பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 15, 2010

எந்திரன் விமர்சனம் (டிரைலர்)

தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக, "சில மாதங்களே ஆன" என்ற பாடாவதியான திரைப்படத்தை விளம்பரங்களுக்கு இடையில் நல்ல நாட்களில் போடுவார்கள். எந்திரன் படத்தின் சில காட்சிகளை டிரைலர் என்று சன் டிவி ஞாயிறு அன்று காண்பித்தார்கள், சினிமா வரலாற்றில் முதன்முறையாக. (இனி, சன் குழுமத்தின் வரப்போகும் எல்லாப் படங்களுக்கும் இந்தக் கொடுமையை வேறு சகித்துக்கொள்ள வேண்டுமா சுரேஷ் கிருஷ்ணன் போனற சக தமிழர்கள் சலித்துக்கொண்டாலும் சகித்துக்கொள்ளவும் ஆரம்பித்துவிடுவார்கள்; எனவே கவலை வேண்டாம்.)

எல்லா ஊரிலும் செட்டப் செய்த பால் அபிஷேக ரசிகர்கள், கொடுத்த காசுக்கு நன்றாகவே அபிஷேகம் செய்து ஆடிப் பாடினார்கள். ரஜினி ராம்கி எந்த ஃபிரேமிலும் வரவைல்லை ஏனோ ? விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு பதில் ரஜினி பட போஸ்டர்கள் விடாமல் பால்குடித்துக்கொண்டிருந்தன.

விழாவுக்கு சிறப்புப் பார்வையாளர்கள் (அதாவது பார்வையாளர்களுக்கு சிறப்பு விருந்தினர்) புதுப் பொண்ணும் மாப்பிள்ளையும். அடிக்கடி அவர்களையே காண்பித்துக்கொண்டு இருந்தார்கள்.

சென்ற விழாவிலேயே சுஜாதா என்ற பெயரை போகிறபோக்கில் ஷங்கர் குறிப்பிட்டுவிட்டுப் போய்விட்டார் என்று சுஜாதாவின் ரசிகர்கூட்டம் ஆதங்கமும் ஆத்திரமும் அடைந்ததாலோ என்னவோ இந்த முறை ஷங்கர் 'ரங்குஸ்கி' பற்றிச் சொல்லிவிட்டு ரங்கராஜனையும் புகழ்ந்தார்.

விழாவில் விவேக் 'பற்றி, பற்றி' என்று பலரைப் பற்றினார். வைரமுத்து வெள்ளை உடையில் போப் ஆண்டவர் போல் வந்து போப் பற்றி ஜோக் சொன்னார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அநேகமாக ஷங்கரின் அடுத்த படத்துக்கு இவர் காமெடி டிராக் செய்தாலும் செய்வார். விவேக் சில காமெடி காட்சிகளில் வைரமுத்துவை போல இமிடேட் செய்வார். இந்த முறை போப் ஜோக் சொல்லி விவேக்கையும் மிஞ்சிவிட்டார்.

இசை சிடி வெளியீட்டைப் போலவே இங்கும் கருணாஸ், லாரன்ஸ் ராகவேந்திரா என்று வரிசையாக பலர் செஞ்சோற்றுக் கடன் கழித்தார்கள். ரஜினி பட விழாவுக்கு கருணாஸ் தான் கிடைத்தாரா ? ஏன் பெண்கள் யாரும் வரவில்லை ? அதே போல கலந்துக்கொண்டு பேசியவர்கள் எல்லோரும் ஆண்கள். ரொம்ப வெறுப்பேத்திவிட்டார்கள்.

அடுத்த படத்தில் தங்களுக்கும் சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் ஷங்கரை அவர் செட் போல வானளாவப் புகழ்ந்தார்கள்; நிதி கிடைக்கும் என்ற நப்பாசையில் கலாநிதி மாறனைப் புகழ்ந்தார்கள். இசை விழா இல்லை என்பதாலோ, ஏ.ஆர்.ரஹ்மானே இல்லை என்பதாலோ அவரைக் குறித்தும் ஐஸ்வர்யா ராய் குறித்தும் சலம்பல் குறைவுதான். வைரமுத்துவே ஐஸை பற்றி சொல்லவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எல்லோரும், சொல்லிக்கொடுத்த மாதிரியே, "டிரைலரே இப்படி என்றால் படம் எப்படி இருக்கும்?" என்று பேசிவிட்டுப் போனார்கள்.

டிரைலரே இப்படி என்றால் படம் எப்படி இருக்கும் என்று நாமும் கொஞ்சம் யோசித்ததின் விளைவு இந்த விமர்சனம். படம் வந்த பிறகு இந்த விமர்சனத்தை நீங்கள் சரிபார்க்கலாம்.

விஞ்ஞானி என்றால் ஃபிரென்ச் தாடி வைத்துக்கொள்ள வேண்டும்; அதனால் ரஜினியும் வைத்துக்கொள்கிறார். (ப்ரென்ச் தாடியில் கிழத்தனம் கொஞ்சம் மறைந்து/குறைத்துத் தெரியும் என்பது கூடுதல் நன்மை.) அதுலும் கொஞ்சம் வித்தியாசமான ஃபிரன்ச் தாடி. ஸ்டைல் வேண்டாமா ? மேக்கப் அருமை!.

விஞ்ஞானியாக வரும் ரஜினி (வசீகரன்) 10 வருட உழைப்பில் "சிட்டி" என்ற எந்திர மனிதனை உருவாக்குகிறார். பரதம் முதல் குங்குஃபூ வரை எல்லாம் அதற்குத் தெரியும். ஆனால் அதற்கு மனிதனின் பொய், வஞ்சகம், பொறாமை, துரோகம், காதல் எதுவும் தெரியாது. இதை நான் சொல்லவில்லை, விஞ்ஞானி ரஜினியே சொல்லுகிறார்.

உருவாக்கிய எந்திரனை இப்போது ஊரில் உலாவவிடுகிறார் ரஜினி. அங்கே சில காமெடிக் காட்சிகள் நடக்கின்றன. உதாரணம் "வயசு என்ன?" என்ற கேள்விக்கு, "ஒரு நாள்" என்ற பதிலும், அதே போல "நக்கலா?" என்ற கேள்விக்கு "நிக்கல்! எல்லா போல்ட்டும் நிக்கலில் செய்தது" என்ற வசனத்துக்கும் நிற்காத கைத்தட்டல்.

ஐஸ்வர்யா ராய் பல இடங்களில் (தன்)வயதுக்கு ஏற்றாற்போல் சகிக்க முடியாமலும், சில இடங்களில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மாதிரி கொஞ்சம் அழகாகவும் இருக்கிறார்.

தமிழ் படத்தில் மின்சார ரயில் வந்தால் அங்கே ரவுடிகள் வர வேண்டும். அங்கே அப்படி ரவுடிகள் வரும் போது ஓமக்குச்சி நரசிம்மனுக்கே கோபம் வரும்; எந்திரன் ரஜினிக்கு வராமல் இருக்குமா? வருகிறது. ரயிலின் பக்கவாட்டில் நடந்து வந்து எல்லோரையும் அடிக்கிறார். ரஜினி எதைச் செய்தாலுமே தமிழக மக்கள் நம்பத் தயாராகிவிட்ட நிலையில் எந்திரன் ரஜினி செய்தால் நம்பாமல் இருப்பார்களா? கைத்தட்டிக் கொண்டாடுகிறார்கள். கிராபிக்ஸ் கலக்கல். அதுவும் ரயில் பக்கம் இருக்கும் மின்சாரக் கம்பங்களில் தாவித் தாவி வரும் காட்சிகள் அயல்நாட்டில் நடக்கும் காமென் வெல்த் போட்டி பார்த்த எஃபெக்ட்!

