தினமணியில் வந்த முக்கியமான தலையங்கம்.
ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.
தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''
படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!
ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...
வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?
நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.
மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?
ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.
சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.
இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.
படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.
தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!
"எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!
( நன்றி: தினமணி )
எந்திரன் கரூரில் ரிலீஸ் ஆகவில்லை என்ற கமெண்ட் மட்டும் வேண்டாம் :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, October 06, 2010
எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!
Posted by IdlyVadai at 10/06/2010 01:30:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
64 Comments:
நெத்தியடி.
இணையதளங்களில் துல்லியமான பிரிண்ட் வெளிவந்து ஹாட் டவுன்லோட் நடந்துகொண்டிருக்கிறது.
எங்கோ மேலூரில் சிடி விற்றவரை பிடித்தவர்கள், இணையதளத்தில் டவுன்லோட் செய்து பென்டிரைவரில் எடுத்துகொண்டு திரியும் மாணவர் உலகத்தை இந்த பைரஸி சட்டம் என்ன செய்யும்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் அடித்த பணத்தில் படம் எடுத்து தமிழனிடமே கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் திறமை சூப்பர். தமிழனுக்கு அல்வா.
பால்தாக்கரே எனது கடவுள் என்று மதவெறியை வெளிப்படுத்தி இருக்கும் மராட்டிய தமிழன்(!) பற்றி இ.வ ஏன் புகழ்ந்து எழுதவில்லை?
ஒரு வேண்டுகோள்,
ரஜினி அவர்களே, இப்படத்தோடு ஓய்வு பெற்று விடுங்கள். இதுவே உங்களுக்கும், தமிழ் ரசிகனுக்கும் நல்லது.
இது நடக்குமா? சன் பிக்சரின் அடிமையாக மாறியிருக்கும் இவர் அவர்கள் தயாரிப்பில் மற்றொரு படத்தில் நடிப்பது உறுதி.
corrct .note this poient
/***பால்தாக்கரே எனது கடவுள் என்று மதவெறியை வெளிப்படுத்தி இருக்கும் மராட்டிய தமிழன்(!) பற்றி இ.வ ஏன் புகழ்ந்து எழுதவில்லை?****/
Bull shit star!
which one prefer -- gelusil or digene --- stomach burn is dangerous to health.
dinamani enna mani adichalum enthiran mani will continue.
/****which one prefer -- gelusil or digene --- stomach burn is dangerous to health.
dinamani enna mani adichalum enthiran mani will continue.***/
Intha maathiri aatkal irukkum pothu naaadu eppadi uruppadum...ithey Dhinamani congressayo allathu DMK vaiyo mattum thitti ezhuthinaal ithay anony well said endru pottiruppaar.
Really, what a crap movie, it's not worth it's hype. Shankar and Co (it's sad that Rajini also joined the group) swindling the hard earned money of poor people using this movie. As someone suggested Rajini pls stop acting, why do you want more money and too swindle it from poor people.
Very true... giving the another face of tamil cinema...
கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது.
What is your problem? You think other films wont be successful if one film become sucessful
Good Comedy...
சன்பிக்சர்ஸ் என்றோர் ஏகாதிபத்தியன் என்று டைட்டில வராததற்கு என்ன காரணமோ?!
எத்தனை கொட்டகைகளில் வெளியானால் என்ன? யாரும் யாரையும் கட்டாய படுத்தி பார்க்க வைக்கவில்லையே. எல்லோரும் அவர்களாக தானே சென்றார்கள்.
When Rajnikanth met his 'god'
Superstar Rajnikanth, who met Bal Thackeray on his trip to Mumbai, said that the Shiv Sena chief is 'like God' to him.
The 60-year-old actor sought Thackeray's blessings and said: "He is like God to me."
His latest Tamil film Endhiran (Robot in Hindi), where he is paired opposite Aishwarya Rai Bachchan, is a box office hit.
Sources said the meeting between Rajnikanth and Bal Thackeray at the latter's home, Matoshree, lasted for nearly 40 minutes.
"The Sena chief enquired about the superstar's latest movie and wanted to know the technological details of what went into its making. He also asked Rajnikanth about the box office reports," sources said.
Sena Executive President Uddhav Thackeray presented the actor with Maharashtra Desha, his pictorial book on important landmarks in the state.
The Sena chief wanted to know Rajnikanth's 'fitness' mantra and asked how old he was. "Rajnikanth said he was 60 years old and told the Sena chief that he too looked fit and healthy. To which Thackeray said he was 85," sources said.
