பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 20, 2010

விருதகிரி- நடு நிலையான விமர்சனம் !

இது விஜயகாந்த் நடித்த படத்தின் விமர்சனம், விஜயகாந்த் பற்றிய விமர்சனம் இல்லை. படிப்பவர்களுக்கு வேறு மாதிரி தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.


அரசியல் பேட்டி, அறிக்கை என்று கலக்கிக்கொண்டு இருக்கும் கேப்டன், படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற 'எதிர்ப்பார்ப்பு' என்பதை நீங்களே புரிந்திகொண்டிருப்பீர்கள்.

கேப்டன் நடித்து இயக்கியிருக்கும் படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புடன்(?!...) படத்தைப் பார்த்தேன். இதுவரை இந்திய தீவிரவாதிகளை போட்டு சாத்திய கேப்டன், இந்த முறை உல தீவிரவாதிகளை தும்சம் செய்கிறார்."காப்டனே வா வா, ஆட்சி மாற்றம் தர வா வா" என்று "நிலா நிலா ஓடிவா" போன்ற டைட்டில் பாடலில் ஆ'ரம்பி'க்கிறது படம்.

டைட்டிலில், "கதை, இயக்கம்...விஜயகாந்த்" என்று வரும்போது தலைமைச் செயலகம் முன்பு Thumps-up காண்பிக்கும் கேப்டன்... வழக்கம்போல இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். (உடை வடிவமைப்பு பிரேமலதா விஜயகாந்தாம்.).

பஞ்ச் டயலாக் படத்தில் ஆங்காங்கே வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் படமே பஞ்ச் டயலாக்காக இப்போதுதான் பார்க்கிறேன். எல்லாக் காட்சிகளிலும் நிறுத்தி நிதானமாக பஞ்ச் வைத்து பஞ்ச்வைத்து ந(டிக்)கர்கிறார். பஞ்ச்-களில் கூடுதல் எஃபெக்ட் வரவேண்டும் என்று அவர் நினைக்கும் இடங்களில் எல்லாம் அவருக்குப் பின்னால் பூகம்பம், சுனாமி எல்லாம் வருகிறது.

முதல் சீனில்- ஸ்காட்லாந்து யார்டில்... என்றவுடன் நாம் சீட்டின் நுனிக்கே வந்துவிடுகிறோம். அங்கே அந்த நாட்டுப் பிரதமரைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிறார். (எத்தனைநாள்தான் லோக்கல் சப்பாத்திப் பிரதமரையே காப்பாற்றிக்கொண்டிருப்பது?) தீவிரவாதி, விஜயகாந்தைக் கண்டு ஓட, அவரை நடந்துசென்று துவம்சம் செய்கிறார். பிறகு என்ன ஸ்ட்காட்லாந்து போலீஸ், "எங்க நாட்டின் பாதுகாப்பு, மற்றும் ஸ்ட்காட்லாந்து யார்ட் மானத்தையும் நீங்க காப்பாத்தீட்டீங்க," என்று நம்மூர் வசனம் பேசுகிறார்கள். இந்த மாதிரி காட்சிகள் இருப்பதால் படத்தில் வடிவேலு, சந்தானம், விவேக் போன்றவர் இல்லாத குறையே தெரியவில்லை.

படம் முழுவதும், ஆஸ்திரேலியாவிலும் சில பகுதிகள் ஸ்காட்லாந்து யார்டிலும் நடப்பதால், ஆங்கில வசனம் வால்யூம் ஒன்றிலும் தமிழ் வசனம் வால்யூம் ஐந்திலும். "Oh! my God, really" போன்ற வசனம் வந்தவுடன் "அடக் கடவுளே, அப்படியா?" என்று பின்னனியில் வருகிறது. கொஞ்ச நேரத்தில் அதுவே ஜெயா டிவியில் ராஜகோபாலன் ஆங்கிலப் பாடத்தைத் தமிழில் எடுப்பது போல ஒரு ஃபீலிங்.

