பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 31, 2010

இந்தியாவின் ஒரு பகுதி குஜராத் - சுபத்ரா

அசட்டுத் தைரியம் என்று ஒன்று சொல்வார்கள். சும்மா எதையோ செய்யப்போக அது குறிப்பிடத்தக்க ஒரு முடிவிற்குக் கொண்டுவந்து விட்டுவிடும். உதாரணத்திற்கு, இரண்டு கவிதைகள் எழுதி அதை இட்லிவடையில் போடமுடியுமா ? என்று சும்மா தான் கேட்டேன். வெளிவந்துவிட்டது :-)

அதைப்போலத்தான் ஹிந்தி, குஜராத்தி மொழிகளைத் தெரிந்திருக்காமலும் உணவுமுறை, பழக்கவழக்கங்கள் பற்றி எதுவும் அறிந்து கொள்ளாமலும் ஏற்கனவே பார்த்திருந்த ஒரு நல்ல வேலையை விட்டுவிட்டு ஒரு அசட்டுத்தைரியத்துடன் குஜராத்திற்கு வந்தேன். அப்போதைக்கெல்லாம் நான் குஜராத் பற்றி அறிந்திருந்தது டாண்டிய டேன்ஸ், குஜராத் நிலநடுக்கம், மதக்கலவரம் இம்மூன்று தான்!

“There is no red tapism in my state, all red carpets” அப்படி ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பையேற்று கோட்டைக்குள் நான் குடிபுகுந்து இதுவரை ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன !! :-) ”வைப்ரண்ட் குஜராத்” - (பேரக் கேட்டாலே அதிருதுனு சொல்றது இதுதானோ?)

குஜராத்துக்கு வந்ததிலிருந்து இங்கே நடக்கும் ஆட்சிமுறையைக் கண்கூடாகக் கண்டுவரும் நான் நவம்பர் மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்த சமயம் குஜராத்திலிருந்து முதல்வர் நரேந்திர மோடியும் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். என் அனுபவகளை இந்த கட்டுரையில் தருகிறேன்.

தமிழ்நாட்டுக்கு வந்த மோடி, அதிரடியாக அவர் ஆற்றிய உரையில் சில விஷயங்களை கூறியிருந்தார். 2G மற்றும் ஊழல் செய்திகளில் இது எல்லாம் மறைந்துவிட்டது. சிலவற்றை இங்கே தருகிறேன்

- தமிழகத்தின் வியாபரிகளைக் குஜராத்திற்கு வரவேற்றும் 24 மணிநேரமும் தடையில்லாத தரமான மின்சார இணைப்பு, சிறந்த உள்கட்டமைப்பு(infrastructure), ஒளிவுமறைவற்ற அரசாங்கம் ஆகியவற்றை வழங்குவதாகவும் கூறியிருந்தார்.

- கல்வி அளிப்பது ஒரு சமூக சேவை எனவும் வியாபார நோக்கில் கல்வி நிறுவனங்கள் செயல்படக்கூடாது எனவும் அத்தகைய எண்ணமுடையவர்கள் குஜராத்திற்கு வரவேண்டாம் என்றும் வெளியிடங்களில் உள்ள குஜராத் மக்கள் கூட இதை மனதில் வைத்தே செயல்படுவதாகவும் கூறினார். 60 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போக 13 சிறப்பு முதலீட்டு மண்டலங்களையும் நிறுவி தொழிற்சாலைகள் வளர்வதை ஊக்குவித்து வருவதாகவும் பேசினார்.

- பாராட்டு விழா இவரையும் விட்டு வைக்கவில்லை, ஆனால் அதிலும் வித்தியாசமாக, இதுவரை தன்னைப் பாராட்டி அன்பளிப்பாக வந்த ஏறத்தாழ 8,000 பொருள்களைச் சுமார் 20 கோடி ரூபாய்க்கு ஏலத்திற்கு விட்டு அந்தத் தொகை முழுவதையும் பெண் குழந்தைகளின் கல்விக்கெனப் பயன்படுத்தக் கொடுத்துள்ளார்..!

- காந்திஜி கூறியது போல இரவு நள்ளிரவில் கூட பெண்கள் சாலைகளில் தனியே நடந்துபோக குஜராத்தில் சாத்தியமுண்டு! (Dry State என்பதாலா?)

நான் வேலை செய்யும் வங்கிக்கு வருகை தரும் பல்வேறுபட்ட வாடிக்கையாளர்களிடம் அணுகியபோதும் அவர்களிடம் தனியே உரையாடிய போதும் குஜராத்தில் நடைபெறும் நல்லாட்சியைப் பற்றி நான் அறிந்துகொண்டவை அதிகம். என்னுடைய ஒன்றரை ஆண்டு குஜராத் வாசத்தில் ஒருமுறையேனும் ஒருவர்கூட இங்கு நிலவும் ஆட்சியைப் பற்றிக் குறைகூறி நான் கேட்டதில்லை! இங்கே அரசியல் கட்சி ஆர்ப்பாட்டங்கள் இல்லை. இலவச மின்சாரம் என்று அறிவித்துவிட்டு மின்சாரத்தைத் துண்டித்துவிடும் அவலம் இல்லை!

”சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்பதை ஆதரிக்கும் வகையில் விவசாயத்துறையில் பல்வேறு நவீன யுத்திகளைப் பயன்படுத்தியும் பல பயனுள்ள செயல்திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி ஊக்குவித்தும் லாபம் கண்டு வருவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. மேலும் SME(Small and Medium Enterprises) துறையினரும் குஜராத்தில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த தேர்தலைக் குறிவைக்காமல் அடுத்த தலைமுறையினரின் நலனைக் குறிவைத்து நலத்திட்டங்களை நிறுவிச் செயல்படுத்தி வரும் இதைப்போன்ற அரசே நல்லரசாக இருக்கமுடியும்…!

மேலும் ”CONVENIENT ACTION – GUJARAT’S RESPONSE TO CLIMATE CHANGE” என்று தற்போது பெரிதாகப் பேசப்பட்டுவரும் பருவ நிலை மாற்றத்தைப் பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார் திரு.மோடி அவர்கள். முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல்கலாம் அவர்களும் 2007-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை IPCC மற்றும் அல்கோரேயுடன் பகிர்ந்துகொண்ட திரு. ஆர்.கே.பச்சோரி அவர்களும் அந்தப் புத்தகத்தைச் சிறந்த படைப்பு என விமர்சனம் செய்துள்ளனர்.

“Generally after a rainfall, the rainwater disappears; in our places soon after the rainfall, the road disappears” இதைப்போன்ற சாலைகளை மட்டுமே பெருமளவில் நம்மூரில் பார்த்துப் பழகிய கண்களுக்குக் குஜராத்தின் பரந்து விரிந்த அகலமான சாலைகள் மகிழ்ச்சியைத் தந்தன. நம் அளவிற்கு நவீனப் பேருந்துகள் இங்கே அரிது என்றாலும், பேருந்தில் ஏறியவுடன் வில்லா, குருவியா, வேட்டைக்காரனா என்பதைப் போன்ற எந்தவித அச்சப்பாடும் இல்லாமல் ஏறலாம். அவரவர்க்குப் பிடித்த பாடல்களை அவரவர் அமைதியாகக் கேட்டுக்கொண்டு வரலாம். புத்தகம் படிக்கலாம். ப்ளாகில் எழுதுவதற்காகக் கவிதையோ கட்டுரையோ கதையையோ பற்றி யோசிக்கலாம். குறிப்பாகக் கைப்பேசியில் ஆங்கிலம் கலக்காத செம்மொழியாம் தமிழ்மொழியில் சத்தமாக (நாம் மட்டும்) பே(ஏ)சிக்கொண்டே வரலாம். கேட்பவர்க்குப் புரியாது. அப்படியே புரிந்துகொண்டு செல்லமாக அவர்கள் நம்மைத் திட்டினாலும் அது என்னவென்று நமக்குப் புரியாது :-)
பேருந்தில் ஒருபாதியைப் பெண்களுக்காக ஒதுக்கிவைத்துப் பார்த்துப் பழகிய என் கண்களுக்கு ஒருவரையொருவர் யாரென்றே தெரியாதவர்கள் ஜோடிஜோடியாக அமர்ந்து பயணம் செய்வதைப் பார்ப்பது முதலில் வேடிக்கையாக இருந்து இப்போது வாடிக்கையாகிவிட்டது.

பள்ளியிலும் கல்லூரியிலும் இலக்கியப்பாடங்கள் பற்றிய வகுப்புகளில் முந்திரிக்கொட்டை போல பதில்சொல்லிப் பழகிவிட்டு அலுவலகத்தின் சார்பில் நடந்த குஜராத்தி மொழி வகுப்பில் திருதிருவென்று விழித்துக்கொண்டு இருந்ததை மறக்கவே முடியாது! ஒருமுறை வகுப்பில் ஹிந்தியில் மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வரியைக் கூற ஆசிரியர் அதைக் குஜராத்தியில் மொழிபெயர்த்துக் கூறிக்கொண்டே வந்தார். அப்போது என்முறை வர என்னால் ஹிந்தியில் எதுவும் சொல்லமுடியாமல் போக, தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டிருந்தேன். உடனே வகுப்பில் அமர்ந்திருந்த என்னுடன் பணியில் சேர்ந்திருந்த தமிழ் மாணவர் ஒருவர் சிறிதும் யோசிக்காமல் “ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா” என்று படபடவென்று கூறிவிட்டு அமைதியாக இருந்துவிட ஆசிரியரும் அதைக் கடமையே கண்ணாக மொழிபெயர்த்து கரும்பலகையில் எழுதிக்கொண்டிருக்க அதைப் பார்த்தவுடன் எனக்கு அழுத கண்ணீரெல்லாம் ஆனந்தக்கண்ணீர் ஆகிவிட்டது :-)

குஜராத் என்றாலே நவராத்திரி நாட்கள் தான் முதலில் நம் நினைவுக்கு வருபவை. நவராத்திரி ஸ்பெஷல் சோளிகளை அணிந்துகொண்டும் அழகாக அலங்கரித்துக் கொண்டும் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என அனைத்து வயது பெண்களும் கூடிநின்று “கர்பா” ஆடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். திருமணம் போன்ற சடங்குகளின் போதும் கூட இதைப்போன்ற நடனங்கள் தெருக்களை அமர்க்களப்படுத்தும். பல சமயங்களில் வாகனப் போக்குவரத்திற்கு இவை இடையூறை ஏற்படுத்தினாலும் கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் சாலையில் செல்லும் பிறமனிதர்களைப் பார்க்கும்போது கொஞ்சம் ஆச்சர்யப்படுவதை மீறி அவர்கள்மீது நமக்குப் பொறாமை ஏற்படுவதை உணர்ந்து கொள்ள முடியும்.

இனிப்பு வகைகளுக்குப் பெயர்போன குஜராத்தில் மக்கள் மிகவும் இனிமையானவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை! ஆனால் அதற்காக எல்லா உணவுகளிலும் சிறிது வெல்லமோ சர்க்கரையோ சேர்த்துச் சமைப்பது..?! ஆளவந்தானில் ”கடவுள் பாதி; மிருகம் பாதி; இரண்டும் கலந்த கலவை நான்” என்று வருவதைப் போல இனிப்பையும் உரைப்பையும் கலந்து உண்ணுவதென்பது புதிதாக வந்த அப்போதைக்கு எனக்கு %$@!@&*(%#!!!!. ஆனால் பஞ்சாபி, காட்டியாவாடி, சைனீஸ், இட்டாலியன் மற்றும் தென்னிந்திய உணவுகள் போன்றவற்றைப் பறிமாறும் ரெஸ்டரண்டுகளும் இங்கு நிறைய உள்ளன. என்ன, இங்கே அசைவ உணவுப் பிரியர்களுக்குக் கொஞ்சம் கஷ்டம் தான். பேச்சலர்களுக்குத் தங்குவதற்கு வீடு கிடைப்பது எவ்வளவு கஷ்டமோ அதைவிடக் கஷ்டம் அசைவம் உண்பவர்க்கு! எனக்குத் தெரிந்து எனது பிறமாநில வட இந்திய நண்பர்கள் பலர் அசைவம் உண்பதை நான்குச் சுவர்களுக்குள் ரகசியமாகவே செய்து வருகின்றனர் :-)

இதை நான் சொல்லியே ஆகவேண்டும்! விடுமுறைகள் எடுத்துக்கொண்டு ஊருக்கு நான் வந்திருக்கும் நாட்களில் குஜராத்தை நான் மிஸ் பண்ணுவதாக உணர்ந்தால் என்னளவில் அதற்கு ஒரே ஒரு முக்கிய காரணம் தான் இருக்க முடியும். அது சுடச் சுட(வேகத்தைச் சொன்னேன்) மசாலாவைப் பூரியினுள்ளே வைத்துப் பானியில் முக்கித் தட்டில் வைக்க வைக்க உடனுக்குடன் மாயமாக மறைந்து போகும் “பானிப்பூரி”யாகத் தான் இருக்கும்! :-) எவ்வளவு பார்த்துப் பார்த்து வீட்டில் அதே மாதிரி செய்து பார்த்தாலும் தெருவோரத் தள்ளுவண்டியில் வாங்கிச் சுவைத்த அந்தச் சுவை மட்டும் வரவே வராது!!

குஜராத்தைப் பற்றி நான் வேறு ஏதாவது சொல்லாமல் விட்டிருந்தால் அதை அடுத்த கட்டுரையில் சொல்லுகிறேன். போட தான் இட்லிவடை ரெடியாக இருக்கிறாரே :-)
என்று கூறிக்கொண்டு வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி என் உரையை முடிக்கிறேன்… நன்றி… வணக்கம்! அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்…!! :-)
அன்புடன்
சுபத்ரா @ http://subadhraspeaks.blogspot.com/

கட்டுரை ஆசிரியர் A.R.சுபத்ராதேவி. இளமறிவியல் கணிதவியல் பட்டதாரி. பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே திருநெல்வேலியில் தான். முன்னர் தமிழ்நாடு சிறப்புக் காவலில் ஜூனியர் அசிஸ்டெண்ட்டாகவும் பின் பாண்டியன் கிராம வங்கியிலும் பணியாற்றி தற்போது அகமதாபாத், குஜராத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வருகிறார். சிவில் சர்விஸஸ் தேர்வுக்கும் தயாராகி வருகிறார். ஒரே கெட்ட பழக்கம் கவிதை எழுதுவார்.

குஜராத்தில் திருநெல்வேலி அல்வா கிடைக்குமா ?

எல்லோருக்கும் இட்லிவடையின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Read More...

Tuesday, December 28, 2010

இரண்ய நாடகம் - சிறுகதை - JP

நன்கு செழித்து வளர்ந்த, பல வண்ண றெக்கைகள் மற்றும் பற்சக்கரம் போன்ற கொண்டை கொண்ட கிழட்டு சேவலின்,கழுத்தை 'கடக்' என்று அறுத்து ரத்தத்தை மூலைக்கொரு சொட்டு விட்டு தலையை கிழக்கு நோக்கி தூர வீசிவிட்டு, உடலை குழம்பு வைக்க அனுப்பி விட்டு, பூசாரியாகப்பட்டவர் கற்பூர ஆராதனை காட்டியவுடன் , கட்டியக்காரர்கள் " த்ரிலோகச் சக்ரவர்த்தி, கோப்பரகேசரி, அதல,ஸிதல,பாதாள மாதண்ட நாயகர், மாமன்னர் இரண்ய கசிபு வருகிறார்.பராக்!பராக்!.." என்று உரத்த குரலில் கத்திவிட்டு ஒதுங்கி நிற்க , இரண்யனாகிய கம்பளத்தான் முருகைய்யன், "ஆஹா!" என்று அந்தரத்தில் இருந்து குதித்து 'தாதிங்கே..தாதிங்கே" என்று காற்சலங்கைகள் 'ஜல்..ஜல்" என்று தெறிக்க , வெறியோடு ஆட்டமெடுத்தான்.

உருமியும்,கொட்டும் ஒங்கி முழங்கியது.ஜனங்கள் அந்த தை மாதக் குளிரில் பாறைகள் மீதும், கள்ளிச் செடிகளுக்கு கீழேயும் முட்டாக்கு போட்டுக் கொண்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் வரப்போகும் வரக் காப்பியை எதிர்பார்த்துக் கொண்டு,குத்துக்கால் போட்டு உட்கார்ந்திருந்தார்கள்.

கம்பளத்தானின் ஆட்டம் அசகாயமாக இருந்தது.இந்த வருடம் தான் முதன்முறையாக கூத்து கட்டுகிறான். அவனுடைய அப்பா படுத்த படுக்கையாகி ரொம்ப நாளானது.அவர் வருஷா வருஷம் கட்டும் இரண்ய வேஷம் முருகைய்யனுக்கு வந்தது.பரம நாஸ்திகனான அவனுக்கு பேரானந்தமாக இருந்தது.

பின்னே யாருக்கு வரும் வாய்ப்பு இந்த மாதிரி. ஜனங்கள் கும்பிடும் கடவுளை அவர்களுக்கு முன்னாலேயே இப்படி நாவாரத் திட்டும் வாய்ப்பு. மிக்க சந்தோஷமாக இடமும் வலமுமாக ராஜ நடை நடந்தான்.

உருமியும்,கொட்டும் ஓய்ந்து, நான்கு வயதுப் பிள்ளையின் நீளமுடைய முகமூடியை அணிந்து கொண்டு, தோள்களைத் தளுக்கிக் கொண்டு போய் அரியணையில் உட்கார்ந்து கட்டியக்காரர்களை பார்த்துக் கையசைத்தான்.

' செந்தூரூபார் இசை பாடாதே, இரண்ய ராஜா, இரண்ய ரூபா,
கொலுவுதன்னிலே வந்து தோன்றினாரே,
சூரார் கைகள் கட்டி நடுங்கிடவே..' என்று டோலக்கும், ஹார்மோனியமும் ஈனஸ்வரத்தில் ஒலிக்க பாட ஆரம்பித்தார்கள்.