முதன்முதலில் எந்திரன் கற்றுக்கொண்ட மனித அறிவு(?!) இது. இதற்குப் பிறகு விஞ்ஞானி தன் வேலையில் மூழ்கிவிட சாராவுக்குக் (ஐஸ்வர்யா ராய்) கோபம் வருகிறது. எந்திரன் தன் வேலையை ஆரம்பிக்கிறது. ஐஸ்வர்யாவைப் பார்த்து பாவப்படுகிறது. ஐஸ்-உடன் கொஞ்சிக் கொஞ்சி பேசுகிறது, டூயட் பாடுகிறது. சாராவுக்கு எந்திரன் ரஜினி மேல் காதல் வருகிறது. எந்திரனுக்கும் காதல் வருகிறது. ஒரு கட்டத்தில் எந்திரன் விஞ்ஞானி ரஜினியிடம் எனக்கு சாரா வேண்டும் என்று அடம்பிடிக்கிறது. "உன்னை உருவாகினவன் நான். இதற்குப் பேர்தான் தூரோகம்!" என்று ரஜினி கோபப்படுகிறார். "எனக்கு சாராவை விட்டுக்கொடு. அதற்குப் பேர்தான் தியாகம்" என்று பதிலுக்கு பன்ச் பேசுகிறது எந்திரன்.

இந்தக் குழப்பத்தில் வில்லன் என்று எக்ஸ்ட்ராவாக யாராவது வந்து மேலும் தொல்லையும் நெருக்கடியும் கொடுத்தால்தான் நமக்கு நன்றாக இருக்கும். அதனால் ரஜினியின் சக விஞ்ஞானி இவரை வீழ்த்த என்ன செய்யலாம் என்று யோசிக்க, எந்திரனைத் தன்வசப்படுத்துகிறார். அதைத் தவறாகப் பயன்படுத்துகிறார். இந்த இடத்தில் ஹெலிக்காப்டர் எல்லாம் வருகிறது.

இனி என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். சில காட்சிகள் ஸ்பைடர் மேன், ரோபோ காப் போன்ற படங்களை நினைவுப்படுத்தி ஹாலிவுட் தரத்தில் என்ற சொல்லுக்கு ஏற்றார்போல படம் இருக்கிறது.

படம் எங்கே, எப்படிச் சுற்றினாலும் கிளைமாக்ஸ் காட்சிக்கு தமிழனை தமிழ் மண்ணுக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டுத் தான் தியேட்டர் வெளியே அனுப்ப முடியும். எனவே...

கிளைமாக்ஸ் காட்சிகளை வெள்ளித்திரையில் காணவும்.



எந்திரன் டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ அதனால் இப்பவே இந்த விமர்சனத்தை எழுத வேண்டிய கட்டாயம் :-)

95 Comments:

Anonymous said...

vayitherichal.....

kaasu koduthu, set up seidha kootam -- rajini rasigarkalukku yaaru sir kaasu kudukaraanga? idhu varai avargal selavittadhu ellam sondha panam.

thalaimai mandrathidam irundhu panam varamal sondha panathil selavu seivadhu rajini rasigargal mattum thaan.

Anonymous said...

ராஜசேகரன் - நடிகை நடித்த ப்ளூ-பிலிம் வெற்றிகரமாக 36 மணி நேரம் ஒளிபரப்பி சாதனை செய்த சன் டிவியின் -சன் பிக்சர்ஸின் தொந்திரனை புறக்கணிப்போம்.

அதிக விலை கொடுத்து வாங்கி நஷ்டத்தை எதிர்நோக்கியிருக்கும் தியேட்ட்டர்காரர்களுக்கும், விநியோகஸ்தர்களூக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஐ-ரோபோட் ஆங்கில படத்தின் உல்டா தொந்திரன் - தோல்வி உறுதி.

குரோம்பேட்டைக் குறும்பன் said...

எந்திரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துகள்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
நாகு (Nagu) said...

எந்திரன் ஒருவேளை ராபின் வில்லியம்ஸ் நடித்த பைசெண்டினியல் மேன் படத்தின் தழுவலோ?

http://www.imdb.com/title/tt0182789/

இராயர் said...
This comment has been removed by the author.
மார்கண்டேயன் said...

ஒரு படம் வர்றதுக்கு முன்னாடியே விமர்சனம் வர்றது 'எந்திரன்' படத்துக்கு தான்னு நெனைக்கிறேன் . . .

ஸ்ஸ் . . . அப்பா, உங்க தொல்ல தாங்கலப்பா . . .

கீழேயும் ஒரு விமர்சனமிருக்கு பாத்து புண்ணியம் தேடிக்கோங்க . . . .

http://espradeep.blogspot.com/2010/08/blog-post_17.html

உண்மையச் சொல்லுங்க, டிக்கெட்டு ஓசியில தர்றேன்னு சொன்னதுனால தான, நீங்க இந்த மாதிரியெல்லாம் எழுதுறீங்க . . .

Anonymous said...

//எல்லா ஊரிலும் செட்டப் செய்த பால் அபிஷேக ரசிகர்கள், கொடுத்த காசுக்கு நன்றாகவே அபிஷேகம் செய்து ஆடிப் பாடினார்கள்//
//விஞ்ஞானி என்றால் ஃபிரென்ச் தாடி வைத்துக்கொள்ள வேண்டும்; அதனால் ரஜினியும் வைத்துக்கொள்கிறார். //
//சில காட்சிகள் ஸ்பைடர் மேன், ரோபோ காப் போன்ற படங்களை நினைவுப்படுத்தி ஹாலிவுட் தரத்தில் என்ற சொல்லுக்கு ஏற்றார்போல படம் இருக்கிறது.//
இட்லி வடை பஞ்ச்.

Anonymous said...

எந்திரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துகள்.

அஞ்சா நஞ்சன் said...

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக வெளிவராத படத்திற்கு விமர்சனம் எழுதிய இட்லி வடையின் சாதனைக்கு வாழ்த்துக்கள் !

Anonymous said...

இந்த படத்தை தேசத்தின் மீதும், அறத்தின் மீது, நேர்மை, நியாயம், சத்தியம் ஆகியவற்றின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும். ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டும் என்றால் தாராளமாக திருட்டு சி டி யில் பாருங்கள் காசு கொடுத்து யாரும் தியேட்டருக்குப் போய் பார்க்காதீர்கள். திருக்குவளை தீய சக்தி குடும்ப மாஃபியா எடுக்கும் எந்த சினிமாவையும் காசு கொடுத்துப் பார்த்து அவர்களை மேலும் பெரிய ஆதிக்க சக்திகளாக மேலும் பெரிய பணக்காரர்களாக மேலும் பெரிய அழிவு சக்திகளாக மாற்றாதீர்கள். உங்கள் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் இந்த சினிமாவைப் புறக்கணியுங்கள். தீய சக்திகளுக்குத் துணை போகாதீர்கள். கருணாநிதி குடும்ப மாஃபியாவின் மீது உங்களுக்கு நிஜமாகவே வெறுப்பு இருக்குமானால் அராஜகத்தையும் அக்கிரமங்களையும் நீங்கள் நிஜமாகவே வெறுப்பவர்கள் என்றால் அப்பாவி ஈழத் தமிழர்கள் மீது நீங்கள் உண்மையாகவே அக்கறை கொண்டிருப்பவர்கள் என்றால் தயவு செய்து, தயவு செய்து இந்த சினிமாவைப் புறக்கணியுங்கள். இந்த ஒரு சின்ன தியாகத்தைக் கூடவா உங்களால் நாட்டு நலன் கருதி செய்ய முடியாது? சிந்தியுங்கள் எந்திரனைப் புறக்கணியுங்கள். சிந்திக்கத் தெரிந்த நேர்மை நியாயம் பேசும் மனசாட்சியுள்ள எந்தவொரு மனிதனும் இந்த சினிமாவைக் காசு கொடுத்துப் பார்க்க மாட்டான் மீறிப் பார்ப்பவன் பார்க்கப் போகிறவன் மனசாட்சி அற்ற ஒரு ரோபோவாக மட்டுமே இருக்க முடியும். மீண்டும் சொல்கிறேன் குடும்ப மாஃபியாவை உங்கள் காசில் வளர்க்காதீர்கள். பாய்க்காட் எந்திரன்

ஹரன்பிரசன்னா said...

சகிக்கலை.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

எந்திரன் ட்ரைலர் விமர்சனமாக இதை பார்க்க முடியவில்லை ....,படத்தின் தயாரிப்பு தரப்பு மேல் வைக்கும் விமர்சனமாக தான் பார்க்கமுடிகிறது ....,எப்படியோ இந்த படம் சூப்பர் டுப்பர் ஹிட் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே ..,
***************************
சார் ..., உங்கள் ப்ளோகில் என் ஒரே அனானி பின்னூட்டமாக நிரம்பி வழிகிறது ???

