பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 04, 2010

அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!


விகடனில் ரஜினிக்கு கடிதம். ( இதுவும் வாசகர் விருப்பம் )


அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!

உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.

நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! 'போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்' என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!

இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர

ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், 'உள்ளே வராதே' என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.

அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்... கட்-அவுட் வேண்டும்... டிக்கெட் காசு வேண்டும்... நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்... உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே... தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்...... உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!

நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது... நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்துவிடுவீர்கள். கடந்த முறை 'குசேலன்' படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, 'என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.' என்று சொல்லி, கோடம் பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!

உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது 'என்னாச்சு?' என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி 'எங்க பவர் புரியுதா?' என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!

'பாபா' படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க... பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை... ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! 'பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்' என்றும் 'நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்' என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்... ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!

எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!

இப்படிக்கு
ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்

( நன்றி: விகடன் )

லூசாப்பா நீ ? நீ இன்னுமா திருந்தலை? யாராவது சீக்கிரமா இந்த கொசுவ விரட்டி வெளி நாட்டில கொண்டு போய் விடுங்கப்பா!

53 Comments:

Subbu said...

Vikatan is publishing this absurd letter. Daughter's Marriage is his private affair. Will political leaders ( read M.K.) call everyone for his grandson/granddaughters marriage. For e.g., can i expect my company's CEO to call me for his son/daughter's marriage. Just enjoy the movie and go. If fan's are invited and cause traffic jam, there will be another article criticising him, also if some disaster happen also it will blame. Just ignore and move on.

ஆதி மனிதன் said...

ஹே. ஹே.. ஹே...

அதிகமா ஆச படுற பொம்பளையும்,
அளவுக்கு அதிகமா ஆசைபடுற (ரஜினி) ரசிகனும் உருப்பட்டதா சரித்தரமே இல்ல.

என்ன புரியுதா ...

R. Jagannathan said...

இது கொஞ்ஜம் ஓவர்! ரஜினி மட்டும் இந்த திருமண விழாவை நடத்தவில்லை. அவர் சம்பந்தியும் இன்வால்வ்ட். ரஜினி சினிமாவையும் குடும்பத்தையும் ரசிகன் பிரித்துப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். ரசிகர் மன்றம் நடத்த பணம் வேண்டும் என்றால் கேட்கட்டும். இல்லையா, உருப்படியாக பொழுதை போக்கட்டும். வேறு எந்த தலைவராவது தொண்டர்களை எல்லாம் அழைத்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தன் பணத்தில் தானே சூடு போட்டுக்கொண்டுவிட்டு ஏன் புலம்புகிறார்கள் இந்த ரசிகர்கள்? - ஜெ.

சம்முவம் said...

Usual JV style Desktop journalism...It really would have been a traffic nightmare had he invited his fans to chennai. Dont compare movie release to marriage. Wait...Same Vikatan will publish Endhiran Special in a couple of weeks to boost sales.
Similar letter was published in JV(anonymous letter) during Kuselan time also. JV has used Rajini a lot of times for circulation. This is yet another one.

Anonymous said...

நெத்தியடி கடிதம்.

இன்னுமா இவர இந்த ஊரு நம்புகிறது?

எந்திரன் படம் முடிந்து இமயமலையில் இவரு செட்டில் ஆகப் போவதாக செய்திகள் கசிகிறது. எந்திரனின் தோல்விதான் இவருக்கு சரியான ஆப்பு.

ரசிகர்கள் என்று யாராவது இருக்கிறார்களா என்ன? முன்பே விஜய்,அஜீத் என்று தாவிவிட்டதாகத்தான் செய்தி.

கதம்.. கதம்.

துளசி கோபால் said...

ஆஹா..... ரசிகர்களுக்கு இதெல்லாம் ரொம்பவே லேட்டாப் புரிஞ்சாலும் லேட்டஸ்ட்டாப் புரியும் என்று நம்புவோமாக!!!!

ஜெ. ராம்கி said...

நன்றி. பலபேரின் பத்து ரூபாயை மிச்சப்படுத்தியதற்காக.

Anonymous said...

நச் ! yellow comment
ரஜினியின் மகள் திருமணம் முழுவதும் ஜெயா டி.வீ ல் நேரடி ஒளிபரப்பாமே? உண்மயா?

Anonymous said...

Hi

Don't worry, there will be another invitation to meet Rajini because Enthiran is releasing soon. Nothing has changed from his end and I foresee a huge crowd gatehring. Be ready to spend more money for the movie tickets and first day celebrations.