பொவாக்கு தம்பி, டோலக்கை மாட்டுச் சாணத்தை சுவற்றில் தட்டியது போல் 'பொத்..பொத்'தென்று சாத்தினான்.கம்பளத்தான் இடது கையை அரியணைக்கு பின்னால் நீட்டி ஒரு கிளாஸ் சாரயத்தை வாங்கி பட்டென்று சாத்திவிட்டு, மந்தகாசப் புன்னகையுடன் உட்கார்ந்திருந்தான். இரண்ய அறிமுகப் படலம் நீண்டு கொண்டே போனது.

அவன் நாடகத்தில் இல்லாத சில பாடல்களை, எழுதி உருப் போட்டு வைத்திருந்தான். அத்தனையும் நாராயணனைநார் நாராகக் கிழிக்கும் பாடல்கள்.இன்றைக்கு வைத்து வாங்கிவிட வேண்டியதுதான்.பிரஹலாதான் வந்தால் தான் அது முடியும். வரட்டும் என்று கறுவிக் கொண்டிருந்தான். என்ன இருந்தாலும் தான் இறுதியில் தோற்கப் போகிறவன் என்று அவனுக்கு தெரியாமல் இல்லை. அதனால் என்ன. நரசிம்மர் , இரண்யனை வதம் செய்வது கடைசி பத்து நிமிடம்தான்.

ஆனால் அதுவரைக்கும் என் ராஜ்ஜியம்தான்.

இரண்ய அறிமுகம் முடிந்து வரக்காப்பி வினியோகம் ஆரம்பித்தவுடன், அவன் எழுந்து பின்னால் போனான். பிரகலாதனும், சுக்ராச்சாரியரும், இன்ன பிற முனிவர்களும், நான்கு எம கிங்கரர்களும் அவர்களுக்குரிய ஆடை, அலங்காரத்துடனும் , கையில் ஆளுக்கொரு கிளாஸ் சாரயத்துடனும் உட்கார்ந்திருந்தார்கள்.
மாலையில் ஆரம்பித்து, அதிகாலை வரை ஓயாமல் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பது சாராயத்தின் உதவியில்லாமல் சாத்தியமேயில்லை.

அவனைப் பார்த்தவுடன் எம கிங்கரர்கள் திடுமென கூட்டத்தில் புகுந்து , தூக்கக் கலக்கத்துடன் இருந்த நான்கைந்து பொடிசுகளை , அவர்கள் கதறக் கதறத் தூக்கிக் கொண்டு பின்னால் ஓடினார்கள். இது ஹேஸ்யத்துக்காக.அவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாயும், அரிசி முறுக்கும் கொடுத்து சமாதானப் படுத்தினார்கள்.

' டம், டம்' என்று டோலக் ஒலிக்க பிரகலாதன் வந்து அவன் பங்கிற்கு குதிக்க ஆரம்பித்தான். இரண்ய படலம் கொஞ்சம் நீண்டதில் அதிகமாகக் குடித்து விட்டான் போல. சில இடங்களில் தடுக்கி விழப் போனான். குழலூதும் கண்ணன் போல அபிநயம் பிடிக்க வேண்டிய ஒரு பாடலில், துடுப்பு வலிப்பவன் போல கைகளை வைத்திருந்தான்.

சுக்ராச்சாரியாரும், இன்ன பிற முனிவர்களும் அறிமுகப் படலத்தின் போது தாடியை நீவிக் கொண்டே தாளத்துக்கு ஏற்ற மாதிரி ஆடியும், அப்புறம், இப்புறம் நடந்தும் சுருதி கூட்டினார்கள். சிலர் தாடியைக் கொஞ்சம் அழுத்தி நீவியதில் அது கையோடு வந்தது.சிலர் பஞ்சகச்சம் சரியாகக் கட்டாமல் , அவிழ்ந்து, தடுக்கி, டோலக் தட்டிக் கொண்டிருந்த பொவாக்கு தம்பியின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்கள். சாரயத்துக்கு பதில் கள்தான் சரியானது என்ற அபிப்ராயம் மக்கள் மத்தியில் எழுந்ததாகக் காணப்பட்டது. அறிமுகப் படலம் மொத்தமாக முடிந்தபோது வரக்காப்பியோடு, வெங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை கலந்த சுண்டலும் விநியோகிக்கப்பட்டது.

அடுத்து வரும் இரண்ய தர்பாருக்கு முன் டோலக்கை சரி செய்து விடும்படி சிட்டேபாளையம் சுப்பைய நாய்க்கர் வந்து பொவாக்கு தம்பியை அன்பாக எச்சரித்து விட்டுப் போனார். இரண்யனின் இடுப்பில் கயிற்றைச் சுற்றி இரண்டு பக்கமும் இறுக்கிப் பிடித்திருந்தார்கள். அவ்வப்போது ஆவேசம் வந்து அவன் அரியணையில் இருந்து குதித்து பாட்டு பாட வேண்டும்.
ஆவேசம் அதிகமாகி கீழே விழுந்து தொலைத்தால் என்ன செய்வது. தர்பார் ஆரம்பித்தது.

முதல் நான்கு விருத்தங்கள் பிரகலாதன் ' அரி நாமத்தை' பற்றி பாடிய பின், இரண்யன் நான்கு விருத்தம் பாட வேண்டும் என்ற நாற்பது வருட பாரம்பரியத்தை முருகைய்யன் அன்று உடைத்தான்.முதல் விருத்தம் முடிந்தவுடனேயே எழுந்து குதித்து விட்டான். கயிற்றைப் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் காட்டெருமை, காட்டாறைத் தாண்டியது போல் கை,கால்களை பரப்பிக் கொண்டு விழுந்தார்கள். பயப்படாமல் எதிர்த்து நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுமாக நிற்க வேண்டிய பிரகலாதன் அவனுடைய ஆவேசத்தைப் பார்த்து அங்குமிங்குமாக ஓடினான்.

அவனை இழுத்துக் கொண்டுவந்து சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. முருகைய்யனின் ஆட்டம் பிரமாதமாக இருப்பதாக ஊர்த்தலைவர் சொல்லிவிட்டு மூக்கு பொடி ஒரு சிமிட்டா எடுத்துப் போட்டுக்கொண்டார். அடக்கி வைத்திருந்த அத்தனை நாஸ்திகக் கொதிப்பையும், கொந்தளிப்பையும் காட்டி விடும் வேகத்தில் இருந்தான்.

"சொல்லுவாயா அந்தப் பேரை" என்று சொல்லுமிடத்திலெல்லாம் குரல் யானை பிளிறியது போல் இருந்தது. பிரகலாதன் நிஜமாகவே, எங்கே முருகய்யன் கையில் வைத்திருக்கும் மரக்கத்தியினால் அடித்தே விடுவானோ என்று மிக்க பீதியில் இருந்தான்.



சம்பந்தமே இல்லாத இடத்தில் சம்பந்தமே இல்லாமல் அவன் பாடிய வசவுப் பாடல்களில், ஏக களேபரமாக இருந்தது. பவக்காளி வந்து அவன் காதில் எதையோ சொல்லிவிட்டு போனான். சுருதி மொத்தமாகத் தளர்ந்து விட்டது. அரியணையில் போய் கம்மென்று உட்கார்ந்து விட்டான். மற்றவர்கள் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் தொடர்ந்தார்கள்.

முன்னைப் போல ஆவேசம் அவனிடம் இல்லை. அசதியாக இருக்கலாம். அமைதியாகவே பாடினான். ஆனால் வசவில் குறை இல்லை.

இரவெல்லாம் தொடர்ந்த நாடகம் ,பகலும்,இரவும் இல்லாத அதிகாலை நேரம், நரசிம்மர் படுதாவின் மறைவிலிருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்தவுடன் முடிவுக்கு வந்தது. முகமூடியைக் கழற்றி தூர எறிந்துவிட்டு, ஓடினான் ஆஸ்பத்திரிக்கு.

பிரசவ வார்டுக்கு வெளியே பவக்காளி, துண்டை வாயால் பொத்திக் கொண்டு பூத் பூத்தென்று அழுது கொண்டிருந்தான்.

நிறைமாத கர்ப்பிணியான முருகைய்யனின் மனைவி அன்னம்மா, நடு ஜாமத்தில் கொல்லைப்புறம் போனபோது மாடு விலாவில் முட்டித் தள்ளிவிட்டது. நனைந்து பிழிந்த சேலை போல படுக்கையில் கிடந்தாள்.

' அன்னம்மாவுக்கு ஆபத்தில்லே..கொழந்தே செத்துப் பொறந்துச்சுடா முருகா" என்று கதறினான் பவக்காளி.

ஓரமாகப் போய் கைகளால், முகத்தைப் பொத்திக்கொண்டு விசும்பினான். வியர்வையிலும்,கண்ணீரிலும் அவன் பூசியிருந்த அரிதாரம் அவன் கைகளில் ஒட்டிக் கொண்டு வந்தபோது, அவளுக்கு மீண்டும் பிரசவ வலி எடுத்தது.

அரை மணி நேரம் கழித்து , ஆண் மகவு பிறந்திருப்பதாக குண்டு டாக்டர் சொல்லி விட்டு போனார்.

பவக்காளி இரு கைகளையும் உயர்த்தி கண்ணீர் வழிய கும்பிட்டுவிட்டு " அந்த நாரயணனே உனக்கு மகனா வந்து பொறந்திருக்காண்டா முருகா..!" என்றான்.

கம்பளத்தான் முருகைய்யன் எதையோ ஆக்ரோஷமாக சொல்ல வாயெடுத்தான்.

வார்த்தை வரவில்லை.

- Parthasarathi Jayabalan
( parthasarathij89@gmail.com )

Read More...

2011ல் வரப்போகும் தமிழ் (உலக) சினிமா - ரவி நடராஜன்

யாராவது விருத்தகிரி போன்ற மொக்கை பட விமர்சன்த்தைப் பார்த்து மேலும் எழுதுவார்களா? சத்தியமாக அப்படிப்பட்ட ஜீவன்கள் இந்த உலகில் இருப்பதற்கு இந்த பதிவு ஒரு சான்று. அட, 2010 போயே போய்விட்ட்து. 2011 ல் தமிழ் சினிமா எப்படி எல்லாம் நம்மை வாட்டி எடுக்கப் போகிறது என்று நினைத்தாலே கலக்குகிறது.
பொதுவாக ஹாலிவுட் மொக்கைப் படங்கள் நம்மூர் சினிமாவின் முன்னோடி என்பது என் செல்லத் தியரி. 2010 ல் வந்த 3 மகா மொ.படங்கள் அடுத்த வருடம் தழுவி நம்மை தமிழில் வாட்டி எடுக்க சீரியஸான வாய்ப்பு இருக்கு என்பது என் கிரிஸ்டல் பந்தில் தெரிந்து தொலைத்து விட்ட்து!


முதலாவது காவியம் 2012 என்ற உலகம் அழியும் பூச்சாண்டி பூச்சூடல். அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் பார்க்கில் தொடங்கி ஒரே களேபரம் மற்றும் குழப்பம். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்ஸிடம் ஹாலிவுட் சரணமடைந்து 1 மணி நேரம் நம்மை எல்லாம் படுத்தி எடுத்து விட்டார்கள். அப்பளம் சுடுவதைப் போல கண்டதை எல்லாம் சுடுகிறார்கள். சென்னை பல்கலைக்கழக நிலவியல் பேராசிரியர் டில்லியருகே ஒரு சுறங்கத்தில் உலகம் அழியப் போவதை கண்டுபிடிக்கிறார். அட்டா, நம் புவியியலைப் பற்றி ஹாலிவுட்டின் அறிவு மெய்சிலிர்க்க வைக்கிறது. எனக்குத் தெரிந்தவரை, டில்லியருகே எந்த சுரங்கமும் இல்லை – 2ஜி ராசாவைத்தான் கேட்க வேண்டும்! விஜய்காந்த் பாணியில் இந்த படத்தில், உலகம் அழியும் நேரத்தில் கூட, தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு பெரிய படகை உருவாக்குமாறு சைனாவிடம் அமெரிக்கா அவுட்சோர்ஸ் செய்வது ஒரே ட்மாஸ். இப்படத்தில் உள்ள ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் நிச்சயமாக 2011 ல் கோடம்பாக்கத்தில் சைனா அனெமேட்டர்களுடன், ‘ஹாலிவுட்டே வியக்கும் வித்த்தில்’ என்ற ரேஞ்சுக்கு அலட்டுவார்கள்.
இரண்டாவது காவியம் டாம் க்ரூஸ் வந்து போன (நடித்த என்று எல்லாம் சொல்லி அடிவாங்க விருப்பமில்லை) Knight and Day என்ற அபத்தம். பறக்கும் விமானத்தில் எல்லோரையும் (விமானி உட்பட) சுட்டுத் தள்ளும் நேரத்தில் பாத்ரூமில் கதாநாயகி அலங்காரம் செய்து கொள்கிறார். சத்தியமாக இது விஜய் படமில்லை. இதற்கு பின், ஷாம்பெயின் அருந்திவிட்டு, விமானத்தை ஒரு வயலில் இறக்கி வெடிக்கும் விமானத்தின் பின்னணியில் மெதுவாக நடந்து செல்கிறார். அட்டா, இன்னா ஹீரோயிசம்! ஓடும் காரில் சுடுகிறார், பைக்கில் இரு கைகளாலும் சுட்டு துவம்சம் பண்ணுகிறார், ஸ்பெயினில் முரட்டு காளைகள் நடுவில் பைக் ஓட்டி எல்லோரையும் குத்துபட (குத்துப்பாட்டு இல்லை சார்) செய்து அவர் மட்டும் புன்னகைக்கிறார். என்ன நடக்கிறது என்று கேள்வி எல்லாம் கேட்க்க் கூடாது. 2011 ல், விஜய், சூர்யா அல்லது அஜித் ஏதாவது விமானத்தில் அல்லது பைக்கில் தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு (?) உயர்த்தினால் அதன் காரணம் இட்லிவடையாகக் கூட இருக்கலாம்.
மூன்றாவது காவியம் Inception என்ற கனவு பற்றிய விஞ்ஞான பூச்சூடல். கனவுக்குள் கனவுக்குள் கனவு என்று முடிமுடிச்சு போட்டு படுத்தி விட்டார்கள். இப்பட்த்தில் உள்ள ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இது வரை எந்த பட்த்திலும் வரவில்லை. உதாரணத்திற்கு, தலை கீழாக லிஃப்ட் அருகே சண்டையிடும் காட்சி அபாரம். உடனே, குட்டை பாவாடை கதாநாயகி அயிட்டம் சாங் இப்படி படமெடுத்தால் என்ன என்று நம் சினிமா சிந்தனை போனால் நான் பொறுப்பல்ல. இப்படத்தில் கட்டிடக்கலை நிபுணரான கதாநாயகி, கனவின் ஒரு தளத்திலிருந்து அடுத்த தளத்திற்கு எப்படி வருவது என்று திடீரென்று ஞானம் பெற்று அசத்தவெல்லாம் செய்வார். இப்படத்தின் இசை மற்றும் ஒலிப்பதிவு (audiography) பிரமாதம். ஹான்ஸ் ஜிம்மர் பின்னணி இசையில் அசத்திவிட்டார். அதெல்லாம் ரஹ்மான் தன் அடுத்த கொரியப் பட்த்தில் பார்த்துக் கொள்வார்.
2011 ல் ஒரு சிறிய தமிழ் சினிமா கற்பனை.
சேர்ந்து போன தமிழ் சினிமா தயாரிப்பாளரை விசாரித்த்தில் கிடைத்த்து:
“பட்ஜெட் இடிக்குது சார். லொகேஷன் பிரச்னை வேற கழுத்தறுக்குது. பேசாம ராமராஜன் ஸ்டைலில் சின்ன பட்ஜெட் படம் எடுத்துறலாம்னு இருக்கேன்”
“விவரமா சொல்லுங்களேன்”.
“இசையமைப்பாளர் ஹாங்காங் போனாத்தான் மூடு வருங்கறார்” (அங்கதான் மலிவா மேல்நாட்டு இசை சிடி எல்லாம் கிடைக்கிறதாம்).
“வைரமுத்து ஸ்விஸ் போகணும்னு அடம் பிடிக்கிறார்”
“எதுக்கு சார்?”
“நியூட்ரான், ப்ரோட்டான் எல்லாம் எழுதினால் இளைஞர்களை கவர முடியாதாம். ஜெனிவாவில் உள்ள சேர்ன் (CERN) சென்று புதிய நுண்துகள்களைப் பற்றி தெரிய வேண்டுமாம்”
”டைரக்டர் ஆஸ்திரேலியாவில்தான் பாட்டு பதிவு என்று அடம் பிடிக்கிறார்”
“கதை என்ன சார்”
“நாட்டுப்புறக் கதைதான். உலகமே அழியப் போகுதுன்னு எல்லாம் பயப்படறாங்க. கதாநாயகன் எல்லோருக்கும் ஆறுதல் சொல்லி, சென்னை வந்து, விமானம் ஏறி பறக்கையில், ஒரு சதி கும்பல் உள்ளே வந்து, சண்டையிடுகையில் எல்லோரையும் சுட்டு விடுகிறான். தலைகீழாய் பறக்கும் விமானத்தில் ஒரு டூயட் சார்”.
கழண்டு கொண்டேன். பாவம் சுஹாசினி, தராசை வைத்துக் கொண்டு எவ்வளவோ முயற்சி செய்து விட்டார்!

- ரவி நடராஜன்

ரவி நடராஜன் சொல்வனம் இதழில் தொடர்ந்து எழுதுபவர். இந்த மாதிரி இலக்கிய பதிவுகளை சொல்வனம் பிரசுரிக்காது; தமிழ் பேப்பரில் போட்டால் புத்தகமாக வந்துவிடும் அபாயம் இருப்பதால் இட்லிவடைக்கு அனுப்பிவிட்டார் என்று நினைக்கிறேன். எது எப்படியோ இட்லிவடைக்கு வழக்கம் போல் ஒரு ஓசி பதிவு.

பிகு: கவிதை பிரசுரிக்கும் நீங்கள், என் சிறுகதையும் போட வேண்டும் என்று ஒரு ஒருவர் அனுப்பியுள்ளார், அது அடுத்த பதிவு

Read More...

Sunday, December 26, 2010

மன்மதன் அம்பு - விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஆக்ஸிடண்ட் கருவை வைத்து பல படங்கள் வந்திருக்கிறது. ரிதம் ( இன்னொரு படம் நினைவுக்கு வரவில்லை ) மாதிரி ஆக்ஸிடண்ட் கருவை தழுவி எடுத்த படம் மன்மதன் அம்பு.