ஸ்காட்லாந்து யார்டில் இந்த வேலையை முடித்துவிட்டு, திரும்ப இந்தியா வரும் அவர் ஏர்போர்ட்டில் மீடியாவிற்குப் பேட்டி கொடுக்கிறார்-- "வாழ்க்கை ஐஸ்கீர்ம் மாதிரி, அது உருகுவதற்கு முன்பு நாம் சாப்பிடவேண்டும்... புகழுக்குகாக நாம் அது பின்னால் அலையக் கூடாது. புகழ்தான் நம்மைத் தேடி வரவேண்டும்..." இதற்குப் பிறகு ஒரு பத்திரிகையாளர் இவரை ஏதோ பாராட்ட, கேப்டன், "நான் என் கடமையை தானே செய்தேன்...." என்று கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்பான எம்ஜிஆர் வசனத்தைச் சொல்ல-- அதற்கு அந்தப் பத்திரிகையாளர் "அவனவன் பாராட்டுவிழாவே வருஷக்கணக்கா நடத்துறாங்க நீங்க என்னடா என்றால்.." என்று எடுத்துக்கொடுக்க--- கேப்டன் "... நம் நாட்டில் பசிக்கும் பஞ்சம் இல்லை; பாராட்டுவிழாவிற்கும் பஞ்சம் இல்லை..." இத்யாதிகளுடன் முடிக்கிறார். "ஏன் சார் உங்களுக்கு பயமே இல்லையா?" என்று இன்னொருவர் கேட்க, "என்னை யாரும் மிரட்ட முடியாது" என்று விரலை ஆட்டி மிரட்டுகிறார். க்ளோசப்பில் பார்க்க நமக்குத்தான் பயமாக இருக்கிறது.

ஏர்போர்ட்டிலிருந்து காரில்வரும் கேப்டன், இடதுபக்கக் கதவை திறந்து இறங்குகிறார். உடனே அடுத்த ஷாட்- வலதுபக்கக் கதவையும் திறந்து இறங்குகிறார். என்னது, டபுள் ஆக்டா என்று ஒரு நொடி நாம் குழம்ப, அது அதிரடி ஷாட் மாதிரி காண்பிக்க எடிட்டரின் கைவண்ணம் என்று புரிகிறது. தொடர்ந்து வீட்டில் அம்மா, அப்பா அவரிடம், நீ தான் அடுத்த முதல்வர் ரேஞ்சில் பேசிக்கொண்டே போக... முடியலப்பா...

இதற்குப் பிறகு ஒரு பாட்டு- ஐபிஎஸ் ஆபிஸர் தேர்தல் பிரசாரம் செய்யும் பாட்டு. அதை அப்படியே ஸ்கிப் செய்தால் பிறகு வழமையான ஒரு சினிமா ரவுண்ட் டேபிள், சுற்றி போலீஸ் இருக்கிறார்கள். உங்களுக்கே தெரிந்திருக்குமே ஒரு பிரொஜக்டரில் திவிரவாதிகள் பற்றியோ வில்லன் பற்றியோ ஸ்லைட் ஷோ காண்பிப்பார்கள், உடனே அங்கே ஹீரோவாக இருக்கும் போலீஸுக்கு, அந்த வேலையை "ஆல் தி பெஸ்ட்" சொல்லிக் கொடுப்பார்கள். அவரும் அது சம்பந்தப்பட்ட(?!) ஒரு ஃபைலை வாங்கிக்கொண்டு, சல்யூட் அடித்து ஏற்றுக்கொண்டு நகர்வார். இங்கே ஆஸ்திரேலியாவில் நடக்கும் மாணவர் மீதான தாக்குதலில் இருக்கும் பின்னணியைப் போட்டு அலசுகிறார் நம் கேப்டன். அவ்வப்போது கண்ணைக் கொட்டிக்கொண்டு பேசும்போது சிரிப்புதான் வருகிறது.

விஜய்காந்த் வீட்டில் ப்ரியா(மாதுரி இடாகி) என்ற பெண்மணி இருக்கிறார். இவர் தான் ஹீரோயினா என்று நாம் நினைக்கும் போது இவர் விஜயகாந்தை அங்கிள் என்று கூப்பிட்டு நம் வயிற்றில் பாலை வார்க்கிறார்; இல்லாவிட்டால் இவருடன் விஜய்காந்த் ஆடும் டூயட்டை யார் பார்ப்பது? படத்தில் ப்ரியாவின் அம்மாவாக டிவி புகழ் உமா நெற்றியில் வீபூதியுடன் வருகிறார். இவர் விதவை ஆனதற்கு ஏதாவது ஃபிளாஷ் பேக் வரும் என்று நானும் கடைசி வரை பார்த்தேன் ஆனால் வரவில்லை. ஒரே ஆறுதல்.

