பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 21, 2010

உரையாடல்கள் தமிழில் ..

இந்த உரையாடல்களை பலர் ஆங்கிலத்தில் கேட்டிருக்க/படித்திருக்க கூடும். தமிழ் நாட்டு மக்களுக்கு எப்படி ஆங்கில புரியும் ? நம்ம பிரச்சனை தமிழ் நாட்டு தலைவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். அதனால் தமிழில் நாட்டு மக்களுக்கு தமிழில் இந்த உரையாடல்கள்.... :-)


பர்கா தத் (என்.டி.டி.வி.செய்திக் குழும ஆசிரியர்) - நீரா ராடியா உரையாடல் 22.5.2009 காலை 10 மணி 47நிமிடம் 33விநாடிகள்

பர்கா: ஆ, நீரா?

நீரா: பர்கா , திமுகவில் யாருடன் பேசுகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

பர்கா: ஆ, மாறனாகத்தான் இருக்க வேண்டும்.

நீரா: மாறனுக்கோ, டி.ஆர்.பாலுவுக்கோ அடித்தள கட்டமைப்புத்துறை அளிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

பர்கா: காரணம், அவர்களே அதை வைத்துக் கொள்ள வேண்டும்.

நீரா: இல்லை; முன்பு வேண்டியிருந்தது. பிரதமர் அத் துறை வேண்டாம் என்று சொன்னார். அதனால் தொழிலாளர் நலம், உரம், ரசாயனம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் தரலாம் என்றார். தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ராசாவுக்கு. என்ன ஆயிற்று, இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதா?

22.5.2009

காலை 9 மணி 48 நிமிடம் 51விநாடிகள்

நீரா: பாலுவிடம் பிரச்னை இருந்து வேறு யாருடனும் பிரச்னை இல்லையென்றால்- அதுதான் காங்கிரசின் சிக்கல். அவர்கள் கருணாநிதியுடன் பேச வேண்டும். கருணாநிதியுடன் அவர்களுக்கு நல்ல நேரடித்தொடர்பு இருக்கிறது.

பர்கா: ஆம்.

நீரா: பாலு, மாறன் முன்னிலையில் அவர்கள் பேச முடியாது.

பர்கா: ஆம்.

நீரா: அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேராகப் போய் அவரிடம் பேச வேண்டும்-அழகிரியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால் மாறனுக்கு கேபினட் பதவி தந்துவிட்டு அழகிரிக்கு துணை அமைச்சர் தருவதுதான் அவர்களுடைய மிகப்பெரிய பிரச்னை.

பர்கா: அது சரி. ஆனால் கருணா, டி.ஆர்.பாலுவைக் கழற்றிவிடுவாரா?

நீரா: இங்கே பாருங்கள், அவரிடம் பாலுதான் ஒரே பிரச்னை என்று சொன்னால் அவர் கழற்றிவிடுவார்.

பர்கா: ஆனால் யாருக்கு எந்த இலாகா என்பதில்தானே இப்போது சிக்கல்?

நீரா: இல்லை. அதுபற்றி எதுவும் அவர்கள் சொல்லவில்லை. இலாகாக்கள் பற்றி இன்னும் விவாதம் நடக்கவில்லை.

பர்கா: சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய இலாகாக்களை தி.மு.க.கேட்பதாக காங்கிரஸ் சொல்கிறது.

நீரா: முதலிலேயே இந்தப் பட்டியல் போய்விட்டது.

பர்கா: இப்போது காங்கிரஸ் அளிக்க முன்வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரசாயனம், உரம், தொழிலாளர் நலம். இப்போது இந்த அளவில் உள்ளது. தி.மு.க.ஒப்புக்கொள்ளுமா?

நீரா: தி.மு.க. ஏற்காமல் போகலாம். இதை ஏற்றுக்கொண்டால் மாறனைக் கைவிட

வேண்டியிருக்கும். காரணம் மாறன் நிலக்கரி, சுரங்கத்துறை கேட்கிறார்.

பர்கா: மாறனிடம் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நீரா: ஆம், அவர்கள் செய்ய வேண்டியது கனியுடன் பேசி அவருடைய தந்தையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும். காரணம், பிரதமருடன் நடந்த உரையாடல் கூட மிகக்குறுகிய நேரமே நடந்தது-இரண்டு நிமிடங்கள்-கனிமொழிதான் மொழிபெயர்த்தார்.

பர்கா: சரி.

... அவர்கள் ரேஸ்கோர்ஸ் சாலையை (பிரதமர் இல்லம் உள்ள தெரு) விட்டு வந்தவுடன் நான் ஏற்பாடு செய்கிறேன்.

நீரா: அவர் (கனிமொழி) என்ன சொல்கிறார் என்றால் குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர் - அவருக்குப் பேச அதிகாரம் இருக்கும்...

பர்கா: சரி, பிரச்னை ஒன்றும் இல்லை. அது பிரச்னையே இல்லை. நான் ஆசாதிடம் பேசுகிறேன். ரேஸ்கோர்ஸ் சாலையை விட்டதும் நான் ஆசாதுடன் பேசுகிறேன்.

நீரா: ஆனால் ஒன்று மட்டும் உங்களிடம் சொல்கிறேன். கருணாநிதி ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறார்.

பர்கா: கனியும் கூட இருந்து கலந்துகொண்டால் என்ன?

நீரா: அப்பா அவரைத் திரும்ப வரச் சொல்லிவிட்டார் என்பதால் அவரால் கலந்துகொள்ள முடியாது. அவர் சொல்வதைத்தான் இவர் கேட்க வேண்டும். குலாமைக் கூப்பிடுங்கள்.
வீர் சங்வி (பத்திரிகையாளர்) - நீரா ராடியா உரையாடல் 20.6.2009 மதியம் 12 மணி 09நிமிடம் 59 விநாடிகள்

நீரா: டிரெட்மில்லிலிருந்து இப்போதுதான் இறங்கினேன். முகேஷ் அம்பானியை இந்த விஷயத்தில் பேச வைக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறேன்.

வீர்: அது சரி.

நீரா: ஆனால் விஷயம் இதுதான். நாம் முயற்சித்தாக வேண்டும். அவர் பேசினால் அதை அவர்கள் விழிப்புடன் கண்காணிப்பார்கள்.

வீர்: ஆம்.

நீரா: ஆனால் இது ஒரு போர். கடைசியில் பார்க்கப் போனால் இது யாருடைய போர் என்பது உங்களுக்குத் தெரியும். இதைப் பத்திரிகைகளுக்குக் கொண்டு போகிறோமா என்பது மற்றொன்று.

வீர்: சரி.

நீரா: அம்பானியால் பேட்டி எதுவும் தர முடியாது. காரணம் அவரிடம் அமர்சிங் பற்றிக் கேட்பார்கள். பலதும் இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு இருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால் அவரால் பேச முடியும், எதைப்பற்றியும் அவர் கூச்சப்படும் நிலையில் இல்லை. அனில் அம்பானியிடம் பல ஒளிவு மறைவுகள், அவரால் தெளிவுபடுத்த முடியாத விஷயங்கள். அமர்சிங் எனது நெருங்கிய நண்பர் என்று அனில் சொன்னால் அவர் கதை தீர்ந்தது. "எனக்கு அமர்சிங்குடன் எந்த உறவும் கிடையாது' என்றால் அமர்சிங் அவரைத் தீர்த்துவிடுவார். அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் பல சங்கடமான விஷயங்கள் இருக்கின்றன. அதனால் அனில் அம்பானி மீடியாவைத் தவிர்க்கத் தீர்மானித்துவிட்டார். முகேஷுக்கு இந்தப் பிரச்னை இல்லை. முகேஷ் நேரடியாகப் பேசலாம், பல விஷயங்களைச் சொல்லலாம். நீங்கள் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்கிரிப்டை முன் கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். அந்த ஸ்கிரிப்டை அப்படியே பின்பற்றுங்கள். அனில் இது எதையும் செய்ய முடியாது,இல்லையா?

நீரா: ஆம். ஆனால் நாம் இப்படிப் பண்ணலாம் அல்லவா?

வீர்: ஆம்?

நீரா: அப்படியா?

வீர்: ஆனால் முகேஷ் இதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். அதை அவர் உணர வேண்டும். முழுதும் எழுதிப் பார்த்துவிடவேண்டும்.

நீரா: அதைத்தான் சொல்கிறேன். அவர் அதைத்தான் என்னிடம் கேட்கிறார் என்று நினைக்கிறேன்.

வீர்: ஆம், எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

நீரா: இதோ பார் நீரா, எதையும் தீர்மானித்துக் கொள்ளாமல் தோன்றியபடி பேசமுடியாது என்கிறார்.

வீர்: இல்லை, எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் அவருடன் முன்கூட்டியே வந்து ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீரா: ஆம், ஆம்.

வீர்: கேமரா முன் போவதற்குமுன் ஒத்திகை பார்க்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்..

வீர்: எந்தவிதமான செய்தி உங்களுக்கு வேண்டும்? காரணம் "கவுன்டர் பாயிண்ட்' பகுதியில் இது வருவதால் இது மிகவும் அதிகபட்ச வாசகர்களை அடையும். ஆனால் இது யார் பக்கமும் சாய்வதாகவும் தெரியக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் சொல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பு.

நீரா: ஆனால் அடிப்படையில் விஷயம் என்னவென்றால் உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நடந்து முடிந்த விஷயம் நாட்டின் நலனுக்கு எதிரானது, வேதனைக்குரியது.

வீர்: சரி.

நீரா: இதுதான் அடிப்படை செய்தியாக இருக்க வேண்டும்.

வீர்: சரி, அந்த செய்தி போதும். ஒரு ஏழை நாட்டின் தேசிய வளங்கள் சில பணக்காரர் மட்டுமே பலன் அடைவதற்காக வரைமுறையில்லாமல் வாரிக் கொடுக்கப்படக்கூடாது.

நீரா: சரி.

வீர்: எனவே, இதை தேர்தல் முடிவுகளோடு இணைத்துவிடுகிறேன். கிராமப்புற வேலை வாய்ப்புதிட்டம் உள்ளது, எல்லாத் தரப்பினரையும் உள்படுத்தும் வளர்ச்சியில் சோனியா உறுதியாக இருக்கிறார். இது தின்று கொழுத்த சிலருக்கு பலனளிக்கும்படி இருக்கக்கூடாது. நெருங்கியவர்களுக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக்கூடாது. வரைமுறை இல்லாமல் இருக்கக்கூடாது. மன்மோகன் சிங்கின் ஐந்து வருட ஆட்சி பற்றிய செய்தி இப்படித்தான் இருக்க வேண்டும். நாட்டுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் விதமாக அரிய வளங்களை ஊழல் செய்து வரைமுறையில்லாமல் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு உங்களை மன்னிக்காது.

நீரா: ஆம், ஆனால், வீர், அவர் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை அரசு வழங்கியிருக்கிறது. அவர் அதில் ஆயிரம் கோடி டாலர் செலவு செய்திருக்கிறார்.

வீர்: சரி.

நீரா: அனில் அம்பானி ஒரு பைசா செலவு செய்யாமல் அதன் பலனை அனுபவிக்கிறார்.

வீர்: அவற்றை நான் குறிப்பிட்டுவிடுகிறேன்...

நீரா: சரி.

வீர்: இவற்றை நான் குறிப்பிடுகிறேன். இந்தச் சூழல் மிகவும் ஊழல் மிகுந்ததாக இருப்பதாலும், யார் வேண்டுமானாலும் இதை வளைக்கலாம் என்பதாலும், எந்த விதக் கட்டணமும் இல்லாமல் இயற்கை வளங்களை கையகப்படுத்துகிறார்கள்...

23.5.2009

இரவு 10மணி 26நிமிடம்

42விநாடிகள்

நீரா: இதெல்லாம் அவருடைய (பிரதமர்) உந்துதலில் நடப்பதாக உணர்ந்தார்...

வீர்: மாறன்.

நீரா: ஆம்... (ஒலிப்பதிவு தெளிவில்லை 0.00:42)

ஆனால் விஷயம் என்னவென்றால் அவர் இன்னும் மாறனை எடுத்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே...

வீர்: எங்கிருந்து இந்த உந்துதல் வருகிறது. இந்த நிர்பந்தம்?

நீரா: ஸ்டாலின், அவர் சகோதரி செல்வியிடமிருந்து...

வீர்: சரி.

நீரா: மாறன், ஸ்டாலினுடைய அம்மா தயாளு அம்மாளுக்கு | 600 கோடி கொடுத்ததாக நம்புகிறேன்.

வீர்: | 600 கோடி சரியா?

நீரா: | 600 கோடி என்றுதான் எனக்குச் சொன்னார்கள்.

வீர்: அந்தவித நிர்பந்தங்களோடு யாரும் வாதம் பண்ணமுடியாது?

நீரா: இல்லையா?


ஆ. ராசா - நீரா ராடியா உரையாடல் 22.5.2009 9 மணி 48 நிமிடம் 51 விநாடிகள்

நீரா: ஹலோ?

ராசா: ராசா பேசுகிறேன்.

நீரா: ஹாய்! இப்போதுதான் பர்கா தத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.

ராசா: ஆ?

நீரா: பர்கா தத்

ராசா: அவர் என்ன சொல்கிறார்?

நீரா: இந்த விஷயம் குறித்து.... அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக.... அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு (மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர். பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.

ராசா: ... ஆனால் தலைவருடன் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்... அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.

ராசா: காலையில் இதுபற்றி விவாதிக்கப்படும்... ஏன் காங்கிரஸ் அநாவசியமாக.... ( ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.

நீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா?

ராசா: ஆ?

நீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும் போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.

ராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்...

ராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: தனியாகவா?

ராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.

நீரா: காங்கிரஸிடமிருந்து அல்லவா?

ராசா: ஆம்.

நீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.

ராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். சார், இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்...

22.5.2009

மதியம் 2 மணி 29 நிமிடம்

41 விநாடிகள்

நீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்?

ராசா: அவர் என்ன சொல்கிறார் - கனி என்ன சொல்கிறார்?

நீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.

ராசா: ம்ம்...

நீரா: .... ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்...

நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.

ராசா: ம்ம்.

நீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று....

ராசா: ஆ.... நான் ஏற்கெனவே பேசிவிட்டேன், ஏற்கெனவே பேசிவிட்டன்...

நீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா?

ராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்... எனக்குத் தெரியும்...

நீரா: இல்லை... அதுமட்டுமல்ல, அதுமட்டுமல்ல... பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்... இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.

ராசா: ம்ம்.

நீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.

ராசா: ஓஹோ! ஓஹோ!

நீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்...

ராசா: ம்ம்.

நீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்...

ராசா: ஓ...

நீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.

24.5.2009

காலை 11 மணி

5 நிமிடம் 11 விநாடிகள்

நீரா: மாறன் தன்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?

ராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.

நீரா: தெரியும் அல்லவா?

ராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.

நீரா:ம்ம்..

ராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.

ராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்...

நீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவா?

நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்... சண்டோலியா உங்களிடம் சொன்னாரா?

ராசா: எனக்குத் தெரியாதே.

நீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.

ராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்... அதனால் எதுவும்...

நீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.

ராசா: ஆ, இருக்கலாம்


கனிமொழி - நீரா ராடியா உரையாடல் - 22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்

கனிமொழி: ஹலோ

நீரா: கனி, நேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா...

கனி: ம்ம்

நீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோ, மாறனுக்கோ கொடுப்பதில்லையென்று...

கனி: ஆம், ஆனால் யாரும்... யார் சொன்னது?

நீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது...

கனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.

அதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது?

நீரா: வந்தவர்களா இல்லையா, சொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.

கனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார், அவ்வளவுதான். இதோ பாருங்கள், பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது... உங்களுக்கே தெரியும்... பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.

நீரா: ம்ம்..

...சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

கனி: ஓகே, நான் இங்கேதான் இருப்பேன்.

நீரா: ஓகே.

கனி: தயவுசெய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.

22.5.2009

மதியம் 2 மணி 46 நிமிடம்

15 விநாடிகள்

கனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா?

நீரா: இல்லை, காங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.

கனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பிவிடுவதாக இருந்தது. எனவே... அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக, எனக்கு (ஒலிப்பதிவில் தெளிவில்லை) (0.01:32.4)

நீரா: ஆம், ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா?

கனி: அதுதான், அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். "நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது'.

நீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று மாறனிடம் சொன்னால் என்ன? நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். - உன்னை - (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன?

கனி: இல்லை, அப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.

நீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான், அல்லவா?

கனி: ஆம், ஆம்.

நீரா: இதுதான் அரசியல், மை டியர்.

22.5.2009

இரவு 8 மணி 04 நிமிடம்

19 விநாடிகள்

நீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

கனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது...

நீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனி, ராசா, பாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறு அறிவித்திருக்கிறார்.

கனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப் பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால், மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவை, அரசியலில் இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக்கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான் கேள்விப்பட்டேன், அவர்கள்...

நீரா: ஓ.கே., ஆமாம், நான் ராசாவுடன் பேசினேன்.

23.5.2009

காலை 9 மணி 59 நிமிடம்

2 விநாடிகள்

நீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்ன இருந்தாலும், எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.

கனி: அது சரி.

நீரா: ஆம், இவர் (மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.

கனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

நீரா: ஆம், சரிதான்.

கனி: ஆனால் ஒரு விஷயம், நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போல, அவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும், அவர் பதில் சொல்வார்.

நீரா: ரொம்ப சரி. ஆம், பார்க்கப்போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

கனி: இல்லையில்லை, அதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு (மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்கு கூட விருப்பமில்லை.- நன்றி: "ஓபன்' வார இதழ், தமிழில் தினமணி

சில கேள்விகள்:
1. இந்த உரையாடல்களை காங்கிரஸ் பரப்பியிருக்க நிறைய வாய்ப்பு இருக்கு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - மீடியா, திமுக.
2. மோடியோ அல்லது வேற யாராவது இந்த உரையாடல்களில் ஈடுப்பட்டிருந்தால் இந்த உரையாடல்கள் நமக்கு மனப்பாடம் ஆகும் வரை போட்டு தாக்கியிருப்பார்கள்.
3. மாறன் - கனிமொழி, மாறன் - அழகிரி, கலைஞர் - மாறன், குடும்பம் - பாலு, மாறன் - ராசா ... என்று திமுக குடும்ப சண்டை வெளியே வந்திருக்கு. ஏதோ தமிழ் நாட்டுக்கு நல்லது நடந்தால் சந்தோஷமே !
4. பிஜேபி ஏன் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதும் புரியாத புதிர் தான்.
37 Comments:

Krishnakumar said...

Please put Radia-Ratan tata's conversation. It has some "kilu kilu" matter about Raja and Kani.

Anonymous said...

இப்போ நல்லா புர்யுது நைனா..

ஆதி மனிதன் said...

செம்மொழி வளர்க்கும் இ. வ. வாழ்க.

Unknown said...

கதிரிக்க முத்திடுச்சி அதான்,...

Unknown said...

கத்திரிக்கா முத்திடுச்சி அதான்,...

குரங்குபெடல் said...

அவசியமான ஒரு பதிவு . . .நன்றி

விவேகானந்தன் said...

என்ன தாண்டா உங்க பிரச்சனை...? நாட்டுல விலைவாசி கண்டமேனிக்கு இருக்கு.. நீங்க என்னடான்னா 600 கோடி... 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி... என்ன தாண்டா நடக்குது? இதுல நம்ம கிருஷ்ணகுமாருக்கு கிளு கிளுப்பு வேற...

R.Gopi said...

அய்யகோ.....

இந்த வாழும் வள்ளுவனின் “தல” இப்படி உருளுதே!!

என்னே இந்த நடமாடும் தமிழுக்கு வந்த சோதனை.... அவமானம்....

Don said...

These tapes only reveal that people in DMK are no better than gang robbers. The audio tapes in short convey the following message - "I'll loot this department and you loot that, so we can collectively loot the whole India". With such serious people in serious mission to loot India, India doesn't need militants from outside.
This also points out the failure of democracy. People's responsibility can't end just in casting their vote. There are problems beyond that in a rule like proving majority,coalition dharma, lobbyists etc. And it's tough for a govt to be fair to the people after all this. It's not just people's vote that make them rule. One possible solution might be, deciding coalition by people's vote through another election after the general elections.

Moreover how can we get good leaders by voting alone?. There's lot more than that which the system of democracy ignores. And pathetically there is no better system so far.

ரிஷபன்Meena said...

//என்ன தாண்டா உங்க பிரச்சனை...? நாட்டுல விலைவாசி கண்டமேனிக்கு இருக்கு.. நீங்க என்னடான்னா 600 கோடி... 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி... என்ன தாண்டா நடக்குது? இதுல நம்ம கிருஷ்ணகுமாருக்கு கிளு கிளுப்பு வேற...//

இதுக்கே இப்படி அசந்துட்டா எப்படி , இன்னும் தெரியாதது எவ்வளவோ ?

தனிப்பட்ட உரையாடல்களை பொதுவில் வெளியிடுவது அநாகரீகத்தின் உச்சம் என்று தமிழ் பதிவுலக அறிவுஜிவிகள் இன்னும் குரைக்க ஆரம்பிக்கலையா ?

Unknown said...

http://www.vinavu.com/2010/11/19/2g-spectrum-scandal/

"4. பிஜேபி ஏன் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதும் புரியாத புதிர் தான்."
இன்றைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எதிர்க்கும் பாரதீய ஜனதா ஆட்சியில் தான் பொதுத்துறை நிறுவனங்களையும் தேசத்தின் இயற்கை வளங்களையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்க தனியாக ஒரு அமைச்சரையே வைத்திருந்தனர். இன்றைக்கு எந்த கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கையை கைகளில் வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்களோ, அதே கணக்குத் தனிக்கைத் துறை 2006ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சமர்பித்த அறிக்கை ஒன்றில் 1999ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரையிலான பாரதீய ஜனதா ஆட்சிக்காலத்தில் ஒன்பது பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்த்ததில் நடந்த முறைகேடுகளை பட்டியலிட்டு விபரமாக அறிக்கையும் சமர்பித்திருந்தனர்.

தற்போது கூட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் விசாரணைக்கு கூக்குரலிடும் பா.ஜ.கவின் கோரிக்கை தேவையில்லை என்பதை அருண் ஷோரியே தெரிவித்திருக்கிறார். முந்தைய பா.ஜ.க அரசில் பொதுத்துறைகளை அடிமாட்டு விலைக்கு அனுப்பிய புண்ணியவான் இவர்தான். அதனால்தான் அவர் ‘நீதி’வழுவாமல் பேசுகிறார்.

Prakash said...

Have Listed all the conversations, there’s NOTHIG more that these are all just lobbing discussions, which is common in western democratic countries. No discussion on any Financial/Criminal favoring/offerings happened. May be DMK should worry that internal differences were discussed with others and nothing for common man to bather about these conversations.

VENG said...

அரசியல்னா இவ்வளுவு இருக்குதா...நான் என்னம்மோ ரொம்ப சுலபம் நினைச்சுக்கிட்டேன்...!

Anonymous said...

நாடு ரொம்ப சீக்கிரம் முன்னேறிடும்...
ம்ம்ம்..
இதுக்கப்புறமும் இவனுவளுக்கு ஓட்டு போட்டா நக்கறதுக்கு ஒன்னுமே இருக்காது....

Anonymous said...

ஒன்றும் உப்பு சப்பில்லை.

ஒன்றுமில்லா போன் பேச்சை இந்த முட்டாள் மீடியா எப்படி பெரிது படுத்துகிறது?
எல்லாம் பப்ளிசிட்டி காசுக்காக.

Anonymous said...

What is this for? How this is related to 2G revenue loss???????? This was happened when UPA govt was set to form? I see nothing wrong to demand for good portfolio, so that the benefit can be delivered to the people. Otherwise, if DMK gets useless portfolio , no use to any one. Tell us, how this is realted to 2G issues?????????????? People know your jaathiveri newspaper attitude!!!!!!!!!!!!!!!!!.

Anonymous said...

இதெல்லாம் பழைய கதை நயினா!

இப்போ sensational news:

ஜெமினி கணேஷ் "அவா"ள சேர்ந்தவர் இல்லையாமே.."இவா" ஜாதியாம்

விவரம் டோண்டு தளத்தில்

Ananth said...

You guys should listen to the audio. http://openthemagazine.com/article/nation/some-telephone-conversations

Not everything has been translated.

Anonymous said...

ராஜாதி அம்மாவெல்லாம் யாரு அமைச்சார வரணும்ம்னு முடிவெடுக்கற நிலமையில நாடு இருக்கு. நாட்டுல எதிர்க் கட்சிக்கறதே இல்ல. எல்லாரும் சேர்ந்து கூட்டு கொள்ளை அடிக்கறாங்க.

seethag said...

உண்மைதமிழன் இந்த ஒலி நாடாக்கலைப்பற்றி எழிதியதால் அவருடய ப்லாக் hack செய்யப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

Kasinathan said...

I told you about the swimming pool thing---

What is this as quoted by Nira Radia to Ratan Tata??

Can anyone elaborate??

மஞ்சள் ஜட்டி said...

கிருஷ்ண குமார்!! இங்கே இருக்கு.. அந்த கிளுகிளு மேட்டர்.

மஞ்சள் ஜட்டி said...

கிருஷ்ண குமார்!! இங்கே இருக்கு.. அந்த கிளுகிளு மேட்டர்.

http://openthemagazine.com/article/nation/i-met-raja-today-he-is-a-happy-man

Unknown said...

IV

This shows the pathetic state of our affairs. The PM has no say in his cabinet and it is being decided by a mistress. OMG, the way they think to loot the country if they spend 1% of it as to how to develop it we would have gone miles ahead.. I don't see it happenning... being away from India is a blessing.. rather than being there and seeing and listening to all this nonsense. Let them come and see Africa (they call it the dark continent) it is much better PS I am not talking about SA or ZIM here.

Kamesh

Anonymous said...

//உண்மைதமிழன் இந்த ஒலி நாடாக்கலைப்பற்றி எழிதியதால் அவருடய ப்லாக் hack செய்யப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்//

Mr.திருதிரு துறுதுறு,

அதெல்லாம் கிடக்கட்டும் உங்க தமிழை கொஞ்சம் தட்டி நெளிவு எடுங்க முதல்ல.

Anonymous said...

அழிவதும் பெண்ணாலே என்பதற்கு உதாரணம் - 2

1. கோபாலபுரம் மற்றும் சிஐடி காலனி பெண்மணிகளின் எதிர்பார்ப்புகளை சமாளிக்கத் துவங்கியதில் இன்று ஸ்பெக்ட்ரம் 1.76லட்சம் கோடியில் நாடே அல்லோலப்படுகிறது.

2. இதே போல கர்நாடகாவில் ஒரு பெண்மணியை அமைச்சரவையி"லும்" வைத்துக்கொள்ளும் ஆசையால் அரசே அல்லாடுகிறது.

Anonymous said...

அவர்கள் எதுவும் தப்பாக பேசவில்லையே.அங்க இங்க பாம் போடனும்னு பேசினாங்ளா இல்ல ,மொத்தம் நூறு கோடீ அதுல ஒனக்கு 20 ,எங்க்கு 30 ,அவ்ங்களுக்கு 40னு பேசினாங்ளா? ஒரு சாதாரண பேச்ச ரொம்ப பெருசாக்கிறார்கள்! பாப்பார பரதேசிகளுக்கு வேற வெட்டி வேல எதுவும் இல்லையா?

