பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 08, 2010

சாமி ஒரு அரசியல் சாரு நிவேதிதா - அரவிந்தன் நீலகண்டன்

திருமலை,

ஹரன் பிரசன்னா உளறவில்லை. அவர் இந்த விஷயத்தில் காமெடி செய்யவும் இல்லை. சுப்ரமணியம் சாமி ஒரு அரசியல் புரோக்கர். சர்வதேச அரசியல் தரகர். ஆதாயம் இல்லாமல் சுப்பிரமணியசாமி வழக்கு போட மாட்டார். ஆதாரம் இரண்டாம் பட்சம் தான். எனக்கு சுப்பிரமணிய சாமி குறித்து சில முக்கிய கேள்விகள் இருக்கின்றன. சு.சாமியிடம் பேச ஹரன் பிரசன்னாவுக்கு ஒர் முக்கியமான தகுதி இருக்கிறது. நேர்மை. ஆனால் சுசாவுக்கு அது இருக்கிறதா என்பது கேள்விக்குறி. ப்ராங்க்ய்ஸ் கோத்தே எழுதிய நூலிலிருந்து எவ்வித நாணமும் இல்லாமல் பிளியாகரைஸ் செய்தவர் சுசா. தனது நூலில் இந்தியா சீனாவிடம் பணிந்து போக வேண்டும் என்று எழுதி அதனை இந்து இயக்கங்கள் மூலம் வெளியிடத்தயங்காதவர். இதெல்லாம் அவரின் பழைய நிலைபாடு அல்ல. அவர் திடீரென ஹிந்துத்துவத்தை கண்டுபிடித்த பிறகு எடுத்த நிலைபாடுகள். இதோ ஒரு சாம்பிள்:
பயங்கரவாதத்தை எதிர்க்கவும் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிரான அபாயங்களை எதிர்கொள்ளவும் நாம் சீனாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நாட்டுடனான நம் எதிர்ப்பு நம் படைகளை வடக்கே கட்டிப் போட்டு தெற்கே சமுத்திரத்தை நோக்கி நம் பார்வையை செல்லவிடாமல் செய்துவிட்டது. அங்கே தான் நம் நாடு பலவீனமாக இருக்கிறது. எனவே சீனாவுடனான நம் உறவுகளை மேம்படுத்துவதே நம் ஆக முக்கிய கவனிப்பை பெறும் விஷயமாக இருக்கவேண்டும். எனவே பழைய சரவ்தேச உடன்படிக்கைகளை எல்லாம் பற்றி கவலைப்படாமல் நம் பாதுகாப்பை மட்டும் கணக்கில் கொண்டு நாம் நாம் சீன-இந்திய எல்லை பிரச்சனையை பரஸ்பர சலுகைகள் மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் முடிக்க வேண்டும். இத்தகைய நெகிழ்ச்சித் தன்மைதான் சீன-இந்திய உறவில் யதார்த்த அணுகுமுறையாக இருக்க முடியும். சீனாவின் நிலைபாடுகள் எல்லை பிரச்சனையில் ஆதாரமில்லாதவையாக இருக்கலாம். ஆனால் நமது எல்லையை நாம் வரையறை செய்திருப்பது போலியான பிரிட்டிஷ் தாஸ்தாவேஜுக்களின் அடிப்படையில்தான். எனவே இருநாடுகளும் வரலாற்றின் கைதிகளாக இருக்கக் கூடாது,. ...நெகிழ்ச்சித்தன்மையே சீன உறவுகளில் அடிநாதமாக அமையவேண்டும்." (பக்கம் 104, Hindus Under Siege: The Way Out ஹர் ஆனந்த் பப்ளிகேஷன்ஸ் 2005)

இப்படி ஒரு கம்யூனிஸ்ட் எழுதினால் என்ன சொல்லுவோம். தேசத்துரோகி செருப்பால் அடி என்று சொல்லமாட்டோமா? இதற்கு முந்தைய பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி சொல்கிறார் இந்தியாவின் பயங்கரவாத பிரச்சனையின் ஆணிவேரே ஐ.எஸ்.ஐ-எல்டிடிஈ தானாம். எனவே இதனை உடைக்க இந்தியா நேரடியாக பாகிஸ்தானிடம் பேசவேண்டுமாம், அமெரிக்காவை "mobilize" செய்ய வேண்டுமாம் அப்புறம்..."most of all applying to China for help" 1962 இல் என்ன நடந்ததாம் தெரியுமா? "after an incompetent attempt by Nehru to recover the area ("I have asked the army to throw out China" Nehru had said pompously) the Chinese demonstrated how determined they were to keep Akasi Chin. Thus of the total original area of Kashmir today India, Pakistan and China have a third each of the area under their respective control" (பக்.109)

பொக்கரானை குறித்து சுப்பிரமணியன் சுவாமி சொன்னதை கேட்டால் திருமலையின் இருதயக்கமலம் ஆயிரம் இதழ்கள் கொண்டு விரிந்து மகிழ்ந்திருக்கும். பொக்கரானில் வாஜ்பாய் அரசாங்கம் அணுகுண்டு பரிசோதனை செய்த செய்தியை கேட்டு தேசம் மகிழ்ந்ததே அது "raw tribal euphoria" (பக். .114) மேலும் "India is going for the Bomb just as the world experience was discounting its utility" (பக்.115) இறுதியாக பொகரான் அணு குண்டு வெடிப்பு சீனாவை ஆத்திரப் படுத்தும் என்பதால் (இதனை பல நுணுக்கமான வாதங்கள் மூலம் சொல்லுகிறார்: நாம் வறுமையான நாடு நம்மால் சீனாவின் மிஸைல் பலத்துக்கு ஈடு கொடுப்பது சாத்தியமா? சீன-பாகிஸ்தான் உறவு பூச்சாண்டி இத்யாதி) அது 2010 வரை தள்ளி வைத்திருக்கவேண்டிய விஷயம் என்கிறார் (பக்.118)

எல்லாவற்றுக்கும் மேலாக ஹரன் பிரசன்னா எழுதிய கவிதைகளில் ஒரு தழுவல் - காப்பியடித்த கவிதையை காட்டுங்கள் திருமலை. நான் தூக்குப் போட்டுக்கொள்கிறேன். உங்கள் பொருளாதார கணக்கியல் மேதை நவீன சாணக்கியன் யோக்கியதை எப்படி இருக்கிறது தெரியுமா?

"...To the Aryans are attributed Sanskrit and the Vedas, the Vedic or Hindu religious spiritual texts, as well as a host of subsequent writings,the Upanishads, the Mahabharata, teh Ramayana etc.

By this 'Aryan' theory, the British showed on the one hand that Indian civilization was not that ancient and that it was posterior to the cultures which influenced the western world - Mesopotamia, Sumeria or Babylon - and that whatever good things India had developed- Sanskrit literature or even its architrecture had been influenced by the West. Thus, Sanskrit, instead of being the mother of all Indo-European languages, became just a branch of their huge family: thus the religion of Zarathustra is said to have influenced Hinduism, and not vice versa. And on the other hand it divided India and pitted against each other the low caste dark skinned Dravidians and the high caste light-skinned Aryans, a rift which is still enduring. But today, this theory is being challenged by two new discoveries, one archaeological and the other linguistic. Firstly, in the Rig Veda, the Ganges, India's sacred river is only mentioned once, but the mythic Saraswati is praised fifty times. For a long time, the Saraswati was indeed considered a myth, until the American satellite Landstat was able to photograph and map the bed of this magnificent river, which was nearly fourteen kilometres wide and took its source in the Himalayas. Archaeologist Paul-Henri Francfort, who studied the Saraswati region at the beginning of the Nineties, found that the Saraswati had "disappeared", becasue around 2200 BC, an immense drougt reduced the whole region to aridity and famine. "Thus", he writes "most inhabitants moved away from the Saraswati to settle on the banks of the Indus and Sutlej rivers". According to official history, the Vedas were composed around 1500 BC, some even say 1200 BC. Yet the Rig Veda describes India as it was before thegreat drought which dried up the Saraswati, which means in effect that the so called Indus or Harappan civilization was a continuation of the Vedic epoch, which ended approximately when the Saraswato dried up. (பக் 19-20)

மேலே உள்ளது 2005 இல் சுப்பிரமணியசாமி தான் எழுதியதாக Hinduism Under Siege இல் எழுதியது. ஆனால் கீழே உள்ளது ப்ராங்காயிஸ் க்கோதே எழுதியது: A Western journalist on India: the ferengi's columns அதே ஹர் ஆனந்த் பபளிகேஷன்ஸ்s, ஆண்டு 2002:

To the Aryans are attributed Sanskrit and the Vedas, the Vedic or Hindu religious spiritual texts, as well as a host of subsequent writings,the Upanishads, the Mahabharata, teh Ramayana etc. This was indeed a masterly stroke on the part of the British thanks to the Aryan theory, they showed on the one hand that Indian civilization was not that ancient and that it was posterior to the cultures which influenced the western world - Mesopotamia, Sumeria or Babylon - and that whatever good things India had developed- Sanskrit literature or even its architrecture had been influenced by the West. Thus, Sanskrit, instead of being the mother of all Indo-European languages, became just a branch of their huge family: thus the religion of Zarathustra is said to have influenced Hinduism, and not vice versa. And on the other hand it divided India and pitted against each other the low caste dark skinned Dravidians and the high caste light-skinned Aryans, a rift which is still enduring. But today, this theory is being challenged by two new discoveries, one archaeological and the other linguistic. Firstly, in the Rig Veda, the Ganges, India's sacred river is only mentioned once, but the mythic Saraswati is praised fifty times. For a long time, the Saraswati was indeed considered a myth, until the American satellite Landstat was able to photograph and map the bed of this magnificent river, which was nearly fourteen kilometres wide and took its source in the Himalayas. Archaeologist Paul-Henri Francfort, who studied the Saraswati region at the beginning of the Nineties, found that the Saraswati had "disappeared", becasue around 2200 BC, an immense drouhgt reduced the whole region to aridity and famine. "Thus", he writes "most inhabitants moved away from the Saraswati to settle on the banks of the Indus and Sutlej rivers". According to official history, the Vedas were composed around 1500 BC, some even say 1200 BC. Yet the Rig Veda describes India as it was before the great drought which dried up the Saraswati, which means in effect that the so called Indus or Harappan civilization was a continuation of the Vedic epoch, which ended approximately when the Saraswato dried up. (பக். 116)


இதனை நீங்கள் எப்படி விளக்குவீர்கள் திருமலை? சோனியாவை டீ பார்ட்டி மூலம் பிரதமராக்க முயற்சித்தாரே சுசா அப்போது அவருக்கு சோனியாவுக்கு ராஜீவ் கொலையுடன் தொடர்புண்டு என்று தெரியுமா தெரியாதா? சோனியாவின் தந்தை கேஜிபி உளவாளியாக இருக்கலாம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல அது ஒரு ஊகம் ஊகம் கூட இல்லை வதந்தி. இதே சுசா முன்னர் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு கூட ராஜிவ் கொலையில் தொடர்பு உண்டு என சொல்லியிருக்கிறார். சுசா நம்ப முடியாத மனிதர், 2G ஊழலில் மனிதர் நாட்டுக்கு நன்மை செய்திருக்கிறார். உண்மைதான் நன்றிகள். அதற்காக இந்த சர்வதேச அரசியல் புரோக்கரை சாணக்கியன் தேசபக்தன் என்றெல்லாம் ஹீரோ பிம்பம் கொடுப்பது தேவையில்லாதது. அடிப்படை நேர்மை இல்லாத மனிதர் சுசா. ஒரு அரசியல் சாரு நிவேதிதா.

- அரவிந்தன் நீலகண்டன்
இந்த பதிவிற்கு தேவையில்லை..:-)


69 Comments:

(-!-) said...

பிஜேபியில் உள்பூசல் என்றார்கள். இங்கேயுமா? :>

(-!-) said...

(டைட்டில்) ஒரே கல்லில் ரெண்டு மாங்கா!

களிமிகு கணபதி said...

அரவிந்தன்,

சுசா அடித்த காப்பி மிக மோசமான செயல். சந்தேகமே இல்லை.

அவர் சீனாவை ரொம்ப நல்லவன்னு சொல்வதும் நம்பும்படியாக இல்லைதான்.

ஆனால், சோனியாவின் வாப்பா கேஜிபி ஏஜெண்ட் என்று அவர் சொல்வதை எந்த அடிப்படையில் வெறும் வதந்தி என்று சொல்லுகிறீர்கள்?

சுசா இந்த விஷயத்தில் சொல்வது உண்மை என்றுதான் தோன்றுகிறது.

1. பாஸிஸ்ட்டுகளின் (அல்லது நாட்சிக்களின்) படையில் சேர்ந்து, கம்யூனிஸ்ட்டுகளால் சிறைப்பட்ட சோனியாவின் தந்தை வெகு விரைவில் விடுதலை செய்யப்பட்டதை சுசா சொல்லுகிறார். வேறு எவருக்கும் இந்த சலுகை வழங்கப்படவில்லை என்றும் சுசா குறிப்பிடுகிறார்.

இது பொய்யா?

2. தனது மகள்கள் அனைவருக்கும் ருஷ்ய பெயரை சோனியாவின் தந்தை வைத்ததற்குக் காரணம் என்ன?

3. டெபோனைராக இருந்த (அதாவது கூட்டிக் கொடுப்பவனாக இருந்த) ஒரு ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட் நடத்திவந்த ஏஜன்சியில் சோனியா வேலை பார்த்ததாக சுசா சொல்லுகிறார். அது என்ன வேலை என்பதை படிப்பவர்களின் யூகத்திற்கு அவர் விட்டுவிடுகிறார்.

அப்படி வேலை பார்க்கும்போது சோனியா பழகிய ஆட்களில் ராஜிவும், ராஜேஷ் பைலட்டும் உண்டு என்கிறார் அவர்.

ராஜீவ் திருமணத்திற்குப் பின், சோனியாவும், ராஜேஷ் பைலட்டும் நள்ளிரவில் தனியாக ஊர் சுற்றி விட்டு வரும்போது தில்லி ஐ.ஐ.டி முன்பாக ஆக்ஸிடெண்ட் ஆனதை அவர் வெளிப்படையாகச் சொல்லுகிறார்.

ராஜேஷ் பைலட்டும், ராஜீவ் காந்தியும் ஏன் இயற்கையான மரணத்தை அடையவில்லை என்பது பற்றி எல்லாம் அவர் விவரிக்கவில்லை.

கேஜிபியின் திறந்துவிடப்பட்ட இணையதளத்திலேயே சோனியா ஒரு கேஜிபி ஏஜண்ட் என்று இருப்பதாக அவர் சொல்லுகிறார்.

இதெல்லாம் சுசாவின் இணைய தளத்திலேயே இருக்கின்றன. அதாவது வெளிப்படையாகவே சுசா இந்த விஷயங்களைப் பேசியும் எழுதியும் வருகிறார்.

கணவரைக் கொன்றவர்கள் ஆளும் நாடு இது என்று சுசா ட்வீட் செய்கிறார்.

ஆர்க்குட்டில் தன்னைப் பற்றி சாதாரண விமர்சனம் செய்த ஒரு இளைஞரைக்கூட கூகிள் துணையுடன் கண்டறிந்து சிறையில் தள்ளும் சோனியா, சுசாமீது விரலைக்கூட நீட்டாமல் இருப்பது ஏன்?

சுசா சோனியா பற்றி சொல்வதெல்லாம் இங்கு கிடைக்கின்றன: http://www.janataparty.org/sonia.html

Unknown said...

நான் தான் முதல்ல

Unknown said...

பதிவ அப்புறமா படிக்கிறேன்

Unknown said...

அருமை அரவிந்தன் நீலகண்டன். கலக்கிட்டீங்க

Anonymous said...

எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு - திருக்குறள்

Anonymous said...

ஐயன்மீர்...

சுப்ரமண்ய சுவாமியால் இந்த நாட்டுக்கு இதுவரை விளைந்த தீமை என்ன என்பதை விளக்குவீராயின் நன்று. பலமான எதிரிகள் நம்மைச் சூழ்ந்துள்ள நிலையில், சம பலம் வாய்ந்த அண்டை நாட்டோடு நட்புறவோடு இருக்கச் சொல்வது எவ்விதத்தில் தவறாகும்? விளக்க இயலுமா?