இதற்குள் திருநங்கைகளைக் கடத்திக் கொலை செய்து, அவர்களின் உடல் உறுப்புகளை வெளிநாடுகளில் விற்கும் கும்பலை கேப்டன் வழக்கம் போல் தனி ஆளாக அடித்து உதைக்கிறார். அடித்துவிட்டு நான் மக்களுடைய போலீஸ் என்று சொல்ல அதற்கு "அரசாங்க அதிகாரியா இருக்கறப்பவே இவ்வளவு நல்லது பண்றீங்களே, அரசாங்கமே உங்க அதிகாரத்துக்கு வந்துட்டா?" போன்ற வசனங்களை கேட்டுக் கேட்டு டயர்ட் ஆகிப் போகிறோம். பின்ன இந்த வசனம் மூன்று முறை படத்தில் வருகிறது என்றால் ? நல்லவேளையாக, "இந்த விருதகிரி Gunனும் கண்ணும் வைத்தால் குறி தப்பாது.." என்ற வசனத்துடன் ஒரு திருப்பம் வருகிறது.

ப்ரியா மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா போக அங்கே அவரை ஒரு கும்பல் கடத்துகிறது. இதற்குப் பிறகு டேக்கன்(Taken) என்ற ஆங்கிலப் படத்தை விஜய்காந்த் சீனுக்கு சீன் ரீமேக் செய்கிறார். அங்கேயும் தன் பஞ்ச்-ஐ மட்டும் விடவில்லை.

ஆங்கிலப் படங்களை தமிழில் டப் செய்வது போல இந்தப் படத்தை ஆங்கிலத்தில் டப் செய்தால் டேக்கன் படம் கிடைக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் [என்ன, கொஞ்சம் நகைச்சுவை தூக்கலாக இருக்கும் :-)]

மன்சூர் அலிகான் மாதிரி லோக்கல் ரவுடியாக இருந்தாலும், அருண்பாண்டியன் மாதிரி கொஞ்சம் மேல்தட்டு ரவுடியாக இருந்தாலும், வெளிநாட்டுத் வெள்ளை தீவிரவாதியாகவே இருந்தாலும் கேப்டன் அவர்களை கலைஞர் என்றே நினைத்து அவர்களிடம் அரசியல் வசனம் பேசுவது சூப்பர். ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு சில்லரை வில்லனிடம் உண்மையை விசாரிக்க ஷாக் கொடுக்கும் சீனில், "எங்க ஊர் மாதிரி மின்சார வெட்டு இல்லாம இங்கே 24 மணி நேரமும் கரன்ட் சப்ளை இருக்குடா, நீ தப்பிக்கவே முடியாது" என்று சொல்வது ஒரு சோறு பதம்.

கடைசியாக ப்ரியாவையும் மற்ற எல்லா மாணவர்களையும் காப்பாற்றுகிறார். விருதகிரி ந்யூஸில் வருகிறார். எல்லோரும் இவருக்கு சல்யூட் அடிக்கிறார்கள். படம் முடிந்துவிட்டது. அவ்வளவுதான். விஜயகாந்தை பார்த்த பிறகு நம் கண்கள் அவரை மாதிரியே சிகப்பாக மாறிவிடுகிறது சைடு எஃபெக்ட் !

சேனல்காரங்க எடுக்குற படத்துக்கு மட்டும் எங்கேயும் திருட்டு விசிடி கிடைக்க மாட்டேங்குதே அதன் மர்மம் என்ன என்று படத்த்தில் ஒரு வசனம் வருகிறது. எவ்வளவு உண்மை :-)


அடுத்த விமர்சனம் மன் மதன் அம்பு - ரெடியா இருங்க...

32 Comments:

Anonymous said...

what a dialog!

தண்ணி அடிக்க போன ஆம்பளையும்
தண்ணி பிடிக்க போன பொம்பளையும்
சண்ட போடாம திரும்பி வந்தாதா
சரித்திரமே இல்லடா!!!

கானகம் said...

இட்லிக்கடையில் கூட்டமே இல்லை போல.. விருதகிரிக்கெல்லாம் விமர்சனம் வருகிறது.

:-)

பெசொவி said...

:)))))))))

idlyvadai rocks!!!!!!!!!!!!

typical iv post!