அப் டேட்டட்!!
ஸ்ரீரங்கம்:பல்லக்கில் உலா வந்த பார்பன் கொழுப்புக்கு ஆப்பு!!
http://www.vinavu.com/2010/11/20/srirangam-pallaku-battar/

Anonymous said...

சில மாதங்களுக்கு முன் மலேசிய தலை நகரில் நடந்த பிரம்மாண்ட ஒலி வட்டை விழாவில்..பங்கு கொண்ட ஒரு பிரபல புள்ளி (ஆளுங்கட்சி தலைவரை எப்போதும் துதி பாடுபவர்) ஒருவர், சல்லாபத்துக்கு ஆசைப்பட்டு தங்கியிருந்த ஓட்டலில் உள்ளூர் "அயிட்டத்தை" வரவழைத்து சிக்கனை கடிப்பது போல் "கடித்து" விட., உள்ளூர் காவல் துறை கைது செய்யும் சமயம்...ஊள்ளூர் பெரிய்ய தலையால் காப்பாற்றப் பட்டது தகவல்.... எல்லோரும் கண்ணதாசன் போல ஆக ஆசைப்பட்டால்???

Anonymous said...

People like Rawanan are a real curse to this Nation.

Arun Shourie is one of the clean and straight statesmen that we got as a minister. If not for him India will be having useless loss-making Orgs.

ரூம் போட்டு யோசிப்பவர் said...

// Anonymous said...
அவர்கள் எதுவும் தப்பாக பேசவில்லையே....//

ஆமாம் எல்லாம் சரியாகத்தான் பேசியிருக்கிறார்கள். சும்மா இங்கிட்டும் அங்கிட்டும் பேசியதற்கு (மட்டும்) ஒரு கோடி ரூபாய், நீரா விற்கு. பேசியவருக்கு ஒரு கோடி என்றால், கையெழுத்து போட்டவர் எவ்வளவு வாங்கி இருப்பார்?

குரோம்பேட்டைக் குறும்பன் said...

நிதிஷ் குமார் அமைச்சரவை அமைக்க வேண்டுமாம்; நீரா ராடியா எங்கிருந்தாலும் ஃபோன் அருகே வரவும்.

Anonymous said...

The Bihar elections were held in six phases

Securing a huge victory, Nitish Kumar led JD (U)-BJP alliance has again taken over the control of Bihar. The election results are major setback for Congress which was banking on Rahul Gandhi’s whirlwind campaigning but it seems that Bihar people rejected him. Further, RJD also lost its ground with massive losses.

The results seem to show that the politics of Bihar has changed and people are paying more attention to the matters of better law and order, improved administration and industrialization over caste vote and communism.

The Bihar elections were held in six phases and were closely watched both because there were new emerging voting trends in the state and because it was a clash of two major leaders, both lobbying hard to maintain their position.

Meanwhile, Chief Election Commissioner SY Quraishi described the 2010 Assembly elections as the most peaceful in the state

Gopal said...

Barkha datt will hereafter be known as broker barkha. Thank God she is not in TN. Otherwise she would have joined the K party to serve their ends.

Anonymous said...

//4. பிஜேபி ஏன் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதும் புரியாத புதிர் தான்.//
ஹி ஹி..
போன பதிவில் நீங்கள் போட்ட மஞ்ச கமெண்டுதான் காரணம்.
-ஜெ.

San said...

IV,
Have a look at this web site.You can find an excellent spoof on the media.

http://swathipradeepworld.wordpress.com/

Anonymous said...

Ana oru thalaivar mattum aangliam theriathavar...

Mukundan said...

Nice attempt for the sake of Tamil audience. In the same way, can you please do the needful for the benefit of those tamil audience who would prefer to know the conversation as-is by transcripting directly in tamil ? This would help to understand what "reading lines in between" means ? Ofcourse only for those who are interested to know the vested interests of those parties who did the transcripting in the first place. Not necessarily for people like IV and its fans.