Anonymous said...

what swami has said about the relation with china has nothing harm in it. In fact, if you have followed other foreign policy experts in india many of them profess the same thing.

This author is just a novice i think and he wants to say something against some one who is crusading, to save some black sheep from whom i dont know how much he has got.

This idiot also has written samy puts case without evidence. May i ask him has samy lost any case because of the lack of evidence? or has sami lost any case so far?

பொன் மாலை பொழுது said...

// அடிப்படை நேர்மை இல்லாத மனிதர் சுசா. ஒரு அரசியல் சாரு நிவேதிதா.//

முற்றிலும் உண்மை. உண்மை,உண்மை.
இன்னமும் நமக்கு "புரிதல் " குறைவே!

கானகம் said...

நல்ல கட்டுரை. சுப்ரமணிய சாமியை தோலுரிக்கிறது. ஆனால் இதை தனி மடலில் பேசிக்கொண்டு, சுப்ரமணிய சாமியை இன்னும் நன்றாய் தோலுரித்து முழுமையாய் பதிவிட்டிருக்கலாம். இப்போது தெரிவது சண்டை மட்டுமே.

ஜெயக்குமார்

Kanaiyaazhi said...

I agree. Mr S Swamy has done good on regards to 2G scam case in addition to other persons. However, he is not a person with good qualities. A person who cant be trusted at any times (which may to be true to many politicians today)

I see him as a person with more self gain.

Thanks!

Anonymous said...

அரவிந்தன்

சு சாமிக்கு என்னை வக்கீல் என்று சொன்ன அதே ஹரன் பிரசன்னா ஒரு ப்ளாகில் போட வேண்டிய பதிலுக்கே வக்கீல் வைத்திருக்கிறார் :)) ஹ பி சொல்லாமலேயே கூட நீங்கள் அவருக்காக ஆஜராகி இருக்கலாம் எப்படி இருந்தாலும் சரியே.

முதலில் நான் ஹ பி யைக் கண்டித்தது அவர் சு சுவாமியை காமெடியன் என்று சொன்னதற்காக. அதே பதிலில் நான் மிகத் தெளிவாக அவரது அரசியல் நிலைபாடுகளை ஆதாரத்துடன் விமர்சியுங்கள் அதை விட்டு விட்டு கோமாளி என்று சொல்லாதீர்கள் என்றும் அதைச் சொல்ல அவருக்கு சட்டத்திலும் இன்னும் பல துறைகளிலும் சு சுவாமியிடம் உள்ள பாண்டித்யம் துளியும் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறேன். உதாரணத்திற்கு நான் மன்மோகனை ஊழல்வாதி என்று விமர்சிக்கலாம், சோனியாவின் எடுபிடி என்று சொல்லலாம், பலவீனமான பிரதமர் என்று சொல்லலாம் ஆனால் அவருக்குப் பொருளாதாரம் தெரியாது என்று சொல்ல மாட்டேன். அவர் பொருளாதாரம் பற்றி ஒரு தியரி சொன்னால் அதை சரி தவறு என்று நான் எனக்கு முழுமையாகத் தெரிந்தால் சொல்லலாமே தவிர அவருக்குப் பொருளாதாரமே தெரியாது, ஒரு கோமாளி, ஒரு தற்குறி என்று நான் சொல்ல மாட்டேன். அதே போலவே சுவாமி ஒரு லீகல் பாய்ண்ட்டை ஆதாரம் வைத்திருக்கிறேன் என்று சொல்லியே சொல்லும் பொழுது அதில் உள்ள சட்ட குறைகளை ஹ பி க்கு தெரிந்தால் சொல்லியிருக்கலாம் தெரியாவிட்டால் சும்மா இருந்திருக்கலாம் ஆனால் தேவையின்றி அவரைக் கோமாளி என்று சொன்னதைத்தான் நான் கண்டித்திருந்தேன். அதைப் படிக்காமல் ஏதோதோ சொல்லியிருக்கிறீர்கள்.

சோனியா விஷயத்தில் சுவாமி தன்னிடம் ஆதாரம் உள்ளது என்கிறார். நீங்கள் ஊகம் என்கிறீர்கள். ஒரு வேளை அவரை விட உங்களுக்கு இந்த கேஸில் அதிக விஷயம் தெரியும் போலிருக்கிறது. உங்களை விட ஹ பி க்கு அதிகம் தெரிந்திருப்பதினால்தான் அவரைக் கோமாளி என்றிருக்கிறார். ஆக ரெண்டு சோனியா தாசர்களும் கூடி ஒரு வேலை செய்யுங்கள் ஒரு ஊகத்தின் அடிப்படையில் சுவாமி உங்களது இத்தாலிய அன்னைக்கு மானக்கேடு விளைவித்து விட்டார் என்று சொல்லி கேஸ் போடுங்கள் அல்லது காங்கிரஸ்காரர்களிடம் சொல்லிக் கேஸ் போடச் சொல்லுங்கள். சுவாமி இதை பல வருடங்களாகச் சொல்லி வருகிறார் இன்று வரை ஒருவர் கூட அவர் மீது கேஸ் போடவில்லை. நீங்களாவது போடுங்களேன் முதலில் உங்களுக்கு இத்தாலிய அன்னையின் அருள் கிடைப்பதாகுக. ஏற்கனவே உங்களைப் போல அமெரிக்காவில் சிலர் வெகுண்டு எழுந்து இந்தக் கோமாளி போன்ற இன்னொரு கோமாளி மீது கேஸ் போட்டார்கள் உடனே அன்னை அருள் வந்து அவர்களைத் தடுத்தாட்கொண்டு கேசை வாபஸ் வாங்கச் சொல்லி விட்டார். ஊகம்தானே ஏன் கேஸ் போட மறுக்கிறீர்கள் பிடிவாதமாக போட்ட கேசை கூட வாபஸ் வாங்கச் சொல்லுகிறீர்கள் என்பதே என் கேள்வி. டீ பார்ட்டி நடத்திய பொழுது இந்த விபரம் தெரியாது என்று சுவாமி சொல்லுகிறார். அதை அவர் விளக்கமாக ஏற்றுக் கொள்கிறேன். மற்றபடி அவர் டீ பார்ட்டி நடத்தி ஆட்சியைக் கவிழ்த்ததை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன் அத்துடன் எனக்கு ஒப்புதலும் இல்லை.

மீத விபரங்களுக்கு ஒவ்வொன்றாகப் பதில் தருகிறேன், காத்திருங்கள்

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

முதலில் சீனா குறித்து. அது சுவாமியின் கருத்து. சீனா பலம் வாய்ந்த ஒரு நாடு அமெரிக்கா ஒபாமாவே சீனாவைக் கண்டு ஒண்ணுக்குப் போகும் நிலையில்தான் இன்று இருக்கிறார். அப்படி இருக்கும் நிலையில ஒரு சில விஷயங்களில் அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நடப்பதில் தவறில்லை என்கிறார். ஆனால் அதே நேரத்தில் சீனாவின் அத்து மீறல்களை இந்தியா ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் கூறுகிறார். அது அவருடைய அரசியல் நிலைப்பாடு. அருணாச்சல் பிரதேச எம் பி கூட இதே விதமாகச் சொல்லியிருக்கிறார். மற்றபடி மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவோ, திபெத்தில் பாலும் தேனும் ஓடுகிறது என்று இந்து ராம் போல இவர் பேசவில்லை. இவரது முழுப் பேச்சும் யூட்யூபில் http://www.youtube.com/results?search_query=giitpro+swamy&aq=f

அவரது நிலைப்பாட்டை சரி தவறு என்று நாம் வாதிடலாமே அன்றி அவரை கோமாளி என்று சொல்வதில் காழ்ப்பு மட்டுமே தென்படும்

அவர் சீனா விஷயத்தில் சொல்லும் ஒரு சில விஷயங்களில் உண்மை உள்ளது. இன்று மானசரோவருக்கு இந்துக்கள் சொல்ல அனுமதியைக் கூட இந்து இயக்கங்கள் வாங்கிக் கொடுக்கவில்லை, அரசாங்கம் வாங்கிக் கொடுக்கவில்லை தனியாளான சுவாமிதான் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்த அனுபவத்தில் சீனாவின் எதிர்பார்ப்புகளை அவர்களை எப்படி அணுகுவது என்று சில ஆலோசனைகளைச் சொல்லுகிறார். மற்றபடி இந்தியாவைத் தாரை வார்க்கச் சொல்லவில்லை. இந்த நிலைப்பாட்டை அவர் சொல்லுவதினால் அவர் கோமாளி என்று சொல்வீர்களானால் உங்களைத்தான் இதைப் படிக்கும் எவரும் கோமாளி என்று நினைப்பார்கள்

Anonymous said...

புத்தகத்தில் ஒரு பாராவைக் காப்பி அடித்திருக்கிறார் என்று சொல்லுகிறீர்கள். இருவருமே ஒரே கருத்தைச் சொல்லுகிறார்கள். யார் முன்னால் யார் பின்னால் சொன்னது என்பது அவரிடம்தான் கேட்க்க வேண்டும். அப்படியானால் புத்தகத்தின் பிற பக்கங்களை எங்கிருந்து காப்பியடித்தர் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். அப்படி காப்பி அடித்திருந்தார் என்றால் அவரைக் காப்பியடித்த குற்றத்தைச் செய்தவர் என்று கருதுவேனே அன்றி கோமாளி என்று சொல்ல மாட்டேன். இதே போல ஒரு பாரா, ஒரு கருத்து காப்பி அடிக்கப் பட்டது என்ற குற்றசாட்டு இல்லாத எழுத்தாளர்களே இன்று இல்லை. அதற்கான விளக்கத்தை அவர்களிடம் கேட்டு பதிலைப் பெறலாம். இதனால் மட்டுமே அவரது ஒட்டு மொத்த அறிவின் மீது எந்தவித சந்தேகமும் ஏற்பட வழியில்லை. கோர்ட்டில் அவருக்கு யாரும் வாய்ஸ் கொடுப்பதில்லை. அவரது வாதத்திறமைகளையும், பிரசன்ஸ் ஆஃப் மைண்டையும் நேரில் கண்டிருக்கிறேன் அவருக்கு யாரும் ப்ராம்ப்டர்கள் இருந்து நான் பார்த்ததில்லை. இதை வைத்து அவர் எழுதிய அனைத்து நூல்களுமே காப்பி என்ற முடிவுக்கு வர இயலாது. ஒரு கோட் எடுத்திருந்தால் அதற்கு அவர் அக்னாலட்ஜ் செய்திருக்க வேண்டும். அல்லது அடுத்த பதிப்பிலாவது அதைச் செய்யச் சொல்லலாம். இது ஒரு பெரிய குற்றசாட்டாக எனக்குத் தெரியவில்லை.

Anonymous said...

அவரது பழைய நிலைப்பாடுகள் பலவும் தவறு என்று இப்பொழுது ஒப்புக் கொள்கிறார். அவருக்கும் வாஜ்பாயிக்கும் இருந்த தனிப்பட்ட விரோதங்களினால் ஒரு சில நிலைப்பாடுகளை அவர் முன்பு எடுத்திருக்கிறார் அத்துடன் எனக்கு உடன்பாடுகள் கிடையாது. நான் அவருக்கு வக்கீலோ அவருடன் 100% உடன் படுபவனோ கிடையாது நான் என்னுடன் கூட 100% உடன் படுவது கிடையாது. ஆகவே பொக்ரான் நிலைப்பாட்டில் அவர் சொல்வது தவறு. இன்றைய அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் அவரது நிலைப்பாட்டை மட்டும் கருத்தில் கொண்டு பேசவும். நிச்சயமாக அவரது தற்பொழுதைய கருத்துக்கள் கோமாளியினுடையது அல்ல. முதலில் 123 பற்றி பேசக் கூடிய விபரம் தெரிந்த விரல் விட்டு எண்ணக் கூடிய அரசியல்வாதிகளில் அவர் ஒருவர்.

Anonymous said...

நீங்களும் சரி பிற இந்து இயக்கங்களும் சரி எல்லோருமே வெறும் இணைய வெட்டி சிப்பாய்களாக மட்டுமே செயல் பட்டு வரும் நேரத்தில் நம் ஜனநாயகத்தில் கொஞ்சமாவது செயல் படும் ஒரு கருவியைக் கொண்டு அவர் பல விஷயங்களைச் சாதித்துள்ளார். பா ஜ க கட்சியும் அரசும் செய்யாத விஷயங்களையும், ஆர் எஸ் எஸ் செய்யாத சாதனைகளையும் நிச்சயமாக அவர் சாதித்திருக்கிறார். உதாரணத்திற்கு சில:

1. சேது பாலத்திற்கு தடை வாங்கியது
2. இஸ்லாமிய வங்கிக்கு தடை வாங்கியது
3. மானசரோவர் செல்ல சீன அரசிடம் அனுமதி பெற்றது
4. திருப்பதி கோவிலுக்குள் தங்க கவசம் பொருத்தும் முயற்சியைத் தடுத்தது
5. மேல் விஷாரத்தில் கொடுமைப் படுத்தப் பட்ட இந்துக்களின் நிலையை சுப்ரீம் கோர்ட்டுக்குக் கொண்டு சென்று அவர்களுக்கு தனி பஞ்சாயத்து பெற்றது
6. அரசாங்கத்தின் பிடியில் இருந்து இந்துக் கோவில்களை மீட்க்க வழக்கு போட்டிருப்பது
7. எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் இருக்கும் குறைபாடுகளை அதை வைத்து செய்யப் பட்டிருக்கக் கூடிய தேர்தல் தில்லுமுல்லுகளை எதிர்த்து வழக்காடிக் கொண்டிருப்பது
8. தமிழ் நாடு முழுவதும் இந்துக்கள் மைனாரிட்டிகளாக இருக்கும் பஞ்சாயத்துக்களில் அவர்களுக்கு நீதி பெற்றுத் தருவது
9. சிதம்பரம் கோவிலில் அரசாங்கத்தின் தலையீட்டை தடுத்த போட்டிருக்கும் கேஸ்
10. அரசு சார்பில் நடத்தப் படும் பந்துக்களை எதிர்த்து கருணாநிதியை அலறிக் கொண்டு வாபஸ் வாங்க வைத்தது
11. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு

இன்னும் இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம் இதையெல்லாம் செய்திருக்க வேண்டிய நீங்களும், பா ஜ க கட்சியும் அரசும் ஆர் எஸ் ஸும் சும்மா இருந்து விட்டு, இப்பொழுது இதையெல்லாம் தனி மனிதனாக இந்து நலன்களுக்காக சாதித்திருக்கும் ஒருவரை பாராட்டா விட்டாலும் கூட நன்றி கெட்டத்தனமாக அவதூறு பேசித் திரிகிறீர்கள். தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான் என்பதற்கு உதாரணமாக. அவரது பல முந்தைய அரசியல் நிலைப்பாடுகள் தவறாக இருக்கலாம் அவர் ஏதேனும் உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஆதாயம் காரணமாக இதைச் செய்திருக்கலாம் ஆனால் நிச்சயமாக இத்தனை விஷயங்களிலும் போராடி நியாயம் பெற்றது அவர் ஒருவர் மட்டுமே. நான் இவை போன்ற விஷயங்களில் உங்களைப் போன்ற பி ஜே பி யைப் போன்ற திண்ணைப் பேச்சு வெண்ணெய் வெட்டி சிப்பாய்களை நம்புவதற்கு பதிலாக சுவாமியை நம்புகிறேன் மேற்கூறிய அவரது சேவைகளுக்காக பாராட்டுகிறேன் நன்றி செலுத்துகிறேன். நீங்கள் தாராளமாக அவ்ரைக் கோமாளி என்று சொல்லிக் கொண்டு திரியலாம். ராமர் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டு ஒரு பாலத்தைக் காப்பாற்ற வக்கில்லாத பி ஜே பிக்கும் பிற இந்து இயக்கங்களுக்கும் உங்களுக்கும் சுவாமியைக் குறை சொல்ல எந்த விதத் தகுதியும் அருகதையும் யோக்யதையும் கிடையாது. முதலில் சுவாமியின் மேற்கண்ட சாதனைகள் போல ஒன்றையாவது செயலில் செய்து காட்டி விட்டு அப்புறம் அவர் மேல் கல் எறிய வாருங்கள்.

மீண்டும் சொல்கிறேன் அவரது அனைத்து செயல்பாடுகளுடனும் எனக்கு உடன்பாடு இல்லை. மேலே கூறிய விஷயங்களுக்காக ஒவ்வொரு இந்துவும் அவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறான் என்பதை மட்டும் தயங்காமல் கூறுவேன்.