The superstar, who was born Shivajirao Gaekwad into a humble Maharashtrian family, said he always wanted to meet Thackeray when in Mumbai. He also expressed a desire to work in Marathi films.
"Balasaheb told the actor that he was most welcome at Matoshree," sources added.
According to sources, the conversation was mostly in English and little Marath
http://movies.rediff.com/report/2010/oct/06/when-rajnikanth-met-his-god.htm
என்னடா இட்லி வடை கொஞ்சம் நாளா எதையும் எந்த பேப்பர் இருந்து சுட்டு போடலயின் நினைத்தேன். அதுக்குள்ள போட்டுடிங்க. அவங்க பேப்பர் நலல் விக்கணும்ன அவுங்க எதையும் எழுதுவாங்க. இது எல்லாம் வய்திரிச்சல எழுதறது. இந்த படாத அவங்க எடுத்தாலும் இப்படிதான் பண்ணிபாருங்க.
//ரஜினி அவர்களே, இப்படத்தோடு ஓய்வு பெற்று விடுங்கள். இதுவே உங்களுக்கும், தமிழ் ரசிகனுக்கும் நல்லது. //
நலிவடைந்திருக்கும் தியேட்டர் முதலாளிகளும், வினியோகஸ்தர்களும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவர் ரஜினி ஒருவர் தான். பொறுக்கவில்லையா உங்களுக்கு...
அவரவர் சம்பாதித்த பணத்தில் தானே படம் பார்க்கின்றனர்... ஏதோ உங்ககிட்ட பணம் வாங்கிட்டு போயி எல்லாரும் படம் பாக்குற மாதிரி பீல் பண்றீங்க. அதுக்கு பாக்குறவங்களே எதும் நெனக்கல... நாட்டுல உள்ளவங்கள திருத்துறதுக்கு நீங்க வந்துட்டீங்களா?
"உங்களுக்காக தானே நாங்க பேசுறோம்" ங்குற ரிப்ளைய எதும் தயவு செஞ்சி போட்டிடாதீங்க. அடுத்தவங்களுக்காக யாரும் பேச தேவையில்ல..
நலிவடைந்திருக்கும் தியேட்டர் முதலாளிகளும், வினியோகஸ்தர்களும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவர் ரஜினி ஒருவர் தான்.///
CORRECT
நலிவடைந்த நிலையில் இருந்த தமிழ் சினிமாவையே நிமிர வைத்துள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் என்று கூறியுள்ளார் பிரபல விநியோகஸ்தரும் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவருமான அபிராமி ராமநாதன்.
எந்திரனை வசூலைக் குவித்து வருவதால், அதற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்ற நோக்கில் வரும் அக்டோபர் 22 -வரை தமிழகத்தில் புதிய படங்கள் வெளியாகாது என்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் 1400 திரையரங்குகளில் வெளியாகியுள்ள எந்திரன் வசூல் விநியோகஸ்தர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்பு கூறுகையில், “எதிர்பார்க்கப்பட்டதை விட பெரும் வசூலை எந்திரன் தந்துள்ளது. ரஜினியின் மேஜிக் இது என்பதைத் தவிர வேறென்ன சொல்ல… அவரைத் தவிர யாரையும் நம்பி இத்தனை கோடியை விநியோகஸ்தர்களான எங்களால் போடவும் முடியாது. மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த மூன்று தினங்களும் திருவிழாவில் இருந்தது போன்ற உணர்வு எங்களுக்கெல்லாம். எனவே அடுத்த மூன்று – நான்கு வாரங்களுக்கு வேறு புதிய படங்களை வெளியிட வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். அனைத்து தயாரிப்பாளர்களும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்…” என்றார்.
மேலும் கூறுகையில், “தீபாவளிக்கு திரைக்கு வரும் படங்கள் எந்திரனுக்குக் கிடைத்துள்ள வரவேற்பை மனதில் கொள்ள வேண்டும்…” என்றார்.
அபிராமி ராமநாதன் கூறுகையில், “இந்த ஆண்டு சினிமா வியாபாரமே படுத்துவிட்ட சூழல்தான் இருந்தது. மொத்தமே 3 படங்கள்தான் பரவாயில்லை என்று கூறும் அளவுக்கு ஓடின. ஆனால் அந்த குறைகளையெல்லாம் போக்கி, இந்தத் தொழிலை மீண்டும் நிமிர வைத்துள்ளது ரஜினியின் எந்திரன் என்றால் மிகையல்ல.
அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் புத்துணர்ச்சி பெற்றுள்ளனர். சொல்லப் போனால் அவர்களுக்கு புதிய மரியாதையே கிடைத்துள்ளது, எந்திரன் ரிலீஸுக்குப் பிறகு. இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சார்ந்து இயங்கும் திரையரங்குகள் குறைந்தது 50 நாட்களாவது எந்திரனை ஓட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இதுவரை அவர்கள் பல படங்களில் பட்ட நஷ்டத்தை சரிக்கட்டிக் கொள்ள இது உதவும். எனவே மற்ற தயாரிப்பாளர்கள் பொறுமை காக்க வேண்டும். இப்படிச் சொல்வதால் என்னை யாரும் தவறாகக் கருத வேண்டாம். நிஜத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார்.
தீபாவளிக்கு உத்தமபுத்திரன், சிக்குபுக்கு, வா குவாட்டர் கட்டிங் உள்பட 6 படங்கள் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது மூன்று படங்கள்தான் வெளியாகும் சூழல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
/****நலிவடைந்திருக்கும் தியேட்டர் முதலாளிகளும், வினியோகஸ்தர்களும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவர் ரஜினி ஒருவர் தான். பொறுக்கவில்லையா உங்களுக்கு...
***/
Ithu ungalukku therikirathu, aanaal en KARUR theater ownerskku theriavillai muthu siva????
/****நலிவடைந்திருக்கும் தியேட்டர் முதலாளிகளும், வினியோகஸ்தர்களும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவர் ரஜினி ஒருவர் தான். பொறுக்கவில்லையா உங்களுக்கு...***/
Election vanthaal sila nalivadanthavarkal santhosamaaka iruppaarkal, maasa maasam election vaippomaa muthu siva???
அன்புள்ள இட்லி வடை,
இந்தக் கட்டுரையை நேற்று தினமணியில் படித்தேன். இது தலையங்கமாக வரவில்லை. கட்டுரையாகத்தான் வந்திருந்தது. கட்டுரையாளர் பெயர் சமஸ். வரவர பத்திரிகைகளில் வருவதை 'சுட்டு'த் தருவதே இட்லி வடையின் பொழப்பு என்றாகிவிட்டது. அன்புள்ள இட்லி வடை,
இந்தக் கட்டுரையை நேற்று தினமணியில் படித்தேன். இது தலையங்கமாக வரவில்லை. கட்டுரையாகத்தான் வந்திருந்தது. கட்டுரையாளர் பெயர் சமஸ். வரவர பத்திரிகைகளில் வருவதை 'சுட்டு'த் தருவதே இட்லி வடையின் பொழப்பு என்றாகிவிட்டது. சுடுவதையாவது ஒழுங்காக சுடக்கூடாதா? தப்புத்தப்பாக குறிப்பு கொடுப்பதா? மேற்குறிப்பை மாற்றும் ஓய்.
இட்லியாரே!
தமிழ்ப் பேப்பர் விளம்பரத்திற்கு இணைப்புச் சுட்டி சேர்க்கவும்(Anchor tag). புதியவர்களுக்கு அந்த லிங்க் தெரியாமல் போகலாம்.
The bottomline of this article is about Sun pictures/family domination. I agree with this article, from that perspective.
But, does that mean that one should not watch Enthiran ? Doesn't make sense. The author is trying to mix two different things.
I infer 2 things from this article.
1. Sun Pictures/family's domination is unacceptable. 100% agreed.
2. Enthiran is a good movie and one should not miss it.
They would have thought about worst case i.e. what if the movie was not liked by masses, then only way to get the investment back is what they have done now. The article is missing one important point i.e. tax benefits. why a business with such huge profit should enjoy tax benefits?
very nice
IT IS WELL KNOWN FACT TO ALL THE PRODUCERS THAT ENTHIRAN WILL GET RELEASED ON THIS DATE AND THEY SHOULD NOT PLAN TO RELEASE THEIR FILM.
DONT YOU THINK THE PRODUCERS WHO WILL NOT THINK ON THIS FACT?
LOT OF SMALL PRODUCERS/DIRECTORS ARE PUTTING THEIR EFFORT AND MONEY AND MAKE SOME GOOD FILM. BUT PUBLIC ARE WATCHING THEIR FILM IN PIRATED DVDS. ULTIMATELY THEATERS ARE NOT GETTING BENEFITED.BY THIS ENTHIRAN ALMOST EVERY ONE IS GETTING BENEFITED IN FILM INDUSTRY AND THE mentioned SMALL PRODUCERS WELL KNOW THE RISK AHEAD AND SHOULD HAVE PLANNED WELL ON THEIR FILM RELEASES. I SEE THIS IS ALMOST WIN - WIN ONLY.
// இந்த மாதிரி ஆள்கள் இருக்கும் வரை நாடு உருப்படாது //
ஏற்கனவே ரொம்ப உருப்பட்டுரு சாக்கும் ...
போங்க போய் அவன் அவன் குடும்பம் குட்டி னு போய் பாருங்க...
தீபாவளி வருது.. போனஸ் வாங்குற வழிய பாருங்க..
வயிறு எரியாதீங்க..
கருத்து சரிதான். ஆனால் தினமனியில் ஏப்படி இந்த தலையங்கம் என்பது தான் புதிராக இருக்கிறது... தொடர்புடைய எந்திரன் கருத்துக்கு http://www.vinavu.com/2010/09/17/boycott-endhiran/ பார்க்கவும்.
Pakarathuku Allu irukarathala than they could do this, it can only happen to a Rajini Film..
Vijay padatha venna ippadi release pani parungalaen.. mudiyathu..
Summa monopoly kinopolynu solathenga... summa pethal ithu...
If there is no profit none of the Distributors would have agree none of the Theatre owners would have agreed to play it on all screens.. yennamo... Theatre owners yellathayum kathu munaila... padatha oatra mathiri build up koduthurukenga...
குமுததில் எந்திரன் படத்திற்கு சூப்பர் rating கொடுத்துள்ளார்கள் .. சூப்பர் rating கொடுதத்து இதுதான் முதல் முறை என்று நினைக்கிறன் . படம் அந்த அளவுக்கு ஒன்றும் சூப்பர் இல்லை . நன்று வேணுமானால் கொடுக்கலாம் . மொழி படத்தைவிட நன்றாகவா இருக்கு ? காசு இருந்தால் கிராபிக்ஸ் வெளிநாட்டில் போய் யாரு வேணும்னாலும் பண்ணலாம் . இந்த கிராபிக்ஸ் லம் நாங்க TERMINATOR படத்திலே பார்த்தச்சு . குமுதம் , இட்லி வடை எல்லாம் பொட்டி வாங்கிட்டு ஆஹா ஓஹோ நு எழுதறங்க -- prag
dinamani ungal circulationai athigapaduthungall appathan theriyum ungal comedy katturai ellorukkum ipadikku ungal paperai government officekku mattum kondru sellum monthly 600 rs sambalam vangum paper paiyan
குமுததில் எந்திரன் படத்திற்கு சூப்பர் rating கொடுத்துள்ளார்கள் .. சூப்பர் rating கொடுதத்து இதுதான் முதல் முறை என்று நினைக்கிறன் .////
அப்படியா குமுதம் சொன்னா சரியாதான் இருக்கும்.
Mr. Pragadhees... Anyone can do this kind of graphics if they have money. You know the amount of money spent on Terminator. Its less than 10% which is spent on Enthiran. I;ve seen lot of people criticising Enthiran. One can criticise the movie only if they watch. Did anyone compelled you to watch the movie. You guys are the one who is first to watch this movie and start crticising the movie to get own publicity. anyway you cannot stop anyone watching this movie. Before writing something try to analyse and the effort put in by an individual. Its easy to find fault with anything. I know you are not worth of even making a good photography...Start doing this once you become expert on this...
பால் தாக்கரேயை சந்தித்துவிட்டு வந்த ரஜினி, என்னுடைய பெற்றோர்கள் மராத்தியர்கள், மராத்தி படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று கூறியதாகவும், தாக்கரே எனக்கு கடவுள் மாதிரி என உணர்ச்சி வசப்பட்டதாகவும் சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் ரஜினியின் வாழ வைக்கும் தெய்வங்கள் அவரது ரசிகர்கள், இதுவே பெங்களூரு என்றால் அவர் ஒரு கன்னடர், அவரது கடவுள் ராஜ்குமார், மும்பை சென்றால் அவர் மராட்டியர், அவரது கடவுள் பால் தாக்கரே.
துரதிர்ஷ்டம் எந்திரன் வங்காள, குஜராத்தி, போஜ்புரி, மலையாள, துளு போன்ற மொழிகளில் வெளியாகவில்லை. வெளியாகியிருந்தால்... ரஜினியின் மேலும் சில கடவுள்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும்.
-Manithan.com-
i was bit supprised though the intention of the article is clear, dinamani didnt write without even analysiing the dyanamics of today's movie business..... Let us leave rajinikanth here....
Suppose a good movie like 'Madarasapattinam' release in few theatres like the olden and so called 'golden days'..it will take 50 days to earn a profit..now after 10 days, a vijay movie or any star based movie releases, madarasapattinam wil take a beating as even a child in tamil nadu knew that 'star based movies gain more attraction' than an ordinary actor movie..also at the time , piracy dvds will be released and movie will become a flop in box office....nowadays when a good movie is released in many theatres , they earn good profits in few days...Also why i stress 'STAR BASED' movie gain more attraction is nowdays only a few family people watch cinema while most of them are college goers or working people in mid 30-35s...I dont understand why people whose main job is to find a fault in movies and trying to establish themselves as 'so called intellectuals who wont understand basic theory of relativity but still appreciate movies like 'INCEPTION' ..They jus appreciate bcos they can be now termed as intellectuals in ter group..Endhiran is for common man whose entertainment is watching cinema not for only those whose entertainment is going for PVR,QUEENSLAND OR INTERNET...
correct
பழனிவேலுக்கு ....
ஐயோடா , ஷங்கர் ஒரு copycat . நிறைய ச்சீன்ஸ் michel ஜாக்சன் DVD ல சுட்டுதான் படம் எடுபார் . எந்திரன் ஒரு அனிமேஷன் குப்பை . குட்டி பசங்க வேணா பாக்கலாம் லே .. அதுக்கு சூப்பர் குடுக்கறது எல்லாம் ஓவர்லே .. அனிமேஷன்ல அவதார் படத்தை விட , 2012 படத்தை விட சூப்பர் நு ஒரு சில அர லூசுகள் சொல்றது காமெடியா இருக்கு . James cameroon கு தெரிஞ்சா தூக்கு போட்டு செத்துருவார . இதலாம் சன் டிவி குடுக்கற விளம்பரம் . இந்த படத்தை சத்தியமா காசு குடுத்து பார்க்க கூடாது . - பிரகதீஸ்வரன்
No regrets. But what awaits the film workers is the grim reality of piracy. As mentioned in the first post,in a country like India, the people who watch in laptops/TVs, are increasing. The last time I went to theater was in 2005, I watch them when they're shown in TV channels-http://goo.gl/TtGI. Almost all movies are available in internet, though for me, most of them are not worth watching, even for free. Releasing it in many theaters at a time, is a strategy to earn more before such leaks happen.
Have you done such a calculation for sun direct(dth)?
Why blame the film industry for profits?. Do u think India is like US, where gadgets like Iphone/Ipad can generate more revenue than others? The type of business depends on the type of people.
Apart from Tasmac, film industry seems to be the only booming business in TN. You know whom to blame now. What to talk about people who voted for free TVs?
People, please remember if they say "free" something, it's still paid by us - the taxpayers. Don't be fools, next time.
IS THIS THE FIRST MOVIE/TIME TO DO THIS ???
Clear NO.
So go and drink some Gelusil.
கல்லூரி நாட்களில் சில நண்பர்கள் கோல்டு பிளேக் கிங்ஸ் பாக்கெட்டினுள் துண்டு பீடியை வைத்துக் கொண்டு சீன் போடுவார்கள் – அதன் வெள்ளித்திரை வடிவம் தான் எந்திரன்.
Kaargipages.wordpress.com
Rajinikanth is now the baadshah of the box office.It’s not just multiplexes that are raking in the moolah. Vishek Chauhan, owner of Roopbani theatre in Purnia, Bihar, insists that both the classes and the masses seem to love the actor in his latest avatar. “We’ve never witnessed something like this earlier. The shows remain full even on Mondays.”-HT
எது சுய நலம்.
பின் வரும் உதாரணங்களை பாருங்கள்.
௧.தன்னுடைய புத்தகத்தை யாருக்கும் தராமல் படித்தல்.( தன்னுடைய வெளியூர் நண்பர் கொடுத்த புத்தகம் -மற்றவர்களுக்கு கடையில் கிடைக்காதது)
௨.ஆசிரியர் எல்லோரும் படியுங்கள் என்று கொடுத்த ஒரேஒரு புத்தகத்தை யாருக்கும் தராமல் தானே படித்தல்.
௩.மறுநாள் குறைந்த எண்ணிக்கையில் புத்தகம் விநியோகம் என்று ரகசிய தகவல் அறிந்து தான் மட்டும் சென்று வாங்குதல்.( மற்றவர்களிடம் சொன்னால் தனக்கு கிடைக்காமல் போகலாம் என்பதால்)
௪.வகுப்பு லீடராக இருந்து( நிர்வாகம் சொல்ல சொன்னதை வகுப்பில் யாருக்கும் சொல்லாமல் ) தான் மட்டும் புத்தகம் வாங்குவது.
அதிக பணம் செலவு செய்து இண்டஸ்ட்ரியில் உள்ள அனைவருக்கும் மகிச்சி அடையும் படி சம்பளம் கொடுத்து ,அதிக மக்களை சென்றடையும் படி விளம்பரம் செய்து நீண்ட நாட்களுக்கு பிறகு மக்களை சினிமா கொட்டகைக்கு கொண்டு வந்த சாதனை படைத்த - வெளி நாடுகளில் / வெளி மாநிலங்களில் உள்ள தமிழர்களை கெட்டுகதர் போட வைத்த பெருமை எந்திரனுக்கே சாரும்.
என்னால் புரிந்து கொண்டவரை இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்லும் இட்லி வடை அபிமானிகளுக்கு -- படத்தை எடுத்த நிறுவனத்தை பிடிக்கவில்லை என்பதை தவிர வேறு காரணம் இல்லை.
தனிநபர் கவர்ச்சி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் விளம்பர உத்திகள், அதிக பொருட்செலவிலான படங்கள் அதிகத் தரமானவையாக இருக்கும் என்ற வெகுஜன மாயையின் சாமர்த்தியமான பயன்பாடு ஆகியவற்றைக் கொண்டு ஒரு வர்த்தகத் திட்டத்தை வெற்றிகரமாக எப்படி நிறைவேற்றலாம் என்பதற்கு எந்திரன் மிகச் சிறந்த உதாரணம்.
விஞ்ஞானி என்றால் குறுந்தாடி வைத்திருக்க வேண்டும் என்ற தமிழ்ப் பட மரபை ஷங்கர் மீறவில்லை. பலே பாண்டியா சிவாஜிகணேசனையும், உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜியாரையும் சகித்துக் கொண்ட தமிழ் ரசிகப் பெருமக்களுக்கு ரஜினியைப் பொறுத்துக் கொள்வதா ஒரு பெரிய காரியம்?
அபத்தங்களுக்குக் குறைவில்லாத படம்.
இறுதிக் காட்சியில் நீதிமன்றம் சொல்வதைத்தானே கிட்டத்தட்ட நாலாவது ரீலிலேயே டேனி டென்செகோபா சொல்கிறார் (அவரது நாற்பதாண்டு கால திரைவாழ்க்கையில் இதைப்போல ஒரு சோப்ளாங்கி வில்லனாக தோன்றியிருக்க மாட்டார்). அவருக்கு ஏன் பொறாமைக்காரர், ஆயுதத் தரகர் என்றெல்லாம் பட்டங்கள்?
ரோபோ செய்யும் சாகசங்கள் சிறுபிள்ளைத்தனமாகவை என்று சொன்னால், பட்டம் பறந்த பாபாவைப் பார்க்கவில்லையா என்று கேட்க நேரிடலாம். என்ன வித்தியாசம் என்றால், பட்டத்தோடு பாபா படமும் பறந்து விட்டது; எந்திரனுக்கு அந்த கதி நேராது இருக்கலாம்.
உலகம் சுற்றும் வாலிபனில் துவங்கி, டெர்மினேட்டர், யூனிவர்சல் சோல்ஜர் ஆகிய பலவற்றின் கலவையாக பரிணாமம் கொண்டுள்ளது எந்திரன்.
ஒரே பாட்டில் தொழிலதிபராகும் விக்ரமன் படப்பாடலைக் கிண்டல் செய்தால், ஐந்து நிமிடத்தில் உணர்ச்சிகளைக் கற்றுக் கொள்ளும் ரோபோவை என்ன சொல்வது?
பிரகாசமான சில இடங்களும் இல்லாமல் இல்லை. ரோபோ குளியலறையிலிருந்து பெண்ணைத் தூக்கி வருகையில், மனிதாபமானமில்லாது அதைப் படம் பிடிக்கும் தொலைக் காட்சிகள், முதன் முறையாகப் பொய் சொல்லும்போதும், கோபிக்கும்போதும் ரோபோ முகத்தில் உணர்ச்சிகள் ஏதுமின்றி வார்த்தைகளில் மட்டும் அழுத்தம் காட்டும் ரஜினி என்று சின்னச் சின்ன சுவாரசியங்கள் மட்டுமே உண்டு.