R.Gopi said...

அதானே பார்த்தேன்.....

எல்லா ஜெலுசில் பார்ட்டிகளும் தங்கள் வேலையை ஏற்கனவே தொடங்கி விட்டதே (பிறவிப்பயனை அடைவதற்கான முயற்சியோ, என்னவோ!!??), இன்னும் நம்ம இட்லிவடை தொடங்கலியேன்னு நெனச்சேன்....

இன்னிக்கு நீங்களும் பிறவிப்பயன் அடைஞ்சாச்சு...

அப்படியே இன்னும் வராத “விருத்தகிரி”, “மன்மத அம்பு” போன்ற படங்களுக்கும் விமர்சனம் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

Anonymous said...

you Fool.. whatever it is.. we should encourage such Sci-fiction movies that too in Tamil/Indian Cinema. There will be some usual masala track, else it wont reach to C Class audience. So far our guys worked for hollywood movies, but as a first time for stunt & Animation graphics they worked for us..
Sadharana idly vadaikaey avlo buildup ad kuduthu evlo kasuku vikaran, adha compare pannum bothu 200 Crores a invest pantu idhu kuda panna venama...
Namadhu thiraipadangalin thagudhi, avargalin thiramaigal uyarndhu kondey pogiradhu endru perumai paduvom... Wish, ENDHIRAN to be massive Hit. it gives way for more such films.

R.Gopi said...

பொறாமை பொங்கி வழிந்தோடும் ஒரு “பிரமாதமான பதிவு”......

எந்திரன் ரிலீஸ் வரை இது போன்ற பதிவுகள் எழுதி வலைஞர்கள் தங்களை பிசியாக வைத்துக்கொள்ளலாம்...

nitu said...

The story is lifted from hollywood. Music is western type. the dialogue and songs ONLY are in tamil.

P.S.let them traslate the songs and dialogues to English and release it in HOLLYWOOD...

Venkatramanan said...

//செஞ்சோற்றுக் கடன் கழித்தார்கள்//என்னா நக்கலு!

rasu said...

http://jackofall.blogspot.com/2005/03/inspired-kamal-hassan.html

Anonymous said...

இட்லி வடை வாசகராவதற்கும் அதில் எழுதுவதற்கும் சில நிபந்தனைகள் உள்ளன. அவை:-

1 . கருணாநிதியை அறவே பிடிக்க கூடாது. கருணாநிதியை நன்றாக திட்டத் தெரிந்திருக்கவேண்டும்.

2 . சன் டிவி சம்மந்த பட்ட எந்த படமாக இருந்தாலும், அது நல்லபடமாகவே இருந்தாலும் உங்களுக்கு அந்த படம் பிடிக்க கூடாது.

3 .ஜெயலலிதாவை தவிர வேறு யாருக்கு கூட்டம் கூடினாலும் அது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் என்று அடித்து சொல்லவேண்டும்.

4 .எந்த கட்டுரை எழுதினாலும் கடைசியில் கருணாநிதியை திட்டி ஒரு வாக்கியம் எழுதவேண்டும். அப்படி எழுதாமல் விட்டுவிட்டால் வழக்கமாக ஜல்லியடிப்பவர்கள் அந்த வேலையை பின்னூட்டத்தில் பார்த்துக் கொள்ளவேண்டும்.

5 .என்ன எழுதுவது என்று தெரியாமல் கற்பனை வற்றிப் போய்விட்டால், துக்ளக், விகடன், கல்கி போன்ற பத்த்ரிக்கைகளில் இருந்து ஓசியில் சுட்டு போட்டுவிடவேண்டும். (அப்படி போட்டதற்கு பாராட்டுவதற்கும் ஜல்லியடிப்பதற்கும் ஏராளமான பாசக்கார நண்பர்கள் இருக்கவே இருக்கிறார்கள் .)

6 .இளையராசாவைத் தவிர வேறு எந்த இசையமைப்பாளர்களையும் உங்களுக்கு பாராட்ட பிடிக்க கூடாது.

உண்மை சுடும். இருந்தாலும் இது தான் உண்மை.

இதை நீங்கள் பின்னூட்டத்தில் போட மறுத்தாலும் நீங்கள் இதை படித்து பார்த்தீர்கள் என்பதே எனக்கு போதும்.

Anonymous said...

தொண்ணூறுகளில் கிரைம் கதை மன்னன் இராஜேஷ்குமார், நீங்கள் விமர்சனம் எழுதிய இதே பாணியில் (கிட்டத்தட்ட) ஒரு‍ நாவலை எழுதியிருக்கிறார். விஞ்ஞானியால் உருவாக்கப்பட்ட அந்த ரோபோ, விஞ்ஞானியின் மனைவியையே டாவடிக்கும். எந்திரன் கதை அதுபோல் இருந்தால் டைட்டிலில் சுஜாதாவோடு‍ சேர்த்து‍, ரா.குமாருக்கும் நன்றி போட வேண்டும்.
ஜெ.பாபு
கோவை

Gowri Shankar said...

இட்லிவடை.... இனிமேல் தயவு செய்து விமர்சனம் மட்டும் எழுதாதீங்க. சகிக்க முடியல. Please...

Anonymous said...

ivvalavu nakkalna pinna yen endhiran trailer-a first pottirukeenga? what a double standard IV..

shyam sundar.K said...

you Fool.. whatever it is.. we should encourage such Sci-fiction movies that too in Tamil/Indian Cinema. There will be some usual masala track, else it wont reach to C Class audience. So far our guys worked for hollywood movies, but as a first time for stunt & Animation graphics they worked for us..
Sadharana idly vadaikaey avlo buildup ad kuduthu evlo kasuku vikaran, adha compare pannum bothu 200 Crores a invest pantu idhu kuda panna venama...
Namadhu thiraipadangalin thagudhi, avargalin thiramaigal uyarndhu kondey pogiradhu endru perumai paduvom... Wish, ENDHIRAN to be massive Hit. it gives way for more such films.

Anonymous said...

/**** R.Gopi said...
அதானே பார்த்தேன்.....

எல்லா ஜெலுசில் பார்ட்டிகளும் தங்கள் வேலையை ஏற்கனவே தொடங்கி விட்டதே (பிறவிப்பயனை அடைவதற்கான முயற்சியோ, என்னவோ!!??), இன்னும் நம்ம இட்லிவடை தொடங்கலியேன்னு நெனச்சேன்....

இன்னிக்கு நீங்களும் பிறவிப்பயன் அடைஞ்சாச்சு...

அப்படியே இன்னும் வராத “விருத்தகிரி”, “மன்மத அம்பு” போன்ற படங்களுக்கும் விமர்சனம் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்...
***/

Oru ton Gelusil vaangungaa gobi, appathan unga erichal kuraiyum...Hahahaha...

Anonymous said...

/***Gowri Shankar said...
இட்லிவடை.... இனிமேல் தயவு செய்து விமர்சனம் மட்டும் எழுதாதீங்க. சகிக்க முடியல. Please...
***/

Vettiakkaranukku ezhuthianaa matuum inikkum, ippo pulikkutha????
Hahahahaha.....

Anonymous said...

kamal iyer engay idli mama

Anonymous said...

I love to rajini movies, if its good or not, but now i don't want to watch the movies, even i havent heard any songs/programme for this movie...dont know why its happened..

Very soon we have to work hard to change the tamilnadu politics...

Gayathri said...

இப்போதான் முதல் முறை உங்க வலைபதிவுக்கு வரேன்..நல்லா எழுதுறீங்க..வாழ்த்துக்கள்.

Anonymous said...

////இட்லி வடை வாசகராவதற்கும் அதில் எழுதுவதற்கும் சில நிபந்தனைகள் உள்ளன. அவை:-



சன் டிவி சம்மந்த பட்ட எந்த படமாக இருந்தாலும், அது நல்லபடமாகவே இருந்தாலும் உங்களுக்கு அந்த படம் பிடிக்க கூடாது.

/////

மிகவும் சரியான வார்த்தைகள்.

