கு இருக்கிறீர்கள்? எப்படி இருக்கிறீர்கள்?

செய்தி # 2

முதல் செய்தியில் ஆச்சியை சீரியசாக தேடிவிட்டதால், இந்த செய்தியில் ஜாலியாக ஒருவரை தேடுவோம் என்று நினைத்ததில், ஆட்சியை யார்பிடிக்க போகிறார்கள்? அவர்களுடன் எப்படி கூட்டணி போடலாம் என்று மண்டை காய்ந்து கொண்டு இருக்கும் "அவர்" நினைவு வந்தது.

அவர்தான்...ஒரு கருத்து கணிப்பையே நடத்திவிட்டு பின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்யும் "மாற்று அரசியல்" மற்றும் அன்புமணி அவர்களின் தந்தை..மருத்துவர் அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்கள்.

"அதிமுக கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது" என்று திரு.தா. பாண்டியன் வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். மேலும், பிரேமலதா விஜயகாந்த் தனிப்பட்ட முறையில் சென்று ஜெயா அவர்களை சந்தித்து இருப்பதாகவும், 41 இடங்கள் என்று முடிவு செய்து இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து இருக்கின்றன.

அதிமுக - தேமுதிக - கம்யுனிஸ்ட் கட்சிகள் - மதிமுக(தேறுமா?) என்று இந்த அணி கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த சூழலில், வரும் சட்டமன்ற தேர்தலில் அடுத்ததாக உள்ள, திமுக - காங்கிரஸ் - விடுதலை சிறுத்தைகள் அணியில்தான் சேர்ந்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

ராமதாசும் சரி. திருமாவளவனும் சரி. தாங்கள் தனிப்பட்ட முறையில் அரசியலில் வளர்வதற்காக, தங்கள் 'இன' இளைஞ்சர்களை தூண்டிவிட்டதில், அங்க'ஹீனமாக' சுற்றிவருபவர்கள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருக்கிறார்கள். ஆனால், இந்த இரு 'தலைவர்களும்' ஒரே அணியில் நின்றுகொண்டு, கைகோர்த்துக்கொண்டு ஒட்டுகேட்க வரும் காலம் வரபோகிறது. அதுதாங்க...அரசியல்.

"கூட்டணியில் சேர பாமக சார்பில் தூது அனுப்பி இருகிறார்கள். விரைவில் கூட்டணி குறித்து பேசுவோம். ஆனால், எப்போது பேசுவோம் என்று தெரியவில்லை" என்று 'தெளிவாக' பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார் முதல்வர் கருணாநிதி.

"இது அவர் நிருபர்களிடம் தெரிவித்த கருத்து" என்று சொல்லி இருக்கிறார் ராமதாஸ்.

"தமிழகத்தில் பாமக தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது" என்று அவர் உறுதியாக சொன்னபோது, அவர் கால்கள் லேசாக ஆடுவதை டிவியில் பார்த்தேன். "பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மண்டு வீக்கு".

அந்த சமயத்தில் அவர் முகத்தில் தெரிந்த 'நம்மை யாருமே சேர்ந்துகொள்ள மாட்டாங்களோ' என்ற அவரது பயமே அவரை நான் தேட காரணம்.

பொங்கலுக்கு பின்னர் கூட்டணி குறித்து அறிவிப்பதாகவும், ஆனால், "யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், 50 இடங்கள் கேட்போம்" என்று அறிவித்து இருக்கிறார் ஐயோ பாவம் மருத்துவர் அய்யா.

அவர் எந்த அணியில் இருக்கபோகிறார். அவர் கேட்க்கும் 50 இடங்களை யார் தரபோகிறார்கள் போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய, நான் மட்டுமல்ல, நமது "மீடியா"வும் தேடிக்கொண்டு இருக்கிறது....டாக்டர் ராமதாசை.(நன்றி...இனி, அடுத்த வாரம்)

-அன்புடன், இன்பா

13 Comments:

செந்தில் நாதன் Senthil Nathan said...

காணாமல் போனவர் பற்றிய அறிவுப்பா?

ஆச்சி..மறக்க முடியாத குரல்..

ஐயா.மறக்க வேண்டிய முகம்..

பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

Very nice movie taken in Hill station.

Madhavan Srinivasagopalan said...

'மனோரமா' ஓர் சகாப்தம் -- மறக்க முடியுமா அவரை.
கேடு கேட்ட திரைக் கலைஞர்களின் ஒற்றுமையின் லட்சணம் இதில் தெரிகிறது..

அது சரி.. பெட்ரோல் விலை மறுபடியும் ஏருதாமே !
இந்த அநியாயத்தை.. கேட்பார் இல்லையோ..?
எங்கடா போகுது இந்த நாடு..?