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

அன்புள்ள திருமலை,

இப்போதைக்கு மருள் வந்தவராக ’சாமி’(க்காக) ஆடுவது நீங்களேதான். சோனியாவுக்கு ராஜீவ் கொலை குறித்து தொடர்போ அல்லது அதற்கு முன்னதாகவே அது குறித்த அறிவோ இருந்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு முன்னரே உண்டு. அது ஒரு எண்ணம் மட்டுமே. அதற்கு ஆதாரங்கள் எதுவும் மிக வலுவாக என்னிடம் இல்லை. ரகோத்தமனின் ராஜீவ் கொலை வழக்கு நூலில் ஒவ்வொரு புள்ளியிலும் ராஜீவ் கொலையாளிகளுக்கு மணி சங்கர் ஐயர் முதல் மரகதம் சந்திரசேகர் வரை தொடர்புகள் இருந்திருக்கின்றன என்பது சொல்லப்படுகிறது. இது கொலையாளிகளின் தந்திரமாக இருக்கலாம். அல்லது மேலதிக உள்-விஷயங்களாக இருக்கலாம். ஆனால் ராஜீவ் கொலை விஷயத்தில் சுசா மட்டும் உத்தம புத்திரன் அல்ல.ராஜீவ் கொலை நேரத்தில் புலிகள் தங்கள் இலக்காக திடீரென ராஜீவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த தேர்தலில் ராஜீவ் வலுவான நிலையில் இல்லை. எதனால் புலிகள் ராஜீவை தங்கள் இலக்காக்கினார்கள்?

ராஜீவ் கொலைக்கு பிறகு அக்கொலை குறித்து சுசா எழுதிய நூலில் சோனியாவை புகழ்ந்து பதிவிரதை ரேஞ்சில் எழுதியுள்ளார்.இன்றைக்கு இந்த கண்டுபிடிப்புகள்.

//இருவருமே ஒரே கருத்தைச் சொல்லுகிறார்கள். யார் முன்னால் யார் பின்னால் சொன்னது என்பது அவரிடம்தான் கேட்க்க வேண்டும்.//

அய்யா அது ஒரே கருத்து அல்ல. வார்த்தைக்கு வார்த்தை காப்பி. சுசாவின் புத்தகம் வந்தது 2005 அந்த புத்தகம் வந்தது 2002. இதையும் குறிப்பிட்டிருக்கிறேன். Plagiarism என்பதற்கான பாடப்புத்தக இலக்கணமாக சாமி செயல்பட்டிருக்கிறார். ஆனால் சாமி பக்தி உங்கள் கண்களை மறைக்கிறது என்ன செய்ய?

சீனா விஷயத்தில் இந்தியாவின் எல்லைக்கோரிக்கைகளே போலி பிரிட்டிஷ் தாஸ்தாவேஜுகளின் அடிப்படையிலானவை என்கிற சீன பிரச்சாரத்தை திரும்ப சொல்கிறாரே சாமி! சீனாவில் தேனும்பாலும் ஓடுவதாக சொல்லும் ராம் கூட சொல்ல (விரும்பும்) ஆனால் துணியாத ஒரு பொய்யை எழுதி அதனை ஹிந்து அமைப்புகளாலேயே வெளியிட வைத்து விட்டாரே சாமி. இந்த களங்கத்துக்கு என்ன பதில் திருமலை?

Anonymous said...

அன்புள்ள திருமலை,

இப்போதைக்கு மருள் வந்தவராக ’சாமி’(க்காக) ஆடுவது நீங்களேதான். சோனியாவுக்கு ராஜீவ் கொலை குறித்து தொடர்போ அல்லது அதற்கு முன்னதாகவே அது குறித்த அறிவோ இருந்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு முன்னரே உண்டு. அது ஒரு எண்ணம் மட்டுமே. அதற்கு ஆதாரங்கள் எதுவும் மிக வலுவாக என்னிடம் இல்லை. ரகோத்தமனின் ராஜீவ் கொலை வழக்கு நூலில் ஒவ்வொரு புள்ளியிலும் ராஜீவ் கொலையாளிகளுக்கு மணி சங்கர் ஐயர் முதல் மரகதம் சந்திரசேகர் வரை தொடர்புகள் இருந்திருக்கின்றன என்பது சொல்லப்படுகிறது. இது கொலையாளிகளின் தந்திரமாக இருக்கலாம். அல்லது மேலதிக உள்-விஷயங்களாக இருக்கலாம். ஆனால் ராஜீவ் கொலை விஷயத்தில் சுசா மட்டும் உத்தம புத்திரன் அல்ல.ராஜீவ் கொலை நேரத்தில் புலிகள் தங்கள் இலக்காக திடீரென ராஜீவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த தேர்தலில் ராஜீவ் வலுவான நிலையில் இல்லை. எதனால் புலிகள் ராஜீவை தங்கள் இலக்காக்கினார்கள்?

ராஜீவ் கொலைக்கு பிறகு அக்கொலை குறித்து சுசா எழுதிய நூலில் சோனியாவை புகழ்ந்து பதிவிரதை ரேஞ்சில் எழுதியுள்ளார்.இன்றைக்கு இந்த கண்டுபிடிப்புகள்.

//இருவருமே ஒரே கருத்தைச் சொல்லுகிறார்கள். யார் முன்னால் யார் பின்னால் சொன்னது என்பது அவரிடம்தான் கேட்க்க வேண்டும்.//

அய்யா அது ஒரே கருத்து அல்ல. வார்த்தைக்கு வார்த்தை காப்பி. சுசாவின் புத்தகம் வந்தது 2005 அந்த புத்தகம் வந்தது 2002. இதையும் குறிப்பிட்டிருக்கிறேன். Plagiarism என்பதற்கான பாடப்புத்தக இலக்கணமாக சாமி செயல்பட்டிருக்கிறார். ஆனால் சாமி பக்தி உங்கள் கண்களை மறைக்கிறது என்ன செய்ய?

Anonymous said...

சீனா விஷயத்தில் இந்தியாவின் எல்லைக்கோரிக்கைகளே போலி பிரிட்டிஷ் தாஸ்தாவேஜுகளின் அடிப்படையிலானவை என்கிற சீன பிரச்சாரத்தை திரும்ப சொல்கிறாரே சாமி! சீனாவில் தேனும்பாலும் ஓடுவதாக சொல்லும் ராம் கூட சொல்ல (விரும்பும்) ஆனால் துணியாத ஒரு பொய்யை எழுதி அதனை ஹிந்து அமைப்புகளாலேயே வெளியிட வைத்து விட்டாரே சாமி. இந்த களங்கத்துக்கு என்ன பதில் திருமலை?

-அரவிந்தன் நீலகண்டன்

Anonymous said...

சீனாவிடம் கைலாஷ் சரோவர் விஷயத்தை பேசி அதற்கான உழைப்பை முன்னெடுத்து சென்றவர் அடல் பிகாரி வாஜ்பாய்தான். கேசவ் மிஷ்ராவின் ‘Rapprochement across the Himalayas: emerging India-China relations post cold war period (1947-2003)’ நூலின் 321 ஆம் பக்கத்தை பாருங்கள். ஆனால் இதை தன் சாதனையாக கூச்சமில்லாமல் பீற்றிக்கொள்ள சாமியால் மட்டுமே முடியும். ஏனென்றால் சாமி என்ன சொன்னாலும் மூளைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நம்ப ஒரு பக்தர் கூட்டம் இருக்கிறதே அதனால்தான்.
-அநீ

யோகி said...

சுப்ரமணியசாமி என்ற பெயரில் யாரும் ப்ளாக் எழுதுறாங்களா? அவரை பற்றி பேசுறீங்களா? அந்த ரேஞ்சில் இருக்குது கட்டுரையும் விவாதங்களும்.

Anonymous said...

திருமலை

சுசாமியை வெறுத்து ஒதுக்குங்கள் என்று சொல்லவில்லை. அந்த ஆள் ஒரு அரசியல் சர்வதேச தரகர். கருணாநிதி கும்பலை நமக்கு தெரியும். ஊழல் அதிகாரதுஷ்பிரயோகம், இனவாத அரசியல், குடும்ப ஆட்சி என்று. சுசாமி குறித்து அவரது பின்னால் இயங்கும் சர்வதேச சக்திகள் குறித்து தெரியாது. இந்த விஷயத்தில் சுசாமியும் சோனியாவும் ஒன்றுதான். நாளைக்கே ஸ்ரீ ரங்கம் கோவில் திகவுக்கு போக வேண்டும் என்று கேஸ் போடக்கூடியவர்தான் சாமி. பயன்படுத்துங்கள் நம்பாதீர்கள். மேலும் ஏதோ சுசாமி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மேதை அப்பழுக்கற்ற தேசபக்தர் என்பது போலெல்லாம் பிம்பம் சமைக்காதீர்கள். சுசாமி செய்ததையெல்லாம் ஹிந்து இயக்கங்கள் செய்திருக்கின்றனவா என்றால், அதைவிட அதிகமாகவே செய்திருக்கின்றன.

VELAN said...

இதெல்லாம் இருக்கட்டும் சாரு என்னப்பா பாவம் செஞ்சாரு.

Anonymous said...

அரவிந்தன்

நீங்கள் சொல்லுவது போல அவர் ஒரு சீன ஆதரவாளராகவோ, காப்பி பேஸ்ட் செய்தவராகவோ இருக்கட்டும். இரண்டு குற்றசாட்டுக்களையுமே அவரிடம் கேட்டால் சரியான விளக்கம் அளிப்பார். அவர் நிச்சயமாக அருணாச்சலப் பிரதேசத்தை விட்டுத் தரச் சொல்லவில்லை வேறு விதங்களில் அவர்களைச் சரிக்கட்டலாம் என்கிறார்.

மான்சரோவருக்கு அவர் கேட்டதின் பேரில் அனுமதி வழங்கியதாக சீனப் பிரதமரே சொன்னதாக நினைவு. அப்படி எல்லாம் ஒருவர் பெயர் வாங்கிக் கொண்டு போவதை பி ஜே பி அதிலும் சுவாமியின் பரம வைரியான வாஜ்பாய் விட்டு விட்டிருப்பாரா என்ன?

சோனியா விஷயத்தில் உண்மை தெரிந்த நாளில் இருந்து எதிர்த்துப் போராடுவதாகச் சொல்கிறார். அவரால்தான் சோனியா பிரதமர் ஆக முடியாமல் போனது

பா ஜ கவும், ஆர் எஸ் எஸ் ஸும் செய்திருக்க வேண்டிய வேலைகள் அனைத்தையும் ஒரு தனி மனிதர் செய்திருக்கிறார். முக்கியமாக மேல் விஷாரம், ராமர் பாலம், அரசின் பிடியில் இந்து கோவில், திருப்பதி கேஸ், ஓட்டுப் பதிவு இயந்திரம் மூலம் கோல்மால், இஸ்லாமிய வங்கி, சோனியாவை பிரதமர் பதவிக்கு வரவிடாமல் அப்துல் கலாம் அவர்களிடம் வலுவான காரணத்தைச் சமர்ப்பித்தது இன்னும் ஏராளமான இந்து மதம் சார்பாக பொது நல கேஸ்கள் இவை அனைத்தையும் பா ஜ க செய்திருக்க வேண்டிய வேலைகள் அல்லவா? ஏன் செய்யவில்லை? ஏன் சோனியாவைக் கண்டு பி ஜே பி நடுங்குகிறது? ராடியா டேப் குறித்து வாய் திறக்க மறுக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சுவாமியின் உழைப்பால் நாளைக்கு பயன் படப் போவது பி ஜே பி தானே? அவர் உழைப்பு வேண்டும் ஆனால் அவரை மட்டும் அவமானம் செய்விர்கள்?

இதில் ஒன்றிற்காகவாவது கேஸ் போட்டிருப்பார்களா? அதிலும் ஸ்பெக்ட்ர்ரம் ஊழலும், ஓட்டிங் மிஷின் விவகாரமும் அவர்களது அடிப்படைப் பிரச்சினை அல்லவா? ஏன் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அவர்கள் இந்துக்களுக்காக கட்சி நடத்துகிறார்களா சோனியாவுக்காக கட்சி நடத்துகிறார்களா? துணிந்து பேசிய சுதர்ஷஜியைக் கூட கை விட்டு விட்டவர்களுக்கு சுவாமி பேச என்ன அருகதை இருக்கிறது? அத்தனை இந்து இயக்கங்கள் சார்பிலும் உங்கள் கல்லடிகளையும் சொல்லடிகளையும் வாங்கிக் கொண்டு ஒருவர் தனியாகப் போராடுகிறார், வாழ்த்த பாராட்ட மனமில்லாவிட்டாலும் காப்பி அடிச்சார், பென்சில் திருடினார், கோமாளி காமெடியன் என்று ஏசாமலாவது இருக்கலாம் அல்லவா? ராமர் பேரைச் சொல்லி ஆட்சிக்கு வந்த பி ஜே பி க்கு ராமர் பாலம் விவகாரத்தில் கேஸ் போடக் கூட வக்கில்லாமல் போய் விட்டது. உள்ளூரில் மேல் விஷாரத்தில் இந்துக்கள் பாதிக்கப் பட்ட பொழுது என்ன புடுங்கிக் கொண்டிருந்தன உங்கள் இந்து இயக்கங்கள்? அதுக்கும் இவர் தானே வர வேண்டியிருந்தது? ஊர் ஊராகப் போய் இந்துக்களுக்கு கல்வி உதவி தர மறுக்கும் தி மு க அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் பா ஜ க இது விஷயமாக நீதி மன்றத்தில் செய்தது என்ன? இந்தியாவில் இன்றைக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு மட்டுமே ஏதோ கொஞ்சம் மிச்சம் மீதி பயம் இருக்கிறது அதை ஒருவர் சரியாகப் பயன் படுத்துகிறார். பா ஜ க வின் வேலையைச் செய்து வருகிறார். உபகாரம் இல்லாவிட்டாலும் அப்படிச் செய்பவருக்கு உபத்திரவம் கொடுக்காமலாவது இருங்கள் புண்ணியமாகப் போகட்டும். அவர் செய்த தவறுகளுக்குப் பரிகாரங்கள் என்று நினைத்துக் கொண்டு போங்களேன்? ஏன் இந்தக் கொலை வெறி? ஏன் இவ்வளவு ஆத்திரம்? நீங்கள் மட்டும் தான் இந்துத்துவாவுக்கு அத்தாரிட்டியாக இருக்க வேண்டுமா என்ன? சொல் வீரர்களைக் காட்டிலும் செயல் வீரர்கள் தான் இன்றைய தேவை. அதைத்தான் செய்து வருகிறார் சுப்ரமணியன் சுவாமி. அவர் மீது எவ்வளவு சந்தேகங்கள் குற்றசாட்டுக்கள் இருப்பினும் அவர் கடந்த சில ஆண்டுகளில் செய்து வரும் சேவைகள் அபாரமானவை. அதைப் பாராட்ட மனம் வராவிட்டாலும் போகிறது. கோமாளி என்று இகழ்ந்து உங்களைக் கோமாளி ஆக்கிக் கொள்ளாதீர்கள்.

நான் யாருக்கும் பக்தன் கிடையாது. என் அவதானிப்பில் என் பொது அறிவுக்குச் சரி என்று படுவதை ஆதரிக்கிறேன். அவரைத் தாக்குவது அநாவசியமான வேலை. உங்கள் நேரத்தை வேறு உபயோகமான வழிகளில் செலவழியுங்கள். ஹரன் பிரசன்னாவின் கவிதைகளைப் படித்து விட்டு கவிதை என்றால் வீசை என்ன விலை என்று கேட்க்கும் நான் அது குப்பை, கோமாளித்தனம் என்று சொன்னால் எவ்வளவு அசட்டுத்தனமாக இருக்குமோ அவ்வளவு அசட்டுத்தனம் இத்தனை வழக்குகளைத் தனியாகப் போராடி வென்ற ஒருவரைப் பார்த்து சட்டத்தில் அவரைக் கோமாளி என்று அழைப்பதும் கூட.