சூப்பர் ஸ்டார் படத்தில் நாங்களும் இருக்கிறோம் என்று கருணாஸும் சந்தானமும் மார்தட்டிக் கொள்ளலாம். ரஜினியின் முந்தைய படங்களில் வடிவேலுவும் விவேக்கும் கொண்டிருந்த முக்கியத்துவத்தில் துளி கூட இல்லாத பாத்திரங்கள். இயக்குனருக்கு இதற்கு மேல் அவர்கள் மீது நம்பிக்கை பிறக்கவில்லை போலும்.
கடைசிக் காட்சியில் கண்ணாடிக்குள்ளிருந்து ரோபோவின் தலை பேசுகிறது (மகா கவி காளிதாசில் சிவாஜியின் தலை முத்துராமனிடம் பேசும் காட்சி சென்ற தலைமுறையினருக்கு நினைவிருக்கலாம்). கண்ணாடிக் கூண்டிலிருந்து சத்தம் வெளியே வரும் தமாஷை விட்டு விடலாம். அது என்ன சொல்கிறது? "நான் சிந்திக்கத் தொடங்கிவிட்டேன்"
நமக்கு எதற்கு அந்த வம்பெல்லாம்? படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் சிந்திக்கத் துவங்கினால்தானே சிரமம்?
மனிதனும் இயந்திரமும் என்ற கருத்தில் பல படங்கள் உலகெங்கும் பிரம்மாண்டமாக வந்து விட்டாலும், அதை மையக் கருத்தாகக் கொண்டிருந்த சார்லி சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ் திரைப்படத்தின் தாக்கத்தில் இவை பின்னமளவு பங்கு கூட கொண்டிருக்கவில்லை. காரணம், மிக எளிதானது. சாப்ளினின் திரைப்படத்தில் அடிநாதமாக மனித நேயம் இருந்தது. அதன் விளைவாக உயிர் இருந்தது.

Nethiaddi - http://www.thehindu.com/news/national/article821984.ece?homepage=true
Endiran hit ok. Huge Collection ok. What about Entertainment Tax collection in all theatre. in Base rate or fake rate. Give one post about this.
check DINMANI CARTOONS:
All the cartoons ATTACKING enthiran & Rajni
http://dinamani.com/edition/cartoonsubsection.aspx?SectionName=Cartoon&SectionID=221&MainSectionID=221
What's the real problem between dinamani & sunpicutre - enthiran? Anybody knows?
வில்லிவாக்கத்தில் உள்ள ஏ.ஜி.எஸ். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் இந்த திரைப்பட விழா நடக்கிறது.ஒவ்வொரு நாளும் ரஜினியின் ஹிட் படமொன்று திரையிடப்படுகிறது.
இன்று மாலை ரஜினியின் “அண்ணா மலை”. நாளை ரஜினி, விஜய சாந்தி ஜோடியாக நடித்த மன்னன் படம். நாளை மறுநாள் (26-ந்தேதி) ரஜினி-மம்முட்டி இணைந்து நடித்த தளபதி .
27-ந்தேதி குரு சிஷ்யன் படமும், 28-ந்தேதி முரட்டுக்காளை படமும் திரையிடப்படுகிறது.29-ந்தேதி முத்து படம் திரையிடப்படுகிறது.ரஜினி ரசிகர்கள் கொடி, தோரணம் கட்டி உள்ளனர். கட்-அவுட்களும் வைக்கப்பட்டு உள்ளது
இந்திரன் இன்று தான் பார்த்தோம். அறுபது ரூபாய் கட்டணத்தில். மிகவும் நன்றாக உள்ளது. ஆங்கில படங்களை பார்த்த பட்டணத்து மேல் தட்டு மக்களுக்கு( அதி மேதாவிகளுக்கு) இது வித்தியாசமாக தெரியாமல் இருக்கலாம்.இல்லாமல் வெறும் கிராபிக்ஸ் ஆகவோ ஆங்கில பட காப்பி ஆகவோ தெரியலாம். ஆனால் தமிழ் படங்களையே பார்த்து வரும் கிராமத்து மக்களாகிய எங்களுக்கு இந்த படம் மிகவும் பிரமாதம். இல்லாமல் வெறும் கிராபிக்ஸ் ஆகவோ ஆங்கில பட காப்பி ஆகவோ தெரியலாம்.
//*தமிழ் படங்களையே பார்த்து வரும் கிராமத்து மக்களாகிய எங்களுக்கு இந்த படம் மிகவும் பிரமாதம்.*//
What a funny statement...Which era you are in? Who said village people see only Tamil movies? If you really meant this comment either you are writing just to prove your point or you hae been sleeping for say 20-30 years and woke up and wrote this comment...