படம் வெளியான முதல் ஷோ பார்த்துவிட்டு உடனே விமர்சனம் , ட்ரைலர் பார்த்து விமர்சனம் எல்லாம் அவைகளை மட்டம் தட்டத்தான். ரஜினி ரசிகர்கள் படத்தை மிக பெரிய வெற்றி பெற செய்வார்கள்

R.Gopi said...

இட்லிவடை எழுதின டகால்டி கட்டுரையும் சரியாக படிக்கல...நான் எழுதின கமெண்டும் சரியா புரியல...

வர வர இந்த அனானிங்க தொல்லை தாங்க முடியலேப்பா...

புரிஞ்சு கமெண்ட் போட்டாலும் படிக்கற எல்லோருக்கும் சந்தோஷமா இருக்கும்..

Anonymous said...

// அப்படியே இன்னும் வராத “விருத்தகிரி”, “மன்மத அம்பு” போன்ற படங்களுக்கும் விமர்சனம் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்...///

correctly said.-- A Rajani Rasikan.

வலைஞன் said...

2023 ஆம் வருடம் தமிழ்நாட்டில் ஒருவன் எத்தகைய கொடிய குற்றம் செய்தாலும் அவனுக்கு ஒரு ஆண்டுதான் சிறை தண்டனை!எப்படி? சொல்லுங்கள் பார்ப்போம்!

Anonymous said...

//Namadhu thiraipadangalin thagudhi, avargalin thiramaigal uyarndhu kondey pogiradhu endru perumai paduvom... Wish, ENDHIRAN to be massive Hit. it gives way for more such films.//
To Whom do you want to prove your(Tamil cine field) talent?
புலியப் பாத்து சூடு போட்டாக் கூட பரவா இல்ல இவனுக பூனையப் பாத்ததுல சூடு போடராணுக. இவனுகளுக்கு எடுப்பு வேற.

Jayadev Das said...

1.//வைரமுத்துவே ஐஸை பற்றி சொல்லவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.// நம்ம பயலுங்க ஒருத்தன் உடாமா அத்தனை பெரும் அந்தம்மா மேல அப்படி வழியிரானுன்களே!

2.//எல்லா ஊரிலும் செட்டப் செய்த பால் அபிஷேக ரசிகர்கள், கொடுத்த காசுக்கு நன்றாகவே அபிஷேகம் செய்து ஆடிப் பாடினார்கள்.// இது நிஜமான்னு தெரியல, ஆனா, தமாஷா இருக்கு.

3.//அடுத்த படத்தில் தங்களுக்கும் சான்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் ஷங்கரை அவர் செட் போல வானளாவப் புகழ்ந்தார்கள்; நிதி கிடைக்கும் என்ற நப்பாசையில் கலாநிதி மாறனைப் புகழ்ந்தார்கள்.//உண்மை. இந்த மாதிரி இத்துப்போன பயல்களை வேற எதுக்கு ஒருத்தன் பொய்யா புகழனும்?
Overall: Good post.

மாயவரத்தான் said...

அது ஏண்டா திட்டுறவன் எல்லாம் அனானியா வந்து திட்டுறீங்க வெண்ணைங்களா?

Anonymous said...

ரூ.13 கோடி லாபம் பார்த்த பிரமுகர்!

உச்சநட்சத்திரம் நடித்து வெளிவர இருக்கும் படத்தின் தமிழக உரிமையை ஒரு அரசியல் பிரமுகர், பெரிய விலை கொடுத்து வாங்கினார்.

வாங்கிய சூடு ஆறுவதற்குள், ரூ.13 கோடி லாபம் வைத்து, இன்னொரு பிரமுகருக்கு கை மாற்றி விட்டார

தினத்தந்தி செய்தி.

எப்படிங்ணா, இப்படி கூசாமல் மீடியாவில் செய்தியை பரப்புறானுங்க அந்த ப்ளூ-பிலிம் குரூப்ஸ்?

படத்தை வாங்கியவர்கள் கூட வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எந்திரன் - காயலான் கடை (சன் டிவி பாணியில் ஒருவரி விமர்சனம்.)

ராஜசேகரன்.

Anonymous said...

எல்லாரும் ஓடியாங்க. ஷங்கர் & கலாநிதி மாறன் ரெண்டு பேரும் இத்து போன ஆளுங்களாம்.

உலகமகா தெறமசாலி ஜெயதேவா சொல்லிட்டாரு.

போங்கடாங்...!

மாயவரத்தான்.... said...

ராஜசேகரன்னு ஒரு அநாநி.

ப்ளூப்லிம் க்ரூப்பாம். கண்டுபிடிச்சிருக்காரு.

எந்திரன் படத்தை வாங்கியவங்க வயித்துல நெருப்பைகட்டிக் கொண்டு இருக்கிறார்களாம்.

அடேய் வெண்ணை. இதில லாபம் வரும்னு தெரிஞ்சுதாண்டா வாங்கிருக்காங்க. இதில எதுக்கு நெருப்பை கட்டிக்கணும்?

அதுக்குள்ள காயலான் கடைன்னு வேற உளறல்.

ஜெலூசில் பார்ட்டிங்க தொல்ல தாங்க முடியலப்பா.

Jayadev Das said...

Hello Dr.மாயவரத்தான் அவர்களே, பாவம் தனியா நின்னு இத்தனை பேத்தையும் ஒத்த ஆளா அடிக்கிறீங்களே, நிஜமாவே சினிமா ஹீரோ ஆகுற தகுதியே உங்க கிட்ட இருக்கு. நான் திறமைசாலி இல்லைங்க ஒத்துக்கறேன், ஆனா சினிமா பாக்கும் ரசிகர்களில் ஒருத்தன். களவாணி, அங்காடித் தெரு மாதிரி படம் இருக்கணும்னு எதிர்பார்க்கிறோம். இந்த ஷங்கரோட ஒரு படமாச்சும் மேலே சொன்ன இரண்டு படத்துக்கு சமமாகுமா? வெறும் செலவு பண்ணி எதுக்குப் புரயோஜனம்? இந்த லட்சணத்துல இங்கிலீஷ் படத்தையெல்லாம் திருடி இவன் படம் எடுக்குறான், எங்க போயி முட்டிக்க? அப்புறம் அந்த கலாநிதி. தினகரன் பத்திரிகை அலுவலகத்தில செத்தவங்க கேசு என்ன ஆச்சு? ஆ.. ஊ.. ன்னு ஊரையே கூட்டுனானுன்களே, இப்போ கருணாநிதி கூட ஒன்னு சேர்ந்துகிட்டு அந்த கேசை ஊத்தி மூடி பூட்ட கேசு ஆக்கிட்டானுங்களே? பெங்களூரு வில் உள்ள உதயா TV[இவனுங்களுதேதான்] சேனலில் காவிரிப் பிரச்சினையின் போது தமிழர்கள் செய்வது அநியாயம் என்று ஒளிபரப்பினார்கள். எங்கே போச்சு தமிழ்ப் பற்று? பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று நினைப்பவனை இத்துப் போனவன் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? பணம் சம்பாதித்துவிட்டாலேயே ஒருத்தன் திறைமைசாலி, நல்லவன் என்று அர்த்தமா?

RaGuNaTh S said...

Well said Jaya dev....

கலாநிதிய புகழ காரணம் காசு இல்லாம வேற என்னவா இருக்க முடியும்... எந்திரன் முட்டாள்களின் தலைவன்... இந்த பொழப்புக்கு போய் ???!!!!!!!!!!!

RaGuNaTh S said...

கலாநிதிய புகழ காரணம் காசு இல்லாம வேற என்னவா இருக்க முடியும்... எந்திரன் முட்டாள்களின் தலைவன்... இந்த பொழப்புக்கு போய் ?????!!!!!!!!!!!

RaGuNaTh S said...

கலாநிதிய புகழ காரணம் காசு இல்லாம வேற என்னவா இருக்க முடியும்... எந்திரன் முட்டாள்களின் தலைவன்... இந்த பொழப்புக்கு போய் ?????!!!!!!!!!!!

Anonymous said...

//அது ஏண்டா திட்டுறவன் எல்லாம் அனானியா வந்து திட்டுறீங்க வெண்ணைங்களா?//- மாயவரத்தான்.