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

அரவிந்தன்

சுவாமி என்ன சொன்னாலும் கண்ணையையும் மூளையும் மூடிக் கொண்டு நம்ப நான் கேனையன் அல்ல. சுவாமியின் சமீபத்து வழக்குகள் மட்டுமே அவரைப் பற்றிப் பேசப் போதுமானவை. நீங்கள் என்னதான் கேசவ் மிஷ்ராவை அழைத்து வந்தாலும் அவரது சமீபத்திய சாதனைகள் அவர் தனது முந்தைய சாதனைகளாகச் சொல்வதை நம்பவே வைக்கின்றன. அவர் செய்திருப்பார் என்றே நம்புகிறேன். சீன அரசாங்கமும், இந்திய அரசாங்கமும், வாஜ்பாயியும் கூட மறுக்காதை நீங்கள் மறுக்கிறீர்கள். நாளைக்கு இதே போல பிற வழக்குகளுக்கும் அவர் காரணமேயில்லை என்று இன்னொரு மிஷ்ராவை அழைத்துக் கொண்டு வந்து நீங்கள் சொல்லலாம். அதையும் நான்கு பேர்கள் நம்பிக் கை தட்டலாம். அவரது பங்களிப்புகளை பரந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு விட்டு அவரது தற்கால எதிர்கால நிலைப்பாடுகளை விமர்சியுங்கள் அதுவே நியாயமாக இருக்கும். இல்லாவிட்டால் ஜெயமோகனைப் போலத் தனக்கு எழுத வரவில்லையே என்று புழுதி வாரித் தூற்றும் அந்த எழுத்தாளரின் பிரதியாகி விடுவீர்கள் நீங்கள். இந்த விஷயத்தில் நீங்கள்தான் அவர் போல நடந்து கொள்கிறீர்கள்.

அன்புடன்
ச.திருமலை

Unknown said...

எல்லமே சரிய்யாக்வும் தோணுது.. எல்லாமே தப்பவும் தோணுது...
என்ன ஆச்சு எனக்கு...

கலைஞர் கைதின்போது..
சன் டிவி, ஜெயா டிவி ரெண்டையும் பார்த்த மாதிரி இருக்கு...

Don said...

The article speaks volume of nothing but jealousy of the writer. It's true to the nature of Indians (mostly) unable to contain the fact that someone can come up with their intelligence and boldness. They would try their best to tarnish him with scandals or abuse him as a traitor. They will religiously do this even if their own house is in fire.
What intelligent allegations can someone make when he doesn't even understand the fact that the house is in fire(corruption)?.
What is the need to testify the morality of someone putting out that fire???.
What moral-right do these cowards have, to point fingers at the 'man in the arena'?

Anonymous said...

ஆர்.எஸ்.எஸ்-க்கும் சு.சாமிக்கும் இடையே தற்போது பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில் சுதர்சன் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்தபோதே சாமி அவருடன் மிகவும் நெருக்கமானவர் என கூறப்பட்டது. சில தினங்கள் முன்பு சுதர்சன் சோனியாவைக் கிழித்ததுகூட குரு-சாமியின் பின்னணியில் தான். ;)

அப்போதே ஜனதா கட்சியை பா.ஜ.கவுடன் இணைக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்தது. ஆனால் அத்வானியும் அவருடைய எடுபிடிகளும் தடுத்து விட்டனர். கலைஞரிடமும், ஜெயலலிதாவிடமும் பெட்டி வாங்கிகொள்ளும் தமிழக பா.ஜ.க. தலைவர்ர்களையும், சோனியாவிடம் சில தனிப்பட்ட காரணங்களுக்காக அடஜஸ்ட் செய்து கொண்டு போன முன்னாள் மற்றும் அட்ஜஸ்ட் செய்து கொண்டிருக்கும் இந்நாள் பா.ஜ.க தில்லி தலைகளையும் ஒப்பிடும்போது,
சு.சாமி எவ்வளவோ தேவலை.

ஆனால் தற்போது உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் குரு-சாமியால் நெருங்க முடியவில்லை என்று பேசப்படுகிறது.

அதே சமயத்தில் வி.ஹி.ப.வுடன் சாமி நெருக்கத்தில் இருக்கிறார். வி.ஹி.பவுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் உறவு சொல்லும்படி இல்லை. இவற்றுடன் ஒத்துப்போகாமல் பா.ஜ.க தனியாக ஒரு திசையில் பயணித்து போலி காங்கிரஸ் எனப் பெயர் பெற்றிருக்கிறது.

திருமலை என்பவர் பட்டியலிட்டுருப்பதைப்போல் சு.சாமி தனி ஆளாக சாதித்த அத்தனை விஷயங்கள் மிகவும் பாராட்டுக்குரியவை. எனவே, அந்தத் தனி மனிதரை, பாராட்ட மனம் வராவிட்டாலும், தூற்றாமல் இருப்பது தான் ஆர்.எஸ்.எஸ்/வி.ஹி.ப/பா.ஜ.க இயக்கங்களுக்கும் அவ்வியக்கங்களைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும்.

மற்றபடி, சு.சாமியும் ஃப்ரான்ஸ்வா கோதியெரும் சிறந்த நண்பர்கள். அவருக்குத் தெரிந்தே அந்த குறிப்பிட்ட பத்தியை இவர் எடுத்திருக்கலாம். மேலும் பல புத்தகங்களை எழுதியுள்ள, சிறந்த அறிவு ஜீவியான, சிறந்த ஆங்கிலப் பேச்சாளரான, பல்கலை ஆசிரியரான சு.சாமி ஒரு பத்திரிகையாளரின் மற்றொரு புத்தகத்திலிருந்து ஒரு சிறிய பத்தியைத் திருடுவார் என்பதை மடையன் கூட ஒத்துக்கொள்ள மாட்டான். இத்தனைக்கும் அந்தப் பத்திரிகையாளர் அவருடைய நண்பர் என்கிறபோது, அவரிடம் சொல்லியே சாமி அதைச் செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது சாமியின் அலுவலகத்தினர் (டைப்பிங் மற்றும் எடிட்டிங் செய்யும்போது)அவ்வாறு செய்துவிட்டு அது சாமிக்குத் தெரியாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் சு.சாமியைக் குறை கூறுவதோ, எள்ளி நகையாடுவதோ, ஹிந்துக்களுக்கு அழகல்ல.

ரிஷபன்Meena said...

வைரமுத்து ஒரு முறை சொன்னார் “எழுத்தைப் பாருங்கள் எழுதுகிறவனைப் பார்காதீர்கள்”என்று. அது சரிதான்.

சு.சாமி பத்தி என்னா இத்தனை ஆராய்ச்சி. அவர் சொன்னதை கேஸ் டூ கேஸ் பொருத்திப் பாருங்க.ஏத்துக்க முடியும்னா ஒ.கே. இல்லாட்டி குப்பையில் போடுங்க.

2ஜி-ல் அவர் சொன்னது சரியா தப்பான்னு பார்க்கவேண்டியது தானே. ஏன் அவர் 1947-ல பண்ணிய்தைப் பத்தியெல்லாம் பேசுறீங்க.

களிமிகு கணபதி said...

சுசா நம்பத் தகுந்த ஆள் என்பதை நம்புவது கடினமாக இருக்கிறது.

சீனா இந்தியாவிற்கு எதிரி நாடு. நக்ஸலைட்டுகளுக்கு ஆதரவு கொடுத்து, இந்தியாவின் மாபெரும் நிலத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்தியாவின் மற்ற நிலப்பகுதிகள் தனக்கே சொந்தம் என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.

இந்தியாவின் நிலங்களை நேரடியாகவே தன் கையகப்படுத்தி உள்ளது.

இதை எல்லாம் சுசா எங்காவது கண்டித்திருந்தால், சீனாவோடு சில விஷயங்களில் நட்புறவு கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லும்போது அதில் உண்மை இருக்கிறது என்று தோன்றும்.

சீன விஷயத்தில் ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸிடம் நேர்மை இருந்தது.

ஒரு புத்தகத்தில் இருந்து காப்பி அடித்து அதைத் தனது கருத்துப் போல சுசா வெளியிட்டிருக்கிறார். அந்த ஒரு பாராவை கொஞ்சம் கூட மாற்றாமல் போட்டிருப்பதை வைத்து காப்பி அடித்ததை ஆதாரத்தோடு சொல்ல முடிகிறது. உண்மையில் அந்தப் புத்தகத்தின் மற்ற கருத்துக்கள் காப்பி அடிக்கப்பட்ட புத்தகத்தின் கருத்துக்களில் இருந்து மாறுபட்டதல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.

கைலாஷ் யாத்திரைக்கு வழி உண்டாக்கியவர் வாஜ்பாய். ஆனால், சுசா தன்னால்தான் அது நடந்தது என்று சொல்லுகிறார். அதற்கு அவர் தரும் ஆதாரங்கள் நம்பும்படியாகவா இருக்கிறது? சீன ஆட்களுடன் பதிவு செய்யப்படாத ஒரு உரையாடலை ஆதாரமாக அவர் சொல்லுகிறார். அந்தப் பேச்சுவார்த்தையால்தான் அந்தப் பிரச்சினை தீர்ந்தது என்றும் சொல்லுகிறார். நல்லவேளையாக வாஜ்பாயின் செயல்பாடுகள் ஆதாரங்களுடன் வெளியாகின.

காவிரி பிரச்சினையை நான் தான் தீர்த்தேன் என்று ஜெயாவும், கருநாவும் அறிக்கை வெளியிடுவது மாதிரி, சுசாவும் அறிக்கை வெளியிடுகிறார்.

தன்னுடைய சொந்த கருத்துக்களுக்கு வலுசேர்க்க பொதுமக்களின் மதிப்பைப் பெற்ற பெரியோர்களின் பெயரைப் பயன்படுத்தவும் அவர் தயங்குவதில்லை.

அவரிடம் உள்ள பிரச்சினை இதுதான். இந்த விஷயத்தில் அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன என்றால், அவற்றை அவர் வெளியிட வேண்டும்.

----------------------

அதே சமயம், அவரது மற்ற செயல்கள் அவர் மீது நம்பிக்கையைத் தருகின்றன. அவர் ஒரு கட்சியுடன் ஒருமுறை சண்டை போட்டுவிட்டு, மற்றொரு முறை கூட்டணி வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படலாம். ஆனால், அவர் ஒருவர்மீது சண்டை போடும்போது கோர்ட்டில் போட்ட வழக்குகள் எதையும் பின்னர் வாபஸ் வாங்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். அந்தவகையில் அவர் சில கொள்கைகளில் உறுதியுடனும், நேர்மையுடனும் நடந்துகொள்கிறார் என்பதும் தெளிவு.

சோனியாவைப் பற்றியும், மற்ற பல பிரமுகர்கள் பற்றியும் அவர் வெளிப்படையாகவே பேசிவருகிறார். இந்தத் தைரியம் வேறு யாருக்கும் இல்லை.

ஸ்பெக்ட்ரம் விஷயத்திலும் சரி, அவர் போட்ட மற்ற கோர்ட் கேசுகளிலும் சரி அவரது சாதனைகள் சாதாரணமானவை அல்ல.

ஆக மொத்தத்தில் அவரது சொதப்பல்களால் நாட்டிற்கு எந்த இழப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், அவரது வெற்றிகளால் நாட்டிற்கு நன்மைகளே ஏற்பட்டு வருகின்றன.

இந்த மாற்றம் சுசாவிடம் ஏற்பட்ட மாற்றமாக இருக்குமானால், அதனால் நாட்டிற்கு இறுதியில் நன்மை கிடைக்குமானால் அந்த சுசாவை நான் வரவேற்கிறேன்.

RedChipRobot said...

கணம் கோர்ட்டார் அவர்களே,

சு. சா. வை சைக்கிள் காப்பில் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று 'ஜோக்கர்' எனக்கூறிவிட்டு ஓடிவிட்ட எதிர்கட்சிகாரர் ஹ.பி. அவர்கள், சு. சா. ஜோக்கர் அல்ல என்று கூறுபவர்களை சு.சா. வின் வக்கீல் என்று கூறினாரே, இப்போது அவரே தனக்காக அ.நீ. என்ற வக்கீலை இங்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அவல நிலையை நினைத்தால், என் கண்கள் பனிக்கின்றன; மனது கனக்கின்றது. அய்யகோ!!!

எதிர் கட்சி வக்கீல் அ.நீ. இந்த வழக்கின் அடிப்படையான, சு. சா. ஜோக்கரா என்ற கேள்விக்கு நேரிடையான வாதங்களை வைப்பதற்கு பதிலாக, சு. சா. தான் ஒரு இந்திய அரசியல்வாதி போல் நடந்துகொண்ட அல்லது அவ்வாறு நடந்துகொண்டதாக அ.நீ. சொல்லவருவது, மற்ற அரசியல்வாதிகள் நடந்துகொள்வது போன்ற சாதரணமாக மக்களால் பார்க்கப்படுகிற ஒன்றாகும். அதாவது, சு.சா. முன்பு ஒன்று பேசினார்; பின்பு வேறு மாதிரி பேசினார் என்பதுதான் அ.நீ.யின் வாதம். எனவே, அ.நீ. அவருடைய கட்சிகாரர் ஹ.பி. சு.சா. வை ஜோக்கர் என்று கூறியது சரியே என்கிறார்.

சு. சா. வின் வக்கீல் என்று குற்றம் சாட்டப்படும் நான், இந்த கோர்டாருக்கு சொல்லிகொள்வது இதுதான்:
அ.நீ. சு.சா. வை பற்றி சொல்லும் குற்றச்சாட்டுகள் ஒரு வாதத்திற்காக உண்மையே என்று வைத்துக்கொண்டாலும், இன்றைய காலகட்டத்தில் எந்த இந்திய அரசியல்வாதிதான் அவ்வாறு முன்னுக்கு பின் முரணாக பேசுவதில்லை? இந்திரா காந்திக்கு கருப்பு கொடி காட்டிய அதே கருணாநிதி, நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக, என்று கவிதை வாசிக்க வில்லையா? எந்த தி.மு.க வை ஜெயின் கமிஷன் அறிக்கையை காரணமாக காட்டி, ஐக்கிய முன்னணி அரசை கவிழ்த்த சோனியா காந்தியின் காங்கிரெஸ் கட்சி, அதே தி.மு.க.விடம் பிற்காலத்தில் கூட்டு சேரவில்லையா? எந்த சோனியாவை அந்தோனியோ மைனோ என்று பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் விளாசி தள்ளிய ஜெயலிலதா இன்று அதே சோனியாவின் கட்சி தன்னுடன் கூட்டு சேராதா என்று நாக்கில் ஜொள்ளு விட்டுக்கொண்டு அலையை வில்லையா? இவ்வளவு ஏன்? ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கழகத்துடன் கூட்டு வைப்பதை ஒரு கொள்கையாகவே ஆக்கி வைத்திருக்கும் பா.ம.க. ராமதாஸ் பேசாத முன்னுக்கு பின் முரணான பேச்சா?

இவ்வாறு கருணாநிதி, சோனியா, ஜெயலலிதா, ராமதாஸ் ஆகியோர் பேசிய முன்னுக்கு முரணான பேச்சுக்களினால் எல்லாம், அவர்களை "ஜோக்கர்" என்று அழைக்காத அல்லது அவ்வாறு அழைக்க துணியாத, ஹ.பி. யோ அவரது வக்கீல் அ.நீ.யோ, அவ்வாறு பேசியதாக கூறப்படும் சு.சா.வை மட்டும் தைரியமாக "ஜோக்கர்" என்று கூறுவதன் காரணம் என்ன என்று கேட்க ஆசைபடுகிறேன்.

எனக்கு தெரிந்து ஒரே காரணம்தான் அதற்கு இருக்க முடியும்.

மேற்சொன்னவர்களை 'ஜோக்கர்' என்று இந்த இருவருமோ அல்லது வேறு யாருமோ கூறினால், அவர்கள் வீட்டிற்கு ஆட்டோவோ அல்லது அவர்கள்மேல் ஆசிட் வீச்சோ அல்லது அவர்கள் வாக்கிங் போகும்போது கத்திகுத்தோ அல்லது வீச்சரிவாளுடன் ஒரு கும்பலோ வந்து அவர்களை தாக்கக்கூடும் என்ற அச்சம். ஆனால், சு.சா.வை பற்றி என்ன கூறினாலும் ஏன் என்று கேட்க நாதி இல்லை. எனவே, இவர்களின் "தமிழ் வீரம்" பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது. எனவே, வாய்க்கு வந்தபடி அவர்களால் என்ன வேண்டுமானாலும் பேச முடிகிறது.

இவர்கள் உண்மையாகவே மனசாட்சி உடையவர்களாக இருந்தாலோ அல்லது நிஜமான மனத்துணிவு படைத்தவர்களாக இருந்தாலோ (சு.சா.வை போன்று), இனிமேலாவது சு.சா.வை ஜோக்கர் என்று கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்த கோர்ட்டார் உத்தரவு இட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறுவதை நிறுத்தாவிடில், இனிமேல் ஹ.பி. மற்றும் அ.நீ. இருவருமே, இந்த தமிழ் கூறும் நல்லுலகத்தினால் ஜோக்கர் என்றுதான் விளிக்கபடுவார்கள் என்று கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஜோக்கர் என்ற அந்த ஆங்கில பதத்திற்கும் அப்போது ஒரு சரியான உதாரணம் கிடைத்ததுபோலவும் ஆகும்.

RedChipRobot said...

கணம் கோர்ட்டார் அவர்களே,

சு. சா. வை சைக்கிள் காப்பில் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று 'ஜோக்கர்' எனக்கூறிவிட்டு ஓடிவிட்ட எதிர்கட்சிகாரர் ஹ.பி. அவர்கள், சு. சா. ஜோக்கர் அல்ல என்று கூறுபவர்களை சு.சா. வின் வக்கீல் என்று கூறினாரே, இப்போது அவரே தனக்காக அ.நீ. என்ற வக்கீலை இங்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அவல நிலையை நினைத்தால், என் கண்கள் பனிக்கின்றன; மனது கனக்கின்றது. அய்யகோ!!!

எதிர் கட்சி வக்கீல் அ.நீ. இந்த வழக்கின் அடிப்படையான, சு. சா. ஜோக்கரா என்ற கேள்விக்கு நேரிடையான வாதங்களை வைப்பதற்கு பதிலாக, சு. சா. தான் ஒரு இந்திய அரசியல்வாதி போல் நடந்துகொண்ட அல்லது அவ்வாறு நடந்துகொண்டதாக அ.நீ. சொல்லவருவது, மற்ற அரசியல்வாதிகள் நடந்துகொள்வது போன்ற சாதரணமாக மக்களால் பார்க்கப்படுகிற ஒன்றாகும். அதாவது, சு.சா. முன்பு ஒன்று பேசினார்; பின்பு வேறு மாதிரி பேசினார் என்பதுதான் அ.நீ.யின் வாதம். எனவே, அ.நீ. அவருடைய கட்சிகாரர் ஹ.பி. சு.சா. வை ஜோக்கர் என்று கூறியது சரியே என்கிறார்.

சு. சா. வின் வக்கீல் என்று குற்றம் சாட்டப்படும் நான், இந்த கோர்டாருக்கு சொல்லிகொள்வது இதுதான்:
அ.நீ. சு.சா. வை பற்றி சொல்லும் குற்றச்சாட்டுகள் ஒரு வாதத்திற்காக உண்மையே என்று வைத்துக்கொண்டாலும், இன்றைய காலகட்டத்தில் எந்த இந்திய அரசியல்வாதிதான் அவ்வாறு முன்னுக்கு பின் முரணாக பேசுவதில்லை? இந்திரா காந்திக்கு கருப்பு கொடி காட்டிய அதே கருணாநிதி, நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக, என்று கவிதை வாசிக்க வில்லையா? எந்த தி.மு.க வை ஜெயின் கமிஷன் அறிக்கையை காரணமாக காட்டி, ஐக்கிய முன்னணி அரசை கவிழ்த்த சோனியா காந்தியின் காங்கிரெஸ் கட்சி, அதே தி.மு.க.விடம் பிற்காலத்தில் கூட்டு சேரவில்லையா? எந்த சோனியாவை அந்தோனியோ மைனோ என்று பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் விளாசி தள்ளிய ஜெயலிலதா இன்று அதே சோனியாவின் கட்சி தன்னுடன் கூட்டு சேராதா என்று நாக்கில் ஜொள்ளு விட்டுக்கொண்டு அலையை வில்லையா? இவ்வளவு ஏன்? ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கழகத்துடன் கூட்டு வைப்பதை ஒரு கொள்கையாகவே ஆக்கி வைத்திருக்கும் பா.ம.க. ராமதாஸ் பேசாத முன்னுக்கு பின் முரணான பேச்சா? (Contd...)

RedChipRobot said...

கணம் கோர்ட்டார் அவர்களே,

சு. சா. வை சைக்கிள் காப்பில் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று 'ஜோக்கர்' எனக்கூறிவிட்டு ஓடிவிட்ட எதிர்கட்சிகாரர் ஹ.பி. அவர்கள், சு. சா. ஜோக்கர் அல்ல என்று கூறுபவர்களை சு.சா. வின் வக்கீல் என்று கூறினாரே, இப்போது அவரே தனக்காக அ.நீ. என்ற வக்கீலை இங்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அவல நிலையை நினைத்தால், என் கண்கள் பனிக்கின்றன; மனது கனக்கின்றது. அய்யகோ!!!

எதிர் கட்சி வக்கீல் அ.நீ. இந்த வழக்கின் அடிப்படையான, சு. சா. ஜோக்கரா என்ற கேள்விக்கு நேரிடையான வாதங்களை வைப்பதற்கு பதிலாக, சு. சா. தான் ஒரு இந்திய அரசியல்வாதி போல் நடந்துகொண்ட அல்லது அவ்வாறு நடந்துகொண்டதாக அ.நீ. சொல்லவருவது, மற்ற அரசியல்வாதிகள் நடந்துகொள்வது போன்ற சாதரணமாக மக்களால் பார்க்கப்படுகிற ஒன்றாகும். அதாவது, சு.சா. முன்பு ஒன்று பேசினார்; பின்பு வேறு மாதிரி பேசினார் என்பதுதான் அ.நீ.யின் வாதம். எனவே, அ.நீ. அவருடைய கட்சிகாரர் ஹ.பி. சு.சா. வை ஜோக்கர் என்று கூறியது சரியே என்கிறார். (Contd...)

RedChipRobot said...

(Contd...)

சு. சா. வின் வக்கீல் என்று குற்றம் சாட்டப்படும் நான், இந்த கோர்டாருக்கு சொல்லிகொள்வது இதுதான்:

அ.நீ. சு.சா. வை பற்றி சொல்லும் குற்றச்சாட்டுகள் ஒரு வாதத்திற்காக உண்மையே என்று வைத்துக்கொண்டாலும், இன்றைய காலகட்டத்தில் எந்த இந்திய அரசியல்வாதிதான் அவ்வாறு முன்னுக்கு பின் முரணாக பேசுவதில்லை? இந்திரா காந்திக்கு கருப்பு கொடி காட்டிய அதே கருணாநிதி, நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக, என்று கவிதை வாசிக்க வில்லையா? எந்த தி.மு.க வை ஜெயின் கமிஷன் அறிக்கையை காரணமாக காட்டி, ஐக்கிய முன்னணி அரசை கவிழ்த்த சோனியா காந்தியின் காங்கிரெஸ் கட்சி, அதே தி.மு.க.விடம் பிற்காலத்தில் கூட்டு சேரவில்லையா? எந்த சோனியாவை அந்தோனியோ மைனோ என்று பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் விளாசி தள்ளிய ஜெயலிலதா இன்று அதே சோனியாவின் கட்சி தன்னுடன் கூட்டு சேராதா என்று நாக்கில் ஜொள்ளு விட்டுக்கொண்டு அலையை வில்லையா? இவ்வளவு ஏன்? ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கழகத்துடன் கூட்டு வைப்பதை ஒரு கொள்கையாகவே ஆக்கி வைத்திருக்கும் பா.ம.க. ராமதாஸ் பேசாத முன்னுக்கு பின் முரணான பேச்சா?

இவ்வாறு கருணாநிதி, சோனியா, ஜெயலலிதா, ராமதாஸ் ஆகியோர் பேசிய முன்னுக்கு முரணான பேச்சுக்களினால் எல்லாம், அவர்களை "ஜோக்கர்" என்று அழைக்காத அல்லது அவ்வாறு அழைக்க துணியாத, ஹ.பி. யோ அவரது வக்கீல் அ.நீ.யோ, அவ்வாறு பேசியதாக கூறப்படும் சு.சா.வை மட்டும் தைரியமாக "ஜோக்கர்" என்று கூறுவதன் காரணம் என்ன என்று கேட்க ஆசைபடுகிறேன்.

எனக்கு தெரிந்து ஒரே காரணம்தான் அதற்கு இருக்க முடியும். (Contd...)

RedChipRobot said...

(Contd...)

மேற்சொன்னவர்களை 'ஜோக்கர்' என்று இந்த இருவருமோ அல்லது வேறு யாருமோ கூறினால், அவர்கள் வீட்டிற்கு ஆட்டோவோ அல்லது அவர்கள்மேல் ஆசிட் வீச்சோ அல்லது அவர்கள் வாக்கிங் போகும்போது கத்திகுத்தோ அல்லது வீச்சரிவாளுடன் ஒரு கும்பலோ வந்து அவர்களை தாக்கக்கூடும் என்ற அச்சம். ஆனால், சு.சா.வை பற்றி என்ன கூறினாலும் ஏன் என்று கேட்க நாதி இல்லை. எனவே, இவர்களின் "தமிழ் வீரம்" பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது. எனவே, வாய்க்கு வந்தபடி அவர்களால் என்ன வேண்டுமானாலும் பேச முடிகிறது.

இவர்கள் உண்மையாகவே மனசாட்சி உடையவர்களாக இருந்தாலோ அல்லது நிஜமான மனத்துணிவு படைத்தவர்களாக இருந்தாலோ (சு.சா.வை போன்று), இனிமேலாவது சு.சா.வை ஜோக்கர் என்று கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்த கோர்ட்டார் உத்தரவு இட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறுவதை நிறுத்தாவிடில், இனிமேல் ஹ.பி. மற்றும் அ.நீ. இருவருமே, இந்த தமிழ் கூறும் நல்லுலகத்தினால் ஜோக்கர் என்றுதான் விளிக்கபடுவார்கள் என்று கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஜோக்கர் என்ற அந்த ஆங்கில பதத்திற்கும் அப்போது ஒரு சரியான உதாரணம் கிடைத்ததுபோலவும் ஆகும்.

Anonymous said...

Swamy fined for charge against Jaya

New Delhi, January 3
The Delhi High Court today imposed a fine of Rs 5 lakh on Janata Party President and former Union Minister Subramaniam Swamy for levelling charges against Tamil Nadu Chief Minister J. Jayalalithaa that she knew about the plan of the LTTE to assassinate former Prime Minister Rajiv Gandhi at Sriperumbudur in May 1991.

Mr Justice Pradeep Nandrajog said Mr Swamy had failed to establish that Jayalalithaa had received information and money from the banned LTTE for the assassination of Gandhi.

“The defendant (Swamy) had exceeded the limits of qualified privilege as his statement was quite unconnected with and irrelevant to the situation and suffers from redundancy of the expression,’’ said the order.

The M.C. Jain Commission of Inquiry was constituted on August 23, 1991 by the Centre to look into the circumstances leading to the assassination of Gandhi.

Appearing before the commission, Mr Swamy had said Ms Jayalalithaa was tipped by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) about the assassination of Gandhi by its suicide bombers on April 17, 1991. — UNI
http://www.tribuneindia.com/2006/20060104/nation.htm#16

Anonymous said...

திருமலை,

சுசாமி யார் மீது வழக்குபோடவில்லை? வழக்கு போட்ட யாருடன் மீண்டும் சேரவில்லை? சேர்ந்த யாருடன் மீண்டும் குற்றம் சொல்லவில்லை? குற்றம் சொன்ன யாருடன் மீண்டும் கொஞ்சி குலாவவில்லை? இந்த ஆள் செய்த வேலையெல்லாம் ஹிந்து இயக்கங்கள் செய்திருக்கின்றனவா என்றால் என்ன சொல்வது? இல்லை அய்யா. சோனியாவுக்கு ஒரு குட்ரோச்சி சுசாமிக்கு ஒரு சந்திராசாமி.பாஜக சோனியாவை பார்த்து நடுங்கிறது என்பது மடத்தனம்.அவர்கள் கேள்வி கேட்கிறார்கள். சுசாமிதான் எப்போதுமே ஒரு வழக்கில் அதுவும் வலுவான வழக்கில் ஒரு ரிடிகுலஸ் எலிமெண்டை சேர்த்து அதனை பிசுபிசுத்து போக செய்வார். 2ஜியிலும் அதை முயன்றார். ஆனால் அவரை மீறி அது விஸ்வரூபம் எடுத்துவிட்டது.-அநீ

Anonymous said...

//இவ்வாறு கருணாநிதி, சோனியா, ஜெயலலிதா, ராமதாஸ் ஆகியோர் பேசிய முன்னுக்கு முரணான பேச்சுக்களினால் எல்லாம், அவர்களை "ஜோக்கர்" என்று அழைக்காத அல்லது அவ்வாறு அழைக்க துணியாத, ஹ.பி. யோ அவரது வக்கீல் அ.நீ.யோ, அவ்வாறு பேசியதாக கூறப்படும் சு.சா.வை மட்டும் தைரியமாக "ஜோக்கர்" என்று கூறுவதன் காரணம் என்ன என்று கேட்க ஆசைபடுகிறேன்.//

கருணாநிதியை கொலைஞர் என்றே விமர்சித்திருக்கிறேன். என் சொந்த பெயரில்தான் எழுதி வருகிறேன். எனக்கு தைரியத்தை போதிப்பவர் முதலில் சொந்த பெயரில் வரும் தைரியத்தை பெறட்டும்.

Anonymous said...

நைனா ரெட்சிப்ரோபோட்,
ஷோக்கா சொன்ன நைனா . இதெல்லாம் அப்படியே வர்றதுதான் இல்லே. இனி ஆணி அட்ச்சாமாதிரி ஒரு தீர்ப்ப கனம் நீதிபதிதான் சொல்லணும்.

Anonymous said...

அநாநி
-------------------------
சுசாமியை வெறுத்து ஒதுக்குங்கள் என்று சொல்லவில்லை. அந்த ஆள் ஒரு அரசியல் சர்வதேச தரகர்.
---------------------------

இருக்கட்டும் அதனால் இது வரை இந்தியாவுக்கும் இந்துக்களுக்கும் என்னென்ன பாதிப்பு என்பதை உங்களால் ஆதாரத்துடன் விளக்க முடியுமா? சுவாமி சோனியாவின் பூர்வீகத்தைச் சொல்வதை ஆதாரமில்லாத யூகம் என்று சொல்லும் நீங்களே அவர் மீது வைக்கும் இந்த குற்றசாட்டுக்கு ஆதாரம் என்ன?

-------------------------------
கருணாநிதி கும்பலை நமக்கு தெரியும். ஊழல் அதிகாரதுஷ்பிரயோகம், இனவாத அரசியல், குடும்ப ஆட்சி என்று. சுசாமி குறித்து அவரது பின்னால் இயங்கும் சர்வதேச சக்திகள் குறித்து தெரியாது.
-----------------------------

அது தெரியாத ஒன்றா இல்லாத ஒன்றா? வெறும் யூகத்தின் அடிப்படையில் அவரைத் தூக்கில் போட முடியாது. ஏதாவது ஆதாரம் கொடுங்கள் ரேடியா டேப் போல. ஒன்று கூடவா உங்களுக்குக் கிட்டவில்லை. இல்லாவிட்டால் அவர் மீது இருக்கும் வெறுப்பில் பொறாமையில் அல்லது ஜாதி துவேஷத்தில் நீங்கள் இதைச் சொல்லுவதாகவே நான் கருத வேண்டியிருக்கும்


------------------------------
இந்த விஷயத்தில் சுசாமியும் சோனியாவும் ஒன்றுதான். நாளைக்கே ஸ்ரீ ரங்கம் கோவில் திகவுக்கு போக வேண்டும் என்று கேஸ் போடக்கூடியவர்தான் சாமி. பயன்படுத்துங்கள் நம்பாதீர்கள்.
------------------------------

அதற்கான முகாந்திரம் எதுவும் இது வரை இல்லை, இனிமேல் அவர் அப்படிச் செய்தால் தாராளமாகக் கண்டிப்பேன். அது வரை அவர் செய்யும் நல்ல காரியங்களை எல்லாம் சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே பாராட்டாமல் அவர் மீது அவதூறு வீச வேண்டும் என்று சொல்லுகிறீர்கள் அது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அவரும் சோனியாவும் ஒன்றுதான் என்றால் ஏதாவது நிரூபியுங்கள் அவர் சோனியா மீது ஆயிரத்தெட்டு குற்றசாட்டுக்களை எடுத்து வெளிப்படையாக வைக்கிறார் அது போல அவர் மீது ஏதாவது ஒரு ஆதாரபூர்வமான குற்றசாட்டைச் சொல்லுங்கள். சும்மா வதந்திகளைப் பரப்பாமல் அவர் வைப்பது போல பொதுவில் நாளைக்கு அவர் உங்கள் மீது கேஸ் போட்டால் எதிர் கொள்ளும் அளவுக்கு வலுவாக வையுங்கள் நான் உங்களை நம்புகிறேன். இதைச் சொல்லக் கூட உங்களால் மூஞ்சியைக் காட்ட முடியவில்லை. போகிற போக்கில் முகமூடி போட்டுக் கொண்டு வந்து சேற்றை ஒட்டியது ஒட்டட்டும் என்று அடித்து விட்டுப் போகிறீர்கள். அவர் வெளிப்படையாக செய்த போராட்டங்களின் அடிப்படையிலும் அவருடன் பேசிப் பழகியதன் அடிப்படையிலும் அவரை அவர் இது வரை செய்த நல்ல காரியங்களுக்காக மட்டும் நான் பாராட்டுகிறேன். அதில் என்ன உங்களுக்கு நஷ்டம்?----------------------
மேலும் ஏதோ சுசாமி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மேதை அப்பழுக்கற்ற தேசபக்தர் என்பது போலெல்லாம் பிம்பம் சமைக்காதீர்கள்.
---------------------------

அப்படி நான் எங்காவது சொன்னேனா?

-----------------------------
சுசாமி செய்ததையெல்லாம் ஹிந்து இயக்கங்கள் செய்திருக்கின்றனவா என்றால், அதைவிட அதிகமாகவே செய்திருக்கின்றன.
-----------------------------

அப்படியா பட்டியல் போட்டு காட்டுங்களேன் யார் வேண்டாம் என்கிறார்கள். காஷ்மீர் பண்டிட்களை குடியமர்த்தினார்களா? ராமர் கோவில் கட்டினார்களா? எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் ஊழல்களை எதிர்த்து கேஸ் போட்டார்களா? மேல் விஷாரத்தில் பாதிக்கப் பட்ட இந்துக்களுக்காக கேஸ் போட்டார்களா? சேது பாலம் இடிக்கப் படுவதை எதிர்த்து கேஸ் போட்டார்களா? ஆர்ட்டிகிள் 370 ஐ எதிர்த்து பாராளுமனறத்தின் என்றைக்காவது தீர்மானம் போட்டார்களா? இஸ்லாமிய வங்கியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்களா கேஸ் போட்டார்களா? நாத்திக அரசின் பிடியில் இருந்து இந்துக் கோவில்களை மீட்க்க கேஸ் போட்டார்களா? என்ன செய்தார்கள்? சொல்லுங்கள் கேட்டுக் கொள்கிறோம். நல்லது செய்திருந்தால் நிச்சயம் பாராட்டுகிறோம். நான் பா ஜ க வின் எதிரி அல்லவே அவர்களுக்காக நாளைக்கு ஓட்டுப் போடப் போகும் ஆதரவாளந்தானே ஒரு ஆதங்கத்தில் தானே கேட்க்கிறேன். அவர்கள் செய்யாத வேலையை ஒரு தனி நபர் செய்யும் பொழுது பாராட்டினால் அதைக் கூடச் செய்யாதே என்று சொல்லும் பொழுது உங்கள் அடிப்படை உள்நோக்கத்திலேயே சந்தேகம் வருகிறதே? சாமியின் பின் புலம் பற்றி எனக்குக் கவலையில்லை. கடந்த 5 ஆண்டுகளின் அவரது சாதனைகளின் அடிப்படையில் அவரை நான் பாராட்டுகிறேன் அஷ்டே அதைச் செய்யக் கூட உங்களுக்கு மனமில்லை, அவரை அவதூறு செய்ய மட்டும் தயாராகக் கிளம்பி விடுகிறீர்கள் இந்த மனப்பாங்குதான் எரிச்சல் ஊட்டுகிறது

அன்புடன்
ச.திருமலை

Mukkodan said...

It is unfair to criticize S.Swamy.

He's atleast standing up against a mighty empire with every possible power in their hands. Media, CBI, Judiciary, President, etc. all in their complete control.

Something is better than nothing.

ஹரன்பிரசன்னா said...

ரெட்சிப்,

நான் வக்கீல் வைத்துக்கொள்ளவில்லை. அந்த அளவுக்கு எனக்கு வசதி இல்லை. எனவே மற்றவர்களை ஏமாற்றும் வாய்ப்பும் இல்லை.

ஆனால் நீங்கள் நியாயமாகப் பேசியிருக்கிறீர்கள். கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ் என்ற வரிசையில் சுசா - எக்ஸெலெண்ட். சுசாவே ஜோக்கர் என்றால், மற்றவர்கள் என்ன எனப் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் நிலைப்பாடு சரியானதே. :-)

ஹரன்பிரசன்னா said...

//அது தெரியாத ஒன்றா இல்லாத ஒன்றா? வெறும் யூகத்தின் அடிப்படையில் அவரைத் தூக்கில் போட முடியாது. ஏதாவது ஆதாரம் கொடுங்கள் ரேடியா டேப் போல. ஒன்று கூடவா உங்களுக்குக் கிட்டவில்லை. இல்லாவிட்டால் அவர் மீது இருக்கும் வெறுப்பில் பொறாமையில் அல்லது ஜாதி துவேஷத்தில் நீங்கள் இதைச் சொல்லுவதாகவே நான் கருத வேண்டியிருக்கும்//

ஜாதி துவேஷமா என்ற கேள்வியின் மூலம் ஓர் உண்மை வெளி வந்திருக்கிறது. அது ஜாதி என்பதுதான்.

Anonymous said...

//http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_05.html//

Does swamy has answers for these allegations?

Anonymous said...

During JJ's regime, S.Gurumurthy (in Kanchi arrest), S.Swamy (for several reasons), Vijayan (on reservation issue) were all attacked and harassed for daring to say something 'against the queen'. S.Gurumurthy might want to remember having to go underground for writing an article during the Kanchi arrest.

Contrast now - S. Gurumurthy and S.Swamy can freely say what they want to say on JJ TV, and we have not seen reports that TN Police special squad is on the look out for them.

There is some truth in it when MuKa complains about prejudices.

S.Swamy might be a project along the same lines of Raj Thackeray, Chiranjeevi etc - split opposition vote. The very educated intelligent people might all queue up to vote for S.Swamy's janata party in the next elections, aided by English Media's over-importance to this person in his so-called fight against corruption.

Anonymous said...

At the outset one has to admit that Mr. Subramaniam Swamy is bold and courageous. It is unbecoming on the part of anybody to call somebody a joker or a broker. He was the only person who evaded arrest during emergency and was instrumental in polarising international opinion against emergency. The humiliation is suffered from ADMK Mahlirani at Madras High Court did not deter him. Whatever may be the relationship he never withdrew his cases against people. It was he who exposed Hegde, Jailalitha and today Raja. During his tenure as Commerce Minister he did a lot of good things which immensely benefited the country. He himself argues his cases though his wife is a Lawyer. He never takes pride like others though his daughter is married to a Muslim. His intelligence is really worthy of ammulation. He taught both in Harvard and IIT, India. None of the people were willing to crusade in the cause of Sethu Bridge. The local CM went to the extent of calling Rama a drunkard. All of us who call Samy as a joker saw Kalaignar TV and improved their TRP ratings. Only Swamy went to the court. There are lot of good things Swamy has done. Let us remember them and forget his faults. Even regarding China he wants only an adjustment based on mutual understanding and realising the strength of China which can neither be denied nor forgotton. Even countries like Russia and USA adopt a positive and less dominant attitude towards China. The strength cannot be brushed aside. The BJP when it was in power did not go to war with China to recocver the areas we lost. Nor did BJP cancel the special status given to Kashmir. It is easier to talk on many things but when one has to do several things are to be considered. Today Indian Ambassador has been humiliated at USA. In retaliation we can't humiliate US Ambassador. Why? Because we respect the strength of US and the interest of several Indians in US. Likewise, Swamy preached a moderate role with regard to China taking into account its strength. Let us be like Annams taking out only the milk and leaving out water. It is unbecoming of the stature of Idli Vadai to carry articles which contain derogatory phrases. Then there will be no difference between Idli Vadai and Murasoli.
Let me make it clear I am a simple Indian with average knowledge about politics. I am neither siding Swamy nor advocate of all his actions. Just I wanted to say Swamy has done real good things for the country. Being an admirer of Idli Vadai I do not want this blog to stoop down to calling people names.

Anonymous said...

கடந்த ஐந்து ஆண்டுகளுகளில் தான் (2005) இந்திய எல்லை நிலைபாடுகள் பிரிட்டிஷ் போலி தாஸ்தாவேஜுகளின் அடிப்படையிலானது என எழுதி அதை இந்து இயக்க தலைவர்களை வைத்தே வெளியிட வைத்தார் சாமி. இது சரியா தவறா என்பதை நீங்கள் இன்னமும் சொல்லவில்லை. We should face the fact that although China has no valid claim whatsoever on the border our claim is based on the bogus documents created by the British rulers. (Hindus under Siege, page 104 சாய்வெழுத்து சாமியுடையது.)

என் கேள்வி இதுதான். இந்த நிலைப்பாட்டை புத்தகத்தை வெளியிட்ட சுதர்சனோ தயானந்த சரஸ்வதியோ அல்லது ஜெயேந்திரரோ ஏற்கப்போவதில்லை என்பது சுசாமிக்கு தெரியும். இவர்கள் அனைவரும் இந்த நூலை படித்திருக்க மாட்டார்கள் என்பதும் சுசாமிக்கு தெரியும். எனவே அவர்களிடம் இதை சொல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு சுசாமிக்கு உண்டா? அல்லது சுதர்சன், தயானந்த சரஸ்வதி, ஜெயேந்திரர் எல்லோரும் இந்தியாவின் சீன எல்லை நிலைபாடுகள் பிரிட்டிஷ் போலி ஆவணங்கள் அடிப்படையிலானது என நம்புகிறார்களா? சுசாமியை நம்புகிறார்கள். அவர் ஹிந்துக்களுக்காக பேசுவதாக. அவர் அதை பயன்படுத்தி தனது சீன அஜெண்டாவை உள்ளே நுழைக்கிறார். இதைச் சொன்னால் எனக்கு சாதீய வெறுப்பு என்கிறீர்கள். சந்தோஷம் திருமலை. இதற்கு பெயர் சாதீய வெறுப்பு என்றால் அப்படியே ஆகட்டும். -அநீதி

Anonymous said...

மேல்விஷாரம் விஷயம் என்ன? அதனை வெளிக்கொண்டு வந்ததில் ஹிந்து இயக்கங்களின் பங்கு உண்டா? இல்லையா? அதை முதன் முதலாக அந்த ஊருக்கு போய் உள்ளே சென்று ஃபோட்டோக்கள் எடுத்து வெளிப்படுத்தியது ஹிந்து இயக்க இதழைச் சேர்ந்த விஜயபாரதத்தின் நிருபர்கள் இல்லையா? சுசாமி அதனை உச்ச நீதி மன்றத்துக்கு கொண்டு சென்றதற்கு வந்தனங்கள். ஆனால் அதில் ஹிந்து இயக்கங்களின் பங்களிப்பை தெரிந்தே மறைக்கிறீர்களே அப்படி மறைக்க வைப்பது எது? சுசாமி பாசமா? சாதியமா? -அநீ

Anonymous said...

//நீங்களே அவர் மீது வைக்கும் இந்த குற்றசாட்டுக்கு ஆதாரம் என்ன?//
//அவரும் சோனியாவும் ஒன்றுதான் என்றால் ஏதாவது நிரூபியுங்கள் //
குவட்ராச்சியை சோனியா எப்படி தப்பிக்க வைத்தாள் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கும். அவளது சேவக காங்கிரஸ் அரசுகள் எப்படி தப்ப வைத்தன என்பதும் நினைவிருக்கும். க்வட்ராச்சி போலவே ஒரு ஊழல் இடைத்தரகனாக செயல்பட்ட சந்திராசாமியை எவரும் மறந்திருக்க முடியாது. குவட்ராச்சியை தப்ப வைக்க வழிமுறைகளை சொல்லி கொடுக்கும் ஒரு முன்னோடியாகவே சுசாமி திகழ்ந்திருக்கிறார். அப்போது சிபிஐ அதிகாரியாக இருந்த என்.கே.சிங் எழுதுகிறார்: “Under my instructions the CBI opposed grant or anticipatory bail to (Chandra Swami) when the matter came up for regular hearing. ...Basking under the patronage of the then Prime Minister Chandrashekar and the Law Minister Subramaniam Swamy, Chandra Swami completely disregarded repeated attempts by CBI to get him for examination...During this intervening period between the order of Delhi High Court and the date of his appearance I was abruptly transferred out of CBI. (Judging the judges: Ed. K. Mahesh, Bishwajit Bhattacharyya, Gyan Books, 1999 பக்.200)
இந்த விசயத்தில் சுசாமி சோனியாவின் முன்னோடி. என்.கே.சிங் இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய கட்டுரையும் கூகிளில் கிடைக்கும் படித்து பார்க்கவும். மட்டுமல்ல இந்த இடைத்தரகனை ஏதோ ஆர்.எஸ்.எஸ்தான் தாக்குவது போல பேசவும் சுசாமி தயங்கவில்லை. சுசாமியின் வார்த்தைகளிலே: ”This gang which by now included the RSS, picked on Chandraswami because he was vulnerable on other matters, and thus they made proximity with him a crime, thinking by that some of us would cut and run.” இதற்கு அவர் காரணத்தையும் சொல்கிறார். சுசாமி இருந்த சந்திர சேகர் அரசு இந்த இடைத்தரகனை பயன்படுத்தி அயோத்தி சன்னியாசிகளை ராம ஜென்மபூமி இயக்கத்தை உடைத்ததாம் -அநீ

Anonymous said...

//நீங்களே அவர் மீது வைக்கும் இந்த குற்றசாட்டுக்கு ஆதாரம் என்ன?//
//அவரும் சோனியாவும் ஒன்றுதான் என்றால் ஏதாவது நிரூபியுங்கள் //
குவட்ராச்சியை சோனியா எப்படி தப்பிக்க வைத்தாள் என்பது எல்லோருக்கும் நினைவிருக்கும். அவளது சேவக காங்கிரஸ் அரசுகள் எப்படி தப்ப வைத்தன என்பதும் நினைவிருக்கும். க்வட்ராச்சி போலவே ஒரு ஊழல் இடைத்தரகனாக செயல்பட்ட சந்திராசாமியை எவரும் மறந்திருக்க முடியாது. குவட்ராச்சியை தப்ப வைக்க வழிமுறைகளை சொல்லி கொடுக்கும் ஒரு முன்னோடியாகவே சுசாமி திகழ்ந்திருக்கிறார். அப்போது சிபிஐ அதிகாரியாக இருந்த என்.கே.சிங் எழுதுகிறார்: “Under my instructions the CBI opposed grant or anticipatory bail to (Chandra Swami) when the matter came up for regular hearing. ...Basking under the patronage of the then Prime Minister Chandrashekar and the Law Minister Subramaniam Swamy, Chandra Swami completely disregarded repeated attempts by CBI to get him for examination...During this intervening period between the order of Delhi High Court and the date of his appearance I was abruptly transferred out of CBI. (Judging the judges: Ed. K. Mahesh, Bishwajit Bhattacharyya, Gyan Books, 1999 பக்.200)
இந்த விசயத்தில் சுசாமி சோனியாவின் முன்னோடி. என்.கே.சிங் இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய கட்டுரையும் கூகிளில் கிடைக்கும் படித்து பார்க்கவும். -அநீ

Anonymous said...