R.Subramanian@R.S.Mani said...

Why suddenly thereis so much about Manorama:
She was recently seen in the DIRECTORS =40 fUNCTION ALSO; IS THERE ANY BAD NEWS ABUT HER?

ரோமிங் ராமன் said...

"சன்டேனா இரண்டு (16-01-11) செய்திவிமர்சனம்"
என்ன இது கலைஞர்தான் பொங்கலை தமிழ் புத்தாண்டு என்று குழப்புகிறார் என்றால், நீங்கள் ஒரு நாள் முன்னதாகவே சண்டே கொண்டுவந்து விட்டீர்கள்_ நல்ல வேளை!! தேதியையாவது சரியாகப் போட்டீர்களே!!

Subramanian said...

Dear,

We can all make good fun of Ramadoss.I too enjoyed the same.But if we go out in the middle I dont think we can even do as much as he has done(being in the limelight) or he can do.Just dont forget this at any time.And he is also running a TV channel decently.

ஆதி மனிதன் said...

மனோரமா பூரண குணமடைய பிராத்திப்போம்.

subathra.K7 said...

Aachi madam comediyum arasiyal comedium enru thlaippu koduthirukkalam. Onru marakka mudiyaadhadhu, innonru thirutha mudiyathathu

ராஜரத்தினம் said...

ராமதாஸ் இனிமே பத்ரி எனும் அறிவுஜீவி(?) உடன்பிறப்பை பார்த்தால் கூட்டணி முடிவாகிவிடுமே?

hayyram said...

//She was recently seen in the DIRECTORS =40 fUNCTION ALSO;// yes correct. but hope she is walking with a helper. God bless her.

R.Gopi said...

இன்பா...

நீங்க தமன்னா பத்தி எழுதாம மனோரமா பத்தி எழுதினது பாராட்டுக்குறியது.. அடுத்த வாரம் சச்சு பற்றி எழுதவும்.. மனோரமா நல்ல நடிகை தான்.. ஆனால் நடிப்பு தாண்டி அவர் பேசிய சில அரசியல் பேச்சுக்கள் மற்றும் கமலஹாசன் பற்றிய அவரின் கருத்துக்கள் போன்றவற்றில் யாருக்கும் உடன்பாடு இல்லை...

அய்யா - இடிதாங்கி, தமிழ் குடிதாங்கி, 2016-ல் மகனை தமிழகத்தின் முதல்வர் ஆக்கியே தீருவேன் என்று முழங்கி வருகிறார்...

தனக்கு பதவி வெறி வந்து விட்டதாக சின்ன அய்யா பெரிய அளவில் சத்தம் போடுகிறார்... திரையில் வீரம் காட்டும் நடிகர்களை தன்னுடன் நேருக்கு நேராக மோத தைரியம் இருக்கிறதா என்கிறார், யப்பா... கவுண்டமணி / செந்தில் போல் இவர்களின் காம்பினேஷனும் படு சூப்பர் தான்...

Unknown said...

மருத்துவர் ஐயா, வீட்டைவிட்டு கொஞ்சம் வெளியேதான் போய் பாருங்களேன். உலகம் ரொம்ப மாறிபோச்சிண்ணே. எவ்வளவு நாள் தான் காமடி பண்ணுவீங்க.

virutcham said...

திரையுலகினர் மனோரமாவுக்காக இரு முறை பெரிய விழா எடுத்து இருக்கிறார்கள். சென்ற வருடம் கலைஞர் தலைமயில் ஒரு விழா நடந்ததே. அதில் கலைஞர் ராசாத்தி அம்மளுடனான தனது தொடர்பு, திருமணம் பற்றிக் குறிப்பிட்டு அதை தான் வீட்டுக்கு தெரியாமல் இரண்டு வருடம் மறைத்து வைத்து இருந்ததாகவும் மனோரமா அதை போட்டு உடைத்து விட்டதாகவும் அதனால் தமக்கு அது நன்மையே கொடுத்ததாகவும் திரை நட்சத்திரக் கூடத்துக்கு நடுவில் புளங்காகிதப் பட்டு சொல்ல அதை கலைஞானியும் சூப்பர் ஸ்டாரும் ஏனைய நட்சத்திரப் பட்டாளமும் வெகுவாக ரசிக்க துரோகத்துக்கு அங்கீகாரம் தேடிக் கொள்ள இத்தனை வருடம் கழித்து அந்த விழாவை பயன்படுத்திக் கொண்டதை மறந்து விட்டீர்களா ? அதனால் மனோரமாவை தமிழ் சினிமா கொண்டாடவில்லை கண்டுகொள்ளவில்லை என்பது சரியான கருத்தல்ல

ஆனால் அவர் நோய் வாய்ப்பட்டு இருந்த போது கண்டு கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது