பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 12, 2010

பின்னணி பாடகி ஸ்வர்ணலதா - அஞ்சலி

பிரபல பின்னணி பாடகி ஸ்வர்ணலதா இன்று காலை மரணம் அடைந்தார். வயது 37. கடந்த சில மாதங்களாக நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டு அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஸ்வர்ணலதா 1989-ம் ஆண்டு முதல் சினிமாவில் பின்னணி பாடி வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் கடந்த 22 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். கருத்தம்மா படத்தில் இடம் பெற்ற `போறாளே பொன்னுத்தாயி' என்ற பாடலுக்காக இவருக்கு தேசிய விருது பெற்றார்.


அவர் குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

23 Comments:

பெசொவி said...

:(

துளசி கோபால் said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

R.Gopi said...

ஓஹோ.....

முரளியின் மறைவு செய்தியை தொடர்ந்து உடனே இன்னொரு பிரபலத்தின் மறைவு செய்தி....

அப்படியென்ன, எல்லாரும், 37, 46 என்று இளவயதிலேயே மரணம் அடைந்து விடுகிறார்கள்....

ஸ்வர்ணலதா அவர்கள், தனித்துவமான குரல் உடையவர்... அவரின் கருத்தம்மா பாடல் பலே ஜோர் ரகம்...

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்....

சைவகொத்துப்பரோட்டா said...

அஞ்சலி.

V.P.Jaiganesh said...

வார்த்தைகளை அடைத்துப்போகச்செய்யும்
துயரமான பிரிவு இது.

குயில் பாட்டு என்று தேன் கலந்த குரலில்
பாடிய அந்தப்பாடலில் உள்ள மென்சோகம்
என்நெஞ்சை அடைக்கும் விதம் வளர்ந்து நிற்பதை
நான் உணர்கின்றேன்.
ஒரு முறை மீண்டும் இது உண்மை தானா
என்று என்னை சந்தேகம் கொள்ளச் செய்த
துக்கச்செய்தி இது.
குயில் பாடல் நின்ற ஒரு கொடிய தருணம் இது.
என் காதுகளுக்கும் மனதுக்கும் ஆறுதல் அற்ற நாள் இது.

Anonymous said...

I like her "Hai Ram" Song from Rangeela.
It sounds tailor made for her voice.

RIP

Thomas Ruban said...

அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்....

வலைஞன் said...

உலகின் குயில் எண்ணிக்கையில் ஒன்று குறைந்து விட்டது!
ஆழ்ந்த அஞ்சலிகள்.

raju-dubai said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

கலைக்கோவன் said...

அடுத்தடுத்து இழப்புகள்..,
கடந்த வாரம் இயக்குநர் ரவி, முரளி....,இன்று
சொர்ணலதா

ஆழ்ந்த இரங்கல்கள்.

மடல்காரன்_MadalKaran said...

நம்பமுடியவில்லை இந்த துயரச் செய்தியை.
எவனோ ஒருவன் யாசிக்கிறான் ...
அஞ்சலி ஆன்மா சாந்தியடைய

அன்புடன்,
கி.பாலு

dxnpolestar said...

RIP.............

சிவராம்குமார் said...

அவருடைய "மாலையில் யாரோ"வும் இன்ன பிற பாடல்களும் அவர் மறைந்தாலும் மறையாது! அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!

சாய்ராம் கோபாலன் said...

Oh No. Very sorry to hear this.

"மாலையில் யாரோ" is a class song of hers

அஞ்சா நஞ்சன் said...

இது நடந்திருக்க கூடாது.

Dr Rama Krishnan said...

It is a tragic event.My condolence to her family
By the way, the Athma is always at " Shanthi".Neither death nor birth will make any difference to Athma, as it is eternal,all prevading and by it's very nature is just Ananda.

Kothandaraman said...

:-( Aazhndha Irkkangall. Great singer. Her song, "Maalayil Yaaro Manadhodu Pesa" is in the list of my ALL TIME FAVOURITES. May God bless her soul to rest in peace.

lathakannan said...

tangakuil maraivuku en aazntha anjali

Unknown said...

Povoma Oorgolam (Chinna Thambi) patti thotti ellam prabalam indru avarukku iruthi oorvalam... life is full of uncertaininties.

May her Soul rest in peace.

Kamesh

subarayan said...

அலைபாயுதே படத்தில் அவர் பாடிய "எவனோ ஒருவன் யாசிக்கிறான்" பாடலில் ஒரு வரி வரும் "இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்" ...


அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்!

எம்.ஏ.சுசீலா said...

சுவர்ணலதாவுக்கு என் அஞ்சலி இத்துடன்

http://masusila.blogspot.com/2010/09/blog-post_13.html

கானகம் said...

சொல்வனத்தில் வெளியாகியிருக்கும் அருமையான அஞ்சலி.. ஸ்வர்ணலதாவின் இசையை அலசியிருக்கும் கட்டுரையும்கூட..

http://solvanam.com/?p=10570

//அப்படிப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் அப்பாடலின் ஆண் குரலுக்கு, செம்பை வைத்தியநாத பாகவதரின் சிஷ்யரும், கர்நாடக சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவருமான கே.ஜே.யேசுதாசைத் தெரிவு செய்கிறார். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் அப்பாடல் தொடங்குவதே பெண் குரல்தான். அந்தப் பெண்குரல் பகுதிக்கு பதினான்கு வயதே நிரம்பிய ஒரு புதிய பெண் பாடகியைப் பாடவைக்கிறார். அப்படியென்றால் அவருக்கு அந்தப் பெண் குரல் மீது எத்தனை நம்பிக்கையும், அங்கீகரிப்பும் இருந்திருக்க வேண்டும்! ‘சின்னஞ்சிறு கிளியே’ என்று பல்லவியை அனுபவித்துப் பாடித் துவக்கிய அந்த இளம்பாடகியின் பெயர் ஸ்வர்ணலதா//

Anonymous said...

இதில் ராகங்களை அடையாளப்படுத்தியதை தவிர்த்திருக்கவேண்டும். அவைகள் ராகத்தை மீறிய பாடல்கள்தான்.