பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 17, 2011

13-ம் நம்பர் வீடு

இன்று நல்ல கூட்டம். ஆனாலும் விற்பனை குறைவுதான்.

இப்படி நான் சொன்னவுடன், ‘நான் வந்து பார்த்தபோது கூட்டம் கடுமையாக இருந்தது, கிழக்கு அரங்கில் கூட்டம் வழிந்தது’ என்றெல்லாம் சிலர் சொல்லுகிறார்கள். இல்லையென்றால், ‘கூட்டம் நன்றாகத்தான் இருந்தது, கிழக்கு புத்தகங்கள் விற்கவில்லை’ என்கிறார்கள். எது உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறதோ அதைச் சொல்லிக்கொள்ளுங்கள். நான் எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்லுகிறேன்.

ஒரு வாசகர் ஒரு நேரத்தில் வரும்போது இருக்கும் கூட்டத்தைப் பார்த்துக் கூட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை முடிவு செய்வதற்கும், ஒரு பதிப்பாளர் (அல்லது விற்பனையாளர்) கூட்டம் இருக்கிறதா இல்லையா என்பதற்கும் வித்தியாசம் உண்டு. இது முதல் விஷயம். இரண்டாவது விஷயம் மொத்த விற்பனை சார்ந்தது. இதுவும் பதிப்பாளர்தான் சொல்லமுடியுமே ஒழிய, ஒருநாள் அல்லது சில நாள்களில் சில மணி நேரங்கள் வந்து ஒவ்வொரு அரங்கையும் சில மணித்துளிகள் பார்த்துவிட்டுச் செல்லும் வாசகர்களால் முடியாது. நான் சொல்வதும் கூட இறுதி அறிக்கை அல்ல, ஒரு பார்வை மட்டுமே. நான் சொல்வதிலும் தவறு இருக்கலாம். ஆனால் வாசகர்கள் புத்தகக் கண்காட்சியை வந்து பார்த்துவிட்டுச் சொல்லும் அறிக்கையைவிட, நான் சொல்வது நம்பகத்தன்மை அதிகம் உள்ளதாகவே இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். மூன்றாவது விஷயம், கடந்த வருடங்களில் நடந்த விற்பனை, வந்த கூட்டம், விழுந்த பில்களின் எண்ணிக்கையிலான ஒப்பீடு. இதை வாசகர்களால் செய்யவே முடியாது. நான்காவது விஷயம், வாசகர்களின் மனநிலை சார்ந்தது. பொதுவாக ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு பில் கவுண்ட்டர் திறந்துவிடப்பட்டு, அங்கே டிக்கட் கொடுக்கப்பட்டாலும், மக்கள் சரியாக இடது கைப்பக்கம் உள்ள இடதுகோடி அரங்கில் இருந்துதான் தொடங்குகிறார்கள். இதனால் அந்த வரிசையில் கூட்டம் கடுமையாக இருக்கும். அடுத்த வரியில் மெல்ல குறையும். அடுத்தடுத்த வரிகளில் கூட்டம் மிகமிகக் குறைந்துவிடும். இரண்டு அல்லது மூன்று வரிசைகள் சுற்றியதுமே மக்கள் சோர்வடைந்துவிடுகிறார்கள். இதனால் அவர்கள், ஒன்று உணவகத்தின் பக்கம் போய்விடுகிறார்கள், அல்லது வேகமாக நடந்து சென்று நான்கைந்து வரிசைகளைப் பார்த்துவிட்டு, வெளியேறிவிடுகிறார்கள். ‘நான் வந்தபோது கூட்டம் இருந்ததே’ என்பது, நான் இப்போது சொன்னவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் செய்யப்படும், ஓர் அகவயமான ஒப்பீடு மட்டுமே. அல்லது அதனையும் தாண்டிய அரசியல் சார்ந்தது. நான் எழுதுவதில் எவ்வித அரசியலும் இல்லை. நான் எழுதாத சில விஷயங்களில் வேண்டுமானால் சில அரசியல் இருந்திருக்கலாம். :-)

