பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 28, 2010

லேட்டாக வந்த மீடியா

கடைசியாக கரன் தாப்பர் பூனைக்கு மணி கட்டிவிட்டார். அப்பாடா

Read More...

2G - சோ பேட்டி

நேற்று இரவு 7 மணிக்கு ஜெயா டிவியில் வந்த சோ பேட்டி


மற்ற பாகங்கள் கீழே...( நன்றி: ஜெயா டிவி, மற்றும் இதை அப்லோட் செய்த நண்பருக்கும் )

Read More...

Thursday, November 25, 2010

நோ கமெண்ட்ஸ்The shortest distance between the problem & its solution is the distance between our knees and the floor. The one who kneels down to Krishna can stand up to any situation of life.

Read More...

Sunday, November 21, 2010

உரையாடல்கள் தமிழில் ..

இந்த உரையாடல்களை பலர் ஆங்கிலத்தில் கேட்டிருக்க/படித்திருக்க கூடும். தமிழ் நாட்டு மக்களுக்கு எப்படி ஆங்கில புரியும் ? நம்ம பிரச்சனை தமிழ் நாட்டு தலைவர்கள் எல்லாம் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். அதனால் தமிழில் நாட்டு மக்களுக்கு தமிழில் இந்த உரையாடல்கள்.... :-)


பர்கா தத் (என்.டி.டி.வி.செய்திக் குழும ஆசிரியர்) - நீரா ராடியா உரையாடல் 22.5.2009 காலை 10 மணி 47நிமிடம் 33விநாடிகள்

பர்கா: ஆ, நீரா?

நீரா: பர்கா , திமுகவில் யாருடன் பேசுகிறார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

பர்கா: ஆ, மாறனாகத்தான் இருக்க வேண்டும்.

நீரா: மாறனுக்கோ, டி.ஆர்.பாலுவுக்கோ அடித்தள கட்டமைப்புத்துறை அளிக்கப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

பர்கா: காரணம், அவர்களே அதை வைத்துக் கொள்ள வேண்டும்.

நீரா: இல்லை; முன்பு வேண்டியிருந்தது. பிரதமர் அத் துறை வேண்டாம் என்று சொன்னார். அதனால் தொழிலாளர் நலம், உரம், ரசாயனம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் தரலாம் என்றார். தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ராசாவுக்கு. என்ன ஆயிற்று, இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரிவிக்கப்பட்டதா?

22.5.2009

காலை 9 மணி 48 நிமிடம் 51விநாடிகள்

நீரா: பாலுவிடம் பிரச்னை இருந்து வேறு யாருடனும் பிரச்னை இல்லையென்றால்- அதுதான் காங்கிரசின் சிக்கல். அவர்கள் கருணாநிதியுடன் பேச வேண்டும். கருணாநிதியுடன் அவர்களுக்கு நல்ல நேரடித்தொடர்பு இருக்கிறது.

பர்கா: ஆம்.

நீரா: பாலு, மாறன் முன்னிலையில் அவர்கள் பேச முடியாது.

பர்கா: ஆம்.

நீரா: அவரிடம் நேரடியாகச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் நிறைய காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நேராகப் போய் அவரிடம் பேச வேண்டும்-அழகிரியின் ஆதரவாளர்கள் சொல்வது என்னவென்றால் மாறனுக்கு கேபினட் பதவி தந்துவிட்டு அழகிரிக்கு துணை அமைச்சர் தருவதுதான் அவர்களுடைய மிகப்பெரிய பிரச்னை.

பர்கா: அது சரி. ஆனால் கருணா, டி.ஆர்.பாலுவைக் கழற்றிவிடுவாரா?

நீரா: இங்கே பாருங்கள், அவரிடம் பாலுதான் ஒரே பிரச்னை என்று சொன்னால் அவர் கழற்றிவிடுவார்.

பர்கா: ஆனால் யாருக்கு எந்த இலாகா என்பதில்தானே இப்போது சிக்கல்?

நீரா: இல்லை. அதுபற்றி எதுவும் அவர்கள் சொல்லவில்லை. இலாகாக்கள் பற்றி இன்னும் விவாதம் நடக்கவில்லை.

பர்கா: சாலைப் போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரயில்வே, சுகாதாரம் ஆகிய இலாகாக்களை தி.மு.க.கேட்பதாக காங்கிரஸ் சொல்கிறது.

நீரா: முதலிலேயே இந்தப் பட்டியல் போய்விட்டது.

பர்கா: இப்போது காங்கிரஸ் அளிக்க முன்வந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, ரசாயனம், உரம், தொழிலாளர் நலம். இப்போது இந்த அளவில் உள்ளது. தி.மு.க.ஒப்புக்கொள்ளுமா?

நீரா: தி.மு.க. ஏற்காமல் போகலாம். இதை ஏற்றுக்கொண்டால் மாறனைக் கைவிட

வேண்டியிருக்கும். காரணம் மாறன் நிலக்கரி, சுரங்கத்துறை கேட்கிறார்.

பர்கா: மாறனிடம் அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நீரா: ஆம், அவர்கள் செய்ய வேண்டியது கனியுடன் பேசி அவருடைய தந்தையுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்ய வேண்டும். காரணம், பிரதமருடன் நடந்த உரையாடல் கூட மிகக்குறுகிய நேரமே நடந்தது-இரண்டு நிமிடங்கள்-கனிமொழிதான் மொழிபெயர்த்தார்.

பர்கா: சரி.

... அவர்கள் ரேஸ்கோர்ஸ் சாலையை (பிரதமர் இல்லம் உள்ள தெரு) விட்டு வந்தவுடன் நான் ஏற்பாடு செய்கிறேன்.

நீரா: அவர் (கனிமொழி) என்ன சொல்கிறார் என்றால் குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர் - அவருக்குப் பேச அதிகாரம் இருக்கும்...

பர்கா: சரி, பிரச்னை ஒன்றும் இல்லை. அது பிரச்னையே இல்லை. நான் ஆசாதிடம் பேசுகிறேன். ரேஸ்கோர்ஸ் சாலையை விட்டதும் நான் ஆசாதுடன் பேசுகிறேன்.

நீரா: ஆனால் ஒன்று மட்டும் உங்களிடம் சொல்கிறேன். கருணாநிதி ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறார்.

பர்கா: கனியும் கூட இருந்து கலந்துகொண்டால் என்ன?

நீரா: அப்பா அவரைத் திரும்ப வரச் சொல்லிவிட்டார் என்பதால் அவரால் கலந்துகொள்ள முடியாது. அவர் சொல்வதைத்தான் இவர் கேட்க வேண்டும். குலாமைக் கூப்பிடுங்கள்.
வீர் சங்வி (பத்திரிகையாளர்) - நீரா ராடியா உரையாடல் 20.6.2009 மதியம் 12 மணி 09நிமிடம் 59 விநாடிகள்

நீரா: டிரெட்மில்லிலிருந்து இப்போதுதான் இறங்கினேன். முகேஷ் அம்பானியை இந்த விஷயத்தில் பேச வைக்க வேண்டுமென்று முயற்சி செய்கிறேன்.

வீர்: அது சரி.

நீரா: ஆனால் விஷயம் இதுதான். நாம் முயற்சித்தாக வேண்டும். அவர் பேசினால் அதை அவர்கள் விழிப்புடன் கண்காணிப்பார்கள்.

வீர்: ஆம்.

நீரா: ஆனால் இது ஒரு போர். கடைசியில் பார்க்கப் போனால் இது யாருடைய போர் என்பது உங்களுக்குத் தெரியும். இதைப் பத்திரிகைகளுக்குக் கொண்டு போகிறோமா என்பது மற்றொன்று.

வீர்: சரி.

நீரா: அம்பானியால் பேட்டி எதுவும் தர முடியாது. காரணம் அவரிடம் அமர்சிங் பற்றிக் கேட்பார்கள். பலதும் இருக்கிறது. முகேஷ் அம்பானிக்கு இருக்கும் சாதகமான விஷயம் என்னவென்றால் அவரால் பேச முடியும், எதைப்பற்றியும் அவர் கூச்சப்படும் நிலையில் இல்லை. அனில் அம்பானியிடம் பல ஒளிவு மறைவுகள், அவரால் தெளிவுபடுத்த முடியாத விஷயங்கள். அமர்சிங் எனது நெருங்கிய நண்பர் என்று அனில் சொன்னால் அவர் கதை தீர்ந்தது. "எனக்கு அமர்சிங்குடன் எந்த உறவும் கிடையாது' என்றால் அமர்சிங் அவரைத் தீர்த்துவிடுவார். அதாவது நான் என்ன சொல்கிறேன் என்றால் பல சங்கடமான விஷயங்கள் இருக்கின்றன. அதனால் அனில் அம்பானி மீடியாவைத் தவிர்க்கத் தீர்மானித்துவிட்டார். முகேஷுக்கு இந்தப் பிரச்னை இல்லை. முகேஷ் நேரடியாகப் பேசலாம், பல விஷயங்களைச் சொல்லலாம். நீங்கள் ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்கிரிப்டை முன் கூட்டியே தயார் செய்து கொள்ளுங்கள். அந்த ஸ்கிரிப்டை அப்படியே பின்பற்றுங்கள். அனில் இது எதையும் செய்ய முடியாது,இல்லையா?

நீரா: ஆம். ஆனால் நாம் இப்படிப் பண்ணலாம் அல்லவா?

வீர்: ஆம்?

நீரா: அப்படியா?

வீர்: ஆனால் முகேஷ் இதில் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும். அதை அவர் உணர வேண்டும். முழுதும் எழுதிப் பார்த்துவிடவேண்டும்.

நீரா: அதைத்தான் சொல்கிறேன். அவர் அதைத்தான் என்னிடம் கேட்கிறார் என்று நினைக்கிறேன்.

வீர்: ஆம், எல்லாவற்றையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

நீரா: இதோ பார் நீரா, எதையும் தீர்மானித்துக் கொள்ளாமல் தோன்றியபடி பேசமுடியாது என்கிறார்.

வீர்: இல்லை, எல்லாவற்றையும் எழுதிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் அவருடன் முன்கூட்டியே வந்து ஒத்திகை பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீரா: ஆம், ஆம்.

வீர்: கேமரா முன் போவதற்குமுன் ஒத்திகை பார்க்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்..

வீர்: எந்தவிதமான செய்தி உங்களுக்கு வேண்டும்? காரணம் "கவுன்டர் பாயிண்ட்' பகுதியில் இது வருவதால் இது மிகவும் அதிகபட்ச வாசகர்களை அடையும். ஆனால் இது யார் பக்கமும் சாய்வதாகவும் தெரியக்கூடாது. ஆனால் சொல்ல வேண்டிய எல்லா விஷயங்களையும் சொல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பு.

நீரா: ஆனால் அடிப்படையில் விஷயம் என்னவென்றால் உயர் நீதிமன்றத்தைப் பொறுத்தவரை நடந்து முடிந்த விஷயம் நாட்டின் நலனுக்கு எதிரானது, வேதனைக்குரியது.

வீர்: சரி.

நீரா: இதுதான் அடிப்படை செய்தியாக இருக்க வேண்டும்.

வீர்: சரி, அந்த செய்தி போதும். ஒரு ஏழை நாட்டின் தேசிய வளங்கள் சில பணக்காரர் மட்டுமே பலன் அடைவதற்காக வரைமுறையில்லாமல் வாரிக் கொடுக்கப்படக்கூடாது.

நீரா: சரி.

வீர்: எனவே, இதை தேர்தல் முடிவுகளோடு இணைத்துவிடுகிறேன். கிராமப்புற வேலை வாய்ப்புதிட்டம் உள்ளது, எல்லாத் தரப்பினரையும் உள்படுத்தும் வளர்ச்சியில் சோனியா உறுதியாக இருக்கிறார். இது தின்று கொழுத்த சிலருக்கு பலனளிக்கும்படி இருக்கக்கூடாது. நெருங்கியவர்களுக்கு மட்டும் கிடைப்பதாக இருக்கக்கூடாது. வரைமுறை இல்லாமல் இருக்கக்கூடாது. மன்மோகன் சிங்கின் ஐந்து வருட ஆட்சி பற்றிய செய்தி இப்படித்தான் இருக்க வேண்டும். நாட்டுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் விதமாக அரிய வளங்களை ஊழல் செய்து வரைமுறையில்லாமல் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு உங்களை மன்னிக்காது.

நீரா: ஆம், ஆனால், வீர், அவர் இயற்கை எரிவாயு எடுக்கும் அனுமதியை அரசு வழங்கியிருக்கிறது. அவர் அதில் ஆயிரம் கோடி டாலர் செலவு செய்திருக்கிறார்.