//If you really meant this comment either you are writing just to prove your point or you hae been sleeping for say 20-30 years and woke up and wrote this comment...// True, today from Arnold to Jackie Chan to Sylvester are available at lesser rates mouthing Madras Tamil all over the state!
checkout original endhiran and all other movie reviews...
http://mageshrajasekaran.blogspot.com/
checkout endhran original review and other tamil movie reviews on...
http://mageshrajasekaran.blogspot.com/
1948 for chandraleka they made 690 prints appa india population embuttu ippa in 2010 india population konjam yosinga pen iruntha yenna venumnalaum eludha kudathu
டாக்டர் நா.முத்துக்குமார் அவர்களின் 'எந்திரன்' கவிதை:
சனா,
கணிப்பொறியையும் காதலிக்க வைக்கும் கன்னிப்பொறி.
அவள் தொட்டால்,
எந்திரம் மனிதனாகும்
மனிதன் எந்திரமாவான்.
அவள் கூந்தல்:
கருப்பு அருவி.
நெற்றி:
நறுக்கி வைத்த நிலாத் துண்டு.
கண்கள்:
பார்ப்பவர்கள் தொலையும்
பெர்முடா முக்கோணம்.
உதடுகள்:
படுத்துறங்கும் வரிக்குதிரை
இடை:
குழந்தைகள் உட்காரும் குட்டி நாற்காலி.
அடுத்து....
நண்பர்களே !
துப்பாக்கியை தொலைத்து விட்டு
துப்பட்டாவை தொடுங்கள்.
பீரங்கியை விட்டுவிட்டு
பெண் அங்கியைத் தொடுங்கள்.
எதற்கு யுத்தங்கள் ? ஏன் இந்த ஆயுதங்கள்?
காதல் எதிரிகளையும் நேசிக்க கற்றுத்தரும்.
எல்லோரும் காதலியுங்கள் !
No War.. Only LOVE
- நா.முத்துக்குமார்
http://dkn.dinakaran.com/pdf/2010/10/13/20101013a_010101007.jpg
Hi Idlyvadai, Please find the following link
http://beta.wnyc.org/shows/soundcheck/2010/oct/07/superstar-rajinikanth/
Just check this out.. Endhiran is not egadhipathyan, he is the representative of Indian supremeacy & Tamil Legacy to the world's Egadhipathi
naan sollaratha naane kekkamaatten.
"Ilaya thalapathy Vijay"
Pinna naanga keppomaa...
Vijay rasigan..
"Naan oru thadava mudivedutthutaa atha appuram naan nenaicchaalum maattha mudiyaathu"
"Ilaya thalapathy Vijay"
"Onakku yosikkave theriyaathu, idhula mudivu vera eduppayaa, appadiye nee endha mudivu edutthu kilicchitta, mookka nondurathum, kaadha ilukkurathum, saani miidhikkirathum, matthavanga soottha thadavarathum thavira"
"Vijay Rasaikan".
"Mandhiran ennum Mandela Mandayan"
Real Super star vijay vaazhga..
dey poda panangaattu mandayaa.. moonjooru maathiri moonjiya vacchikkittu en thalaivana patthi pesa vandhittayaa?
இதனால் மக்களுக்கு என்ன பயன்? கிடைக்கும் லாபத்தை வைத்து ஏழைகளுக்கு உதவினால் சரிதான்...
Pretty interesting.
Check out my review.
http://mageshrajasekaran.blogspot.com/2010/10/enthiran-robot-review-mind-boggling-and.html
High Quality (DVD Rip) Enthiran Video Songs.
http://mageshrajasekaran.blogspot.com/2010/10/enthiran-kilimanjaro-video-songs-hdhq.html
http://mageshrajasekaran.blogspot.com/2010/10/enthiran-chitti-dance-video-songs-hdhq.html
http://mageshrajasekaran.blogspot.com/2010/10/enthiran-arima-arima-video-songs-hdhq.html
http://mageshrajasekaran.blogspot.com/2010/10/enthiran-boom-boom-video-songs-hdhq.html
http://mageshrajasekaran.blogspot.com/2010/10/enthiran-irumbile-video-songs-hdhq.html
http://mageshrajasekaran.blogspot.com/2010/10/enthiran-kadhal-anukkal-video-songs.html
Making of Enthiran Songs.
http://mageshrajasekaran.blogspot.com/2010/10/enthiran-video-songs.html
Post a Comment