தான் வேவு பார்க்கும் பெண்ணையே காதலிக்கும் கதை. ஆரம்பம் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும், பிறகு வேகம் பிடித்து இடைவேளை வரை நன்றாகவே போகிறது. திரும்பவும் கடைசியில் கொஞ்சம் வேகம் கம்மியாகி கிரேஸி மோகன் நாடகம் மாதிரி முடிகிறது.

சொந்த கேமராவை இன்னொருவரிடம் கொடுத்து படம் எடுங்க என்று சொல்லும் போது, அவர் அந்த கேமராவை சரியாக ஆப்பரேட் செய்கிறாரா என்று கவலையுடன் கேமராவை கொடுத்தவர் சிரிப்பார். இந்த படத்தில் கமல் அந்த மாதிரி தான். கதை, திரைக்கதை, வசனம் என்பதாலோ என்னவோ நடிக்கும் போது ஏனோ சில இடங்களில் அவருடைய யூஷுவல் எனர்ஜி மிஸ்ஸிங்.

கமலின் நண்பராக ரமேஷ் அரவிந்தும் அவர் மனைவியாக ஊர்வசியும் படம் முழுவதும் வீடியோ சாட்டில் வந்து கமலிடம் எப்போதும் துக்கமாக பேசுகிறார்கள். இவர்களை தவிர மற்றவர்கள் எல்லோரும் படம் முழுக்க சதா செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

சங்கீதா இரண்டு பிள்ளைக்கு தாயாக வரும் விவாகரத்து ஆன பெண். கமலை "செம கட்டை" என்று ஆண்களுக்கு நிகராக பேசுகிறார். ஏன் விவாகரத்து என்று காரணம் சொல்லவில்லை, ஆனால் அவர் பேசும் பேச்சுக்கு இரண்டு குழந்தைக்கு முன்பே ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கடைசியில் மாதவன் சங்கீதாவை ஏற்றுக்கொள்ளுவது கால் கட்டை விரல் ஜோக்கைவிட சிரிக்க வைக்கிறது.

படத்தில் அந்த காதல் கவிதையை எடுத்துவிட்டார்கள். அது கூட ஒரு விதத்தில் நல்லது தான் இல்லை தியேட்டர்காரர்களே அதை எடுத்திருப்பார்கள். படத்தில் ரிவர்ஸில் ஒரு பாடல் காட்சியில் சொல்லும் ஃபிளேஷ் பேக். இது தான் உண்மையான கவிதை. கடைசி காட்சியில் கே.எஸ்.ரவிகுமார் வந்து அச்சு பிச்சு என்று எதுவும் உளராமல் இருப்பது இன்னொரு ஆறுதல்.

முதல் பாதி ஏதோ ஃபர்ஸ்ட் கிளாஸ் படம் போலவும், இரண்டாம் பாகம் 2ஆம் கிளாஸ் டிராமா போலவும் இருப்பது தான் படத்தை பெரிய குறை. சில இடங்களில் கமலின் வசனம் குறிப்பாக சின்ன பசங்களிடம் மேதாவி தனமாக சரித்திரம் பேசுவதும், காவி உடையை பற்றி கமெண்ட் அடிப்பதும் என்று பல இடங்களில் கமல் தனியாக தெரிகிறார். குழந்தைகள் சில இடங்களில் அதிமேதாவித் தனமாக HIV பற்றி பேசுவதும் படத்துடன் ஒட்டாமல் இருக்கிறது.

மாதவன் எப்போதும் போல், கொடுத்த கூலிக்கு அதிகம் நடிக்காமல் ஒழுங்காக நடிக்கிறார். "சிட்டியில் இருக்கும் பெண்ணை சைட்டடித்துவிட்டு, வில்லேஜ் பெண்ணை கைப்பிடி" என்ற தத்துவங்களை சொல்லுகிறார்.

த்ரிஷா முன்பே சொந்த குரலில் பேசியிருந்தால், எப்போதோ வின்னைத் தாண்டியிருப்பார்.

சில இடங்களில் திரைக்கதை நன்றாக இருந்தாலும், கடைசியில் திரைக்கதையை எப்படி கொண்டு போக வேண்டும் என்று தெரியாமல் தவிக்கும் போது கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் நினைவுக்கு வருகிறது. கமல் எண்ட்ரி கொடுக்கும் சீனில் இரண்டு ரவுடிகளை அடிப்பதும், குப்பை தொட்டியை காலால் சரி செய்வது. செல்போனை மேலே போட்டு பேண்ட் பேக்கட்டில் பிடிப்பதும், ரஜினியை நினைவுப்படுத்துகிறார்.

கப்பலில் நடந்தாலும், கேமரா இவர்களை எப்போதும் ஃபோகஸ் செய்வதால் எல்லா காட்சிகளும் ஏதோ நாடகத்தில் பின் தெரியும் செட் போல இருப்பது மாதிரி இருக்கிறது.

அந்த மலையாள குஞ்சனும், மஞ்சுவும் காமெடி செய்கிறேன் என்று பல இடங்களில் வந்து சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.

படம் பார்த்துவிட்டு வந்த பிறகு யாராவது படம் எப்படி என்றால் உடனே நல்ல படம் என்று சொல்ல முடியாமல் கிளைமேக்ஸில் அவர்கள் தவிப்பதை போல நாமும் தவிக்கிறோம். நாம் அறிவுஜீவிகள் இல்லையே !

இட்லிவடை மார்க் : 6.1/10

ஜி..எஸ்.எல்.வி - எப்-6 ராக்கெட் முதலில் விண்ணை நோக்கி கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறி கீழே விழும் காட்சி

Read More...

Friday, December 24, 2010

1 ரூபாய்க்கு அரிசி கொடுத்தால் ஏசுவாகலாம்

"இப்படி ஏசு கிறிஸ்து ஏழைகளிடம் - இயலாதவர்களிடம் கருணை கொண்டதுபோல, 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் உதவித்தொகை, திருமண உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாய், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் போன்ற நலத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி ஏழை எளியோரைக் காத்துவரும் தமிழக அரசின் சார்பில் தமிழகத்தில் கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாடி மகிழும் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்" - கலைஞர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

இதிலிருந்து நமக்கு தெரிவது, ராமர் இல்லை ஆனால் இயோசு இருக்கிறார் !

எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்!

Read More...

Thursday, December 23, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 23-12-2010

நல்லா இருக்கையா முனி?
கோமாளி என்று சொன்னவர்கள் எல்லாம் இப்ப சு.சாமியை புகழ ஆரம்பித்துவிட்டர்கள். புத்தகக் கண்காட்சி சமயத்தில் பிஸியாக இருந்தாலும், சரக்கு மாஸ்டர் வேட்டியை வரிந்துக்கட்டிக்கொண்டு இட்லிவடை பதிவில் திருமலையுடன் சண்டை போட, சு.சாமிக்கு இன்னும் தைரியம் வந்து இப்ப ரஜினியையே டார்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் "ரஜினிகாந்த் சினிமாவில் மட்டும் தான் வீரத்தை காட்டுவார். அரசியல் என்றால் அவருக்கு பயம்" என்று சொல்லியுள்ளார். இதற்கு மக்கள் என்ன சொல்லுவார்களோ ? இனி சு.சாமியை அந்த ஆண்டவன் கூடக் காப்பாத்த முடியாது.

சென்னை விமான நிலையத்தில் அண்ணன் அழகிரியை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்த கனிமொழி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வழக்கு மேல் வழக்காகப் போட்டுக் கொண்டிருக்கும் சுப்பிரமணியசாமியிடம் நலம் விசாரித்துவிட்டுப் போனதாக இன்று செய்தி வந்துள்ளது. சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம் என்பது இது தான். இருந்தாலும் அண்ணா தங்கை ரெண்டு பேரும் ஒரே விமானத்தில் தான் போனார்களாம். ஆனால் பேசிக்கொள்ளவில்லையாம்.

ராகுல் காந்தி சென்னை வருகைக்கு தனி விமானம், டெல்லியிலிருந்து வரவழிக்கப்பட்ட குண்டு துளைக்காத கார், மேடை என்று சகலமும் கொண்டு வந்துள்ளார். குண்டு துளைக்காத டாய்லட் பேப்பர் கூட கொண்டு வந்திருப்பார் என்று நினைக்கிறேன். இங்கே வந்து ஏழைகளின் கண்ணீரைத் துடைக்கப் போகிறேன் என்று குடிசையில் ஒரு கிளாஸ் டீ குடிப்பார். இளைஞர் காங்கிரஸ்காரர்கள் கைத்தட்டுவார்கள், இளங்கோவன் பலமாகத் தட்டுவார். சென்னை வந்த ராகுல் காந்தி, வெங்காயத்தை பிரதமர் பாத்துக்கொள்ளுவார் என்கிறார். பேசாம ராகுலை பிரதமர் பதவியில் அமர்த்திவிட்டு, வெங்காய இலாக்கா என்று ஒன்றை அமைத்து அதற்கு பிரதமரை அமைச்சராக நியமித்துவிடலாம். அட்லீஸ்ட் ஜெ.பி.சியிலிருந்தானும் தப்பிப்பார். எது எப்படியோ சென்னையில் படி ஏறி போய் யாரையும் பார்க்க மாட்டாராம் ராகுல் காந்தி, நம்ம இளங்கோவனே சொல்லிட்டாருப்பா!

கலைஞர் தானும் ஒரு பத்திரிக்கையாளர் என்று அடிக்கடி சொல்லிகொள்வார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில் சொல்லிவிடுவார். ஆனால் எடுக்கு மடக்கான கேள்வி கேட்டால் அவ்வளவுதான். உடனே அசிங்கமாத் திட்டுவார். இல்லேன்னா காமெடியாகப் பதில் சொல்லுவார். ரெண்டு நாள் முன்னாடி "பூங்கோதை ஆலடி அருணா நிரா ராடியா டேப் பற்றி என்ன நினைக்கறீங்க?" என்ற கேள்விக்கு அவங்க பொம்பளைங்க, என்னவோ பேசிக்கிறாங்க..உனக்கென்ன? அவங்க வடநாட்டுக்காரங்க...இவங்க நாடார் வீட்டுப் பொண்ணு, மதுரை ஜில்லா" என்று சம்பந்தமே இல்லாம உளறினார்.....வெங்காய விலை உயர்வு பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு "அதைப் பெரியாரிடம்தான் கேட்க வேண்டும்" என்று சொல்லிவிட்டார். நல்ல வேளை நீரா ராடியாவிடம் தான் கேட்க வேண்டும் என்று சொல்லாமல் இருந்தாரே.

வெங்காயம் மேமொரிக்கு நல்லது ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்காங்க. ஒரு வேளை மக்களுக்கு ஞாபக சக்தி வரக் கூடாது என்பதாலோ என்னவோ வெங்காய விலைய ஒசத்த வைத்து விட்டார்கள். வெங்காயம் இல்லாமல் போனாலும் மக்கள் ஒழுங்காச் சாப்பிடணும். சரியாச் சாப்பிடலை என்றால் மூளை வளராது என்று சொல்லுகிறார்கள். இப்படி இருக்க ஆந்திராவில் இப்ப எல்லோரும் உண்ணாவிரதம் இருப்பது ஃபேஷனாகிவிட்டது. கூடவே இப்போல்லாம் மக்களுக்கு எல்லாம் மூளையே இல்லை என்ற ரேஞ்சில் அரசியல் தலைவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். “ஸ்டெம்செல்” சிகிச்சை மூலம் “வழுக்கைத் தலையில் முடி வளர்க்கலாம்” விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். முதலில் மூளையை வளர்க்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.

கைத்தறி ஃபேஷன் ஷோவில் ஸ்ரேயா வலம் வருகிறார். மார்கெட் போய்விட்டதோ? மார்கெட் போன சினிமா நடிகர்கள் டிவியில் நடிக்கப் போய்விடுகிறார்கள்; டிவி நடிகர்கள் டாய்லெட் கிளினீங், பாத்திரம் தேய்க்கும் சோப் என்று போய்விடுகிறார்கள். மார்கெட் போன இயக்குனர்கள் இதயம் நல்லெண்ணை என்று போய்விடுகிறார்கள். அங்கே போனாலும் முருங்கைக்காய் நறுக்குவதை மட்டும் விடவில்லை.

அந்த வரிசையில் பதவி போன மந்திரியிடம் என்ன செய்வார்கள்? சி.பி.ஐ விசாரணை நடத்துவார்கள். ராஜாவிடம் 24ஆம் தேதி சி.பி.ஐ விசாரணை என்று சொல்லுகிறார்கள். இன்றைக்கு டிவியில் அவர் சந்தோஷமா சிரிச்சுட்டு இருபத்தி நாலாம் தேதி, பத்து மணி என்றெல்லாம் சத்தமாச் சொன்னதைப் பாத்தா, ராஜா தலீத் அவர் பிற்பட்ட வகுப்பை சார்ந்தவர். அதனால் அவருக்கு கஷ்டமான கேள்விகள் எல்லாம் கேட்க கூடாது, உங்க பேர் என்ன உங்க அப்பா பேர் என்ன? என்று சிம்பிளான கேள்விகளை கேட்டு விட்டு விட்டு விட வேண்டும் என்று கலைஞர் சொல்லி இருப்பாரோ என்று தோணுது.

ராசா தொடர்புடைய இன்னொரு பிரச்சனை கிளப்பப்பட்டு, டைம்ஸ் நெள துவங்கி தெஹல்கா வரை சீப்படுகிறது. பெரம்பலூரில் MRF நிறுவனத்தின் 900 கோடி மதிப்பிலான க்ரீன் ஃபீல்டு ப்ராஜக்டிற்காக நிலம் வாங்கியது தொடர்பான பிரச்சனை. இந்த திட்டத்திற்காக "க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டார்ஸ்" நிறுவனம் ஏழை தலித் விவசாயிகளின் நிலங்களை ராசா துணையுடன் மிரட்டிப் பறித்தது, MRF நிறுவனத்திற்கு அதிக லாபத்திற்கு விற்றுள்ளதாக அங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 32000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கொடுத்து வாங்கிய நிலங்களை MRF நிறுவனத்திடம் பதினைந்து முதல் பதினேழு லட்சம் வரை விற்றுள்ளனர். ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாதான் இந்நிறுவனத்தின் இயக்குனர்; தவிர, ராசாவின் மனைவி இந்நிறுவனத்தில் ஒரு பங்குதாரர். சமீபத்திய சிபிஐ ரெய்டில் இவர்கள் நிறுவனமும் சிக்கியது என்பதெல்லாம் பழைய கதை.

இதில் விநோதம் என்னவென்றால், இந்த நில அபகரிப்பு தொடர்பாக, ராசாவிற்கு எதிராக நெற்றிக்கண் பத்திரிக்கையில் ஆக்ரோஷமாக கட்டுரைகள் தீட்டிய செந்தில் முருகன் என்பவரே, பிறகு ராசாவுக்கு ஆதரவாக தரகு வேலை செய்து நிலங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார். காரணம், நெற்றிக் கண்ணிலிருந்து இந்த செந்தில் முருகன் பிறகு முரசொலிக்குத் தாவியுள்ளார். நிலத்தை விற்க மறுத்த விவசாயிகளை பொய் கேசில் பதினைந்து நாட்கள் வரை சிறையிலடைத்து, மிரட்டி நிலத்தை எழுதி வாங்கியுள்ளனர். செந்தில் முருகன் தரப்போ, ஏக்கருக்கு இருபத்தைந்தாயிரம் கூட போகாத நிலத்தை அதிக விலைக்கு விற்று விவசாயிகள் லாபமடைந்துள்ளனர் என்கிறது . ராசாவும் தலித் என்பதால் எங்கள் பிரச்சனைகளை அவர் புரிந்து கொள்வார் என்று நம்பினோம். ஆனால் அவர் எங்களை முதுகில் குத்தி விட்டார் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.

ஆதர்ஷ் ஊழல் தொடர்பான ஆவணங்களை தொடர்ந்து இப்ப டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் பைல்கள் திடீர் மாயம். இப்ப சி.பி.ஐ. இதை விசாரணை செய்ய கிளம்பியுள்ளது. ஆனால் சேலத்தில் போலீஸ் செய்த சாதனையை கேட்டால் அசந்து போய்விடுவீர்கள். சேலத்தில் வாங்கிங் போன வக்கீலை அங்கு இருந்த சேவல் ஒன்று அவரை கொத்தியுள்ளது. உடனே அவர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க போலீஸார் உடனே சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். சேவல் உரிமையாளர் 200 ரூபாய் அபராதம் கட்டி சேவல் பிரியாணியை தவிர்த்தார். "கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வையகம் போறானாம்" என்ற கதை மாதிரி இருக்கு இது :-)

கொசுறு செய்திகள்:
கைது என்றவுடன் நினைவுக்கு வருவது இரண்டு செய்திகள். ஜெயலலிதாவை திமுக அரசு கைது செய்த போது அவரை ஜெயிலில் சந்தித்த வீரமணி அவரைச் சந்தித்து புத்தகம் பரிசு தந்தாராம். ஆனால் நள்ளிரவில் கலைஞரை கைது செய்த போது சம்மன் கொடுத்தால் போக வேண்டியதுதானே? சண்டித்தனம், செய்தால் இழுத்துப் போகத்தான் செய்வார்கள்!’ என்றாராம். ராசாவை ஒரு வேளை சிபிஐ கைது செய்தால் என்ன சொல்லுவார்? இருக்கவே இருக்கு பூணூல் சமாச்சாரம்.

நாடார் சமுதாயத்துக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அரசியலுக்கு வந்தேன். 'சூரியவம்சம்’ படம் ரிலீஸ் நேரத்தில் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டேன். சினிமாவில் தொடர்ந்து இருந்தால், நிச்சயம் சூப்பர் ஸ்டாராகி இருப்பேன். இப்போது என்னை நீங்கள் ஆதரியுங்கள்... உங்களை நான் ஆதரிக்கிறேன்!'' என்று சரத்குமார் பேசியுள்ளார். நாடார் எவரையும் நாட மாட்டார்கள் என்றல்லவா கூறுவார்கள்? அது பழைய மொழி போல.
வீடியோ இங்கே http://timesofindia.indiatimes.com/videoshow/7132947.cms

சங்கீத சீசன் வந்தாலும் வந்தது, பிரச்சனைல இருக்கற அரசியல்வாதிகள் கூட நிரவல் ஸ்வரம் பாடற மாதிரி பேச ஆரம்பித்து விட்டார்கள். இந்த வீடியோவில் பாருங்க. I am not afraid என்ற கீர்த்தனையில் ராசா எப்டி எல்லாம் த, த, த, த -- க, க, க, க என்று பிரமாதமா ஸ்வரம் பாடறார்! தர்பார் என்று ராகம் பேரெல்லாம் வேற சொல்லறாரு. அவர் பின்னால் நிறைய ஜால்ராக்கள் இருப்பது கச்சேரிக்கு வலு சேர்க்கிறதா என்று தெரியல. Are you understand my question? :-)


இப்படிக்கு,
கமல் படத்துக்கு இன்னும் டிக்கெட் வாங்காத,
இட்லிவடை

Read More...

Tuesday, December 21, 2010

பெண்ணியவாதிகள் vs குடும்பவாதிகள்

நீயா நானா என்ற நிகழ்ச்சியில் தாலி வேண்டுமா வேண்டாமா?, டாக்டர்கள், பொதுமக்கள், புத்திசாலிகள், ஏமாளிகள், பிசினஸ்மேன் வரிசையில் பெண்ணியவாதிகள் vs குடும்பவாதிகள் (அல்லது வீட்டுப் பெண்கள்) என்ற தலைப்பில் சென்றவாரம் ஞாயிற்றுக்'கிழமை' ஒளிபரப்பினார்கள். திருவிழாவில் சேவல் சண்டை பார்த்த ஃபீலிங். ஒரு பெண்ணுடைய கஷ்டம் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்று நம் சினிமாக்களில் சொல்லுவார்கள். ஆனால் இதில் கலந்துக்கொண்ட அணியைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும், சமூகத்தைப் பார்க்க வேண்டும் என்பது பெண்ணியவாதிகள் வாதம்.

சாருவின் கூட்டத்திற்கு எண்ணி நான்கே பெண்கள் வந்திருந்தார்கள் (மேடையில் 2 பெண்கள்) என்று சாரு குறைப்பட்டுக்கொண்டார். விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சியைப் பாத்துவிட்டு இனி புத்தக ரிலீஸ் கூட்டத்துக்கு நிறைய பெண்கள் வருவார்கள் என்று நம்புவோம். பெண்ணியவாதிகளில் பலர் நல்ல தமிழில் அழகாகப் பேசினார்கள், நிச்சயம் இவர்கள் டிவி நிகழ்ச்சிகளை காம்பயர் செய்யப் போகலாம்.

பெண்கள் குவார்ட்டர் அடித்தால் என்ன தப்பு என்று ஒரு பெ.வாதி கேட்டுக்கொண்டே இருந்தார். குடும்பப் பெண்களால் பதில்சொல்லமுடியவில்லை. எதிர்பார்த்த மாதிரியே-- அபெண்ணியவாதிகளாகிய குடும்பப் பெண்கள் எல்லாம் அறியாமையில் உழல்கிறார்கள்; கணவனிடம் அடிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று கோபிநாத் முடித்துவைத்தார். பெண்ணியவாதிகள் எல்லாம் நாகரிகமாகத்தான் உடையணிவார்கள்; கணவனோடு சேர்ந்துவாழ்வார்கள்; சேர்ந்து வாழ்பவர்களை எல்லாம் பிரித்துவிடமாட்டார்கள், பஃபிற்கெல்லாம் போகமாட்டார்கள் என்றெல்லாம் நிறுவ கோபிநாத் அதிகம் மெனக்கெட்டார். பாவமாக இருந்தது. ஒரு சமயத்தில் இந்த நிகழ்ச்சி முடிந்து எல்லாம் பெண்களும் மாறிவிட்டால் என்ற பயமும் தொத்திக்கொண்டு வயிற்றில் புளி.

ஏன் எப்பொழுதும் பெண்கள் தவறுசெய்தால் ஆண்களே அடிக்கிறார்கள்; ஆண்கள் தவறுசெய்து பெண்கள் அடிப்பதேயில்லை என்று எடுத்துக்கொடுத்த பெ.வாதி கடைசியில் பரிசுவாங்கிப் போனார். இட்லிவடையின் கல்யாண அசை முழுவதும் மங்கி போனது. கன்னத்தைத் தடவிக்கொண்டேன். சக ஆண்குலம் இனியாவது நாமும் வாங்குவதை வெட்கத்தைவிட்டு வெளியில்சொல்லிவிடுவது நமக்கும் நாட்டுக்கும் நல்லது. (எவ்வளவு நாள்தான் எதுவுமே நடக்காத மாதிரி நடிப்பது?)

பொருளாதாரச் சுதந்திரம் வேண்டும் என்று பேசினார்கள். அரசியலில் 33 சதவிகிதத்தை ஊறுகாய்க்கு தொட்டுக்கொண்டார்கள். பெண்கள் அரசியலுக்கு வருவதுபற்றி யாராவது பேசியிருந்தால், அரசியலில் இருந்துகொண்டு எப்படி நிலம்வாங்கலாம் என்று டிப்ஸாவது கொடுத்திருப்பாரோ என்னவோ, சல்மா அதிகம் பேசவேயில்லை. யாராவது வரதட்சிணை கொடுக்காமல் திருமணம் செய்துகொண்டீர்களா என்று ஒருகேள்வியை மட்டும் கேட்டு கைத்தட்டல் வாங்கிப் போனார்.

வந்திருந்தவர்களில் பலர் கவிதை எழுதுபவர்கள். ஆக கவிதை எழுதும் பெண்கள் எல்லாம் பெண்ணியவாதிகள் என்று நினைக்கிறேன். எனக்கு வலைப்பதிவில் எழுதும் பெண்கள் எல்லாரும் பெண்ணியவாதிகள்தான். அடுப்படியில் தாளித்துக்கொட்டினாலும் தைரியமாக கமல் கவிதையைப் புகழ்வதும், ராஜ்தீப் சர்தேசாய்க்கு தமிழில் டிவிட் செய்வதும், கவிதை எழுதி அதை இட்லிவடையில் போட சொல்லுவதும், தன் குழந்தைக்கு நாலரை பால் ஊட்டிவிட்டுக்கொண்டு குரங்கு கதை எழுதுவதும்... இன்னும் சொல்லப்போனால் செல்பேசியை ஆன் செய்தால் எங்கே நீரா ராடியா பேசிவிடுவாரோ என்று பயந்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆண்கள். இந்தச் சூழ்நிலையில் இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் தேவையா?


அனுஷ்காவிற்கு இன்னும் இரண்டு ஆண்டில் திருமணமாம். தூங்கி எழுந்தால் எதற்குத்தான் மனுஷன் கவலைப்படுதுவது என்றே தெரியவில்லை. என்ன வாழ்கையடா இது


Read More...

Monday, December 20, 2010

விருதகிரி- நடு நிலையான விமர்சனம் !

இது விஜயகாந்த் நடித்த படத்தின் விமர்சனம், விஜயகாந்த் பற்றிய விமர்சனம் இல்லை. படிப்பவர்களுக்கு வேறு மாதிரி தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.


அரசியல் பேட்டி, அறிக்கை என்று கலக்கிக்கொண்டு இருக்கும் கேப்டன், படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற 'எதிர்ப்பார்ப்பு' என்பதை நீங்களே புரிந்திகொண்டிருப்பீர்கள்.

கேப்டன் நடித்து இயக்கியிருக்கும் படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புடன்(?!...) படத்தைப் பார்த்தேன். இதுவரை இந்திய தீவிரவாதிகளை போட்டு சாத்திய கேப்டன், இந்த முறை உல தீவிரவாதிகளை தும்சம் செய்கிறார்.



"காப்டனே வா வா, ஆட்சி மாற்றம் தர வா வா" என்று "நிலா நிலா ஓடிவா" போன்ற டைட்டில் பாடலில் ஆ'ரம்பி'க்கிறது படம்.

டைட்டிலில், "கதை, இயக்கம்...விஜயகாந்த்" என்று வரும்போது தலைமைச் செயலகம் முன்பு Thumps-up காண்பிக்கும் கேப்டன்... வழக்கம்போல இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். (உடை வடிவமைப்பு பிரேமலதா விஜயகாந்தாம்.).

பஞ்ச் டயலாக் படத்தில் ஆங்காங்கே வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் படமே பஞ்ச் டயலாக்காக இப்போதுதான் பார்க்கிறேன். எல்லாக் காட்சிகளிலும் நிறுத்தி நிதானமாக பஞ்ச் வைத்து பஞ்ச்வைத்து ந(டிக்)கர்கிறார். பஞ்ச்-களில் கூடுதல் எஃபெக்ட் வரவேண்டும் என்று அவர் நினைக்கும் இடங்களில் எல்லாம் அவருக்குப் பின்னால் பூகம்பம், சுனாமி எல்லாம் வருகிறது.

முதல் சீனில்- ஸ்காட்லாந்து யார்டில்... என்றவுடன் நாம் சீட்டின் நுனிக்கே வந்துவிடுகிறோம். அங்கே அந்த நாட்டுப் பிரதமரைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிறார். (எத்தனைநாள்தான் லோக்கல் சப்பாத்திப் பிரதமரையே காப்பாற்றிக்கொண்டிருப்பது?) தீவிரவாதி, விஜயகாந்தைக் கண்டு ஓட, அவரை நடந்துசென்று துவம்சம் செய்கிறார். பிறகு என்ன ஸ்ட்காட்லாந்து போலீஸ், "எங்க நாட்டின் பாதுகாப்பு, மற்றும் ஸ்ட்காட்லாந்து யார்ட் மானத்தையும் நீங்க காப்பாத்தீட்டீங்க," என்று நம்மூர் வசனம் பேசுகிறார்கள். இந்த மாதிரி காட்சிகள் இருப்பதால் படத்தில் வடிவேலு, சந்தானம், விவேக் போன்றவர் இல்லாத குறையே தெரியவில்லை.

படம் முழுவதும், ஆஸ்திரேலியாவிலும் சில பகுதிகள் ஸ்காட்லாந்து யார்டிலும் நடப்பதால், ஆங்கில வசனம் வால்யூம் ஒன்றிலும் தமிழ் வசனம் வால்யூம் ஐந்திலும். "Oh! my God, really" போன்ற வசனம் வந்தவுடன் "அடக் கடவுளே, அப்படியா?" என்று பின்னனியில் வருகிறது. கொஞ்ச நேரத்தில் அதுவே ஜெயா டிவியில் ராஜகோபாலன் ஆங்கிலப் பாடத்தைத் தமிழில் எடுப்பது போல ஒரு ஃபீலிங்.

ஸ்காட்லாந்து யார்டில் இந்த வேலையை முடித்துவிட்டு, திரும்ப இந்தியா வரும் அவர் ஏர்போர்ட்டில் மீடியாவிற்குப் பேட்டி கொடுக்கிறார்-- "வாழ்க்கை ஐஸ்கீர்ம் மாதிரி, அது உருகுவதற்கு முன்பு நாம் சாப்பிடவேண்டும்... புகழுக்குகாக நாம் அது பின்னால் அலையக் கூடாது. புகழ்தான் நம்மைத் தேடி வரவேண்டும்..." இதற்குப் பிறகு ஒரு பத்திரிகையாளர் இவரை ஏதோ பாராட்ட, கேப்டன், "நான் என் கடமையை தானே செய்தேன்...." என்று கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்பான எம்ஜிஆர் வசனத்தைச் சொல்ல-- அதற்கு அந்தப் பத்திரிகையாளர் "அவனவன் பாராட்டுவிழாவே வருஷக்கணக்கா நடத்துறாங்க நீங்க என்னடா என்றால்.." என்று எடுத்துக்கொடுக்க--- கேப்டன் "... நம் நாட்டில் பசிக்கும் பஞ்சம் இல்லை; பாராட்டுவிழாவிற்கும் பஞ்சம் இல்லை..." இத்யாதிகளுடன் முடிக்கிறார். "ஏன் சார் உங்களுக்கு பயமே இல்லையா?" என்று இன்னொருவர் கேட்க, "என்னை யாரும் மிரட்ட முடியாது" என்று விரலை ஆட்டி மிரட்டுகிறார். க்ளோசப்பில் பார்க்க நமக்குத்தான் பயமாக இருக்கிறது.

ஏர்போர்ட்டிலிருந்து காரில்வரும் கேப்டன், இடதுபக்கக் கதவை திறந்து இறங்குகிறார். உடனே அடுத்த ஷாட்- வலதுபக்கக் கதவையும் திறந்து இறங்குகிறார். என்னது, டபுள் ஆக்டா என்று ஒரு நொடி நாம் குழம்ப, அது அதிரடி ஷாட் மாதிரி காண்பிக்க எடிட்டரின் கைவண்ணம் என்று புரிகிறது. தொடர்ந்து வீட்டில் அம்மா, அப்பா அவரிடம், நீ தான் அடுத்த முதல்வர் ரேஞ்சில் பேசிக்கொண்டே போக... முடியலப்பா...

இதற்குப் பிறகு ஒரு பாட்டு- ஐபிஎஸ் ஆபிஸர் தேர்தல் பிரசாரம் செய்யும் பாட்டு. அதை அப்படியே ஸ்கிப் செய்தால் பிறகு வழமையான ஒரு சினிமா ரவுண்ட் டேபிள், சுற்றி போலீஸ் இருக்கிறார்கள். உங்களுக்கே தெரிந்திருக்குமே ஒரு பிரொஜக்டரில் திவிரவாதிகள் பற்றியோ வில்லன் பற்றியோ ஸ்லைட் ஷோ காண்பிப்பார்கள், உடனே அங்கே ஹீரோவாக இருக்கும் போலீஸுக்கு, அந்த வேலையை "ஆல் தி பெஸ்ட்" சொல்லிக் கொடுப்பார்கள். அவரும் அது சம்பந்தப்பட்ட(?!) ஒரு ஃபைலை வாங்கிக்கொண்டு, சல்யூட் அடித்து ஏற்றுக்கொண்டு நகர்வார். இங்கே ஆஸ்திரேலியாவில் நடக்கும் மாணவர் மீதான தாக்குதலில் இருக்கும் பின்னணியைப் போட்டு அலசுகிறார் நம் கேப்டன். அவ்வப்போது கண்ணைக் கொட்டிக்கொண்டு பேசும்போது சிரிப்புதான் வருகிறது.

விஜய்காந்த் வீட்டில் ப்ரியா(மாதுரி இடாகி) என்ற பெண்மணி இருக்கிறார். இவர் தான் ஹீரோயினா என்று நாம் நினைக்கும் போது இவர் விஜயகாந்தை அங்கிள் என்று கூப்பிட்டு நம் வயிற்றில் பாலை வார்க்கிறார்; இல்லாவிட்டால் இவருடன் விஜய்காந்த் ஆடும் டூயட்டை யார் பார்ப்பது? படத்தில் ப்ரியாவின் அம்மாவாக டிவி புகழ் உமா நெற்றியில் வீபூதியுடன் வருகிறார். இவர் விதவை ஆனதற்கு ஏதாவது ஃபிளாஷ் பேக் வரும் என்று நானும் கடைசி வரை பார்த்தேன் ஆனால் வரவில்லை. ஒரே ஆறுதல்.

இதற்குள் திருநங்கைகளைக் கடத்திக் கொலை செய்து, அவர்களின் உடல் உறுப்புகளை வெளிநாடுகளில் விற்கும் கும்பலை கேப்டன் வழக்கம் போல் தனி ஆளாக அடித்து உதைக்கிறார். அடித்துவிட்டு நான் மக்களுடைய போலீஸ் என்று சொல்ல அதற்கு "அரசாங்க அதிகாரியா இருக்கறப்பவே இவ்வளவு நல்லது பண்றீங்களே, அரசாங்கமே உங்க அதிகாரத்துக்கு வந்துட்டா?" போன்ற வசனங்களை கேட்டுக் கேட்டு டயர்ட் ஆகிப் போகிறோம். பின்ன இந்த வசனம் மூன்று முறை படத்தில் வருகிறது என்றால் ? நல்லவேளையாக, "இந்த விருதகிரி Gunனும் கண்ணும் வைத்தால் குறி தப்பாது.." என்ற வசனத்துடன் ஒரு திருப்பம் வருகிறது.

ப்ரியா மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா போக அங்கே அவரை ஒரு கும்பல் கடத்துகிறது. இதற்குப் பிறகு டேக்கன்(Taken) என்ற ஆங்கிலப் படத்தை விஜய்காந்த் சீனுக்கு சீன் ரீமேக் செய்கிறார். அங்கேயும் தன் பஞ்ச்-ஐ மட்டும் விடவில்லை.

ஆங்கிலப் படங்களை தமிழில் டப் செய்வது போல இந்தப் படத்தை ஆங்கிலத்தில் டப் செய்தால் டேக்கன் படம் கிடைக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் [என்ன, கொஞ்சம் நகைச்சுவை தூக்கலாக இருக்கும் :-)]

மன்சூர் அலிகான் மாதிரி லோக்கல் ரவுடியாக இருந்தாலும், அருண்பாண்டியன் மாதிரி கொஞ்சம் மேல்தட்டு ரவுடியாக இருந்தாலும், வெளிநாட்டுத் வெள்ளை தீவிரவாதியாகவே இருந்தாலும் கேப்டன் அவர்களை கலைஞர் என்றே நினைத்து அவர்களிடம் அரசியல் வசனம் பேசுவது சூப்பர். ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு சில்லரை வில்லனிடம் உண்மையை விசாரிக்க ஷாக் கொடுக்கும் சீனில், "எங்க ஊர் மாதிரி மின்சார வெட்டு இல்லாம இங்கே 24 மணி நேரமும் கரன்ட் சப்ளை இருக்குடா, நீ தப்பிக்கவே முடியாது" என்று சொல்வது ஒரு சோறு பதம்.

கடைசியாக ப்ரியாவையும் மற்ற எல்லா மாணவர்களையும் காப்பாற்றுகிறார். விருதகிரி ந்யூஸில் வருகிறார். எல்லோரும் இவருக்கு சல்யூட் அடிக்கிறார்கள். படம் முடிந்துவிட்டது. அவ்வளவுதான். விஜயகாந்தை பார்த்த பிறகு நம் கண்கள் அவரை மாதிரியே சிகப்பாக மாறிவிடுகிறது சைடு எஃபெக்ட் !

சேனல்காரங்க எடுக்குற படத்துக்கு மட்டும் எங்கேயும் திருட்டு விசிடி கிடைக்க மாட்டேங்குதே அதன் மர்மம் என்ன என்று படத்த்தில் ஒரு வசனம் வருகிறது. எவ்வளவு உண்மை :-)


அடுத்த விமர்சனம் மன் மதன் அம்பு - ரெடியா இருங்க...

Read More...

Sunday, December 19, 2010

அமெரிக்க போர்களும் விளைவுகளும்: கடந்த பத்தாண்டு- ஒரு பார்வை: ராஜன் சடகோபன்


உலக வல்லரசான அமெரிக்கா, கடந்த 10 ஆண்டுகளில் தன்னை காப்பாற்றி கொள்ள போர் என்ற ஆயுதத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தியது, அந்த போரால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதை சுருக்கமாக விளக்குகிறது இக்கட்டுரை

அமெரிக்க வரலாற்றில், போர் என்பது ஒரு தொடர் கதை. அந்த நாடு உருவாகும் முன்பு, அங்கிருந்த செவ்விந்தியர்களை அழித்ததில் துவங்கிய அந்தப் போர், நிலத்துக்காக, அடிமைகளுக்காக, வர்த்தக உரிமைகளுக்காக, துறைமுகப் பகுதிகளுக்காக, இயற்கை வளங்களுக்காக இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.



இரண்டாவது உலகப் போருக்கு பின், வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா மீதான பனிப்போர், கொரியா, வியட்நாம், தென் அமெரிக்கா இவற்றை தொடர்ந்து, தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான போர்கள் என, தனது ராணுவ இயந்திரத்தை ஓய்வில்லாது இயக்கி கொண்டே இருக்கிறது.கடந்த 1990ல், குவைத் மீதான ஈராக்கின் ஆக்கிரமிப்பை முறியடித்த கையோடு, மத்திய கிழக்கின் எண்ணெய் வள நாடுகளில் தனது ராணுவ தளங்களை நிரந்தரமாக நிறுவி, அப்பகுதிகளின் மீதான தனது ஆதிக்கத்தையும், இருப்பையும் உறுதி செய்து கொண்டது.கடந்த 2001 முதல் 2010 வரையிலான 10 ஆண்டுகளில் கூட, உலகின் மிகப்பெரிய வல்லரசாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, இரு பெரும் போர்களை தொடுத்துள்ளது அமெரிக்கா. இப்போர்கள் அமெரிக்காவை மட்டுமின்றி, பிற உலக நாடுகளையும் பாதித்துள்ளன.

இரட்டை கோபுர தகர்ப்பு : கடந்த 2001, செப்டம்பர் 11ம் தேதி நடந்த இரட்டை கோபுர தகர்ப்பு மற்றும் பென்டகன் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் அமெரிக்காவை மட்டுமின்றி, உலகையே அதிர்ச்சியுறச் செய்தன. இத்தாக்குதல்கள் அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் போக்கையே மாற்றியமைத்தன. அமெரிக்காவின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய இத்தாக்குதலில் 2,985 பேர் பலியாயினர்.சவுதி அரேபியாவைச் சேர்ந்த 18 பயங்கரவாதிகள், இதற்காக அமெரிக்காவில் தங்கிப் பயிற்சி பெற்றனர். இவர்களை இயக்கியவன் ஒசாமா பின்லாடன். நிதி ஏற்பாடும் பிற சதி வேலைகளும், பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகளும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.,யும் செய்தவை. அமெரிக்காவில் பயிற்சி பெற்று, அமெரிக்க விமானங்கள் மூலம் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்தது, பென்டகனை தாக்கியது இவற்றின் மூலம், பயங்கரவாதிகள் அமெரிக்கா மீது அறிவிக்கப்படாத போர் ஒன்றை துவக்கினர்.இஸ்லாமியர்களின் புனித நகரம் இருக்கும் சவுதி அரேபியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும்; இஸ்ரேலுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவை நிறுத்த வேண்டும் என, இத்தாக்குதலுக்கு காரணம் சொன்னார்கள் பயங்கரவாதிகள்.

ஆப்கானிஸ்தான் மீதான போர் : இத்தகைய தாக்குதல்கள் வருங்காலத்தில் நிகழாமல் தடுக்கவும், அமெரிக்கா மீது உலகின் எந்த ஒரு நாடும் தாக்குதல் தொடுக்க கனவில் கூட துணியக் கூடாத அச்சத்தை ஏற்படுத்தவும் வேண்டிய கட்டாயத்திற்கு அமெரிக்கா தள்ளப்பட்டது.ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கு பின்பும், வெறும் வெற்று வார்த்தைகளை மட்டும் உதிர்த்து விட்டு அமைதி காக்கும் பலவீனமான தலைமையுள்ள இந்தியா போல இருந்து விடாமல், உடனடியாக பதிலடி கொடுக்க இறங்கினார், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.அமெரிக்காவை தாக்கிய எதிரிகள் புகலிடம் அடைந்திருக்கும் நாடு என்பதால், 2001 அக்டோபர் 7ம் தேதி ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது அமெரிக்கா.ஆப்கனில் உள்ள தலிபான் ஆட்சியை அகற்றுதல், தலிபான்களையும் அவர்களை ஆதரிக்கும் அல்-குவைதா உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகளையும் வேரோடு அழித்தல், ஆப்கனில் ஒரு ஜனநாயக அரசை ஏற்படுத்தி, அந்நாடு மீண்டும் தலிபான்களின் கைகளில் விழுந்து விடாமல் இருக்க, அதற்கென சொந்தப் பாதுகாப்புப் படைகளை உருவாக்குதல் என ஆப்கன் போருக்கான காரணங்களை அடுக்கியது அமெரிக்கா.

தலிபான்களுக்கு யார் உதவி?அமெரிக்க தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகள், சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் சவுதியின் மன்னர் குடும்பம் அமெரிக்காவுக்கு வேண்டப்பட்ட குடும்பம். சவுதி, அமெரிக்காவிற்கு எண்ணெய் கொடுக்கிறது; ராணுவ தளம் அமைக்க இடம் கொடுக்கிறது; இருதரப்புக்கும் வர்த்தக உறவு உள்ளது.இதனால், தனது நட்பு நாடான சவுதியின் மீது தாக்குதல் தொடுக்க முடியாத அமெரிக்கா, ஆப்கனை குறி வைத்தது ஏன்?தாக்குதலுக்கு சதி தீட்டம் தீட்ட இடம் கொடுத்து, அல்-குவைதா செயல்பட அனுமதித்தது அப்போது தலிபான்களின் ஆட்சியில் இருந்த ஆப்கன்.இன்னொரு பக்கம், தலிபான்களுக்கு நிதி, ராணுவம் மற்றும் நிர்வாக உதவிகளை அளித்து வந்தது பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ., தன்னிச்சையாக செயல்பட முடியாத தலிபான்கள், ஐ.எஸ்.ஐ.,யின் உதவியால் தான், காந்தகார் விமான கடத்தலில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தானின் இரட்டை வேடம் : தலிபான்கள் மற்றும் அல்-குவைதாவினர் பதுங்கியுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள், இயற்கையிலேயே சிக்கலான, ஆபத்தான மலைப் பகுதிகள். ஆப்கனைச் சேர்ந்த பழங்குடிகள் மட்டுமே அந்த நிலப்பரப்பின் ரகசியத்தை அறிந்தவர்கள். அவர்கள், இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் கணிசமான அளவில் உள்ளனர்.அவர்கள் மத்தியில் தான் தலிபான்களும், அல்-குவைதாவினரும் கலந்துள்ளனர். பயங்கரவாதிகளை அழிக்க வேண்டுமானால், அந்த நிலப்பரப்பை அறிந்தவர்களின் உதவி தேவை. அதனால் பாகிஸ்தானை தனது போரில் கூட்டாளியாக்கி கொண்டது அமெரிக்கா.தலிபான் என்பதே பாகிஸ்தானின் நிழல் அமைப்பு தான் என்பது தெரிந்த பின்னும், அமெரிக்கா அதை கூட்டாளியாக்கி கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

கடினமான எல்லைப் பகுதிகளை கையாளுவதற்கான உதவி, ஆப்கனில் தங்கியுள்ள நேட்டோ படையினருக்கு தேவையான தளவாடங்கள், மருந்துகள், உணவுகள் போன்றவற்றை தக்க சமயத்தில் கொடுப்பது போன்றவற்றுக்கு நிலவியல் ரீதியில், பாகிஸ்தானின் உதவி அமெரிக்காவுக்கு தேவை.ஆனால், பூனைக்கும் காவல் பாலுக்கும் காவல் என்ற ரீதியில், பாகிஸ்தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக, அமெரிக்காவிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை தலிபான் ஒழிப்பிற்காக கறந்தபடியே, தலிபான்களுக்கு ரகசியமாக நிதி மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி அமெரிக்காவை ஏமாற்றி வருகிறது.அமெரிக்காவிடம் இருந்து தந்திரமாக பெறும் பணத்தை, இந்தியாவிற்குள் தான் நடத்தும் அழிவு வேலைகளுக்கு திருப்பி விட்டும் வருகிறது.

ஏன் நம்புகிறது அமெரிக்கா?தலிபான்களுடனான பாக்.,கின் கள்ள உறவு அமெரிக்காவுக்கு தெரிந்திருந்தும், அமெரிக்க அரசு இன்னும் பாக்., ஆதரவு நிலைப்பாட்டில் தான் இருக்கிறது.பாக்.,கிற்கு நிதி அளிப்பதன் மூலம் அதன் நம்பிக்கையை பெறலாம்; அதன் மூலம் ஆப்கனில் தலிபான்களையும் அல்-குவைதாவையும் ஒழித்து விடலாம் என்றும் அமெரிக்கா கருதுகிறது.எக்காரணம் கொண்டும், பாகிஸ்தானை விரோதித்து கொண்டு, உலகின் முக்கியமான இடத்தில் இருக்கும் ஒரு நாட்டின் மீதான தங்கள் பிடியை விட்டுக் கொடுக்க, அமெரிக்கா விரும்பவில்லை.

அமெரிக்காவின் தோல்வி ஏன்?ஆப்கன் மீது அமெரிக்கா போர் தொடுத்து 10 ஆண்டுகள் கழிந்தும், பல கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்ட பின்னும், இதுவரை தலிபான்களும், அல்-குவைதாவும் அழிக்கப்படவில்லை. ஒசாமா பின்லாடன் கண்டுபிடிக்கப்படவில்லை.தலிபான்கள், ஒரு ராணுவ அமைப்பாகச் செயல்படாமல், மக்களோடு மக்களாக கலந்து கொரில்லா தாக்குதல்கள் நிகழ்த்துவது, எதிர்பாராத வகைகளில் அமெரிக்கப் படைகளை தாக்கி நிலை குலைய செய்வது, பாக்., மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தொடர்ந்து வரும் நிதியுதவி, பாக்.,கின் நம்பிக்கை துரோகம், ஆப்கனின் நிலவியல் அமைப்பு என, அமெரிக்காவின் தோல்விக்கான காரணங்களுக்கு ஒரு பட்டியலே போடலாம்.

அமெரிக்காவின் அடுத்த திட்டம் : "கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்ற கதையாக, தலிபான்களுடன் ஓரளவுக்கு சமாதானமாக போகும் கசப்பான முடிவுக்கு கூட இப்போது அமெரிக்கா வந்து விட்டது. இதற்கு பாக்., இடைத்தரகு செய்து, ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி தரவும் முன்வந்துள்ளது.அமெரிக்காவை தாக்க மாட்டோம் என்று உறுதிமொழி அளிக்கும் பட்சத்தில், தலிபான்களும் பங்கேற்கக் கூடிய, பாக்., ஆதரவில் நடக்கக் கூடிய ஒரு அரசை அமைத்து தந்துவிட்டு, தன் துருப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி அழைக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது அமெரிக்கா.

ஈராக் போருக்கு காரணம் : அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்ஷûக்கு, ஈராக்கின் எண்ணெய் வளத்தின் மீது ஒரு கண். அதை, அமெரிக்காவுக்கு அடிபணிய வைப்பதில் புஷ் தீவிரம் காட்டி வந்தார்.குவைத் போரில், ஈராக்கை அமெரிக்கா விரட்டி அடித்த பின்பும் கூட, ஈராக் மீது அமெரிக்கா ராக்கெட் தாக்குதலை நடத்தி வந்தது. சீனியர் புஷ்ஷûக்கு (ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை) இரண்டாவது முறையும் அதிபர் பதவி கிடைக்காததால், சதாம் உசேனை அழிக்கும் பணி முடிவடையாத ஒரு அவமானமாகவே தொடர்ந்தது.தந்தை புஷ்ஷின் சபதத்தை மகன் புஷ் நிறைவேற்றத் துடித்தார். அதற்கான சூழல்களும் கனிந்து வந்தன. இரட்டை கோபுர தகர்ப்பு அதற்கு சாக்காக கிடைத்தது. ஈராக்கிற்கும், அச்சம்பவத்திற்கும் நேரடியாக முடிச்சுப் போட வாய்ப்பில்லை. அதனால் சுற்றி வளைத்த சந்தேகங்களை, ஈராக் மீது தூவ ஆரம்பித்தது அமெரிக்கா.அமெரிக்காவைத் தாக்குவதற்காக ஈராக் ஏராளமான பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாக, அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. ஈராக்கில் சோதனை நடத்தும்படி, ஐ.நா.,வை நிர்பந்தித்தது. ஐ.நா.,வால், ஈராக்கில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனால், ஏற்கனவே அங்கு அமெரிக்க உளவுத் துறை சி.ஐ.ஏ.,யால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த சில ஆயுதங்களை கண்டுபிடித்த அமெரிக்கா, அதையே காரணமாக வைத்து, 2003ல் ஈராக் மீது போர் தொடுத்தது.

மண் கவ்விய அமெரிக்கா : நியாயமான காரணங்களின் அடிப்படையில் துவங்கிய ஆப்கன் போரில், முழு கவனத்தையும் செலுத்தியிருந்தால், தலிபான்களை ஒழிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றியாவது பெற்றிருக்கலாம்.ஆனால் புஷ்ஷின் அரசு, ஈராக்கின் மீது தன் கவனத்தை திருப்பியது, ஆப்கன் போரில் ஒரு தொய்வை ஏற்படுத்தியது. இறுதியில் சதாமை தூக்கிலிட்டு, போருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.எந்த அடிப்படையிலும் ஈராக் போரை நியாயப்படுத்த முடியாமல், ஆட்சியாளர்களின் பழி வாங்கும் உணர்வு மற்றும் பேராசை, இன்னும் வெளியில் வராத பல காரணங்களால், உலகளவில் ஒரு பெரிய வல்லரசு என்ற பலத்தில் ஈராக்கின் மீது திணிக்கப்பட்ட ஒரு போரை, ஏழு ஆண்டுகளாக அமெரிக்கா நடத்தி முடித்தது.

சரிந்த அமெரிக்காவின் மதிப்பு : ஈராக் போரால் உலகளவில் அமெரிக்கா மீதான மதிப்பு சரிந்து விட்டது. அது மட்டுமின்றி, அமெரிக்காவை பெருத்த கடனிலும் பொருளாதார சீரழிவிலும் ஈராக் போர் தள்ளி விட்டது.இந்த போரால், இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவை வெறுக்க துவங்கி விட்டன. போரால் ராணுவ ஒப்பந்த நிறுவனங்களும், தளவாட தொழில்களும், எண்ணெய் நிறுவனங்களும் பயனடைந்திருந்தாலும், அவை ஒட்டுமொத்தமான இழப்பை சரிக்கட்டும் அளவுக்கு லாபமானதாக இல்லை.ஈராக் போரில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலியாயினர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து, உடல் உறுப்புகளை இழந்துள்ளனர்.போராலும், அதை தொடர்ந்த உள்நாட்டு பயங்கரவாதங்களாலும் லட்சக்கணக்கான ஈராக்கியர்களும் பலியாகியுள்ளனர்.

போர்களால் ஏற்பட்ட பாதிப்பு : ஈராக் மற்றும் ஆப்கன் போர்களால், அமெரிக்காவின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. பொருளாதார சிக்கலால் ஏற்பட்ட பணவீக்கமும், அமெரிக்க கரன்சி மதிப்பின் வீழ்ச்சியும், பட்ஜெட் பற்றாக்குறைகளும், வர்த்தக இறக்கங்களும் அமெரிக்காவை உலகளவில் ஒரு பலவீனமான நாடாக மாற்றி விட்டன.கடந்த 2000ல், அதிபராக கிளின்டன் பதவியேற்ற போது, அமெரிக்காவின் நிதி நிலைமை பலமாக இருந்து, உபரி பட்ஜெட் போடும் நிலையில் கையிருப்புடன் இருந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் நிதி நிலைமை பாதாளத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அமெரிக்காவின் கடன் எகிற ஆரம்பித்தது.கடந்த 2000ல், 300 பில்லியன் டாலர்களாக இருந்த அமெரிக்க ராணுவ செலவு, 2010ல், 700 பில்லியன் டாலர்களை எட்டியது. எட்டு ஆண்டுக்கால புஷ் ஆட்சியில், கடுமையான பொருளாதாரச் சரிவை கண்டது அமெரிக்கா.கடந்த 2009ல், அமெரிக்காவின் தேசியக் கடன் 13 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்தது (ஒரு டிரில்லியன் - 1,000 பில்லியன் டாலர்).இந்த போர் செலவுகளோடு, 2000ல் நிகழ்ந்த, "டாட் காம் பபுள்' வீழ்ச்சியும் சேர்ந்து கொண்டது. அதை தொடர்ந்து, 2007ல் துவங்கிய வீட்டுச் சந்தை சரிவுகளாலும், வங்கிகள் திவாலானதாலும் சங்கிலி தொடராக, ஒன்றை தொடர்ந்து மற்றொன்றாக, தொடர்ந்த பொருளாதாரச் சரிவுகளால் அமெரிக்கப் பொருளாதாரம் மட்டுமின்றி, ஒட்டு மொத்தமாக உலகப் பொருளாதாரமுமே பெரும் பாதிப்பை அடைந்தது.

ஆப்கன் மற்றும் ஈராக் போர்களின் செலவு மட்டுமே, ஒரு டிரில்லியன் டாலர்களில் இருந்து, இரண்டு டிரில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.இதில் ஆப்கன் போருக்கான செலவு ஓரளவு நியாயப்படுத்தப்பட்டாலும் கூட, ஈராக் போரால் ஏற்பட உள்ள எதிர்கால நன்மைகளை விட, செலவு அதிகமாகவே உள்ளது.மாதம் ஒன்றுக்கு, ஏழு பில்லியன் டாலர்கள் வரை ஆப்கனில் செலவிடப்படுகிறது. இதில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் நிதியுதவி தனி. இந்த செலவுக்கான பட்ஜெட்கள் அனைத்துமே, அவசர கால அடிப்படையில் தனி கணக்குகளின் வாயிலாக, ஒப்புதல் பெற்று செலவிடப்படுகின்றன.கடந்த 10 ஆண்டுகளில் ஈராக் போருக்காக, 800 பில்லியன் டாலர்களும், ஆப்கனில் இதுவரை 200 பில்லியன் டாலர்களும் செலவிடப்பட்டிருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஆப்கன் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் பளு தாங்க முடியாத அளவிற்கு செல்வதால், எவ்வளவு சீக்கிரமாக அங்கிருந்து வெளிவர முடியும் என்பதை ஒபாமா அரசு யோசித்து வருகிறது.இந்த போர்களுக்காகும் செலவை வைத்து, அமெரிக்காவின் நசிந்து வரும் சமுதாய ஓய்வு பாதுகாப்பு நிதியை சீர் செய்திருக்கலாம்; அமெரிக்க மக்கள் அனைவருக்கும் கிட்டும் வகையில், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை சீரமைத்திருக்கலாம்; இன்னும் எத்தனையோ நலன்களை அமெரிக்கர்களுக்கு அளித்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகளவிலான தாக்கங்கள் : அமெரிக்கா மேற்கொள்ளும் போர்களின் பாதிப்புகள், உலகளவில் பல்வேறு மாற்றங்களை கொணர்கின்றன. அமெரிக்காவுடனோ, ஈராக்குடனோ, சம்பந்தமே இல்லாத ஒரு சாதாரண இந்தியனிடம் கூட இந்த போர்கள் நேரடியான மறைமுகமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.உலகமயமாகிவிட்ட வர்த் தகத்தில், அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், பிற உலக நாடுகளையும் பாதிக்கின்றன. போர்கள், விலைவாசி உயர்வை ஏற்படுத்துகின்றன. இந்தியா போன்ற நாடுகளுக்கு பாதுகாப்பு பிரச்னைகளையும், பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்துகின்றன. இதுவரை பெருமளவில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர் கொண்டிராத ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், சுவீடன் போன்ற நாடுகள் பயங்கரவாத சம்பவங்களை காணத் துவங்கி விட்டன.

அடுத்த 10 ஆண்டில் அமெரிக்காவின் திட்டம் : ஈராக்கில் இருந்து வெளியேறி விட்டாலும், ஆப்கனில் இருந்து வெளியேற திட்டமிட்டிருந்தாலும் கூட, அடுத்த 10 ஆண்டுகளில் இன்னும் சில பெரும் போர்களை சந்திக்க வேண்டிய தயாரிப்புகளில், ஏற்கனவே அமெரிக்கா இறங்கி விட்டது.அணு ஆயுத தயாரிப்பில் இறங்கியுள்ள ஈரானை, மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் எதிரியாகவே பார்க்கின்றன. அதனால் அவை ஈரான் மீது போர் தொடுக்கும்படி அமெரிக்காவை தூண்டி வருகின்றன.ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்தால், அதன் செலவுகளை ஈரானின் எதிரி நாடுகள் பகிர்ந்து கொள்ளும்பட்சத்தில், அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியில் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படாது.ஆனால், ஈரான் போர் துவங்கினால், ஈரான் ஏற்றுமதி செய்யும் எண்ணெய் வர்த்தகம் பெரும் பாதிப்படையும். உலகம் முழுவதும் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும். அதன் விளைவாக, மீண்டும் ஓர் உலகப் பொருளாதார சீர்குலைவு ஏற்படும்.அமெரிக்காவை பொறுத்தவரை, அதன் போர் கொள்கைகள் அதிபரால் தீர்மானிக்கப்படுவதை விட, அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளை நிர்ணயிக்கும் அமைப்புகள் மற்றும் ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்களாலேயே பெருமளவு தீர்மானிக்கப்படுகின்றன. ஒருவேளை ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரான் போர் வராவிட்டாலும், அடுத்த அதிபரின் ஆட்சி காலத்தில் ஈரான் மீதான ஒரு போர் நிகழ காத்து கொண்டிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவின் அடுத்த பெரும் போராக, ஈரான் மீதான படையெடுப்பு நடக்கலாம். அதற்கான சாத்தியங்களும் கனிந்தே உள்ளன.

அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் :* 2000ல், ஆப்ரிக்காவின் சியாரா லியோன் என்ற சிறிய நாட்டில் நிகழ்ந்த, உள்நாட்டு சண்டையில் இருந்து அப்பாவி மக்களை மீட்டது.
*அதே ஆண்டு, அக்டோபரில், ஏமன் நாட்டில் இருந்த அமெரிக்கப் போர் கப்பல் யு.எஸ்.கோல்., குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் ஏமனில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை அழிக்க ஏமனுக்கு சென்றது.
*அதே ஆண்டு பிப்ரவரியில், இந்தோனேசியா அருகில் உள்ள கிழக்கு திமோர் நாட்டில் அமைதி ஏற்படுத்துவதற்காக அங்கு சென்றது.
* 2001 அக்டோபரில், ஆப்கன் மீதான போரைத் துவக்கியது.
* 2002ல், ஏமனில் அல்-குவைதாவினரை அழிக்க ராக்கெட் தாக்குதல்.
*பிலிப்பைன்சில் இயங்கி வரும் அபு சயாப் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க, 2002ல் அங்கு சென்றது. அன்று முதல் இன்று வரை அதற்கு உதவி வருவது.
*2003ல் "ஆப்பரேஷன் ப்ரீடம்' என்ற பெயரில், ஈராக் மீதான தாக்குதல்.
* 2003ல் லைபீரியாவில் சிக்கிக் கொண்ட அமெரிக்க நாட்டவரை மீட்க அமெரிக்கக் கடற்படை வீரர்கள் அங்கு சென்றது.
*ஜார்ஜியா நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு துணையாக, 2003ல் அங்கு சென்றது.
*2004ல் ஜார்ஜியா, கென்யா, எத்தியோப்பியா, ஏமன் மற்றும் எரித்ரியா நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
*2004ல் இருந்து இன்று வரை, பாக்.,கின் வடமேற்குப் பகுதிகளில் ஆளில்லாத விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது.
*இத்தாக்குதலில் உதவி செய்ய, இதுவரை 21 பில்லியன் டாலர், புஷ் அரசாலும், மேலும் மூன்று பில்லியன் டாலர் ஒபாமா அரசாலும் அளிக்கப்பட்டுள்ளன. இது தவிர, ஆண்டுக்கு 1.5 பில்லியன் டாலரை ஒபாமா பாக்.,கிற்கு அளிக்கிறார். மொத்தத்தில் பாக்.,கின் ராணுவ பட்ஜெட்டில் 25 சதவீதம் அமெரிக்காவால் தரப்படுகிறது.
*2005-06ல் பாக்.,பூகம்ப நிவாரணப் பணி.
*2006ல் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் மாட்டிக் கொண்ட அமெரிக்க நாட்டவரை மீட்க, லெபனானுக்கு சென்றது.
*2007ல் சோமாலியாவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை.
*2008ல் ஜார்ஜிய ராணுவத்துக்கு பயிற்சி, பிற உதவிகள்.
*இவை தவிர, ஐ.நா., அமைதிப் படையின் ஒரு பகுதியாகவும், அமெரிக்க நேச நாடுகளை பாதுகாக்கும் பணியிலும், அமெரிக்க கூட்டணி நாடுகளான சவுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ தளம் அமைப்பதிலும், உலக கடற்பரப்புகளில் ரோந்து வருவதிலும், ராணுவப் பயிற்சிக்காகவும், உளவு வேலைகளுக்காகவும், அமெரிக்காவின் லட்சக்கணக்கான தரை, விமான, கப்பற்படை துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

தலிபான்களை வளர்த்தது யார்? *தலிபான்களையும், அல்-குவைதா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளையும் இந்த அளவுக்கு நாசக்கார சக்திகளாக வளர்த்து விட்டதே அமெரிக்கா தான்.
* சோவியத் ரஷ்யா ஆப்கனை ஆக்கிரமித்திருந்த போது, அதை நேரடியாக எதிர்க்க விரும்பாத அமெரிக்கா, ஆப்கனில் இருந்த பல கொரில்லா படைகள் மற்றும் பல பழங்குடி இனக் குழுக்களுக்கும் ராணுவப் பயிற்சி, நிதியுதவி, ஆயுதங்களை வழங்கியது.
* அமெரிக்காவுக்கும், ஆப்கனின் கொரில்லா படைகளுக்கும் இடையில் தரகராக இருந்தது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., பணம் மற்றும் ஆயுதப் பரிமாற்றங்கள் பாகிஸ்தான் மூலமாகவே நடந்தன.
* "வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக' அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட பயங்கரவாத குழுக்கள் பின்பு அமெரிக்கா மீதே தங்கள் தாக்குதலை துவக்கின.

ஆப்கன் தோல்வியால் ஏற்படும் பாதிப்புகள் : ஆப்கனில் இருந்து உறுதியான வெற்றி பெறாமல், அமெரிக்கா வெளியேறும்பட்சத்தில்...
*ஆப்கன் மீண்டும் தலிபான்களின் ஆதிக்கத்தில் வரும். அப்போது அதன் அடுத்த குறி, காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிப்பதாகத் தான் இருக்கும்.
*சீனா தற்போது அடக்கி ஒடுக்கி வைத்துள்ள ஷிங்ஜியாங் பகுதியின் உய்குர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக தலிபான்கள் போராடத் துவங்கினால், சீனாவுக்கு அது பெரிய தலைவலியாக மாறும்.
*ரஷ்யாவின் செசன்யா பிரிவினை போராட்டத்திற்கும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பிரிவினை போராட்டத்திற்கும், தலிபான் பிடியில் சிக்கும் ஆப்கன் ஒரு வலுவான அடித்தளமாக மாறும். ஒட்டுமொத்தத்தில் ஆப்கன் பிரச்னைக்கு தீர்வு காணாமல் திரும்பும் அமெரிக்காவின் முடிவு, இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும்.

(கட்டுரையாளர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,) பணியாற்றி வருகிறார். அரசியல், அமெரிக்க நிகழ்வுகள் குறித்து பல்வேறு கட்டுரைகள் எழுதியுள்ளார்)

நன்றி: தினமலர்.


Read More...

Friday, December 17, 2010

நோ கமெண்ட்ஸ்



நன்றி: (பூணூல் போட்ட) துக்ளக்

Read More...

Wednesday, December 15, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 15-12-2010

மைடியர் இட்லிவடை,

டிசம்பர் சீசன் என்றால் கச்சேரி நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த வருஷம் சிபிஐ ரெய்டும் சேர்ந்து நடக்கிறது. இந்த ரெய்டுக்கு காரணம் கருணாநிதி தான். இளைஞன் பட விழாவில் என்ன பேசினார் தெரியுமா? பழைய காலத்தில் பகாசுரனைப் பார்த்து சொல்லப்பட்ட மிகைப்படுத்திய காட்சிகளை போல இன்று ஒரு 1.76 லட்சம் ஊழல் என்று சொல்லும் போது அதே போல தான் இருக்கிறது. எப்படி இவ்வளவு தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? என்று கேள்வி கேட்டிருக்கிறார். ஆக ஊழல் நடந்திருக்கிறது. ஆனால் ஒருவர் மட்டும் செய்யவில்லை என்று சொல்லுகிறார். படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது. எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்த காரியத்தை செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்ய முடியும் என்கிறார் சர்க்காரியாவால் விஞ்ஞானி என்று பேர் பெற்ற கருணாநிதி. இதுக்கு பேர் தான் பகுத்தறிவு. பெரியார் சொல்லித்தந்தது. அதுவும் ராசா ஒரு தலித் அதனால் அவருக்கு மந்திரி பதவி தர வேண்டும் என்று பேசுவதும் பகுத்தறிவில் ஒரு வகை.

இந்த படத்துக்கும் சிறந்த வசனத்துக்காக கலைஞருக்கு பரிசு கிடைக்கும் என்று நம்புவோமாக. ஊழலுக்கு நான் நெருப்பு போன்றவன் என்பது லேட்டஸ்ட் வசனம் ! )

பகுத்தறிவு பேசும் இவர்கள் ஜாதியை ஒழிக்காமல் பொண்ஜாதி பற்றி அசிங்கமாக பேசுகிறார்கள். "தமக்குத் திருமணமாகவில்லை என்ற கோபத்தால்தான் ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியவர் ஜெயலலிதா என்று துணைமுதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஏதோ துர்கா ஸ்டாலின் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போன வாரம் போனார், பெருமாள் இவர்கள் குடும்பத்துக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை.


காங்கிரசில் மனிஷ் திவாரி, ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் செய்தித் தொடர்பாளர்கள் என்று வந்து சாவடித்துக் கொண்டு இருக்கும் வேளையில், யாருடைய வேண்டுதலோ பிஜேபிக்கு நல்ல செய்தித் தொடர்பாளராக நிர்மலா சீதாராமன் கிடைத்துள்ளார். எடியூரப்பா போன்றவர்கள் இருக்கும் பிஜேபியில் இவரை போன்றவர்கள் இருந்து என்ன பயன்? ஆர்.எஸ்.எஸ் பற்று உள்ளவர்கள் நல்ல தைரியசாலிகள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எடியூரப்பா மாதிரி ஊழல் செய்துவிட்டு தைரியமாக இருக்கிறார்கள்.

இப்போது நீதிபதிகள் கூட தைரியமாக தங்கள் மிரட்டப்பட்டதை சொல்ல முன்வந்துள்ளாகள். சரியாக ஓராண்டிற்கு முன்னர், போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக ஒருவரை காப்பாற்றும் நிமித்தம், தம்மை ஒரு மத்திய அமைச்சர் மிரட்டினார் என்று நீதிபதி.திரு.ரகுபதி அவர்கள், நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக தெரிவித்தது மிகப்பெரிய அதிர்ச்சியைத் தோற்றுவித்தது. இது குறித்து நீதிபதி ரகுபதி அவர்கள் அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு.கோகலேவிற்கு புகார் கடிதம் ஒன்றை எழுதி, அதில் குறிப்பாக ராசாவின் பெயரையும் குறிப்பிட்டு, அதனுடைய மற்றொரு நகலை அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதி திரு.கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கும் அனுப்புமாறு வேண்டியிருந்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், திரு.கே.ஜி.பாலகிருஷ்ணன், கோகலேவால் தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் ராசாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்திருந்தார். அதனை தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலுள்ள் திரு.கோகலே, கே.ஜி.பியின் கூற்றை பகிரங்கமாக மறுத்ததோடு மட்டுமல்லாமல், அக்கடிதத்தின் இரண்டாவது பத்தியில் ராசாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது என்று அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார். ஆயினும் இன்றுவரை திரு.கே.ஜி.பாலகிருஷ்ணன் தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. கழகத்தினர் பூனைக்கு மணி கட்டுவதில் வல்லவர்கள் என்பது ஊரறிந்த விஷயம். அரசியலமைப்புச் சட்டத்தைக் கிழித்தெறிந்து விட்டு, காகிதத்தைத்தானே கிழித்தோம் என்று வியாக்யானம் செய்ததைப் போல், இதற்கும் கலைஞர் ஏதேனும் ஒரு வியாக்யானமோ, கடிதமோ அல்லது அட்லீஸ்ட் ஒரு கவிதையானும் வைத்திருப்பார் என நம்புவோமாக.

சாலமன் பாப்பையாவின் தினம் ஒரு திருக்குறள் போல, காங்கிரஸார் தினம் ஒரு சர்ச்சையில் மாட்டுகின்றனர். அந்த வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பது காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங். மும்பை தாக்குதலில் கஸாபால் கொல்லப்பட்ட காவல்துறை உயரதிகாரி திரு.கர்கரே, தாம் கொல்லப்படுவதற்கு இரண்டு மணிநேரம் முன்பாக தன்னை தனது மொபைலில் தொடர்பு கொண்டதாகவும், தனக்கு ஹிந்து தீவிரவாதிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறினார், என்று தெரிவித்தார். இவ்வறிக்கை வெளியான சில மணிநேரத்திலேயே இதனை வன்மையாகக் கண்டித்ததோடல்லாமல், மறுக்கவும் செய்தார் மறைந்த கர்கரேவின் மனைவி. கர்கரேவின் படுகொலையைப் பற்றி இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் பேசுவது பாகிஸ்தானுக்கு ஆதரவான செயல் என்று அவர் கூறினார். அவர் மட்டுமல்லாமல் காங்கிரஸார் பலரும் வெளிப்படையாக திக்விஜய் சிங்கின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தனர். பிறகு மறுபடியும் பேசிய திக்விஜய், அவர் தன்னுடன் பேசியதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தார். பின்பு ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம், அக்குறிப்பிட்ட தினத்தில் கர்கரேவின் செல்பேசியிலிருந்து திக்விஜய் சிங்கிற்கோ அல்லது திக்விஜயினுடைய செல்பேசியிலிருந்து கர்கரேவிற்கோ கால்கள் ஏதும் செய்யப்படவில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்தவுடன் பல்டியடித்தார் திக்விஜய். அவர் தொடர்புகொள்ளவில்லை, நானாகத்தான் தொடர்பு கொண்டேன், ஆதாரங்கள் இருக்கின்றன என்றார். இப்பொழுது, ஆதாரம் ஏதும் இல்லை, ஆனாலும் பேசினேன் என்கிறார். நாளை என்ன சொல்வாரோ? தூக்கத்தில் நடக்கும் வியாதி பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், பேசும் வியாதி என்று இப்போது தான் கேள்விப்படுகிறோம்.