கௌதமன் said...

ஒரு வேளை, 'மூத்த மகள் திருமணத்திற்கு வந்த ரசிகர்களை விரட்டியடித்த கேவலமான நிலைமை மீண்டும் வந்துவிட்டால் என்ன செய்வது?' என்று கவலைப்பட்டு ரஜினி, தன ரசிகர்களை வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருப்பார் என்று நினைக்கின்றேன்.

நடிகருக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் உள்ள புரிதல் தியேட்டரோடு முடிந்துவிட வேண்டும். அதை விடுத்து, ரசிகர் மன்றம், கட் அவுட்டு, பால் அபிஷேகம், நடிகர் வீட்டுத் திருமணத்திற்கு (அவர் அழைக்காமலேயே) செல்லுதல் எல்லாம் வேண்டாத விவகாரங்களில்தான் முடியும்.

கிரி said...

விகடனுக்கு பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினி!

M Arunachalam said...

Rajini has not called his fans for his daughter's wedding. So, I am NOT a Rajini Fan anymore.
....................
.....................
........................
..........................

I have become a Rajini Devotee now.

டகிள் பாட்சா said...

ஐயா!

கொசுவை வெளிநாட்டுல கொண்டு போய் விடறதா! மஞ்ச கமெண்ட்டுல உள்குத்து ஏதாச்சும் இருக்கா! இந்த கொசுக்களுக்கு பயந்துதான நாங்க வெளிநாட்டுலேயே வாழறோம்.

விகடன் ’ப்ளாக் மெய்ல்’ பத்திரிக்கையாகி பல வருஷங்களாச்சு. இப்படி மிரட்டி மிரட்டியே கல்லா கட்டறாங்க. விடுதல புலி சப்போர்ட், கருணாநிதிக்கு கடிதம் இதெல்லாம் வசூலை எதிபார்த்துதான். ரோபோ ரிலீஸுக்கு முன்ன இப்படி ஏதாவது பண்ணாதானே பயந்து போன தயாரிப்பாளரிடம் பணம் பண்ண முடியும். கூடிய சீக்கைரம் வஸூல் முடிஞ்சதும் ரோபோவை தூக்கி வச்சு எழுதுவானுங்க.. பாத்துகிட்டே இருங்க.. மக்களுக்கெல்லாம் அல்வாதான்.

Unknown said...

முடிந்தால் மு,க, விற்கும், ஜெ,ஜெ, விற்கும், கடிதம் எழுத சொல்லுங்கள் விகடனை, ஆட்டோ வரும்
cheap publicity from Vikatan எப்போ தான் திருந்துவாங்களோ

யதிராஜ சம்பத் குமார் said...

எவரையுமே அவரது தகுதிக்கு மேல் தூக்கி வைத்துப் பார்ப்பதால் விளையும் வினைதான் இது. அரசியல்வாதியாகட்டும் அல்லது நடிகனாகட்டும், எல்லாமே ஸ்ரீமான் பொதுஜனங்களது தவறு. இதில் ரஜினியைக் குறை கூற எதுவுமே இல்லை.

நிஜமாகவே இது ரசிகர்களின் குமுறலாக இருந்தால், அதையும் வைத்து கல்லா கட்ட முனையும் விகடனை விட ரஜினி எவ்வளவோ மேல்.

Unknown said...

Vikatanin cheap publicity.

Rasigargal ellorume unmayai purindhu kondanar. Vishamigal silar adikum koothu idhu.

Always rajini is correct

kppradeep said...

Dear Idly Vadai chutney saambaar, Dont you have any sense. Before you post dont you give it a thought. You have some 1000 something following your posts. Did you go and invite each and every one for any of your family function?. Cant you just think twice before you post.
Suppose Rajini had invited his fans through the media, would not all of you pounced on him saying"See this man Rajini invites VIP's directly but when it comes to his fan he just does it through the media".
Rajini is the only actor who does not or rather need not go to the media to promote his movies.
What you sow sow you reap.
Rajini will not bother about all these things as he is a saintly person.But the bad karma will surely catch up.
Junior vikatan has become jaundice vikatan long time ago.
Did the Vikatan group call all their readers for any of their family function?.

valaignan said...

This is a ugly and vulgar mischief played by Vikatan.It is sad that the magazine has stooped to this level!

கானகம் said...

மேட்டர் சூடா இருந்தா போட்டுடனும்.. அதான் விஷயம்.. அது உண்மையா, பொய்யா, நல்லதா கெட்டதா, எதைப் பத்தியும் கவலை இல்லை. எந்திரன் மட்டும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகட்டும், அப்ப இதே ஜூனியர் விகடன் அவரோட எளிமையைப் பாராட்டி 25 வாரத்தொடர் வெளியிடும். சென்னைக்கு ரசிகர்களை அலைக்கழிக்க விடாத அவருடைய பெருந்தன்மையைப் பேசும்..

அட வெண்ணெய்களா, ரசிகர்களுக்கு எவ்வளவு மரியாதையா விஷயத்த விளக்கிச் சொல்றாரு, அதை ஒரு அனானி லெட்டர் எழுதுற மாதிரி எழுதி புத்தகத்த விக்கிற ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகள் கருணாநிதியின் கழுத்துத்துண்டின் நிறத்திற்கு மாறி பல்லாண்டுகள் ஆகிவிட்டது. அவர்களிடமிருந்து இப்படி சீப்பான கடிதங்களைத்தான் எதிர்பார்க்க முடியும்.

shyam sundar.K said...

i agree wat for wat subbu said...!!

Krish said...

மட்டமான கடிதம். நெனைச்சி பாருங்க...தமிழ்நாட்டுல இருக்கற யல்ல ௧௦ சதவிகிதம் பேரு கல்யாண மண்டபத்துக்கு முன்னடி வந்து நின்ன என்ன ஆகும்?
ரசிகர்கள் மட்டும் சுயநலவாதிகள் இல்லையா? எதுக்கு தலைவா தலைவா ன்னு பின்னாலே சுத்துறாங்க? வட்ட செயலலரோ சதுர செயலாளர் பதவி கெடைக்குமான்னு தானே?

Unknown said...

// தன் பணத்தில் தானே சூடு போட்டுக்கொண்டுவிட்டு ஏன் புலம்புகிறார்கள் இந்த ரசிகர்கள்? //

இது தானே நடக்குது. எல்லாம் அவங்க தலைஎழுத்து. எந்திரன் ஓடலைன்னா அவருக்கு ரசிகர் பத்தி தெரியும்

Anonymous said...

epdiyo osiyilaye ellaam vetti velaikavatha newsum padikarom. thanks idly vadai.

ரஜினிரசிகன் said...

முன்னாள் ஜூ.வி. நிருபர் மாயவரத்தானின் பதில். அவரது பேஸ் புக் பக்கத்தில் (http://www.facebook.com/mayavarathaan) இருந்து :

ரஜினி ரசிகர்களை தனது மகள் திருமணத்துக்கு அழைக்கவில்லை என்று ஜூ.வி.க்கு ரொம்பவே வருத்தம்.

இருக்காதா பின்னே?

விகடன் குடும்ப திருமணங்களின் போது முதல் அழைப்பு பத்திரிகையை வாங்கிப் படிக்கும் வாசகர்களுக்கு தான். அவர்களை வரவேற்று முதல் பந்தியில் சாப்பாடு போட்டு விட்டு தான் மற்றவர்களையே கவனித்தார்கள்.

அதே போல வெள்ளி விழா, வைர விழாக்களின் போதும் வாசகர்கள் அனைவருக்கும் செம்ம வரவேற்பு. கூடவே விகடனின் வெற்றிக்கு காரணமான முன்னாள் மாணவப் பத்திரிகையாளர்களையும் பாக்கு, வெற்றிலை வைத்து அழைத்தார்கள் தெரியுமோ? அதனால் ஜூ.வி.க்கு ரஜினி மீது குற்றம் சொல்ல செம்ம ‘உரிமை’ இருக்கிறது! (ஹிஹி

Shankar said...

ஜூவியின் வியாபாரத் தந்திரத்திற்கு இன்னுமொரு உதாரணம். இங்கு கருத்திட்டிருக்கும் அனைவரும் கொஞ்சம் ப்ராக்டிக்கலாக யோசிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். திரைப்படம் 100 முதல் 200 திரையரங்குகளில் வெளியிடப் படுகிறது. அது போல் திருமணம் என்ன 100 மண்டபங்களிலா செய்ய முடியும். அட...அப்படியே ஊரைக் கூட்டி திருமணம் செய்தால் என்ன சொல்வீர்கள்? இந்தா பார்ரா....வளர்ப்பு மகன் திருமணம் எவ்வளவோ பரவாயில்லை...இந்த ஆளு பொண்ணு கல்யாணத்தால எவ்வளவு சிரமம்...ட்ராஃபிக் நெரிசல் அது இது என்று இன்னும் எத்தனையோ சொல்வீர்கள். அது மட்டுமா...கூட்டத்தை சாக்காக வைத்து விளையாட்டுகள் நடத்த சமூக விரோதக் கும்பல் நடமாடுமே... ரஜினி சொன்னது தான் சரி. ரஜினியின் உண்மையான ரசிகனுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. உண்மையான ரசிகனுக்கு இது விகடனின் விளம்பர யுக்தி என்று நன்றாகவே தெரியும். விகடனிடம் நான் கேட்கிறேன்....இது போன்றதொரு அநாமதேயக் கடிதத்தை உம்மால் ஒரு அரசியல்வாதிக்கு எழுதும் முதுகெலும்பு இருக்கிறதா?

Anonymous said...

http://pithatralkal.blogspot.com/2010/09/blog-post.html

Anonymous said...

http://pithatralkal.blogspot.com/2010/09/blog-post.html

Anonymous said...

நக்கீரனுக்கு நேரில் அழைப்பு வைத்தால் ஜூ.வி.க்கு பற்றிக் கொண்டு வராமல் என்ன செய்யும்?

Anonymous said...

//
நக்கீரனுக்கு நேரில் அழைப்பு வைத்தால் ஜூ.வி.க்கு பற்றிக் கொண்டு வராமல் என்ன செய்யும்?
//


அருமையான அழகான உண்மையான பதில் அனானி.

Ramakrishna said...

I've not read the article...please do not adopt the Cheap style of vikatan or give publicity to that filthy 3rd grade f**** off magazine..

Ramakrishna

Anonymous said...

Rajini is probably stingy, (what happened to 1 cr for Ganaga kaveri thittam)?
If Rajini wants to just act and dont care about inviting their fans, that's totally fine. But poor fans don't get that.. Rajini is not dismandling the fan club OR not using the fan club for movie opening.

Just stupid fans, who are part of fan clubs and make the movie a big hit by repeat viewings...

Prad said...

Ridiculous !!!!!

There are millions of ppl who are his fans and How do you expect Thalaivar to invite fans for the function ?

Say if he do invite some 50 members from various fan club for the function...Will ppl would not pounce on him saying that why others have not been considered ??

Then there would be questions raised as

a) Why the partiality ?
b) What other's have done to get the invite ?

This would all lead to unnecessary tensions.....Let us all be glad that NDTV-Hindu has done a wonderful job in telecasting the function which each and every fan would have watched from his home and conveyed the message & blessings !!!

Let us all stop giving importance to this kind of articles from frustrated individuals and plan for Enthiran celebrations !!!

SathyaRam said...

Asking the fans to be invited is stupid. It can only happen in Tamilnadu and the proud Dravidian culture . On the same note, if the fans understand this reality and change it is good.


One thing Rajini should not have done is associate with people who attacked his fans when they stood for him and by doing so he has shown he neither has a balanced view of anything nor a clear objective on what he wants to do. May be at this age in his life he thinks he has to be in good books of all. But who he calls for house's funciton is his thing and is stupid for Vikatan to look for cheap publicity.

Only Devar Magan's dialogue comes to mind ' Poi Pulla kuttingala Padika vainga da'

Anonymous said...

1)Rajini has millinos of fans all over de world.Unlike movies been released in 1000 s of theaters marriage cant be done.
2)Rajini supported MK & Moopanar whole heartedly only for the goodness of TN.When Baba was released, in the clash between Rajini fans & Ramadass, Rajini was furiuos just b'cause his fans got affected.He expected moral , legal steps to be taken against Ramadass by MK since he was obviously illegal ,just affecting his fans &
public for cheap advertisement.When MK made no move against Ramadoss, Rajini clearly understood tat everything is just politics & its absolutely 'NO FAIR GAME' -if its MK or Jayalalitha or Ramadoss -all r same.He took a strand agnst Ramadoss only to teach him a lesson as he has hit his fans thou it failed.(in last election PMK had a clean sweep-ha ha deivam nindru kollum).
3)Rajini was getting into media on occassions only wen his fans were affected truely.tats de reality.
4)Even for small critisisms we see actors reacting much.Rajini has never reacted even wen lot of negatives thrown agnst him.
5)just imagine wat wld happen if he invites his fans for any troubles.he only attempted to do legally agnst ramadoss even in worse situations.
6)When Rajini met his fans after Kuselan release ,the film was clearly a flop at tat time itslef.There was even a Q&A abt the flopp of de movie in the meet with fans itself.It was not a promotional actvty like VK has said. Imagine if Rajini really wants to promote his movie & gives a small interview abt the movie like other stars (evn kamal does) wat wolud happen..
7)The "No Enemity" strand with all political leaders taken up by Rajini wld only facilitate Rajini fans-political party relationships.Only those who wanted to gain smething wld always want or create enemies to keep de environment live to gain out smething. Like see all political leaders ..they wld always keep crticising or scolding some or other politiacl leaders non-stop .The gud suggestions wld alwys be much lesser than de crticism.They want to keep the env live only den dey can survive.Rajini doesnt needs anyting like tat.he is clean.
8)VVIPS & ordinary people in equal strength & treated alike cld be seen in this marriage.tis is an unique occurance - dis comment was given by a journalist who attnded the marrge function.Rajini has invited all his old frnds inviting dem in person.
9)In prev issues of VK ,in Kazugu page which is an exclusive political report , pics of rajini inviting de political leaders were published contsly adorning Rajini's simplicity.
10)Kazugu page is supposed to be the juice & highlight of Junior VK & dey very often publish Rajini's pics and two lines of news abt Rajini.This dey r doing it for a very long time..In exclusive political report why dey publish Rajini pics & news whch r no way connected in politics ? Did rajini or his fans ask for it ? PROMOTIONAL ACTIVITY. Rajini is always a very easy ,very safe and very gauranteed Icon to people of all groups. HATS OFF RAJINI!!!

R.Gopi said...

ரஜினி அழைக்கவில்லை (அனானி கடிதம்) இந்த பதிப்பு சூப்பர் சேல்ஸ்..

முந்தைய இதழ்கள் - எந்திரன் ஸ்பெஷல் வித் அரிய காணக்கிடைக்காத புகைப்படங்கள் - இதிலும் கல்லா கட்டு..

பழிக்கவும் ரஜினி (இதழ் விற்பனை கல்லா கட்டுதே..)

பிழைக்கவும் ரஜினி (எந்திரன் ஸ்பெஷல் அடுத்ததாக வரும், பாருங்க... ஏன்னா, அதுலயும் கல்லா கட்டலாம் என்று அவர்களுக்கு தெரியும்...)

குமுதம், விகடன் ஆகிய பத்திரிக்கைகள் தங்கள் தரத்தை இழந்து பல வருடங்களாகிறது....

SAN said...

Hi IV,
This is a cheap publicity by JV.
This is a private affair of Rajini.
As if JV is calling its readers to their family function?
If JV is truly a magazine of worth it should have published the attack by DMK goons on checkers hotel.
It will not do so as was done by the ruling party.JV will never rub on the wrong side of political parties.
It is better to ignore this trash article.

தமிழன் said...

அனானி, போற போக்குல, கமல் பேட்டி கொடுத்து தான் படாத ஒட்டுரார்னு காமெடி பண்ணிட்டீங்க. ரஜினி எவ்ளோ பேட்டி கொடுத்திருந்தாலும் குசேலன் ஒட்டியிருக்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

விகடன் ரஜினியை வைத்து பிழைப்பு நடத்துகிறது என்றே வச்சிக்குவோம். இப்போ பிரச்னை என்னன்னா, ரஜினி தன ரசிகர்களை அழைக்க முடியாத சூழ்நிலைன்னு நேரடியா ரசிகர்மன்றங்களுக்கே ஒரு அறிக்கை விட்டிருக்கலாமே?!? விஷயம் ரகசியமா இருந்திருக்கும். அதை விட்டுபோட்டு பத்திரிகை அறிக்கையில் என் சொல்லணும்? ரஜினியின் மெசேஜ் ரசிகனுக்கு ரீச் ஆகணும்னா ஊடகங்கள் உதவியா தேவை? அல்லது ரஜினிக்கும் ரசிகனுக்கும் அவ்வளவு இடைவெளியா?!?

ரசிகனை கூப்பிடமுடியலேன்னு வருத்தம் ஆனா சம்பந்தமே இல்லாம திருமா அன்புமணி இவிங்களுக்கேல்லாம் நேரில் அழைப்பு. ரஜினிக்கு யார் முக்கியம்? ரசிகர்களா அல்லது இந்த அரசியல் கோமாளிகளா?? இந்திரன் படத்துக்கு பிரச்னை வராம இருக்க தான் அழைதார்ந்னு இன்னொரு காமெடி பண்ணாதீங்க. பாபா காலம் வேறு. ஆளுங்கட்சியே தாரிக்கும் இந்திரன் வேறு. அப்படியே போட்டி தூக்கனும்னு நெனச்ச எத்தினி போட்டி தூக்குவாங்க?!? தமிழ்நாடு முழுக்க ஒரு நூறு தியேட்டர்கள் தவிர்த்து எல்லாத்திலும் இந்திரன் தான் ஓடப்போகுது. அதுவும் இல்லாம இப்போ கியூப் தொழில்நுட்பதுல போட்டியே கிடையாது. ஆபரேட்டர் ரூம்ல ஒரு சிடி இருக்கும் அவ்ளோதான்.

ரஜினியே முன்வந்து மூடும் ஒரு குழப்பத்தையும், ரசிகனுக்கு வருத்தத்தையும் உண்டு பண்ணியிருக்காரு. இதை,ரஜினி குசு விட்டா கூட நியுஸ் ன்னு சொல்லாதீங்க. சமீப காலத்துல ரஜினி தொடர்பான வேறு எந்த செய்தியும் இந்தளவுக்கு பரபரக்கல. (இதுவே ரொம்ப பெரிய அளவு செய்தியாகல, ரஜினி அலை ஓயகிறதா?!?)

Anonymous said...

Almost entire TN are his fans.
It's impossible to manage even if he plans a separate reception for fans on a later date.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Pl.visit
http://tvrk.blogspot.com/2010/09/blog-post_03.html

Anonymous said...

விகடனுக்கு விவஸ்தையே கிடையாது. வாசகர்களே முக்கியம் என்று எழுதும் ஸ்ரீநிவாசன் எல்லா வாசகர்களையும் அவர்கள் வீட்டு வைபவங்களுக்கு கூப்பிட்டாரா? கூப்பிடுவாரா? அல்லது எந்த வாசகனாவது அதை எதிர்பார்ப்பானா?

‘ஆறு கோடி தமிழர்களும் கேட்கிறார்கள்’ என்று எந்த அரசியல் வியாதி பேசினாலும், ‘நான் எப்போ கேட்டேன்’ என்று என்னையும் சேர்த்து சிலராவது நினைப்பார்கள். அது போல இந்த விகடன் எல்லா ரசிகர்கள் பேரையும் கேவலப்படுத்துவது போல எதையாவது எழுத வேண்டியது சுய லாபம் கருதியே தான்..

ஒரு தடவை, ஓட்டல் விலை கட்டுபாடு கொண்டு வந்த போது, ‘தரத்தை குறைக்காமல்... அளவைக்குறைக்காமல் ...’ என்றெல்லாம் விகடன் நீட்டி முழக்கியதை கண்டு நான் விகடனுக்கு எழுதினேன் – தொலை பேசியிலும் சொன்னேன்: “நானும் ஓட்டலில் காசு கொடுத்து சாப்பிடுபவன் தான்... அதனால் என் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டாம். விகடன் எதற்காக விலையை உயத்தியது மட்டும் அல்லாமல், ஏற்கனவே வேளியிடப்பட்டதை எல்லாம் பொக்கிஷம் என்று திரும்பவும் போட்டு புதிய செலவையும் மிச்சப்படுத்துகிறீர்கள்? மிதமிஞ்சிய லாபம் அள்ளத்தானே? ஓட்டல்காரணை விட நீங்கள் எந்த விதத்தில் உசத்தி?” என்று கேட்டேன்.

நான் மேற்கண்ட நிகழ்ச்சிக்குப்பின் விகடனை வாங்குவதில்லை. இப்போது இத்தனை பேர் விகடனின் சுயரூபத்தை புரிந்து வைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. உரை ஏமாற்றும் பெரிய வியாபார பத்திகை தான் இந்த விகடன்.

ரோமிங் ராமன் said...

ரசிகர்கள் யோசிக்க வேண்டும்!! இது ரஜனி தனியாக முடிவெடுக்க தான் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயமா என்ன?? மகள்(கள்), மனைவி,மாப்பிள்ளை(கள்)சம்பந்தி மற்றும் அவர் குடும்பத்தினர் எவ்வளவு பேரிடம் பர்மிஷன் வாங்க வேண்டும்?? இது கூட ரசிகர்களுக்குப் புரியாதா என்ன??

Anonymous said...

விகடனின் இந்த அற்பக் கடிதத்தைக் கண்டிப்பவர்கள் எல்லாம் இனி விகடனைப் புறக்கணிக்க வேண்டும் செய்வார்களா?

ரஜினியின் இந்த அற்பத்தனத்தைக் கண்டிப்பவர்கள் எல்லாம் இனிமேல் ரஜினியையும் அவர் படங்களையும் புறக்கணிக்க வேண்டும் செய்வார்களா?

எதுவுமே செய்ய மாட்டீர்கள் ஆபாசமான மஞ்சள் பத்திரிகையான விகடனையும் வாங்குவீர்கள் மட்டமான ரஜினி படத்தையும் காசு கொடுத்துப் பார்ப்பீர்கள் அப்புறம் என்ன இங்க வேலை வெட்டி இல்லாத ஒரு வெட்டி விவாதம்?

நான் இரண்டையுமே அருவருப்பான விஷயங்களாகக் கருதி ஒதுக்குகிறேன் அப்படிச் செய்பவர்களுக்கு மட்டுமே இவர்கள் இருவரையும் கண்டிக்கும் தகுதி உண்டு

ரஜினிகாந்த் நினைத்திருந்தால் தன் ரசிகர்களை சென்னையில் ஒரு மண்டபத்திற்கு வரச் சொல்லி அவர்களுடன் ஒரு நாள் கழித்து அவர்களுக்கு திருமண விருந்தளித்து நிச்சயமாக அவர்களை மகிழ்வித்திருக்கலாம். தன் சினிமா ஓட மட்டும் அவர்களை அழைக்கும் ரஜினிகாந்துக்கு இதில் என்ன தயக்கம்? மேலும் சென்னையில் உள்ள வார்டு கவுன்சிலர் வரை ஒருவர் விடாமல் வீட்டுக்குப் போய் திருமண அழைப்பிதழ் வைக்க மட்டும் தெரிகிறது? ஏன்? தமிழ் நாட்டில் ஜீவிக்க ரவுடிகளின் தயவு வேண்டும் ஆகவே கருணாநிதி, ஜெ முதல் லெட்டர் பேடு கட்சிகள் வரை போய் அவர்களுக்கு அழைப்பு விடுத்து ஐஸ் வைத்துக் கொண்டார். இதே வேலையை கமலஹாசன் வேறு மாதிரி செய்வார் எல்லாமே பிழைப்புக்குத்தான். ஆனால் இவர்கள் பிழைப்புக்கு பின்னால் போகும் கிறுக்கர்களான ரசிகர்கள் என்னும் வெட்டித் தடியன்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். சொந்த அப்பன் ஆத்தாவுக்குச் சோறு போட வழியில்லாத சொறியன்கள் எல்லாம் நடிகர்கள் பின்னால் போகிறார்கள். அவர்கள் கெட்ட கேட்டுக்கு அழைப்பும் விருந்தும் மட்டும்தான் குறைச்சல்? முதலில் இந்த நடிகன் பின்னால் அரசியல் தலைவர்கள் பின்னால் போகும் கலாச்சாரம் ஒழிய வேண்டும்.

நாட்டில் நிலவும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகளில் இதெவெல்லாம் ஒரு பிரச்சினை என்று இத்தனை பேர்கள் வந்து வெட்கம் இல்லாமல் பதிலும் போட்டு விட்டுப் போகிறார்கள்

Dr Rama Krishnan said...

What a bunch of pathetic losers are these fan mob of Rajni.They deserve to be rubbished by Rajni for taking him sedriously and hero worshiping him.If you had voted for someone because Rajini said so, then you need to see a shrink pretty fast.What happened to your brain and your own thinking?Rajni is an actor and nothing more. If you had taken him for something other than he being just an actor, then the problem lies squarely with you. Get over your weird mentality of hero worshiping actors

Anonymous said...

ரஜினி செய்தது‍ நூற்றுக்கு‍ நூறு‍ அல்ல இருநூறு‍ மடங்கு‍ சரி.
ஜெ. பாபு
கோவை 20

Anonymous said...

Even Vijay invited his fans for his marriage.

PMK didn't lose because of Rajini.

Rajini feared and invited Anbumani for the marriage. What a veerum?
Rajini is probably too afraid to fight outside the movies.. Who ever is against him, he helps them to keep them silent( Kaeta, perunthanmi nu oru sappa kattu)

Rajini lost any thing he had when he kept going silent after the movies.

It's not Rajini's fault, that he didn't invite his fans. Even if he had done that, only those idiot veriyans will go to function. Even that veriyan is not going for Rajini's food. They would eventually had to pay more to get there.

"There are millions of ppl who are his fans and How do you expect Thalaivar to invite fans for the function ?"
Rajini koopitutaalum, millions wont go. Only those diehard rajini veriyans probably will go.

Fans should realize that Rajini is using them when needed.
-During Kaveri issue.
-During Ramadoss issue, when Ramadoss didnt allow Baba to be released easily in their area.
So Rajini gave ultimatum to his fans to work against PMK. (ultimately PMK won).