சுபத்ரா said...

//இவர் தான் ஹீரோயினா என்று நாம் நினைக்கும் போது இவர் விஜயகாந்தை அங்கிள் என்று கூப்பிட்டு நம் வயிற்றில் பாலை வார்க்கிறார்//

ROFL :-)

முழுப் படத்தையும் பதிவிலேயே பார்த்து...சாரி படித்து விட்டதால் விருதகிரி படத்தை மேலும் ஒருமுறை பார்க்கவேண்டாம் என்று நினைக்கிறேன் :-)

சுபத்ரா said...

//ஆங்கிலப் படங்களை தமிழில் டப் செய்வது போல இந்தப் படத்தை ஆங்கிலத்தில் டப் செய்தால் டெக்கான் படம் கிடைக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் [என்ன, கொஞ்சம் நகைச்சுவை தூக்கலாக இருக்கும் :-)]//

நக்கல் தூக்கலாக இருக்கிறது.

சுபத்ரா said...

//அடுத்த விமர்சனம் மன் மதன் அம்பு - ரெடியா இருங்க...//

EAGERLY AWAITING :-)

Anonymous said...

//"காப்டனே வா வா, ஆட்சி மாற்றம் தர வா வா" என்று "நிலா நிலா ஓடிவா" போன்ற டைட்டில் பாடலில் ஆ'ரம்பி'க்கிறது படம்.//

ivlo varusham evlo peru koopittum nilaa varala, captain enga aatchiku vara poraar nu symbolic-a telling pola :D

Lucky said...

i liked the movie

Anonymous said...

//அடுத்த விமர்சனம் மன் மதன் அம்பு - ரெடியா இருங்க...// பலான படத்துக்கெல்லாம் விமரிசனம் தேவையா என்ன?

KrishnaDeverayar said...

//மன்சூர் அலிகான் மாதிரி லோக்கல் ரவுடியாக இருந்தாலும், அருண்பாண்டியன் மாதிரி கொஞ்சம் மேல்தட்டு ரவுடியாக இருந்தாலும், வெளிநாட்டுத் வெள்ளை தீவிரவாதியாகவே இருந்தாலும் கேப்டன் அவர்களை கலைஞர் என்றே நினைத்து அவர்களிடம் அரசியல் வசனம் பேசுவது சூப்பர்.//

Hahaha Super!!!

R.Gopi said...

விருதகிரி விமர்சனம் படிச்சாவே இவ்ளோ டயர்டா இருக்கே... படமும் முழுசா (!!?) பார்த்து, விமர்சனமும் எழுதறதுக்கு என்னா தில்லு வேணும்...

இந்த விமர்சனத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச வரி இது :

//ஆ'ரம்பி'க்கிறது படம் //

ஆ”ரம்பம்”லயே கோடி காட்டிட்டீங்க...

அடுத்த விமர்சனம்னு சொன்னாவே ரொம்ப பயமா இருக்கு... அதுவும் படம் பேர் வேற சொல்லிட்டீங்க... அதான் ரொம்ப பயமா இருக்கு....

அந்த “கவித்துவமான பாடல்” நீக்க மாட்டேன்னு ரொம்ப சவுண்ட் விட்டவர், இப்போ நீக்கிட்டேன்னு லெட்டர் போட்டு இருக்காராமே!!

CS. Mohan Kumar said...

Very interesting review. Laughed at many places.

FARHAN said...

ஒரு காமெடி படம் பார்த்த பீலிங் பாஸ்

மஞ்சள் ஜட்டி said...

மலேசியாவில எடுத்துட்டு, ஆஸ்திரேலியா ன்னு பீலா விட்டிருக்காரு கேப்டன்,,, கடைசி சீனுல கோலா லம்புரின் பெட்ரோனாஸ் ட்வின் டவர் பின்னாடி தெரியுறது பெரிய அபத்தம்.. காட்டுற டாக்ஸியில மேல "TEKSI - BERMETER" ன்னு எழுதியிருக்கிறது மலாய் மொழியில்...தெருவில நடக்குறவன் எல்லாம் சீனனா இருக்குறான்?? மகா மொக்கையான படம்...

R.Gopi said...