மட்டுமல்ல இந்த இடைத்தரகனை ஏதோ ஆர்.எஸ்.எஸ்தான் தாக்குவது போல பேசவும் சுசாமி தயங்கவில்லை. சுசாமியின் வார்த்தைகளிலே: ”This gang which by now included the RSS, picked on Chandraswami because he was vulnerable on other matters, and thus they made proximity with him a crime, thinking by that some of us would cut and run.” இதற்கு அவர் காரணத்தையும் சொல்கிறார். சுசாமி இருந்த சந்திர சேகர் அரசு இந்த இடைத்தரகனை பயன்படுத்தி அயோத்தி சன்னியாசிகளை ராம ஜென்மபூமி இயக்கத்தை உடைத்ததாம் -அநீ

Anonymous said...

ஹ பி

சு சுவாமியை இணையத்தில் தாக்கும் பெரும்பாலோனோருக்கு ஜாதி துவேஷமே முதல் காரணம். அதனால்தான் அந்த அனானியின் கமெண்ட்டுக்கு நான் அந்த அர்த்தம் கற்பித்தேன். நான் கேட்ட மற்ற கேள்விகளுக்கு எல்லாம் அமைதியாக இருந்து விட்டு அல்லது வக்கீலை வைத்து வாதித்து விட்டு :)) ஜாதி என்றவுடன் துள்ளிக் குதித்து வந்து விஷயத்தைத் திசை திருப்புகிறீர்களே நியாயமா? நீங்கள் கூடத்தான் எந்திரன் படத்தைப் பாருங்கள் என்று ஒரு தளத்திலும் சன் குழுமத்தின் அராஜகம் என்று இன்னொரு தளத்திலும் எழுதினீர்கள் அந்த ஃபிளிப் ப்ளாப்புக்கு எல்லாம் நான் உங்களை கோமாளி என்றா அழைத்தேன் ? :)) சுவாமி செய்வதில் நல்லது இருந்தால் பாராட்டுங்கள் உற்சாகப் படுத்துங்கள் பழசைக் கிளறி உற்சாகமாகச் செயல் படுபவரையும் துரத்தி அடிக்காதீர்கள் என்றேன் அதுக்குப் போய் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து பெரிய பெரிய லாயரை எல்லாம் இறக்கி விட்டீர்களே? :))

அரவிந்தன்

நான் ஜாதி குறித்துச் சொன்னது ஒரு பெயரிடப் படாத அனானியின் பதிவுக்கு அந்தப் பதிலையும் இப்பொழுது காணவில்லை. உங்களிடம் கேட்டதற்கு மட்டும் நீங்கள் பதில் சொல்லவும்.

சுவாமியும் சந்திரசேகரும் என்னமோ ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்தது போலவும் சி பி ஐ யினால் அதனால் சந்திராசாமியைப் பிடிக்க முடியாமல் போனதாகவும் அல்லவா புளுகுகிறார். சுவாமி இருந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னாலும் பின்னாலும் அதே சி பி ஐ சந்திரசுவாமி விஷயத்தில் என்ன செய்து கிழித்து விட்டது? இதெல்லாம் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் சொல்லும் சால்ஜாப்பு. ஆடத்தெரியாத நாட்டியக்காரியின் கதை. இதே என் கே சிங் தானே இப்பொழுது ராடியா டேப்பில் மாட்டிக் கொண்டிருக்கும் ப்ரோக்கர். அல்லது அது வேற என் கே சிங்கா? அடுத்த முறையாவது யாராவது ப்ரோக்கர் இல்லாத ஆள் எழுதியதைத் தேடி எடுத்துப் போடுங்கள்.

ஐயா நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கு ஒரு விஷயம் புரிய மாட்டேன் என்கிறது

தொடரும்...

ச.திருமலை

Anonymous said...

சுவாமி பல்வேறு தருணங்களில் அந்தந்தக் காலத்தில் அவருக்குக் கிடைக்கும் தகவல்களின் பேரில் ஒரு சில கருத்துக்களையும் கண்டனங்களையும் வைக்கிறார். இப்பொழுது அவர் எடுத்து வரும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் நமக்கு பலனாக உள்ளன. ஒன்று அதைப் போல இன்னும் பல பிரச்சினைகளுக்கு அவரைப் போல பிரசாந்த் பூஷனைப் போல சட்டபூர்வமான வழிமுறைகளை இந்து இயக்கங்களும் தீவீரமாகச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் செய்பவர்களை பழிக்காமல் சும்மாவாவது இருக்க வேண்டும்.

மேல் விஷாரத்தைப் பொருத்தவரை இந்து இயக்கங்களின் பங்கை நான் மறுக்கவில்லை அவை போதாதவை என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். பத்து பேர்கள் படிக்கும் பத்திரிகையிலும் ஐந்து பேர்கள் மட்டும் படிக்கும் இணையத்திலும் புலம்பிக் கொண்டிருப்பதை விட சுப்ரீம் கோர்ட்டுக்கு பிரச்சினையை எடுத்துச் செல்லாமல் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டாது. அதை ஏன் எந்த இந்து இயக்கங்களும் செய்ய முன் வரவில்லை என்பதே என் கேள்வி. நீங்களும் செய்ய மாட்டீர்கள் செய்பவனையும் ஜோக்கர் என்பீர்கள் தானும் படுக்க மாட்டீர்கள் தள்ளியும் படுக்க மாட்டீர்கள். மேல் விஷாரம் மட்டும் அல்ல ராமர் சேது, இஸ்லாமிய வங்கி, இந்துக் கோவில், திருப்பதி என்று அனைத்துப் பிரச்சினைகளையும் கவனத்திற்குக் கொண்டு வந்ததே ஆரம்பத்தில் போராடியதே இந்து இயக்கங்கள்தான். ஆனால் அது மட்டும் போதாது. சுவாமி போன்ற சட்ட ஆக்டிவிசமும் தேவை. அதைச் செய்வதற்கு ஒருவர் இருக்கிறார் என்னும் பொழுது பயன் படுத்திக் கொள்ளுங்கள் தூற்றாதீர்கள். அப்படித்தான் தொடர்ந்து பழைய விஷயங்களைப் பேசிப் பேசி சுவாமியை பழிப்பீர்கள் என்றால் தாராளமாக்ச் செய்து கொள்ளுங்கள் நஷ்டம் அவருக்கு அல்ல

அன்புடன்
ச.திருமலை

Dr Rama Krishnan said...

Mr Thirumalli,I agree with you sir completely.Thank you sir.
Mr SS had worked tirelessly for the last 5 years for the Hindu cause.Calling him a joker by Mr Nilakandaji leaves a bad taste in the mouth.Pray tells us Mr Nilakandaji,how Mr SS's past actions are relevant to the Hindu cause at present? What EXACTLY he had done now to raise your ire? Can you honestly say that BJP/Hindu organizations have done more than him in the last five years against this anti Hindu UPA mob? Let us at least thank him for the AWARENESS he had raised in the docile Hindus.
Great men admit their mistakes and I honestly feel Mr AN will not be an exception.
Rama

Anonymous said...

//பயன் படுத்திக் கொள்ளுங்கள் தூற்றாதீர்கள்//
நான் சொல்வது - பயன்படுத்திக் கொள்ளுங்கள் நம்பாதீர்கள்.

இன்னும் நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. சீனாவுடனான இந்திய எல்லை நிலைபாடுகள் போலி பிரிட்டிஷ் தாஸ்தாவேஜுகளை அடிப்படையாக கொண்டவை என்பதை தனது நூலில் சாமி சாமர்த்தியமாக நுழைத்தது (இது நடந்தது ஐந்து வருடங்களுக்குள்) நம்பகமானதுதானா? ராம சேது குறித்து பிற ஹிந்து அமைப்புகள் எதுவுமே கேஸ் போடவில்லையா அல்லது அந்த கேஸில் சுசாமி ஒரு வழக்கு போட்ட பலரில் ஒருவரா? நாளைக்கு ஹிந்துத்துவம் என்பதே நாசியிசம் என சுசாமி சொல்லமாட்டார் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? இன்றைக்கும் சாமியின் வெப்ஸைட்டில் ஆர்.எஸ்.எஸ் முஸ்லீம் வெறுப்பு இயக்கமே தவிர ஹிந்துக்களின் நன்மையில் ஆர்வம் கொண்ட இயக்கமல்ல என சுசாமி எழுதியிருப்பதை வைத்திருக்கிறாரே, இந்த நிலைபாட்டிலிருந்து மாறிவிட்டாரா இல்லையா?

அப்புணி சுப்புணி said...

சுசா கேஸ்கள் போட்டதெல்லாம் சரிதான். ஆனால், எந்த கேஸையாவது ஜெயித்திருக்கிறாரா?

எந்த கேஸிலாவது இந்துக்களுக்கு நன்மை நடந்திருக்கிறதா?

Anonymous said...

அரவிந்தன்

நான் ஏற்கனவே அனைத்துக்கும் பதில் சொல்லி விட்டேன். இதற்கு மேலே உங்களிடம் இது குறித்துப் பேச எதுவும் இல்லை. சாமி மட்டும் இன்றி ராதா ராஜன் போன்ற ஆக்டிவிஸ்டுகள் மீதும் உங்களுக்கு பொறாமையும் காழ்ப்பும் வன்மமும் , மேட்டிமைத்தனமும் மட்டுமே நிறைந்துள்ளது. ராமர் சேது கேஸில் பி ஜே பி தரப்பில் சொதப்பியிருந்த படியால் சுவாமியிடம் கேசை நடத்துமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆர் எஸ் எஸ் வேண்டுகோளின் படியே அவரும் தன்னை ஒரு மனுதாரராக இணைத்துக் கொண்டு வழக்காடி வருகிறார்.

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

அரவிந்தன்

நான் சொல்லுவது உங்களுக்குப் புரிவதேயில்லை. இந்து இயக்கங்களைப் பொருத்தவரை அல்லது எந்த இயக்கங்களையும் பொருத்தவரை, சித்தாந்தவாதிகள், கொள்கை வகுப்பாளர்கள், திட்டமிடுபவர்கள், பேச்சாளர்கள், கொள்கை பரப்புபவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என்று பலரும் இருப்பார்கள். ஆனால் அதே சித்தாந்த்தத்தில் இருந்து சற்று விலகியோ ஒட்டியோ அவர்களுடன் இணைந்து செயல் படாத சுதந்திரமான பல செயல்பாட்டாளர்களும் இருப்பார்கள். அவர்களுடைய சிந்தனையும் செயல்களும் இயக்கத்தின் விதி முறையின் கீழ வராது அல்லது அதற்கு அடிமைப் பட்டு நடவாது. அவர்கள் தன்னிச்சையாக இயங்குபவர்கள். ஆனால் அவர்களாலும் பல காரியங்கள் சாதிக்கப் படும். அவர்களை இயக்கங்கள் எந்த அளவுக்கு அனுசரித்து அவர்களின் திறமைகளை தங்களது இயக்கங்களின் வளர்ச்சிக்குப் பயன் படுத்திக் கொள்கிறார்களோ அந்த அளவுக்கு அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சுவாமி இந்துத்துவவாதியாக இருந்தாலும் அவர் இந்துத்துபவ இயக்கங்களின் அதிகாரத்திற்குக் கட்டுப் பட்டவர் அல்லர். பல சமயங்களில் அவரது பேச்சுக்களும் செயல்களும் இயக்கத்துக்கு ஒத்து வராதவையாகவே இருக்கும். சுவாமியைப் போலவே இன்னும் பல ஆக்டிவிஸ்டுகள் உள்ளார்கள். அவர்கள் அனைவரையும் எப்படி பயன் படுத்திக் கொள்வது என்பதில்தான் இயக்கத்தின் வெற்றி உள்ளது. உங்களை விட ஆர் எஸ் எஸ் ஸில் இருக்கும் பலர் புத்திசாலிகள் அவர்கள் அவரை உபயோகமாகப் பயன் படுத்திக் கொள்கிறார்கள். நீங்கள் அவர்களை அடித்து விரட்டி யாருக்கும் பயன் படாமல் செய்து விடுகிறீர்கள். ஒரு இயக்கத்தின் வெற்றிக்கு அடி மட்டத் தொண்டர்களில் இருந்து கொள்கை வகுக்கும் சித்தாந்தவாதிகள் பொருள் கொண்டு வருபவர்களைத் தவிர இவரைப் போன்ற கூர்மையான புத்திசாலிகளும் சட்ட நிபுணர்களும் இந்தியா போன்று சுப்ரீம் கோர்ட்டில் மட்டுமே பல்வேறு நியாயங்களைப் பெற முடியும் என்ற நாட்டில் அவசியம் தேவையே. அதைப் புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் சுவாமி போன்றவர்களைத் துரத்தி விடுவதிலேயே மும்முரமாக இருக்கிறீர்கள். பா ஜ க என்பது அரசியல் கட்சி. ஆர் எஸ் எஸ் என்பது சமூக இயக்கம், இரண்டிற்கும் சட்ட ரீதியாக கோர்ட்டுகளின் மூலமாக அவர்களின் லட்சியத்தை அடைவதில் வேண்டிய முனைப்பு இருப்பதில்லை அந்த வெற்றிடத்தை சுவாமி போன்ற ஆட்கள் நிரப்புகிறார்கள். சும்மா குட்டையைக் குழப்பி உதவ வருபவர்களையும் அடித்து விரட்டி விடாதீர்கள் என்கிறேன். புரியாமல் சும்மா சும்மா சீனா, ரஷ்யா என்று பழங்கதையைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவரிடம் நேரில் பேசிப் பார்த்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். உங்களைப் போலவே உண்மை தெரியாமல் கண் மூடித்தனமாக பலரையும் வெறுத்துக் கொண்டிருந்த நான் காலப்போக்கில் கிடைத்த நேரடி அனுபவங்கள் காரணமாக நிறையவே கருத்து மாறுதல் கொண்டுள்ளேன். ஒரே லட்சியம் உடையவர்கள் ஆனால் வேறு பாதையில் செல்பவர்கள் என்றால் அவர்களை எதிரிகளாக எண்ணுவதில்லை. அவர்களை முற்றிலும் வெறுக்க அடித்து வேறு பாதையில் செல்ல வைத்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றேன். இந்த்துத்துவம் என்பது உங்களைப் போன்ற அறிஞர்கள் சித்தாந்தவாதிகளின் ஒட்டு மொத்த பரம்பரைச் சொத்து அல்ல. அங்கு அர்ஜுன் சம்பத்துகளுக்கும், ராதா ராஜன்களுக்கும், சு சுவாமிகளுக்கும் அவர்களுக்கு உரிய வேறு வேறு தளங்களும் இடங்களும் உள்ளன. அதைப் புரிந்து கொண்டால் பிரச்சினையில்லை. இல்லாவிட்டால் ஒருவர் மற்றொருவரை வெறுப்புடன் அணுகி விரோதத்தை மட்டுமே வளர்க்கலாம். எனக்கு அனைவரும் வேண்டும். யாரையும் வெறுத்து ஒதுக்கும் லக்சுரி இன்றைய சூழலில் யாருக்கும் கிடையாது என்பதைப் புரிந்து கொள்தல் அவசியம்

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

//சாமி மட்டும் இன்றி ராதா ராஜன் போன்ற ஆக்டிவிஸ்டுகள் மீதும் உங்களுக்கு பொறாமையும் காழ்ப்பும் வன்மமும் , மேட்டிமைத்தனமும் மட்டுமே நிறைந்துள்ளது.//

ராதா ராஜன் இங்கே எங்கிருந்து சாமி வந்தார்?

Anonymous said...

//சாமி மட்டும் இன்றி ராதா ராஜன் போன்ற ஆக்டிவிஸ்டுகள் மீதும் உங்களுக்கு பொறாமையும் காழ்ப்பும் வன்மமும் , மேட்டிமைத்தனமும் மட்டுமே நிறைந்துள்ளது.//

இனி சுசாமியை காமெடியன் என்று சொல்வது கஷ்டம், திருமலை அந்த இடத்தை பிடித்திருக்கிறார்.

Anonymous said...