சன் டிவியும் வட இந்திய மீடியாக்களுக்கு இணையாக நிரா ராடியா, சிபிஐ ரெய்டு விவகாரங்களை பலமாக எதிரொலிக்கிறது. காரணம் ஒன்றும் அதிசயக்கத்தக்கதல்ல. நிரா ராடியாவின் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் தயாநிதி மாறனுக்கு எதிராகவும், நெருடலாகவும் பல விவகாரங்கள் இருக்கின்றன. அதற்கு பதிலடியாகத்தான் கனிமொழி, ராசா தொடர்பான இச்செய்திகளுக்கு சன் டிவியில் மிகுந்து முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் கலைஞர் டிவி எந்த உலகத்தில் இருக்கிறதென்றே தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் ஏதோ செவ்வாய் கிரகத்தில் நடந்தது போல் ஏதுமறியா அப்பாவி போல் எந்த ஊரில் எந்த ஒன்றியக் கவுன்சிலர் ஜெயலலிதாவிற்கு எதிராக அறிக்கைவிட்டார் என்று வாசித்துக் கொண்டிருக்கிறது. பார்த்தார் கலைஞர். அம்மாவுக்கு கொட நாடு. ஐயாவுக்கு ஏலகிரி.

எனக்கு ஒரு பெரிய சந்தேகம். கலைஞர் குடுபத்தில் நடக்கும் விஷேசங்களுக்கு ஏன் நீரா ராடியா வருவதில்லை. கலைஞரை தவிர குடும்ப உறுப்பினர், அமைச்சர்கள் என்று எல்லோரிடமும் பேசிவிட்டார். இருந்தாலும் அவர் அழகிரி மகன் திருமணத்துக்கு வந்திருந்தால் இவர்களுடன் நேரிலேயே பேசியிருக்கலாம். ஏனோ வரவில்லை. ஒருவேளை ராசா சி.ஐ.டி காலனிக்கு வந்தது போல அங்கதான் தான் வருவார் போல.

இந்த உரையாடல்களில் என்னை கவர்ந்தது கனிமொழிக்கு தான் விரும்பிய துறை கிடைப்பதற்கு அவரது தாயாரை கடவுளிடம் செய்யும் பிராத்தைனையை விட வேண்டாம் என்று சொல்லுகிறார். அட பிராத்தனை செய்வாரோ? பெரியார், அண்ணா, இயற்கை, பகுத்தறிவு என கனிமொழிக்கான கடவுளர்களாக நிச்சயம் இருக்கமாட்டார்கள். ஆக ஒன்று மட்டும் நிச்சயம். அமைச்சரவை உருவாக்கம் என்பது பிரதமருக்கு உட்பட்ட விஷயம் அல்ல, கடவுள் + நீரா ராடியா உட்பட்ட விஷயம்.

நடிகர் விஜய்யின் தந்தை ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார் என்பது போன வார நியூஸ். முன்பு மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, தமிழகத்தின் ஒரு முன்னணி நடிகரின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன. அவர் அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கறேன் என்று மட்டும்தான் சொன்னார். அதற்கே அந்த நடிகரின் 4, 5 படங்களை தோல்விப் படங்களாக ஆக்கி விட்டனர். இதைப் பற்றி அந்த நடிகர் என்னிடம் முறையிட்டார் என்றார். ஆக குருவி, அழகிய தமிழ்மகன், வேட்டைக்காரன், வில்லு, சுறா போன்ற படங்கள் தோல்விக்கு இது தான் காரணம். மக்களே தெரிந்துக்கொள்ளுங்கள். இப்பவே காவலன் படத்துக்கு டிக்கேட் வாங்கிவிட்டேன். என்னை இடியட் என்று நீங்க திட்டினாலும், ஏதோ விஜய்க்கு நம்மால் முடிந்த உதவி.

இப்ப 3-இடியட்ஸ் படத்தில் விஜய் முடியை வெட்டியவுடன் அவரை தூக்கிவிட்டார்கள். விஜய். முடி ஒட்ட வெட்டப்பட்டுவிட்டதால் தற்போது எந்த படத்திலும் நடிக்க முடியாது என்பதால், விஜய் மயிரே போச்சு என்று ஃபாரினுக்குப் போய்விட்டார்.

இளங்கோவன் சும்மா இருப்பாரா குஷ்பு, விஜய் போன்ற சினிமா நடிகர்கள் முதலில் காங்கிரசில் சேரவே விரும்பினார்கள். ஆனால் வழியில் வந்தவர்கள் அவர்களை தங்களுடன் கூட்டிக்கொண்டு சென்று விட்டார்கள். எனினும் அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி பாதுகாப்பாக இருக்கும். இதில என்ன வேடிக்கை என்றால் காங்கிரஸும் குஷ்பு போல திமுகவில் சேர்ந்துவிட்டார்கள் என்பது தான்.

கதை எழுதுவது எப்படி?, தூங்காமல் சிறுகதை எப்படி எழுதுவது, எடிட்டிங் எப்படி செய்வது என்று கிழக்கு பதிப்பக எழுத்தாளர்கள் அடிக்கடி பேசுவார்கள். ஆனால் இவர்கள் முரசொலியில் எடிட்டிங் எப்படி செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும். கபில் சிபில் பேட்டியை முரசொலியில் மறுபிரசுரம் செய்தார்கள். அதில் ஒரு கேள்வி 'தான் கடைப்பிடித்த கொள்கைகளுக்கு பிரதமரின் ஒப்புதலைப் பெற்றதாக ஆ.ராசா கூறி இருக்கிறாரே?’ என்று பர்கா தத் கேட்க... 'இல்லை! அது உண்மை இல்லை! பிரதமர் உள்ளிட்டோரின் ஒப்புதலைப் பெற்றதாக ராசா கூறுகிறார். ஆனால், அப்படி ஒப்புதல் எதுவும் தரப்படவில்லை’ என்று கபில் சிபல் அழுத்தமாகச் சொன்னார். அந்த வார்த்தைதான் முரசொலி எடிட் செய்திருப்பது!" இப்படி இருக்க வேண்டும் எடிட்டிங்.

ராஜாத்தி அம்மாள் கம்பெனி நடத்துறாங்க. இங்கே இருக்கும் படங்களை பாருங்க. கருணாநிதியின் போட்டோவைத் தேட வேண்டும். வெங்கடாஜலபதி போட்டோவிற்கு கீழே இருக்கும் சாமியின் போட்டோ என்ன ? யாராவது கண்டுபிடித்து சொல்லுங்கப்பா. சுப்பிரமணிய சாமியாக இருக்குமோ? நான் முருகனை சொன்னேம்பா!


இந்த வார ஜோக்
இவர்கள் யார் ?
1. தி.மு.க.வில் இணைந்த எல்.கணேசன்
2. மகளிர் ஆணையத் தலைவி சல்மா
3. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான யசோதா

இவர்கள் சமூக சேவகர்கள் என்று 79.86 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனைகளை தமிழக அரசு (அதாவது நம்முடைய அரசு) ஒதுக்கி இருக்கிறது.


இன்னிக்கு நடந்த ரெய்டை பார்த்தால் அடுத்த வருஷம் சங்கமம் இருக்குமோ இருக்காதோ. பேசாம இந்த சமூக சேவகர்களை நலிந்த கலைஞர்கள் என்று சர்டிப்பிகேட் கொடுத்து ஆட வைக்கலாம்.



நயன்தாரா தற்போது தெலுங்கில் தயாராகி வரும் புராண படமொன்றில் சீதை வேடத்தில் நடித்து வருகிறார். ( அப்பா இந்த படம் போட இந்த நீயூஸ் போதும் )







இப்படிக்கு,
இன்னும் நீரா ராடியாவுடன் போன் பேசாத முனி





Read More...

Sunday, December 12, 2010

60 !

Read More...

Friday, December 10, 2010

நோ கமெண்ட்ஸ் :-)



நன்றி: TOI

கார்ட்டூன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு :-)

Read More...

கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்து...

Read More...

Wednesday, December 08, 2010

சாமி ஒரு அரசியல் சாரு நிவேதிதா - அரவிந்தன் நீலகண்டன்

திருமலை,

ஹரன் பிரசன்னா உளறவில்லை. அவர் இந்த விஷயத்தில் காமெடி செய்யவும் இல்லை. சுப்ரமணியம் சாமி ஒரு அரசியல் புரோக்கர். சர்வதேச அரசியல் தரகர். ஆதாயம் இல்லாமல் சுப்பிரமணியசாமி வழக்கு போட மாட்டார். ஆதாரம் இரண்டாம் பட்சம் தான். எனக்கு சுப்பிரமணிய சாமி குறித்து சில முக்கிய கேள்விகள் இருக்கின்றன. சு.சாமியிடம் பேச ஹரன் பிரசன்னாவுக்கு ஒர் முக்கியமான தகுதி இருக்கிறது. நேர்மை. ஆனால் சுசாவுக்கு அது இருக்கிறதா என்பது கேள்விக்குறி. ப்ராங்க்ய்ஸ் கோத்தே எழுதிய நூலிலிருந்து எவ்வித நாணமும் இல்லாமல் பிளியாகரைஸ் செய்தவர் சுசா. தனது நூலில் இந்தியா சீனாவிடம் பணிந்து போக வேண்டும் என்று எழுதி அதனை இந்து இயக்கங்கள் மூலம் வெளியிடத்தயங்காதவர். இதெல்லாம் அவரின் பழைய நிலைபாடு அல்ல. அவர் திடீரென ஹிந்துத்துவத்தை கண்டுபிடித்த பிறகு எடுத்த நிலைபாடுகள். இதோ ஒரு சாம்பிள்:




பயங்கரவாதத்தை எதிர்க்கவும் உள்நாட்டு பாதுகாப்புக்கு எதிரான அபாயங்களை எதிர்கொள்ளவும் நாம் சீனாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நாட்டுடனான நம் எதிர்ப்பு நம் படைகளை வடக்கே கட்டிப் போட்டு தெற்கே சமுத்திரத்தை நோக்கி நம் பார்வையை செல்லவிடாமல் செய்துவிட்டது. அங்கே தான் நம் நாடு பலவீனமாக இருக்கிறது. எனவே சீனாவுடனான நம் உறவுகளை மேம்படுத்துவதே நம் ஆக முக்கிய கவனிப்பை பெறும் விஷயமாக இருக்கவேண்டும். எனவே பழைய சரவ்தேச உடன்படிக்கைகளை எல்லாம் பற்றி கவலைப்படாமல் நம் பாதுகாப்பை மட்டும் கணக்கில் கொண்டு நாம் நாம் சீன-இந்திய எல்லை பிரச்சனையை பரஸ்பர சலுகைகள் மற்றும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் முடிக்க வேண்டும். இத்தகைய நெகிழ்ச்சித் தன்மைதான் சீன-இந்திய உறவில் யதார்த்த அணுகுமுறையாக இருக்க முடியும். சீனாவின் நிலைபாடுகள் எல்லை பிரச்சனையில் ஆதாரமில்லாதவையாக இருக்கலாம். ஆனால் நமது எல்லையை நாம் வரையறை செய்திருப்பது போலியான பிரிட்டிஷ் தாஸ்தாவேஜுக்களின் அடிப்படையில்தான். எனவே இருநாடுகளும் வரலாற்றின் கைதிகளாக இருக்கக் கூடாது,. ...நெகிழ்ச்சித்தன்மையே சீன உறவுகளில் அடிநாதமாக அமையவேண்டும்." (பக்கம் 104, Hindus Under Siege: The Way Out ஹர் ஆனந்த் பப்ளிகேஷன்ஸ் 2005)

இப்படி ஒரு கம்யூனிஸ்ட் எழுதினால் என்ன சொல்லுவோம். தேசத்துரோகி செருப்பால் அடி என்று சொல்லமாட்டோமா? இதற்கு முந்தைய பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி சொல்கிறார் இந்தியாவின் பயங்கரவாத பிரச்சனையின் ஆணிவேரே ஐ.எஸ்.ஐ-எல்டிடிஈ தானாம். எனவே இதனை உடைக்க இந்தியா நேரடியாக பாகிஸ்தானிடம் பேசவேண்டுமாம், அமெரிக்காவை "mobilize" செய்ய வேண்டுமாம் அப்புறம்..."most of all applying to China for help" 1962 இல் என்ன நடந்ததாம் தெரியுமா? "after an incompetent attempt by Nehru to recover the area ("I have asked the army to throw out China" Nehru had said pompously) the Chinese demonstrated how determined they were to keep Akasi Chin. Thus of the total original area of Kashmir today India, Pakistan and China have a third each of the area under their respective control" (பக்.109)

பொக்கரானை குறித்து சுப்பிரமணியன் சுவாமி சொன்னதை கேட்டால் திருமலையின் இருதயக்கமலம் ஆயிரம் இதழ்கள் கொண்டு விரிந்து மகிழ்ந்திருக்கும். பொக்கரானில் வாஜ்பாய் அரசாங்கம் அணுகுண்டு பரிசோதனை செய்த செய்தியை கேட்டு தேசம் மகிழ்ந்ததே அது "raw tribal euphoria" (பக். .114) மேலும் "India is going for the Bomb just as the world experience was discounting its utility" (பக்.115) இறுதியாக பொகரான் அணு குண்டு வெடிப்பு சீனாவை ஆத்திரப் படுத்தும் என்பதால் (இதனை பல நுணுக்கமான வாதங்கள் மூலம் சொல்லுகிறார்: நாம் வறுமையான நாடு நம்மால் சீனாவின் மிஸைல் பலத்துக்கு ஈடு கொடுப்பது சாத்தியமா? சீன-பாகிஸ்தான் உறவு பூச்சாண்டி இத்யாதி) அது 2010 வரை தள்ளி வைத்திருக்கவேண்டிய விஷயம் என்கிறார் (பக்.118)

எல்லாவற்றுக்கும் மேலாக ஹரன் பிரசன்னா எழுதிய கவிதைகளில் ஒரு தழுவல் - காப்பியடித்த கவிதையை காட்டுங்கள் திருமலை. நான் தூக்குப் போட்டுக்கொள்கிறேன். உங்கள் பொருளாதார கணக்கியல் மேதை நவீன சாணக்கியன் யோக்கியதை எப்படி இருக்கிறது தெரியுமா?

"...To the Aryans are attributed Sanskrit and the Vedas, the Vedic or Hindu religious spiritual texts, as well as a host of subsequent writings,the Upanishads, the Mahabharata, teh Ramayana etc.

By this 'Aryan' theory, the British showed on the one hand that Indian civilization was not that ancient and that it was posterior to the cultures which influenced the western world - Mesopotamia, Sumeria or Babylon - and that whatever good things India had developed- Sanskrit literature or even its architrecture had been influenced by the West. Thus, Sanskrit, instead of being the mother of all Indo-European languages, became just a branch of their huge family: thus the religion of Zarathustra is said to have influenced Hinduism, and not vice versa. And on the other hand it divided India and pitted against each other the low caste dark skinned Dravidians and the high caste light-skinned Aryans, a rift which is still enduring. But today, this theory is being challenged by two new discoveries, one archaeological and the other linguistic. Firstly, in the Rig Veda, the Ganges, India's sacred river is only mentioned once, but the mythic Saraswati is praised fifty times. For a long time, the Saraswati was indeed considered a myth, until the American satellite Landstat was able to photograph and map the bed of this magnificent river, which was nearly fourteen kilometres wide and took its source in the Himalayas. Archaeologist Paul-Henri Francfort, who studied the Saraswati region at the beginning of the Nineties, found that the Saraswati had "disappeared", becasue around 2200 BC, an immense drougt reduced the whole region to aridity and famine. "Thus", he writes "most inhabitants moved away from the Saraswati to settle on the banks of the Indus and Sutlej rivers". According to official history, the Vedas were composed around 1500 BC, some even say 1200 BC. Yet the Rig Veda describes India as it was before thegreat drought which dried up the Saraswati, which means in effect that the so called Indus or Harappan civilization was a continuation of the Vedic epoch, which ended approximately when the Saraswato dried up. (பக் 19-20)

மேலே உள்ளது 2005 இல் சுப்பிரமணியசாமி தான் எழுதியதாக Hinduism Under Siege இல் எழுதியது. ஆனால் கீழே உள்ளது ப்ராங்காயிஸ் க்கோதே எழுதியது: A Western journalist on India: the ferengi's columns அதே ஹர் ஆனந்த் பபளிகேஷன்ஸ்s, ஆண்டு 2002:

To the Aryans are attributed Sanskrit and the Vedas, the Vedic or Hindu religious spiritual texts, as well as a host of subsequent writings,the Upanishads, the Mahabharata, teh Ramayana etc. This was indeed a masterly stroke on the part of the British thanks to the Aryan theory, they showed on the one hand that Indian civilization was not that ancient and that it was posterior to the cultures which influenced the western world - Mesopotamia, Sumeria or Babylon - and that whatever good things India had developed- Sanskrit literature or even its architrecture had been influenced by the West. Thus, Sanskrit, instead of being the mother of all Indo-European languages, became just a branch of their huge family: thus the religion of Zarathustra is said to have influenced Hinduism, and not vice versa. And on the other hand it divided India and pitted against each other the low caste dark skinned Dravidians and the high caste light-skinned Aryans, a rift which is still enduring. But today, this theory is being challenged by two new discoveries, one archaeological and the other linguistic. Firstly, in the Rig Veda, the Ganges, India's sacred river is only mentioned once, but the mythic Saraswati is praised fifty times. For a long time, the Saraswati was indeed considered a myth, until the American satellite Landstat was able to photograph and map the bed of this magnificent river, which was nearly fourteen kilometres wide and took its source in the Himalayas. Archaeologist Paul-Henri Francfort, who studied the Saraswati region at the beginning of the Nineties, found that the Saraswati had "disappeared", becasue around 2200 BC, an immense drouhgt reduced the whole region to aridity and famine. "Thus", he writes "most inhabitants moved away from the Saraswati to settle on the banks of the Indus and Sutlej rivers". According to official history, the Vedas were composed around 1500 BC, some even say 1200 BC. Yet the Rig Veda describes India as it was before the great drought which dried up the Saraswati, which means in effect that the so called Indus or Harappan civilization was a continuation of the Vedic epoch, which ended approximately when the Saraswato dried up. (பக். 116)


இதனை நீங்கள் எப்படி விளக்குவீர்கள் திருமலை? சோனியாவை டீ பார்ட்டி மூலம் பிரதமராக்க முயற்சித்தாரே சுசா அப்போது அவருக்கு சோனியாவுக்கு ராஜீவ் கொலையுடன் தொடர்புண்டு என்று தெரியுமா தெரியாதா? சோனியாவின் தந்தை கேஜிபி உளவாளியாக இருக்கலாம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல அது ஒரு ஊகம் ஊகம் கூட இல்லை வதந்தி. இதே சுசா முன்னர் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு கூட ராஜிவ் கொலையில் தொடர்பு உண்டு என சொல்லியிருக்கிறார். சுசா நம்ப முடியாத மனிதர், 2G ஊழலில் மனிதர் நாட்டுக்கு நன்மை செய்திருக்கிறார். உண்மைதான் நன்றிகள். அதற்காக இந்த சர்வதேச அரசியல் புரோக்கரை சாணக்கியன் தேசபக்தன் என்றெல்லாம் ஹீரோ பிம்பம் கொடுப்பது தேவையில்லாதது. அடிப்படை நேர்மை இல்லாத மனிதர் சுசா. ஒரு அரசியல் சாரு நிவேதிதா.