//மஞ்சள் ஜட்டி said...
மலேசியாவில எடுத்துட்டு, ஆஸ்திரேலியா ன்னு பீலா விட்டிருக்காரு கேப்டன்,,, கடைசி சீனுல கோலா லம்புரின் பெட்ரோனாஸ் ட்வின் டவர் பின்னாடி தெரியுறது பெரிய அபத்தம்.. காட்டுற டாக்ஸியில மேல "TEKSI - BERMETER" ன்னு எழுதியிருக்கிறது மலாய் மொழியில்...தெருவில நடக்குறவன் எல்லாம் சீனனா இருக்குறான்?? மகா மொக்கையான படம்...//

********

ஹா...ஹா...ஹா....

வாங்க தல... ரொம்ப நாளா ஆளையே காணும்.... கேப்டன் மலேசியாவ ஆஸ்திரேலியான்னு சொன்ன உடனே, கங்காருவ கீழ போட்டுட்டு, டாக்டர் கேப்டன போட்டு இந்த உலுக்கு உலுக்கிட்டீயளே!!

இதை விட இடியெல்லாம் தாங்கியிருக்கோமே நாம எல்லாம்?

Anonymous said...

i.v
where is inba..yathiraj? with out their aricle or pathi vadai is without kaaram.

Senthil said...

After a long time a very good movie review in idlyvadai.

sujatha said...

Had a hearty laugh...Padam paartha effect irukku unga vimarsanam padicha..Manmadhan ambu vimarsanathai aavaludan ethirpaarthu kondirukkiren

Vikram said...

captain - evllavu pulli vivaram sonnarungara pulli vivaram kudukalaiye :)

Anonymous said...

Makkale.... Australila illa Bangkok, Thailandla shoot pannathu...

Thala... Athu petronas towerilla.... thats Siam commercial bank tower in Bangkok.

மஞ்சள் ஜட்டி said...

அனானி நண்பா !!...அப்ப டாக்ஸில எழுதியிருக்குறது என்ன மொழி?? படத்துல காண்பிக்கப்படும் சில தெருக்கள் மலேசியாவில் உள்ளவை.. (ஜலான் xxxxx) என்று ஆரம்பிக்கும்..என் அலுவலகத்திற்கு அருகிலும் எடுக்கப்பட்டது.... இங்கே பல மலேசிய நண்பர்கள் இதை உறுதி செய்தனர்... :)

இந்த ஜிம்பலக்கடி வேலையை சரத்குமார் "ஜக்குபாய்" படத்தில் ஆரம்பித்தார்... கேப்டன் தொடர்கிறார்...

மஞ்சள் ஜட்டி said...

கோபி...நன்றி...வேலைப்பளுவின் காரணமாக..கமெண்ட் எழுத நேரம் கிடைப்பதில்லை..ஆயினும், இரண்டு நாளுக்கு ஒரு முறை படித்து விடுவேன்... ஒரு பின் குறிப்பு...கேப்டனுக்கும் மஞ்சள் ஜட்டிக்கும் (நான் இல்ல, ஒரிஜினல் மஞ்ச கலர் ஜட்டிய சொல்லுறேன்) ஒரு பெரிய தொடர்பு உண்டு...திரையுலக நிருபர்கள் இதை அறிவார்கள்...:))

R.Gopi said...

//மஞ்சள் ஜட்டி said...
கோபி...நன்றி...வேலைப்பளுவின் காரணமாக..கமெண்ட் எழுத நேரம் கிடைப்பதில்லை..ஆயினும், இரண்டு நாளுக்கு ஒரு முறை படித்து விடுவேன்... ஒரு பின் குறிப்பு...கேப்டனுக்கும் மஞ்சள் ஜட்டிக்கும் (நான் இல்ல, ஒரிஜினல் மஞ்ச கலர் ஜட்டிய சொல்லுறேன்) ஒரு பெரிய தொடர்பு உண்டு...திரையுலக நிருபர்கள் இதை அறிவார்கள்...:))//

***********

வாங்க தலைவா...

//கேப்டனுக்கும், மஞ்சள் ஜட்டிக்கும் நெருங்கிய தொடர்பு...//

அது சிவப்பு ஜட்டின்னு கூட சொன்னாங்க கொஞ்சம் பேரு... கேப்டனும், நீலாம்பரியும் ஹோட்டல் ரூம்ல, இவர் துரத்த, அவர் எஸ்கேப் ஆக, இப்படியே போன அந்த ஓடிப்பிடிக்கற விளையாட்டு கடைசியில அப்பா, அம்மா விளையாட்டுல போய் முடிஞ்சதா கேள்விப்பட்டு இருக்கேன்...