இன்று சாரை சாரையாக வந்த மக்கள் கூட்டம், புத்தகக் கண்காட்சியைப் பார்ப்பதற்கென்று வந்த கூட்டமே என்ற எண்ணம் எனக்கு மேலோங்கிவிட்டது. மதியம் வெளி அரங்கில் நடந்த, மணிமேகலை பிரசுரத்தின் 34 புத்தகங்கள் வெளியீட்டு நிகழ்ச்சியில் சோ, எஸ்வி சேகர், பாண்டியராஜன், சொர்ணமால்யா கலந்துகொண்டார்கள். இதனால் பெரும்பாலானவர்கள் அங்கேயே அமர்ந்துவிட்டார்கள். இதைக் கவனத்தில் கொள்ளாமல் பார்த்தாலும், கடந்த சனி மற்றும் ஞாயிறுகளில் வந்த கூட்டத்தை ஒப்பிட்டால், இன்று வந்த கூட்டம் குறைவே. ஆனால் சென்ற சனி, ஞாயிறுகளில் நல்ல காலநிலை நிலவியது. உள்ளரங்குகளில் குளுமை இல்லாவிட்டாலும், வியர்வையும் வெக்கையும் இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று அரங்குகளுக்குள்ளே வியர்வை, வெக்கை, தூசியால் வரும் அலர்ஜி. வெயில் காரணமாக இருக்கலாம். இரவில் புத்தகக் கண்காட்சி முடிந்து வெளியே வரும்போது, வெளியே குளிரிக்கொண்டிருந்தது.

நாளை ஒருநாள் புத்தகக் கண்காட்சி உள்ள நிலையில் இந்தத் தொடர் பதிவுகளை இன்றோடு முடித்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். பொதுவாக புத்தகக் கண்காட்சி முடிந்த மறுநாள்தான் பேக்கிங் செய்வார்கள். ஆனால் இந்தமுறை நாளை இரவே பேக்கிங் செய்யச் சொல்லிவிட்டார்கள். எனவே இரவு அங்கே தங்கப் போகிறேன். இதனால் நாளை புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவு வராது. எனவே இன்றே மங்களம் பாடிவிடுகிறேன்.

* இந்தியாவில் நடக்கும் எந்த ஒரு புத்தகக் கண்காட்சியைக் காட்டிலும், தமிழ்நாட்டுப் புத்தகக் கண்காட்சிதான் மக்கள் கூட்டம் அதிகம் வருவது என்று நினைக்கிறேன்.

* புத்தகக் கண்காட்சியின் உள்ளரங்கக் கட்டுமானத்தைப் பொருத்தவரையில் பபாஸியின் செயல்பாடு மிகவும் பாராட்டுதலுக்குரியது.

* வழக்கம்போல கழிப்பறைகளின் நிலைமை மிகவும் மோசம்.

* குடிநீர், விடுமுறை நாள்களில் உணவு வழங்குதல் என எல்லாவற்றிலும், கடந்த வருடங்களைப் போல் அல்லாமல், சிறப்பாகச் செயல்பட்ட பபாஸிக்குப் பாராட்டுகள்.

* இதுவரை இருந்த கேண்டீன்களிலேயே சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட கேண்டீன் செட்டிநாடு கேண்டீந்தான். அவர்களுக்கும் பாராட்டுகள்.

* விளம்பரங்கள் மிகவும் மோசம். என்னவோ புத்தகக் கண்காட்சியை பயந்து பயந்து நடத்துகிற மாதிரி நடத்துகிறார்கள். பலருக்கு, இன்றும் நாளையும் புத்தகக் கண்காட்சி நடப்பதே தெரியவில்லை.

* பொங்கல் முடிந்தபின்பு வரும் சனி ஞாயிறு வரை புத்தகக் கண்காட்சி நடத்துமாறு புத்தகக் கண்காட்சியைத் தொடங்கவேண்டும் என்று பலர் சொன்னார்கள். (எனது 12ம் நாளுக்கான பதிவின் பின்னூடத்தில் ஒரு நண்பர் இதனைச் சொல்லியிருக்கிறார்.) இது சரியான கணிப்பு என்றுதான் நானும் நினைக்கிறேன். பொங்கல் தினத்தன்று, சென்னையில் தங்கியிருக்கும் பலர் தங்கள் சொந்த ஊருக்குப் போய்விடுகிறார்கள். இதனால் கூட்டம் வெகுவாகக் குறைய வாய்ப்பிருக்கிறது என்பது உண்மைதான். இதனையும் பபாஸி கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