ஐயா , மாயவரத்தான் என்ற மரியாதைக் கொழுந்தே!

நீங்க மட்டும் என்ன(டா) சொந்த பேர்லையா எழுதறீங்க ?

மாயவரத்தான், மண்ணாங்கட்டி, கொஸ்டின் கோவாலு, கானாகபாலி,பழையசோறு, பனங்காட்டு நரி,சொட்டைத் தலையன், மஞ்சள்ஜட்டின்னு ஏதோ ஒரு புனை பெயர்ல பூந்துக்கிட்டு தானே எழுதறீங்க?

இந்த மாதிரி ஈனங்கெட்ட பெயரெல்லாம் வேண்டாம்னு தான் அனானின்னு எழுதறோம். அது என்ன தப்பா?

நீங்களும் நாங்களும் பெயர் விஷயத்தில ஒரே படகில் தான் போறோம்.
பேசாம சொல்ல வந்த கருத்த சொல்லிவிட்டு போவீங்களா, அத விட்டுட்டு அனானி மேல எகிரறீங்க!

நாங்கல்லாம் இந்த வலைத் தளத்துக்கு வரக் கூடாதுன்னா பாஸ் வார்டு , id வச்சி வேண்டப்பட்ட ஜால்ராக்கள் மட்டும் படிக்கிறாமாதிரி பண்ணியிருக்கணும்.

நீங்க என்ன வேண்டுமானாலும் ஏழுதி பதிவு போடலாம்னா, நாங்க எங்க கருத்த சொல்வதில் தப்பு என்ன இருக்கிறது?

விவாதத்த விவாதமா பாருங்கப்பா, விரோதமா பாக்காதீங்க.

Unknown said...

Anonymous said...
//ராஜசேகரன் - நடிகை நடித்த ப்ளூ-பிலிம் வெற்றிகரமாக 36 மணி நேரம் ஒளிபரப்பி சாதனை செய்த சன் டிவியின் -சன் பிக்சர்ஸின் தொந்திரனை புறக்கணிப்போம்.
ஐ-ரோபோட் ஆங்கில படத்தின் உல்டா தொந்திரன் - தோல்வி உறுதி.//

2000 கோடி கும்மாங்குத்து (கூத்து)

Unknown said...

//இந்த படத்தை தேசத்தின் மீதும், அறத்தின் மீது, நேர்மை, நியாயம், சத்தியம் ஆகியவற்றின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக புறக்கணிக்க வேண்டும். ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டும் என்றால் தாராளமாக திருட்டு சி டி யில் பாருங்கள் காசு கொடுத்து யாரும் தியேட்டருக்குப் போய் பார்க்காதீர்கள். திருக்குவளை தீய சக்தி குடும்ப மாஃபியா எடுக்கும் எந்த சினிமாவையும் காசு கொடுத்துப் பார்த்து அவர்களை மேலும் பெரிய ஆதிக்க சக்திகளாக மேலும் பெரிய பணக்காரர்களாக மேலும் பெரிய அழிவு சக்திகளாக மாற்றாதீர்கள். உங்கள் ஒவ்வொருவர் காலிலும் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் இந்த சினிமாவைப் புறக்கணியுங்கள்.//
கவலையை விடுங்கள்..
அடுத்த ஆட்சியில்...
இந்த குழுமத்தை நாட்டுடைமை ஆக்கிவிடுவோம்...

Anonymous said...

////////// Jayadeva said...
Hello Dr.மாயவரத்தான் அவர்களே, பாவம் தனியா நின்னு இத்தனை பேத்தையும் ஒத்த ஆளா அடிக்கிறீங்களே, நிஜமாவே சினிமா ஹீரோ ஆகுற தகுதியே உங்க கிட்ட இருக்கு. நான் திறமைசாலி இல்லைங்க ஒத்துக்கறேன், ஆனா சினிமா பாக்கும் ரசிகர்களில் ஒருத்தன். களவாணி, அங்காடித் தெரு மாதிரி படம் இருக்கணும்னு எதிர்பார்க்கிறோம். இந்த ஷங்கரோட ஒரு படமாச்சும் மேலே சொன்ன இரண்டு படத்துக்கு சமமாகுமா? வெறும் செலவு பண்ணி எதுக்குப் புரயோஜனம்? இந்த லட்சணத்துல இங்கிலீஷ் படத்தையெல்லாம் திருடி இவன் படம் எடுக்குறான், எங்க போயி முட்டிக்க? அப்புறம் அந்த கலாநிதி. தினகரன் பத்திரிகை அலுவலகத்தில செத்தவங்க கேசு என்ன ஆச்சு? ஆ.. ஊ.. ன்னு ஊரையே கூட்டுனானுன்களே, இப்போ கருணாநிதி கூட ஒன்னு சேர்ந்துகிட்டு அந்த கேசை ஊத்தி மூடி பூட்ட கேசு ஆக்கிட்டானுங்களே? பெங்களூரு வில் உள்ள உதயா TV[இவனுங்களுதேதான்] சேனலில் காவிரிப் பிரச்சினையின் போது தமிழர்கள் செய்வது அநியாயம் என்று ஒளிபரப்பினார்கள். எங்கே போச்சு தமிழ்ப் பற்று? பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று நினைப்பவனை இத்துப் போனவன் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? பணம் சம்பாதித்துவிட்டாலேயே ஒருத்தன் திறைமைசாலி, நல்லவன் என்று அர்த்தமா?///////////

அட லூசு ! எப்பதான் பதிவுக்கு சம்பந்தமா பின்னூட்டம் போட கத்துக்க போறீங்களோ? பதிவு எந்திரன் படம் பற்றி>இதுல எங்கடா தமிழ்,தமிழன் ,காவிரி பிரச்சனையெல்லாம் வருது? கருத்து சொல்ற்துக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்கப்பா!{THERE IS A SMALL STUFF CALLED BRAIN ISIDE YOUR HEAD PL USE IT! :)-} எல்லாத்துக்கும் உணர்ச்சி வசப்பட்டே இம்சை பண்றாங்க!
இந்த மாதிரி இன்னொரு ஆள் இருக்காரு 'ஜோ அமலன் ஃபெர்ணாண்டோ'ன்னு.பதிவுக்கு சம்பந்தமில்லாம் பெரிய பெரிய பின்னூட்ட்ங்கள். சினிமால் வர காமெடி பீஸ் மாதிரி!இந்த ஜெயதேவா அவர மிஞ்சிடுவார் போலருக்கே!!
நாரயணா ! நாரயணா ! இந்த கொசுங்க தொல்ல தாங்க முடியலபா!

Anonymous said...

//** R.Gopi said...
இட்லிவடை எழுதின டகால்டி கட்டுரையும் சரியாக படிக்கல...நான் எழுதின கமெண்டும் சரியா புரியல...
***/

Appuram en comment podureenga?? moochukku moochu Gelusil gelusil nu solreengale athu neengathaan, hahahaha.... engalukku yaar comedy paaninaalum athu comedy thaan, athu vijayaa irunthaalum rajiniyaa irunthaalum sari.

Anonymous said...

/****எந்திரன் படத்தை வாங்கியவங்க வயித்துல நெருப்பைகட்டிக் கொண்டு இருக்கிறார்களாம்.

அடேய் வெண்ணை. இதில லாபம் வரும்னு தெரிஞ்சுதாண்டா வாங்கிருக்காங்க. இதில எதுக்கு நெருப்பை கட்டிக்கணும்?

அதுக்குள்ள காயலான் கடைன்னு வேற உளறல்.
***/

intha naadum naatu makkalum naasamaaka pokattum.

Unknown said...

இட்லி வடைக்கு என்ன ஆச்சு ? எர்வடில இருந்து எழுந்து வந்த மாதிரி ஒரு பதிவு யந்திரன் திரைப்படத்தை (trailor)பற்றி, என்னமோ போங்க, உடம்ப பாத்துக்கோங்க
காமேஷ்

Anonymous said...

