ஒரு திகில் படத்தின் கடைசி கட்ட காட்சிகள் பார்ப்பது போன்றதானதொரு உணர்வு காமன்வெல்த் போட்டிகளைப் பற்றிய செய்திகளுக்கு தினமும் பஞ்சம் இல்லை. டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் சில தினங்களில் ஆரம்பிக்க போகிறது. மீடியாவிற்கு இந்த போட்டியை நடத்தும் கல்மாடியின் மேல என்ன வெறுப்போ தெரியவில்லை. முதன் முதலில் மணி சங்கர் ஐயர் மணி அடித்து துவங்கி வைத்த மீடியா பிரச்சாரம் நன்றாகவே போய்க்கொண்டு இருக்கிறது. கல்மாடி என்ன செய்துவிட்டார், காங்கிரஸ் செய்யாத ஊழலையா இவர் செய்துவிட்டார் ? இது Common man's wealth தானே ? இதற்கு எதற்கு இத்தனை ஆர்பாட்டம்.
நேற்று நேரு ஸ்டேடியத்திற்கு வெளியே நடை மேம்பாலம் இடிந்து விழுந்திருக்கிறது. இது முக்கியமான விஐபி, மற்றும் விளையாட்டு வீரர்கள் உபயோகப்படுத்த கட்டப்பட்டது என்று முன்பு பெருமையாக சொன்னார்கள். நேற்று மீடியா இதை பற்றி கேட்டதற்கு டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் இது சாதாரண மக்கள் நடந்து செல்ல கட்டப்பட்டது தான் அதனால் கவலை பட தேவையில்லை என்று பல்டி அடித்தார். இந்த அம்மா தான் டில்லிக்கு (மக்களுக்கு) முதலமைச்சர். தன் மனசுல உள்ளதை வெளிப்படையா பேசிடுவாங்க. "இது ஒரு மைனர் விஷயம்" என்று சொல்லியிருக்கார். அப்ப மேஜர் விஷயம் என்றால் என்ன ? இனிமே தான் அது நடக்கும் போல. காத்திருப்போம். ஏன் மைனர் விஷயம் என்று சொன்னார்கள் என்று யோசித்து பார்த்தேன். சும்மா சொல்லக்கூடாது படத்தை பார்த்த பிறகு நீங்களே அவர்களை பாராட்டுவீர்கள். இப்ப இந்த உடைந்த பாலட்தை சுற்றி பார்க் ஒன்றை கட்டிவிட்டால், குழந்தைகளுக்கு நல்லதாக இருக்கும். இவ்வளவு பெரிய சறுக்கு மரம் வேறு எங்கும் பார்க்க முடியாது. இது மைனர் விஷயம் தானே ? அதுவும் குழந்தைகளுக்கு 10கோடி சரக்கு மரம். எந்த நாட்டில் இருக்கும் ?தில்லிக்கு செல்லுபவர்கள் ஒன்று செய்ய வேண்டும் போகும் போது ஹெல்மெட் வாங்கிக்கொண்டு போக வேண்டும். அதுவும் பாலத்துக்கு கீழே போகும் போது நிச்சயம் போட்டுக்கொள்ள வெண்டும்.
இன்று பளு தூக்கும் ஸ்டேடிய கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இதில என்ன ஆச்சரியம். பளுவை தூக்க முடியாமல் விழுந்திருக்கு என்று பிரஸை கூப்பிட்டு கல்மாடி விளக்கம் சொல்லுவார். இதை எல்லாம் கூட பரவாயில்லை, தீவிரவாதிகள் இருக்கிறார்களா என்று இப்ப சோதனை போடறாங்க, பாலம், கூரை எல்லாம் தன்னால விழுந்துவிடுகிறது. இதற்கு பாம் வைத்து அதை தீவிரவாதிகளா நாசப்படுத்த போகிறார்கள்? வெடிகுண்டை கேவலப்படுத்த கூடாது பாருங்க. அதுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கு. கையில வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிற மாதிரி தான் இது.ஆனாலும் கல்மாடிக்கு நாட்டுப்பற்று அதிகம் என்பேன். இப்ப நியுஸிலாந்து கலந்துக்கொள்ளலாமா என்று யோசிக்கிறது. இப்படியே பல நாடுகள் யோசிக்க தொடங்கியுள்ளது. இப்ப ஒரு நாடும் கலந்து கொள்ளவில்லை என்றால் எல்லா தங்கமும் நமக்கு தான். அப்பறம் அதை கொண்டாட ரஹ்மானை கூப்பிட்டு "ஜெய் ஹோ" என்று சத்தம் போட்டு பாடலாம்.