Rajini is correct and idiot's(his fans) need to learn about Rajini.

பெரிய இவன் said...

தலைவான்னு அவனா உங்களையெல்லாம் கூப்பிட சொன்னான். போங்கடா உங்க புள்ளைகளையாவது படிக்க வைங்க.

Anonymous said...

Vandhari Vazhavaikum Thamilagam, engiruntho vandha Rajini enna sonnalum kettkum rasigan Nalla padattum. Rasigan kasu mattum veenum padam oda avan thayavu venum anna vera ethukkum vendam.
Rasigana eppadi mathikannumnu MGR kitaairunthu katthukanga, Aiyram Aiyram raisgargala alaikamudiyuma Yenn MGR dhinam dhinam pala nuru rasigarkalukku sappdu pottu urukku annupivaikala evarkal ellam thamilani surandi thingum kalugukal oru padam Rajinikku odama pogattum appuram eppadi rasigarga kupidurarnnu parpom, atkulla namma rasigannuku ethu ellam marandhu pogum... Avanukku buthi irundha eppadi pattavanga ellam thalai thukuranga...

RAJ CHENNAI said...

DEAR FRIENDS,
THIS IS A TOTAL NONSENSE LETTER.
Cinema is different. Family function is different.
Politics is different.

This marriage is a private function of a person with name rajinikanth. he is not required to invite all his fans.

RAJINI FAN GOES TO RAJINI MOVIE FOR THE FAN'S HAPPINESS.

RAJINI IS ARRANGING HIS DAUGHTERS MARRIAGE FOR HIS HAPPINESS AND HIS FAMILY HAPPINESS.

SO DONT MIX THESE TWO THINGS.
RAJINI HAS TUNED HIMSELF TO A GREAT CHARACTER WITH PATIENCE, MATURITY AND GOOD DEEDS.

SO IF HE ENTERS POLITICS IT IS OUR LUCK TO GET ALL GOOD THINGS FOR PEOPLE. BUT IT IS UP TO HIM FOR THE DECISION. NOBODY CAN DENY NO BODY CAN COMPELL.

MARK MY WORDS....IF HE ENTERS POLITICS....HE WILL HAVE HUGE SUCCESS IN ELECTIONS....AND ALSO GOOD SUPPORTING GOOD NATURED MINISTERS UNDER HIM......

LET US HOPE FOR GOOD.

RAJ.

Anonymous said...

செய்தி : ரஜினி ரசிகர்களை அழைத்தார்,
விமர்சனம் :போனமுறை அழைக்கவில்லை, இந்த முறை எந்திரன் வரப்போகுது அதனால் ரசிகர்கள் மேல் பாசத்தை பொழிகிறார்.

செய்தி : ரஜினி ரசிகர்களை அழைக்கவில்லை
விமர்சனம் : பால் அபிஷேகம் பண்ணத்தான் தேவை, இதற்க்கு இல்லை

செய்தி : ரஜினி ரசிகர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தார்
விமர்சனம் : தன் பண்ணை வீட்டுக்கு காவல் ஏற்பாடு செய்கிறார்

செய்தி : ரஜினி இமயமலைக்குப் போகிறார்.
விமர்சனம் : தன் வேலை முடிந்தது, இனிமேல் தமிழ் நாடு தேவையில்லை

செய்தி : ரஜினி காவிரியைப் பற்றி பேசினார்.
விமர்சனம் : நடிகன் எப்படி இதை பற்றி பேசலம்.


Bala
Texas

Anonymous said...

"RAJINI FAN GOES TO RAJINI MOVIE FOR THE FAN'S HAPPINESS."

Rajini uses the same fans for giving threats to political parties.

Rajini keeps mum, when the same idiot fan spends money on his poster and runs fan club with his blessings.

R.Gopi said...

//நாட்டில் நிலவும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகளில் இதெவெல்லாம் ஒரு பிரச்சினை என்று இத்தனை பேர்கள் வந்து வெட்கம் இல்லாமல் பதிலும் போட்டு விட்டுப் போகிறார்கள்//

இதை சொன்ன அனானி, இந்த வெட்கம் கெட்டவர்கள் லிஸ்ட்ல இருக்காரா இல்லையா??

KrishnaDeverayar said...

Being Rajni in Tamilnadu is the most difficult job

Read this link.

ரஜினியும் முதல்வன் பட வசனமும்

http://pithatralkal.blogspot.com/2010/09/blog-post.html

Karthik said...

இந்த ரசிகர் தன கல்யாணத்துக்கு ரஜினி ய கூப்பிடறா ??