நான் சொல்றேன்......................................... climaxla ரஜினிகள் (நல்ல ரோபோட் +scientist)கெட்ட ஆயிரம் ரோபடுகள் கூட சண்டை போடறாராம்
அப்புறம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
climax set மதிப்பு ஆறு கோடி
நம்பினால் நம்புங்கள்
மட்ரிக்ஸ் பட பாணியில் சண்டை காட்சி அமைக்கப்பட்டுள்ளது
எந்திரன் கதை biccentinal man தழுவல்......................... i-robot,terminator,robocop,போன்ற படங்களில்லிருந்து காட்சிகள் சுடப்பட்டுள்ளன

Anonymous said...

நான் சொல்றேன்......................................... climaxla ரஜினிகள் (நல்ல ரோபோட் +scientist)கெட்ட ஆயிரம் ரோபடுகள் கூட சண்டை போடறாராம்
அப்புறம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
climax set மதிப்பு ஆறு கோடி
நம்பினால் நம்புங்கள்
மட்ரிக்ஸ் பட பாணியில் சண்டை காட்சி அமைக்கப்பட்டுள்ளது
எந்திரன் கதை biccentinal man தழுவல்......................... i-robot,terminator,robocop,போன்ற படங்களில்லிருந்து காட்சிகள் சுடப்பட்டுள்ளன

Anonymous said...

நான் சொல்றேன்......................................... climaxla ரஜினிகள் (நல்ல ரோபோட் +scientist)கெட்ட ஆயிரம் ரோபடுகள் கூட சண்டை போடறாராம்
அப்புறம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
climax set மதிப்பு ஆறு கோடி
நம்பினால் நம்புங்கள்
மட்ரிக்ஸ் பட பாணியில் சண்டை காட்சி அமைக்கப்பட்டுள்ளது
எந்திரன் கதை biccentinal man தழுவல்......................... i-robot,terminator,robocop,போன்ற படங்களில்லிருந்து காட்சிகள் சுடப்பட்டுள்ளன

Anonymous said...

///சன் டிவியின் -சன் பிக்சர்ஸின்
தொந்திரனை புறக்கணிப்போம்.///

///நஷ்டத்தை எதிர்நோக்கியிருக்கும் தியேட்ட்டர்காரர்களுக்கும், விநியோகஸ்தர்களூக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.////

///ரஜினி ரசிகர்கள் பார்த்தே ஆக வேண்டும் என்றால் தாராளமாக திருட்டு சி டி யில் பாருங்கள் காசு கொடுத்து யாரும் தியேட்டருக்குப் போய் பார்க்காதீர்கள். ///

///இட்லிவடை எழுதின டகால்டி கட்டுரையும் சரியாக படிக்கல...நான் எழுதின கமெண்டும் சரியா புரியல...///

///பணம் சம்பாதித்துவிட்டாலேயே ஒருத்தன் திறைமைசாலி, நல்லவன் என்று அர்த்தமா?///

ஐயோ ஐயோ ---( வடிவேலு போல) இட்லி வடை அபிமானிகளின் லொள்ளு தாங்க முடியவில்லை. படத்தை பார்க்காமல் எழுதும் பின்னுட்டங்கள் அவர்களின் ஆழ் மனதில் உள்ள ( முன் முடிவு- pre - determined ) கெட்ட எண்ணங்களை வெளிபடுத்துகின்றன. சினிமா ஒரு பொழுது போக்கு சாதனம்.அதை யார் எடுகிறார்கள், படம் ஓடுவதால் யாருக்கு லாபம் என்று பார்க்காமல் படத்தை பாருங்கள் அப்புறம் எழுதுங்கள். உங்கள் அபிலாசைகளை எழுதாதீர்கள். அதிலும் ரஜனிக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.ரஜினியும் நீண்ட நாட்கள் கழித்து வெளியிடும் படம் . எனவே உங்கள் எண்ணங்களை படம் வெளியாகும் வரை மூட்டை கட்டி வைக்கவும். ----- இப்படிக்கு ரஜனி ரசிகன்.

Baski said...

Shankar is a sincere director, I believe he should have spent all money to yield returns in double...

Endiran will beat Sivaji records...

All the best Shankar.

Baski said...

ஷங்கர் + ரஜினி... பாக்காமலே சொல்லலாம் படம் சூப்பர்....

காசு போட்டு வாங்குறவன் ஒன்னும் ரஜினி ரசிகன் இல்லை... வியாபாரி...மார்கெட் தெரிஞ்சவன்.. லாபம் வரும்னு கணிச்சி தான் காசை கொட்டுறான்..

படம் ரிலீஸ் ஆகும் வரை இவங்க வெயிட் பண்ண தேவை இல்லை... எந்திரன் ரிசர்வேசன் ஆரம்பித்தாலே போட்ட காச எடுத்துருவாங்க...

இது பஞ்ச் டயலாக் இல்லை... உண்மை..

Anonymous said...

neengalum kudutha kaasuku thaan indha endhiran pada vimarsanam eluthiningala rajni rasigargal paal abhishegam madhiri?

Baski said...

கண்டிப்பாக இதை தியேட்டரில் தான் பார்க்கணும்.. ரஜினி+ஷங்கரின் மற்றும் குழுவினரின் உழைப்பிற்காக..

Same applies to Manirathnam and Kamal's movies..

Baski said...

வயிதெரிச்சலுக்கு நல்லது டையஜின்? மொத்தமா வாங்கி வச்சுகோங்க...

இராயர் said...
This comment has been removed by the author.
Gaana Kabali said...

ரோபோ பற்றி படம் எடுத்தாலே ஆங்கில படத்தை பார்த்து காப்பியடித்ததாக சொல்லிவிட முடியாது.I Robot, Artificial Intelligence, Bicentennial man ஆகிய படங்கள் யாவும் மனித உணர்வுகள் கொண்ட ரோபோக்கள் பற்றிய படம் ஆகும்.
இவை எல்லாமே ஒன்றுக்கொன்று காப்பி அடிக்கப் பட்டதாக சொல்ல முடியாது.
அது போல் தான் எந்திரனையும் காப்பி என்று சொல்லிவிட முடியாது.

மாயவரத்தான் said...
This comment has been removed by the author.
மாயவரத்தான் said...
This comment has been removed by the author.
மாயவரத்தான் said...

//நீங்க மட்டும் என்ன(டா) சொந்த பேர்லையா எழுதறீங்க ?

மாயவரத்தான், மண்ணாங்கட்டி, கொஸ்டின் கோவாலு, கானாகபாலி,பழையசோறு, பனங்காட்டு நரி,சொட்டைத் தலையன், மஞ்சள்ஜட்டின்னு ஏதோ ஒரு புனை பெயர்ல பூந்துக்கிட்டு தானே எழுதறீங்க?//

கருமாந்திரம் புடிச்சவனே. பொறந்ததில இருந்தே இப்படி தானா நீ?

அநாநியா வர்றதுக்கும், புனைப்பெயர் வெச்சு எழுதறதுக்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாதவனெல்லாம் வந்திட்டானுங்க ஆட்டிக்கிட்டு!

Anonymous said...

Let's not be greedy on others progress :

If you are working for a corporate company, you will be knowing how much difficult it is to establish a company amidst the competition. SUN network also faced lots of hurdles to establish themselves in the industry.

Many of you might be knowing,Mu.Ka Muthu's grand father is great musician CS Jayaraman. He was in Cine industry. Karunanidhi is still working in Cine Industry. Murasoli Maran was a dialogue / script writer and produced several movies in Tamil.MGR and Jayalalitha acted in some of the movies that Maaran produced. Amirtham, Karunanidhi's Sister's son is also a Film Director / Producer.

Then Mu Ka Muthu came into film industry. (He was far better than the current Tamil Heros). His acting, face cut and Tamil Pronunciation were very good. He was a very good singer too ( He became a singer, not because of Karunanidhi's son, but by his own capabilities)

Before starting SUN TV, Kalanidhi Maaran was running a Video Journal " Poomaalai" which became Sun TV later.

Please do not underestimate the efforts that went into SUN Network. It is not that much easy to establish an Organization.

Karunanidhi was not in POWER continuously ,when SUN TV was established.


Let us appreciate good efforts and Let's not be greedy on others progress

Jayadev Das said...