பல நாட்டிலிருந்து வந்த பிரதிநிதிகள் சுகாதார வசதிகள் மிகவும் மோசம், எங்கு பார்த்தாலும் நாய்கள் இருக்கிறது, சில நாய்கள் படுக்கையில் உச்சா கூட போவதை கூட நாங்கள் பார்த்தோம், நீச்சல் குளத்தில் சின்ன சின்ன கொசுக்கள் என்று புகார் கூறியதை தொடர்ந்து தங்கள் தரப்பு நியாயத்தை சொல்ல பிரஸை கூப்பிட்டு "வெட்கப்படுகிற அளவுக்கு இது பெரிய விஷயம் கிடையாது" என்று சொல்லிவிட்டார்கள். "தூய்மைத் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு. எங்களை பொறுத்தவரை சுத்தமாக இருக்கிறது. ஆனால் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் பார்வைக்கு அது சுத்தமற்றதாக தெரிகிறது." இவர்கள் கை அவ்வளவு சுத்தம்.
பார்த்தார் பிரதமர் நேற்று ஒரு குழு அமைத்து கல்மாடியை விட்டு விட்டு நாய்களை துரத்த சொல்லிவிட்டார். இப்ப டெல்லியில் நாய்களே இல்லையாம். ஐ ஜாலி !
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, September 22, 2010
Common Wealth Shames
Posted by IdlyVadai at 9/22/2010 06:03:00 PM
Labels: செய்தி விமர்சனம், விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
21 Comments:
இதே போன்றதொரு பாலத்தை மீண்டும் புதிதாக அக்டோபர் மூன்றாம் தேதிக்குள் கட்டி முடித்து விடுவார்களாம். இப்பொழுதே அக்டோபர் நான்காம் தேதிக்கான தலைப்புச் செய்தி ரெடி!! ஏதோ ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் போலும்.
இந்தியாவின் மானம் மாடி ஏறி பறக்கின்றது!
// இது முக்கியமான விஐபி, மற்றும் விளையாட்டு வீரர்கள் உபயோகப்படுத்த கட்டப்பட்டது என்று முன்பு பெருமையாக சொன்னார்கள். நேற்று மீடியா இதை பற்றி கேட்டதற்கு டில்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் இது சாதாரண மக்கள் நடந்து செல்ல கட்டப்பட்டது தான் அதனால் கவலை பட தேவையில்லை என்று பல்டி அடித்தார்.//
ஓஹோ வி ஐ பி உயிரைவிட சாமானியர்கள் உயிர் பெரியதில்லை என்று நினைக்கிறார்கள் போலிருக்கு.
Common wealth shames oru nalla comedy padam. what if it had been held in tamilnadu.
indru mudal idlyvadai avargalai
crazy idlyvadai endru azhaikalam
//இன்று பளு தூக்கும் ஸ்டேடிய கூரை இடிந்து விழுந்திருக்கிறது.//
It is a false roof and not the concrete one above :)- Media and so indian public has decided that CWG is a failure and finding ways to come up with negative publicity everyday. And offcourse, politicians are there to help them. Now based on these and everyday coverage of CWG preparations by BBC, top english players are declining to come over here. That is really sad.
'Games', 'comman(public)' Health,அதெல்லாம் நம்ம நாட்டு தலைவருங்களுக்கு முக்கியமில்லை.. 'common (public) man'னோட 'Wealth'தான் முக்கியம். முடிஞ்ச வரைக்கும் சுருட்டுறது தான் அவங்களோட வேலை..
உஙளுக்குத்தெரியுமா.. தடை செய்யப்பட்ட இடத்தில் பீனா ரமணி என்ற பெண்மணி நடத்தும் ஓட்டலுக்கு கல்மாடி பார்ட்னர். அங்குதான் ஜெஸ்ஸிகா லால் என்று பெண் மாடலை ஒரு வி.ஐ.பியின் பிள்ளை சுட்டுத்தள்ளி விட்டான். அவனுக்கு விடுதலை கிடைத்தது. ஆனால் CNN எடுத்த முயற்சியால் வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
நம்ம தமிழ்நாடு ஆளுங்களை விட்டு இருந்தா எல்லாம் நல்ல படியா நடந்து முடிஞ்சிருக்கும். எதுவும் பிரச்சினை ஆகி இருந்தாலும் விளையாட்டுகள் முடிந்த பிறகு தான் தெரிஞ்சிருக்கும். வட நாட்டுக்காரங்களுக்கு நம்ம அளவுக்கு மூளை பத்தலைன்னு இதுல இருந்து தெரியுது.
ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்கு கட்டிய பாலம் இப்படி என்றல் நாட்டில் உள்ள மற்ற பாலங்களை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்.
"உங்கள் இந்தியாவின் விஷயம் தெரியுமா?" என்றான் ஜேமி. என்னோடு டென்மார்க்கில் வேலை பார்க்கும் ஒரு பிரிட்டிஷ். "இந்தியர்கள் முட்டாள்கள்!". "நம்ம ஊர்ல வின்ட்டர் ஆரம்பிச்சுடுச்சு!. போன வாரம் பிர்மின்காம்ல ஒரே மழை. நோர்விச் எப்படி?" என்றேன்.