- அரவிந்தன் நீலகண்டன்
இந்த பதிவிற்கு தேவையில்லை..:-)


Read More...

Tuesday, December 07, 2010

மன்மதன் அம்பு - கமலின் மார்க்கெட்டிங் கவிதை


நடிகை த்ரிஷாவிற்கு Tamil = தமிழ் ( இதற்கு முன் அவர் டமில் என்று தான் சொல்லிக்கொண்டு இருந்தாராம்) கற்று கொடுத்த கமலுக்கு நன்றி :-)

கவிதை கீழே..


கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
....

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கொள்
கூட்டல் ஒன்றே குறியென்றான பின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
....

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையும்
கூட நின்றுவன் உதவிட வேண்டும்
....

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
....

இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு
....

தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்
...

மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையில் அவன்
காளத்தி வேண்டும் என்றான்
...

வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும்
இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப் பெற்றால்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!


இந்த கவிதைக்கு பம்பாய் மாமியை தவிர வேறு யாரும் விளக்கம் சொல்ல முடியாது



Read More...

Saturday, December 04, 2010

2G ஞாநி + சாமி பேட்டி

ஜெயா டிவியில் வந்த

1. ஞாநி பேட்டியை பார்க்க இங்கே செல்லவும்

2. சு.சாமி பேட்டி இங்கே

Read More...

Friday, December 03, 2010

யாருக்கும் வெட்கமில்லை...- ஞாநி

ரத்தம் கொதித்தது - நவம்பர் 18ஆம் தேதி மதுரையில் கருணாநிதியின் பேரன் கல்யாணத் திருவிழா நிகழ்ச்சிகளை டி.வி.யில் பார்த்தபோதும் செய்திகளைப் பத்திரிகைகளில் படித்தபோதும்.

பள்ளிகளுக்கு விடுமுறை. பல்கலைக்கழகத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. மதுரையின் இளவரசர் என்று அழகிரி மகனைப் போற்றி விளம்பரப் பலகைகள். தாம் மேற்கொண்ட அதே பகுத்தறிவு லட்சியத்தைத் தம் குடும்பமே பேரன், பேத்திகள் வரை பின்பற்றுவதைப் பற்றிப் பெருமைப்படுவதாக மேடையில் கருணாநிதியின் ஓர் அப்பட்டமான பொய்ப் பேச்சு... எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தமாதிரி திருமணத்துக்கு வந்த ஆங்கில வாழ்த்துச் செய்திகளைப் படித்து நன்றி கூறியது தயாநிதிமாறன். பக்கத்தில் அழகிரி.


இவர்களின் சண்டையினால் தானே மதுரை தினகரன் அலு வலகத்தில் மூன்று அப்பாவி மனிதர்கள் செத்தார்கள். தீ வைத்தவர்கள் எல்லாம் கல்யாணப் பந்தலில் விருந்தினர்களாக...

கருணாநிதி குடும்பத்தில் தயாளு அம்மாளிலிருந்து தயாநிதி வரை எல்லோரும் எப்பேர்ப்பட்ட திறமையான நடிகர்கள் என்பது அன்றைக்கு மேடையில் தெரிந்தது. அடுத்த சில நாட்களில் வெளிவந்த அவுட்லுக் இதழில் அம்பலப் படுத்தப்பட்ட நீரா ராடியா ஃபோன் பேச்சு டேப்களைப் படித்தபோதுதான், அவர்களின் நடிப்புத் திறமையின் முழுப் பரிமாணமும் புரிந்தது. சிவாஜி கணேசன் முதல் தனுஷ் வரை பத்மினி, சாவித்திரி முதல் த்ரிஷா வரை அத்தனை நடிகர்களையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிற திறமையுடன் ஒரே குடும்பத்தில் இத்தனை பேர் இருக்கிறார்களே என்று வியப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது.

மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக தயாநிதி மாறனும் கனிமொழியும் ஆ.ராசாவும் எவ்வளவு துடித்திருக்கிறார்கள் என்பதை நீரா ராடியா டேப்கள் நமக்குப் புரியவைக்கின்றன. இந்த டேப்கள் எதுவும் எந்தப் பத்திரிகையாளரும் தனி முயற்சியில் பதிவு செய்தவை அல்ல. அரசாங்கத்தின் வருமானவரித் துறை, உள்துறை அனுமதியுடன் நீரா ராடியாவைத் தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்தவை. இப்போது உச்ச நீதி மன்றத்தின் முன்னால் தாக்கல் செய்யப்பட்டிருப்பவை. இவற்றிலிருந்து தெரியவரும் தகவல்கள் தான் என்ன?

1. ‘கருணாநிதிக்கு வயதாகி புத்தி பேதலித்துவிட்டது. ( senile ). இனிமேல் தானும் ஸ்டாலினும் தான் கட்சியை நடத் திச் செல்லப் போகிறோம். காங்கிர ஸார் என்னுடன் பேசுவதுதான் நல்லது. ஸ்டாலினும் என் கட்டுப் பாட்டில் தான் இருப்பார்’ என் றெல்லாம் தயாநிதிமாறன் தில்லியில் சொல்வதாக நீரா ராடியா, ஆ.ராசாவிடம் சொல்கிறார்.

2. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என காங்கிரஸார் மனத்தில் விதைத்தது யாரென்று தமக்குத் தெரியும் என ராசா சொன்னதுக்குதான் மேற்படி பதில்.

3. அதுமட்டுமல்ல அழகிரி ஒரு கிரிமினல். ஐந்தாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை என்றும் தயாநிதி சொல்லியிருக்கிறார். இதையெல்லாம் கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்கிறார் நீரா.

4. இல்லை. நான் அழகிரியிடமே சொல்லிவிட் டேன். அவர் தலைவரிடம் போய்ச் சொல்லிவிட்டார் என்கிறார் ராசா.

5. எங்களுக்கு டி.ஆர்.பாலுவுடன்தான் பிரச்னை. ராசாவிடம் இல்லை என்று சோனியா காந்தியை நேரடியாகவே கருணாநிதியிடம் ஃபோனில் சொல்ல வைக்கும்படி ராசா, நீராவைக் கேட்டுக் கொள்கிறார். அகமது படேல் மூலம் சொல்லுவதாக நீரா சொல்கிறார். பாலுதான் பிரச்னை என்பதை எழுதி ஒரு சீலிட்ட கவரில் வைத்து கருணாநிதியிடம் கொடுக்கச் சொல்கிறார் ராசா.

6. தம்மைத்தான் தி.மு.க சார்பில் தில்லியில் காங்கிரஸாருடன் பேசும்படி கருணாநிதி தனியே சொல்லியனுப்பி இருப்பதாக தயாநிதி மாறன் தில்லியில் சொல்லிவருவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார்.

7. தயாநிதி பொய் சொல்வதாகவும் பொய்களைப் பரப்புவதாகவும் கனிமொழி, நீராவிடம் சொல்கிறார். அதற்கு நீரா, சென்னையில் சன் டி.வி.காரர்கள் இதர வட இந்திய சேனல்கள் எல்லோரிடமும் தவறான செய்திகளை வேண்டுமென்றே பரப்புகிறார்கள் என்று தம்மிடம் சி.என்.என்.ஐ.பி.என். சேனலின் ராஜ்தீப் சர்தேசாய் கூறியதாகத் தெரிவிக்கிறார்.

8. தயாநிதி, பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குச் செல்லப் போவதாக நீரா, கனிமொழியிடம் சொல்கிறார். போகக்கூடாது என்று கருணாநிதி சொல்லியிருப்பதாகக் கனிமொழி சொல்கிறார். ராசாதான் போகவேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாம். ஆனால் தயாநிதி பின்னால் கருணாநிதியிடம் வந்து அகமது படேல் கூப்பிட்டதால் சென்றேன் என்று ஏதாவது கதை விடுவார் என்கிறார் கனிமொழி. இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல வேண்டி யதுதானே என்று நீரா கேட்கிறார். அய்யோ அவருக்குப் புரியவே புரியாது, என்று அலுத்துக் கொள்கிறார் கனிமொழி. விரக்தியடையாதே. நீதான் மகள். நீதான் அப்பாவிடம் பேசவேண்டும் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

9.தமக்கு கேபினட்டில் என்ன துறை தருவார்கள் என்று நீராவிடம் கனிமொழி கேட்கிறார். நல்வாழ்வு, சுற்றுச் சூழல், விமானத்துறைகளில் ஒன்றைத் தரச் சொல்லியிருப்பதாக நீரா சொல்கிறார். சுற்றுலா வேண்டாம் என்கிறார் கனிமொழி.

10. தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுடன் நீரா பேசும்போது, அமைச்சர் ராசாவை தயாநிதி துரத்தித் துரத்தி அடிப்பது கவலையாக இருப்பதாக டாட்டா சொல்கிறார். எதுவும் ஆகாது. அப்படியே ஆனாலும், ராசா இடத்துக்குக் கனிமொழிதான் வருவார் என்று ஆறுதல் சொல்கிறார் நீரா.

11. இன்னொரு பேச்சில், ராசாவுக்காக இவ்வளவு செய்திருந்தும் இப்படி ( நமக்குச் சாதகமில்லாமல்) நடந்துகொள்கிறாரே என்று கவலைப்படுகிறார் ரத்தன் டாட்டா. கோர்ட் உத்தரவினால் அப்படி என்று தம்மிடம் ராசா விளக்கியதாகவும் கோர்ட் உத்தரவைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். அதற்கு வியாக்யானம் சொல்வது ராசா கையில்தான் இருக்கிறது என்று ராசாவிடம் சொல்லிவிட்ட தாகவும் நீரா தெரிவிக்கிறார்.

12. புதிய அட்டர்னி ஜெனரல் பற்றி ரத்தன் டாட்டா கவலை தெரிவிக்கிறார். அவரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நமக்கு சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம்தான் முக்கியம். அவரைப் பார்க்கப்போகிறேன். அவருக்கு அனில் அம்பானியைத் துளியும் பிடிக்காது. நேர்மையானவர். (!) அனில் சொல்வதை ஒப்புக் கொள்ளமாட்டார் என்று நீரா பதிலளிக்கிறார்.

13. அனில் அம்பானியின் குழப்படிகள் பற்றி ஏன் மீடியா அம்பலப்படுத்தாமல் இருக்கிறது என்று டாட்டா, நீராவைக் கேட்கிறார். விளம்பர பலம்தான். ஏதாவது நெகட்டிவாக எழுதினால் உடனே விளம் பரத்தை நிறுத்திவிடுகிறார்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் தைனிக் பாஸ்கர் பத்திரிகையும் சொல்கிறார்கள். மற்றவர்களும் இதைச் செய்யமுடியுமே என்றேன். மீடியா ரொம்ப ரொம்ப பேரா சைப்படுகிறது என்று விளக்குகிறார் நீரா.

14. என்.டி. டி.வி.யின் பர்க்கா தத்துடன் நீரா பேசுகிறார். இருவரும் காங்கிரஸ் - தி.மு.க அமைச்சர் பதவிப் பங்கீடு பேச்சு வார்த்தைகளை விவாதிக்கிறார்கள். தாம் காங்கிரஸ் தரப்பிடம் என்ன தெரிவிக்க வேண்டும் என்று பர்க்கா கேட்கிறார். தாம் அம்மா, மகள் (ராஜாத்தி, கனிமொழி) இரு வருடனும் பேசிவிட்டதாகவும் , காங்கிரஸ் தலைவர்கள் கருணாநிதியிடம் நேரடியாகப் பேசவேண்டும் என்றும் தயாநிதி மாறன், பாலு இருவரையும் வைத்துக் கொண்டு பேசக் கூடாது என்றும் நீரா சொல்கிறார்.

15. ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர் இயக்குனர் வீர் சிங்வியும் நீராவும் பேசுகிறார்கள். சிங்வி, தாம் தொடர்ந்து சோனி யாவையும் ராகுலையும் சந்தித்து வருவதாகச் சொல்கிறார். அமைச்சர் இலாக்கா பங்கீட்டுப் பிரச்னை காங்கிரஸ்-தி.மு.க பிரச்னை அல்ல. தி.மு.கவின் உள்தகராறுதான் என்கிறார். இரண்டு மனைவிகள், ஒரு சகோதரன், ஒரு சகோதரி, ஒரு மருமகன், என்று எல்லாம் ஒரே சிக்கலாக இருக்கிறது. கருணாநிதி தானே நேரில் பேசட்டும். அல்லது இன்னார்தான் தம் சார்பில் என்று ஒரே ஒருவரைத் தெரிவிக்கட்டும். ஆளுக்கு ஆள் பேசுகிறார்கள். தயாநிதி, குலாம் நபி ஆசாதை அடிக்கடி கூப்பிட்டு நான் தான் அதிகாரபூர்வமான பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். யாரும் அவரை சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்று வீர் சிங்வி சொல்கிறார்.

16. நீரா உடனே தயாநிதி மாறனை அமைச்சரவையில் சேர்க்கப் பெரும் நிர்ப்பந்தம் இருப்பதாகச் சொல்கிறார். என்ன நிர்ப்பந்தம்? தயாநிதி, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் அதனால் ஸ்டாலினும், செல்வியும் நிர்ப் பந்திப்பதாகவும் நீரா சொல்கிறார்.

இப்படியாகத் தமிழ் நாட்டின் மானத்தை தில்லியில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் குடும்பம் நாறடித்துக் கொண்டிருக்கும் கதை தொடர்கிறது.

படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது...

மேலே கொடுக்கப்பட்டது சுருக்கம்தான். முழு உரையாடல்களைக் கேட்டால், மந்திரி பதவிக்கான வெறி, ஆவேசம், பேராசை, நினைத்தபடி ஒவ்வொன்றும் நடக்கவில் லையே என்ற ஆதங்கம், எரிச்சல், எப்படி யாவது காரியத்தை முடித்துவிடவேண்டு மென்ற பதைப்பு எல்லாம் கனிமொழியின் பேச்சில் தொனிக்கின்றன. ஒவ்வொருவர் பேச்சிலும் ஒரு தொனி இருக்கிறது. தைரியம், மமதை, எல்லாம் தம் கண்ட்ரோலில் இருக்கிறது என்ற மிதப்பு எல்லாம் தெரிகின்றன.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை களையே உலுக்கும் கேள்விகளையும் அவற்றுக்கு அதிர்ச்சியான பதில்களையும் இந்த டேப்கள் நமக்குள் எழுப்புகின்றன.

கேள்வி 1: அமைச்சர்களைத் தேர்ந் தெடுப்பது யார்? பிரதமரா? தொழிலதி பர்களா?

பதில்: தொழிலதிபர்கள்தான். மன் மோகன்சிங் ஒரு டம்மி பீஸ்.

கேள்வி 2: எதற்காகக் குறிப்பிட்ட துறை தமக்கு வேண்டுமென்று அலைகிறார்கள்? தொண்டு செய்யவா? கொள்ளையடிக்கவா?

பதில்: கேள்வி கேட்ட முட்டாளே! தொண்டுக்கும் அரசியலுக்கும் என்ன சம் பந்தம் ? கொள்ளையடிக்கத்தான்.

கேள்வி 3: எல்லா ஊழல்களையும் முறை கேடுகளையும் அம்பலப்படுத்தும் மீடியா காரர்கள் அரசியல்வாதிகளுடன் செய்தி சேகரிக்கப் பேசினால் குற்றமா ? அது தரகு வேலை பார்ப்பதாகிவிடுமா?

பதில்: செய்தி சேகரிப்பவரின் தொனி வேறு. தரகு பேர்வழியின் தொனி வேறு. நிச்சயம் ராடியா டேப்களில் இருக்கும் தொனி தரகர்களின் தொனிதான்.

கேள்வி 4 : ராடியா டேப்கள் பற்றி கருணாநிதி, கனிமொழி, ராசா, தயாநிதி மாறன், மன்மோகன்சிங், சோனியா, ராகுல் காந்தி, ரத்தன் டாட்டா ஆகியோர் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை ?

பதில்: சொன்னாலும் நாம் நம்பப் போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால்தான்.

கேள்வி 5: இத்தனைக்கும் பிறகு எப்படி மக்களைத் தேர்தலில் சந்திக்கத் தெருத் தெருவாக இனி வருவார்கள் ?

பதில்: ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்களில் ஒரு துளியை, கவர்களில் கொடுத்தால் மக்களுக்குப் போதுமானது என்று அவர்கள் நம்புவதனால்தான்.

இந்தக் கட்டுரையை எப்படி முடிக்க? கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது என்றா?

நன்றி: கல்கி

Read More...