உயர்திரு Anonymous அவர்களே, நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான், கஷ்டப் பட்டாதான் மேலே வர முடியும். ஆனா அடுத்தவங்கள பதவி, அதிகாரம் போன்றவற்றால் மிரட்டி அடி பணிய வைத்து, காசு பார்ப்பது அநியாயம். இந்த சன் பயல்களுக்கு போட்டியாளர்கள் ஒழித்தே முன்னேறியவர்கள். விஜய் TV-யில் "மக்கள் யார் பக்கம்" அமோக வரவேற்ப்பை பெற்றது. அதை மிரட்டி நிறுத்தச் சொன்னவர்கள். சென்னை முழுவதும் இவர்களுடைய SCV கேபிள் மட்டுமே செயல்பட அதிகார துஷ்பிரயோகம் செய்தவர்கள். தொழிலதிபர் ரதன் டாடா கிட்ட நிற்க கூட தகுதியில்லா இந்த நாய்கள் தொழில் முறையில் அவரை மிரட்டி இருக்கிறார்கள். எந்த தொலைக்காட்சி சேனல் மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என்ற கருத்துக் கணிப்பிலேயே தில்லுமுல்லு செய்து இவர்களுடையதே முதல் இடம் என்று பொய்யாக காட்டுபவர்கள். தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் செத்துப் போனவர்களின் குடும்பத்தாருக்கு நியாயம் கிடைக்க விடாமல் செய்தவர்கள். பெங்களூரு சன் சேனல்களில் காவிரிப் பிரச்சினையில் தமிழர்கள் செய்வது அநியாயம் என்று பொய் பிரச்சாரம் செய்தவர்க்ள. இவர்கள் உழைக்கிறார்கள், ஆனால் நேர்மையாக அல்ல, மக்கள் நலன் கருதி அல்ல. தானும் தன குடும்பத்தாரும் சொத்து சேர்க்க வேண்டும், அதற்காக மற்றவர்கள் பிணம் எந்த கழுகோ கொத்தித் தின்னட்டும், இவர்களுக்கு கவலையே இல்லை. நீ வாழ பிறரைக் கெடுக்காதே என்பார்கள், ஆனால் இவர்கள் வாழ யாரை வேண்டுமானாலும் கெடுப்பார்கள். கயவர்கள், அயோக்கியர்கள்.

Jayadev Das said...

Ada Anonymous Tight,

I just justified why I termed those two waste fellows as "Iththupona Payalkal". First you use your stuff inside your head [nothing but china clay!]before writing lose comments.

Jayadev Das said...

அது சரி இது என்ன அம்பி, ரெமோ மாதிரி நிறைய Anonymous வர்றாங்க, இதுல நல்லவர் யாரு, லூசு யாருன்னே தெரியலையே.

இராயர் said...

அன்பான நண்பர்களே, தலைவர்களே
தேவை இல்லாம சில பின்னுட்டம் போட்டு சில தலைகளை துன்புறுத்தி விட்டேன் என்று நெனைக்கிறேன் அதை நீக்கி விட்டேன்.
இட்லி வடை நீ பெரிய நாரதருன்னு ப்ரூப் பண்ணிட்ட

Anonymous said...

A group of Rajini fans in Sholingur who climbed the 1,305 steps of the famous Arulmighu Lakshmi Narasimha Swamy Thirukoil at Sholingur on their knees to pray for the success of Rajini’s yet-to-be-released movie Enthiran.
They want the movie to create a world record by running for 1,000 days,

Anonymous said...

//அநாநியா வர்றதுக்கும், புனைப்பெயர் வெச்சு எழுதறதுக்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாதவனெல்லாம் வந்திட்டானுங்க ஆட்டிக்கிட்டு!//மாயவரத்தான்

மாயவரத்தானே ! நீங்கல்லாம் புனை பெயர்ல வந்து என்னத்த பெரிசா கிழிக்கிறீங்களோ அதைவிட பெரிசா அனானியா வந்து நாங்களும் கிழிப்போமில்லே!
பேர பாக்காதீங்கடா , சொல்ற கருத்த பாருங்கடா. நாங்களும் புனை பெயர வச்சிட்டு உங்கள மாதிரி ஆட்ட எவ்ளோ நேரம் ஆகும்?
ID ஐ அடிச்சி, PASS WORD அடிச்சி கமென்ட் எழுதறதுக்கு பதிலா Anony ஐ கிளிக் பண்ணி கமெண்ட் எழுதிட்டு போய்டுவோமில்லே! வந்துட்டானுங்க அறிவுரை சொல்றதுக்கு.

மாயவரத்தான் said...

//அனானியா வந்து நாங்களும் கிழிப்போமில்லே!//

ஆமாம்.. கிழிச்சீங்கடா வெண்ணை.

மாயவரத்தான் said...

//நாங்களும் புனை பெயர வச்சிட்டு உங்கள மாதிரி ஆட்ட எவ்ளோ நேரம் ஆகும்?//

ஆட்ட முடியாமத் தானே இப்படி அநாநி நாதாறியா வந்து பினாத்துறே! பேச்சைப் பாரு!

மாயவரத்தான் said...

//ID ஐ அடிச்சி, PASS WORD அடிச்சி கமென்ட் எழுதறதுக்கு பதிலா Anony ஐ கிளிக் பண்ணி கமெண்ட் எழுதிட்டு போய்டுவோமில்லே! //

கல்யாணம் ஆகிடுச்சா இல்லையா உனக்கு இன்னமும்? அப்படி ஆகலைன்னா அவசரப்பட்டு ஒரு பொண்ணோட வாழ்க்கைய வீண்டிச்சிடாதே. ஐ.டி. பாஸ்வேர்டு அடிக்கிறதுக்கே சோம்பல்படுறவன் அப்புறமா.................

ஹையோ பாவம்!

Anonymous said...

நாகரீகம் இல்லாம தரம்தாழ்த்திப் பேசுறதுல நம்மாளுங்கள அடிச்சிக்க யாரும் இல்ல. எது எப்படியோ, ஈசியா கமென்ட் போட ஐடியா கிடைச்சுடுச்சு! [Anonymous-ஆக கருத்து பதிவு செய்ய முடியும்னு இத்தனை நாளா எனக்குத் தெரியாதுங்கோ!] -இடி அமீன், உகாண்டா.

Anonymous said...

//பாஸ்வேர்டு அடிக்கிறதுக்கே சோம்பல்படுறவன் அப்புறமா..//மாயவரத்தான்...

உங்க வீட்ல ID , PASSWORD அடிச்சா தான் தரிசனமே கெடைக்கும் போல. உதாரணத்த பாரு. கொஞ்சம் கூட வெவஸ்தை இல்லாம . உங்களுக்கு இப்படித்தான் எழுத வருமா? இந்த எழுத்து எழுதவா இந்த புனை பெயர்? மரியாதையில்லாம எழுத ஆரம்பிச்சதே நீங்க தான் மாப்ளே! உங்க வார்த்தைய திருப்பி எழுதனா உங்களுக்கே கோவம் வருது.
தஞ்சாவூரான்.

Anonymous said...

மாயவரத்தான் கமெண்டுக்கான தஞ்சாவூரான் பதிலின் தொடர்ச்சி.

உங்க password , id வெளியில எவனுக்காவது தெரிஞ்சா வீட்ல நீங்க பாவம் தான்! என்ன, உங்கள விட கேவலமா எங்களுக்கும் எழுத தெரியுமில்லே!
தஞ்சாவூரான்

தணிகை செந்தில் said...

ரசிகர்கள் மறக்க வேண்டிய விஷயங்களை திரும்பவும் நினைவூட்டி கொடுமை பண்றாங்க. பாலாபிஷேகம் பண்றதையும்,கோயிலில் 1008 தேங்காய் உடைப்பதையும் திரும்ப திரும்ப காட்டி.என்ன தான் காசை போட்டு படம் எடுத்தாலும் இப்படியா?

Anonymous said...

"இந்தியன்"க்கும் "எந்திரன்"க்கும் உள்ள வித்தியாசம்... "இந்தியன்" ல ஒரு ஹீரோ கஷ்டப்பட்டு தாத்தாவா நடிச்சிருப்பார். "எந்திரன்" ல ஒரு தாத்தா கஷ்டப்பட்டு ஹீரோ வா நடிச்சிருக்கார்.

சீர்காழியான் said...