கேப்டன் ஆடின ஆட்டத்திலயே மிகப்பெரிய டெர்ரர் எபிசோட் அது தானே!!...

நாம ரெண்டு பேரும் சேர்ந்து நாட்டுக்கு இந்த அரிய தகவலை தந்திருக்கோம்.!

மஞ்சள் ஜட்டி said...

அது சிவப்பு ஜட்டின்னு கூட சொன்னாங்க கொஞ்சம் பேரு... கேப்டனும், நீலாம்பரியும் ஹோட்டல் ரூம்ல, இவர் துரத்த, அவர் எஸ்கேப் ஆக, இப்படியே போன அந்த ஓடிப்பிடிக்கற விளையாட்டு கடைசியில அப்பா, அம்மா விளையாட்டுல போய் முடிஞ்சதா கேள்விப்பட்டு இருக்கேன்...

கேப்டன் ஆடின ஆட்டத்திலயே மிகப்பெரிய டெர்ரர் எபிசோட் அது தானே!!...

கோபி...அது கன்பார்மா மஞ்ச ஜட்டி தான்....ஓட்டல் ல இல்ல..சூட்டிங் மேக்-அப் அறையில...ஒரு பத்து வருசத்துக்கு முன் நடந்தது....கேப்டன் சாதாரண ஆளு இல்ல...

Filmics said...

super movie very very very super.

Movie photo
Movie gallery
Movie photos

மாயவரத்தான் said...

ஏற்கனவே வில்லு, ஜக்குபாய் போன்ற மாபெரும் காவியங்களில் தாய்லாந்து நாட்டு கொடி பறக்க அவற்றை ஆஸ்திரேலியா, ஐரோப்பா என்றெல்லாம் ’கதை’ விடவில்லையா? இவர் அதையே பின்பற்றியிருக்கிறார். அம்புட்டு தான்!

Unknown said...

Very good review. Expecting next review about Manmadhan Ambu.

ravinat said...

அருமையான நகைச்சுவை. விமர்சகருக்கு பாராட்டுதல்கள்.

இப்படி சிரிச்சு ரொம்ப நாளாச்சு!

ரவி நடராஜன்

gsuriyan said...

ungal porumai'ya parattugiren. Nice review, had a good laugh reading it

Anonymous said...

மின்சாரம் பற்றி அவர் அடிக்கும் கமெண்ட் கூட Taken படத்தில் வரும். மிக நல்ல விமர்சனம். இதைப் படித்து விட்டுப் படம் பார்த்தால் தூளாக இருக்கும். ஆனால் கேப்டன் ஆதரவாளர்கள் மொத்துவார்களோ?

Unknown said...

Taken படத்தை இரண்டு முறை பார்க்க நேரிட்டதாலோ என்னவோ, விருத்தகிரி பார்க்கும்போது மனம் ஒட்டவில்லை. சீனுக்கு, சீன் Taken படத்தை காப்பியடிச்ச விஜய்காந்த், அதே படத்தின் பின்னணி இசை மற்றும் கேமரா ஆங்கிள் பின்பற்றி இருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்.

இதே படத்திற்கான கேபிள் சங்கரின் திரைவிமர்சனம் படித்தேன், கவர் வாங்கிட்டார் போல, உங்கள் விமர்சனம் உண்மையாலுமே மனம் கவர்ந்தது.

http://www.youtube.com/watch?v=8Vs5S1-yZWA

Unknown said...

Taken படத்தை இரண்டு முறை பார்க்க நேரிட்டதாலோ என்னவோ, விருத்தகிரி பார்க்கும்போது மனம் ஒட்டவில்லை. சீனுக்கு, சீன் Taken படத்தை காப்பியடிச்ச விஜய்காந்த், அதே படத்தின் பின்னணி இசை மற்றும் கேமரா ஆங்கிள் பின்பற்றி இருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்.

இதே படத்திற்கான கேபிள் சங்கரின் திரைவிமர்சனம் படித்தேன், கவர் வாங்கிட்டார் போல, உங்கள் விமர்சனம் உண்மையாலுமே மனம் கவர்ந்தது.

http://www.youtube.com/watch?v=8Vs5S1-yZWA