They got Rs.10 Thousand Crores and 7 years. Congress friendly Media will not question the top leaders of the Govt. and will most likely make only the main culprit Suresh Kalmadi and maybe Shiela Dikshit the scapegoats.
Congress once again insults the Nation.
Congress Wealth Gamges !!!
//பார்த்தார் பிரதமர் நேற்று ஒரு குழு அமைத்து கல்மாடியை விட்டு விட்டு நாய்களை துரத்த சொல்லிவிட்டார். இப்ப டெல்லியில் நாய்களே இல்லையாம். ஐ ஜாலி //
மாற்றி துரதிருக்கலாம்
எனக்கும் புரியவில்லை. பொதுவாக காங்கிரஸுக்கு ஜால்ரா அடிக்கும் எல்லா (வட 'இந்தி'ய) சேனல்களும் காமன்வெல்த் போட்டிகளின் மேல் ஏன் இத்தனை வெறுப்பு என்று தெரியவில்லை. தினம் தினம் CWG பற்றி வெறும் நெகட்டிவ் சமாச்சாரம் தான். 35K கோடியில் எதுவும் இவர்களுக்கு ஒதுக்கவில்லையோ? தெரியவில்லை.
என்னை கேட்டால், 35K கோடிகள் செலவழித்து விளையாட்டை நடத்துவதை விட, அந்த பணத்தை வறுமையை ஒழிக்க பயன்படுத்தலாம் (மந்திரிகளின் வறுமையை அல்ல).
எனக்கும் புரியவில்லை. பொதுவாக காங்கிரஸுக்கு ஜால்ரா அடிக்கும் எல்லா (வட 'இந்தி'ய) சேனல்களும் காமன்வெல்த் போட்டிகளின் மேல் ஏன் இத்தனை வெறுப்பு என்று தெரியவில்லை. தினம் தினம் CWG பற்றி வெறும் நெகட்டிவ் சமாச்சாரம் தான். 35K கோடியில் எதுவும் இவர்களுக்கு ஒதுக்கவில்லையோ? தெரியவில்லை.
என்னை கேட்டால், 35K கோடிகள் செலவழித்து விளையாட்டை நடத்துவதை விட, அந்த பணத்தை வறுமையை ஒழிக்க பயன்படுத்தலாம் (மந்திரிகளின் வறுமையை அல்ல).
First place, CWG should not be funded by public money. It should have been auctioned off like IPL and private sector only should have been involved.
"இப்ப இந்த உடைந்த பாலட்தை சுற்றி பார்க் ஒன்றை கட்டிவிட்டால், குழந்தைகளுக்கு நல்லதாக இருக்கும். இவ்வளவு பெரிய சறுக்கு மரம் வேறு எங்கும் பார்க்க முடியாது. இது மைனர் விஷயம் தானே ? அதுவும் குழந்தைகளுக்கு 10கோடி சரக்கு மரம். எந்த நாட்டில் இருக்கும் ?"
இது சூப்பர் .
மீடியாக்கள் காங்கிரஸ் ஜால்ரா தட்டுவதை விட்டு இந்த விஷயத்தில் கூச்சல் போடுவது புதிர் தான்.
காங்கிரஸ் தலைமை ஏதோ காரணம் கருதி " குரைத்து தொலையுங்கள் " என்று உத்தரவு போட்டிருக்கலாம்.
காரணம் தெரியவில்லை. ஒரு plate இட்லிவடை சாப்பிட்டால் புரியுமோ என்னவோ.
Dilip
because of களமாடி.. India Failing....!!!
காமன்வெல்த் புகை படங்கள் மிக ஜோர். நம் திறமையை பறை சாற்றுகிறது! இதோ இங்கே
http://news.bbc.co.uk/sport2/hi/commonwealth_games/delhi_2010/9025907.stm
ரெடி செட் கோ..... இப்படி சொல்லும் வரையா கட்டிட பணிகள் நடக்கனும்?? செம காமெடி/ கொடுமை.
தரக்குறைவான clamp/wire தான் அப்பாலம் கீழே வர காரணமாக இருக்கும்.
யார் யாரோ என்னென்ன சொன்னாலும் எனக்கென்னவோ நம் கல்வித்தரத்தின் வீழ்ச்சி இதிலும் தெரிகிறது என்றே தோனுகிறது.சமீபத்தில் என்னுடைய முந்தைய கால உயரதிகாரியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் சொன்ன விஷயங்கள் அதை உருதிப்படுத்தின.
India deserves this Shame .
Currently I'm in melbourne. Really enjoying the comments pouring in every newspapers .
Post a Comment