மாயவரத்தான் ஒழுங்காகத் தான் எழுதி வந்தார். இந்த அநாநிமஸ் அல்லக்கைகள் தான் அவரை சீண்டி விட்டு இப்போது குத்துதே குடையுதேன்னு ஓடுகிறார்கள்.

மாயவரத்தானா கொக்கா?

Jayadev Das said...

//"இந்தியன்"க்கும் "எந்திரன்"க்கும் உள்ள வித்தியாசம்... "இந்தியன்" ல ஒரு ஹீரோ கஷ்டப்பட்டு தாத்தாவா நடிச்சிருப்பார். "எந்திரன்" ல ஒரு தாத்தா கஷ்டப்பட்டு ஹீரோ வா நடிச்சிருக்கார். // Super Punch!!

Anonymous said...

//Anonymous சீர்காழியான் said...

மாயவரத்தான் ஒழுங்காகத் தான் எழுதி வந்தார். இந்த அநாநிமஸ் அல்லக்கைகள் தான் அவரை சீண்டி விட்டு இப்போது குத்துதே குடையுதேன்னு ஓடுகிறார்கள்.

மாயவரத்தானா கொக்கா?//

மாயவரத்தாரே,
மாயவரம் எப்போது சீர்காழியானது?
புனைபெயருக்கு ஒரு புனை பெயரா ?
சபாஷ் , சரியான போட்டி!

sathish (bengaluru) said...

Idlyvadai vazhangum "எந்திரன் விமர்சனம் (டிரைலர்)" Vetrikaramaga 83rd comments. 100th comments viraivil.

Anonymous vs mayavarathan has more comments than "எந்திரன் விமர்சனம் (டிரைலர்)"

Request to both. Its for the blogger to decide whether to allow anonymous or not. so lets not abuse each other and respect the article with comments.

Anonymous said...

//மாயவரம் எப்போது சீர்காழியானது?
புனைபெயருக்கு ஒரு புனை பெயரா ?//
தான் முதுகுல தானே தட்டிக்கிற பார்டியா? இதுவும் ஒரு பொழப்பு......

Anonymous said...

day mayavarthana rajini yai patri pesa unaku ena yokithai irukuda.eruma maday.nee intha polapu parkarathuku pesama panni meikalam.unaku athu nala irukum.

இரா.சி said...

இப்பதான் என் இனிய இயந்திரா படிச்சேன். சுஜாதா ரொம்ப அருமை. மனுசன் அநியாயமா செத்துபோய்ட்டார். நல்லவேளை செத்துபோய்ட்டார், எந்திரன் பாக்கமாட்டார்.
சுஜாதா மாதிரி எவனாலயும் சிந்திக்க முடியாது முடியாது. சங்கர்-லாம் ஹாலிவுட் பட DVD மற்றும் அவரது உதவி இயக்குநர்கள் இல்லாட்டி காலி.

இரா.சி said...

இப்பதான் என் இனிய இயந்திரா படிச்சேன். சுஜாதா ரொம்ப அருமை. மனுசன் அநியாயமா செத்துபோய்ட்டார். நல்லவேளை செத்துபோய்ட்டார், எந்திரன் பாக்கமாட்டார்.
சுஜாதா மாதிரி எவனாலயும் சிந்திக்க முடியாது முடியாது. சங்கர்-லாம் ஹாலிவுட் பட DVD மற்றும் அவரது உதவி இயக்குநர்கள் இல்லாட்டி காலி.

suryas said...

anna intha kathai romba palasu anna..hollywoodla erkanave entha mathiri kathai 1955 leya vanthduchu but appo robo ella.but sethu pona manithanai uyir koduthu pinnal antha uyir petra manithan avan figura attaiya pottu then avankitta irunthu evan figura kappathi oru valiya padam mudiyum.athan tamil kuda "nalaiya manidhan" padam atha copy panni vanthathu.athula ellam sethuponavan varran ithula roba varran avolothan.but tamil cinemavula love figur vitta vera matter pathi yosikka mattan nu world fulla theriyum pa.adapongayya puthusa sollunga pa.nilavuke tamilan pona kuda anga ennakedaikum uyirvalrathu epdini yosikka mattan evan figurakuttikinu poi veyilla kiss adippan pa.enna panrathu nanum antha tamilana poranthutten,vera kathai yosikka mudiyal pa.

Anonymous said...

padathai patriya karuthukalai vida ungalathu sandaiyae ingae minji valigirathu........thiraipadam ovoru manithanukum ovoru unarvai uruvaakum.....athu avargalathu iyalbayum , thanmaiyaiyum poruthathu....

ithula enna solla varenna

" sanda podatheenga etu iyya "

Anonymous said...

Idli vadai eluthina vimarisanam nalla thaan irukkuthu. Sankar-um Rajanikanth etho punithar pola avarukkum one of the asia's biggest wealth familykkum varinju kattikittu support panra ellarum vadi kattina muttaalgal. Rajani avaroda ponnu kalyanthukku uyirinum melaana rasigarala vara vendaam nu sollittu adichikitta JJ va veedu thedi koopittu function nadathuraaru. Avar rasigan nu sollikkira ovvoruthanum vekka padanum. Unga kashtappattu sambathicha panatha ethukku avarukku kondu poi kotti kudukkanum. Unga familykku selavalichu santhoshama irungappa. Kuppai padathukku paalaabishekam, beerabishekam panratha niruthittu veetila irukkara pillaingalukkoe, parents, wifeukkoe selavalingappa. appo thaan intha mega budget padam edukkira muttaalgal ellam yosippaanga.

Intha pathiva paathuttu enna thitta munnadi rendu nimisham yosinga.. intha mathiri nadigan pinnaala poi ivloe panam kotti kuduthu panam ullavana melum melum panakkaran aakka unga komanam uriyanumaannu..

Anonymous said...

Idli vadai eluthina vimarisanam nalla thaan irukkuthu. Sankar-um Rajanikanth etho punithar pola avarukkum one of the asia's biggest wealth familykkum varinju kattikittu support panra ellarum vadi kattina muttaalgal. Rajani avaroda ponnu kalyanthukku uyirinum melaana rasigarala vara vendaam nu sollittu adichikitta JJ va veedu thedi koopittu function nadathuraaru. Avar rasigan nu sollikkira ovvoruthanum vekka padanum. Unga kashtappattu sambathicha panatha ethukku avarukku kondu poi kotti kudukkanum. Unga familykku selavalichu santhoshama irungappa. Kuppai padathukku paalaabishekam, beerabishekam panratha niruthittu veetila irukkara pillaingalukkoe, parents, wifeukkoe selavalingappa. appo thaan intha mega budget padam edukkira muttaalgal ellam yosippaanga.

Intha pathiva paathuttu enna thitta munnadi rendu nimisham yosinga.. intha mathiri nadigan pinnaala poi ivloe panam kotti kuduthu panam ullavana melum melum panakkaran aakka unga komanam uriyanumaannu..

Anonymous said...

இந்திய திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக வெளிவராத படத்திற்கு விமர்சனம் எழுதிய இட்லி வடையின் சாதனைக்கு வாழ்த்துக்கள் ! ha ah ha ha

TechShankar said...

Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

by
TS



டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

Anonymous said...

அன்பு நண்பர்களே,
எந்திரன் ஒரு தந்திரன்
உத்தேசமாக எந்திரன் படத்தின் ஒரு வார வசூல் எவ்வளவு என்று பார்ப்போமா?
audience = 1000 per show
ticket = Rs 150 (average)
No of shows per day = 5
No of theaters = 3000 (worldwide)

1000 X 150 X 5 X 3000 X 7days = Rs 1575,00,00,000.00
வசூலோடு பார்க்கும் பொது செலவு ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.

Anonymous said...

அன்பு நண்பர்களே,
எந்திரன் ஒரு தந்திரன்
உத்தேசமாக எந்திரன் படத்தின் ஒரு வார வசூல் எவ்வளவு என்று பார்ப்போமா?
audience = 1000 per show
ticket = Rs 150 (average)
No of shows per day = 5
No of theaters = 3000 (worldwide)

1000 X 150 X 5 X 3000 X 7days = Rs 1575,00,00,000.00
வசூலோடு பார்க்கும் பொது செலவு ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.