சரி சீரியஸாகவே பதில் சொல்கிறேன். ராதா ராஜனை பொறுத்தவரையில் அவரது சாதி குறித்த நிலைபாடு, காந்தி குறித்த நிலைபாடு ஆகியவற்றுடன் முரண்படுகிறேன். ஆனால் ராதா ராஜனை போல காந்தி முதல் மோடி வரை அனைவரையும் கீழாக பார்த்து கட்டுரைகள் எழுதிக் கொண்டு நடக்கவில்லை. திருமலை உங்கள் பிரச்சனை என்னவென்றால் உங்களுக்கு பிடித்தவர்களை பிறர் மிக மென்மையாக (ஹரன் பிரசன்னா) போல விமர்சித்தாலும் உங்களால் தாங்க முடியவில்லை. பதிலுக்கு எந்த வார்த்தையையும் தூக்கி எறிவீர்கள். உதாரணமாக ஹபியையும் என்னையும் ‘அன்னை சோனியாவின் தாசர்கள்’ என சொல்லியுள்ளீர்கள். அப்படி சொல்லும் படியாக நாங்கள் எழுதியுள்ளதை நீங்கள் காட்ட வேண்டும். சுசாமி சோனியா குறித்து சொன்ன சில அதீத விஷயங்களை கேள்வி கேட்டால் சோனியா தாசர்கள் ஆகிவிடுவார்களா? இதற்கு பெயர் என்ன? மீண்டும் சொல்கிறேன் சுசாமி சீனா குறித்த இந்திய எல்லை நிலைபாடுகள் போலி ஆவணங்கள் அடிப்படையில் உள்ளன என்கிறார். இது சீனா செய்த பிரச்சாரம். இந்தியா இதனை தெளிவாக மறுத்துள்ளது. இந்த சீன டுபாக்கூர் விஷயத்தை அவர் இதை ஏற்காத ஹிந்து சன்னியாசிகள் தலைவர்களால் நூல் வெளியிட செய்கிறார். அவர்கள் இதை படித்திருக்க வேண்டாமா என கேட்காதீர்கள். தயானந்த சரஸ்வதிக்கு 88 வயதுக்கு அவர் முழுக்க முழுக்க சாமி மீதான நம்பிக்கையில் அந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அந்த விசயத்தில் சுசாமி செய்தது தார்மீக தவறு. அவருடைய கருத்து பொதுவான ஹிந்துத்துவ கருத்துடன் கடுமையாக மாறுபடும் போது அதனை அவர் சொல்லியிருக்க வேண்டும். அது மனிதத்துவம். அடிப்படை மனிதத்துவம்.

ஹரன்பிரசன்னா said...

//பதிலுக்கு எந்த வார்த்தையையும் தூக்கி எறிவீர்கள். உதாரணமாக ஹபியையும் என்னையும் ‘அன்னை சோனியாவின் தாசர்கள்’ என சொல்லியுள்ளீர்கள்.//

இந்த விஷயத்தில் ஜோக்கரையும் மிஞ்சினார் நமது நண்பர் திருமலை. இத்தனைக்கும் என்னையும் அரவிந்தனையும் திருமலைக்கு தனிப்பட்ட முறையிலும் நன்றாகத் தெரியும். ஆனால், தனக்குப் பிடித்த ஒருவரை மென்மையாகவோ கடுமையாகவோ தாக்கினால், அவர்கள் மீது எந்த அளவுக்கும் பொய்யையும் அவதூறையும் வீசுவேன் என்று நடந்துகொண்டார். திராவிட அரசியலை கடுமையாக விமர்சித்து வரும் திருமலை, திராவிட அரசியல்வாதிகளைப் போலவே நடந்த தருணம் இது. அதுமட்டுமல்ல, கடுமை என்றால் வாய்க்கு வந்ததைப் பேசுவது என்பது திருமலையின் செயல்பாடு. அப்பட்டமான மடத்தனம் இது. இவருக்கு கோபம் வந்தால் கருணாநிதியையும் அரவிந்தன் நீலகண்டனையும் ஹிந்து இயக்கங்களையும் ஒரே போலத் திட்டுவாராம். இதைவிட மோசம் உண்டா?

Anonymous said...

ஹ பி

சோனியாவை எதிர்த்து சுவாமி ஒரு விஷயத்தைச் சொல்லுகிறார். அதற்காக அவரைக் கோமாளி என்று நீங்களும் அரவிந்தனும் திட்டி அது வெறும் யூகம் தான் என்றும் அதற்கு ஆதாரமே இல்லையென்றும் ஒரேடியாகப்0 பேசினீர்கள். அப்படி காங்கிரஸ்காரன் கூட சொல்லமாட்டான் என்னும் பொழுது உங்கள் இருவரையும் சோனியா தாசர்கள் என்று நான் சொன்னேன். இதில் என்ன தப்பு இருக்கிறது. நீங்கள் இருவரும் அப்படி இல்லை என்பது தெரிந்தாலும் கூட சுவாமி என்று வரும் பொழுது நீங்கள் இருவரும் சோனியாவின் அடிவருடியாக மாறி விடுகிறீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டச் சொன்னது. இதைக் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லையா என்ன? நாளைக்கே 2ஜியில் ராஜாவை எதிர்த்து சுவாமி கேஸ் போட்டபடியால் அவர் கோமாளி என்று நீங்கள் சொன்னால் உங்களை கருணாநிதியின் அடிவருடி என்று சொல்லாமல் வேறு எந்த வார்த்தையில் வர்ணிப்பது. சுவாமியைச் சொன்னதற்காக உங்கள் மீது நான் கோபம் கொண்டு நான் உங்களை சோனியாதாசன் என்று சொல்லவில்லை. உங்கள் கருத்தில் இருக்கும் அபத்தத்தைச் சுட்டிக்காட்டச் சொன்னது அது. இருவரையும் நன்கு தெரியும் என்பதற்காக பொது இடத்தில் உளறினால் அதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க வேண்டும் என்கிறீர்களா? தெரிந்தவர்கள் என்பதற்காக நான் இணையத்தில் ஏராளமான பேர்களை மிகக் காட்டமாக விமர்சிக்காமல் இருந்தது இல்லை. அது வேறு இது வேறு. தெரிந்தவர்கள் உளறினால் அமைதியாகப் போ என்கிறீர்கள்.

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

ஹ பி, அரவிந்தன்

திராவிட இயக்க அரசியல் பாணியில் தேவையில்லாமல் ஸ்பெக்ட்ரம் கேஸ் போன்ற ஒரு பிருமாண்டமான ஊழலை வெளியில் கொணர உதவிய ஒருவரைப் போய் அநாவசியமாகத் தாக்கியதால் ஒரு நியாயம் கருதி நான் உங்களைக் கண்டிக்க வேண்டி வந்தது. சுவாமியை எனக்கு தெரியாமல் இருந்திருந்தாலும் நான் இதையேதான் சொல்லியிருந்திருப்பேன். நண்பர்கள் என்று பார்த்தால் எனக்கு சுவாமியை விட நெருக்கமானவர்கள் நீங்கள்தான். சுவாமி இந்த அக்கப் போரையெல்லாம் படிக்கக் கூடப் போவதில்லை. அப்படியே படித்தாலும் ”உனக்கு வேற வேலை வெட்டி கிடையாதா” என்று கடிந்து கொண்டிருப்பார். மேலும் எனக்கு அவரால் ஒரு சுக்கு ஆதாயமும் கிடையாது.

நீங்கள் மென்மையாகச் சொன்னாலும் கடுமையாகச் சொன்னாலும் கோமாளி என்று அழைப்பது ஒரு வித நோய் மனநிலையே. அப்படி அழைத்தால் நமக்கு ஒரு முற்போக்கு இமேஜ் கிடைக்கும் என்பதிற்காகச் சொல்லப் படுவது.

இங்கு சுவாமி எனக்கு நண்பர் என்ற அடிப்படையிலேயே நான் இதைச் சொல்லவில்லை. அநாவசியமாக ஒரு விஸில் ப்ளோயரை நீங்கள் தாக்குவது தவறு என்பதற்காக நான் சொல்ல வந்ததே அது. அவரை எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பது கூட அவசியமேயில்லை. டிராஃபிக் ராமசாமியையோ, பயனீர் கோபி கிருஷ்ணனையோ நீங்கள் சொல்லியிருந்தால் கூட நான் இதே விதமாகத்தான் எதிர் வினை செய்திருப்பேன்.

நண்பர்கள் என்பதற்காக நான் எவரிடமும் எனக்குச் சரியென்று தோன்றுவதை சொல்லாமல் போனதும் இல்லை. ஆக சுவாமி என் நண்பர் என்பதிற்காக நான் உங்களைத் தாக்குகிறேன் என்ற பெயிண்ட் எல்லாம் அடிக்க வேண்டாம். பா ரா, ஆர் வி, அரவிந்தன்,பத்ரி, ரஜினி ராம்கி என்று ஏகப் பட்ட நண்பர்களிடம் பல முறை கடுமையாக கருத்து வேறுபாடு கொண்டதை நன்கு அறிந்தும் இப்படி மொட்டையடி அடிக்கிறீர்கள். நண்பர்கள் தெரிந்தவர்கள் உறவினர்கள் என்றெல்லாம் பார்த்து எதையும் சொல்வதில்லை. ஏன் இட்லி வடையைக் கூட நான் பல முறை கடுமையாகக் கண்டித்து மடல் போட்டிருக்கிறேனே. நான் உங்களை சோனியா தாசன் என்று சொன்னது உங்கள் நிலைப்பாட்டை நக்கல் செய்யும் நோக்கத்தில் அன்றி உண்மையான குற்றசாட்டாக அல்ல. சுவாமியைத் தாக்க வேண்டும் என்றால் உங்களுக்கு சோனியா கூட உத்தமராகி விடுகிறாரே என்ற கிண்டலில் நான் சொன்னதுதான் சோனியா தாசர்கள் என்று.

இதற்குக் கூடவா கோனார் நோட்ஸ் போட முடியும்? நான் இதற்கு முன்னால் எந்திரன் பட விவகாரத்தில் உங்களுடன் கடுமையாக சண்டை போட்டேனே அது எந்த நண்பருக்காக? இணையத்தில் சுவாமியை வெறுக்காத தமிழர்கள் வெகு அரிது. அவர்களுடனா நான் போய் விவாதம் புரிந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் நோக்கம் எனக்குத் தெரிந்தது. நீங்கள் நண்பர்கள் என்பதினால் உரிமையுடன் கடிந்து கொண்டேன்.

எப்படியோ இட்லி வடை வாசகர்களுக்கு நம்மை வைத்து நன்றாகப் பொழுது போயிருக்கும். சுவாமி காமெடியனோ இல்லையோ இட்லி வடை நம்மை வைத்து நன்றாக காமெடி கீமெடி எல்லாம் செய்து விட்டார் :)) இதன் மூலம் சுவாமி பற்றி ஒரு பார்வை பிறருக்குக் கிட்டியிருந்திருக்கலாம். நீங்கள் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். அடுத்து ஏதாவது பிரச்சினையில் ஆதரவாளராகவோ எதிர்ப்பாளராகவோ சந்திக்கும் வரை இடைவேளை. இதுக்கு மேலே எனக்கு இந்த வம்பில் நேரமில்லை. ஷோ முடிந்தது எல்லோரும் வீட்டுக்குப் போங்கப்பா.

அன்புடன்
ச.திருமலை

RedChipRobot said...

Now that Mr. Thirumalai has given interval, Jokers Haran Prasanna & Aravindan Nilakandan can also take rest and come back with renewed vigour to safely call people like Dr. Swamy, who don't have rowdies as their party workers, Jokers.

தாறுமாறு said...

அரவிந்தன்,

ஒரு கேள்வி.

இந்திய/சீன எல்லை குறித்த, ஒழுங்காக வரையறுக்கப்பட்ட சர்வே ஆவணம் நம்மிடம் உள்ளதா?
மக்மாஹன் லைன் ஒரு டுபாக்குர் டாகுமெண்ட் என்று பிரிட்டிஷே off the record ஆக ஒப்புக் கொண்டுள்ளனர். ராட்க்ளிஃப் லைன் போல்
அது தெளிவாக சர்வே செய்யப்பட்டதல்ல. அதற்குக் காரணம் அந்த இடத்தின் பனி படர்ந்த கடும் மலை சார்ந்த நிலப்பரப்பு அக்காலத்திய சாதனங்களுக்கு
மீறிய ஒரு காரியமாக இருந்தது. ஒரு குருட்டாம் போக்கில் போட்டதுதான் மக்மாஹன் லைன். இது உண்மை. இதை ஒத்துக்கொள்வதால் நாம் ஒன்றும் குறைந்து
போய்விட மாட்டோம். ஒரு தவறை ஒத்துக் கொள்வதற்கு மிகுந்த மனத்திண்மை வேண்டும். இந்தியாவின் வட கிழக்குப் பகுதி, அஸ்ஸாம், மணிப்பூர் தவிர
பிற பாகங்கள் ஒரு தெளிவற்ற வரலாற்றின் கீழ் வருபவை. அவற்றை ஒரு நாட்டின் கீழ் இணப்பது அவ்வளவு சுலபமல்ல.
அதே போல், அவர்கள் சீனாவின் கீழும் வர மாட்டார்கள். அதாவது அவர்கள் ஒரு தனி பிரதேசமாக, பழங்குடி சமுதாயமாக இருந்தவர்கள்.
எனவே, இந்தியாவும், சீனாவும், இதை sincere ஆக உட்கார்ந்து பேசித் தீர்க்கவேண்டும். No grandstanding please.

Arun Ambie said...

சுப்பிரமணியன் சுவாமி பற்றிய சர்ச்சை இந்த நேரத்தில் தேவையற்றது. தவறு செய்யாத அரசியல்வாதிகள் எவருமில்லை. ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து கராச்சி வரையிலான பகுதிகளைப் பிடித்துக் கொண்ட போது (1965 Indo-Pak war) அடித்துப் பேசி காஷ்மீரிலிருந்து அவர்களை விரட்ட இருந்த சுலபமான வழியை KGBக்காகவும் யாசர் அராஃபத்துக்ககவும் விட்டுக் கொடுத்து உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தைக் கேலிக்கூத்தாக்கிய இந்திராகாந்தியின் பரம்பரையைத் தூக்கி நிறுத்தும் கும்பலுக்கெதிராக அவர் இப்போது செயல்படுகிறார். (ஒழுகிவந்த சோவியத் ஆவணங்கள் லால் பகதூர் சாஸ்திரியும், காப்பாற்ற வழியிருந்தும் KGBஆல் சாக விடப்பட்டார் என்கிறது.)

சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த பல வழக்குகள் இன்று ஹிந்து சமுதாயத்தின் பக்கமிருக்கும் நியாயத்தை எடுத்துச் சொல்வனவாக இருக்கின்றன.

சீனா பற்றிய அவர் கருத்துக்கள் ஏற்புடையனவல்ல என்பது திண்ணம். ஆனால் வெளியுறவுக் கொள்கை என்ற ஒன்று நம் நாட்டு நலன் பேண இருப்பது என்பது பற்றியே மாற்றுக் க்ருத்துக்கொண்ட பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் இருக்கும் போது நாம் இதை வைத்துச் சுப்பிரமணியன் சுவாமியை எதிர்ப்பது தவறு. ஹிந்து சமுதாயம் சற்றே இராஜ தந்திரத்துடன் செயல்பட விழையுமானால் அதற்கு முதற்கண் சுப்பிரமணியன் சுவாமியை நன்கு பயன்படுத்திக் கொள்வதே.

He is an economist gone astray. Let us not make him a Hindu politician wasted by Hindus.
முன்செய்த மூடத்தனங்களைப் பேசி பின்வரும் நன்மைகளைப் பேணாது விடுவது பேதைமை. நிற்க.

தமிழக பாஜகவுக்கென்று ஒரு பத்திரிக்கை துவக்குங்கள், தொலைக்காட்சி துவக்குங்கள் என்று 2004ல் கடிதம் எழுதினேன். ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. வாய்ப்பே இல்லை என்றார் இல.கணேசன். தங்கபாலு முதற்கொண்டு விஜயகாந்த் வரை தமிழகத்தில் டிவி வைத்திருக்க்கிறார்கள். அவரவர் கருத்துக்களைப் பரப்புகிறார்கள். இவரோ அகரமுதல எழுத்தெல்லாம் அழகிரி முதற்றே உலகு என்று சொம்படிப்பது தவிர வேறெதுவும் உருப்படியாகச் செய்ததாக சமீபத்திய வரலாறு சொல்லவில்லை.

தமிழக காங்கிரசு குங்குமம் சுமக்கும் கழுதை என்றார் குமரி அனந்தன். தமிழக பாஜக குப்பை சுமக்கும் கோவேறு கழுதையாக இருக்கிறது. Unless they introspect and reform themselves to perform, தமிழக பாஜக விளங்கி உருப்படுவது கடினம்.

vivek.dgl said...

now days every one talking about saaru. Who is saaru. i dont think he is a good writer. Please dont entertain saaru. He is a waste guy