* கிழக்கு அரங்கைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு விற்பனையைக் கடந்துவிட்டோம் என்பதில் மகிழ்ச்சி. ஆனால், நான் எதிர்பார்த்த விற்பனை இலக்கை எட்டமுடியவில்லை என்பதில் வருத்தம்தான். அடுத்த ஆண்டு அதனைச் செய்வோம். :-)

* ஒட்டுமொத்த புத்தக விற்பனையில் ‘சூடிய பூ சூடற்க’ புத்தகம்தான் முதலிடம் பிடிக்கும் என நினைக்கிறேன். சரியான தரவுகள் இல்லாத நிலையில், புத்தகக் கண்காட்சியில் நிலவும் பேச்சை வைத்துத்தான் இதனைச் சொல்லவேண்டியிருக்கிறது. கிழக்கு அரங்கைப் பொருத்தவரையில் ராஜ ராஜ சோழன் முதலிடத்தைப் பிடிக்கும் என நினைக்கிறேன். நாளை சரியான நிலவரம் தெரிந்துவிடும்.

* கிழக்கைப் பொருத்தவரை, சென்ற ஆண்டைப் போல் இல்லாமல், இந்த ஆண்டில் பல புத்தகங்கள் ஏறக்குறைய ஒரே அளவில் விற்றன. அவை: ராஜ ராஜ சோழன், ஆர் எஸ் எஸ், காஷ்மிர், உலோகம், முதல் உலகப்போர், கிமுகிபி, இரண்டாம் உலகப்போர் போன்றவை.

தினமும் பதிவு எழுதவேண்டும் என்று இட்லிவடை சாட்டிங்கில் கேட்டபோது, இது தேவையற்ற வேலை என்றுதான் நினைத்தேன். அவ்வளவு நேரம் புத்தகக் கண்காட்சியில் இருந்துவிட்டு, வீட்டுக்கு வந்ததும் இதனைச் செய்வது பெரிய அறுவை என்றுதான் தோன்றியது. முடிந்தால் எழுதுவோம், இல்லையென்றால் விட்டுவிடுவோம் என்று நினைத்துத்தான் எழுதத் தொடங்கினேன். பத்ரியும் பாராவும் மருதனும் எழுதவும், நானும் எழுதவேண்டும் என்று முடிவெடுத்து, ஒரு வீம்புக்காகத்தான் எழுதினேன். இதனால் சில பதிவுகள் (அல்லது எல்லாமே) பெரும் மொக்கையாக இருந்திருக்கலாம். அதிலும் முதல் நான்கு நாள்கள், அதிகம் அலையாமல் இருக்கும் இடத்தில் இருந்து விவரங்கள் சேகரித்து எழுதியவை. ஒரு கண்காட்சியைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்னும் அளவுக்கு மேல், நான் எழுதிய பதிவுகளில், விவரங்களோ, ஆழமோ இல்லை என்பது எனக்கே நிச்சயமாகத் தெரியும். மேலும், பல வரிகள் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை மனத்தில் நிறுத்தி எழுதப்பட்டவை. அதனையும் வெளிப்படையாகவே எழுதினேன். இதற்கு இடம் அளித்து தினமும் பதிவேற்றிய இட்லிவடைக்கு நன்றி.

எரிச்சலை மீறித் தொடர்ந்து படித்த அனைத்து நண்பர்களுக்கும், வலைப்பதிவர்களுக்கும் நன்றி.

சரி, பதிமூன்றாம் வீடு? கிழக்கின் ஸ்டால் எண் 13.
நன்றி :-)

10 Comments:

ரோமிங் ராமன் said...

நன்றியுரை: (இரண்டும் வேறு வேறு என்ற நம்பிக்கையில்!!) ஒரு நல்ல தொடர் எழுதிய நண்பர் திரு ஹ பி க்கும், பிரசுரித்த இ வ க்கும் பாராட்டுக்கள்! ஹ பி அவர்களுக்கு இது ஒரு நல்ல மன நிறைவைத் தந்திருக்கும். அததோடன்றி, இத்தொடர்தனை பபாசி ஒரு அச்சுப்ரதி எடுத்து வைத்துக்கொண்டால் அடுத்த ஆண்டின் பு.க வுக்குத் தேவையான மாறுதல்களுக்கான யோசனைகளின் ஒரு பகுதியாகப் பயன் தரக்கூடும். (பா ரா, ப சே .etc கட்டுரைகள் தத்தம் தளங்களில் சிறப்புதான் என்றாலும் அவை ஒரு கமெண்டரி போல !) மேலும் நாள் தவறாது இத்தொடருக்கு பின்னூட்டம் எழுத வைக்கும் அளவுக்கு இருந்தது!! வாழ்த்துகள்!!