வீர்: சரி.

நீரா: அனில் அம்பானி ஒரு பைசா செலவு செய்யாமல் அதன் பலனை அனுபவிக்கிறார்.

வீர்: அவற்றை நான் குறிப்பிட்டுவிடுகிறேன்...

நீரா: சரி.

வீர்: இவற்றை நான் குறிப்பிடுகிறேன். இந்தச் சூழல் மிகவும் ஊழல் மிகுந்ததாக இருப்பதாலும், யார் வேண்டுமானாலும் இதை வளைக்கலாம் என்பதாலும், எந்த விதக் கட்டணமும் இல்லாமல் இயற்கை வளங்களை கையகப்படுத்துகிறார்கள்...

23.5.2009

இரவு 10மணி 26நிமிடம்

42விநாடிகள்

நீரா: இதெல்லாம் அவருடைய (பிரதமர்) உந்துதலில் நடப்பதாக உணர்ந்தார்...

வீர்: மாறன்.

நீரா: ஆம்... (ஒலிப்பதிவு தெளிவில்லை 0.00:42)

ஆனால் விஷயம் என்னவென்றால் அவர் இன்னும் மாறனை எடுத்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே...

வீர்: எங்கிருந்து இந்த உந்துதல் வருகிறது. இந்த நிர்பந்தம்?

நீரா: ஸ்டாலின், அவர் சகோதரி செல்வியிடமிருந்து...

வீர்: சரி.

நீரா: மாறன், ஸ்டாலினுடைய அம்மா தயாளு அம்மாளுக்கு | 600 கோடி கொடுத்ததாக நம்புகிறேன்.

வீர்: | 600 கோடி சரியா?

நீரா: | 600 கோடி என்றுதான் எனக்குச் சொன்னார்கள்.

வீர்: அந்தவித நிர்பந்தங்களோடு யாரும் வாதம் பண்ணமுடியாது?

நீரா: இல்லையா?


ஆ. ராசா - நீரா ராடியா உரையாடல் 22.5.2009 9 மணி 48 நிமிடம் 51 விநாடிகள்

நீரா: ஹலோ?

ராசா: ராசா பேசுகிறேன்.

நீரா: ஹாய்! இப்போதுதான் பர்கா தத்திடமிருந்து எனக்கு செய்தி வந்தது.

ராசா: ஆ?

நீரா: பர்கா தத்

ராசா: அவர் என்ன சொல்கிறார்?

நீரா: இந்த விஷயம் குறித்து.... அவர் பிரதமரின் அலுவலகத்தோடு இன்றிரவு தொடர்பு கொண்டிருந்ததாக.... அவர் சொல்கிறார். சோனியா காந்தி அங்கு சென்றதாக அவர்தான் என்னிடம் கூறினார். அவருக்கு (மன்மோகன் சிங்) உங்களிடம் பிரச்னை இல்லை; ஆனால் டி.ஆர். பாலு என்றால் பிரச்னை உள்ளது என்று அவர்தான் (பர்கா தத்) சொன்னார்.

ராசா: ... ஆனால் தலைவருடன் இதுபற்றி விவாதிக்க வேண்டும்.

நீரா: ஆம், ஆம்... அவர் தலைவருடன் விவாதிக்க வேண்டும். அவர்தான் சொல்ல வேண்டும்.

ராசா: காலையில் இதுபற்றி விவாதிக்கப்படும்... ஏன் காங்கிரஸ் அநாவசியமாக.... ( ஒலிப்பதிவில் தெளிவில்லை). கூட்டணியில் குழப்பம் வருகிறது.

நீரா: இல்லை, கேள்வி இப்போது அழகிரி பற்றியல்லவா?

ராசா: ஆ?

நீரா: அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும் போது மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்.

ராசா: அது வேறு விஷயம். ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: இதுதான் சரி. அவரை (பர்கா தத்) காங்கிரஸிடம்...

ராசா: நேரே தலைவரைத் தனியாகப் பார்த்து இந்த விஷயங்களை வெளிப்படுத்த வேண்டும்.

நீரா: தனியாகவா?

ராசா: தனியாக, யாராவது தகவலைக் கொண்டு செல்ல வேண்டும். பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டு செல்ல வேண்டும்.

நீரா: காங்கிரஸிடமிருந்து அல்லவா?

ராசா: ஆம்.

நீரா: ஓ.கே. நான் அவரிடம் (பர்கா) சொல்கிறேன். அவர் இப்போது அகமது படேலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் படேலிடம் பேசுகிறேன்.

ராசா: அவர் போனிலாவது தொடர்பு கொள்ளட்டும். சார், இதுதான் பிரச்னை. எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்...

22.5.2009

மதியம் 2 மணி 29 நிமிடம்

41 விநாடிகள்

நீரா: ராசா, எப்படி இருக்கிறீர்கள்?

ராசா: அவர் என்ன சொல்கிறார் - கனி என்ன சொல்கிறார்?

நீரா: அவருக்கு எல்லாம் ஓ.கே. என்கிறார். அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார்.

ராசா: ம்ம்...

நீரா: .... ஆனால் ஒரே விஷயம் அழகிரியுடன் யாராவது போய் பேச வேண்டும்...

நீங்கள்தான் இதைச் செய்ய வேண்டும்.

ராசா: ம்ம்.

நீரா: எப்படி மாறன் போய் எல்லாரிடமும் பேசி வைத்திருக்கிறார் என்று....

ராசா: ஆ.... நான் ஏற்கெனவே பேசிவிட்டேன், ஏற்கெனவே பேசிவிட்டன்...

நீரா: தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் அவர் என்ன சொல்லி வைத்திருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்களா?

ராசா: எனக்குத் தெரியும். அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது என்ற விஷயத்தை காங்கிரஸ் தலைவர்கள் மனதில் விதைத்தவர்கள் யார்... எனக்குத் தெரியும்...

நீரா: இல்லை... அதுமட்டுமல்ல, அதுமட்டுமல்ல... பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை. அதனால் நாளை மாறனும், ஸ்டாலினும்தான் கட்சியை நடத்துவார்கள் என்றும், காங்கிரஸ் தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியடையும் என்றும்... இறுதியில் மாறன்தான் ஸ்டாலினை ஆட்டுவிப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.

ராசா: ம்ம்.

நீரா: இப்படித்தான் அவர் பேசியிருக்கிறார்.

ராசா: ஓஹோ! ஓஹோ!

நீரா: அழகிரியைக் கிரிமினல் என்றும்...

ராசா: ம்ம்.

நீரா: அவர் ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டாதவர் என்றும்...

ராசா: ஓ...

நீரா: இப்படியெல்லாம்தான் அவர் சொல்லியிருக்கிறார்.

24.5.2009

காலை 11 மணி

5 நிமிடம் 11 விநாடிகள்

நீரா: மாறன் தன்னைப்பற்றி என்னெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று தெரியுமா?

ராசா: அழகிரிக்கு இதெல்லாம் தெரிந்ததுதான்.

நீரா: தெரியும் அல்லவா?

ராசா: அழகிரிக்குத் தெரியும். ஆனால் அவர் தந்தையுடன் பேச முடியாது. சரியான நேரத்தில் பேசுவார். ஒரே விஷயம், மாறன் எனக்கு எதிரான பிரசாரத்தை கிளப்பிவிடுவார்.

நீரா:ம்ம்..

ராசா: அதை கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீரா: நீங்கள் வேறுவிதமாக சண்டை போட வேண்டும்.

ராசா: ம்ம்.. பிரதமர் மீண்டும் வருகிறார். அப்படி அது இதுவென்று அவர் பத்திரிகைகளிடம் சொல்லுவார்.. ஸ்பெக்ட்ரம்...

நீரா: நோ நோ.. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கவலைப்படாதீர்கள். உங்களிடமிருந்து நிறைய பெற வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் கூட அந்த அறிக்கைவிட நேர்ந்தது, அல்லவா?

நான் சுனில் மிட்டலிடம் பேசினேன்... சண்டோலியா உங்களிடம் சொன்னாரா?

ராசா: எனக்குத் தெரியாதே.

நீரா: அவரை விஷயத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னேன். யாருக்கும் பிரயோஜனமில்லை.

ராசா: ம்ம்.. ராசாவுடன் இன்னும் ஐந்து வருடங்கள் நீங்கள் வேலை பார்த்தாக வேண்டுமென்று அவரிடம் சொல்லி வையுங்கள்... அதனால் எதுவும்...

நீரா: அவரிடம் சொன்னேன். அவரிடம் சொன்னேன். ஆனால் நீங்களும் சுனிலிடமிருந்து (சுனில் மிட்டல்) கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும். நீங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்.

ராசா: ஆ, இருக்கலாம்


கனிமொழி - நீரா ராடியா உரையாடல் - 22.5.2009 காலை 10 மணி 45 நிமிடம் 06 விநாடிகள்

கனிமொழி: ஹலோ

நீரா: கனி, நேற்று உங்கள் அப்பாவிடம் அவர்கள் தெரிவித்தார்கள் அல்லவா...

கனி: ம்ம்

நீரா: கட்டுமானத் துறையை பாலுவுக்கோ, மாறனுக்கோ கொடுப்பதில்லையென்று...

கனி: ஆம், ஆனால் யாரும்... யார் சொன்னது?

நீரா: இல்லையில்லை.. அவரிடம் மிகத் தெளிவாக சொல்லப்பட்டது...

கனி: இல்லை. அவரிடம் சொல்லப்படவில்லை.

அதுதான் பிரச்னை. யார் வந்து சொன்னது?

நீரா: வந்தவர்களா இல்லையா, சொன்னார்களா.. யாராவது அவருடன் பேசியிருக்க வேண்டும். பிரதமர் பேசியிருக்க வேண்டும்.

கனி: பிரதமர் பேசவில்லை. நான்தான் பிரதமருடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரதமர் சில வார்த்தைகள் பேசினார், அவ்வளவுதான். இதோ பாருங்கள், பிரதமர் போனில் அப்பாவுடன் பேசி விளங்க வைப்பது... உங்களுக்கே தெரியும்... பிரதமர் மெல்லப் பேசுபவர். அப்பாவுக்கு சரியாகக் காது கேட்காது.

நீரா: ம்ம்..

...சரி.. சரி.. உங்கள் அம்மாவை 12.30க்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.

கனி: ஓகே, நான் இங்கேதான் இருப்பேன்.

நீரா: ஓகே.

கனி: தயவுசெய்து இதையெல்லாம் அம்மாவிடம் சொல்லிவிடாதீர்கள். எல்லாவற்றையும் குழப்பி எதையாவது கண்டபடி பேசுவார்.

22.5.2009

மதியம் 2 மணி 46 நிமிடம்

15 விநாடிகள்

கனி: ஓகே.. இல்லை.. தயா பதவியேற்புக்குப் போகிறாரா இல்லையா?

நீரா: இல்லை, காங்கிரசிடமிருந்து அப்படித்தான் கேள்விப்படுகிறேன். அவர் பெயரைக் கொடுத்திருக்கிறார். அவர் பதவியேற்புக்கு போகிறார்.

கனி: எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் திரும்பிவிடுவதாக இருந்தது. எனவே... அவர் போய் சொல்லப்போகிறார். தலைவர் சொன்னதற்கு மாறாக, எனக்கு (ஒலிப்பதிவில் தெளிவில்லை) (0.01:32.4)

நீரா: ஆம், ஆனால் உங்கள் அப்பாவிடம் சொல்ல வேண்டும் அல்லவா?

கனி: அதுதான், அவர் (மாறன்) திரும்பிவந்து அப்பாவிடம் எதாவது கதை விடுவார். அகமது படேல் கூப்பிட்டதாகச் சொல்வார். "நீங்கள்தான் தி.மு.க.வின் முகம். நீங்கள்தான் அதன் பிரதிநிதி. நீங்கள் அங்கு இல்லையானால் நன்றாக இருக்காது'.

நீரா: நான் ராசாவைத்தான் போவதற்கு அதிகாரம் அளித்திருக்கிறேன் என்று மாறனிடம் சொன்னால் என்ன? நான் ராசாவைத்தான் போகச் சொல்லியிருக்கிறேன். - உன்னை - (மாறன்) அல்ல என்று உங்கள் அப்பா சொன்னால் என்ன?

கனி: இல்லை, அப்பா சொல்லமாட்டார். ஒருகாலும் இல்லை (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:2:09.5) அப்பாவைக் கூப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் என்னால் முடியாது.

நீரா: உங்களுக்கு அலுத்துவிட்டது என்று எனக்குத் தெரியும். ஆனால் இது வெறும் ஆரம்பம்தான், அல்லவா?

கனி: ஆம், ஆம்.

நீரா: இதுதான் அரசியல், மை டியர்.

22.5.2009

இரவு 8 மணி 04 நிமிடம்

19 விநாடிகள்

நீரா: யாரும் எதுவும் சொல்லவில்லை. பிரதமர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

கனி: பிரதமர் அல்ல. அவர்கள் அப்பாவை சந்திக்க வரும்போது...

நீரா: ஒப்புக் கொள்கிறேன். ஆனால் கனி, ராசா, பாலுவிடம் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென பிரதமர் இப்போதுதான் அறிவித்திருக்கிறார். அவர்கள் என் மதிப்புக்குரிய சகாக்கள். பிரதமர் இப்போதுதான் அவ்வாறு அறிவித்திருக்கிறார்.

கனி: அவர் அறிக்கை விடலாம். ஆனால் அப்பாவைப் பார்த்து பேசுபவர்கள் மாற்றி பேசக்கூடாது. ஏனென்றால், மக்கள் வெளியே சொல்வதும் அதன் உள்ளர்த்தமும் வெவ்வேறானவை, அரசியலில் இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒருவர் உங்கள் நண்பர் என்று சொல்லிக்கொண்டு வரலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம். அவர் வேண்டாம் என்று சொல்லலாம். இதெல்லாம் வெளித்தோற்றத்துக்கு-பலதும் செய்கிறோம்.. அதனால் யார் வருவதானாலும் அவர்கள் இவரைப் பற்றி எதிராகப் பேசக்கூடாது. ஏனென்றால் வேறொரு இடத்திலிருந்து நான் கேள்விப்பட்டேன், அவர்கள்...

நீரா: ஓ.கே., ஆமாம், நான் ராசாவுடன் பேசினேன்.

23.5.2009

காலை 9 மணி 59 நிமிடம்

2 விநாடிகள்

நீரா: நான் இதைச் செய்துவிட்டேன். ஆம். அவர் ஒருவர் மட்டும்தான் என்று எல்லாருக்கும் இன்று காலை செய்தி அனுப்பிவிட்டேன். மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கி விட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்ன இருந்தாலும், எந்தக் கட்சியிலும் மக்களிடம் செல்வாக்குள்ள ஒரு தலைவருக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும்.

கனி: அது சரி.

நீரா: ஆம், இவர் (மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால் அவருக்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் அவர் முயற்சி செய்து வருகிறார்.

கனி: மற்ற தேர்தல்கள் வருகின்றன. (ஒலிப்பதிவு தெளிவில்லை) (0:04:06:6) அவருடைய ஆதரவாளர்களைப் பகைத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

நீரா: ஆம், சரிதான்.

கனி: ஆனால் ஒரு விஷயம், நீங்கள் அவர்களிடம் (காங்கிரஸ்) சொல்லலாம். லாலு பிரசாதுக்கு செய்தது போல, அவருக்கு (அழகிரி) கீழ் ஒரு நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம். அவர் பதில் சொல்வார் (ஒலிப்பதிவு தெளிவில்லை) யாருடன் பேச வேண்டும், அவர் பதில் சொல்வார்.

நீரா: ரொம்ப சரி. ஆம், பார்க்கப்போனால் அவருடன் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அழகிரியுடன் அவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை. காங்கிரஸýக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

கனி: இல்லையில்லை, அதுதான் பிரச்னை. இந்த ஆளுக்கு (மாறன்) தகவல் தொடர்பு வேண்டுமென்பதால் வதந்திகளைப் பரப்புகிறார். ஆனால் அவருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க.வுக்கு கூட விருப்பமில்லை.- நன்றி: "ஓபன்' வார இதழ், தமிழில் தினமணி

சில கேள்விகள்:
1. இந்த உரையாடல்களை காங்கிரஸ் பரப்பியிருக்க நிறைய வாய்ப்பு இருக்கு. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - மீடியா, திமுக.
2. மோடியோ அல்லது வேற யாராவது இந்த உரையாடல்களில் ஈடுப்பட்டிருந்தால் இந்த உரையாடல்கள் நமக்கு மனப்பாடம் ஆகும் வரை போட்டு தாக்கியிருப்பார்கள்.
3. மாறன் - கனிமொழி, மாறன் - அழகிரி, கலைஞர் - மாறன், குடும்பம் - பாலு, மாறன் - ராசா ... என்று திமுக குடும்ப சண்டை வெளியே வந்திருக்கு. ஏதோ தமிழ் நாட்டுக்கு நல்லது நடந்தால் சந்தோஷமே !
4. பிஜேபி ஏன் இதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதும் புரியாத புதிர் தான்.
Read More...

கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டதுபிஜேபியின் அழிவு காலம் எப்பவோ தொடங்கிவிட்டது..

Read More...

Friday, November 19, 2010

டாய்லெட் தின வாழ்த்துகள்


பிரதமர் ராஜினாமா என்ற வதந்தி நேற்று கசிய தொடங்கியது. நிச்சயம் பிரதமர் ராஜினாமா செய்திருக்க வேண்டும் ஒரு பக்கம் பார்லிமெண்ட் அதில் பேச முடியாமல் திருவிழாவில் தொலைந்து போன குழந்தை மாதிரி பார்க்கவே பாவமாக இருந்தது. அழகிரி வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தால் அட்லீஸ்ட் அழகிரி பேசுவதை தான் கேட்க முடியவில்லை, பாடுவதை பார்த்தாவது குஷியாகியிருக்கலாம். இன்னொரு பக்கம் வலைப்பதிவு அறிவுஜீவிகளால் ஜோக்கர் என்று போற்றப்படும் சு.சாமி தொடர்ந்த சுப்ரீம் கோர்ட் வழக்கை பார்த்து இந்த நாடே Mr.Clean என்று எல்லோராலும் போற்றப்படும் மன்மோகன் சிங்கின் நிலமை தான் சிரிப்பாய் சிரித்துக்கொண்டு இருக்கிறது.

நேற்று ஆங்கில தொலைக்காட்சிகள் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை தன்னிடமே விட்டு விடுமாறு தயாநிதி மாறன் பிரதமருக்கு கடிதம் எழுதியதாகக் கூறி செய்தி வெளியிட்டது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க இப்பொழுது எண்டிடிவி புகழ் பர்க்கா தத் மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் வீர் சங்வி ஆகியோர் கார்பொரோட் லாபியிஸ்ட் நிரா ராடியாவிடம் திமுக அமைச்சர் பதவிகள் தொடர்பாக பேசிய தொலைபேசி உரையாடற் பதிவு வெளியாகி இருக்கிறது. அமைச்சர் பதவியை கிலோ என்ன விலை என்பது போல இருக்கிறது.

பர்க்கா தத் காங்கிரஸ் சார்பில் லாபியிஸ்டாக செயல்படுவதாகவும், வீர் சங்வி சில சிறிய அரசியல் கட்சிகளுக்காக செயல்படுவதாகவும் ஓபன் மாகஸின் என்ற பத்திரிக்கையின் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டு, தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் இணையத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பேனையெல்லாம் பெருச்சாளியாக்கி ஓலமிடும் வட இந்திய மீடியாக்கள் அனைத்துமே சொல்லி வைத்தாற்போல், ஹெட்லைன்ஸ் டுடே நீங்கலாக இது குறித்து வாய் திறக்கவில்லை. ஏன் என்றால் மீடியா வியாபாரமாகிவிட்டது. IBNல் பர்க்கா தத் தங்கை வேலை செய்கிறார் அதனால் அவர்கள் இதை பற்றி ஒன்றும் சொல்ல மாட்டார்கள். டைம்ஸ் நௌ அவர்களுக்கு பிக் பாஸ்-4 தான் முக்கியம்.

இதற்கு எண்டிடிவி தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் ஒருவருக்கு பல தொழில்சார் நபர்களுடன் நட்பு இருக்கும், தவிர பல்வேறு தரப்பிலிருந்து செய்திகள் சேகரிப்பதற்காக பலரிடமும் பேச வேண்டியிருக்கும். இதை லாபியிங் என்று சொல்வது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்பது மட்டுமில்லாமல், முட்டாள்தனமானதும் கூட என்று எண்டிடிவி பொறிந்து தள்ளியுள்ளது. இந்த உரையாடலை எவ்வகையான செய்தி சேகரிப்பு என்று வகைப்படுத்துவது என்று புரியவில்லை

ஏற்கனவே 2009 இல் ஸ்பெக்ட்ரம் ராசா, மற்றும் நிரா ராடியா இடையே நடந்த தொலைக்காட்சி உரையாடலை ஹெட்லைன்ஸ் டுடே அம்பலப் படுத்திய போது எண்டிடிவி போன்ற சானல்கள் வாயே திறக்கவில்லை என்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.

மன்மோகன் சிங்கை பார்த்தால் பாவமாக இருக்கிறது. வேலியில் போன ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக் கொண்டோமோ என்று எண்ண தொடங்கியிருப்பார். இனி உச்ச நீதி மன்றம் என்ன சொன்னால் என்ன ? சில மாதங்களுக்கு முன் ராசா கொடுத்த பத்திரிக்கை பேட்டியை படித்துவிட்டு "தவறு எதுவும் நடக்கவில்லை என்று ராசாவே கூறிவிட்டார். ஆகையால் தவறு நடக்கவில்லை" என்று சர்டிபிக்கேட் வழங்கிட்டார். கலைஞரும் தன் பங்கிற்கு ராசா தங்கமானவர் என்று சொல்லிடுட்டார், ஏன் பத்ரி கூட சொல்லிவிட்டார். இனி உச்ச நீதி மன்றம் என்ன சொன்னால் என்ன ?

ராசா பதவி விலகா விட்டால், ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ பற்றிய பேச்சு நீடித்துக் கொண்டேயிருக்கும் என்பதால் ராஜினாமா செய்ய சொன்னார்கள். ஆனால் இன்று இது பெரிய அளவில் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

சாமி என்ற ஜோக்கருக்கு இந்த நாடு கடமை பட்டிருக்கிறது. சாமி என்ற ஜோக்கர்தான் அரசியல் சீட்டாட்டத்தில் எவ்வளவு முக்கியமான துருப்புச்சீட்டாகிவிட்டார் பாருங்கள்!


படிக்க வேண்டிய கேட்க வேண்டிய பகுதிகள்

=> The 2G Tapes

=> The Power Tapes

=> The Ratan Tata, Barkha Dutt & Other Tapes

=> The Vir Sanghvi- Niira Radia Tapes

=> The Kanimozhi-Radia Tapes

=> The Raja-Radia Tapes

=> “Tell me what should I tell them?”

=> “What kind of story do you want?”

( all these files are given to SC in new petition )

PM letters to Raja

MMS_ARaja_Correspondence_20101115

இன்று டாய்லட் தினம் எதை சுத்தம் செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள் !


Read More...

Tuesday, November 16, 2010

யார் Big Boss ?

நீங்களே முடிவு செய்யுங்க


நேற்று: பிக் பிரதர் நிகழ்ச்சிக்கு இந்தியா வந்த பமீலா ஆண்டசனுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு. சுமார் 1000 பேர் வந்திருப்பார்கள்.


ராஜினாமாவுக்கு பிறகு சென்னை திரும்பிய ராசாவுக்கு 5000 திமுகவினர் வரவேற்பு. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் அந்த கூட்டத்தில் இருந்தார்.

இருவரையுமே மீடியாதான் தோலுரித்தது. கலி முத்தியதால் இவர்களைக் காண இவ்வளவு கூட்டம். யார் பிக் பாஸ் நீங்களே சொல்லுங்க ?Read More...

நைட் டின்னர், மார்னிங் பிரேக் ஃபாஸ்ட் = சாப்பாடுபெரிய ஏப்பம் வருது :-)

Read More...

Monday, November 15, 2010

மண்டேனா ஒன்று - 15/11/2010


ஒவ்வொரு தீபாவளி தினத்தன்றும், தினசரிகள், ஆட்சியிலிருக்கும் தலைவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்திகளைப் பிரசுரிக்கும். இந்த தீபாவளிக்கும், இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் சோனியா காந்தி, மற்றும் ஜெயலலிதா உட்பட தமிழகத்தின் பல அரசியல் தலைவர்கள் மக்களுக்கு "இத்தினத்தில் மக்களது வாழ்வில் ஒளி பிறக்கட்டும்" என்ற ரீதியில் வாழ்த்துச் செய்திகளை விடுத்திருந்தனர்.

இந்த மரபை குறிப்பிடத்தகுந்த அளவில் தவிர்த்தவர் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள். பெரியார் ஈ.வே.ராமசாமியால் போஷிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பகுத்தறிவாளர் என்று தம்மைப் பறைசாற்றிக் கொள்ளும் இவர், கடவுளரும், சாத்தானும் தொடர்புடைய தீபாவளிக்கு வாழ்த்துக் கூறுவதைத் தவிர்த்தது சித்தாந்த ரீதியாக அவரைப் பொறுத்தவரை மிகவும் சரியானதே. ஆனால் கருணாநிதி ஒரு சந்தர்ப்பவாத பகுத்தறிவாளர். ரமலான், கிறிஸ்த்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு அவர் வாழ்த்துக்கள் வெளியிடுவதிலிருந்து தவறுவதே இல்லை.

இஸ்லாமியர்கள் அணியும் தலைக் குல்லாயை அணிந்து, இஃப்தார் விருந்துகளில் கலந்து கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவரது மகளும், கவிஞரும், நாத்திகம் மற்றும் பெண்ணியம் போன்றவற்றின் மீது புரட்சிகர சிந்தனைகளை உடையவருமான கனிமொழி ஒரு இஃப்தார் விருந்தில், தலையை முழுவதும் மறைக்கும் விதமான பாரம்பரிய உடையுடன் கலந்து கொண்டார்.

ஆனால் கருணாநிதியின் சந்தர்ப்பவாத பகுத்தறிவுவாதம், அவருடைய குருநாதர் பெரியாரைப் போலல்லாமல் ஹிந்து மத நம்பிக்கைகளை மட்டுமே சாடும் தன்மையை உடையது. ஒருமுறை கருணாநிதி தம்முடைய கட்சி சகா ஆதி ராஜாராம் நெற்றித் திலகம் அணிந்ததற்காக அவரைக் கடிந்து கொண்டதோடு, அது ரத்தம் வடிவது போலுள்ளது எனவும் கேலி செய்தார். தவிர கூட்டணியில் இல்லாத வேளைகளில் கருணாநிதி அறிவிக்கப்பட்ட ஹிந்துத்துவக் கட்சியான பாஜகவை பண்டாரப் பரதேசிகள் என்றும் வர்ணிப்பார்.

ஆனால் அவருடைய குடும்பம் எப்போதும் அவருடைய பகுத்தறிவுப் பிரசாரங்களிலிருந்து விலகியே நிற்கிறது. அவருடைய குடும்ப உறுப்பினர்களில் சிலர் மத நம்பிக்கையுடையவர்கள். அவருடைய மருமகளும், மு.க.ஸ்டாலினினுடைய மனைவியுமான துர்கா, ஒருமுறை தன்னுடைய சேகரிப்பில் இருக்கும் விநாயகர் விக்ரகங்களை ஒரு பிரபல தமிழ் பத்திரிகைக்கு பெருமிதத்துடன் காட்சிப்படுத்தினார். சில மாதங்களுக்கு முன்பு, மைலாப்பூரில் உள்ள முண்டக்கண்ணியம்மன் கோவிலில் ஒரு புதிய உணவு அரங்கத்தை ஸ்டாலின் திறந்து வைத்தார். கருணாநிதியின் பேத்தியான எழிலரசி அவரது மகள் செல்வியின் மூலமாக ஒரு கோவில் கட்டுவதற்காக ரூபாய் பதிமூன்று லட்சத்தை சமீபத்தில் நன்கொடையாக அளித்தார். கருணாநிதியின் அதிகாரப்பூர்வ மனைவியான தாயாளு அம்மாள், புட்டப்பர்த்தி சாய்பாபாவின் பக்தை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் அரசாங்க விழா ஒன்றை நடத்தும் பாவனையில், சாய்பாபா சென்னைக்குத் தருவிக்கப்பட்டு, சாய்பாபா கருணாநிதியின் இல்லத்திற்கு தனிப்பட்ட வருகை தந்ததோடு மட்டுமல்லாமல், தயாளு அம்மாள் சாய்பாபாவின் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.

கருணாநிதியினுடைய அக்காள் பேரன் கலாநிதி மாறன், மற்றும் பேரன்களான உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரி ஆகியோர் படத் தயாரிப்பில் மும்முரமாக இருக்கின்றனர். இவர்களுடைய படங்கள் அனைத்துமே பிராமண பூஜாரிகளின் பூஜைக்குப் பிறகே துவங்கப்படுகின்றன.

ஒட்டுமொத்த குடும்பமுமே இறை நம்பிக்கையாளர்கள் என்ற பட்சத்தில் கருணாநிதி மற்றும் தனித்து நிற்கிறாரா? அப்படித் தெரிந்தாலும், அதுவல்ல நிஜம். கருணாநிதியும் அவருடைய மூட நம்பிக்கைகளுக்குப் பெயர் பெற்றவர்தான். சில வருடங்களாக அவர் அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் மஞ்சள் துண்டு - அவருடைய நன்மையை முன்னிட்டு அவருடைய குடும்ப ஜோதிடர்களால் அறிவுறுத்தப்பட்ட நிறம் என்று பரவலாக அடிபடுகிறது. மிக சமீபத்தில் தஞ்சை கோவிலின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு அதற்கு வருகை தந்த கருணாநிதி பிரதான நுழைவு வாயிலைத் தவிர்த்து பக்கவாட்டு நுழைவு வாயிலின் மூலமாகவே கோவிலை அடைந்தார். கோவிலின் பிரதான நுழைவு வாயிலின் மூலமாக வருகை தரும் அரசியல் தலைவர்களது அரசியல் வாழ்வு வீழ்ச்சி பெறும் என்ற நம்பிக்கையை முன்னிட்டே இம்முடிவு. தவிர, தீய சக்திகளின் திருஷ்டியிலிருந்து தப்புவதற்காக, பட்டுசட்டை, வேஷ்டி, அங்கவஸ்திரம் அணிந்தார்.

கருணாநிதி அரசாங்க கட்டிடங்களையும், திட்டங்களையும் கூட அத்திட்டப் பணிகள் முடிவடைவதற்கு முன்பாகவே சுப தினங்களில் திறந்து வைப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகக் கட்டிடம், முழுமையான கட்டுமானப் பணிகள் முடிவடைவதற்கும் முன்பாகவே பல் கோடி ரூபாய் செலவிலான சினிமா செட்டிங்குகளில் பயன்படுத்தப்படக் கூடிய போலியான மேற்கூரையுடன் மிகுந்த துரித கதியில் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் நான்கு மாதங்களுக்குப் பிறகும், தலைமைச் செயலகம் பழைய கட்டிடத்திலிருந்தே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கோட்டூர்புரம் நூலகமும் பணிகள் முடிவடைவதற்கு முன்னதாகவே திறந்து வைக்கப்பட்டது.

இருந்தாலும், கருணாநிதி தீபாவளி வாழ்த்துக் கூறுவதிலிருந்து சற்று தள்ளியே இருக்கிறார். அவரைப் பொருத்தவரை தீபாவளி கொண்டாட்டம் என்பது திராவிட தீய சக்திகளுக்கு எதிரான ஆரியக் கடவுளரின் வெற்றி என்று கருதப்படுகிறது. ஆனால் குறிப்பிடத்தகுந்த தமிழ் எழுத்தாளரான ஜெயமோகனைப் பொருத்தவரை, தீபாவளி என்பது திராவிடர்கள் (திசம்பர் மாதத்தில்) கொண்டாடும் கார்த்திகை தீபத்திருநாளின் மூலமே என்றும், பிறகு புத்தர்களால் அது வடவர்களின் பண்டிகையாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.

முதல்வரின் சந்தர்ப்பவாத பகுத்தறிவுவாதம் ஒருபுறமிருக்க, அவருடைய குடும்பத் தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சி தீபாவளி கொண்டாடக் கூச்சப்படவில்லை. விளம்பரதாரர்கள் மூலமாகக் கிடைக்கும் கணிசமான தொகையை முன்னிட்டு, மூன்று நாட்களுக்கு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

இப்பொழுதாவது கருணாநிதி தனது சந்தர்ப்பவாத பகுத்தறிவுவாதத்தை விட்டொழித்து, அனைத்து மதத்தவரின் பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும், அல்லது அவருடைய குருநாதர் பெரியாரைப் போல அனைத்து மத நிகழ்ச்சிகளிலிருந்தும் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் இவை நடக்கமலேயே போகலாம்....இப்பொழுது துவங்கியே சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான சுப தினங்கள் கணிக்கப்படுகின்றன.

கட்டுரை ஞாநி, தமிழாக்கம் யதிராஜ்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஞாநி இதை மறந்துவிட்டார் - :-)


Read More...

Sunday, November 14, 2010

ராசா என்பார் மந்திரி என்பார்...
ராஜினாமா !

Read More...

ஹி ஹிஜெயலலிதா தைரியசாலியாக இருக்கலாம் அதற்காக ராசா அவரை ஹி ஹி என்று சொல்லுவது நிஜமாகவே நமக்கு ஹி ஹி

Read More...

Saturday, November 13, 2010

விஜயும் விவசாயமும்

சில வாரங்களுக்கு முன் ( தீபாவளியின் போது ) 108 குடும்பங்களுக்கு பசுமாடு தானம் கொடுத்து விஜய் இவ்வாறு பேசினார்.

"ஒரு பசுமாடு இருந்தா ஒரு குடும்பம் பிழைக்கும் என்று கூறுவார்கள் சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு என்ற பாடல் வரிகளையும் புரட்சித் தலைவர் பாடி இருக்கிறார். தானத்தில் சிறந்தது பசுதானம் என்று புரணாங்கள் சொல்லுகின்றன. அதனால் இந்த தீபாவளிக்கு இவர்கள் இன்றைக்கே வருமானத்துடன் பயன்பெறுகிறமாதிரி இந்த பசுதானத்தை வழங்குகிறோம்.

இந்தியா விவசாய நாடு இருந்தும் விவசாயிகளின் நிலைமை ரொம்ப மேசமாக இருக்கிறது. விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழில் பார்க்க போகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் என் கண்ணோட்டம் முழுவதும் விவசாயிகளின் உயர்வு மீதுதான். அவர்களின் சிலரின் உயர்விற்கு என்னால் ஆன இந்த பணியை செய்திருக்கிறேன். இதன் மூலம் 108 குடும்பங்கள், அந்த குடும்பத்து உறுப்பினர்கள் சந்தோஷமடைந்து அவர்கள் கொண்டாடுகிற தீபாவளி, நான் கொண்டாடுகிற தீபாவளி மாதிரிதான்"

சுறா போன்ற படத்தில் நடித்தாலும், இந்த மாதிரி பேசும் விஜயை பாராட்ட வேண்டும். அதைவிட பிரதீபாவை மேலும் பாராட்டலாம். அவரை பற்றிய செய்தி கீழே....நிஜவேர்'களைத் தேடும் 'சாஃப்ட்வேர்'...

"இன்னிக்கு எல்லாருக்கும் நல்ல கல்வி கிடைக்குது. திறமை இருக்கறவங்களுக்கு கை நிறைய சம்பளத்துல வேலை கிடைக்குது. கணினிக்கு வாக்கப்படறதுக்கு பலனா... வீடு, கார்னு விரும்பின வாழ்க்கை கிடைக்குது. நல்ல விஷயம்தான். ஆனா, இப்படி எல்லோருமே 'வொயிட் காலர் ஜாப்'ங்கறத நோக்கியே போயிட்டா, உயிராதாரமா இருக்கற உணவுப் பொருள்கள யார்தான் உற்பத்தி செய்றது..?"

- முக்கியமான கேள்வியுடன் ஆரம்பிக்கும் பிரதீபா நக்வார், இன்று ஒரு இயற்கை விவசாயி; ஆறு ஆண்டுகளுக்கு முன்... சாஃப்ட்வேர் இன்ஜினீயர்!

கர்நாடகா மாநிலம், நக்வார் என்ற கிராமத்தைச் சேர்ந்த சௌபாக்கியதேவி- ரங்கய்யா தம்பதியின் மகள் பிரதீபா. பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு, அமெரிக்காவில் பெரிய நிறுவனம் ஒன்றில் ஒன்பது ஆண்டுகள் பணி... அதே நிறுவனத்துக்காக லண்டனில் இரண்டு ஆண்டுகள் பணி என பதினோரு ஆண்டுகள் கை நிறைந்த சம்பளத்துடன் உயர்ந்த பொறுப்பை நோக்கி விரைந்து கொண்டிருந்தவர்.

எங்கு, எப்படி நிகழ்ந்தது இந்த கணினி டு கழனி மாற்றம்?

"சாஃப்ட்வேர் துறையில வேலை பார்த்தப்போ, நான் சந்திச்ச பலர், விவசாயக் குடும்பங்கள்ல பிறந்து, படிச்சு, பெரிய பணிகளுக்கு வந்தவங்களா இருந்தாங்க. 'ஊர்ல எப்படி இருக்கு உங்க விவசாயம்?'னு அவங்ககிட்ட ஆர்வமா கேட்பேன்.

'இனியும் அது எதுக்கு எங்களுக்கு? அப்பா, அம்மாவை சிட்டிக்கு கூட்டிட்டு வந்துட்டேன். தாத்தா, பாட்டி இருக்கறவரைக்கும் அவங்களால முடிஞ்சத பார்ப்பாங்க. அப்பறம், அவ்வளவுதான்! கிட்டத்தட்ட, எங்க ஊருல இருக்கற எல்லா விவசாய நெலத்தோட நிலைமையும் இதுதான்!'னு காலம் காலமா அவங்கள காப்பாத்தின, உலகத்து பசியையெல்லாம் ஆத்திட்டு வந்த, பாரம்பரிய தொழிலோட ஆயுள் முடியப்போறதைப் பத்தின எந்த வருத்தமும் இல்லாம சொல்லுவாங்க. ஆனா, அதை என்னால சுலபமா கடந்து போக முடியல.

'இந்தத் தலைமுறையும், இனி வரும் தலைமுறையும் இப்படி விவசாயத்தில் இருந்து விலகிட்டா, அப்பறம் உணவுங்கறது எங்கிருந்து கிடைக்கும்?'னு எனக்குள்ள எழுந்த கேள்வி, என்னை பல இரவுகள் தூங்க விடல. அதுக்காக இயக்கத்துல சேரவோ, கட்டுரைகள் எழுதவோ, பிரசாரத்துல கலந்துக்கவோ எனக்கு விருப்பமில்ல.

'நாம விரும்பற மாற்றத்துக்கான முதல் புள்ளியா, நாமளே இருப்போம்!'னு இறுதியா, உறுதியா முடிவெடுத்து, வேலையை விட்டுட்டு விவசாயத்துல இறங்கினேன். என்னை நோக்கி வந்த அதிர்ச்சிப் பார்வைகள், கேலிப்பேச்சுகள், அறிவுரைகள் எல்லாம் ஒரு கட்டத்துல அதுவா விலகிடுச்சு. இப்போ இந்த பிரதீபா 11 ஏக்கர் நிலத்துல... நெல், காய், கனி, பயறுனு விளைவிக்கற ஒரு விவசாயி!" என்று சொல்லும் பிரதீபாவின் தீர்க்கமான பார்வையும், அதை அவர் அடைந்த தெளிவும், அவர் மீது மரியாதையைக் கூட்டுகின்றன.

பெங்களூருவில் இருந்து கனக்புரா செல்லும் வழியில், முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்தால்... கபாடி எனும் கிராமம். அங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில்... ஆள் அரவம் இல்லாத சூழலில்... சுற்றிலும் சூரிய மின்வேலியுடன் கிடக்கிறது பிரதீபாவின் பண்ணை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் கரடு முரடாக இருந்த இந்த நிலத்தை தன் கடும் உழைப்பால் சொர்க்கபூமியாக மாற்றிக் கொண்டிருக்கிறார். ரசாயனங்களை தன் நிலத்துப் பக்கம் அனுமதிப்பதே கிடையாது பிரதீபா. தன் பண்ணையில் 13 மாடுகளையும் வளர்த்து பராமரித்து வருகிறார். "ராத்திரியாயிட்டா... அந்த 13 மாடுகளும், நாலு குழந்தைங்களும்தான் (நாய்களை இப்படித்தான் சொல்கிறார்) எனக்குத் துணை" என்று சொல்லும் பிரதிபா, தனியருவராகத்தான் வாழ்ந்து வருகிறார்!

"ஆரம்பத்துல, 'கீ போர்டு தட்டற வேலையில்லம்மா இது'னு சிரிச்சவங்க பலர். ஆனா, ஏர் கலப்பை, டிராக்டர், களையெடுக்கற கருவி, விதை விதைக்கற கருவி, மாட்டு வண்டினு எல்லாமே இப்போ என் கைக்கு பழகிடுச்சு. ஹைபிரீடு ரகங்களைத் தவிர்த்துட்டு, பாரம்பரிய நெல் ரகங்களை மட்டுமே விவசாயம் பண்றேன். மா, பப்பாளி, வாழை, பாக்கு, தேக்கு, சவுக்கு, மாதுளை, நெல்லி, கொய்யா, முருங்கைனு பலவகைப் பயிர்களும் என் தோட்டத்துல விளையுது" என்று சந்தோஷமாகச் சொல்லும் பிரதீபாவின் ஈடுபாடு, நமக்கு ஆச்சர்யம் தருகிறது.

"வேலைக்குப் போறவங்களோட மாசச் சம்பளம் போல ஒரே மாதிரியான நிரந்தர வருமானம் இருக்காது விவசாயத்துல. ஆனா, அந்த சூழலை பழகிகிட்ட எளிமைவாதிகள் விவசாயிகள். அந்த மனநிலையை நாமளும் ஏற்படுத்திக்கிட்டா, படிச்சவங்களும் மனநிறைவோடு விவசாயம் செய்யலாம்!" என்பவர்,

"என்னைப் பத்தி பத்திரிக்கையில செய்தி வந்தா... சில நாட்களுக்கு போன்ல விசாரிப்பாங்ல, பாராட்டுவாங்க. அதைத்தாண்டி பட்டதாரிகள் மத்தியில 'விவசாயத்தை நோக்கி' ஏதாவது மாற்றம் நிகழ்ந்தா, அதுதான் என் சந்தோஷம்!"

- நல்ல செய்திக்காக காத்திருக்கிறார் பிரதீபா!

நன்றி: (அவள் விகடன் 05-11-2010 )நம்ம மக்கள் விவசாயம் செய்ய வேண்டாம், அட்லீஸ்ட் பிளாக் எழுதாமல் இருக்கலாம் :-)

Read More...

Mr.Clean

உச்ச நீதிமன்றம் 2ஜி விவகாரத்தில் சிபிஐ, மற்றும் மத்திய அரசை திட்டி பிறகு உடனே ரோஷம் வராமல், ஓபாமா இந்தியா வந்து டான்ஸ் ஆடிவிட்டு போன பிறகு மீடியாவிற்கு வந்துள்ளது.

மத்திய தணிக்கைக் குழுவின் இடைக்கால அறிக்கையில் 2ஜி ஏலத்தில் மத்திய அரசிற்கு சுமார் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடிகள் வரை நஷ்டமாகியிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜெயந்தி நடராஜனை தினமும் டிவியில் பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது. ராகிங் தடை சட்டம் கொண்டு டிவியில் அவரை கேள்விக் கோட்பவர்களை அரஸ்ட் செய்தாலும் தப்பு இல்லை.

பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமாகியது ஒரு புறமும், பிரதமர் ஜி20 உச்சி மாநாட்டிற்காக சென்றிருப்பதுவும் சேர்ந்து இப்பொழுதும் இவ்விவகாரத்தை ஒன்றுமில்லாமல் அடிப்பதற்காகப் புறப்பட்டிருக்கின்றன. ராஜா நான் ராஜினாமா செய்ய முடியாது என்று சொன்னவுடன், மீடியா மன்மோகன் சிங் பக்கம் திரும்பி "Mr.Clean , what is your take on this ?" என்ற ரீதியில் கேள்வி கேட்க அவரோ அசராமல், விஷயம் கோர்ட்டில் இருக்கு என்று பதில் சொல்லுகிறார்.

நீண்ட காலமாக எதிர்க்கட்சிகளின் போராட்டம், தொடர்ச்சியாக சுப்ரீம் கோர்ட்டின் கண்டனம், மத்திய தணிக்கைக் குழுவின் அறிக்கை, சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பு என ராசாவிற்கு எதிராக பல்வேறு சக்திகளின் ஆதரவு இருந்தாலும், இன்னும் இவ்விவகாரத்தில் காங்கிரஸ் மழுப்பியே வருவது ஏனென்று புரியவில்லை.

காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், ஆகியவற்றில் கட்சியின் செல்வாக்கைக் காபந்து செய்யும் முயற்சியில் ஈடுபட்ட காங்கிரஸ், ஸ்பெக்ட்ரத்தில் மட்டும் விநோதமான காரணத்தைக் கூறுகிறது. மற்ற ஊழலில் தொடர்புடையவர்கள் காங்கிரஸார், இதில் தொடர்புடையது திமுக அமைச்சர்; எனவே இதில் நடவடிக்கை எடுக்க வேண்டியது கழகமே என காங்கிரஸ் கூறுகிறது. இது எவ்வகையான சமாதானம் என்று புரியவில்லை. ஊழலுக்கு கட்சி பேதம் கற்பிக்கப்படுகிறது. இந்த காங்கிரஸின் வலுவற்ற சால்ஜாப்புகளைப் பார்த்தால் காங்கிரஸுக்கே இதில் கணிசமான பங்கு இருக்குமோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

இந்நிலையில் ராசாவின் இடத்தைக் கனிமொழி நிரப்புவார் என்ற ஹேஷ்யங்களெல்லாம் பத்திரிக்கையில் கிளம்பின. இதற்கு கனிமொழியின் பிரணாப் முகர்ஜியினுடனான சந்திப்பு ஒரு காரணம். என்ன பேசினார் என்று நமக்கு என்ன தெரியும் ? இதற்கிடையே ராசா பதவி விலக வேண்டுமென காங்கிரஸிற்குள்ளேயே ஈவிகேஎஸ், மணி ஷங்கர ஐயர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். பாவம் மன்மோகன் சிங்கால் அது மாதிரி சொல்ல முடியவில்லை. ராகுல் எப்படி பட்ட முதலமைச்சர் வேண்டும் என்று சொல்ல முடிகிறது ஆனால் ராசா பற்றி மூச் !

கிழக்கு பத்ரி சமீபத்தில் ஏதும் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டாரா எனத் தெரியவில்லை. இராசா பற்றி அவர் எழுதியதை பார்த்தால் ஜெயந்தி நடராஜனுக்கு பக்கத்தில் இவருக்கு ஒரு சேர் போட்டு உட்கார வைத்துடுடலாம் போல. இது அவரது சொந்தக் கருத்தாகவே இருந்தாலும், பேத்தலான கருத்தாகத் தெரிகிறது.

"இத்தனை ஸ்பெக்ட்ரத்தையும் ஏலத்தில் விட்டால் 1,75,000 கோடி ரூபாய் அரசுக்குக் கிடைக்கும் என்று கேனையன் ஒருவன் கணக்கிட்டால், அதையும் அனைவரும் நம்புகிறீர்களே!"

என்று கேட்டுள்ளார். அது சரிதான். ஆனால் 3G அலைக்கற்றை ஏலத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் இப்போது அரசிற்குக் கிடைத்துள்ளதே?? அதற்கு என்ன சொல்கிறார் பத்ரி? 2G விவகாரத்திற்குப் பிறகு பயந்து போன ராசா சற்றே வெளிப்படையாக நடத்திய ஏலம் இது. இதில் வந்துள்ள வருமானத்தை நம்புவர்களையும் பத்ரி கேனையன் என்று விளிப்பாரா என்பது அவருக்கே வெளிச்சம். அல்லது அவரும் கழக பாணியில் 2G ஏலம் ஒரு ரூபாய் ரேஷன் அரிசி, 3G ஏலம் டபுள் டீர் பாஸுமதி அரிசி என்று சொல்வாரோ?

2G அலைக்கற்றை ஏலத்தை எடுத்த யூனிடெக் நிறுவனம், அதே அலைக்கற்றையை அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு பலமடங்கு லாபத்தில் விற்று விட்டது. இதிலும் யார் கேனையன்? யூனிடெக்கா? அதனை விலைக்கு வாங்கிய அரபு நிறுவனமா அல்லது பாரதத்தின் ஸ்ரீமான் பொது ஜனங்களா?

இந்த ஏல விவகாரம் தொடர்பாக பிரதமருக்கும் ராசாவிற்குமிடையே மூன்று கடிதப் போக்குவரத்து நிகழ்ந்திருக்கிறது. இவற்றில் முதலாவது கடிதத்தில் ராசாவிடம், 2G ஏலத்தில் வெளிப்படைத் தன்மையையும், நேர்மையையும் கடைபிடிக்குமாறு பிரதமர் தெரிவித்திருக்கிறார். ஆனால் நடந்தது நேரெதிர்...

பத்ரி பிரசன்னாவிடன் ( உதாரணத்துக்கு தான் ) இப்படி செய்யாதே என்று சொல்லுகிறார் ஆனால் பிரசன்னா ( உதாரணத்துக்கு தான் ) அவர் இஷ்டம் போல செய்கிறார் அப்படி செய்தால் பத்ரி பிரசன்னா செய்தது சரி என்று சொல்லுவாரா ?

ஜவுளிக் கடை ஆடித் தள்ளுபடி ரீதியில், முதலில் வருபவருக்கே முதலில் தரப்படும் என்று சொல்லி, டெண்டர் முடிவடையும் தேதியையும் மறைத்து முன்னதாகவே ஏலத்தை முடித்து விட்டார். ( இன்றைய மாத்தூர் பேட்டியை பாருங்கள்). இந்த விவகாரத்தில் பிரதமரின் வார்த்தை மீறப்பட்ட பிறகும் கூட, ராசா ஊழலில் ஈடுபடவில்லை என அவரே என்னிடம் தெரிவித்து விட்டார் என பிரதமர் ராசாவை காபந்து செய்கிறார். விஞ்ஞானப் பூர்வமான நேர்மை!!

இதை பத்ரி கூற்றிப்படி, பார்த்தால் கிழக்கு புத்தகங்களை MRP விலைக்கு விற்காமல் கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கலாம் என்பது போல இருக்கு. அப்படி விற்றால் அது விற்றவரின் கொள்கை என்று சொல்லுவாரா ?

இவ்விவகாரத்தில் இன்னும் விநோதமாக, ஒருவர் போல் மற்றொருவர் என பிரதமர் துவங்கி ஜெயந்தி நடராஜன் ராசா என அனைவருமே மத்திய தணிக்கைக்குழுவின் அறிக்கையை தாம் பார்க்கவில்லை என அடித்து சத்தியம் செய்கின்றனர். ஆனால் அதே வேளையில், தணிக்கைக் குழுவின் அறிக்கை இறுதியானதல்ல என்றும் கூறுகின்றனர்.

ராசா மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் திமுக தனது ஆதரவை திரும்பப் பெறும் என்ற பயம் ஏதும் காங்கிரஸுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஜெயலலிதா துவங்கி, மாயாவதி வரை அரசை காப்பாற்ற பலர் இருக்கின்றனர். இன்னமும் சொல்லப் போனால் அரசைக் காப்பாற்றும் கலையில் காங்கிரஸ் மிகுந்த தேர்ச்சியுடைய கட்சி என்பது அண்டமனைத்திற்கும் வெளிச்சம். சில வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்ற மைய மண்டபத்திலேயே அவ்விவகாரம் சந்தி சிரித்தது. ஆக காங்கிரஸிற்கு அந்த பயமெல்லாம் இல்லை என்பது தெளிவு. வேறு என்னவாகயிருக்கும் என்று யோசித்தால் புலப்படுவது ஒன்றே ஒன்றுதான். ஒன்றரை லட்சம் கோடி ஊழலில் பயிருக்குப் பாயும் நீர் களைக்கும் பாய்வது போல காங்கிரஸில் "சிலருக்குப்" பாய்ந்திருக்கிறது. யார் அந்த சிலர் என்பது நிச்சயமாக வெளிவரப் போவதில்லை. இதுவும் ஒரு மெகா போஃபர்ஸ் போலதான்.


ராசா விஷயத்தில் பிரதமர் சரியாக நடந்துக்கொள்ள வில்லை என்றால், Mr.Clean சோப்பு விளம்பரத்துக்கு கூட அவர் போஸ் கொடுக்க லாயக்கு இல்லாதவராக போய்விடுவார்.


தொடர்புடைய பதிவுகள்:

பூதாகாரமாகும் 'ஸ்பெக்ட்ரம்' பூதம்..

ஓரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ...

ராசா சென்னை பயணம் !

முக்கோணக் கதை

Read More...

Thursday, November 11, 2010

எந்திரன் - 2

எந்திரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயா பிக்சர்ஸ் நிறுவனமான கிரீன் லிட்டில் மூவீஸ் எந்திரன் - 2 என்ற படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

எந்திரன் படத்தின் கடைசிக் காட்சி நினைவு இருக்கும்... மியூசியத்தில் எந்திரன் அக்கு வேறு ஆணி வேறாக இருக்கும்.. இரண்டாம் பாகம் அதிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.

அந்த மியூசியத்துக்கு தாடி வைத்துக்கொண்டு ஒரு பெரியவர் வருகிறார், அவருக்கு உதவியாளராக இன்னொருவர். பார்க்க அறிஞர் மாதிரி இருக்கிறார். இவர்கள் இருவரும் சும்மா இல்லாமல் கூட்டம் இல்லாத மியூசியத்தில் எந்திரனை திரும்பவும் சேர்க்கிறார்கள். எந்திரன் உயிர்பெற்று விடுகிறது.

ஆண்டு - கிபி 2023

உயிர் பெற்ற எந்திரன் பேசத் தொடங்குகிறது "13 ஆண்டுகள் என்னை ஒதுக்கிவிட்டீர்கள். இந்த தண்டனை எனக்கு போதாதா? நான் என்ன செய்தேன்? பாயசம் சாப்பிடும் போது புறங்கையைத்தானே நக்கினேன்...."

பெரியவருக்கும் அறிஞருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறார்கள். இந்த எந்திரனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது, ஒரு ஐந்து எழுத்து பெயர் வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் ஐந்து எழுத்தில் பெயர் வைத்தால் தமிழக மக்கள் குழம்புவார்கள் அதனால் நான்கு எழுத்தில் பெயர் வைக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள். எந்திரனிடம் பேச்சுக் கொடுக்கிறார்கள்.

"உனக்கு என்ன எல்லாம் தெரியும்?"

"எனக்குக் கவிதை எழுதத் தெரியும்"

"அட அப்படியா? ஒரு கவிதை சொல்லு பார்க்கலாம்"

"தமிழர்களே
தமிழர்களே
நிங்கள் என்னை
நட்டு போல்டாக கழட்டி போட்டாலும்
பேரிச்சம் பழமாக தான் ஆவேன்
அதை என் குடும்பத்தினர் எல்லோரும் சாப்பிடலாம்."


பெரியவரும், அறிஞரும் இது எப்படிக் கவிதையாகும் என்று குழம்பி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்.

"வேற என்ன தெரியும்?"

"கடிதம் எழுதுவேன்"

அப்பறம்?

"சினிமா படத்துக்கு வசனம் எழுதுவேன்"

"ம்"

"ஏதாவது மானும் மயிலும் ஆடும் நிகழ்ச்சிக்கு அழைத்துக்கொண்டு போனால் நான்குமணி நேரம் ஆனாலும்கூட சோர்ந்துபோகாமல் நடனத்தை மட்டுமே பார்ப்பேன்.

"ஓ! இன்னொரு கேள்வி..."

"நீங்கள் கேள்வியே கேட்க வேண்டாம், நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லுவேன்!"

இதற்குமேல் பெரியவரும் அறிஞரும் வாயடைத்து, "உனக்கு பல கலைகள் தெரிந்திருக்கிறது. அதனால் உன்னை "கலைஞர்" என்று அழைக்க போகிறோம்," என்று சொல்ல எந்திரன் குஷியாகிறது.

"உங்களை நான் எப்படி அழைக்க வேண்டும்?" என்று எந்திரன் கேட்டது.

"நீயே முடிவு செய்" என்றார் பெரியவர்.

"எனக்கு நீங்கள்தான் திரும்பவும் உயிர் கொடுத்தீர்கள். அதனால் நீங்கள்தான் என் கடவுள்!"

பெரியவர் கோபமாக, "ஏய் காட்டுமிராண்டி! நானே கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நீ என்னையே கடவுள் என்று சொல்லுகிறாய். என்ன தைரியம் உனக்கு? ..." என்று கத்த தொடங்கினார்.

கலைஞர் உடனே தன் டேட்டாபேஸில் அலச, கடவுள் என்றால் மற்றொரு வார்த்தை -தெய்வம்... அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.. என்று ப்ளாஷ் அடிக்கிறது. பிதா என்றால் தந்தை என்றும் ஒளிர்கிறது.

"நீங்கள் என் தந்தை மாதிரி, பெரியவராகவும் இருப்பதால் நீங்க "தந்தை பெரியார்" என்று அழைக்கிறது.

பக்கத்தில் இருக்கும் அறிஞர், "அவர் எனக்குதான் முதலிலிருந்தே தந்தை," என்று சண்டைக்கு வருகிறார்.

"அப்படியென்றால் நீங்கள் எனக்கு மூத்தவர். அதனால் உங்களை அறிஞர் அண்ணா என்று கூப்பிட போகிறேன்."

கலைஞர், அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் - மூவரும் எலக்டரிக் டிரெயினில் ஏறுகிறார்கள்.

இவர்கள் ஏறிய பெட்டியில் ஓர் இளைஞர் குமுதம் படித்துக்கொண்டு இருக்கிறார். அதன் அட்டையில் எந்திரன் படம் இருப்பதை பார்த்து எந்திரன் குஷியாகிறது. அந்தப் புத்தகத்தை வாங்கி ஒரு நொடி கண்ணுக்குநேராகப் பிடித்துவிட்டு திருப்பித் தருகிறது.

புத்தகம் கொடுத்தவர், "அதற்குள் படித்துவிட்டீர்களா?"

"படிப்பதற்கு என்ன இருக்கிறது? குமுதத்தில் வெறும் படம்தானே. அதனால் உடனே பார்த்துவிட்டேன்" என்கிறது.

பக்கத்தில் ஒரு கணக்கு வாத்தியார் கால்குலேட்டரை வைத்து ஏதோ தட்டிக்கொண்டிருக்கிறார். எந்திரன் என்ன என்று கேட்க, அவர் 1.7லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று தெரியவில்லை என்று சொல்ல எந்திரன் டக் என்று விடை சொல்லுகிறது. இதில் எத்தனை கிலோ ஒரு ரூபாய் அரிசி வாங்கலாம், எத்தனை கிராம் மளிகைப்பொருள்கள் வாங்கலாம் என்றெல்லாம் விஜய்காந்த் மாதிரி புள்ளிவிவரம் சொல்லுவதை பார்த்து எதிர்சீட்டில் இருக்கும் இளைஞர் ஆர்வமாகக் கிட்டே வருகிறார்.

அப்போது அந்த இளைஞரைச் சுற்றி ஆர்.எஸ்.எஸ். கோஷ்டி ஒன்று வம்பு செய்ய உடனே எந்திரன் அவர்களை வாய்க்கு வந்தபடி தூவேஷிக்கிறது. அந்த கோஷ்டி அடுத்த ஸ்டேஷனில் இறங்கிப் போய்விடுகிறார்கள்.

"உன் பெயர் என்ன?" என்று எந்திரன் கேட்கிறது.

அதற்கு அந்த இளைஞர், "எனக்கு வேலை எதுவும் இல்லை, சும்மா ஊர்சுற்றுகிறேன். அரேபிய மொழியில் ராகுல் என்றால் ஊர்சுற்றுபவர் என்று பெயர். அதனால் என்னை எல்லோரும் ராகுல் என்று அழைப்பார்கள். பணம், பதவி என்று நிறைய இருந்தாலும், ஒரு ஜாலிக்கு ரயிலில் சுற்றுவேன், பிட்டுக்கு மண் சுமப்பேன்..குடிசையில் டீ குடிப்பேன்." என்று அடுக்கிக்கொண்டே போகிறார். "என்னை அந்தக் கும்பலிடமிருந்து காப்பாற்றியதற்கு நன்றி. பதிலுக்கு உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?" என்றும் விசாரிக்கிறார்.

எந்திரன் சற்றும் யோசிக்காமல், "என்னிடம் 2G ஃபோன் தான் இருக்கிறது. எனக்கு இப்போது லேடஸ்டாக 3G ஃபோன் வேண்டும்," என்று கேட்கிறது.

உஷாரான இளைஞர், "என் அம்மாவிடம் கேட்டுச் சொல்லுகிறேன்" என்று கூறி அடுத்த ஸ்டேஷனில் வண்டி நிற்பதற்கு முன்பாகவே இறங்கி தலைதெறிக்க ஓடுகிறார்.