BalajiS said...

Prasanna,

bapasi should conduct a book fair
in Madurai, Kanyakumari and Hosur.

There are more Tamils in Hosur+Bangalore than Chennai.

It would prove out to be a very good
show in Hosur if not in Bangalore.

I request you to raise in the right forum and make it happen in 2011.


I also second the view that the show should be there for two week-ends atleast if you want people from other areas to come to Chennai.

You are missing several hundred persons/buyers who would spend thousands of rupees on various subjects.

I read from devan to kalki to sujatha to jeyamohan.

From politics to How to bring-up a child?


Thanks in Advance!
Balaji Srinivasan
A voracious tamil reader from Bangalore originally from Devakottai who is not able to come
to book fairs in TN.

Anonymous said...

புத்தக கண்காட்சிக்கு வர முடியாவிட்டாலும் உங்கள் தொடர் மூலமாகவே அதைக் கண்ணார கண்டு களித்த அனுபவம் கிட்ட தட்ட திகட்ட திகட்ட கிடைத்து விட்டது. பல புத்தகங்களைக் குறித்து அறிந்து கொண்டேன். கண்டிப்பாக இத்தொடர் மூலமாக பல நல்ல புத்தகங்களுக்கு (இலவச) விளம்பரம் கிடைத்து விட்டது. நன்றி :)
by
அற்புதம்

ஹரன்பிரசன்னா said...

ரோமிங் ரோமன், நன்றி.

தினமும் சந்தித்த உங்களைப் பற்றி எழுத விட்டுப் போனது. மன்னிக்கவும்.

Anonymous said...

I am regular to the Book Fair for almost 15 years and buy books for atleast 10K, the reason being I love books and mainly for tax concession. But I will not come to the next year Book fair, Its not worth spending money here,

here are the reason for my decision.

1. The organisors are not learning lessons from the previous exhibitions, not organizing properly.
2. I agree no of stalls are growing and we have to walk a lot but there are no chairs for patrons to take rest in the fair
3. Water was kept (Sold) in the backside of the fair not in the front, so we have to walk to end to buy/drink water
4. Many publishers do not have credit card facility
5. There were no cleanliness and too much of dust
6. Fans are not sufficient
7. Many were selling very old books; it looks like they wanted to sell all their old stocks under the disguise of Book fair.

8. It looks like, these days publishers wanted to make quick money in Book fair

9. Everybody is boosting and targeting sales and wanted to double their sales, but didn’t mind about the visitors and the sales guys / girls does even know about what books they sell

I have many reasons but keeping short, definitely will not come next year.

virutcham said...

கிழக்குப் பதிப்பகம் கவனத்திற்கு - பேசாம காவலன் பொங்கலுக்கு வெளியிடப்படாமல் போனதன் பின்னணி என்ன ? தி.மு.க வினரின் சதியா ? என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை சுடச் சுட எழுதி வெளியிட்டால் மள மளவென்று விற்றுத் தீரும். போதுமான பிரதிகளை தயாராக வைத்திருக்கவும். இல்லை என்றால் கண்ணாடி கதவுகள் ஜன்னல்கள் பத்திரம்.

http://www.virutcham.com/2011/01/தமிழரின்-பிரத்யேக-கலாசார/
(தமிழரின் பிரத்யேக கலாசாரம்)

Essex Siva said...

ஹலோ இட்லி வடை!
many thanks for your daily update about Bookfair!
நான் உங்களுடைய பதிவையும், பாரா பதிவையும் தினமும் படித்து, புத்தக கண்காட்சியில் பங்கேற்க்காத குறையை ஆற்றிக்கொண்டேன்! வாழ்க நீவிர் பல்லாண்டு!

Essex சிவா

Krishnan said...

Relished your daily posts. Thanks.

cho visiri said...

balajisrinivasan stated....//bapasi should conduct a book fair
in Madurai, Kanyakumari and Hosur. //A voracious tamil reader from bapasi should conduct a book fair
in Madurai, Kanyakumari and Hosur.
Bangalore originally from Devakottai who is not able to come
to book fairs in TN. //

My dear friend,
IN Karaikudi, similar Bookfair is conducted annually.

தேவன் said...

Soodiya poo sudarkka motham 2430 copies sold