எந்திரனுக்கு உலக அறிவு, ஞானம் எல்லாவற்றையும் பகுத்தறியச் சொல்லிதர முடிவுசெய்து பெரியவரும் அறிஞரும் அறிவாலயத்துக்கு அப்டேட் செய்ய அழைத்து போகிறார்கள். அங்கே சந்தானம், கருணாஸ் போல மணிமணியாய் இரண்டு 'வீர' இளைஞர்கள் அவருக்கு ஸ்பீச் பிராக்டிஸ் கொடுக்கிறார்கள். அவர்களுடைய பயிற்சி எப்படி இருக்கிறது, "தமிழ் காட்டுமிராண்டி பாஷை, கடவுளை நம்பாதே, பாப்பானையும் பாம்பையும் கண்டால் பாப்பானைக் கொல்லு" என்றெல்லாம் சரியாகச் சொல்கிறதா என்று சோதிக்க வந்த பெரியவரைப் பார்த்து எந்திரன், "தமிழன் மரமண்டை, சோற்றாலடித்த பிண்டம்..." என்று அடுக்குகிறது. பெரியவரும், அறிஞரும் காமெடி உருப்படிகளைக் கண்டிக்கிறார்கள். காமெடி உருப்படிகள் எந்திரனோடு சேர்வதா சேற்றைவாரி அடிப்பதா என்ற குழப்பத்திலேயே மீதி நாள்களைக் கழிக்கிறார்கள்.

வில்லனாக வரும் கேரக்டர் பெரியவரிடம் இருக்கும் கருப்பு பெட்டியில் இருக்கும் சிகப்பு டிஸ்கை எடுத்து எந்திரனுள் போட, கருப்பு கண்ணாடி, மஞ்சள் துண்டு கரகரத்த குரல் என்று எந்திரன் அடுத்த வெர்ஷன், புதிய கெட்டப்புடன் எழுந்து வருகிறது.

இதற்குள் அறிஞர் வேறு ஒரு ரோபோவை தயாரிக்க அதுவும் கருப்பு கண்ணாடி, வெள்ளை தொப்பி கெட்டபுடன் வருகிறது...

இதற்கு பிறகு படம் குடும்ப படமாகிறது. அதாவது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் !


அது பாகம் 3 - இதை பற்றி வாசகர்கள் எழுதலாம். !


Read More...

சூடு பிடிக்கும் அரசியல்

இன்று கோடநாடு புறப்படுவதற்கு முன் ஜெயலலிதா டைம்ஸ் செய்தி சேனலுக்கு இந்த பேட்டியை அளித்துள்ளார்.
அதில்

2ஜி ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பான விவகாரத்தில், மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ஆ. ராசாவை நீக்க வேண்டும். அவ்வாறு அவரை நீக்கினால் கூட்டணி அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொள்ளும் என்று காங்கிரஸ் கருதுவது இயற்கையே. அத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஆதரவு தரும்."

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு தருவதற்காக தான் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றும், பொது வாழ்க்கையில் தூய்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மக்களவையில் உள்ள 9 அதிமுக எம்.பி.,க்கள் மற்றும் ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 18 எம்.பி.,க்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முழு பேட்டியை இங்கே படிக்கலாம்

இன்று அல்லது நாளை கலைஞர் மன்மோகன் சிங்கிடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராசா விவகாரம் மூலம் திமுகவை களங்கப்படுத்த முயற்சி என்று சில மணி நேரம் முன்பு கி. வீரமணி சொல்லியிருக்கார்.

Read More...

நச் பூமராங் !

1. ஜி20: பிரதமர் நேற்று கொரியா பயணம்.
வந்தவுடனாவது 2ஜி- க்கு ஒரு முடிவு சொல்வாரா?

2. ராசாவை பதவி நீக்கக்கோரி ஜனாதிபதிக்கு இந்தியர்கள் தந்தி அனுப்பவேண்டும்:ஜெ
இவங்க எப்ப கலைஞர் கட்சில சேர்ந்தாங்க? அப்டி ஒரு வேளை அனுப்பினா அன்றைய தினத்தந்தி சர்குலேஷன் கூடுமா?.


3. லக்ஷ்மன் இன்னும் ஒரு மேட்ச்சைக் காப்பாற்றினார் - செய்தி.
ராமருக்குக் கோவில் கட்டினாத்தான் அடிக்க வாராங்க! லக்ஷமனுக்குக் கட்டி
ராமர் செலைய உள்ள வெக்கலாமுல்ல?


4. ஊழல் புகார்களில் சிக்கிய அசோக் சவான் மற்றும் சுரேஷ் கல்மாடி
ஆகியோர் மீது, காங்கிரஸ் மேலிடம் அதிரடி நடவடிக்கை.
ஒருவர் மாடி வீடு. இன்னொருவர் கல்மாடி.


5. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள், ஆதாரத்துடன்
நிரூபித்தால் பதவி விலக தயார்" என என துணை முதல்வர் ஸ்டாலின்
கோபமாகக் கூறினார்.

எரிச்சலில் எக்குத்தப்பாக எங்காவது எந்திரன் படத்திற்கு ஏடாகூட விமர்சனம்
எழுதபோகிறேன் என்று கிளம்பாமல் இருந்தாரே.( நன்றி: இதற்கு )


6. தீப்பிடிப்பது உள்ளிட்ட பிரச்சனைக்குரிய நானோ கார்களை தி்ரும்பப் பெறப்போவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
முன்னாடியே தெரிஞ்சு இருந்தா நெறைய மாமியார்கள் மருமகளுக்கு இதை
புக் செய்திருப்பார்கள்.

7. தீபாவளிக்கு மதுபான விற்பனையை, 300 கோடி ரூபாய். - செய்தி
ஹேப்பி தீபாவளி ஃபோக்ஸ் !

8. தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து, ஜனவரி 14ம் தேதிக்குப் பிறகு தான்
எதையும் உறுதியாகக் கூற முடியும் - ராமதாஸ்
பொங்கலில் ஜாதிக்காய்-சிறிது அளவு ஏன் போடுகிறார்கள் என்று இப்போது புரிந்திருக்கும்.


9. உங்க வீட்டுக்கு ஆற்காட்டார் வந்தால் என்ன போகும் ?
கரண்ட் :-)


பிகு: படம் - நச் என்று இச் வைப்பது பற்றிய பூமராங் படம் :-)

Read More...

Saturday, November 06, 2010

இரண்டு கவிதை - மானஸ்தி

Dear இட்லிவடை,

அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை அனைத்தையும் பரிமாறும் இ.வ. கடையில் எத்தனை நாள் தான் ஓசியிலேயே சாப்பிடுவது? இதுவரை உள்ள கணக்கைத் தீர்த்துக் கொள்ள வேண்டி இரண்டு கவிதைகள் எழுதி அனுப்பியிருக்கும் மானஸ்தி(தை) :

- சுபத்ரா
http://subadhraspeaks.blogspot.com

பொம்மை உலகம்
காலுடந்த கரடிப்பொம்மைக்குக்
காயம் வலிப்பதில்லை
கண்சிமிட்டும் பார்பிக்குக்
கண்ணீர் வருவதில்லை
அடித்தாலும் உடைத்தாலும்
அழுகை சிறிதுமின்றிச்
சிரித்தே கிடக்கின்றன
அத்தனை பொம்மைகளும்
எனது ஆர்வமோ
இரண்டு பொம்மைகளில்
அவை
அடிக்கடி அழுகின்றன
அரிதாகச் சிரிக்கின்றன
அழுகின்ற நேரங்களில்
அருகினில் செல்லமாட்டேன்
சில சிரிக்கின்ற சமயங்களில்
நான்
உறக்கத்தில் உறைந்திருப்பேன்
விடியும் முன்பே
விழித்துக் கொண்டு
விறுவிறுவென்று
உடுத்திக் கொண்டு
ஓடிவிடுகிறது ஒன்று.
அது போனதும்
இது வருகிறது
இழுத்துப் போர்த்திக்கொண்டு
இருட்டறையில்
கிடக்கிறது
விழித்ததும்
இது போகிறது
அது வருகிறது
பால் ஊட்டும்
பாட்டியிடம்
பலமுறை கேட்டுவிட்டேன்
இந்த
அம்மா பொம்மையும்
அப்பா பொம்மையும்
எப்போது என்னோடு
விளையாட வருமென்று
பாவம் அவளுக்குத்
தெரியவில்லை போலும்
பாவமாகப் பார்க்கிறாள்
என்னையும்
என் பொம்மைகளையும்.

கல்வி

மனனம் செய்தவை
மறந்த பின்பும்
மனதிற்குள்
மிச்சம் இருப்பது.
மனிதம் என்னும்
விதையை விதைத்து
மனிதனில்
இறைவன் சமைப்பது
கல்வி கரையில்லாதது
இன்றோ
கல்வி
காசில்லாமல் இல்லாதது
அன்று
எடுத்தவன் கொடுத்தான்
கல்வியை.
இன்று
கொடுத்தவன் எடுக்கிறான்
காசை..

கலி முத்தி போனதுக்கு இதுவே சாட்சி - பெண்கள் கவிதை(?) எழுத ஆரம்பித்துவிட்டார்கள் :-)

Read More...

Friday, November 05, 2010

தீபாவளி நல்வாழ்த்துகள் !

Read More...

Wednesday, November 03, 2010

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு நாள்

சமீபத்தில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் நிமித்தம், திருச்சிராப்பள்ளி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். உள்ளே நுழையும்போதே தேனடை போல புரோக்கர்கள், "என்ன சார் ஃப்ரெஷ்ஷா, ரினிவலா, ஈசிஎன்ஆரா என்று கேட்டு அபிமன்யுவை வதம் செய்ய சூழ்ந்து கொண்ட கெளரவர்களைப் போல சக்ர வியூகம் அமைத்தார்கள்.". அவர்களைத் தவிர்த்து விட்டு ஏற்கனவே ஆன்லைனில் நிரப்பி வைத்திருந்த படிவத்துடன் ஹனுமன் வாலுடன் இணைந்து நின்றேன். அப்பொழுது அங்கு ஒருவர் மைக்கில் ஏதோ அறிவிப்பு செய்வதற்கு ஆயத்தமானார். அவர் அந்த அலுவலகத்தில் காவலாளி உத்யோகத்திற்காக ஒரு தனியார் செக்யூரிட்டி பீரோவினால் அனுப்பி வைக்கப்பட்ட காவலாளி என்பதை அவருடைய சீருடை உணர்த்தியது.முதலில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, தெளிவான தமிழில் தேர்ந்த மேடைப் பேச்சாளர் போல் பேசத் துவங்கினார். வரிசையாக முதன்முறையாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய வந்திருப்பவர்கள், புதுப்பிப்பவர்கள், தொலைந்தவற்றிற்கு மாற்று பெற வந்திருப்பவர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக படிவம் நிரப்புவது எப்படி என்றும், அதில் செய்ய வேண்டியவை, கூடாதவை என்னென்ன என்பனவற்றைத் தெளிவாகவும், பொறுமையாகவும் விளக்கினார். இடையிடையே வித்யாசமாக பொன்மொழிகள், குழந்தைகளுக்கு நற்குணங்களை போதிக்க வேண்டியதன் அவசியம் என்பனவற்றையும் கூறி அசத்தினார்.

இத்தனைக்கும் இந்த நபர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உத்யோகஸ்தர் அல்ல. ஒரு தனியார் செக்யூரிட்டி பீரோ அனுப்பி வைத்திருக்கும் ஒரு காவலாளி. நான் பல இடங்களில் பார்த்த வரையில் இது போன்ற காவலாளிகள் கடனே ஒன்று ஒரு நாற்காலியில் அமர்ந்து பீடியோ, சிகரெட்டோ புகைத்த வண்ணம், சுவற்றிற்கு செங்காவி அடித்துக் கொண்டிருப்பர். இவரோ தனது செயல்பாடுகளால் மற்றவர்களிடமிருந்து நிரம்பவே வித்யாசத்தைக் காட்டினார். இவரது பேச்சின் ஹைலைட்டாக ஒரு விஷயம் கூறினார். " மேலே காத்திருக்கையில் உங்களுடைய உடைமைகளை நீங்கள் தெரியாமல் தவற விடலாம்; அவற்றை பொறுப்புணர்ந்து உங்களிடம் சேர்ப்பிக்கும் நண்பர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்; ஆனால் என்னைப் போன்ற சில தீய எண்ணம் கொண்டவர்கள் உங்களது பொருட்களைக் களவாடிவிடும் அபாயம் இருக்கிறது. எனவே உங்களது உடைமைகளை கூடிய மட்டும் என்னைப் போன்ற திருடர்கள் வசம் ஏமாந்து விடாதீர்கள் என்று அதில் "என்னைப் போன்ற" என்ற வார்த்தையை அழுத்திக் கூறிவிட்டு, மற்றவர்களைக் குறை காண்பதைக் காட்டிலும், என்னையே சொல்லிக் கொள்வதால் எனக்கும் பிரச்சனை ஏற்படாது என அதற்கு விளக்கம் வேறு கொடுத்தார்.

சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மிகுந்த பொறுமையுடனும், சிரத்தையுடனும் பாஸ்போர்ட் பெறுவதற்குண்டான அடிப்படை வழிகளை எளிமையான தமிழில் விளக்கிவிட்டு, இடையிடையே, முகவர்களிடம் உங்களது பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். யாருடைய சிபாரிசின் பேரிலும் இங்கு குறித்தகாலத்தை விடக் குறைவான காலத்தில் பாஸ்போர்ட் அளிக்கப்பட மாட்டாது, ஏமாறாதீர்கள்; ஏமாறாதீர்கள் என்று கூறிக் கொண்டே இருந்தார். அங்கேயே அவரைச் சுற்றி நின்ற முகவர்கள் கூட இதைப் பெரிது படுத்தாமல் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். தவிர போலி ஆவணங்கள் கொடுத்து ஏமாற்ற முனைவதால் விளையும் சங்கடங்களையும் எடுத்துக் கூறினார்.

கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தையுடன் கூடிய தாய்மார்கள் போன்றோர்களுக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகள் என்றுமே நல்லொழுக்கம் என்ற நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டால்தான், அவர்களுடைய எதிர்காலத்தை மிகச் சிறப்பானதாக அறுவடை செய்ய இயலும். எனவே அவர்களுக்கு நல்ல ஒழுக்கங்களையும், பழக்கவழக்கங்களையும் போதியுங்கள் என்று கூறிவிட்டு, அனைவரும் பொறுமையுடனும் இன்முகத்துடனும் எல்லோருடனும் பழகுங்கள்; இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள்; ஆனால் அக்கறையுடன் செயல்பட்டால் எக்கரையும் பச்சைதான் என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.

அரசாங்க சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி, இவை தவிர இதர படிகள், ஓய்வு பெற்ற பிறகு பென்ஷன், பணிக் காலத்தில் இடையிடையே ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் என அனைத்தையும் பெற்றுக் கொண்டும் கூட, கடமைக்காக லஞ்சம் கேட்கும் லஞ்சப் பேய்கள் மத்தியில், இவரைப் போன்ற கடமையுணர்வு மிகுந்த உன்னத ஆத்மாக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். வெகு சமீபத்தில் திரு கடுகு அவர்களுடைய வலைமனையில் கூட அவர் தான் அமெரிக்காவில் கண்ட பள்ளி வாகன ஓட்டுனர் பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததும் இவருடைய நினைவுதான் வந்தது. இவரைப் போன்ற ஒரு நபர் ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் இருந்துவிட்டால் என்ற பேராசைக் கனவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அவரைப் புகைப்படம் எடுக்க முயன்ற போது நாசூக்காக மறுத்து விட்டார். சென்ற வேலை இனிதே முடிந்த திருப்தியுடனும், அவரின் பெயரைக் கூட கேட்டுக் கொள்ளாத என்னுடைய மறதியையும் நொந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்

- யதிராஜ்

Read More...

Tuesday, November 02, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 2-11-2010

முனிக்கு கடிதம் ...


அன்புள்ள முனி,

நேற்று தமிழக அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 'ஓச்சாயி' போன்ற படங்களுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க முடியாது என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் அந்த செய்தி குறிப்பில் "வ" குவட்டர் கட்டிங் என்ற படத்தை பற்றி மூச்சுவிடவில்லை. அதன் விளம்பரம் தான் கலைஞர் டிவியில் வருகிறதே பிறகு அதை பற்றி எப்படி சொல்லுவார்கள். அப்படியே சொன்னாலும் சொன்னவர் முழு கட்டிங்கிற்கு உட்படுத்தப்படுவார். இதற்கு எல்லாம் பதில் சொல்லும் தமிழக அரசு ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றி சுப்ரீம் கோர்ட் சொன்ன கருத்துக்கு ஊமையாக இருக்கிறது.

பாரதத்தின் மிகப் பழம்பெரும் இதிகாசங்களான ராமாயணம், மஹாபாரதம் இவற்றைவிடப் பெரியதும், புகழ்பெற்றதுமாக இப்போது கருதப்படுவது திராவிடச் சுடர் ஆ.ராசாவினால் செய்யப்பட்டுள்ள 2G ஸ்பெக்ட்ரம் முறைகேடு. இதனால் அரசிற்கு ஏற்பட்ட எழுபதாயிரம் கோடிகள் என ஏற்கனவே பலமுறை கதறியாகிவிட்டது. இந்த மேரு மலையை விட உயர்ந்த முறைகேட்டை மூடி மறைக்க காங்கிரஸும், அதன் கொள்கை நடைமுறைச் செயலகமுமான மத்திய புலனாய்வுத் துறையும் மிகவும் முனைந்திருப்பது அனைவரும் அறிந்த சரித்திரமே. இடையிடையே கழகம் செய்த சில உருட்டல் மிரட்டல்களை அடக்கி வைப்பதற்காக தொலைத் தொடர்பு அலுவலகங்களில் மத்திய புலனாய்வுத் துறை அதிரடிச் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றியதாக செய்திகள் வெளியானதெல்லாம் ஏற்கனவே நமக்குத் தெரியும்.

இது இப்படி இருக்க தன்னார்வ நிறுவனம் ஒன்று, 2G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேடுகள் முறையாக விசாரிக்கப்படுகின்றனவா என்றும், விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும் உச்ச நிதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தது. இதனிடையே ஒதுக்கீட்டில் ஊழல் ஏதும் நடைபெறவில்லையென ராசாவே தன்னிடம் தெரிவித்ததாக பிரதமர் வேறு ராசாவைக் கொண்டாடினார். மும்பை தாக்குதலில் எனக்கு எவ்வித தொடர்புமில்லை என அஜ்மல் கஸாப் எதும் பிரதமரிடம் கூறாமலிருக்க வேண்டும்.

சில நாட்கள் முன் இவ்வழக்கும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி அடங்கிய பெஞ்ச், சிபிஐ வேண்டுமென்றே இவ்வழக்கைத் தாமதம் செய்வதாக கடும் கண்டத்தைப் பதிவு செய்தது. அதோடல்லாமல், சிபிஐ தமது காலை தாமே வாரிக் கொள்வதாகவும், மற்றவர்கள் விஷயத்திலும் சிபிஐ இதே தாமதத்தைக் கடைபிடிக்குமா என்றும், மத்திய அரசு செயல்படும் லட்சணம் இதுதானா என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. தவிர விசாரணை நடைபெற்றிருக்கும்போதே அமைச்சர் பதவியில் தொடர்வதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இவ்விஷயத்தில் உச்சநீதிமன்றம் எழுப்பும் இரண்டாவது கண்டனக் குரல் இது. ஏற்கனவே ஒருமுறை கண்டனம் செய்தபோது, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அரசு தனது வழக்கமான பதிலைக் கூறியது. ஆனால் பாவம் சுப்ரீம் கோர்ட் இதையெல்லாம் நம்பும் நிலையில் இல்லை. தற்போது தெரிவித்திருக்கும் கண்டனம் மத்திய அரசை சங்கடப் படுத்தியுள்ளது போல் தெரிகிறது. இம்முறையும் அரசு நடவடிக்கை எடுக்கும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.இது குறித்து ராசா சொன்ன கருத்து "எனக்கு உடம்பு சரியில்லை, பிறகு பேசலாம்" என்பது. ஆக மருத்துவமனையில் படுத்துக்கொள்ள இப்பவே அவர் ரெடியாகிவிட்டார் போல. கலியுகத்தில் உடுத்திக்கொள்ல கோவணம் கிடைக்குமோ கிடைக்காதோ, ஊழலுக்குக் வண்ண வண்ண கோவணம் கிடைக்கும். இன்னும் சில நாட்களில் தலைவர் இது தாழ்த்தப்பட்ட ஊழல் என்ற கோவணத்தை இதற்கு மாட்டுவார். பொறுத்திருங்கள்.

மஹராஷ்டிர காங்கிரஸ் அரசாங்கத்த்தால் ஊழல் பாதுகாப்புப் பேரவையான மத்திய காங்கிரஸுக்கு புதிய தலைவலி உண்டாகியுள்ளது. கார்கில் போர் வீரர்களுக்கும், அதில் வீர மரணமெய்தியவர்களின் குடும்பத்தாருக்கும் மும்பையின் கொலாபாவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டது. இக்குடியிருப்பில் தற்போதைய ( தீபாவளிக்கு பிறகு அவர் முன்னாள் ஆகியிருப்பார்) முதல்வர் அஷோக் சவான் தனது மாமியார், மைத்துனி, மைத்துனர் என சகட்டுமேனிக்கு வீடுகளை ஒதுக்கியுள்ளது இப்போது பெரும் பிரச்சனையைக் கிளப்பி அவரது பதவிக்கே வேட்டு வைத்துள்ளது.

ஆதர்ஷ் ஹவுசிங் சொசைட்டி என்ற இக்குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதியளிப்பதில் துவங்கி, வீடுகள் ஒதுக்கீடு செய்வது வரையிலான காலகட்டத்தில் மஹராஷ்டிரம் நாராயண் ரானே (சிவசேனை), சுஷில் குமார் ஷிண்டே (காங்கிரஸ்), விலாஸ் ராவ் தேஷ்முக் (காங்கிரஸ்) அஷோக் சவான் (காங்கிரஸ்) என நான்கு முதல்வர்களைக் கண்டுவிட்டது. இப்பிரச்சனை வெடித்ததும் முதல்வர் சோனியாவைச் சந்தித்து தனது ராஜிநாமாவை சமர்பித்து விட்டார். ஆனால் சவானுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழுந்துள்ளதால் இப்போதைக்கு பிரச்சனை விசாரணை என்ற பெயரில் நீண்டு கொண்டிருக்கிறது. இப்போது இந்த நான்கு முதல்வர்களுக்குமே இம்முறைகேட்டில் தொடர்பிருப்பதாக புகைந்து கொண்டிருக்கிறது.

தற்போது டி.ஆர்.பாலு அவர்கள் அனுமதி அளித்த்துள்ளார் என்ற பூதம் கிளம்பியுள்ளது. எப்போது தமிழன் காங்கிரஸ் ஊழலுக்கு 'நண்பெண்டா'
சி.பி.ஐக்கு அடுத்த கேஸ் ரெடி.

எனக்கு தூக்கம் வருவது இல்லை என்று எடியூரப்பா கூறியிருக்கார். எதற்கு என்று அந்த நியூஸை பார்த்தால் விவசாயிகள் மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். விவசாயிகளின் கஷ்டங்களை நினைத்தால் எனக்கு சரியான தூக்கம் வருவது இல்லை என்று விளக்கம். இவ்வளவு நாள் குதிரை, யானை பேரம் நடத்தியவருக்கு எப்படி இந்த மாதிரி கூலாக பொய் சொல்ல முடிகிறது ?


அடுத்த கூல் நியூஸ் எல்லோருக்கும் ஒரு ஓட்டு, ஒரு முன்னாள் முதல்வரான எனக்கு இரண்டு ஓட்டு ஏன் கூடாது என்று இரண்டு முறை ஓட்டு மிஷினில் ஓட்டு போட்டுள்ளார் லல்லுவின் மனைவி ரப்ரி தேவி. "இரண்டு முறை அழுத்தினேன் ஆனால் ஒரே ஒரு சவுண்டு தான் வந்தது. எனக்கு என்னமோ இந்த காங்கிரஸ்காரங்க தேர்தல் ஆணையத்த கைக்குள்ள போட்டுக்கிட்டு ஓட்டு மெஷின்ல தில்லுமுல்லு பண்ணுறாங்கண்ணு தோணுது! அப்படியும் என் கணக்குல நான் ரெண்டு ஓட்டு போட்டுட்டேனே!" என்று கூறியுள்ளார். மணிரத்தினம் படத்தில் ஒரு வசனம் வரும், அதே போல "பேசாம அந்த மாநிலத்தில பிறந்திருக்கலாம்" என்று எண்ண தோன்றுகிறது.

கடைசி தகவல். எந்திரன் சிடி 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. சன் டிவி ஏன் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் மதுரைப் பேச்சு சி.டி.க்கள் ஆயிரக்கணக்கில் விற்பனையாகி சரித்திரம் படிக்கிறதாம். ஜெயா டிவியில் தீபாவளிக்கு மீண்டும் ஒளிபரப்புவார்கள் என்று நினைக்கிறேன்.

ஜெயலலிதாவின் மதுரை கூட்டதுக்கு போனவர் வீட்டிலிருந்த இலவச டிவியையும், இலவச கேஸ் அடுப்பும் திமுகவினரால் திரும்பப் பறிக்கப்பட்டனவாம்.
ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி சாப்பிட்டவர்கள் இப்போது பயந்துக்கொண்டு இருக்கிறார்கள் ஏன் என்று சொன்னால் அசிங்கமாக இருக்கும் :-)


இப்படிக்கு,
இட்லிவடை

Read More...